அறிவு நலம் உடையீர்,
அனைவருக்கும் வணக்கம். புலவர் இராமமூர்த்தி அவர்கள் தன் கவிதையின் இடையே ஒளவையாரின் கற்றது கைம்மண்ணளவு எனத் தொடங்கும் வெண்பாவைக் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பான சில ஐயங்கள்.
1. அப்பாடல் வெண்பா யாப்பில் முழுமையாக அமையவில்லையே.
2. அப்பாடல் ஒளவையாரின் தனிப் பாடல்களில் ஒன்றா?
3. இணையத்தில் தேடிய போது வெவ்வேறுசீர் அமைப்பில் அமைந்துள்ளதைப் பார்த்தேன்.
கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்
றுற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - முற்ற
வெறும்பந் தயங்கூற வேண்டா புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்
-புலவர் இராமமூர்த்தி மேற்கோள் காட்டிய கவிதை
கற்றதுகை மண்அளவு் கல்லாதது உலகுஅளவுஎன்று
கற்ற
கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும்பந்தயம்
கூற வேண்டாம் புலவீர்
எறும்பும்தன்
கையால்எண் சாண் -
-இணையத்தில் பார்த்தது
4. ஐ.நா.சபையில் எழுதி வைக்கப்பட்டதாக அறியப்படும் இப்பாடலின்
செம்மையான, சரியான வடிவத்தை அறிய விரும்புகிறேன்.
கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவு
கற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – முற்ற
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்
எறும்பும்தன் கையாலெண் சாண்.
இது என் தமிழ்ப் பேராசிரியர் சொன்னது.
கல்லாதது+உலகளவு= கல்லா துலகளவு என வருமா?
- பணிவுடன் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே
--
4. ஐ.நா.சபையில் எழுதி வைக்கப்பட்டதாக அறியப்படும் இப்பாடலின்
செம்மையான, சரியான வடிவத்தை அறிய விரும்புகிறேன்.
1. இது ஔவையின் தனிப்பாடல்களில் ஒன்று.
- கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
- உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
- வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
- எறும்புந்தன் கையாலெண் சாண்.
- என்கிறது.
- https://ta.wikisource.org/s/4m
- ( புலியூர்க் கேசிகன் நூலும் இப்படியே சொல்கிறது. )
2. தனிப்பாடல் திரட்டின் செம்பதிப்பு கிட்டாதவரை, கல்லா துலகளவு என்று மேற்கண்டது போல் இருப்பதை,கல்லாதது --> கல்லாது என்று ‘இடைக்குறை’ யாகக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.
/கல்லாதது --> கல்லாது என்று ‘இடைக்குறை’ யாகக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது./Yes, it would seem so.
--
புலியூர்க் கேசிகன் பதிப்புக்கு மூலம் பழைய தனிப்பாடற்றிரட்டு அச்சுநூல்கள்.உ-ம்:Tan̲ippāṭar̲r̲iraṭṭu: mutar̲pākam
https://books.google.com/books/about/Tan̲ippāṭar̲r̲iraṭṭu.html?id=3cMxAQAAMAAJPDF can be downloaded from above valaikkaN.
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் |
நன்றி, கணேசன்.>>PDF can be downloaded from above valaikkaN. >>எப்படி என்று விவரமாய்ச் சொல்லமுடியுமா?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
I don't get that option in my Chrome browser. ( see screen shot below). ?
On Thursday, January 18, 2018 at 5:48:07 AM UTC-8, பசுபதி wrote:I don't get that option in my Chrome browser. ( see screen shot below). ?I uploaded this book in my Google drive,Pl. download it from there.will upload this book in my acct, in archive.org site also.~ng
Thanks, Ganesan.Can you shed some light on why I ( perhaps others?) am not able to get the pdf copy? ( i tried different browsers too ..without success.)
Dear Ganesan,I get the first 3 options on left-click, but not the last, 4th, " Download PDF" option.Same with Firefox browser.Does the same thing happen to everyone else?