"சந்த வசந்தம்" என்ற குழுமம்,2001 ஆம் ஆண்டு கவிவேழம் இலந்தை இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்டது.
தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களைப் போலவே இக்குழுமம் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறது. நூற்றுக் கணக்கான தமிழ்க்கவிஞர்கள் இதில் இணைந்து தமிழ்ப் பணியாற்றி வருகின்றனர்
இக்குழுமத்தைப் பற்றிய கவிதை :
சந்த வசந்தம்!
பாரினில் பருவம் மாறும்
பரவச வசந்தம் சேரும்
ஊரெலாம் மலர்க்கா டாகும்
உவகையில் பறவை பாடும்
சீரிய வண்டு பூவில்
திகழ்நறுந் தேனைத் தேடும்.
தேரெனத் தென்றல் ஏறிச்
சிறுகணை தொடுப்பான் மாரன்.
.
இந்தவ சந்தம் தன்னை
இனிமையில் விஞ்சு கின்ற
சந்தவ சந்தம் என்னும்
தண்டமிழ்க் குழுமம் கண்டார்
அந்தமில் புகழின் மிக்கார்
அருந்திறல் தெற்கி லந்தை
நந்தமிழ்க் கவிவே ழத்தார்
நமக்கெலாம் வழிச மைத்தார்.
.
பாவலர் பலரி ணைந்தார்
பாங்குடன் மரபில் பாடி
ஆவலாய்த் தமிழ்வ ளர்த்தார்
அருங்கவி அமுதம் தந்தார்.
மேவியே மூன்று சங்கம்
விளங்கிய காலம் போலக்
காவியம் மணம்சி றக்கும்
காலமும் பிறந்த தம்மா
எத்தனை கவிய ரங்கம்!
எத்தனை சொல்லா ராய்ச்சி!
முத்தன கவிதைப் பூக்கள்!
முடிவிலாச் சாத னைகள்!
வித்தென முளைத்தெ ழுந்த
வித்தகக் கவிஞர்க் கூட்டம்!
இத்தரை வியந்து போற்ற
இலக்கியத் தொண்டு செய்தார்!
.
ஆழியை உப்புப் பொம்மை
ஆழமே காண்ப துண்டோ?
நாழியால் கடற்க ரையின்
நனிமணல் அளப்ப துண்டோ?
வாழியிக் குழுவின் பெற்றி
மற்றுநான் உரைத்தல் ஆமோ?
ஊழிநாள் தாண்டி வாழ்க!
உலகெலாம் பரவி வாழ்க!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhqgVHTcpJntFckXCArBfwJZexJm9UsWGdDh74vA5HTFA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtj3bnRCdZ35_QXSXYkTuH4tcHhj63FF0JDpLA4hOAEN1Q%40mail.gmail.com.
attagaasam,yogiyar
‘சந்த வசந்தம்’ பற்றி முன்பு நான் எழுதிய கவிதை
(“சென்றறியாப் பாதை” என்ற என் கவிதைத் தொகுப்பில் உள்ளது)