கவிதையும் கணிதமும்

984 views
Skip to first unread message

Swaminathan Sankaran

unread,
Nov 29, 2018, 11:02:12 PM11/29/18
to santhav...@googlegroups.com
1.

நீ 
வா!
வாடா 
மலரே!
மல்லிகையே!
வண்ணக்குழம்பே!
வசந்தத்தின்மகரந்தமே!

வானவெளிதனில்வளர்மதியே! 
வருவாய்நீயென்றே 
வழிநோக்கி 
வாழும்
நான்.
வா 
நீ!
-----------------------------------------------------------------------------------------------------------------

இந்த இடுகை இங்கே ஏன்?
இதெல்லாம் கவிதையுடன் சேர்த்தியா?

--------------------------------------------------------------------------------------------------------------------
2.

இதெல்லாம் கவிதையுடன் சேர்த்தியா? 

'இல்லை' என்று சுலபமாகச் சொல்லி விடலாம்.
ஆனாலும், இதை ஓர் அடிப்படையாகவோ அல்லது சவாலாகவோ கொண்டு இங்குள்ள 
சிறந்த கவிஞர்கள் நல்ல கவிதை படைக்க முயலலாம்.

கணிதக்கலையில் (Mathematics)  'எண் துறை'  (Number Theory) என்பது ஒரு முக்கியக் கிளை (Branch ).
நவீன இந்தியாவின் தவப் புதல்வனாம் கணித மேதை ராமானுஜனுக்கு மிகவும் பிடித்த கிளை. அதில் 
அவர் கண்டு பிடித்த தேற்றங்களும் (theorems), கண்டு பிடிப்புகளும், விட்டுப் போயிருக்கும் 
கேள்விகளும் பல முனைவர் பட்டதாரிகளுக்கும், பட்ட வேட்பாளர்களுக்கும் இன்றைக்கும் ஒரு பெரும் 
வரப்ரஸாதம். 

இந்த எண்துறையின் ஓர் உபகிளை எண்தொடர்களும் (Sequences and) எண்வரிசைகளும்  ( Series ) என்பதாகும். இந்த 
எண்தொடர்களை (Sequences) சற்று இங்கு கவனிப்போம்.  1, 2, 3, ..என்று போய்க்கொண்டே இருக்கும் முழு எண்கள் 
(Integers) கொண்ட தொடரை, அத்துடன் ஆரம்பத்தில் பூஜ்யத்தை (zero) வைத்து 0,1,2,3,4,... சாதாரண  எண்தொடர் 
(Natural Number Sequence) எனக் கொள்ளலாம். இத்தொடரில் பூஜ்யமும், நேர் எண்களும் (Positive Numbers) மட்டும் இருக்கின்றன. 
இவற்றுடன் பூஜ்யத்திற்கு முந்தைய மறிநிலை எண்களையும் (Negative Numbers ) தொடுத்து விட்டோமானால் நமக்குக் கிடைக்கும்
  ...-3,-2,-1,0, 1,2,3,4.....என்ற தொடர் நேர்கோட்டு எண்தொடர் (Real Number Sequence). இவை எண்தொடரின் உதாரணங்கள் (Examples). 

இம்மாதிரியான மற்றோர்  எண்தொடர்; 1, 1, 2, 3, 5, 8,13, 21, 34, 55... என்று போய்க்கொண்டே இருக்கும். இதை எப்படி 
உருவாக்கலாம் என்று யோசித்தால் உடனே புலப்படுவது என்னவென்றால் இதற்கு ஒரு 'இலக்கணம்' (Order or definition)
அல்லது முறை (Pattern) இருப்பது தெரிய வரும். முதல் இரண்டு எண்கள் முறையே 1, 1. மூன்றாவது எண் அதற்கு முந்தைய 
இரண்டு எண்களின் கூட்டு (addition): 2 = 1+1. அதை அடுத்த எண்ணான 3 அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டு: 3 = 2+1.  
அதை அடுத்த எண்ணான 5 அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டு: 5 = 3+2.  அதை அடுத்த எண்ணான 8 அதற்கு முந்தைய 
இரண்டு எண்களின் கூட்டு: 8 = 5+3.

