கவிதையில் யாப்பு

1,291 views
Skip to first unread message

ramaNi

unread,
Oct 1, 2015, 10:44:33 AM10/1/15
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு
ரமணி

முன்னுரை

கவிமாமணி இலந்தை இராமசாமி யவர்கள் நிறுவிப் பல பாவலர்கள் உறுப்பினராக உள்ள ’சந்தவசந்தம்’ கூகிள் குழுமத்தில் நான் சேர்ந்தபோது, சில புத்தகங்களை வைத்துக்கொண்டு அடிப்படை யாப்பிலக்கணம் கற்றேன். எனக்கு உதவிய புத்தகங்கள் பேராசிரியர் பசுபதி அவர்களின் ’கவிதை இயற்றிக் கலக்கு’, கி.வா.ஜகந்நாதன் அவர்களின் ’கவி பாடலாம்’ மற்றும் விசாகப் பெருமாளையர் அவர்களின் ’யாப்பிலக்கணம்’ என்பன. இவற்றுடன் தமிழ் இணையப் பல்கலைக் கழக வலைதளத்தில் உள்ள, அமிதசாகரனாரின் ’யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை’ மற்றும் வைத்தியநாத தேசிகரின் ’இலக்கண விளக்கம்’ போன்ற புத்தகங்களையும் பார்வையிட்டேன். இந்த முயற்சியும், ’சந்தவசந்தம்’ குழும அறிஞர்களின் வழிகாட்டலும், அடிப்படை யாப்பிலக்கணம் அறிந்து, சொந்தமாக மரபுக் கவிதைகள் புனையும் ஊக்கத்தையும் ஆற்றலையும் எனக்குத் தந்தது. 

இந்தப் புத்தகங்களை நான் பயின்றபோது, இவற்றில் உள்ள செய்திகள் நினைவில் நிற்கும் வகையிலும், ஒரு மாணவனின் கையேடாகவும், யாப்பிலக்கணக் கூறுகளை நானே செய்யுள் வடிவில் எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. பலவிதப் பாவகைகள், பாவினங்கள் முயன்றுபார்க்க இது ஒரு பயிற்சியாகவும் இருக்கும் என்று தோன்றவே, யாப்பின் அடிப்படை உறுப்புகள், வெண்பா, ஆசிரியப்பா மற்றும் இவற்றின் பாவினங்கள் வரையில் இலக்கணச் செய்யுட்கள் எழுதிவைத்தேன். இவற்றை ஒரு தொடராகவும் ’ஈகரை தமிழ்க் களஞ்சியம்’ போன்ற வலைதளங்களில் வெளியிட்டேன்.

இப்போது தொடரைப் படித்துப் பார்க்கும்போது, அது நன்றாக வந்திருப்பது தெரிகிறது. எனவே, இது புதிதாக மரபுக் கவிதை முனையும் மாணவர்களுக்கு ஒரு கையேடாகப் பயன்படலாம் என்று கருதி இந்த என் வலைப்பூவில் தவணை முறையில், வாரந்தோறும் வெளியிடுகிறேன். தொடரில் கணிணி மூலம் பயிற்சிகள் செய்யும் ஒரு புது முறையை அறிமுகப் படுத்தியுள்ளேன். இந்தப் பயிற்சிக்கான மென்பொருள் செயலிகள் எழுதித் தந்த என் மகன் திரு. பிரஷாந்த் குருமூர்த்திக்கு என் நன்றி.

தொடர் முடிந்ததும், தவணைகளை முறையாகச் சேர்த்து ஒரு மின்னூல் ஆக்கவும் திட்டம். என் முயற்சிகளுக்குத் திருவருளும், குருவருளும், அறிஞர்களின் பின்னூட்டமும் துணைநிற்க வேண்டிக்கொள்கிறேன்.

--ரமணி, 01/10/2015, கலி.14/06/5116

*** *** ***

ramaNi

unread,
Oct 1, 2015, 10:46:13 AM10/1/15
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு
ரமணி

1.00. கடவுள் வாழ்த்து

கணபதி தியானம்
(கலிவிருத்தம்: கூவிளம் விளம் விளம் விளம்)

வெண்துகில் உடுத்தவர் வெளியெனப் பரந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் விளங்குநாற் கரத்தினர்
கண்ணுறும் ஓங்காரர் கழல்தியா னித்துநான்
பண்ணுநூல் பொருளுடன் பயனுறப் பணிவனே! ... 1

1.01. அவையடக்கம்
(அளவியல் நேரிசை வெண்பா)

கற்றறிந்தோர் நூல்களைச் சற்றேனும் கற்பதில்
பெற்றசில செய்திகளின் பெற்றியை - மற்றவரும்
பார்த்துப் படித்தறிந்து பாக்கள் முனையவே
யாத்தேன் ’கவிதையில் யாப்பு’. ... 1

கற்றதைச் செய்முறையாய்க் காட்டும் குழந்தைநான்!
குற்றம் பொறுத்தே குறைநிறை கொண்டென்றன்
நூலைப் படித்துநீர் நூதனமாய் யாப்பறிந்தே
கால்நிற்கச் செய்வீர் கவி! ... 2

1.02. பாயிரம்

யாப்பின் இலக்கணம் ஏதோ பிலாக்கணமாய்
ஆப்பை அசைத்த அரியெனவே - மூப்பில்
புதுக்கவிதை என்றே புனையும் கலைப்பு
பொதுவாகும் இற்றைநாள் போக்கு. ... 1

[அரி = குரங்கு; மூப்பில் = பிடிவாதத்தில்]

மென்பொருள் யாப்பதில் மேவும் இலக்கணம்
பின்பற் றுவதில் பெருமையைக் காண்போர்
இலக்கணச் செய்யுள் இயற்று வதிலே
மலைத்தே விலகலெவண் மாண்பு? ... 2

வெண்பா அகவல் விதரணையில் ஓசையின்
பண்பிலே மேவும் பவித்திரம் - எண்ணம்
எழுத்தில் இசைந்தே எழுவதுபோல் இந்த
ஒழுங்கற்ற பாவிலுறு மோ? ... 3

உடைத்தே இடுவதை ஓசையுடன் சொன்னால்
வடிவுறும் யாப்பில் வனப்பாய்க் - கடைத்தேறும்
உள்ளத்தில் சொற்களின் ஓசை மனனமாய்த்
தெள்ளியே காணும் திரு. ... 4

கலைத்தே எழுதியும் கட்ட அகவல்
கலையென் றிணைக்குறள் காணுமே! சற்றுநீர்
சோம்பலை நீக்கியே சொல்வதைக் கட்டினால்
காம்பீரம் கொள்ளும் கவி. ... 5

யாப்பை உரைநடை யாகத் தருவதன்
கோப்பில் உறும்சொல் குறைத்துநான் - யாப்பைக்
கவிதையில் செய்வதில் கல்லாய் மனதில்
கவிந்தே நிலைக்கும் கருத்து. ... 6

அறிமுகமே இன்னூல் அறுதியென் றில்லை
பிறநூல் பழம்நூல் பிடித்தே - அறிவின்
வறுமையைப் போக்கும் வளங்களைக் கண்டே
நிறைவதைக் கொள்ளுவீர் நேர். ... 7

மேலும்...

*****
 

Pas Pasupathy

unread,
Oct 1, 2015, 10:48:40 AM10/1/15
to Santhavasantham
பணி சிறக்க என் வாழ்த்துகள்! 

2015-10-01 10:46 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
கவிதையில் யாப்பு
ரமணி




ramaNi

unread,
Oct 1, 2015, 10:50:36 AM10/1/15
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஸார்!
ரமணி

விவேக் பாரதி

unread,
Oct 1, 2015, 11:07:49 AM10/1/15
to santhav...@googlegroups.com
ஆகா அருமை அய்யா தொடருங்கள்...தங்களது பெரும் பணியால் மிகப் பெரிய உதவி அடைவோம் நாங்கள்.... 

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
Oct 1, 2015, 11:15:26 AM10/1/15
to சந்தவசந்தம்
இன்றுவரை நானும் ஒரு மாணவன் தான். எனவே ஒரு மாணவனின் கையேடாகப் படித்து நிறை-குறை குறித்துப் பின்னூட்டம் தாருங்கள், விவேக்பாரதி அவர்களே!
ரமணி

ramaNi

unread,
Oct 1, 2015, 11:24:42 AM10/1/15
to சந்தவசந்தம்
For the sake of completeness, I would like to post the entire contents of every chapter in this august forum, for expert feedback that would help my growth as a traditional poet. So, I am posting the remainder of chapter 1 below.

1.03. செய்யுளும் கவிதையும்
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

குறிப்பு:
வெறும்பா (blank verse) என்பது செந்தொடையாகக்
குறிப்பிட்ட பாவகை/பாவினம் பயிலும் செய்யுள்.

செந்தொடை என்பது, தொடைகள் இன்றியே சொற்களின் இயல்பான தன்மையால் 
சொல்லும், ஒலியும், பொருளும் அழகுற அமைவது.

செந்தொடை என்பது, எதுகை, மோனை, இயைபு போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல்
சொற்களின் இயல்பான தன்மையால் சொல்லும், ஒலியும், பொருளும் அழகுற அமைவது.

யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பே. ... 1

எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்து அடிகளில் சேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். ... 2

செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் சிலநேர் சொல்லே. ... 3

கவிதை என்பது கவினுற விதைத்தல்.
பாட்டு என்பது பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. ... 4

மலரும் கொழுந்தும் மருவித் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். ... 5

மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் நாரெனச் சொன்னால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம். ... 6

யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாம் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் கருப்பொருள் மனமே. ... 7

கவிதையில் மனதைக் கலந்துரை யாட
கவிதையும் மனதைக் கவர்ந்துயிர் கொள்ள
செய்யுள் யாக்கையைக் செறிவுடன் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம். ... 8

*** *** ***

விவேக் பாரதி

unread,
Oct 1, 2015, 11:25:17 AM10/1/15
to santhav...@googlegroups.com
நானும் மாணவனே அய்யா என்னைப் போன்ற மாணவருக்கு அற்புதமான கையேடு அய்யா 

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

விவேக் பாரதி

unread,
Oct 1, 2015, 11:26:59 AM10/1/15
to santhav...@googlegroups.com
எதோ மென்பொருள் குறித்து கூறி இருந்தீர்களே அது என்னவென்று கொஞ்சம் தெளிவாக விளக்கவும் அய்யா....


வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

ramaNi

unread,
Oct 1, 2015, 11:32:13 AM10/1/15
to சந்தவசந்தம்
இரண்டாவது இயலில் இருந்து பயிற்சிகள் ஆரம்பம். செய்து பாருங்கள், மென்பொருள் பற்றித் தெரியும். நாளை இந்த இரண்டாம் இயலை வலைப்பூவில் ஏற்றி இங்கே இடுகிறேன்.

அவலோகிதம் யாப்பு மென்பொருள் பற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா?

ரமணி

விவேக் பாரதி

unread,
Oct 1, 2015, 11:59:30 AM10/1/15
to santhav...@googlegroups.com
அறிவேன் அய்யா ...மேலும் தங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கவி ஒன்று !!

காணுமிடம் யாங்கணுமே கவிதையினைக் காணுகிற கவிஞ ருக்கு
மாணவனாய் மாபெரிய யாப்பினது சூக்குமத்தை மகிழ்ந்து நல்கப் 
பூணுமிளப் பாவடிவில் பூத்திருக்கும் கவியாப்புப் புதுக்கை யேடு  
வேணுமடா அனைவர்க்கும் வெல்லதமிழ்ப் பாப்புனைந்து வெல்வ தற்கே !

நல்லதமிழ் நல்லநடை நற்கருத்து நன்முயற்சி நல்ல வேலை 
சொல்லவிலை அற்றதுவாய்க் கவிபுனையும் கவிஞர்கைச் சொத்தென் றிங்கே
வல்லதொரு யாப்பியலின் கையேடு வந்ததிங்கு வரமே காண்க !
நல்லசுவை சொல்லுமிதன் நெறிபற்றிக் கவிக்கலையில் நலமே பூண்க ! 

வாழ்த்துக்கள் அய்யா 

வித்தக இளங்கவி 
விவேக்பாரதி

9750588007

Narayan Swaminathan

unread,
Oct 1, 2015, 3:54:28 PM10/1/15
to santhav...@googlegroups.com
ஈகரை தளத்தில் உங்கள் இடுகைகளைப் படித்திருக்கிறேன்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.


சுவாமிநாதன்

M. Viswanathan

unread,
Oct 1, 2015, 8:56:22 PM10/1/15
to Santhavasantham
அன்புள்ள கவிஞரே...சிறந்த உம் பணி தொடர்ந்து பலருக்கு நன்மை தரட்டும். பாராட்டுக்கள்.
அன்பன்,
மீ.வி.

ramaNi

unread,
Oct 1, 2015, 9:16:31 PM10/1/15
to சந்தவசந்தம்
நன்றி, எல்லேயார், விசுவநாதன் அவர்களே.
ரமணி


On Friday, October 2, 2015 at 1:24:28 AM UTC+5:30, சுவாமிநாதன் wrote:
ஈகரை தளத்தில் உங்கள் இடுகைகளைப் படித்திருக்கிறேன்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

சுவாமிநாதன்

Ramamoorthy Ramachandran

unread,
Oct 1, 2015, 9:47:08 PM10/1/15
to santhav...@googlegroups.com
யாப்பு எப்போதுமே  புத்தம் புதிய கலைதான்!
இப்போது யாப்பிலக்கணத்தை ஒட்டியே 
புதிய முயற்சிகள் வருகின்றன! உங்கள் 
பணி  அந்தத் திசையிலும் செல்லும்!
புதியன புகுதலும் பழையன கழிதலும் 
என்ற தொடரின் முன்பகுதியை மட்டுமே 
யாப்பிலக்கணம்  ஏற்க வேண்டும்!
மிகச் சிறந்த முயற்சி.உங்கள் 
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 


--

ramaNi

unread,
Oct 1, 2015, 10:00:09 PM10/1/15
to சந்தவசந்தம்
புலவரின் வாழ்த்தும் ஆசியும் என்னை என்பணியில் ஊக்குவிக்கும். மிக்க நன்றி.
ரமணி

Kaviyogi Vedham

unread,
Oct 2, 2015, 2:23:30 AM10/2/15
to santhavasantham
நிச்சயம் என் அன்பு ரமணிக்கு இந்த யோகியாரின் ஆசியும் உண்டு,
 வாழ்க,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
.தற்போதைய என் முகவரி(ஜனவரி 11 வரை), pl. write in English.
 Kaviyogi vedham,
c/o N. balasubramanyam,CEO,
Flat D 022,Royale Classic Garden,
 Hennur main Road, Bangalore-560043
(Near iCIC BAnk)
 செல் cel no--09686679017








ramaNi

unread,
Oct 2, 2015, 7:43:19 AM10/2/15
to சந்தவசந்தம்
யோகியார் ஆசிகளுக்கு மிக்க நன்றி. 

இன்னும் இந்த மன்றத்தின் நிறுவனர் இலந்தையார், மற்றும் சிவசூரி, சிவசிவா, அனந்த் போன்ற மூத்த கவிஞர்களின் ஆசிகளும் வழிகாட்டலும் 
என் முயற்சியில் துணைநிற்க அவர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

ரமணி

Siva Siva

unread,
Oct 2, 2015, 8:09:12 AM10/2/15
to santhavasantham
Any effort in trying to write what one has understood will always improve his knowledge of that.

It is essential to self review to ensure that the poetry follows the rules of the meter used and eliminate any grammar errors in puNarcci etc.

Best wishes.


2015-10-01 11:24 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
For the sake of completeness, I would like to post the entire contents of every chapter in this august forum, for expert feedback that would help my growth as a traditional poet. So, I am posting the remainder of chapter 1 below.

1.03. செய்யுளும் கவிதையும்
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

குறிப்பு:
வெறும்பா (blank verse) என்பது செந்தொடையாகக்
குறிப்பிட்ட பாவகை/பாவினம் பயிலும் செய்யுள்.

--> /வெறும்பா (blank verse) என்பது

வெறும்பா  - Is this a new word that you have coined?
What are the differences between what you state as வெறும்பா   and what is referred to as நூற்பா ?



செந்தொடை என்பது, தொடைகள் இன்றியே சொற்களின் இயல்பான தன்மையால் 
சொல்லும், ஒலியும், பொருளும் அழகுற அமைவது.

செந்தொடை என்பது, எதுகை, மோனை, இயைபு போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல்
சொற்களின் இயல்பான தன்மையால் சொல்லும், ஒலியும், பொருளும் அழகுற அமைவது.

யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பே. ... 1

--> has puNarcci been ignored in this type of writing? (யாப்பு என்பது  /   பிறந்தது யாப்பே)
Other songs have this issue as well.
--> /நாரின் ஓசையை/  = ?



ramaNi

unread,
Oct 2, 2015, 9:18:19 AM10/2/15
to சந்தவசந்தம்
விவேக் பாரதி அவர்களே, உங்கள் வாழ்த்துக் கவி நன்று. நன்றி.
ரமணி

ramaNi

unread,
Oct 2, 2015, 9:40:25 AM10/2/15
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!

முதலில் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

புணர்ச்சி விதிகளைக் கருத்தில் கொள்கிறேன்.

வெறும்பா என்பது, ஆங்கில யாப்பின் blank verse-இன் தமிழாக்கமாக, நான் coin செய்த குறிச்சொல்.

நூற்பா என்பது prescription. வெறும்பா என்பது description in plain terms, with basic poetic metre in it.

நூற்பாவின் இலக்கணம் இங்கு விவரித்தபடி:
https://ta.wikipedia.org/wiki/நூற்பா

ஆங்கில யாப்பில் blank verse என்பது பொதுவாக iambic pentameter என்னும் அளவில் வரும்.
தமிழில் யாப்பில் வெறும்பா என்பதை நாம் செந்தொடையாக, எந்தப் பாவகை/பாவின வடிவத்திலும் அமைக்கலாம்.
’கவிதையில் யாப்பு’ தொடரில் இது பெரிதும் வெறும்பா-அகவல் அமைப்பில் வரும்.

’யாவெனும் வினையடிப் பிறந்த தியாப்பே’ என்று இருக்கவேண்டும். எனவே, இதை
’யாவெனும் வினையடிப் பிறந்த(து) யாப்பே’ என்று திருத்திக்கொள்கிறேன்.

-->நாரின் ஓசையை/  = ?

பாடல் ஆறில் நாரை மாலையின் ஊடகமாகவும், ஓசையை அதற்கிணையான செய்யுள் ஊடகமாகவும் சொன்னேன்.
இறுதிப் பாடல் எட்டில் மாலை-மணம்-மலர்-அழகு-நார்-ஓசை இவை முறையே செய்யுள்-பொருள்-சொல்-அழகு-ஓசை-ஒலி
என்று குறிப்பாகச் சொல்லப் படுவதால் நாரின் ஓசை என்பது செய்யுளின் ஓசையைக் குறிக்கிறது.
மாலையின் நார் விரல்களில் நெருடும். செய்யுளின் ’நார்’ காதில்!

அன்புடன்,
ரமணி

*****

Subbaier Ramasami

unread,
Oct 2, 2015, 9:44:01 AM10/2/15
to சந்தவசந்தம்
வாழ்த்துகள்

ramaNi

unread,
Oct 2, 2015, 9:45:10 AM10/2/15
to சந்தவசந்தம்
[இந்த இயலின் உள்ளடக்கத்தைச் சரிபார்த்துக் கொடுத்த பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.--ரமணி]

2.00. செய்யுள் உறுப்புகள்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பத்து நான்கில்
நல்லதோர் கவிதை மரபில் முனையும்
வல்லோர் நாடும் அடிப்படை உறுப்புகள்
வல்லிதின் விரிப்போம் இந்நூல் தனிலே. ... 1

மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம்,  பயன்,மெய்ப் பாடு, 
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்துடன், இயைபு,
புலனும், இழைபும் என்னும் இவையே
தொல்காப் பியம்தரும் முப்பத்து நான்கே. ... 2

2.01. செய்யுள் இயற்ற
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுள் என்ப(து) யாதெனக் கேட்பின்
மெய்யில் தங்கும் உயிரை நோக்கிச்
செய்யுள் இலக்கணம் நன்னூல் கூறுமே. ... 1

பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள். ... 2

தோலும் இரத்தமும் தசையும் சதையும்
எலும்பும் மச்சையும் வீரியம் என்னும்
எழுவகைத் தாதுவால் இயன்றிடும் உடல்போல்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
என்னும் நால்வகைச் சொற்களில் அமைந்து
அகம்புறம் பொருளினை அணிபெற விளக்கிக்
கல்வியில் வல்லோர் உணர்வினை உரைத்தல்
செய்யுள் என்னும் இலக்கிய வடிவே. ... 3

எழுத்தால் ஆவது சொல்லென் பதனால்
எழுத்தும் சொல்லும் பொருளும் அணியும்
பழுதற நான்காய் நடப்ப(து) யாப்பே. ... 4

செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யெனவே. ... 5

பாவே செய்யுள் என்ப தாகும்;
அந்தப் பாவும் அளவுடன் வருவது;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாமே. ... 6

இந்த ஏழு உறுப்புகள் யாவும்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் செவ்விதின் கட்டும்.
வழக்கு என்பது பேச்சு வழக்காம்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுளே. ... 7

2.02. வரிகள் அமைக்க
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுள் அமைக்க ஏழெனும் உறுப்பெனில்
வரிகள் அமைக்கப் பன்னி ரண்டே
வனப்பு, தொடையே, மாட்டு, வண்ணம்,
அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
விருந்து, இயைபு, புலனே இழைபு
என்பன அந்தப் பன்னி ரண்டாம். ... 1

(குறள் வெண்செந்துறை)
வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு. ... 2

விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
பொருளால் பிணித்தல் மாட்டெனும் உறுப்பே. ... 3

வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
அம்மை என்பது சொற்களின் அமைதி. ... 4

எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
அமைய வருவதே அழகு என்பது. ... 5

தொன்மை என்பது பழமை மதிப்பு;
தோலால் வருவது செய்யுளின் பொற்பு. ... 6

விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும். ... 7

வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
குறிப்பால் பயின்று சொல்வது புலனாம். ... 8

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
மெல்லின இடையின மெய்கள் செறிந்து
பயிலும் நடையே இழைபெனச் சொல்வரே. ... 9

2.03. பொருள் உணர்த்த
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
பொருளினை உணர்த்தப் பதிமூன் றாமே.
நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
கூற்றும், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
பொருள்வகை என்றிவை பதிமூன் றாமே. ... 1

நோக்கு என்பது கவியின் பார்வை,
செய்யுள் அணிகளால் கேட்டார் ஈர்த்தே
தன்னை நோக்கச் செய்யும் உறுப்பே. ... 2

அகமும் புறமும் திணையென் றாகும் ;
அகமாம் மனதின் வடிகால் என்பது;
புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
தொல்காப் பியத்தில் பொருளதி காரமே. ... 3

கைகோள் என்பது களவும் கற்பும்,
ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.
கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
கூற்று என்பது அவர்களின் பேச்சே. ... 4

சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
காலம் என்பது நேரமும் பொழுதும்;
செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே. ... 5

மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையே. ... 6

முன்னம் என்பது கவிஞன் மரபு;
எச்சம் என்பது கவிஞன் போக்கு.
துறையென் பதுவாம் மரபைத் தழுவல்;
பொருள்வகை என்பது வேறுப டுதலே. ... 7

2.04. யாப்பும் தூக்கும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
யாப்பு என்பது பாட்டின் செயல்வகை;
தூக்கு என்பது ஓசையில் இடைவெளி:
’பாக்களைத் துணித்து நிறுக்கும் உறுப்பு’. ... ... ... [தொல்.பொ.313]
தூக்கு என்பது தாளமும் குறிக்கும்.
தூக்கின் தாளம் ஏழு வகையிலே.
மரபு என்பது நிறுவிய வழக்கெனில்
தூக்கு என்பது மதிப்பாய் தலுமே. ... 1

செய்யுள் உறுப்புகள் முப்பத் துநான்கில்
பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
அழகு, தொன்மை, தோலும், விருந்து, 
இயைபு, புலனும், இழைபும் என்று
இறுதி எட்டாய் உள்ள உறுப்புகள்.
மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
பாக்கள் திரட்டிலும் உகந்து வருவதே. ... 2

2.05. யாப்பியல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வேறொரு நோக்கில் பார்க்கும் போது
மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
இயைபு, இழைபு என்று மொத்தம்
பத்தும் நான்கும் யாப்பியல் அமைப்பாம். ... 1

பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று.
மரபு என்னும் நிறுவிய வழக்கு
பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவதே. ... 2

2.06. மூவகை யாப்பு
(நிலைமண்டில ஆசிரியப்பா)

யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.
அடிப்படை உறுப்புகள் ஏழென் றாகும்:
மாத்திரை, எழுத்து, அசையும் சீரும்,
அடியும், பாவும், அளவும் என்றே. ... 1

செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.
அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபே. ... 2

*** *** ***

ramaNi

unread,
Oct 2, 2015, 10:07:08 AM10/2/15
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஆசான் அவர்களே!
ரமணி

ramaNi

unread,
Oct 2, 2015, 10:08:22 AM10/2/15
to சந்தவசந்தம்
’கவிதையில் யாப்பு’ பயிற்சிகளைக் கணிணி மூலம் செய்துபார்க்க வலைப்பூ:

’கவிதையில் யாப்பு’ பயிற்சிகள்
ரமணி

2.00. செய்யுள் உறுப்புகள் பயிற்சி
பயிற்சி 2.01.01. அடிப்படை உறுப்புகள் இறங்கு வரிசையில்

செய்யுள் அடிப்படை உறுப்புகள் ஏழும்
கலைந்த நிரலில் கீழே உள்ளதை
இறங்கு வரிசைப் படுத்தி யெழுதுக.

சீர் எழுத்து அசை அளவு அடி மாத்திரை பா

பயிற்சி 2.00.02. வரிகளமை உறுப்புகள்: முதல் ஆறு

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்தே
பின்வரும் வரிகளில் மறைந்தே உள்ள
செய்யுள் உறுப்பின் பெயரினை எழுதுக.

அம்மை வண்ணம் தொடை வனப்பு மாட்டு அழகு

கலையின் நுகர்ச்சி: ----------
சீரடித் தொடுப்பு: ----------
சொற்பொருள் பிணித்தல்: ----------
செய்யுளின் தாளம்: ----------
சொற்களின் அமைதி: ----------
எளிய சொற்கள், பொருந்திய தாளம்: ----------

பயிற்சி 2.00.03. வரிகளமை உறுப்புகள்: இறுதி ஆறு

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்தே
பின்வரும் வரிகளில் மறைந்தே உள்ள
செய்யுள் உறுப்பின் பெயரினை எழுதுக.

புலன் தொன்மை தோல் இயைபு விருந்து இழைபு

பழமை மதிப்பு: ----------
செய்யுளின் பொற்பு: ----------
செய்யுளின் புதுமை: ----------
சொற்கள் ஒலிகளில் ஒன்றுதல்: ----------
வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்: ----------
உயிரொலி, மெல்லின-இடையின மெய்கள்: ----------

பயிற்சி 2.00.04. பொருளுணர் உறுப்புகள்: முதல் ஏழு

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்தே
பின்வரும் வரிகளில் மறைந்தே உள்ள
செய்யுள் உறுப்பின் பெயரினை எழுதுக.

கேட்போர் திணை கைகோள் நோக்கு காலம் கூற்று களன்

கவியின் பார்வை: ----------
அகமும் புறமும்: ----------
களவும் கற்பும்: ----------
செய்யுள் மாந்தர்: ----------
மாந்தர் பேச்சு: ----------
சந்தர்ப்ப சூழல்: ----------
நேரமும் பொழுதும்: ----------

பயிற்சி 2.00.05. பொருளுணர் உறுப்புகள்: இறுதி ஆறு

கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்தே
பின்வரும் வரிகளில் மறைந்தே உள்ள
செய்யுள் உறுப்பின் பெயரினை எழுதுக.

பொருள்வகை எச்சம் துறை மெய்ப்பாடு பயன் முன்னம்

செய்யுளின் தாக்கம்: ----------
தங்கும் உணர்வு: ----------
கவிஞன் மரபு: ----------
கவிஞன் போக்கு: ----------
மரபைத் தழுவல்: ----------
வேறு படுதல்: ----------

*** *** ***
 

ramaNi

unread,
Oct 7, 2015, 11:43:50 AM10/7/15
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு

3.00. யாப்பு விவரணம்: ஓசை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிப்படை உறுப்புகள் ஏழென வருமே:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாமே. ... [பார்க்க 2.1.,2.6.]

அடிப்படை உறுப்புகள் ஏழுடன் சேர்த்தே
செயல்வகை உறுப்பில் தொடையும் கூட்டிப்
பயில்வோம் நாமே பலவா றென்றே.

ஓசை:
மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்;
எனவே முதலில் ஓசையை ஆய்வோம்.
தளைகள் பயின்றிட வருமே ஓசை.
தளையால் ஓசை ஓசையில் தளையென
இரண்டும் ஸயாமின் இரட்டைய ராமே.

இயல்பாம் ஓசையில் வருவதே இயற்பா
இசையும் சேர ஒலிப்பதே இசைப்பா
இயற்பா இயலுமே இலக்கண விதிகளில்
இசைப்பா இயலுமே சந்தல யங்களில்.

இலக்கண விதிகளில் இயற்பா ஓசையின்
இயல்பைத் தளைகள் இனிதே குறிப்பினும்
இயற்பா வினங்களில் எழுத்தும் சீரும்
இணையும் விதங்களில் எழுமே ஓசை.

3.01. அசையும் சீரும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசையும் சீரும் அடிப்படை தெளிந்தபின்
அசைகள் ஒலிக்கும் சீர்களைப் பிணித்தே
இசையும் தளையின் ஓசை காண்போம்.

அசை-சீர்:
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலிப்பது அசையெனப் படுமே.
அசைகள் ஒன்றோ பலவோ சேர்ந்தே
இசைந்தே ஒலிப்பது சீரெனப் படுமே.

நேரசை:
குறிலும் நெடிலும் தனித்தே வரினும்
குறிலும் நெடிலும் ஒற்றுடன் வரினும்
குறிப்பர் இதனை நேரசை யென்றே.

’பானு வந்தாள்’ என்னும் தொடரில்
ஆன நேரசை நால்வகை காண்க
’பானு வந்தாள்’ அலகிடும் போது
பா/னு வந்/தாள் என்றே நான்காய்
ஆன நேரசை பயிவது காண்க.

தனிக்குறில் அசைகள் சீர்முதல் வாரா.
தனிக்குறில் அசைகள் சீரின் இறுதியில்
தனித்தே வந்து தங்குதல் காண்க.

’படகு’ என்னும் சொல்லின் அலகில்
பட-வெனும் இருகுறில் இணைதல் நிரையசை
கு-வெனும் இறுதிக் குறில்தான் நேரசை.
’பானு’ என்னும் பதத்தின் முதலசை
பா-வெனும் தனிநெடில்; பின்னர் சேரும்
னு-வெனும் தனிக்குறில் இன்னொரு நேரசை.

தனிக்குறில் அடுத்துத் தங்கும் ஒற்றுகள்
தனியசை யாகா எத்தனை வரினும்
’அர்த்தம்’ என்பது நேர்-நேர் ஆமே.

நிரையசை:
இருகுறில் அடுத்தோ, குறில்-நெடில் சேர்ந்தோ
வருவது தனித்தெனில் நிரையசை யாமே
இருகுறில் அடுத்தோ, குறில்-நெடில் சேர்ந்தோ
ஒற்றுடன் வருவதும் நிரையசை யாமே.

’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.
[வழி/வகை அறிந்/திடாள்]

அசை பிரித்தல்:
(இணைக்குறள் ஆசிரியப்பா)

சீர்களின் அசைகளைப் பிரிக்கும் போது
குறில்கள் தொடர்ந்து வந்தால்,
இருகுறில் இணைப்பினை 
நிரையெனச் சேர்த்த பின்னரே, 
ஏதும் தனிக்குறில் மீதம் இருப்பின் 
நேரசை யதுவெனப் பிரித்தல் வேண்டும்.
அப்படி மிஞ்சும் தனிக்குறில்
சீரின் இறுதியில் வருவது காணலாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’மகளே’ அசைகள் ’மக/ளே’ என்றே
’ம/களே’ என்று பிரித்தல் ஆகா
’வருவதறி’ அசைகள் ’வரு/வத/றி’ எனவாம்
’வருவதறிகுறி’ அசைகள் ’வரு/வத/றிகு/றி’ ஆமே.

சீர்:
அசைகள் இணைந்தே வருகிற சீர்களில்
ஈரசை மூவசைச் சீர்களே செய்யுளில் 
பெரிதும் பயின்று வருமென அறியலாம்.

ஈரசைச் சீர்கள் இருவகை அமையும்
நேரசை இறுதியில் நின்றால் மாச்சீர்
நிரையசை இறுதியில் நின்றால் விளச்சீர்.

மூவசைச் சீர்களும் இருவகை அமையும்
நேரசை இறுதியில் நின்றால் காய்ச்சீர்
நிரையசை இறுதியில் நின்றால் கனிச்சீர்.

அசையும் சீரும் அடிப்படை இங்ஙனம்
அறிந்தே செய்யுள் ஓசைகள் காண்போம்
அசை-சீர் வகைகளின் வாய்பா டுகளும்
செய்யுள் அலகிடும் முறைகள் பற்றியும்
உரிய இயல்களில் அறியப் பெறலாம்.

--ரமணி, 07/10/2015

*****

ramaNi

unread,
Oct 8, 2015, 11:15:42 AM10/8/15
to சந்தவசந்தம்
’கவிதையில் யாப்பு’ பயிற்சிகளைக் கணிணி மூலம் செய்துபார்க்க வலைப்பூ:

’கவிதையில் யாப்பு’ பயிற்சிகள்
ரமணி 

3.00. யாப்பு விவரணம் ஓசை: பயிற்சி
பயிற்சி 3.01.01. அசையும் சீரும்: அசை பயில்வகை அறிதல்

கீழுள சொற்களைக் கேட்டுள வாறே
அசைகள் பயிலும் விதத்தில் எழுதுக:
தனிக்குறில் பயிலும் நேரசை முதலில்
தனிக்குறில் ஒற்றுடன் நேரென இரண்டில்
தனிநெடில் பயிலும் நேரசை மூன்றில்
தனிநெடில் ஒற்றுடன் நிரையென நான்கில்
இருகுறில் இணைந்த நிரையசை ஐந்தில்
இருகுறில் ஒற்றுடன் நிரையென ஆறில்.

முகில் கல் பூ கனி அ காய்

பயிற்சி 3.01.02. அசையும் சீரும்: நேரசை பிரித்தல்

கீழ்வரும் சொற்களில் நேரசை நிரையசைச்
சொற்கள் கலந்தே வருவதில் பிரித்தே
நேரசைச் சொற்கள் எட்டினை எழுதுக.

உ க சொல் என் மா பா மான் கேள் துளி மழை விரல் மதில் 

பயிற்சி 3.01.03. அசையும் சீரும்: நிரையசை பிரித்தல்

கீழ்வரும் சொற்களில் நேரசை நிரையசைச்
சொற்கள் கலந்தே வருவதில் பிரித்தே
நிரையசைச் சொற்கள் நான்கினை எழுதுக.

உ க சொல் என் மா பா மான் கேள் துளி மழை விரல் மதில் 

பயிற்சி 3.01.04. அசையும் சீரும்: அலகிடுதல்

விடையிடும் பேழையில் கீழ்வரும் கவிதை
அடிகளி ரண்டை நகலெடுத் தொட்டி
சாய்க்குறி தக்க இடங்களில் சேர்த்தே
நேரசை தனியாய் நிரையசை தனியாய்ச்
சீரினில் பிரித்தே அலகிட் டறிக.

[நகலெடுத் தொட்டி = copy-pasting
விடையிடும் பேழை: textbox control;
சாய்க்குறி: forward slash (/) character]

வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!

--ரமணி, 08/10/2015

*****

ramaNi

unread,
Oct 9, 2015, 12:09:19 AM10/9/15
to சந்தவசந்தம்
பயிற்சி 3.01.05. அசையும் சீரும்: அசைகளைக் குறித்தல்

அலகிட்டுக் கீழுள அடிகளில் பயிலும்
அசைகளை நேர்,நிரை, சாய்குறி, வெறுங்குறிப்
பித்தான் குமிழ்தனில் பிடித்தே அழுத்திப்
பின்னுள விடையிடும் பேழையில் வரவே
வரிசையில் அமைத்தே வாகாய் எழுதுக.

[பித்தான் குமிழ் = button control]

வா/ழிய பா/ரத மணித்/திரு நா/டு!
இன்/றெமை வருத்/தும் இன்/னல்/கள் மாய்/க!

பயிற்சி 3.01.06. அசையும் சீரும்: சீரினம் குறித்தல்

வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!

மேலுள அடிகளில் மேவும் சீரினம்
மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர் கனிச்சீர்
இவற்றில் ஒன்றாய் எடுத்தே எழுதுக.


On Thursday, October 8, 2015 at 8:45:42 PM UTC+5:30, ramaNi wrote:
’கவிதையில் யாப்பு’ பயிற்சிகளைக் கணிணி மூலம் செய்துபார்க்க வலைப்பூ:

’கவிதையில் யாப்பு’ பயிற்சிகள்
ரமணி 

ramaNi

unread,
Oct 10, 2015, 9:54:49 AM10/10/15
to சந்தவசந்தம்
3.02. செய்யுள் ஓசை
(நிலமண்டில ஆசிரியப்பா)

ஓசை என்பது ஒலிகளின் இணைப்பே
ஓசை இயலிசை நாடகம் மூன்றிலும் 
ஒலியின் ஊடகம் என்றே வருமே.

