NEW YEAR WELCOME

11 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Dec 31, 2025, 10:57:47 PM (8 days ago) 12/31/25
to santhavasantham
புத்தாண்டே வருக!
இரண்டா யிரத்திரு பத்தாறே ஞாலம்
திரண்ட வளம்பெறவே சீர்கொண்டு நீவருக
இங்குனது ஆட்சி இருப்பதோ ஓராண்டே
தங்கி மனத்தில் சரித்திரம் நல்லபடி
ஆக்கும் வகையில் அமைந்திடுக நின்காலம்.
சீக்காய் இருக்கும் சிலபேரின் போக்காலே
சென்றாண்டு மிக்கச் சிரமப் படுத்தியது.
நன்றாய் அதைமாற்றி ஞாலத்தைச் சீராக்கு
போராட்டம் வேண்டாம் பொல்லாப்பும் வேண்டாமே
பாராட்டும் வண்ணம் பலன் தா, செயலாற்று
நல்லமைதி ஞாலத்தில் நன்கு நிலவட்டும்
எல்லோரும் ஒற்றுமையில் என்றும் திளைக்கட்டும்
அச்சத்தைப் போக்கியே அன்பைப் பெருக்கிவிடு
மெச்சுகிறோம் நல்ல விதம்.

image.png

இமயவரம்பன்

unread,
Jan 1, 2026, 6:06:43 AM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக அருமை, தலைவரே!

வள்ளலாரின் இந்த வாழ்த்துக் கவிதையை நினைவுறுத்துகிறது தங்கள் கவி:

“ கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைந்து
எல்லோரும் வாழ்க இசைந்து”

N. Ganesan

unread,
Jan 1, 2026, 12:10:36 PM (7 days ago) Jan 1
to சந்தவசந்தம்
2026 - அடுத்த 5 ஆண்டைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்ட ஆண்டு.

Kaviyogi Vedham

unread,
Jan 1, 2026, 12:29:38 PM (7 days ago) Jan 1
to santhav...@googlegroups.com
  தப்பு  சாரே.  தமிழ்  நாட்டை   மட்டும் தீர்மானிக்கும் என்று  இருக்கணும்.   ஒருவகையில் அதுவும் தவறு.  எதற்கு சூப்பர்பவர்  என்று  ஒன்று  இருக்கு?
   யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/e64d1b2c-c32f-4024-b945-91b603524290n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages