கவிதைச்சோலையில் கனவுப்பூக்கள் 2013

2682 views
Skip to first unread message

kirikasan

unread,
Jan 3, 2013, 3:16:28 AM1/3/13
to santhav...@googlegroups.com

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் புதிய இழையில் புதிய நம்பிக்கையோடு வருகிறேன்.
அன்புடன் கிரிகாசன்

 1. புத்தாண்டே புரிவாயா?

கடுமன மிடையெழு கருணையி னொளி
  குறைவுறக் கயமையில் கரமெடு பழி
விடுநின துயிரெனத் தரைவிழப் பொறி
  விளைவுறச் செயுமனம் விரைந்துநீ ஒழி
படுநிலமிடை எனப் பறித்துயிர் வெளி
   பறமுகி லொடுஎனப் புரிபவர் இனி
தடுநில மிடைமலர் தரணியில் ஒளி
   தகைமிகு வழமுற வருடமே அளி

விடமுள அரவமென் றுருபெறச் சிலர்
  விடுதலை எனிலெது விரைதுடி யுடல்
படவலி யுறச்சிதை பிரியதை யழி
  கடதுன துலகமும் கரம்விடு தனி
நடயினி விடுதலை நரகமே வழி
  நவஉல கமுமெம துமைநமன் வழி
இடமது பெறவிடின் இலகெனும் வழி
 எனுங் கயவரைஒழி அவரொழி ஒழி

”தரு”வதும் நிலைகொள்ள இடமுள்ள புவி
  தமிழெனில் இலையிடம் தவறிடு அழி
எருவெனப் புதையிடு வெனக்கொளும் வெறி
  இதமென உலவிடும் இவர்மன மழி
கருவொடு தறிதமிழ் கருகிடு மினி
  கடமையு முனதென சொலுமொரு விதி
மருகிட புதுவழி புதிதெனும் ஒளி
  மறுபடி உயிர்கொள்ள` வருடமே அளி

இருபதி னருகினி லிதனரை வர
  இழைந்திடு சிவனவர் விழிதொகை சக
தருவிடை வருடமும் தணல்பிரி வெடி 
  தெருவினில் பெரிதெனும் படபட ஒலி
இருளுற இரவெனில் பன்னிரண்டு மணி
   இதனிடை வரும்புது வருடமு மினி
தருமமும் தழைவுறத் தமிழ் பெரும் ஒளி
  தருமெழில் விழுமியம் பெறவழி புரி

**************

kirikasan

unread,
Jan 3, 2013, 12:18:42 PM1/3/13
to santhav...@googlegroups.com

  2.  அரசனா?  ஆண்டியா ?

ஆண்டுபோய் ஆண்டொன்று சேரும் - இந்த
ஆனந்த வான் வண்ணமாகும்
மூண்டு தீ வானிடைஓடும் - அது
மூவர்ணமாய் ஒளிபூக்கும்
ஆண்டவன் ஆளுவன் யாரும் - என்ன
ஆனாலும்ஆணவம் மங்கா
தீண்டும் வாள் தேகங்கள் கேட்கும் - அது
தித்திப்பை இரத்தத்தில் காணும்

ஆண்டிகள் போல்மொழி மேன்மை - இனம்
அங்கென்றும் இங்கொன்றும் ஓடும்
வேண்டிப் பிழைப்பதை நாடும் - ராஜ
வீரம் சலித்த தென்றோடும்
ஆண்ட பரம்பரை மீண்டும் - ஆளும்
ஆசைகுன்றிச் சோம்பல் கொள்ளும்
வேண்டா மென்றெதள்ளி ஓடும் - என்ன
வேதனையில் இன்பங் கொள்ளும்

ஆண்டவன் என்செய்யக் கூடும் - அந்த
ஆறாம் எண்ணம் கெட்டதாகும்
மீண்டுமிவர் சக்தி மேன்மை - பெற
மேதினியில் வாழ்வுமிஞ்சும்
தீண்டாது புத்தியை மூடி - இது
தேவை யில்லை என்றுவீசி
வேண்டா தென்றே கூனிநின்றால் - என்ன
வேதனைதான் மீதியன்றோ

தோண்டப் பொருள்வரு மென்றும் - பொன்
தோட்டதில் காய்கொள்ளும் என்றும்
நோண்டிக் கூரைதனைப் பிய்த்தே - ஒரு
நாளில் கொட்டும்பணம் என்றும்
ஆண்டாண்டு எண்ணிக் களித்து ஆவர்
ஆயுள் முடியும் வரைக்கும்
பூண்டாகிப் புல்லாகி தேய்ந்தும் இவர்
புத்தி கெட்ட வாழ்வே மிஞ்சும்

**********

kirikasan

unread,
Jan 4, 2013, 5:21:44 PM1/4/13
to santhav...@googlegroups.com
புறநானூறு 37 – புறவும் போரும்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்,
 பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல்
சினம் கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடந் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சிச்,
செம்பு உறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத் துண்மையின்,
‘நல்ல’ என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!


சங்க இலக்கியங்களுடன் தமிழர் (மன்னர்) வீரம் போற்றும் பாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளதா தெரியவில்லை
இன்று தமிழனுக்கு வீரம் இல்லையா?
தமிழர் வீரம் பற்றி நாமும் பாடலாமே என்ற ஆசையில் பொதுவாக எழுந்தது

     தமிழன் வீரம்

கடலலையும் ஓங்கியெழும்   காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும்  கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும்  தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை  தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து  விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம்  புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்

கால்கள் நடை கொள்ளஒலி  கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும்  கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை  வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில்  வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள்  வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப்  பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த  விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம்  முகம் கறுத்து  கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ்  மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

ஆக இவைகொண்டதெல்லாம்  அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன்  அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து  போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில்  பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர்   தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும்  தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப்  பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்

***********

Lalitha & Suryanarayanan

unread,
Jan 5, 2013, 4:10:07 AM1/5/13
to santhav...@googlegroups.com
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்

மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்
..............

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
.......................

சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

அழகு தமிழ்ச் சொற்களும் கற்பனை வளமும் உங்களிடமே குடிகொண்டுள்ளன.

சிவசூரி.

2013/1/5 kirikasan <kana...@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
Jan 5, 2013, 4:46:39 AM1/5/13
to santhav...@googlegroups.com
அருமை 

2013/1/5 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 --
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

kirikasan

unread,
Jan 6, 2013, 6:44:48 AM1/6/13
to santhav...@googlegroups.com
உள்ளம் மகிழ்ந்த நன்றிகள் பலகோடி ஐயா

அன்புடன் கிரிகாசன்


 

kirikasan

unread,
Jan 6, 2013, 6:47:28 AM1/6/13
to santhav...@googlegroups.com
ஒரு வார்த்தை ஓராயிரம் மலர்களைத் தூவியது நன்றிகள் ஐயா!

அன்புடன் கிரிகாசன்kirikasan

unread,
Jan 6, 2013, 6:51:47 AM1/6/13
to santhav...@googlegroups.com
         வேண்டுதல்

தாம்தோம் தத்தோம் தத்தித்தோம்
தாவிடு வானரம் ஒத்திட்டேன்
தீம்தோம் தித்தோம் திக்கெட்டும்
தீமைகளால் மனம் பொய்த்திட்டேன்
பாம்பைப் போலும் கொத்திட்டேன்
பாலதில் நஞ்சும் சொட்டிட்டேன்
வேம்பின் காயை வெட்டித்தான்
விருந்தில் தேனுள் வைத்திட்டேன்

மாயக் கற்பனை கொண்டிட்டேன்
மாலைகள் பிய்த்தும் வீசிட்டேன்
தேயும் நிலவாய் தேய்ந்திட்டேன்
தீயில் விரலைச் சுட்டிட்டேன்
ஆய கலைகள் கற்றிட்டேன்
ஆனால் ஏட்டைத் தீயிட்டேன்
போயோர்  முத்தை சேற்றிட்டேன்
புறமும்பேசிப் பொய்யிட்டேன்

வேண்டும் வரையில் வெட்கித்தேன்
விடியல் அறியா தூங்கிட்டேன்
ஆண்டே இன்பம் தேர்ந்தக்கால்  
அழிவே எண்ணிக் காத்திட்டேன்
அன்பில் உன்னை தண்டித்தேன்
அதனா லுள்ளம் சோர்ந்திட்டேன்
வெண்தண் இறையே நொந்திட்டேன்
விளையாடித்தான் வாழ்ந்திட்டேன்

காலைமலரைப் பிய்த்திட்டேன்
கானம் பாடக் கத்திட்டேன்
பாலில் உப்பைக் கொட்டிடேன்
பாமரன் வாக்கைப் பழியிட்டேன்
வேலை இன்றி சுற்றிட்டேன்
வீட்டில் மனைய வைதிட்டேன்
தோலில் கரியைப் பூசிட்டேன்
தெள்ளென் நீரில் தோய்ந்திட்டேன்

இறைவா என்னை மன்னிப்பீர்
இகமும் வாழ்வில் இன்பத்தை
குறையா தருவாய் கொண்டேன்நான்
கோபம் சினமென் றாகாமல்
மறையா துலகின் மன்னிப்பை
மலராம் உதயச் சூரியனாய்
உறையா துள்ளம் உருகித்தா
ஒர்நாள் பொழுதில் மலராதோ

பாவம் நீக்கப் பூசித்தேன்
பரமே சிவனே போற்றிட்டேன்
ஏவல் செய்தேன் இவன்மீது
இறையே சக்தி இரங்காயோ
தூவல்மழையில் நின்றிட்டேன்
தேகம் குளிர ஆடிட்டேன்
ஆவது ஏது அன்புள்ளம்
அணையா தீபம் காப்பாயோ

*************

kirikasan

unread,
Jan 6, 2013, 10:24:13 AM1/6/13
to santhav...@googlegroups.com

       ஆற்றாமை (தலைவி)