இயலெனும் உரைநடை வழக்கில் ஓசை 
அலைகளின் இரைச்சலாய்க் குழம்பி வருமே
நாடக வழக்கிலும் உரைநடை போன்றே.

செய்யுள் வழக்கில் ஓசை இசைந்தே
இயல்பாய்ப் பயில்வதாய் ஒருங்கே வருமே
அகவல், செப்பல், துள்ளல், தூங்கல்
வகையாய்ச் செய்யுள் ஓசைகள் நான்கே.

நால்வித ஓசைத் தளைகள்:
ஆசிரி யத்தளை வருவதே அகவல்
வெண்டளை மட்டும் வருவதே செப்பல்
கலித்தளை யொன்றே வருவது துள்ளல்
வஞ்சித் தளையால் வருவது தூங்கல்
கலித்தளை தவிர ஏனை மூன்று
தளைகளில் இரண்டு வகையென் றறிக.

ஒவ்வோர் ஓசையும் உரிய தளையில்
செவ்விதம் வரினும் பிறவகைத் தளைகள்
செப்பல் தவிர்த்த மற்ற மூன்றினில்
ஒப்பியே விரவி ஒலித்தல் காணலாம்.

நால்வகைப் பாக்கள்:
அகவல் ஓசை வருதல் அகவற்பா
அகவற் பாவே ஆசிரி யப்பா
செப்பல் ஓசை வருதல் வெண்பா
துள்ளல் ஓசை வருதல் கலிப்பா
தூங்கல் ஓசை வருதல் வஞ்சிப்பா
நால்வகை ஓசையில் உள்வகை உண்டே.

*****

பயிற்சிகள்

பயிற்சி 3.02.01. செய்யுள் ஓசை: தளைவகை

கலைந்துள தளைவகை கீழே கண்டே
நிலைபெறும் தளைவகை நால்வகை யோசையில்
அகவல் செப்பல் துள்ளல் தூங்கல்
என்னும் நிரல்வர மாற்றிய மைக்கவும்.

கலித்தளை ஆசிரியத்தளை வஞ்சித்தளை வெண்டளை 

பயிற்சி 3.02.02. செய்யுள் ஓசை: பாவகை

கலைந்துள ஒலிவகை கீழே கண்டே
நிலைபெறும் ஒலிவகை நால்வகைப் பாக்களில்
ஆசிரி யப்பா வெண்பா கலிப்பா
வஞ்சிப் பாவெனும் நிரலில் அமக்கவும்.

தூங்கல் செப்பல் அகவல் துள்ளல்

*****
 

ramaNi

unread,
Oct 10, 2015, 11:15:55 PM10/10/15
to சந்தவசந்தம்
3.03. அகவல் ஓசை
(நிலமண்டில ஆசிரியப்பா)

அகவல் என்போம் மயில்கத் துவதை
அகவிக் கூறலால் அகவல் எனப்படும்
உயர்த்துக் கூறும் ஓசை அகவல்
எடுத்தல் என்றும் இதனை அழைப்பரே.

செய்யுளின் அகவல் எடுத்தல் ஓசை
தடைகள் இன்றிச் செல்லும் ஓட்டம்
நினைத்த(து) உரைத்தலாம் நினைத்த வாறே.

ஒருவர் உரைக்க மற்றவர் கேட்பார்
இருவர் உரையா டுவதாய் இன்றி;
ஒருவரே சொல்வது அழைத்தல் எனப்படும் 
அழைத்தலில் கேட்கும் அகவல் ஓசை!

தச்சு வேலை செய்வோர் பேச்சில்
போர்க்களம் பற்றிப் பாடுவோர் பாட்டில்
வருவதை உரைப்போர் கூறும் சொற்களில்
தனக்குத் தானே பேசும் பேச்சில்
அகவல் ஓசை கேட்பதை அறியலாம்.

அகவலோசை = ஆசிரியப்பா (அகவற்பா)
(நிலமண்டில ஆசிரியப்பா)

அகவல் ஓசை பயின்று வருவதே
அகவற் பாவெனும் ஆசிரி யப்பா
அகவற் பாவில் ஆசிரி யத்தளை
இயற்சீர் வெண்டளை விரவிட வருமே.

இவ்விரு தளைகளும் விரிவியே வரினும்
அகவற் றளையே அதிகம் வந்திட
அகவல் ஓசை அமையும் செவ்வனே.

ஆசிரியத்தளை என்பது:
(நிலமண்டில ஆசிரியப்பா)

மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
என்றே வந்தால் ஆசிரி யத்தளை
மாமுன் நேரெனில் மாச்சீர் தொடரும்
சீரின் முதலில் நேரசை இருக்கும்;
எதிர்நோக் குவதை முன்-எனச் சொல்வரே.

இயற்சீர் வெண்டளை என்பது:
(அளவியல் இன்னிசை வெண்பா)

மாமுன் நிரையும் விளம்முனே நேரசையும்
மாறி வருதல் இயற்சீரின் வெண்டளை
என்கிற வெண்டளை யென்றே அறிக
இயற்சீரில் ஈரசை யே.

வெண்சீர் வெண்டளை என்பது:
(குறள் வெண்பா)
காய்முனே நேரசை காணில் அதுவாகும்
வெண்சீரின் வெண்டளை யாம்.

(நிலமண்டில ஆசிரியப்பா)
இவ்விரு தளைகளும் சீர்களின் இடையிலும்
அடிகளின் இடையிலும் தொடர்ந்தே வருதல்
அகவல் ஓசையில் முக்கியக் கூறே.

அடிகள் இடையே வருவ தென்றால்
முன்னடி ஈற்றுள சீரின வகையதன்
பின்னடி முதலுள அசையுடன் ஒன்றுதல்.

அகவல் ஓசை பயிலுமோர் செய்யுள்:
(நிலமண்டில ஆசிரியப்பா)

சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை‍இ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய 
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
--அகநானூறு 149, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.

இன்னொரு உதாரணம் பாரதி தருவது:
(நிலமண்டில ஆசிரியப்பா)

வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
--மகாகவி பாரதியார்

3.04. அகவல் முயற்சி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அகவல் ஒலிவரப் புனைவது எளிதே.
அகவல் நாமும் புனைந்திடு வோமா?
அகவல் ஓசையின் தேவைகள் என்ன?

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையுமாய்ச்
சீர்கள் ஈரசை பெற்றே வந்தால்
சீர்த்துக் கேட்கும் அகவல் ஓசை
அகவற் றளைகள் மட்டும் வரவே.
[அகவற் றளைகள்: நேரொன்று, நிரையொன்று ஆசிரியத் தளைகள்]

இங்ஙனம் புனைதல் இயலா தென்றே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேர்வரும்
ஈரசை இயற்சீர் வெண்டளை விரவி
அகவல் ஓசை சற்றே குன்றினும்
அகவற் பாவில் ஒலிக்கப் புனைவரே.
[மூவசைச் சீர்கள் இக்கணம் வேண்டாம்.]

கீழ்வரும் உதாரண அடிகளில் அகவல்
சீரிடை அடியிடை ஒலித்தல் கண்டே
நீர்சில அடிகளை அலகிடல் பயில்வீர்.

அடியிடை ஒலித்தல் என்ப(து) யாதெனில்
அடியின் இறுதிச் சீரின் ஈற்றசை
தொடரும் அடியின் முதலசை யோடே
ஒலியில் ஒன்றுத லாகுமென் றறிவீர்.

1. நேர்முன் நேர் முயற்சி

கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
எண்ணம் மாயை என்றே கொள்ள
உண்மை ஏதென் றுள்ளம் காணும்.

அலகிடல் 
(இரண்டாம், மூன்றாம் அடிகளை நீங்களே அலகிட்டுப் பாருங்கள்):

கண்/ணில் தோன்/றும் காட்/சி யா/வும் ... [நேர்/நேர் நேர்/நேர் நேர்/நேர் நேர்/நேர்]
எண்ணம் மாயை என்றே கொள்ள
உண்மை ஏதென் றுள்ளம் காணும்.

2. நிரைமுன் நிரை முயற்சி

அவரையின் கொடிகளை அலைத்திடும் வளியென
அவரது உருவெனை அலைத்திடும் பொழுதினில்
உவர்நில மணல்துகள் எனமனம் சலிக்குமே!

அலகிடல் 
(இரண்டாம், மூன்றாம் அடிகளை நீங்களே அலகிட்டுப் பாருங்கள்):

அவ/ரையின் கொடி/களை அலைத்/திடும் வளி/யென ... [நிரை/நிரை நிரை/நிரை நிரை/நிரை நிரை/நிரை ]
அவரது உருவெனை அலைத்திடும் பொழுதினில்
உவர்நில மணல்துகள் எனமனம் சலிக்குமே!

3. நேர்முன் நேர், நிரைமுன் நிரை முயற்சி

பாட்டிது புனையப் பார்க்கும் போதே
ஆட்டும் சொற்பொருள் அலைத்திடும் மனத்தில்
ஊட்டமும் எழுவதில் உவகையும் எழுமே.

அலகிடல் 
(இரண்டாம், மூன்றாம் அடிகளை நீங்களே அலகிட்டுப் பாருங்கள்):

பாட்/டிது புனை/யப் பார்க்/கும் போ/தே ... [நேர்/நிரை நிரை/நேர் நேர்/நேர் நேர்/நேர்]
ஆட்டும் சொற்பொருள் அலைத்திடும் மனத்தில்
ஊட்டமும் எழுவதில் உவகையும் எழுமே.

*****

ஒருவர் பேச்சாய் ஒலிக்கும் அகவல்
இருவர் பேச்சிலும் இழைந்தே வரலாம்
நிரை-நேர்த் தொடுப்பு சரியாய் அமையவே.

மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
றாமென வந்திடும் அகவற் றளையுடன்
மாமுன் நிரையும் விளம்முன் நேரென
வாமெனும் இயற்சீர் வெண்டளை விரவியும்
அகவல் ஒலிக்கும் அடிகள் கீழே.

4. மாமுன் நிரை, விளம்முன் நேர் கலந்த முயற்சி:

அகவல் வெண்டளை விரவும் அடிகள்:
வாசலில் எவரெனப் பாரடி மகளே!
வேறுயார், உமது அறுவை நண்பரே!

இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
வா/சலில் எவ/ரெனப் பா/ரடி மக/ளே!
வே/றுயார், உம/து அறு/வை நண்/பரே!

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்/நிரை நிரை/நிரை நேர்/நிரை நிரை/நேர்
நேர்/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை

தந்தையும் மகளும் அழைத்துக் கூவிட
அசைகள் யாவும் இசைந்தே வந்திட
அகவல் ஓசை அமைதல் தப்புமோ?

தந்தையின் கூவல் கூர்த்த தொடர்ச்சி.
வாசலில் எவரெனப் பாரடி மகளே!
மகளின் கூவல் நின்று ஒலிப்பது,
அயர்ச்சி, அங்கதம், குரலில் தெரிய.
வேறுயார், உமது அறுவை நண்பரே!

இந்த அடிகளை இப்படி எழுதினால்
வேறு ஓசைகள் விரவிடக் கேட்பீர்:
வாசலில் யாரென்று பார்த்திடுவாய் மகளே!
வேறுயார், உங்களை அறுத்திடும் நண்பரே!

அகவல் குறைந்து வினவல் ஆகிட
செப்பலும் துள்ளலும் சேர்ந்தே ஒலிக்க
அகவல் ஓசை மறைவது காண்பீர்.

முழுவதும் நேரசை வருகிற அகவல்:
பாலும் தேனும் இல்லை யென்றால்
நீரும் சோறும் போதும் அன்றோ?

முழுவதும் நிரையசை வருகிற அகவல்:
பலவகைப் பொருட்களில் மயங்கிடும் உலகினில்
நிலைபெற இருப்பது எதுவெனத் தெரியுமா?

எழுதவோர் கவிதை எழுந்திடும் போதே
அழகும் உருவும் அணியும் நோக்கி
மனதில் வந்ததப் படியெழு தாமல்
வனப்பில் மிளிரும் மேனியும் தந்தால்
கவிதை விதைகள் படிப்போர் மனதில்
விழுந்தே துளிரும் விட்டே நிலைக்கும்
மத்தாப் பாக மறையா தெரிந்தே!

எனவே கவிதை எழுதும் அன்பரே!
புனையக் கற்பீர் செய்யுளை நன்கு.
பாவு தறியில் ஊடுதல் போலப்
பாவி நடப்பதே பாட்டென் றுணர்வீர்.

ஓசை உணர்ந்தே அசைகளைப் பிணைத்தால்
தளைகள் தாமே பொருந்தி வருமே
எழுதும் பாவகை எவ்வகை ஆயினும்
புழுதியாய்ப் புகையாய் போகா நின்றே
எழுத்தின் உருவாய் எழுந்து நிலைக்குமே!

*****

ramaNi

unread,
Oct 14, 2015, 9:49:09 AM10/14/15
to சந்தவசந்தம்
3.05. செப்பல் ஓசை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்
தானே இயல்பாய் மறைவின்றி மொழிவது.
"மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
என்பார் நச்சினார்க் கினியர் உரையிலே.

"இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய 
வாக்கியம் போன்ற ஓசை" என்று
கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையிலே.

வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்
வெண்பாவில் இல்லை அகவல் ஓசை
செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா.

செப்பலோசை என்பது
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பா இயற்றுதற்கு வெண்டளை வேண்டுமே
வெண்டளையில் ஓசை விளைவதே செப்பலாம்
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேருமென்றே
ஆமெனில் வெண்டளை யாம்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமென வாம்.

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
செப்பல் ஒலித்திடும் வெண்பா வடிவிலே
செப்பும் அறநெறி சீருடைத்தாம் - இப்படி
நல்வழி, மூதுரை நாலடியார் போல்நூல்கள்
செல்வழி சொல்வன வாம்.

சான்று 1.
விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை 11

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.

சான்று 2.
மகாகவி பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.

--ரமணி, 14/10/2015

*****
 

ramaNi

unread,
Oct 14, 2015, 10:19:40 AM10/14/15
to சந்தவசந்தம்
3.06. செப்பல் முயற்சி
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?
மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலுமே.

காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.
தானே இயல்பாய் மொழிதல் மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.

செப்பல் ஓசை பயிலும் வெண்பா
ஒன்றை நான்கு அடிகளில் முயல்வோம்
வெண்பா விளக்கம் வேறோர் இயலிலே.

(வெண்டளை: செப்பலோசை)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றில் மனம்கை பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்தே வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.

இந்த அடிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றில் மனம்/கை பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க 
மா/டியில் போட்/ட வடாம்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை 
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரை
நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நேர்நிரை நேர்நேர் மலர்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்தே
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

(வெண்பா)
கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றில் மனம்கை பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
மாடியில் போட்ட வடாம்.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மோனை எதுகை முயற்சிகள் இன்றி
இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
சொற்களை வைத்தே இன்னொரு வெண்பா.

கீழ்வரும் அடிகளை அலகிட் டறிந்தே
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்வீர்.

(வெண்பா)
நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
வாரம் ஒருமுறை மாட்டினி மூவியென
பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!

--ரமணி, 14/10/2015

*****

ramaNi

unread,
Oct 16, 2015, 11:26:24 PM10/16/15
to சந்தவசந்தம்
3.07. துள்ளல் ஓசை
(வெறும்பா விரவியது)

(இணைக்குறள் ஆசிரியப்பா)
துள்ளல் என்பது குதித்தல் ஆகும்
துள்ளலில் நடையே தடைப்படும்
பசுவின் கன்று துள்ளல் போல
இடையிடை உயர்ந்து மீள்சமன் படுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
துள்ளலை விளக்கும் கீழ்வரும் மூன்று 
அடிகளில் சீரிடை மட்டும் கலித்தளை
பயின்றிடத் துள்ளல் வருவது காண்க.

(ஆசிரியத் தாழிசை)
ஓரடிக்குள் அறுதியிட்டோ அடியிடையே தொடர்ந்துவந்தோ
காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில் 
துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.

சான்று 1:
குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய 
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள் 
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத் 
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து 
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.

’வகைக்கருணைக் கண்ணோக்கம்’ இருசீர்கள் தவிர்த்தெல்லாச்
சீர்களிடை அடிகளிடைக் கலித்தளையே பயின்றுவர
அடிகளிலே ஒலித்துள்ளல் அமையாது போமோகாண்!

சான்று 2
சேக்கிழார், திருத்தொண்டர் புராணம் 140
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவனை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்.

வெண்டளையும் கலித்தளையும் சமமாகப் பயின்றாலும்
அணிமேலே அணிசேர்ந்தே அதிசயங்கள் அடுக்கிவரத்
துள்ளலோசை துவளாமல் துளும்புவது கண்டீரோ?

3.08. துள்ளல் முயற்சி
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?
கலித்தளை பெரிதும் வருதல் வேண்டும்.

(கலிவிருத்தம்)
காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளையாய்க் குதித்துவரும்
கலிப்பாவில் கலித்தளையே பெரும்பாலும் பயின்றுவரும்
கலித்தளையே சீர்களிடை பெரிதும்வர வேண்டுவதே
கலித்தளையே அடியிடையே கட்டாய மில்லையென.

முயற்சி 1.
(குறள் வெண்செந்துறை)

இடுப்பினிலே இருத்திவைத்தே நிலாகாட்டி உணவூட்ட
வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையவள் பிடித்திழுத்தாள்.

(ஆசிரியத் தாழிசை)
இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
இடுப்/பினி/லே இருத்/திவைத்/தே நிலா/காட்/டி உண/வூட்/ட
வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தைய/வள் பிடித்/திழுத்/தாள்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நிரைநிரைநேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநிரைநேர்

(குறள் வெண்செந்துறை)
மூவசையின் சீர்களாக நேரசையில் முடிவதுடன்
நிரைதொடரக் கலித்தளையே வந்ததென்று கண்டறிக.

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
துள்ளலோசை தொடர்ந்துவர நிரையசையில் தொடங்குகிற
புளிமாங்காய் கருவிளங்காய் எனும்காய்ச்சீர் களையடுக்கி
நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் 
அடிதோறும் அமைத்திட்டால் எழுதும்பா முழுவதுமே

ஒலித்துள்ளல் வருமெனினும் இதுபோல எழுதுவது
கடினமென்றும் ஒருநிலையில் செயற்கையாகும் எனக்காண்க
எனவேதான் கலித்தளையும் பிறதளையும் விரவிவரக்
கலிப்பாக்கள் பொதுவாக இயற்றுவதைக் காணலாமே.

முயற்சி 2.
[அலகிட்டுக் கலித்தளையே பயில்வது காண்க.]
(குறள் வெண்செந்துறை)

படபடக்கும் சிறகுடனே பறந்துவரும் புறாக்கூட்டம்
சடசடெனத் தரையமர்ந்தே பொரியுண்ணும் எழில்காணீர்!

--ரமணி, 17/10/2015

*****

 

ramaNi

unread,
Oct 18, 2015, 9:37:12 AM10/18/15
to சந்தவசந்தம்
3.09. தூங்கல் ஓசை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வஞ்சித் தளையின் தூங்கல் ஓசையில்
துஞ்சும் மயக்கம் தூக்கலாய் வருமே
துங்கல் என்பது பாட்டின் உரிப்பொருள்
தூங்குதல் பற்றி அமைவ தல்ல!

அகவலில் லாமல் செப்பலில் லாமல்
துள்ளலில் லாமல் ஓசையில் மயக்கமோ
மந்தமோ ஓய்வோ ஏக்கமோ வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!

தூங்கலில் வருமெனத் தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றா வஞ்சியில்.
தூங்கலில் ஒலிக்கும் வஞ்சியின் அடிகளே.

(கலித்தாழிசை)
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்‍ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இருசீர் அல்லது முச்சீர் அடிகளாய்
வஞ்சி யடிகள் பொதுவில் அமையுமே
தூங்க லோசைப் பாடல் கீழே.

சான்று
கி.வா.ஜ.,’கவி பாடலாம்’ பக்.201
(குறளடி வஞ்சிப்பா)

மாகத்தினர் மாண்புவியினர் 
யோகத்தினர் உரைமறையினர் 
ஞானத்தினர் நய‌ஆகமப் 
பேரறிவினர் பெருநூலினர் 
காணத்தகு பல்கணத்தினர் 

(இணைக்குறள் ஆசிரியப்பா)
மரபுசார் உரைகளில் கூறுவர் இவ்விதம்:
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்
அகவல் செப்பல் இரண்டும் வருமே
துள்ளல் தூங்கல் இரண்டும் 
செய்யுளில் மட்டுமே வருவன.
அகவல் செப்பல் அடியிடைத் தளையும் ... [தளையும் = தளையால் பிணிக்கப்படும்]
துள்ளல் தூங்கல் அடிகளில் மட்டுமே.


3.10. தூங்கல் முயற்சி
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?
கனிமுன் நிரையோ நேரோ வருகிற
இருசீர் அல்லது முச்சீர் அடிகளில்
வஞ்சித் தளைகள் பயிலுதல் வேண்டும்
மூவசை நிரையில் முடிவது கனிச்சீர்.

முயற்சி 1. (எழுது தமிழில்)
(சிந்தடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

மடமாதவள் நடமாடிட மனம்யாவையும்
தடுமாறிடக் காற்றாயவள் சதிராடிட
உடுநிரலதன் பட்டொளியென உளவானிலே.

[உடுநிரல் = விண்மீன் வரிசை]

மட/மா/தவள் நட/மா/டிட மனம்/யா/வையும்
தடு/மா/றிடக் காற்/றா/யவள் சதி/ரா/டிட
உடு/நிர/லதன் பட்/டொளி/யென உள/வா/னிலே.

நிரைநேர்நிரை நிரைநேர்நிரை நிரைநேர்நிரை 
நிரைநேர்நிரை நேர்நேர்நிரை நிரைநேர்நிரை 
நிரைநேர்நிரை நேர்நிரைநிரை நிரைநேர்நிரை 

மேல்வந்துள அலகிடலில் ஒன்றியவஞ் சித்தளையுடன்
ஒன்றாவஞ் சித்தளயதும் ஒருங்கேவரும் இடம்யாவையும்
அறிந்தேயதன் விளைவேயெனத் தூங்கலோசை வரக்காணுக.

முயற்சி 2. (இன்றைய வழக்கில்)
(சிந்தடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

ஆரியபவன் நெய்ரோஸ்டினில் பொய்மணக்குமே!
காரியமென பிரியாணியின் காய்கறிகளில்
தேறுவதென விரலளைந்துநாம் தேடலாகுமே!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மேலுள அடிகளின் சீர்வகை தளைவகை
அலகிட் டறிந்தே அடிகளின் சீரிடை
வஞ்சித் தளைகள் பயில்வது கண்டே
துஞ்சும் ஓசை விளைவதைக் காண்க.

முயற்சி 3.  (எழுது தமிழில்)
(குறளடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

தாலாட்டுகள் பலபாடியும் 
வேலாய்விழி விளையாடவே
காலாட்டுமே தூளியிலே!

தா/லாட்/டுகள் பல/பா/டியும் 
வே/லாய்/விழி விளை/யா/டவே
கா/லாட்/டுமே தூ/ளியி/லே!

நேர்நேர்நிரை நிரைநேர்நிரை 
நேர்நேர்நிரை நிரைநேர்நிரை 
நேர்நேர்நிரை நேர்நிரைநேர்

(நேரிசை ஆசிரியப்பா)
மூவசைச் சீர்கள் நிரையில் முடிந்தே
நேரோ நிரையோ தொடரவே
வஞ்சித் தளைகள் பயிவது காண்க.

முயற்சி 4. (இன்றைய வழக்கில்) 
(குறளடி வஞ்சிப்பாவின் முதலடிகள்)

பாவுபஜ்ஜியின் காரத்தினால்
தாவுதீர்ந்திடும் நாவினிலே
காவலெனவே பெப்சிகோலா!

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அலகிட் டறிந்தே குறளடி மூன்றில்
உலவும் சீரும் உள்ளுறும் தளையும் 
நலமாய் அறிந்தே தூங்கல் காண்க.

--ரமணி, 17/10/2015

*****


ramaNi

unread,
Oct 27, 2015, 9:22:11 AM10/27/15
to சந்தவசந்தம்
4.00 யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்
(வெறும்பா விரவியது)
(இணைக்குறள் ஆசிரியப்பா)

அசைகள் இசைந்தே ஒலித்திடும் ஒழுங்கில் 
இயல்பாய் அமைவது செய்யுள் என்றும்
ஒசை ஒருங்கில் அமைந்தே ஒலிக்கத்
தளைகள் முக்கியம் எனவும் 
அறிந்த பின்னர் இனிநாம்
செய்யுள் அடிப்படை உறுப்புகள் ஆய்வோம். ... 1

(நிலைமண்டில ஆசிரியப்பா)
முன்பே சொன்னதை நினைவிற் கொணர
அளவும் பாவும் அடியும் சீரும்
அசையும் எழுத்தும் மாத்திரை யாக
அடிப்படை உறுப்புகள் ஏழென் றறிவீர். ... 2
[பார்க்க 2.01.05]

4.01. மாத்திரை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மாத்திரை என்பது கால அளவாம்
கண்ணிமை கைநொடிச் செயலின் காலம்
மாத்திரை ஒன்று என்றே அறிக. ... 1

எழுத்தொலிக் காலமாய் யாப்பின் மாத்திரை
எழுத்தினம் பொறுத்தே எழுந்திடும் அளவில்;
எழுத்தின் மாத்திரை இப்படி யாகுமே. ... 2

உயிரின் குறிலும் உயிர்மெய்க் குறிலும்
ஒருமாத் திரையெனும் அளவில் ஒலிக்க,
உயிரின் நெடிலும் உயிர்மெய் நெடிலும்
இருமாத் திரையெனும் அளவில் ஒலிக்க,
மெய்யெனும் ஒற்றுள எழுத்துகள் மற்றும்
ஆய்த எழுத்தும் அரைமாத் திரையாம். ... 3

உயிரள பெடையின் மாத்திரை மூன்றே
ஒற்றள பெடையொலி ஒருமாத் திரையாம்
ஐ-ஔ காரக் குறுக்கம் ஒலியும்
அளவில் ஒருமாத் திரையாய் ஒலிக்கும்
மகர ஆய்தக் குறுக்கம் இரண்டும்
அளவில் கால்மாத் திரையாய் ஒலிக்குமே. ... 4

4.02. எழுத்து
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுவெனும் வினையடிப் பிறந்த சொல்லாம்
எழுத்து என்பது பெயர்ச்சொல் ஆகும்
எழுதல் என்றால் உருப்பெறத் தோன்றுதல்
எழுதுதல் என்பது தோன்றச் செய்தலே. ... 1

எண்ணம் உருப்பெறத் தோன்றுவ தெழுத்தாம்.
உருவறு ஒலியாய்க் கேட்டதை வரைந்தே
உருவுடன் பார்க்க வைப்ப(து) எழுத்தே. ... 2

எண்ணம் அலைமனம் எழுத்தில் சீர்ப்பட
வண்ணம் விரிந்தே காண்மனம் நிறைக்கும்.
எழுத்தென் றின்றேல் இலக்கியம் இல்லை. ... 3

எழுத்தின் மகிமை குறித்தே பொருள்பல
எழுத்தெனும் சொல்லில் அடங்குவ தாமே
எழுத்தே முதலில் ஒலிவரி வடிவே. ... 4

எழுது வதையும் எழுதி யதையும்
எண்ணம் உருப்பெறச் செய்யும் எழுத்து.
தலைவிதி என்பதும் ஆகும் எழுத்து.
கையில் ஓடும் ரேகை எழுத்தே. ... 5

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப என்று
வள்ளுவர் பெருமான் சொல்லும் போதில்
இலக்கணம் என்றே பொருள்படும் எழுத்து.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமே
என்றே ஔவையும் குறள்வழிக் கூறுவார். ... 6

எழுதும் எழுத்து வரிவடி வென்பதால்
எழுதுதல் என்பது வரைதலைக் குறிக்க
எழுத்தெனும் சொல்லது சித்திரம் சுட்டுமே. ... 7

கண்மை யெழுதும் பெண்ணைக் கவிஞன்
எழுத்தில் எழுதி மனத்தில் வரைவான்.
ஓவியன் வரிகளோ மனதில் எழுதுமே. ... 8

--ரமணி, 27/10/2015

*****
‪#‎கவிதையில்_யாப்பு_03009‬ 

M. Viswanathan

unread,
Oct 27, 2015, 1:50:12 PM10/27/15
to Santhavasantham
மிகமிக அருமை.
மீ.வி.

ramaNi

unread,
Oct 27, 2015, 11:28:57 PM10/27/15
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, மகிழ்ச்சி, விசு!
ரமணி

Subbaier Ramasami

unread,
Oct 28, 2015, 8:46:52 AM10/28/15
to சந்தவசந்தம்
இரமணி அவர்களே, நல்ல் தொண்டு.

தொடருங்கள். 
இலந்தை

--

ramaNi

unread,
Oct 29, 2015, 1:04:46 AM10/29/15
to சந்தவசந்தம்
ஆசானின் ஆசிபெற்றது என்பேறு. தொடர்கிறேன். ஏதேனும் முரண், பிழை இருந்தால் திருத்தியருளுங்கள்.
ரமணி

ramaNi

unread,
Oct 29, 2015, 8:41:57 AM10/29/15
to சந்தவசந்தம்
4.03. எழுத்தின் வகைகள்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்.
எழுத்தெனப் படுவது எழுதப் படுவது 
என்றே இலக்கண நூல்குறிப் பாமே.

எழுத்தெனப் படுவது மூவகைப் படுமே
உயிரும் மெய்யும் சார்பும் என்றே.
உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்
முதலைச் சார்ந்தது சார்பெழுத் தாமே.

முதலாய் வருவது மொத்தம் முப்பது
உயிரெழுத் துகளில் பத்தும் இரண்டும்
மெய்யெழுத் துகளில் பத்தும் எட்டுமே.

4.04. உயிரின் வகைகள்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்
உயிரில் மூன்று வகைகள் உண்டு
குறிலே நெடிலே அளபெடை என்று.
குறில்கள் ஐந்து: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழு: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.

4.05. மெய்யின் வகைகள்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்
மெய்யில் மூன்று வகைகள் உண்டு
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றே.

கசட தபற வல்லின மாகும்
ஙஞண நமன மெல்லின மாகும்
யரல வழள இடையின மாகும்
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே.

4.06. சார்பின் வகைகள்
(வெறும்பா விரவியது)
(இணைக்குறள் ஆசிரியப்பா)

சார்பெழுத் தென்பது வகைகளில் பத்தே
உயிர்மெய் ஆய்தம் 
உயிரள பெடையும் ஒற்றள பெடையும்
குற்றிய லுகரம் குற்றிய லிகரம்
ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம் 
என்பன அந்தப் பத்து வகைகளே.

முதலெழுத் துகளைச் சார்ந்தே வருதலால்
சார்பெழுத் தென்னும் பெயரினைத் தாங்கி
மேலுள பத்து வகைகளில் வருமே.

4.07. உயிர்மெய்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

இக்-முதல் இன்-வரை ஒவ்வொரு மெய்யும்
அ-முதல் ஔ-வரை உயிருடன் சேர்ந்தே
க-முதல் ன-வரை இருநூற்றுப் பத்தாறாய்
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆமே
சான்றாக
ககா-கிகீ குகூ-கெகே கைகொகோ
கௌ-எனக் க-வர்க்க உயிர்மெய் பன்னிரண்டே.

4.08. ஆய்தம்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

உயிரிலும் மெய்யிலும் உயிர்மெய் யிலும்சேரா
அஃ-எனச் சொல்லும் ஆய்தவெ ழுத்துக்கு 
முப்புள்ளி முப்பாற் புள்ளி தனிநிலை
என்றே வேறு பெயர்களும் உண்டே.

முன்னொரு குறிலுடன் பின்னொரு வல்லினம்
பெற்றே இடைவரும் ஆய்த எழுத்தே.
சான்றாய் அஃது, எஃகு, எனவரும்.
தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய்த மாகும்.

--ரமணி, 29/10/2015

*****
 

ramaNi

unread,
Nov 1, 2015, 8:54:08 AM11/1/15
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு (தொடர்ச்சி)
ரமணி, 01/11/2015

4.09. அளபெடை யென்பது
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அளபென் பதுவாம் மாத்திரை அளவு
அளபெடுத் தலாமே மாத்திரை நீளுதல்
அளபெடுத் தேதன் மாத்திரை யளவில்
நீண்டொலிப் பதுவே அளபெடை யாகும்
அளபெடுத் தல்குறி அளபெடு எழுத்தின்
இனவெழுத் தொன்றாய்த் தொடர்ந்து வருமே.

செய்யுளில் ஓசை குறையும் எனிலே
உயிர்நெடில் எழுத்துகள் ஏழென வருவதும் 
ஙஞண நமன வயலள பத்தும் 
தனியே நிற்கும் ஆய்த எழுத்தும் 
தத்தம் மாத்திரை நீண்டொலிப் பதுவே
அளபெடை யென்றே அழைக்கப் படுவதாம்
அளபெடை இருவகை: உயிரே ஒற்றே.

4.10. உயிரளபெடை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நெடில்பின் தக்க குறிலென வந்தே
ஒசை நிரப்பும் உயிரள பெடையிது
மூன்று மாத்திரை யாயொலிப் பதுவாம்
உயிரள பெடையில் மூவகை யுண்டு
செய்யுளிசை இன்னிசை சொல்லிசை யென்றே.

அளபெடுக்கும் போதோர் இனவெழுத் தேறுமே:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

4.11. செய்யுளிசை அளபெடை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத் தேவர
செய்யுளிசை அளபெடை எனும்பெயர் பெறுமே.

கீழ்வரும் சான்றுகள் அளபெடை நோக்க
’ஆஅதும் என்னுமவர்’ என்றே முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்றே இடையிலும்,
’நல்ல படாஅ’ என்றே கடையிலும்
செய்யுளிசை அளபெடுத் துறுவது காண்க.

அதும்-தொழாள்- படா-எனும் சொற்கள் தம்முள்
ஓரசைச் சீராய் நிற்றல் கருதி
ஓசை நிறைக்க அவற்றை நீட்டி
ஈரசைச் சீர்க ளாக்கி யெழுதி
சீரும் தளையும் குன்றா திருக்கச்
செய்முயல் வாமே செய்யுளிசை யளபெடை.

சான்றுகள்
திருக்குறள் 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

திருக்குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

திருக்குறள் 55
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

4.12. இன்னிசை அளபெடை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை எனும்பெயர் பெறுமே.

’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’ 
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.
’கெடுப்பதூம், உடுப்பதூம், உண்பதூம்’ சொற்கள்
’கெடுப்பதும் உடுப்பதும் உண்பதும்’ என்றே
ஈரசைச் சீரின் இலக்கணம் அமைந்தும்
இன்னிசை நோக்கி அளபெடுத் தனவே.

சான்றுகள்
திருக்குறள் 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

திருக்குறள் 1079
உடுப்பதூஉம் உணபதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்.

4.13. சொல்லிசை அளபெடை
(வெறும்பா விரவியது)

(நேரிசை ஆசிரியப்பா)
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றெனவே நின்று
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை எனும்பெயர் பெறுமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
சொல்லிசை அளபெடை வந்திடும் போது
பெயர்ச்சொல் லொன்று வினையெச் சமாகும்.
’நசைஇ தொகைஇ வளைஇ அளைஇ’
’விரும்பி தொகுத்து வளைத்து அளந்து’
என்பன சொல்லிசை அளபெடைச் சான்றுகள்.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்றே
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்று.

சான்றுகள்
திருக்குறள் 1263
உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்.

தொல்காப்பியம், பொருள்.அகத். 39
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ 
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி

நப்பூதனார், முல்லைப்பாட்டு 1-2
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

திருக்குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

4.14. ஒற்றள பெடை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

செய்யுளில் ஓசை குறையு மிடத்து
மெய்யெழுத் தொன்று மிகுந்தொ லித்தே
ஒசை நிரப்புதல் ஒற்றள பெடையாம்.

செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய-இடை கடையள பெடுத்தே
நீண்டொ லித்திடும் பதினோ ரெழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததனால் மீண்டும் எழுதுவர்.

தனிக்குறில் குறிலிணைக் கீழ்வரும் ஒற்றே
இடைகடை அளபெடுத்து மிக்கு வருமே.
’எஃஃகிலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள்.

’எஃஃகிலங்ஙிய’ என்றது தனிக்குறிற் கீழிடை
’கண்ண் கருவினை’ தனிக்குறிற் கீழ்கடை
’கலங்ங்கு நெஞ்சமிலை’ குறிலிணைக் கீழிடை
’மடங்ங் கலந்த’ குறிலிணைக் கீழ்க்கடை
ஒற்றள பெடையாய் வருவது காண்க.

சான்றுகள் அனைத்திலும் ஒற்றள பெடுத்ததால்
ஓரசைச் சீர்கள் ஈரசை யாகிச்
செய்யு ளொசை நிறைத்தல் காண்க.

சான்றுகள்
எஃஃகிலங்கிய கையராயின்னுயிர்
வெஃஃகுவார்க் கில்லைவீடு.

