Re: குழலூதி கழலோதி

閲覧: 99 回
最初の未読メッセージにスキップ

Nagoji

未読、
2021/06/10 0:25:312021/06/10
To: santhav...@googlegroups.com
காலி மேய்த்த ஆய னேக றுத்த மேனி மாயனே
காலி னால்வி சும்பு மண்ண ளந்த கல்வி வல்லவா
கூலி யேநி னைந்து நாளும் வாடு வேனை ஏல்வையோ
நாலி ரண்டில் ஆலு கின்ற சக்க ரத்தெம் அண்ணலே.....(71) -- 10-June-2021

காலி - கால்நடை உயிரினம்

- sankara dass

Nagoji

未読、
2021/06/11 0:28:522021/06/11
To: santhav...@googlegroups.com
தோளி ரட்டி நான்கி னாய்து ழாய்து ளங்கு தாரினாய்
கோள்கள் ஒன்ப தேத்து கின்ற குற்ற மற்ற குள்ளனே
காள மேக மூர்த்தி யேக லங்கு வேனை ஆள்வையோ
தாள மோடு நாத மாய சக்க ரத்தெம் அண்ணலே....(72) -- 11-June-2021

- sankara dass

Nagoji

未読、
2021/06/12 8:09:122021/06/12
To: santhav...@googlegroups.com
பூத்த உந்தி மேல யன்ற னைப்ப டைத்த பொற்பனே
நாத்தி கர்க்கு நன்மை நல்கி டாத நல்ல நம்பனே
ஆத்தி கத்தின் ஆணி யாய ஆழி வண்ண ஆதியே
ஆத்தி சூடி யோன்வ லத்த சக்க ரத்தெம் அண்ணலே....(73) -- 12-June-2021

ஆணி - ஆதாரம்
பொற்பு - அழகு

- sankara dass

Swaminathan Sankaran

未読、
2021/06/12 10:09:092021/06/12
To: santhav...@googlegroups.com
  'நாத்தி கர்க்கு நன்மை நல்கி டாத நல்ல நம்பனே'  

பெரும்பாலும் இம்மாதிரி கருத்துகளுக்கு நான் பதில் இடுவதில்லை.
அதைத் தவிர்க்கத்தான் நான் கடவுள் பற்றிய கவிதைகளைத்  தவறாமல் படிப்பேன்; 
ஆனாலும்  பின்னூட்டம் இடுவதைத் தவிர்ப்பேன் (இங்கு பெரும்பாலும் அவை தான் - 
முக்கியமாக சிவனைப் பற்றியதாகத் தான் இருக்கும்).
'சித்தம் போக்கு, சிவன் போக்கு' என்று விட்டு விடுவேன்.

இருப்பினும் இங்கு ஒன்று கூற விழைகிறேன்.

கடவுள் என்றால் அது 
'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு 
நல்லாருக்கும் பொல்லார்க்கும் நலமளிக்கும் நலமா'க 
அல்லவா இருக்க வேண்டும்?
இல்லாவிட்டால் அது வெறும் கல்லாகத்தான் மண்ணாகத்தான் அல்லவா போய்விடும்?

இது பற்றிய விவாதத்தில் நான் ஈடுபட விரும்பவில்லை.
ஆகையால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFRyaoJEyypGKtEPRr_ijKnkzngLdsXSeDtzNcKAdPxvrA%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Nagoji

未読、
2021/06/13 0:22:522021/06/13
To: santhav...@googlegroups.com
நத்தை போல மெள்ள மெள்ள நாடி னாலும் நல்குவான்
மத்தை சூடி மேவு மேனி கொண்ட மாய மாதவன்
வித்தை கற்ற மித்தை யில்த விக்கும் என்னை மீட்பவன்
அத்தை மக்கள் ஐவர் போற்று சக்க ரத்தெம் அண்ணலே...(74) -- 13-June-2021

மத்தை - ஊமத்தை
அத்தை - குந்தி

- sankara dass

Nagoji

未読、
2021/06/14 1:56:362021/06/14
To: santhav...@googlegroups.com
கற்ப கத்தின் நாத னைப்பி ரிந்தி டாத கண்ணனே
கற்ப னைக்க கப்ப டாத காதல் காட்டு கள்வனே
விற்ப னர்கள் போற்று கின்ற மேன்மை மிக்க வேதியா
அற்பன் என்னை ஆள வந்த சக்க ரத்தெம் அண்ணலே....(75) -- 14-June-2021

கற்பகம் - கற்பகாம்பாள்

- sankara dass

Nagoji

未読、
2021/06/15 7:07:162021/06/15
To: santhav...@googlegroups.com
பட்டி மாடு காத்த வாப ரைக்கு மூத்த பட்டனே
மட்டி லாம யக்க றுக்க வல்ல னேத யாகரா
கொட்டி யாடு வான்வ லத்த குற்ற மற்ற கோலனே
அட்டி செய்தி டாமல் ஆள்க சக்க ரத்தெம் அண்ணலே...(76) -- 15-June-2021

பரை - உமை
அட்டி - தடை, தாமதம்
கொட்டி - கொடுகொட்டி - சிவனின் நடனம்

- sankara dass

Nagoji

未読、
2021/06/16 3:12:272021/06/16
To: santhav...@googlegroups.com
உம்பர் போற்றும் உண்மை யேஉ யோகு செய்யும் உத்தமா
கம்பர் செய்த காதை ஓது வார்க்க ருள்செய் கண்ணனே
பம்பை மீது சேது கட்டு பற்ப நாப மூர்த்தியே
நம்பு வேனை ஆள்க நாத சக்க ரத்தெம் அண்ணலே....(77) -- 16-June-2021

பம்பை - பாம்பன் ஜல சந்தி
சேது - பாலம்

- sankara dass

Nagoji

未読、
2021/06/17 7:25:352021/06/17
To: santhav...@googlegroups.com
விக்கி னத்தை நீக்கு வாற்கொர் வீர மிக்க மாமனே
தக்கி ணத்தை நோக்கு மூர்த்தி தங்கு மேனி கொண்டவா
எக்க ணத்தும் உன்றன் எண்ணம் என்ற னக்கு வாய்க்குமோ
சுக்கி ரன்கண் ஒன்றை வாங்கு சக்க ரத்தெம் அண்ணலே....(78) -- 17-June-2021

சுக்கிரன் - சுக்கிராச்சாரியார்

- sankara dass

Nagoji

未読、
2021/06/18 2:57:382021/06/18
To: santhav...@googlegroups.com
பெண்ண மர்ந்த மேனி யாற்க ருள்பு ரிந்த பிஞ்ஞகா
புண்ணி யம்செய் பத்தர் புத்தி உள்ள உள்ள ஊறுவோய்
கண்ணி  ரண்டி ருந்தும் என்று காண்பன் உன்னை மாயனே
மண்ண ளந்து விண்ண ளந்த சக்க ரத்தெம் அண்ணலே....(79) -- 18-June-2021

- sankara dass

Nagoji

未読、
2021/06/19 3:51:462021/06/19
To: santhav...@googlegroups.com
ஆழி மீது பள்ளி கொண்ட ஆதி அந்த மூர்த்தியே
கோழி வேந்தர் பாடு பாட்டில் ஆழ்ந்த பக்தி கொண்டவா
மூழி தாங்கி நின்ற வாமு ழங்கு பாஞ்ச சன்னியா 
தாழி வெண்ணெய் உண்ட வாய சக்க ரத்தெம் அண்ணலே.....(80) -- 19-June-2021

கோழி வேந்தர் - கோழிக்கோன் குலசேகர ஆழ்வார்
மூழி - மத்து

- sankara dass

Siva Siva

未読、
2021/06/19 6:16:162021/06/19
To: santhavasantham
/ கோழி வேந்தர் - கோழிக்கோன் குலசேகர ஆழ்வார்  /

இச்சொற்றொடர் பொதுவாகச் சோழர்களை அன்றோ குறிக்கும்?
கோழிவேந்தன் kōḻi-vēntaṉ , n. < id. +. Chola, as the king of Uṟaiyūr; [உறையூர் அரசன்] சோழன். (திவா.)