உள்ளம் கலங்குதடி தோழி - மன
ஓசை அழிந்த திந்த நாழி
கள்ளம் ஏதறியேன் மோதல் - தனைக்
காலம் வளர்த்தடி கேள்நீ
வெள்ளம் வரும்பொழுதுமேனோ - அதன்
வேகம் புரியவில்லைத் தோழி
அள்ளும் போதுமதை யறியேன் -விதி
ஆழிகலந்திடவே தெளிந்தேன்


துள்ளும் இளமையடி குற்றம் - என்னை
தேடு துணை எனவே பற்றும்
எள்ளிநகைப்பதென்ன இன்று - அதன்
எண்ணம் அறிவளில்லை என்றும்
கிள்ளிச் சிவக்கும் இருகன்னம் - அதில்
கொட்டும் துளிகள் இதழ்கொள்ளும்
மெல்லச் சுவைக்குதடி உவர்ப்பு - இனி
மேலோ எனதுநிலை தவிப்பு

தள்ளும் நினைவுகளும் சென்றே - எனைத்
தனிமை நிலையில் விடவேண்டும்
வெள்ளி முளைக்கு வரைவிடடி - கதிர்
வேகமெடுத்து வரும் உதயம்
புள்ளின்இனங்க ளெழுமோசை - இளம்
பூக்கள் மலரும் அதிலோடி
கள்ளைச் சுவைக்கும் கருவண்டு - இவை
காணச் சகிக்கவில்லை தோழி

எள்ளி நகைப் பதுண்டோ தோழி - என
தெண்ணம் விளைத்த செயல் மீறி
கொள்ளியெனச் சுடுதே தோழி - இந்தக்
குற்றம் எதுவிலகுக்கும் சொல்நீ
பள்ளிச் சிறுமியென ஆனேன் - வெறும்
பாதி மெலிந்து உடல்நொந்தேன்
அள்ளிகொடுப்பரென வந்தால் - அவர்
அன்பைத் தெரியவில்லைத் தோழி

கள்ளிச் செடியிருக்கு தோழி - அதை
காலம் அளித்த கொடை போநீ
நள்ளி ராவில் வரும் தென்றல் - ஒரு
நஞ்சாய் மனதிழைந்து ஓடி
உள்ளம் அழித்ததடி தோழி - இந்த
உலகில் இருப்பின் இவள்பாவி
வள்ளம் திசை திரும்பி ஓடின் - அதன்
வாழ்வும் நிலைப்பதுண்டோ பார்நீ

**********

Raja.Tyagarajan

unread,
Jan 6, 2013, 12:37:11 PM1/6/13
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசரே,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
முகநூலின் முன்பொருமுறை உங்களைப் பற்றி நான் சொன்ன கருத்தினை மீண்டும் இற்றைப்படுத்துகிறேன் இச்சந்தவசந்தத்தில்:
 
உளமள்ளும் சொல்லாட்சியும், ஆற்றொழுக்கான நடையும் பொருந்திய கவிதைகளை இடுகின்றீர்.  அரசுப் பணி நெருக்கத்தால், இலந்தையார், நீங்கள், ஹரியண்ணா, சிவசூரி, சிவசிவா, தங்கமணி போன்றவரின் படைப்புகளைப் பற்றி பின்னூட்டம் இடுவதற்கு இயலவில்லை.  ஏன்,  இச்சந்தவசந்தத்தின் அன்பர்கள் அனைவரின் படைப்புகளும் இதில் உள்ளடங்கும்.  தொடரட்டும் உங்கள் பணி.
உங்களை விட வயதில் மூத்திருக்கிறேன் என்றெண்ணியே சொல்கிறேன் (இல்லாவிடில் மன்னிக்கவும்) வாழ்க, வளர்க, தமிழால், தமிழொடு, தமிழுக்காய், பல்வளங்களும் பெற்றிப் புவியில் பல்லாண்டு கவிஞரே!
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்

kirikasan

unread,
Jan 7, 2013, 3:36:40 AM1/7/13
to santhav...@googlegroups.com
அன்போடு தங்கள் வாழ்த்தினைஏற்றுக் கொள்கிறேன்!
அதிக புகழ்ச்சி அகங்காரத்தை ஏற்படுத்தும். அது கவிஞனுக்கு எதிரி என்பதை அனுபவரீதியாகப் பார்த்தவன் யான். அதேநேரம் பாராட்டுகள் ஊக்கத்தை தரும். கவிதை மழையாக ஊற்றெடுக்கும் எனவும் தெரிந்துகொண்டேன். எனவே  அதிக பாராட்டுக்களின்றித் தேவைப்படும்போது சிறிய உந்துதலைக் கொடுக்கும் சந்தசவசந்தம் மிக நிறைவாக எனக்குத் தோன்றுகிறது. எந்தக்கவலையும் வேண்டாம்! நன்றிகள்:தங்களுக்கு இந்த தாகத்துக்கு வார்க்கும் தண்ணீருக்காய்!!
அன்போடு கிரிகாசன்
*******************************************


On Sunday, January 6, 2013 5:37:11 PM UTC, இராஜ.தியாகராஜன் wrote:


kirikasan

unread,
Jan 7, 2013, 3:45:27 AM1/7/13
to santhav...@googlegroups.com


        சக்தியின் வேண்டுதல்

வேண்டும் வேண்டும் வரம்வேண்டும் - உயிர்
வீணையில் நாதம் எழவேண்டும்
ஆண்டும் ஆண்டும் பலவேண்டும் தமிழ்
ஆண்டே பலமுறும் நிலைவேண்டும்

மீண்டும் மீண்டும் பெருவாழ்வாய் - இம்
மேதினி வாழ்வில் பலங்கொண்டே
தாண்டும் தாண்டும் உரம் வேண்டும் என்
தலைவி நீயதைத் தரவேண்டும்

நீண்டும் நீண்டும் மகிழ்வோடு - நான்
நெஞ்சம் கனிவாய் தமிழ்பாடி
தூண்டும் தூண்டும் உணர்வோடு - கவி
தூவும் மலர்கள் தொகை வேண்டும்

பூண்டும் பூண்டும் பலவேடம் - இப்
பொழுதில் புவியில் கூத்தாடி
தோண்டும் தோண்டும் இன்பங்கள் - பெருந்
தொகையாம் எனவே பெறவேண்டும்

தீண்டும் தீண்டும் பொருள் யாவும் - அடை
தேனாய் வழியச் சுவைகொண்டு
நாண்டும் நாண்டும் தொகை வேண்டும் - என
நாளும் கேட்டும் குரல்வேண்டும்

மாண்டும் மாண்டும் புவிமீதில் - உயிர்
மீண்டும் பிறக்கும் செயலாகக்
கூண்டும் கூண்டிற் கிளியாகும் - இக்
கோலம் மாறும் வரம்வேண்டும்

மூண்டும் மூண்டும் பெருந்தீயாய் - பகை
மோசம் செய்தும் ஒருதீவில்
யாண்டும் யாண்டும் செய் தீமை - தனை
யாவும் நீக்கும் வரம்வேண்டும்

சீண்டும் சீண்டும் சினம் மேவி- என்
சிந்தை கெட்டுச் சிதறாமல்
வேண்டும் வேண்டும் நின்பாதம் - தலை
வைத்தே தூங்கும் மகிழ்வோடும்

டாண்டும் டாண்டும் எனவோடிப் - பெரும்
அண்டம் பாய்ந்து சுழல்கோள் கொள்
நீண்டும் பெருத்த உயர்வானின் - பொருள்
நீயே என்னுள் வரவேண்டும்

**********************

kirikasan

unread,
Jan 8, 2013, 4:16:46 AM1/8/13
to santhav...@googlegroups.com

 இலங்கையில் பல பாகங்களில் பலநிறங்களில் மழை பொழிவதை கேள்வியுற்றிருப்பீர்கள்  .முதலில் மஞ்சள் மழை பொழிந்தது .பின்னர் சிவப்பில் மழை பொழிந்தது. சிலநாட்களுக்கு முன்னர் பச்சை நிறத்தில் மழை ஊற்றியது . நேற்று நீல நிறத்தில் மழை பெய்தது. இதை ஆராய்ந்த குழுவொன்றின் அறிக்கை
இராயனகுண்டு வீச்சின் பாதிப்பு இந்த மழைகளின் நிறங்களுக்கு காரணம் என்றபோதும் (ஆனாலும் இடம் மாறி கொட்டும் மழை என்பதால்)

ஈழத்தில் ஒரு சிறுவனின் குரலாக இந்தக் கவிதை’’

          வண்ண மழை

ஒற்றைத் தாளில் கப்பல்செய்து ஓடும்நீரில் விட்டவன்
உற்றதா முள்ளாசை கண்டு ஓங்கியோர் புறத்தினில்
பெற்றவள் விடுத்தகிள்ளு பாவியெந்தன்மேனியில்
உற்றதோர் கடுத்தநோவு எண்ணியோ நீ ஆண்டவா

சொற்றுணை எனத்தொடங்கி சோதியாம் நல்வானவன்
உற்றதாம் சிறப்பையெண்ணி ஓதியுன்னைப் போற்றிட
கற்றுனைத் துதித்தல்கண்டு காகிதம் மறுப்பினும்
உற்ற அன்பினாலே வண்ணம் ஊற்றும் மேக மாக்கினாய்

முற்றமும் பொழிந்தநீரில் மேகம் வண்ணம் பற்பல
அற்புதம் நிறத்திலூற்றும் ஆனவிந்தை காண்கிறேன்
நெற்பயிர் விளைச்சலோடு நீண்டபுல் முளைத்திடும்
புற்தரை விரிப்பிலெங்கும் பெய்யும் வண்ண மானதே

நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

கண்கள்தோண்டி கைமுறித்துக் காலுடைத்துக் கொன்றிட
மண்ணிலே சொரிந்த ரத்தம் மேலெழுந்து கொண்டதால்
விண்ணிடை கருத்தமேகம் வையகத்தில் கொட்டவும்
தண்மை கொள்மழை சிவந்த தானவண்ணம் கொண்டதோ

அச்சமின்றி உச்சிமீது வானின் ஊர்தி கொட்டினும்
துச்சமாய் மதித்துவாழ்சு தந்திரத்தை வேண்டியோர்
பச்சைமேனி கள்கிழித்துப் பாவம் செய்த காதகர்
இச்சகத்தில் வாழ்அநீதி எண்ணிப் பச்சை கொட்டுதோ

என்னவெண்ணி வான்மழைக்கு இந்தவண்ணம் வந்ததோ
அன்னைபூமி விட்டுச்சற்று அந்தப்பக்கம் கொட்டுதே
இன்னலைத் தரும்நிலைக்கு இட்டஎச் சரிக்கையோ
மின்னல் வானம் மெச்சியின்பம் மஞ்சள் நீலமானதோ

*************

Lalitha & Suryanarayanan

unread,
Jan 8, 2013, 4:57:22 AM1/8/13
to santhav...@googlegroups.com
வண்ண வண்ண மழையைப் போல வடித்து வைத்த கவிதையால்
எண்ண வண்ணம் கண்டு கொள்ள இன்பம் நெஞ்சில் பொங்குதே
எண்ணி லாத சந்த மெல்லாம் என்றும் உங்கள் சொந்தமே
மண்ணில் உங்கள் கவிதை யெல்லாம் மனத்தி லென்றும் தங்குமே.

