கவிதையில் யாப்பு: கலிப்பா

576 views
Skip to first unread message

ramaNi

unread,
Mar 12, 2013, 9:42:16 AM3/12/13
to santhav...@googlegroups.com
கவிதையில் யாப்பு: கலிப்பா 

அன்புடையீர், வணக்கம்.

கல்லூரியில் பயிலும்போது நானும் என் நண்பனும் பல புத்தகங்களை மேய்ந்து பயனுள்ள குறிப்புகளை வகுப்பில் தந்த பாடத்துடன் சேர்த்து உரிப்பொருள் வாரியாக எங்களுக்குப் புரியும் வண்ணம் கையேடுகள் தயாரித்துப் படிப்பது வழக்கம். இதுபோன்றதொரு முயற்சியை இப்போது நான் யாப்பிலக்கணம் பயிலும் போதும் மேற்கொண்டுள்ளேன். யா.கலம், யா.காரிகை, இலக்கண விளக்கம், விசாகப் பெருமாளையரின் யாப்பிலக்கணம், யா.கா. குமாரசுவாமிப் புலவர் உரை, TVU பாடங்கள், எல்லாவற்றிலும் மேலாகப் பசுபதியாரின் ’கவிதை இயற்றிக் கலக்கு’ புத்தகமும் மேய்ந்துவரும் நான் இதுவரை தயாரித்த குறிப்புகளை இந்த மேதகு மன்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவிட முனைகிறேன். அறிஞர்கள் முன்னிலையில் இந்த மாணவனது முயற்சியில் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் இருந்தாலும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
யாப்பினை ஆப்பென மூப்பெனக் கருதிக்
கோப்பினை விடுத்துக் கவிதை முனையாது
காப்பெனக் கருதிக் காமுறும் மாணவன்
கவிதையில் வடித்த குறிப்புகள் இவற்றைக்
கவனித் திங்குள கற்றோர் பலரும்
பிழைகள் திருத்திப் பழுதுகள் அகற்றிநான்
கற்பைதக் கசடற கற்றுக் கொள்ள
விற்பனக் கருத்துகள் தந்திட வேண்டுவனே.

கவிதை யிலக்கணத்தைக் கவிதை வடிவில் குறிப்பெடுக்க முயல்வது செய்யுள் எழுதும் முயற்சிக்கோர் நல்ல அனுபவமாய் விளங்கும் என்பதால், இப்போது நான் கலிப்பாவின் இலக்கணக் கூறுகளை கலிப்பா வடிவங்களில் குறிக்க முயன்று வருகிறேன். இதுவரை முடித்த பகுதிகள் ஒவ்வொன்றாகக் கீழே.

*****

ramaNi

unread,
Mar 12, 2013, 9:46:13 AM3/12/13
to santhav...@googlegroups.com
கவிதையில் யாப்பு
7. கலிப்பா

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)
தரவு

கலியென்ற பெயர்ச்சொல்லே ஒலியென்ற பொருள்தவிர
வலியாகும் கடலாகும் செருக்காகும் தழைப்பாகும்
கலியென்றால் நடுக்கமுடன் மனவெழுச்சி யெனப்பொருளே
கலித்தலெனும் வினைச்சொல்லில் களித்தலுடன் எழுதலுடன்
ஒலித்தலுடன் தழைத்தலுடன் பெருக்கலுடன் நெருக்கலென்று
பெருகிவரும் பொருள்பலவும் கலிப்பாவில் வரக்காண்பீர்!

[சீரிடை அடியிடை யெங்கும் கலித்தளையே வருவதால்
இங்கு ஏந்திசைத்துள்ளலோசை எழுவது காண்க.]

தாழிசை
கலிப்பாவில் ஒலித்துள்ளல் செழித்தோங்கி வரக்கேட்போம்
கலிப்பாவில் அடிகளிலே எழுச்சியுண்டு வலிமையுண்டு (1)

கலிப்பாவம் போதரங்கம் கடலலைபோல் சுருங்கிவர
அடிபலவே அமைந்துவந்து பொருளதுவின் பெருமைபேசும் (2)

தரவினிலே பொருள்தொடங்கித் தாழிசையி லேவிரிந்து
அராகத்தில் விளக்கியேயம் போதரங்கம் புகழ்கூற (3)

தனிச்சொல
தனிச்சொல்லுடன்

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்)
சுரிதகம் எனப்படும் முடிவுறும் உறுப்புடன்
துரிதமும் எழுச்சியும் துளக்கமும் தழைத்தலும்
நெருக்கமும் பெருக்கமும் ஒலித்தலும் பெறவரும்
பெருமையை உடையது கலிப்பா என்பதே!

*****

7.1. கலிப்பாவின் பொது விலக்கணம்
(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)


தரவு (முகப்பு)
வெண்சீரே மிகப்பெற்று விளங்கனிச்சீர் மாச்சீரும்
ஒண்ணாது விலக்கியே இயற்சீரில் விளச்சீர்வரக்
கலித்தளையே கலித்துவந்து அயற்றளையும் விரவிவந்து
தரவுடனே தாழிசையும் அராகமும் வருவதுடன்
அம்போத ரங்கம்பின் தனிச்சொல்லும் சுரிதகமும்
எனுமாறு உறுப்புகளில் ஏற்பதெல்லாம் தேர்ந்தெடுத்து
கலியோசைத் துள்ளலிலே மெலிவின்றித் துலங்கிவர
நாற்சீரின் அளவடியால் நடப்பதுவே கலிப்பாவாம்.

தாழிசை (விளக்கம்)
வெண்பாவின் உரிச்சீராய் விளங்குவது வெண்சீரே
வெண்சீரெனக் காய்ச்சீர்கள் நால்வகையும் பெயர்பெறுமே.
விலக்கிடும் மாச்சீர்கள் தேமாவும் புளிமாவும்
விலக்கிடும் விளங்கனிச்சீர் நிரைநடுவாம் கனிச்சீர்களே. (1)

[நிரைநடுவரும் கனிச்சீர்களாவன: கூவிளங்கனி, கருவிளங்கனி;
இவை கலிப்பாவில் வரக்கூடாது என்பதால் பெயர் குறிக்கவில்லை.]

கலித்தளையில் காய்முன்நிரை வரவொலிக்கும் துள்ளலோசை.
கலித்தளையே பயில்நிரல்கள் கருவிளங்காய் புளிமாங்காய்.
இயற்சீர்க்கூ விளம்-அருகக் கருவிளமே மிக்குவரும்.
அயற்றளையும் கலிப்பாவில் மயங்கிவரும் கலித்தளையுடன். (2)

பத்துவகைக் கலிப்பாவென மொத்தமாக இருப்பதிலே
ஒத்தவகை பொறுத்தாறு உறுப்புகளில் சிலபலவே.
கலிப்பாவின் உறுப்புகளில் அடிகள்பல வரவிவரும்.
கலிச்சுருக்கம் நாலடியே கலிப்பெருக்கம் புலவருளம். (3)

தனிச்சொல் 
கலியொலியில்

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்: முடிவு)
கலித்தளை தனிவர ஏந்திசைத் துள்ளலே
கலித்தளை வெண்டளை அகவற் றுள்ளலே
கலித்தளை பிறதளை பிரிந்திசைத் துள்ளலே.

*****

ramaNi

unread,
Mar 13, 2013, 9:16:19 PM3/13/13
to santhav...@googlegroups.com
7.2. கலிப்பாவின் சீரும் தளையும் 

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலிப்பாவில் வரும்சீர்கள் கைவிரித்துக் கூறிடுவோம்.
கலித்தளையே பொதுவில்வரச் கலிச்சீர்கள் அமைந்திடுமே.
கலித்தளையில் காய்முன்நிரை காணுகின்ற நிரல்நோக்கின்
புளிமாங்காய் கருவிளங்காய் எனுமிரண்டு காய்ச்சீரே.

சான்று 1. (கலித்தளை, வெண்டளை, ஆசிரியம்)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)


செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.
--யா.கா.மே.கோ. 11

சீர்கள்:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
கூவிளம் புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
கூவிளம் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளம்

தளைகள்:
தேமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
தேமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளம் -(நிஆ)- புளிமாங்காய் -(கலி)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளம் -(நிஆ)- புளிமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- கருவிளம்

***

காய்ச்சீர்கள்:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

மூவசையில் உருவாகும் காய்ச்சீர்கள் நான்கினுள்ளும்
கருவிளங்காய் புளிமாங்காய் கலித்தளையாய் மிகவரினும்
கூவிளங்காய் தேமாங்காய்ச் சீர்களுமே உடன்வரலாம்
கலித்தளையும் வெண்டளையும் கலந்துவரும் கலிப்பாவிலே.

சான்று 2. (கலித்தளை வெண்சீர் வெண்டளை)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
வெண்ணிலவின் தண்ணொளியில் கண்ணயர்ந்து உறங்குகையில்
கண்ணனவன் பண்ணிசைத்துக் குழலூதக் கனாக்கண்டேன்
வண்ணமயில் இறகணியும் விண்ணவனின் கழலிணைகள்
நண்ணவரும் பேரின்பம் திண்ணனவன் தந்தானே!

சீர்கள்:
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

தளைகள்:
கூவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(கலி)- கருவிளங்காய் -(வெவெ)-
கூவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளங்காய் -(கலி)- கருவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(கலி)- கருவிளங்காய் -(வெவெ)-
கூவிளங்காய் -(வெவெ)- தேமாங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(வெவெ)- தேமாங்காய்

***

கனிச்சீர்கள்:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

மூவசையில் உருவாகும் கனிச்சீர்கள் நான்கினுள்ளும்
நிரைநடுவாம் விளங்கனிச்சீர் இருவகையும் கூடாது
தேமாங்கனி புளிமாங்கனி என்றிரண்டு சீர்களுமே
ஏலாத தாகாது என்றாலும் அருகிவரும்.

சான்று 3. (கருவிளங்கனி கூவிளங்கனி வரக் கலித்தளை குன்றி கலிவிருத்தமாதல்)
(கலிவிருத்தம்)
படபடவெனச் சிறகடித்திடப் பறவையொன்று பறந்தபொழுது
தடுமாறியே செயலிழந்தான் குகைமுகப்பினைக் கைப்பிடித்திட.
உடன்வந்த துணைமனிதனும் விடையறிந்திட முடியாமலே
படபடத்திடும் இதயத்துடன் ஒதுங்கிநின்றவன் ஒளிந்துகொண்டான்.

கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்காய் கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்காய் கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்காய் கருவிளங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி
கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கருவிளங்காய்

(விளங்கனிச் சீர்களை விலக்கக் கலித்தளை மிக்கு கலிப்பாவாதல்)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

படபடக்கும் சிறகடித்துப் பறவையொன்று பறந்தபோது
தடுமாறியே செயலிழந்தான் குகைமுகப்பைக் கைபற்றிட.
உடன்வந்த துணைவனவன் விடைகாண முடியாமல்
படபடக்கும் இதயத்துடன் ஒதுங்கிநின்றே ஒளிந்துகொண்டான்.

கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
புளிமாங்கனி கருவிளங்காய் கருவிளங்காய் தேமாங்கனி
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
கருவிளங்காய் புளிமாங்கனி கருவிளங்காய் கருவிளங்காய்

***

இயற்சீர்கள்:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

ஈரசையில் உருவாகும் இயற்சீர்கள் நான்கினுள்ளும்
சேராத சீர்களெனத் தேமாவும் புளிமாவும்.
எஞ்சியுள்ள சீர்களிலே கருவிளமிகக் கூவிளமே
கொஞ்சமாகப் பொதுவினிலே அடிமுதற்சீ ரெனவருமே.
இயற்சீருடன் காய்ச்சீர்கள் உடன்வரவே இயன்றுவரும்
இயற்றளையும் வெண்டளையும் கலித்தளையுடன் கலிப்பாவிலே.

சான்று 4. (கூவிளம் கருவிளம்; அகவற்றளை, வெண்டளை, கலித்தளை)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)


தேன்மலர்ப் பொழிலினில் தேமதுரத் தமிழ்ப்பண்ணில்
பாநயம் மிகுந்திட நாயகனின் புகழ்போற்றிக்
கவிமழை பொழிந்திடவே கடைக்கண்ணால் பார்த்தெனை
புவியினில் நிறுத்திடவே பகவானை வேண்டுவேன்.

சீர்கள்:
கூவிளம் கருவிளம் கூவிளங்காய் புளிமாங்காய்
கூவிளம் கருவிளம் கூவிளங்காய் புளிமாங்காய்
கருவிளம் கருவிளங்காய் புளிமாங்காய் கூவிளம்
கருவிளம் கருவிளங்காய் புளிமாங்காய் கூவிளம்

தளைகள்:
கூவிளம் -(நிஆ)- கருவிளம் -(இவெ)- கூவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளம் -(நிஆ)- கருவிளம் -(இவெ)- கூவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)-
கருவிளம் -(நிஆ)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)- கூவிளம் -(நிஆ)-
கருவிளம் -(நிஆ)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)- கூவிளம்

*****

ramaNi

unread,
Mar 15, 2013, 9:43:16 PM3/15/13
to santhav...@googlegroups.com
7.3. கலிப்பாவின் ஓசை வகைகள் 


(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலிப்பாவின் அடிகளிலே வருகின்ற தளைவகைகள்
கலிப்பாவின் துள்ளலினை மூவகையாய்ப் பிரிவுறுத்தும்
ஏந்திசைச் துள்ளலோசை அகவலின் துள்ளலோசை
பிரிந்திசைத் துள்ளலோசை எனமூன்று வகைகளிலே.