Nagoji

未読、
2021/06/20 8:27:302021/06/20
To: santhav...@googlegroups.com
வேணி மோது நீரி னான்வ லத்த மர்ந்த மேதையே
பாணி மிக்க பாத னேப ணிந்த வர்க்கொர் சேணியே
காணி இன்றி வாடு வேனை ஆத ரிக்கும் ஆணியே
சாணி னோடு கோணு மாய சக்க ரத்தெம் அண்ணலே...(81) -- 20-June-2021

கோண் - அணுவில் 100ல் ஒரு பகுதி
காணி - நிலம், உரிமை
பாணி - அழகு
சேணி - ஸ்ரேணி - ஏணி

- sankara dass

Nagoji

未読、
2021/06/21 11:47:292021/06/21
To: santhav...@googlegroups.com
கூறு மேவு நீற்ற னைப்பி ரிந்தி டாத கோதிலோய்
வேறு வேறு தன்மை கொண்ட னைத்தி லும்வி ளைந்தவா
ஈறி லாத வீர னேஎ னைப்ப டைத்த தேன்சொலாய்
ஆறும் நாலும் ஆகி நின்ற சக்க ரத்தெம் அண்ணலே....(82) -- 21-June-2021

ஆறும் நாலும் - ஆறு அங்கம், நாலு வேதம்
கோது - குற்றம்

- sankara dass

Nagoji

未読、
2021/06/22 9:32:092021/06/22
To: santhav...@googlegroups.com
சூடி மாலை தந்த மங்கை சொன்ன சொல்ல ணிந்தவா
நாடி வந்த அன்பர் முன்பு சேவை சாதி நம்பனே
பாடி யாடு பத்த ரிற்ப ரந்த வாவொர் பாம்புமேல்
ஆடி நின்ற ஆய னாய சக்க ரத்தெம் அண்ணலே...(83) -- 22-June-2021

சேவை சாதித்தல் - காட்சி அளித்தல்

- sankara dass

Nagoji

未読、
2021/06/23 12:51:102021/06/23
To: santhav...@googlegroups.com
பற்ப நாப னேஉ யர்ந்த பாண்ட வர்க்கு நேயனே
கற்பெ னுங்க னல்கொள் மாதை மீட்டு வந்த காவலா
கற்பம் எண்ணில் கண்ட வாக லங்கு வேனை ஆள்வையோ
தற்ப ரச்சு யம்பு வாய சக்க ரத்தெம் அண்ணலே....(84) -- 23-June-2021

கற்பம் - 4,32,000 0,00 ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு நாள்.

- sankara dass

Nagoji

未読、
2021/06/24 10:33:452021/06/24
To: santhav...@googlegroups.com
குரங்கு காட்டும் அன்பி லேநெ கிழ்ச்சி காட்டு கொற்றவா
மரங்க ளேழ்து ளைத்த வாவ ராக மாய எந்தையே
தரங்க மேற்று யில்கொ ளும்க றுத்த வண்ண அங்கனே
அரங்க மேய அப்ப னாய சக்க ரத்தெம் அண்ணலே....(85) -- 24-June-2021

- sankara dass

Rajja Rajagopalan

未読、
2021/06/24 11:09:142021/06/24
To: santhav...@googlegroups.com
அருமை

Sent from my iPhone

On 24 Jun 2021, at 15:33, Nagoji <nag...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sankara dass nagoji

未読、
2021/06/25 9:30:012021/06/25
To: சந்தவசந்தம்
உத்தி யாலொர் ஐவ ருக்கு நாடு தந்த ஒப்பிலோய்
முத்து வேளை மெச்சு கின்ற மூப்பி லாத மாமனே
குத்த லாக வேஇ ருக்கும் என்னை யுங்கு றிக்கொளாய்
அத்த னைக்கும் ஆதி யாய சக்க ரத்தெம் அண்ணலே....(86) -- 25-June-2021

முத்துவேள் - முருகன்
குத்தல் - பிறருக்கு நோவு தருதல்

- சங்கர தாஸ்

Nagoji

未読、
2021/06/26 9:52:522021/06/26
To: santhav...@googlegroups.com
இந்து சேக ரற்கு மிக்க இட்ட மான ஈசனே
கந்த மிக்க சந்த னம்து ளங்கு கின்ற மார்பனே
பந்த மிக்க வாழ்வ ளித்த தைய றுக்க வல்லவா
அந்து ழாய மர்ந்த ணிந்த சக்க ரத்தெம் அண்ணலே....(87) -- 26-June-2021

துழாய் - துளசி
அமர்தல் - விரும்புதல்

Nagoji

未読、
2021/06/27 6:43:052021/06/27
To: santhav...@googlegroups.com
நுடங்கு கேள்வி பொங்க வேநி லம்மி ரக்க வந்தவா
படங்க ளாயி ரத்தன் மீது பள்ளி கொண்ட பட்டனே
தடங்க டல்வ ணத்த. னேநின் அன்பர் தம்ம னத்துளே
அடங்கு கின்ற தேவ னாய சக்க ரத்தெம் அண்ணலே....(88) -- 27-June-2021

நுடங்கு - நுட்பமான
கேள்வி - வேதம், கல்வி
படங்கள் ஆயிரத்தன் - ஆதி சேஷன் 

Nagoji

未読、
2021/06/28 1:11:552021/06/28
To: santhav...@googlegroups.com
சோரி கக்கு மாறி ராக்க தன்ற னைமு டிக்கவே
நார சிங்க மாகி வந்த நன்றி மிக்க நாரணா  
பூரி யர்மு தல்வ னாய என்னை ஆள்க புங்கவா
ஆரி மிக்க தீர னாய சக்க ரத்தெம் அண்ணலே....(89) -- 28-June-2021

சோரி - இரத்தம்
இராக்கதன் - இரணிய கசிபு
பூரியர் - கொடுமை மிக்கவர்கள்
ஆரி - அழகு

Siva Siva

未読、
2021/06/28 7:51:292021/06/28
To: santhavasantham
நரசிங்கம் & நாரசிங்கம் - பொருளில் வேறுபாடு உண்டா?

Nagoji

未読、
2021/06/28 7:58:392021/06/28
To: santhav...@googlegroups.com
அது தெரியாது.
வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்டிராய தீமஹி. தந்நோ நாரஸிகும்ஹ: ப்ரசோதயாத் என்பது காயத்ரி.

Sdn

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNUBwTGognDznJhCdGCBk6_gO8dES9LDw5XgKqW5-6YPA%40mail.gmail.com.