இந்த எண்தொடருக்கு கணிதத்தில் ஃபிபனாச்சி எண்தொடர் ( Fibonacci Sequence ) என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இத்தலியில் (Italy), 
பிஸா (Pisa) என்ற ஊரில் பிறந்து, அதன் அருகில் உள்ள பொலோன்யா (Bologna) பல்கலைக் கழகத்தில் முனைவராக இருந்த கணித 
வல்லுநர் அவர். அவர் இந்த எண்தொடரை 13ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு அறிமுகப் படுத்தினார். ஆனால், அதை 
உருவாக்கியவர் அவரில்லை. அந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் எகிப்து (Egypt) நாட்டிற்குச் சென்று அங்கிருந்த அராபிய/இரானியக்
கணித வல்லுனர்களிடமிருந்து அதைக் கற்றுப் பிறகு அதைத் தன் பல்கலைக் கழகத்தின் மூலம் பிரபலப் படுத்தினார்.

ஆனால், இந்த எண்தொடரை உருவாக்கியவர்கள் அந்த  அராபிய/இரானியக் கணித வல்லுனர்களுமில்லை!
உருவாக்கியவர் கிறித்துவிற்கு இரண்டு அல்லது மூன்று  நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு இந்திய மேதை!
அவர் பெயர் பிங்களா (PingaLaa). அவர் இயற்றிய நூல்: சந்தசாஸ்திரா அல்லது பிங்கலசூத்திரா. பல தொன்மையான 
இந்திய நூலகளைப் போலவே இதையும் உரை இல்லாமல் புரிந்து கொள்வது கடினம். 11 வது நூற்றாண்டில் ஹலாயுதா 
என்பவரும், 12ஆம் நூற்றாண்டில் ஹேமச்சந்திராவும் இதற்கு உரை எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதை 
உள்வாங்கிக்கொண்டு அராபிய/இரானிய அறிஞர்கள் இஸ்லாமிய நாடுகளில் பிங்களாவின் கண்டு பிடிப்புகளைக் 
கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பிறகு ஃபிபனாச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். 

பிங்களாவிற்குப் பிறகு வந்த இந்திய அறிஞர்களும் அவருடைய நூலைப் பின்பற்றி கவிதை சந்தஸுக்கும், இசைக்கும் 
தங்கள் பங்கை அளித்திருக்கிறார்கள். உதாரணமாக, சங்கீதரத்நாகராவில் தாளங்களின்  அடிப்படையை நிறுவவும்,
விளக்கவும் பிங்களாவின் இத்தொடர், மற்ற கணித கண்டுபிடுப்புகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிகிறது.
நான் ஆச்சரிய பட்டது என்னவென்றால் அமெரிக்காவின் ஒரு பல்கலைக் கழகத்தில் உள்ள ரேசெல் ஹால் (Dr. Rachel Hall) 
என்ற ஒரு கணிதப்  பேராசிரியை பிங்களக் கணிதத்தை உபயோகித்து தற்கால மேற்கத்திய ஜனரஞ்சக இசையையும்,
கவிதை யாப்பையும்  விளக்கி இருக்கிறார். இது சம்பந்தப்பட்ட இரண்டு கட்டுரைகளைக் கீழே கோப்பாக இணைத்திருக்கிறேன.

[இது சந்தவசந்தக் குழுவின் கொள்கைகளுக்கு முரணாக இருக்கலாம். அதற்காக மன்னித்து விடுங்கள்.]

[நான்  பிங்களா, ஹலாயுதா, ஹேமச்சந்திரா எவரையும் படித்ததில்லை; படித்தாலும் ஒன்றும் எனக்குப் புரிந்திருக்காது!]

மறுபடியும், ஃபிபனாச்சி எண்தொடருக்கு வருவோம்.
______________________________________________________________________________
3. மறுபடியும், ஃபிபனாச்சி எண்தொடருக்கு வருவோம்.

இந்த எண்தொடரின் சிறப்பு அல்லது விசேஷம் என்ன? 
அது இயற்கையன்னையின் சிருஷ்டிகளுக்கும்  அதற்கும் உள்ள தொடர்பு!

