எதிரொலிக் குறள்

39 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 9, 2014, 12:38:37 PM4/9/14
to சந்தவசந்தம்

கடைசிச் சொல் கேள்வியாகவும்  விடையகவும் இருக்கும்.



«ÅÉ¢ ÒÃìÌõ «ÕÁ¨Èò §¾Åý

º¢ÅÉ¢ý Ó¾üÀ¢û¨Ç ¡÷?

 

Å¢¨¼- À¢û¨Ç¡÷.

 

 

¦Á¡ò¾ò¨¾ò ¾¡ýÀÌòÐ ÓýÉ¢ðÎ Å¡í̾üÌì

¦¸¡ò¾¡¸ ¨ÅôÀ¦¾Ð ÜÚ.?

 

Å¢¨¼ - ÜÚ

 

¦ÁøÄ ÁÄ÷óРŢâÔõ ±Æ¢øÁĨÃî

º¢øÅñÎ ¿¡ÎÅ §¾ý?

 

Å¢¨¼- §¾ý

 

µ¦ÃØòÐõ §ÁÖõ ´Õ¦À¡Õ¨Çò ¾¡ýÌÈ¢òÐî

§ºÃ ÅÕŦ¾Ð ¦º¡ø.?

 

Å¢¨¼- ¦º¡ø

 

´ý§È¡ ´ýÚìÌ §ÁüÀð¼ ±ØòÐ츧ǡ þ¨½óÐ ´Õ ¦À¡Õ¨Çì ÌÈ¢ôÀÐ ¦º¡ø.

 

¬ÅÖ¼ý ¦ÀñÌÆó¨¾ ¬Ê Å¢¨Ç¡¼ò

§¾¨Å ±Ð¦Åý§È ¦ºôÒ

 

Å¢¨¼- ¦ºôÒ



இலந்தை

 


 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 9, 2014, 1:30:37 PM4/9/14
to சந்தவசந்தம்
Ilandhai: You may use NHM Converter to quickly convert the old TSII or TSCu font into unicode:


கடைசிச் சொல் கேள்வியாகவும்  விடையகவும் இருக்கும்.



அவனி புரக்கும் அருமறைத் தேவன்

சிவனின் முதற்பிள்ளை யார்?


விடை- பிள்ளையார்.
 

மொத்தத்தைத் தான்பகுத்து முன்னிட்டு வாங்குதற்குக்

கொத்தாக வைப்பதெது கூறு.?

விடை - கூறு

 

மெல்ல மலர்ந்து விரியும் எழில்மலரைச்

சில்வண்டு நாடுவ தேன்?

விடை- தேன்

 

ஓரெழுத்தும் மேலும் ஒருபொருளைத் தான்குறித்துச்

சேர வருவதெது சொல்.?

விடை- சொல்

 ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ இணைந்து ஒரு பொருளைக் குறிப்பது சொல்.


ஆவலுடன் பெண்குழந்தை ஆடி விளையாடத்

தேவை எதுவென்றே செப்பு

விடை- செப்பு


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaier Ramasami

unread,
Apr 9, 2014, 1:59:53 PM4/9/14
to சந்தவசந்தம்
இதை நான் இடுகையில் என் கணினியில் சரியாகத் தெரிந்ததால் யுனிகோட் என நினைத்துவிட்டேன்.. மாற்றி இட்டமைக்கு நன்றி.

இலந்தை

Siva Siva

unread,
Apr 9, 2014, 2:05:55 PM4/9/14
to santhavasantham
Uninstalling TSC fonts (and any other TSC 'compatible' fonts) from your PC will solve this issue of misperception! (Of course, it will then force you to convert the text to unicode to see it properly on your pc!)
You may want to consider doing it as a mini project to convert all your old files to unicode - to fix it once and for all.

K.R.Kumar

unread,
Apr 9, 2014, 7:36:04 PM4/9/14
to santhav...@googlegroups.com
குறட்பாக்கள் எழுத்துரு மாறி படிக்க முடியாமல் வந்திருக்கின்றன.

