வண்ண விருத்தம் - முயற்சி 7 (ராம்)

6 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Sep 26, 2025, 1:06:25 PM (4 days ago) Sep 26
to santhav...@googlegroups.com
வண்ண விருத்தம் - முயற்சி 7 (ராம்)

தானன தானன தானன தானன
     தானன தானன ...... தனதானா

திருப்புகழ் – திருச்செந்தூர்., ராகம்: வலஜி

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஆரம மோடிணை ஆகர மேயுறை

… ஆசல(ம்) மாறனு முறுநாளில்

…. ஆதர வேகொள ஆதர னேவர

… ஆசில தாகவு மவர்காண

 

ஆரிரு ளாயினு வேர்கொடு சாலியை

… ஆடவ ரீவரு(ம்) மகிழ்வோடே

… ஆரிழை ஆகிடும் போனக மால்மகிழ்

… ஆதபன் மேலுல கருள்வோனே

 

ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை

… ஊருணி நீர்மலி  வினையோனே

… ஊனவன் ஏகியன் ஏதில னாகிட

… ஓகம மாயுனை யடைவேனே

 

வார்சடை மேனியன் ஈருரி மேலினன்

… வாளரி வீறுடை வனவாசன்

… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர

… மாணுறு வீழியின் பெருமானே


பதம் பிரித்து:

ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை

… ஆசலம் மாறனும் உறுநாளில்

… ஆதரவே கொள ஆதரனே வர

… ஆசில தாகவும் அவர்காண

 

ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை

… ஆடவர் ஈவரும் மகிழ்வோடே

… ஆரிழை ஆகிடும் போனக மால்மகிழ்

… ஆதபன் மேலுலகு அருள்வோனே

 

ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை

… ஊருணி நீர்மலி  வினையோனே

… ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட

… ஓகம மாய் உனை அடைவேனே

 

வார்சடை மேனியன் ஈருரி மேலினன்

… வாளரி வீறுடை வனவாசன்

… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர

… மாணுறு வீழியின் பெருமானே.



ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை

ஆசலம் மாறனும் உறுநாளில்

ஆதரவே கொள ஆதரனே வர

ஆசில தாகவும் அவர்காண

 

ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை

ஆடவர் ஈவரும் மகிழ்வோடே

ஆரிழை ஆகிடும் போனக மால்மகிழ்

ஆதபன் மேலுலகு அருள்வோனே


(இளையாங்குடி மாறனார் வரலாறு – சுருக்கமாக: செல்வந்தர் என்ற நிலையில் அடியார்களைப் போற்றிய மாறனார்க்கு வறுமை வரச் செய்த இறைவன் நள்ளிரவில் பெருமழையில் மாறன் வீடுசேர்ந்துதன் பசிக்கொடுமையைத் தீர்க்க வேண்டினார். அகத்தில் ஒன்றும் இல்லாத நிலையிலும், மாறனார், வீடிடுப் பின்புறத்தில் நீர் நிரம்பிய வயலில் இருந்து வேருடன் நெற்கதிர்களைக் கொணர, அவர்தம் மனைவி, அதனைக் கொண்டு விருந்து சமைத்தளிக்க, சிவபெருமான் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு மோட்சமளித்தார்).


ஆரமம் – சோலை., ஆராமம் என்பதன் இடைக்குறை., ஆகரம் – வீடு, இருப்பிடம்., ஆசலம் – துன்பம் – இவ்வித்தில் வறுமையைக் குறித்தது.,ஆதரவு – உதவி., ஆதரன் – வயதில் பெரியோன், மூப்பினன்.,ஆசிலது – மதிப்பிற்குரியது. சாலி – நெற்கதிர்., ஆயிழை – அணிகலனுடைய பெண்., இவ்வித்தில், மாறனாரின் மனைவி.,ஆகிடும் – ஆக்கிடும் என்பதன் இடைக்குறை., போனகம் – சுவையான உணவு


ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை

… ஊருணி நீர்மலி  வினையோனே

(இடபத்தில் ஏறிச் செல்பவனும், நெற்றில் மூடியிக்கின்ற மூன்றாம் விழியினை உடையவனும், ஊருணியில் நீர் நிறைதலைச் செய்வோனும் ஆகியவனே)


ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட

… ஓகம மாய் உனை அடைவேனே

(மானிடன் (ஆகிய என்) தோழன், நான் குற்றமற்றானக

அடைக்கலமாய் உன்னை அடைவேன்)

ஊனவன் – மானிடன்., ஏகியன் – தோழன்., ஏதம் – குற்றம்., ஓகம் – அடைக்கலம்


வார்சடை மேனியன் ஈருரி மேலினன்

… வாளரி வீறுடை வனவாசன்

(வார்சடையுடைய மேனியும், யானையதன் மற்றும் புலித்தோலையும் மேலணிந்த சிங்கம் போன்ற வலிமை யுடைய வனத்தில் வசிப்பவன்)


வாணகன் நீர்மலர் ஆயிர மேதர

… மாணுறு வீழியின் பெருமானே

(திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசித்து வணங்கிய மட்சிமை பொருந்திய திருவீழிமைழலை தலத்தில் எழுந்தருளும் பெருமானே)

வாணகன் – திருமால்.,மாணுறு – மாட்சிமை பொருந்திய., வீழியின் – திருவீழிமிழலையின்

 

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

26/09/2025




Siva Siva

unread,
Sep 26, 2025, 3:43:26 PM (4 days ago) Sep 26
to santhav...@googlegroups.com
Pattern conformance seems OK except for the following places.

ஆகிடும் போனக /
வீழியின் பெருமானே /

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 26, 2025, 10:42:20 PM (4 days ago) Sep 26
to santhav...@googlegroups.com
Thanks so much. I shall correct the cited places. Much obliged for your valuable inputs.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 27, 2025, at 01:13, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMMfit5pNZEO8mq_dDU0-aGP7QsLFUeJB5r6hWs-6qVXw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Sep 27, 2025, 3:56:42 AM (4 days ago) Sep 27
to santhav...@googlegroups.com
திருத்திய வடிவம் கீழே. சில தட்டச்சுப் பிழைக்களையும் திருத்த வேண்டியமையினால், முழுவதும் மீண்டும் இட வேண்டியதாயிற்று.

வண்ண விருத்தம் – முயற்சி – 7 (ராம்)

தானன தானன தானன தானன
     தானன தானன ...... தனதானா

திருப்புகழ் – திருச்செந்தூர்., ராகம்: வலஜி

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஆரம மோடிணை ஆகர மேயுறை

… ஆசல(ம்) மாறனு முறுநாளில்

…. ஆதர வேகொள ஆதர னேவர

… ஆசில தாகவு மவர்காண

 

ஆரிரு ளாயினு வேர்கொடு சாலியை

… ஆடவ ரீவரு(ம்) மகிழ்வோடே

… ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்

… ஆதபன் மேலுல கருள்வோனே

 

ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை

… ஊருணி நீர்மலி  வினையோனே

… ஊனவன் ஏகியன் ஏதில னாகிட

… ஓகம மாயுனை யடைவேனே

 

வார்சடை மேனியன் ஈருரி மேலினன்

… வாளரி வீறுடை வனவாசன்

… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர

… மாணுறு வீழியர் பெருமானே.


பதம் பிரித்து:

ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை

… ஆசலம் மாறனும் உறுநாளில்

… ஆதரவே கொள ஆதரனே வர

… ஆசில தாகவும் அவர்காண

 

ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை

… ஆடவர் ஈவரும் மகிழ்வோடே

… ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்

… ஆதபன் மேலுலகு அருள்வோனே

 

ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை

… ஊருணி நீர்மலி  வினையோனே

… ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட

… ஓகம மாய் உனை அடைவேனே

 

வார்சடை மேனியன் ஈருரி மேலினன்

… வாளரி வீறுடை வனவாசன்

… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர

… மாணுறு வீழியர் பெருமானே.