சிதம்பரச் செய்யுட் கோவை 12
பூஉந் தண்ண் புனமயில் அகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பப்

அளபெடைச் சீர்களை அலகிடும் போது
தளைகள் தட்டில் அலகு பெறுமே
தளைகள் ஒன்றின் அலகு பெறாதே.

அளபெடை மாத்திரை யாதென நோக்கில்
உயிரள பெடையெனில் மும்மாத் திரையிலும்
ஒற்றள பெடையெனில் ஒருமாத் திரையிலும்
தனதியல் பொலியின் மிக்கு வருமே.

*** *** ***

ramaNi

unread,
Nov 14, 2015, 2:13:51 AM11/14/15
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு (தொடர்ச்சி)
ரமணி, 14/11/2015

4.15. முற்றிய லுகரம்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

உகர எழுத்துக் கொருமாத் திரையாம்
உகரம் சொல்லின் இறுதியில் உற்றால்
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் எனும்பெயர் பெறுமே
முற்றாய் ஒலிப்பதால் முற்றிய லுகரமே.

மாத்திரை குறைந்தே ஒலிக்கும் உகரம்
குற்றிய லுகரம் எனும்பெயர் பெறுமே.
வதுவெனும் சொல்லில் முற்றிய லுகரமாம்
வயது எனவரின் குற்றிய லுகரமாம்
குற்றி ஒலிப்பதால் குற்றிய லுகரமே.

ஓரெழுத்தில்
உவெனும் தனித்த உயிரெழுத் துகளுடன்
உகர உயிர்மெய் எழுத்துக ளாய்வரும்
உயிர்மெய் குசுடுதுபுறு வல்லின உகரமும்
உயிர்மெய் ஙுஞுணுநுமுனு மெல்லின உகரமும்
உயிர்மெய் யுருலுவுழுளு மெல்லின உகரமும்
தனித்து வந்தால் முற்றிய லுகரமே.

ஈரெழுத்தில்
தனிக்குறில் அடுத்தோர் உகரம் வந்தால்
தனதுமாத் திரையில் குறைவ தில்லை
குசுடுதுபுறு ணுமுனு யுருலுவுழுளு உகரம்
தனிக்குறில் அடுத்தால் முற்றிய லுகரமே
ஙுஞுநு சொற்கள் இறுதியில் வாரா.

நகு-பசு தடு-எது விபு-உறு சொற்கள்
அணு-சமு மனு-போல் முடியும் சொற்கள்
மயு-ஒரு வலு-கவு வழு-பளு சொற்கள்
இறுதியில் வருவது முற்றிய லுகரமே.

மூன்றோ மேலோ எழுத்துகள்
மூன்றோ மேலோ எழுத்துகள் அமைந்தே
மெல்லின இடையின மெய்தொடர் உகரம்
முற்றிய லுகரமாய் முழுதும் ஒலிக்குமே.

திங்ஙு நஞ்ஞு மண்ணு, தும்மு
மன்னு ஓய்வு கல்லு சவ்வு
நிகழ்வு பள்ளு என்பன சான்றே.

மூன்றோ மேலோ எழுத்துறும் சொல்லில்
சொல்லிறும் உகரம் வல்லின மாயின்
குற்றிய லுகரம் என்றே குறையும்
சொல்லிறும் உகரம் வகையில் இடையினம்
மெல்லினம் ஆயின் முற்றிய லுகரமே.

முனகு வயசு சுவடு மனது
இரிபு பயறு குற்றிய லுகரமே
கரேணு உருமு திலதேனு உகரமும்
சரயு மெய்யுரு மிகவலு கதவு
மூவேழு சரளு இடையின உகரமும்
எல்லாம் முற்றிய லுகர மாமே.

சொல்லில் எத்தனை எழுத்துகள் ஆயினும்
சொல்லிறும் உகரம் குற்றிய லுகரம்
அல்லது முற்றிய லுகரம் ஆமே.

*****

 

ramaNi

unread,
Sep 8, 2016, 11:25:15 PM9/8/16
to சந்தவசந்தம்
3.16. குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தன்னியல் பாகிய ஒருமாத் திரையில்
குறைந்தே மாத்திரை அரையாய்க் குறுகி
ஒலித்திடும் உகரம் குற்றிய லுகரமே. ... 1

குசுடு துபுறு எனவரும் உகரம்
வல்லின மெய்யுடன் சேரும் போது
வல்லின உயிமெய்க் குற்றுக ரமெனத்
தனிக்குறில் அல்லா மற்றைச் சொற்களில்
வந்திடும் போது குற்றிய லுகரமாய்க்
குன்றி அரைமாத் திரையில் ஒலிக்குமே. ... 2

வல்லின உயிர்மெய் உகரம் ஆறினில் 
குற்றிய லுகரம் குன்றி வருமே
மெல்லின இடையின உயிர்மெய் ஆறினில்
உகரம் குன்றி ஒலிப்பது இலையே. ... 3

தும்பு என்பது குற்றிய லுகரம்
தும்மு என்பது முற்றிய லுகரம்
நஞ்சு என்பது குற்றிய லுகரம்
நஞ்ஞு என்பது முற்றிய லுகரம்
உண்டு என்பது குற்றிய லுகரம்
உண்ணு என்பது முற்றிய லுகரம்
குடகு என்பது குற்றிய லுகரம்
குடவு என்பது முற்றிய லுகரமே. ... 4

கு=பூமி சு=சுகம் து=புசி என்று
கு-சு-து என்னும்-ஓர் எழுத்துச் சொற்கள்
தனிக்குறி லாகத் தனதுமாத் திரையில்
குறையா தொலிக்கக் குற்றிய லுகரம்
ஆகா தெனவே முற்றிய லுகரமாம். ... 5

தனக்கு முன்னால் வரும்-அயல் எழுத்தின்
வகையைப் பொறுத்து வரும்குற் றுகரம்
வகைகளில் ஆறு தொடர்களில் அமையுமே.
ஈற்றுறும் உகரம் ஈற்றயல் எழுத்தின்
தோற்றம் ஓட்டிய தொடரில் அமையுமே. ... 6

வன்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

வல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
வன்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சுக்கு மச்சு பட்டு 
பத்து உப்பு உற்று’
’சாக்கு நீச்சு பாட்டு 
கூத்து காப்பு உற்று’
என்பன வன்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 7

மென்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

மெல்லின மெய்யை ஈற்றயல் கொண்டவை
மென்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’சங்கு பஞ்சு வண்டு 
பந்து தும்பு நின்று’
’பாங்கு காஞ்சு வாண்டு 
சாந்து பாம்பு சான்று’
என்பன மென்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 8

இடைத்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

இடையின மெய்யை ஈற்றயல் கொண்டவை
இடைத்தொடர்க் குற்றிய லுகர மாமே.
’தேய்கு ஆர்கு அல்கு 
--வ்கு மாழ்கு தெள்கு’ ... ... ... [--வ்+கு சொல்லில்லை]
’வெய்து --ர்து --ல்து 
--வ்து போழ்து --ள்து’
’தோய்பு மார்பு சால்பு 
--வ்பு வாழ்பு வள்பு’
என்பன இடைத்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 9

இடைத்தொடர் வகையில் சு-டு-று உகரம்
இடையின மெய்யை ஈற்றயல் தாங்கி
அமையும் சொற்கள் இலையெனக் காண்க. ... 10

கு-து-பு என்னும் குற்றிய லுகரமும்
இடையின மெய்கள் அனைத்தையும் ஈற்றயல்
கொள்வ தில்லை என்றும் காண்க. ... 11

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

உயிர்மெய் யெழுத்தை ஈற்றயல் கொண்டவை
உயிர்த்தொடர்க் குற்றிய லுகர மாமே.
உயிர்மெய் யெழுத்தில் மெய்யின் பின்னே
உயிரெழுத் தாகச் சேர்ந்து வருவதால்
உயிர்த்தொடர்க் குற்றிய லுகரப் பெயராம்.
’படகு நகாசு அகடு 
தகாது அளபு கதறு’
என்பன உயிர்த்தொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 12

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

தனிநெடி லெழுத்தை ஈற்றயல் கொண்டவை
நெடிற்றொடர்க் குற்றிய லுகர மாமே.
’பாகு காசு நாடு 
காது பாபு ஆறு’
என்பன நெடிற்றொடர்க் குற்றிய லுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 13

நெடிற்றொடர்க் குற்றிய லுகரம் என்பது
தனிநெடில் பின்வரும் ஈரெழுத் துச்சொல்.
’தகாது ஆகாது’ போன்ற சொற்களில்
இரண்டை விஞ்சிய எழுத்துகள் வரவே
உகரம் ஈற்றயல் நெடில்நின் றாலும்
குற்றிய லுகரம் உயிர்த்தொட ராமே. ... 14

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆய்த எழுத்தை ஈற்றயல் கொண்டவை
ஆய்தத் தொடர்க்குற் றியலுகர மாமே.
’எஃகு கஃசு அஃது சுஃறு’
என்பன ஆய்தத் தொடர்க்குற் றியலுகரச்
சான்றென அறிந்து தாங்குவீர் உளமே. ... 15

குற்றியலுகரச் செயல்பாடு
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

குற்றிய லுகரம் செயல்படும் விதத்தைப்
பற்றியோர் மொழியியல் கருத்துண் டாமே
வல்லின மெய்கள் இறுதியில் வந்தால்
சொல்வது எளிதாய் அமைவ தில்லை
காட் அஃத் பஞ்ச் மார்ப்
போன்ற சொற்களை ஒலித்தல் எளிதா? ... 16

எனவே

காடு அஃது பஞ்சு மார்பு
என்று அந்த வல்லின மெய்மேல்
உகரம் ஏறி ஒலித்தல் எளிதாய்
உகரம் தானும் இசையில் நலிந்து
குற்றிய லுகரம் ஆகி விடுமே. ... 17

ஆங்கிலச் சொற்கள் நம் வழக்கில்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

ஆங்கிலம் பயிலும் இன்றைய தமிழில்
ஓங்குதல் காணீர் குற்றிய லுகரமே!
சாக் பாஸ் போட் 
ஷாப் டேப் பார்
என்று பேச்சில் பரந்த ஆங்கிலம்
நன்கு குற்றிய லுகரம் சேர்ந்தே
சாக்கு பாசு போட்டு 
ஶாப்பு டேப்பு பாரு
என்றுநம் பேச்சினில் ஒலித்திடும் அன்றோ? ... 18

[chalk pass boat shop tape bar]

*****

Ramamoorthy Ramachandran

unread,
Sep 8, 2016, 11:41:54 PM9/8/16
to santhav...@googlegroups.com
ரமணி அவர்களே! உங்கள் யாப்புப் பயிற்சி 
முறையாக அமைந்துள்ளது! இடையிடையே 
என் ஐயங்களைக் கேட்பேன்! விடைகளை அறியவும்/ 
தடைகளைக் களையவும் ....  

சிலகுறட் பாக்களை அலகிடல் சிரமம்! இவற்றைக் கேட்பேன்!
கேட்கலாமல்லவா? 
இந்நூல் மீண்டும் ஓர் இலக்கண நூலாகட்டும்!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

ramaNi

unread,
Sep 8, 2016, 11:53:22 PM9/8/16
to சந்தவசந்தம்
புலவர் அவர்களுக்கு வணக்கம்.

என் எல்லைகள் பற்றி உங்களுக்குத் தெரியும் எனவே, தெரிந்ததைச் சொல்வேன், தெரியாது தெளிவேன், தடைகள், தவறுகளைக் களைய அறிஞர்களின் ஆசியும் உதவியும் வேண்டுகிறேன். 

நான் வங்கியில் கணினிப் பிரிவில் பணியாற்றிய போது, எங்கள் டிபார்ட்மென்ட் வேலையைக் கணினியில் செய்வது பற்றிய மேனுவல் மற்றும் புரோக்ராம்கள் எழுதினேன். அதுபோன்ற ஒரு மாணவர் குறிப்பேடாகவே இத்தொடரை எழுதுகிறேன். இறுதியில் எல்லாம் சரியாக அமைந்து அறிஞர்கள் ஆசியால் ஒரு நூலாகத் தொகுக்க எண்ணம்.

அன்புடன்,
ரமணி

ramaNi

unread,
Sep 16, 2016, 8:58:32 AM9/16/16
to சந்தவசந்தம்
3.18. ஐகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஐ-யெனும் உயிர்மொழி தனித்தே வந்தால்
இருமாத் திரையள வாக ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பதே
ஐகாரக் குறுக்கம் எனும்பெயர் பெறுமே.

ஐப்பசி, வைகல் முதல்-ஐ குறுகும்
தலைவன், இறைவன் இடை-ஐ குறுகும்
மழை-மலை நகை-கடை கடை-ஐ குறுகும்
இவை-ஐ காரக் குறுக்கமென் அறிகவே.

நசைஇ அசைஇ அளபெடைச் சொற்களில்
ஐகா ரம்கொளும் இருமாத் திரையாம்
இகரம் கொள்ளும் ஒரு மாத்திரையே.

3.19. ஔகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஔ-வெனும் உயிர்மொழி தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வருகிற போதும்
அளபெடை யாகி வருகிற போதும்
தன்னிரு மாத்திரை குன்றா தொலிக்குமே.

ஔ-எனும் தனிச்சொல் அழைத்தல் பொருளாம்
கௌ-எனும் ஔ-சேர் உயிர்மெய் கொள்ளு
ஔஉ என்பது அளபெடை யாமே
இங்ஙனம் ஔ-வரின் முழுதாய் ஒலிக்குமே.

உயிரெழுத் துயிர்மெய் பின்வரும் ஔ-எனில்
முதலில் மட்டுமே நிற்கும் ஔ-வென
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றென ஒலித்தே
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே.
ஔவை வௌவால் கௌதாரி சான்றே.

3.20. மகரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ணகர னகர மெய்களின் முன்னும்
வகரம் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பதே.

கேண்ம்-எனும் சொற்பொருள் கேளும் ஆகும்
போன்ம்-எனில் போலும் சென்ம்-எனில் செல்லும்
மருண்ம்-எனில் மருளும் போன்ம்-எனில் போலும்
என்பன தனிமொழி மகரக் குறுக்கமே.

வரும்-வண்டி தரும்-வளவன் வாழும்-வழி வளம்-வரும்
என்றே வகரம் பின்வரும் மகரம்
புணர்மொழி மகரக் குறுக்கம் ஆமே.

3.21. ஆய்தக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பதே ஆய்தக் குறுக்கம் என்பதாம்.

அல்+திணை சேர அஃறிணை ஆய்தமும்
கல்+தீது சேர கஃறீது ஆய்தமும்
முள்+தீது சேர முஃடீது ஆய்தமும்
கால்மாத் திரையொலி ஆய்தக் குறுக்கமே.

[சார்பெழுத்து வகைகளின் மாத்திரை விவரம் காண: 3.01. மாத்திரை]

3.22. எழுத்தும் மற்ற உறுப்புகளும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்தெனப் படுவது தனியெழுத் தாக
மொழியெனும் மாளிகை யெழுப்பும் கற்களாய்
ஒற்றை ஒலியின் தனிமம் எனவே
கற்றையாய்ச் சேர்ந்தே சொல்லென் றாகி
மனதில் உள்ளதை வாக்கில் கொணர்ந்தே
கனவினை விதைக்கும் கனிவிதை யாமே.

எழுத்தே தனித்தோ எழுத்துடன் சேர்ந்தோ
அக்ஷரம் என்று வடசொல் குறிக்கும்
ஸிலபிள் என்று ஆங்கிலம் குறிக்கும்
அசையென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்;
செய்யுளின் அடிப்படை உறுப்பென் றாகி
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசையுமே.

எழுத்தென் பதுவே உருவிலோ ஒலியிலோ
மோனை எதுகை முரணெனும் வகைகளில்
தொடையெனும் உறுப்பினில் தொடுக்க உதவுமே.

இன்னும் எழுத்தெனும் மன்னிய யுறுப்பு
இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பென் றசைந்து வருமே.

3.23. எழுத்தியல் பயிற்சி

பயிற்சிகள் இந்த வலைதளத்தில்:

*****
 

Pas Pasupathy

unread,
Sep 16, 2016, 1:11:35 PM9/16/16
to Santhavasantham
சீரின் முதலில் ‘ஐ’  ‘அய்’ போல் ஒலித்து, 1.5 மாத்திரைகள் பெறும். எதுகை கண்டுபிடிக்கவும் இப்படி நினைவு கொள்ளல் உதவும். 

2016-09-16 8:58 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
3.18. ஐகாரக் குறுக்கம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஐ-யெனும் உயிர்மொழி தனித்தே வந்தால்
இருமாத் திரையள வாக ஒலிக்கும்.
அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பதே
ஐகாரக் குறுக்கம் எனும்பெயர் பெறுமே.

ஐப்பசி, வைகல் முதல்-ஐ குறுகும்
தலைவன், இறைவன் இடை-ஐ குறுகும்
மழை-மலை நகை-கடை கடை-ஐ குறுகும்
இவை-ஐ காரக் குறுக்கமென் அறிகவே.

நசைஇ அசைஇ அளபெடைச் சொற்களில்
ஐகா ரம்கொளும் இருமாத் திரையாம்
இகரம் கொள்ளும் ஒரு மாத்திரையே.


Ramamoorthy Ramachandran

unread,
Sep 16, 2016, 1:23:33 PM9/16/16
to santhav...@googlegroups.com
அவ்வை வவ்வால் அவ்டதம் இவற்றில் அ +வ் = 1.5 
இவ்வாறே கொள்க.

--

M. Viswanathan

unread,
Sep 16, 2016, 1:55:50 PM9/16/16
to Santhavasantham

அன்பு ரமணியின் அரிய தமிழ்த் தொண்டு.
மீ.வி.

ramaNi

unread,
Sep 16, 2016, 10:17:34 PM9/16/16
to சந்தவசந்தம்
பேராசிரியர், புலவர் இருவருக்கும் நன்றி. கீழ்வரும் அடிகளைச் சேர்த்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி

ஐயெனும் நெடிலே அய்யென் பதுபோல்
சொல்முதல் இடைகடை தன்னில் ஒலித்தால்
ஐகாரக் குறுக்கமாய் ஒன்றரை மாத்திரை
அளவில் ஒலிக்கும் என்றுளம் கொள்வீர்.

ஔவெனும் நெடிலே அவ்வென் பதுபோல்
சொல்லின் முதலில் நின்றே ஒலித்தால்
ஔகாரக் குறுக்கமாய் ஒன்றரை மாத்திரை
அளவில் ஒலிக்கும் என்றுளம் கொள்வீர்.

*****

ramaNi

unread,
Sep 16, 2016, 10:48:29 PM9/16/16
to சந்தவசந்தம்
நன்றி. விசு.
ரமணி

ramaNi

unread,
Sep 18, 2016, 1:26:07 AM9/18/16
to சந்தவசந்தம்
3.17. குற்றியலிகரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிலைமொழி ஈற்றில் குற்றுகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்
உகரம் இகர மாகத் திரிந்தே
அரைமாத் திரையாய்க் குறைந்தே ஒலித்துக் 
குற்றிய லிகரம் ஆகி விடுமே. ... 1

குற்றிய லிகரம் இருவகைப் படுமே:
நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் வருவது
புணர்மொழிக் குற்றிய லிகரம் ஆமே.
தனியொரு சொல்லில் குறையும் இகரம்
தனிமொழிக் குற்றிய லிகர மாமே. ... 2

நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கொக்கு + யாது = கொக்கியாது என்றும்
கண்டேன் + யான் = கண்டேனியான் என்றும்
வருவது புணர்மொழிக் குற்றிய லிகரமே. ... 3

மியாவெனும் முன்னிலை அசைச்சொல் உண்டு
மியாவெனும் சொல்வரும் மி-எனும் இகரம்
அதன்பின் யகரம் வருவதால் குன்றி
தனிமொழிக் குற்றிய லிகரம் ஆமே. ... 4

கேள் + மியா = கேண்மியா என்பதும்
செல் + மியா = சென்மியா என்பதும்
தனிமொழிக் குற்றிய லிகரச் சான்றே. ... 5

*****
 

Ramamoorthy Ramachandran

unread,
Sep 18, 2016, 10:45:03 AM9/18/16
to santhav...@googlegroups.com
நாடு+யாது = நாட்+யாது என்பது போல குற்றியலுகரமும் குறையும்.
கேள்(ண்) + மியா (ஈற்றசை) - கேண்மியா = கேண் +ம்யா , என  இ குறைவது கு.இ.

--

ramaNi

unread,
Sep 18, 2016, 11:09:48 AM9/18/16
to சந்தவசந்தம்
நன்றி புலவரே, சேர்த்துக் கொள்கிறேன்.
ரமணி

ramaNi

unread,
Sep 19, 2016, 9:40:47 AM9/19/16
to சந்தவசந்தம்
4.00. அசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
[வெறும்பா விரவியது)

அசையா தணுவும் அவனின் றியென்பர்
அசைவெனில் இங்கே அதிர்வெனும் பொருளாம்
அணுக்கள் தனியே அசைதல் அதிர்வெனில்
அணுக்கள் சேர்ந்தே அதிர்வொரு மித்தே
குணத்தில் மூலக் கூறென் றசையுமே. ... 1

அசைதல் என்றால் இயங்குதல் எனப்பொருள்
அசையின் இயக்கம் நுடங்கியும் விரிந்தும் ... [நுடங்கியும் = மெலிந்தும்]
இசைந்தே ஒலிக்கும் இதயத் துடிப்பே. ... 2

4.01. யாப்பின் அசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தனித்தே வலிதாய் ஒலிக்கும் எழுத்துகள்
கனித்துச் சீராய் ஒலிப்பது அசையாம்.
அசையே செய்யுளின் தனிமம் ஆகுமே. ... 1

(இணைக்குறள் ஆசிரியப்பா)
தனிநின் றொலிக்கும் எழுத்துகள் பலவும்
நனிசேர்ந் தொலிப்பதில் எழுந்திடும் ஓசை
அசையெனச் செய்யுளில் அடிப்படை உறுப்பாய்
இசைந்தே சீர்களில் இணைந்தும் 
தளைகளில் தழைத்தும் 
தொடைகளில் தொடுத்தும்
செழிக்கும் யாப்பில் செய்யுளாய் மிளிர்ந்தும்
இழைந்தே ஒலிக்க எழுந்திடும் கவிதையே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஒன்றோ பலவோ எழுத்துகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் அசையெனப் படுமே
ஒன்றோ பலவோ அசைகள் சேர்ந்தே
ஒன்றாய் ஒலித்தல் சீரெனப் படுமே
ஒன்றோ பலவோ சீர்கள் இணைந்தே
ஒன்றாய் ஒலிப்பது அடியெனப் படுமே. ... 3

இரண்டோ மேலோ யாப்பில் அடிகள்
திரண்டு வருவது செய்யுள் ஆகுமே
செய்யுளின் ஓசை சீர்களைக் கட்டிச்
செயல்படும் தளையால் செவிகளில் விழுமே.
செய்யுள் படிப்பது உள்ளம் நிற்கச்
செய்யும் எதுகை மோனைத் தொடுப்பே. ... 4

இங்ஙனம் யாத்த செய்யுளின் சொற்களில்
தங்கும் பொருளதன் உயிராய் ஆள்வதில்
பொங்கும் உவகையாய்ப் பூக்கும் கவிதையே. ... 5

4.02. எழுத்தும் அசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுத்துகள் தனியே அசைந்திடும் போது
முழுதாய் ஓசை அவற்றில் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்தே அசைந்திடும் போதோ
ஓசைகள் குறையும் வலுவும் பெறுமே. ... 1

’தாஅ’ என்று கேட்கும் போது
தாவெழுத் தோசை முழுவதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்ந்து ஒலிகள் மழுங்கி
’தா’வெழுத் தோசை சற்றே குறையுமே. ... 2

’குயி’எனச் சொல்லும் போதவ் வெழுத்துகள்
வல்லின மெய்யின ஒலிகள் முரண்படப்
பொருளெது மின்றிக் கேட்கும் அசைந்தே. ... 3

(இணைக்குறள் ஆசிரியப்பா)
அதுவே ’குயில்’எனச் சொல்லும் போதோ
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்தே
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்றுக்
குயில்கள் பாடும் கூட்டிசை கேட்குமே! ... 4

தனியெழுத் தொன்றும் தானே அசையும்
தனியே வருகிற குறில்நெடில் எழுத்துகள்
தனித்தனி அசையென் றாகிட முடியும்.
தனிவரும் ஒற்றை எழுத்தே
தனிச்சொல் லாகிப் பொருள்தர வரினே
ஓரெழுத் தொருமொழி என்றதை அழைப்பரே. ... 5

(நிலைமண்டில ஆசிரியப்பா)
’தா’வெனில் தருதல் ’பா’வெனில் பாட்டு
’கா’வெனில் சோலை ’பூ’வெனில் மலராம்
’உ’வெனில் சிவனார் ’கு’வெனில் பூமி
’அ’வெனச் சுட்டும் ’தீ’யெனச் சுடுமே
’மா’வெனில் திருமகள் ’ம’வெனில் திருமால் 
’யா’வெனும் வினையடிப் பிறந்தது யாப்பே. ... 6

4.03. அசைகளின் தொகையொலி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.
ஒற்றுடன் உயிரெழுத் தொன்றே சேர்ந்தால்
உயிர்மெய் யாகி மெய்யுயிர் பெறுமே. ... 1

அசைகள் ஒலிக்கும் மாத்திரைக் காலம்
அசையெழுத் துகளின் மாத்திரைத் தொகையாம்
இயற்பா வகையில் இவ்வெழுத் துகளொலி
செயல்படும் எழுத்தின் வகையைப் பொறுத்தே
அளவிற் குறைந்தோ மிக்கோ ஒலிக்குமே. ... 2

கதவு சொல்லில் மூன்றுயிர் மெய்யெனும்
விதத்தில் எழுத்துகள் மாத்திரை மூன்றெனில்
குற்றிய லுகரம் இறுதியில் வருவதால்
குற்றிய லுகரம் மாத்திரை அரையாய்
கதவெனும் சொல்லின் அசைகளில் பயிலும்
தொகையொலி மாத்திரை இரண்டரை யாமே. ... 3

இயற்பா ஆகா இசைப்பாக் களிலே
செயல்படும் அசைகளில் சீர்ப்படும் சந்தம்
தனிக்குறில் மாத்திரை அளவொன் றெனவும்
தனிநெடில், தனிக்குறில் பின்வரும் ஒற்றுடன்
தனிநெடில் பின்வரும் ஒற்றுடன் அளவில் 
இரண்டு மாத்திரை என்றிலக் கணமே. ... 4

4.04. அசை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அசையின் வகைகள் ஆகும் இரண்டு
நேரசை நிரையசை அவற்றின் பெயராம்
நேரே தனியே வருவதால் நேரசை
ஓரெழுத் தால்வரும் நேரசை வகையே. ... 1

ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்
எழுத்துகள் இரண்டு தொடர்ந்து வந்தே
இணைந்து அசைவதால் நிரையசை யாமே. ... 2

குறிலோ நெடிலோ தனித்தும்-ஒற் றடுத்தும்
வருவது நேரசை எனும்பெயர் பெறுமே
குறில்கள் இரண்டோ குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும்-ஒற் றடுத்தும் வந்தால் நிரையசை.
ஒற்றடுத் தென்பது குறில்-நெடில் பின்னோர்
ஒற்றுடை மெய்யெழுத் துவரல் குறிக்குமே. ... 3

4.05. நேரசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரசை அமையும் வகைகள் நான்கே
ஒருகுறில் தனித்து வந்தால் நேரசை
ஒருகுறில் ஓற்றடுத் துவந்தால் நேரசை
ஒருநெடில் தனித்து வந்தால் நேரசை
ஒருநெடில் ஓற்றடுத் துவந்தால் நேரசை. ... 1

’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2

தனிக்குறில் நேரசை பெரிதும் சீரின் 
இறுதியில் வருவதே: ’பானு, வாலி’.
விட்டிசைத் தல்லால் முதற்கண் தனிக்குறில்
ஒட்டப் படாது நேரிசை யென்றே
யாப்ப ருங்கலம் வரையறை சொலுமே.
’அஎ உஅம் மூன்றுஞ் சுட்டு’
என்னும் தொடரில் சீர்முதல் தனிக்குறில்
நின்றே தனியாய் ஒலிப்பது விட்டிசை
சீர்முதல் விட்டிசைத் தனிக்குறில் நேரசை. ... 3

ஒற்றுகள் இரண்டாய் ஒன்றன் பின்னே
ஓரெழுத் தடுத்தே வரின்-அவ் வொற்றுகள்
தனியசை யாகா முன்னுள எழுத்துடன்
இணைந்தே நேரோ நிரையோ ஆகுமே. ... 4

’அர்த்தம், பார்த்தன்’ நேர்நேர் ஆகுமே
’பார்ப்பதில் ஆழ்ந்தொரு’ நேர்நிரை ஆகுமே
’படர்க்கை தமிழ்த்தாய்; நிரைநேர் ஆகுமே
’படர்ந்திடும் தமிழ்த்திரு’ நிரைநிரை ஆகுமே. ... 5

4.06. நிரையசை என்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிரையசை அமையும் வகைகள் நான்கே
குறில்கள் இரண்டு வந்தால் நிரையசை
குறிலிணை ஓற்றடுத் துவந்தால் நிரையசை
குறில்நெடில் இணைந்து வந்தால் நிரையசை
குறில்நெடில் ஓற்றடுத் துவந்தால் நிரையசை. ... 1

’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுடன்.
’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க. ... 2

ஒற்றிலா நேரசையில் ஓரெழுத் திருக்குமே
ஒற்றிலை யென்றால் முதல்வரும் நெடிலே.
’உமா’ என்பது குறில்நெடில் நிரையசை
’மாவு’ நெடில்குறில் தனித்திரு நேரசை. ... 3

4.07. அசையும் சொல்லும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
சொற்களும் அசைதனில் முழுதாய் வருமே
சொல்லொன் றெனவே இரண்டிலும் வரலாம்
பல்-பால் ஒருசொல் நேரசைச் சான்றெனில்
பழம்-மலர் ஒருசொல் நிரையசைச் சான்றே. ... 1

தனிக்குறில் நேரசை இறுதியில் வருவதால்
தனியே பொருளது தராது நின்றே
ஒற்றுடன் சேர்ந்தால் பொருள்தர வருமே
’பல்லி’ எனும்சொல் நேர்நேர் ஆவதில்
’பல்’லெனும் நேரசை ஒற்றால் பொருள்பெறும்
’லி’யெனும் நேரசைப் பொருளெது மில்லை. ... 2

தனிநெடில் நேரசை பொருள்தர வரலாம்
தனிநெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’தா-பால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 3

குறிலிணை நிரையசை பொருள்தர வரலாம்
குறிலிணை ஒற்றுடன் பொருள்தர வரலாம்
அணி-அணில் என்னும் சொற்கள் சான்றே. ... 4

குறில்நெடில் நிரையசை பொருள்தர வரலாம்
குறில்நெடில் ஒற்றுடன் பொருள்தர வரலாம்
’உமா-இறால்’ என்னும் சொற்கள் சான்றே. ... 5

நேரசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவது பொதுவில் காண்பதே
’என்/ன கே/ளாய்’ எனும்தொடர் சான்றே. ... 6

நிரையசை நான்கும் வேறொரு சொல்லின்
பகுதியாய் வருவதும் பொதுவில் காண்பதே
’வரு/வினை அறுப்/பதால்’ எனும்தொடர் சான்றே. ... 7

--ரமணி, மீள்பார்வை: 19/09/2016

*****
 

ramaNi

unread,
Sep 20, 2016, 10:19:56 AM9/20/16
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு பயிற்சி: குற்றியலுகரம்
பயிற்சி 03.23.02. முதல் பயிற்சி 03.23.08. வரை


 

ramaNi

unread,
Sep 28, 2016, 11:05:59 PM9/28/16
to சந்தவசந்தம்
5.00. சீர்
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எத்தனை பொருட்கள் சீரெனும் சொலுக்கு!
அத்தனை யெனவரும் சீரெனும் உறுப்பே
நேரடி யாகவோ மறைமுக மாகவோ.

செய்யுளின் கட்புலன் உறுப்பெனச் சீரே!
செய்யுள் என்பதோர் செடியெனக் கண்டால்
செடியின் இலைகளே சீர்கள் என்போம்
செடியின் பூக்களே இலைமறைத் தொடைகளாம் 
அடிகளாய்க் கிளைகளே ஆகி வந்திட
அடிமிசை இணையும் காம்பே தளைகளாம்.

[கட்புலன்=கண்ணுக்குச் சட்டெனத் தெரியும்; 
தொடை=எதுகை, மோனை போன்றவை]

செடியில் இலையே கட்புலன் உறுப்புபோல்
செய்யுளில் சீரே கட்புலன் உறுப்பாம்
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’
முன்வரும் கட்புலன் இவ்வடிச் சீர்களே.

சீரே செய்யுளின் செல்வம் அழகு
சீரே செய்யுளின் நன்மை பெருமை
சீரே செய்யுளின் மதிப்பு புகழே
என்பது கீழ்வரும் செய்யுளில் புரியுமே.

(நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

சீர்களே மேலுள பாப்பொற் காசு 
சீர்களின் அமைப்பு பாவின் அழகு
சீர்களின் கருத்து பாவின் நன்மை
சீர்களே பாவின் மதிப்பிலே புகழிலே.

சீர்களே பெரிதும் செய்யுளின் இயல்பில்
சீர்களே துலாமென ஓசையை நிறுக்கும் 
சீர்களின் அளவில் தாளமும் பாட்டும்
ஓர்வகை யாகி ஓசையில் ஓங்குமே.

இன்னும் செய்யுளின் நேர்மை சமன்பாடு
செம்பொருள் உறுதி ஆயுதம் தண்டை
என்னும் பொருள்களும் சீரினில் அடக்கம்.
காரணித்துக் காதலித்துநம் முன்னோர் இட்டபேர்
ஆரணிய மாய்விரியும் யாப்புறுப் புகளிலே.

5.01. சீரென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.
அசைகள் தனித்தோ தொடர்ந்தோ பயின்று
இசைந்தே ஒலிக்கும் சீரெனும் உறுப்பிலே.

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையில்
தாளம் என்பதில் மூன்றென உறுப்புகள்
தாளக் காற்சுழல் பாணியில் தொடங்குமே 
தாள நீடிப்பு தூக்கினில் அடங்குமே
தாள முடிவு சீரினில் அடங்குமே
என்றே சீரினைப் பாணியோ(டு) ஒப்பிடுவார்.

[காற்சுழல் = காலச்சுழல்]

சீரின் எல்லை சொல்லில் முடியலாம்
சீரின் எல்லையில் சொற்பிளந்து வரலாம்
சீர்வரும் பிளவு வகையுளி யெனப்படும்.
சீரிசை நோக்கிச் சொற்பொருள் நோக்காது
நேர்வரும் ஓசையே சொற்களைப் பிரிக்குமே.

(குறள் வெண்பா)
வருகிற பாக்குறளில் ’வேண்டுதல்வேண் டாமை’
பிரியும் வகையுளி யென்று.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

வகையுளி இல்லாக் குறளொன்று கேட்பின்
அகர முதல உளது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

5.02. சீர் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரசை நிரையசை பல்வகை இணைந்தே
ஓரசை முதலாய் நாலசை வரையில்
உருப்பெறும் சீர்களில் அதிகம் பயில்வன
ஈரசை மூவசை; நாலசை அரிதே.

சீர்களின் வகைகளை நினைவிற் கொள்ளச்
சீரசை நிரலைக் குறிக்கும் பேரெனும்
சீர்வாய் பாடுகள் திறம்பட உதவுமே

சீர்வகைப் பெயர்தன் அசை-தொகை பொறுத்து
ஓரசை ஈரசை மூவசை நாலசை
என்றே நால்வகைப் பெயர்பெறு மாயினும்
செய்யுட் குரிமை பூண்டு நிற்கும்
திறமும் பிறவும் நோக்கி யவற்றை
அசைச்சீர் அகவற்சீர் வெண்சீர் வஞ்சிச்சீர்
பொதுச்சீர் என்றும் ஐவகைப் பெயர்களில்
அழைப்பது செய்யுள் வழக்கினில் அமையுமே.

அசைச்சீர் என்பது ஓரசைச் சீரே
அகவற் சீரெலாம் ஈரசை வகைகளே
வெண்சீர் என்பது மூவசைக் காய்ச்சீர்
வஞ்சிச் சீர்வகை மூவசைக் கனிச்சீர்
பொதுச்சீர் என்பது நாலசைச் சீர்களே.

5.03. ஓரசைச் சீர்
(ஆசிரியத் தாழிசை)

அசையொன்று தனிநின்றே இசைநிறைக்க வருவதே
அசைச்சீர் என்னும் ஓரசைச் சீராம்.
அசைச்சீர் இரண்டே தனிநேர் தனிநிரை.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
அசைச்சீர் பெரிதும் வெண்பா ஈற்றிலும்
கலிப்பா அம்போ தரங்க ஈற்றிலும்
வஞ்சி விருத்தம் இடையிலும் வருமே.

நாள்-எனும் மலர்-எனும் இருபெயர் களிலும்
காசு பிறப்பு எனும்பெயர் களிலும்
ஓரசைச் சீரின் வாய்பா டமையுமே.

நாள்-மலர் காசு பிறப்பு பெயர்பெறும்
குறிகளை ஆய்ந்தால் கிடைக்கும் அசைகள்
தனிநேர் தனிநிரை நேர்பு நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்களே.
வெண்பா ஈற்றடி இறுதிச் சீரென
இவற்றில் ஒன்று மட்டும் வருமே.