கலித்தளையே பயின்றுவரக் கேட்குமொலி ஏந்திசையாம்
கலித்தளையும் வெண்டளையும் விரவிவர அகவலெழும்
கலித்தளையும் பிறதளையும் விரவிவரப் பிரிந்திசையே
கலிப்பாவில் இவ்வாறு மூன்றுவகைத் துள்ளலோசை.

ஏந்திசைத் துள்ளல்

(தரவுக் கொச்சகக் கலிப்பா)

முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே,
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்,
இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியையரியா,
நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே
--யா.கா.மே. 22

அகவற் றுள்ளல்
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.
--யா.கா.மே.கோ. 11

பிரிந்திசைத் துள்ளல் 
குடநிலைத் தண்புறவில் கோவலர் எடுத்தார்ப்ப
தடநிலைப் பெருந்தொழுவில் தகையேற மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
--யா.கா.மே. 22

*****

7.4. கலிப்பாவின் அடி  

அடி வகைகள்

(தரவுக் கொச்சகக் கலிப்பா)

பலவடிகள் பயின்றுவரும் ஒலிச்சரமே கலிப்பாவாம்
கலிப்பாவின் அடியெனவே அளவடியே ஆனாலும்
அம்போத ரங்கத்தில் சிந்தடியும் குறளடியும்
அராகத்தில் அளவடிபின் நெடிலடியும் கழிநெடிலும்
ஆசிரியச் சுரிதகத்தில் ஈற்றயலில் சிந்தடியும்
வெண்பாவடிச் சுரிதகத்தில் ஈற்றடியே சிந்தடியும்
கலிவெண்பா ஈற்றடியில் சிந்தடியும் வந்துநிற்கும்.

சிற்றெல்லை பேரெல்லை

(தரவுக் கொச்சகக் கலிப்பா)

கலிப்பாவின் சிற்றெல்லை நான்கடியாய் இருந்தாலும்
கலிப்பாவின் உறுப்புகளில் அடியெல்லை வேறுபடும்
தரவினிலே மூன்றுமுதல் பன்னிரண்டு அடிகள்வர
தரவதுவே கலிப்பாவின் முகவுரையாய் அமைந்துநிற்கும்.

தாழிசைகள் இரண்டுமுதல் அடிநான்கில் வந்துநின்று
தாழிசையெண் மூன்றுமுதல் ஆறெனவே பெருகிவந்து
தாழிசையே ஒவ்வொன்றும் அடிக்கணக்கில் தரவைவிடத்
தாழ்ந்துவந்து தரவுசொல்லும் பொருள்விரித்துப் பாடிடுமே.

அராகத்தின் சிறுமைநான்கு பெருமையே எட்டடிகள்
அம்போத ரங்கத்தில் அடிகளின்சீர் வேறுபடும்
நாற்சீரடி ஈரடியாய் இரண்டடிகள் முதலில்வர
நாற்சீரடி ஓரடியாய் நான்கடிகள் அதன்பின்வர
முச்சீரடி எட்டடியும் இருசீரடி பதினாறும்
தொடர்ந்துவர அம்போத ரங்கமது முடிவடையும்
சிறுபான்மை இவைநான்கும் அடியெண்ணில் பாதிவரக்
கடலைபோல் எழுந்தோங்கிக் கடைசியிலே சுருங்கிவரும்.

சுரிதகத்தின் இருவகையின் வகைபொறுத்து அடியெல்லை
வெண்பாவிற் கிரண்டடியும் அகவற்கு மூன்றடியும்
அடிச்சிறுமை யாவதாலே வெள்ளைச்சுரி தகம்மற்றும்
ஆசிரியச் சுரிதகத்தின் அடிச்சிறுமை இவையேயாம்
அடிப்பெருமை பொதுவாகப் புலவருளம் எனவுரைப்பர்.

*****

ramaNi

unread,
Mar 19, 2013, 12:06:23 AM3/19/13
to santhav...@googlegroups.com
7.5. கலிப்பாவின் உறுப்புகள்
(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)

தரவு (பன்னிரண்டடி)
கலிப்பாவின் உறுப்புகளாய்க் குதிர்ந்துவரும் மூவிரண்டில்
ஒலித்துள்ளல் ஒலியகவல் ஒலிச்செப்பல் எழவருமே
தரவொன்றும் தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும்
உருவாகிப் பொதுவுறுப்பு எனவந்து இயல்வதுடன்
சிறப்புறுப்பாய்ச் சிலவகையில் அம்போதரங் கம்-அராகம்
உறுப்புகளும் இடைவந்து உவகைதர இயன்றிடுமே.
தருவதனால் முதலுறுப்பு தரவென்ற முகப்பாகும்
எருத்தமென்றும் பெயருடைய இவ்வுறுப்பு அளவடியில்
பெரும்பாலும் விளச்சீரும் காய்ச்சீரும் பெறவருமே
சிற்றெல்லை மூன்றடியும் பேரெல்லை பன்னிரண்டும்
பெற்றுவரும் தரவொன்றே பொதுவாக வந்தாலும்
அரிதாக இருதரவும் வருகின்ற கலியுண்டே.

[எருத்தம்=பிடரி]

தாழிசை
தாழிசையில் தரவைவிடக் குறைவடிகள் வரவேண்டும்
தாழிசையின் அடியெல்லை இரண்டுமுதல் நான்குவரை
தாழிசைகள் வழக்கத்தில் மூன்றல்லது ஆறுவரும்
தாழிசைகள் பன்னிரண்டு வரும்கலிகள் அரிதாமே. (1)

இசைதாழ்ந்து ஒலிப்பதனால் இதன்பெயரே தாழிசையாம்
இடைநிலைப் பாட்டென்றும் இவ்வுறுப்புப் பெயர்பெறுமே
இடைநின்று தரவின்பின் சுரிதகம்முன் வரும்தாழிசை
விடைதந்து தரவுரைக்கும் பொருள்விரித்துப் பாடிடுமே. (2)

தாழிசைகள் அடியெண்ணில் ஒத்துவரும் தம்முள்ளே
தாழிசைகள் அடுக்கிவந்து தரவழைத்த பொருள்விரிக்கும்
தரவதுவே தன்னளவில் தனிநபரை அழைப்பதென்றால்
வருபவன்கண் வினாக்கேட்டு விடையளிக்கும் தாழிசையே. (3)

