, n. < அயிராவணி, `consort of அயிராவணன், owner of airāvaṇa.' 1. Indrāṇī, Indra's consort; இந்திராணி. (நாலடி, 381.) 2. Pārvatī; பார்வதி. (திவா.)
*அயிராவணம் ayirāvaṇam381. அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
(பொ-ள்.)அரும்பெறல் கற்பின் அயிராணி அன்ன பெரும் பெயர்ப் பெண்டிர் எனினும்-பெறற்கரிய கற்பொழுக்கமுடைய அயிராணி என்னுந் தேவர்கோன் மனைவிபோல் வாழ்க்கையிற் பெரிய புகழ்வாய்ந்த மகளிராயினும், விரும்பிப் பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத்துணை - அவருள், உணவு முதலிய பொருள்களை விரும்பி அவற்றை அடையும் வேட்கையால் தன் பின்னே இரந்து நிற்கும் இரவலர் இல்லாமையையே தனது இல்லற வொழுக்கத்தாற் காத்தொழுகும் இயற்கை மணங் கமழு நெற்றியையுடைய பெண்ணே அவ் வில்லறத்தின் பயன்களாகிய மேன்மேல் நன்மைகட்குத் துணையாவாள்.
(க-து.)கற்புடை மகளிர்க்கு விருந்து புறத்தரும் இயல்பு இன்றியமையாதது.
*அயிராணி ayirāṇi, n. < அயிராவணி, `consort of அயிராவணன், owner of airāvaṇa.' 1. Indrāṇī, Indra's consort; இந்திராணி. (நாலடி, 381.) 2. Pārvatī; பார்வதி. (திவா.)
*அயிராவணம் ayirāvaṇam, n. < airā- vaṇa. 1. Indra's elephant; இந்திரன் யானை. (பிங்.) 2. Elephant of Kailāsa, said to have 2000 tusks, vehicle of Šiva; கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந் திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92). 3. State elephant; பட்டத்து யானை. (சீவக. 30, 46.)