காசு பிறப்பு ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு
நிரையுடன் சேர்குற் றுகரம் நிரைபு.

தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லா நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது நேர்பு
நிரையுடன் அதுவே சேர்வது நிரைபு.

அது-எனும் சொல்லசை நேர்பா மலரா?
து-எனும் எழுத்துகுற் றுகர மாயினும்
அ-வெனும் எழுத்து தனிக்குறி லாகிட
அதுவெனும் அசைச்சீர் தனிநிரை யாகி
மலரெனக் குறிக்கும் வாயா டாமே.

மாசு என்பதில் குற்றிய லுகரம்
மாவெனும் தனிநெடி லுடனே சேர்வதால்
காசு வாய்பா டினிலே வருமே.

பந்து என்பதன் வாய்பா டென்ன?
பந்து என்பதில் பந்-எனும் நேரசை
குறிலொற்றுப் பெற்றதால் தனிக்குறி லன்று
குற்றுகரம் சேரக் காசு ஆகுமே.

உவர்-எனும் தனிநிரை அசைச்சீர் மலரே
உவர்ப்பு-எனும் சொல்லாய் வந்தால் அதுவே
உவர்-உடன் சேரும் குற்றுக ரத்தால்
பிறப்பு வாய்பா டாகி வருமே.

(சிந்தியல் வெண்பா)
நாள்-இல் முடிவது இந்தக் குறட்பா:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்-இல் முடிவது இந்தக் குறள்வெண்பா:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

காசு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறப்பு-வில் இற்றிடும் இந்தக் குறளே:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

*****

Ramamoorthy Ramachandran

unread,
Sep 29, 2016, 11:26:23 AM9/29/16
to santhav...@googlegroups.com
இரமணி ஐயா! நூல் மிகவும் தெளிவாகச் செறிவுடன் 
உருவாகி வருகிறது! மகிழ்ச்சி!
புலவர் இராமமூர்த்தி. 

M. Viswanathan

unread,
Sep 29, 2016, 11:34:09 AM9/29/16
to Santhavasantham
தெளிந்த நீரோட்டமான நடை. பயனுள்ள முயற்சி.,
மீ.வி.

ramaNi

unread,
Sep 29, 2016, 11:42:51 AM9/29/16
to சந்தவசந்தம்
புலவர் அவர்களின் ஆசிமொழிக்கு மிக்க நன்றி.
ரமணி

ramaNi

unread,
Sep 30, 2016, 8:10:15 AM9/30/16
to சந்தவசந்தம்
நன்றி, விசு.
ரமணி

ramaNi

unread,
Oct 1, 2016, 12:59:28 AM10/1/16
to சந்தவசந்தம்
5.04. ஈரசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்நிரை யெனவரும் அசைகள் கூடி
ஈரசைச் சீர்வரும் வழிகள் நான்காம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
ஈரசைச் சீர்கள் இங்ஙனம் நான்கே. ... 1

ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு விளச்சீர் இரண்டு.
ஈற்றசை நேர்வரின் மாச்சீர் ஆகும்
ஈற்றசை நிரைவரின் விளச்சீர் ஆகுமே. ... 2

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்பது ஈரசைச் சீர்வாய் பாடாம்.
இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
என்னும் நான்கு ஈரசைச் சீர்களே
சீரின் அசைநிரல் பெயரே சுட்டுமே. ... 3

அனைவரும் அறிந்த மரங்கள் அவற்றில்
விளைந்திடும் பூக்கள் காய்கள் கனிகளை
அழைத்திடும் பெயர்களைச் சீர்களுக் கிட்டனர். ... 4
---கி.வா.ஜ. ’கவி பாடலாம்’

தேமா என்பது பழுக்கும் மாங்காய்
புளிமா என்பது ஊறுகாய் மாங்காய்
கருவிளம் என்பது விளாமர மாகும்
கூவிளம் என்பது வில்வ மரமே. ... 5

அகவற்சீர் இயற்சீர் ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்பெயர் பெறுமே.
செய்யுள் வழக்கில் பேச்சின் வழக்கில்
பெரிதும் இயல்பாய்ப் பயின்று வருதலால்
இயற்சீர் என்ற பெயரில் வருமே. ... 6

அகவல் ஓசை தாங்கி வருவதால்
அகவற் சீரெனும் பெயரில் வருமே.
அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரென் றாகும் இதுவே
ஆசிரி யவுரிச் சீரெனப் படுமே. ... 7

இயற்சீர் மட்டுமே அமைந்த குறளிது:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ... 8

இந்தக் குறளை அலகிட வருவது
கூவிளம் கூவிளம் கூவிளம் புளிமா
புளிமா புளிமா மலர்-என அறிக. ... 9

*****

5.05. மூவசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஈரசைச் சீர்கள் நான்கின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர்ந்தே
மூவசைச் சீர்கள் எட்டென வருமே. ... 1

ஈரசை இறுதியில் நேரசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் காய்ச்சீர்
ஈரசை இறுதியில் நிரையசை சேரும்
மூவசைச் சீர்கள் நான்கும் கனிச்சீர். ... 2

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்
என்பன காய்ச்சீர் வாய்பா டாமே
நேரசை யாகும் காய்-எனும் சொல்லே 
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 3

இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நிரைநிரைநேர் நேர்நிரைநேர்
எனவரும் நால்வகை காய்ச்சீர் வகைகளே. ... 4

(குறள் வெண்செந்துறை)
தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
என்பன கனிச்சீர் வாய்பா டாமே. ... 5

நிரையசை யாகும் கனி-எனும் சொல்லே 
ஈரசை வாய்பா டிறுதியிற் காண்க. ... 6

நேர்நேர்நிரை நிரைநேர்நிரை நிரைநிரைநிரை நேர்நிரைநிரை
எனவரும் நால்வகை கனிச்சீர் வகைகளே. ... 7

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பாக் குரியதால் காய்ச்சீர் நான்கும் 
வெண்சீர் வெண்பா வுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 8

வஞ்சிப் பாவரும் கனிச்ச்சீர் நான்கும்
வஞ்சிச்சீர் வஞ்சி யுரிச்சீர் என்று
மேலும் இரண்டு பெயர்கள் பெறுமே. ... 9

தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்
என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க. ... 10

(குறள் வெண்செந்துறை)
பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை ... 11

என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை] ... 12
--பசுபதி, ’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.49

காய்கனிச் சீர்களுக் கின்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் நகைக்கடைபார் சீரியல்பார் ... 13

ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடமும்படி
போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம். ... 14

(குறள் வெண்பா)
காய்ச்சீராம் வெண்பா வுரிச்சீர் களேவரும்
கீழ்வரும் வெண்பா விலே. ... 15

(இன்னிசை அளவியல் வெண்பா)
ஆராரோ ஆரிரரோ ஐயாநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் ஐயாவுன் கண்மூடு
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நான்நின்றே தூங்குமுன்நீ தூங்கு. ... 16

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் காசு ... 17

வஞ்சியுரிக் கனிச்சீரே வந்துநிற்கும் சான்றெனவே
வஞ்சிப்பா அடிகள்கீழ் வருவதனைக் கண்டறிக. ... 18

(குறளடி வஞ்சிப்பாவின் பகுதி) 
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவியலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மண்முரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும் ... 19
--யா.கா. மேற்கோள்

தேமாங்கனி கூவிளங்கனி
கூவிளங்கனி கூவிளங்கனி
கருவிளங்கனி கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்கனி
கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்கனி புளிமாங்கனி ... 20

*****

5.06. நாலசைச் சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியில்
நேரசை நிரையசை தனியே சேர
நாலசைச் சீர்வரும் பதினா றெனவே. ... 1

நாலசைச் சீர்பதி னாறில் அமையும்
தண்பூ நான்கு நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு நறுநிழல் நான்கே. ... 2

நாலசைச் சீர்கள் அமைவதை அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும். ... 3

நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்றே அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்றே அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமே. ... 4

(ஆசிரியத் தாழிசை)
தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ
தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ
என்பன பூச்சீர் வாய்பா டாமே. ... 5

இந்தக் குறிகளின் பூச்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நேர் நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர்நேர் நேர்நிரைநேர்நேர்
நேர்நேர்நிரைநேர் நிரைநேர்நிரைநேர் நிரைநிரைநிரைநேர் நேர்நிரைநிரைநேர் ... 6

தேமாந்தண்ணிழல் புளிமாந்தண்ணிழல் கருவிளந்தண்ணிழல் கூவிளந்தண்ணிழல்,
தேமாநறுநிழல் புளிமாநறுநிழல் கருவிளநறுநிழல் கூவிளநறுநிழல்
என்பன நிழற்சீர் வாய்ப்பா டாமே. ... 7

இந்தக் குறிகளின் நிழற்சீர் வகையாம்
நேர்நேர்நேர்நிரை நிரைநேர்நேர்நிரை நிரைநிரைநேர்நிரை நேர்நிரைநேர்நிரை
நேர்நேர்நிரைநிரை நிரைநேர்நிரைநிரை நிரைநிரைநிரைநிரை நேர்நிரைநிரைநிரை ... 8

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பா ஒழிந்த பிறபாக் களிலே
பொதுப்பட வந்து நிற்பத னாலே
பொதுச்சீர் என்பது நாலசைச் சீரே. ... 9

பொதுவெனும் சொல்லிவண் பொதுசனம் போலச்
சிறப்பிலா எளிமை எனும்பொருள் படுமே
இதனால் நாலசைச் சீர்கள் செய்யுளில்
சிறப்பிலை யெனவே அருகி வருமே. ... 10

நாலசைச் சீர்களை அலகிடும் போது
பூச்சீர் எட்டும் காய்ச்சீர் எனவும்
நிழற்சீர் எட்டும் கனிச்சீர் எனவும் 
கொண்டல கிட்டுத் தளைகளைக் குறிப்பரே. ... 11

(இணைக்குறள் ஆசிரியப்பா)
சான்றாய் ’வடிவார்கூந்தல் மங்கையரும்’ என்பது
போன்ற தொடர்களை அலகிடும் போது
வடி/வார்/கூந்/தல் மங்/கைய/ரும்
புளிமாந்தண்பூ கூவிளங்காய் என்றுவரும் சீர்களை
புளிமாங்காய் கூவிளங்காய் என்றே கொண்டு
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை
என்றே தளைதனைக் காணுதல் வேண்டுமே. ... 12

(கலித்தாழிசை)
’அங்கண்வானத் தமரரசரும்’ அலகிட 
அங்/கண்/வா/னத் தம/ரர/சரும் என்று
தேமாந்தண்பூ கருவிளங்கனி யாவது
தேமாங்காய் கருவிளங்கனி என்றே கருதக்
காய்முன் நிரைவரும் கலித்தளை பயிலுமே. ... 13

’வெங்கண்வினைப்பகை விளிவெய்த’ அலகிட
வெங்/கண்/வினைப்/பகை விளி/வெய்/த
தேமாநறுநிழல் புளிமாங்காய் என்னும் சீர்களைத்
தேமாங்கனி புளிமாங்காய் என்றே கருதக்
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித் தளையாம். ... 14

’அந்தரதுந்துபி நின்றியம்ப’ அலகிட
அந்/தர/துந்/துபி நின்/றியம்/ப
கூவிளந்தண்நிழல் கூவிளங்காய் என்னும் சீர்களைக்
கூவிளங்கனி கூவிளங்காய் என்றே கருதக்
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித் தளையாம். ... 15

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வஞ்சிப் பாவினில் பொதுச்சீர் வரலாம்
வெண்பா தன்னில் வருதலா காது
குற்றுகரம் வந்தால் ஒழியப் பொதுச்சீர்
அகவல் கலியெனும் பாக்களில் வராதே. ... 16

பூச்சீர் நிழற்சீர் அமைந்த சொற்றொடர்கள்:
(குறள் வெண்செந்துறை)
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதுகாண்பாய்
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய் ... 17

வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது ... 18

(நிலைமண்டில ஆசிரியப்பா)
இப்படிச் சொற்களை முயன்றமைத் தாலும்
இவைபோல் வந்திடும் சொற்கள் பிரிந்திட
நாலசை அமைவது அரிதெனப் புரியுமே. ... 19

*** *** ***
 

ramaNi

unread,
Oct 3, 2016, 9:00:24 AM10/3/16
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
4.90. அசைகளை அறிதல், அலகிடல் பயிற்சி

பயிற்சி 1. அசை வகை அறிதல்

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனிக்குறில், ஒற்றுடன் நேரசை யாமே
தனிநெடில், ஒற்றுடன் நேரசை யாமே
குறிலிணை, ஒற்றுடன் நிரையசை யாமே
குறில்நெடில், ஒற்றுடன் நிரையசை யாமே. 

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழுள சொற்கள் ஆறில் தேர்ந்தே
தனிக்குறில், ஒற்றுடன், தனிநெடில், ஒற்றுடன்
குறிலிணை, ஒற்றுடன், குறில்நெடில், ஒற்றுடன்
என்றே வருகிற நிரலில் எழுதுக
நேரசை நிரையசைச் சொற்களை அமைத்தே.

ஹ கல் பூ வான் கரை நிரல் குடை இறால்

*****

பயிற்சி 2. அசைத்தொடர் அலகிடல்

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனிக்குறில், ஒற்றுடன் நேரசை யாமே
தனிநெடில், ஒற்றுடன் நேரசை யாமே
குறிலிணை, ஒற்றுடன் நிரையசை யாமே
குறில்நெடில், ஒற்றுடன் நிரையசை யாமே. 

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரசை நிரையசைச் சீரல கிட்டே
கீழ்வரும் செய்யுள் அடிகளில் பயிலும்
அசையின் தொடர்களை எழுதுக அமைத்தே.

(குறள் வெண்செந்துறை)
கண்ணில் காண்பது கருத்தினில் பதிந்தே
எண்ணம் விதைத்தே இன்னலைக் கொணருமே.

*****

பயிற்சி 3. அசைத்தொடர் அலகிடல்

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனிக்குறில், ஒற்றுடன் நேரசை யாமே
தனிநெடில், ஒற்றுடன் நேரசை யாமே
குறிலிணை, ஒற்றுடன் நிரையசை யாமே
குறில்நெடில், ஒற்றுடன் நிரையசை யாமே. 

(நிலைமண்டில ஆசிரியப்பா)
நேரசை நிரையசைச் சீரல கிட்டே
கீழ்வரும் செய்யுள் அடிகளில் பயிலும்
அசையின் தொடர்களை எழுதுக அமைத்தே.

(குறள் வெண்செந்துறை)
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்தென் றாமே.

*** *** ***

5.90. பயிற்சி: ஓரசைச் சீர்

பயிற்சி 1.  நாள்-மலர் அறிதல்

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லா நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது காசு
நிரையுடன் அதுவே சேர்வது பிறப்பு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பா ஈற்றுச் சீரென வந்த
எண்பதி னைந்தாம் அசைச்சீர் கீழே
எண்பதி னைந்தில் எட்டு மட்டும்
நாள்-மலர் என்னும் வாய்பாட் டினிலே.

நாள்-மலர் அசைச்சீர் எட்டும் ஆய்ந்தே
நாள்-என வருவதை இங்ஙனம் எழுதுக:
தனிக்குறில், ஒற்றுடன், தனிநெடில், ஒற்றுடன்.
மலர்-என வருவதை இங்ஙனம் எழுதுக:
குறிலிணை, ஒற்றுடன், குறில்நெடில், ஒற்றுடன்

சொல் கொக்கு தா உறவு இசைந்து
லால் பல கு வரைவு வீடு
மெலாம் மூப்பு சிறப்பு கலம் வினை

*****

பயிற்சி 2.  காசு-பிறப்பு அறிதல்

நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தனிநேர் அசைச்சீர் நாள்-எனப் படுமே
தனிநிரை அசைச்சீர் மலர்-எனப் படுமே
தனிக்குறில் அல்லா நேரசை யுடனே
குற்றிய லுகரம் சேர்வது காசு
நிரையுடன் அதுவே சேர்வது பிறப்பு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெண்பா ஈற்றுச் சீரென வந்த
எண்பதி னைந்தாம் அசைச்சீர் கீழே
எண்பதி னைந்தில் ஏழு மட்டும்
காசு பிறப்பு வாய்பாட் டினிலே.

(இணைக்குறள் ஆசிரியப்பா)
காசு பிறப்புச் சீர்களை ஆய்ந்தே
காசென வருவதை இங்ஙனம் எழுதுக:
தனிக்குறில் ஒற்றுடன் குற்றுகரம், ... [தனிக்குறில்+உகரம் கூடாது]
தனிநெடில் குற்றுகரம்,
தனிநெடில் ஒற்றுடன் குற்றுகரம் எனவே.

பிறப்பென வருவதை இங்ஙனம் எழுதுக:
குறிலிணைக் குற்றுகரம்,
குறிலிணை ஒற்றுடன் குற்றுகரம்,
குறில்நெடில் குற்றுகரம்,
குறில்நெடில் ஒற்றுடன் குற்றுகரம் எனவே.

கலம் சிறப்பு உறவு லால் கு
வீடு தா பல கொக்கு மெலாம்
மூப்பு வினை இசைந்து சொல் வரைவு

*** *** ***

ramaNi

unread,
Nov 18, 2016, 9:24:29 AM11/18/16
to சந்தவசந்தம்
6.00 தளை
(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தளைதல் என்றால் தகைத்தல் பிணித்தல்
தளைத்தல் எனினும் கட்டுதல் ஆகும்
தளையெனும் சொல்லில் விளையும் பொருள்கள்
கட்டு விலங்கு கயிறு சிலம்பென
ஒட்டிப் பிணைத்தே இசைந்திட வைக்குமே. ... 1

பூக்களை நாரினால் கட்டித் தளைக்கப்
பூச்சரம் ஒன்றுரு வாவது போலே
சீர்களை இசைவரச் செய்யுளில் தளைக்க
சீர்களின் தொடரென அடியுரு வாகுமே. ... 2

6.01. தளையென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீரொடு சீர்சேர்த் தியற்றும் அடிகளில்
சீரிடை நின்றே சீர்களைப் பிணித்திடும்
செய்யுளின் உறுப்பே தளையெனப் படுமே.
சீர்களைத் தளைக்கும் தளையெனும் உறுப்பே
செய்யுளின் ஓசையைச் செவியுறச் செய்யுமே. ... 1

சீர்கள் இரண்டு சேரும் போது
முதலில் நிற்பது நின்றசீர் ஆகும்
எதிரில் வருவது வரும்சீர் ஆகுமே. ... 2

இடம்வலம் எழுதும் இன்றமிழ்ச் செய்யுளில்
இடப்புறம் நிற்பது நின்றசீர் ஆகும்
வலப்புறம் வருவது வரும்சீர் ஆகுமே. ... 3

’பிறவிப் பெருங்கடல்’ எனும்சீர்த் தொடரில்
’பிறவிப்’ பென்பது இடப்புறம் நின்றசீர்
’பெருங்கடல்’ என்பது வலப்புறம் வரும்சீர். ... 4

(நிலைமண்டில ஆசிரியப்பா 
தனிச்சொல்லுடன்)

சீர்க ளிரண்டு தளைப்பது காண
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே.
எனவே
நின்ற சீரின் ஈற்றசை யோடு
வருகிற சீரின் முதலசை யானது
ஒன்றியோ ஒன்றாதோ கூடி நிற்பது
தளையெனும் உறுப்பின் இலக்கண மாகுமே. ... 4

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகள் பெரிதும் சீரிடை வரினும்
தளைகள் அடிகளுக் கிடையிலும் வருவன
அடியிடைத் தளைகள் வருவது காண
நின்ற அடியின் ஈற்றுச்சீர் ஈற்றசையும்
வருகிற அடியின் முதற்சீர் முதலசையும்
ஒன்றுதல் ஒன்றாமை நோக்கப் படுமே. ... 5

6.02. தளை வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நேரும் நிரைமுன் நிரையும்
வருவது ஒன்றிய தளையெனப் படுமே
நேர்முன் நிரையும் நிரைமுன் நேரும்
மாறி வருவது ஒன்றாத் தளையாம். ... 1

தன்சீர் தனதொடு ஒன்றலும் உறழ்தலும்
என்றிரண் டாகும் இயம்பின தளையே.
---இலக்கண விளக்கம், 717

நேர்முன் நேர்வர ஒன்றுதல்:
(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

ஒன்றும் ஒன்றாத் தளைகள் குறிப்பில்
நின்ற சீரே சீர்ப்பெயர் தாங்கும்
எதிர்வரும் சீரின் முதலசை பெயர்பெறும்.

(தனிச்சொல்)
ஏனெனில் 

நேர்முன் நேரசை ஒன்றிடும் போது
நின்ற சீரது இயற்சீ ராகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது தேமா புளிமா வாகுமே

அல்லது

நின்ற சீரது மூவசை யாகில்
நின்ற சீரின் ஈற்றசை நேரென
நின்றது நான்கில் ஒருகாய்ச் சீராம்
வருவது யாதொரு சீரென் றாயினும்
வரும்சீர் முதலசை நேரசை யாகுமே

இதனால்

நேர்முன் நேரசை ஒன்றுதல் குறிக்க
மாமுன் நேரென, காய்முன் நேரென
நின்றசீர் வருமசை நோக்கிக் குறிப்பரே.
தளைவாய் பாடில் ’முன்’எனும் சொல்லுக்
கெதிர்வரும் என்றே பொருள்கொள வேண்டுமே. ... 2

’நாராய் நாராய் செங்கால் நாராய்’
(தேமா தேமா தேமா தேமா )
எனவரும் செய்யுள் அடியின் தளைகளில்
நின்றசீர் மாச்சீர் வரும்சீர் நேர்முதல்
மாமுன் நேரென ஒன்றுதல் காண்க. ... 3

’கற்றதனால் ஆய’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் காய்ச்சீர் வரும்சீர் நேர்முதல்
காய்முன் நேரென ஒன்றுதல் காண்க. ... 4

நிரைமுன் நிரைவர ஒன்றுதல்:
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் முன்நிரை யொன்றும் போது
நின்ற சீரது விளச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
விளம்முன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 5

’பழம்படு பனையின்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் விளச்சீர் வரும்சீர் நிரைமுதல்
விளம்முன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 6

நின்ற சீரது கனிச்சீ ரென்றால்
வரும்சீர் முதலசை நிரையுடன் ஒன்றுதல்
கனிமுன் நிரைவர ஒன்றுத லென்பரே. ... 7

(ஆசிரியத் தாழிசை)
’புனல்பொழிவன சுனையெல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
நின்றசீர் கனிச்சீர் வரும்சீர் நிரைமுதல்
கனிமுன் நிரையென ஒன்றுதல் காண்க. ... 8

நேர்நிரை முன்வர ஒன்றாமை:
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேர்முன் நிரைவரும் ஒன்றாமை குறிக்க
மாமுன்நிரை காய்முன்நிரை யெனும்வாய் பாடும்
நிரைமுன் நேர்வரும் ஒன்றாமை குறிக்க
விளம்முன்நேர் கனிமுன்நேர் யெனும்வாய் பாடும்
தளைகள் அறிய மிகவும் பயன்படும். ... 9

(ஆசிரியத்துறை)
’அகர முதல’ எனும்சீர்த் தொடரில்
மாமுன் நிரையெனும் ஒன்றாமையும்
’ஒருநோக்கம் பகல்செய்ய’ எனும்சீர்த் தொடரில்
காய்முன் நிரையெனும் ஒன்றாமையும் காண்க. ... 10

’மலர்மிசை ஏகினான்’ எனும்சீர்த் தொடரில்
விளம்முன் நேரெனும் ஒன்றாமையும்
’வரைமூடுவ மஞ்செல்லாம்’ எனும்சீர்த் தொடரில்
கனிமுன் நேரெனும் ஒன்றாமையும் காண்க. ... 11

*****

ramaNi

unread,
Nov 26, 2016, 6:03:31 AM11/26/16
to சந்தவசந்தம்
6.03. எழுவகைத் தளைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீர்முன் சீர்பிணைத் தெழுந்திடும் தளைகள்
சீர்வகை சார்ந்தே ஏழெனும் வகையாய்
எழுவது அறிதல் எளிதென் றாமே. ... 1

சீர்களின் வகைகள் மூன்றினில் அமையும்
ஈரசை பயிலும் இயற்சீர் ஒருவகை
மூவசை பயிலும் காய்ச்சீர் ஒருவகை
மூவசை பயிலும் கனிச்சீர் ஒருவகை.
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கு
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டே. ... 2

இயற்சீர் நான்கும் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
கலிப்பா விற்கோர் தனிச்சீர் இலையெனில்
கலிப்பா விற்கோர் தனித்தளை யுண்டே. ... 3

நின்றசீர் வரும்சீர் ஒன்றிட வரும்தளை
நான்கெனும் வகையில் அமைந்து வருமே
ஒன்றாத் தளைவகை மூன்றெனும் வகையிலே. ... 4

எழுதளைப் பெயர்கள்:

ஒன்றும் தளைகள் நால்வகைப் பெயர்களாம்
நேரொன்று நிரையொன்று ஆசிரி யத்தளை
வெண்சீர் வெண்டளை ஒன்றிய-வஞ் சித்தளை. ... 5

ஒன்றாத் தளைகள் மூவகைப் பெயர்களாம்
இயற்சீர் வெண்டளை கலித்தளை மற்றும்
ஓன்றாத வஞ்சித் தளையென் றாமே. ... 6

ஈரசைச் சீர்நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் நேரொன் றாசிரியம்
நிரையசை யொன்றுதல் நிரை யொன்றாசிரியம்.
நேர்நிரை யொன்றாமை இயற்சீர் வெண்டளை. ... 7

மூவசை பயிலும் சீர்வகை எட்டில்
காய்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நேரசை யொன்றுதல் வெண்சீர் வெண்டளை
நிரையசை யொன்றாமை கலித்தளை யாகுமே. ... 8

கனிச்சீர் நின்றே இனிவரும் சீரோடு
நிரையசை யொன்றுதல் ஒன்றிய வஞ்சித்தளை
நேரசை யொன்றாமை ஒன்றாத வஞ்சியே. ... 9

பாவும் தளையும்

தளைகளின் பெயர்களை நோக்கி யறிந்தால்
ஆசிரியப் பாவகைத் தளைகள் இரண்டும்
வெண்பா விற்குத் தளைகள் இரண்டும்
கலிப்பா விற்குத் தளையென ஒன்றும்
வஞ்சிப் பாவகைத் தளைகள் இரண்டும்
என்றே எழுவகை பிரிதல் காண்பமே. ... 10

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
ஆயிரு தளைகள் ஆசிரியப் பாவிற்கும்
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
ஆயிரு தளைகள் வெண்பா விற்கும்
கலித்தளை யொன்றே கலிப்பா விற்கும்
ஒன்றிய வஞ்சி ஒன்றாத வஞ்சி
ஆயிரு தளைகள் வஞ்சிப்பா விற்கும்
உரிய தளையென அறியப் படுமே. ... 11

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

நின்றசீர் வரும்சீர் ஒரேவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்புடைத் தளைகளாம்
நின்றசீர் வரும்சீர் வேறுவகை யாயின்
ஒன்றுதல் ஒன்றாமை சிறப்பில்லாத் தளைகளாம்
அதாவது
இயற்சீர் காய்ச்சீர் அல்லது கனிச்சீர்
நின்றதும் வருவதும் அதுவே ஆயின்
வந்திடும் தளைகள் சிறப்புடை யனவாம்
சீர்களின் வகைகள் கலந்தே வருவது
சிறப்பில்லாத் தளைகள் என்றறி வோமே. ... 12

*****
 

ramaNi

unread,
Nov 27, 2016, 9:09:41 AM11/27/16
to சந்தவசந்தம்
6.04. தளை வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மேலே கண்ட தளைவகை விவரம்
கீழே உள்ள வாய்பா டுகளில்
எளிதில் விளங்கிட நினைவிற் கொள்வமே. ... 1

மாமுன் நேர்வரின் நேரொன் றாசிரியம்
விளம்முன் நிரைவரின் நிரையொன் றாசிரியம்
மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
என்பன இயற்சீர்த் தளைவாய் பாடே. ... 2

காய்முன் நேர்வரின் வெண்சீர் வெண்டளை
காய்முன் நிரைவரின் கலித்தளை யாகுமே
கனிமுன் நிரைவரின் ஒன்றிய வஞ்சி
கனிமுன் நேர்வரின் ஒன்றாத வஞ்சி
என்பன காய்கனிச் சீர்தளை வாய்பாடே. ... 3

6.05. எழுதளைச் சான்றுகள்
நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
மாமுன் நேரென ஒன்றும் அடிகளாய்
"வெற்றி வாழி வீரம் வாழி"
"உண்மை வாழி ஊக்கம் வாழி"
எனவரும் அடிகளில் சீரிடைத் தளைகள்
நேரொன் றாசிரி யத்தளை யாமே. ... 1

வெற்/றி வா/ழி வீ/ரம் வா/ழி
உண்/மை வா/ழி ஊக்/கம் வா/ழி
தேமா தேமா தேமா தேமா

கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிதாய்
நேரசைச் சீர்களே பயிலக் காண்க. ... 2

(குறள் வெண்செந்துறை)
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.

நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாரதி விநாயகர் நான்மணி மாலையில்
விளம்முன் நிரையாய் ஒன்றும் அடியென
"மங்கல குணபதி மணக்குளக் கணபதி!"
எனவரும் அடியினில் சீரிடைத் தளைகள்
நிரையொன் றாசிரி யத்தளை யாமே. ... 3

மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்

தேமா கூவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் கருவிளம் புளிமா தேமா 
என்னும் நிரல்கள் தனித்தோ சேர்ந்தோ
மன்னும் சுழலில் நேர்நிரை யொன்றும்
ஆசிரியத் தளைகள் மட்டும் வந்தே
அகவல் ஓசை இருவகை அமைதல்
விரிவாய்ப் பின்னோர் இயலிற் காண்போம். ... 4

நேரொன் றாசிரியம் நிரையொன் றாசிரியம்
வேறொன் றிலாது இவ்விரு தளைகளே
சீரிடை அடியிடை வருமா றெழுதினால்
சொற்களை வலிந்தே கொள்வது நேர்ந்து
சொல்லும் பொருளின் ஓட்டம் தடைப்பட
இவற்றுடன் இயற்சீர் வெண்டளை விரவுதல்
அகவற் பாக்களில் மிகவும் காணலாம். ... 5

அகவற் றளைகள் இயற்சீர் வெண்டளை
அகவற் பாவினில் விரவிடும் போது
அகவற் றளைகள் அதிகம் வந்தால்
அகவல் ஓசை தகவுறக் கேட்குமே. ... 6

இருவகை அகவல் இயற்சீர் வெண்டளை
விரவும் கீழுள சங்கப் பாடல்
சீர்களை அலகிட் டுப்பெயர் நோக்கிக்
கண்டே பாடலின் சீரிடை அடியிடை 
பயிலும் தளைவகை இக்கணம் அறிவீர். ... 7

யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
--குறுந்தொகை, செம்புலப் பெனீரார், 40

இயற்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03

மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.

கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு

(நிலைமண்டில ஆசிரியப்பா)
தளைகளைக் குறளில் நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்தே வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க. ... 8

மேலுள குறட்சீர் வாய்பா டுகளின்
பேர்வகை நிரலே இயற்றளை பயிலும்
குறள்வெண் பாவென் றாதல் காண்க
சீர்களின் பெயர்களை இவ்விதம் நிரலில்
ஓரடி அமைத்தே ஓசை அறியலாம். ... 9

வெண்சீர் வெண்டளை
(குறள் வெண்பா)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிள~காய் தேமாங்காய் காசு

(குறள் வெண்செந்துறை)
வெண்சீரின் வெண்டளையே வந்ததுகாண் இக்குறளில் 
சீரிடையே அடியிடையே காய்முன்நேர் வந்திடவே. ... 10

கலித்தளை
(குறள் வெண்செந்துறை)

காய்ச்சீர்முன் நிரைவரவே கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடையே பயில்வதனை எளிதாக அறியலாமே. ... 11

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய 
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள் 
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய 
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள் 

ஒன்றிய வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 12

யோகத்தினர் உரைமறையினர் 
ஞானத்தினர் நய‍ஆகமப் 
---கி.வா.ஜ.

யோ/கத்/தினர் உரை/மறை/யினர் 
ஞா/னத்/தினர் நய/‍ஆ/கமப் 

ஒன்றாத வஞ்சித்தளை
(குறள் வெண்செந்துறை)

கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிச் சீரிடைப் பயில்வது காண்க. ... 13

மந்தாநிலம் வந்தசைப்ப...
செந்தாமரை நாண்மலர்மிசை
---யா.கா.வி.

*****

ramaNi

unread,
Nov 27, 2016, 9:13:03 AM11/27/16
to சந்தவசந்தம்
6.06. எழுதளை நிரல்களின் வாய்பாடுகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எழுதளை நிரல்களின் வாய்பா டுகளைச்
சுழல்வரச் சுருக்கமாய்க் குறிப்பிடு வோமே
எழுந்திடும் எடுத்துக் காட்டுகள் தந்தே
ஆசிரி யத்தளை அகவற் றளையெனப்
பேசப் படுவதும் நினைவிற் கொள்க.

*****

நேரொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரொன் றகவற் றளையே தொடரத்
தேமா தேமா தேமா தேமா 
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே.

நேரொன்றாசிரியத் தளை: தேமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி

*****

நிரையொன்றாசிரியத்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நிரையொன் றகவற் றளையே தொடரக்
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் 
என்னும் சீர்களின் சுழலொன் றெனவே.

நிரையொன்றாசிரியத் தளை: கருவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே.
[விசி=கட்டு]

*****

இயற்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இயற்சீர் வெண்டளை இசைந்தே தொடரக்
கீழ்வரும் நிரல்கள் தனிதனிச் சுற்றில்
பயிலும் வகையில் அடிகளில் உறுத்தலாம்:
புளிமா புளிமா புளிமா புளிமா 
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்.
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே.

இயற்சீர் வெண்டளை: புளிமா நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும்.

இயற்சீர் வெண்டளை: கூவிளம் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே.

இயற்சீர் வெண்டளை: தேமா புளிமா கருவிளம் கூவிளம் 
 (குறள் வெண்செந்துறை)
விண்ணும் நிலமும் நிகழ்த்திடும் விந்தைகள்
எண்ணில் அடங்காக் கணக்கினில் ஆகுமே.

*****

வெண்சீர் வெண்டளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெண்சீர் வெண்டளை விளங்கித் தொடரக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே.

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணோக்கின் மண்ணோக்கின் காண்கின்ற ஆச்சர்யம்
எண்ணேதும் கொள்ளாத எண்ணிக்கை யாயாமே.

வெண்சீர் வெண்டளை: கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வெளியில் மண்ணிலத்தில் காணுகின்ற விந்தைபல
எண்களிலே வந்திடாத கோடிவகை யாகிடுமே.

வெண்சீர் வெண்டளை: தேமாங்காய் கூவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்மீதும் பூமியிலும் காண்கின்ற விந்தைகளே
எண்ணேதும் சுட்டிடாத எண்ணிக்கை யாகிடுமே.

*****

கலித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கலித்தளை துள்ளிக் கலித்தே வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் 
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் 
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே.

கலித்தளை: புளிமாங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தின்கண் நிகழ்கின்ற வியப்பேபார்
விசியேதும் அடக்காத கணக்கொன்றின் விரிவாமே.

கலித்தளை: கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பினிலே நிலத்தினிலே நிகழ்ந்துவரும் வியப்புகளாம்
விசித்தலிலே அடங்கிடாத கணக்கினிலே விரிவதாமே.

கலித்தளை: புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்கண் நிலத்தினிலே நிகழ்கின்ற வியப்புகளாம்
விசியேதும் அடக்கிடாத கணக்கொன்றில் விரிவதாமே.

*****

ஒன்றிய வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றிய வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி 
கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி 
புளிமாங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே.

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலத்தின்வெளி நிகழ்ந்தேவரும் வியப்பானது
விசியேதிலும் அடங்காவரும் கணக்கொன்றதன் விரிவாகுமே.

ஒன்றிய வஞ்சித்தளை: கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்புமீதிலும் நிலவெளியிலும் தினம்நிகழ்கிற வியப்புகள்பல
விசியெதுவிலும் அடங்கிடாவரும் கணக்குதனிலே விரிந்துநிற்குமே.

ஒன்றிய வஞ்சித்தளை: புளிமாங்கனி கருவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விசும்பின்வெளி நிலவெளியிலும் நிகழ்ந்தேவரும் வியப்புகள்பல
விசியேதிலும் அடங்கிடாவரும் கணக்கொன்றினில் விரிந்துநிற்குமே.

*****

ஒன்றாத வஞ்சித்தளை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒன்றாத வஞ்சித் தளைதூங்கி வந்திடக்
கீழ்வரும் நிரல்களைத் தனித்தனி யாகவோ
ஒன்றாய்ச் சேர்த்தோ அடிகளில் அமைக்கலாம்.
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி 
கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி கூவிளங்கனி 
தேமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி 
இம்மூ வகைக்கும் சான்றுகள் கீழே.

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்ணின்வழி நேர்ந்தேவரும் ஆச்சர்யமே
எண்ணேதுமே கட்டாதுள எண்ணிக்கையில் நின்றேவரும்.

ஒன்றாத வஞ்சித்தளை: கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்வழியினில் மண்வழியினில் நேர்ந்திடுகிற ஆச்சரியமே
எண்வழியினில் கட்டவியலா எண்ணதுவினில் நின்றுவருமே.