அன்புடன்,
குமார்(சிங்கை)

Sent from my iPhone
--

Subbaier Ramasami

unread,
Apr 9, 2014, 8:00:31 PM4/9/14
to சந்தவசந்தம்
வருந்திப் படிப்பதை மாற்றி அனந்தும்
உருமாற்றித் தந்தார் உடன்

இலந்தை

Kavingar Jawaharlal

unread,
Apr 10, 2014, 6:21:17 AM4/10/14
to santhavasantham
அருமை இலந்தை !
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 10, 2014, 11:13:54 AM4/10/14
to சந்தவசந்தம்
குமாருக்கு ஒரு வினா:

பார்த்த வுடன்படிக்கத் தூண்டிஉளத் தில்இன்பம்
சேர்ப்பதெது செப்புநண் பா?  :-))

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 10, 2014, 11:32:11 AM4/10/14
to சந்தவசந்தம்
>> மெல்ல மலர்ந்து விரியும் எழில்மலரைச்
>>சில்வண்டு நாடுவ தேன்?


இனிக்கும் உணவாம் இதைஓர்  மருந்தாய்
நினைக்காமல் நானிருந்த தேன்?

வெள்ளை நிறத்(து)எவ் விருந்தைஅவள் செம்(பு)ஒன்றால்
அள்ளி அளித்தாள்என் பால்?

அனந்த் 10-4-2014

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 10, 2014, 11:34:37 AM4/10/14
to சந்தவசந்தம்
>> நினைக்காமல் நானிருந்த தேன்?

மோனை இன்னும் சிறக்க, நினைக்காமல் நீயிருந்த தேன்? என்று மாற்றிப் படிக்கவும்.

அனந்த்

Kaviyogi Vedham

unread,
Apr 10, 2014, 11:39:23 AM4/10/14
to santhavasantham
பலே பலே இலந்தையும் அநந்தும் குறளில் வித்தையே காட்டிவிட்டனர்.
எடிட்டர் விரும்பின் இலக்கியவேலில் மேயில் வரும்.
யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



K.R.Kumar

unread,
Apr 10, 2014, 8:06:12 PM4/10/14
to santhav...@googlegroups.com
சந்த வசந்தக் குழுவினரின் 
       படைப்புகள் என்பதில்
சந்தேகமென்ன ஐயா??!!

அன்புடன்,
குமார்(சிங்கை)

Sent from my iPhone

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 11, 2014, 10:09:44 AM4/11/14
to சந்தவசந்தம்

ஊர்தியிதை வாங்க உணவைத் துறக்கத்தாம்

நேரிடி னும்தயங் கார்.


அயல்நாட்டு வண்டிஅது ஆபத்துண் டாக்கப்

புயலாய்க் கிளர்ந்ததுபு கார்!


.. அனந்த்


பி.கு. எதிரொலிக் குறள்கள் (இரட்டை எதிரொலி உட்பட) பற்றிச் சந்தவசந்தத்தில் 2006-ல் பார்த்திருக்கிறோம். அவற்றின் தொகுப்பைப் பின்னர் இடுகிறேன்.




2014-04-10 11:32 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
>> மெல்ல மலர்ந்து விரியும் எழில்மலரைச்
>>சில்வண்டு நாடுவ தேன்?


இனிக்கும் உணவாம் இதைஓர்  மருந்தாய்
நினைக்காமல் நீயிருந்த தேன்?
வெள்ளை நிறத்(து)எவ் விருந்தைஅவள் செம்(பு)ஒன்றால்
அள்ளி அளித்தாள்என் பால்?

ramaNi

unread,
Apr 11, 2014, 10:58:05 AM4/11/14
to santhav...@googlegroups.com
என் முயற்சி:

ஆமென் றலைச்சிரிப்பில் ஆசிரியர் சொன்னது:
ராமனின் பற்றுவாலி பால்! ... 1

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 2

சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 3

--ரமணி, 11/04/2014

*****

Subbaier Ramasami

unread,
Apr 11, 2014, 12:57:26 PM4/11/14
to சந்தவசந்தம்


எதிரொலிக் குறளில் வினா இருக்கவேண்டும்.

இலந்தை

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எத்

Subbaier Ramasami

unread,
Apr 11, 2014, 12:58:56 PM4/11/14
to சந்தவசந்தம்
சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 3

மிகச் சிறப்பு.


ramaNi

unread,
Apr 11, 2014, 1:31:05 PM4/11/14
to santhav...@googlegroups.com
அன்புடை ஆசானுக்கு,

மிக்க நன்றி.

