கம்பனில் ஐயங்கள்- அகலிகை சாப விமோசனம்.

210 views
Skip to first unread message

Girija Varadharajan

unread,
Oct 6, 2008, 12:30:56 AM10/6/08
to santhav...@googlegroups.com
கம்பன், தன்னுடைய காவியத்தில் இராமனை மனிதனாக ( மிக மேன்மையான ஒரு
மனிதனாகவே- " நடையில் நின்றுயர் நாயகன் ") படைத்துள்ளான். தான் தெய்வம்,
திருமாலின் அவதாரம் என்று அறியாதவனாகவே, கம்பனின் இராமன் படைக்கப்
பட்டிருக்கின்றான். ( கம்பன் கவிக்கூற்றாகச் சொல்லும் பல பாடல்களில்
இராமனை தெய்வம் என்று குறிப்பிடுவது வேறு விஷயம். சந்தர்ப்பம்
கிடைக்கும் போதெல்லாம் அவற்றைப் பயன் படுத்திக்கொள்கிறான், இராமனை
தெய்வம் என்று காட்ட. பல பாத்திரங்கள் வாய் மொழியாக அதை இடைவிடாது கதை
முழுவதிலும் சொல்லியே செல்கின்றான். விராதன் வாய் மொழியாக அவன் சொல்வது
ஒரு சிறந்த உதாரணம். இராம நாமத்தை மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல
"மந்திரம்" என்கிறான். )

இவ்விதம் இராமனை மனிதன் என்ற ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் தான்
கவிச்சுவையை அறிய முடியும். இல்லையென்றால், உதாரணத்திற்கு அவன்
அயோமுகிப் படலத்திலும், பிரம்மாத்திரப் படலத்திலும் இலக்குவன் இறந்து
விட்டான் என்றெண்ணிப் புலம்புவது அர்த்தமற்றதாகப் புலப்படும். இது
என்னுடைய எண்ணம். நான் ஓரளவு சந்தித்த , பழகிய இலக்கிய ஆர்வலர்களும்
அவ்வாறே உணர்கிறார்கள், இங்கே.

முதல் ஐயம்: இவ்வெண்ணம், இந்நோக்கு சரி தானா? மற்றுக் கருத்துக்கள் உள்ளனவா?


இரண்டாவது ஐயம். :

மேற்சொன்ன நோக்கு சரிதான் என்றால், ஒரே ஒரு நிகழ்வு இடிக்கிறது, இதில்.
தன்னுடைய கால் துகள் பட்டுக் கல்லிலிருந்து ஒரு பெண் வெளியானதைப் பார்த்த
இராமன் , தன்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கக் கூடும். ? தான் தெய்வத்தன்மை
உடையவன் அமானுஷ்யன் என்பதை உணர்ந்தானா?

விவரம் அறிந்த பெரியோர்கள் விளக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

வரத ராஜன்
சிங்கப்பூர்
HP: 91852063
Email: girijavar...@gmail.com

srinivasan s

unread,
Oct 6, 2008, 1:50:18 AM10/6/08
to santhav...@googlegroups.com
கம்பன் தமது காவியத்தில் இராமனைப் பற்றிய வருணனைகளை அவன் ஓர் அவதாரமென்று தமது கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், இராமன் தன்னை இறைவனாக நினைப்பதாகக் காட்டவில்லை. ஏனென்றால் -- இது அடியேனுடைய கருத்து -- அவர் காலத்தில் இராமனை வழிபட்டு வந்தார்கள் மக்கள். இந்தக் காவியத்தை எழுதும்போது, கம்பன் அவ்ரைக் கடவுளாகவே மனத்திற் கொண்டே எழுதியுள்ளார். ஆகவே, ஒவ்வொரு கட்டத்திலும், இராமன் தன்னை கடவுளாக நினைத்திருப்பானா என்ற கேள்விக்கே இடமில்லை.
இராமனின் கால்தூசி பட்டு அகலிகை தன் உணவைப் பெற்றபோது, இராமன்  தன்னை இறைவனாக எண்ணியிருக்க அவசியமில்லை. விசுவாமித்திரர் சொன்னதைச் செய்தோம் என்றே எண்ணியிருப்பான். காக்கை உட்கார பனம் பழம் விழுகிற கதைதான்.
இன்னும் பெரியவர்கள் கருத்தை தெரிந்துகொண்டு எல்லோர்க்கும் தெரிவிக்கவும்.
சீதை இராவண்னைக் கண்டாள என்பதும் நல்ல கேள்வி. இதற்கும் பெரியோர்தாம் பதில் அருளவேண்டும்.
சீனிவாசன்    
--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext
Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Girija Varadharajan