Siva Siva

未読、
2021/06/28 8:04:142021/06/28
To: santhavasantham
ok.
Even the Sanskrit dictionary does not provide any additional details.
नारसिंह nārasiṃha a. (-ही f.) Pertaining to Narasimha. -हः 1 An epithet of Viṣṇu.

rathnam

未読、
2021/06/28 8:11:042021/06/28
To: santhav...@googlegroups.com
எனக்கும் இந்த ஐயம் உண்டு.  'ந்ருஸிம்ஹம்' 'நாரஸிம்ஹம்' என்று சில ஸ்லோகங்களில் ஆனதேன்? தமிழில் அதை அப்படியே 'நாரசிங்கம்' என்று பயன்படுத்தலாமா? 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

未読、
2021/06/28 8:18:072021/06/28
To: santhavasantham
ஒருவேளை சிவன் / சைவன் என்று வருவதுபோலோ?

 http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81040&padhi=04&startLimit=1&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

8.4 - திருவாசகம்-போற்றித் திருவகவல்

மூவா நான்மறை முதல்வா போற்றி

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி ..... 95

......... ..........

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி ..... 113


குறிப்புரையில்:

சைவன் - சிவம் (மங்கலம்) உடையவன்.


Nagoji

未読、
2021/06/28 8:33:152021/06/28
To: santhav...@googlegroups.com
நாரஸிம்ம வபு: ஸ்ரீமான் கேசவ: புருஷோத்தம:.  சஹஸ்ர நாமம்.
Sdn

You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAHhWE8sviA%3Dmz8JdydV8ykgfZjBPi%2B4RpOJFQFAwGCYvBGyrWA%40mail.gmail.com.

rathnam

未読、
2021/06/28 9:53:092021/06/28
To: santhav...@googlegroups.com
ஆமாம்.. நாகோஜி ஐயா. அஹோபிலம்  ஸ்லோகத்திலும் வரும்.  நாரஸிம்ஹமாய் எந்த நிலையில் அந்தப் பயன்பாடு வருகிறது என்பதிலும், தமிழில் நாரசிங்கம் என்று உபயோகிக்கலாமா என்பதையும் அறிய விரும்பினேன். என் பாட்டில் பயன்படுத்த முடியுமா என்பதற்காகத்தான், ஐயா.

Nagoji

未読、
2021/06/28 13:49:012021/06/28
To: santhav...@googlegroups.com
தாராளமாக. 
கோபஅரி நாரசிங்கன் மருகோனே - அருணகிரியார்.

- sdn

Nagoji

未読、
2021/06/29 9:14:082021/06/29
To: santhav...@googlegroups.com
கவள மட்டும் உண்ணு வோர்கள் கட்டு கின்ற காதலா
கவள மிக்க ஆனை யைய டர்த்த ழித்த கண்ணனே
பவள வண்ண னேஎன் ஏட்டை என்று வந்து பாற்றுவாய்
தவள வண்ண அப்ப னாய சக்க ரத்தெம் அண்ணலே...(90) -- 29-June-2021

கவளம் - ஒரு வாயளவு உணவு, யானை மதம்
பவள வண்ணன் - சிவந்த நிறம் உடையவன்
ஏடு - குற்றம்
தவளம் - வெண்மை. முத்தப்பன் - ஒப்பிலியப்பன் கோவில் அப்பன்.

Siva Siva

未読、
2021/06/29 9:52:112021/06/29
To: santhavasantham
திருமாலைப் "பவளவண்ணன்" என்றும் சொல்வது உண்டா?

Nagoji

未読、
2021/06/29 10:12:572021/06/29
To: santhav...@googlegroups.com
Yes . In kanchipuram we have pachchai vannam and pavala vannam perumaaL temples.
Sdn. 

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Rajagopalan

未読、
2021/06/29 11:52:362021/06/29
To: santhav...@googlegroups.com
எல்லாப் பாடல்களையும் நடைபிறழாது ஒப்ப அமைக்கும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.  

வாழ்த்துகள்

மீ. ரா
Sent from my iPhone

On 29 Jun 2021, at 15:12, Nagoji <nag...@gmail.com> wrote:


You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFRuw1GsHFZC4Rvvnzuq5tDBjZWFb1NLHBoqRi51LFksdA%40mail.gmail.com.

Siva Siva

未読、
2021/06/29 23:38:542021/06/29
To: santhavasantham
Thanks.

Nagoji

未読、
2021/06/30 0:54:462021/06/30
To: santhav...@googlegroups.com
இரத மேறி நூற்று வர்க லங்க வேஇ ழைத்தவா
பரத மாதி நாட்டி யங்கள் பாம்பு மேல்ந டித்தவா
வரத னேவ ராக னேவ ரம்பி லாத கீர்த்தியோய்
சரதம் அற்ற என்னை ஆள்க சக்க ரத்தெம் அண்ணலே....(91) -- 30-June-2021

சரதம் - உண்மை, நிலைத்தன்மை

Nagoji

未読、
2021/07/01 1:27:592021/07/01
To: santhav...@googlegroups.com
தாம்பு சேர்வ யிற்ற னேத லங்கள் எண்ணில் கொண்டவா
பாம்பு தன்னை மேடை பாயொ(டு) உம்பி யென்று கொண்டவா
ஆம்பல் ஊதும் ஆய னேஅ ரங்க மேய நாதனே
சாம்பி நிற்கும் என்னை ஆள்க சக்க ரத்தெம் அண்ணலே....(92) -- 1-July-2021

தாம்பு - கயிறு
மேடை - காளிங்கன்; பாய் - ஆதிசேஷன், உம்பி - தம்பி லக்ஷ்மணன்
ஆம்பல் - மூங்கில் - குழல்
சாம்புதல் - வாடுதல், கெடுதல்

VETTAI ANANTHANARAYANAN

未読、
2021/07/01 20:47:462021/07/01
To: சந்தவசந்தம்
>  பாம்பு தன்னை மேடை பாயொ(டு) உம்பி யென்று கொண்டவா

arumai!

ananth

Nagoji

未読、
2021/07/01 23:06:232021/07/01
To: santhav...@googlegroups.com
காம வேளி னைப்ப யந்த காம மற்ற கள்வனே
நாமம் எண்ணில் கொண்ட நார ணாப ழுத்த நம்பியே 
வாய்ம டுத்த சங்க னேவ னப்பு மிக்க மாதவா
தாம தம்செ யாமல் ஆள்க சக்க ரத்தெம் அண்ணலே...(93) -- 2-July-2021

மடுத்தல் - சேர்தல், ஊட்டுதல்.

Pas Pasupathy

未読、
2021/07/02 6:12:582021/07/02
To: Santhavasantham
படித்து ரசித்து வருகிறேன்.சங்கரதாஸ் ..
சந்ததாஸ் ஆகிவிட்டார்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE_cqFQtzp_zg9TsHLiYOTQbc2pP7TqSxQW%2Bu%2BpEN_uSY7Waag%40mail.gmail.com.

Nagoji

未読、
2021/07/02 22:59:312021/07/02
To: santhav...@googlegroups.com
சத்தி வேற்க ரத்த னுக்கொர் மாம னாய சாந்தனே
அத்தை உண்ட வண்கி டக்கும் என்று சொல்ல வைத்தவா
பத்தி இன்றி ஆடி யோனு டல்கி ழித்த பல்லனே
தத்தி வாடும் என்னை ஆள்க சக்க ரத்தெம் அண்ணலே...(94) -- 3-July-2021

அத்தைத் தின்று அங்கே கிடக்கும் - நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு அருளிய மொழி
பல்லன் - கூரிய பல் உடைய சிங்கம் - வாள் எயிற்றுச் சீயம்
தத்துதல் - கவலை கொள்ளல், தத்திக் கடத்தல்

Nagoji

未読、
2021/07/04 0:08:592021/07/04
To: santhav...@googlegroups.com
வேதி செய்ய வல்ல னேவி ரிஞ்சி தோன்று உந்தியாய்
மேதி யைய ழித்த தேவி ஏத்து கின்ற வீரனே
நாதி யற்ற என்னை ஆள நாள்கு றித்து வைப்பையோ
சோதி வீசு பாத னாய சக்க ரத்தெம் அண்ணலே.....(95) -- 4-July-2021

மேதி - எருமை - இங்கு மகிஷாசுரன்

Siva Siva

未読、
2021/07/04 8:08:432021/07/04
To: santhavasantham
/ தோன்று உந்தியாய்  /

சந்தம் கருதிப் புணர்ச்சி விலக்கப்பட்டதா?