அந்த ’ராமன் வாலிபால்’ ஹாஸ்யக் குறள் ஒரு உண்மை நிகழ்வை ஆதாரமாகக் கொண்டது.
1968-69-இல் என் தம்பி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில்
படித்தபோது அவர்கள் தமிழாசிரியர் திரு. ரம்போலா மாஸ்கரேனஸ் வகுப்பில் அடித்த ஜோக் அது.
பின்னர் தம்பி அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி அது வெளிவந்தாக ஞாபகம்.

கல்லூரியில் எங்களுக்குத் தமிழாசிரியர் பாதிரியார் சி.கே.சாமி. முதல் வகுப்பில் அவர் கரும்பலகையில்
'pattuppattu, nedunal vadai' என்று எழுதிவிட்டுச் சொன்னது:

முதல் பெயரைப் ’பட்டுப்பட்டு’ என்று படித்துவிடாதே! அதேபோல் இரண்டாவது பெயர் ’நெடுநாள் வடை’ அல்ல!

அன்புடன்,
ரமணி

*****

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 11, 2014, 3:13:35 PM4/11/14
to சந்தவசந்தம்

உண்மை


இதோ கேள்வியுடன் வரும் கார்: 


மணமகன்எவ்  வாகனம் கேட்டால் எதையும் 

பணயம்வைக் கத்தயங் கார்


அயல்நாட்டு வண்டிஎது ஆபத்துண் டாக்கப்

புயலாய்க் கிளர்ந்ததுபு கார்?


அனந்த் 


2014-04-11 12:57 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:


எதிரொலிக் குறளில் வினா இருக்கவேண்டும்.

இலந்தை
2014-04-11 9:09 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

ஊர்தியிதை வாங்க உணவைத் துறக்கத்தாம்

நேரிடி னும்தயங் கார்.


அயல்நாட்டு வண்டிஅது ஆபத்துண் டாக்கப்

புயலாய்க் கிளர்ந்ததுபு கார்!


.. அனந்த்


பி.கு. எதிரொலிக் குறள்கள் (இரட்டை எதிரொலி உட்பட) பற்றிச் சந்தவசந்தத்தில் 2006-ல் பார்த்திருக்கிறோம். அவற்றின் தொகுப்பைப் பின்னர் இடுகிறேன்.
2014-04-10 11:32 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
>> மெல்ல மலர்ந்து விரியும் எழில்மலரைச்
>>சில்வண்டு நாடுவ தேன்?


இனிக்கும் உணவாம் இதைஓர்  மருந்தாய்
நினைக்காமல் நீயிருந்த தேன்?

வெள்ளை நிறத்(து)எவ் விருந்தைஅவள் செம்(பு)ஒன்றால்
அள்ளி அளித்தாள்என் பால்?

அனந்த் 10-4-2014



2014-04-09 12:38 GMT-04:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:

கடைசிச் சொல் கேள்வியாகவும்  விடையகவும் இருக்கும்.



அவனி புரக்கும் அருமறைத் தேவன்

சிவனின் முதற்பிள்ளை யார்?


விடை- பிள்ளையார்.--- 

Subbaier Ramasami

unread,
Apr 11, 2014, 3:19:48 PM4/11/14
to சந்தவசந்தம்
அருமை



VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 11, 2014, 3:33:47 PM4/11/14
to சந்தவசந்தம்
பற்றுவாலி, இன்றுநாளை - இவை (கூ)*விளாச்*சீர் கொண்டவையாதலால் தவிர்த்தல் நல்லது. 
முதல் பாடலில் வினா இல்லை. இறுதிக் குறள் -சிவநந்தன் ஆர், சிவனந்தனார்- மிக அழகு- 

அனந்த்   


Vis Gop

unread,
Apr 12, 2014, 7:50:35 AM4/12/14
to santhav...@googlegroups.com
கீதை யுரைத்தநம் கேசவன் தோன்றியபின் 
யாது குலமா யது?

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.


--

ramaNi

unread,
Apr 12, 2014, 9:18:36 AM4/12/14
to santhav...@googlegroups.com

அன்புடையீர்!

அன்புடையீர்!

>> சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
>> முந்தாச் சிவநந் தனார்? ... 3

>> மிகச் சிறப்பு.-  இலந்தை

>> பற்றுவாலி, இன்றுநாளை - இவை (கூ)*விளாச்*சீர் கொண்டவையாதலால் தவிர்த்தல் நல்லது. 
>> முதல் பாடலில் வினா இல்லை. இறுதிக் குறள் -சிவநந்தன் ஆர், சிவனந்தனார்- மிக அழகு- 

>> அனந்த்   

முன்னிட்ட மூன்று குறட்பாக்களில் அந்த ’வாலிபால்’ குறளை நீக்கி
மற்றும் சில சேர்த்த குறட்பாக்கள். அன்பர்கள் கருத்து எனக்கு உதவும்.


எதிரொலிக் குறள்
(ஈற்றுச் சொல் ஒரு கேள்வியாக முடிந்து, அதையொட்டியே விடையும் இருக்குமாறு புனைதல்.)

முன்னிட்டவை:

இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
தணலா வதெது மொழி? ... 1


சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
முந்தாச் சிவநந் தனார்? ... 2

இப்போது:
பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் ... [பாழி = ஊர்]
புரந்தருள் செய்யுமைய னார்? ... 3

வாழ்வில் உறுக்கும் வலிகளின் வீரியம்
தாழ எதுகா பணம்? ... 4 [காபணம் = ஒத்தடம், காக்கும் பணம்]

சப்பண மிட்டமர்ந்தே தர்ப்பணம் செய்விக்க
ஒப்ப-எது வாம்-அர்ப் பணம்? ... 5

எதுமிக வேண்டியே ஏரம்பன் முன்னால்
பொதுவில்போ டும்தொப் பணம்? ... 6 ... [தொப்பணம் = தோப்புக்கரணம்]

மிகுதேவை யாகவெது இன்னாளில் வாழ்வில்
தகையு றுநிரூ பணம்? ... 7

தன்மனத்தில் தான்போகத் தன்மணம் ஓங்கிடவே
முந்தும் எதுர மணம்? ... 8 ... [ரமணம் = ஆனந்தம் தருவது, ரமணரின் வழி]

வெள்ளைக் கலையுடுத்தி விள்ளாத ஞானத்தை
உள்ளிடும் பாரதி யார்? ... 9

சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
பேதையே இப்போது கேள்? ... 10

--ரமணி, 11/04/2014

*****

Siva Siva

unread,
Jul 25, 2024, 2:06:41 PM (2 days ago) Jul 25
to santhav...@googlegroups.com
This topic was initially discussed in SV in Yahoo groups in 2006 (in TSCII encoding).

Some verses I wrote at that time - with some minor tweaks now:

 2006-03-26

"எதிரொலி" (echo verse)

---------------

( முற்குறிப்பு - எதிரொலிக் கவிதை - பாடலில் ஒரு வினா இருக்கும். பாடலின் இறுதியில் உள்ள சொல்லோ சொற்றொடரோ அந்த வினாவிற்கு விடையாக அமையும். குறள்-வெண்பாவில்தான் பாடல் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளாகவும் இருக்கலாம். நூற்பாக்கள் போல ஓரடியாகவும் இருக்கலாம்.

In English (and probably other western languages): Echo verse - is a type of verse in which repetition of the end of a line or stanza imitates an echo.)


1)

ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் எந்நாளும்

தோளில் இதுதரிப்ப துண்டு.

(துண்டு)


2)

மெல்லமெல்ல ஏன்நம் வியாபாரம் வீழ்ந்தது

சொல்லென்றால் என்னஉத் தரம்?

(உத்தரம் - மறுமொழி)

(தரம்)


3)

சிவன்விரும்பி ஏறுவது செப்புக என்றால்

அவன்சொன்ன(து) என்ன விடை?

(விடை - எருது)


4)

அரைநொடியில் நீர்சொல்வீர் பார்வதிக்(கு)இன் னோர்பேர்

உரையுமென்று கேட்டால் உமை.

(உமை - உம்மை - உங்களை);

(உமை - உமாதேவி)


5)

அழுததும் அம்மையப்பர் பாலூட்டக் கையால்

தொழுதெடுத்தார் ஆனந்தத் தோடு.

(தோடு (உடைய செவியன்))


6)

இரவில் வெளிச்சம் இருப்பதெவ் வாறோ?

உரைத்திட வேண்டும் மதி.

(மதி - அறிவு);

(மதி - சந்திரன்)


V. Subramanian
========
Reply all
Reply to author
Forward
0 new messages