ஒன்றாத வஞ்சித்தளை: தேமாங்கனி கூவிளங்கனி நிரல்
 (குறள் வெண்செந்துறை)
விண்ணின்வழி மண்வழியினில் நேர்ந்தேவரும் ஆச்சரியமே
எண்ணேதுமே கட்டவியலா எண்ணிக்கையில் நின்றுவருமே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
விண்ணும் மண்ணும் நிகழ்த்தும் விந்தையைப்
எண்ணில் ஏழாம் தளைகளில் படித்தே
ஒவ்வொரு வகையிலும் ஒலிவே றாதலை
செவ்விதின் உணர்க விரிவாய்ப் பின்னே.

*** *** ***
 

ramaNi

unread,
Dec 4, 2016, 8:44:34 PM12/4/16
to சந்தவசந்தம்
7.00. அடி
[வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடியெனும் சொல்லின் அர்த்தமென் றாகும்
அடிக்கால் பாதம் ஆதி என்பன
அடியெனும் உறுப்பில் ஆகி வருமே. ... 1

[அடிக்கால்=காலின் அடிப்பாகம்]

செய்யுள் எழுதல் சீர்களில் என்றால்
செய்யுள் பேசுதல் ஓசையில் என்றால்
செய்யுள் உருத்தல் பாவினில் என்றால்
செய்யுள் புரிதல் பொருளினில் என்றால்
செய்யுள் நடத்தல் அடிகளில் எனலாம்
செய்யுள் அடிகளில் பாவகை தெரியுமே. ... 2

சீர்களும் தளைகளும் பாவகைப் பெயர்பெற
சீர்களும் தளைகளும் அடிகளில் தொடர
செய்யுளின் ஆதி வடிவே அடியென. ... 3

[பாவகை = அகவல், வெண்பா, கலி, வஞ்சிப் பாக்கள்]

7.01. அடியென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு
முடிவது அடியென இலக்கணம் கூறும்
இதையே ஒன்று முதலிய தளைகள்
அடுத்து முடிவது அடியெனச் சொல்வரே. ... 1

முடிவது என்பது பொருள்குறித் தல்ல
முடிவது அடியில் சீர்தளைத் தொடுப்பே
முடிவது அடியெனில் தளையும் ஓசையும்
வடிவுறும் பொருளும் அடிகளில் தொடருமே. ... 2

(நிலைமண்டில ஆசிரியப்பா தனிச்சொல்லுடன்)

சீர்-தளை அடிகளில் எண்ணிப் பார்த்தால்
சீர்களின் எண்ணில் ஒன்று குறைவெனத்
சீரிடைத் தளைகள் மொத்தம் வருமே.
எனினும்
சீர்களின் இடையிலும் அடிகளின் இடையிலும்
பாக்களில் தளைகள் பெரிதும் வருவதால்
ஈற்றுச் சீரின் தளையும் சேர்த்திட
சீர்-தளை எண்ணே அடியினிற் சமமே.
இங்ஙனம்
பாவின் மொத்தச் சீர்களின் கணக்கில்
பாவின் மொத்தத் தளைகளின் கணக்கே
ஒன்று குறைவெனக் கண்டு கொள்க. ... 3

(குறள் வெண்பா)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

(நேரிசை ஆசிரியப்பா)
மேல்வரும் குறட்பாச் சீர்களை எண்ணிட
1அகர 2முதல 3எழுத்தெல்லாம் 4ஆதி
5பகவன் 6முதற்றே 7உலகு.
மொத்தம் ஏழு வருவது காண்க. ... 4

மேல்வரும் குறட்பாத் தளைகளை எண்ணிட
அகர1 முதல2 எழுத்தெல்லாம்3 ஆதி
4பகவன் 5முதற்றே 6உலகு.
மொத்தம் ஆறே வருவது காண்க. ... 5

7.02. அடி வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிகளின் அமைப்பை நிர்ணயம் செய்யும் 
மரபுகள் இரண்டு வழிகள் இரண்டு:
சீர்கள் எண்ணுதல் எழுத்துகள் எண்ணுதல்
சீர்கள் எண்ணுதல் சீர்வகை அடியிலே
எழுத்துகள் எண்ணுதல் கட்டளை அடியிலே
வழக்கினில் பெரிதும் சீர்வகை அடிகளே. ... 1

கட்டளை அடிகள்
கட்டளைக் கலித்துறை கலிப்பா வினமாம்
கட்டளைக் கலித்துறை அடியொன் றினிலே
நேரில் தொடங்கின் பதினா றெழுத்தாம்
நிரையில் தொடங்கின் பதினே ழெழுத்தே. ... 2

எண்ணப் படுகிற எழுத்துகள் வகையில்
ஒருமாத் திரையொலி உயிர்மெய் உயிருமே.
ஒற்றெழுத் துகளும் ஆய்த வெழுத்தும்
குற்றிய லுகரமும் எண்ணப் படாதெனின்
முற்றிய லுகரம் எண்ணப் பட்டுக்
கட்டளை அடியின் அளவினைச் சொல்லுமே. ... 3
--[தொல்.சூத்.8.42]

தொல்காப் பியம்தரும் கட்டளை அடிகளில்
ஒல்கும் எழுத்துகள் ஓர்க்கும் போது
குறளடி குறைந்தது நான்கெழுத் துகளில்
குறளடி உச்சம் ஆறெழுத் துகளாம்
சிந்தடி குறைந்தது ஏழெழுத் துகளாம்
சிந்தடி உச்சம் ஒன்பதாம் எழுத்துகள்
அளவடி குறைந்தது பத்தெழுத் துகளாம்
அளவடி உச்சம் பதினான் கெழுத்துகள்
நெடிலடி குறைந்தது பதினைந் தெழுத்துகள்
நெடிலடி உச்சம் பதினே ழெழுத்துகள்
கழிநெடில் பதினெட் டுமுதல் இருபதே. ... 4

எழுத்தில் இயங்கும் கட்டளை அடிக்கு
வி.எஸ். ராஜம் புத்தகம்* தருகிற ... [பக்.142]
உரைகளில் வருகிற சான்றுகள் கீழே. ... 5

’பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து’
பே-பே சா-சா என்னும் நான்கு
குற்றிய லிகரம் கணக்கில் வராத
எழுத்துகள் வருவதால் குறளடி யாமே. ... 6

’நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய்’
நீ-வா கொ-ட நீ-ல மூ-வா
எட்டெழுத் துவரும் சிந்தடி யாமே. ... 7

’நன்மணங் கமழும் பன்னல் லூர’
ந-ம-ண க-ம-ழு ப-ன-லூ-ர என்னும்
பத்தெழுத் துவரும் நேரடி யாமே. ... [நேரடி=அளவடி] ... 8

’அணிநகை நசை‍இய அரியமர் சிலம்பின்’
அ-ணி-ந-கை ந-சை-இ-ய அ-ரி-ய-ம சி-ல-பி
பதினைந் எழுத்தில் நெடிலடி யாமே. ... 9

’நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர்’
ந-ளி-மு-ழ-வு மு-ழ-கி-ய அ-ணி-நி-ல-வு ம-ணி-ந-க
பதினெட் டெழுத்தில் கழிநெடி லடியாம். ... 10

[*Ref: 'A Reference Grammar of Classical Tamil Poetry' by V.S.Rajam]

சீர்வகை அடிகள்
சீர்வகை அடிகள் மொத்தம் ஐந்து.
குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடில் எனவரும் வகைகள் ஐந்தே. ... 11

சீர்கள் இரண்டில் முடிவது குறளடி
சீர்கள் மூன்றில் முடிவது  சிந்தடி
சீர்கள் நான்கில் முடிவது  அளவடி
சீர்கள் ஐந்தில் முடிவது  நெடிலடி
சீர்கள் ஆறும் மேலும் கழிநெடில்
சீர்கள் நான்கில் முடியும்  அளவடி
அடியின் இயற்கை அளவெனச் சொல்வரே. ... 12

அடிகளின் பெயரெலாம் காரணப் பெயர்களே
வடிவினில் தீரக் குள்ளனாம் ’குறளன்’
அவனின் நெடியான் ’சிந்தன்’ நெடியான்
அவனினும் ’அளவிற் பட்டான்’ தீர
நெடியான் ’கழிய நெடியான்’ என்றே
வடிவம் சுட்டிய பெயர்கள் வழக்கிலே
முன்னொரு காலம் மன்னிய தாலே
வடிவம் சுட்டி அடிப்பெயர் இட்டனர். ... 13

’நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ ... [தொல்.சூத்.31]
தளையும் தொடையும் நேரடி குறித்தே ... [நேரடி=அளவடி]
’அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’ ... [தொல்.சூத்.34]

அளவடி தொட்டே பிறவகை அடிகள் 
அளவுகள் குறித்துப் பெயர்கள் பெறுவன.
அளவடி தொட்டே தொடைகளின் பெயர்களும். 
தளைகள் குறிக்கவும் பொதுவில் அளவடி.
அளவடி இயல்வன மூவகைப் பாக்கள்
அகவல் வெண்பா கலிப்பா எனவே.
குறளடி சிந்தடி வஞ்சியில் வருமே. ... 14

சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.
கழிநெடி லடிகள் பொதுவில் வரிகள்
ஒன்றின் மிக்காய் எழுதப் படுமே. ... 15

*****

ramaNi

unread,
Jan 15, 2017, 10:48:24 PM1/15/17
to சந்தவசந்தம்
7.03. குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒருதளை யடுத்திரு சீரில் முடிவது
குறளடி யென்னும் குறுவடி யாமே.
அடிவகை அனைத்திலும் குறுமை யுடையதாய்க்
கடிதின் ஒலிக்கக் குறளடி யெனவே. ... 1.

வஞ்சிப் பாவினுக் குறியது குறளடி
வஞ்சியடி யல்லாது வரும்குற ளடிக்கு
நான்குமுதல் ஆறுவரை எழுத்தெனச் சொல்லுவர்
தொல்காப் பியர்தம் செய்யுள் இயலிலே.  ... 2.
[தொல்.சூத்.35]

கட்டளைக் குறளடிச் சான்று
கட்டளைக் குறளடிச் சான்றெனப் பார்க்க
ஒவ்வொரு அடியிலும் ஐந்தெழுத் துவரும்
வஞ்சித் துறையடி கீழே வருமே. ... 3.

பேரறி வன்னான்
சார விருந்த
வூரினு மில்லென்
றார விகழ்ந்தே
---தொன்னூல் விளக்கம், 242

இவ்விதம் இன்னொரு சான்று பகர
ஒவ்வொரு அடியிலும் ஆறெழுத் துவரும்
செவ்விய குறளடி சூளா மணிதரும். ... 4.

நிரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
---சூளாமணி 738

குறளடிப் பொருளை ஆறெழுத் துவரும்
குறளடி களிலே கீழுள வாறு
குறையா தெழுத நிறைவாய் விளங்குமே. ... 5.

கரிய கவசம்
கருமை வண்டுகள்
நிரைந்து மொய்த்திடும்
நறுமை மாலையாய் ... [நறுமை=வாசனை]

மேல்வரும் சான்றுகள் சீர்வகை நோக்கிலும்
ஏலுதல் காண்க சீர்கள் இரண்டில் 
இருவகை நோக்கிலும் குறளடி யெனவே. ... 6.
[ஏலுதல்=பொருந்துதல்]

சீர்வகைக் குறளடிச் சான்று
எழுத்துகள் மிகினும் சீர்கள் இரண்டால்
குறளடி யெனவரும் புகழ்மிகு சான்று
தருவது யா.க. விருத்தி கீழே. ... 7.

சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
---யாப்பருங்கல விருத்தி, பக்.64

இவ்வடிகள் பொருள்நோக்கின்:
சுறாமீன் ஆறெல்லாம்
இறால்மீன் இல்நிறையும்
மீன்திரியும் அகழிகளில்
தேன்மலர்கள் சோலையிலே.

7.04. குறளடி முயற்சி: கட்டளைக் குறளடி
(இணைக்குறள் ஆசிரியப்பா)

நாமும் குறளடி முயன்றிடு வோமா?
நான்குமுதல் ஏழுவரை
எழுத்துகள் வருகிற
கட்டளைக் குறளடி புனைவோம் முதலிலே. ... 1.

கந்தன் சிந்தை வந்து விந்தை
என்னும் சொல்வகை அடியெது கைவர
நாமம் நம்முளம் ஏற்றுதல் செய்தல்
என்னும் சொல்வகை அயற்சீர் அமைய
கந்தனை எண்ணி
வந்தனை செய்து 
விந்தைகள் புரிய வேண்டிடு வோமே. ... 2.

நான்கு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தன் நாமம்
சிந்தை ஏற்றில்
வந்தே நம்முள்
விந்தை செய்வான். ... 3.
[சீர்கள்: எல்லாம் தேமா; தளைகள்: எல்லாம் நேரொன்றாசிரியம்; ஓசை: ஏந்திசை யகவல்]

ஐந்து எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமம்
சிந்தையில் ஏற்ற
வந்தே நம்முளம்
விந்தைசெய் வானே! ... 4.
[சீர்கள்: கூவிளம் தேமா; தளைகள்: இயற்சீர் வெண்டளை நேரொன்றாசிரியம்;
ஓசை: ஒழுகிசை யகவல்]

ஆறு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் நாமமே
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் மனத்தில்
விந்தைகள் செய்வானே! ... 5.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

கந்தனின் நாமத்தைச்
சிந்தையில் ஏற்றினால்
வந்துநம் உள்ளத்தில்
விந்தைகள் செய்வானே! ... 6.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: எல்லாம் வெண்டளை; ஓசை: ஒழுகிசைச் செப்பல்]

ஏழு எழுத்துக் குறளடி: (வஞ்சித் துறை)
கந்தனின் திருநாமம்
சிந்தையில் ஏற்றினாலே
வந்துநம் மனத்திலே
விந்தைகள் செய்திடுவான். ... 7.
[சீர்கள்: பெரிதும் கூவிளம்; தளைகள்: பெரிதும் வெண்டளை, ஆசிரியம் விரவல்; ஓசை: ஒழுகிசை யகவல்]

7.05. குறளடி முயற்சி: சீர்வகைக் குறளடி
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கட்டளைக் குறளடி முயன்ற பின்னர்
சீர்வகைக் குறளடி முயலுதல் எளிது
சீர்கள் இரண்டில் தளையொலி தகைக்கவே. ... 1.

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்ய ... 2.

வஞ்சிப் பாவில் தனிச்சொல் முன்வரும்
கொஞ்சப் பகுதியிது; மீதம் உள்ளதைத்
தக்க தனிச்சொல் சுரிதகம் இவற்றின்
பக்க பலம்சேர்த்துக் கீழே காண்போம். ... 3.

விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ? ... 4.

இதுவும் வஞ்சிப் பாவின் பகுதி
இனிவரும் தனிச்சொல் சுரிதகம் கொண்டு
இதனின் எதிர்மறை கீழே முடிப்போம். ... 5.

*****

(குறளடி வஞ்சிப்பா)

பலபலவென விடிந்தபோது
சலசலக்கும் நதியினிலே
கலகலத்திட நீராடி
சளசளவெனக் குருவிகத்தப்
பளபளத்திடும் நீறணிந்து
மளமளவென்று ஜபம்செய்யக்
கரையேறினால்
தலையில் காக்கை எச்சம் இட்டிட
நிலைதடு மாறி நின்றார் துறவி! ... 1

விண்ணதிர்ந்திட மண்ணதிர்ந்திட
பண்ணிசைத்திடும் யானைமந்தை
உண்ணவரும் சேனையையெனக்
கண்ணெதிரினில் காட்சிதந்தால்
விண்ணவரும் வெருண்டிடாரோ?
ஆனால்
குழந்தை கொஞ்சமும் அஞ்சிட வில்லை
குழந்தை பார்த்தது காணொளி யன்றோ? ... 2

*****
 

ramaNi

unread,
Apr 27, 2017, 11:51:35 PM4/27/17
to santhav...@googlegroups.com
இடைப்பட்ட விட்டுப்போன இயல்கள் என் வலைப்பூவில்:

கவிதையில் யாப்பு
பகுதி 2. செய்யுளியல்

10.00. பாவின் அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

உறுப்பியல் பகுதியில் உறுப்புக ளாக
எழுத்தசை சீர்தளை அடிதொடை என்னும்
அறுவகை உறுப்புகள் எங்ஙனம் செய்யுளில்
பயின்று வருமெனும் விளக்கம் கண்டபின்
செய்யுள் இயலாம் இந்தப் பகுதியில்
பாவடி யோசை பாவகை பாவினம்
யாவையும் விளக்கிச் சொல்வோம் இனிதே. ... 1

10.01. பாவென்பது
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனும் சொல்லின் பலவிதப் பொருள்கள்
பாவினை விளக்கப் புரிந்து கொண்டால்
பாவெனச் சொல்வது யாதென விளங்குமே. ... 1

பாவெனில் முதலில் வருவது நெசவு
பாவெனில் பஞ்சிநூல் என்றும் பொருளே
பாவெனும் சொல்லின் ஓர்பொருள் பரப்பு
பாவுதல் என்பது பரவுதல் படர்தல்
பாத்தல் என்றால் பகுத்தல் வகுத்தலே. ... 2

இத்தனை பொருள்களும் நெசவினில் அடக்கம்
நெய்வது நெசவு செய்வது செய்யுள்
செய்யுளின் அடிப்படை உறுப்பே பாவாம். ... 3

(குறள் வெண்செந்துறை)
ஆடை என்பது நெய்யப் படுவது
செய்யுள் என்பது செய்யப் படுவது. ... 4

ஆடையில் பலநிற நூல்கள் பாவுதல் போலச்
செய்யுளில் பலவிதப் பாக்கள் பாவுதல் உண்டு. ... 5

ஆடையில் ஒருநிறம் மட்டுமே வருவது போலச்
செய்யுளில் ஒருவகைப் பாவே வருவதும் உண்டு. ... 6

ஆடையின் ஓசை வண்ணம் என்றால் ... [ஓசை=கீர்த்தி]
செய்யுளின் வண்ணம் ஓசை எனலாம். ... 7
[வண்ணம்=தாளம்]

நெய்பவர் எண்ணம் நிறங்களில் பேசும்
செய்பவர் எண்ணம் ஓசையில் பேசும். ... 8

நெய்பவர் ஆடையில் நூல்கள் இழையும்
செய்பவர் செய்யுளில் தொடையும் தளையும். ... 9

ஆடையின் வனப்பு நூல்களின் நிறங்களில்
செய்யுளின் வனப்பு தளைதரும் ஓசையில். ... 10

அந்நூல் பாவி நடத்தலின் ஆடை
’அத்தொடை பாவி நடத்தலிற் பாவே.’  ... 11
--[இலக்.வி.711]

’அறம் பொருள் இன்பம் வீடு
இவற்றைப் பாவி நடத்தலின் பாவென்பது.’ 
--[யாப்பருங்கலம் உரை]

பாவும் நெசவும் பிணைந்தது போல
நூலும் செய்யுளும் பிணைந்தது காணீர். ... 12

நூற்றல் என்றால் நூலிழை ஆக்குதல்
நூற்றல்* என்பதே செய்யுள் இயற்றலும். ... 13

[*spinning a story என்று ஆங்கிலத்தில் சொல்வது
செய்யுளுக்கும் பொருந்தும். இவ்வாறு நூற்றுச் 
செய்யப்படுவதால்தான் ஒரு புத்தகத்தை 
நூல் எனச் சொல்கிறோம்.]

ஆடையின் சிறப்பு நூல்களால் இயல்வது
பாவின் சிறப்பு சீர்களால் இயல்வது. ... 14

ஆடையின் சிறப்பில் நூல்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 15

பாவின் சிறப்பில் சீர்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... 16
[வண்ணம்=தாளம்]

ஆடையின் அழகு அணிந்திட வருமே
பாவின் அழகு பாடிட வருமே. ... 17

10.02. பாவென்பது சீர், தளை, ஓசை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவெனில் முதலில் சீரினைக் குறிக்கும்.
பாடலைக் குறிப்ப தாகு பெயரால்
பாடலை இயற்றும் ஊடகம் செய்யுளே. ... 1

சீரெனில் பற்பல பொருள்வகை யாவதில்
சீரெனில் பாட்டும் தாளமும் அடங்கும்
சீரைப் பொறுத்தே பாவகை அதுபோல்
பாவைப் பொறுத்தே சீர்வகை யாமே. ... 2

10.03. பாவும் சீரும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் உட்பொருள் சீரே என்பதால்
பாவகை யாமே சீரின் பெயரே
பாவின் பெயரே சீர்வகை யாகுமே 
பாவின் வகைகள் நால்வகை யாகும்
’ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென’. ... 1 
--[தொல்.செய்.104]

மாச்சீர் விளச்சீர் ஆசிரிய வுரிச்சீர்
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
என்றிவ் வாறு பெயர்கள் பெற்று
நான்கில் மூன்று பாவகை சுட்டுமே. ... 2

[தேமா புளிமா கருவிளம் கூவிளம்;
மாங்காய் இரண்டு விளங்காய் இரண்டு;
மாங்கனி இரண்டு விளங்கனி இரண்டு]

10.04. பாவும் தளையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீர்களைப் போலவே பாவகை சுட்டலில்
சீரினும் மேலாய்ச் சீர்களால் இயலும்
தளைகள் காட்டிடும் பாவகை நான்கே. ... 1

பாவகை பெயர்கொளும் தளைகள் ஏழில்
மாமுன் நேரெனும் நேரொன் றாசிரியம் ... [நானும் நீயும்]
விளமுன் நிரையெனும் நிரையொன் றாசிரியம் .. [அவனும் அவளும்]
ஆகிய தளைகள் ஆசிரியப் பாவிலே. ... 2

மாமுன் நிரையும் விளம்முன் நேரும் ... [நானும் அவளும், ~அவளும் நானும்]
பயில வந்திடும் இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை ... [வருவேனா நானும்]
இவ்விரு தளைகளும் வெண்பா வகையின. ... 3

கலிப்பா வுக்கெனத் தனிச்சீர் இல்லை
காய்முன் நிரைவரும் கலித்தளை என்பது ... [வருவாளா அவளும்]
கலிப்பா வகைக்கு உரிய தளையே. ... 4

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியும் ... [அவளாவது வருவாள்]
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியும் ... [அவளாவது செல்வாள்]
வஞ்சிப்பா வகைக்கு உரிய தளைகளே. ... 5

10.05. பாவும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்.
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்.
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்.
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்குமே. ... 1

அகவல் செப்பல் துள்ளல் தூங்கல்
ஓசையொவ் வொன்றும் மூவகை யாமே
ஓசையின் வகைகள் பாவுடன் அறிவோம்
தளைகள் தட்டினால் ஒலிசீர் கெட்டு
பாவரும் செய்யுள் உரைநடை போலாம். ... 2

10.06. பாவகையும் இனமும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தொடையால் அடியால் இயற்றும் செய்யுள்
பாவே பாவினம் எனவிரண் டாகும்
அறம் பொருள் இன்பம் வீடெனும்
இவற்றைப் பாவி நடத்தலால் பாவாம்
பாவகை யோடே ஒத்த இனமாய்
ஒருபுடை யாக வருவது பாவினம். ... 1

[புடை=முறை, ஒழுங்கு]

10.07. பாவின் வகைகள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவின் வகைகள் நான்கென் றமையும்
வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சி
ஆசிரி யப்பா அகவற் பாவே. ... 1

நால்வகைப் பாவும் இருவகை அடங்கும்
ஆசிரி யப்பா வெண்பா என்றே
அகவல் நடைபோல் அமைவது வஞ்சி
வெண்பா நடையைப் போன்றது கலிப்பா. ... 2

மருட்பா என்பது ஐந்தாம் வகையாம்.
வெண்பா முதலாய் அகவல் இறுதியில்
கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.]
பாவகை குறித்த அடிகளால் அமையுமே. ... 3

10.08. பாவின் இனங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாவகை நான்கிலும் மூவகை யினமாம்
பாவகை இலக்கணம் முழுமை யின்றிப்
பாவகை ஓசையை ஒட்டி வருவது
பாவகை யதனின் பாவின மாமே
பாவினம் குறித்த அடிகளால் அமையுமே. ... 1

ஒவ்வொரு பாவகை யோடுறும் மூவினம்
’தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.] ... 2

பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும்
வெண்டா ழிசையும் வெண்டுறை யுடனே
வெளிவிருத் தமெனும் மூன்றாம் இனமாய்
வெண்பா வினங்கள் பெயர்கள் பெறுமே. ... 3

ஆசிரியத் தாழிசை ஆசிரி யத்துறை
ஆசிரிய விருத்தம் என்றமூ வினமாய்
அகவற் பாவினம் பெயர்கள் பெறுமே. ... 4

கலித்தா ழிசையும் கலித் துறையோடு
கலிவிருத் தமென்றே கலிப்பா மூவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 5

வஞ்சித் தாழிசை வஞ்சித் துறையும்
வஞ்சி விருத்தமும் வஞ்சிப் பாவினம்
ஒலிக்கும் பெயர்கள் பெற்று வருமே. ... 6

தாழம் என்பது தாழ்ந்த ஓசை
தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால்
ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை. ... 7

தத்தம் பாவிற்குத் துறைபோல் நெறியுடன்
ஒத்து நடப்பது துறையெனும் பாவினம்.
தத்தம் பாவெனும் ஒழுங்கில் அடியில்
ஒத்து புராணம் முதலிய விருத்தம்
உரைப்பது விருத்தம் எனும்பா வினமே. ... 8

10.09. பாவகை அடியும் ஓசையும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

பாடல் ஒன்றைப் படிக்கும் போது
கண்ணில் தெரிவது பாவின் அடிகள்
காதில் கேட்பது பாவின் ஓசை. ... 1

பாவகை இலக்கணம் பயிலும் முன்னர்
பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும்
முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டுமே. ... 2

யாப்பின் வழக்கில் குறளெனில் இரண்டு
சிந்தெனில் மூன்று அளவெனில் நான்கு
நெடிலெனில் ஐந்து கழிநெடில்
ஐந்தின் அதிகம் எனும்பொரு ளாமே. ... 3

குறளடி சிந்தடி அளவடி நெடிலடி 
கழிநெடி லடியெனும் பேரில் முறையே
இரண்டும் மூன்றும் நான்கும் ஐந்தும் 
ஆறும் மேலும் சீர்கள் பெற்று
அடிகளின் வகைகள் ஐந்தில் அமையுமே. ... 4

பாவடி பற்றிய காரிகை நூற்பா
வெண்பா அகவல் கலிப்பா அளவடி
வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி.
--[யா.கா.21]

வெண்பா நாற்சீர் அளவடி கொளுமே
அகவல் நாற்சீர் அளவடி கொளுமே
கலிப்பா நாற்சீர் அளவடி கொளுமே
வஞ்சிப் பாவெனில் இருசீர்க் குறளடி
முச்சீர்ச் சிந்தடி இரண்டும் கொளுமே.
பாவகை யடிகள் பொதுவில் இவையே
பாவகை பொறுத்து வேற்றடி விரவுமே. ... 5

’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும்
’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும்
’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும்
’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும்
ஓசைகள் கூறிக் காரிகை விளக்குமே. ... 6

தளைகள் மூலமே ஓசைகள் அமையும்
ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்
தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... 7

*****


ramaNi

unread,
May 4, 2017, 12:04:44 AM5/4/17
to சந்தவசந்தம்
11.00 வெண்பா
(வெண்பா)
(வெறும்பா விரவியது)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வேறேதும் வண்ணம் விரவாத வெண்மையே
மாறாது நிற்பதெனும் மாண்பாகும் - வேறு
தளைகளுடன் சீர்கள் தகையாத தூய்மை
வளமாகும் வெண்பா வனப்பு. ... 1

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்மையே இன்னோர்பேர் வெள்ளைக்கென் றாவதுபோல் 
வெண்பாவை வெள்ளைப்பா வென்பரே - ஒண்மைமிகு
வெண்பாவை ஒண்பா வெனவும் அழைப்பரே
உண்மையாம் அந்த வுயர்வு! ... 2

[ஒண்மை=இயற்கை அழகு, ஒழுங்கு, அறிவு;]

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
வெண்பா விலக்கணம் மீறமுடி யாததால்
வெண்பாவோர் வன்பா வெனப்படும் - ஒண்ணா
விலக்கும் அயற்சீரால் வேற்றளையால் வெண்பா
புலவர்கள் அஞ்சும் புலி. ... 3

ஔவை சொன்னது:
காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசுமுலா விற்பெதும் பைப்புலி - ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பா புலி.
--தனிப்பாடல்

பொருள்
உலகில் பிள்ளைக்கவிப் புலவர்க்கு அம்புலிப் பருவம் பாடுவது புலியாம் (அரிய செயல்); 
சிறப்பாகப் பேசப்படும் உலாப் பாடும் புலவர்க்கு பெதும்பைப் பருவம் பாடுவது புலியாம்;
ஆசு கவியோர்க்கு (நினைத்தவுடன் பாடும் கவியோர்க்கு) வண்ணப் பாடல் புலியாம்;
மற்றெல்லாப் பாவலர்க்கும் வெண்பா பாடுதல் புலியாம் (முயற்சி மிக்க செயலாகும்).

கி.வா.ஜ. சொன்னது:
வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
--ஔவையார் மேற்கோள்:’கவி பாடலாம்’, பக்.69

விளக்கம்:
வெண்பா வகைப் பாடலை இருமுறை கற்பித்தும் கல்லானையும்;
வெள்ளிய ஓலையில் கண்ணுக்குத் தெரியுமாறு கையால் எழுதத் தெரியாதவனையும்;
பெற்ற தாய் பாவஞ் செய்திருக்க வேண்டும்; அவள் பெற்றது பிறர் அவளை ஏளனம் செய்வதற்கே;
பேயே அவர்களை முக்காலும் தாக்குவாயாக, என்னை ஏன் தாக்குகிறாய்?

பாடல் பின்னுள்ள கதை:

*****

11.01 வெண்பாவின் பொது இலக்கணம்
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

இயற்சீராம் நான்குடன் வெண்சீராம் நான்கும்
இயற்சீராம் வெண்டளையும் வெண்சீராம் வெண்டளையும்
ஈற்றடி சிந்தடியாய் ஏனை அளவடியாய்
ஏற்றது செப்பல் ஒலியென வாகிப்
பயின்று வருகிற பாவகை வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீர் இறுதியாம்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

வெண்பா இலக்கண விளக்கம்
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வெண்பாவின் சீர்களாய் மாவிளம் காய்ச்சீராம்
வெண்பாவில் நேர்நிரை மாறிவரும் வெண்டளையும்
வெண்பாவில் காய்முன்நேர் வெண்சீரின் வெண்டளையும்
வெண்பாவின் ஓசையென மூவகைச் செப்பலோசை
வெண்பாவின் ஈற்றடி மூன்றுசீர்ச் சிந்தடியாம் 
வெண்பாவின் மற்றவடி நாற்சீர் அளவடியாம்
வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர் நால்வகை
நாள்-மலர் காசு பிறப்பு. ... 2

ஈற்றடி
(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

ஈற்றடி பேசுமே வெண்பாவின் தாற்பரியம்
ஈற்றடி பேசுமே வெண்பா அலங்காரம்
ஈற்றடி பேசுமே வெண்பாவின் சித்திரம்
ஈற்றடியே வெண்பா உயிர். ... 3

ஈற்றுச்சீர்
(ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இற்றிடும் சீரசை காசு பிறப்பெனில்
குற்றுகரம் வந்து முடிதல் அவசியம் 
மற்ற உகரம் அரிது. ... 4
[இறுதல்=முடிதல்]

வராதன
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் நான்கு கனிச்சீரும் வாராது
வெண்பாவில் வேறு தளைகள் வராது
அளவடி சிந்தடியே வேறடிகள் கூடா
உளத்தினில் வைப்பீர் உகந்து. ... 5

பொழிப்பு மோனை
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

முதற்சீர் வருமெழுத்து மூன்றாம்சீர் ஒன்றும்
விதம்பொழிப்பு மோனையாய் வெண்பா அடிதோறும்
நிற்பதால் ஓசை நிறையும் செவிகளில்
அற்பம் ஒரூஉவாம் மோனை வருவது
சிற்சில பாக்களி லே. ... 6

பொழிப்பு எதுகை
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

பொருளின் செறிவில் பொழிப்புமோ னையாய்
வருதலிலை யென்றால் ஒருவெதுகை ஈடாக
அந்த அடிகளில் வந்தபொழிப் பாம்-எதுகை
உந்தி யமைவதும் உண்டு. ... 6

வகையுளி
(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)

வகையுளி யென்று வகுபடும் சொற்கள்
வகையுளி பாவில் வருதல் பொதுவில்
தகவுற இன்றித் தடுக்கும் பொருளோட்டம்
சிற்சில போது சிறக்கும் வகையுளி 
முற்றப் பொருளின் நுகம். ... 7
[நுகம்=நுகத்தடி]

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வகையுளி ஈற்றடியில் வந்துநின்று வண்ணம்
தகவுற நிற்கத் தழைக்கும் குறளாம்
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... 8

சான்று
(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
மேற்சொன்ன அத்தனை வெண்பா நலன்களும்
மேற்கொண்ட வெண்பா வினி. ... 9

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

அலகிடல்: சீர்கள்
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் தேமா
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு

தளைகள்
இவெ இவெ இவெ வெவெ
வெவெ இவெ வெவெ இவெ
வெவெ வெவெ வெவெ இவெ
வெவெ இவெ

அடிகள்
அளவடி அளவடி அளவடி சிந்தடி

மோனை
பொழிப்பு மோனை நான்கு அடிகளிலும்

எதுகை
இருவிகற்ப அடியெதுகை

வகையுளி
ஏதும் எங்கும் இல்லை

இதர சான்றுகள்
(மேலுள்ளது போல அலகிட்டு அறிக)

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நமக்குத் தொழில்கவிதை; நாட்டுக் குழைத்தல்
இமைப்போதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.
--பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 25

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சிவுயிர் வாழ்தல் அறியாமை- தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.
--பாரதியார், மஹாசக்தி வெண்பா

*****
 

ramaNi

unread,
May 10, 2017, 8:48:11 AM5/10/17
to சந்தவசந்தம்
11.02 வெண்பாவின் சீர்
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
அகவற்சீர் நால்வகை யாகும் இயற்சீர்
தகவுடன் வெண்பா வுரிச்சீர் எனப்படும்
காய்ச்சீர்கள் நால்வகையும் காணலாம் வெண்பாவில்
நால்வகை ஒன்றில் அசைச்சீராம் ஈற்றடியில்
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

தேமா புளிமா கருவிளம் கூவிளமென்
றேமாப் பெயர்-இயற்சீர் ஈரசையாம் நான்குடன்
ஈரசை யோடொரு நேரசை சேரும்
இருவகைக் காய்ச்சீர்கள் நான்கென்று மொத்தமாய்
எண்வகைச் சீர்களும் வந்தமரும் வெண்பாவே
ஒண்பாவாய் நிற்கும் ஒளிர்ந்து. ... 2

(ஒருவிகற்பக் குறள்வெண்பா)
கனிச்சீர்கள் நான்கையும் காணாவெண் பாவென்(று)
அனிச்ச மலராய் அறி. ... 3

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
காளமே கப்புலவர் பாடியவிப் பாடலில்
ஆள்கனிச் சீரோ முதலடிச் சீர்மூன்றில்?
தாளம் தவறா? தளைதட்டல் உள்ளதா?
வாளைமீன் போலோர் வழுக்கு! ... 4

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

நாத(ர்)முடி என்றால் இடையின வொற்றாம்-இர்
யாதொன்றும் கொள்ளா(து) அலகெனவே - நாதமுடி;
தாளம் தவறாத் தளைதட்டா வெண்பாவாம்
காளமேகர் வெண்பாக் கவி. ... 5

11.03 வெண்பாவில் ’விளாங்காய்ச்சீர்’

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நிரைநடு வாய்வரும் காய்ச்சீர் இரண்டு
கருவிளங் கூவிளங் காய்ச்சீர் எனவே
நிரையிற் குறிலிணை, ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிற ழாது
நிரையிற் குறில்நெடில், ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிறழ் வாமென
அன்றுநம் முன்னோர் அறிந்துவெண் பாவினில்
நன்றல என்றிவ் வகைப்படும் சீர்கள்
பெரிதும் தவிர்த்தே இயற்றினர் வெண்பா
அரிதெனக் காண்போம் அவை. ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழ்வரும் வெண்பாவில் நாற்சீர் விளாங்காயென்
றாழ்ந்துவரும் ஓசையை ஆய்ந்தறி யும்செவியால்
மாற்றுவோம் பாவை வகயுளி யாகவோ
மாற்றெனச் சீரமைத் தோ. ... 2

ஒருவிகற்பக் குறட்பா
(சிர்கள் 1, 3, 5, 6-இல் விளாங்காய்)

வேர்ப்பலாவின் தீங்கனி வெட்டியேநாம் தேனுடன்
சேர்த்தவாறே உண்பமேயென் றே.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி செய்து விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலா வின்தீங் கனிவெட்டி யேதேனைச்
சேர்த்தவா றேயுண்போம் நாம்.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி யின்றி விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலாத் தீங்கனி வெட்டியே தேன்தடவிச்
சேர்த்தபடி உண்போமே நாம்.

