Kaviyarangam-30- Vedham Thalaimai

113 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Jul 9, 2009, 12:46:59 PM7/9/09
to santhavasantham, arsvedhammanian
நண்பர்களே!
 வணக்கம்.நாளை மிக நல்ல நாள்.வெள்ளிக்கிழமை-10-ஆம் தேதி.
யான் பிறந்ததும் 10-ஆம் தேதியே.’ஜம்’ மென்று ஒளிப்பவனிவரும் சூரிய ராசி எனச் சொல்வர். நியூமராலஜி பிரகாரம்.அன்று நம் புதிய கவியரங்கம் என் தலைமையில்
தொடங்க இருக்கிறது. அது அற்்புதமாக அமையப்போகிறது, உங்கள் அனைவரின் இனிய ஒத்துழைப்பினால்.வேதத் தலைமை வெல்லும் தலைமை,என்று நம் இழைத் தலைவர் இலந்தையாரும், வேதத்தின் அரங்கமென்றும் வெல்லத்தின் மொந்தையென்று நம் தம்பி ஹரி...யும் முன்பொருமுறை சொல்லியிருக்கிறார்கள்.அந்த நம்பிக்கையை இன்றும் மெய்ப்பிப்போமாக!என் குரு ஸ்ரீ பாபாஜி அருள் என்றும் எனக்குத்துணையிருக்கிறது.
 இக்கவியரங்கு-எண்-30-இல் வரிசையாக தேன் பொங்கு சொற்் கவிமாலையை தமிழன்னைக்குச் சூட்டப்போகிறவர்கள் வருமாறு;-
கவிமாமணி இலந்தை,ஒரு சஸ்பென்ஸ் அன்பர், மற்ற கவிஞர்கள்-நிரஞ்சன் பாரதி,சுதாவேதம்,சுந்தர்சுப்ரமண்யம்,தங்கமணி அம்மை,ஹரி கி்ருஷ்ணன்(ஹரியண்ணா),சிவாசிவா(நியூ ஜெர்ஸி),பாரதி எழிலவன்,நடராஜன் சீனிவாஸன்,அகிலா ராமசாமி,என் நெருங்கிய நண்பர்்(அன்புஆதரவாளர்)அநந்த்்,
அருள்சௌந்தரம் மிக்க கவி சௌந்தர்..ஆகிய 13 பேர்..இதுவரை பெயர் தந்தனர்..
 ஆரம்பித்ததும் ஆசைப்படுவோர்கள் யாரும் பேர் கொடுக்கலாம்.என் அன்பர் மதுரபாரதி, அந்த கானடாச் சஹோதரி.... போன்றவர்களும் பாடப் (பேறு) பெயர் கொடுக்குமாறு மிக அன்புடன் இவண் வேண்டுகோள் விடுக்கிறேன்.,
நன்றி..மேற்கண்ட அனைவரும் என் தனிமடலுக்கு இலந்தையார் கேட்டபடி தத்தம்பையோடேட்டா தந்தனர். அவர்க்கெலாம் தனி நன்றி.
..ம்..ம்..இதோ நல்ல நாதஸ்வரம் ஊதுகிறது!..காதில் தவில் முழக்கம் கனக்கிறது!
தோரணம் கட்டியாச்சு! தூவுவோமா கவிப்பூஞ்சொற்கள்?்!
 யோகியார்
(பி.கு.--யாரும் தனி இழையில் கவி தொடுக்காதீர்!இதே இழையையே பயன் படுத்துக! ஆனால்தான் கடைசியில் அப்படியே அரங்கமாலையை சந்த வசந்த(கழுத்தில்)த்தில்போட
சௌகரியமாயிருக்கும்..சரியா?)



2009/6/22 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
அடுத்த கவியரங்கம்-எண்30
 
தலைவர்- கவியோகி, கவிமாமணி வேதம்
தலைப்பு: உயர உயர. .
நாள்:  10ஜூலை 2009
 
புதிய கவிஞர்கள் தங்கள் விவரங்களைக் கவியோகிக்கு நேரடியாக அனுப்பினால் அவர் அழைக்க ஏதுவாக இருக்கும்.
 
முதல் ஒப்புதல்- இலந்தை
 
அனைவரும் வாழ்க நம் குருஜி சித்தர் பாபாஜி அருளால்!

Kaviyogi Vedham

unread,
Jul 9, 2009, 3:43:49 PM7/9/09
to santhavasantham
சந்தவசந்தக் கவியரங்கம்-எண்30
*******************(கவியோகி வேதம்)
தலைமைக்கவிதை!-
%%%%%%%%%%%%%%%%%%%
சந்தவசந்-தஅன்பர்களே! சரிகைக் கருத்(து)இழையை
சொந்தக் கவிப்”பட்டில்” சூடி நெய்பவரே!
..
கற்பனைக் காட்டினிலே கருங்குயில்போல் சஞ்சரித்தே
சொற்’பத’ அடவுகளால் சொக்கிவிழ வைப்பவரே!
..
நல்லநல்ல அறிவுரையை ‘உயரஉயர’-தலைப்பென்னும்
வெல்லப்-ப ணியாரத்தில் விதந்து தருவோரே!
..
வாருங்கள் இங்கே! வரிசையாய்த் தாருங்கள்!
சாரமுள(எண்) முப்பதில் சன்னதம் படையுங்கள்!
..
முப்பதுக் கிங்கே மூப்பே கிடையாது!
ஒப்பில்லா அமுதத்தால் ஒருபல்லும் வீழாது!
..
விண்மீன் கண்சிமிட்டி வான்வெளிச்சம் குறையாது!
துண்டாகும் வைரங்கள் துருப்பிடித்துப் போகாது!
..
 இதோ.!
சன்னல் அருகமர்ந்து கணினியிலே தட்டுகின்றேன்!
மின்னல் வரிகளெல்லாம் வேய்ந்துவரக் கொட்டுகின்றேன்!
..
சன்னல்வழி பார்த்தாலோ, *மேப்பிள்’இலை சாய்ந்தாடும்!--(*கானடாவின் தேசீயமரம்)
பின்னலென சவுக்குமரம் பீரங்கிக் குண்(டு)அசைக்கும்!
..
ஆம்!
வற்றாத கிளையெங்கும் வரிசையாய்(மும்) மூன்றுகாய்!
நெற்றிக்கண் சிவனை-அவை நினைவுக்குக் கொண்டுவரும்!
சுற்றியுள ‘ஆவுடையை’ச் சூழ்ந்து யார்பறித்தார்?
முற்றிமுற்றி லிங்கம்மட்டும் மூச்சுவிடா தழுகிறதே!
..
என்றே சொல்லுமாப்போல் காய்கள்சுற்றி பிசின்சொட்டும்!
தன்னிரக்கம் கொண்டுநான் தடவிப் பார்த்தேன்!
..
அவ்வளவே! பிசினோடு அவையெல்லாம் விரல்பற்றிக்
கவ்வியே சொல்லிற்று:- “திருடா!நீ..கவியா?”
(நேற்றுஅவை மகன்.‘காரில்’ நெடுகச் சொட்டியபின்
துடைத்தாலும் போகாமல் துளைவிழுந்தே பெரும்தொல்லை!*(When he parked his car at night
under that Amerikkan "savukku' tree)
..
என்றாலும் மரத்தின்கீழ் எழில்குடைகள் போல்படர்ந்த
இம்பேஷண்ட்’* செடிகளையோ இணைந்துநிற்கும் மலர்களையோ...(*Impatient' plants)
..
பிசின்ஒன்றும் செய்யலையே!’பிரம்மனின்’ அதிசயமோ..?!
அசைக்கஒண்ணாச் ’சூக்கும’த்தின் அநியாய லீலை-இதோ?
..
சரி..விடுங்கள்!
தலைப்புக்கே வந்திடுவோம் தள்ளாடாக் கவிஞர்களே!
மலைத்துநின்றால் கற்பனையும் மண்டைக்குள் வந்திடுமோ?
...--
உயர!உயர!
&&&&&&&&&&&&
மேகம் உயரும்,மழை இறங்கும்!
..மின்னல் உயரும், எழில்இறங்கும்!
தோகை’ உயரும்,’பெடை’ கிறங்கும்!
..தூண்கள் உயர, ‘வழி’ படியும்!
வாகை’ உயர, வேர் இறங்கும்!
..மணமும் ஓங்கும்,மொட்(டு)உயர!
சாகும் முன்,மனிதன் உயர்ந்தால்,
..சரித்தி ரமேஉ யர்ந்திடாதோ?!
..
(வேறு..)
சொல்லை உயர்த்திச் சுடரைப் பதுக்கிச்
...சூத்திரம் நெய்யும் கவிஞர்களே!
கல்லைச் செதுக்கி உருவம் புதுக்கிக்
..கற்பனை செய்யும் சிற்பிகளே!
தொல்லை தந்திடேன் தலைப்புள் புகுந்தே!
..’தூள்’கி ளப்பிப் போடுங்களே!
இல்லை எனும்சொல் பாட்டில் இலையென
..எழுந்தே அரங்கில் பாடுங்களே!
(தலைமைக் கவியுரை ‘பிசின்(ர்?) இன்றி முடிந்திற்று!)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 இனி, முதற்கவிஞர் கவிமாமணி,சந்தத் தமிழ்க்கடல் இலந்தை.. அவர்கள்!




Hari Krishnan

unread,
Jul 10, 2009, 12:04:21 AM7/10/09
to santhav...@googlegroups.com


2009/7/9 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

தங்கமணி அம்மை,ஹரி கி்ருஷ்ணன்(ஹரியண்ணா),


ஆகாகா அடடாடா அற்புதம் அற்புதம்.  யான் எனது நோட்டுப்புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டேன். :-))

தங்கமணிக்கு அம்மையா?  நல்ல திடகாத்திரமா மாரியம்மன் பாத்துப்பா.  அம்மையெல்லாம் போட்டாதீங்க அரங்கத் தலைவரே!

அப்புறம் இன்னொண்ணு.  அடியேனை கடைசிப் பந்தியில் அழைக்குமாறு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.  அடியேன். தாஸோஹம்.  (நகுபோலியரே! எல்லாம் சகவாச தோஷம்தான்!  நான் அதே வரகூர் சங்க்ருதி கூட்டத்தவன்தான்.....என் நெத்தியில் எப்பவும் போடுவதைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன்!)

அட்டகாசம் அட்டகாசம்!  அற்புதம் அற்புதம்!  யான் ஆனந்தமாய் ரசிக்கிறேன்!  தொடருங்கள் மறையரே!
--
அன்புடன்,
ஹரிகி.

Kaviyogi Vedham

unread,
Jul 10, 2009, 8:17:55 AM7/10/09
to santhav...@googlegroups.com
அப்படியே செய்துவிடுவோம் ஹரீ!..என் கவிதையை நன்கு ரசித்துப் பாராட்டியமைக்கு
 மெத்த நன்றி ஹரீ!..ஆம் இதைத்தான் விசாலமனதுடைய உன்னிடமிருந்துஎதிர்பார்த்தேன்...பேஷ்! பேஷ்!அழகுறக்களிக்கிறாய்! வாழ்க உன் இலக்கிய தாகம்!
யோகியார்

2009/7/9 Hari Krishnan <hari.har...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Kaviyogi Vedham

unread,
Jul 10, 2009, 12:13:04 PM7/10/09
to santhav...@googlegroups.com
முதல்அழைப்பு- கவிமாமணி சந்தத்தமிழ்க்கடல் இலந்தை அவர்கள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சந்தம் என்றால் இவர்க்(கு)அல்வா;
..சாந்தம் முகத்தில் தவழ்ந்திடவே
எந்தக் கவியும் படித்திடுவார்;
..எதிலும் இவர்க்கு வெற்றிமகள்
தந்தக் கன்னம் இழைத்திழைத்து
..சரம்போல் முத்தம் கொடுத்திடுவாள்;
சொந்தம் கொண்டார் பலநூல்கள்!
..சூறா வளியாய் உயர்ந்திங்கே
..
சொற்கள் பின்ன கருத்துமுகில்
..சுநாதக் குரலில் தாளமிட
வெற்றுத் தீமை பயந்தோட
..வீர   ‘நன்மை ’ஆர்ப்பரிக்க
சுற்றம் சூழ கவிஞரெல்லாம்
..  ‘சொந்தம் இலந்தை நமக்(கு)’என்றே
கற்கண் டாக வாழ்த்துசொல
..கவிதை சொல்வார்்! கேட்போமா?

 இலந்தையாரே! பாதருவீர் இனிக்க!
 யோகியார்

Siva Siva

unread,
Jul 10, 2009, 7:36:27 PM7/10/09
to santhav...@googlegroups.com
சவுக்கடியில் பெற்ற பாடல் நன்று!  :)

செடியின் பெயர் 'Impatiens' என்றிருந்திருக்கவேண்டும் என எண்ணுகிறேன். (http://en.wikipedia.org/wiki/Impatiens)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/7/9 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jul 11, 2009, 2:46:04 AM7/11/09
to சந்தவசந்தம்
இயற்கையினில் உயர்வுதனை ஏற்கின்ற உணர்வுடனே
செயற்கரிய செயல்வேட்கும் செம்மைகவி யோகிவாழ்க!

அன்புடன்,
தங்கமணி.

Raja.Tyagarajan

unread,
Jul 11, 2009, 6:46:48 AM7/11/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள யோகியார் அவர்கட்கும்,
சந்தவசந்தம் அன்பர்கட்கும், இலந்தையார் அவர்கட்கும்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
தலைமைக் கவிதை - கன்னலுறுங் கற்கண்டுக் கவிதை!
---------------------------------------------------------------
ஒன்று யர்ந்தா லொன்றிறகும்
            உன்ன தத்தை உயர்த்துகின்ற
அன்பு  வழி யோகியவர்
            அழகு தமிழ் கொஞ்சுகின்ற 
கன்ன லுறுங் கற்பனையாம்
            கவியு ரையின் நயங்கண்டே
 இன்னி தழால் தமிழுரைக்கும்
            அருள ரசன் மயங்குகிறேன்!
  ------------------------------------------
இன்னிதழ் = புதுச்சேரி மின்னிதழ்
கன்னலுறுங் கற்பனை = கரும்பின் சாறனைய கற்பனை
அருளரசன் = ஈகவரசன்= தியாகராசன்
 
இவண்
இராச.தியாகராசன்
----- Original Message -----

Raja.Tyagarajan

unread,
Jul 11, 2009, 6:51:34 AM7/11/09
to santhav...@googlegroups.com
சிறு திருத்தம்
 
தலைமைக் கவிதை - கன்னலுறுங் கற்கண்டுக் கவிதை!
---------------------------------------------------------------
ஒன்று யர்ந்தா லொன்றிறங்கும்
            உன்ன தத்தை உயர்த்துகின்ற
அன்பு  வழி யோகியவர்
            அழகு தமிழ் கொஞ்சுகின்ற 
கன்ன லுறுங் கற்பனையாம்
            கவியு ரையின் நயங்கண்டே
 இன்னி தழால் தமிழுரைக்கும்
            அருள ரசன் மயங்குகிறேன்

SUBBAIER RAMASAMI

unread,
Jul 11, 2009, 9:59:42 AM7/11/09
to santhav...@googlegroups.com

துண்டாகும் வைரங்கள் துருப்பிடித்துப் போகாவாம்

கொண்டாடும் வகையினிலே கொடிபிடித்தார் நம் வேதம்

தலைமைக் கவிதையிலே தான்தொட்டார் தொட்டபெட்டா

கலையழகு கொஞ்சுமக் கவிதையினைப் போற்றுகிறேன்

 

இலந்தை



2009/7/10 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 11, 2009, 10:01:05 AM7/11/09
to santhav...@googlegroups.com
தலைமைக் கவியை மிகரசித்து
..தாரா ளமாகப் புகழ்ந்துநிற்கும்
அலைசூழ்ப் புதுச்சே ரிக்கவிஞர்
..அரசர் தியாகு வாழ்கவாழ்க!
..
குழுமத் தலைவர் இலந்தையவர்
..கொஞ்சும் பாட்டை எதிர்பார்த்து
பழுக்கப் போகும் வாழையைப்போல்
..பதமாய் ஏங்கி நிற்கின்றோம்!
இழுக்கும் இரவும் பகல்விழுங்கி
..இன்பம் பார்க்க விரும்புவதை
மழைபோல் சந்தம் சொரிகின்ற
..மனம்ஏன் இன்னும் அறியவில்லை?
--- கருணை கொள்க கவி.இலந்தை..!
யோகியார்


2009/7/11 Raja.Tyagarajan <thia...@dataone.in>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

SUBBAIER RAMASAMI

unread,
Jul 11, 2009, 11:14:52 AM7/11/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள வேதம்,
 
இரண்டு நாட்களாக 'இண்டெர்நெட்' இழுபறி. . நேற்று இரவு வீட்டு மின்சார மெயினில் நியூட்ரல் எரிந்துவிட்டதால் இரண்டு மடங்கு  வோல்ட்டேஜுக்கு எகிறி மின்விசிறி அசுரவேகத்தில் ஒட டியூப் லைட் வெடிக்க ஒரே களேபரம்.
கெட்டதிலும் ஒரு நல்லதாக, இங்கே லோவோல்டேஜாக இருப்பதால் இரண்டு மடங்கு 440க்குப் பதிலாக 280க்குள் இருந்ததால் கம்ப்யூட்டர், டி.வி ஃப்ரிட்ஜ் ஆகியவை பழுதூபடாமல் உடனே காப்பாற்ற முடிந்தது.
சரியான வோல்டேஜ் (220) இருந்திருந்தால் எல்லாம் 'பணாலாகியிருக்கும்.
இந்த இக்கட்டுக்கு இடையில் தான்  கவிதை எழுதினேன். அதை அடுத்த இடுகையில் இடுகிறேன்.
 
இலந்தை

2009/7/11 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 11, 2009, 12:20:18 PM7/11/09
to santhav...@googlegroups.com
ஓகோகோ! அப்படியா?வருந்துகிறேன். நல்லவேளை ஒரு ஆபத்தும் இல்லையென நீவிர் சொன்னதும் ஆறுதலாயிருந்தது.இடுகைஇரு கையால் இடுக..
 விரைவில் இலந்தையின் பாகுக் கவிதை
 இரைதரும்!-- நெஞ்சே! இரு!
யோகியார்்

2009/7/11 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Jul 11, 2009, 5:48:47 PM7/11/09
to santhav...@googlegroups.com

போகமும் யோகம் என்ற

      புதுவழி காட்டு வித்தே

யோகியாய் இருக்கும் எங்கள்

      உத்தமக் கவிஞர் இங்கே

ஏகமாய்க் கவிதை மாரி

      இதமுடன் பெய்துவிட்டார்

தாகமும் தணிந்தோம் வேதத்

தலைமக்கென் நல்வணக்கம்!

 

 

பாராட்டு கின்றநற் பண்பாளர் தீங்கவிதைத்

தேரோட்டம் கொள்ளும்வே தம்.

 
இலந்தை
 
உயர , உயர..

பறவையே, வானத்தின் உறவையே நாடியே

      பறக்கின்ற எழிலூர்தியே

      பரவிய வான்வெளி விரிவதன் வீச்சிலே

      பயணங்கள் செய்நேர்த்தியே

குறியையும் மண்ணிலே உறுதியாய் நாட்டியே

      கொண்டாட்டம் கொள்ளுகின்றாய்

      குத்திய பார்வையில் கொத்திய இரையினைக்

      கும்பியில் தள்ளுகின்றாய்

குறைபடும் வாழ்விலே சிறைபடும் நானிங்கு

      குந்தியே மேல்பார்க்கிறேன்

      கும்பிக்கு வேண்டியே தம்பிக்கும் போட்டியில்

      கூத்தாடி நான்வாழ்கிறேன்

அறிவெனும் தறியிலே அடிபடும் நானிங்கே

      ஆகாயம் காண வேண்டும்

      ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனை

      ஆற்றுப்படுத்துவாயே!

 

எல்லைகள் உனக்கெதும் தொல்லைகள் இல்லையே

      இடம்மாறிச் செல்லுகின்றாய்

      இத்தேசம் அத்தேசம் என்கின்ற தடைகளை

      எளிதிலே வெல்லுகின்றாய்

வல்லைநீ, உன்னைநான் வாழ்த்துவேன் வாயுவின்

      மாசக்தி பெற்றுளாய்நீ

      வான்வெளி நீச்சலும் மாகடல் பாய்ச்சலும்

      வகையுடன் கற்றுளாய்நீ

நல்லைநீ ஆகிட நானுமோர் வாய்ப்பினை

      நல்குவேன் உன்றனக்கு,

      நாளெலாம் தரையிலே வாளா யிருக்கின்ற

      நானுனை வேண்டுகின்றேன்

ஒல்லையிவ் வான்வெளி உயரப் பறந்திந்த

உலகினைப் பார்க்க வேண்டும்

உத்திநீ என்றனின் புத்தியில் சேர்த்தருள்

ஒருகோடி வந்தனங்கள்!