அராகம் 
முடுகியல் அடிகளில் கடுகியே நடந்திடும்
அடுக்கியல் வண்ணகம் முடுக்கியல் எனப்படும்
அராகமே கருவிளம் பெரிதுமே பயின்றிடப்
பொருளினைப் புகழ்ந்து வருணணை யில்தரும். (1)

முடுகியல் என்றது முடுகிச் செல்வதால்
அடுக்கியல் என்றது சீர்களின் செறிவினால்
வண்ணகம் என்றது வருணனைப் புகழ்ச்சியால்
பண்ணினைக் குறித்திடும் ராகமே அராகமாம். (2)

அளவடி நெடிலடி கழிநெடி லடிகளில்
சிறுமையில் நான்கும் பெருமையில் எட்டென
அடிகளின் எல்லையில் இயன்றிட வருவதே
முடுகியல் அராகமாம் மூன்றாம் உறுப்பென. (3)

கருவிளச் சீர்களே பெரிதெனப் பயில்வதால்
குறில்களின் தொடர்ச்சியில் முடுகியல் நடந்திட
செறிந்திடும் சீர்களின் ஓசைச் சிறப்பினில்
விரைந்தே பொருளினை வருணிப்ப தராகமே. (4)

அம்போதரங்கம் 
(நாற்சீரீரடி: பேரெண்: 2)

அம்பென்றால் கடலாகும் தரங்கமே பேரலையாம்
அம்போ தரங்கம் கடலெழும் பேரலையாம்;

நாலசைச் சீர்ப்பெயராம் அம்-போ தரங்கமே
நேரோங்கி நிரைசுருங்கிக் கரைசேரும் அலையொக்கும்.

(நாற்சீரோரடி: அளவெண்: 4)
ஓரசை வருவதால் அசையடி இதன்பெயர்;
சீரே சொல்லெனச் சொற்சீ ரெனும்பெயர்;
குறளடி பயிவதால் பிரிந்திசைக் குறளாம்;
வரும்சீர் எண்களில் குறைவதால் எண்ணாம்.

(முச்சீர் ஓரடி: இடையெண்: 8)
நாற்சீர் ஈரடி இரண்டு;
நாற்சீர் ஓரடி நான்கு;
முச்சீர் ஓரடி எட்டு;
இருசீர் ஓரடி பதினாறு;
ஈரடி இரண்டும் பேரெண்;
ஓரடி நான்கும் அளவெண்;
ஓரடி எட்டும் இடையெண்;
ஓரடி பதினாறும் சிற்றெண்.

(இருசீர் ஓரடி: 16)
முதலில் பேரெண்;
அடுத்தது அளவெண்;
பின்னர் இடையெண்;
இறுதியில் சிற்றெண்;
தரவில் அறிமுகம்;
தாழிசை விரிப்பு;
அராகம் வர்ணணை;
அசையடி என்செயும்?
ஒன்றினைப் போற்றும்;
அருள்வது பேசும்;
உருவம் பேசும்;
அருவம் பேசும்;
பெருமை பேசும்;
வினைகள் பேசும்;
விளைவுகள் பேசும்;
வீரம் பேசும்;

தனிச்சொல் 
எனவாங்கு

சுரிதகம் (நேரிசை ஆசிரியச் சுரிதகம்)
சுரிதகம் முன்வரும் ஐந்தாம் உறுப்பாம்
பொருள்நிறை யொருசொல் தனிச்சொல் என்பது
விட்டிசை தனிநிலை தனிச்சீர் கூனென
இட்ட பெயர்கள் தாங்கிடும் தனிச்சொல்
இரண்டோ மேலோ சீர்கள் பெற்று
சுரிதகத் துடன்பிற உறுப்புகள் இணக்கும்.
விட்டு இசைக்கும் விட்டிசை அலகிட
ஒட்டாது செய்யுளில் கூனென நிற்குமே.
நீரது ஓடையில் ஓரிடம் நில்லாது
சார்ந்த இடத்தைச் சுரித்தும் சுழித்தும்
வருவது போலக் கலியொலி வராது
சுரிதகம் வெள்ளை அகவல் ஓசையில்
அகவல் வெண்பா அடிகளில் வந்து
தகவொரு பொருளைத் தாங்கி முடிப்பதில்
வெள்ளைச் சுரிதகம் ஈற்றடி சிந்தடி
நேரிசை யகவல் ஈற்றயல் சிந்தடியே.
வாரம் அடக்கியல் போக்கியல் வைப்பெனக்
காரணப் பெயர்கள் ஏற்கும் சுரிதகம்
தத்தம் பாவகை அடிகளும்
அத்தனை யளவே எல்லையும் பெறுமே.

*****

ramaNi

unread,
Apr 9, 2013, 8:46:53 AM4/9/13
to santhav...@googlegroups.com
7.6. கலிப்பாவின் வகைகள் 

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலிப்பாவே பொதுவாக மூவகையில் இயற்றப்படும்
ஒத்தாழிசைக் கலியென்றும் கொச்சகக் கலியென்றும்
வெண்கலிப் பாவென்றும் மூவகைகள் பெயர்பெறுமே
முதலிரண்டு வகைகளிலே துணைப்பிரிவு களுமுண்டு.
மூன்றுவகைப் பெயர்களுமே காரணக் குறியாகவே
சான்றோர்கள் அமைத்தனரே சால்புகளை விளக்கிடவே.

உறுப்பாலே பெயர்பெற்று அளவொன்றிற் குட்பட்டு
சிறப்பான பொருளொன்றை ஆழமாகச் சொல்வதாலும்
பொதுவான இலக்கணத்தில் ஆழமாக இசைத்தலாலும்
பொருளொன்றின் மேல்மூன்று தாழிசைகள் வருவதாலும்
ஒத்தாழிசை யைத்தனக்குச் சிறப்புறுப்பா(ய்) உடைத்தலாலும்
ஒத்தாழிசைக் கலியென்பது காரணக் குறியாகும்.

வெண்கலிப்பா வென்றவகை ஓசையாலே பெயர்பெறுமே
வெண்பாபோல் ஈற்றடியில் மூச்சீராய் இறுதலானும்
வெண்பாவிற் சிறுவேறாய்க் கலியோசை மிக்குவர
வெண்கலிப்பா காரணப் பெயர்பெற்று வருவதாகும்.

கொச்சகக் கலியென்பது பொருளாலே பெயர்பெறுமே
கொய்சகம் எனும்சொல்லே கொச்சகமென் றாயிற்று
கொய்சகம் எனச்சொன்னால் ஓரங்கொய்து சுருக்கப்பட்டு
புடவையெனப் பெண்மக்கள் உடுத்துகின்ற உடையாகும்
புடவையின் கொசுவம்போல் பிறழ்ந்துறழ்ந்து மிக்குறைந்து
கிடக்கின்ற உறுப்பாகி மாச்சீரகள் வருவதனால்
கலியோசை தடுமாறிக் கொச்சையெனச் சிறப்பழியும்
கலிவகைக்கே கொச்சகக் கலிகாரணப் பெயரானது.