வாழ்க கிரிகாசன்!

சிவசூரி.

2013/1/8 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
Jan 9, 2013, 7:41:24 AM1/9/13
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! நீடூழி வாழ்க!!

அன்புடன் கிரிகாசன்kirikasan

unread,
Jan 9, 2013, 7:50:22 AM1/9/13
to santhav...@googlegroups.com

          எங்கே சுதந்திரம்

காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணும் புவியொளி ஞானப்பெண்ணே
ஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப
நாளும் விடியுமோ சொல்லுபெண்ணே
கோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ சின்னப்பெண்ணே

ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லிசெந் தாமரை நீர்க்குளத்தின்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவானவெளி நீந்திடும் போததில்
நித்திய இன்ப சுதந்திரத்தை
சாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்
சற்றும் கொள்ளாதேனோ ஞானப்பெண்ணே

கோலமும் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது செல்லபெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் சின்னபெண்ணே
மூலவிதி கெட்டு வாழும்நிலையற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம்வந்து இருப்பதோ
வாழ்வின் கனவுகள் நீரெழுத்தோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்தது
மூடு கதவினைச் செல்லபெண்ணே
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமன அன்பினை காவவும்
வீசுந்தென்றல் வரவேண்டும் பெண்ணே

காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு சின்னப் பெண்ணே
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட ஆக்கும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
தீமழை காணவும் நெஞ்சு நொந்தே
தேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட
தாகப் படும்பாடு சொல்லுபெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்
‘புத்துணர் வாகிடும் நாள்மலர்ந்தே
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்த ரூடே
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விட்டே
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நில பூமடி கொள்வதெப்போ?

***********

kirikasan

unread,
Jan 10, 2013, 1:29:30 AM1/10/13
to santhav...@googlegroups.com

      புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில்  வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் நினவுகள் பலஎழும்
இவையெது கனவுகளோ
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும்  உணர்வுகள்  பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே    
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நெருப்பென எழும் மகிழ்வே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறமதி யுதவிட
உருவெடு திறன் பெரிதே
துளையிடு குழலிடை  நுழைவளி இசைஇடும்
நிகரெனும்  இன்னிசையோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

****************

kirikasan

unread,
Jan 14, 2013, 7:00:30 AM1/14/13
to santhav...@googlegroups.com


          பொங்கல் வராதோ?

பொங்கலும் உண்டேன் இனிக்கவில்லை - சில
பூவள்ளிப் போட்டேன் மணக்கவில்லை
தெங்கின் அருகிடை தோன்றும்கதிர் - இன்று
தேசு கொண்டுவீசக் காணவில்லை
செங்கரும்புண்ணச் சுவைக்கவில்லை - ஒளி
சோதி விளக்கேற்ற நிற்கவில்லை
மங்கும் பொழுதென்னும் தீரவில்லை - சில
மேகம் மறைக்குது வெய்யிலில்லை

வண்ண மலர் காலை பூக்கவில்லை = அதில்
வாசமெழக் காத்தேன் வீசவில்லை
கொண்டு வரும் தென்றல் கூடவில்லை  - இன்று
கூவும் சேவல் குரல் கேட்கவில்லை
மண்ணில் உதயத்தைக் காணவில்லை - கோவில்
மங்கல ஓசை மணிகளில்லை
பண்பாடு மீண்டும் தளைத்ததொரு - பொங்கல்
பாரில் விளைந்திட ஏதுசெய்வேன்

பாயும் சுருட்டியுள் வைக்கவில்லை - இந்தப்
பாழும் தூக்கம் விழி நீங்கவில்லை
தேயும் நிலாவென்ற தென்பு நிலை - எந்தத்
திக்கிலும் பாதை தெரியவில்லை
நேயம் நேர்மை எங்கள் பக்கமில்லை - எந்த
நீதியும் ஓசை மணிகளில்லை
காயும் வயலிடைநீருமில்லை - என்ன
காரணமோ பதர் நெல்லுமில்லை

கண்கள் விழித்து கடிதெழுந்து - உடல்
காணும் சோம்பல்தனும் மெய்முறித்தே
எண்ணத்தில் தீயிட்டுப் பானைவைத்தும் - அதில்
ஒற்றுமைச் சர்க்கரை ஊற்றிவைத்து
மண்ணையும் மாகதிர் வெய்யவனை - எண்ணி
மங்கலபாடல் முழங்கியொரு
வண்ணப் புதுபொங்கல் செய்வதெப்போ - அதை
வாயில் வைத்துசுவை கொள்வதெப்போ ?

kirikasan

unread,
Jan 15, 2013, 11:38:50 AM1/15/13
to santhav...@googlegroups.com

          தென்றல் வரும் திசை

தேனினிக்கும் காய் உவர்க்கும்
. தென்றல்வரும் பூமணக்கும்
. தீந்தமிழின் சுவை இனிக்காதா
தானிமைக்கும் நேரமதில்
. தாவும மனங் காவல்கொள்ளும்
. தேடுவழி ஒளியெடுக்காதா
வானிடையில் வரும்மதியால்
. வையகத்தில் ஒளிபரவும்
. வண்ணமுண்டு விதியழித்தாலும்
தானிருந்து மீண்டும்வளர்
. தன்மையுண்டு நாள்வளரும்
. தங்மென வான் ஒளிராதா

கோயிலுக்குள் தெய்வமுண்டு
. கும்பிடுமோர் பக்தனுண்டு
. கூடவரும் நிழல்பெரிதானால்
பேயிருக்கும் போலிருக்கும்
. பார்த்துமனம் கிலிபிடித்து
. பாதைவிட்டு ஓடிடுவானா
தாயினது அன்பெடுத்து
. தட்டிலிட்டு கனமளக்க
. தான்முயன்றால் ஊர்சிரிக்காதா
போயிருக்கும் உறவுதனில்
. பூகம்பமா புயல்வருமா
. போதுமிவை நினைவுகள் வீணா

சேயிருக்கும் தவழ்ந்துசெல்லும்
. தீயிருக்கும் தொடநினைக்கும்
. தாயெடுத்து அணைத்திடுவாளா
பாயிருக்கும் பக்கமதில்
. பாலிருக்கும் கனியிருக்கும்
. பசிஎடுதால் கரம்தடுப்பாளோ
ஆயிரம்தான் ஆகிடினும்
. அன்பு மனம் ஒற்றுமையின்
. ஆழமதை கோலிடலாமா
போயிருக்கும் திசைதனிலே
. பூமணக்கும் காற்று மெல்ல
. போய்விடக் காற் றாடிவிழாதா

ஆறிருக்கும் ஓடித்தரை  
. அருவியெனக் கூத்தடித்தும்
. ஆழியினைக் கலப்பதுதானே
வேரிருக்கு மண்ணுடனே
. விளையுமன்பு நிலைத்திருக்கும்
. விதிபிரித்தால் பிரிவதும் உண்டோ
மாறிவரும் திசைநடந்தும்
. முடிவுலொன்று சேருமெனில்
. மேல் நடந்துக் கொள்வதிலேனோ
ஊறில்லையேல்  தெய்வசுகம்
. உள்மனதில் உண்டுஎனில்
. ஓடிநட உள்ளதுநன்றே

kirikasan

unread,
Jan 19, 2013, 6:39:58 PM1/19/13
to santhav...@googlegroups.comஅரசசபை கூடியிருக்கிறது
மாண்புமிகு  மன்னவர் முன்னே அமர்ந்திருக்க அங்கே

              ராஜ சபை யில் கண்டது என்ன?

அமைச்சர்:
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் மோந்தேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரை மீது விளையாடும் மானைக் கண்டேன்
பாவூற்றி வளம் சேர்க்கப் படைத்தோந்தன்னின்
பாசமதைக் காணேன் ஓர்பரிவும்காணேன்

சேனாதிபதி
பன்சிலிர்த்த உணர்வோங்கும் பாடல் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பதிப்பும் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னமது இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னவகை செந்தமிழின் அழைக்குமோசை
அதுவின்று சென்றதெங்கே அறியேன் அரசே

ஆஸ்தான் கவி
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெல்லம் ஒடாது இருக்கக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொல்தடக்கிப் புரளக்கண்டேன்
சந்தணமும் கொட்டியதோ  நிலத்தில் கண்டேன்
மன்னபரி வாரங்களும் மறையக்கண்டேன்
மாதொருத்தி புன்னகையில் மர்மம் கண்டேன்

குடிமகன் ஒருவன்:
சொன்னதெலாம் கற்பனைகள் கொள்வீர் மன்னா!
சோதி பலங்கொண்டு கிழக் கெழுதல்காண்பீர்
பொன்னிவயல் பொலிந்து கதிர் குலுங்கக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்து புரளக் காண்பீர்
என்னபட்சி சோலை நிறைந் திருக்கக் காண்பீர்
சுற்றியொரு ஒளிவட்டம்  தோன்றக்காண்பீர்
தன்னை மறந்தாட இசை ஒலிக்கக்காண்பீர்
தமிழிலினிக்க சந்தமிடும் வசந்தம் காண்பீர்


விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து கிடக்கக் காண்பீர்
பெண்கள் மலர் தூவி எழில்போற்றக் காண்பீர்
பேசுங்கிளி ஒன்று புகழ் பாடக் காண்பீர்
மன்னவனென் றாலிவரே மன்னவனென்றே
மகிழ்வுகொண்டு மாநிலமும் வாழ்த்தக் காண்பீர்

******************

kirikasan

unread,
Jan 24, 2013, 9:19:49 PM1/24/13
to santhav...@googlegroups.com
           புகழ் எண்ணிப் பொல்லாப்பு (சோகப் பாடல்)

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
அடங்குமென்றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற கடலிலொரு அவனானவன்
 அழகென்று திரைகண்டு அதில்நீந்தவும்
தலைமூழ்கும் அலை யோங்கிவரும் போதினில்
   தெரிகின்ற சிறுதூர கரைவேண்டியும்
நிலையான தடுமாறி அதில்நீந்தவே
    நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதீதைக் குறைவாக்குமோ
    கொடிதெண்ணித் தடை யிட்டு தலைமூழ்குமோ

கதிமோச மென் றாக்க புயல்வீசுமோ
  கைதந்துவிடுமோ  ஓர் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
 நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
  பொழுதான் இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
   அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா


(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் முடிவோ

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டென சொல்மது வார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணோடு மண்ணாக மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையென உடலீந்து பிச்சையென உயிர்வைத்து
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யெனைப்
பாடி வலம்வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?

kirikasan

unread,
Jan 27, 2013, 3:17:35 AM1/27/13
to santhav...@googlegroups.com

            அன்பு மனம்        

ஆனா இன்பூவினில் வந்தேனா னதுகொண்டோமென
நானா இட்டோர் பூவுடனே
மீனாஅயல் அச்ச்சமெது விதியோ விடுவென்னும்கணம்
மீறும்வழி நீருள்மறையும்
தானந்தனும் தையாஎன சானாந்தமும் வீசும்வ
சந்தமதில் வீசும் காற்றே
ஏனோவென் எண்ணம்தனைச் சொல்லும் ஓர் உள்ளம்தனை
இன்னுமறிதல் கடிதாமோ

ஆனா இன்பூவினில் வந்தேனா னதுகொண்டோமென
வண்ணத்துப் பூச்சிபறக்கும்
மீனா அதுஅச்சமுடன் ஏனோவிட்டோடும் கணம்
நீரில் விழுந்தோடும் அலையும்
தானாந்தனி பூக்கும்சுனை  காணுஞ் செந்தாம ரையும்
தீயாய் அந்நீரினில் மிதக்கும்
ஏனோஅதன் எண்ணம்வெகு தூரம்கதிர் கண்டுமது
காணுமொரு அன்பில் மித க்கும்

வீணா ஒரு விதியும் வரும் தானாய் புயல்போலும் பலர்
வாழ்விற் பல இன்னல்விளையும்
நாணா மனம் தன்னில்பிழை நாளும் விதை கொள்ளும்வகை
நாடிமன துள்ளும் கெடுக்கும்
வீனா வதினோடு மிருபூவின் வடிவோடும் மனம்
வேண்டா துயரென்றே மலரும்
மானா குடம் போயும்தலை வாநீ யெனவண்ணத்தமிழ்
தாநீயெனத் தமிழும் பாடும்
kirikasan

unread,
Feb 6, 2013, 9:30:38 AM2/6/13
to santhav...@googlegroups.com

           காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!

Subbaier Ramasami

unread,
Feb 6, 2013, 10:51:16 AM2/6/13
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசன்,
மிக உணர்ச்சியான கவிதை
நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

மிக மிக அர்புதம்!

இலந்தை

2013/1/8 kirikasan <kana...@gmail.com>


*************

--

kirikasan

unread,
Feb 7, 2013, 3:21:14 AM2/7/13
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா. இனி வண்ண மழை பொழியும்

அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Feb 7, 2013, 3:22:25 AM2/7/13
to santhav...@googlegroups.com

    அதிசய ஊற்று

பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெனப் புனைசந்த
மெழவூறும் வசந்தமிதோ

கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் பிறழ்படத்
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ

மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ

அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ
***************

kirikasan

unread,
Feb 9, 2013, 8:00:49 PM2/9/13
to santhav...@googlegroups.com

           சக்தியே ஆணையிடு

கண்கள்பாதி போனதென்ன காட்சிமங்குதே - இந்தக்
 காயமென்ன செய்தபாவம் காணும் துன்பமே
எண்ணமிங்கு மேகமிட்டு என்னைதூக்குதே - அங்கு
  ஏகும்பாதை வானின்  தோன்றி ஏறு என்குதே
கிண்ணமிட்ட பாலும் பொங்கி கீழே ஊற்றுதே - அந்த
   கேணி நீரும் வற்ற மீனின் மூச்சுமுட்டுதே
அண்டவானில் ஆதவன்கள் அள்ளிவீசினாய் - சக்தி
  ஆசைகொண்ட நெஞ்சம் வாழ ஆணைகூட்டுவாய்

வண்ணமிட்ட சித்திரங்கள் வாழ்வு வேண்டுதே  -சுற்றி  
  வற்றும் நீரைகண்டு பூக்கள் வாடிச் சோர்வதேன்
மண்ணில் சுட்ட பாத்திரத்தை ஏந்தி நிற்கிறேன் - என்னை
   மன்னன் என்று பேரும் வைத்து மாலைசூடவா
வண்ணமிட்ட பூக்களாலே வாசல் தோரணம் - உள்ளே
   வைத்த பானை  அன்னமின்றி கொண்டகாரணம்
உண்மை நெஞ்சில் அன்னைநீயு மெண்ணும் நீதியும் - விட்டு
   ஓரம்வைத்துப் பார்ப்பதென்ன உள்ளே வைத்திடு

திண்ணையோரம் வந்தொருவன் காத்திருக்கிறான் - கையில்
   தேவையென்று பாசமென் கயிற்றைக் கொள்கிறான்                
கண்ணை மூடித் தூங்குமட்டும் காவல்நிற்கிறான் - போகும்
   காலம் என்னும் பாதைசெல்ல என்னை கேட்கிறான்
அன்னை சக்தி கண்கள்விட்டு உள்ளம் காண்கிறேன் - அவள்  
  ஆக்கும் சக்தி ஈந்த அன்பில் வீறுகொள்கிறேன்                                                                  
எண்ணமெங்கும் சக்திதீபம் ஏந்திநிற்கிறேன்- இங்கு
  என்னயல்ல என்னையீந்த தாயென்றாகிறேன்

தொட்டுத்தொட்டுத் தூரிக்கையால் வண்ணம்பூசென - நல்ல
   தூய தமிழ்சொல் கொடுத்து தூண்டி விட்டவள்
கட்டியெனைப்  போட்டுவிட்டுக் காண்பதென்னவோ - இனி
   கால் விலங்கும் அன்பு கொண்ட காவல் என்பதோ
எட்டிநடை போடுமெந்தன் கால் நிறுத்தியே - எண்ண
   இறக்கை தந்து எல்லையற்ற வான்பறக்கவே
வட்டமிட்டு தேடும்வண்டு பூவின் காண்பதாய் - புவி
    வாழு மென்னை தீந்தமிழில் வாசமிட்டதேன்

அன்னைமீது சத்தியத்தின் ஆணை வேண்டினேன் . மேனி
  ஆலையில் கரும்புபோல  ஆகப் போகமுன்
நின்மனம் அருள் புரிந்து என்னைக் காத்திடு - எந்தன்
   நிழல்பிரிந்து  கொள்ள முன்நிறுத்தி வைத்திடு
தன்னை மீறி ஓடும் காற்று உள்நிறுத்திடு - நல்ல
   தாயின் அன்பு உள்ளத்தோடு என்னைப் பார்த்திடு
பொன்னையல்ல பூமியல்ல பொழுது வேண்டினேன் - வாழப்
   போகும்நாளும் புதிது கொள்ள விதியும் வேண்டினேன்

*************************

kirikasan

unread,
Feb 12, 2013, 8:16:15 AM2/12/13
to santhav...@googlegroups.com


          சினம் கொள்ளாதே! (பாப்பா)

செல்லக்கண்ணே சின்னோர் வதனம்
செந்நிற மானதுமேன்
வெல்லம்போலும் கன்னம் இரண்டில்
வீழும் அருவியுமேன்
சொல்லில்சினமும் செய்கை முரணும்
சேர்ந்தே காணுதடி
எல்லைமீறிச் சீறும்கண்ணீர்
இதயம் நோகுடுதடி

நல்லோர் சினமும் கொள்ளார் அன்பை
நாடும் மனங்கொள்ளு
அல்லோர் தீமை செய்யும்போதும்
அதனிற் சினங்கொள்ளா
பல்நேர் விதிகள் முறைகள் கூறிப்
பக்குவமாய்ப் பேசு
பொல்லாப் பகையும் காணும்நேர்மை
பேச்சில் தணிவடையும்

சொல்லை கூட்டி அன்புக் கதைகள்
சொல்லப் பழகிவிடு ,
நில்லாய் என்றால் நிற்கும் அன்பில்
நெகிழும் உலகமிது
கல்லைக் கட்டிக் கடலில் இறங்க
கருதும் மனம்கொண்டு
தொல்லை கட்டி வாழ்வைக் கொண்டால்
தொலையும் இன்பமது

கீதம் போலே இனிமைகாணும்  
குழந்தை மொழிகொண்டாய்
நாதம்போலும் நற்தேன் வார்த்தை
நாளும் கூறிடுவாய்
வாதம் பொய்கள் வார்த்தே செய்யும்
வார்த்தை மனங்கவரும்
ஈதெம் வாழ்விம் இன்பம்தருமா
என்றால் இலையம்மா

நாளும் பூக்கும் மலர்கள் போலும்
நீயும் பூத்திடுவாய்
வாழும் போதில் வந்தேஎங்கும்
வண்ணம் பொலிவாழ்வும்
ஆழும் மனதில் அன்புக்கோலம்
அரசென்றுரு வாக்கி
கேளும் பாவாய் கருணைஆட்சி
காண்பாய் இளவரசி

உன்னைசுற்றி நிற்போர் என்றும்
உன்னைத் தூசித்தால்
மென்மை தன்னை மறவாதென்றும்
முன்னின் றெதிர் கூறு
தன்மை புரிதல் தவறும்மனிதர்
தன்னை எதிர் கொண்டால்
புன்மை கொள்ளும் கயவர்முன்னே
புயலென் றெதிர் கொள்வாய்

கல்லை எறிந்தால் பூக்கள்போலக்
காணல் தவறம்மா
சொல்லை பேச்சை உயர்வாய் திடமாய்
சேர்த்தே உறுதியுடன்
நில்லாய் நேர்மைதெளிவும் கொண்டு
நீயும் மலைபோலும்
வெல்லும் அறிவு கூர்மை கொள்ள
சூழும் பகை தாழும்

kirikasan

unread,
Feb 14, 2013, 12:50:04 AM2/14/13
to santhav...@googlegroups.com

          என் நாட்டைப்  போல வருமா?