 

மண்ணிலே வந்ததும் எண்ணியே நாட்களை

      வாளாக் கழிப்பதற்கா?

      வாதுக்கும் வம்புக்கும் வாய்க்கத்தி வீச்சுக்கும்

      மாறியே வேர்ப்பதற்கா?

எண்ணிலாச் சிகரங்கள்  ஏறியே பார்த்திட

      எத்தனை ஆசைகொண்டேன்

      ஏறியே ஏறியே ஏறியே செல்கிறேன்

      எதுவழி தோன்றவில்லை.

 

 

 

 

கண்ணிலே காண்கிறேன் வண்ணங்கள் ஆயிரம்

      கவர்ச்சியில் மயங்கிவிட்டேன்

      காதங்கள் ஒருநூறு கால்களில் சேர்த்திடும்

      கடமையில் தயங்கிவிட்டேன்

விண்ணிலே காண்கின்ற நட்சத்திரங்களை

      வேடிக்கை பார்க்க வேண்டும்

      மேகத்தின் மேலேயும்  உயரங்கள் காண்கின்ற

      வித்தகம் சேர்க்க வேண்டும்

 

 

உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்

      உயரங்கள் காணவேண்டும்

      உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்

      உன்னதம் பேணவேண்டும்

அள்ளிடும் கவிதையில் ஆனந்தம் ஆனந்தம்

      அடுத்தடுத்(து) உயரவேண்டும்.

      அதனையும் கொள்பவர் எதனையும் விஞ்சிடும்

      ஆனந்தம் கொள்ளவேண்டும்

எள்ளலும் போற்றுதல் விள்ளலும் ஒன்றென

      இதமுடன் ஏற்கவேண்டும்

      இதனையே உயரத்தின் உயரமாய் எண்ணுவேன்

      ஈடிதற் கில்லை யென்பேன்!

தெள்ளரும் செந்தமிழ்ச் செல்வியே, தெய்வமே

      தேனிசைக் கலைவாணியே,

      தீர்க்கமாய் ஓர்மொழி சொல்லுக ‘வெல்கநீ

      வெல்கநீ, வெல்க’ வென்றே!

     

     

ஆதார முலத்தில் அடங்கிக் கிடக்கின்ற

      அரவமே கண்விழிப்பாய்

      அடுத்தடுத்(து) உயருவாய் அமுதமே பெய்குவாய்

      அங்கங்கு நீநடிப்பாய்

காதோரம் ஓரொலி கணகண என்றிடும்

      கண்களில் வண்ணமூட்டம்

      கறங்கிடும் வளையங்கள் கழன்றிடும் நினைவுகள்

      கட்டிலே மனத்தினோட்டம்

ஏதோவோர் நாளிலே எங்கேயோ ஒர்தூளி

      எட்டியே பார்த்ததுண்டு

      இன்பத்தின் எல்லைக்கே ஏதோவோர் கவிதையும்

      இழுத்துவந் தார்த்ததுண்டு

ஓதாமல் உணராமல் ஒழுகாமல் இதுவரை

      ஒருவாறிங்(கு) ஓட்டிவிட்டேன்

      ஒன்றையும் கருதாமல் தெய்வமே, ஆதாரம்

      உயரவே செய்தருளுவாய்!

 

இலந்தை

11-10-2009

 



2009/7/11 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Jul 11, 2009, 6:52:52 PM7/11/09
to santhav...@googlegroups.com
Pl see the poem in pdf format with pictures

2009/7/12 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
uyara uyara.pdf

Soundar

unread,
Jul 11, 2009, 7:34:00 PM7/11/09
to santhav...@googlegroups.com
நல்ல கருத்து.

நான் ரசித்த வரிகள்


எள்ளலும் போற்றுதல் விள்ளலும் ஒன்றென
      இதமுடன் ஏற்கவேண்டும்
      இதனையே உயரத்தின் உயரமாய் எண்ணுவேன்
      ஈடிதற் கில்லை யென்பேன்!
-----------------------------------------------------

பாதையில் முட்களும் பரல்களும் பரவியே
. . பழியென காத்திருக்கப்
. . பதவியும் வாங்கிய பட்டமும் வாழ்க்கையில்
. . பக்குவம் தருவ துண்டோ?
பேதையாம் மனத்திலே  வேதனை  ஆயிரம்
. . பேதங்கள் கணக்கி லுண்டோ?
. . பெருமைகள் உயரவே  பேரெலாம் நிலைக்கவே
. . பெரியதோர் மனந்தான்  வேண்டும்.
சீதமும்  உஷ்ணமும் பேதமாய்க் கொள்வது
. . பேதைமை  என்று சொல்லும்
. . சீரிய தத்துவம் சிறக்கவே  வரைந்தனர்
. . சிறந்தநற் பாவி னுள்ளே!
கீதையின் தத்துவம் குறிப்பினால் உணர்த்திடும்
. . கீதமாய்ப் பாடி வந்தே
. . கிறங்கிடும் ஓசையில் கிளர்ந்தெழும் எண்ணமே
. . கேட்டிடும் வரங்க  ளென்றார்.

சௌந்தர்

2009/7/11 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

T.Raguveeradayal

unread,
Jul 11, 2009, 7:34:42 PM7/11/09
to santhav...@googlegroups.com
ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனை

      ஆற்றுப்படுத்துவாயே!


வாகாகவே வேயெனை --- இங்கு "வே" இரட்டித்திருப்பது எதற்காக ? அல்லது தட்டச்சுப் பிழையா? 

Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com


2009/7/12 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Siva Siva

unread,
Jul 11, 2009, 8:12:06 PM7/11/09
to santhav...@googlegroups.com

பல அடிகளில் சீர்களிடையே எதுகை அமைந்த ஒலிநயம் மிகுந்த பாடல்.

// உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்
....உயரங்கள் காணவேண்டும்
....உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்
....உன்னதம் பேணவேண்டும் //



நல்ல கருத்து.

முதல் பாடலில் எழிலூர்தியே, செய்நேர்த்தியே, என்பன போல் கொள்ளுகின்றாய், தள்ளுகின்றாய் என்பனவற்றையும் கொள்கின்றனை, தள்ளுகின்றனை, எனக் கனிச்சீராக அமைத்திருக்கலாமோ?

"வாளா யிருக்கின்ற" - 'வாளாவிருக்கின்ற' என்றிருக்கவேண்டுமோ?



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/11 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

srinivasan s

unread,
Jul 11, 2009, 8:26:50 PM7/11/09
to santhav...@googlegroups.com
மூங்கிலைப் போல் என்னையும் வானத்தில் உயர்த்திடுமாறு வேண்டுகிறார். இதுதான் அந்த வரிகளுக்குப் பொருள்.
அடியேன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்

 

T.Raguveeradayal

unread,
Jul 11, 2009, 9:46:32 PM7/11/09
to santhav...@googlegroups.com
நன்றி. மந்த புத்தி. இப்போது அழககப் புரிகிறது.

Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com


2009/7/12 srinivasan s <vasan...@gmail.com>

srinivasan s

unread,
Jul 11, 2009, 10:18:25 PM7/11/09
to santhav...@googlegroups.com
எந்த விதத்திலும் தாங்கள் அடியேனை விடக் குறைந்தவரில்லை. அடியேன் தான் மிகவும் தாழ்ந்தவன். தங்களிடமிருந்து அடியேன் கற்றது மலையளவு என்பதை மறுக்க முடியாது.
அன்புடன்
தாஸானு தாஸன்
அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கும் அடியன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்.

 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 11, 2009, 11:13:28 PM7/11/09
to santhav...@googlegroups.com

வானில் பறந்திடும் புள்ளினம் போல மகிழ்ந்திட ஆவல்கொண்டார் - அதை
.. வாழும் முறையில் அடைவதற் குவரம் வாணியைக் கேட்டுநின்றார்

தேனில் அமிழ்ந்த பலாச்சுளை போலவே தித்திக்கும் பாடலிலே -என்
.. சிந்தை யிழந்து செயல் மறந்தேன் ஒரு தெய்வக் கவிதையிது
 

அனந்த்

பி.கு. .. ’ஏறியே செல்கிறேன் எதுவழி தோன்றவில்லை’ - எதுவழி தெரியவில்லை எனலாமோ?

2009/7/11 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Niranjan bharathi

unread,
Jul 12, 2009, 1:30:21 AM7/12/09
to santhav...@googlegroups.com

மதிப்பிற்குரிய திரு இலந்தை அவர்களுக்கு,

தங்களைப் புகழ எனக்கு வயதும் இல்லை தகுதியும் இல்லை.


"உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்

      உயரங்கள் காணவேண்டும்

      உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்

      உன்னதம் பேணவேண்டும்"




நான் மிகவும் ரசித்த வரிகள்.

அன்புடன்,
நிரஞ்சன்





2009/7/12 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Niranjan bharathi

unread,
Jul 12, 2009, 1:41:34 AM7/12/09
to santhav...@googlegroups.com

".....ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனை

      ஆற்றுப்படுத்துவாயே!"




இந்த வரிகளில் எனக்கென்னவோ தட்டச்சு பிழை தான் நேர்ந்ததாகத் தோன்றுகிறது.

ஏனெனில் கவிஞர் பறவையிடம் "எப்போதும் மண்ணிலேயே இருக்கும் என்னை உயரத்தில்(ஆகாயத்தில்) இருத்தி என் தாகத்தை ஆற்றுப்படுத்துவாயாக" என்று வேண்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இதில் மூங்கில் என்ற உவமை எனக்குப் புரியவில்லை.

அடியேன் சொல்வதில் பிழையிருந்தால் மன்னித்து கருத்தைத் தெளிவிக்குமாறு திரு. இலந்தை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.



அன்புடன்,
நிரஞ்சன்




2009/7/12 Niranjan bharathi <niranjan...@gmail.com>

T.Raguveeradayal

unread,
Jul 12, 2009, 2:17:56 AM7/12/09
to santhav...@googlegroups.com
இப்போதுதான் மீண்டும் படித்தேன். அன்பில் ஸ்வாமி சொல்வதுபோலக் கொண்டால்  அது  "வேயென" என்று இருந்தால் சரி. ஆனால் "வேயெனை" என்று இருக்கிறது.இலந்தையார் விளக்க வேணும்.

Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com


2009/7/12 Niranjan bharathi <niranjan...@gmail.com>

thangamani

unread,
Jul 12, 2009, 2:23:04 AM7/12/09
to சந்தவசந்தம்
நான் ரசிக்கும் கவிவரிகள்...

//மண்ணிலே வந்ததும் எண்ணியே நாட்களை


வாளாக் கழிப்பதற்கா?
வாதுக்கும் வம்புக்கும் வாய்க்கத்தி வீச்சுக்கும்

மாறியே வேர்ப்பதற்கா?//

//உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்


உயரங்கள் காணவேண்டும்
உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்

உன்னதம் பேணவேண்டும் //

எள்ளலும் போற்றலும் எளிதாக ஒன்றென்னும்
உள்ளமே உயரத்தின் உச்சியென்ற இலந்தைவெல்க!

அன்புடன்,
தங்கமணி.


On Jul 11, 2:48 pm, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
> போகமும் யோகம் என்ற...
>
> read more »


>
>       புதுவழி காட்டு வித்தே
>
> யோகியாய் இருக்கும் எங்கள்
>
>       உத்தமக் கவிஞர் இங்கே
>
> ஏகமாய்க் கவிதை மாரி
>
>       இதமுடன் பெய்துவிட்டார்
>
> தாகமும் தணிந்தோம் வேதத்
>
> தலைமக்கென் நல்வணக்கம்!
>
> பாராட்டு கின்றநற் பண்பாளர் தீங்கவிதைத்
>
> தேரோட்டம் கொள்ளும்வே தம்.

> **
> இலந்தை
> **
> *உயர , உயர.. *

> 2009/7/11 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>


>
>
>
> > ஓகோகோ! அப்படியா?வருந்துகிறேன். நல்லவேளை ஒரு ஆபத்தும் இல்லையென நீவிர்
> > சொன்னதும் ஆறுதலாயிருந்தது.இடுகைஇரு கையால் இடுக..
> >  விரைவில் இலந்தையின் பாகுக் கவிதை
> >  இரைதரும்!-- நெஞ்சே! இரு!
> > யோகியார்்
>

> > 2009/7/11 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
> >  அன்புள்ள வேதம்,
>
> >> இரண்டு நாட்களாக 'இண்டெர்நெட்' இழுபறி. . நேற்று இரவு வீட்டு மின்சார
> >> மெயினில் நியூட்ரல் எரிந்துவிட்டதால் இரண்டு மடங்கு  வோல்ட்டேஜுக்கு எகிறி
> >> மின்விசிறி அசுரவேகத்தில் ஒட டியூப் லைட் வெடிக்க ஒரே களேபரம்.
> >> கெட்டதிலும் ஒரு நல்லதாக, இங்கே லோவோல்டேஜாக இருப்பதால் இரண்டு மடங்கு
> >> 440க்குப் பதிலாக 280க்குள் இருந்ததால் கம்ப்யூட்டர், டி.வி ஃப்ரிட்ஜ் ஆகியவை
> >> பழுதூபடாமல் உடனே காப்பாற்ற முடிந்தது.
> >> சரியான வோல்டேஜ் (220) இருந்திருந்தால் எல்லாம் 'பணாலாகியிருக்கும்.
> >> இந்த இக்கட்டுக்கு இடையில் தான்  கவிதை எழுதினேன். அதை அடுத்த இடுகையில்
> >> இடுகிறேன்.
>
> >> இலந்தை
>

> >> 2009/7/11 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>- Hide quoted text -
>
> - Show quoted text -

srinivasan s

unread,
Jul 12, 2009, 3:14:13 AM7/12/09
to santhav...@googlegroups.com
வேயெனை --  வேய் + எனை = மூங்கிலான என்னை என்று பொருள் கொள்ள வேண்டும்.
அன்பில் ஸ்ரீனிவாஸன்

 

SUBBAIER RAMASAMI

unread,
Jul 12, 2009, 6:17:14 AM7/12/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள நிரஞ்சன்,
 
அன்புள்ள நிரஞ்சன்,
 
தட்டச்சுப் பிழைதான். ஆகாய ஊர்தியே வாகாக வேயெனை
ஆற்றுப்படுத்துவாயே என்றுதான் இருக்கவேண்டும்.
 
மூங்கிலுக்கு இங்கே இடமில்லை.
 
பிழையைச் சுட்டியமைக்கு நன்றி.
 
இலந்தை

2009/7/12 Niranjan bharathi <niranjan...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Jul 12, 2009, 6:30:09 AM7/12/09
to santhav...@googlegroups.com
உடம்படு மெய் வரும் பொழுது யகரம் வகரம் இரண்டுக்கும் இடமுண்டு.
 
சில உய
2009/7/12 Siva Siva <naya...@gmail.com>

பல அடிகளில் சீர்களிடையே எதுகை அமைந்த ஒலிநயம் மிகுந்த பாடல்.

// உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்


....உயரங்கள் காணவேண்டும்
....உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்
....உன்னதம் பேணவேண்டும் //


நல்ல கருத்து.

முதல் பாடலில் எழிலூர்தியே, செய்நேர்த்தியே, என்பன போல் கொள்ளுகின்றாய், தள்ளுகின்றாய் என்பனவற்றையும் கொள்கின்றனை, தள்ளுகின்றனை, எனக் கனிச்சீராக அமைத்திருக்கலாமோ?

"வாளா யிருக்கின்ற" - 'வாளாவிருக்கின்ற' என்றிருக்கவேண்டுமோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

சிவ சிவா கேள்விகளுக்கு நன்றி

உடம்படு மெய்யில் யகரம் வகரம் இரண்டுக்கும் இடமுண்டு. சில உயிர்களுக்கு வகரமும் வேறு சிலவற்றிற்கு யகரமும் வரும் என்று சொல்கிறவர்களும் உண்டு.

 எ.கா :கோ+இல் என்பதைக்  கோயில்  கோவில் என்று இரண்டு வகையாக எழுதுகிறோம். ஆனால் கோவில்தான் சரி என்று தேர்ந்த இலக்கணப் புலவர்கள் சொல்கிறார்கள்.

 

கொள்கின்றனை என்பது சரியாக இருக்கும் ஆனால் தள்ளுகின்றனை என்னும் போது ஓசை கூடிவிடும்.

 

இலந்தை

SUBBAIER RAMASAMI

unread,
Jul 12, 2009, 6:38:28 AM7/12/09
to santhav...@googlegroups.com
வேதத்
தலைமக்கென்  என்பதை வேதத் தலைமைக்கென் என மாற்றிக்கொள்ளவும். தலை மக்கு என்று தலைவரைச் சொல்லக்கூடாதல்லவா/ 
அச்சுப்பிழைக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
 
இலந்தை
 
2009/7/12 Niranjan bharathi <niranjan...@gmail.com>

".....ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனை

Kaviyogi Vedham

unread,
Jul 12, 2009, 10:33:45 AM7/12/09
to santhav...@googlegroups.com, arsvedhammanian
அற்புதக் கவிமாமணி இலந்தையின் கவி பற்றி
*************************************
போகத்தில் ’யோகம்’சொன்ன என்னைப் புகழ்ந்துசொல்லி
தாகம் தீர்க்கின்ற தனதுகவி பொழிந்தார்!
அழகு, மிக அழகு என்பது தவிர யான்போய்
இழைந்திங்கே என்னசொல்ல? எத்தனை நல்வரிகள்!!
..
””மேகத்தின் மேலும்(உயரம்)போய் வித்தகம் பார்க்கவேணும்!”
ஆதார மூ லத்தில்அடங்கு-அரவம் கண் விழிக்க..!
எனச்சொல்லி ‘யோகத்தின்’ சூட்சுமம் நவின்றார்!
அடுத்தடுத்து உயர்சக்கரத்தில்*(-6chakras)அமுதமே பெய்குவாய்!
ஆதாரம்(*Moolaadhara chakram) உயரவே ஆண்டவா! அருள்செய்வாய்!””-
என்றுகவி் அமுதுபெய்தே என்னைப் பரவசம்
 கொளச்செய்த முதற்கவியே குமர்’அருளால் வாழ்கவாழ்க!
எனச்சொல்லி வாழ்த்தியே இனிவரும் கவிஞரையே(பசுபதி..)
அரங்கேறி உயர்ந்து உயர’ப்பா தரச்சொல்வேன்!
..
இதோ இன்னொரு அதிசயக்கவி ‘பசுபதி’
கவியரங் கேறி கன்னலாய்க் கவிபொழிவார்!
..
நண்பர் பசுபதியே! நம்பக்கம் வருகவே!
இன்சொல் பாகுபெய்து இன்னொரு பணியாரம்..?
.
இனி. பசுபதிபற்றி இன்னொரு இழையில்..!
%%%%%%%%%%%%%%%(யோகியார்)””

2009/7/11 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
________.......................................???
 **************************************************************(இலந்தை..)

      அனைவரும் வாழ்க நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Kaviyogi Vedham

unread,
Jul 12, 2009, 10:35:25 AM7/12/09
to santhav...@googlegroups.com
அஹ்..ஹஹ்ஹா!...அதுவா உண்மை..?!!(யோகியார்)

2009/7/12 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

akila ramasami

unread,
Jul 12, 2009, 12:24:56 PM7/12/09
to santhav...@googlegroups.com

குறைபடும் வாழ்விலே சிறைபடும் நானிங்கு

      குந்தியே மேல்பார்க்கிறேன்

      கும்பிக்கு வேண்டியே தம்பிக்கும் போட்டியில்

      கூத்தாடி நான்வாழ்கிறேன்

 
 
வாழ்க்கை சொல்லும் வைர வரிகள்.
அன்புடன்
அகிலா ராமசாமி.

2009/7/12 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 12, 2009, 1:51:01 PM7/12/09
to santhav...@googlegroups.com
2009/7/12 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 12, 2009, 2:22:38 PM7/12/09
to santhav...@googlegroups.com, arsvedhammanian
அன்பர் டாக்டர் கவிஞர் பசுபதி;-(கானடா)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சென்னையிலே  பட்டம் பெற்றார்;
..டொறோண்டோவில் சேவை செய்தார்;
முன்னைப்ப ழம்பொருள் “டிஜிடலில்’
..மூவாத ஆய்வு பண்ணி
தென்னையைப்போல் மிக,மிக் குயர்ந்தே
..தெங்கிள-வி ருதெலாம் பெற்றே
இன்னமும்வா லிபம்த தும்ப
..எல்லோர்க்கும் உதவும் “பசுபதி”!
..
விஞ்ஞானம்,சங்கீதம்,’கவிகள்”-என்றே
..விதவிதமாய் வித்தகங்கள் பெற்று,-இவர்,
அஞ்ஞானம் போக்குகிற  இலக்கியத்தில்,
..அழகுறவே நுழைந்தாரே!..ஆய்வுசெய்வார்,
மெய்ஞ்ஞானம் தருகிறநற் கவிநுட்பம்
..மின்னிடத்தான் தனியிழையில் கற்பிப்பார்!
‘சொய்’ என்றே தோசைசுடு மாப்போல்,-நாம்
..தொடர்ந்துயர உயர்கவியிங்(கு) இடுவாரே!
..
பசுபதீ! வருக! பரவசம் தருக!
*************************(யோகியார்)



..