ஒத்தாழிசைக் கலிப்பாவின் துணைப்பிரிவு மூன்றாகும்
நேரிசையொத் தாழிசை அம்போதரங்க வொத்தாழிசை
வண்ணகவொத் தாழிசை என்பனவித் துணைப்பிரிவு.
வெண்கலிப்பா ஒன்றேயாம் துணைப்பிரிவு எதுவுமின்றி.

தரவொன்றும் தரவிணையும் சிஃறாழிசை பஃறாழிசை
மயங்கிசை யென்றைந்து வகைகளிலே கலிப்பாவின்
உறுப்புகள் பெருகியும் அருகியும் மயங்கியும்
வருவனவே கொச்சகக் கலிப்பாவின் உட்பிரிவாம்.

ஒத்தாழிசைக் கலிமூன்று கொச்சகக் கலியைந்து
வெண்கலிப்பா வொன்றென்ற ஒன்பதான வகைகளுடன்
உறழ்கலிப்பா என்பதுமோர் வகையென்று உடன்சேர்த்து
மொத்தமாகக் கலிப்பாவில் பத்துவகை யென்றுரைப்பர்.

*****


Message has been deleted

ramaNi

unread,
Apr 20, 2013, 3:08:38 AM4/20/13
to santhav...@googlegroups.com
7.7. கலிப்பாவின் வகைகளின் துணைப்பிரிவுகள் 


(தரவுக் கொச்சகக் கலிப்பா)
நேரிசையம் போதரங்கம் வண்ணகவொத் தாழிசையாய்
சீரியமூ வகைகளென ஒத்தாழிசைக் கலியிலுண்டு
வெண்கலிப்பா ஒருவகையே கொச்சகமோ வகையைந்தென
பண்பறிந்த புலவர்கள் பகுத்தறிந்(து) உரைத்தனரே.

தரவுடனே தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும்
நிரலெனவே அளவுடைத்து நான்குறுப்பு வருவதாலும்
ஒலியினிலே உடன்பட்டுப் பொருள்நுண்மை உரைப்பதாலும்
கலிப்பாவின் வகைகளிலே கீர்த்திமிகக் கொள்வதாலும்
நேரிசையொத் தாழிசையே காரணக் குறியாகும்.

அழகுமிக ஒழுகிவந்து தரங்கமென வருவதாலும்
எழுந்துயர்ந்துச் சுருங்கிவந்து கரைதட்டும் கடலலைபோல்
அம்போத ரங்கமெனும் ஓருறுப்புப் பெறுவதாலும்
அம்போத ரங்கவொத் தாழிசையே காரணப்பேர்.

தேவரது விழுப்பமுடன் வேந்தரது புகழினையும்
பாவினிலே வருணிக்கும் பாட்டெனவே வருவதாலும்
வருகின்ற ஒலிதிரிந்து அராகத்தின் முடுகொலியில்
வருணணைகள் தொடர்ந்துவந்து புகழ்பேச அமைவதாலும்
வண்ணகவொத் தாழிசையே காரணக் குறியாகும்.

நேரிசையம் போதரங்கம் வண்ணகவொத் தாழிசையாய்
ஏனிந்த நிரல்தனிலே அமைந்ததுவோ எனக்கேட்டால்
ஒன்றுக்கொன் றோருறுப்பு மிகப்பெற்று வருவதால்தான்.
நேரிசையில் நான்குறுப்பு அம்போத ரங்கமைந்து
வண்ணகத்தில் அராகமுடன் வருவதுவே ஆறுறுப்பாம்.

முன்னியலில் சொன்னதுபோல் கொச்சகத்தில் ஐந்துவகை
தரவொன்றும் தரவிரண்டும் தாழிசைகள் சிலபலவும்
வருமாறு அவையமைந்து வண்ணங்கள் வேறுபடும்
மயங்கிசைக் கலிப்பாவில் கலியாறு உறுப்புகளே
மயங்கிவந்து பெருகிவந்து அருகிவந்து பிறழ்ந்துவந்து
இயன்மயங்கி வேற்றுப்பா இசைமயங்கி வந்துநிற்கும்.

*****



ramaNi

unread,
May 15, 2013, 11:28:51 PM5/15/13
to santhav...@googlegroups.com
7.8. நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா 


(தரவுக் கொச்சகக் கலிப்பா) 
தரவொன்றும் தாழிசைகள் மூன்றுடனே தனிச்சொல்லும்
சுரிதகமும் நிரலொன்றின் நேரிசையொத் தாழிசையாம்
நேரிசையொத் தாழிசையில் தரவினில்தா ழிசையினிலே
ஓரிசையாம் கலியோசை சீரியதாய்ப் பயின்றுவரும்
ஆசிரியச் சுரிதகத்தில் அகவலது ஓசைவரும்
வெண்பாவின் சுரிதகத்தில் செப்பலது ஓசைவரும்.

சான்று (ஆசிரியச் சுரிதகம்) 
கலித்தொகை: பாலைக்கலி 9
இயற்றியவர்: நல்லந்துவனார்

தரவு 
எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்பட சுவலசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும

தாழிசை 
காணே மல்லேம் கண்டனம் கடத்துஇடை
ஆணெழில் அண்ணலோடு அரும்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர்நீர் போறிர்

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கவை தாமென்செயும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவை தாமென்செயும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவை தாமென்செயும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே


தனிச்சொல் 
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியம்) 
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறம்தலைப் பிரியா ஆறும்மற் றதுவே.

கலிப்பாவில் இதன் பொருள் இன்றைய வழக்கில் 

தரவு 
எறித்திடும் கதிர்தாங்க ஏந்தியுள்ள குடைநிழலில்
உறியிட்ட கமண்டலமும் புகழ்பெற்ற முக்கோலும்
முறையாகத் தோள்தாங்க அறமொன்றே மனம்நினைத்து
பொறியைந்தும் மனமொடுக்கும் நெறிநிற்கும் அந்தணர்காள்!
வெம்மையான வனம்வழிச்செல் வழக்கத்தீர்! இவ்வழியே
என்மகளென் றொருத்தியும் பிறள்மகனென் றொருவனும்
தம்முள்ளமே களவுநின்று பிறரறிய வெளிப்போந்த
அன்னாரென் றிருவரை அறிவீரோ பெருமக்காள்?