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

*********************

kirikasan

unread,
Feb 16, 2013, 8:41:51 AM2/16/13
to santhav...@googlegroups.com
இந்தக்கவிதைக்கு  விளக்கம் தரவில்லை. அதை இங்கே தருகிறேன்

ஆனா + இன் + பூவினில் = அ + ன் + பு (அன்பினில்)
 வந்தேனா அதுகொண்டோமென  நானா + இட்டோர் + பூவுடனே = ந + ட் + பு டனே

மீனா (மி) அயல் அச்”ச்சம்” = மிச்சம்
கணம் = கண் + அம்
 (மிஞ்சுவது எது விதியோ விடு என்றுகூற ,கண் அம்மீறும்  வழி நீருள் மறையும்

இதுபோல

தானந்தனும் தையாஎன சானாந்தமும் வீசும்வ
சந்தமதில் வீசும் காற்றே
(த + ந் + தை என ச + ந்தமும் வீசும்வசந்தமதில் வீசும் காற்றே)

வீனா வதினோடு மிருபூவின் வடிவோடும்(விதியின் வடிவத்தில்) மனம்

வேண்டா துயரென்றே மலரும்
மானா குடம் போயும்தலை (மகுடம் வீழ்ந்தாலும் என் தலையைபார்த்து வாநீ என்றால்)
-கிரிகாசன்

kirikasan

unread,
Feb 17, 2013, 3:01:01 AM2/17/13
to santhav...@googlegroups.com

                மறுக்காதே தாயே!

களிமிகு புவியிடை கருவென வுயிர்தரு
கருணையே வருவாயோ
அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை
அகமெழ வருளாயோ
துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம்
தமிழ்பொழிந் திடத்தாயே
எளிதென மனமுயர் இசைகவி பலவெழும்
இதயமும் தாராயோ

புவியசைந் திடுமதைப் பு[ரிந்திடும் உணர்வினைப்
பொழுதுளம் இழந்தாலும்
செவியினி தமிழ்சொலும் .திறமெடு தகமையைச்
சிறுமதி புரியாது
கவினுறு மலர்தன்னும் கனிபிழி சுவைமது
கொளும்நிலை மறந்தாகி
ரவியெழ ஒளிவரத் தனைமறந் தொழுகிடும்
இனிமலரென வெனைச்செய்

குழிவிழ குறுகிட குவயலம் தனிலுள
கொடுமைகள் எதுகொளினும்
அழியென கவிமனம் அடங்கிட புரிசெயல்
அரிதெனும் பெருங்கேடாம்
பொழிலுடை எழில்மலர் பிடுங்கியே தரையிடும்
பிழைதனைப் போற்றாது
தொழிலதை விடுஅருந் துயர்களை மனமெடு
துணையிரு தமிழ்த்தாயே

மொழிசொல மனதினில் முழுதென உயிர்திட
மொடுநிலை வளர்ந்தோங்க
கழிஎன குறியிடுங் கணிதமென் றுயிர்கொளும்
கடமையும் சரியாமோ
ஒழிஎன முடிவினை உயரெனக் கருதிடல்
ஒருமுறை விடுதாயே
பழிஎனப் பழமையின் தவறெதும் நினைந்திவன்
பயில்கலை மறுக்காதே

*****************

kirikasan

unread,
Feb 17, 2013, 4:14:59 AM2/17/13
to santhav...@googlegroups.com
முதலில் தந்த கவிதை ஒன்றை திருத்தினேன். அதை மீண்டும் தருகிறேன்


   எங்கே சுதந்திரம்

காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணுமெழில் என்னே ஞானப் பெண்ணே
சோலை முழுதிலும் சுந்தரப்பூ வண்ணச்
சுற்றெழில் கொள்ளுமோ சொல்லுபெண்ணே!
கோலஞ் சிவந்திடக் கீழத்திசை வானில்

கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக்  காணுஞ் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ ஞானப் பெண்ணே


ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லி மலர்ந்திடும் நீர்க்குளத்தின்

சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவெளி விரிவானி லடைந்திடும்
நேரெழில்போலுஞ் சுதந்திரத்தை
சாலச் சிறந்தெம துள்ளம் மகிழ்வுறச்
சற்றெனும் கொள்வமோ ஞானப் பெண்ணே

கோலமுந் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது ஞானப்பெண்ணே

தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் வாழ்ந்திடவும்
மூலவிதி கெட்டு வாழும்நிலை பெற்று

முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம் வந்து இருப்பதோ
வாடியுயிர் செல்லல்  நீதியதோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்திட
மூளும் தீயாகிடச் சுட்டிடவோ

தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமல ராகி யிதயமும்
வாழ்ந்திட நாளதுமுண்டோ பெண்ணே


காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு ஞானப் பெண்ணே

மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட வாகும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
பூமழை தீயெனக் கொட்டுதலாய்
தேசம் விடிந்திடும் தீயில் விரலிட்ட
தீமைகள் போய்விட காணாய் பெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெழிற் காலையில்
புத்துணர் வோடு நீ புன்னகைத்து

நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்தருடன்

கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விடத்

தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நிலம் பூமழை கொள்வது மெய்!
**************

kirikasan

unread,
Feb 21, 2013, 4:04:54 AM2/21/13
to santhav...@googlegroups.com

             இயற்கையின் பதில் ??

செக்கச் சிவந்த வானம்,   சிறுவெண் பனிநீரோடை
பக்கத் தினிலோர் கோவில்,   பாடித்திரியும் குயிலும்
சொக்கும் அழகில் வயல்கள்,   சுதந்திரக்காற் றின்வீச்சு
பக்க மடித்திட மெய்யில்   படர்ந்தே யின்பமுந் தருமே

தங்கம் போலொரு தோற்றம் தகதகமின்னும் வெய்லோன்
செங்கல் குவித்த சூளை  சேரும் செம்மை வானம்
தங்கும் முகிலின் வண்ணம் தானென் றாக்கி மேற்கில்
எங்கோ வீழ்ந்த்திடப் போகும்  இரவின் பகையாம் இரவியும்

தெங்கும் பனைவிட்டோலை திடுமென் றதிரிடவீழ
செங்கனி தின்றிடு மணிலும் திகைத்தே அஞ்சியுமோட
எங்கும் பரவிடு மௌனம் இரையும் காற்றின் சரசம்
அங்கம் சிலிர்க்கும் அமைதி அடடா என்றே கண்டேன்

முட்டித் தலையிடி போட்டு மூர்க்கம் பிடிக்கும் ஆடு
திட்டித் தீர்த்திடுங் கிழவி தெளிவற் றொதுக்கும் சிறுபெண்
சட்டெனத் தாவிடும் மீன்கள் சலசல வென்றிடு சுனைநீர்
மொட்டவிழ் மாலைப்பூக்கள் மயங்கும் மனங்களன்றோ

பட்டுச் சுருங்கு மிலைகள் படர்ந்த தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் தோலினை பற்றி தீயாயெரி காஞ்சோன்றி
முட்களில் பட்டேநோகும் முனையுடன் நாகதாளி
எட்டிக் கொத்திடு மரவம் இயற்கை எத்தனை அழகு

எட்டா ஆழமென்கிணறு இறைக்கு மியந்திரச் சத்தம்
முட்ட வழிந்திடும் தொட்டி மூழ்கி எழுமோர் சிறுவன்
தட்டச் சிதறிடும் தண்ணீர் தரையில் குளிர்மைச் சுகமும்
வெட்டவெளி எதிர்சத்தம் விளைக்கும் இன்பம் பெரிதே

பட்டிலெழிற் பாவாடை பாவை யணிந்தவள் செல்ல
கொட்டவிழித்திடும் கண்கள் குறுநகை சிந்திட நாணம்
மொட்டு மலர்விரி வதனம் மௌன மழைமுகில் குழலும்
தட்டினை ஏந்திய தாயார் தன்கரம் கொண்டுசெல் கோவில்

வட்டக் குளத்திடை பூக்கள் வந்தம ருஞ்சிறு குருவி
வீட்டெறிகல் கவண் சிறுவன் விளையாட்டில் தீதெண்ணம்
பட்டுவிழுந்தால் குருவி படு முயிர்வேதனை சொல்லி
குட்டியவன் பொருள்கொண்டு குரலழ கூட்டிநடந்தாள்

இத்தனை அழகிய வாழ்வில் இருந்தவர் இடிவிழவைத்து
கொத்தென கூட்டியழித்து குரலற கத்தியும் பார்த்து
செத்தனர் என்றுலகன்று சிறுமை கொண்டெதிர் கண்டு
வைத்த நெருப்பதுஎன்று வையகத்தில் தீதழிக்கும்

Swaminathan Sankaran

unread,
Feb 21, 2013, 8:40:04 AM2/21/13
to santhav...@googlegroups.com
அருமையாக இருக்கிறது. பாரதியை நினைவூட்டுகிறது.
 
சங்கரன் 


2013/2/21 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 --
 Swaminathan Sankaran

Ramamoorthy Ramachandran

unread,
Feb 21, 2013, 1:07:06 PM2/21/13
to santhav...@googlegroups.com
அரங்கத் தலைவராய் பாரதியைக் கொண்ட சந்தவசந்தம் இத்தகைய கவிஞரை ஏற்றுப் போற்றுவது இயற்கைதானே?
                       வாழ்த்து.

