கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 4

1 view
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
11:32 AM (8 hours ago) 11:32 AM
to santhavasantham


கொடுத்த கருத்திற்கு விடுத்த வெண்பா - 4

கொடுத்த கருத்து:

*எந்தவொரு பிரச்சனைக்கும் மூன்று வகையான தீர்வுகள் உள்ளன...!!*

*1.ஏற்றுக் கொள்வது.,*
*2.மாற்றிக் கொள்வது.,*
*3.விட்டு விடுவது.,*

*ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்வது..,*
*மாற்றவே முடியாத விஷயங்களை விட்டு தள்ளுவது.

விடுத்த வெண்பா:

ஏற்றலு மோர்வழி; ஏலாக்கால் தூற்றாதே
மாற்றிடுவீர்; அன்றேல் மனமுவந்து - தேற்றமுடன்
ஒப்புதலே மேலாம்; ஒழிக்கவொண்ணா வல்வினையைத்
தப்புதலே தீர்வாய்த் தகும்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
11/02/2026



Reply all
Reply to author
Forward
0 new messages