Nagoji

未読、
2021/07/04 9:01:122021/07/04
To: santhav...@googlegroups.com
ஆம். 

- சங்கர தாஸ்

On Sun, Jul 4, 2021 at 5:38 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
/ தோன்று உந்தியாய்  /

சந்தம் கருதிப் புணர்ச்சி விலக்கப்பட்டதா?


On Sun, Jul 4, 2021 at 12:09 AM Nagoji <nag...@gmail.com> wrote:
வேதி செய்ய வல்ல னேவி ரிஞ்சி தோன்று உந்தியாய்

Nagoji

未読、
2021/07/05 1:28:262021/07/05
To: santhav...@googlegroups.com
ஓத வண்ண னேயு றங்கி டாத யோக மூர்த்தியே
மாத மர்ந்த மார்வ னேம டங்க லாய மல்லனே
சூது மிக்க என்னை யாள்க சொன்ன வண்ணம் ஆற்றுவோய்
சீதம் உந்து பாத னாய சக்க ரத்தெம் அண்ணலே....(96) -- 5-July-2021

மடங்கல் - சிங்கம்
சீதம் - குளிர்ச்சி
உந்துதல் - பெருகுதல்

Nagoji

未読、
2021/07/05 23:25:472021/07/05
To: santhav...@googlegroups.com
அங்கி பொங்கு வாளி யால ரக்கர் கோல ழித்தவா
தங்க வண்ண மேனி யான்வ லத்த மர்ந்த தாமனே
வங்கம் உந்து வேலை வண்ண என்ம னத்தில் வாழ்வையோ
சங்க ராதி சீலர் போற்று சக்க ரத்தெம் அண்ணலே.....(97) -- 6-July-2021

கோல் - ஆட்சி
வங்கம் - அலை; வேலை - கடல்
தாமன் - சூரிய நாராயணன் (ஆதித்யானாம் அஹம் விஷ்ணு: - நானே சூரியன் - கீதை)
சங்கராதி - ஆதி சங்கரர் முதலாய சீலர்கள்

Nagoji

未読、
2021/07/06 23:08:452021/07/06
To: santhav...@googlegroups.com
கோச லைப யந்த ளித்த நேச மிக்க வீரனே
கேச வாகி ருட்டி ணாகி டந்து நிற்கும் ஈசனே
தாசன் என்னை வாழ வைக்கும் ஆசை கொள்ள கில்லையோ
ஆசை அற்ற வாழ்வு நல்கு சக்க ரத்தெம் அண்ணலே....(98) -- 7-July-2021

Siva Siva

未読、
2021/07/07 8:33:572021/07/07
To: santhavasantham
/ஆசை கொள்ள கில்லையோ
ஆசை அற்ற வாழ்வு நல்கு/
Nice wording.

Nagoji

未読、
2021/07/07 23:39:362021/07/07
To: santhav...@googlegroups.com
காட மர்ந்த பித்த னைவ லத்த மர்ந்த காரணா
பாட கத்தும் ஊர கத்தும் ஆடு கின்ற பாதனே
கோடல் அற்ற கோல னேகு றிப்பில் என்னை வைப்பையோ
தாட கைக்கொர் கால னாய சக்க ரத்தெம் அண்ணலே....(99) -- 8-July-2021

அமர்தல் - விரும்புதல்
கோடல் - வளைதல்

Rajja Gopalan

未読、
2021/07/08 1:44:312021/07/08
To: santhav...@googlegroups.com
அருமை

காட மர்ந்த பித்த னைவ லத்த மர்ந்த காரணா

இவ்வரியை எப்பொருளில் வரித்தீர்?

மீ ரா

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

未読、
2021/07/08 9:28:442021/07/08
To: santhav...@googlegroups.com
பெரியவாளின் தெய்வத்தின் குரல்: 
பரமேசுவரனும் ஸ்ரீமந் நாராயணனும் ஒரே வஸ்து; இரண்டல்ல. பெயர் வேறு. உருவம் வேறு, வேலை வேறு. ஆனால் உள்ளேயிருக்கப்பட்ட வஸ்து ஒன்றேதான். ஸ்ரீசங்கர பகவத் பாதர்களின் அபிப்பிராயம் இதுதான். கேள்வியும் பதிலுமாக ‘ப்ரச்னோத்தர ரத்னமாலிகா’ என்று அவர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். ப்ரச்னம் – கேள்வி. (இப்போது அந்தப் பிரச்னை இந்தப் பிரச்னை என்கிறோமே. ‘பிரச்னை’ என்பது ‘ப்ரச்னம்’ தான்) உத்தரம் – பதில். ப்ரச்னம் உத்தரம் (கேள்வி பதில்) இரண்டும் சேர்த்து ப்ரச்னோத்தரம். மாலை மாதிரி கேள்வியையும் பதிலையும் தொடுத்துக் கொடுக்கிறார் ஆசார்யாள். ‘பண்டிதர்களுக்கு இது ரத்னமாலை’ என்று பிரச்னோத்தர ரத்னமாலிகாவை அநுக்கிரகித்திருக்கிறார்.

அதில் ஒரு கேள்வி: பகவான் யார்?
அதற்குப் பதில்: சங்கரனாகவும் நாராயணனாகவும் இருக்கிற ஒருவன். சங்கர நாராயணாத்மா ஏக:

இதனால் திரும்பத் திரும்ப இதைப் பாடி மகிழ்கிறோம்.

கோவிந்தாஷ்டகம்:

காந்தம்ʼ காரணகாரணமாதி³மநாதி³ம்ʼ காலக⁴நாபா⁴ஸம்ʼ
காலிந்தீ³-க³த-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோ³ஷக்⁴நம்ʼ
காலத்ரயக³திஹேதும்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||

காந்தன்
காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்
முதலானவன் முதலற்றவன்
கருமேகச்சுடர் 

- சங்கர தாஸ்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CANuAMWwfFVPzQyWBPY9Qt-eVWppVY1EfZ11-UUmfTmSz14z6bQ%40mail.gmail.com.

Siva Siva

未読、
2021/07/08 9:40:582021/07/08
To: santhavasantham
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60540&padhi=054&startLimit=9&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
6.54.9
....விடையொன் றேறுங்
    காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

Rajja Gopalan

未読、
2021/07/08 10:04:212021/07/08
To: santhav...@googlegroups.com
அப்படியே நினைத்தேன்.  நன்றி

Nagoji

未読、
2021/07/08 10:30:382021/07/08
To: santhav...@googlegroups.com
aahaa! aahaa!

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

未読、
2021/07/09 1:10:142021/07/09
To: santhav...@googlegroups.com
வாம னாவ ணங்கு வோரை வாழ வைக்கும் ஆயனே
சோம சுந்த ரன்ம ணம்ந டத்த வந்த சுந்தரா
ஏமம் அற்ற என்னை ஏற்க நின்னை யன்றி ஆருளார்
தாம ரைக்க ணாஅ னந்த சக்க ரத்தெம் அண்ணலே....(100) -- 9-July-2021

ஏமம் - காவல்
கணா - கண்ணா

சக்கரத்தண்ணல் சந்த விருத்தச் சதகம் நிறைவுற்றது.
ஜயஜய ஸ்ரீசுதர்சனா ஜயஜய ஸ்ரீசுதர்சனா.
நாராயண நாராயண.

எம்பெருமான் திருவுள்ளத்தாலும், பெரியவாளின் கருணையினாலும் இந்தச் சதகத்தினை இயற்ற அடியேனுக்குக் கிடைத்த வாய்ப்பினை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. எங்கள் குலதெய்வம் குடந்தை ஸ்ரீசக்ரராஜாவின் அருளால், உலகில் பிணியும் பகையும் பசியும் தீர்ந்து, நலம் செழிக்க வேண்டுகிறோம்.

மிகுந்த உற்சாகம் தந்து, குறைகளை எடுத்துக் காட்டி, மிகவும் நல்ல முறையில் இதனை அமைக்க உதவிய சந்த வசந்த ஆசிரியர்களுக்கு எமது வணக்கங்கள்.

Vis Gop

未読、
2021/07/09 2:08:132021/07/09
To: santhav...@googlegroups.com
எம்பெருமான் திருவுள்ளத்தாலும், பெரியவாளின் கருணையினாலும் இந்தச் சதகத்தினை இயற்ற அடியேனுக்குக் கிடைத்த வாய்ப்பினை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. எங்கள் குலதெய்வம் குடந்தை ஸ்ரீசக்ரராஜாவின் அருளால், உலகில் பிணியும் பகையும் பசியும் தீர்ந்து, நலம் செழிக்க வேண்டுகிறோம்.

அருமையான, எழுதியவர்க்கும் வாசிப்பவர்க்கும் மகிழ்ச்சி தரவல்ல, எளிமையான சதகம்! இறைவனின் மகிழ்ச்சியைச் சந்தத்திலும் சொற்களிலும் காணமுடிகிறது.  திரு நாகோஜிக்கு மனமார்ந்த பாராட்டுகள். 
கோபால். 

Sent from my iPhone

Rajja Gopalan

未読、
2021/07/09 3:30:242021/07/09
To: Santhavasanthsm சந்தவசந்தம்
அருமை திரு நாகோஜி அவர்களே!

சக்க ரத்தெம் அண்ண லென்று ஒக்க வைத்த தண்மலர்
மிக்க வைத்த பண்க ளாகி மென்மை யான  மாலையே
தக்க தான பக்தி  யோகந் தந்து ஆளும் பாமலர்
சொக்க நாதர் தொண்ட ராகிச் சொல்வ ராம்நா கோஜியே


மீ. ரா


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4E2838AF-184B-4CB3-A814-FFBF2A95587D%40gmail.com.

Siva Siva

未読、
2021/07/09 8:48:342021/07/09
To: santhavasantham
Very nice and impressive.

/வாழ வைக்கும் ஆயனே/
"வாழ வைக்கும் மாயனே" என்றும் பிரியுமே.

Nagoji

未読、
2021/09/05 0:56:202021/09/05
To: santhav...@googlegroups.com
முடிகொண்டான் (கூத்தனூர், பூந்தோட்டம் அருகில்)
எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா
3-செப்-2021 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.
அகத்துறையில் அமைந்த பாடல். இராமன்மேல் தலைவியின் ஏக்கம்.

என்னுயிரே என்னுயிரே என்றே கூவும்
....இனிமேலும் பொறுக்கேனென்(று) எரிந்து தள்ளும்
கன்னலதைக் கண்டுவிட்டால் கண்ணீர் தேக்கும்
...,கருமுகிலைக் கண்டாலோ ஆடும் பாடும்
இன்னமுதாம் இராமனெனும் பேரே சொல்லும்
....இருக்குமிடம் அறியாமல் ஏங்கி நிற்கும்
முன்னியருள் மூலவனும் இவனே என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(1) -- 5-Sep-2021

எரிதல் - சினந்து பேசுதல்
கன்னல் - கரும்பு - இங்கு கருமை நிறம் குறிப்பு.
பேரே - பேரை மட்டுமே

- sankara dass

Siva Siva

未読、
2021/09/05 12:58:542021/09/05
To: santhavasantham
இனிய பாடல்.

On Sun, Sep 5, 2021 at 12:56 AM Nagoji <nag...@gmail.com> wrote:
முடிகொண்டான் (கூத்தனூர், பூந்தோட்டம் அருகில்)
எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா
3-செப்-2021 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.
அகத்துறையில் அமைந்த பாடல். இராமன்மேல் தலைவியின் ஏக்கம்.

என்னுயிரே என்னுயிரே என்றே கூவும்
....இனிமேலும் பொறுக்கேனென்(று) எரிந்து தள்ளும்

--> Regarding negation of பொறுத்தல் - Good to avoid colloquial forms such as  பொறுக்கேன்
Better to use forms such as பொறேன், பொறுக்கமாட்டேன், etc.
தாளேனென்று? தாங்கேனென்று?

Nagoji

未読、
2021/09/06 2:47:452021/09/06
To: santhav...@googlegroups.com
வெறுக்கேன், மறுக்கேன் முதலிய பாடல்களில் உள்ளன.

வானவர்தம் ஆணை மறுக்கேன் மறா(து)இனிநீ
ஆன உல(கு)அளித்தி ஐயஎனத் - தானநிறை
கையினால் தம்பி கரமலர்கள் தீண்டினான்
ஐயன்ஓர் ஆயிரம்பே ரான்....860 - கம்பன்

உரைநடையிலும் மறுக்கேன், பொறுக்கேன் போன்றவை உள்ளனவே?

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

未読、
2021/09/06 3:05:022021/09/06
To: santhav...@googlegroups.com
எப்புறத்தும் இருக்கின்றான் என்னோன் என்னும்
....எல்லோரும் அகன்றபின்பு நீவா என்னும்
இப்படியேன் எனைமயக்கு கின்றாய் என்னும்
....இம்மயக்கம் இனிதென்று மாற்றிச் சொல்லும்
எப்படியும் எனைமணக்க வருவான் என்னும்
....ஏறடர்த்த மாலென்னும் தன்தோள் நோக்கும்
முப்புரத்தை எரித்தோற்கும் முன்னோன் என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(2) -- 6-Sep-2021

என்னோன் - என்னவன்

- sankara dass

Nagoji

未読、
2021/09/07 2:59:342021/09/07
To: santhav...@googlegroups.com
பித்தெனக்குப் பிடித்துளதோ என்று கேட்கும்
....பீலியினைத் தொட்டுவிட்டால் நாணி நிற்கும்
மத்தினொலி கேட்டுவிட்டால் மாய்ந்து போகும்
....மரகதமே மாதவனே என்(று) அரற்றும்
பத்தியினும் காதல்தான் பெரிதென்(று) ஆர்க்கும்
....பயமின்றி இருட்டறையில் பாடி ஆடும்
முத்தமிழின் சுவையெல்லம் இவனே என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(3) -- 7-Sep-2021

இருட்டு, கண்ணனின் நிறம் என்பதால், பயமில்லை.

- sankara dass

Siva Siva

未読、
2021/09/07 8:37:472021/09/07
To: santhavasantham
/ பத்தியினும் காதல்தான் பெரிதென்(று) ஆர்க்கும்  /
பக்தி & காதல் - ஒரே பொருளன்றோ?