கிரிகாசன் தருகின்ற கவிதை-தன்னைக்   
     கேட்கவும் நேரிலே பார்க்கவும் வைத்தே 
சரியாகக் கணினியின் முன்னே -சற்றும் 
     சலியாமல்  நெடுநேரம்  உட்கார வைக்கும்; 
விரிவான  வானத்தின் காட்சி -போல
    வெவ்வேறு  வண்ணத்தில் மழையாகக் கொட்டும்;
பரிவோடே உலகத்தைப்  பார்க்கும் -நல்ல 
    பார்வையை இவர்பாட்டு யாருக்கும்  நல்கும்.!

வாழ்த்துக்கள் -புலவர் இராமமூர்த்தி.    

2013/2/21 Swaminathan Sankaran <swamina...@gmail.com>

kirikasan

unread,
Feb 22, 2013, 2:35:52 PM2/22/13
to santhav...@googlegroups.com
ஐயா ! நான் மிகவும் மகிழ்வுற்றேன் நன்றிகள்

நுழை துளையுள் மூங்கிலிடை நுகர்மலரின் வாசம்
அளையு மிளந்தென்றலோடி அதில் இசைக்கும் ராகம்
விளையினிமை ஓசைதொட மனங் களிப்பில் காணும்
குளஅலையைப் போலெழுமோர்  குதூகலத்தைக் கொண்டேன்

அன்புடன் கிரிகாசன்

*********************************

kirikasan

unread,
Feb 22, 2013, 2:55:38 PM2/22/13
to santhav...@googlegroups.com
ஐயா, மிக்க நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன்


தாமரையோ தங்கநிலா தனிமையிலே ஓடம்
தனிலிருந்து நீரலைமேற் தான்செலுத்தும் நேரம்
சாமரையும் வீசப் புனல் சலசலத்து ஓடும்
சரிகம வென்றோர் குரலும் சந்தமுறப் பாடும்
தேமதுரக் குழலிசைகள் தேன்நில வேகாந்தம்
தித்திக்கும் இன்சுவைகள் பக்கத்திலே காணும்
அமரவொரு பஞ்சணையும் அகில்புகையின்வாசம்
அடஅடடா என்னேசுகம் அதையிதிலே கண்டேன்


அன்புடன் கிரிகாசன்

kirikasan

unread,
Feb 22, 2013, 3:32:22 PM2/22/13
to santhav...@googlegroups.com

       சே, என்னே வாழ்க்கை!

இருந்தென்ன எழுந்தென்ன இருகால்கள் நடந்தென்ன
இந்த இடம் சொந்தமில்லையே
அருந்தென்ன அருஞ்சுவைகள் அளித்தென்ன புசித்தென்ன
அடிவயிற்றில் நிற்பதில்லையே
பெரும்மன்னர் படைகளென்ன பொற்கவசம் வாள்சுமந்து-
இருந்தென்ன போவதுதனியே
வருந்தென்னைக் குருத்தன்ன வாழையிலை பொலிவன்ன
வாளெடுக்க  துண்டுகள்தானே

சரிந்தென்ன நிமிர்ந்தென்ன சாய்தலின்றி வளர்ந்தென்ன
சார்ந்துவிதி சாம்பலாக்குதேன்
எரிந்தென்ன புகைந்தென்ன எழுங்கடலின் அலைபெருகி
எடுக்கயுயிர் ஊர்புகுந்ததேன்
புரிந்தென்ன அறிந்தென்ன புவியெழுந்து நடுநடுங்கப்
புதைகுழியில் போய்விழும் வாழ்வே
கரியென்றே உடலழியக் கனலெழுந்த எரிமலையாய்
காணுவதும் பூமியின்கோபம்

சிரித்தென்ன பகைத்தென்ன சிங்காரம் புரிந்தென்ன
சிறுமைகொண்ட வாழ்விதுவன்றோ
உரித்தென்ன உடைத்தென்ன  உடலழிந்துபோகையிலே
ஒன்றுமில்லை வெறுங்கரமன்றோ
கரித்துண்டைக் காவிமனம் கற்பனையில் வாழுகிறோம்
கஸ்தூரி சந்தணமென்றே
எரிக்கின்ற வேளயிலும் எழும் புகையும் ஏற்றதில்லை
இருந்தவரை ஆணவமும் ஏன்?

உருண்டென்ன வளைந்தென்ன உதய ஒளிச் சூரியனை
உலகுவிட்டு இருளில் ஓடுதே
இருண்டென்ன விடிந்தென்ன இரவுமென்ன பகலுமென்ன
ஏதுமொளி வாழ்வில் இல்லையே
நடந்தென்ன கிடந்தென்ன நடனமிட்டுக் குதித்தென்ன
நடுவனத்தில் விட்டதாகுதே
குடந்தேனைக் கொள்ளவெனக் குறுந்தடியைக் கைபிடிக்கக்
கொட்டியது குழவி மொத்தமே

கடந்தென்ன பாய்ந்தென்ன கடலெனவே துயரிருக்க
கருணையுள்ளம் ஒன்றுமில்லையே
இடந்தன்னை இழந்ததெமது இன்பவாழ் வழிந்தபின்னும்
இன்றுகூட தீர்வுஇல்லையே
படந்தன்னைப் பிடிததவரும் பாதிவழி திரிந்தவரும்
பருகிய நீர் பரமபோதையோ
நடந்ததென்ன அழிந்ததென்ன நல்லதமிழ் காப்பதற்கு
நாதியற்ற நீதிவாழ்ந்ததோ

வருந்தியென்ன வந்திடுமோ வளங்களினிப் பெறுவதுண்டோ
வருவதன்முன் காக்க வில்லையே
திருந்தியென்ன தேறியென்ன திரும்பியின்று பார்த்துமென்ன
தேவையான போது இல்லையே!
அருந்தவமாய் பிறந்த இனம்  அழகுதமிழ் வீரகுணம்
அழியவென்று விதிபடைத்தபின்
உருவழிந்து வாழ்வதிலும் உணர்விழந்து சோர்வதிலும்
உறுதியிட்டு முடிவு செய்வதோ

பருந்தன்ன குஞ்செனவும் பழகும்விதி மாற்றவெனப்
பறந்துசெல்லு வானம் எட்டிடும்
கருந்தேளும் அரவங்களும் காணும்வழி நீநடக்க
கவனமெடு பாதை கிட்டிடும்
மருந்தென்ன மாயமென்ன மனதிலொரு திண்ணமெடு
மாற்றமொன்று கையில் வந்திடும்
தரு, தென்னை பனைமரமும் தலைநிமிர்ந்து வாழ்வதென
தமிழ்மகனே நீயும் வாழ்ந்திடு !

kirikasan

unread,
Feb 26, 2013, 2:46:57 PM2/26/13
to சந்தவசந்தம்

இதுவும் ஒரு மணிவிழியின்கதை .ஆனாலும் புதிய கதை புதிய பார்வை.
இது யாரையும் குறித்தது அல்ல. நல்ல தூய நோக்கத்துடன் ஈழ தேசத்தை குறித்து
எழுதப்படும் ஒரு கற்பனைகதை. இதை ஒருகருவைமனதில் வைத்து தொடங்கிவிட்டேன் .
முடிப்பதற்கு சக்தி உதவ வேண்டும். இடையில் நிற்காது என நம்புகிறேன் .
அனைவரது வாழ்த்துக்களும் தேவை


சிங்காசனம் -1

கூடுமுயிர் ஓடும்வரை ஓடுமிருகாலும் நடை
போடும் நடம் காணுமே‌ நிதம்
தேடும்விழி மூடும்வரை தேகம்சுடும் நாளுமிசை
பாடிமனம் ஆடுமேசுகம்
நாடுமினிப் போதும்சுடு காடுமுன தாகுமெனப்
போடும்விதி மாறுமே கணம்
ஓடுமுயிர் கூடுமுடல் சூடும்எரி தீயிடையே
கூடுமெனப் போகுமே வானம்

நாடும்மகிழ் வோடுநடை போடுமெவர் வாழ்வில்பெருங்
கேடுமொரு வேளைவரும்கொள்
ஊடும் அதில் துன்பமெமைத் தேடும்வரும் சேருமதன்
பாடும்பெரும் பாடெனவே காண்
சூடும்அனல் தீண்டுமெனத் தீமைமன தோடும்பல
காயமதை ஆக்குமே உளம்
பீடும்பிணி யாகும் அதில்மூடும் இருள் கூடும் ஒளி
போயும் படு நோவுகள் எழும்


நாடுமதை யாளுமொரு நல்லரசன் ஆனவனின்
தீரம் பலவீன மாவதோ
காடும் அதில் வாழ்மிருகம் காணும்பெருங் கோரமுகம்
காவலனின் தோற்றமாவதோ
வீடும் மனை மக்களிவர் வேண்டுமுயிர் காப்பதொன்றே
வேந்தனவன் வேலையல்லவோ
கேடும் கொலை துன்பமெனக் கீழ்விலங்கென் றானவனை
கொற்றவனாய் காணல் நீதியோ

1. இரவின் மடியில்

மணிவிழி புரவியின் சிறுநடை பழகிடு
மதனுடை யசைவுதனில்
அணியெனும் நினைவுகள் மனமதி லெழவொரு
அதிதுயர் நிலைகொண்டாள்
தணிவது இலையென சடசட ஒலியெழத்
திரண்டது மழைமுகில் வான்
துணிவினை யெடுமனம் திகழ்ந்தது பொலிவொடு
துயரெனும் கனம் பெறினும்

விளைந்திடு இருளெனும் வியன்தரு கருமையும்
விறுவிறு எனக்கவிய
குழைந்திடு குளிர்மையும் குலவிட உடலிடை
குளுகுளு எனுமுணர்வும்
வளைந்திடும் தெருவினில் விரைந்திடும் கணமதில்
வருவது பெருமழையாம்
உழைந்திடத் துயரமும் உளமதில் மெதுவெழ
எதிரினில் குடிகண்டாள்