Pas Pasupathy

unread,
Jul 12, 2009, 3:28:33 PM7/12/09
to santhav...@googlegroups.com

அவை வணக்கம்
============

நேச வசந்தக் கவிஞர்களை,
. நீலாங் கரைவாழ் தலைவர்தமை,
வீசம் அறிவில் லாஅடியேன்
. மெத்த வணங்கித் தொடங்கிடுவேன்.
ஈசன் கருணை கிடைத்திடுமோ?
. இடுகை கவியாய் மாறிடுமோ?
வாசிப் போர்கள் என்குறைகள்
. மன்னித் தருள வேண்டுகிறேன்


தலைவர் வாழ்த்து
===============
உவமை பிளிறும் கவிவேழம்,
. உணர்ச்சி அவரின் காண்டீபம்;
நவமாய்ப் பாடற் கருவமைத்து
. நகையும் தெளிக்கும் மாமணியார்;
கவிதைப் பரிசு பெற்றகுறுங்
. காவ்யம் படைத்த கவியோகி;
தவமார் 'அன்னை சக்தியில்ல'த்
. தலைவர் வேதம் வாழியவே!


அரங்கக் கவிதை
============
உயர ! உயர !
<><><><><><>

'உயர்வென்றால் எவரெஸ்டு; அதனைத் தவிர்த்தால்
. உனையுந்தும் இலக்(கு)உலகில் இல்லை! இல்லை!' -- என்று
அயராதே! சரிவுள்ள வாழ்க்கைக் குன்றில்
. அனைவர்க்கும் ஒருசிகரம் உண்டு! உண்டு!                    (1)

எல்லையற்ற வானம்நம் முன்னே விரிய
. இசைப்புள்கள் பறக்குதுபார், உயர! உயர! -- அதுபோல்
எல்லோரும் அகச்சிறகை அடித்தே உயர்ந்தால்
. எட்டாத விண்ணுண்டோ? ஜெயமே! ஜெயமே!                 (2)

உயர்வென்னும் உன்னதம் எதுவோ என்றுன்
. உள்ளத்தைத் தட்டின்அது சொல்லும்! சொல்லும்! -- சிறிதும்
தயங்காமல் நம்பிக்கைச் சிறகை விரித்துத்
. தனிவானில் பறந்திடுவாய், உயர! உயர!                       (3)

வெற்றிமங்கை அரவணைப்பை விரும்பு வோருள்
. வினைத்திட்பம் கொண்டவர்கள் உண்டு! உண்டு!   -- அவர்தம்
உற்சாகத் துளிர்கள்மேல் நிறைய வெந்நீர்
. ஊற்றிடுவோர் உலகினிலே உண்டு! உண்டு!                    (4)

"உயரத்தில் பறந்தாலும் சின்னஞ் சிறிய
. ஊர்க்குருவி பருந்தாமோ? சொல்லு! சொல்லு!" -- என்றுன்
செயம்நாடும் ஊக்கத்தைச் சிதைத்தே விடுவார்!
. சிகரங்கள் உன்கண்முன் சாயும்! சாயும்!                       (5)

"பக்கத்தில் நிற்பவனின் பாதம் அடியே
. பள்ளமொன்று பறித்தால்நீ உயர்வாய்! உயர்வாய்!" -- என்று
வக்கிரமாய்ப் பரிந்துரைப்போர் சொல்லைக் காதில்
. வாங்காதே வாழ்வினிலே, என்றும்! என்றும்!                     (6)

பயனுள்ள அறிவுரைக்கா நாட்டில் பஞ்சம்?
. பழங்கதையும் உதவிடுமே கொஞ்சம்! கொஞ்சம்!  -- நீயும்
தயங்கிநின்ற அனுமானைத் தட்டிக் கொடுத்த
. ஜாம்பவனை நினைத்தெழுவாய், உயர! உயர!                   (7)

விழுவதுண்டு நெடிதுயர்ந்த வலிய மரங்கள்
. வீசிடுமோர் புயல்காற்றில் கீழே! கீழே! -- ஆனால்
தழைந்துநிற்கும் நாணலுமே அந்தப் புயலில்
. தலைவணங்கிப் பின்நிமிரும் உயர! உயர!                      (8)

பணிவுள்ள வாமனன்போல் இன்றுன் வெற்றிப்
. பயணத்தைத் தொடங்கிவிடு தம்பி! தம்பி!  -- பின்பு
மணிவண்ணன் உலகளக்க மாறி யதுபோல்
. வளர்ந்திடுவாய் விக்ரமனாய் உயர! உயர!                      (9)

'வெள்ளத்த னையதுமலர் நீட்டம் மாந்தர்
. உள்ளத்த னையதுயர்வு' கேளீர்! கேளீர்!  -- அந்த                    
வள்ளுவனின் மணிமொழியை நாமும் வாழ்வில்
. மறக்காமல் கடைபிடிப்போம்! வாரீர்! வாரீர்!                    (10) 

~*~*~<><>~*~*~

2009/7/12 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>



--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

ananth

unread,
Jul 12, 2009, 5:16:29 PM7/12/09
to சந்தவசந்தம்
*மருமஅன்பர் எனநமது தலைவர் மறைத்த
பெருமைமிகு பசுபதியார் வந்தார் வந்தார் - மிக
அருமைமிகு கவிதையிலே உயரும் அறிவை
அழகுடனே நமக்கின்று தந்தார் தந்தார்

(*கவியோகியார் இட்ட கவிஞர் பட்டியலில் ‘ஒரு சஸ்பென்ஸ் அன்பர்’ எனக்
குறிப்பிடப்பட்டவர!்)

அனந்த்
12-7-2009

> 2009/7/12 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>


>
>
>
>
>
> > அன்பர் டாக்டர் கவிஞர் பசுபதி;-(கானடா)
> > $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
> > சென்னையிலே  பட்டம் பெற்றார்;
> > ..டொறோண்டோவில் சேவை செய்தார்;
> > முன்னைப்ப ழம்பொருள் “டிஜிடலில்’
> > ..மூவாத ஆய்வு பண்ணி
> > தென்னையைப்போல் மிக,மிக் குயர்ந்தே
> > ..தெங்கிள-வி ருதெலாம் பெற்றே
> > இன்னமும்வா லிபம்த தும்ப
> > ..எல்லோர்க்கும் உதவும் “பசுபதி”!
> > ..
> > விஞ்ஞானம்,சங்கீதம்,’கவிகள்”-என்றே
> > ..விதவிதமாய் வித்தகங்கள் பெற்று,-இவர்,
> > அஞ்ஞானம் போக்குகிற  இலக்கியத்தில்,
> > ..அழகுறவே நுழைந்தாரே!..ஆய்வுசெய்வார்,
> > மெய்ஞ்ஞானம் தருகிறநற் கவிநுட்பம்
> > ..மின்னிடத்தான் தனியிழையில் கற்பிப்பார்!
> > ‘சொய்’ என்றே தோசைசுடு மாப்போல்,-நாம்
> > ..தொடர்ந்துயர உயர்கவியிங்(கு) இடுவாரே!
> > ..
> > பசுபதீ! வருக! பரவசம் தருக!
> > *************************(யோகியார்)
>
> --
>

> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagam- Hide quoted text -

T.Raguveeradayal

unread,
Jul 12, 2009, 6:09:52 PM7/12/09
to santhav...@googlegroups.com
"எல்லோரும் அகச்சிறகை அடித்தே உயர்ந்தால்
. எட்டாத விண்ணுண்டோ? ஜெயமே! ஜெயமே!                 (2) உயர்வென்னும் உன்னதம் எதுவோ என்றுன்
. உள்ளத்தைத் தட்டின்அது சொல்லும்! சொல்லும்! -- சிறிதும்
தயங்காமல் நம்பிக்கைச் சிறகை விரித்துத்
. தனிவானில் பறந்திடுவாய், உயர! உயர! "   

ஆஹா ! வடக்கு நோக்கி நமஸ்கரிக்கின்றேன்! இங்கே அழைத்து வந்த அன்பு நிறை 'அன்பிலார்' திசை நோக்கி!!

"பக்கத்தில் நிற்பவனின் பாதம் அடியே
. பள்ளமொன்று பறித்தால்நீ உயர்வாய்! உயர்வாய்!" -- என்று
வக்கிரமாய்ப் பரிந்துரைப்போர்" --- இந்திய நாட்டிலே இவர்கள் பெயர் அரசியல்வாதிகள்
Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com


2009/7/13 ananth <gan...@gmail.com>

Soundar

unread,
Jul 12, 2009, 7:49:16 PM7/12/09
to santhav...@googlegroups.com
வலிமிக்க அவுணன்முன் குறளும் அந்நாள்
. . வளர்ந்திட்ட நெடுமாலாய்த் தோன்றும் தோன்றும்
நிலத்தினிலே ஆழ்ந்ததொரு வித்தும் ஓர்நாள்
. . நெடிதுயரும்  தருவொன்றாய் மாறும் மாறும்
சலியாத முயற்சியொன்றே    உயர்வை  நல்கும்
. . தலைவணங்கும் நாணல்தான் வாழும் வாழும்
நலமிக்க அறிவுரைகள் அள்ளித் தேறும்
. . நாவலரின் கவிவரிகள் ஓங்கும் ஓங்கும்

சௌந்தர்


2009/7/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

K.R. Kumar

unread,
Jul 12, 2009, 8:41:34 PM7/12/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள பசுபதி சார்,
 
உயர உயர சிறப்பான கண்ணோட்டம் !! உயர உயர சீர் மிகு அறிவுறைகள்.!!
 
நன்றி. வாழ்த்துகள்,
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/7/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 12, 2009, 9:20:50 PM7/12/09
to santhav...@googlegroups.com, arsvedh...@gmail.com
கவிஞர் பசுபதிக்குப் பாராட்டு;--
***************************
உருவ கங்கள் பலகோத்தே
..உயரம்’் சொல்லில் வைத்தாரே!
மருமக் கவிஞர் பசுபதியார்,
..மனத்தை அழகாய்த்் தொட்டாரே!..
(ஆம்!)-
“_- சரிவுள வாழ்க்கைக் குன்றில்சி கரமுமுண்டே!”
“ அக’ச்சிறகை அடித்தால்தான் உயரத்தை அடைந்திடலாம்!”
-”அனுமானை ஊக்கியஜாம் பவானைநீ அகம்கொள்வாய்!!”
நாணலுமே புயல்முன்பு வணங்கிப்பின் எழவிலையா?(சொல் சுருக்கினேன்..மன்னிக்க))
..
போன்றபல தத்துவங்கள் பொன் நகைபோல் அணிவித்தார்!
சான்றுகள் பலகாட்டி சரிகையையும் புகழவைத்தார்!
..
இப்படியே வாழ்க்கையிலும் ஏறுமுகம் கடைப்பிடித்து,.
ஒப்பில்லாப் பட்டம்பல உயர்ந்துநின்று பெற்றாரோ?
..
வளைந்(து)’,உயர்ந்தே மூப்பில்லா வாலிபத்தை அடைந்தாரோ?...-
முளைக்கும்என் கற்பனைக்கு முத்தங்கள் தந்துநிற்கும்
..
நண்பர் பசுபதிக்கு நன்றிபல சொல்கின்றேன்!
நண்பர் நிரஞ்சனையான்(கவி) நலங்கு(உ)ருட்டச் சொல்லும்முன்
..
ரசிகர்நீர் இவ்விழையில் ரமித்துப்பா ராட்டுங்கள்!
கசிந்துவந்தால்தான்தேன்..கலத்திற்கே வரமுடியும்!
..
உங்களது (புகழ்)உரையால்தான் கவிகட்கே உணர்ச்சிவரும்!
தங்களது கைவிரல்கள் (கணினி) தட்டிநின்றால் மரக்காது!
..
புகழ்ந்துசொன்னால் மனம்’உயரும்; பொந்துக்குள் முடங்குகிற
நகமில்லா ஒருபாம்பு நல்லஇரை பிடிக்காது!
..
புரிகிறதா நண்பர்களே? தாராளம் காட்டுங்கள்!..(பாராட்டு..)
வரிகளின்பின்(தான்!) அடுத்தவரை வக்கணையாய் இங்கழைப்பேன்!
&&&&&&&&&&&&&&&&&(யோகியார்)

 
2009/7/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

SUBBAIER RAMASAMI

unread,
Jul 12, 2009, 9:34:46 PM7/12/09
to santhav...@googlegroups.com

என்றன் கவிதை தனைப்பற்றி

      எழுத நினைத்த பெரியோர்க்கும்

நன்றே கருத்துச் சொன்னோர்க்கும்

      நன்றி நெஞ்சால் சொல்லுகிறேன்

 

இலந்தை

        
2009/7/12 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

வானில் பறந்திடும் புள்ளினம் போல மகிழ்ந்திட ஆவல்கொண்டார் - அதை
.. வாழும் முறையில் அடைவதற் குவரம் வாணியைக் கேட்டுநின்றார்

தேனில் அமிழ்ந்த பலாச்சுளை போலவே தித்திக்கும் பாடலிலே -என்
.. சிந்தை யிழந்து செயல் மறந்தேன் ஒரு தெய்வக் கவிதையிது
 

அனந்த்

பி.கு. .. ’ஏறியே செல்கிறேன் எதுவழி தோன்றவில்லை’ - எதுவழி தெரியவில்லை எனலாமோ?

2009/7/11 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
Pl see the poem in pdf format with pictures

தெரியவில்லை இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை ஏற்கிறேன்.

Siva Siva

unread,
Jul 12, 2009, 10:17:22 PM7/12/09
to santhav...@googlegroups.com
இது என்ன வகைப் பா? கூன்பெற்று வந்த எண்சீர் விருத்த அமைப்பை ஒட்டி உள்ளதோ?

// அயராதே! சரிவுள்ள வாழ்க்கைக் குன்றில்
. அனைவர்க்கும் ஒருசிகரம் உண்டு! உண்டு!   //

முதல் ஓவரிலேயே சிக்ஸர்! :)


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/7/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 12, 2009, 10:46:11 PM7/12/09
to santhav...@googlegroups.com
ஒரு சிறிய கருத்து (suggestion):
 
"பக்கத்தில் நிற்பவனின் பாதம் அடியே பள்ளமொன்று.." - பாதமும் அடியென்று பொருள் தருவதையும் ஓசையையும் கருதி, ’பாதத் தடியில்’ அல்லது காலின் கீழே என்பது போல மாற்றலாம்-பின்னதில் மோனை குறைந்தாலும் ஓசை குறையாது, பொருளும் தெளிவு.

அனந்த்

2009/7/12 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

akila ramasami

unread,
Jul 13, 2009, 3:15:53 AM7/13/09
to santhav...@googlegroups.com
உறங்கிக் கிடப்போரையும் தட்டி எழுப்பும்
கொட்டு முரசுக் கவி படைத்த
பசுபதி ஐயாவுக்கு
வாழ்த்துக்கள் பல.
akila ramasami

2009/7/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

nahupoliyan

unread,
Jul 13, 2009, 3:44:11 AM7/13/09
to சந்தவசந்தம்
யோ...வ்! இதென்ன 'ஐயம்பேட்டை'?! நான் பாட்டுக்கு இந்த
உயரவுயரக்கவிதையெல்லாம் நமக்கெங்கே வரப்போவுதுண்ணு 'தேமே'னு வாயப்
பொத்திட்டிருக்கேன். பேரையிழுக்குறீர்!

அயர அயரக் கண் விழித்துக் கவியரங்கம் நடக்கையிலே
பெய(¨)ரப் பெய(¨)ர இழுக்கின்றீர்
ஊர்-உறவுக் கனெக்ஷனெனும்
ஒயர ஒயர இழுக்கின்றீர்! ஷாக் அடிக்க வைக்கின்றீர்!

இக்கவியரங்கத்தில் ஏறக்கூடாத/முடியாத, பன்னரும், பன்னறும் [ pun+நறும்]
கவிதை!

பிறருக்குப் போடுவதாகப் பிரசித்தமானதைத் தனக்குப் போட்டுக்கொள்ளாத
பெருமையை விளம்பிய தங்கள் நாமம் வாழ்க!

நகுபோலியன்

On Jul 10, 9:04 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/7/9 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
> > தங்கமணி அம்மை,ஹரி கி்ருஷ்ணன்(ஹரியண்ணா),
>
> ஆகாகா அடடாடா அற்புதம் அற்புதம். யான் எனது நோட்டுப்புத்தகத்தில் குறித்து
> வைத்துக் கொண்டேன். :-))
> தங்கமணிக்கு அம்மையா? நல்ல திடகாத்திரமா மாரியம்மன் பாத்துப்பா.
> அம்மையெல்லாம் போட்டாதீங்க அரங்கத் தலைவரே!
>
> அப்புறம் இன்னொண்ணு. அடியேனை கடைசிப் பந்தியில் அழைக்குமாறு விக்ஞாபித்துக்
> கொள்கிறேன். அடியேன். தாஸோஹம். (நகுபோலியரே! எல்லாம் சகவாச தோஷம்தான்! நான்
> அதே வரகூர் சங்க்ருதி கூட்டத்தவன்தான்.....என் நெத்தியில் எப்பவும்
> போடுவதைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன்!)
>
> அட்டகாசம் அட்டகாசம்! அற்புதம் அற்புதம்! யான் ஆனந்தமாய் ரசிக்கிறேன்!
> தொடருங்கள் மறையரே!
> --
> அன்புடன்,
> ஹரிகி.

srinivasan s

unread,
Jul 13, 2009, 4:31:02 AM7/13/09
to santhav...@googlegroups.com
ஐயா பசுபதி அவர்களுக்கும் மற்ற அருமை கவிஞர்களுக்கும் அடியேனது உளமார்ந்த வணக்கங்கள். தாங்கள் நடத்திவரும் இந்த பெரும் கவியரங்கத்தில் பங்கு பெற அடியேனுக்குத் தகுதி உண்டா என்பது அடியேனுக்கு ஐயம். இருப்பினும் நேற்றைய தினம், ஞாயிறு, ஜூலை 12 -ம் தேதியில் அடியேன் ஏதோ ஒரு சக்தியின் வசப்பட்டு 22 பாக்கள் அமைந்த ஒரு கவிதையை எழுதினேன். அதை தங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன். தயவு செய்து ஏதேனும் தவறுகள் இருப்பின் அடியேனை மன்னித்து, தவறுகளைத் திருத்துவதற்கு அறிவுரை கூறும்படிக் கேட்டுக்கொள்கிறேன். இதோ அந்த கவிதை: இங்கு கலியன் என்பது திருமங்கையாழ்வாரைக் குறிக்கும். இதில் குறிப்பிடப்படும் அவரது திருமொழி: பெரிய திருமொழி 1-9.

                                   கலியன் புரிந்த அருள்

 

கலியன்மேல்  காதல்கொண்டு கலியனது  திருமொழியை

வலியவலிய  படித்துவந்தேன்;  விரைவாக வாசித்தேன்;

ஒலிநயத்தில்  மூழ்கிட்டேன்; ஒன்பதெனும் திருமொழியின்

வலிச்சுழலில்  அகப்பட்டேன்;  மீளமீள  மூழ்கிட்டேன்.    1

 

திருமலையில்  குடிகொண்ட  தேவனிடம்  ஆட்பட்டே

அருமைமிகும்  பாடல்களில்    ஆழ்ந்திழந்தேன் என்மனத்தை;

இருந்தவிடம்  மறந்தொழிந்தேன்; இரைந்திரைந்து பாடலுற்றேன்;

ஒருசொல்லும் என்னைவிட்டு  ஓடாமல்  ஒட்டியதே.                         2

 

தாய்தந்தை  முதலாக   தாரமெனும்  சொந்தமெலாம்

நோய்களையே தருவனவாய் நலிவடையச்  செய்ததெலாம்

நாய்போன்ற என்றனுடை நினைவினிலே தோன்றினவே;

பாய்கின்ற  ஆறுபோல  பாடல்களைத்  தொடர்ந்திசைத்தேன்!          3

 

பெண்களெனும்  வலையில்நான்  பட்டபெரும்  துன்பமெலாம்

கண்ணெதிரே    நிறுத்திவிட்டார்  கலியனெனும் நல்லாழ்வார்!

உண்மையிலே  இரக்கமின்றி  ஒருவருக்கும் நற்செயலை

எண்ணிலேனாய்  இருந்தவனாய் இவ்வாழ்வை  வீணடித்தேன்!        4

 

இப்பிறப்பில்  நிகழ்ந்ததெலாம்   இப்படியென்றால்  என்னுடைய

முப்பிறப்பில்  எந்நலனும்  முயலாமல்   இருந்திருப்பேன்!

