வஸுப்ரதன் - ஒரு விளக்கம்

7 views
Skip to first unread message

Rajagopalan Soundararajan

unread,
Sep 3, 2026, 7:54:19 PM (8 days ago) Sep 3
to சந்தவசந்தம்

ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இருமுறை வரும் நாமங்கள் பல உள. அவை வெவ்வேறு ஶ்லோகங்களில் வருபவை. ஆனால் ஒரு விதிவிலக்காய் அடுத்தடுத்து அதே திருநாமம் வருமிடம் ஶ்லோக எண் 74.

மனோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத:

வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநா ஹவி:  (74)

இந்த ஶ்லோகத்தில், வஸுப்ரத: இருமுறை அடுத்தடுத்து வருவதைப் பார்க்கலாம். வஸுப்ரத: என்றால் ‘செல்வத்தைக் கொடுப்பவன்’ என்று பொருள். அப்படி எந்த செல்வத்தை அடுத்தடுத்துக் கொடுத்தான் கண்ணன்?

மதுரையில் வஸுதேவருக்கு மகனாகப் பிறந்து ‘பகவானே தனக்கு மகனாகப் பிறந்தான்’ என்ற பெருமைக்குரிய செல்வத்தை அவருக்கு வழங்கி, அடுத்த நிமிடமே ஆற்றைக் கடந்து ஆயர்பாடிக்குப் போய் நந்தனிடம் மகனாக வளர்ந்து பால லீலைகளை அநுபவிக்கும் செல்வத்தைத் தந்தமை இங்கே காட்டப்பெறுகிறது. ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய்’ வளர்ந்தமை.

இதை குலசேகர ஆழ்வார், ‘ஆலை நீள் கரும்பு’ பாசுரத்தில், 

‘உந்தை யாவன் என்றுரைப்ப நின்செங்கேழ் 

. . விரலினும் கடைக்கண்ணினும் காட்ட

நந்தன் பெற்றனன் நல்வினையில்லா 

. . நங்கள்கோன் வஸுதேவன் பெற்றிலனே”

என்றி இரு தந்தையரையும் காட்டி, ‘நந்தனே என் தந்தை’ என்று குழந்தைக் கண்ணன் சுட்டிக்காட்ட, பெற்ற தந்தை வஸுதேவன் இந்த அநுபவத்தைப் பெற்றிலனே என்று வருந்துகிறார்.

ஆனாலும், இரு தந்தையருக்கும் ஆனந்தம் ஒருசேரக் கொடுத்து மகிழ்ந்தான் கண்ணன் என்பதைக் காட்டும் வெண்பா

 ஆற்றைக் கடந்துவந் தாயனுக் கானந்தப்

பேற்றைக் கொடுத்தும்,முன் பெற்றதனால்-ஏற்றம்

வஸுதேவற் கீந்தும், இருபாலும் மாலன்

வஸுப்ரதன் ஆனான் மகிழ்ந்து.

ஸௌந்தர் 

Subbaier Ramasami

unread,
Sep 4, 2026, 9:59:00 AM (8 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
அருமை

On Thu, Sep 3, 2026 at 6:54 PM Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:

ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இருமுறை வரும் நாமங்கள் பல உள. அவை வெவ்வேறு ஶ்லோகங்களில் வருபவை. ஆனால் ஒரு விதிவிலக்காய் avasantham/d1c90c7f-b205-40bd-83e9-7b4d29dafdb4n%40googlegroups.com.

Siva Siva

unread,
Sep 4, 2026, 10:11:02 AM (8 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
Nice veNbA.

V. Subramanian

On Thu, Sep 3, 2026 at 7:54 PM Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:

ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இருமுறை வரும் நாமங்கள் பல உள. அவை வெவ்வேறு ஶ்லோகங்களில் வருபவை. ஆனால் ஒரு விதிவிலக்காய் அடுத்தடுத்து அதே திருநாமம் வருமிடம் ஶ்லோக எண் 74.

மனோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத:

வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநா ஹவி:  (74)


,,,


ஆற்றைக் கடந்துவந் தாயனுக் கானந்தப்

பேற்றைக் கொடுத்தும்,முன் பெற்றதனால் - ஏற்றம்

Kaviyogi Vedham

unread,
Sep 4, 2026, 11:02:35 AM (7 days ago) Sep 4
to santhav...@googlegroups.com
nalla vilakkam congrats,
 yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOn4HEsyqatG89fvzfeygmSc8X9HOFcucu6AhtPBomgqQ%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Sep 5, 2026, 2:19:49 PM (6 days ago) Sep 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அருமையான வெண்பா
Reply all
Reply to author
Forward
0 new messages