சில அடுக்குப்பூவின்  இதழ்கள், சில பூக்களின் விதைப்  பெட்டகங்கள், சில நத்தை ஓடுகள் 
ஆகிய பிறவின் வடிவங்கள் சுருள் வட்டங்களாக (Spirals) இருப்பதை நாம் காண்கிறோம்.
உதாரணமாக, முதிர்ந்த சூரியகாந்திப் பூவின் (Sunflower) விதைப் பெட்டகம் (seed pocket), 
நாடிலஸ் (Nautilus) எனும் நத்தை வகையின் வெளி ஓடு. இம்மாதிரியான சுருள் வட்டங்களின் 
உள் மையத்திலிருந்து ஒவ்வொரு வட்டமாக மேல் நோக்கிப் பயணித்தோமானால் ஒவ்வொரு 
வட்டத்தின் இறுதிக் கணுவும் ஒரே நேர்கோட்டில் அமையும் விசித்திரத்தைக் கண்டு அனுபவிக்கலாம், 
ஆனந்திக்கலாம், ஆச்சரியப் படலாம்.

நாடிலஸ் நத்தை வளர, வளர அதன் வெளி ஓடு சுருள் வட்டமாக, அதன் வளர்ச்சியுடன், ஒத்து 
பெரிதாகிக் கொண்டே வரும்,  முதல் வட்டத்தின் 1ஆம் கணு, 2ஆம் வட்டத்தின் 1ஆம் கணு, 3ஆம் 
வட்டத்தின் 2ஆம் கணு, 4ஆம் வட்டத்தின் 3ஆம் கணு, 5ஆம் வட்டத்தின்  5ஆம் கணு என்ற முறையில்  
அவை ஒரே நேர்கோட்டில் அமையும். சூரியகாந்திப் பூவின் விதைப் பெட்டகமும் அவ்வாறே!

என்னை  விடச் சிறந்த கணித மேதைகளும், தாவரவியல், விலங்கியல் விற்பன்னர்களும் இங்கே 
இருக்கிறார்கள். ஆகையால் இத்துறைகள் பற்றிய என்னுடைய 'அதிகப் பிரசங்கித்தனத்தை' இத்துடன் 
நிறுத்திக் கொள்வது தான் விவேகம், உசிதம்.

இப்போது, கவிதைக்குத் திரும்புவோம்.
______________________________________________

4. இப்போது, கவிதைக்குத் திரும்புவோம்.

உதாரணமாக, நான் ஆரம்பத்தில் இட்ட 'கவிதை'யில் 14 அடிகள் இருக்கின்றன.
முதல் 7 அடிகளை மட்டும் கவனிப்போம். கடைசி 7 அடிகள் முதல் அடிகளின் பிம்பம் 
மட்டுமே - ஆரோஹணம் அல்லது ஏற்ற வரிசை முதல் 7 அடிகளானால், கடைசி 7 அடிகள் 
அவரோஹணம் அல்லது இறக்க வரிசை.

முதல் 7 அடிகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை (ஒற்று உட்பட) முறையே:
1,1,2,3,5,8,13, அதாவது பிங்கள எண்தொடர். அதன் பின் இதை ஒரு நத்தை அல்லது
விதைப் பெட்டகம் போன்ற சுருள் வட்டங்களில் பொருத்தி புது வித சித்திரக் கவிதையாக 
அமைத்து, அதற்குப்  'பிங்களா' என்ற பெயரிடலாம்.

ஒரு சிறப்பான 'பிங்களா' வேண்டுமானால், ஒவ்வொரு அடியின் கடைசி எழுத்துக்களை மட்டும் 
ஒருசேரப் படிக்கும் பொழுது ஒரு அர்த்தமுள்ள சொல், அல்லது சொற்தொடர் என்று வரும்படியாகப் 
படைக்கலாம்.
____________________________________________________

ஒரு நியாயமான கேள்வி. அதையும் நானே கேட்டு, அதற்கான பதிலையும் தந்து விடுகிறேன்.

கேள்வி:
'இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம்' என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்வதற்குப் 
பதிலாக நீயே என் செய்யக் கூடாது?