அப்படியே  செய்திருந்தேன்  ஆகிலுமென் நலம்தனையே

தப்பாமல்  மனத்திருத்தி    நல்வணிகம்   செய்திருப்பேன்!                 5

 

சுயநலமே  மனத்திருப்பத்   திருவேங்கடத்  தானையேநான்

நயந்தவனாய்  ஒருநாளோர்  நிமிடமோதான்  என்மனத்தில்

பெயரினையே  எண்ணிடவோ புகன்றிடவோ வணங்கிடவோ

முயலாமல்  வாழ்வெல்லாம் முடித்திருப்பேன்  ஐயமில்லை!              6

 

மண்ணாலும் நீராலும் மஞ்சுலவும்  இடத்தாலும்

பண்ணியவென்  ஆக்கைகளைப்  பலவெடுத்தும்  புரிந்தேனா

புண்ணியங்கள்?  அல்லவல்ல; பாவங்களே செய்திருப்பேன்!

எண்ணங்கள்  இப்படியே   என்மனத்தில்    எழுந்தனவே!                 7

 

கலியனது  இவ்வரிகள்  கற்களென  ஊன்றினவாய்

செலத்தொடங்கி  நடந்திட்டேன்  நீள்வழியே; ஓரிடத்தில்

நலம்கேட்டு எனைநிறுத்தி  நயமுடனே  யாரோஓர்

நலமனிதர்  பேசுகையில்  நானுரைத்தேன் எனைப்பற்றி!                 8

 

வயதாகிப் போனதனால்  வசதியுள்ள  இருப்பிடத்தை

விழைந்தடியேன் தேடிலுமே  வெறுமையே ஆனதென்றன்

முயற்சியினைத் தெரிவித்தம்  மனிதரைநான் பார்த்துநின்றேன்;

வியப்புடனே  எனைப்பார்த்து  வலிந்தவரே  சொன்னாரே!              9

 

‘வேறெங்கு  போகவேண்டும், விரையார்திரு மலையிருக்க?

நாறுமலை  தாழ்வரையில்  நிலைகொண்ட  அலர்மங்கை

ஊரிலேஓர்   அமைப்புளது!   உமக்கேற்கும்  நன்றாக!

சேருமங்கே!’  என்றுசொல்லி  நகர்ந்துபோனார்  அம்மனிதர்!            10

 

யாராரோ  பிடித்தேநான்  அவ்விடத்தை அறியலுற்றேன்;

நேரத்தை   வீணாக்கா    தங்கேநான்   ஏகினனே;

சீருடனே  இயங்கிவரும்    நல்லமைப்பைக்  கண்ணுற்றேன்;

வாருமென  அன்புடனே  வரவேற்றார்   அடியனையே!                     11

 

இன்றிருக்கும்  வீட்டினுக்கோர்  ஏற்பாடு   செய்துவிட்டு

என்றேனும்    ஒருநாள்யான்    ஏழுமலை  அடிவாரம்

சென்றிடலாம்   என்றெல்லாம்   செழுங்கனவு  பன்னாட்கள்

நன்றுகண்டும்   அக்கனவும்   நனவாகா  தாயிற்றே!                            12

 

அவ்வமைப்பில்   தங்கியபோ    தரியதொரு   வாய்ப்பதனால்

செவ்வியசீர்    மலைசென்று    தேவனுடை   தரிசனமே

பவ்வியமாய்க்   கிட்டியதால்    பெருமகிழ்ச்சி  உற்றேன்நான்!

அவ்வளவே   அண்டியது!    அதன்பின்னர்    வேதனையே!                   13

 

என்வீட்டை   ஏதும்செய      இயலாமல்   தொடர்ந்ததுவே

என்வாழ்வு    தனிமையிலே;   எத்தனையோ  நாட்களுந்தான்

தன்னாகக்     கழிந்திடவே   திருப்பதிக்குச்   செலும்வாய்ப்பு

என்னைவிட்டு  அகன்றதுவே   ஏதேதோ   சிந்தைகளால்!               14

 

என்வீட்டில்   தனிக்காவல்   கைதிபோல   அல்லலுற்றேன்;

என் தெய்வம்  மலையப்பன்  என்வீட்டில்  நுழைந்திட்டான்!

என்னெதிரே  தொலைக்காட்சிப்  பெட்டிதன்னுள்  பாங்காக

வந்துவந்து   செல்கின்றான்,  மலையினிலே  வீற்றிருந்தே!             15

 

கிட்டத்தில்  வந்துநின்று   களைநிறைந்த  தன்முகத்தைத்

தொட்டிடவே  அழைப்பான்போல்  துணிவுடனே  காட்டுகின்றான்

பட்டாடை  நடுவினிலே   பளிச்சென்று    தன்கரத்தை

விட்டொழிப்பாய்   கவலையென   வலிந்தவனே   காட்டுகின்றான்!         16

 

“விண்ணோர்தொழும்  வேங்கடத்தில்   வெகுதொலைவில்   இருந்தாலும்

நண்ணியுன்னை  நான்நாடி   நெருங்கிவந்து   உன்வீட்டின்

முன்னறையில்   நிற்கின்றேன்   மறவாமல்   அனுதினமும்

எண்ணிலாத    முறைகளென்றன்  எழிற்சேவை  தருகின்றேன்!                  17

 

மலையடிக்கீழ்   வாழ்வதனால்  மீளமீள  எனைநேரில்

வலியிலாது   அணுகிவந்து  நெடுநேரம்  காண்பாயோ?

அலைபாயும்  கூட்டத்தில்  அங்கெங்கே  எனைக்காண்பாய்?

சிலநொடிகள்  காண்பதற்கே  செலவாகும்   பலநாட்கள்!                         18

 

நானிலாத   இடமுண்டோ?   நானிலாத   நொடியுண்டோ?

நானிலாத   நினைவெல்லாம்  நன்றாக  அமைந்திடுமோ?

நானிலாத  செயல்பாடும்   நலமாக  நடந்திடுமோ?

நானிலாது   நீயுளயோ?   நெருங்கியுளேன்  உணராயா?                       19

 

இருப்பிடமே வைகுண்டம்  எனையேநீ   நினைத்தாயேல்!

இருப்பிடமே  திருமலையாம்,  என்‘சானல்’   பார்த்தாயேல்!

இருக்குமிடத்  திருந்திடுவாய்   எனையேநான்  தருகின்றேன்!

வருத்தமேது   என்னடியை   விட்டிடாமல்   உளம்கொண்டால்?             20

 

என்னைநினை! அன்புடனே  எனைபூசி!  எனைவணங்கு!

என்னைஉடன்  கொள்வாய்!நீ  எனைவிட்டு  அகலாமல்

என்னிலேயே   மனம்வைப்பாய்!  எனைக்காண்பாய்  எங்கிலுமே!

என்னில்நீ  இருந்தாயேல்,   என்னிடமாய்  உனைக்கொள்வேன்!”           21

 

இத்தனையும்  அவன்சொல்ல  எடுத்துரைப்பார்  வல்லுநர்கள்

எத்தனையோ  முறைகள்தாம்   என்முன்னே   எழுந்தருளி

பத்தியினைப்   புகட்டுவர்கள்!  புவிதனிலே    இதைவிடவே

மெத்ததென   ஒன்றுளதோ?    மெய்கண்டேன்  மெய்தானே!                  22

 

                                    -- 0 --  

 

அன்புடன்

தாஸன்

அன்பில் ஸ்ரீனிவாஸன்

 

 

 

 

  



 
--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext
Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

thangamani

unread,
Jul 13, 2009, 8:58:23 AM7/13/09
to சந்தவசந்தம்
விண்ணுயரம் கண்டிடுமே மெல்லிறகுப் பறவை,அக
விண்ணதனின் உயரமதில் மேன்மைதனைக் கண்டிடலாம்!

முனைப்புடன் உழைப்பைநல்க முன்னேற்றம் கண்டிடலாம்
வினைத்திட்பம் வெல்லுமென்றார் மெச்சுகவி பசுபதியார்!


(சிந்தில் சின்ன முயற்சி)

சிந்துகவி தந்தவுயர் சந்தம்!சந்தம்!--அதுதான்
...செந்தமிழின் உயர்வினுக்குச் சொந்தம்!சொந்தம்!
சந்தமணம் தங்குகின்ற தென்றல்!தென்றல்!--மெதுவாய்த்
...தவழ்ந்துவந்து வீசுமிந்த மன்றில்!மன்றில்!

அன்புடன்,
தங்கமணி.

> 2009/7/12 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>


>
>
>
>
>
> > அன்பர் டாக்டர் கவிஞர் பசுபதி;-(கானடா)
> > $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
> > சென்னையிலே  பட்டம் பெற்றார்;
> > ..டொறோண்டோவில் சேவை செய்தார்;
> > முன்னைப்ப ழம்பொருள் “டிஜிடலில்’
> > ..மூவாத ஆய்வு பண்ணி
> > தென்னையைப்போல் மிக,மிக் குயர்ந்தே
> > ..தெங்கிள-வி ருதெலாம் பெற்றே
> > இன்னமும்வா லிபம்த தும்ப
> > ..எல்லோர்க்கும் உதவும் “பசுபதி”!
> > ..
> > விஞ்ஞானம்,சங்கீதம்,’கவிகள்”-என்றே
> > ..விதவிதமாய் வித்தகங்கள் பெற்று,-இவர்,
> > அஞ்ஞானம் போக்குகிற  இலக்கியத்தில்,
> > ..அழகுறவே நுழைந்தாரே!..ஆய்வுசெய்வார்,
> > மெய்ஞ்ஞானம் தருகிறநற் கவிநுட்பம்
> > ..மின்னிடத்தான் தனியிழையில் கற்பிப்பார்!
> > ‘சொய்’ என்றே தோசைசுடு மாப்போல்,-நாம்
> > ..தொடர்ந்துயர உயர்கவியிங்(கு) இடுவாரே!
> > ..
> > பசுபதீ! வருக! பரவசம் தருக!
> > *************************(யோகியார்)
>
> --
>

NATARAJAN SRINIVASAN

unread,
Jul 13, 2009, 11:42:50 AM7/13/09
to santhav...@googlegroups.com


2009/7/12 SUBBAIER RAMASAMI elan...@gmail.com

 

 

தெள்ளரும் செந்தமிழ்ச் செல்வியே, தெய்வமே

      தேனிசைக் கலைவாணியே,

      தீர்க்கமாய் ஓர்மொழி சொல்லுக ‘வெல்கநீ

      வெல்கநீ, வெல்க’ வென்றே!

     

     

 

 
 
 
 
 
விண்பறந்த பறவையின் வித்தகம் நோக்கியே
 விதந்தகவி யுரைத்தார் அதுபோல்
 வீசுகின்ற காற்றிடை வெட்டவெளி மேட்டினில்
 விரைகின்ற ஆசை கொண்டார்.
 
மண்முளைத்த மனிதனாய் கற்பனை ஊற்றிலே
 மனமுருகி கவிதை செய்தார்
 மன்னுபுகழ் வாணியும் இலந்தைக்கு யிவ்வரம்
 மகிழ்ந்தளிக்கும் சேதி வருமே!
 
நடராஜன்.

NATARAJAN SRINIVASAN

unread,
Jul 13, 2009, 12:16:45 PM7/13/09
to santhav...@googlegroups.com

உயர்வென்னும் உன்னதம் எதுவோ என்றுன்
. உள்ளத்தைத் தட்டின்அது சொல்லும்! சொல்லும்! -- சிறிதும்
தயங்காமல் நம்பிக்கைச் சிறகை விரித்துத்
. தனிவானில் பறந்திடுவாய், உயர! உயர!  

 

உள்ளத்தின் குரலைக்கேள் உயர உயர
 உள்ளவழி ஏதெனவே செப்பும் செப்பும் - என்று
பிள்ளைக்கு உரைத்தார்ப்போல் பிரித்துச் சொன்னார்
 பேராசான் பசுபதி நன்றே! நன்றே!!

நடராஜன்.

2009/7/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Jul 13, 2009, 8:25:24 PM7/13/09
to santhav...@googlegroups.com

சிந்தினிலே புதிய உத்தி கொண்டு கொண்டு- வந்த

சிறப்பான பாடலினைக் கண்டு கண்டு

பந்தமுடன் நாமிதனைப் போற்றுகின்றோம்- இப்

பாடலிலே உயரங்கள் உண்டு! உண்டு!

 

 

நிறுத்தற்குறிகள் இங்கே அழகாகப் பயன்பட்டிருக்கின்றன!

 

இலந்தை



2009/7/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 14, 2009, 11:34:15 AM7/14/09
to santhav...@googlegroups.com
பசுபதிக்  கவிஞரைப்பா ராட்டிய ரசிகர்கட்கு நன்றி!
இசைவுடன் உயர’ப்பா இழைக்கவுள நிரஞ்சன்!
..
பாரதி வாரிசு நிரஞ்சன் பற்றி;-
&&&&&&&&&&&&&&&
ஆம்!பார-திவாரிசு.இவர்!..அழகுறப் பாடுவதில்
தீம்பாலாய் மிளிர்பவர்! தேன்கருத்தைப் புதுக்கிக்
..
சிறுசிறு சொற்களினால் சித்திரமே வரைபவர்!
சுறுசுறு.என்றே நம்நரம்பில் விறுவிறுப்பேற் றும்(இ)வர்கவிதை!
..
எம்பிஏ படிப்புதன்னில் இணைந்’துயர’ப்  படிக்கின்றார்!
தம்பிடித்தே ’பொறியிய’லை ஒருகை’ பார்த்தாச்சு!
..
’கவிதைஎன்றால் உயிர்’என்றே கழலுமிவர்,இன்றிங்கே
புவிஉயரப் புதுக்கவிதை பொழிந்துநம்மை மகிழ்விப்பார்!
ம்..ம்!நிரஞ்சன் பாரதீ! நினையழைத்தேன் நிமிண்டுக.உன் பூஞ்சுடரை!
யோகியார்-14-07-09


அனைவரும் வாழ்க நம் குரு பாபாஜி அருளால்!

Niranjan bharathi

unread,
Jul 14, 2009, 12:12:58 PM7/14/09
to santhav...@googlegroups.com
        

எல்லோர்க்கும் வணக்கம்.

சந்தவசந்தத்தில் இது அடியேனின் இரண்டாவது கவியரங்கம்.

இதில் பங்கேற்பதில் பேருவகை அடைகிறேன்.

இம்முறையும் கவிதை கொஞ்சம் நீளம். மன்னித்தருளுக.

இனி அடியேனின் கவிதையை இவண் சமர்ப்பிக்கிறேன்.

             

                                          தமிழ்த்தாய் வாழ்த்து

வானம் கொஞ்சும் வெண்ணிலவே - உன்
வனப்பில் இறுமாந்து இருக்காதே !
வாசம் தடவிய பூங்காற்றே - உன்
இளமையை நினைத்துத் திமிராதே !
அரும்பெரும் இலக்கணத்தின் இளமையிலும்
இன்னரும் சொற்களின் அழகினிலும்
தரணியெங்கும் திகழுதடி தகத்தகாய தமிழ்மொழி !
அடடா !! நிதமும் நிதமும்
தமிழோசை கேட்டு உள்ளமெலாம் இமிழும் !
தமிழென்னும் சொல்லில் என் நாடியெல்லாம் அமிழும் !
தமிழென்னும் மொழியையே என் இதழ்கள் உமிழும் !
தமிழ்க்கவியைப் புனைந்தே என் ஜீவன் கமழும் !

தமிழ்த்தாயே !!

எளிதாய் நானும் கவிதை புனைய
இன்னருள் புரிவாய் தனயனுக்கு !


#####################################

அவைத் தலைவர் வாழ்த்து

அவர்
ஆரணம் என்பதைப் பேரில் கொண்டவர்
காரணம் எதையும் முன்னின்று மொழியாமல்
'மா'ரணம் வந்து மறித்து நின்றால் - அவர்
முறுவலைக் கண்கள் கண்டாலே போதும்
வாட்டிய துன்பமெல்லாம் காணாமல் போகும்
கன்னல் கவிபாடும் கவியோகி வேதமய்யா !
கனிவாய்க் கவியை நல்கிட பணிந்தேன் நின்றன் பாதமய்யா !

ஆன்றமைந்த கவிஞர்காள் !!
அரங்கத்தின் முன்னே கவியைச் சமைக்கின்றேன்
பிழையேதும் இருந்தால் மன்னித்தருளுக !


#######################################



     உயர உயர

உயரம் அடைவதற்கு இலக்கணம் உண்டாயின்
உலகில் எல்லோரும் உயர்ந்திருப்போம் - ஆனால்
அரிய மனிதர் ஒருசிலரே - வாழ்வில்
பெரிய நிலையை எய்துகின்றார் - இது
தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும் - நன்றாகப்
புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்

வாழ்க்கையின் நியதிப்படி
உயரத்தை நோக்கி பயணிக்கும் போது
துயரத்தைத் தினமும் சந்திக்க நேரும்

துயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்
சிறகை மடித்துக் கொள்ளும்
உயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்
சிறகை அடித்துக் கொள்ளும்

முதுபெரும் முக்கோணமாய் மலைகளுண்டு - அந்த
மலையெங்கும் சிதறுண்ட கற்களுண்டு
கதியற்றுக் கிடக்கும் கற்களின் மீது
உளியொன்று வந்து மோதிடும் போது
கற்கள் யாவும் அற்புதச் சிலையாகும்
நம் கண்கள் பனித்திடும் கலையாகும்
உளிகொண்டு கல்லினைச் செதுக்கும் போது
கல்லொன்றும் கலங்கி அழுவதில்லை - ஒரு
கல்லுக்கு "கல்" நெஞ்சம் இருப்பதில்லை ;

சின்னஞ் சிறிய பிராயத்திலே - ஒரு
சின்னஞ் சிறிய கதை கேட்டதுண்டு
தாகம் தீராத காகம் ஒன்று
தண்ணீரைத் தேடி திசையெங்கும் சுற்றியது ;
சோனை தன்னைப் பார்க்காத காகம் - ஒரு
பானையில் நீரைக் கண்ணாரக் கண்டது ;

ஆனால்...

நீரின் மட்டம் காக்கைக்கு எட்டவில்லை
வேண்டிய தாகம் யாக்கைக்குக் கிட்டவில்லை
காக்கையோ கொஞ்சமும் சோரவில்லை - தன்
முயற்சியில் சிறிதும் சளைக்கவில்லை - அது
நீரைக் குறிபார்த்து கற்களைப் போட
நீரின் மட்டம் உயர உயர - அதை
அழகாய்க் குடித்து தாகம் தீர்த்தது ;

மனிதரைப் பார்த்து காகங்கள் கரையும் - ஆயின்
காகத்தைப் பார்த்து நம்முள்ளம் கரையுமா ?

நதியென்ற பெண்ணும் காதலில் விழுவாள்
சுதியோடு பாடலைப் பாடிக்கொண்டே போவாள்
ஆயிரம் தடைகள் தடுத்து நின்றாலும்
விதிவிட்ட படியே வாழ்க்கை என்றில்லாமல்
பதியாகிய கடலை அன்போடு அணைப்பாள்

நதிகள் என்றும் நிற்பதில்லை - நின்றால்
அதன் பேர் நதியில்லை ;
அல்லும் பகலும் எப்போதும் நில்லாமல் அது ஓடுவதால்
என்றும் மக்கள் மனதினிலே நதிகள் நிலைத்து நிற்பதுண்டு ;

கரடு முரடான கல்லை விடவும்
ககனத்தில் பறக்கும் காகத்தை விடவும்
நாடெங்கும் பாயும் நதியை விடவும்
மனிதன் மாறுபட்டு நிற்கிறான் - தன்
குணத்தால் வேறுபட்டு நிற்கிறான் ;

இதயம் விரும்பியதை இம்மியேனும் செய்யாமல்
உலகம் விரும்பியதை உவப்போடு செய்கிறான்
தேன் ருசியாக இருந்தாலும் புலி தேனை உண்பதில்லை !
ஊன் சுவையாக இருந்தாலும் மான் ஊனைத் தின்பதில்லை !

தன் திறத்தை வைத்து முன்னேறிச் செல்லாமல்
தந்திரத்தைப் பயன்படுத்தி காரியம் செய்கிறான் - ஒரு
எந்திரத்தைப் போல் பூமியில் வாழ்வதற்கு - எளிய
மந்திரத்தை மனிதன் எங்கு கற்றானோ தெரியவில்லை ?

வீடு வாசல் இருந்தாலும் மனித நேயம் இருப்பதில்லை !
நேயம் மனதில் பிறந்துவிட்டால் அங்கே காயம் இருப்பதில்லை !

மனிதா !