Nagoji

未読、
2021/09/07 13:01:272021/09/07
To: santhav...@googlegroups.com
காதல் என்பதற்குப் பத்தி என்று ஒரு பொருள் உண்டேனும், இங்கு இச்சை என்பதையெ கொள்க.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

未読、
2021/09/07 21:49:362021/09/07
To: சந்தவசந்தம்
மிக அருமையாக நாயகி பாவத்தை சொன்னயங் கொண்ட பாடல்களாக  அமைத்துள்ளீர்கள்.

அனந்த்

On Tue, Sep 7, 2021 at 2:59 AM Nagoji <nag...@gmail.com> wrote:
--
Y

Nagoji

未読、
2021/09/08 1:31:442021/09/08
To: santhav...@googlegroups.com
காலமெலாம் காத்திருப்பேன் என்று சொல்லும்
....கழையோசை கேட்டுவிடின் வாடி நிற்கும்
கோலமுகிற் கூட்டத்தின் பின்னே ஓடும்
....குடைதன்னை மலையென்று பிடித்துக் கொள்ளும்
பாலருந்து கன்றைக்கண்(டு) அணைத்துக் கொள்ளும்
....பால்பொங்கு நிலைகண்டு கடலோ என்னும்
மூலவனே என்றழைத்த கரியெங்(கு) என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(4) -- 8-Sep-2021

- sankara dass

Nagoji

未読、
2021/09/08 23:59:572021/09/08
To: santhav...@googlegroups.com
செடியாய வல்வினைகள் தீர்ப்பான் என்னும்
....சிங்கமுகத் திருமாலே என்(று) அயர்க்கும்
அடியோடு மறந்தனையோ என்னை என்னும்
....ஆதாரம் நீயன்றோ என்று வீழும்
துடியாரும் கையனைஏன் சேர்ந்தாய் என்னும்
....சூதாட்ட மனைசென்று தேடிப் பார்க்கும்
முடியாது நீளிரவே போபோ என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(5) -- 9-Sep-2021

துடி - உடுக்கை; சிவன் கையில் துடி உள்ளது.
சூதாட்ட மனை - கண்ணன் உள்ளானோ என்று.

- sankara dass

Nagoji

未読、
2021/09/09 23:24:472021/09/09
To: santhav...@googlegroups.com
சான்றோர்கள் சொல்வழியான் செல்லேன் என்னும்
....சங்கெடுத்து வாய்வைக்கும் மயங்கி நிற்கும்
நான்றானே நினக்கேற்ற நங்கை என்னும்
....நாணத்தை விட்டுவிட்டேன் என்று கத்தும்
ஈன்றாளின் காவலினால் இளைத்துப் போகும்
....எட்டென்னும் எண்ணெழுதிச் சுவர்நி ரப்பும்
மூன்றாகி நிற்கின்ற முதலே என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(6) --- 10-Sep-2021

எட்டு - அஷ்டாக்ஷரம் குறிப்பு.

- sankara dass

Siva Siva

未読、
2021/09/10 8:43:402021/09/10
To: santhavasantham
/ சான்றோர்கள் சொல்வழியான் செல்லேன் என்னும்  / = ?

Nagoji

未読、
2021/09/10 12:13:442021/09/10
To: santhav...@googlegroups.com
சான்றோர்கள் நல்வழியும், கட்டுப்பாடுகளையும் சொல்வர். காதல் வரின், மூத்தோரும் சான்றோரும் சொல்வதெல்லாம் கசக்கும் என்பதனால்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

未読、
2021/09/11 0:22:142021/09/11
To: santhav...@googlegroups.com
காரோடு போட்டியிடும் வண்ணா என்னும்
....கரிகாக்க வந்ததுபோல் வருவான் என்னும்
நீராடும் போதெனுடை கவரேல் என்னும்
....நீள்கதிர்போல் சுடுகின்றாய் தாங்கேன் என்னும்
ஆரோடும் யான்பேச மாட்டேன் என்னும்
....அவர்ஊட்டின் மட்டும்தான் உண்பேன் என்னும்
மோரோடு வெண்ணெயுண்ண வாவா என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(7) -- 11-Sep-2021

கார் - மேகம்
கரி - யானை; கஜேந்திரன்
கவர்தல் - திருடிச் செல்லல்
நீள் - ஒளி
சுடுதல் - பிரிவால் வரும் துயர் குறிப்பு

- sankara dass

Siva Siva

未読、
2021/09/11 9:12:472021/09/11
To: santhavasantham
/ காரோடு போட்டியிடும் வண்ணா  /
காரோடும் மேனியுடைக் கண்ணா ?
(ஓடுதல் - 13. To spread; பரத்தல். )

/அவர்ஊட்டின்/
பிற இடங்களில் ஒருமை வந்து இங்கே பன்மை?

Nagoji

未読、
2021/09/12 0:03:592021/09/12
To: santhav...@googlegroups.com
/அவர்ஊட்டின்/
பிற இடங்களில் ஒருமை வந்து இங்கே பன்மை?
>>> மாற்றலாம் என்று முதலில் எண்ணினேன். பிறகு யோசித்ததில், காதல் மயக்கில் மாற்றி மாற்றிச் சொல்வதே ஒரு நயமாக இருப்பது போல் தோன்றியது. அப்படியே விட்டுவிட்டேன்.

- sdn 

Nagoji

未読、
2021/09/12 0:05:582021/09/12
To: santhav...@googlegroups.com
எல்லையிலா இன்பமவன் நாமம் என்னும்
....இனித்தாழ்க்கின் மடலூர்வேன் எனமி ரட்டும்
வில்லமர்ந்த தோளெனக்குச் சொந்தம் என்னும்
....விநாயகனே எமைச்சேர்த்து வைப்பாய் என்னும்
சொல்லிறந்த நிலைகாட்டும் விழியன் என்னும்
....சொல்மறவேன் என்றான்சொல் பொய்யோ என்னும்
முல்லைமலர் மெத்தைமுள்போல் குத்தும் என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(8) -- 12-Sep-2021

மடலூர்தல் - பனைமர மடலில் ஊரார்முன் ஊர்தல் - காதலை வெளிப்படையாக அறிவிக்கும் பொருட்டு.
விநாயகன், முருகனையும் வள்ளியையும் சேர்த்து வைத்தது போல் எம்மையும் சேர்த்து வைக்க வேண்டல்.

- sankara dass

Nagoji

未読、
2021/09/13 0:28:352021/09/13
To: santhav...@googlegroups.com
மறையாரும் நாவுடைய மன்னா என்னும்
....மாலென்னும் பெயருனக்குப் பொருத்தம் என்னும்
சிறையாரும் மடக்கிளியைத் தூத னுப்பும்
....செல்லாத காசோயான் என்று தேம்பும்
பிறையாரும் கோடுடைய மூர்த்தீ என்னும்
....பெண்சாபம் பொல்லாது வாங்கேல் என்னும்
முறையாக எனைக்கேட்டு வருவான் என்னும் 
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(9) -- 13-Sep-2021

மால் - மயக்கம்
கேட்டல் - பெண்கேட்டல் குறிப்பு
சிறை - இறகு, காவல்
கோடு - பல். வராக மூர்த்தியின் பல், பிறைபோல் இருக்கும்.

