Fwd: குரு- நிறம்

74 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 8, 2009, 10:10:09 AM11/8/09
to Santhavasantham


---------- Forwarded message ----------
From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Nov 8, 8:18 am
Subject: குரு- நிறம்
To: தமிழ் மன்றம்


இராமகி ஐயா,

இப் பட்டியல் பாவாணர் பொத்தகத்தில் உள்ளதா?

குரு என்றால் வெள்ளை என்று திவாகரத்தில் காணோமே:http://dsal.uchicago.edu/
cgi-bin/philologic/getobject.pl?p.3:123.tami...

ஒளி - உ-ம்: இரத்தினங்களின் ஒளி என்ற பொருள் உண்டு,

பல சொற்கள் தமிழ் கடன்பெற்ற guru என்னும் வடசொல்.

ஸ்வாமிநாதன் என்னும் கதையை அருணகிரிநாதர்
பாடுகிறார். அதற்குமுன் ஏரகம் என்பது திருச்செங்கோடு.
தஞ்சாவூர் ஜில்லாவிற்கு ஒரு படைவீடு வேண்டும் என்பதற்காக
சுவாமிமலை குருமலை (Guru-malayam) ஏற்படுகிறது.

வியாழனுக்கும் guru என்ற பெயர் உண்டு. இதற்கும் வெள்ளைக்கும்
தொடர்பில்லை.  The planet Jupiter, as the priest of the gods;
[தேவகுரு.]

----------------

குருத்து என்ற சொல் குறுகு- என்னும் பொருளில்
ர்/ற் மாற்றம். குருகு குறுகு நேராக நிற்காமல் வளைவது என்னும் பொருளில்.
குறுகிய புதர் - ஒருவகை எலுமிச்சைச் செடிக்குடும்பம் சேர்னதத் குருந்தம்/
குருத்தம்/குருக்கத்தி.
கருப்பு/கறுப்பு, சில்லரை/சில்லறை, ... போல் குரு-:குறு-.

பாண்டவர்தாம் வெள்ளை. கௌரவர் கருப்பு என்று மகாபாரதம் வர்ணிக்கிறது.
பண்டு/பாண்டு என்றால் தான் வெள்ளை. ஈரானில் இருந்து
வந்த பிராமணர் வடக்கே பாண்டே என்கிறார்கள். பழு-/பண்டு- என்னும்
திராவிடச் சொல் கரிய குருநாட்டாரை வேறுபடுத்தியது.

குருந்தம் (ஆங்கிலத்தில் Corundam) குருதி,
குருந்தம் அணுத்தொகுதி:http://www.geocities.jp/ohba_lab_ob_page/
structure6.html
குரால் - புகர் நிறம்.

குராற்பசு = கபிலை நிற மாடு.

குருமணித் தாலி = செம்மணித் தாலி -
(necklace of Carnelian beads)http://www.dandennis.com/Carnelian.JPG

http://www.kanzjewellery.com/images/Necklace%20Carnelian.jpg

குரு- முதன்மைப் பொருள் குருதி, குருந்த நிறம் ஆகிய செம்மை.

Guru என்னும் வடசொல், குறு- > குரு- இவை குரு- என்றும்
சில தமிழ்ச் சொற்களில் வரும். அவை கொண்டு நிறத்தை
அறுதியிட முடியாது.

நா. கணேசன்

On Nov 8, 7:11 am, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:

> குருவிற்கு ஒரு பொருள் மட்டுமில்லை. குரு/குருகு என்றால் வெள்ளை (திவாகரம்),
> ஒளி என்றும் பொருளுண்டு.

> பல அகரமுதலிகளையும் தேடிப் பாருங்கள்.

> வியாழனுக்கு உள்ள பெயரும் குரு = வெள்ளை நிறக் கோள். (எப்படி சிவந்த நிறக் கோள்
> செவ்வாய், கருநிறக் கோள் காரி, புதல் நிறக்கோள் புதன்  என்றழைக்கப் பட்டதோ
> அதேபடி குருவும் நிறம் பற்றியே அழைக்கப் பட்டது. வெள்ளியும் அதே பொருள் தான்.)

> வெள்ளை நாரைக்கு குருகு என்ற பெயர் உண்டு (வெள்ளாங்குருகு).

> குருக்கத்தி = வெள்ளைப்பூ
> குருகுபெயர்க் குன்றம்  = க்ரௌஞ்ச மலை
> குருகுமண் = வெள்ளைமண்
> குருகு மணல் = வெண் பொடி
> குருகூர் = ஆழ்வார் திருநகரி. வெண்மணல் கொண்ட ஊர்.
> குருசகம்/குருசம் = வெண்தோன்றி
> குருத்தம் = வெள்ளையைப் போன்ற மாழை
> குருந்து = வெண்குருத்து (பிங்கலம்)
> குருந்தை = நாக மல்லி
> குரு இனத்தவர் > கௌரவர் (அவருடைய வெள்ளை நிறத்தால் அப்படிப் பெயர் பெற்றவர்.)
> குரும்பவரை = வெள்ளையவரை.
> குருமணல் = வெள்ளிமணல்
> குருமலை = சாமிமலை (இங்கு வெள்ளைதான் பெரிதாய்ச் சொல்லப்படும்.)
> குருமிளகு = சற்று வெள்ளை நிறம் காட்டும் உயர்வகை மிளகு.

> இப்படிப் பலசொற்கள் விரியும். இங்கு விரிக்காது விட்டேன்.

> அன்புடன்,
> இராம.கி.

> ----- Original Message -----
> From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
> To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
> Sent: Sunday, November 08, 2009 6:06 PM
> Subject: [தமிழ் மன்றம்] குரு- நிறம்

> > இராமகி எழுதினார்:
> >> குரு/பால் என்ற இரண்டும் வெள்ளையைக் குறிப்பவை தான்.

> > குரு- என்றால் சிவப்பு அல்லவா?

> > குருதி = ரத்தம் (< அரத்தம்).

> > குருந்தம் = Ruby.
> > வடமொழியில் குருவிந்தம் என்றழைக்கப்படுவது.

> > ஆங்கிலத்தில் இரத்தினக் கல் (Ruby)
> > இன்றும் குருந்தம் தான்:
> >http://www.merriam-webster.com/dictionary/corundum
> > Pronunciation: \kə-ˈrən-dəm\
> > Function: noun
> > Etymology: Tamil kuruntam; akin to Sanskrit kuruvinda ruby
> > Date: 1804
> > : a very hard mineral that consists of aluminum oxide occurring in
> > massive and crystalline forms, that can be synthesized, and that is
> > used for gemstones (as ruby and sapphire) and as an abrasive.

> > குருந்தம் (Corundum)

> >http://chemistry.about.com/od/geochemistry/a/mohsscale.htm
> >http://www.prettyrock.com/php/images/Ruby%20Corundum%20-%20Synthetic%...

> >http://members.tripod.com/~lil_feathers/corundum3.jpg

> > குருவிந்தக்கல் kuruvinta-k-kal
> > , n. < kuru- vindaM.M. 247.) 3. Red ochre; காவிக்கல்
> > குருவிந்தம் kuruvintam
> > , n. < kuruvinda. 1. Inferior kind of ruby; தாழ்ந்ததர மாணிக்க வகை.
> > (சிலப். 14, 186, உரை.) 2. Crab's eye, m. cl., Abrus precatorius;
> > குன்றி. 3. A corn of barley; வாற்கோதுமை மணி. (W.) 4. Vermilion;
> > சாதிலிங்கம். (W.)

> > நா. கணேசன்- Hide quoted text -

> - Show quoted text -

Chandar Subramanian

unread,
Nov 8, 2009, 8:21:25 PM11/8/09
to santhav...@googlegroups.com
குரு என்றால் 'சுமை'. 'பெரிய' எனும் பொருள்கள் கேள்விபட்டிருக்கிறேன். கிரகங்களில் மிகவும் அதிக எடை உள்ளதாலேயே குரு, குரு என அழைக்கப்படுகிறது. இந்திய முறைப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட இந்த உண்மையை என்றைய அறிவியல் நிரூபித்துள்ளது. 'பெரிய' எனும் பொருளில் 'ஆசிரியர்' எனும் பொருள் வருகிறது என்று நினைக்கிறேன்.
 


 
2009/11/8 N. Ganesan <naa.g...@gmail.com>



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

nahupoliyan

unread,
Nov 9, 2009, 5:59:11 AM11/9/09
to சந்தவசந்தம்
1.மெத்தவும் சரி! ஜூபிட்டரென்றழைக்கப்படும் கோளுக்கு Guரு என்ற
பெயரீட்டுக்கு
Guru=heavy, large, பெரிய என்ற பொருள்வழக்கு அடிப்படையென்பது தமிழ்
மற்றும் ஸம்ஸ்க்ருதச் சாத்திரங்களில் பதிவாகியுள்ளது.