பதில்:
செய்யலாம் தான். ஆனால், அதற்கான நேரமும், பொறுமையும், புலமையும், கற்பனை வளமும் எனக்கில்லை!

(நானும் அவ்வப்போது கவிதை என்று ஏதாவது எழுதுகிறேன் - என் ஆத்மதிருப்திக்காக.
ஆனால் அதைப் படித்து விட்டு அழித்து/கிழித்து விடுகிறேன். (1) இதிலுள்ள கருத்துக்களினால் 
பெரும், வீண் சர்ச்சை ஏற்பட்டு விடும் என்பதற்காகவோ; அல்லது (2) சீ, மற்ற பலர் எவ்வளவு 
அருமையான கவிதைகள் எழுதுகிறார்கள்! இங்கே 'கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி போல'
நானும் எழுதி ஏன் மற்றவர் ரசனையைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக. பெரும்பாலும் இரண்டாவது 
காரணத்திற்காக! )

5. பின் குறிப்பு ( PostScript ):
ஹி ஹீ ! 
பின் குறிப்பு பின்னால் வரும். இன்னமும் எழுதி முடிக்க வில்லை.

சங்கரன் 
-- 
 Swaminathan Sankaran

MATH for POETS and DRUMMERS.pdf
MATH of POETRY_MULTICULTURAL MATHEMATICS.pdf

Ravi Subramanian

unread,
Nov 29, 2018, 11:30:09 PM11/29/18
to santhav...@googlegroups.com
Sir
This is interesting 
சங்கீத ரத்னாகரம் ஆர்யபட்டீயம் ஆகிய நூல்களையும் பாஸ்கரர் மாதவையா போன்றமேதைகளையும்
படித்திருக்கிறேன்
பிங்களரின் மூலநூலும் உரைகளும் எங்கு கிடைக்கும்? 
விவரமறிய ஆவல்
இபனாச்சி- பிங்களர் தொடர்பு பற்றிய செய்திக்கு நன்றி

சு.ரவி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

K.R. Kumar

unread,
Nov 30, 2018, 12:12:39 AM11/30/18
to santhav...@googlegroups.com
Interesting !

But I am not sure how many will be automatically interested.

I think , if pressurized , many of our members can compose poems in these forms.

Unless a poem comes from the poet’s heart, one may enjoy the format but may not enjoy the other aspects of the poem.

I am not a poet but just a “Rasigan”; so the above is my personal opinion.

Please ignore this message , if my opinion is not digestible.

Kumar (Singai)

Sent from my iPhone
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
<MATH for POETS and DRUMMERS.pdf>
<MATH of POETRY_MULTICULTURAL MATHEMATICS.pdf>

Ashok Subramaniam

unread,
Nov 30, 2018, 12:41:34 AM11/30/18
to santhavasantham
சங்கரன் சார்,

கவிதை கணக்கே! கருதக் கணக்கும்
கவியே ககனக் களத்தில்! - புவியில்
கவிந்த அனைத்தும் கடவுள் வரைந்த
கவியும் கணக்குந்தான் காண்

அற்புதத் தகவல்வளைத் தந்திருக்கிறீர். கவிதையென்பதும் அதன் கட்டமைப்புகளும் அவிச்சின்னமாக வளர்ந்துகொண்டே வந்திருக்கிற மரபென்னும் விருட்சத்தின் கூறுகளே! சித்திரக்கவியரங்க நாட்களிலே இதை நீங்கள் சொல்லியிருந்தால் இங்குள்ளக் கவிஞர்கள் இதிலும் யாத்திருப்பார்களே! 

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற நூல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதோடு சரி. படித்ததில்லை. போதிய சமஸ்க்ருத அறிவின்மையாலும், மொழி பெயர்ப்புக்களிலும் உரைகளிலும் மூலத்தின் ருசி இராது என்று கண்டிருப்பதாலும், அந்த முயற்சியும் செய்ததில்லை. இப்போது ஆர்வம் எழுகிறது.. அதுவும் இசைத் தொடர்பாக இரண்டு பிடிஎஃப் கோப்புகளைச் சுட்டியிருக்கிறீர்கள்.. 

