சுய அறிமுகம் - இராம்நாத் பகவத்

16 views
Skip to first unread message

Ramnath Bhagavath

unread,
Sep 28, 2025, 8:01:24 AM (3 days ago) Sep 28
to சந்தவசந்தம்
அன்பு வணக்கங்கள் :)
 
என் பெயர் இராம்நாத் பகவத். முதற்கண், சந்த வசந்தத்தில் இருக்கும் அத்துணைக்  கவிஞர்களுக்கும் சிறியேனின் சிரம் தாழ்ந்த அன்பு வணக்கங்கள். மாபெரும் கவிஞரும் இசைக்கலைஞருமான திரு அசோக் சுப்பிரமணியம் அவர்களுக்கு, அற்புதமான இந்த மரபுக்கவிதை வலைக்குழுவில் என்னையும்  இணைத்ததற்கு என் உள்ளார்ந்த நன்றிகள்.

தொழில் அடிப்படையில் நான் ஒரு Actuary (காப்பீட்டுக் கணிப்பாளர்). United India Insurance நிறுவனத்தின் Appointed Actuary ஆக பணிபுரிகிறேன். மரபுக் கவிதைகள் எழுதுவதும், தமிழிலக்கியங்கள் படிப்பதும், தமிழ் மொழியில் சொல்லாய்வு செய்வதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மரபுக்கவிதையின் யாப்பிலக்கணத்தின் வகைகளையும் அடிப்படைக்கூறுகளையும்  தெய்வத்திரு பசுபதி Sir அவர்கள் எழுதிய கவிதை இயற்றிக் கலக்கு என்ற நூலைப் படித்துச் சற்றே புரிந்துகொண்டேன். அவர்க்கும் இத்தருணம் என் உள்ளார்ந்த வணக்கங்கள்.  

இவை தவிர, நான் ஒரு கர்நாடக இசைப் பாடகன். சங்கீத நாடக அக்காடெமி Fellow திரு. S R ஜானகிராமன் அவர்கள் என் குரு. அவரிடம் இசை பயிலக்கிடைத்ததை எனக்குக் கிட்டிய அரும்பெரும்பேறாகக் கருதுகிறேன். பாடல்களும்  இயற்றியுள்ளேன்.

உதாரணத்திற்கு:  தமிழ் மொழியின் அழகைப் பற்றி நான் இயற்றிய பாடலை திருமதி ரஞ்சனி காயத்திரி அவர்கள் பாடி, அன்றைய தமிழ் மொழி தமிழ்த்துறை அமைச்சராக பணிபுரிந்த திரு. mafoi பாண்டியராஜன் அவர்கள், அரசு சார்பாக "செம்மொழிக்குச் செவ்விசைப்பாட்டு" என்று 2019ம் ஆண்டு வெளியிட்டார். இந்தப் பாட்டின் இணைப்பு பின் வருமாறு:

https://youtu.be/SNWifNVJD1c?si=SDLzzZc_KvTGBtoF

தமிழ் மொழியிலும், இலக்கியத்திலும் உள்ள அழகான கருத்துகளைப் பரிமாறுவதற்குத் "தமிழ்ச்சிமிழ்" என்ற குறுங்காணொலித் தொடர் ஒன்றையும், இசைப்பற்றிய கருத்துகளைப் பரிமாற குறுங்காணொலித் தொடர் ஒன்றையும், என் ஊடக வலைப்பக்கங்களில் பதிவிடுகிறேன்.

என் ஊடக வலைப்பக்க இணைப்புகள் பின் வருமாறு:

Facebook:
https://www.facebook.com/ramnath.bhagavath/

Instagram:
https://www.instagram.com/ramnathbhagavath/

Youtube
https://www.youtube.com/@ramnathbhagavath932

திரு இளையராஜா அவர்களின் மிகப்பிரபலமான "தும்பி வா தும்பக்குடத்தில்" என்ற பாடல் மெட்டுக்கு அம்பாளைப் பற்றி வார்த்தைகள் அமைத்துப் பாடியிருந்தேன். அதனை அவர் கேட்டுவிட்டு மகிழ்ந்து பாராட்டினார். இந்தப் பாடலின் இணைப்பு பின்வருமாறு:

https://youtu.be/Ez-cTxsaelM?si=QcuAjcosgDZ_m_4C

கவிப்பெருந்தகைகள் இருக்கும் இந்த அமைப்பில் அடியேனும் இருப்பது, எனக்குக்  கிட்டிய பெரிய வாய்ப்பு. இதன் மூலம், மேலும் மரபுக்கவிதைகள் குறித்து அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், புனைய முயல்வதற்கும், அடியேனுக்குப்  பெருந்துணையாக இருக்கும்.

பணிவுடன்,
பேராவலுடன் எதிர் நோக்கி,
இராம்நாத்  

Ram Ramakrishnan

unread,
Sep 28, 2025, 8:04:20 AM (3 days ago) Sep 28
to santhav...@googlegroups.com
வருக, திரு. பகவத் அவர்களே.

உங்கள் பங்களிப்பை எதிர் நோக்கியிருக்கும்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 28, 2025, at 17:31, Ramnath Bhagavath <ramnat...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/bf166670-fddf-4f29-9f0c-ee918e0ff9cfn%40googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Sep 28, 2025, 8:24:12 AM (3 days ago) Sep 28
to santhav...@googlegroups.com
உங்கள் பாடலைப் பாடிய ரஞ்சனி, காயத்திரி அருமையாகப் பாடியுள்ளனர்.

You Tube ல உங்களது “முடியாது” மடக்கு விருத்தத்தையும் கேட்டு மகிழ்ந்தேன். அற்புதமான குரல்வளம்.

எல்லா வளமும் பெற்றுச் சிறக்க எனது வாழ்த்துகள்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Sep 28, 2025, at 17:34, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

வருக, திரு. பகவத் அவர்களே.

அஶோக்

unread,
Sep 28, 2025, 10:00:45 AM (2 days ago) Sep 28
to சந்தவசந்தம்
அன்பு இராம்நாத்

நல்வரவு! சந்தவசந்தம் குழுமம் ஒரு அருமையான குருகுலம்.. இங்கே இருக்கும் பெரும் பாவலர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் நடுவே நானும் இயங்குகிறேன் என்பதே எனக்கு வாய்த்த ஒரே சிறப்பு. தொட்டனைத்தூறும் மணற்கேணி என்பதுபோல் இங்கே கற்பதிலே ஊறும் கவியறிவு.. இப்பள்ளியில் எப்போதும் மாணவனாகவே இருக்கிறேன்..

உன்னுடைய பங்கேற்பும், பங்களிப்புக்கும் மிகவும் ஏற்ற தளமிது.. வருக! வளம் பெறுக! வாரியெனப் பொழிக!

அன்புடன்
அசோக்

Siva Siva

unread,
Sep 28, 2025, 11:01:32 AM (2 days ago) Sep 28
to santhav...@googlegroups.com
வருக!

ரஞ்சனி காயத்திரி பாடிய பாடற்படத்தைப் பார்த்தேன்.
நன்றாகப் பாடியுள்ளனர்.
1. படத்தில் ஆசிரியர் உங்கள் பெயர் காட்டப்பெறவில்லையா?
2. அந்தப் படத்தில் பக்தித்தமிழ் நூல்களில் எதுவும் காட்டப்பெறவில்லை என்று தோன்றுகின்றது.

வி. சுப்பிரமணியன்




Lalitha & Suryanarayanan

unread,
Sep 28, 2025, 11:10:48 AM (2 days ago) Sep 28
to santhav...@googlegroups.com
உங்கள் சுய அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி. திரு அஷோக் அவர்கள் தம்மைப் போல் இசைவல்லுநராகவும் கவிஞராகவும் திகழும் ஒருவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். பாராட்டுகள். வருக, வருக!

சிவசூரி.

Swaminathan Sankaran

unread,
Sep 28, 2025, 11:16:57 AM (2 days ago) Sep 28
to santhav...@googlegroups.com
நல்வரவு!
உங்களை அறிமுகப் படித்திய 

அஶோக் அவர்களுக்கும் நன்றி.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/bf166670-fddf-4f29-9f0c-ee918e0ff9cfn%40googlegroups.com.


--
 Swaminathan Sankaran

அஶோக்

unread,
Sep 28, 2025, 11:29:37 AM (2 days ago) Sep 28
to சந்தவசந்தம்
சிவா! படத்தில் ராம்நாத் பெயர், காணொளி தொடங்கி 58வது நொடியில் பாடலாசிரியர் & இசையமைப்பாளர் என்று வருகிறதே! தாண்டி நேரடியாகப் பாடலுக்கே சென்றுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..தமிழக அரசு சார்பாக வெளியிடப்படும் கலை வெளிப்பாடுகளில், வெளிப்படையாக பக்தித்தமிழ் என்பதன் அடையாளம் வருமென்று இன்னுமா நம்புகிறீர்கள்? 

இமயவரம்பன்

unread,
Sep 28, 2025, 12:14:48 PM (2 days ago) Sep 28
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
வருக! வருக!

“மென்மை ஒண்மை மேன்மை நீர்மை
செம்மை வண்மை சீர்மை கோன்மை”

அழகிய சொற்கள்! அருமையான இசை! வாழ்த்துகள்!

- இமயவரம்பன்

Ramnath Bhagavath

unread,
Sep 28, 2025, 1:44:52 PM (2 days ago) Sep 28
to சந்தவசந்தம்
அன்பான வரவேற்புக்கு அனைவர்க்கும் மிக்க மிக்க நன்றி. இத்தகைய பாவலர்களுடன் பழகக் கிடைக்கும் அரிய வாய்ப்பை எண்ணி பேருவகையில் திளைக்கின்றேன். வணக்கம்.

 அன்புடன்,
  இராம்நாத் 

K.R. Kumar

unread,
Sep 29, 2025, 3:56:50 AM (yesterday) Sep 29
to santhav...@googlegroups.com
அன்புள்ள இராம்நாத் பகவத்,

வருக! வாழ்க! 
வளத்துடன் வளர்க!

அன்புடன்,
குமார்(சிங்கை)

--

Subbaier Ramasami

unread,
Sep 29, 2025, 7:27:52 PM (yesterday) Sep 29
to santhav...@googlegroups.com
இராம்நாத்  பாகவ்த், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.   உங்கள் திறமையைக் காட்டுங்கள்.

பாடல் இரண்டையும் கேட்டேன் . மிக அருமை. காணொளிப் பின்புலம் சிறப்பு.
 உந்தன் என்ற சொல் உன்றன் என்றிருந்தால் சிறப்பாக இருக்கும்.
எனக்கு இசைத்திறமை கிடையாது. ஆனாலும் உங்கள் இசைப்புலமையை உணரமுடிந்தது.
நல் வாழ்த்து

இலந்தை


--
Reply all
Reply to author
Forward
0 new messages