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை விரும்பிச் செய்துவிடு - அன்றி
எதைச் செய்ய விரும்புகிறாயோ அதை தொழிலாய் மாற்றிவிடு

கற்களையெல்லாம் செதுக்கி சிற்பங்களாக்கும் உளியைப் போல்
வாழ்க்கை உன்னை அனுதினமும் செதுக்குகிறது
வலியைப் பொறுத்துக் கொள் - பொறுத்தாரே
வையத்தில் என்றும் பூமி ஆள்வார்

நாடோறும் படித்து அறிவைக் கூராக்கு
வளமான சிந்தனையால் புத்தியைச் சீராக்கு
கதையில் படித்த காக்கையைப் போல் சாதுர்யமாக இரு
சாதுர்யமாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் இரு

கடலில் கலந்து களிக்கும் வரையில்
நதியின் உறுதியைக் கண்டாயா ?

அஃதே போல்

எதைச் செய்தாலும் உறுதியாக நில்
துணிவாக இருந்து காரியத்தில் வெல் !

வெற்றியைப் பெற்றவுடன் அமைதியாக இரு !
உலகம் உந்தன் காலடியில் விழும்
ஒரு உயர்ந்த மனிதனைப் பெற்றுவிட்டோம் என்று !!


#########################################


அன்புடன்,
நிரஞ்சன்


2009/7/14 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Jul 14, 2009, 12:47:23 PM7/14/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள சந்தவசந்தம் அன்பர்களுக்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
கவிமாமணியவர்களின் கவித்தேனை யருந்தி, சுவைத்து, அதன் உள்வாங்கலில் திளைத்து, ஏதோ நானறிந்த சொற்களால், எதையோ சொல்வதற்கு, முயற்சிக்கும் போதில்;
 
பேரா. பசுபதியவர்களின் அழகுப்பா வந்து தொம்மென்று குதிக்கிறது;  என்னுளத்தை கவ்விப் பிடிக்கிறது. என்னைப் போன்றவொரு சாமானிய மனிதப் பிறவிக்கு ஒரு நாளில் 24 மணிகள் போதவே போதாது.  முற்பிறவியில் பெரிய தீவினை செய்தவர்கள்தாம்  இந்த அற்புதமான பாவலர்களின் பாக்களால் அடைந்த இன்பத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள இயலாதவாறு, எனைப் போன்று பணிச்சுமையில் ஆழ வீழ்ந்திருப்பார்கள் என்றெண்ணுகிறேன்.  இன்றைக்கே விருப்பப் பணிநிறைவு(voluntary retirement) பெற்றுக் கொள்ளலாமா; இந்த இலக்கியமாம் இனிப்புக் கடலில் குதிக்கலாமா என்றால், என்னுடைய 50 அகவையில் வந்த எங்கள் வைகறைச்செல்வனின் (என் மைந்தன்) எதிர்காலம் என் கைகளைக் கட்டிப் போடுகிறது. என்னை நினைத்தாலே எனக்கே வெறுப்பாய் இருக்கிறது.   இந்த மடலைக் கூட    நான் சொல்ல என் துணைவியார் அனுப்புகிறார்.
 
ஆழ்ந்த உளச்சுமையுடன், பணிச்சுமையுடன்,
அன்பன்
இராஜ. தியாகராஜன்,
 
 
----- Original Message -----
Sent: Tuesday, July 14, 2009 9:04 PM
Subject: Re: Kaviyarangam-30- Vedham Thalaimai

Kaviyogi Vedham

unread,
Jul 14, 2009, 3:47:51 PM7/14/09
to santhav...@googlegroups.com
’மன்னிக்க ’கழறும் என்று போட்டுக்கொள்ளுங்கள்.
 கழலும் என்று வந்துவிட்டது டைப் அடிக்கையில்.. பிழை அது
யோகியார்

2009/7/14 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Girija Varadharajan

unread,
Jul 14, 2009, 5:37:20 PM7/14/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள வேதம்,
 
அடியேனுக்கும்  உயர  ஆசை .
 வாய்ப்புக் கிட்டுமா?
 
 
( கவிதை எழுதாவிட்டால் "காய்" என்று நண்பர் குமார் அச்சுறுத்துகிறார். !)
 
 
அன்புடன்
 
 
வரத ராஜன். அ.கி

2009/7/15 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>



--
Thanks and Regards
Girija

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Kaviyogi Vedham

unread,
Jul 14, 2009, 6:01:03 PM7/14/09
to santhav...@googlegroups.com
ஆகா! எப்படி உமை மறந்தேன்..விடலாமா ஒரே ஊர்க்காரனை?
 பேஷா சேர்ந்துக்குங்கோ..அடியேன் இப்போ நியூ ஜெர்சி யில் இருக்கிறேன்.
நிறைய நேரம் இருக்கு. ஒழுங்கா நம்ம ச. வ. இழையைப் பார்க்கிறேளோன்னோ!
 நம்ம தலை.யுரை மற்ற கவிகள் உறை எல்லாம் எப்படி இருக்குன்னுஒரு சில வார்த்தை எழுதப்படாதோ..?.ம்!..உரிமை உரிமை..!
 கடைசியில் கவி.. படிக்கிறவாளா இருக்கேளா?.நன்றி.
 யுமது அன்புள,
 வேதம்-யோகியார்
--- On Tue, 7/14/09, Girija Varadharajan <girijavar...@gmail.com> wrote:


From: Girija Varadharajan <girijavar...@gmail.com>
Subject: Re: Kaviyarangam-30- Vedham Thalaimai
To: santhav...@googlegroups.com
Date: Tuesday, July 14, 2009, 4:37 PM

அன்புள்ள வேதம்,
 
அடியேனுக்கும்  உயர  ஆசை .
 வாய்ப்புக் கிட்டுமா?
 
 
( கவிதை எழுதாவிட்டால் "காய்" என்று நண்பர் குமார் அச்சுறுத்துகிறார். !)
 
 
அன்புடன்
 
 
வரத ராஜன். அ.கி

2009/7/14 Girija Varadharajan <girijavar...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jul 14, 2009, 6:02:56 PM7/14/09
to santhav...@googlegroups.com
என் கவிதையைப் படித்துக் கருத்துத் தெரிவித்த எல்லா ரசிகர்களுக்கும் என் நன்றி.
 
யோகியார் என்னை 'மர்ம' மாக (!) வைத்திருந்ததால்,
நானும் மறைந்திருந்து யோகியாரின், இலந்தையின் அருமையான கவிதைகளைப் படித்தும், பின்னூட்டங்கள் கொடுக்காமல் இருந்தேன்; மன்னிக்கவும்.
 
கவியரங்கம் அருமையாகப் போகிறது. வேதம் அவர்களுக்கு என் பாராட்டுகள்!


 
2009/7/13 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

சிந்தினிலே புதிய உத்தி கொண்டு கொண்டு- வந்த

சிறப்பான பாடலினைக் கண்டு கண்டு

பந்தமுடன் நாமிதனைப் போற்றுகின்றோம்- இப்

பாடலிலே உயரங்கள் உண்டு! உண்டு!

 

 

நிறுத்தற்குறிகள் இங்கே அழகாகப் பயன்பட்டிருக்கின்றன!

 

இலந்தை





 

--

Pas Pasupathy

unread,
Jul 14, 2009, 10:44:26 PM7/14/09
to santhav...@googlegroups.com
ஓடுகின்ற நதிக்குள்ள உறுதி
உளிசெதுக்கும் சிற்பத்தின் பொறுமை
உணவுதேடும் காகத்தின் சாதுர்யம்
உயர்வுக்கு இம்மூன்றும் வேண்டுமென்றார்
உருவகத்தால் கவியழகை உயர்த்திவிட்டார்.
 
பசுபதி


 
2009/7/14 Niranjan bharathi <niranjan...@gmail.com>

        


கற்களையெல்லாம் செதுக்கி சிற்பங்களாக்கும் உளியைப் போல்
வாழ்க்கை உன்னை அனுதினமும் செதுக்குகிறது
வலியைப் பொறுத்துக் கொள் - பொறுத்தாரே
வையத்தில் என்றும் பூமி ஆள்வார்

நாடோறும் படித்து அறிவைக் கூராக்கு
வளமான சிந்தனையால் புத்தியைச் சீராக்கு
கதையில் படித்த காக்கையைப் போல் சாதுர்யமாக இரு
சாதுர்யமாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் இரு

கடலில் கலந்து களிக்கும் வரையில்
நதியின் உறுதியைக் கண்டாயா ?

அஃதே போல்

எதைச் செய்தாலும் உறுதியாக நில்
துணிவாக இருந்து காரியத்தில் வெல் !

வெற்றியைப் பெற்றவுடன் அமைதியாக இரு !
உலகம் உந்தன் காலடியில் விழும்
ஒரு உயர்ந்த மனிதனைப் பெற்றுவிட்டோம் என்று !!


#########################################


அன்புடன்,
நிரஞ்சன்



பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

R. Vaidyanathan Vaidyanathan

unread,
Jul 14, 2009, 11:23:17 PM7/14/09
to santhav...@googlegroups.com
சித்தத்தைச் செதுக்கி செம்பொன்னாய் ஆக்குவதற்கு
நித்தமுமே சிந்தையினை சீராக்கு என்றுரைத்தார்
மெத்தனமாய் இல்லாமல் மேன்மைபெறு என்றுரைத்தார்
நித்திலமாய் மனம்நிறைத்தார் நிரஞ்சனவர் நீடுவாழ்க.
அன்புடன் பாரதி எழிலவன்
 
 
2009/7/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

akila ramasami

unread,
Jul 15, 2009, 1:19:00 AM7/15/09
to santhav...@googlegroups.com
பாரதியை உம் பாட்டில் கண்டு சொக்கிப் போனேன்..

"கல்லொன்றும் கலங்கி அழுவதில்லை - ஒரு
கல்லுக்கு "கல்" நெஞ்சம் இருப்பதில்லை ;"

என்ன அருமையான ஒரு சிந்தனை..
 
படிப்பிற்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல்
பணமே குறியாய் ஓடும் வாழ்க்கையில்..
மனதுக்கு பிடித்ததை..
மன போல செய்ய துணி  என்றே..

"எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை விரும்பிச் செய்துவிடு - அன்றி
எதைச் செய்ய விரும்புகிறாயோ அதை தொழிலாய் மாற்றிவிடு"..

என்று சொல்லிய அருள் வாக்கு அருமை.
 
anbudan
akila ramasami
 
2009/7/14 Niranjan bharathi <niranjan...@gmail.com>

thangamani

unread,
Jul 15, 2009, 7:09:34 AM7/15/09
to சந்தவசந்தம்
மலைபோல் நதிபோல் குணம்வேண்டும்!
..வலிகள், தடைகள் பொருட்டின்றி
குலையா நேசம் நெறியாகக்
..கொண்டால் உயரும் மனிதம்தான்!
விலையாய் துயரம் தனைக்கொண்டும்
..வியனாய் உயரம் பெறலுண்மை!
கலையாய் கவித்தேன் படைத்தாரே!
..களித்தோம் நிரஞ்சன் கவிபோற்றி!

அன்புடன்,
தங்கமணி.


On Jul 14, 9:12 am, Niranjan bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:
> எல்லோர்க்கும் வணக்கம்....


>
> சந்தவசந்தத்தில் இது அடியேனின் இரண்டாவது கவியரங்கம்.
>
> இதில் பங்கேற்பதில் பேருவகை அடைகிறேன்.
>
> இம்முறையும் கவிதை கொஞ்சம் நீளம். மன்னித்தருளுக.
>
> இனி அடியேனின் கவிதையை இவண் சமர்ப்பிக்கிறேன்.
>

>                                           *தமிழ்த்தாய் வாழ்த்து*


>
> வானம் கொஞ்சும் வெண்ணிலவே - உன்
> வனப்பில் இறுமாந்து இருக்காதே !
> வாசம் தடவிய பூங்காற்றே - உன்
> இளமையை நினைத்துத் திமிராதே !
> அரும்பெரும் இலக்கணத்தின் இளமையிலும்
> இன்னரும் சொற்களின் அழகினிலும்
> தரணியெங்கும் திகழுதடி தகத்தகாய தமிழ்மொழி !
> அடடா !! நிதமும் நிதமும்
> தமிழோசை கேட்டு உள்ளமெலாம் இமிழும் !
> தமிழென்னும் சொல்லில் என் நாடியெல்லாம் அமிழும் !
> தமிழென்னும் மொழியையே என் இதழ்கள் உமிழும் !
> தமிழ்க்கவியைப் புனைந்தே என் ஜீவன் கமழும் !
>
> தமிழ்த்தாயே !!
>
> எளிதாய் நானும் கவிதை புனைய
> இன்னருள் புரிவாய் தனயனுக்கு !
>
> #####################################
>

> *அவைத் தலைவர் வாழ்த்து
> *


>
> அவர்
> ஆரணம் என்பதைப் பேரில் கொண்டவர்
> காரணம் எதையும் முன்னின்று மொழியாமல்
> 'மா'ரணம் வந்து மறித்து நின்றால் - அவர்
> முறுவலைக் கண்கள் கண்டாலே போதும்
> வாட்டிய துன்பமெல்லாம் காணாமல் போகும்
> கன்னல் கவிபாடும் கவியோகி வேதமய்யா !
> கனிவாய்க் கவியை நல்கிட பணிந்தேன் நின்றன் பாதமய்யா !
>
> ஆன்றமைந்த கவிஞர்காள் !!
> அரங்கத்தின் முன்னே கவியைச் சமைக்கின்றேன்
> பிழையேதும் இருந்தால் மன்னித்தருளுக !
>
> #######################################
>

>      *உயர உயர*

> read more »

Siva Siva

unread,
Jul 15, 2009, 7:44:22 AM7/15/09
to santhav...@googlegroups.com
// எதைச் செய்தாலும் உறுதியாக நில்

துணிவாக இருந்து காரியத்தில் வெல் !

வெற்றியைப் பெற்றவுடன் அமைதியாக இரு ! //

நல்ல கருத்து.
----

சில இடங்களில் சில சொற்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை:

// வாசம் தடவிய பூங்காற்றே - உன்
இளமையை நினைத்துத் திமிராதே //

// தமிழோசை கேட்டு உள்ளமெலாம் இமிழும் //
---


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/14 Niranjan bharathi <niranjan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 15, 2009, 8:56:35 AM7/15/09
to santhav...@googlegroups.com
பாரதி எழிலவனின் அன்பு வணக்கங்கள்
நான் யோகியாரின் தலைமை கவியரங்க கவிஞர்களின் கவிதைகளைப்
பாராட்டி எழுதிய லிகிதங்கள் ஏனோ சந்தவசந்த இழையில் இடம்பெறவில்ல்லை
ஆகவே இப்பொழுது அவைகளை இங்கு மீண்டும் வரைகிறேன்
 
இலந்தையாரின் கவிதை தென்பாகில் பலாச்சுளை தொய்தெடுத்ததைப்
போல இருந்தது.  அன்னாரின் கவிதைப்புலமைக்கு ஈடுஇணை யார்
இருக்கமுடியும்?
 
பசுபதியாரின் கவிதை சிகரத்தைத் தொடும் மாக்கவிதை.
சிறந்த் சிந்தனை தெளிவான கருத்து.  வாழ்க புவியில் பொழிந்து.

Chandar Subramanian

unread,
Jul 15, 2009, 10:24:17 AM7/15/09
to santhav...@googlegroups.com

//உளிகொண்டு கல்லினைச் செதுக்கும் போது


கல்லொன்றும் கலங்கி அழுவதில்லை - ஒரு

கல்லுக்கு "கல்" நெஞ்சம் இருப்பதில்லை//
- வளமான உவமை கூறும் 'உயர வழி', 'வைர மொழி'.
'கல்லும் கருத்து சொல்லும்'.

//கற்களையெல்லாம் செதுக்கி சிற்பங்களாக்கும் உளியைப் போல்
வாழ்க்கை உன்னை அனுதினமும் செதுக்குகிறது//
- அருமையான உவமையும் உண்மையும்.

 
2009/7/14 Niranjan bharathi <niranjan...@gmail.com>



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

SUBBAIER RAMASAMI

unread,
Jul 15, 2009, 11:15:21 AM7/15/09
to santhav...@googlegroups.com
நிரஞ்சனே , நீ வந்தனை
தந்தனை சிறந்த சிந்தனை
 

 

நான் மிகவும் ரசித்தவை

துயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்

சிறகை மடித்துக் கொள்ளும்

உயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்

சிறகை அடித்துக் கொள்ளும்

கல்லுக்கு "கல்" நெஞ்சம் இருப்பதில்லை

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை விரும்பிச் செய்துவிடு - அன்றி

எதைச் செய்ய விரும்புகிறாயோ அதை தொழிலாய் மாற்றிவிடு



 
2009/7/14 Niranjan bharathi <niranjan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 15, 2009, 12:03:24 PM7/15/09
to santhav...@googlegroups.com
நிலாவை அழைத்தார் நிரஞ்சன்; “பெருமையுறாதே!
உலாவரும் தமிழ்தான் உன்னைவிட உயர்ந்ததாம்;”
..
 என்றுசொல்லி ஒரு’சார்’(4)- இங்கடித்தே தொடங்கினார்!
கன்னல்சொற்கள் நிரஞ்சன்முன் கைகட்டி நின்றன!
..
தத்துவமும், அனுபவமும்,தள்ளாடா உவமைகளும்
கொத்துத் திராட்சையாய் கைகோத்து நின்றனகாண்!
..
ரசித்துச் சிலரிங்கே ரம்மியமாய்ச் சொல்லிழைத்தார்!
பசியுடையோ ரவர்!நல்ல பண்புடையோர்!் நன்றிசொன்னேன்;(அவர்க்கெலாம்)
..
வவேசு,அன்புஹரி,சிங்கையன்பர் போன்றோர்கள்
‘கவாத்து’இங்கே நட்டிடலாம்; ‘பின்னூட்டம்’ கண்டிடலாம்!
..
விரைந்துஅவர்கள்(சொல்) பெய்வதால் வேலைபல கெட்டிடுமோ?
தருகவே உற்சாகம்! தழைக்க (pros&cons) விமர்சனமும்!
..
எனக்குப்பி டித்த.வரி  இங்கே நடுகின்றேன்;
நினைந்(து)அவற்றை மகிழ்நிரஞ்சன் நெஞ்சினிலே தக்கவைக்க..!
.
“உயரம் அடைவதற்கு இலக்கணம் உண்டாயின்
உலகில் எல்லோரும் உயர்ந்திருப்போம் - ்
..துயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்

சிறகை மடித்துக் கொள்ளும்
உயரம் பெரிதாய்த் தெரிந்துவிட்டால் இதயம்
சிறகை அடித்துக் கொள்ளும்

உளிகொண்டு கல்லினைச் செதுக்கும் போது
கல்லொன்றும் கலங்கி அழுவதில்லை - ஒரு
கல்லுக்கு "கல்" நெஞ்சம் இருப்பதில்லை ;

நதிகள் என்றும் நிற்பதில்லை - நின்றால்
அதன் பேர் நதியில்லை ;

நாடெங்கும் பாயும் நதியை விடவும்
மனிதன் மாறுபட்டு நிற்கிறான் - தன்
குணத்தால் வேறுபட்டு நிற்கிறான் ;

இதயம் விரும்பியதை இம்மியேனும் செய்யாமல்..(தன் மன..?)
உலகம் விரும்பியதை(???) உவப்போடு செய்கிறான்


நேயம்மன தில்பிறந்தால் காயம்.அங்கேங்கே காயம் இருப்பதில்லை !


மனிதா !

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை விரும்பிச் செய்துவிடு - அன்றி
எதைச் செய்ய விரும்புகிறாயோ அதை தொழிலாய் மாற்றிவிடு

கற்களையெல்லாம் செதுக்கி சிற்பங்களாக்கும் உளியைப் போல்
வாழ்க்கை உன்னை அனுதினமும் செதுக்குகிறது
வலியைப் பொறுத்துக் கொள் - பொறுத்தாரே
வையத்தில் என்றும் பூமி ஆள்வார்

நாடோறும் படித்து அறிவைக் கூராக்கு
வளமான சிந்தனையால் புத்தியைச் சீராக்கு
  வெற்்றியைப் பெற்றவுடன் அமைதியாக இரு !
உலகம் உந்தன் காலடியில் விழும்
ஒரு உயர்ந்த மனிதனைப் பெற்றுவிட்டோம் என்று !””’--
..

 போன்ற சிலகருத்தால் ‘பொன்’நிரஞ்சன் ஆனார்! வாழ்க!
சான்றோரே! இனி’அநந்த்’ அவர்களை அழைக்கின்றேன்!
..
எனக்கு நெருங்கிய இனிய நண்பரிவர்;
கனடாவில்,சிங்கையிலே எனக்கரங்கம்(பேச) தந்தவர்;
..
பௌதிகத்தில் பல’சிக்சர்’ போட்டவர்; ஆய்வுகள்
பலசெய்தே மாணவர்தமைப் பார்முன் வைத்தவர்!
..
தம்மைப்போல் அவரையும் தரணியிலே டாக்டரென
தம்’ பிடித்து(மூச்சு!--சிவசிவா.வேறுஎதையும் எண்ணாதீர்!?)நிறுத்தியொரு சாதனை கண்டவர்!
பலவிருது பெற்றாலும் திருப்புகழ்ச் சந்தத்தில்
பலநூறு பாநெய்தும் பணிவாக இருப்பவரை
..
அரங்கிற்கே இழுக்கின்றேன்!அநந்த்! பொழிக’உயர!
யோகியார்

Niranjan bharathi

unread,
Jul 15, 2009, 12:17:24 PM7/15/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள திரு.வி.சுப்பிரமணியன் அவர்களுக்கு,

தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.