நன்றி
அஶோக் ஸுப்ரமணியம்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

Ravi Subramanian

unread,
Nov 30, 2018, 1:36:37 AM11/30/18
to santhav...@googlegroups.com
Dear Ashok ji

SArngadeva’s Sangeetha RathnAkaram, Venkadamahi’s Chaturdhadi prakAsikai, iLangO adikaLin SilapoathikAram, VipulAnandha AdikaLasrin YAzh NUl ivai avasiy padilka veeNdum
Available in our Musi academy library 
Ranga Ramanuja Iyengar n PRF SAmba Moorthi have written a  viLakkam for Sangeetha RathnAkaram

Su.Ravi
--

Ashok Subramaniam

unread,
Nov 30, 2018, 1:57:15 AM11/30/18
to santhavasantham
சு.ரவி அவர்களே!

நீங்களுமா இப்படி "ஜி" போடுவீர்கள்.. அடியேன் சின்னஞ்சிறியேன்.. உரிமையோடு அஶோக் என்றே அழைக்கலாமே! ரங்கராமனுஜ ஐயங்காருடைய புத்தகத்தை வைத்திருக்கிறேன் (கவனிக்கவும்! படித்தேன் என்று சொல்லவில்லை). சாம்பமூர்த்தி அவர்களின் புத்தகத்தைத் தேடிப் பார்க்கிறேன். மற்ற புத்தகங்கள் எல்லாமே வைத்திருக்கிறேன், அவ்வப்போது படிக்கின்றேன். தவிரவும் ஆப்ரஹாம் பண்டிதரின் கருணாமிருத சாகரம் மற்றும், தெய்வசிகாமணி கவுண்டர் பதிப்பித்திருக்கிற பஞ்சமரபு எல்லாவற்றையும் ஓரளவு படித்திருக்கிறேன். ஒரு வாழ்நாள் போதாதுபோலத்தான் தோன்றுகிறது..

இம்முறை உங்களைக் கூப்பிட்டுப் பேசுகிறேன்!

அன்புடன்,
அஶோக் ஸுப்ரமணியம்.

Siva Siva

unread,
Nov 30, 2018, 9:42:57 AM11/30/18
to santhavasantham
Nice.

/அவர் பெயர் பிங்களா (PingaLaa). அவர் இயற்றிய நூல்: சந்தசாஸ்திரா அல்லது பிங்கலசூத்திரா. பல தொன்மையான 
இந்திய நூலகளைப் போலவே இதையும் உரை இல்லாமல் புரிந்து கொள்வது கடினம். 11 வது நூற்றாண்டில் ஹலாயுதா 
என்பவரும், 12ஆம் நூற்றாண்டில் ஹேமச்சந்திராவும் இதற்கு உரை எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. /

These may help? 


There may be other such books on archive.org.

வி. சுப்பிரமணியன்






On Thu, Nov 29, 2018 at 11:02 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
....

கணிதக்கலையில் (Mathematics)  'எண் துறை'  (Number Theory) என்பது ஒரு முக்கியக் கிளை (Branch ).
நவீன இந்தியாவின் தவப் புதல்வனாம் கணித மேதை ராமானுஜனுக்கு மிகவும் பிடித்த கிளை. அதில் 
அவர் கண்டு பிடித்த தேற்றங்களும் (theorems), கண்டு பிடிப்புகளும், விட்டுப் போயிருக்கும் 
கேள்விகளும் பல முனைவர் பட்டதாரிகளுக்கும், பட்ட வேட்பாளர்களுக்கும் இன்றைக்கும் ஒரு பெரும் 
வரப்ரஸாதம். 