2.குருவைக் 'காஞ்சன-ஸன்னிபம்' - பொன்னொளி - எனப்பட்டிருக்கிறது.
aaசிரியர் மட்டுமல்ல, எல்லாப் 'பெரியோர்களையுமே குருக்கள், குருமார்
என்பதும் வழக்காம். 'என்ன,தலைவா!', 'இன்னா பாஸ்!' என்ற மெட்ராஸ் பாஷையில்
'என்ன, குரு' எனும் வழக்கும் கேட்டிருக்கலாம்!

3.guru விலிருந்து எழுந்த சொல் gauravam = பெருமை, 'கனம்[heaviness]'
மேலேறிவந்த பொருள் 'honour'.
honorary editor கௌரவ ஆசிரியர் ஆனது அங்ஙனமாம்.

4.இந்த இடத்துக்கு வந்தாச்சு, இதையும் சொல்லித்தான் போடுவோமே!:- Kuru
வமிசத்து நூற்றுவராம் kauravas - கௌரவரை - gauravaர்கள் என்று
நவில்பவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்! இதிலே வேடிக்கையென்னவென்றால்,
அந்த உச்சரிப்பு தமிழிலக்கணப்படியே தப்பு! சொல்லின் முதலில் வரும் ககரம்
ka என்றுதான் ஒலிக்கப்படவேண்டும், ga என்றல்ல!

என்னத்தைச் சொல்ல - இது மட்டுமா, பத்மா/பத்மினி -யை bathmaa/bathmini
என்றும், தவம், தியாகம் என்பவற்றை dhavam, dhyaaham என்றும்
அத்தியவசியத்தையும் வித்தியாசத்தையும் adhyaavasiyam, vidhyaasam என்றும்
சொல்பவர்கள் தமிழைத் தங்கள் காவலில் வைத்து ........ ஓஓஒ ஏற்கெனவே இதைப்
பற்றி இன்னொr மடலில் சொல்லிவிட்டேனோ? அதனாலென்ன, அப்படித்தான்
திரும்பத்திரும்பச் சொல்லுவேன், இடம்/நேரம் கிடைத்தபோதெல்லாம்!
அரண்ய-ருதிதம்! Crying in the wilderness!

5.ககரமும் ரகரமும் கொண்டு 'வெள்ளை எனும் பொருள் தரும் சொற்கள் சில:
gaura= fair [of complexion], Gauri=சிவனாரின் உமை/பார்வதி/மலைமகள்.
இந்தியில் goraa = fair-faced e.g. வெள்ளைக்காரன்.

6.பாண்டு=வெள்ளை என்பதைவிட வெளுத்த/வெளிர்த்த எனல் தகும்.

பாண்டு ரோகம் என்று albino [உடல் முழுதும் இயல்பான வண்ண அணுக்கள்
இல்லாதுபோய்] வெய்யலைத்தாங்கமுடியாத வெளுப்பு காணும் பிணி.

மஹாபாரதத்துப் பாண்டு ஒரு ஆல்பினோ. காரணக்கதை தெரியாதவர்கள் கேட்டுத்
தெரிந்துகொள்க.

அம்னீஷியக் துஷ்யந்தன் அவைமன்றத்தில் ஆரணங்கு சகுந்தலை , ஆசிரமவாசி
மூதாட்டி மற்றும் முனிகுமாரர்துணையுடன் வந்து முன் நிற்பதைக் கண்ட அளவில்
அவனுக்கே உரிய ரசனையோடு முணுமுணுத்துக்கொள்கிறான் -

"காஸ்வித் அவகுண்ட்டநவதீ? நாதிபரிஸ்புட சரீர லாவண்யா? .... மத்யே
தபோதனானாம், கிஸலயமிவ பாண்டுபத்ராணாம்?"

"ஆரிவள்...அரைமுக்காட்டில் நன்கு வெளிவிளங்கா அழகுமேனியள், இந்தத் தவசி
ஆசாமிகளிடையே - வெளுத்துப்போன இலைச்சருகுகளிடையே பசுந்துளிர் போல!"
*****************************************************************


On Nov 9, 6:21 am, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:


> குரு என்றால் 'சுமை'. 'பெரிய' எனும் பொருள்கள் கேள்விபட்டிருக்கிறேன்.
> கிரகங்களில் மிகவும் அதிக எடை உள்ளதாலேயே குரு, குரு என அழைக்கப்படுகிறது.
> இந்திய முறைப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட இந்த உண்மையை
> என்றைய அறிவியல் நிரூபித்துள்ளது. 'பெரிய' எனும் பொருளில் 'ஆசிரியர்' எனும்

> பொருள் வருகிறது என்று நினைக்கிறேன்....
>
> read more »
>
> 2009/11/8 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > > நா.- Hide quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages