kattavaNdi

9 views
Skip to first unread message

vis gop

unread,
Sep 6, 2012, 2:40:19 AM9/6/12
to santhav...@googlegroups.com

சந்த வசந்தம் அறிஞர்களின் ஆசிக்காக நான் நேற்று எழுதிய கவிதை இங்கே:

கட்டவண்டி

கட்டவண்டி ஏறிக்குந்திக் காததூரம் போய்வந்தாலும்
களப்பே இல்லீங்க - நல்ல
காளமாடு ரெண்டுபக்கம் கயிறுபோட்டுப் பூட்டிருக்கேன்
கவலே இல்லீங்க.
முட்டிமோதி முண்டியண்டி மூச்சுவாங்கி நீங்கபோற
மோட்டார் இல்லீங்க - இதுல
மூஞ்சிவாட்டமில்லாம முதுகெலும்பு வளையாம
மொதுவாப் போலாங்க!

காஞ்சவெக்கொல் கட்சுத்துன்னுக் கயனிப்பக்கம் பில்லமேய்ற
காள பாருங்க - அதொட
காதுகொம்பு காலுவாலு கயுத்துத்தாளு பாக்க நூறு
கண்பொதாதுங்க!
ஆஞ்சரிஞ்சு பொரியல்சேஞ்சு ஆக்கிப்போட்ற வீட்டம்மாவ
அம்மோவ்னுதுங்க!
அரிஞ்சதோலு மிச்சம்மீதி அரிசிகயுநி அவகொடுத்தா
அம்மா(ங்) இஷ்டங்க.

பட்டிக்காட்டுப் பள்ளம்மேட்ல பயகிப்போன மண்ணுரோட்ல
பாஷ்டா ஓடுங்க - வண்டி
பத்துமூட்ட நெல்லுபோட்டுப் பத்துப்பேரு ஏறினாலும்
பாங்காப் போவுங்க.
சட்டிதூக்ற பொம்பளதஞ் சாட்டக்காரப் புருஷனோட
சல்லுனு போனா - சும்மா
சாஞ்சுசாஞ்சு ஓடையில சாயங்கால நேரத்துல
சாலிதாம் போங்க!

காத்துப்போயிப் பஞ்சராயிக் கயண்டுபோயிப் பாதிரோட்ல
கயுத்தறுக்காது - நம்ம
காளரெண்டும் பாத்துப்போவும் கண்ணசந்து போவமோன்னு
கவல வராது.
ஏத்திவந்த மக்களையே எறக்கிவிட்டுத் தள்ளச்சொல்லி
எரிச்சல் தராது - நமக்கு
எதிரவரும் வண்டிக்காரன் இருண்டுபோக லைட்டடிச்சு
எடஞ்சல் பண்ணாது.

மண்ண நம்பி மயயநம்பி மாட்ட நம்ப்ற உயவனுக்கு
மரம் உசுருங்க - அங்க
மாடிவீடு கட்டிக்கட்டி மண்ணமூடி மரத்தவெட்டி
மாச்சுப்புட்டீங்க.
கண்ணப்போல மண்ணவச்சுக் காத்த எம மரம், அதுங்க
கடவுளுதாங்க! - அது
கட்டவண்டி ஓடவாயும் காருவண்டி ஓடச்சாவும்
கருத்(து) இதுதாங்க!

நாய்க்குக்கல்ல சோடிசேத்து நல்லமாட்டச் சூடுபோட்டு
நன்னிமறந்தோம் - நம்ம
நாலுபக்கம் நல்லாருந்தா நானுநீயும் நல்லாருப்போம்
நாயந்தானங்க?
வாய்க்கயின்னா மோடுபள்ளம் வரவுசெலவு ராப்பவலு
வந்துதான் தீரும் - கட்ட
வண்டிப்பாத பாத்து நல்ல வாய்க்கப்பாடம் கத்துக்கலாம்
வாங்க ஏறுங்க!