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Ravi Subramanian

unread,
Nov 30, 2018, 10:46:48 AM11/30/18
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா!
சு.ரவி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaiyar Ramasami

unread,
Nov 30, 2018, 11:32:10 AM11/30/18
to santhav...@googlegroups.com
இதேபோல் கவிதை முன்பு நான் எழுதியிருக்கிறேன். அதன் இலக்கணம் வேறு.   நீங்கள் இங்கே எழுதியிருப்பது எழுத்தெண்ணிக்கையின் அடிப்படையில் ஆனால் கவிதையில் அசையின் அடிப்படையில்தான் கணக்கிடுவோம். அந்த வகையில் விரைவில் ஒரு கவிதை இங்கிடுகிறேன் 

இலந்தை

Subbaiyar Ramasami

unread,
Nov 30, 2018, 12:20:56 PM11/30/18
to santhav...@googlegroups.com


1-       அசையின் அடிப்படையில்

1 1 2  3 5 8 8 5 3 2 11

நீ

நான்

நமது

என்பதெல்லாம்

பரரம்பர்யங்கள்

பழமையினும் மிகப் பழமையானவையே

பழமையினும் மிகப் பழமையானவையே

பரம்பர்யங்கள்

என்பதெல்லாம்

நமது

நான்

நீ

இதையே இப்படியும் எழுதலாம்

 

நீ

நான்

நமது

என்பதெல்லாம்

பரரம்பர்யங்கள்

பழமையினும் மிகப் பழமையானவையே

பழமையினும் மிகப் பழமையானவையே

பரம்பர்யங்கள்

என்பதெல்லாம்

நமது

நான்

நீ

       மெய்யெழுத்தை விட்டு எண்னும் எழுத்துக் கணக்கு

 

 

 

நீ

நான்

அவர்

அவர்கள்

என்னுடையது

சொல்லப் போனால் மாயைகளே

சொல்லப் போனால் மாயைகளே

என்னுடையது

அவர்கள்

அவர்

நான்

நீ

 

 

நீ

நான்

அவர்

அவர்கள்

என்னுடையது

சொல்லப் போனால் மாயைகளே

சொல்லப் போனால் மாயைகளே

என்னுடையது

அவர்கள்

அவர்

நான்

நீ

மெய்யெழுத்தையும் சேர்த்து

 

நீ

நான்

நமது

அவர்கள்

எல்லாம் மாயைகளே

எல்லாம் மாயைகளே

அவர்கள்

நமது

நான்

நீ

 

நீ

நான்

நமது

அவர்கள்

எல்லாம் மாயைகளே

எல்லாம் மாயைகளே

அவர்கள்

நமது

நான்

நீ



Subbaiyar Ramasami

unread,
Nov 30, 2018, 12:46:54 PM11/30/18
to santhav...@googlegroups.com
இறுதிக்கவிதையில் நீ  க்குப் பிறகு ஒரு ஏ   யைச்  சேர்த்துக்கொள்க!

Ramamoorthy Ramachandran

unread,
Nov 30, 2018, 1:31:28 PM11/30/18
to santhav...@googlegroups.com
ஏ,அப்பா!

Swaminathan Sankaran

unread,
Nov 30, 2018, 2:04:15 PM11/30/18
to santhav...@googlegroups.com
அருமை.

இவை போன்ற மாற்றங்களைப்  பற்றி 'பின் குறிப்பு'  பகுதியில் எழுதவிருந்தேன்.

நீங்கள் ஒரு தீர்க்கதரிசி!

சங்கரன் 
--
 Swaminathan Sankaran

ramaNi

unread,
Nov 30, 2018, 9:10:55 PM11/30/18
to சந்தவசந்தம்
சங்கரன் அவர்கள் சொன்ன எண் தொடரில் ஏறு முகமாக மட்டும் வரும் ஆங்கிலப் பா வடிவமும் அதன் தமிழாக்கமும் பற்றி முன்னர் சந்தவசந்தத்தில் பேசினோம்.

01. Nonet

A Nonnet is a type of poem which has the following requirements:
* It has nine lines
* The first line has 9 syllables, the second 8 syllables, the third 7 syllables until the ninth line which has one syllable.
* Has an iambic meter (stress every other syllable)

Example: A Bereft Mother

children grew and left the nest empty
the rooms are vacant and silent
the table made for one
she feels deserted
no room to smile
worrying
about
them

தமிழ் வடிவம்: ஒன்பான் ஓரசை

01. Nonet என்பதைத் தமிழில் ’ஒன்பான் ஓரசை’ எனலாம்.
(அன்பர்கள் வேறு தக்க பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.)