unread,
Oct 6, 2008, 3:14:59 AM10/6/08
to santhav...@googlegroups.com
காக்காய் உட்காரப் பனம் பழம்என்பதை மனம் ஒப்பவில்லை.


இதற்கு மேலும் இந்நிகழ்விற்கு விளக்கம் இருக்குமென்று நம்புகிறேன்.
கமபனில் கரை கண்டவர்கள் உளார்கள் . அவர்கள் சொல்வதற்குக் காத்திருக்கின்றேன்.


வரத ராஜன்.

2008/10/6 srinivasan s <vasan...@gmail.com>:

--
Thanks and Regards
Girija

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP: 91852063
Email: girijavar...@gmail.com

Hari Krishnan

unread,
Oct 6, 2008, 7:37:35 AM10/6/08
to santhav...@googlegroups.com


2008/10/6 Girija Varadharajan girijavar...@gmail.com


இவ்விதம் இராமனை மனிதன் என்ற ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் தான்
கவிச்சுவையை அறிய முடியும்.  
 
ஆமாம்.  உண்மை.  அப்படி மட்டும்தான் பார்க்கவேண்டும்.  வவேசு ஐயரும், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியும வலியுறுத்துவது இதையேதான்.  இரண்டு ஜாம்பவான்களுடைய பார்வையும் இந்த விஷயத்தில் ஒன்றுபோலத்தான் இருக்கிறது. 
 
 

முதல் ஐயம்: இவ்வெண்ணம்,  இந்நோக்கு சரி தானா? மற்றுக் கருத்துக்கள் உள்ளனவா?
 
மாற்றுக் கருத்து இல்லை.  அதாவது, என்வரையில். இந்தக் கேள்வியைப் பற்றிய என் பார்வையை 'அனுமன்: வார்ப்பும் வனப்பும்' புத்தகத்தில் கொடுத்திருக்கிறேன்.  புத்தகம் உங்களிடத்தில் இருக்கிறது.  நீங்கள் படித்திருப்பீர்கள்.  ஆனாலும் 'நான் புத்தகம் எழுதியிருக்கிறேன் என்பதையே இதுவரையில் கேள்விப்படக்கூட இல்லாத' (சொன்னாலும் ஆர்வம் காட்டாத என்று வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளவும்) என் மிகநெருங்கிய நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள்.  அவர்களுடைய திருப் பார்வைக்காக, குறிப்பிட்ட அந்தப் பகுதியை மட்டும் மேற்கோளாகத் தருகிறேன்.
 
<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>
மலையைப் பெயர்த்த தோள்கள், இலங்கிணியை ஒரே குத்தில் வீழ்த்திய தோள்கள், சுந்தர காண்டம் முழுமையிலும் வித விதமான போர் புரிந்து வலிமையை வெளிக்காட்டிய தோள்கைளை 'மெல்லிய எனினும்' என்று சொல்லிக் கொள்கிறான் அனுமன்.  இராமனுக்கு எதிரில் தன் வலிமையைப் பற்றி ஒரு நாளும் ஒரு சமயத்திலும், உண்மையே ஆனாலும் உயர்த்திச் சொல்லக் கூச்சமும் தயக்கமும் கொண்டவன் மாருதி.  விபீடணன் அடைக்கலம் கேட்டு வரும் கட்டத்திலும், மருந்து மலையைப் பெயர்த்து வரும் போதும் இன்னும் வேறு சில கட்டங்களிலும், இராமன் எதிரில் தன் வலிமை பேசப்படுவதையும், இராமனால் பேசப்படுவதையும் கேட்டுக் கூச்சப்படும் மாருதியைப் பின்னொரு தலைப்பில் காண்போம்.  இப்போது திருவடிக்குத் திரும்புவோம்.  அனுமனின் தோள் மீது இராமன் அமர்ந்ததும் என்ன ஆயிற்று என்று கம்பன் பேசுகிறான்:
 
மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.
 
வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் - இதே இராமன் - எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான்.  திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான்.  ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.
 
இராமனை ஒருவிதமான இரட்டைக் குவியத்தில் (double focus) வைத்துக் காட்டுகிறான் கம்பன்.  எல்லா வகையிலும் தன்னை மனிதனாக மட்டுமே உணர்ந்த இராமன் ஒரு குவி மையத்திலும்; அவனை மனிதனாகவும் மனித ஆற்றலை மீறியவனாகவும் உணரும் மக்கள் அவனைப் பார்த்தவிதமும்; தெய்வத்தன்மை வாய்ந்தவனாக அறிந்திருந்து அதை வெளிக்காட்ட இயலாத நிலையில் நின்ற வெகு சிலர் அவனைப் பார்த்த விதம் இன்னொரு குவி மையத்திலுமாக ஒரு சிக்கலான சித்திரத்தை வெகு திறமையாகப் பகுத்துப் பகுத்துக் காட்டுகிறான்.  இராமனின் தெய்வத்தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.
<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>!<><>
 
ராமனுடைய தெய்வத் தன்மையை உணர்ந்த வெகுசிலர் அவனைச் சுற்றிலுமிருந்தார்கள்; தெரிந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது வால்மீகியும் தீட்டும் சித்திரம்தான்.  அதைக் கம்பன் அப்படியே அடி ஒற்றுகிறான்.  இடையில் சரபங்கர் ஆஸ்ரமத்தில் இந்திரன் ராமன் வரும் சமயத்தில் அங்கே இருந்ததையும், 'ராமன் வருகிறான், அவன் பார்வையில் படுவதற்குள் நான் போய்விடுகிறேன்' என்றவாறு இந்திரன் அந்த இடத்திலிருந்து நழுவிவிடுவதையும், வால்மீகி
 
iha upayaati asau raamo yaavan maam na abhibhaaSate |
niSThaam nayata taavat tu tato maa draSTum arhati || 3-5-22

jitavantam kR^itaartham hi tadaa aham aciraad imam |
karma hi anena kartavyam mahat anyaiH suduSkaram || 3-5-23
 
"Here comes that Rama...before he talks to me, you lead him towards his vow, after completing the result of his incarnation, then only he is eligible to see me... Let him be a victorious and accomplished one, then I will see him very soon...for that will happen very soon... A great deed is to be verily performed by him that is highly impossible for others...
 
என்று குறிப்பிடுகிறார்.   நாகபாசத்திலிருந்து மீட்க வந்த கருடன் (வால்மீகி ராமாயணத்தில் இந்தக் கட்டம் முதல் நாள் போரிலேயே இடம் பெறுகிறது) 'நான் உனக்கு மிகவும் வேண்டியவன். யார், என்ன என்ற விவரத்தை எல்லாம் அப்புறம் சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டு் போவதையும் வால்மீகியம் சொல்கிறார். 
 
எனவே, இது ஏதோ கம்பன் மட்டுமே உண்டாக்கிக் காட்டியிருப்பதாகச் சில தமிழறிஞர்கள் சொல்வதைப் போலன்றி, மூலத்திலேயே உள்ள சித்திரம்தான்.  ராமன் திருமாலின் அவதாரம் என்பது இடைச்செருகல் என்று ப்ராக்கிங்டன் போன்ற அறிஞர்கள் ஆய்ந்து நிறுவியிருக்கிறார்கள்.  வடமொழி இலக்கணத்தின் அடிப்படையிலெல்லாம் அவர்கள் போட்டுக் குழப்பியருப்பன எல்லாம் நம்முடைய தமிழ் இலக்கியத்தின் உதவியால் தகர்ந்துவிடும்.  அதையும் செய்திருக்கிறேன், என்னுடைய சென்னைஆன்லைன் கட்டுரைகளில்.
 
