என்னோடு நானிருந்தேன்

9 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Sep 20, 2021, 10:03:54 AM9/20/21
to santhavasantham


என்னோடு நானிருந்தேன்

 

தன்னோடு தானே தனியா யிருக்கையிலே
பின்னோடிப் பார்த்தேன் , பெரிதாக - ஒன்றுமிலை
என்னாகும் என்றவோர் ஏதமும்  எண்ணாமல்
என்னோடு நானிருந் தேன்

உள்ளே பதிந்த ஒருகோடிப் பொல்லாப்பைக்
கிள்ளி எறிந்தேன் ,  கிளுகிளுத்தேன் – உள்ளபடி
இந்நேரம் தானே இனிதான நேரமென
என்னோடு நானிருந் தேன்றே

நீதான்நான், நாந்தான்நீ, நிச்சயமாய் நம்பென்றே
ஓதாமல் சொன்ன உரைகேட்டேன் – நாதாநான்
உன்னோடி ருக்கும் உறவினை வேண்டியே
என்னோடு நானிருந் தேன்.

வந்ததென்ன,  வந்து மறைந்தென்ன,  நானள்ளித்
தந்த தென்ன, தாராத் தடைகளென்ன – சிந்தையிலே
என்ன கணக்கிணையும்  எட்டிப் புறந்தள்ளி
என்னோடு நானிருந்தேன்

காத்தாடி யாக க் ககனம் பறக்கின்றேன்
ஆத்தாடி நல்லதொரு ஆர்ப்பாட்டம்- கூத்தாட்டம்
என்சொல்ல, காற்றாடி நானே , கயிறும்நான்
என்னோடு நானிருந்தேன்

Vis Gop

unread,
Sep 20, 2021, 12:36:43 PM9/20/21
to santhav...@googlegroups.com

தன்னோடு தானே தனியா யிருக்கையிலே 
பின்னோடிப் பார்த்தேன் , பெரிதாக - ஒன்றுமிலை

இன்றும் பெரிதாய் இயற்ற விருப்போர்க்குச்
சென்றவை எல்லாம் சிறிது!
கோபால். 


Sent from my iPhone

Kaviyogi Vedham

unread,
Sep 21, 2021, 3:21:34 AM9/21/21
to santhavasantham
அட்டகாசம். படிக்கும்போதே எங்கோ பறந்தேன்
 வாழ்க இலந்தை. புதிய உணர்ச்சி கிளப்பியதற்கு
 யோகியார்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBeHBoPVX9csriAmnnojZyfyPSOod%2Bbx36VJuffh%3D_%2BAA%40mail.gmail.com.

Vivek Bharathi

unread,
Sep 21, 2021, 3:16:21 PM9/21/21
to santhav...@googlegroups.com
ஐயா அபாரம்... இது என்னை எழுத வைத்தது... 

உன்றன் அடியில் ஓரணுவாய் 
உயிரில் ஒளிரும் தீப்பொறியாய் 
கன்றைப் போலுன் காலடியில் 
கனிந்து கிடக்கும் அன்புளமாய் 
என்னைப் படத்த என்னிறைவா 
எனக்குள் நீயே இருந்துகொண்டு 
என்ன கூத்து செய்கின்றாய்?
என்னை எங்கே தேடுகிறாய்?

வானுக் குள்ளே முகில்வைத்தாய் 
முகில்க ளுக்குள் மழைவைத்தாய் 
ஆன மழைக்குள் உயிர்வளரும் 
ஆற்றல் மூலம் அதைவைத்தாய் 
மோன விதைக்குள் மரம்வைத்தாய் 
மரத்தில் இன்னோர் விதைவைத்தாய் 
ஏனோ எனக்கே இவைத்தாய் 
என்னை எங்கே தேடுகிறாய்? 

எங்கும் வியாபித் திருப்பாயே 
என்னை எங்கே தேடுகிறாய்? 
எங்கும் செயல்கள் செய்வாயே 
என்னை எங்கே தேடுகிறாய்?
சிங்கக் கூட்டில் மறைவதெனும் 
தந்தி ரம்போல் உன்னடியை 
இங்கே பற்றிக் கொண்டுள்ளேன் 
என்னை எங்கே தேடுகிறாய்? 

உண்மை யிலேயா தேடுகிறாய் 
ஊருக் காக நடிப்பாயா? 
அண்மை இருந்தும் பாராமல் 
அகன்று போயேன் தேடுகிறாய்?
கண்ணி மைத்தால் தெரிகின்ற 
காலின் நினைப்பே கொண்டுள்ளேன் 
ஏலும் எனைநீ அறிவாய்பின் 
என்னை எங்கே தேடுகிறாய்?

தேடத் தேடத் தொலைகின்றேன் 
தேம்பித் தேம்பி அழுகின்றேன் 
ஓட ஓட பார்க்கின்றேன் 
உன்றன் பார்வை படுமிடத்தை 
நாடிப் பிடிக்க நினைக்கிறேன் 
நானாய் என்ன செய்தாலும் 
சாடிச் சொடுக்கும் சாட்டையுன் 
ஜாலம் இன்றி நானேது?? 

-22.09.2021

Vivek Bharathi

unread,
Sep 21, 2021, 3:19:21 PM9/21/21
to santhav...@googlegroups.com
~திருத்தங்கள்~

*படைத்த 
*இவைவைத்தாய்
*எண்ணும் எனைநீ அறிவாய் 

Subbaier Ramasami

unread,
Sep 21, 2021, 3:21:34 PM9/21/21
to santhavasantham
அற்புதம்

Kaviyogi Vedham

unread,
Sep 22, 2021, 2:44:01 AM9/22/21
to santhavasantham
அற்புதச் சிந்தனை விவேக்.. வாழ்க
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Sep 22, 2021, 5:40:40 AM9/22/21
to Santhavasantham
Reply all
Reply to author
Forward
0 new messages