காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’

191 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 15, 2017, 11:41:38 AM7/15/17
to Santhavasantham

No. 394, A.R. No. 70 of 1890 (SII 4)
On the Head-Sluice of the Periyavaykkal at Musiri, Musiri Taluk, Trichinoply District.

ஸ்வஸ்திஸ்ரீ: திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜதேவற்க்கு யாண்டு 4-வது
வடகரை ராஜராஜ வளநாட்டு முசுறியாந மும்முடிசோழப்பேட்டையில்
தலைபெற்ற கடை கானகமான கரிகாலசோழப்பேராற்று நிலவாளைவெட்டுவார் நாயந்
வாய்த்தலை கல்ல [ர] [ ] செய்வித்தார் வாணகோவரயர் சாமந்தமுதலிகளில்
மணலூருடையாந் இராமந் சோழகோநாந நிலவாளைவெட்டுவார்நாயந்

( https://books.google.com/books?id=Mt5tAAAAMAAJ&  இது பழைய பதிப்பின்படி. அண்மையில் வெளியான தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 4
பார்த்து ஒப்பிடவேண்டும்).

இக் கல்வெட்டில் உள்ள முசுறி, வாய்த்தலை, நிலவாளை வெட்டுவார் நாயன் போன்ற
முக்கியமான சொற்றொடர்கள் சிலவற்றையும், அவை தரும் செய்திகளையும் ஆராய்வோம்.

நா. கணேசன்


காவிரிக்கு முதன்முதல் கல்லணை கட்டிய கரிகால் சோழன் ..........

>> ஆதாரம் ?

எங்கள் கல்லூரியில் (கிண்டி எஞ்சினீரிங்) புகழ்மிக்க ஹைட்ராலஜி பேராசிரியராக இருந்தவர்
வா. செ. குழந்தைசாமி. ஹைட்ராலஜியில் குழந்தைசாமி மாடல் என்றே ஒரு கோட்பாடு உள்ளது.
அவர் உலகத் தமிழ் மாநாட்டுக் கட்டுரை ஒன்றில் கல்லணை பற்றி எழுதியுள்ளார்.
பழைய கட்டுரைத் தொகுப்பு. படித்துப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. தேடிப் பதிவு செய்கிறேன்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் எஞ்சினீயர்கள் எழுதிய அறிக்கைகளில்
கல்லணையின் காலம் 1800 ஆண்டுகள் முன்பு என்ற செய்தி உள்ளது. அவற்றைத் தொகுக்கலாம்.
சுபா கல்லணை பற்றி ஒரு காணொளி செய்துள்ளார் அவ்விழையில்.
ஸ்ரீரங்கம் தீவு உருவானது, அதன் 2000 வருட ஆற்றியல் வரலாறு ஜியாலஜிஸ்ட்ஸ், ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ்,
ஆராய நிறைய இடமுண்டு. இலக்கியச் செய்திகளும் பார்க்கவேண்டும்.


Built by Chola King Karikalan during the first century, Grand Anicut (“Kallanai” in the local parlance), is one of the oldest water-diversion or water regulating structures in the world.” ...

The main function of this dam was to retain the supply in the Cauvery and its branches and pass on the surplus into Coleroon through the Ullar river.

The dam is seen as a model for engineers across the world. Sir Arthur Cotton’s 19th century dam across the river Coleroon (Kollidam), the major tributary of Cauvery, is stated to be a replication.

It is a sad reality that when the British took over Thanjavur from the Mahrattas in 1800, irrigation work was neglected but the supply realised in the Cauvery was inadequate.

In 1804, Captain Coldwell repaired the Grand Anicut and provided dam stones 0.69 metre in height on its crest and at the same time, raised the river embankment above, ensuring additional water to the Cauvery.

In 1829, Major Sim proposed undersluices in the Cauvery with outlets into the Coleroon to prevent the accumulation of silt in the upper reaches.

டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியம் தொல்லியல் அறிஞர். காவிரி படுகை ஊர் ஊராக அறிந்தவர்.
வாழ்நாளில் எத்தனையோ சோழர் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தவர். 130 ஆண்டுகளுக்கு முன்
நன்கறியப்பட்ட கல்வெட்டு ஒன்றை மீள்கண்டுபிடிப்பு செய்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்.
இந்தக் கல்வெட்டு வாசகத்தை பார்ப்போம்.

























காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ - கல்வெட்டு ஆதாரத்தை பாதுகாக்க கோரிக்கை

குள.சண்முகசுந்தரம்

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் விளங்கியதன் வரலாற்று ஆதாரமாக உள்ள சோழர் கால கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும் பெயர் இருந்தது. இதை கி.பி.1890-லேயே இந்திய கல்வெட்டுத் துறையினர் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல் வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு குறித்து சரியாக பிரகடனப்படுத்தப்படாத நிலையில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் கல்வெட்டு இருக்குமிடத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய குடவாயில் பாலசுப்ர மணியன், “குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே, கரிகால சோழ கரையை பலப்படுத்த ‘விநியோகம்’ என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இது, காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன் பேட்டையில் அகண்ட காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் மதகு பாலம் ஒன்று கட்டப்பட்டது. குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர் தான் இந்த மதகு பாலத்தை கட்டி இருக்கிறார். இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த கல்வெட்டு அழியாமல் இருக்கிறது.