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

11.04 வெண்பாவின் ஈற்றுச்சீர்
(வெண்பா)

அசைச்சீர் வாய்பாடு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நால்வகையில்
பண்பட்டு வந்துநிற்கும் ஓரசையாய் - உண்டாகும்
நாள்,மலர் காசு பிறப்பெனும் வாய்பாட்டில்
நால்வகையில் நிற்கும் இசைந்து. ... 1

அசைச்சீரின் அசைகள்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்,நிரை நேர்பு நிரைபு எனவொன்றில்
ஓரசையாய் நிற்கும் உவந்து. ... 2

நாள் மலர்
(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்தனியே வந்திட நாளென் றறிக
நிரைதனியே வந்தால் மலர். ... 3

[உதாரணம்: நாள்: கு, தா, கல், சொல்]
மலர்: உள, உளம், கலா, கலாம்]

காசு பிறப்பு
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
ஒற்றைக் குறில்தவிர்த்த நேருடன் குற்றுகரம்
சேர்வது காசெனும் நேர்பு; நிரையுடன்
சேர்ந்தால் பிறப்பாம் நிரைபு. ... 4 

தனிக்குறில் ஒற்றுடன், ஒற்றுடன் ஓர்நெடில்,
அன்றித் தனிநெடில், ஆகிய நேரசை
மூன்றுடன் குற்றுகரம் சேர்ந்து வருவது
காசெனும் நேர்பா வது. ... 5

[காசு உதாரணம்: கொக்கு, மூப்பு, வீடு]

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனியாக, ஒற்றடுத்து வந்திடும் நான்கு
நிரையசை யோடொரு குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு. ... 6

[பிறப்பு உதாரணம்: சிறகு, சிறப்பு, வரைவு, இசைந்து]

(இருவிகற்பக் குறள் வெண்பா)
குற்றுகரம் ஆகும் குசுடு துபுறு
உயிர்மெய் எழுத்துகள் காண். ... 7

ஈற்றடியில் வாய்பாட்டுச் சொல்
(இருவிகற்பக் குறள் வெண்பா)

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வந்திடுமோ வாய்பாட்டுச் சொல்? ... 8

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நாளெனும் சொல்நேர் எனவே வரலாம்
மலர்ச்சொல் வரலாம் தனிநிரை யாவதால்
காசுச்சொல் ஆகும்நேர் பின்குற் றுகரம்
பிறப்புச்சொல் ஆகுநிரை பின்குற் றுகரம்
இரண்டும் வருமீற்றுச் சீர். ... 9

(இருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நாள்,மலர் காசு பிறப்பு. ... 10

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராக நாள்மலர் கூடாது
ஓரசைச்சீர் என்றவை யாவதால் - வேறுவகைப்
பாவிலும் வாரா கலிப்பா உறுப்பான
அம்போத ரங்கம் தவிர்த்து.நாள்,மலர் காசு பிறப்பு. ... 11

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வேறெந்தச் சீராகக் காசு பிறப்பு
வரலாம் எனினும் அதுபோல வந்தாலோ
இங்கு முதலடியில் உள்ளது போலவே
ஈரசைச் சீர்களாகும் காண். ... 12

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வேறடியில் காசு பிறப்பு வரலாம்
நிரை-நேர் எனப்பிறப்பும் நேர்-நேர் எனக்காசும்
ஈரசைச் சீர்களாகும் காண். ... 13

ஈற்றுச் சீர் சான்றுகள்
(ஒருவிகற்பக் குறள் வெண்பா)

நாள்மலர் காசு பிறப்பென ஈற்றுச்சொல்
ஆள்குறட் பாவெழுது வோம். ... 14

மடம்பயிர்ப்பு நாணம் மனவச்சம் இன்றி
நடமாடும் பெண்டிரிந் நாள்.

மங்கை தலையமரும் மல்லிகைப் பூவெனில்
மங்கையும் தானே மலர்?

படும்பாட்டில் இல்லாள் பதுக்கியே சேர்த்தாள்
கடுகுச் சிமிழினுள் காசு!

எருமைகள் மேய்த்தாலும் ஈசன்பேர் சொல்லப்
பெருமைகள் சேரும் பிறப்பு.

*****

ramaNi

unread,
May 24, 2017, 10:45:28 PM5/24/17
to சந்தவசந்தம்
11.05 நாள் மலர் காசு பிறப்பு சான்றுச் சொற்கள்
(வெண்பா)

(குறள் வெண்பா)
கீழ்வரும் சொற்சான்று நோக்கத் தெரியுமே
நாள்மலர் காசு பிறப்பு. ... 1

க-கல்-கா-கால் சொற்களில் நேர்தனி வந்திட
நாளெனும் வாய்பாடா கும். ... 2

(சிந்தியல் வெண்பா)
கட-கடல் மற்றும் கடா-கடாம் சொற்கள்
நிரைதனி வந்து மலரெனும் வாய்பாடால்
ஆவது என்று உணர். ... 3

படுஎனும் சொல்லில் தனிநிரை யாம்மலர்
பட்டு எனும்போது குற்றுகரம் சேர்வதால்
நேர்பெனும் காசா வது. ... 4

தகாஎனும் சொல்லில் தனிநிரை காண
தகாது எனும்சொல்லில் குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு. ... 5

(குறள் வெண்பா)
சிறுபான்மை முற்றுகரம் கூட வருவதுண்டு
சொல்லு, கதவு என. ... 6

(பஃறொடை வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்களாம்
கூம்பு-சாய்த்து ஆடு-பாரு தந்து-நில்லு அஞ்சு-நீர்க்கு
சொற்களைச் சேர்க்கும் கழித்தல் குறிநீக்க
எல்லாமே நேர்பெனும் காசு. ... 7

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்கள்
முடங்கு குவவு விரைந்து அலங்கு 
பலவு இரவு உறாது இராது
அனைத்தும் நிரைபு பிறப்பு. ... 8

*****

11.06 நாள் மலர் காசு பிறப்பு திருக்குறள் சான்றுகள்
(குறள் வெண்பா)

(குறள் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வள்ளுவரின் சான்று சில. ... 1

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... [நாள்]

வெண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ... [மலர்]

இருள்சேற் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ... [காசு]

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ... [பிறப்பு]

*****

11.07 நாள் மலர் காசு பிறப்பு: அனைத்துவகைச் சான்றுகள்
(வெண்பா)

(சிந்தியல் வெண்பா)
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்ப்
பைந்தமிழ்ச் சான்றுகள் பார்க்கும் பொழுது
இறுதி இரண்டடிகள் இங்கு.

(குறள் வெண்பா)
நாள்மலர் காசு பிறப்பு அனைத்து
வகைச்சான்றும் கீழே உள.

கீழுள்ள சான்றுகள் ஔவையின் பாக்களே
வேறி ரண்டு தவிர்த்து.

முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு.
[தனிக்குறில்: நேர்: நாள்]
---காளமேகப் புலவர் இஞ்சிக்குடி தாசி 
கலைச்சியை இகழ்ந்து பாடியது.

இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
[தனிக்குறிலொற்று: நேர்: நாள்]

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
[தனிநெடில்: நேர்: நாள்]

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
[தனிநெடிலொற்று: நேர்: நாள்]

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
[குறிலிணை: நிரை: மலர்]

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேள் இட்ட கலம்.
[குறிலிணையொற்று: நிரை: மலர்]

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
[குறில்நெடில்: நிரை: மலர்]

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம்.
[குறில்நெடிலொற்று: நிரை: மலர்]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு.
[தனிக்குறிலொற்று+உகரம்: 
நேர்பு: காசு -- தனிக்குறில்+உகரம் வரக்கூடாது.]

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
[தனிநெடில்+உகரம்: நேர்பு: காசு]

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
[தனிநெடிலொற்று+உகரம்: நேர்பு: காசு]

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
[குறிலிணை+உகரம்: நிரைபு: பிறப்பு]

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிடம் எல்லாம் சிறப்பு.
[குறிலிணையொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
நிரையுள்ளே இன்னா வரைவு.
[குறில்நெடில்+உகரம்: நிரைபு: பிறப்பு]
---பழமொழி நானூறு 68

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.
[குறில்நெடிலொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

*****
 

Subbaiyar Ramasami

unread,
May 24, 2017, 11:25:07 PM5/24/17
to santhav...@googlegroups.com
வெண்பாத் தொகுப்பு விருந்து


--

ramaNi

unread,
May 25, 2017, 2:48:20 AM5/25/17
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, தலைவரே.
ரமணி

ramaNi

unread,
Jun 2, 2017, 9:17:50 AM6/2/17
to சந்தவசந்தம்
11.08. வெண்பாவின் தளை
(வெண்பா)

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை 
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேர்வர
வாகுமே வெண்டளை காண். ... 1

(இருவிகற்பக் குறள்வெண்பா)
வெண்டளையில் வெண்சீர் இயற்சீர் எனவே
இரண்டு வகைகள் உள. ... 2

(பலவிகற்பச் சிந்தியல் வெண்பா)
இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
வெண்பா இயற்சீர் என. ... 3

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும்
வெண்பாவின் காய்ச்சீர் என. ... 4

*****

11.09. வெண்பாவின் அடி
(வெண்பா)

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
வெண்சீர் இயற்சீர் இயன்றிடும் வெண்பாவில்
நாற்சீர் பயிலும் அளவடி மட்டுமே
ஈற்றடி முச்சீரில் சிந்தடியாய் நின்றிட
ஈற்றுச்சீர் நாள்,மலர் காசு பிறப்பென
மேற்சொன்ன நால்வகை யில். ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழெல்லை யாக இரண்டடி வந்துநிற்க
மேலெல்லை வெண்பா வகைபொறுத்து மாறும்
குறட்பா இரண்டடி மேலெல்லை கீழெல்லை
சிந்தியல் எல்லைகள் மூன்று. ... 2

அளவியல் எல்லைகள் ஆவது நான்கடி 
பஃறொடை ஐந்தும் பனிரெண்டும் எல்லை
கலிவெண்பா பத்துடன் மூன்றடிக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 3

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
மூச்சீரே வந்திடும் வெண்பாவின் ஈற்றடிக்கு
முக்கா லடியென்றும் ஓர்பெயர் சொல்லுவர்
ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம்
ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம்
மூவடி முக்கால் அளவியல் எல்லையாம்
பன்னிரண்டு முக்காலாம் பஃறொடை எல்லை
பதிமூன்று முக்கால் கலிவெண்பாக் கீழெல்லை
மேலெல்லை யேது மிலை. ... 4

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா எனும்பேரே நாலடி யாகவரும்
வெண்பாவைச் சுட்டுவ தாய்-இவ் வகையில்
முதல்மூன் றடிகள் அளவடி யாய்வரும்
ஈற்றடி சிந்தடி யாம். ... 5

*****

 

ramaNi

unread,
Jun 11, 2017, 12:44:39 AM6/11/17
to சந்தவசந்தம்
11.10. செப்பலோசை என்பது
(வெண்பா)

செப்புதல் என்றால் விடையெனக் கூறல்
மறைவின்றித் தானே இயல்பாய் மொழிதல்
மறைத்தொன்றைக் கூறாது செப்பியே கூறுதல்
என்றுநச்சி னார்க்கினியர் நூல்.

இசைகுறித்து வாராமல் செப்புத லாகிய
வாக்கியம் போன்றதாம் ஓசை எனவே
இளம்பூ ரணர்-உரைக் கூற்று.

அகவலும் செப்பலும்
(வெண்பா)

காரிகை சொல்லும் அகவலும் செப்பலும்
சீரினில் இங்ஙனம் வேறு படுவதாம்
சீர்சால் அகவலெனக் காரிகைச் சொல்லாம்
இருவகை என்னும் இயற்சீர் விளம்-மா
வரும்சீர் நிலைச்சீர் இனத்தினில் ஒன்ற
நிறையும் அகவல் ஒலி.

திண்பா மலிசெப்பல் ஓசையெனும் காரிகை
திண்மை செறியும் ஒலியென் றியற்சீரின்
மாவிளம் என்றவை மாறி வருவதும்
காய்முன்நேர் என்று கதித்து வருவதும்
ஆய்ந்தால் விளங்குவ தாம்.

வெள்ளைப்பா என்பதும் வெண்பாவின் பேராக
வெள்ளோசை என்றுமே வெண்பாவின் ஓசையாய்ச்
செப்பலுக் கின்னொரு பேரென் றறிக;
தளைகளே ஓசையின் மூலம் எனவெண்
டளைவரச் செப்பல் எழும்.

அகவல், செப்பலொலி வேறுபடும் சான்றுகள்
(வெண்பா)

நேரொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
கண்ணன் என்னும் மன்னன் பேரை
எண்ணும் உள்ளத் தின்பம்
பண்ணில் ஏற்றிப் பாடும் உள்ளே.

(வெண்பா)
வெண்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

கண்ணனெனும் மன்னவனின் கன்னலன்ன பேரொன்றே
எண்ணமுறும் உள்ளத்தில் இன்பங்கள் சூழ்ந்துகொளும்
பண்ணுறவே துள்ளிவிழும் பாட்டு.

நிரையொன்றும் ஆசிரி யத்தளை ஓசையாம்
நேரிசை ஆசிரி யப்பா ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

(ஆசிரியப்பா)
மலைவிழும் அருவியில் வழிந்துறும் வளமென
அலைவிழும் கடற்கரை அமிழ்கழல்
கலைவிழும் சிலையவள் கருவிழி அலைவதே.

(வெண்பா)
இயற்சீரின் வெண்டளை மட்டும் ஒலித்திடும்
வெண்பாவில் ஆள்கின்ற செப்பல் ஒலிநயம்
கீழ்வரும் பாடலி லே.

மலைவீழ் அருவி வழியும் வளமாய்
அலைவீழ் கரையில் அமிழும் கழலாய்
கலைவீழ் சிலையாள் விழி.

*****

11.11. செப்பலோசையின் வகைகள்
(வெண்பா)

(பஃறொடை வெண்பா)
மூன்று வகையெழும் செப்பலெனும் ஓசையாம்
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
ஏந்திசை வெண்பா வுரிச்சீரால் மட்டுமே
தூங்கல் இயற்சீரால் மட்டும் ஒழுகிசையில்
இவ்விரு சீர்கள் கலந்து.

(இன்னிசை வெண்பா)
ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்தே ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

(பஃறொடை வெண்பா)
நால்வகைக் காய்ச்சீர்கள் வெண்பா வுரிச்சீராம்
நால்வகை மாவிளச்சீர் ஆகும் இயற்சீராம்
காய்முன்னே நேர்வர வெண்சீரின் வெண்டளை
மாமுன் நிரையும் விளமுன்னே நேருமென
மாறி வருதல் இயற்சீரின் வெண்டளை
இவ்வா(று) இருதளை எண்சீர் இயன்றுவரும்
செவ்வையே வெண்பா அமைப்பு.

மூவசையா லாகிவந்து நீரலையா யேந்திவந்து
நாவசைய ஓசையெழும் ஏந்திசையின் செப்பலாக
தூங்கிசைச் செப்பல் இயற்சீர் வரவரும்
தூங்கி வருவது தொங்கி வருதல்
இருவகை வெண்டளையும் யாப்பில் கலத்தல்
இருவகை ஓசை ஒழுக்கு.

ஏந்திசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
--திருக்குறள் 040:07

தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் காசு

(சிந்தியல் வெண்பா)
விண்ணோரும் மண்ணோரும் வேண்டுமருள் ஈசனவன்
கண்மூன்று கொண்டவனாம் காப்பவனாம் நானிலத்தை
எண்ணவரும் ஈசனருள் இன்று.

தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

(அளவியல் வெண்பா)
ஏரானைக் காவிலுறை யென்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவருஞ் சித்திவருந் தான்.
--தனிப்பாடற்றிரட்டு, பகுதி 1 காப்பு வெண்பா

தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் நாள்

மேல்வந்த வெண்பாக் குறிப்பு
(இன்னிசை வெண்பா)

ஒருசீர் தவிர பிறசீர் களிலே 
வருவது மூவசைக் காய்ச்சீர்கள் ஏந்திசை
போற்றினால் என்பதைப் போற்றிடவே என்றுநாம்
மாற்ற இதுவுமே காய்.

(பஃறொடை வெண்பா)
காலையிளம் சூரியனின் கற்றையொளி கண்ணிறையும் 
சோலையெலாம் பொன்னிறமாய்த் தோன்றியொளிர் காட்சியினில்
புள்ளினத்தின் பண்ணலைகள் போகவரும் காற்றினிலே
அள்ளிவரும் தென்றலிலே ஆர்ந்துவரும் வாசனைகள்
தெள்ளியநீ ரோடையிலே சிற்றலையாய் நீரோட்டம் 
உள்ளமெலாம் பொங்கியெழும் ஊற்று.

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் 
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் காசு

தூங்கிசைச் செப்பல் சான்றுகள்
(குறள் வெண்பா)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
--திருக்குறள் 040:01

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
தேமா புளிமா நாள்

பாலொடு தேன்கலந் தற்றே மணிமொழி
வாலெயி றூறிய நீர்.
--திருக்குறள் 113:01

கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்

(சிந்தியல் வெண்பா)
இருவிழி காண இறங்கும் உருவாய்
இருசெவி கேட்க இறங்கும் ஒலியாய்
ஒருமனம் ஆழங் கொளும்.

கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா மலர்

(அளவியல் வெண்பா)
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
--நாலடியார், 65

புளிமா புளிமா புளிமா கருவிளம்
தேமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா கருவிளம் தேமா
புளிமா புளிமா மலர்

(பஃறொடை வெண்பா)
கதிரினைக் காணார் நிலவினைக் காணார்
சதியும் பதியும் தனியாய்ப் பயணம்
விடியும் பொழுதில் விளையும் அலுவல்
முடியும் பொழுதினில் முற்றிருள் சூழும்
கடிநகர் வாழ்வின் கயம்.

கருவிளம் தேமா கருவிளம் தேமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா புளிமா புளிமா புளிமா
புளிமா கருவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா மலர்

ஒழுகிசைச் செப்பல் சான்றுகள்
குறள் வெண்பா

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறு மறிவு.
--திருக்குறள் 040:06

கூவிளம் தேமா புளிமாங்காய் புளிமா
கருவிளம் தேமா பிறப்பு

(சிந்தியல் வெண்பா)
பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே
கூடி வணங்குமுல கு.
--கி.வா.ஜ., ’கவி பாடலாம்’ பக்.90

தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளங்காய் கூவிளங்காய் கூவிளம்
தேமா கருவிளங்காய் நாள்.

(அளவியல் வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
--ஔவையார், நல்வழி 12

(பஃறொடை வெண்பா) 
[அலகிட்டு ஓசை அறிக]

முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 56

*****

11.12. செப்பலோசை வெண்பா முயற்சி
(வெண்பா)

(இன்னிசை வெண்பா)
ஒருபொருள் பற்றியே மூவகை ஓசை
உருவினில் ஈரடி மூவடி நாலடி
வெண்பா முயல்வினில் வெவ்வே றொலிகாண
எண்ண வெழுந்தன வே.

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
பாழடைந்த கேணியொன்றைப் பற்றியழும் பேய்-ஓலம்
காழிருந்தால் அவ்வழி-வை கால்.

(தூங்கிசைச் செப்பல்)
அழிந்த கிணற்றில் அரற்றும் ஒருபேய்
வழியது செல்மனம் வம்பு.

(ஒழுகிசைச் செப்பல்)
அழிந்த கிணற்றில் அரற்றியழும் ஓர்பேய்
வழியது போனாலோ வம்பு.

(ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
மல்லிகைப்பூ முல்லைப்பூ வாசனையாய்ப் பூத்திருக்க
மெல்லியதோர் காற்றலைக்கும் மெல்லிடையாள் மேலாடை
சொல்லினிலே பூத்தாளே தொட்டு.

(தூங்கிசைச் செப்பல்)
மல்லிகை முல்லை மலரும் மணத்துடன்
மெல்லிய காற்றலை மெல்லிடை மேலுடை
சொல்லில் மலர்ந்தனள் தொட்டு.

(ஒழுகிசைச் செப்பல்)
மல்லிகை முல்லை மலர்களெலாம் வாசனையாய்
மெல்லியதோர் காற்றலை மெல்லிடையாள் மேலாடை
சொல்லில் மலர்ந்தாளே தொட்டு.

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
(ஏந்திசைச் செப்பல்)
தத்திவரும் ஆழியலை மத்தளத்தின் ஓசையொடு
எத்திவிடும் பாப்பாவின் சென்னியெலாம் மண்துகளாய்
கத்தியுரை யாடுமப்பா காதினிலே கைபேசி
அத்தையுடன் அம்மாவின் பேச்சு.

(தூங்கிசைச் செப்பல்)
தத்தும் கடலலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தை தலையெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் கைபே சியில்செவி
அத்தையும் அன்னையும் பேச்சு.

(ஒழுகிசைச் செப்பல்)
தத்திவரும் ஆழியலை மத்தள ஓசையில்
எத்தும் குழந்தையின் சென்னியெலாம் மண்துகள்
கத்தும் தகப்பனின் காதினில் கைபேசி
அத்தையுடன் அன்னையின் பேச்சு.

11.13. செப்பலோசை வெண்பாப் பயிற்சி
(வெண்பா)

நினைவிற் கொள்ள:
(இன்னிசை வெண்பா)

ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பா நிரலமைத்தல்
(பஃறொடை வெண்பா)

மூவகைச் செப்பல் ஒலியின் குறட்பாக்கள்
மூன்று கலைந்துள சொற்களில் கீழுள
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
தேர்ந்தின் நிரல்களில் மூன்று குறட்பாவும்
ஓர்ந்து அமைத்தே எழுது.

உள்ளத்தால் உள்ளலும் காணாதாற் பெருமை
கள்ளத்தால் காட்டுவான் பிறன்பொருளைக்
தான்காணான் விடும். கள்வேம் தீதே
மறைமொழி நிலத்து வாறு.
எனல். தான்கண்ட நிறைமொழி காட்டி
மாந்தர் காணாதான் கண்டானாம்

பயிற்சி 2. மூவகைச் செப்பலோசைக் குறட்பா எழுதுதல்
(இன்னிசை வெண்பா)

ஏந்திசை தூங்கிசைச் செப்பல் ஒழுகிசை
தேர்ந்திந் நிரல்வர மூன்றுகுறள் வெண்பாக்கள்
ஓர்ந்தே புனைக ஒருபொருள் பற்றியோ
ஆர்ந்த பலபொருளி லோ.

*****

Subbaiyar Ramasami

unread,
Jun 11, 2017, 8:58:31 AM6/11/17
to santhav...@googlegroups.com
ஏந்திசையா என்னவென எண்ணுகையில், என்மனமோ
பாந்தமுடன் பாடியதிப் பா.

தூக்கம் வராது தொடர்ந்து படுக்கையில்
வாக்குத் தொடுத்தேன் மகிழ்ந்து

செப்பவோ, செப்பா திருக்கவோ, இவ்வோசை
எப்பொழுதும் ஈர்க்கும் எனை
 

ramaNi

unread,
Jun 11, 2017, 9:17:28 AM6/11/17
to சந்தவசந்தம்
சான்றுகள் அருமை, தலைவரே. நீங்கள் தொடரைப் படிப்பது மகிழ்ச்சி.
ரமணி

Pas Pasupathy

unread,
Jun 11, 2017, 9:25:23 AM6/11/17
to Santhavasantham
தொல்காப்பியத்தில் “செப்பலோசை” என்ற சொல் வராதது ஒரு சுவையான விஷயம்.

2017-06-11 9:17 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
சான்றுகள் அருமை, தலைவரே. நீங்கள் தொடரைப் படிப்பது மகிழ்ச்சி.
ரமணி

ramaNi

unread,
Jun 11, 2017, 9:47:28 AM6/11/17
to சந்தவசந்தம்
அட, ஆமாம், தலைவரே. மற்ற ஓசைகள் சொன்னாலும் செப்பல் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லையே!

அகவல் என்பது ஆசிரியம்மே. 77 
அதாஅன்று என்ப வெண்பா யாப்பே. 78 
துள்ளல் ஓசை கலி என மொழிப. 79 
தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். 80 
மருட்பா ஏனை இரு சார் அல்லது 
தான் இது என்னும் தனிநிலை இன்றே. 81 

தொல்காப்பியர் சொல்வதைப் பார்த்தால், திருவிளையாடல் படத்தில்,
* சிவாஜியும், நாகேஷும் பேசுவது செப்பல்

* நாகேஷ் பின் தனியாகப் புலம்புவது அகவல்

* பார்வேந்தே யெனைப்பார்வேந்தே பாட்டுடன்வந் திருக்குமிந்த தருமியைப்பார்
.. என்றது துள்ளல்

* நக்கீரர் பிழையென்றதும், எவ்வளவினில் பிழையுள்ளதோ அவ்வளவினும் குறைத்திடுக
.. என்றது தூங்கல் எனக்கொள்ளலாம்.

ரமணி

ramaNi

unread,
Jun 14, 2017, 10:04:14 AM6/14/17
to சந்தவசந்தம்
11.14. எதுகையால் வரும் வெண்பா விகற்பம்
(வெண்பா)

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்பா வகையை அடியெது கைவரும்
எண்ணுடன் சேர்த்துக் குறித்தல் வழக்கம்
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா புனைந்தால்
வருமே அடியெதுகை ஒன்று.

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒருவிகற்ப மற்றும் இருவிகற்ப ஏனைப்
பலவிகற்ப வெண்பாக்கள் சான்று முறையே
வரும்பாக்கள் கீழுள் ளவை.

(ஒருவிகற்பக் குறள் வெண்பா)
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
--திருக்குறள் 001:01

(இருவிகற்பக் குறள் வெண்பா)
அமிழ்தினு மாற்ற வினிதே தம்மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.
--திருக்குறள் 007:04

(ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 061

(பலவிகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்யாக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக் கோவை, 003

(ஒருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
--ஔவையார், மூதுரை 012

(இருவிகற்ப நேரிசை அளவியல் வெண்பா)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
---ஔவையார், நல்வழி 012

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமுஞ் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி யோடார் தெளிவிலாக்
கானந் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குர வாற்றப் பெருகினுஞ் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
--பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 056

*****

11.15. வெண்பாவின் வகைகள்
(வெண்பா)

வெண்பா வடிகளின் மேலெல்லை யெண்வைத்தே
வெண்பா வகைகள் பெயரிடப் பட்டன.
வெண்பா வகைகளாம் ஐந்து.

குறள்வெண்பா சிந்தியல் மற்றும் அளவியல்
பஃறொடை மற்றும் கலிவெண்பா என்று
உறழும் வகைகளாம் ஐந்து.

அடிகள் இரண்டில் குறட்பா வருமே
அடிமூன்று வந்திடின் சிந்தியல் வெண்பாவாம்
நாலடி வெண்பா அளவியல் பேர்பெறும்
ஐந்துமுதல் பன்னிரண்டு பஃறொடை வெண்பா
பதிமூன்றும் மேலும் கலிவெண்பா வென்று
கதித்திடும் ஐவகைவெண் பா.

அடியாற் பெயராம் குறள்வெண்பா சிந்தியல்
ஓசையால் நேரிசை இன்னிசை வெண்பா
தொடையாலே பஃறொடை யே.

வெண்பா எனும்சொல் பொதுவில் குறிப்பது
வெண்பா வகையாம் அளவியல் ஆகும்
குறள்வெண்பா நீக்கி இதர வகைகள்
இரண்டு விதத்தில் இயற்றப் படுவன
நேரிசை இன்னிசை யென்று.

நேரிசை இன்னிசை யில்லாக் குறளொன்று
நேரிசை இன்னிசை நால்வகை பெற்றதால்
நேரிசை இன்னிசைச் யென்றிரு சிந்தியல்
நேரிசை இன்னிசை யென்று அளவியல்
நேரிசை இன்னிசை யென்றிரு பஃறொடை
நேரிசை இன்னிசை யென்று கலிவெண்பா
ஆகவெண் பாவொன் பது.

*****

11.16. பழந்தமிழ் வெண்பா நூல்கள்
(வெண்பா)

முற்றிலும் வெண்பாவா லான பழந்தமிழ்
மற்றும் இடைக்காலப் பிற்கால நூல்வகை
சிற்சில காண்போம் இனி.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டும்
பனுவல் திருக்குறள் முற்றும் குறள்வெண்பா 
தெய்வப் புலவர் திறன்.

களவழி நாற்பது ஆசாரக் கோவை
அளவியல் வெண்பா அறநெறி நூல்களில்
சிற்சில பாக்களில் சிந்தியல் வெண்பாவும்
பஃறொடைவெண் பாவும் வரும்.

ஔவையின் மூதுரை நல்வழி, நாலடியார்
செவ்விதின் நீதிநெறி செப்பும் பனுவல்கள்
இன்னா இனியவை கார்கள நாற்பது
இன்னிலை கைந்நிலை நன்னெறி ஏலாதி
கப்பும் கிளையாய் இதுபோல் பலவகை
செப்பலில் சொல்லும் அறம்.

நளவெண்பா நாலா யிரதிவ்ய வெண்பா
அருட்பா சிவநேச வெண்பா சிலேடைகள்
அந்தாதி ஆன்மீகம் தண்டி யலங்காரம்
இந்தவிதம் வெண்பா விரிப்பு.

புலவர் குழந்தைத் தொடையதி காரம்
பலவகை நூல்கள் தரும்.

*****

11.17. யாப்பமைதிக்கோர் அளவுகோல்
(குறள் வெண்பா)

புலவர் குழந்தையின் நூல்கள் சொல்லும்
பலவித யாப்பமை தி.

ஒவ்வோர் அடியிலும் மோனை பொழிப்பென
செவ்விதின் வேண்டல் சிறப்பு.

ஓரெழுத் தஃதே எதுகையில் மோனையில்
சீரடியில் என்றால் முதல்.

ஓரெழுத் தின்கிளை மோனை எதுகையில்
சீரடியில் என்றால் நடு.

ஓரெழுத்தில் மோனை எதுகை சிறப்பின்றி
சீரடியில் என்றால் கடை.

குறள்சிந்து வெண்பா அடியெதுகை ஒன்றாய்
வரவேண்டும் ஓர்விகற்ப மாய்.

ஒன்றோ இரண்டோ விகற்பம் அளவியலில்
நன்றாய் அமைதல் நலன்.

நேரிசை வெண்பா ஒரூஉ எதுகையும்
சீருடன் வேண்டும் வர.

பொழிப்பினில் மோனை இயலாத போது
பொழிப்பில் எதுகை நலம்.

சிறுபான்மை மோனை எதுகை ஒரூஉ 
வருதலே பாவில் தகும்.

வேறு தொடைகள் அமையினும் கூடவே
மேலுள்ள வையே சிறப்பு.

யாப்பமைதிக் கூறுகள் காணவே புள்ளிதந்தால்
பாக்கள் அளத்தல் எளிது.

ஓர்விகற்பம் மோனை பொழிப்பு அதேஎழுத்து
நூறு சதவிகித மாம்.

கீழ்வரும் அட்டவணை சொல்லும் பிறவகைக்
கூறுகளின் புள்ளி களை.



*****
 

ramaNi

unread,
Jun 19, 2017, 1:58:03 AM6/19/17
to santhav...@googlegroups.com
11.20. குறள் வெண்பா
(குறள் வெண்பா)

பொதுவிலக்கணம்
(குறள் வெண்பா)

வெண்பா இலக்கணம் வேண்டும் குறள்வெண்பா
விண்டிடும் ஈரடி யில். ... 1

ஒருவிகற்பத் தாலோ இருவிகற்பத் தாலோ
குறள்வெண்பா ஆகிவ ரும். ... 2

ஒருவிகற்பம் வந்தால் இனக்குறள் வெண்பா
இரண்டில் விகற்பக் குறள். ... 3

மோனை யெதுகை முரண்போல ஐந்தொடையால்
ஆன(து) இனக்குறட் பா. ... 4

பொருளின் செறிவால் அடிகள் இரண்டால்
தொடைகள் அனைத்தும் அரிது. ... 5

விகற்பம் இரண்டாகச் செந்தொடை பெற்று
விகற்பக் குறட்பா வரும். ... 6

விகற்பம் எனும்சொல் அடியெதுகை யெண்காட்டும்
செந்தொடையில் எத்தொடையும் இல். ... 7

சிறப்பிலக்கணம்
(குறள் வெண்பா)

புலவர் குழந்தை* புகலும் சிறப்பு
பலவே குறட்பா விலே. ... 1
[*அவரது ’யாப்பதிகாரம்’ மற்றும் ’தொடையதிகாரம்’ நூல்கள்]

ஒருவிகற்பம் மோனை பொழிப்பில் அடிகள்
அரிதாய் ஒரூஉமிக மாண்பு. ... 2

[ஒருவிகற்பம் = ஒரே அடியெதுகை; 
பொழிப்பு மோனை = சீர்கள் 1-3-இல் மோனை;
ஒரூஉ மோனை = சீர்கள் 1-4-இல் மோனை.]

எதுகைச் சிறப்பு அடிகளில் காணுக
மோனையில் சீர்கள் சிறப்பு. ... 3

அடியெதுகை யில்லாத போது ஒரூஉ
வெதுகை யமைதல் சிறப்பு. ... 4

தொடைகள் பலவகை வந்தால் அவற்றில்
பொழிப்புமோ னையாம் சிறப்பு. ... 5

மோனை பொழிப்பில்லா வேறு தொடையில்
ஒரூஉ வெதுகை சிறப்பு. ... 6

செந்தொடை வந்தாலோ செப்பலோசை தப்பாது
வந்திட வேண்டும் குறள். ... 7

மோனை எதுகை வலிந்துகொளல் இல்லாது
ஆனதே செந்தொடை யாம். ... 8

விகற்பக் குறளிலும் மோனை வருதல்
சிறப்பெனக் கொள்ளுதல் நன்று. ... 9

எழுசீர் சிறுமையிலும் இத்தனை பாங்கில்
எழுதுதல் வேண்டுமே இன்று. ... 10

இனிவரும் அத்தியா யத்திலே காண்போம்
நனிமிகு பாக்குறள் சான்று. ... 11

*****

11.21. இனக்குறள் சான்றுகள்
(குறள் வெண்பா)

வள்ளுவர் யாப்பிற்(கு) அளவுகோல் ஏதுமில்லை
உள்ளுவது சொல்லும் உளி. ... 1

யாப்பின் இலக்கணக் கூறுகள் யாவுமே
பாக்களில் காணும் குறள். ... 2

மோனை எதுகை இனக்குறட் பாக்களில்
ஆனதே அர்த்தம் பொறுத்து. ... 3

எதுகையும் மோனையும் இல்லாக் குறளும்
பொதுவில் பதியும் உளம். ... 4

அன்றுமுதல் இன்றுவரை வெண்பாவே உள்ளத்தை
நன்றாக ஈர்த்திடும் பா. ... 5

வெண்பா வகையினில் செய்யுள் முனையவே
நண்பனாம் யாப்பமைதிக் கோல். ... 6

பல்வகைச் சோதனை அன்றைய யாப்பிலே
வல்லதைக் கொள்ளுவோம் நாம். ... 7

தமிழில் மரபு தழைத்திட இன்று
உமிநீக்கிக் கொள்வோம் மணி. ... 8

மணியின் ஒலியில் பொருளின் செறிவை
அணிசெய்த லேவெண்பா யாப்பு. ... 9

சான்றுகள்
குறள் 1.
அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.
--திருக்குறள் 018:09

[ஒருவிகற்பம் அதே எழுத்து; அளவடி: பொழிப்பு மோனை அதே எழுத்து;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே எழுத்து.]

இதேபோல் சில குறட்பாக்களை அளவிட்டதில் கிடைத்தவை கீழே:

குறள் 2.
இனிய யுளவாக வின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
--திருக்குறள் 010:10

[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை அதே;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளையெழுத்து.]

குறள் 3.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
--திருக்குறள் 020:10

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]

குறள் 4.
மனைமாட்சி இல்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.
--திருக்குறள் 006:02

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]

குறள் 5.
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
--திருக்குறள் 051:06

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ எதுகை;
சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]

குறள் 6.
ஊருணி நீர்நிறைந் தற்றே  யுலகவாம்
பேரறி வாளன் றிரு.
--திருக்குறள் 022:05

[ஒருவிகற்பம் கிளையெழுத்து; அளவடி: ஒரூஉ மோனை;
சிந்தடி: பொழிப்பு மோனை கிளை.]

குறள் 7.
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
--திருக்குறள் 015:05

[ஒருவிகற்பம் அதே; சிந்தடி: பொழிப்பு மோனை அதே.]

குறள் 8.
பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்க ணில்.
--திருக்குறள் 015:01

[ஒருவிகற்பம் அதே; அளவடி: பொழிப்பு மோனை கிளை.]

குறள் 9.
அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.
--திருக்குறள் 016:01

[ஒருவிகற்பம் அதே; அளவடி: ஒரூஉ மோனை.]

குறள் 10.
பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
--திருக்குறள் 081:05

[ஒருவிகற்பம் கிளை; அளவடி: பொழிப்பு மோனை கிளை;]

குறள் 11.
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
--திருக்குறள் 009:05

[ஒருவிகற்பம் கிளை; அளவடி: ஒரூஉ மோனை.]

குறள் 12.
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
--திருக்குறள் 070:01

[ஒருவிகற்பம் அதே.]

