பழம்பாடல் - அடைமொழி

3 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 25, 2026, 10:42:58 PM (10 hours ago) Mar 25
to சந்தவசந்தம்


                                                   <>       'அடை'மொழி    <>
 














வேண்டும் வேண்டும் அடைவேண்டும்! -நன்கு


.. வெந்து முறுகிய அடைவேண்டும்!

மாண்டு போன நாக்கினுக்கு - அது

.. மறுபடி உயிரைத் தரவேண்டும்!



துவரை உளுந்து கடலையெனப் - பல

.. சுவையுள தானியம் அரிசியுடன்

அவரவர் தேவைக் கேற்றபடி - கலந்(து)

.. அரைத்துச் சுடுங்கால் அடைபிறக்கும்!



கார அடையுடன் தவலைஅடை - இன்னும்

.. காரடை யார்நோன் படையுண்டு

வாரம் மும்முறை அடையுண்டால்

.. வாரா தெந்த வலிநோயும்!



அடையும் அவியலும் ஆகாகா! - அதற்(கு)

.. ஆகா(துஇணைமிள காய்ப்பொடியும்

அடைந்தால் அடையே அதைத்தவிர - பிற

.. அற்பத் தனஉண் டிகள்அடையோம்!



வேண்டும் வேளை அடைவேண்டும் - பசி

.. வெறியை விரட்ட அடைவேண்டும்!



காண்டீன் ‘மெனு'வில் அடையின்றேல் - அக்

.. கடையை மூட வழிசெய்வோம்!



யாண்டும் தமிழர் இனம்காக்கும் - பணி

.. யாரம் அடையே எனஉணர்வோம்!

மீண்டும் அடையின் மேன்மையினை - நாம்

.. மீட்டிட மேலும் அடைஉண்போம்!



... 'அடையானந்தன்'
படம், நன்றியுடன்: padhuskitchen

Siva Siva

unread,
Mar 25, 2026, 10:46:01 PM (10 hours ago) Mar 25
to santhav...@googlegroups.com
அடைந்து மொழிந்தீர்!


On Wed, Mar 25, 2026 at 10:42 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


                                                   <>       'அடை'மொழி    <>

GOPAL Vis

unread,
5:07 AM (4 hours ago) 5:07 AM
to santhav...@googlegroups.com
அடைநன்றே அப்படிப் போடுங்கள்! குஞ்சுக்(கு)
அடைகாக்கும் ஆம்கோழி! ஆக்களைச் சுட்ட
அடையாளம். காக்குமாம்! ஆகாத சொத்தை
அடையவும் ஆசையிலார் ஆர்? 

கோபால். 

On Thu, Mar 26, 2026 at 8:12 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

                                                   <>       'அடை'மொழி    <>
 
Reply all
Reply to author
Forward
0 new messages