- sankara dass

Nagoji

未読、
2021/09/14 0:23:012021/09/14
To: santhav...@googlegroups.com
கிள்ளைமொழி கேட்டாலே கிறங்கிப் போகும்
....கேசவனின் பெயர்சொல்ல மாட்டேன் என்னும்
உள்ளிருந்து கொல்கின்றான் என்று சொல்லும்
....உதரத்தில் தாம்புடுத்தி அழகு பார்க்கும்
கள்ளருந்தி னாற்போலக் குழறும் கூவும்
....கமலத்த டாகத்தில் நீந்தி ஆர்க்கும்
முள்ளைமுள்கொண்(டு) எடுப்பதறி யாயோ என்னும்
....முடிகொண்டான் இராகவனைக் கண்டாள் கொல்லோ...(10) -- 14-Sep-2021

கிள்ளை - கிளி - இராகவன் பேர் சொல்வதால்
உதரம் - வயிறு; தாம்பு - கயிறு
கமலம் - திருமாலின் கண் குறிப்பு; ஆர்த்தல் - ஒலித்தல்
முள் - இங்கு காதல் குறிப்பு

நாயகி - ஜீவாத்மா. நாயகன் திருமால் - பரமாத்மா. ஜீவன், ப்ரம்மத்தை விரும்புவதைச் சொல்வதே இப்பாடல்களின் நோக்கம். உலக வழக்கத்துடன் தத்துவத்தைக் கலந்து சொல்லும் போது, சுவை கூடிப் பொருளும் எளிதில் விளங்கும்.

முடிகொண்டான் பதிகம் நிறைவுற்றது.
நாராயண நாராயண.

- sankara dass

Siva Siva

未読、
2021/09/14 10:09:352021/09/14
To: santhavasantham
/ உதரத்தில் தாம்புடுத்தி அழகு பார்க்கும்  /
கயிற்றைக் கட்டலாம், அணியலாம். உடுத்தல் என்றும் சொல்லலாமா என்று அறியேன்;

Nagoji

未読、
2021/09/14 11:57:292021/09/14
To: santhav...@googlegroups.com
தாம்பையணிந் தழகு பார்க்கும் - என்று மாற்றி விட்டோம்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

未読、
2021/09/14 14:42:362021/09/14
To: சந்தவசந்தம்
On Tuesday, September 14, 2021 at 10:57:29 AM UTC-5 sankara dass nagoji wrote:
தாம்பையணிந் தழகு பார்க்கும் - என்று மாற்றி விட்டோம்.

- சங்கர தாஸ்

தாம்பைத் தொடுக்கலாம்.
முல்லைப்பாட்டு:

தலைவியைத் தேற்றுதல்

சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, 
15
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்,


ஆய்மகள் பச்சைக் கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தை அந்த ஆய்மகள் தன் கக்கத்திலே அணைத்துக்கொண்டு அதனைத் தேற்றும் சொற்களைப் பேசினாள். “கையில் வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர உன் தாயர் (தாய்ப்பசு) இன்னே (இப்பொழுதே) வந்துவிடுவர்” என்றாள். 

Nagoji

未読、
2021/11/27 6:31:002021/11/27
To: santhav...@googlegroups.com
அரசவனங்காடு (குடவாசல் அருகில் உள்ளது)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் காய் மா தேமா.

கருமுகிலிற் கரியதொரு வண்ணம் தோன்றும்
....கஞ்சனையன் றடர்த்திட்ட காலும் தோன்றும்
திரிபுரத்தை எரித்ததிரு மேனி தோன்றும்
....திகிரிவளர் வலக்கரமும் சிறந்து தோன்றும்
பரிமுகமாய் மறையுரைத்த செந்நாத் தோன்றும்
....பண்மலியும் குழல்பதிந்த இதழ்கள் தோன்றும்
அரிமலர்ந்த முகமெங்கும் வந்து தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(1) -- 27-Nov-2021

திரிபுரத்தை எரித்ததிரு மேனி - சிவ ஸ்வரூபம்
பரிமுகம் - ஹயக்ரீவர்
அரிமலர்ந்த முகம் - நரசிம்மம்

- sankara dass

Nagoji

未読、
2021/11/27 6:32:492021/11/27
To: santhav...@googlegroups.com
அரசவனங்காடு அருள்மிகு லக்ஷ்மி நாராயணப் பெருமாள்

- sdn

Nagoji

未読、
2021/11/28 2:40:512021/11/28
To: santhav...@googlegroups.com
தண்டிக்கும் படையைந்தும் ஒருங்கே தோன்றும்
....தமிழ்ப்பாட்டில் மிகமகிழும் முகமும் தோன்றும்
கண்டத்தில் கறையுடைய கோலம் தோன்றும்
....கனகனுடல் கீறிட்ட உகிரும் தோன்றும் 
எண்டிக்கும் மணம்பரப்பும் துளவம் தோன்றும்
....ஏறடர்த்த வலிமையுடைத் தோள்கள் தோன்றும்
அண்டத்தை ஊடறுத்த தாளும் தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(2) -- 28-Nov-2021

கனகன் - இரணியன்
உகிர் - நகம்

- sankara dass

Nagoji

未読、
2021/11/29 0:37:062021/11/29
To: santhav...@googlegroups.com
சுரிசங்கம் ஒளிர்கின்ற இடக்கை தோன்றும்
....தூவெண்ணெய் உண்டிட்ட வாயும் தோன்றும்
எரிதங்கு கையானின் பாதி தோன்றும்
....எல்லாமாய் நிற்கின்ற இயற்கை தோன்றும்
பரியங்க மாவாதி சேடன் தோன்றும்
....பணிவாருக் கருள்செய்யும் பரிவு தோன்றும்
அரிபொங்கும் அழகெங்கும் தோன்றும் தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(3) -- 29-Nov-2021

பரியங்கம் - கட்டில், படுக்கை

- sankara dass

Siva Siva

未読、
2021/11/29 8:54:502021/11/29
To: santhavasantham

Nagoji

未読、
2021/11/30 2:19:172021/11/30
To: santhav...@googlegroups.com
பித்தனது திருமேனி ஒருபால் தோன்றும்
....பீலியமர் கருங்குஞ்சி சிறந்து தோன்றும்
சித்தியருள் செங்கமல அங்கை தோன்றும்
....தெளிவருளும் மறையான கீதை தோன்றும்
மத்தொடுவெண் ணெய்த்தாழி தோன்றும் தோன்றும்
....மாற்றாரை மாட்டுகின்ற சரமும் தோன்றும்
அத்தியினைக் காத்திட்ட ஆழி தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(4) -- 30-Nov-2021

அத்தி - யானை, ஆழி - சக்கரம்
குஞ்சி - குடுமி - கொண்டை

- sankara dass

Nagoji

未読、
2021/11/30 2:22:062021/11/30
To: santhav...@googlegroups.com
Yes. அதன் தாக்கமே.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

未読、
2021/12/01 0:23:302021/12/01
To: santhav...@googlegroups.com
துப்பாரும் திருநேமி முன்னே தோன்றும்
....தோல்வியிலா அம்பறாத் தூணி தோன்றும்
தப்பாமல் சார்ந்தாரின் தமிழும் தோன்றும்
....சத்தியத்தை நிலைநாட்டும் சக்தி தோன்றும்
இப்பாரை அளந்ததிரு வடியும் தோன்றும்
....எட்டெழுத்தில் மறைந்தருளும் இயல்பு தோன்றும்
அப்பாலுக் கப்பாலும் வாயுள் தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(5) -- 1-Dec-2021

துப்பு - ஒளி
தப்பாமல் சார்ந்தார் - ஆழ்வார்கள் குறிப்பு

- sankara dass

Nagoji

未読、
2021/12/01 22:46:502021/12/01
To: santhav...@googlegroups.com
நீணாகப் படுக்கையொன்று கண்முன் தோன்றும்
....நெடுவரையைக் குடையாக்கொள் விரலும் தோன்றும்
பூணாக அரவணிந்தோன் உருவம் தோன்றும்
....பொய்யாகி மெய்யாகும் பூதி தோன்றும்
தூணாகித் துரும்பாகும் குணமும் தோன்றும்
....துரும்பினையும் அம்பாச்செய் வீரம் தோன்றும்
ஆணாகிப் பெண்ணலியாம் அருமை தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(6) -- 2-Dec-2021

நீணாகம் - நீள் நாகம்
பூதி - பகவானின் விபூதி என்று கொள்க
துரும்பினையும் அம்பாச்செய் - இராமர் ஒரு தருப்பையை அத்திரமாக ஏவியது.

