விட்டுக் கொடுத்து வாழ் - மீ. விசுவநாதன்

4 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 3, 2026, 8:07:26 PM (2 days ago) Mar 3
to Santhavasantham, M. Viswanathan
"விட்டுக் கொடுத்து வாழ்"
    (மீ. விசுவநாதன்)

விட்டுக் கொடுத்து வாழும் போது 
நிம்மதி இருக்கும் - மன
நிம்மதி இருக்கும் 
தொட்ட தெல்லாம் குற்றம் சொன்னால்
நிம்மதி இழக்கும் - வரும்
சந்ததி தவிக்கும்.   (விட்டுக் கொடுத்து)

கொட்டும் மழையின் இசையைக் கேட்டால்
குளிரும் இதயம் - நோய்
குறைகள் மறையும்
சொட்டும் நீரைப் பகையாய்ப் பார்த்தால் 
சுகமெங் கிருக்கும் - மனம்
சுருங்கி கிடக்கும்.     (விட்டுக் கொடுத்து)

கச்சை கட்டிச் சண்டை செய்தால்
கவலை வளரும் - வருங்
காலம் தளரும்
பச்சைக் கிளிக்கும் பருந்தின் வகைக்கும்
வானம் வசந்தம் - அதன்
வாழ்வு சுகந்தம்.     (விட்டுக் கொடுத்து)
                  (03.03.2026. 06.23am)

Ram Ramakrishnan

unread,
Mar 3, 2026, 10:01:32 PM (2 days ago) Mar 3
to santhav...@googlegroups.com
அருமையான கருத்தும் பாடலும். வாழ்க உங்கள் கவிநயம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 3, 2026, at 20:07, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-uKafE17HXT0PequWZa7dS1p0OB7vpEo%2BsRKQt-u61AsQ%40mail.gmail.com.

Sai Ganesan H

unread,
Mar 3, 2026, 10:22:12 PM (2 days ago) Mar 3
to santhav...@googlegroups.com, M. Viswanathan
ஐயா! அருமையான பொருள் பொதிந்த பாடல்! 

—- சத்ய வேழன் . 

--

M. Viswanathan

unread,
Mar 3, 2026, 11:13:47 PM (2 days ago) Mar 3
to Sai Ganesan H, Santhavasantham
மிக்க நன்றி.
அன்பன்
மீ. விசுவநாதன்
04.03.2026 09.43 am

இமயவரம்பன்

unread,
Mar 4, 2026, 6:29:02 AM (yesterday) Mar 4
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
மிக அருமையான பாடல், திரு. மீவி.
Reply all
Reply to author
Forward
0 new messages