இடியுடன் புயலெழும் இறுகிய கருமையில்
இயல்புற மனமஞ்சி
கொடிதெனும்‌ தனிமையும் கொளுமனம் வெருகிட
குடிசையில் வருமிரவை
விடியலின் வரையங்கு விடுவது றிவென
விரைந்திட மனம் கருதிப்
படிமலர் நிறையிரு பகுதியில் குதிரையும்
பணிவுற நடைசெய்தாள்

அரவமும் சிலஎழில் அசைவுறு மலரிடை
அமைதியில் நெளிவதையும்
தரதர எனத்தொலை தனில்விழு அருவியின்
துளிதெறி யொலியிடையே
புரவியின் அசைவினில் பிறந்திடு மொலிசெவி
புகுந்திடச் சிறுவயதோர்
சரசர எனஉளம் சிறுபயம் மருவிட
சடுதியில் கலைந்தனர் காண்

மரமதின் மறைவினில் வருபவர் எவரென
மலர்முகம் துயரறவும்
கரமதை உயர்வினில் விடைதரும்குறியென
கனிவுடன் அசைவுசெய்தார்
வரமிடும் முகிலிடை திரியெழிற் தேவதை
வருவது புவியெனவே
உரமெடு திருமுக ஒளியுற மணிவிழி
எழில் தனில் வெளிநடந்தார்

மெலச்சிறு குடிசைகள் பரவிய திசையினில்
மறுத்திடு மனதுடனே
பலயிடி பொலிந்திடும் பசுமைகொள் முகில்களும்
பதுமையே கவனமென
நிலமிசை பெருந்துயர் நினையடை வதுவென
நிகழ்வுகள் எதிரொலிக்க
குலமகள் விதிகண்டு பிடிபிடிபிடியென
கொடிதுகொண் டுறுமியதோ?

(வளரும்)

kirikasan

unread,
Feb 27, 2013, 1:17:37 PM2/27/13
to santhav...@googlegroups.com
(உடல்நிலை மீண்டும் மோசமானதால் சிறிது  கோபத்துடன்)            
                 செத்தால் சிரிக்கவோ தேவி?

செத்தேனாம் என்றாற் சிரித்திடவோ யன்னைநீ சித்தங் கொண்டாய்
எத்தேனும் பாகுடனே இனிப்புங் கலந்துன்னை இரந்துகொள்வேன்
வித்தேனோ என்னில் விரும்பித் தமிழூன்றி விளைத்தா யின்றோ
கத்தேனோ ஒவென்று கத்திக் கதறுமுயிர் காவாயோ சொல்

உற்றேனோ உள்ளத்தே யுருகித் தமிழ்சொல்லும் உணர்வையீந்தாய்
சற்றேனும் நெஞ்சத்  தழல் தனை ஆற்றென்னச் சஞ்சலத்தில்
பற்றேனோ என்றேதீ பற்றவே கூற்றுவன் பாதாளத்தில்
நிற்போனைக் கொண்டுடல் நீறாக்கி நீரிடவோ நெஞ்சங்கொண்டாய்

கற்றேனோ யின்பங்கொள் கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச் சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில் பரவச வுணர்வீந்து  பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும் முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே

சொல்லுஞ் சுவைக்கரும்பில் சுற்றிமலர் பூந்தமிழின் சோலைப்பூக்கள்
வில்லுங் கணையென்றே வித்தகனாய் வைத்துமங் கதன்போ லென்னை
அல்லு ம் பகற்கணைகள் அள்ளியெறி என்றுவிதி யாக்கிப் பின்னே
சொல்லுன் தூயமனம் தீயெண்ணங் கொள்ளென்னச் செய்தவர் யார்?

எள்ளு மிவன் என்றே யெண்ணியுன் திருப்பாதம் கொண் டுதைத்து
தெள்ளென் சுவைப்பாவைத் தீட்டிய நல்லோவியத்தை திங்கள்வானில்
உள்ளதெனப் பிரகாச ஒளிசெய்தாற் போலென்னை உணரவைத்துக்
கொள்ளக் குறையாகித்  தேயென்று கொடும்வரத்தைக் கொடுத்ததேனோ

அள்ளித்தா எனதன்பின் அன்னையிலும் மேலான அருட்சுடரே
கொள்ளத் தணல்மீது குற்றுயிராய் கிடவென்று கூறல்விட்டு
வெள்ளி தாரகையாய் வானத்தின் கதிரெறிக்கும் வீச்சாய்சக்தி
துள்ளித்தான் கொண்டோடிச் சுந்தரமாய் தூயதமிழ் செய்யென்றாக்காய்

Pas Pasupathy

unread,
Feb 27, 2013, 2:16:26 PM2/27/13
to santhav...@googlegroups.com
தேவி நிச்சயம் கேட்பாள், கிரிகாசன்!

2013/2/27 kirikasan <kana...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 --

Ramamoorthy Ramachandran

unread,
Feb 27, 2013, 2:52:29 PM2/27/13
to santhav...@googlegroups.com
உள்ளேதான் எழுந்தருளும் உயிர்க்காளி 
       உமக்குள்ளே ஓட்டங்காட்டி 
கள்ளத்தால் சிரித்திட்டாள் அதைஏதோ
     என்னவோஎன்  றெண்ணி நீவிர் 
உள்ளத்தில் பதைப்புறுதல் இனிவேண்டா 
     உள்ளத்தில்  ஆர்வங்  கொண்டால் 
அள்ளிக்கொள்  வாள்நந்தாய்,அவள்வாழும் 
     வரைநும்மை  வாழ  வைப்பாள்.

வாழ்க, நலம் வளம் பெற்று. புலவர் இராமமூர்த்தி.

2013/2/28 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

kirikasan

unread,
Feb 28, 2013, 5:52:20 AM2/28/13
to santhav...@googlegroups.com

பசுபதி ஐயா அவர்களுக்கும் , புலவர் ஐயா அவர்களுக்கும் நன்றிகள்! தாங்கள் கூறியதுபோல்.....!


    சிரிப்பில் மலர்ந்தேனோ

துள்ளி எழுந்துவிட்டேன் - மலர்த்
   தோட்டத்து வண்ணமென
அள்ளி குளித்துவிட்டேன் - அருள்
    யாக்கையில் தேக்கமுற
வெள்ளிமுளைத்தவிடி - காலை
    வேளையில் தேறிவிட்டேன்
கள்ளி அவள் நிஜம்தான் - எந்தன்
    காலத்தை யீந்தவளாம்

புள்ளி மயில் விரித்தால் - அந்தப்
    பொன்னெழிற் தோகையிலே
தள்ளி கிடந்தலைகள் -  அது
     தாங்கிடும் பொய்கையிலே
பள்ளிக் கலைவகுப்பில் - அந்த
     பாலகர் புன்சிரிப்பில்
உள்ளவள் என்னிடையே - ஏனோ
     உள்ளம் அழவும்செய்வாள்

நள்ளிரவின் கருமை - பின்னர்
    நாளிற் பகலொளியை
தெள்ளமுதென் கவியை - பின்னர்
    தேக உடலிழிவை
பிள்ளையெனை அணுகி - அன்பில்
    பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
    கொள்ளவும் செய்திடுவாள்

வள்ளமதில் கடலில் - எனை
    வைத்துப் பயணமிட்டாள்
உள்ளமதில் தெளிவை -  தந்து
    ஒளிர் விளக்கமானாள்
வெள்ளமென அருள்வாள் - பின்னர்
    வேடிக்கையாய் அடிப்பாள்
பிள்ளையென் றாகிவிட்டேன் - இவள்
    பாசத்தில் ஏது செய்வேன் !

***********

kirikasan

unread,
Feb 28, 2013, 6:16:34 AM2/28/13
to santhav...@googlegroups.com
இறுதி நேர தவறு கவிதையில் ஏற்பட்டுவிட்டது.. திருத்தம் இதோநள்ளிரவின் கருமை - பின்னர்
    நாளிற் பகலொளியை
அள்ளி யளிப்பவளோ -  கவி
   ஆற்றலும் ஈந்தபின்னே

பிள்ளையெனை அணுகி - அன்பில்
   பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
   கொள்ளவும் செய்திடுவாள்

**************

kirikasan

unread,
Mar 1, 2013, 2:08:28 PM3/1/13
to santhav...@googlegroups.com
 இது எனது தனிப்பட்ட கருத்து.

இலக்கியத்தில் காதலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நான் நிறைய தலைவன்,  தலைவி பேச்சுக்களாக கவிதைகள் தந்திருந்தாலும்
அவை தனித்தே  ஒதுங்கி நிற்கின்றன  அதனால் மனதில் தோன்றியதை இங்கே போட்டு உடைக்கிறேன். தவறானால் தெரிவிக்கவும்

           காதல் கவிதை

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
  நிறைகயலும் அலைகளையும் உருவாக்கினாள்
பார் செய்து பாரில்பல பனிமலைகளும், 
   பளிங்கெனவே உருகிநிலம் பரவச்செய்தாள்
நேர் நிற்க நில்லென்று தினகரனையும் 
   நிலவதனைச் சுழன்றோட நிகழ்வு செய்தாள்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமனிதரும்
 சேர்ந்து வாழென்றேனோ சிந்தை கொண்டாள்

யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
  ஆணாக்கிப் பெண்ணாக்கி  வடிவுமீந்தார்
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்   
  பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வுசெய்து
  குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
  தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்

விண்ணாக்கி வெகுகதியில் கோள்களாக்கி
  விளையாடி அசைக்கின்ற சக்தி தேவி
ஆணாகப் பெண்ணாக இருபாலரை
  அறிவீந்த இயற்கைதனும் உண்டாக்கியே
கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
  கருவாக்கிப் பொருளாக்கி உணர்வீந்தவள்
மண்ணாகப் போகுமுடல் மதனாக்கிடும்
  மலர்கணையில் மனமொன்று படவும்வைத்தாள்

வானாக்கி வைத்துப் பெரு வளமோங்கிட
  வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில சுவையாக்கியும் 
  செய்தபின்னர் தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
   தனையாக்கி குலம்பெருக விதி செய்தவள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை ஈர்ப்பை
   இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ

இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
   இளைமையே தாய்மைக்கு ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
  காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதேவி குறைசெய்வளோ
  குற்றமவல் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
  நீயென்று தீயள்ளி பொசுக்கிடாளோ

ஆதலினால் காதல்தனைச் செய்வீரென
  அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலினைப் பேசுவது  களங்கமில்லை
  கருணையுடன் நோக்குங்கள் காதல்தன்னை
பாதகமேயில்லாது பாடும் கீதம் 
  பனிமலையும் சுடுகதிரில் உருகுமாற் போல்
நாதயிசை நாட்டியங்கள் செய்தே யன்பை
  நல்லுணர்வு காதலினைப் போற்றலாமோ?

kirikasan

unread,
Mar 4, 2013, 2:25:23 AM3/4/13
to santhav...@googlegroups.com

       என்றும்  வாழுவேனாம்

கொட்டும்மழை தட்டியிடி மின்னினாலும்
  கூடிவருந் தென்றல்புய லாகினாலும்
தொட்டுமழை மண்ணில்வெள்ளம் பொங்கினாலும்
  துன்பம் பந்தா யென்னை விளை யாடினாலும்
வெட்டியிரு துண்டெனவே வீசினாலும்
 வேளைகண்டு தீயைச்சூழ வைத்துயாரும்
சுட்டெனையே சாம்பலாக்கிக் கொட்டினாலும்
  சுந்தரத் தமிழி லென்றும் வாழுவேனாம்

குட்டித் தலை மொட்டையனென் றாக்கினாலும்
  கும்மாளந்தான் போட்டுக் கூத்து ஆடினாலும்
பெட்டியிலே வைத்துப் பின்னை சுற்றினாலும்
    பெண்கள் வீட்டில் நிற்கவீதி தள்ளினாலும்
தட்டிமீது வைத்துத் தோளில் தூக்கினாலும்
    தங்க வண்ணத் தீயிலிட்டு சுட்டபோதும்
பெட்டகத்துள் வைத்த கவிப் புத்தகத்திலே
     பேசுந்தமி ழாயிருந்து புன்னகைப்பனோ
  
கட்டியுடல் கங்கைநீரில் விட்டக் காலும்
   கண்ணிழந்து காணுங்காட்சி பொய்த்தபோதும்
சுட்டஉடல் வேகிப்புகை தள்ளினாலும்
   சின்னவிழி கண்டு துயர் உற்றபோதும்
வட்டமாக நின்றவர்கள் எட்டப் போயும்
   வந்தவனைக் காணவில்லை வையம் என்றும்
விட்டுப் பெரு மூச்சுடனே வீடு சென்றும்
    விந்தையென் தமிழ்க்கவியில் வந்துநிற்பேன்

சட்டிதனை ஒட்டைபோட்டுத் தந்தவன் வந்தே
   சஞ்சலத்தில் வாடும்பொருள் கேட்டபோதும்
வட்டியென்ன கொள்முதலும் நட்டம்போகும்
  வையகத்தில் பட்டதொல்லை விட்டதாயும்
முட்ட மூச்சு கட்டியுயிர் எட்டப்போயும்
   முத்தமிழின் இன்னிசையில் மெல்லக்காட்சி
இட்டுவெல்லத் தேன்தமிழில் எந்தன்பாவில்
    இன்தமிழின் சொல்லடுக்கில் வாழுவேனாம்,

******************

kirikasan

unread,
Mar 6, 2013, 2:42:48 AM3/6/13
to santhav...@googlegroups.com

      இவரில்லையேல் எது காக்குமோ?

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலே
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனால்
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோ
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேரும்
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற திங்கள்
   மறுநாளி லிலையாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலரும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலும்
  கதியின்றித் தொலையோடலாம்
எளியோரி னுயிரோடு விளையாடுமிவனை
    எதுவந்து தனதென்குமோ

பெரிதாகிப் பிளவாகி நிலமுள்ளே கொண்டு
  பிரியாயென் மகனென்னுமோ    
தெரியாத இரவோடு எழுமாழி சென்று
  திகழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீயின்
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதொன்று மில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ
 
ஒருநாளில் கனவோடு  உறவாடும் எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளியில்
   தேயாமல்  நிலவோடுமோ  
அருகாமை கொடியொன்று அலைந்தாடி யின்பம்
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே யென்று
  புதிதா யோர்வழி காண்பமோ

கருகாதோ அருகாதோ கறை கொண்டநாட்கள்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் ஊடே
    விளைகின்ற ஒலி பொங்குமோ
உருமாறி கருமாறி உலகத்தில்  ஏங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயத் தலைவி
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!

kirikasan

unread,
Mar 8, 2013, 7:11:13 AM3/8/13
to santhav...@googlegroups.com
               ஏங்கும் நெஞ்சம் !

நில்லாது ஆறோடும் நில்லாதே என்றதனை
சொல்லாத போதுமது சுற்றியோடும்
செல்லாத இடமெங்கும் சுற்றிவரும் பூங்காற்று
சேறோடு சாக்கடையின் நாற்றம் கொள்ளும்
கல்லாத மதிபோலும் கர்வமெனும் விஷம்பூசிக்
காடையரின் அரசோங்கும் கண்கள் தோண்டி
கொல்லாது கொல்பவரும் கூடியமை இராச்சியத்தில்
இல்லாத பதவிக்கு ஏங்கும் நெஞ்சம் !

வெல்லாது அறம்தேய, விடியாது இருள்சூழ  
விளக்கொன்றாய் புயல்காற்றில் வைதததீபம்
செல்லாத காசுக்கு  சென்றுமனம் தடுமாறும்
சீரான பொய்மைக்கு சிரசும்தாளும்
வல்லாதி வல்லரென வம்சங்கள் என்று மகா
வாள்கொண்டு அகிம்சைதனை வளர்போம் என்றார்
இல்லாத நாற்காலி அறிந்துமோர் நிழலாக
இருக்குமா சனத்திற்கு ஏங்கும் உள்ளம்!

பல்லாதி மன்னர்களில் பசுவுக்கு நீதிசொலப்
பிள்ளை யினைத்தேரிட்டும், பாசம்கொண்டு
முல்லைக்குத் தேரீந்தோன், மூதாட்டி ஔவைக்கு
மேலும்வாழ் வென்றெண்ணி தானும் கொண்ட
நெல்லிக்கனி யீந்தவரும் நீதிதனைக் காணுமென
நிகழ்த்திநல் கதைபடித்தும் நெஞ்சம்தன்னை
இல்லாது நீதிக்கு இழுக்கேற்று நாற்காலி
இருந்தாலே போதுமென இச்சை கொண்டார்

நெல்லுயர கோனுயர்வன் நீதிபல நெறிகளையும்
நிச்சமா யிவர்கற்ற நெறிகளாயின்
கல்லாலே மாங்காயைக்  கனிவீழ அடிப்பர்செங்
கோல்கொண்டு சிரசுதனை குறித்துவீசி
நில்லாது கழுத்திருந்து  நீக்குஎன ஆட்சிவிதி
நேரெழுதி தமிழ்சாய்த்து நிற்போர்பக்கம்
பொல்லாத ஆசையுடன் புறத்தோடி இரந்தவரை
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

Ramamoorthy Ramachandran

unread,
Mar 8, 2013, 8:05:03 AM3/8/13
to santhav...@googlegroups.com
வருகின்ற அசைவெலாம் வளம்சேர்க்க வேஎன்ற
      மகிழ்ச்சியை  நீ எழுதினால், 
வானாண்டு பூமிக்குள் வளம்கண்ட  மானுடம் 
      மறுபடி எழுந்து  வருமே!
தருநின்று  நிழல்தரும் தளிர்த்திடும் காய்த்திடும் 
      சலிக்காமல் கனிகள் தருமே!
தாவென்று கேட்போரைக் குழந்தையாய் எண்ணியே 
       தன்னையே தந்து விடுமே!
பருவங்கள் மாறினால் பண்புதான் மாறுமோ?
      பகலென்றும் இரவாகுமோ?     
பாலூட்டும் பசுசீறி  நஞ்சைச்சு  ரக்குமோ?
      பால்நிலா வெயில் வீசுமோ?
உருவாக்கும் மனிதனின் உள்ளத்தில் கள்ளமே 
     உண்டாகா  தென்றன் நண்பா,
ஓடிவரும் அலைமீண்டும் ஓடிவரும் உன்கையில் 
     ஒளிமுத்தம் பலவும் தருமே!
08/03/2013 புலவர் இராம மூர்த்தி.

  


 
       
 

On Fri, Mar 8, 2013 at 5:41 PM, kirikasan <kana...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kana...@gmail.com) Add cleanup rule | More info
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

kirikasan

unread,
Mar 8, 2013, 8:20:54 AM3/8/13
to santhav...@googlegroups.com
ஐயா  தங்கள் கவிதைக்கு நான் அடிமை. என்னே அழகு! உள்ளம் பூரிப்பில் தவிக்கிறது. வாழ்க வாழ்க வாழ்க!கோடி ஆண்டுகள் வாழ்க! (என்னை குறித்து  வரும் கருத்துக்காக அல்ல.உண்மையாகவே எழுதுகிறேன்0

Ramamoorthy Ramachandran

unread,
Mar 8, 2013, 8:42:12 AM3/8/13
to santhav...@googlegroups.com
வணக்கம் கிரிகாசன், கடந்த செப்டம்பர், அக்டோபரில் லண்டன்  லேவிஷாம்  சிவன் கோயிலில் பேசினேன். மீண்டும் வருவேன்.
புலவர் இராமமூர்த்தி  

On Fri, Mar 8, 2013 at 6:50 PM, kirikasan <kana...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kana...@gmail.com) Add cleanup rule | More info

ஐயா  தங்கள் கவிதைக்கு நான் அடிமை. என்னே அழகு! உள்ளம் பூரிப்பில் தவிக்கிறது. வாழ்க வாழ்க வாழ்க!கோடி ஆண்டுகள் வாழ்க! (என்னை குறித்து  வரும் கருத்துக்காக அல்ல.உண்மையாகவே எழுதுகிறேன்0

kirikasan

unread,
Mar 10, 2013, 5:25:43 AM3/10/13