*****

11.22. விகற்பக்குறள் சான்றுகள்
(குறள் வெண்பா)

இனக்குறள் ஓரெதுகை யென்றால் விகற்பக்
குறளின் எதுகை யிரண்டு. ... 1

விகற்பக் குறளில் பொதுவாய் ஒரூஉ
எதுகை அமையுமே வந்து. ... 2

நேரிசை வெண்பா ஒரூஉ எதுகைக்
குறள்வழி வந்ததென் பர். ... 3

சான்றுகள்
(ஒரூஉ எதுகை)

மனத்துக்கண் மாசிலன் னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
---திருக்குறள் 004:04

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
---திருக்குறள் 014:01

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
---திருக்குறள் 067:07

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
---திருக்குறள் 109:01

சான்றுகள்
(செந்தொடை)

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
---திருக்குறள் 007:04

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07

அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைக்குமே
நன்னுதல் நோக்கோர் வளம்.
--யாப்பருங்கலச் சான்று

*****

11.23. திருக்குறளில் பொருள்சிறக்க வரும் முரண்தொடை
(குறள் வெண்பா)

முரண்படச் சொல்லோ பொருளோ தொடுத்தால்
முரண்தொடை வந்திடும் காண். ... 1

அறத்தினைக் கற்பிக்கும் நூல்கள் அதோடு
மறத்தையும் சொல்லுவ துண்டு. ... 2

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
---திருக்குறள் 008:06

நல்லது சொல்கிற செய்யுளில் கூடவே
அல்லதும் சொன்னால் அழகு. ... 3

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
---திருக்குறள் 010:06

நல்லதும் அல்லதும் பக்கத்தில் நின்றிட
நல்லதின் தன்மை மிகும். ... 4

முரண்படும் செய்திகள் சொல்கிற போது
முரண்படும் சொற்கள் வரும். ... 5

அறநூல் களிலே இதுபோல் பலவாய்
முரண்தொடை வந்திடு மே. ... 6

முரண்தொடை சீர்த்து வருகிற ஓர்நூல்
திருக்குறள் என்றிட லாம். ... 7

முரண்தொடை யால்பொருள் சீர்த்து விளங்கிடும்
வள்ளுவர் பாக்கள் சில. ... 8

பொருளை விளக்க வருவது சொல்முரண்:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
---திருக்குறள் 009:06 ... [செல்விருந்து வருவிருந்து]

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
---திருக்குறள் 007:10 ... [மகன் தந்தை]

தந்தை மகன்மற்றும் செல்-வரு என்றது
சொல்லினில் மட்டும் முரண். ... 9

சொல்லில் பொருளில் முரண்வரும் பாக்கள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
---திருக்குறள் 010:10 ... [இனிய இன்னாத, கனி காய்]

இனிய பதத்தின் பொருள்முரண் இன்னாத
காய்-கனி சொல்முர ணாம். ... 10

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
---திருக்குறள் 012:04 ... [தக்கார் தகவிலர்]

தக்கார் தகவிலர் என்று பொருளொடு
சொல்லும் முரணுத லாம். ... 11

*****

11.24. திருக்குறளில் நிரோட்ட/இதழகல் குறட்பாக்கள்
(குறள் வெண்பா)

ஓஷ்டம் எனும்சொல் உதட்டுக்கு சம்ஸ்க்ருதத்தில்.
ஓட்டம் இதன்தமிழ்ச் சொல். ... 1

உதடுகள் ஒட்டினால் ஓஷ்டம் நிரோஷ்டம் 
உதடுகள் ஒட்டாத து. ... 2

நிரோஷ்டம் தமிழினில் ஆகும் நிரோட்டம்
இதழகல் இன்னோர் பெயர். ... 3

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
---திருக்குறள் 035:01

இதழகல் என்ற நிரோட்டப்பா உத்திக்கே
இக்குறள் சீர்மிகு சான்று. ... 4

இளங்கோவன் மின்வலையில் வேறுபல காண்க
அவற்றி லிருந்து சில. ... 5 

அவர்தரும் முற்றும் இதழகல் பாக்கள்
இனிவரும் மூன்று குறள். ... 6

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
---திருக்குறள் 031:10

எய்தற் கரிய தியைந்தகாண் அந்னிலையே
செய்தற் கரிய செயல்.
---திருக்குறள் 049:09

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குநல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
---திருக்குறள் 109:02

முற்றும் இதழகலா வேறுசில பாக்களில்
சிற்சில காண்போம் இனி. ... 7

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
---திருக்குறள் 067:08

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று.
---திருக்குறள் 021:08

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
---திருக்குறள் 068:09

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
---திருக்குறள் 042:09

மீதமுள்ள பாக்குறள்கள் அன்னாரின் கீழுள்ள
மின்தளத்தில் உள்ளன வே. ... 8

நிரோட்டம் இதழகலுக் காகா எழுத்துகள்
கீழ்வரு மாறு கணக்கு. ... 9

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன், 
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ்  ௧௨ உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15மெய்யுடன் 
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

பார்க்க:

*****

11.25. திருக்குறளில் ஓட்டம்/இதழுறல் குறட்பாக்கள்
(குறள் வெண்பா)

நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால். ... 1

ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல். ... 2

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02

*****

11.26. ஔவையின் குறள்மூலம்
(குறள் வெண்பா)

ஔவை அருளிய ஞானக் குறளாம்
குறள்மூலம் பாக்கள் சில. ... 1

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. 016

எழுபத் தீராய நாடி யவற்றுள்
முழுபத்து நாடி முதல். 031

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 084

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191

பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். 214

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. 272

*****

ramaNi

unread,
Sep 5, 2017, 1:35:08 AM9/5/17
to சந்தவசந்தம்
11.66. முடுகு வெண்பா
(நிலைமண்டில ஆசிரியப்பா)

1. முடுகு, முடுகியல், முடுகு வண்ணம், முடுகியல் வண்ணம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

[முடுகு பற்றிக் கோபாலையரின் ’தமிழிப் பேரகராதி’ நூல்தரும் திரட்டு:

முடுகெனும் பதமது விரைவெனும் பொருள்படும்
முடுகியல் செயுள்தனில் விரைவொலி மிகுவரும்
அருகமை யிருகுறில் முடுகொலி தருமெனில்
ஒருநெடி லெழுத்திலை யெனுமடி முடுகுமே. ... 1

முடுகியல் செயுளடி பிறவடி களையும்
கொடுவரும் தான்தனித் திலையென வறிக
அகவற் றளைவரும் அராகம் முடுகியல்
தகவுறும் குறிலிணைத் தொடர்வினில் எழுமே. ... 2

அளவடி நெடிலடி அறுசீர் எழுசீர்
உளவடி யிவற்றில் முடுகியல் இயலும்
ஒற்றுகள் நிறுத்தும் இருகுறில் முடுகும் 
குற்றொலிக் குறுக்க நெடில்களும் முடுகுமே. ... 3

***
முடுகு வண்ணம், முடுகியல் வண்ணம்

முடுகியல் தொடுத்த அடியொடு பிறவடி
அடுத்துவே றுபடத் தொடர்வரும் ஓட்டம்
முடுகியல் வண்ணம் எனும்பெயர் பெறுமே.
திகிரியின் உருட்டலில் நிகழும் முடுகியல்
உருட்டுவ ணமெனத் தொல்காப் பியம்சொலும். ... 4

தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
உருகெழு முருகிய முருமென வதிர்தொறு
மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்
எனவரு மடிகளில் முடுகியல் நிகழ்வே. ... 5

இருகுறில் நிரைநடு காய்ச்சீர் களிலும்
கருவிளச் சீரிலும் முடுகியல் நிகழும்
புளிமா புளிமா எனும்தொடர்ச் சந்தம்
பெரிதமை சீர்கள்கொளும் முடுகுவெண் பாவாம். ... 6

(வேறு: பரணித் தாழிசை)
இருவள வொத்த வடிகள் பயில
. வியலும் யாப்பெனும் கலிங்கப்
பரணியின் போரொலி முடுகியல் செவியில்
. பரவும் வகையிது காணீர்! ... 7

எடுமெடு மெடுமென வெடுத்ததோர் 
. இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
. விடும்விடு மெனுமொலி மிகைக்கவே.

***
2. முடுகு வெண்பா என்பது

கருவிளச் சீர்கள் முடுகொலி கொண்டும்
வரும்தொடர் என்றவை வெண்பா விலிலை
இருகுறில் மையமாம் காய்ச்சீர் புளிமா
வரும்தொடர் வெண்பா முடுகு. ... 1

முடுகொலிச் சீர்களில் மாத்திரை வேறாய்த்
தொடரும் ஒலிகள் முடுகியல் ஆகா
எனவே முடுகுவெண் பாவினில் வண்ணம்
ஒலிக்க வெழுமே முடுகு. ... 2

புளிமா முழுதும் குறிலென வந்தால்
புளிமா பெறுவது மாத்திரை மூன்று
புளிமா வொருநெடில் மாத்திரை நான்கு
புளிமா இருநெடில் ஐந்து. ... 3

புரவி எனும்சொலின் மாத்திரை மூன்று
அரிவை எனிலது மாத்திரை நான்கு
உராய்வே எனிலது ஐந்து. ... 4

புதிது புதிது இயலு முலகு
அதுவு மிதுவு மழகு.  ... 5

புளிமா முழுதும் குறிலென வாகப்
புனைவுறு மேற்பாக் குறளின் முடுகு
தனன தனன எனுமொலிச் சந்தம்
எனவே வருவது வாம். ... 6

இதன்வழி தானே முடுகுவெண் பாவில்
இதந்தரும் வண்ணம் இயலும் வகைகளில்
மாறுதல் இல்லாத சந்தம் ஒலிக்கவே
தேறுதல் கொள்ளும் திறம். ... 7

வண்ணம் ஒலிக்கும் முடுகுவெண் பாவினை
எண்ணம் ஒலிக்க எழுத முயல்பவர்
சந்தமும் வண்ணமும் கூறும் இலக்கணம்
சிந்தையில் கொள்ளல் சிறப்பு. ... 8

*****

11.67. அடிப்படைச் சந்த விலக்கணம்
(வெண்பா)

1. சந்தம் என்பது
(வெண்பா)

சந்த விலக்கண வேராம் லகு-குரு
வந்தன யாப்பில் வடமொழி தந்தே
லகுவெனில் மாத்திரை யொன்றென வாகும்
குருவினில் ஆகுமி ரண்டு. ... 1

தனிக்குறில் மட்டும் லகுவகை யாகும்
தனிக்குறில் ஒற்றும் தனிநெடில், ஒற்றுடன்
என்றிவை யாவும் குரு. ... 2

குறிலொரு மாத்திரை என்றே ஒலிக்கக்
குறில்பினே ஒற்றிரு மாத்திரை யோசை
நெடிலிரு மாத்திரை என்றே ஒலிக்க
நெடில்பினே ஒற்றும் இருமாத் திரையாம்.
குறிலடி யீற்றில், சமமாய் ஒலிக்கும்
அரையடி யீற்றில், இருமாத் திரையாம்.
குறிலிணை யென்றால் இருலகு வாமே
குறிலிணை யொற்றெனில் முன்னால் லகுவும்
அதன்பின் குருவும் என. ... 3

ப-வெனில் லகுவென் றொருமாத் திரைபெறும்
பா-வாம் குருவென் றிருமாத் திரைபெறும்
பல்-மாத் திரையாம் இரண்டு குருவென
பால்-மாத் திரையாம் இரண்டு குருவாம்
பல-மாத் திரையாம் தனித்தனி ஒன்றாம்
பவொரு குறிலாம், லவொரு குறிலாம்
பலம்-எனும் சொல்லில் ப-குறில் லகுவென
லம்-குறில் ஒற்று குரு. ... 4

சந்தங்கள் மாத்திரை எல்லை மொழிவதாய்
வந்ததொல் வெண்பா விது. ... 5

குற்றெழுத்துச் செவ்வி லகுவாகும் நெட்டெழுத்தும்
குற்றொற்றும் நெட்டொற்றும் கோணமாய்த் - தெற்றக்
குருவென்ப தாகும் குறிலும் குருவாம்
ஒருகால் அடியிறுதி யுற்று. ... 6

***
2. அடிப்படைச் சந்தங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

தத்த தாத்த தந்த தாந்த
தன-தான தன்ன தய்ய என்றே
அடிப்படைச் சந்தம் எட்டென வாமே. ... 1

பட்டு பாக்கு பந்து பாங்கு 
பரி-பாவி கும்மி பல்லி என்பன
அடிப்படைச் சந்தச் சொற்களென் றறிக. ... 2

அடிப்படைச் சந்தம் இறுதியை நீட்டும்
சார்புச் சந்தம் எட்டென வருமே.
தத்தா தாத்தா தந்தா தாந்தா
தனா-தானா தன்னா தய்யா என்றே
சார்புச் சந்தம் எட்டென வாமே. ... 3

அக்கா காற்றா அந்தோ காங்கோ
நிலா-மானா அண்ணா அய்யா என்பன
சார்புச் சந்தச் சொற்களென் றறிக. ... 4

மேலுள சந்தம் பதினா றாவதில்
தன-வும் தனா-வும் நிரையசை யாகும்
மற்றவை யெல்லாம் நேரசை யாமே. ... 5

சீர்களின் இடைவரும் இடையின வொற்றும்
சிறுபான் மையாக னணம வொற்றும்
மாத்திரை பெறாதே தொலிப்பதும் அறிக.
முக்தி பித்தா மட்டம் உய்த்து
பொய்ப்பல் கர்த்தர் சொற்கள் யாவும் 
மாத்திரை மூன்றாய் ஒலிபெற வருமே. ... 6

***
3. அரைச் சந்தங்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அடிப்படை களுடன் இணைவதா மென்றே
அரைச்சந் தங்கள் கீழுள் ளவையாம்
தகரமெய்(த்) நகரமெய்(ந்) னகரம்(ன) தகரம்(த)
னாகாரம்(னா) தாகாரம்(தா) எனுமா றெழுத்தும்
னத்-தத் னாத்-தாத் னந்-தந் னாந்-தாந்
என்னும் எட்டாம் எழுத்துத் தொடர்களும்
அரைச்சந் தமென அழைக்கப் படுமே. ... 1

அரைச்சந் தங்கள் அடிப்படை யுடனே
ஒன்றோ பலவோ கூடி இசைக்கும்
தத்-எனும் அரையாம் தத்த வுடன்சேர
தத்தத்த என்னும் ஒலியில் இசைக்கும்
இதுபோல் மிகப்பல சந்தம் செய்யலாம். ... 2

[அரைச் சந்தங்கள்: த்,ந்,,ன,த,னா,தா,
னத்,தத்,னாத்,தாத்,னந்,தந்,னாந்,தாந். 
இவை ஒன்றுடனோ, பலவற்றுடனோ கூடிச் சந்தம் இசைக்கும்.
சான்றாக, தத் என்ற அரைச்சந்தம், தத்த என்பதுடன் கூடித்
’தத்தத்த ’என்று இசைக்கிறது. 
இவ்வாறு கோடிக்கணக்கான சந்தங்களை உருவாக்கலாம்.
--பாவலர் மா.வரதராசன்]

சந்தம் வண்ணம் இலக்கணம் விவரமாக அறிய:
பசுபதியாரின் ’கவிதை இயற்றிக் கலக்கு’ 
நூலில் இயல்கள் 37-45, 49-51 படித்தறிக.

***
4. சந்தமும் வண்ணமும்

சந்தம் வண்ணம் குறியொன் றெனினும்
சந்தம் என்பது மாத்திரை பொறுத்தே
வண்ணம் என்பது மாறாச் சந்தமே. ... 1

தத்த சந்தம் சந்தப் பாடலில்
குரு-லகு தொடராய் மும்மாத் திரையாம்
கட்டு கந்து கன்னி கள்ளி 
சந்தப் பாடலில் தத்த வாமே. ... 2

வண்ணப் பாவெனில் மேலுள சொற்களில்
கட்டு பதத்தில் தத்த சந்தம்
கந்து பதத்தில் தந்த சந்தம்
கன்னி என்பது தன்ன சந்தம்
கள்ளி என்பது தய்ய சந்தமாம். ... 3

தத்த சந்தம் வண்ணப் பாடலில்
குறில்வல் லொற்று வல்லின உயிர்மெய்க்
குறிலெனும் வரையறை கொள்ளுவ தாமே
மக்கி மச்சு பட்டு பத்து
தப்பி வற்றி யாவும் தத்த. ... 4

தந்த சந்தம் வரையறை யென்றே
குறில்மெல் லொற்று வல்லினக் குறிலாம்
அங்கு அஞ்சி அண்டு அந்தி
அம்பு அன்று யாவும் தந்த. ... 5

தன்ன சந்தம் வரையறை யென்றே
குறில்மெல் லொற்று மெல்லிடைக் குறிலாம்
அங்ஙன் அஞ்ஞன் அண்ணன் சந்நி(யாசி) 
அம்மி மென்வி யாவும் தன்ன. ... 6

தய்ய சந்தம் வரையறை யென்றே
குறிலிடை யொற்று இடைவல் குறிலாம்
நெய்தல் கர்மம் அல்லி செவ்வி
(நி)கழ்தல் வள்ளல் யாவும் தய்ய. ... 7

தன-எனும் சந்தம் வரையறை யென்றே
இருகுறில் இணைந்துடன் மெல்லிடை யொற்றாம்
குரு-லகு சுவர் வனம் படம் 
அறம் நிழல் யாவும் தன-வாம். ... 8

நெடிலில் தொடங்கும் பிறசந் தங்கள்
இதுபோல் வரையறை உள்ளி யுணர்க
விவரம் இன்னும் வேண்டுவ தானால்
மேலுள நூலில், தளத்தில் காண்க. ... 9

*****

11.68.முடுகு வெண்பா இலக்கணம்
(வெண்பா)

அடிப்படை யோடே அரைச்சந் தமென
வடித்தொரு சந்தமாய் வண்ணம் - நடைகொளும்
வெண்பா விலக்கணம், மோனை எதுகையும்
கொண்டெழுவெண் பாமுடு கு. ... 1

ஆளும்சந் தத்தின் அரைச்சந் தமெனவே
நாள்மலர் காசு பிறப்பென் றமையும்
முழுமுடுகு வெண்பாவின் ஈற்றுச்சீர் கொள்ளும்
வழுவிலாச் சந்த வகை. ... 2

தத்தனத்த சந்தத்தின் ஈற்றுச்சீர் தத்துவாம்
தந்தந்த சந்தத்தில் ஈற்றுச்சீர் தந்து
தனத்தத் எனும்சந்தம் ஈற்றில் தனத்துவாம்
தானெனில் ஈற்றுச்சீர் தானு. ... 3

முன்முடுகு வெண்பாவில் முன்பா திமுடுகு
பின்முடுகு வெண்பாவில் பின்பாதி - என்றுவரும்
முற்றும் முடுகொலி யேற்று வருவது
முற்று முடுகுவெண் பா. ... 4

***
முடுகுவெண்பா இலக்கணம் பற்றிச் சில கருத்துகள்

இலந்தை இராமசாமி
முடுகு என்பது வண்ணப் பாடல்களில் வரும்போது பெரும்பாலும் 
.. இருகுறிலில் தொடங்கும் சீர்களாக வரும். 
.. அது வேகம் கொடுக்கும். 
.. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

முடுகு வெண்பாக்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது.
.. முடுகு வெண்பாக்களில் பெரும்பாலான சீர்கள் 
.. காய்ச்சீர்களாக வரும். அப்படி வரும்போடு 
.. முதல் சீர் இருகுறில் தொடங்கி காய்ச்சீரானால் 
.. அடுத்தசீர் நேரசையில்தான் தொடங்கவேண்டியிருக்கும்.
.. எனவே வெண்பாவைப் பொறுத்தமட்டில், 
.. அது முன்முடுகானாலும் பின்முடுகானாலும், 
.. முழுமுடுகானாலும் விரைவு வேண்டும்.
.. சந்தக்குழிப்புக்கு ஒத்துவரவேண்டும். இறுதிச்சீரில் ஓட்டம் இயல்பாக உடைபடாமல் 
.. சென்று முடியவேண்டும்

முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முறை.

முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடைத லேநல் முறை

இரண்டாவது குறள் வெண்பாவில் வேநல் என்பது 
.. இலக்கணப்படியும் சந்த அமைப்புப் படியும் சரியே 
.. என்றாலும் பாடல் என்பது இயல்பாக நடப்பது போல 
.. வேநல் நடக்கவில்லை. அதில் ஒரு வே க்கும் நல்லுக்கும் 
.. இடையே ஒரு நெருடல் வந்துவிடுகிரது.

முடுகுடைய பாடல் குடுகுடென ஓடி
முடிவடையக் கூறல் முடிபு.

.. முடிபு சற்று ஒதுங்கிவிடுகிறது
.. எனவே முதற் குறள் ஒழுங்கான முடுகு.

*****

11.69. முடுகு வெண்பா இலக்கியச் சான்றுகள்
(பசுபதியாரின் க.இ.க. நூல் மற்றும் இணையத்தில் இருந்து)

1. முன்முடுகு வெண்பா

பாம்பன் சுவாமிகள்
ஞானவயில் வேலிறைவ நாகமயி லேறிறைவ
வானவர்பி ரானிறைவ மாலிறைவ - கோனிறைவ
என்றுதுத் திப்பா ரிருமையு மேல்வாழ்க்கை
ஒன்றுவ ருள்ளே யுணர்.

**
கடிகைமுத்துப் புலவர்
கன்னிமுக நன்னிலவு கன்னலித ழின்னிலவு
பன்னுநகை வன்னமுலை பன்னிருகை - மன்னவநின்
மின்னயிலை யன்னவிழி மின்னலிடை பின்னுசடை
அன்னநடை யின்னவறி வாய்.

***
2. பின்முடுகு வெண்பா

அபிராமி பட்டர்
பற்றிப் பணிந்து பரவ வரந்தருவாய்
கற்றைச் சடையா கடவூரா - வெற்றிநெடுங்
கொண்டலொக்குங் கண்டசத்தங் கொண்டெதிர்த்தங் கஙருக்கும்
சண்டனைக்கண் டன்றுதைக்கும் தாள்.

(தளை தட்டும், விளாங்காய்ச்சீர் கொண்ட சில பின்முடுகு வெண்பாக்களுக்கு
பசுபதியார் நூலில் கண்க.)

காளமேகம்
விரவு சிறுகுயிலே, வெண்மதியே மாரன் 
வரவு தனித்திருக்க மாட்டாள்-இரவதனில் 
கண்டங்கத் தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின் 
கண்டங்கத் தரிக்கொத்துக் காய்.

[பின்முடுகு வெண்பாவில் தனிச்சீருக்குப் பின் தளைபார்க்க வேண்டியதில்லை
என்றோர் கருத்துளது.]

பட்டினத்தார்
வரைதெரியா இன்பக் கடலில்மூழ் காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே - உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில்.

பாரதிதாசன்
சீர்மணக்கும் தென்மயில வெற்பில் திருமுருகன்
பேர்மணக்கும் பாட்டில் பிழையகல - ஓர்மணக்கு
எத்தனப்ப னற்களிற்றி ணைப்பதத்தி னைத்துதிப்ப
னெத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு.

பாம்பன் சுவாமிகள்
நினைத்தார் வினைத்தா நெரிக்குமரு ளைத்தா
வெனைத்தா வுனைத்தா வெனத்தா - வனத்தார்கள்
சேர்புவளர் மாதரசி சேர்தலைவ வாசிறலை
யேர்புமயி லேறிறைவ னே.

வேம்பத்தூர் பெருமாளையர்: நெல்லை வருக்கக் கோவை
தேரோரும் வீதியெலாஞ் செங்கயலும் சங்கினமும் 
நீரோடுலாவி வரும் நெல்லையே! - காரோடும் 
கந்தரத்த ரந்தரத்தர் கந்தரத்த ரந்தரத்தர் 
கந்தரத்த ரந்தரத்தர் காப்பு!

[காரோடும் = கருமையான 
கந்தரத்தர் = கழுத்து உடையவர் 
அந்தரத்தர் = ஆகாயத்தில் உள்ளவர் 
கந்து அரத்தர் = முடியில் நீர் அணிந்தவர் 
அம் தரத்தர் = உயர்வான தரத்தையுடையவர் 
கந்தர் அத்தர் = முருகனுக்கு தந்தை 
அந்தரத்தர் = ஆகாயத்தை மேனியாகக் கொண்டவர்]

*****

11.70. முடுகு வெண்பா இன்று
(வெண்பா)

(சந்தவசந்தம் கூகிள் குழுமம், பைந்தமிழ்ச் சோலை முகநூல் 
குழுமப் பதிவுகளிலிருந்து)

மா.வரதராசன் (முன்முடுகு)
வெற்றுப்ப யற்சொற்ற இற்றுச்சொ லுட்பட்டு
முற்றுப்பெ றற்கெற்று மொத்தத்தி - லிற்றைக்கு
நாட்டை இழந்து நலங்கெட்ட எந்தமிழர்
மீட்சி யடைவர் மிளிர்ந்து.

***
மா.வரதராசன் (பின்முடுகு)
காணும் பொருள்மறக்கக் காணாப் பொருளினிக்கப் 
பூணும் மொழிதுறக்கப் புத்தியிலே - காணும் 
முற்றிவிடு பித்துநிலை முப்பொழுது முற்றலக 
நெற்றிவிழி பற்றுகவென் நெஞ்சு!

***
அ. ராஜகோபாலன் (பின்முடுகு)
வேண்டித் தமிழ்கேட்டாய் வெண்பாவிற் பின்முடுகாய்
நீண்ட நெடுநாள்கள் நீவாழ்க - ஈண்டு
மலையு மலையு மதியு மொளியு
முலகி னிலவு மளவு.

***
(முற்றுமுடுகு வெண்பா)
தனன தனன: குருநாதன் ரமணி

இமய கிரியி லுதிந தியது
நமது வளமு மெமது மதமு 
மெனுவி தமெழு முடுகொ லியினில்
தனன தனன வணம்.

***
தத்தனத்த: இலந்தை ராமசாமி

அத்தனத்தன் தத்தனத்தன் நர்த்தனத்தை எத்தனிக்க
மத்தளத்தை மொத்தெனத்தன் சத்தனைத்தும் - ஒத்திசைக்க
எத்திறத்தும் இத்தரத்தை ஒத்திருக்க மத்தொருத்தன்
இத்தலத்தும் எத்தலத்தும் இல்.

***
தந்ததன: குருநாதன் ரமணி

இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
ளிங்குமன வங்குவினி லெங்கு?

***
தந்தனந்த: மா.வரதராசன்

கொண்டுவந்த தென்னவென்று குன்றமர்ந்த வன்றெளிந்து
மண்டலம்பி றந்துநைந்து மங்குமுன்பு - நண்பிணைந்த
தங்கரங்கொ டும்புரிந்து தங்குமென்ற பண்புணர்ந்து
பொங்குமன்பு முண்ணிறைந்து பொன்று!

***
தந்தனா: சியாமளா ராஜசேகர்

இந்தநா ளன்றுபோ லின்பமே தந்ததோ 
பந்தபா சங்களே பஞ்சமோ? - சொந்தமோ
நஞ்சுபோ லெண்ணுதே நன்றியே யின்றியே
வஞ்சமோ நெஞ்சிலே வம்பு.!

***
தனத்தத்: வெங்கடேசன் சீனிவாச கோபாலன்

சினத்தைத் தடுத்துத் தெவிட்டத் தெவிட்டத்
தனித்துக் களித்துத் தரத்திற் - கனத்துப்
பிடிப்பைத் துடைத்துப் பிறப்பைத் தொலைக்கப் 
படிப்பைக் கொடுத்துப் பழக்கு!

***
தானன: சுதர்சனா

மீனெனவொ ராமையென மேதினியி லேபெரிய
ஏனமொடு வீறுடைய ஏறரியு - மானபல
வானவுரு தானுடைய வானவுரு வானபெரு
மானுடைய மாயவனெ னாறு 

*****

தனதனன தான: இலந்தை ராமசாமி

கடகடென நீரும் கடகடெனப் பாயும்
கடகடென நீயும் கட.
(கடந்துசெல்‌என்று சொல்லும் வண்ணம் நீரும் கடகட என்று வேகமாகப் பாயும் . நீயும் 
வேகமாகச் சென்று கட)

*****
 

ramaNi

unread,
Nov 14, 2017, 8:34:57 AM11/14/17
to சந்தவசந்தம்
அறிஞர்கள் இப்பதிவை ஒருமுறை பார்த்துத் திருத்தங்கள் இருந்தால் சொல்ல வேண்டுகிறேன்.
அன்புடன், ரமணி

*****
#யாப்பிசைப்போம்1184
கவிதையில் யாப்பு
பகுதி 2. செய்யுளியல்

11.84. வெண்பா வித்தகம்: கட்டளை வெண்பா
(இன்னிசைக் கட்டளை வெண்பா)

வித்தக வெண்பா வகைகள்
(கட்டளை வெண்பா: பன்னிரெண்டெழுத்து)

குறள்சிந் தளவியல் பஃறொடை யாகிக்
குறள்தவிர்த் தேனைய நேரின் னிசையாம்
எனவரும் ஐந்தெனும் வெண்பா வகையில்
தனக்கென வித்தகம் தாங்குவெண் பாக்கள்
இனமென நால்வகை யே. ... 1

(சிந்தியல் வெண்பா)
கட்டளை வெண்பா கலம்பக வெண்பா
சமநடை வெண்பா மயூரவியல் வெண்பா
என்வரும் நால்வகை யே. ... 2

***
கட்டளை வெண்பா இலக்கணம்
(கட்டளை வெண்பா: பன்னிரெண்டெழுத்து)

ஈற்றடி விட்டுவிட் டேனை யடிகளில்
ஏற்றும் எழுத்துகள் எண்ணள வொத்திடச்
செய்வது கட்டளைவெண் பா. ... 3

***
முழுதும் காய்ச்சீர் கூடாது!
(கட்டளை வெண்பா: பன்னிரெண்டெழுத்து)

வெண்சீர் அடுத்தொரு வெண்சீர் வரவெழும்
வெண்டளைச் செப்பல் ஒலியாய் வருவது
வெண்பா கலிப்பா வெனுமிரு பாவகைக்
கொப்ப அமைவதால் கட்டளைப் பாக்கதே
கொப்பிலை யென்னும் உரை.* ... 4

வெண்சீர் அடுத்தோர் இயற்சீர் வரவெழும்
வெண்டளையைக் கட்டளை வெண்பா கொளுமே
இயற்சீர் களால்வரும் வெண்டளை ஏற்றே
நயம்படும் ஓசை நலம். ... 5


***
ஏந்திசைச் செப்பலோசை இல்லை!
(கட்டளை வெண்பா: பன்னிரண்டெழுத்து)

காய்ச்சீர் முழுதும் பயிலும்வெண் பாவினில்
தோய்ந்தெழும் ஏந்திசைச் செப்பல் ஒலியினில்
கட்டளை வெண்பா கருதுவ தில்லையாம்
மட்டம் அடுத்தெனும் தூங்கிசையின் செப்பல்
இயற்சீர் முழுதும் பயிலும் வகையும்
இயற்சீ ருடன்சில காய்ச்சீர் விரவும்
ஒழுகிசைச் செப்பல் ஒலிகளே ஏற்பாய்க்
கருதப் படுவதாம் கட்டளை வெண்பா
ஒருகாய்ச்சீர் வந்துறின் ஒன்றும் இயற்சீர்
அடுத்து வருவதாய்க் கட்டளை வெண்பா
வடிவம் அமைந்திடும் வார்ப்பு. ... 6

இரண்டுகாய்ச் சீர்கள் இணைந்தோர் அடியில்
வருதல் இலையாம் விதத்தில் அமைந்தே
உருப்பெறும் கட்டளைவெண் பா. ... 7

***
கட்டளை வெண்பா அடிகளில் எழுத்தெண்ணிக்கை
(பஃறொடை வெண்பா)

காய்ச்சீர் இயற்சீர் எழுத்துகள் கட்டளை 
ஆய்ந்தால் இதுபோல் அமைப்பை அறியலாம்:
தேமாங்காய் மூன்று புளிமாங்காய் நான்கு
கருவிளங்காய் ஐந்தெனில் கூவிளங்காய் நான்காகும்
தேமா இரண்டு புளிமாவில் மூன்று 
கருவிளம் நான்கெனில் கூவிளம் மூன்றே
யெனும்விதம் கட்டளை யே. ... 8

(இன்னிசை வெண்பா)
காய்ச்சீர் இயற்சீர் கலந்தெழக் கட்டளை
யாய்வரும் வெண்பா வடியின் எழுத்து
பதிநான் கெனவோ பனிரெண் டெனவோ
பதிமூன் றெனவோ வரும். ... 9

(சிந்தியல் வெண்பா)
இயற்சீரொன் றேவரும் கட்டளை வெண்பா
இயலும் எழுத்துகள் பன்னிரண் டாகும்
அயலெண் வருவதி லை. ... 10

***
கட்டளை வெண்பா பெயர்
(கட்டளை வெண்பா: பன்னிரண்டெழுத்து)

தன்வகைப் பேருடன் கட்டளை வெண்பாவில் 
இன்னிசை நேரிசை சிந்தியல் பஃறொடை
மற்றும் அளவியல் வாகு. ... 11

இன்னிசைக் கட்டளை நேரிசைக் கட்டளை
சிந்தியல் இன்னிசை நேரிசைக் கட்டளை
பஃறொடை இன்னிசை நேரிசைக் கட்டளை
வெண்பா எனும்விரி வே. ... 12

***
கட்டளை வெண்பா: சான்றுகள்
(யாப்பருங்கலம் விருத்தியுரை)

(பன்னிரெண்டெழுத்து)
மாவடு வென்னும் மலர்புரை கண்ணினாய்
பாவெடுத்துப் பாடும் பயனோக்கி - மேவி
எடுத்த இனத்தினால் இன்பஞ்சொற் சேரத்
தொடுத்த மொழிவ தமிழ்.

***
(பதிமூன்றெழுத்து)
நடைக்குதிரை ஏறி நறுந்தார் வழுதி
அடைப்பையா கோறா எனலும் - அடைப்பையான்
கொள்ளச் சிறுகோல் கொடுத்தான் றலைபெறினும்,
எள்ளா தியங்காண் டலை.

வெறிகமழ் தண்புறவின் வீங்கி உகளும்
மறிமுலை உண்ணாமை வேண்டிப் - பறிமுன்கை
அ‌உ அறியா அறிவில் இடைமகனே!
நொ‌அலையல் நின்னாட்டை நீ.

கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற்
றிரவொடு நிற்பித்த தெம்மை - அரவொடு
மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க
மாட்டாமை பூண்ட மனம்.

நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான்
பாலைநல் வாயின் மகள்

***
(பதினான்கெழுத்து: காய்ச்சீர் மிக்கு இணையாகவும் வருவது)
இன்னமிழ்தம் ஊட்டி எழில்வளைசேர் முன்கைக்கொண்
டென்னையர்பேர் சொல்லென் றிரந்தாலும் - தென்னயம்பைச்
செஞ்சுடர்வாள் வெஞ்சினவேற் சீர்ச்சேந்தன் என்னுமால்
கிஞ்சுகவாய் அஞ்சொற் கிளி.

*****

ramaNi

unread,
Dec 8, 2017, 10:26:14 PM12/8/17
to சந்தவசந்தம்
#யாப்பிசைப்போம்1187
கவிதையில் யாப்பு
பகுதி 2. செய்யுளியல்

11.87. வெண்பா வித்தகம்: கலம்பக வெண்பா
(அடைப்புக்குறிக்குள் எண்கள் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்)

(கலம்பக வெண்பா: 12-13)
கலம்பகம் என்றால் கலப்பு றுமகம்
கலம்பகவெண் பாவென்றால் கட்டளை வெண்பா
மறுதலை யாவதாம் மாண்பு. ... 1

(கட்டளை வெண்பா: 12)
ஈற்றடி விட்டுவிட் டேனை யடிகளில்
ஏற்றும் எழுத்துகள் எண்ணள வொத்திடச்
செய்வது கட்டளைவெண் பா. ... 2

(கலம்பக வெண்பா: 12-13)
ஈற்றடி விட்டுவிட் டேனை யடிகளில்
ஏற்றும் எழுத்துகள் தம்மளவில் ஒவ்வாது
செய்தல் கலம்பகவெண் பா. ... 3

(பஃறொடைக் கலம்பக வெண்பா: 11-12-13-14)
கட்டளை யில்லாத வெண்பா வகைகள்
கலம்பக மோவினில் அங்ஙன மில்லை!
கலம்பக வெண்பா அடிகளொவ் வொன்றிலும்
கட்டும் எழுத்துகளின் எண்ணிக்கை வேறெனவே
கட்டல் கலம்பகவெண் பா. ... 4

(பஃறொடைக் கலம்பக வெண்பா: 13-12-11-14)
கலம்பக வெண்பாவில் கட்டளை போலன்றிக்
காய்ச்சீர்கள் மட்டுமே ஏந்திசைச் செப்பலாய்
காய்ச்சீர் இயற்சீர் ஒழுகிசை யென்றோ
இயற்சீர் பயின்றுவரும் தூங்கிசையாய் என்றோ
பயின்று வரலாம் பல. ... 5

(கலம்பக வெண்பா: 11-13-12)
சிந்தியல் நேரியல் பஃறொடை மற்றும்
கலிவெண்பா ஆகும் கலம்பக வெண்பாவாம் 
இன்னிசை நேரிசை என்னும் வகைகளில்
மன்னியே பல்கி வரும். ... 6

***
கலம்பக வெண்பாச் சான்றுகள்

(கலம்பக வெண்பா: 16-15-14)
மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும்
அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள்
பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற
இன்சகள ஆசனத்தான் ஈடு.
--யாப்பருங்கலம்

(கலம்பக வெண்பா: 12-11-13)
தானோரும் எம்முள்ளி வாராது தானண்ணி
வானோரை வாட உரப்புங்கொல் - வானோர்
முடிக்கோடி தேய்த்தானே மூவமிழ்தம் தந்தான்
அடிக்கோடி மீளாத அன்பு

*****
 

ramaNi

unread,
Dec 16, 2017, 9:33:17 AM12/16/17
to சந்தவசந்தம்
#யாப்பிசைப்போம்1188
கவிதையில் யாப்பு
பகுதி 2. செய்யுளியல்

11.88. நேரிசைக் கலம்பக வெண்பா புனைவுகள்
(அடைப்புக்குறி எண்களாக அடிகளில் பயிலும் எழுத்தெண்ணிக்கை முறையே.)