என்ன விஷயம் என்றால், 'அவதார நோக்கமான ராவண வதம் நடைபெறும் வரையிலாவது ராமனுக்கு, தான் தெய்வ அவதாரம்' என்ற எண்ணம்கூடத் தோன்றக்கூடாது என்பதுதான் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்துக்குக் காரணம்.  'யாரெல்லாம் தன்னைக் கொல்லக் கூடாது' என்று ராவணன் கொடுத்த பட்டியலில் மனிதரும் குரங்குகளும் இல்லை.  ஆகவே, ராமன் என்ற மனித உருவைத் தாங்கினான் இறைவன். அவன் தன்னை இறைவன் என்று உணர்ந்தால், அந்தக் கணத்திலேயே அவதார நோக்கம் தடைப்பட்டுப் போகிறது.
 
இருந்த போதிலும் ராமன், தன்னை இறைவனாக உத்தர காண்டத்தின் கடைசிக் காட்சி வரையிலும் கருதிக் கொள்ளவில்லை.  விராதன் துதியிலிருந்து, கருடனின் துதியிலிருந்து, கடைசியில் பிரமன், சிவன் என்று எல்லோரும் வந்து எடுத்துரைத்த எந்தச் செய்தியும் அவனை எந்த விதத்திலும் பாதித்ததாகவே எந்தக் காட்சியிலும் இல்லை.  கிருஷ்ணாவதார டமால்டுமால் எதுவுமே இல்லாத ராமனைத்தான்  'பலர்புகழும் ராமனுமே யாற்றில் வீழ்ந்தான்' நிகழ்வு வரையில் காண்கிறோம். 



இரண்டாவது ஐயம். :

மேற்சொன்ன நோக்கு சரிதான் என்றால், ஒரே ஒரு நிகழ்வு இடிக்கிறது,  இதில்.
தன்னுடைய கால் துகள் பட்டுக் கல்லிலிருந்து ஒரு பெண் வெளியானதைப் பார்த்த
இராமன் , தன்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கக் கூடும். ? தான் தெய்வத்தன்மை
உடையவன் அமானுஷ்யன் என்பதை உணர்ந்தானா?
 
பிரம்மாவே வந்து, 'யோவ் நீதான்யா திருமால்' என்று சத்தியப் பிரதிக்ஞை பண்ணிய பிறகு கூட தன்னைக் கடவுள் என்று உணரவில்லை.  அப்புறம் என்ன, கல் பெண் ஆனதில் ராமனுக்குத் தன்னைப் பற்றிய உணர்வு ஏற்பட இருக்கிறது!  ராமன் தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் தன்வரையில் தான் ஒரு மானிடன் என்றே உணர்கிறான்.  சுற்றியிருப்பவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே அவதார ரகசியம் தெரிந்திருக்கிறது.  அந்த ரகசியம் நான்முகன் வாயிலாக வெளிப்பட்ட பிறகும்கூட (வால்மீகி, கம்பன் இருவருடைய வடிவங்களிலும்) ராமன் தன்னை முற்றிலும் மனிதனாக மட்டுமே உணர்கிறான். 
 
வால்மீகியிலோ, ஒருகட்டத்தில், லக்ஷ்மணனே அவனிடத்தில் இந்தக் கேள்வியை எழுப்புகிறான்,. மாயா சீதையைக் கொன்ற செய்தியைக் கேட்டு மயங்கிவிழும் ராமனிடத்தில் இவ்வாறு கேட்கிறான் லக்ஷ்மணன்:
 
"Get up O Tiger among men! Why don't you recognise yourself to be the Supreme Spirit, endowed with vast intelligence, O long-armed prince, who have kept your vows?" (Valmiki, Yuddha Kanda, Canto 83, Sloka 43 of Gorakpur edition)
 
'நீயே நாராயணரன் என்று ஏன் உணர மறுக்கிறாய்' என்று லக்ஷ்மணன் இந்த இடத்தில்கேட்கிறான்.  சொல்லப் போனால், லக்ஷ்மணன் தன்னையே நாராயணனாக உணர்ந்த தருணம் ஒன்றும் உண்டு.  முதற்போர்புரி படலத்தில் கம்பன் காட்டுகிறானே, ராவணனுக்கும் லக்ஷ்மணனுக்கும் இடையே நடந்த போரில் லக்ஷ்மணன் மயக்கமடைவதையும், ராவணன் அவனைத் தூக்கிச் செல்ல முயல்வதையும், அவனால் தூக்க முடியாமல் போவதையும்... ஏன் அவ்வாறு தூக்க முடியவில்லை என்பதற்குக் காரணம் எதையும் கம்பன் சொல்லவில்லை.  ஆனால் வால்மீகி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
 