நல்வாழ்த்துக்களுடன்,

கோபால்.

Kaviyogi Vedham

unread,
Sep 6, 2012, 3:10:39 AM9/6/12
to santhav...@googlegroups.com
மிக மிக அட்டகாசமான கவிதை தானுங்க!-உணர்ச்சி
..மீறிவந்து படிச்சஒட்னே அழுதுபுட்டேஙக!
..
 வாழ்த்துக்கள்,
 யோகியார்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&

2012/9/6 vis gop <vis...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
--
 Pl. SEE MY NEW BloG and comment on the contents..
this contains wonderful poems on new topics
http://kaviyogi-vedham.blogspot.com/
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,2/682,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp.
Hotchips new HOTEL)-சென்னை-600115(போன்044- 6456 5979

vis gop

unread,
Sep 6, 2012, 3:56:49 AM9/6/12
to santhav...@googlegroups.com
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
கோபால்.

2012/9/6 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

vis gop

unread,
Sep 6, 2012, 8:22:11 AM9/6/12
to santhav...@googlegroups.com

என் அருகே உள்ள நண்பர்கள் சில வார்த்தைகள் புரியவில்லை என்றார்கள். அதற்காகச் சிறிய விளக்கங்கள் இங்கே:

கட்டவண்டி

காஞ்சவெக்கொல் கட்சுத்துன்னுக் கயனிப்பக்கம் பில்லமேய்ற

[வைக்கோல், கடிச்சுத் துன்னு, கழனிப்பக்கம், புல்ல மேயுற]

அரிஞ்சதோலு மிச்சம்மீதி அரிசிகயுநி அவகொடுத்தா

[அரிசி கழுநீர்]

காத்துப்போயிப் பஞ்சராயிக் கயண்டுபோயிப் பாதிரோட்ல
கயுத்தறுக்காது - நம்ம

[கழுத்த]

மண்ண நம்பி மயயநம்பி மாட்ட நம்ப்ற உயவனுக்கு

[மழைய நம்பி]

கண்ணப்போல மண்ணவச்சுக் காத்த எம மரம்அதுங்க

[எம = இமை]

கட்டவண்டி ஓடவாயும் காருவண்டி ஓடச்சாவும்

[வாழும்]

நாய்க்குக்கல்ல சோடிசேத்து நல்லமாட்டச் சூடுபோட்டு

[நாயக்கண்டா கல்லக்காணோம்; நல்லமாட்டுக்கு ஒரு சூடு]

வாய்க்கயின்னா மோடுபள்ளம் வரவுசெலவு ராப்பவலு

[வாழ்க்கை]

வண்டிப்பாத பாத்து நல்ல வாய்க்கப்பாடம் கத்துக்கலாம்

[வாழ்க்கைப்பாடம் ] 

Kaviyogi Vedham

unread,
Sep 6, 2012, 8:59:51 AM9/6/12
to santhav...@googlegroups.com
என் புரிதலும்,அனுபவப்பாடமும் என்ன என்றால் அப்படியே கிராமத்தானா மாற வேண்டாம் என்பதே.
கொத்தமங்கலம் சுப்பு பாடல்கள் பார்க்கவும். கிராமியப்பாடல் எனினும் அவர் தெளிவாக எல்லோருக்கும் புரிகிறமாதிரி எழுதியிருப்பார். பழகவும்,.. இல்லையெனில் பாடலும் எழுதி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லோணும்.. தேவையா?
 யோகியார்

2012/9/6 vis gop <vis...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
Swaminathan Sankaran

unread,
Sep 6, 2012, 9:08:53 AM9/6/12
to santhav...@googlegroups.com
நல்லா சோக்காக் கீதுங்க
மெல்லப் பாத்துப் படியுங்க !

சங்கரன்

2012/9/6 vis gop <vis...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
--
 Swaminathan Sankaran

vis gop

unread,
Sep 6, 2012, 10:20:15 AM9/6/12
to santhav...@googlegroups.com
எனக்கு மிகவும் பயனுள்ள அறிவுரை. நன்றி. இந்தக்கவிதையைத் திருத்துவது முதலே அதை நான் ஏற்றுப் பழகத் தொடங்குகிறேன்.
கோபால்.

2012/9/6 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
என் புரிதலும்,அனுபவப்பாடமும் என்ன என்றால் அப்படியே கிராமத்தானா மாற வேண்டாம் என்பதே.

Pas Pasupathy

unread,
Sep 6, 2012, 10:52:40 AM9/6/12
to santhav...@googlegroups.com
கவியோகியாரின் பரிந்துரை மிக அருமை. கடைப்பிடித்தால் தமிழ் தழைக்கும்..

2012/9/6 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

--

vis gop

unread,
Sep 6, 2012, 12:53:19 PM9/6/12
to santhav...@googlegroups.com
யோகியார் அறிவுரையை ஏற்றுக் கவிதையை மாற்றி அமைத்தேன்.

கட்டவண்டி

கட்டவண்டி ஏறிக்குந்திக் காததூரம் போய்வந்தாலும்
களப்பே இல்லீங்க - நல்ல
காளமாடு ரெண்டுபக்கம் கயிறுபோட்டுப் பூட்டிருக்கேன்
கவலை இல்லீங்க.
முட்டிமோதி முண்டியண்டி மூச்சுவாங்கி நீங்கபோற
மோட்டார் இல்லீங்க - இதுல
மூஞ்சிவாட்டமில்லாம முதுகெலும்பு வளையாம
மொதுவாப் போலாங்க!

காஞ்ச வைக்கோல் கடிச்சுத்துன்னுக் கழனிப்பக்கம் புல்ல மேயிற

காள பாருங்க - அதொட

காதுகொம்பு காலுவாலு கழுத்துத்தாளு பார்க்க நூறு

கண்போதாதுங்க!

ஆஞ்(சு) அரிஞ்சு பொரியல் செஞ்சு ஆக்கிப்போடுற வீட்டம்மாவ
அம்மோவ்னுதுங்க! - அப்போ 
அரிஞ்சதோலு மிச்சம்மீதி அரிசிகழுநி அவகொடுத்தா

அம்மா(ங்) இஷ்டங்க.

பட்டிக்காட்டுப் பள்ளம்மேட்டுல பழகிப்போன மண்ணுரோட்டுல

பாஷ்டா ஓடுங்க - வண்டி
பத்துமூட்ட நெல்லுபோட்டுப் பத்துப்பேரு ஏறினாலும்
பாங்காப் போவுங்க.

சட்டிதூக்குற பொம்பளதன் சாட்டக்காரப் புருஷனோட

சல்லுனு போனா - சும்மா
சாஞ்சுசாஞ்சு ஓடையில சாயங்கால நேரத்துல
சாலிதாம் போங்க!

காத்துப்போயிப் பஞ்சராயிக் கழண்டுபோயிப் பாதிரோட்டுல
கழுத்தறுக்காது - நம்ம
காளரெண்டும் பாத்துப்போகும், கண்ணசந்து போவமோன்னு

கவலை வராது.
ஏத்திவந்த மக்களையே எறக்கிவிட்டுத் தள்ளச்சொல்லி
எரிச்சல் தராது - நமக்கு
எதிரவரும் வண்டிக்காரன் இருண்டுபோக லைட்டடிச்சு
எடஞ்சல் பண்ணாது.

மண்ண நம்பி மழையநம்பி மாட்ட நம்புற உழவனுக்கு

மரம் உசுருங்க - அங்கே 
மாடிவீடு கட்டிக்கட்டி மண்ணமூடி மரத்தவெட்டி
மாச்சுப்புட்டீங்க.