தாழிசை 
காணவில்லை யென்றில்லை கண்டோம்நாம் காட்டுவழி
ஆணெழில் ஒருவனோடு அருங்காட்டில் செலத்துணிந்த
மாணிழைபூண் மடமகளின் தாய்போலத் தெரிகின்றீர்!

பலபொருள்சேர் நறுஞ்சாந்தம் பூசிடுவோர்க் கல்லாது
மலையினிலே பிறந்தாலும் மலைக்கென்ன பயனதனால்?
நிலையிதுவே நும்மகளின் நினைத்ததைநீர் பார்த்தாலே.

சீர்கெழுமிய வெண்முத்து அணியாவ தல்லாது
நீருள்ளே பிறந்தாலும் நீர்தனக்குப் பயனென்ன?
ஆராய்ந்து இதைநோக்கின் நும்மகளின் நிலையிதுவே.

ஏழ்நரம்பின் இன்னிசையே பாடுவோர்க் கல்லாது
யாழுள்ளே பிறந்தாலும் யாழுக்குப் பயனென்ன?
சூழ்ந்திதைநீர் உணர்ந்தாலே நும்மகளின் நிலைபுரியும்.


தனிச்சொல் 
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியம்) 
சிறந்த கற்பிது வருத்தம் கொளற்க
சிறந்தான் வழிபற்றிச் சென்றனள்
அறமிது இல்லற மாகுமென் றறிவீர்.

*****

வெண்கொற்றன்

unread,
May 16, 2013, 8:49:08 AM5/16/13
to santhav...@googlegroups.com
ஐயா,

அழகாய் மறுபதிப்பு செய்துவிட்டீர் பாடலை. எனக்குப் பிடித்த பாடல் இது! எனினும், மூலத்தில் /காணேம் அல்லேம்.../ என்று வருவதும் தரவிலேயே சேர்ந்துதான் வரும் என்று நினைக்கிறேன், அதைக் கொஞ்சம் சரி பார்த்துவிடுங்கள்...

/தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்/ என்று மூலம் இருக்க, கூடுதலாய் /பிறரறிய வெளிப்போந்த/ என்று தாங்கள் கூறுயிருப்பது பொருள் மாறுபாட்டை ஏற்படுத்தவில்லை என்றாலும், /தாமறி புணர்ச்சியர்/ என்று உட்குறிப்புடன் சொல்லும் நயம் சற்றுக் குறைந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்... [இதே போல், ”கண்டோம்” என்று சொல்லாது /காணேம் அல்லேம்/ என்று மொழிவதன் உட்குறிப்பும் உணர்ந்து இரசிக்கத்தக்கது இப்பாடலில்... அதை அழகாய் அமைத்துவிட்டீர்!]

சங்கப் பாடல்களை நயம் மாறாமல் மறுபடி அமைப்பது நல்ல முயற்சி...

நன்றி,

அன்புடன்,
விஜய் :-)

ramaNi

unread,
May 16, 2013, 11:33:10 PM5/16/13
to santhav...@googlegroups.com
வணக்கம் விஜய் அவர்களே.


>> அழகாய் மறுபதிப்பு செய்துவிட்டீர் பாடலை. எனக்குப் பிடித்த பாடல் இது!

உங்கள் பாராட்டு எனக்கு மகிழ்ச்சி.


எனினும், மூலத்தில் /காணேம் அல்லேம்.../ என்று வருவதும் தரவிலேயே சேர்ந்துதான் வரும் என்று நினைக்கிறேன், அதைக் கொஞ்சம் சரி பார்த்துவிடுங்கள்...

'A Reference Grammar of Classical English Poetry' by V.S.Rajam denotes as follows about tAzhisai (page 171):

"In any case, there can be one, two, three or four tAzhisai in a poem, and all the tAzhisai would focus on just one theme which is an expansion of what is introduced in the taravu." As an example, the research scholar quotes kalithtokai 106:34-36,37-39,40-42,43-45.

இந்தக் குறிப்பினால் நாம் மேலுள்ள கலித்தொகைப் பாட்டில் நான்கு தாழிசைகள் (ஒவ்வொன்றும் மூன்றடி ஒத்த எதுகையில்) வருவதாகக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

விக்கிபீடியாவில் தரவு பற்றிய கட்டுரையில் "சில கலிப்பாக்களில் இரண்டு தரவுகளும் காணப்படுவது உண்டு" என்றிருக்கிறது.
http://ta.wikipedia.org/wiki/தரவு_(யாப்பிலக்கணம்)
இதன்படி பாடலில் இரண்டு தரவுகள் வருவதாகக் கொள்ளலாம்.

சங்ககாலக் கலிப்பா வடிவம் பற்றிப் பெரியவர்கள் விளக்கினால் எல்லோர்க்கும் பயன்படும்.


>> /தம்முள்ளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்/ என்று மூலம் இருக்க, கூடுதலாய் /பிறரறிய வெளிப்போந்த/ என்று தாங்கள் கூறுயிருப்பது பொருள் மாறுபாட்டை ஏற்படுத்தவில்லை என்றாலும், /தாமறி புணர்ச்சியர்/ என்று உட்குறிப்புடன் சொல்லும் நயம் சற்றுக் குறைந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்...

ஏற்கனவே ’தம்முள்ளே புணர்ந்த’ என்று கூறப்பட்டுவிட்டதால் ’தாமறி புணர்ச்சியர்’ என்னும் சொற்றொடரில் ’தாம்’ என்பதற்கு ’அவர்களின் கூட்டம்’ என்று பொருள்கொள்ளப்படுகிறது:
http://learnsangamtamil.com/kalithokai/
http://www.tamilvu.org/slet/l1260/l1260pag.jsp?bookid=26&page=58

தவிர, பொதுவாக ஊரார் காதில் விழுந்துதானே இது தலைவியின் (செவிலித்) தாய்க்குத் தெரியவரும்? எனவே அவர்கள் களவுப் புணர்ச்சியை ஊரறிய நேர்ந்தபோது தாய் மறுத்ததால் இருவரும் ’கம்பி நீட்டிவிட்டனர்’ என்று கொள்ளலாம் அல்லவா?

அன்புடன்,
ரமணி

*****

Pas Pasupathy

unread,
May 17, 2013, 8:43:09 AM5/17/13
to santhav...@googlegroups.com
மர்ரே எஸ்.ராஜம் பதிப்பில், விஜய் குறிப்பிட்டபடி, அந்தப் பகுதி தரவுடன் சேர்ந்தே (11 அடிகள்) அச்சிடப் பட்டிருக்கிறது. 

‘அனையளே’ என்று முடியும் மூன்று பாடல்கள் தனித்தனியாய் அச்சிடப் பட்டுள்ளன.
 




2013/5/16 ramaNi <sai...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

ramaNi

unread,
May 17, 2013, 9:51:36 PM5/17/13
to santhav...@googlegroups.com
வணக்கம் பேரா.பசுபதி அவர்களே.