- sankara dass

Nagoji

未読、
2021/12/03 0:37:572021/12/03
To: santhav...@googlegroups.com
மாதாபி தாவாய வண்ணம் தோன்றும்
....மரகதத்தை விஞ்சுகிற வண்ணம் தோன்றும்
வேதாவை உற்பவிக்கும் உந்தி தோன்றும்
....விரிகடல்மேல் அணைகட்டும் விறலும் தோன்றும்
வேதாள கணத்தலைவன் உருவும் தோன்றும்
....வில்முரித்த தோளுடைய திண்மை தோன்றும்
ஆதார மாநிற்கும் அருவும் தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(7) -- 3-Dec-2021

வண்ணம் - சிறப்பு, நிறம்
வேதாள கணத் தலைவன் - சிவன்
வேதா - பிரமன்
அணை - சேது
விறல் - திறன்

- sankara dass

Nagoji

未読、
2021/12/04 23:19:542021/12/04
To: santhav...@googlegroups.com
கெஞ்சுகிற பிள்ளைமுகம் தோன்றும் தோன்றும்
....கிறங்கடிக்க வைக்கின்ற  சிரிப்புத் தோன்றும்
வஞ்சியுறை கின்றதிரு மார்பும் தோன்றும்
....வாமனனா வந்துவளர் மாண்பு தோன்றும்
நஞ்சமரும் கண்டனது மேனி தோன்றும்
....நாகத்தின் மேலாடும் பாதம் தோன்றும்
அஞ்சலெனக் காட்டுகின்ற அங்கை தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(8) -- 4-Dec-2021

அம்பரிசன் தனைக்காத்த ஆழி தோன்றும்
....அவுணர்குல வேரறுக்கும் ஆற்றல் தோன்றும்
அம்புலியும் செங்கதிரும் கண்ணில் தோன்றும்
....அருமறையின் கருவாய நாதம் தோன்றும்
அம்புலியை அணிந்தானின் கோலம் தோன்றும்
....அறுமுகனின் மாமனெனும் பெருமை தோன்றும்
அம்புபொழி வில்லாரும் தோளும் தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(9) -- 5-Dec-2021

அம்பரிசன் - அம்பரீஷன்

(I thought I posted one song yesterday. Then realised that I did not)

- sankara dass

Siva Siva

未読、
2021/12/05 10:51:152021/12/05
To: santhavasantham
/நஞ்சமரும் கண்டனது மேனி தோன்றும்/
நஞ்சமரும் கண்டனொரு பாகம் தோன்றும் ?

/அவுணர்குல வேரறுக்கும் ஆற்றல் தோன்றும்/
அவுணர்குலம் வேரறுக்கும் ஆற்றல் தோன்றும் ?

Nagoji

未読、
2021/12/06 1:01:132021/12/06
To: santhav...@googlegroups.com
இரண்டு திருத்தங்களும் அருமை.

....அவுணர்குலம் வேரறுக்கும் ஆற்றல் தோன்றும்

நஞ்சமரும் கண்டனொரு பாகம் தோன்றும்

திருத்திக் கொண்டோம்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

未読、
2021/12/06 1:02:112021/12/06
To: santhav...@googlegroups.com
முற்றுமறி மோனவுரு முன்னே தோன்றும்
....மூவருளும் முதலாய மொய்ம்பு தோன்றும்
பெற்றமிசை அமர்வோனின் மேனி தோன்றும்
....பெண்மானம் காக்கவந்த இறைமை தோன்றும்
மற்றொருவர் நேரில்லா மகிமை தோன்றும்
....மலைமகளுக்(கு) அண்ணனெனும் உறவு தோன்றும்
அற்றவருக்(கு) அருள்புரியும் அன்பு தோன்றும்
....அரசவனங் காடமர்ந்த அழக னார்க்கே...(10) -- 6-Dec-2021

பெற்றம் - எருது

அரசவனங்காட்டுப் பதிகம் நிறைவுற்றது.

Nagoji

未読、
2021/12/06 1:16:332021/12/06
To: santhav...@googlegroups.com
பெற்றமிசை அமர்வோனின் பாகம் தோன்றும்

- சங்கர தாஸ்

Nagoji

未読、
2021/12/30 3:22:572021/12/30
To: santhav...@googlegroups.com
திருக்கடன்மல்லை
அறுசீர் விருத்தம் - காய் மா தேமா

தேராரும் வீதி தன்னில்
....திரிகின்ற பிள்ளைத் தேவைக்
கூராரும் பகழி யானைக்
....குன்றுகுடை யாக்கொண் டானைத்
தாராரும் மார்பி னானைத்
....தசமுகனை வதைத்திட் டானைக்
காராரும் மேனி யானைக்
....கடன்மல்லைக் கண்டேன் நானே....(1) -- 30-Dec-2021

தேவு - தெய்வம்
பகழி - அம்பு

- sankara dass

Nagoji

未読、
2021/12/31 1:51:222021/12/31
To: santhav...@googlegroups.com
கஞ்சமுதி உந்தி யானைக்
....கரிமுகற்கு மாமன் தன்னைக்
கஞ்சநிகர் விழியி னானைக்
....காலிமேய்த் திட்ட மாலைக்
கஞ்சம்வழி சடையி னானைக்
....கலந்துலவு மாணிக் கத்தைக்
கஞ்சனுயிர் எடுத்த காலைக்
....கடன்மல்லைக் கண்டேன் நானே....(2) -- 31-Dec-2021

கஞ்சம் - தாமரை, நீர்
கஞ்சன் - கம்சன்
காலி - கால்நடைகள்

- sankara dass

Siva Siva

未読、
2021/12/31 8:25:522021/12/31
To: santhavasantham
/சடையி னானைக்
....கலந்துலவு மாணிக் கத்தைக்/

..... மரக தத்தைக் ?

Nagoji

未読、
2021/12/31 23:43:422021/12/31
To: santhav...@googlegroups.com
ஆம். மாணிக்கம் என்பது பொதுவாக மணியைக் குறிக்கும் என்றாலும், மரகதமே பொருத்தம்.
....கலந்துலவு மரக தத்தைக்... என்று மாற்றி விட்டேன்.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/kVpICfN9CgI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Nagoji

未読、
2021/12/31 23:59:142021/12/31
To: santhav...@googlegroups.com
அரிமுகனா வந்து நீசன்
....ஆகத்தைக் கிழித்திட் டானை
வரிவளையாள் சீதை தன்னை
....மணம்புரிந்த திண்தோள் ஏற்றைத்
திரிபுரமெ ரித்த தேவைச்
....சேர்த்துடன் வைத்த மாலைக்
கரியபெரு மாணிக் கத்தைக்
....கடன்மல்லைக் கண்டேன் நானே....(3) -- 1-Jan-2022

எங்கள் வீட்டில் இன்று கம்பராமாயணம் கடிமணப்படலம் பாராயணம் நடந்தது.

- sankara dass

その他のメッセージを読み込んでいます。
新着メール 0 件