1. // வாசம் தடவிய பூங்காற்றே - உன்

இளமையை நினைத்துத் திமிராதே //

2. // தமிழோசை கேட்டு உள்ளமெலாம் இமிழும் //

1. பூங்காற்று என்றால் பூவின் வாசத்தைக் கொண்டுள்ள காற்று என்று பொருள் அல்லவா ?

அதைத் தான் குறித்தேன்.


2.

மேற்கண்ட வரிகளுக்கு

தமிழ் என்ற ஒலியையே என் சிந்தை எழுப்பும் என்று பொருள்.



அன்புடன்,
நிரஞ்சன்





2009/7/15 Siva Siva <naya...@gmail.com>

Niranjan bharathi

unread,
Jul 15, 2009, 12:26:22 PM7/15/09
to santhav...@googlegroups.com
எல்லோர்க்கும் வணக்கம் ,

அடியேனின் கவிதை மண்ணின் மீது வாழ்த்து மழையை பெய்வித்த அத்துணை உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அடுத்த முறை இன்னும் சிறப்பாக எழுதுவேன்.

நன்றி !!


அன்புடன்,
நிரஞ்சன்


2009/7/15 Niranjan bharathi <niranjan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 15, 2009, 11:44:18 PM7/15/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள நிரஞ்சன்,
 
படித்த கணமே புதுத்தெம்பூட்டும் பாடலின் அழகை மிகவும் இரசித்தேன்.
 
எண்ணத்தில் உறுதியும் இதயத்தில் நேயமும்
திண்ணமாய் நம்செயலைச் சிறக்கவைக்கும் எனும்கருத்தை
வண்ணமிகு வரிகளிலே வடித்தவிதம் அற்புதமே!

அனந்த்  15-7-2009

2009/7/14 Niranjan bharathi <niranjan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 16, 2009, 12:24:50 PM7/16/09
to santhav...@googlegroups.com
சந்த வசந்தம்; கவியரங்கம் - 30 
 

தலைப்பு: உயர உயர

தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்

 

 

<> இறை வணக்கம் <>

 

விண்கண்ட இமயமலை மீதுறையும் சிவபரனே!

தண்கொண்டல் தவழுமுயர் திருமலைவாழ் நெடுமாலே!

கண்கண்ட கடவுளெனும் பழனிவளர் கந்தையா!

பண்கொண்ட பாவிசைக்கப் பரிந்தெனக்கின் றருள்வீரே

 

 

<> தலைமை வணக்கம் <>

 

அறிவில், அயரா உழைப்பினில், அன்பு

நெறியில் நெடிதுயர்ந்து நிற்கும் - மறைப்பெயரார்

இன்றிவ் வரங்கத்து உயர்தலைமை தாங்குகின்றார்

நன்றுநமைத் தாமுயர்த்தத் தான்

 

 

<> அவையடக்கம் <>

 

கற்கண்டு வைக்குமிடம் கல்கொண்டு வைத்ததுபோல்

அற்பன்யான் யாத்த சிறுகவியைச் - சொற்கொண்டு

பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்

தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>

 

(தா = குற்றம், குறை)

 

 

<> உயர உயர <>

 

(அறுசீர்ச் சமனிலைச் சிந்து, 1,5 மோனை)

 

 

  ஓங்கி வளர்ந்திடு உயரப் பறந்திடு

         உச்சியைத் தொட்டுவிடு - எங்கும்

   .. உன்னை நிகர்த்தவர் இல்லை யெனும்படி

          உன்னதம் பெற்றுவிடு

  ஏங்கி வருந்திட ஏதுமில் லையென

          ஏற்றத்தை எட்டிவிடு - பாரில்

   .. எங்கும் சிறந்து விளங்கும் வகைநம்

         இனப்பெயர் நாட்டிவிடு

 

 

  பெற்றோரும் உற்றோரும் போதித்தார் இங்ஙனம்

          பிள்ளைப் பிராயத்திலே - அதைப்

   .. பேணியோர் பொக்கிஷம் போலஎன் நெஞ்சில்

          பெரிதும் மதித்துவந்தேன்

  வற்றாத ஊற்றென உற்சாகம் பொங்கிடும்

          மாணவனாய்த் திகழ்ந்து - செல்லும்

   .. வகுப்பில் முதல்வனாய்த் தேறிய வாறென்றென்

          வாழ்வைத் துவக்கிவைத்தேன். 

  

 

  பட்டங்கள் பற்பல பெற்றுப்பின் மேலைப்

          படிப்பும் முடித்துவந்து - வேலை

   .. பார்த்த இடத்திலும் முந்திநிற் கப்பெரும்

          பாடுபட் டேன்செயித்தேன்

  தொட்ட எவற்றிலும் வெற்றியே அன்றிநான்

          தோல்வியைக் காணவில்லை - என்னைச்

   .. சோதனை செய்பவர் வேதனை கண்டுளம்

          சோர்ந்திடச் செய்துவிட்டேன்

 

 

  வானில் பறந்திடும் புள்ளையும் தாண்டிவிண்

          மீனையும் தொட்டிடுவேன் - ஒரு

   .. மட்டெதும் இல்லை எனக்கினி என்(று)இறு

          மாந்திருந்தே மகிழ்ந்தேன்

  ஏனைய யாவரும் என்னை உயர்ந்தவன்

          என்று புகழ்ந்து நிற்க - நான்

  .. என்னை வளர்த்தவர் சொன்ன படிசெய்தேன்

          என்று திளைத்திருந்தேன் 

 

 

  உயர உயரப் பறந்திடும் நோக்கத்தில்

          ஒன்றி இருந்ததனால் - என்னை

  .. ஒட்டி இருந்த மனைவியும் மக்களும்

          ஓரத்தில் நிற்பதையும்

  வயது முதிர்ந்தஎன் தந்தையும் அன்னையும்

          வாடிக் கிடப்பதையும் - என்றன்

  .. மனத்தில் ஒருகண மாயினும் எண்ணிட

          வாய்ப்புக் கிடைக்கவில்லை

 

  எட்டிட இன்னும் இலக்கென ஏதுமே

          இல்லையென் றானபின்னர் - நான்

  .. இருக்கும் உயரத்தில் என்னைத் தவிரவே

          றெவரையும் காணவில்லை

  எட்டத்தில் கீழே இருப்பவர் காதினில்

          என்குரல் கேட்கவில்லை - என்

  .. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட

          எவருக்கும் நேரமில்லை

 

 

  துடிப்பு நிறைந்தஎன் வாழ்வில் ஏதோவொரு

          சோகம் பரவக் கண்டேன் - அதைச்

  .. சொல்லி அரற்றிடத் தோன்றிடும் எண்ணத்தைத்

          துரத்த முடியவில்லை

  படிப்பில் பணத்தில் பதவியில் உச்சத்தைப்

          பற்றிய பின்னருமேன் - என்றன்

  .. பாழும் மனத்தினில் திருப்தி யெனும்ஒரு

          பக்குவம் கிட்டவில்லை?

 

 

  நாளை உணவுக்கு நாதியில் லாதவன்

          நன்றாகத் தூங்கிடுங்கால் - ஏன்

  .. நான்கு நிமிடங்க ளேனும் துயின்றிட

          நானிங்கே ஏங்குகின்றேன்?

  மூளையில் மோதிடும் எண்ணங்கள் மற்றோரை

          முந்திடல் பற்றியவாய் - என்னை

  .. முற்றும் இயந்திரம் ஆக்கிஎன் வாழ்க்கையை

          மூளியாய் மாற்றினவோ?

 

 

  வாடும் மனிதரின் வாழ்க்கையை எள்ளிநான்

          வாழ்ந்ததை எண்ணிநின்றேன் - அண்டி

  .. வந்தவரை என்னில் தாழ்ந்தவ ராய்எண்ணும்

          வழக்கை நினைத்தயர்ந்தேன்

  தேடத் தகுந்தது அன்பெனும் பண்பெனத்

          தெரியா திருந்துவிட்டேன் - உண்மைச்

  .. செல்வம் அடக்கமே என்ற குறள்மொழி

          தேரா திருந்துவிட்டேன்

 

 

  நானே உயர்ந்தவன் என்னும் அகந்தையே

          நாசத்தின் வித்தென்பதை - இந்த

  .. நாள்என துள்ளம் உணர்ந்திடக் கண்(டு)இனி

          நல்ல படிவாழ்ந்து,

  தானும் உயர்ந்து பிறரும் உயர்ந்திடச்

          செய்வோர் உயர்ந்தவராம் - என்று

  .. சாத்திரங்கள் செப்பும் உண்மை அறிந்துள்ளில்

          சாந்திபெற்(று) ஓங்கிடுவேன்
 
             <><><><><><><><><>
 
   அனந்த்  16-7-2009
 
--------------------------------------------------------------

2009/7/15 Kaviyogi Vedham kaviyog...@gmail.com
..

Siva Siva

unread,
Jul 16, 2009, 1:09:38 PM7/16/09
to santhav...@googlegroups.com
இனிய பாடல். முடிவில் நல்ல அறிவுரை.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

சந்த வசந்தம்; கவியரங்கம் - 30 
 

தலைப்பு: உயர உயர

தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்

 

 

<> இறை வணக்கம் <>

 

விண்கண்ட இமயமலை மீதுறையும் சிவபரனே!

தண்கொண்டல் தவழுமுயர் திருமலைவாழ் நெடுமாலே!

கண்கண்ட கடவுளெனும் பழனிவளர் கந்தையா!

பண்கொண்ட பாவிசைக்கப் பரிந்தெனக்கின் றருள்வீரே

 

 

<> தலைமை வணக்கம் <>

 

அறிவில், அயரா உழைப்பினில், அன்பு

நெறியில் நெடிதுயர்ந்து நிற்கும் - மறைப்பெயரார்

இன்றிவ் வரங்கத்து உயர்தலைமை தாங்குகின்றார்

நன்றுநமைத் தாமுயர்த்தத் தான்

 

 

<> அவையடக்கம் <>

 

கற்கண்டு வைக்குமிடம் கல்கொண்டு வைத்ததுபோல்

அற்பன்யான் யாத்த சிறுகவியைச் - சொற்கொண்டு

பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்

தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>

 

(தா = குற்றம், குறை)

  

"தா" - வெண்பா விரும்பியின் தாக்கமோ? :)


'நான் காணவில்லை' எனல் இக்காலத்திற்குச் சரிதானோ?
 

 

  வானில் பறந்திடும் புள்ளையும் தாண்டிவிண்

          மீனையும் தொட்டிடுவேன் - ஒரு

   .. மட்டெதும் இல்லை எனக்கினி என்(று)இறு

          மாந்திருந்தே மகிழ்ந்தேன்

  ஏனைய யாவரும் என்னை உயர்ந்தவன்

          என்று புகழ்ந்து நிற்க - நான்

  .. என்னை வளர்த்தவர் சொன்ன படிசெய்தேன்

          என்று திளைத்திருந்தேன் 

 

 

  உயர உயரப் பறந்திடும் நோக்கத்தில்

          ஒன்றி இருந்ததனால் - என்னை

  .. ஒட்டி இருந்த மனைவியும் மக்களும்

          ஓரத்தில் நிற்பதையும்

  வயது முதிர்ந்தஎன் தந்தையும் அன்னையும்

          வாடிக் கிடப்பதையும் - என்றன்

  .. மனத்தில் ஒருகண மாயினும் எண்ணிட

          வாய்ப்புக் கிடைக்கவில்லை

 

  எட்டிட இன்னும் இலக்கென ஏதுமே

          இல்லையென் றானபின்னர் - நான்

  .. இருக்கும் உயரத்தில் என்னைத் தவிரவே

          றெவரையும் காணவில்லை

  எட்டத்தில் கீழே இருப்பவர் காதினில்

          என்குரல் கேட்கவில்லை - என்

  .. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட

          எவருக்கும் நேரமில்லை

 

// "என் .. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட

          எவருக்கும் நேரமில்லை" //

'எவருக்கும் ஆர்வமில்லை' என்றால் இன்னும் பொருந்துமோ?


NATARAJAN SRINIVASAN

unread,
Jul 16, 2009, 1:40:42 PM7/16/09
to santhav...@googlegroups.com
தன்னிலை உயரத் தன்னகந்தை வளர்ந்தாலே
  சகனிலை தவறிவிடும் - இந்தத்
 தவறுதல் வருதலையே கவிதனில் அனந்தையா
  தகமையாய் எடுத்துரைத்தார் 
 
நடராஜன்.

2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jul 16, 2009, 2:44:59 PM7/16/09
to santhav...@googlegroups.com
சிகரம் எட்டினும்  செருக்குச் செய்வினை
. சித்திரம் வரைந்துவிட்டார்
அகந்தை ஒருவனை ஆட்டும் அனுபவம்
. அழகாக அனந்தரிட்டார்
 


 
2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
சந்த வசந்தம்; கவியரங்கம் - 30 
 

தலைப்பு: உயர உயர

தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்

 

 

  நானே உயர்ந்தவன் என்னும் அகந்தையே

          நாசத்தின் வித்தென்பதை - இந்த

  .. நாள்என துள்ளம் உணர்ந்திடக் கண்(டு)இனி

          நல்ல படிவாழ்ந்து,

  தானும் உயர்ந்து பிறரும் உயர்ந்திடச்

          செய்வோர் உயர்ந்தவராம் - என்று

  .. சாத்திரங்கள் செப்பும் உண்மை அறிந்துள்ளில்

          சாந்திபெற்(று) ஓங்கிடுவேன்
 
  



srinivasan s

unread,
Jul 16, 2009, 3:19:52 PM7/16/09
to santhav...@googlegroups.com

அனந்தனின் சிந்து அடியனைச் சிந்திக்க வைத்ததையா
   அவரது உழைப்பின் உயர்வினை அறைந்தன பலபாடல்
தனதுடை மனதும் தன்னுடன் தாவி வந்தததையும்
   சிகரத்தின் உச்சியைத் தொட்டதும் சிந்திக்கத் தொடங்கியதும்
மனத்திலே உண்மையின் வெளிச்சம் பட்டெனத் தோன்றியதும்
   வளர்ச்சியின் துரிதத்தில் விட்டவை எல்லாம் தெரிந்திட்வே
கனத்தது கவலை கனிவினைத் துணைகொளாமல் இருந்ததனைக்
   கண்டுதன் இறுமாப்பைக் கணத்தில் தள்ளினாரிக் கவிதையினாலே.

அன்புடன்
தாஸன்
அன்பில் சீனிவாஸன்



2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Girija Varadharajan

unread,
Jul 16, 2009, 9:38:25 PM7/16/09
to santhav...@googlegroups.com
அனந்த்,
 
அற்புதம்   செய்தீர்   அனந்திக்    கவிமூலம்                                                              சொற்பிர    யோகத்தால் சொக்கினேன் - கற்பதற்(கு)
எத்தனையோ    காண்கின்றேன் எம்போன்றோர் உம்மிடத்து          அத்தனைக்கும்   உண்டோ அருள் ?   
 
வார்த்தைகள்  வந்து விழுகின்ற   வேகத்தைப்                                                                          
பார்த்துத் திகைத்தேன் பலநாளாய் -  சேர்த்திடுவார்
                                            
சந்தம்  பொருளொடு  சர்க்கரையும் நன்றாக 
  
அந்தமிலின்  பமது  அறி
 
 
 
வரத ராஜன். அ. கி.
 
 
 
2009/7/17 srinivasan s <vasan...@gmail.com>

2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

K.R. Kumar

unread,
Jul 16, 2009, 10:04:45 PM7/16/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள அனந்த்,
 
ஆழ்ந்த தன்னிலை உள்தேடும் பாடல்.(Deep innersearch).
 
வாழ்த்துகள்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/7/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 16, 2009, 10:11:48 PM7/16/09
to santhav...@googlegroups.com
சக்கரை யாயினு மிஞ்சிடும் அளவெனின் 
.. தன்சுகம் அழித்து விடும் - நதி
அக்கரை என்றுமே பச்சைதான் என்றுநம்
.. நெஞ்சமும் எண்ணி விழும் - மலை
முக்கினில் நின்றவன் சுற்றிலும் வெறுமையை
.. மட்டுமே காண்பான் என - மொழி
தொக்கியப் பாடலில் தன்சரி தமதையவர்
.. தந்திங்கு தவழவிட்டார்
 
"எதுவும் இல்லாமல் எதுவும் இல்லை; எல்லாம் எதிலும் இல்லை" எனும் கருத்தை அழகுற, தன் சுய விமர்சனத்துடன் வழங்கியிருக்கிறார்.


2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
சந்த வசந்தம்; கவியரங்கம் - 30 

akila ramasami

unread,
Jul 17, 2009, 12:44:07 AM7/17/09
to santhav...@googlegroups.com
 

உயர உயர ஆசை கொண்டோம்..
உயர்ந்த பின் என்ன கண்டோம் ??????
 
"எட்டிட இன்னும் இலக்கென ஏதுமே
          இல்லையென் றானபின்னர் - நான்
  .. இருக்கும் உயரத்தில் என்னைத் தவிரவே
          றெவரையும் காணவில்லை
  எட்டத்தில் கீழே இருப்பவர் காதினில்
          என்குரல் கேட்கவில்லை - என்
  .. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட
          எவருக்கும் நேரமில்லை"

உண்மை சொன்ன இவ்வடிகள் என் மனதை மிகவும் கவர்ந்தது..
anbudan
akila ramasami
2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

 துடிப்பு நிறைந்தஎன் வாழ்வில் ஏதோவொரு

SUBBAIER RAMASAMI

unread,
Jul 17, 2009, 1:19:06 AM7/17/09
to santhav...@googlegroups.com

சுயானுபவம் சுடர்விடுகின்ற போது கவிதை ஒளிபெற்றுவிடுகிறது.

எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமோ அதை ஒதுக்கிவிட்டு முன்னேறி

உயர்ந்து அக்கடா என்று உட்காரும் போதுதான் நாம் இழந்ததை எண்ணிப் பார்க்கிறோம். மிகவும் அருமையான ஆழமான கவிதை

 

இலந்தை

வ்வ்

2009/7/16 Siva Siva <naya...@gmail.com>

nahupoliyan

unread,
Jul 17, 2009, 6:40:28 AM7/17/09
to சந்தவசந்தம்
ய்ய்ய்ய்ய்யோவ்! இதென்னய்யோவ் அய்யம்பேட்டை!
உயர-உயரக் கவிப்பட்டரையில் இந்த ஈக்கென்ன வேலையிண்ணு நான் பாட்டுக்கொரு
பக்கம் 'தேமே'ண்ணு கெடக்கேன். ஊடாலெ நம்மையிழுக்குறீரே!
அயர அயரக் கண் பிசைந்தே
அரங்கில் யோகி பாடையிலே - என்
பெயரப் பெயர யிழுக்கின்றீர்
ஊரு,கோத்திரம் என்றே வேறே
ஒயர ஒயரட் டச் பண்றீர்
ஷாக்கிங் கனெக்ஷன் என்றெல்லோரும் அதிர்ச்சியுற

[கடைசி வரியை எதோ செய்து தட்டிக்கொட்டி ஒரு கவிதை வரி மாஅதிரி
உருவத்துக்குக் கொண்டு வரவேண்டும் - நேரமில்லை.]

நல்லவேளை இதோடு விட்டீர். இல்லாவிட்டால், இந்த
இழைக்குச்சம்பந்தமில்லாமல்
பர்சனல் பூர்வோத்தரவிவரங்களை

ஸாத்ய-ஸாங்க்ருத்ய-கௌரிவீதத் த்ரயார்ஷேயப் ப்ரவராந்விதஹ்
ஸங்க்ருதிகோத்ரஹ்
ஆபஸ்தம்ப-ஸூத்ரஹ் யஜு:சாகாத்யாயீ
நகுபோலியன் இதி ச்சத்மநாமா மழநாட்டு பிருகச்சரணம்

என்றெல்லாம் வெளியிட்டிருப்பீர்போல!

அதுபோகட்டும்: மற்றவர்களுக்குப்போடாததைத் தான் போட்டுக்கொள்ளும் உம்
நெற்றி விளங்குக!