மர்ரே பதிப்பகத்தின் மின்புத்தகம் TVU வலைதளத்தில் உள்ளது. அதில் தரவு, தாழிசைப் பிரிவுகளைக் காட்டாது தொடர்ச்சியாவே முதல் இருபது அடிகள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. அச்சுப் பதிப்பில் இந்தப் பிரிவுகள் காட்டப் பட்டுள்ளனவா? கங்கை புத்தகாலயம் வெளியிட்ட புலியூர்க் கேசிகன் உரை என்னிடம் உள்ளது. அதிலும் பாகுபாடுகள் இன்றித் தொடர்ச்சியாகவே அடிகள் பதிப்பிக்க்ப் பட்டுள்ளன.
http://www.tamilvu.org/library/l1260/html/l1260ind.htm

அதே சமயம் அந்த வலைதளத்தில் நச்சினார்க்கினியர் உரையில், இந்தப் பாட்டில் ஒரு எட்டடித் தரவும், நான்கு மூன்றடித் தாழிசைகளும் தெளிவாக, அடியெண்கள் மூலம் காட்டப்பட்டுள்ளன:
http://www.tamilvu.org/slet/l1260/l1260pag.jsp?page=56&bookid=26


அன்புடன்,
ரமணி



Pas Pasupathy

unread,
May 18, 2013, 8:42:32 AM5/18/13
to santhav...@googlegroups.com


>>அச்சுப் பதிப்பில் இந்தப் பிரிவுகள் காட்டப் பட்டுள்ளனவா?>>

ஆம். 

>>அதே சமயம் அந்த வலைதளத்தில் நச்சினார்க்கினியர் உரையில், >>இந்தப் பாட்டில் ஒரு எட்டடித் தரவும், நான்கு மூன்றடித் தாழிசைகளும் >>தெளிவாக, அடியெண்கள் மூலம் காட்டப்பட்டுள்ளன:
http://www.tamilvu.org/slet/l1260/l1260pag.jsp?page=56&bookid=26


நீங்கள் கொடுத்த மேற்கண்ட உரையில் தெளிவாக 11-ஆம் அடிக்குக் கீழே “இது தரவு” என்றும், 

பிறகு, “ இவை மூன்றும் தாழிசை” என்றும் 

இருக்கிறதே? பார்த்தீர்களா? 

நச்சினார்க்கினியரின் உரையைப் படித்தபின் எனக்கு  எந்த ஐயமும் இல்லை..... 11 அடி தரவு + 3 தாழிசைகள் என்பதைப் பற்றி.  மேலும், ஐயமிருந்தால் கேளுங்கள். ஆராயலாம்.




2013/5/17 ramaNi <sai...@gmail.com>

ramaNi

unread,
May 18, 2013, 9:57:01 PM5/18/13
to santhav...@googlegroups.com
வணக்கம் பேரா.பசுபதி அவர்களே.

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் நச்சினார்க்கினியர் உரையினுள் பார்க்காமல், அடிகளுக்கு இடப்பட்ட எண்களை (9என்று, 10-க்குப் பதிலாக) வைத்தும், அந்த மூன்றடி-ஓரெதுகைகளை வைத்தும் முடிவுகட்டிவிட்டேன்.

கலிப்பா பற்றி சில சந்தேகங்கள்:
1. தாழிசைகள் மூன்று அல்லது ஆறுதான் வரவேண்டுமா? இடைப்பட்ட எண்களில் தாழிசை வரும் கலிப்பாக்கால் ஏதேனும் இருக்கின்றனவா?
2. தரவு-தாழிசை அடிகளுக்கு ஏதேனும் எதுகை அமைப்பு முறை இருக்கிறதா?
3. கலிப்பாக்கள் பொதுவாக இசையுடன் பாடத் தக்கவை, இசையால்தான் அதற்கு அந்த அமைப்பு என்று எங்கோ படித்த ஞானகம். இது பற்றி உங்கள் கருத்து?
4. தமிழ்ப் பா வடிவங்களின் வரலாறு அறிய ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?


அன்புடன்,
ரமணி

*****


Pas Pasupathy

unread,
May 19, 2013, 11:44:59 AM5/19/13
to santhav...@googlegroups.com

>>கலிப்பா பற்றி சில சந்தேகங்கள்:
>>1. தாழிசைகள் மூன்று அல்லது ஆறுதான் வரவேண்டுமா? இடைப்பட்ட >>எண்களில் தாழிசை வரும் கலிப்பாக்கால் ஏதேனும் இருக்கின்றனவா?

சில ஆண்டுகளுக்கு முன் யாப்பிலக்கணக் கட்டுரைகளை நான் எழுதும்போதும், பிறகு என் நூலுக்கு அவற்றைத் தொகுக்கும்போதும் தான் நான் கலிப்பாப் பற்றிப் படித்தேன். இப்போது சற்று நினைவு படுத்திக் கொண்டு விடை அளிக்கத் தாமதம் ஆகும்.

ஒவ்வொரு கேள்வியாகப் பார்க்கிறேன்.
( உங்களிடம் என் நூல் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதிலும் 
சில தகவல்கள் இருக்கலாம்.) 


நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் மூன்றே மூன்று தாழிசைகள் தாம் வரலாம்.

பஃறாழிசைக் கொச்சகத்தில் பெரும்பாலும் ஆறு தாழிசைகள் தாம் வரும். 12 தாழிசைகள் கொண்ட சில கலிப்பாக்கள் உண்டு என்று ஓர் இலக்கண நூலில் படித்திருக்கிறேன்.ஆனால் அவற்றைப் பார்த்ததில்லை. 4,5 போன்ற எண்களைக் கொண்ட தாழிசைகள் வந்து நான் பார்த்ததில்லை.



2013/5/18 ramaNi <sai...@gmail.com>
வணக்கம் பேரா.பசுபதி அவர்களே.

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் நச்சினார்க்கினியர் உரையினுள் பார்க்காமல், அடிகளுக்கு இடப்பட்ட எண்களை (9என்று, 10-க்குப் பதிலாக) வைத்தும், அந்த மூன்றடி-ஓரெதுகைகளை வைத்தும் முடிவுகட்டிவிட்டேன்.

கலிப்பா பற்றி சில சந்தேகங்கள்:
1. தாழிசைகள் மூன்று அல்லது ஆறுதான் வரவேண்டுமா? இடைப்பட்ட எண்களில் தாழிசை வரும் கலிப்பாக்கால் ஏதேனும் இருக்கின்றனவா?
2. தரவு-தாழிசை அடிகளுக்கு ஏதேனும் எதுகை அமைப்பு முறை இருக்கிறதா?
3. கலிப்பாக்கள் பொதுவாக இசையுடன் பாடத் தக்கவை, இசையால்தான் அதற்கு அந்த அமைப்பு என்று எங்கோ படித்த ஞானகம். இது பற்றி உங்கள் கருத்து?
4. தமிழ்ப் பா வடிவங்களின் வரலாறு அறிய ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?