"Recollecting himself to be an inconceivable part of Lord Vishnu, Lakshmana too, the destroyer of his enemies, returned to consciousness and had his wounds healed up." (Yuddha Kanda, Canto 59, Sloka 122)
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள  (லக்ஷ்மணன் ராமனைக் கேட்பதும் சரி, லக்ஷ்மணன் தன்னை நாராயண அம்சமாக உணர்வதும் சரி) இரண்டுமே கம்பனில் இல்லை.  வால்மீகியில் இளையவன், தன்னை நாராயணனாக உணர்ந்த காரணத்தால், தானே சுயநினைவு பெற்று எழுவதால் 'குட்டிக் குரங்கைத் தூக்கிச் செல்லும் தாய்க்குரங்கைப் போல எளிதாக' அனுமன் இளையவனைத் தூக்கிச் செல்லும் காட்சி வால்மீகியில் இல்லை. 
 
 
தாங்கள் கேட்ட வண்ணம் இந்த 'விளக்குமாறு' விளக்கிவிட்டதா?  வேறு ஏதேனும் கேள்விகள் உண்டா? 

--
அன்புடன்,
ஹரிகி.

K.R. Kumar

unread,
Oct 7, 2008, 12:11:03 AM10/7/08
to santhav...@googlegroups.com
வணக்கம். கூடவே எனக்கும் ஒரு சந்தேகம்.
 
இராமன் விடும் அம்புகள் தன் பணியைச் செய்து விட்டு மீண்டும் அம்புறாத்துணிக்கு வந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்லிக்கேட்டிருக்கிற்றேன். வால்மீகியும் கம்பனும் சொல்லியிருப்பர்கள் போலும். இது மனிதனால் சாத்தியம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. சமீபத்தில் ஒரு குறும்படத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடி வாசிகள் "பூமராங்" மூலம் பறவைகளை வேட்டையாடியபின் அந்த பூமராங் தன் பணியைச் செய்து விட்டு மீண்டும் அவர்கள் காலடியிலேயே வந்து விழுந்து விடுகிறது. அவ்வளவு லாவகமாகவும் திறமையாகவும் இக்காலப் பழங்குடி மக்களால் பூமராங் விடமுடியுமானால் அக்காலத்தில் இராமனுக்கும் இது போன்ற திறமைகள் இருந்திருக்கலாம்.
 
ஆனால் எனது சந்தேகம் மானுஷ்யம்-அமானுஷ்யம் சம்பந்தப்பட்டது.
 
இராமன் தன் திறமையைக் காட்டுவதற்காக் கூறப்படும் செய்தி:: 7 மரா மரங்களை ஊடுருவி இராமபாணம் மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்ததாகச் சொல்கிறார்கள் பிரவசன கர்த்தாக்கள். இது மானுடச் செயலாக எண்ணமுடியவில்லை. அப்படியாயின், இந்த பாணம் தன் பணியைச் செய்து மீண்டும் இராமனிடத்தில் வந்து சேரும் போது தன்னிடம் சில தெய்வீக திறமைகள் இருப்பதை இராமன் உணர்ந்திருக்க மாட்டானா ? தான் ஒரு அவதார புருஷன் என்று இராமனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லையா ? பெரியோர்கள் உங்கள் கருத்துகளைக் கூறுங்களேன்.
 
பிகு: வரதராஜன் எங்கள் இலக்கிய வட்டத்தில் "சீதை ஒரு விஷம்"" என்ற தலைப்பில் மிக அற்புதமாக சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். அதன் பிறகு சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடலுக்குப் பின் ஒரு கவிதையை வாசித்தார். சமீபத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது அவரது மன எண்ணங்கள், சூழ்நிலைகள் , மருத்துவம் பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை மிக அழகான ஓசை நயத்துடன் கவிதையாக உணர்ச்சியுடன் படித்தார்.  இதற்கு முன்பே அவர் இந்தக் கவிதையை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார். நானும் படித்திருந்தேன். அப்பொழுது தோன்றாத பல உணர்ச்சிகள், அவரே உணர்ச்சி பூர்வமாகப் படிக்கும் போது எற்பட்டது. அரங்கதிலிருந்த அனைவரும்,ஒருவர் தவறாமல், அவரைப் பாராட்டினார்கள்
 
அன்புடன்
குமார்(சிங்கை). 