இந்த கல்வெட்டை ஆதாரமாக வைத்துத்தான் காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் இருந்ததை இந்திய கல்வெட்டுத் துறை உறுதி செய்தது. இந்திய கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை குறிப்பு மற்றும் கல்வெட்டுச் சாசன நகலை வைத்து இதை உறுதி செய்துள்ளோம். ஆனால், அதன் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் அதை ராணி மங்கம்மாள் மதகு என்று அந்தப் பகுதி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்தும் அவர் கூறும் போது, “தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னம்” என்று மட்டும் கல்வெட்டு மதகு இருக்கும் இடத்தில் ஒரு அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். அதில் வேறு எந்த விவரமும் இல்லை. சோழர் காலத்தில் இந்த மதகு திறப்பான்கள் மர பலகைகளில் இருந்திருக்கிறது. பொதுப் பணித் துறையினர் அதை ரோலிங் ஷட்டர்களாக மாற்றிய போது, மதகுப் பாலத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் பாதியை அதன் முக்கியத்துவத்தை உணரா மல் சுவர் வைத்து மறைத்து விட்டார்கள்.

இப்போது, திருச்சி-நாமக்கல் புறவழிச் சாலைக்கு இந்தப் பகுதியை ஒட்டியே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக் கிறார்கள். இந்தப் பகுதியில் சாலை அமைத்து கனரக வாகனப் போக்குவரத்துத் தொடங்கினால் வரலாற்றுச் சின்னமான இந்த கல்வெட்டுக்கு ஆபத்து வந்து விடுமோ என நாங்கள் அஞ்சு கிறோம். எனவே, கல்வெட்டை மறைத்திருக்கும் செங்கல் சுவரை அகற்றி இந்த மதகுப் பாலத்தின் மீது எந்த வாகனங்களும் செல்லாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும், இம்மதகு குறித்த தகவல்களை ஒரு கல்வெட்டிலோ அல்லது பலகையிலோ எழுதி வைத்து மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்யவேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

குடவாயில் பாலசுப்ரமணியன்

N. Ganesan

unread,
Jul 15, 2017, 1:01:37 PM7/15/17
to சந்தவசந்தம்

No. 394, A.R. No. 70 of 1890 (SII 4)
On the Head-Sluice of the Periyavaykkal at Musiri, Musiri Taluk, Trichinoply District.

ஸ்வஸ்திஸ்ரீ: திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜதேவற்க்கு யாண்டு 4-வது
வடகரை ராஜராஜ வளநாட்டு முசுறியாந மும்முடிசோழப்பேட்டையில்
தலைபெற்ற கடை கானகமான கரிகாலசோழப்பேராற்று நிலவாளைவெட்டுவார் நாயந்
வாய்த்தலை கல்ல [ர] [ ] செய்வித்தார் வாணகோவரயர் சாமந்தமுதலிகளில்
மணலூருடையாந் இராமந் சோழகோநாந நிலவாளைவெட்டுவார்நாயந்

( https://books.google.com/books?id=Mt5tAAAAMAAJ&  இது பழைய பதிப்பின்படி. அண்மையில் வெளியான தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 4
பார்த்து ஒப்பிடவேண்டும்).

இக் கல்வெட்டில் உள்ள முசுறி, வாய்த்தலை, நிலவாளை வெட்டுவார் நாயன் போன்ற
முக்கியமான சொற்றொடர்கள் சிலவற்றையும், அவை தரும் செய்திகளையும் ஆராய்வோம்.

நா. கணேசன்


காவிரிக்கு முதன்முதல் கல்லணை கட்டிய கரிகால் சோழன் ..........

>> ஆதாரம் ?

சோழமண்டல சதகம் ஆத்மநாத தேசிகர் 18-ஆம் நூற்றாண்டில் செய்தது.
இரண்டு பதிப்புகள். இரண்டுமே என்னிடம் உள்ளது.
முதற் பதிப்பு: ப. அ. முத்துத்தாண்டவராய பிள்ளை,
2-ஆம் பதிப்பு: புலவர் செ. இராசு
(தஞ்சை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது).

அச் சதகப் பாடல் ஒன்று தருகிறேன்.