அன்புடன்,
ரமணி

*****



Pas Pasupathy

unread,
May 21, 2013, 11:48:50 AM5/21/13
to santhav...@googlegroups.com
>>2. தரவு-தாழிசை அடிகளுக்கு ஏதேனும் எதுகை அமைப்பு முறை >>இருக்கிறதா?

நாம் எளிதில் யூகீக்கக் கூடிய எதுகை அமைப்பு முறைகள் தாம்.
இலக்கியக் காட்டுகளைப் பார்த்தாலே எவை ஓசைச் சிறப்பைக் கொடுக்கின்றன என்பது தெரியும். எல்லாச் செய்யுள்களுக்கும் ஓசைச் சிறப்பைக் கொடுக்கும் பொதுவான பரிந்துரைகள் தாம். 

உதாரணமாக,மூன்றடித் தரவாய் இருந்தால் ஒரே எதுகை இருந்தால் அழகு.

பல அடிகளாய் இருந்தால், இரண்டிரண்டு அடிகளுக்கு ஓர் எதுகை இருந்தால் நலம்  நாம் நன்கு அறிந்தவை தாமே? 

எல்லாத் தாழிசைகளின் ஈற்றுச் சீர்களுக்குள் உள்ள ஒரு படிவம்/பாட்டெர்ன்(pattern) தான் விசேஷம் என்று தோன்றுகிறது.

காட்டுகள்: 
ஒரே வார்த்தையாக இருக்கலாம். ( அனையளே ; இதிலிருந்தே எவை தாழிசைகள் என்றும் கண்டு பிடிக்கலாம்) 

அல்லது இயைபு 

ஆயினை, கூறினை 

அருளாமோ? காதலோ? தகுதியோ? 

இலக்கியக் காட்டுகளே நமக்கு இலக்கணக் காட்டுகள். 




2013/5/18 ramaNi <sai...@gmail.com>
வணக்கம் பேரா.பசுபதி அவர்களே.

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. நான் நச்சினார்க்கினியர் உரையினுள் பார்க்காமல், அடிகளுக்கு இடப்பட்ட எண்களை (9என்று, 10-க்குப் பதிலாக) வைத்தும், அந்த மூன்றடி-ஓரெதுகைகளை வைத்தும் முடிவுகட்டிவிட்டேன்.

கலிப்பா பற்றி சில சந்தேகங்கள்:
1. தாழிசைகள் மூன்று அல்லது ஆறுதான் வரவேண்டுமா? இடைப்பட்ட எண்களில் தாழிசை வரும் கலிப்பாக்கால் ஏதேனும் இருக்கின்றனவா?
2. தரவு-தாழிசை அடிகளுக்கு ஏதேனும் எதுகை அமைப்பு முறை இருக்கிறதா?
3. கலிப்பாக்கள் பொதுவாக இசையுடன் பாடத் தக்கவை, இசையால்தான் அதற்கு அந்த அமைப்பு என்று எங்கோ படித்த ஞானகம். இது பற்றி உங்கள் கருத்து?
4. தமிழ்ப் பா வடிவங்களின் வரலாறு அறிய ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?


அன்புடன்,
ரமணி

*****



 

Pas Pasupathy

unread,
May 23, 2013, 8:20:51 PM5/23/13
to santhav...@googlegroups.com
>>3. கலிப்பாக்கள் பொதுவாக இசையுடன் பாடத் தக்கவை, இசையால்தான் அதற்கு அந்த >>அமைப்பு என்று எங்கோ படித்த ஞானகம். இது பற்றி உங்கள் கருத்து?

இதுதான் ஆய்வாளர்களின் முடிவு. ‘இசை’ என்ற சொல் தாழிசையில் வருதல்,  மூன்று முறை சொல்லுதல், நாடகப் பாங்கில் இருக்கும் பல கலிப்பாக்கள்.... இப்படிப் பலவற்றை ஆதாரமாகச் சொல்வர்.  முன்பு கலிப்பா எப்படிப் பாடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் , தற்கால இசை வளர்ச்சியில் இது போன்ற பாக்களுக்கு இசை அமைப்பது சிறிதும் கடினமில்லை. 

>>4. தமிழ்ப் பா வடிவங்களின் வரலாறு அறிய ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?

ஒரே நூலில் நான் படித்ததில்லை. பல நூல்களில் சிதறி உள்ளது.
ஓர் உதாரணம் “ தமிழின் பா வடிவங்கள்” முனைவர் அ.சண்முகதாஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; இலக்கண நூல்களிலும் வரலாறு ஒளிந்திருக்கும். தொல்காப்பியம் படித்துப் பின் யாப்பருங்கலம் படித்தாலே வரலாறு கொஞ்சம் புரியும்.  என் நூலில் கொடுத்துள்ள துணை நூல்கள் பட்டியலில் உள்ள எல்லா நூல்களுமே சிறிது சிறிது வரலாறு சொல்லும். மேலும் தேடினால் அத்தகைய ஒரே நூல் கிடைக்கலாம்.



2013/5/21 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

2013/5/18 ramaNi <sai...@gmail.com>

கலிப்பா பற்றி சில சந்தேகங்கள்:
1. தாழிசைகள் மூன்று அல்லது ஆறுதான் வரவேண்டுமா? இடைப்பட்ட எண்களில் தாழிசை வரும் கலிப்பாக்கால் ஏதேனும் இருக்கின்றனவா?
2. தரவு-தாழிசை அடிகளுக்கு ஏதேனும் எதுகை அமைப்பு முறை இருக்கிறதா?
3. கலிப்பாக்கள் பொதுவாக இசையுடன் பாடத் தக்கவை, இசையால்தான் அதற்கு அந்த அமைப்பு என்று எங்கோ படித்த ஞானகம். இது பற்றி உங்கள் கருத்து?
4. தமிழ்ப் பா வடிவங்களின் வரலாறு அறிய ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?


அன்புடன்,
ரமணி

*****


ramaNi

unread,
Jun 1, 2013, 6:48:31 AM6/1/13
to santhav...@googlegroups.com
அன்புடையீர் வணக்கம்!

உங்கள் அலுவல்களுக் கிடையில் நேரம் எடுத்துக்கொண்டு என் கேள்விகளுக்கு பதில் கூறி விளக்கங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி. விளக்கங்கள் எனக்கு மிகவும் பயன்படும்.


அன்புடன்,
ரமணி


Reply all
Reply to author
Forward
0 new messages