கண்ணப்போல மண்ணவச்சுக் காக்கும்இமை மரம், அதுங்க

கடவுளுதாங்க! - அது

கட்டவண்டி ஓடவாழும் காருவண்டி ஓடச்சாவும்

கருத்(து) இதுதாங்க!

நாய்க்குக் கல்லைச் சோடிசேர்த்து நல்லமாட்டைச் சூடுபோட்டு
நன்றி மறந்தோம் - நம்ம

நாலுபக்கம் நல்லாருந்தா நானுநீயும் நல்லாருப்போம்
நாயந்தானங்க?

வாழ்க்கையின்னா மோடுபள்ளம் வரவுசெலவு ராப்பகலு

வந்துதான் தீரும் - கட்ட

வண்டிப்பாதை பாத்து நல்ல வாழ்க்கைப்பாடம் கத்துக்கலாம்

வாங்க ஏறுங்க!

Kaviyogi Vedham

unread,
Sep 7, 2012, 1:13:13 AM9/7/12
to santhav...@googlegroups.com
ரொம்ப ஷோக்காக்கீது இப்போ போங்க!
சூப்பர் ரகம் பாட்டு... இதனை நம்ம ஏர்வாடியார் நடத்தும் ‘ கவிதை உறவு’’ஏட்டிற்கு உடனே அனுப்புங்கள். அஞ்சலில்.கூரியரில்.
 நான் சொன்னேன் என்று சொல்லுங்கள் உடனே பிரசுரிப்பார்.
 அவர் முகவரி..
 கவிமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன்,
 ஆசிரியர்,
கவிதை உறவு,
420இ,மலர் குடியிருப்பு,
 அண்ணாநகர் மேற்கு,
 சென்னை-600 040
போன் நம்.பர்---72003-39455

2012/9/6 vis gop <vis...@gmail.com>

Siva Siva

unread,
Sep 8, 2012, 9:54:43 AM9/8/12
to santhav...@googlegroups.com
அழகிய பாடல்.

நாட்டுப்புறப் பாஷையில் ஒலிக்கும் பாடலில் சென்னைப் பாஷையும் கலந்துவருகிறதே. இம்மொழி சென்னைப்பட்டணத்தைத் தவிர வேறு இடங்களிலும் பேசப்படுகிறதா?

/ஏத்திவந்த மக்களையே எறக்கிவிட்டுத் தள்ளச்சொல்லி
எரிச்சல் தராது /

முன்னம் TST என்று ஒரு பஸ் கம்பெனி இருந்தது. கிண்டலாக அதைத் 'தள்ளு சார் தள்ளு' என்று சொல்லக்கேட்டது நினைவிற்கு வந்தது!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/9/6 vis gop <vis...@gmail.com>

Pas Pasupathy

unread,
Sep 8, 2012, 10:12:50 AM9/8/12
to santhav...@googlegroups.com
>>முன்னம் TST என்று ஒரு பஸ் கம்பெனி இருந்தது. கிண்டலாக அதைத் 'தள்ளு சார் தள்ளு' >>என்று சொல்லக்கேட்டது நினைவிற்கு வந்தது!
ஆம்,  இதற்கு முரணாக TVS  ' தள்ள வேண்டாம் சாமி” என்று சொல்வார்கள்.
 
>>நாட்டுப்புறப் பாஷையில் ஒலிக்கும் பாடலில் சென்னைப் பாஷையும் கலந்துவருகிறதே. >.இம்மொழி சென்னைப்பட்டணத்தைத் தவிர வேறு இடங்களிலும் பேசப்படுகிறதா?
 
தமிழ் இலக்கணத்தில் கவனிக்க வேண்டியது. ‘கட்டைவண்டி’ என்றே எழுதலாம். ஆனால், ‘ஐகாரக் குறுக்கத்தால்’, நாம் எல்லோருமே ‘கட்டவண்டி’ என்றுதான் உச்சரிக்கிறோம்! 
 
2012/9/8 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
Reply all
Reply to author
Forward
0 new messages