சங்கல்பம்

0 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Dec 24, 2025, 5:43:26 AM (3 days ago) Dec 24
to Santhavasanthsm சந்தவசந்தம்
*not just about new year vows*

🙏

ஆளும் சங்கல்பம்
ஆனதொரு இலக்காலே
நீளும் நம்மாயுள்!
நிறையும் நிறைவாகும்!
மாளுந் துயரவலி!
மகிழ்மூச்சின் அதிவேகம்
கோளுங் கடக்கும்!
கூடுமுளம் உற்சாகம்!

ஆதலினால் ஏதோ
ஆனதிது வாழ்க்கைஎன
ஓதலதை விடுவீர்!
உடல்உள்ள வியாதிகளைக்
காதலுடன் பேசுங்
காலவிரயந் தவிர்ப்பீர்!
சாதலிலை குறிக்கோள்!
சாதிக்கத் தான்பிறப்பு!

ஏதேனும் கற்றல்!
எவர்க்கும் துணையாதல்!
சாதனமாய் நம்மைச்
சரியாகப் பயனிடுதல்!
நூதனமாய் யோசியுங்கள்!
நொடியோடு வதனாலே
ஆதரவாய் ஆன்மபல
அடையாளம் அடைவீரே!

மீ. ரா
Sent from my iPhone

Swaminathan Sankaran

unread,
Dec 24, 2025, 10:16:10 AM (3 days ago) Dec 24
to santhav...@googlegroups.com
"ஆதலினால் ஏதோ 
ஆனதிது வாழ்க்கைஎன
ஓதலதை விடுவீர்!  
உடல்உள்ள வியாதிகளைக்
காதலுடன் பேசுங் 
காலவிரயந் தவிர்ப்பீர்!
சாதலிலை குறிக்கோள்! 
சாதிக்கத் தான்பிறப்பு!"

மிக அருமையான வரிகள்!  ஆழ்ந்த சிந்தனை!
பகிர்ந்ததற்கு நன்றி.

சங்கரன் 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/066B1550-8F17-4FC2-8180-95B19E09020F%40gmail.com.


--
 Swaminathan Sankaran
Reply all
Reply to author
Forward
0 new messages