"விட்டுக் கொடுத்து வாழ்"
(மீ. விசுவநாதன்)
விட்டுக் கொடுத்து வாழும் போது
நிம்மதி இருக்கும் - மன
நிம்மதி இருக்கும்
தொட்ட தெல்லாம் குற்றம் சொன்னால்
நிம்மதி இழக்கும் - வரும்
சந்ததி தவிக்கும். (விட்டுக் கொடுத்து)
கொட்டும் மழையின் இசையைக் கேட்டால்
குளிரும் இதயம் - நோய்
குறைகள் மறையும்
சொட்டும் நீரைப் பகையாய்ப் பார்த்தால்
சுகமெங் கிருக்கும் - மனம்
சுருங்கி கிடக்கும். (விட்டுக் கொடுத்து)
கச்சை கட்டிச் சண்டை செய்தால்
கவலை வளரும் - வருங்
காலம் தளரும்
பச்சைக் கிளிக்கும் பருந்தின் வகைக்கும்
வானம் வசந்தம் - அதன்
வாழ்வு சுகந்தம். (விட்டுக் கொடுத்து)
(03.03.2026. 06.23am)