சோழிய வேளாளர்கள் கரிகால் சோழன் சொல்ல
கல்லணை காவிரியின் கரையில் கட்டினார்கள்
என்கிறது. அது குடவாசல் பாலு இப்பொழுது
ஒளிப்படம் தந்துள்ள கலிங்கு வடிவத்தில்
எழுந்த முதல் கல்லணை ஆகலாம்.
கொள்ளிடத்தின் குறுக்கே நீர்ஒழுங்கி (regulator)
மரத்தால் மதகுகள் வைத்துக் கட்டிய கல்லணை.
எல்லா நீரும் கொள்ளிடமே வாங்காமல் கொள்ளிடத்தை மறித்து
காவிரிக்கு நீர் ஓடச் செய்துள்ளது.

இதனைச் செய்தவன் கரிகால் சோழன் ஆவான்.
எனவே தான், கொள்ளிடத்தின் குறுக்கே கல்லணை
கட்டிய இடத்தில் காவேரியை “கரிகாலச் சோழன் பேராறு”
எனக் கல்வெட்டில் வெட்டி வைத்துள்ளனர் எனக் கருதுகிறேன்.

பல ஊர்களுக்கும், சோழர்கள் தங்கள் பெயர், விருதுப்பெயரால்
புதுப்பெயர் தந்துள்ளனர். உ-ம்: ராஜராஜ சதுர்வேதி மங்கலம், ...
அதே போல, தாங்கள் கரை கட்டிய ஆறுகளுக்கும்
அம் மன்னர்கள் பெயர்கள் உண்டு. பின்னர் உதாரணங்கள் தருகிறேன்.
இந்தக் கல்வெட்டில் கரிகால சோழப் பேராறு என்று
காவேரி குறிக்கப்பெறுதலான், சங்க கால கரிகால சோழன்
கட்டிய கல்லணை இதுவே எனலாம்.

செல்லார் பணியும் செம்பியர்கோன் செழுங்கா விரியின் சிறந்தகரை
கல்லால் அணைகட் டுதற்கேவு கருமம் முடித்த சோழியர்கள்
பல்லார் மேழி நெடுங்கொடியைப் பாயும் புலியி னொடுபதித்த
வல்லாண் மையினார் குடிவாழ்வு வளம்சேர் சோழ மண்டலமே

ஏரியும் ஏற்றத்தினாலும் பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம், தேரின்
அரிகாலின் கீழ் உகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு

நன்றி,
நா. கணேசன்

”நீயே, தண்புனல் காவிரிக் கிழவன்” புறம் 58

மாவண் சோழன் கழைமாய் காவிரி - அகம் 128

வலம்படு வென்றி வாய்வாள் சோழர்
இலங்கு நீர்க் காவிரி - அகம் 213

”காவிரி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டாகக் 
காவிரி புரக்கும் நாடு கிழவோனே” - பொருநர் ஆற்றுப்படை
கரிகால் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது

அலை எறியும் காவேரி ஆற்றுப்படைக்கு
மலையெறியும் மன்னர்க்கு மன்னன் - குலோத்துங்க சோழன் உலா (29:30)

சோழர் குலத்துக்கு உரிமையான காவேரி ஆறு:

காவிரி நாடன் திகிரி போல்
பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் - சிலம்பு

கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி - மணிமேகலை பதிகம்

மன்னர் குலப் பொன்னி ஆடுதிரால் - விக்கிரமசோழன் உலா


----------------

சில தனிப்பாடல்கள். காலச் செய்திகள் அவ்வளவு தெளிவாக இல்லை.
காத அளவைக் கூறும் இவைபோன்ற வெண்பாக்களில் உள்ள
பிரச்சினைகளை முன்புப் பார்த்தோம்.

தொக்க கலியின்மூ வாயிரத்துத் தொண்ணூற்றில்
மிக்க கரிகால வேந்தனுந்தான் - பக்கம்
அலைக்கும் புனல்பொன்னி ஆறுகரை இட்டான்
மலைக்கும் புயத்தானும் வந்து

இதன்படி கி.மு. 11-இல் கரைகட்டிய செய்தி புலப்படுகிறது. 
முதல் அடிக்கு ‘தொக்க சகனில் தொளாயிரத்துத் தொண்ணூற்றில்’ 
என்ற பாடபேதமும் உண்டு (பெருந்தொகை - 778) அதன்படி காலம் கி.பி. 1068 ஆகிறது.

அஞ்சின் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்
கஞ்சி காவேரிக் கரைகண்டு - தஞ்சையிலே
எண்பத்து மூன்றளவும் ஈண்ட இருந்தேதான்
விண்புக்கான் தண்புகார் வேந்து

என்பது ஒரு பழம்பாடல் (பெருந்தொகை 779).

உச்சங்கோல் எண்கோல் உயரம் பதினாறுகோல்
எச்சம் பிரிவாய் இருபதுகோல் - தச்சளவு
மண்கொள்ளக் கொண்டகோல் எண்கோல் வளவர்கோன்
கண்கொள்ளக் கண்ட கரை
Reply all
Reply to author
Forward
0 new messages