நகுபோலியன்
*************************************************************************

On Jul 10, 9:04 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/7/9 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
> > தங்கமணி அம்மை,ஹரி கி்ருஷ்ணன்(ஹரியண்ணா),
>
> ஆகாகா அடடாடா அற்புதம் அற்புதம்.  யான் எனது நோட்டுப்புத்தகத்தில் குறித்து
> வைத்துக் கொண்டேன். :-))
> தங்கமணிக்கு அம்மையா?  நல்ல திடகாத்திரமா மாரியம்மன் பாத்துப்பா.
>  அம்மையெல்லாம் போட்டாதீங்க அரங்கத் தலைவரே!
>
> அப்புறம் இன்னொண்ணு.  அடியேனை கடைசிப் பந்தியில் அழைக்குமாறு விக்ஞாபித்துக்
> கொள்கிறேன்.  அடியேன். தாஸோஹம்.  (நகுபோலியரே! எல்லாம் சகவாச தோஷம்தான்!  நான்
> அதே வரகூர் சங்க்ருதி கூட்டத்தவன்தான்.....என் நெத்தியில் எப்பவும்
> போடுவதைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன்!)
>
> அட்டகாசம் அட்டகாசம்!  அற்புதம் அற்புதம்!  யான் ஆனந்தமாய் ரசிக்கிறேன்!
>  தொடருங்கள் மறையரே!
> --
> அன்புடன்,
> ஹரிகி.

Niranjan bharathi

unread,
Jul 17, 2009, 9:14:23 AM7/17/09
to santhav...@googlegroups.com


திரு. அனந்த் அவர்களின் கவிதையில் தத்துவச் சாறின் பிழிவைக் காண முடிந்தது.

மொத்தத்தில் அனந்த் அவர்களின் கவிதையில் ஆனந்தம் அனந்தமாக இருந்தது.

அன்புடன்,
நிரஞ்சன்



2009/7/17 nahupoliyan <n.balasu...@gmail.com>

R. Vaidyanathan Vaidyanathan

unread,
Jul 17, 2009, 9:29:08 AM7/17/09
to santhav...@googlegroups.com
 
ஓங்கி உயர்ந்தவர் உச்சியைத் தொட்டாலும்
ஏங்கித் தன்னிலை உணர்ந்ததைக் காட்ட்னார்
தூங்கிடும் எண்ணத்தைத் தட்டி எழுப்பியே
பாங்காய் கவிநெய்த  ஆனந்த் வாழ்கவே.
 
பாரதி எழிலவன்
 
 
 


2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

thangamani

unread,
Jul 17, 2009, 9:50:04 AM7/17/09
to சந்தவசந்தம்
அன்பு அடக்கம் நிதியாகும்!
...அகந்தை அழிவின் விதியாகும்!
தெம்புப் பிறரின் உயர்வாலே!
...சிறக்கும் உறவும் சேர்ந்தோங்கும்!
இன்பு படைக்கும் கருத்தாலே
...இனிக்கும் கவியால் உயர்ந்தாரே!
நன்கு சொன்னார் அறிந்தேதான்
...நாமும் அனந்தர் சீர்சொல்வோம்!


அன்புடன்,
தங்கமணி.

On Jul 16, 9:24 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> *சந்த வசந்தம்; கவியரங்கம் - 30*...
>
> read more »
>
> தலைப்பு: “*உயர உயர**”*


>
> தலைவர்: கவிமாமணி கவியோகி வேதம்
>
> <> இறை வணக்கம் <>
>
> விண்கண்ட இமயமலை மீதுறையும் சிவபரனே!
>
> தண்கொண்டல் தவழுமுயர் திருமலைவாழ் நெடுமாலே!
>
> கண்கண்ட கடவுளெனும் பழனிவளர் கந்தையா!
>
> பண்கொண்ட பாவிசைக்கப் பரிந்தெனக்கின் றருள்வீரே
>
> <> தலைமை வணக்கம் <>
>
> அறிவில், அயரா உழைப்பினில், அன்பு
>
> நெறியில் நெடிதுயர்ந்து நிற்கும் - மறைப்பெயரார்
>
> இன்றிவ் வரங்கத்து உயர்தலைமை தாங்குகின்றார்
>
> நன்றுநமைத் தாமுயர்த்தத் தான்
>
> <> அவையடக்கம் <>
>
> கற்கண்டு வைக்குமிடம் கல்கொண்டு வைத்ததுபோல்
>
> அற்பன்யான் யாத்த சிறுகவியைச் - சொற்கொண்டு
>
> பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்
>
> தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>
>
> (தா = குற்றம், குறை)
>

> * *
>
> *<**> **உயர உயர** **<>***

> 2009/7/15 Kaviyogi Vedham kaviyogi.ved...@gmail.com


>
>
>
> > ..
> > சான்றோரே! இனி’அநந்த்’ அவர்களை அழைக்கின்றேன்!
> > ..
> > எனக்கு நெருங்கிய இனிய நண்பரிவர்;
> > கனடாவில்,சிங்கையிலே எனக்கரங்கம்(பேச) தந்தவர்;
> > ..
> > பௌதிகத்தில் பல’சிக்சர்’ போட்டவர்; ஆய்வுகள்

> > பலசெய்தே மாணவர்தமைப்- Hide quoted text -
>
> - Show quoted text -

Kaviyogi Vedham

unread,
Jul 17, 2009, 11:48:59 AM7/17/09
to santhav...@googlegroups.com
அநந்த் கவியைப்பாராட்டி..
&&&&&&&&&&&&
தா ‘னுயர’க் கையாண்ட வழியெல்லாம் சொல்லியே
..சந்தத்தில் தேன்பாய்ச்சினார்!-(அநந்த்)
..சொந்தக்க தையோச்சினார்!
கானடா வந்துமே முனைப்பாக உழைத்துமே
 ..கண்டு’யர்ந்த’ நிலைநாட்டினார்!
 ..கண்பனிக்கச் சொ(ல்)லைநீட்டினார்!
தேடத் தகுந்ததெலாம் அன்பு-என்றே தான்
..தெரியாதிருந் தாராம்? ‘் சொன்னார்!-யான்
..அறியாதஓர் கதை இதுவே!
 வாடுகிறேன் என்றுவந்த அன்பருக் கெல்லாமும்
..வழங்கிடும்’அநந்த்’ அறிவேன்!-(ஓர்)கவிக்காய்
..வனைந்த-புதுக் கதை’ தெரிக!
அற்புதச் சொற்களாம்! நற்கருத் தோட்டமாம்!!
...அநந்த்’திற்கிது  ‘வேட்டக’மாம்!-சந்த(த)
..மனந்தைப்பா ராட்டுகின்றேன்!..
_____________________
இனிவரும் எழிற்கவி சுதாவேதம்;-
*******************************
நல்லரும் பண்பினள்;நாட்டியம் கற்றவள்;(வங்கியில்)
..நற்காசுக ளெண்ணுபவள்;
கொல்லனின் பட்டறை உள்ளேயும் ்போய்-ஊசி
..கொடுக்கும்தி றம்பெற்றவள்!
எல்லோரும் இவள்கவியைப் பாராட்டிப் பாராட்டி
..என்னையே விஞ்சுபவள்!
முல்லைச் செடியருகே பூத்தஓர் ரோஜாவே!
..முனகாமல் கொஞ்சுகவே!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$(யோகியார்)






Pas Pasupathy

unread,
Jul 17, 2009, 1:10:44 PM7/17/09
to santhav...@googlegroups.com
உயர உயர--
*************சுதா வேதம்
அவை வணக்கம்
 ****************
சந்த வசந்தக் கவிதை மழையில்
..சற்றே யானும் நனைகின்றேன்!இழை
வந்து மணக்கத் தந்து மகிழும்
..வாகைக் கவிகளே! வணங்குகிறேன்!-பிழை
சிந்தி இருந்தால் பொறுப்பீர் நீங்கள்!
..சின்னப் பெண்யான் கேட்கின்றேன்!-விழை
உந்து  'சக்தி' மாந்தும் தலைவர்க்கு
..உரிய வணக்கம் சொல்கின்றேன்!
..
 தலைப்பு-உயர உயர!!
*********************
 உயரப் பறக்க நோங்கும் பறவை-என்றும்
..உடனே பறக்கத் துவங்கிவிடும்;
 துயரச், சிக்கல், மேகம் கிழித்தே-அது
..துடியாய்த் துடித்தே தாண்டிவிடும்;
அயர எண்ணுமோ? அடங்க மறுக்கும்-எந்த
..ஆசை அலையையும் மீறாதோ?
முயல்போல் பாய்ந்தே முடிக்கஎண் ணாதோ?
..மூட்டைக் கனவுகள் சுமக்கு(ம்)மனம்?

 சிறகு விரித்த சிற்சில மனமோ
..சிலையாய் ஏனோ நின்றுவிடும்;
 விறகு கிட்டா(து) உழலும் நெருப்பை
..வீணாய் ”ஆசை” கிளப்பிவிடும்;
 பிறகு’பி றகென்றே தள்ளிப் போடப்,
 ..பிடிவா தங்கள் முளைத்துநிற்கும்!
 ”இறகுபோல் ஆகு! தென்றல்  இப்போ(து)
.... ‘ஏற்றும்’! என்றால் தயங்கிநிற்கும்!?
..
போலிப் பூச்சைக் கண்டு மயங்கும்;
..பொய்யை மெய்என்றே நம்பிவிடும்;
‘கோலி’ அளவு கவலை விதையையும்
..கோடி மணலென்றே காட்டிவிடும்;
தோலில் துளைக்கும் ஊசியைப் போலே
..தோல்வி தோல்வி எனப்பேசும்!
‘ஜோலிகள்’ இல்லா வம்பு மனங்கள்
..சொர்க்க ‘உயரம்’ என்(று)அறியும்?
..(வேறு)
தூக்கம் என்னும் ’மயக்கம்’ ஒன்றால்
..சோதனை வைத்தான் இறைவன்!
ஊக்கம் இன்றி உடம்பு நிமிர்ந்தால்
..உதவ மறுப்பான் தலைவன்!
ஆக்கம் நினைத்தே ‘உயரும்’ நெஞ்சில்
..ஆணி அடித்தே அமர்வான்;
நோக்கம் ஒன்றே குறியாய் உழைத்தால்
..நொடியில் பாதை அமைப்பான்!-வெற்றிப்
..படியில் ‘உயரே’ சேர்ப்பான்!
__________________________(சுதாவேதம்)



2009/7/17 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 17, 2009, 10:52:51 PM7/17/09
to santhav...@googlegroups.com
என் கவிதையைப் படித்தோர்க்கும், பாராட்டிக் கருத்துத் தெரிவித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
 
ஒரு பின் குறிப்பு: கதை எழுதுபவர்கள் குறிப்பிடுவது போல “இக்கவிதையில் காணும் நபர்கள், நிகழ்ச்சிகள் யாவும் கற்பனையே”! பசுபதி சொன்னதைப் போல  ”அகந்தை ஒருவனை ஆட்டும் அனுபவம்” பற்றி எழுதினேனே அன்றி என்னை நினைத்து எழுதவில்லை. உயரச் சென்றவர்களுக்குத் தாமே இந்தப் பிரச்சினை எல்லாம்? என்னைப் போலச் சராசரி ஆட்களுக்கு வேறு வகையான கவிதை எழுத வேண்டும்.:-)) அத்தகைய ‘சுயானுபவ’ கவிதை வேண்டுமெனில்: http://ananth.weblogs.us/archives/21 பார்க்கவும் (இதை முன்னமே ச.வ.-வில் இட்டுள்ளதால் இது குழுவில் புதிதாய்ச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே). ஒலிப்பதிவு: http://www.megafileupload.com/en/file/119824/canada-cindhu-mp3-mp3.html (இந்தச் சுட்டியில் ஒலிப்பதிவைக் கேட்பதில் பிரச்சினை இருந்தால் சொல்லவும்).
 
மணி எழுப்பிய ஐயங்களுக்கு விடை கீழே.

அனந்த்


17-7-2009


>பாப்புனையும் உம்முன் படைக்கின்றேன் ஏற்றென்றன்

>தாப்பொறுத்தல் உங்கள் தரம் <>

(தா = குற்றம், குறை)

"தா" - வெண்பா விரும்பியின் தாக்கமோ? :)

ஆம்!

>'நான் காணவில்லை' எனல் இக்காலத்திற்குச் சரிதானோ?

சரியென்னும் நினைப்பில் எழுதியுள்ளேன்.

>"என் .. ஏற்றத்தைப் பார்த்தொரு வார்த்தையைக் கூறிட
          எவருக்கும் நேரமில்லை" //

>'எவருக்கும் ஆர்வமில்லை' என்றால் இன்னும் பொருந்துமோ?

பொருந்தும். எனினும், நான் கருதியதாவது, உயரச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தனக்கு மட்டுமே வேறெதற்கும் நேரம் கிட்டாத கெடுபிடி

வரும் என்று நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு இப்போது மற்றவர்களுக்குத் தன்னைப் பார்க்கவோ கேட்கவோ நேரமில்லை என்ற அதிர்ச்சி

உண்டாகிறது என்பதே.  


--------------------
2009/7/16 Siva Siva <naya...@gmail.com>

சௌந்தர்

unread,
Jul 18, 2009, 8:15:57 AM7/18/09
to சந்தவசந்தம்
இந்தப் பாடலைப் படித்ததும் நம்ம ஊர் சி.என். டவர்தான் உவமைக்கு வருகிறது.
என்னதான் உயரமாக இருந்தாலும் அதில் ஒருவர் தங்கமுடியாது. அதன் உயரத்தில்
பத்தில் ஒருபங்கே உயரமான விடுதிகளில் ஆயிரம் பேர் தங்கலாம். உயர்வு
என்பது வெறும் அளமானத்தோடு நின்று விடுவதில்ல. ஊருக்கு என்ன பயன்
என்பதைப் பொறுத்தது.

உலகிலே உயர்ந்ததும் உன்னதக் கட்டமைப்பும் கொண்டது சி.என். டவர்.
இருந்தாலும் தனித்தே நிற்கிறது.; அதன் தலை சுற்றுகிறது (சுழலும் உணவகம்
மேல்மாடியில் உள்ளது).

உயர்வது ஒன்றே இலக்கென ஓங்கி
. . உலகிலே முதலிடம் பெற்றதும்-காண்பவர்
வியப்பினில் வீழ்ந்தே விண்ணினை நோக்கி
. .வேடிக்கை பார்த்திடும் சி.என்.டவர்

தானே உயர்ந்தது என்னுமோர் தலைக்கனம்
. . தாங்கிடும் தன்மையால் நிற்கும் தனிமரம்!
தேனே போன்றதும் தித்திக்கும் அனுபவம்
. . தேடித் தருவதே நீர்கூறும் கனிமரம்.


சௌந்தர்

akila ramasami

unread,
Jul 18, 2009, 8:36:00 AM7/18/09
to santhav...@googlegroups.com
நோக்கம் இருப்பின் ஆக்கம் நிச்சயம் ..
ஆணித்தரமான கருத்துக்கள் கொண்ட அருமையான கவிதை.
 
‘கோலி’ அளவு கவலை விதையையும்
..கோடி மணலென்றே காட்டிவிடும்;"

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்..இவை
 
akila ramasami
2009/7/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Siva Siva

unread,
Jul 18, 2009, 11:57:01 AM7/18/09
to santhav...@googlegroups.com
// தூக்கம் என்னும் ’மயக்கம்’ ஒன்றால்

..சோதனை வைத்தான் இறைவன்!
ஊக்கம் இன்றி உடம்பு நிமிர்ந்தால்
..உதவ மறுப்பான் தலைவன்!
ஆக்கம் நினைத்தே ‘உயரும்’ நெஞ்சில்
..ஆணி அடித்தே அமர்வான்;
நோக்கம் ஒன்றே குறியாய் உழைத்தால்
..நொடியில் பாதை அமைப்பான்!-வெற்றிப்
..படியில் ‘உயரே’ சேர்ப்பான்! //

தூக்கம் தான் நாம் உயர்வதைத் தடை செய்கிறது என்றுவிட்டீர்கள்! தூக்கம் என்றாலே 'உயரம்' அன்றோ!! :)

ஊக்கம் இன்றி உடம்பு நிமிர்தல் - புரியவில்லை. ஊக்கம் இல்லாவிடில் உடம்பு தளருமன்றோ? உற்சாகம்தானே உடம்பை நிமிர்த்தும்?

உழைப்பவர்க்கே ஈசன் உதவுவான் - நல்ல கருத்து.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/7/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

உயர உயர--
*************சுதா வேதம்

thangamani

unread,
Jul 18, 2009, 12:44:20 PM7/18/09
to சந்தவசந்தம்
உயர்ந்திடவே எண்ணமுற்று ஊக்கமுடன் உழைத்திட்டால்
வியந்திடவே வெற்றியென்று விதந்தசுதா கவிஉயர்வே!

அன்புடன்,
தங்கமணி.

> 2009/7/17 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>:


>
>
>
> > _____________________
> > இனிவரும் எழிற்கவி சுதாவேதம்;-
> > ******************************
> > *
> > நல்லரும் பண்பினள்;நாட்டியம் கற்றவள்;(வங்கியில்)
> > ..நற்காசுக ளெண்ணுபவள்;
> > கொல்லனின் பட்டறை உள்ளேயும் ்போய்-ஊசி
> > ..கொடுக்கும்தி றம்பெற்றவள்!
> > எல்லோரும் இவள்கவியைப் பாராட்டிப் பாராட்டி
> > ..என்னையே விஞ்சுபவள்!
> > முல்லைச் செடியருகே பூத்தஓர் ரோஜாவே!
> > ..முனகாமல் கொஞ்சுகவே!

> > $$$$$$$$$$$$$$$$$$$$$$$$(யோகியார்)- Hide quoted text -

Chandar Subramanian

unread,
Jul 18, 2009, 10:23:37 PM7/18/09
to santhav...@googlegroups.com

//பிறகு’பி றகென்றே தள்ளிப் போடப்,
 ..பிடிவா தங்கள் முளைத்துநிற்கும்!//

பிடிவாதத்தின் வேரை அடையாளம் காட்டியது நன்று.
 
//தூக்கம் என்னும் ’மயக்கம்’ ஒன்றால்
..சோதனை வைத்தான் இறைவன்!//

தூக்கத்துக்கு இப்படி ஒரு வடிவம் உண்டென்பதை காட்டியதற்கு நன்றி.
 


 
2009/7/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 18, 2009, 11:14:30 PM7/18/09
to santhav...@googlegroups.com
சாக்குப் போக்குச் சொல்லிக் காலம்
.. தள்ளும் மனிதர் முன்னேறார்
 
நோக்கில் உறுதி கொண்டோர் உயர்வை
.. நொடியில் அடைவார் எனப்புகன்றார்

அனந்த் 18-7-2009

பி.கு. ‘உயரப் பறக்க நோங்கும் பறவை’ - நோங்கும்? நோக்கும் என்றிருக்க வேண்டுமோ?

 

2009/7/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
Jul 19, 2009, 11:13:46 AM7/19/09
to santhav...@googlegroups.com
மேலும் விவரமாகக் கூடப் பாட  வாய்ப்புக் கொடுக்கும் நல்ல சில கருத்துகள்
கொண்ட கவிதை.
 
சுதாவுக்குப் பாராட்டுகள்!
 


 
2009/7/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 20, 2009, 11:42:21 AM7/20/09
to santhav...@googlegroups.com
கவி சுதா..வுக்குப் பாராட்டு;-(யோகியார்)
பிழைசிந்தி னால் பொறுப்பீர் எனசொல்லிப் ப்ரமாதத்
தழைக்கவி தளிர்க்கவைத்த சுதாவுக்குப் பாராட்டு!்.
..
 அவர்க்கு சிவசிவா விடுத்த கேள்விக்
கவலைகளை(கணை..?) சுதாவிட மே விட்டு .இப்போது
..
அடுத்தகவி பாரதி எழிலவனை அரங்கழைப்பேன்!
துடிப்புடைய ‘கலைக்கழகக்’( சென்னை,பாரதிகலைக்கழகம்) கவிஞரிவர்!..அம்மட்டோ..?
..
கதைகளும் எழுதுபவர்;குறுநாவல் கையிலுண்டு;
இதமாய்ப் பிரசுரிப்போர் யாரேனும் உண்டா?என்
..
றாவலுடன் சகோரம்போல்(மேகம் எதிர்பார்க்கும் புள்) எதிர்பார்த்துக் காத்துள்ளார்!
பாவலர் யாருமிங்கே தாயார்போல் முன்வரலாம்;..
..
(நாவல்)
பால் ஏந்தும்  கிண்ணமாய் அச்சு முத்தம்தர!
நூல்பல கண்ட”மயனின்’ நுங்குச் சோதரரிவர்!
..
எழில்மலர்,எழிலோவியம்’-இந்தசில நூல்களின்
இழைக்கருணைக் கவியிவரை இங்கு”உயர’ அழைக்கின்றேன்!
எழிலவ! தம்பீவா! இவ்வரங்கில்(உன் எழில்) விரித்திடு!!
*********************************(யோகியார்)
(முன்பே அவரெனக்குத் தன்பா அனுப்பியதால்..இதோ..வருகிறது)
(ஆகவே உடனே சந்தர்சுப் ரமணியனைத் தயாராய் இருக்க..என் விண்ணப்பம்!!)
யோகியார்-

2009/7/19 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 20, 2009, 12:47:39 PM7/20/09
to santhav...@googlegroups.com

கவி-எழிலவன்
____________
 ‘சந்தவசந்தம்' அறிஞர்களுக்கு  இந்த எளியோன் பாரதி எழிலவனின்

இனிய வணக்கங்கள்.  இதுதான் எனது முதல் கவியரங்கம் சந்தவசந்தத்தில்.

இணையதளம்,- தட்டச்சும் புதியது, ஆகவே பிழைகளை மன்னித்து நிறைகளை

(ஏதாவது இருந்தால்!) ஏற்று  ஊக்கம் அளிப்பீர்களாக.இது எனது வேண்டு-

கோள்.

கவியரங்கம்: 30.   யோகியார் தலைமை.
****************************

தமிழ்  வாழ்த்து.:-

கோலமெழில் கொஞ்சுதமிழ் குவலயத்தி லெங்கும்

மூலப்பொரு ளாகக்கவி முழுமனதில் தங்கும்

மாலவனும் இலக்குமியும்  சரஸ்வதியும் கொஞ்சும்

பாலனவன் முருகன்மனம்  மகிழும்தமிழ் வாழ்க.

அவை வாழ்த்து.;-
^^^^^^^^^^^^^^^

செந்தமிழும் என்நாவில் சீர்கவிதை யாகும்

சொந்தமென கவிமனங்கள் சேர்ந்து இசைபாடும்

பந்தமென கவிஞரெலாம்  பரவி(இ)ணையம் நாடும்

முந்தையாரின் முழுமைநெறி முழங்குமனம் வாழ்க.

அரங்கத்தலைவர்.
$$$$$$$$$$$$$

கொஞ்சுதமிழ் அஞ்சலென பிஞ்சுநடை போடும்

நெஞ்சமெலாம் இன்பமெழ தஞ்சமென ஆடும்

கஞ்சமலர் தேவிபதம்  விஞ்சியருள் கூடும்

தஞ்சமென தரணியெலாம்  தாளடியை நாடும்.

என=

யோகக்கலை பயிற்றுவிக்கும் யோகம்நிறை சீலர்

யாகமெனத் தமிழ்க்கவிதை ஆர்க்கும்கவி வீரர்

'போக'மதை யோகமெனப் போற்றுமுயர் தீரர்

லோகம்புகழ் ”லகரி”பாபா சீடர்புகழ் வாழ்க.!
 
 
 
 

கவிதை:  உயர உயர.
****************

வாழ்வில் உயர்வை  வேண்டும் மாந்தர்

     ஒவ்வொரு  நாளும் உழைப்ப துண்டு

தாழ்வும் வீழ்வும் இணைந்த  வாழ்க்கை

      தாரணி  முழுதும் வழக்கி லுண்டு;

ஊழ்வினை என்று வாழ்பவ  ரெல்லாம்

      உழைக்க  மறுக்கும் சோம்பி கள்தாம்!

காழ்ப்புணர் வில்லா மனத்தைக் கொண்டோர்

       கடமை யிலென்றும் வழுவி லர்தாம் ;

இறைமை என்பது ஆன்மீக  சக்தி!

       இன்பம் அதுவே பேரரும் சக்தி;

முறைமை யாக இறையை  வேண்ட

       முன்னர் வினைகள் நீங்கிப் போகும்;

திறமை இருப்போர் அதனுள் மூழ்க

       தானெனும் அகந்தை விலகிப் போகும்;

கருமை மனத்தோன்  சிறுமை அடையான்;

       கருணை உடையோன் பெருமை அடைவான்.

தன்னை மதித்து திறமை  உணர்ந்து,

       தேர்ந்த காரியம் திறனைத் தெரிந்து

முன்னர் இடர்கள் நினைவில்  பொதிந்து

       முழுதாய் செயலில் முனைந்து,- இறங்கி

பின்னர் துயர்கள் பிளந்து  களைந்து

        புதுப்பொலி வுடனே புலனைத் திருத்தி

 ‘வின்னர்' நாம்தான் என்னும் மனத்துடன்

         உயர முயன்றால் உயர்வு உறுதி;

உயர நினைப்போன் தன்னை உணர்ந்து

        உரிய வழியில்  பயணம் செய்தால்,

உயரம் என்பது தொலைவில் இல்லை;

        உந்தன் நிழலாய் அதுவும் உயரும்!

துயரம் கொண்டு துவண்டு விடாமல்

        தோல்வி என்பதைப் படியாய் நினைத்தால்,

முயலும் செயலிற்  தோல்வியே இல்லை;

         முழுதும் வெற்றி உயர்வு நிச்சயம்,
 
 

உயர்ந்தோன் மேலும் உயர  முயன்றால்,

      ஒவ்வா  முயற்சி குழியில் தள்ளும்;

பயந்து பயந்து மேலே சென்றால்

      பயமே  அவனைப் பாய்ந்து கொல்லும்;

நயந்து இரந்து உச்சிக்  குயர்ந்தால்

      நயவஞ்  சகரென ஊரே தூற்றும்;

முயற்சி தளரா மனத்தைக் கொண்டால்,

      முழுதாய்  உயர்வு தோதாய் அமையும்.(பாரதி எழிலவன்)    

                 -------  00000 --------    

                                -    

                               


2009/7/20 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

sudhavedham2008 sudhavedham2008

unread,
Jul 20, 2009, 2:20:33 PM7/20/09
to santhav...@googlegroups.com
என் கவிதை பற்றி கருத்துசொன்னவர் அனைவர்க்கும் என் தனி நன்றி..இனி. என் பதில்
சிவசிவாஅங்கிளுக்கு...
எப்படி அங்கிள்..? தூக்கம் என்றாலே உயர்வு..என்கிறீர்கள்?
அப்போ அதிகத் தூக்கம் என்றால் அதிக உயர்வு.. ஆய்விடுமோ.?
யோசிக்கவும்.
என்னைப்பொறுத்தவரை நான் எழுதியது ’அதிகத்’ தூக்கத்தைக்குறிப்பிட்டுத்தான்.
ஷீரடி சாயீ பாபா நள்ளிரவுத் த்யானத்திலிருந்து பரணில் கட்டிய
கயிற்றுத்தூளியில் இருந்து
கீழே இறங்கி(சாவடி தர்கா!) தூங்கிவிழும் தன் அத்யந்த தீவிர பக்தர்களை
இப்படித் தூங்கி விழுந்தீர்களானால் எப்படி ஐயா இறைவனை நெருங்க முடியும்?
என்று அதட்டுவாராம்.
பிறகு அவர்களுடன் நாம பஜனில் தாமும் பாடி தூக்கம் விரட்டி இன்பத்
த்யானத்தில் ஆழ்த்துவாராம். சாயிசரிதையில் படித்துளேன்.(காண்க..
சுத்தாநந்த பாரதியின்.சாயி சரிதை..)
தூக்கம் என்பது ஓர் மாயையே.. ஆம்..அது ஒரு மயக்க நிலையே..
சிறு வயதிலிருந்து (8 மணி, 9 மணி? என)நாம் அதற்குப் பழகியதாலேயே தூங்கித்
தூங்கிவிழுகிறோம்.. 3 மணி நேரம் ஓய்வு அல்லது தூக்கம் போதும் என எங்கள்
வீட்டுப்பக்கத்திலிருந்த அப்பாவின் நண்பர் நாவலாசிரியர் தி. ஜானகிராமன்
சொல்வார்.அப்பா நண்பர். அன்பர் நா.பா..வும் முதல்--இரவு.. மணி
10.30லிருந்து 3 மணி வரை தான் தூங்கிவிட்டு
சடக்கென்று எழுத உட்கார்வாராம்.இது அவர்தம்(controlled)தூக்க நிலையாக இருந்துளது.
ஜப்பானியர்களில் கிமோட்டொ..அல்லது ஷிமோட்டோ(?).. த்யானப் பயிற்சி பெற்றவர்கள்
நள்ளிரவு 2 மணி நேரமே தூங்குவார்கள் என ஒரு ஜப்பானியப் பயிற்சி நூலில்
முன்பு படித்துள்ளேன்.. விழித்திரு..தனித்திரு..என்பது வள்ளலார்
வாக்கியம்..அறிவீர்களே..?
இது இப்படியிருக்க தூக்கம் ஒரு உயர்வு என்று சிறு பெண் என்னைத் திசை
திருப்பலாமா?மன்னிக்கவும்.
2)-உடம்பு நிமிர்தல்.. என்பது இங்கே ego-அல்லது திமிர் பிடித்து(சோம்பலால் கூட)
அலைதல்..எனக் குறிக்க வந்தது...நன்றாக யோசித்துப்பாருங்கள்.கவிதையில்
சொற்செட்டு வேணுமென்பீர்களே..உள்ளுறைப் பொருளால்தானே சொல் இங்கு
குறிப்பிட முடியும்..
அகராதி பார்க்கவும்..” நிமிர்தல்” என்பது அகம்பாவத்தினால் கூட வரும்
என்று சொல்லியிருப்பானே?...பார்த்து எனக்குத் தெளிவு படுத்த
வேண்டுகின்றேன்.உங்களைத்தவிர “இந்த’ இடத்தில்் மற்ற ரசிகர்கள்.. நான்
சொல்லிய அர்த்தத்தில் புரிந்துகொண்டிருக்கிறார்கள்..அல்லவா..?.மேலும்
உற்சாகம்.. (நீங்கள் சொல்லியவாறு...)மனத்தை அழகாய் நிமிர்த்தும்.. உடம்பை
அல்ல..!அப்பாடி.. கடைசி வரியிலாவது
என் கவி பற்றி ஒரு வார்த்தை பாராட்டிச் சொன்னீர்களே..மெத்த நன்றி அங்கிள்..
நிச்சயம் நீங்கள் சரியாகக் கருத்து சொன்னால் இந்த சின்னப்பெண் திருத்திக்கொள்வாள்.
ஆகவே சொல்க.. சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் என் கவியும் ஊன்றிப்படிப்பது கண்டு.
தங்கள் அன்பு உள்ளம் எனக்குப்பிடித்திருக்கிறது.
3)-- இனி அநந்த்.. அங்கிள் குறிப்பிட்ட..’நோங்கும்’ எனும் சொல்.
இது சின்ன வயசிலிருந்து என் பாட்டி(அம்மாவின் தாயார்) அதைப்பயன்படுத்தும்
தாக்கத்தினால் எனக்கு இக்கவியில் வந்திருக்கலாம்... என்னடா.(என்
தம்பியைப்பற்றி..உலுக்கி எழுப்பி)சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமைன்னா.. 10
மணி வரை தூங்கரே..?சீக்கிரம் எழுந்து குளித்து காரியத்தில்
நோங்குடா(ஆழ்ந்து ஈடுபடுடா..?).எவ்வளவு ஹோம் வொர்க் இருக்கு..வேலை
இருக்கு.. இப்படித் தூங்கி வழிந்தால் எப்படி பிற்காலத்தில்
ஆபீஸ் வேலை பார்ப்பே..அங்கு மேனேஜர் விரட்டும்போதுதாண்டா
உங்களுக்கெல்லாம் புத்திவரும்..? என்று அதட்டுவாள்..
என் தம்பி ஸ்வாமியோ ..போ பாட்டி. ஒரு லீவு நாளில் கூட எக்ஸ்ட்ரா
தூக்கம் தூங்கவிட மாட்டேங்கறே.என் மேனேஜர் மத்யானம் தூங்கரதுக்குன்னே
அங்கே ஒரு டேபிள் போட்டிருப்பான்..பார்!.பாட்டி... அப்பேற்பட்ட
ஆபீஸில்தான் நான் வேலைக்குச் சேரப்போகிறேனாக்கும். என்று.. அவளை
டபாய்ப்பான்..நல்ல தமாஷ்.. ஒவ்வொரு லீவின் போதும்.
நன்றி.. என் கவிச்சொற்களைப்பற்றி.. பல அங்கிள்,மற்றும் .தங்கமணி ஆண்ட்டி
ஆகியோருக்கு.குறிப்பாய் எழிலவன் அங்கிள் அப்படியே தூக்கி ஆகாசத்தில்
போட்டுவிட்டார்.
என் தலை,”நிமிராமல்’இருக்கணுமே..காமாக்‌ஷீ காப்பாத்து..!
சுதாவேதம்--

2009/7/18 Siva Siva <naya...@gmail.com>:

--
சுதாவேதம்

Siva Siva

unread,
Jul 20, 2009, 3:25:59 PM7/20/09
to santhav...@googlegroups.com


2009/7/20 sudhavedham2008 sudhavedham2008 <sudhave...@gmail.com>

// தூக்கம் என்றாலே 'உயரம்' அன்றோ!! :) //

முன்னம் எழுதியதில் முடிவில் இருந்த சிரிப்பானைக் கவனிக்க!

பலரும் தரையில் படுக்காமல் கட்டிலில் 'ஏறி'த்தானே உறங்குகின்றனர்.

தூக்கம்² , n. < தூக்கு-. 1. [T. tūkamu, K. tūka.] Weighing; நிறுப்பு. தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது (S. I. I. ii, 339). 2. Rise in price; விலை யேற்றம். விலை தூக்கமாயிருக்கிறது. 3. Height; உயரம். (உரி. நி.)





2)-உடம்பு நிமிர்தல்.. என்பது இங்கே ego-அல்லது திமிர் பிடித்து(சோம்பலால் கூட)
அலைதல்..எனக் குறிக்க வந்தது...நன்றாக யோசித்துப்பாருங்கள்.கவிதையில்
சொற்செட்டு வேணுமென்பீர்களே..உள்ளுறைப் பொருளால்தானே சொல் இங்கு
குறிப்பிட முடியும்..
அகராதி பார்க்கவும்..” நிமிர்தல்” என்பது அகம்பாவத்தினால் கூட வரும்
என்று சொல்லியிருப்பானே?...பார்த்து எனக்குத் தெளிவு படுத்த
வேண்டுகின்றேன்.உங்களைத்தவிர “இந்த’ இடத்தில்் மற்ற ரசிகர்கள்.. நான்
சொல்லிய அர்த்தத்தில் புரிந்துகொண்டிருக்கிறார்கள்..அல்லவா..?.மேலும்
உற்சாகம்.. (நீங்கள் சொல்லியவாறு...)மனத்தை அழகாய் நிமிர்த்தும்.. உடம்பை
அல்ல..!அப்பாடி.. கடைசி வரியிலாவது
என் கவி பற்றி ஒரு வார்த்தை பாராட்டிச் சொன்னீர்களே..மெத்த நன்றி அங்கிள்..
நிச்சயம் நீங்கள் சரியாகக் கருத்து சொன்னால் இந்த சின்னப்பெண் திருத்திக்கொள்வாள்.
ஆகவே சொல்க.. சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் என் கவியும் ஊன்றிப்படிப்பது கண்டு.
தங்கள் அன்பு உள்ளம் எனக்குப்பிடித்திருக்கிறது.

இப்பாடலில் நிமிர் என்ற சொல்லிற்கு இப்பொருளும் பொருந்தும் போல்.

நிமிர்தல் - 6. To bend, shake; நுடங்குதல். மின்னுநிமிர்ந் தனையராகி (மதுரைக். 679).

 

3)-- இனி அநந்த்.. அங்கிள் குறிப்பிட்ட..’நோங்கும்’ எனும் சொல்.
இது சின்ன வயசிலிருந்து என் பாட்டி(அம்மாவின் தாயார்) அதைப்பயன்படுத்தும்
தாக்கத்தினால்  எனக்கு இக்கவியில் வந்திருக்கலாம்... என்னடா.(என்
தம்பியைப்பற்றி..உலுக்கி எழுப்பி)சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமைன்னா.. 10
மணி வரை தூங்கரே..?சீக்கிரம் எழுந்து குளித்து காரியத்தில்
நோங்குடா(ஆழ்ந்து ஈடுபடுடா..?).எவ்வளவு ஹோம் வொர்க் இருக்கு..வேலை
இருக்கு.. இப்படித் தூங்கி வழிந்தால் எப்படி பிற்காலத்தில்
 ஆபீஸ் வேலை பார்ப்பே..அங்கு மேனேஜர் விரட்டும்போதுதாண்டா
உங்களுக்கெல்லாம் புத்திவரும்..? என்று அதட்டுவாள்..
 என் தம்பி ஸ்வாமியோ ..போ பாட்டி.  ஒரு லீவு நாளில் கூட எக்ஸ்ட்ரா
தூக்கம் தூங்கவிட மாட்டேங்கறே.என் மேனேஜர் மத்யானம் தூங்கரதுக்குன்னே
அங்கே ஒரு டேபிள் போட்டிருப்பான்..பார்!.பாட்டி... அப்பேற்பட்ட
ஆபீஸில்தான் நான் வேலைக்குச் சேரப்போகிறேனாக்கும். என்று.. அவளை
டபாய்ப்பான்..நல்ல தமாஷ்.. ஒவ்வொரு லீவின் போதும்.

நூங்கு என்ற சொல் பேச்சில் நோங்கு என்று வந்திருக்குமோ?
நூங்கு²-தல் , 5 v. intr. < நூங்கு. To be great, intense or abundant; to exceed; மிகுதல். (W.)

 

நன்றி.. என் கவிச்சொற்களைப்பற்றி.. பல அங்கிள்,மற்றும் .தங்கமணி ஆண்ட்டி
 ஆகியோருக்கு.குறிப்பாய் எழிலவன் அங்கிள் அப்படியே தூக்கி ஆகாசத்தில்
போட்டுவிட்டார்.
என் தலை,”நிமிராமல்’இருக்கணுமே..காமாக்‌ஷீ காப்பாத்து..!
சுதாவேதம்--

2009/7/18 Siva Siva <naya...@gmail.com>:
> // தூக்கம் என்னும் ’மயக்கம்’ ஒன்றால்
> ..சோதனை வைத்தான் இறைவன்!
> ஊக்கம் இன்றி உடம்பு நிமிர்ந்தால்
> ..உதவ மறுப்பான் தலைவன்!
> ஆக்கம் நினைத்தே ‘உயரும்’ நெஞ்சில்
> ..ஆணி அடித்தே அமர்வான்;
> நோக்கம் ஒன்றே குறியாய் உழைத்தால்
> ..நொடியில் பாதை அமைப்பான்!-வெற்றிப்
> ..படியில் ‘உயரே’ சேர்ப்பான்! //
>
> தூக்கம் தான் நாம் உயர்வதைத் தடை செய்கிறது என்றுவிட்டீர்கள்! தூக்கம் என்றாலே
> 'உயரம்' அன்றோ!! :)
>
> ஊக்கம் இன்றி உடம்பு நிமிர்தல் - புரியவில்லை. ஊக்கம் இல்லாவிடில் உடம்பு
> தளருமன்றோ? உற்சாகம்தானே உடம்பை நிமிர்த்தும்?
>
> உழைப்பவர்க்கே ஈசன் உதவுவான் - நல்ல கருத்து.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>


Chandar Subramanian

unread,
Jul 21, 2009, 9:29:23 AM7/21/09
to santhav...@googlegroups.com
//உயர்ந்தோன் மேலும் உயர  முயன்றால்,

      ஒவ்வா  முயற்சி குழியில் தள்ளும்;
பயந்து பயந்து மேலே சென்றால்
      பயமே  அவனைப் பாய்ந்து கொல்லும்;
நயந்து இரந்து உச்சிக்  குயர்ந்தால்
      நயவஞ்  சகரென ஊரே தூற்றும்;
முயற்சி தளரா மனத்தைக் கொண்டால்,
      முழுதாய்  உயர்வு தோதாய் அமையும்//
 
கவிதையின் சிகரமாயமைந்த கடைசிப்பாடல். உயர்வுக்கான இலக்கணத்தை வரைந்து கொடுத்துள்ளார். அருமையான பாடலுடன் முடியும் கவிதை நன்று.
 
 


 
2009/7/20 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

akila ramasami

unread,
Jul 21, 2009, 10:02:35 AM7/21/09
to santhav...@googlegroups.com
ஊக்கம் தரும் அருமையான கருத்தாழமிக்க கவிதை..
 
"உயரம் என்பது தொலைவில் இல்லை;

        உந்தன் நிழலாய் அதுவும் உயரும்!

துயரம் கொண்டு துவண்டு விடாமல்

        தோல்வி என்பதைப் படியாய் நினைத்தால்,

முயலும் செயலிற்  தோல்வியே இல்லை;

         முழுதும் வெற்றி உயர்வு நிச்சயம், "
 
பொக்கிஷமாய் காக்க வேண்டிய கருத்துக்கள் இவை.
 
akila ramasami

2009/7/20 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
It is loading more messages.
0 new messages