2008-05-02
திருக்குறுந்தொகை
--------------------------
திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருக்குறுந்தொகை என்று ஒரு பகுதி உள்ளது. (5-ம் திருமுறை). இப்பாடல்களின் யாப்பு இலக்கணம் என்ன? சில பாடல்களை உதாரணமாக இங்கே இடுகிறேன்.
5.1.1)
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
5.2.1)
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ
5.14.4)
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளு மிடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே
5.90.1)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே
5.100.5)
கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
இவை கலிவிருத்தத்தின் வகைகள் எனக் கூறலாம். இவை ¿¡ýÌ «Êகள் நான்கு சீர்கள் கொண்டு, ¿¡ýÌ «Ê¸Ùம் ´§Ã ±Ð¨¸ பயிலும் வண்ணம் அமையும். ´ù§Å¡÷ «Ê¢Öõ 1-3 º£Ã¢ø §Á¡¨É þÕôÀÐ º¢ÈôÒ. அடிமோனை முற்றும் அமையாமலும், 1,3 மோனையன்றிப் பிற சீர்களிடையே மோனை வருவதாக அமைந்தும் வரும் வகைகளும் இப்பாவினத்தில் உண்டு. மேலும், க.வி. வெண்டளை பயின்றும் பயிலாமலும் வரலாம்.
திருக்குறுந்தைப் பாடல்களுக்குப் பசுபதியின்: http://hubmagazine.mayyam.com/may07/?t=9719 கட்டுரையிலிருந்து சில காட்டுகள்:
அனந்த் 3-5-2008
2008-05-03
இலந்தை, அனந்த்:
தெளிவான விளக்கங்களுக்கு நன்றி.
பாரதி இவ்வமைப்பில் பாடி உள்ளாரா? அதை அவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்