2008/10/6 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Hari Krishnan

unread,
Oct 7, 2008, 7:39:31 AM10/7/08
to santhav...@googlegroups.com


2008/10/7 K.R. Kumar <krish...@gmail.com>

வணக்கம். கூடவே எனக்கும் ஒரு சந்தேகம்.
 
இராமன் விடும் அம்புகள் தன் பணியைச் செய்து விட்டு மீண்டும் அம்புறாத்துணிக்கு வந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்லிக்கேட்டிருக்கிற்றேன்.
 
ஆனால் எனது சந்தேகம் மானுஷ்யம்-அமானுஷ்யம் சம்பந்தப்பட்டது.
 
இராமன் தன் திறமையைக் காட்டுவதற்காக் கூறப்படும் செய்தி:: 7 மரா மரங்களை ஊடுருவி இராமபாணம் மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்ததாகச் சொல்கிறார்கள் பிரவசன கர்த்தாக்கள். இது மானுடச் செயலாக எண்ணமுடியவில்லை. அப்படியாயின், இந்த பாணம் தன் பணியைச் செய்து மீண்டும் இராமனிடத்தில் வந்து சேரும் போது தன்னிடம் சில தெய்வீக திறமைகள் இருப்பதை இராமன் உணர்ந்திருக்க மாட்டானா ?
 
அன்புள்ள குமார்,
 
சரி.  அப்படியே அமானுட சக்தியாகவே இந்த ஆற்றலை வைத்துக் கொள்வோம்.  அப்படியானால், ராமனுடைய ஒவ்வொரு அம்பும் அப்படித்தான் திரும்பி வந்து அம்பறாத் தூணியில் அமர்ந்ததா?  தாடகையைக் கொன்ற அம்பு என்ன ஆனது! விஸ்வாமித்திரர் ராமனுக்கு திவ்யாஸ்திரங்களைத் தருவதே தாடகையைக் கொன்ற பிறகுதானே! 
 
திவ்யாஸ்திரங்களைப் பெற்ற பிறகு நடந்த சுபாகு வதம், மாரீசனைத் தூக்கி வெகுதொலைவுக்கு அப்பால் வீசியது எல்லா நிகழ்வுகளிலும் இந்த 'திரும்பி வரும் நிகழ்வு'சொல்லப்படவில்லை.  வாலி வதத்தில் முதன் முறையாக அது சொல்லப்படுகிறது.  வாலி வதத்துக்கு முன்னதாக நடைபெற்ற கரதூஷண வதையி்ன்போது கூட இந்தப் பேச்சே எழவில்லை.  சொல்லப்போனால் 'கோதண்டம்' என்ற பெயரால் நாம் இப்போது எந்த வில்லைக் குறித்துக் கொண்டிருக்கிறோமோ அந்த நாராயண தனுசை (நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் என்பது கம்பன் வாக்கு.  கம்பனிலும், வால்மீகியிலும் கோதண்டம் என்ற பெயரே இல்லை என்பதையும் முன்னால் ஒரு சமயத்தில் எழுதியிருக்கிறேன்.) முதன்முறையாகப் பயன்படுத்தியதே கர-தூஷண வதைப் படலத்தில், கரனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில், தான் அதுவரையில் பயன்படுத்திக் கொண்டிருந்த வில் முறிந்து போன காரணத்தால், வருணனிடமிருந்து நாராயண வில்லைப் பெற்றுக் கொண்டு யுத்தத்தைத் தொடர்ந்தான் என்று காண்கிறோம்.  அதுவரையில் ராமன் இந்த வில்லைப் பயன்படுத்தக்கூட இல்லை. 
 