சீர்க் கணக்கு இல்லாமல் முதலடியில் ஒன்பதில் தொடங்கி ஒவ்வோர் அடியிலும் ஓரசை
குறைவாக வரவேண்டும். இரண்டு அடிகளிடை ஓரெதுகை யாகவும், இறுதி
மூன்று அடிகளிலும் ஒரே எதுகை வருமாறும் அமைக்கலாம்.

உதாரணங்கள்
இல்லம்

வீடே கலகல வென்றந் நாட்களிலே
ஊடாடும் கூட்டம் குடும்பமென
பின்னர் பிள்ளை தனிக்குடும்பம்
இன்றோ ஓர்பிள்ளை பெண்
நரைமுது பெற்றோர் தனி
திரைகடல் தாண்டிக்
கல்விவேலை
இல்லம்
இல்.

பணம்

மழைப்பொழிவு மும்மாரி அந்நாளில்
விழைபொருள் பணமென வீணர் இந்நாள்
கொலையும் கொள்ளையும் கொள்கையென
நிலையிலா மாந்தராய் வாழ்க்கை
கனவின் இலக்கு பணம்
நனவின் நன்மை
பணப் பற்று
பணமுதல்
பணம்.

--ரமணி, 27/12/2014

*****
 

Narayan Swaminathan

unread,
Dec 1, 2018, 3:23:29 PM12/1/18
to santhav...@googlegroups.com
நான் !
கணினி முன்னால் !
கவிதை எழுதலாமோ இன்று ?
கட்டளைக் கலித்துறை கவிதை நல்லதோ ?
கட்டாயம் நாலுவரி, அஞ்சுசீர்,  ஈற்றுசீர்  விளங்காய்  ?
கடைசி சீரின் கடையெழுத்தில்  ஏகாரமோ ?
கலித்துறை மட்டும்  போதுமோ ?
குறள், வெண்பா ?
கையெழுத்து ?
ஓம் !
 
symmetric distribution is a type of distribution where the left side of the distribution mirrors the right side. 
 
image.png
இது ஒரு பாவினமாக  தேறுமா ? 😊

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்


 

Subbaiyar Ramasami

unread,
Dec 2, 2018, 11:57:38 AM12/2/18
to santhav...@googlegroups.com
இது ஏற்கனவே உள்ளதுதான்.   இடது பக்கம் வலது பக்கத்திற்கு ஒத்துப்போகுமாறு அமைந்த அமைப்ப் இரண்டுவகை உண்டு.
ஒன்று பெரிதிலிருந்து சிறிதுக்கு இறங்கி பிறகு  சிறிதிலிருந்து பெரிதுக்கு ஏறுவது, இதற்கு உடுக்கை என்று பெயர். டமருகம் என்று வடமொழியில் சொல்வார்கள்.
சிறிதிலிருந்து  பெரிதுக்குப் போவதுதான் முந்தைய இடுகையில் இட்டிருப்பது. இதுவே பாதியாக அதாவது பெரிதிலிருந்து சிறிதுக்கு இறங்கி அப்படியே நின்றுவிட்டால் அதற்குக் கோபுச்சதி என்று பெயர். முத்துசாமி தீக்ஷிதரின் தியாகராஜ யோக வைபவம் இந்த அமைப்பைச் சேன்ர்தது.
கணிதத்திற்கும் கவிதைக்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எல்லாமே உண்மை அடித்தளத்தில் கற்பனைகொண்டு எழுப்பப்பட்டவை