பொருள் விளக்கம்:

ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை

ஆசலம் மாறனும் உறுநாளில்

ஆதரவே கொள ஆதரனே வர

ஆசில தாகவும் அவர்காண

 

ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை

ஆடவர் ஈவரும் மகிழ்வோடே

ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்

ஆதபன் மேலுலகு அருள்வோனே

 

(இளையாங்குடி மாறனார் வரலாறு – சுருக்கமாக: செல்வந்தர் என்ற நிலையில் அடியார்களைப் போற்றிய மாறனார்க்கு வறுமை வரச் செய்த இறைவன் நள்ளிரவில் பெருமழையில் மாறன் வீடுசேர்ந்துத் தன் பசிக்கொடுமையைத் தீர்க்க வேண்டினார். அகத்தில் ஒன்றும் இல்லாத நிலையிலும், மாறனார், வீட்டுப் பின்புறத்தில் நீர் நிரம்பிய வயலிலிருந்து வேருடன் நெற்கதிர்களைக் கொணர, அவர்தம் மனைவி, அதனைக் கொண்டு விருந்து படைத்தளிக்க, சிவபெருமான் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு மோட்சமளித்தார்).

 

ஆரமம் – சோலை., ஆராமம் என்பதன் இடைக்குறை., ஆகரம் – வீடு, இருப்பிடம்., ஆசலம் – துன்பம் – இவ்விடத்தில் வறுமையைக் குறித்தது., ஆதரவு – உதவி., ஆதரன் – வயதில் பெரியோன், மூப்பினன்., ஆசிலது – மதிப்பிற்குரியது. சாலி – நெற்கதிர்., ஆயிழை – அணிகலனுடைய பெண்., இவ்வித்தில், மாறனாரின் மனைவி., ஆகிடும் – ஆக்கிடும் என்பதன் இடைக்குறை., ஊண் – உணவு

 

ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை

… ஊருணி நீர்மலி  வினையோனே

(இடபத்தில் ஏறிச் செல்பவனும், நெற்றில் மூடியிருக்கின்ற மூன்றாம் விழியினை உடையவனும், ஊருணியில் நீர் நிறைதலைச் செய்வோனும் ஆகியவனே)

 

ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட

… ஓகம மாய் உனை அடைவேனே

(மானிடன் (ஆகிய என்) தோழன், நான் குற்றமற்றானாகிட,

அடைக்கலமாய் உன்னை அடைவேன்)

ஊனவன் – மானிடன்., ஏகியன் – தோழன்., ஏதம் – குற்றம்., ஓகம் – அடைக்கலம்

 

வார்சடை மேனியன் ஈருரி மேலினன்

… வாளரி வீறுடை வனவாசன்

(வார்சடையுடைய மேனியும், யானையதன் மற்றும் புலியின்தோலையும் மேலணிந்த சிங்கம் போன்ற வலிமை யுடைய வனத்தில் வசிப்பவன்)

வாளரி – சிங்கம்., வீறு - வலிமை

 

வாணகன் நீர்மலர் ஆயிர மேதர

… மாணுறு வீழியர் பெருமானே

(திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசித்து வணங்கிய மாட்சிமை பொருந்திய திருவீழிமிழலை தலத்தில் எழுந்தருளும் பெருமானே)

வாணகன் – திருமால்., மாணுறு – மாட்சிமை பொருந்திய., வீழியர் – திருவீழிநாதேஸ்வரர் எனப்படும் இறைவன்.

 

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

26/09/2025

Arasi Palaniappan

unread,
Sep 27, 2025, 4:22:33 AM (4 days ago) Sep 27
to சந்தவசந்தம்
அற்புதம்! பல அரிய சொற்களுக்குப் பொருள் அறியும் பேறு பெற்றேன்.