ஆகவே, ராமன் பயன்படுத்திய வில், பரசுராமன் கொடுத்தது.  அவன் பயன்படுத்திய அஸ்திரங்கள் விஸ்வாமித்திரன் அளித்தவை.  அவை அம்பறாத் தூணிக்குத் திரும்ப வந்தன என்றால், பெருமை ராமனுக்கு உரியதுதான் என்றாலும், ராமன் உணர்ந்திருப்பது என்னவோ 'இவற்றை நமக்கு வழங்கியவர்களின் பெருமை இது' என்று மட்டும்தானே இருக்க முடியும்.
 
இவையெல்லாம் அனுமானங்கள்தாம்.  கவிக்கூற்று இதுபற்றிய பிரஸ்தாபம் எதையும் செய்யவில்லை.  வாலி வதம் நடக்கும்போது மட்டுமே, அம்பு திரும்பி வந்தது என்ற தனிப்பட்ட குறிப்பு சொல்லப்படுகிறது.  எல்லா அம்புகளும்கூட திரும்பியிருக்கலாம்.  ஆனாலும், தன்னை மற்ற மானுடர்களுக்கு மேம்பட்டவனாகக் கருதிக் கொள்ள ராமனுக்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கவே முடியாது என்பதை மட்டும் சொல்லலாம்.
 
அப்படி இருந்திருப்பின், கடலைத் தாவி, தனி ஒருவனாக இலங்கையைக் கொளுத்தி, மலையைப் பறித்து, இருமுறை மருந்து மலையைப் பறித்தெடுத்துத் திரும்ப வைத்த அனுமனுக்கும் அப்படிப்பட்ட  உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டுமே!  (இதைப் பற்றி அனுமன்: வார்ப்பும் வனப்பும் புத்தகத்தில் 'சொன்னதும், சொல்ல விட்டதும்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.  ஏதோ எதிர்க்கடைக்குப் போய் நாலணாவுக்கு வெற்றிலை பாக்கு வாங்கி வந்தவனைப் போல்தான் அனுமன் தென்படுகிறானே ஒழிய, 'இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறோம்' என்ற எண்ணம் துளியும் ஏற்படவில்லை அன்றோ.) 
 
அனுமனுக்குப் பொருந்துவது ராமனுக்கும் பொருந்தும்தானே!
 
அவதாரம் முடியும் வரையில் தன்னை அவதார புருஷனாக ராமன் உணரவே இல்லை.  உத்தர காண்டத்தில் யமன் வந்து ராமனைச் சந்திக்கும் கட்டத்தை வாசித்துப் பாருங்கள்.  நான் சொல்வதில் உள்ள உண்மை தெளிவாகும். 

K.R. Kumar

unread,
Oct 7, 2008, 9:53:13 AM10/7/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஹரிகிருஷ்ணன் ஐயா,
 
உங்கள் அற்புதமான எளிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
 
அனுமனுக்குப் பொருந்துவது கட்டாயம் இராமனுக்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. "வார்ப்பும் வனப்பும்" மீண்டும் என் மனதுக்கு வந்தது.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2008/10/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

devoo

unread,
Oct 13, 2008, 12:36:09 PM10/13/08
to Santhavasantham


On Oct 6, 9:30 am, "Girija Varadharajan"
<girijavaradhara...@gmail.com> wrote:
// இரண்டாவது ஐயம். :
மேற்சொன்ன நோக்கு சரிதான் என்றால், ஒரே ஒரு நிகழ்வு இடிக்கிறது,  இதில்.
தன்னுடைய கால் துகள் பட்டுக் கல்லிலிருந்து ஒரு பெண் வெளியானதைப்
பார்த்த
இராமன் , தன்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கக் கூடும். ? தான்
தெய்வத்தன்மை
உடையவன் அமானுஷ்யன் என்பதை உணர்ந்தானா?//

’அவதாரமாக இருப்பினும் சாமானியரைப்போல் நடந்து கொள்வது- இதுவே
அவதாரங்களின் தனித்தன்மை; அதை அப்படியே பார்த்து ரசிக்க வேண்டும்’ என
ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி அவர்கள் கூறுவார்.

அவதாரங்கள் ஏன் , மஹாபுருஷர்கள் பலரும் நீறு பூத்த நெருப்பாக
வாழ்ந்துள்ளனர்.

‘அவதாரங்கள் போல் ஸ்வமாஹாத்ம்யத்தை மறைத்து வைக்குமவர்கள் பீதி யோக்யரில்
ப்ரதானர்’ என்பார் ஸ்வாமி தேசிகன்.

நாக பாசத்திலிருந்து விடுவிப்பதற்காக கருடன் நெருங்கும்போது ஐயன் அவரைப்
பார்த்து ஒன்றுமே தெரியாதவர் போல் ‘ தேவனே ! நீவிர் யார் ?’ என
வினவுகிறார்.

தேவ்

devoo

unread,
Oct 13, 2008, 11:24:42 PM10/13/08
to Santhavasantham


On Oct 6, 9:30 am, "Girija Varadharajan"
<girijavaradhara...@gmail.com> wrote:
// தான் தெய்வத்தன்மை உடையவன் அமானுஷ்யன் என்பதை உணர்ந்தானா? //

ஸ்ரீ ராமாயணத்தை வெறும் இலக்கியமாகப் பார்ப்பதால்தான் இத்தகைய
ஐயப்பாடுகள். முத்தொழில் புரியும் முழுமுதற் கடவுளுக்கு மறை சார்ந்த
வாழ்க்கை வாழ்வது எங்ஙனம் என்பதை மாந்தருக்கு உணர்த்தும் பொறுப்பும்
உள்ளது. அதை நிறைவேற்றவே அவதாரங்கள்.

இராமாவதாரத்தின் உண்மை நோக்கை அறிந்துள்ள முனிவர்கள் அவனது வணக்கத்தை
ஏற்றுக் கொள்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்கின்றனர். இராவண வதம்
குறித்துக் குறி சொல்லவில்லை. அதுவும் கட்டாயம் நிகழவுள்ளது என்பதும்
அவர்களுக்குத் தெரியும். தாம் ஐயனின் நாடகத்தில் வெறும்
துணைப்பாத்திரங்கள் மட்டுமே என்பதால் அதற்கேற்ப நடந்து கொண்டனர்.

உண்மை அறிந்த யாரும் தம்மை வணங்கிவிட்டால் நாடகச்சுவை குன்றிவிடும்
என்பதால் ஐயன் முதலிலேயே பெரியோரை வணங்கி விடுவார்; முதலிலேயே உரையாடலைத்
தொடங்கி விடுவார்; ஸ்ரீ ராமன் ‘பூர்வ பாஷி’ என்கிறது வால்மீகீ ராமாயணம்.

சில சமயங்களில் நாம் ஒருவரை விளிக்கையில் பெயரை மாற்றி வேறு பெயர்
கொண்டுகூப்பிட்டு விடுவோம். இதை Slip of tounge என்பர். இளையாழ்வாரை
விளிக்கையில் ‘பரதாநுஜ’ என்பதற்கு பதிலாக ஐயன் ’பரதாக்ரஜ’ (அநுஜன் –
தம்பி; அக்ரஜன் – அண்ணன்) என்று விளிப்பதை வால்மீகியில் காண்கிறோம்.
’ஆத்மாநம் மாநுஷம் மந்யே ‘ ( என்னை மனிதனாகவே மதிக்கிறேன்) என்னும் ஐயனது
மொழி புகழ் வாய்ந்த ஒன்று.

தேவ்

Girija Varadharajan

unread,
Oct 14, 2008, 12:20:42 AM10/14/08
to santhav...@googlegroups.com
"தான் மனிதத் தன்மை மாத்திரம் உடையவனே" என்று மாத்திரமே இராமன்
நம்பியிருக்க வேண்டும்.

இராவணன் கேட்டிருந்த வரங்களில் , மனிதர்களால் என்பது விட்டுப்பட்டுப்
போயிருந்ததால் - ( மற்றவர்களால் தான் அழிக்கப் படலாகாது என்று வரம்
பெற்றிருந்தான் ) அவதாரமே மனிதன் என்பது தான். ஆக மனிதன் - மனிதன்
மாத்திரமே - என்பதை மறந்தால் , அவதார நோக்கமே பழுதாகிவிடும், அவதார
லட்சியமே நிறைவேறாமல் போய் விடுமோ என்பதாக ஹரிகி சொல்லியிருந்த காரணமே
சரி என்று எனக்குப் படுகிறது.


வரத ராஜன்.

2008/10/14 devoo <rde...@gmail.com>:

--

Reply all
Reply to author
Forward
0 new messages