இலந்தை

--

N. Ganesan

unread,
Dec 2, 2018, 2:55:23 PM12/2/18
to சந்தவசந்தம்


On Sunday, December 2, 2018 at 9:57:38 AM UTC-7, கவிமாமணி wrote:
இது ஏற்கனவே உள்ளதுதான்.   இடது பக்கம் வலது பக்கத்திற்கு ஒத்துப்போகுமாறு அமைந்த அமைப்ப் இரண்டுவகை உண்டு.
ஒன்று பெரிதிலிருந்து சிறிதுக்கு இறங்கி பிறகு  சிறிதிலிருந்து பெரிதுக்கு ஏறுவது, இதற்கு உடுக்கை என்று பெயர். டமருகம் என்று வடமொழியில் சொல்வார்கள்.
சிறிதிலிருந்து  பெரிதுக்குப் போவதுதான் முந்தைய இடுகையில் இட்டிருப்பது. இதுவே பாதியாக அதாவது பெரிதிலிருந்து சிறிதுக்கு இறங்கி அப்படியே நின்றுவிட்டால் அதற்குக் கோபுச்சதி என்று பெயர். முத்துசாமி தீக்ஷிதரின் தியாகராஜ யோக வைபவம் இந்த அமைப்பைச் சேன்ர்தது.
கணிதத்திற்கும் கவிதைக்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எல்லாமே உண்மை அடித்தளத்தில் கற்பனைகொண்டு எழுப்பப்பட்டவை


மிக நன்றாகவும் தெளிவாகவும் பாடியிருக்கிறார்..

இலந்தை

On Sunday, December 27, 2015 at 2:32:38 PM UTC-6, கவிமாமணி wrote:
> அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

மிறைப்பா வகையில் “சிறையாரும் மடக்கிளியே”

On Saturday, December 26, 2015 at 2:45:30 PM UTC-6, கவிமாமணி wrote:
தியாகராஜ யோக வைபவம் என்ற பாடல் டமருக பந்தம் என்னும் மிறைப்பா வகையைச் சேர்ந்தது. சக்கர பந்தம் வகையைச் சேர்ந்தது என்று சொல்வார்கள்.

தியாகராஜ யோக வைபவம்]
      ராஜ யோக வைபவம்
           யோக வைபவம்
                வைபவம்
                     பவம்
                      வம்
                     பவம்
                 வைபவம்
          யோகவைபவம்
        ராஜயோக வைபவம்
 தியாகராஜ யோக வைபவம்



இந்த அழகு வெளிப்படுமாறு பாடகர்கள் பாடவேண்டும். 

D. K. பட்டம்மாள் நீங்கள் சொல்லும் முறையில் பாடுகிறார்:

சிறையாரும் மடக்கிளியே - தேவாரத்தை இவ்வாறு பாடுகிறார்கள்.

> நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 2, 2018, 3:17:24 PM12/2/18
to Santhavasantham

On Sunday, December 2, 2018 at 9:57:38 AM UTC-7, கவிமாமணி wrote:
இது ஏற்கனவே உள்ளதுதான்.   இடது பக்கம் வலது பக்கத்திற்கு ஒத்துப்போகுமாறு அமைந்த அமைப்ப் இரண்டுவகை உண்டு.
ஒன்று பெரிதிலிருந்து சிறிதுக்கு இறங்கி பிறகு  சிறிதிலிருந்து பெரிதுக்கு ஏறுவது, இதற்கு உடுக்கை என்று பெயர். டமருகம் என்று வடமொழியில் சொல்வார்கள்.
சிறிதிலிருந்து  பெரிதுக்குப் போவதுதான் முந்தைய இடுகையில் இட்டிருப்பது. இதுவே பாதியாக அதாவது பெரிதிலிருந்து சிறிதுக்கு இறங்கி அப்படியே நின்றுவிட்டால் அதற்குக் கோபுச்சதி என்று பெயர். முத்துசாமி தீக்ஷிதரின் தியாகராஜ யோக வைபவம் இந்த அமைப்பைச் சேன்ர்தது.
கணிதத்திற்கும் கவிதைக்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எல்லாமே உண்மை அடித்தளத்தில் கற்பனைகொண்டு எழுப்பப்பட்டவை


மிக நன்றாகவும் தெளிவாகவும் பாடியிருக்கிறார்..

இலந்தை

On Sunday, December 27, 2015 at 2:32:38 PM UTC-6, கவிமாமணி wrote:
> அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

மிறைப்பா வகையில் “சிறையாரும் மடக்கிளியே”


தண்டபாணி தேசிகர்: https://www.youtube.com/watch?v=rtWfllkGKBU

லால்குடி சுவாமிநாத ஓதுவார்: https://www.youtube.com/watch?v=XdiYx0EpELo
Reply all
Reply to author
Forward
0 new messages