Ram Ramakrishnan

unread,
Sep 27, 2025, 5:32:13 AM (4 days ago) Sep 27
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன். தங்கள் பின்னூட்டம் ஊக்கமளிக்கின்றது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


Siva Siva

unread,
Sep 27, 2025, 9:02:00 AM (4 days ago) Sep 27
to santhav...@googlegroups.com
ஆதபன் மேலுல கருள்வோனே 

ஆதபன்  /  = சூரியன்? 
You granted a world (Sivalokam) that is above even Suryalokam?

If you think it means Siva, then, it is not the 8th case - if the song is addressing Siva.

/… ஓகம மாயுனை யடைவேனே/
This is addressing Siva directly. (Second person).

/வார்சடை மேனியன் ஈருரி மேலினன்/
etc. are describing Him in 3rd person.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 27, 2025, 9:50:34 AM (4 days ago) Sep 27
to santhav...@googlegroups.com
Thanks again for your input, Mr. Sivasivaa.

The first part is about Ilaiyankudi MaaRan Nayanmaar.

ஆதிபன் என்று இருக்க வேண்டும். ஆதிபன் - இறைவன். ஆதிபன் எனத் திருத்துகிறேன்.

The second part is me addressing Lord Sivaa. So, ஓகம் - அடைக்கலம்., here it is definitely second person and intended as such.

The third part is describing about Lord Sivaa and praising His attributes, so I wrote in third person.

Is the scheme wrong?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 27, 2025, at 18:32, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Sep 27, 2025, 4:39:34 PM (3 days ago) Sep 27
to santhav...@googlegroups.com
Mixing the second and third person in the same song is a bit odd.
If it sounds ok to you when you read the prose meaning of the song, then that is ok.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Sep 28, 2025, 5:03:10 AM (3 days ago) Sep 28
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா:

உங்களது கருத்தேற்று, அடியேன் மீண்டும் ஒருமுறை வண்ண விருத்தத்தைச் சீரமைத்த வடிவம் கீழே:

வண்ண விருத்தம் – முயற்சி – 7 (ராம்)

தானன தானன தானன தானன
     தானன தானன ...... தனதானா

திருப்புகழ் – திருச்செந்தூர்., ராகம்: வலஜி

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஆரம மோடிணை ஆகர மேயுறை

… ஆசல(ம்) மாறனு முறுநாளில்

…. ஆதர வேகொள ஆதர னேவர

… ஆசில தாகவு மவர்காண

 

ஆரிரு ளாயினு வேர்கொடு சாலியை

… ஆடவ ரீவரு(ம்) மகிழ்வோடே

… ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்

… ஆதிபன் மேலுல கருள்வோனே

 

ஊர்விடை வாகனன் ஓர்விழி மூடினன்

… ஊருணி நீர்மலி  வினையோனே

… ஊனவன் வாகையில் ஏதில னாகிட

… ஓமிடி யேகிடும் நிலையோனே


( ஊனவன் - மானிடன்., வாகை - நல்லொழுக்கம்., ஏதிலன் - குற்றமற்றவன்., ஓமிடி - துன்பம், இன்னல்)

 

வார்சடை மேனியன் ஈருரி மேலினன்

… வாளரி வீறுடை வனவாசன்

… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர

… மாணுறு வீழியர் பெருமானே

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Sep 29, 2025, 11:44:38 PM (23 hours ago) Sep 29
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகச் சிறப்பான வண்ண விருத்தங்கள்! 

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
1:44 AM (21 hours ago) 1:44 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இனிய நண்பரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 30, 2025, at 09:14, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
10:29 PM (1 hour ago) 10:29 PM
to santhav...@googlegroups.com
அன்புள்ள ராம்கி,
முயற்சி திருவினையாக்கும் என்பர். உங்களது விடாமுயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
அனத்

On Sat, Sep 27, 2025 at 3:56 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Ram Ramakrishnan

unread,
10:44 PM (20 minutes ago) 10:44 PM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அனந்த்ஜீ.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Oct 1, 2025, at 07:59, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages