தன்னிகரில் கனவில் கண்டேன்!

5 views
Skip to first unread message

KKSR

unread,
Sep 25, 2021, 1:23:48 AM9/25/21
to santhav...@googlegroups.com
நேற்றைய கனவு!

நெடும்பாதையில் நடந்து சந்திர தரிசனத்திற்குச் செல்வதாக இருக்கிறது.

ஓரிடத்தில் அலைபுரளும் கடல் நெருங்க,

கடலுக்குள் சில அடிகள் பயணம் தொடர்கிறது.

ஆங்கு, ஓர் ஆங்கில எழுத்து ‘V’ வடிவில் உற்றுநோக்கிக் கருவி உள்ளது.

அதன் வாயிலாக வான்மதி பலவாகக் காட்சி அளிக்கிறது!

பரவசமானது மனது!

காட்சி விரிந்து கவிதை பிறந்தது!

******

  தன்னிகரில் கனவில் கண்டேன்!

வான்மதியின் அழகைக் கண்டேன்
  வாரிதியில் நடக்கக் கண்டேன்
கூன்மதியில் கூட்டம் கண்டேன்
  குற்றமில்லா நாட்டைக் கண்டேன்
தேன்சொரியும் மலர்கள் கண்டேன்
  தென்றலதும் தவழக் கண்டேன்
கானிடையே கதிரைக் கண்டேன்
  கவலையில்லா உயிர்கள் கண்டேன்
 
பேசுமொழிக் கிளிகள் கண்டேன்
  பேதையவள் நாணங் கண்டேன்
ஆசிலொலிக் குயில்கள் கண்டேன்
  அற்புதமாய் இசைக்கக் கண்டேன்
மாசில்லா நிலத்தைக் கண்டேன்
  மாறாத அறத்தைக் கண்டேன்
தூசில்லா வளியைக் கண்டேன்
  தூவும் மழையழகைக் கண்டேன்
 
பசுமையெங்கும் பரவக் கண்டேன்
  பாங்குடன்நீர் பாயக் கண்டேன்
பசியில்லா வளங்கள் கண்டேன்
  பண்போங்கி வாழக் கண்டேன்
நிசியிலொளிக் கீற்றைக் கண்டேன்
  நிம்மதியால் மிளிரக் கண்டேன்
இசையுலகை ஆளக் கண்டேன்
  இயற்கையதைப் பேணக் கண்டேன்
 
விழிகளிலே கருணை கண்டேன்
  வெண்பஞ்சாய் இதயம் கண்டேன்
வழிகளெல்லாம் மரங்கள் கண்டேன்
  வனப்பான பூமி கண்டேன்
உழைத்தோங்கும் மாந்தர் கண்டேன்
  ஊரெல்லாம் கோவில் கண்டேன்
தழைத்தோங்கும் தமிழைக் கண்டேன்
  தன்னிகரில் கனவில் கண்டேன்!
 
சுரேஜமீ
25.09.2021 காலை 8:19
--
Sent from Mobile

Lalitha & Suryanarayanan

unread,
Sep 25, 2021, 1:38:08 AM9/25/21
to santhav...@googlegroups.com
அருமையான கனவுக் கவிதை !

சிவசூரி.



On Sat, Sep 25, 2021 at 10:53 AM KKSR <aur...@gmail.com> wrote:
நேற்றைய கனவு!

நெடும்பாதையில் நடந்து சந்திர தரிசனத்திற்குச் செல்வதாக இருக்கிறது.



Virus-free. www.avast.com

NATARAJAN RAMASESHAN

unread,
Sep 25, 2021, 2:02:54 AM9/25/21
to santhav...@googlegroups.com
அருமை சுரேஜமீ

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNNbqUH2PucSM_A63%3Dv8CnHuDg0dYVkP4yxegCAtK8P-Hw%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Sep 25, 2021, 2:54:10 AM9/25/21
to santhavasantham
attagasam. bale
yogiyar

On Sat, Sep 25, 2021 at 10:53 AM KKSR <aur...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Sep 25, 2021, 3:30:30 AM9/25/21
to santhav...@googlegroups.com
வாழ்த்திய அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்!

அன்புடன்
சுரேஜமீ 

--
Sent from Mobile

Kaviyogi Vedham

unread,
Sep 25, 2021, 4:12:52 AM9/25/21
to santhavasantham
அற்புதம் அற்புதம் காட்சிகள்.வாழ்க
 யோகியார்

Siva Siva

unread,
Sep 25, 2021, 8:13:37 AM9/25/21
to santhavasantham
Nice.

thirunavukkarasar thevaram - 6.97.6
பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
    பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
    குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
    கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
    தேவனைக் கனவில்நான் கண்ட வாறே


On Sat, Sep 25, 2021 at 1:23 AM KKSR <aur...@gmail.com> wrote:
நேற்றைய கனவு!

.......

******

  தன்னிகரில் கனவில் கண்டேன்!

வான்மதியின் அழகைக் கண்டேன்
  வாரிதியில் நடக்கக் கண்டேன்
....

Swaminathan Sankaran

unread,
Sep 25, 2021, 8:58:07 AM9/25/21
to santhav...@googlegroups.com
மிக அருமையான, மகிழ்ச்சியும், உற்சாகமும் ஊட்டும் கவிதை.

சங்கரன் 

On Sat, Sep 25, 2021 at 1:23 AM KKSR <aur...@gmail.com> wrote:

KKSR

unread,
Sep 25, 2021, 11:04:04 AM9/25/21
to santhav...@googlegroups.com
நன்றி அண்ணா!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile

KKSR

unread,
Sep 25, 2021, 11:04:25 AM9/25/21
to santhav...@googlegroups.com
நன்றி அண்ணா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile

Subbaier Ramasami

unread,
Sep 25, 2021, 1:57:32 PM9/25/21
to santhavasantham
இனிய கனவு.  அழகுப் புனைவு

On Sat, Sep 25, 2021 at 10:04 AM KKSR <aur...@gmail.com> wrote:
நன்றி அண்ணா!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 25, 2021, 11:18:45 PM9/25/21
to சந்தவசந்தம்
அழகியதோர் பாடலை  இங்குக் கண்டேன். வாழ்த்துகள்

அனந்த்

On Sat, Sep 25, 2021 at 1:23 AM KKSR <aur...@gmail.com> wrote:

KKSR

unread,
Sep 25, 2021, 11:31:47 PM9/25/21
to santhav...@googlegroups.com
நன்றி மாமா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile

KKSR

unread,
Sep 25, 2021, 11:32:00 PM9/25/21
to santhav...@googlegroups.com
நன்றி அண்ணா.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
Sent from Mobile
Reply all
Reply to author
Forward
0 new messages