பேய்மழை!
(சிந்தியல் நேரிசைக் கலம்பக வெண்பா: 12-15)

காய்ந்த சருகுகள் காற்றில் பறக்கவே
தோய்ந்து பரந்த துகள்புயல் - பேய்மழையாய்ப்
பெய்தது பூமியின் பேறு.

***
பதினாறு!
(சிந்தியல் நேரிசைக் கலம்பக வெண்பா: 12-13)

பதினாறும் பெற்றுப் பெருவாழ வேண்டிப்
பதிமனைக்கு வாழ்த்துகள் சொல்லிப் - பதமுரைத்தார்
கூட்டுக் குடும்பமின் று.

***
வேள்வி
(அளவியல் நேரிசைக் கலம்பக வெண்பா: 12-13-15)

வானும் நிலமும் மழைசார்ந் திருப்பன
வேனில் வசந்தம் மழைகுளிர் - ஆனவையாய்
நான்கு பருவநிரல் நன்மைதரச் செய்வதுவே
ஆன்றோர் செயும்வேள்வி யாம்.

***
வன்முறை
(அளவியல் நேரிசைக் கலம்பக வெண்பா: 15-14-13)

அன்னமவள் ஏழையெனின் அண்ணலவன் செல்வந்தன்
இன்றிருவர் காதல் எழுப்பிய - வன்முறையில்
அண்ணல் தலைகொய்தே அன்னம் சிறைபிடித்தார்
கண்ணெதிரே நேர்ந்தது காண்!

***
மாலைக் காட்சி
(பஃறொடை நேரிசைக் கலம்பக வெண்பா: 13-11-12-14-15-16)

ஓரிடம் நில்லா துலாவரும் சிற்றெறும்பு 
வேரினில் மொய்த்ததால் வீழ்ந்ததே - கீரை 
கருவண் டதிரும் கடிமலர் மேலே 
குருவி தரையில் குனிந்து - துருவிடுமே 
மென்கதிர் நீர்துளைக்க விண்ணொளிரும் சூரியனால் 
பொன்னலைகள் மின்னிடவே பொய்கைவளர் - மென்பதுமம்
கன்னமிழைத் துக்காணும் காற்று.

--ரமணி, 16/12/2017

குறிப்பு:
கட்டளை வெண்பாவில் ஈற்றடி தவிர ஏனையடிகள் எல்லாம் ஒரே எழுத்தெண்ணிக்கையில் அமையும். கலம்பக வெண்பாவில் ஈற்றடி தவிர ஏனையடிகள் வெவ்வேறு எழுத்தெண்ணிக்கை பெறும். இரண்டடிகள் ஒரே எழுத்தெண்ணிக்கையில் அமையாது என்பது இதன் சிறப்பு.

*****


ramaNi

unread,
Dec 21, 2017, 8:10:40 AM12/21/17
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு
பகுதி 2. செய்யுளியல்
 #யாப்பிசைப்போம்1189

11.89. இன்னிசைக் கலம்பக வெண்பா புனைவுகள்
(அடைப்புக்குறி எண்களாக அடிகளில் பயிலும் எழுத்தெண்ணிக்கை முறையே.)

நகைச்சுவைக் கலம்பக வெண்பாக்கள்
வாரிகள்
(சிந்தியல் இன்னிசைக் கலம்பக வெண்பா: 13-14)

வாரிகள் ஒன்றையொன்றை வாழ்த்துவ தெப்படி?
ஓரலைக் கையசைத்தே! ஓசையில் ஆர்ப்பரித்தே!
கார்நீக்கிக் காணும் கதிர்.

[வாரி = கடல்]

சுவர்கள்
(சிந்தியல் இன்னிசைக் கலம்பக வெண்பா: 12-13-14)

சுவரொன்று மற்றோர் சுவரிடம் சொல்லும்:
உவந்துனைநான் சந்திப்பேன் ஓரத்தில்! மற்றோர்
சுவரோ சிரித்தபடி சொல்லுமிதை: அன்பே!
சுவரோரம் நிற்பதோர் தூண்!

குரல்கள்
(பஃறொடை இன்னிசைக் கலம்பக வெண்பா:  14-13-12-15-16)

சாருலதா ஆந்தை சமமேன்? அலறுவதால்! 
காருடல்கொள் காக்கைகற் கண்டேன்? கரைவதால்!
கோழியேன் ஆகும் குதிரை? கனைப்பதால்! 
ஆழியையேன் வெண்ணையென்று சொல்வோம்? திரளுவதால்! 
கோகிலத்தைப் பெண்ணெனவே சொல்லுவதேன்? கூவுவதால்! 
கூகை குழந்தைக் குழறு.

ramaNi

unread,
Dec 31, 2017, 8:17:22 AM12/31/17
to சந்தவசந்தம்
11.90. வெண்பா வித்தகம்: சமநடை வெண்பா
(அடைப்புக்குறி எண்களாக அடிகளில் பயிலும் எழுத்தெண்ணிக்கை)

(சமநடை வெண்பா: 10)
குற்று கரமொற்று போயெழுத் தெண்ணிக்கை
ஈறு பிறவடி என்றே அனைத்தும்
சமவெண் ணிக்கை எழுத்து வரினே
சமநடைவெண் பாவெனவா தாம். ... 1

ஈற்றடி எண்ணிக்கை உச்சமாய்ப் பத்து
பெற்றிடும் சீர்கள் இதுபோ லமைப்பு
கருவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு. ... 2

சமநடை எண்ணிக்கை இவ்வாறு பத்து
மேலெல்லை ஏழெனும் கீழெல்லை என்று
நிலவிவரச் செய்வகையாம் என்று. ... 3

***
சமநடை வெண்பாச் சான்றுகள்

ஏழு எழுத்துகளில்:

பூக்கு மணத்து நிறத்து விளங்ங்கு
பாக்கு பொருட்சொலோசை யாப்பு. 
--திவாகரத் தனயன்

வீடது வெஃஃகு வார்க்கு விரிவெது
வாடலெ தண்ணா மலை? 
--மூர்த்தி சுப்ரா

***
எட்டு எழுத்துகளில்:

முந்து வினைக்கு மருந்தது தந்திடு
எந்தையவன் கந்தவேள் தாள்.
--கீதா சுதர்சனம்

தீது திருட்டு சிறந்து பழகிடு
ஈதின்றேல் மன்னுலகம் ஏது?
--மூர்த்தி சுப்ரா

***
ஒன்பது எழுத்துகளில்:

பொங்கு வியர்வையில் தொங்கு கரத்தொடு
அங்குலத்தில் நின்றிடவும் ஆடு!
--கீதா சுதர்சனம்
(இரயில் பயணத்தில், கூட்டத்தில், அக்னி நட்சத்திரத்தின் வெய்யிலில் பயணம் செய்தவரின் அனுபவம்)

செய்வது குற்றது செய்யா விடுத்தது
வைவதெலாம் வையகத்தார் சால்பு.
--திவாகரத் தனயன்

பாட்டு வராது படிப்பு வராதெனின்
கேட்டுணரும் காதெதற்கோ கேடு.
--சம்பத் சௌரிராஜன்

வந்து திரிந்து மரித்துச் சரியுமுன்
கந்தனெனைக் கைப்பிடித்தே கா!
--மூர்த்தி சுப்ரா

***
பத்து எழுத்துகளில்:

அமரு வெழுத்து வரம்புடைப் பத்து
சமநடைவெண் பாவினுக்க டிக்கு.   
--திவாகரத் தனயன்

*****

ramaNi

unread,
Jan 2, 2018, 8:06:34 AM1/2/18
to santhav...@googlegroups.com
11.91. வெண்பா வித்தகம்: சமநடை வெண்பா புனைவுகள்
(குறள், சிந்தியல், அளவியல் வெண்பா)

.. ஏழு எழுத்துகளில்:
தங்கு நினைவு தனது வனப்ப்பு
பொங்கும் மனவாழ்வின் போக்கு.

கண்டு மகிழ்ந்து மலைத்து மணந்ந்து
கொண்டு நெகிழ்ந்து கொடுத்து விளைந்ந்து
மண்டுநல் லறமில் வாழ்வு.

***

.. எட்டு எழுத்துகளில்:
வந்து நிலைத்து மலர்ந்து வளர்ந்தது
சிந்தையில் ஏற்றுவோர்க்குச் சீர்.

வாழ்வு விருப்பு வெறுப்பு கலந்தது
சாவு பிறப்பு சலித்து வருவது
யாவும் பரம்பொருளின் யாப்பு.

நீண்டு வளைந்து நெளிந்து சரிவது
யாண்டு நெடித்து நிலைத்து வளர்ந்தது
வெற்பு விளிம்பு விசும்பு தொடுவது
சுற்றிலியற் கையாள் துடிப்பு.

***
.. ஒன்பது எழுத்துகளில்:
நேற்றது இன்றிது நாளையெது கொள்ளாது
தோற்றுமனம் வீழவரும் தொய்வு.

காற்றிது வீசும் கனலிது காய்வது
ஊற்றிது வற்றும் உறவிது வீழ்வது
மாற்றமிதைக் கொள்ளவற்றும் மால்.
[மால் = மயக்கம்]

நன்றெது தீதெது நாமறி வொண்ணாது
என்றெது ஏதிது நம்முணர் வொட்டாது
மன்று நிலைத்து மகிழ்ந்தாடு கூத்தனை
உன்னிமனம் கொள்ளவரும் உய்வு.

***
.. பத்து எழுத்துகளில்:
இடத்தில் அணங்கு இணங்கு மனத்தன்
விடையிவர்ந்து கண்ணருள்வான் விண்.

கழுத்தேறு நஞ்சு கறுப்பாம் விடையன்
வழுத்திவாழ் நெஞ்சு மகிழ்வில் நிலைத்து
விழுவினைகள் கூடிவரும் வீடு.

இடத்தில் அணங்கு இணங்கு மனத்தன்
நடத்தில் குணங்கு நுணங்கு பரமன்
விடத்தை அருந்து வினைக்கு மருந்தன்
தடைகளெலாம் நீக்குவிகிர் தன்.

[குணங்கு = பேய்]

--ரமணி, 02/01/2018

குறிப்பு:
சமநடை வெண்பா என்பது
.. ஈற்றடியும் சேர்ந்த அனைத்து அடிகளிலும்
.. எழுத்தெண்ணிக்கை அளவொத்து,
.. அந்த அளவு ஏழோ, எட்டோ, ஓன்பதோ
.. அல்லது பத்தோ வரப் புனைவது.
.. ஒற்றும் குற்றியலுகரமும் எண்ணும் எழுத்தாகா.

ஈற்றடியில் உச்சக் கட்டளை
.. கருவிளங்காய் கூவிளங்காய் நாள்/காசு
.. என்று பத்து எழுத்துகளில் அமைவதால்
.. சமநடை வெண்பாவின் கட்டளை அடிகள்
.. பத்து எழுத்துகளைத் தாண்டாது அமையும்.

கட்டளை வெண்பாவில்
.. ஈற்றடி தவிர்த்து ஏனை அடிகள்
.. கட்டளை அடிகளாக இருக்கும்.
.. சமநடை வெண்பாவில் ஈற்றடியும் சேர்ந்த
.. அனைத்தும் கட்டளை அடிகள்.

***** 

ramaNi

unread,
Mar 25, 2018, 9:16:27 AM3/25/18
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு
பகுதி 2. செய்யுளியல்
#யாப்பிசைப்போம்1200

12. வெண்பா வினங்கள்
(வெறும்பா விரவியது)

(வெண்டுறை)
வெண்பா விலக்கணம் தழுவியோ வழுவியோ 
வெண்டளை யியங்கியோ வேற்றளை விரவியோ 
அடிகளின் சீரெண் அதுவாய்ப் பலவாய்
இடையில் முடிவில் சீர்குன்றி
ஒன்றும் ஒன்றா ஒலியோடே
குன்றி வரும்வெண் பாவினமே. ... 1

வெண்பா வினம்வரும் வெண்டுறை வெண்டா ழிசைவெளி விருத்தமென
வெண்குறட் பாவரும் குறள்வெண் செந்துறை குறட்டா ழிசையெனவே
வெண்டா ழிசையில் ஒலியொத் துவரின் வெள்ளொத் தாழிசையாம்
வெண்டுறை யிலுமே ஓரொலி வேற்றொலி விதமுண்டே
வெளிவிருத் தத்தில் தனிச்சொல் அதுவே அடிதோறும். ... 2

துறையெனச் சொன்னால் தத்தம் பாவகை யொழுக்கில் துறைபோல் நிற்பதுவாம்
துறைபோல் தத்தம் பாவியல் பெல்லாம் வந்தும் ஒடுங்கியே நிற்பதுவாம்
தாழம் பட்ட ஓசை யோடு வருதல் தாழிசையாம்
தாழம் என்றால் தாமசம் மந்தம் தாழ்வு எனப்பொருளாம்
விருத்தம் தத்தம் பாவடி அளவின் மிக்கு வருவதுவாம்
விருத்தம் தத்தம் பாவகை யிலக்கணம் பொதுவில் பெறுவதிலை. ... 3

*****

12.01. குறள் வெண்செந்துறை
(குறள் வெண்செந்துறை / குறட்டாழிசை)

ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே.
--யாப்பருங்கலம்

எவ்வகைச் சீரும் தளையும் ஈரடி அளவொத்தே
செவ்விதின் முடிவன வெல்லாம் குறள்வெண் செந்துறையே. ... 1

எதுவோ முதலடிச் சீர்களின் எண்ணிக்கை
அதுவே அடுத்தடி வருவது அளவொத்தல். ... 2

பொதுவில் நாலசைச் சீர்கள் காண்பதிலை
அதிகம் நாற்சீர் அளவடி யேகாண்போம். ... 3

நேரிய இசையும் சீரிய பொருளும் பெறவரும் குறள்வெண் செந்துறையின்
வேறு பெயர்களாம் வெள்ளைச் செந்துறை அல்லது வெறுமே செந்துறையாம். ... 4

பொருளின் விழுமம் பற்றியே இலக்கணம் குறையச் செந்துறை எனப்பெயராம்
பொருளின் விழுமம் பற்றித் தொடைகள் இலாதது செந்தொடை என்பதுபோல். ... 5

அறம்பொருள் இன்பம் வீடு எனநான்கு
உறுதிப் பொருளும் விழுமப் பொருளே.
--கி.வா.ஜ. ’கவி பாடலாம்’, பக்.152

செந்துறைப் பாட்டு செந்துறை வெள்ளை எனவும் பெயர்பெறுமே
இந்த நாளில் எவ்வகைப் பொருளும் தாங்கும் செந்துறையே. ... 6

பொதுவில் பொருளது முடியும் ஈரடியில்
அதுவே இன்று நீளும் பலவடியே. ... 7

முதலில் வந்த குறள்வெண் செந்துறைப் பாக்களையே
எதுகை மோனை ஓசை நோக்கி எழுதிலையே. ... 8

சான்று
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.

ஆசான் பசுபதி நூலது செந்துறை பின்னாள் வளம்பெறுமே
பேசும் எதுகையும் மோனையும் ஒழுங்கில் வரவே எனக்காட்டும். ... 9
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்

எண்ணில் அளவொத்த சீர்கள் பயில
எண்ணில் இரண்டே அடிகள் வந்திடும்
செந்தொடை பின்னாள் பலவடி நீள
வந்து நிற்கும் சான்றுகள் கீழே
இவ்வகைப் பாக்களில் பொதுவில் எதுகை
செவ்விதின் அமையும் ஈரடிக் கொன்றென. ... 10

இரண்டடியின் மிக்க செந்துறைச் சான்றுகள்
1. அடியெதுகையின்றிப் பொழிப்பு மோனை பயின்றது

தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை

2. அடியெதுகையும் பொழிப்பு மோனையும் பயின்றது

பார்புகழ் நோபல் பரிசுவென்று பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்
விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்
மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன்
இதற்கென்ன காரணம் என்றவர்க்(கு) உரைத்தார்
ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!
--பசுபதி

*****

ramaNi

unread,
Jun 2, 2018, 9:47:59 AM6/2/18
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு
#யாப்பிசைப்போம்1200

பகுதி 2. செய்யுளியல்
12. வெண்பா வினங்கள்
12.02. குறள் வெண்செந்துறை வளர்ச்சி

அளவொத்த அடிகள் இரண்டில் அமையும் குறள்வெண் செந்துறை
அளவின் வசதியால் அழகாய் வளரும் சாதனை செய்ததே. ... 1

ஆசான் பசுபதி நூலது செந்துறையின் பின்னாள் வளர்ச்சியில்
பேசும் எதுகையும் மோனையும் ஓசையும் வந்ததை விரித்திடுமே. ... 2
(’கவிதை இயற்றிக் கலக்கு’, பக்.84)

தோற்றம்
தோன்றிய போது அளவடி யிரண்டில்
எதுகை மோனை யின்றிய மைந்ததே. ... 3

சான்று:
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
--முதுமொழிக் காஞ்சி.

எதுகை மோனையுடன்
அடியெது கையுடன் பொழிப்பில் மோனையும்
திடம்பட அமைந்தன பின்னெழு பாக்களிலே. ... 4

சான்றுகள்
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.

கொன்றை வேந்தன் செல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ நாமே.
--ஔவையார்

பொழிப்பு மோனையுடன்
எதுகை அடியில் ஏதும் இன்றி
பொழிப்பில் மோனையிற் போனதும் உண்டே. ... 5

சான்றுகள்
எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மந்திரிக் கழகு வரும்பொருள் உரைத்தல்
--அதிவீரராம பாண்டியர், வெற்றிவேட்கை

தேன்பெருகுஞ் சோலை தென்னன் வளநாடு
வாழை வடக்கீனும் வான்கமுகு தெற்கீனும்
கட்டுக் கலங்காணும் கதிருழக்கு நெற்காணும்
பஞ்சங் கிடையாது பாண்டி வளநாட்டில்.
--அல்லியரசாணிமாலை

பொழிப்பு எதுகையுடன்
எதுகை அடியில் எதுவும் இன்றி
பொழிப்பில் எதுகையின் வழக்கும் உண்டே. ... 6

சான்றுகள்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
--ஔவையார், கொன்றை வேந்தன்

ஆனைகட்டுந் தூராகும் வானமுட்டும் போராகும்
எட்டுத் திசைகளையும் கட்டியர சாள்வானாம்

சிந்தடி, குறளடிக் குறள்வெண் செந்துறைகள்
அளவொத்தே அடிகள் பயில்வதால்
அளவடிக் கீழும் அமையுமே. ... 7

அறம்பொரு ளின்பம் பெறும்பயனாம்
ஆன்றோர் உரையே அறமாகும்
இன்சொல் அன்புக் கிருப்பிடமாம்
ஈருளங் கலந்த தில்லறமாம்
உண்மையே ஒழுக்கத் துரைகல்லாம்
ஊரவர் வாழ்வுக் குறுதுணைசெய்.
--புலவர் குழந்தை

அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
--ஔவையார், ஆத்திசூடி

கண்ணிகள் போல்
(வெண்டுறை)
ஈரடி யளவொத்தே சீர்கள் ஓசையில்
நாரினில் இருமலராய் நின்றே - சீரிய
தனிச்சொல் அமைந்தோ அமையாமலோ ஈற்றடி
குனிந்தோ அளவொத்தோ வரும்செய்யுற் கண்ணிகள்
குறள்வெண் செந்துறை உருவினை யொட்டியே
பிறந்தன என்பர் இன்று. ... 8

சான்றுகள்
நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளு நாளு நல்லுயிர்கள்
கொன்று தின்னும் மாந்தர்கள் குடிலஞ் செய்து கொள்வாரே.
--யாப்பருங்கலம்

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தான் - சோராத்

துயில்காத்து அரமமகளிர் சோர்குழை காத்தும்பர்
எயில்காத்த நேமி இறையோன்
--மூவருலா: குலோத்துங்க சோழனுலா, கண்ணிகள் 3-4

ஆங்கார முள்ளடங்கி யைம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்? .. 2
--பத்ரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்

கட்டளை அடிகள்
அடிகளில் ஒற்றுகள் கணக்கிடாத எழுத்துகள் எண்ணிக்கை யொன்றி
அடிச்சீர் நிரலோர் வாய்பாடில் அமைவது கட்டளை யடிகளாம். ... 9

கட்டளை யடிகளாய் மாலை மாற்றாய்ச் சம்பந்தர் அருளிய
எட்டும் மூன்றும் பாவரும் பதிகம் குறள்வெண் செந்துறையே. ... 10

யாமா மாநீ யாமாமா யாழீ காமா காணாகா
காணா காமா காழீயா மாமா யாநீ மாமாயா ... 1
--சம்பந்தர், மாலைமாற்றுப் பதிகம்

சுப்ரமண்ய பாரதியார்
பாரதியின் பாக்கள் பலவற்றில் பயிலுமே
ஆரமாய் ஈரடிக் குறள்வெண் செந்துறையே. ... 11

வானில் பறக்கின்ற புள்ளெலாம்நான்;
 மண்ணில் திரியும் விலங்கெலாம்நான்;
கானில் வளரும் மரமெலாம்நான்,
 காற்றும் புனலும் கடலுமேநான்.
--இரட்டைக் குறள்வெண் செந்துறை

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடாநீ நேற்றைக் கிங்குவர வில்லையென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
--கண்ணன் என் சேவகன்

பாரதியின் பாக்களில் வெண்டளை பயின்று
சாரத்தில் வெண்பாவாய் அமைவது காண்க. ... 12

குயில்பாட்டில் பாஞ்சாலி சபதத்தின் பகுதிகளில்
பயில்வது செந்துறையே என்பார் குழந்தையார். ... 13
[புலவர் குழந்தையின் ’தொடையதிகாரம்’, பக்.65]

பொருள மைதியோ டெளிதில் பாடுதற் கேற்ற செய்யுளுருக்
குறள்வெண் செந்துறையே அம்மானைப் பாக்களில் என்பார் குழந்தையார். ... 14

*****
 

ramaNi

unread,
Aug 12, 2018, 10:07:06 AM8/12/18
to சந்தவசந்தம்
கவிதையில் யாப்பு
#யாப்பிசைப்போம்1204

பகுதி 2. செய்யுளியல்
12. வெண்பா வினங்கள்
12.04. குறட்டாழிசை
(குறாட்டாழிசை)

குறள்வெண் செந்துறை குறட்டா ழிசையெனக்
குறள்வெண் பாவினம் இருவிதம் வருமே. ... 1.

குறட்டா ழிசையது மூவித மாகக்
குறைந்த ஓசையில் வரும். ... 2.

***
வகை 1. முதலடி பலசீர் ஈற்றடி குறைசீர்

அடியிரண் டாகி நாற்சீர் மிக்குப் பலசீர் கொண்டே முதலடியும்
அடியிரண் டில்சீர் குறைந்தும் வரும்வகை குறட் டாழிசையே. ... 3.

சான்று:
நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடி வார்கள் கற்றவரே.
--யாப்பருங்கலம்

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரிவர் தன்மை யறிவாரார்.
--சம்பந்தர் தேவாரம், 3.112.1.

***
வகை 2. சிதைந்த குறள்வெண்பா

குறள்வெண் பாவில் வேற்றுத் தளைமிகக்
குறட்டா ழிசைவகையா கும். ... 4.

சான்று (யாப்பருங்கலம்):
வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய லல்லள் படி.
(முதலடி ஈற்றில் கலித்தளை வந்தது)

தண்ணந் தூநீர் ஆடச் செய்த
வண்ண ஓதி கண்.
(அனைத்தும் ஆசிரியத்தளை)

***
வகை 3. சிதைந்த குறள் வெண்செந்துறை

விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இல்லாக் குறள்வெண் செந்துறையாய்
விழுப்பமில் திண்ணிய பொருளுடன் சிதைந்தே வரும்வகை குறட்டா ழிசையே. ... 5.

விழுமிய திண்ணிய பொருள்வகை யெல்லை மாறிய விந்நாளில்
பழுதுள குறள்வெண் செந்துறை தாழிசை வேற்றுமை அரிதே. ... 6.

சான்று (யாப்பருங்கலம்):
அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினி போவையி னீரே.

என்னே செல்லுதி வாழி நங்காய்
பொன்னே சொல்லுவன் போகு நங்காய்

*****

12.05. குறட்டாழிசைப் புனைவுகள்
(குறட்டாழிசை)

வகை 1. முதலடி பலசீர் ஈற்றடி குறைசீர்

காலை எழுந்தேன் காப்பி குடித்தேன் காகிதம் படித்தேன்
வேலை தேட வெளியில் சென்றேனே.

நிலவு மலர நினைவு கலைய 
. நிம்மதி யாய்ப்பெரு மூச்செறிந்தேன்
குலவு மங்கை பிரிந்தாள் நானும் பேச்சிறந்தேன்.

காலையிளங் காற்று கால்பாவும் நாற்று 
. கண்ணொளிரும் கதிரவனின் கீற்று
ஓலைமரத் தென்னை உள்ளமர்ந்து 
. பூங்குயிலின் பாட்டு.

***
வகை 2. சிதைந்த குறள்வெண்பா

பழனி வேலவ பரிந்தருள் செய்வாய்
கழனிகள் செழிப்புறக் காண்வகையாய்.

தகிக்கும் வெய்யிலில் தடுமாறும் காளை
உகுக்கும் வாயில் நுரை.

காடெல்லாம் பிச்சிமலர் கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணம்வீசும் நலம்.

***
வகை 3. சிதைந்த குறள் வெண்செந்துறை

குடுகுடு தாத்தா கோலுடன் சாலையில்
விடுவிடு என்றுகால் வீசியே பாட்டி!

சந்தன முகத்தாள் செந்தமிழ்ச் சொற்களில்
சிந்துகள் பாடியே சிந்தையில் நிறைந்தாள்!

குடிகாரன் நடந்தான் கூவத்தின் கரையோரம்
தடுமாறும் கால்கள் சாளைவாய் நுரையேறும்.

*****

குருநாதன் ரமணி

unread,
Aug 2, 2024, 2:44:44 AM8/2/24
to சந்தவசந்தம்
#ரமணி_கவிதையில்_யாப்பு
12.06. பரணித் தாழிசை (சந்தக் குறட்டாழிசை)

அளவடி முதலா அடியிரண் டாக
உளமகிழ் பரணி உரைக்கப் படுமே.
--இலக்கண விளக்க, வெண்பா, நவநீத, சிதம்பரப் பாட்டியல், பிரபந்த தீபிகை

கலிங்கத்துப் பரணி சான்று
போரின் பேரொலி
404=405

எடுமெடு மெடுமென வெடுத்ததோர்
. இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
. விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1

வெருவர வரிசிலை தெறித்தநாண்
. விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர்
. தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2

★★★
12.07. பரணித் தாழிசைப் புனைவுகள்

குருநாதன் ரமணி

தீபாவளித் திருநாள் வெடி வாழ்த்து!
(அறுசீர் பரணித் தாழிசை)

படபட படவென வெடித்துநாம்
. பகலொளிர் இரவெனப் படைப்பமே
விடுவிடு விடுவெனப் பொடிப்பயல்
. விரைந்தொரு சரவெடி வெடித்தனன்! ... 1

நெடுநெடு நெடுவென வுயர்த்திநாம்
. நிகழ்வுறும் எறிகணை செலுத்துவோம்
திடுமென அருகினில் வெடித்தவோர்
. தெருவெடி செவிக்குழி பதைக்குமே! ... 2

தீயில் லாமல் வெடித்திடும்
. கேப்வெடிக் குமிழைக் குழந்தைகள்
நேயத் துடனே இருத்திகை
. நீட்டுதுப் பாக்கியில் வெடிப்பரே! ... 3

சுறுசுறு சுறுவெனத் தெறிக்குமோர்
. சுடர்மத் தாப்புகள் கொளுத்துவோம்
குறுகுறு குறுவெனத் தரைதனில்
. சுழல்சக் கரத்திரி கொளுத்துவோம்! ... 4

சட்டியில் ஊற்றெனப் பொறிவாணம்
. சாதனை யாகும் சிறுவர்க்கே
பெட்டிப் பாம்பொரு மாத்திரையில்
. பெரியதாய் மேலெழக் காணுவரே. ... 5

எத்தனை யெத்தனை வாணங்கள்
. எத்தனை யெத்தனை வண்ணங்கள்!
அத்தனை யும்மித் திருநாளில்
. ஆபத் தின்றிக் கொளுத்துவமே. ... 6

வானதி நீர்தலைக் குளித்தபின்
. வைகறை யெழுந்துவென் னீரினிலே
தேனமு தாமொரு வினிப்பினை
. தேர்ந்துநம் நாவினில் இருத்துவோம். ... 7

புத்துணர் வேறும் ஆடையணிப்
. பொலிவினில் யாவரும் மகிழ்வதில்
இத்தரு ணத்துறு நினைவென
. இனிப்புடன் காரமும் வழங்குவோம். ... 8

விதித்தநம் மரபினைப் பழித்திடும்
. வீணர்க் கறிவினைக் கொளுத்துவோம்
கதித்தெழும் ஓசையில் நேசமுற
. காலஞ் சென்றோர் ஆசிவரும்! ... 9

தீபா வளியாம் திருநாளில்
. தெய்வத் தினருள் கூடுவதால்
ஆபத் துப்படும் நம்தருமம்
. அடுத்துக் காக்கநம் காப்புறுமே! ... 10

06 நவ. 2018

★★★★★

 

குருநாதன் ரமணி

unread,
Aug 3, 2024, 1:42:30 AM8/3/24
to சந்தவசந்தம்
#ரமணி_கவிதையில்_யாப்பு
12.07. வெண்டாழிசை
(வெண்டாழிசை)
அளவடி யிரண்டும் சிந்தடி ஈற்றிலும்
விளையும் வெண்டா ழிசையில் சிந்தியல்
இலக்கணம் சிதைந்துறு மாம்.

சான்று
நன்வி தென்று தீய சொல்வார்
முன்பு நின்று முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்.

★★★
12.08. வெண்டாழிசைப் புனைவுகள்
(வெண்டாழிசை)

கலிகால தர்மமென்று கடவுள்பேர் சொன்னாலே
நலிவில்லை யென்பதால் நாரணன்பேர் ஈசனின்பேர்
ஒலித்துய்யும் மனம்காண்போம் ஒளி. ... 1

கோவிலுக்குச் செல்வதொரு குடும்பத்தின் தருமமென்பர்
பாவிரித்து வாழ்த்துவது பாவலரின் தருமமென்பர்
காவிரிந்த மலரவனின் கால். ... 2

தவபக்தி செய்வதுடன் தானதர்மம் செய்வதுவும்
நவயுக தருமமாம் நாமதைச் செய்வோமே
கவியாது மனத்துள் கவலை. ... 3

★★★
12.09. வெள்ளொத்தாழிசை
(சிந்தியல் வெண்பா)

வெண்பா விலக்கணம் மாறாத சிந்தியல்
வெண்பாக்கள் மூன்றடுக்கும் தாழிசை பேர்வெள்ளத்
தாழிசை யென்றாவ தாம்.

சான்று
அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
நீடான் துறந்து விடல்

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
காவான் துறந்து விடல்.
--(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

★★★
12.10. வெள்ளொத்தாழிசைப் புனைவுகள்
இம்மை நலமுற ஈசனைப் போற்றுவோம்
அம்மை இடமுறும் அத்தன் கடைக்கண்ணால்
நம்மைப் புரந்தருள் வான்.

இண்டைக் கழலுறும் ஈசனைப் போற்றுவோம்
கண்டம் விடங்கொள் கபாலி அருள்செய்வான்
சண்டி மனமகிழ் வாள்.

எங்கும் நிறைந்துள ஈசனைப் போற்றுவோம்
பிங்கம் உடல்கொள் பிறப்பிலி ஈசனவன்
அங்கம் முழுதும் அரவு.

★★★
12.11. வெண்டுறை
மூன்றடி முதலாய் ஏழடி வரையென வருவதாய் அமைந்து
முன்வரும் அடிகளின் பின்வரு அடிகள் சீர்குறைந்தே
வந்தது வெண்டுறை இலக்கண விதியென் றாகுமே.
  [முதலடி: அறுசீர்; மற்ற அடிகள்: ஐந்து சீர்கள்]

★★★★★


குருநாதன் ரமணி

unread,
Aug 5, 2024, 12:54:30 AM8/5/24
to சந்தவசந்தம்
#ரமணி_கவிதையில்_யாப்பு
12.11. வெண்டுறை
மூன்றடி முதலாய் ஏழடி வரையென வருவதாய் அமைந்து
முன்வரும் அடிகளின் பின்வரு அடிகள் சீர்குறைந்தே
வந்தது வெண்டுறை இலக்கண விதியென் றாகுமே.
  [முதலடி: அறுசீர்; மற்ற அடிகள்: ஐந்து சீர்கள்]

★★★
12.12. ஓரொலி வெண்டுறை
மூன்றடி முதலாய் ஏழடி வரையில் வருவதென்றே
தோன்றிடும் அடிகள் யாவையும் அதேசீர் பயில்வதென்றே
காண்பதோர் ஒலிகொள் வெண்டுறை இலக்க ணமாவதெறே.

சான்று
தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்
ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோல் சாய்ந்துவிழும் பிளிற்றி ஆங்கே.

★★★
12.13. ஓரொலி வெண்டுறைப் புனைவுகள்
கன்னல் மொழியாள் கன்னியைக் காதலித்தான் காளை
மின்னல் இடையாள் மேவியு ளம்சேராள்
இன்னல் இருவர் சம்மதத் தில்தீர்வே.

முதலடி நெடிலடி: தேமா புளிமா கூவிளம் கூவிளங்காய் தேமா
மற்றவிரு அடிகள் அளவடி: புளிமா கூவிளம் தேமாங்காய்

★★★
12.14. வேற்றொலி வெண்டுறை
மூன்றடி முதலாய் ஏழடி வரையில் வருவதாக
முதற்சில அடிகள் சீர்வகை அளவொத் தமைவதாக
பின்னர் அடிகள் தம்முளே அளவொத் தவேற்றளவாய்
வந்தது வேற்றொலி வெண்டுறை யாமே.

முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூ மலர்களால் வியத்துநா ளுந்தழத்
தொடர்ந்துநின் றவிவினை துறந்துபோ மாலரோ.
--யாப்பருங்கலம் பழைய விருத்து உரை

12.15. வேற்றொலி வெண்டுறைப் புனைவுகள்
கன்னல் மொழியாள் கன்னியைக் காதலித்தான் காளை
மின்னல் இடையாள் மேவியுளம் வாராள்
இன்னல் இருவர் சம்மதத்தில் தீர்வாம்.

முதலடி நெடிலடி: தேமா புளிமா கூவிளம் கூவிளங்காய் தேமா
மற்றவிரு அடிகள் தேமா புளிமா கூவிளங்காய் தேமா

★★★
12.16. வெளிவிருத்தம்
அடிகள் மூன்றோ நான்கோ பெற்றது - வெளிவிருத்தம்
அடிகளில் ஐஞ்சீர் ஐந்தில் தனிச்சொல் - வெளிவிருத்தம்
அடிகள் தோறும் மாறாத் தனிச்சொல் - வெளிவிருத்தம்.

சான்றுகள்
மூன்றடி வெளிவிருத்தம்
கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால்; - என்செய்கோயான்
வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால்; - என்செய்கோயான்
எண்திசையும் தோகை இருந்தகவி ஏங்கினவால்; - என்செய்கோயான்
--யா. கா. 28 மே

நான்கடி வெளிவிருத்தம்
ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்; - ஒரு சாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார்; - ஒரு சாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார்; - ஒரு சாரார்
ஏகீர் நாய்கீர் என்செய்தும், என்றார்; - ஒரு சாரார்

★★★
12.17. வெளிவிருத்தப் புனைவுகள்
மூன்றடி
மலர்களை நாடி மயங்கும் வண்டு - மலர்ந்திருக்கும்
நலமுற வீசும் தென்றல் மனத்தில் - மலர்ந்திருக்கும்
நிலவழ கான நிறங்கள் விண்வெளி - மலர்ந்திருக்கும்.

நான்கடி
ஓகோ என்றே ஒதுங்கினர் பாவலர் - ஒரு சாரார்
ஆகா என்றே மகிழ்ந்தனர் பாவலர் - ஒரு சாரார்
வாகாய்க் கிட்ட வழிவகுத் தானெனும் - ஒரு சாரார்
சாகா நிலக்கும் சாதனை யென்பவர் - ஒரு சாரார்.

★★★
12.18. வெளிவிருத்தப் பின்னல்
பராசக்தி அன்னையவள் காத்தருள்வாள்!
(வெளிவிருத்தப் பின்னல்)

அமைப்பு
முன்வரும் வெளிவிருத்தத் தனிச்சொல்
.. அதை யடுத்துவரும் செய்யுள் அடிகளின்
.. நான்காம் சீராய் அமைத்துப் பின்னியது.

அண்டங்கள் படைத்தும் அழித்தும் விளையாடும் - பராசக்தி
பிண்டத்தில் உயிரைப் பேறுறச் செய்பவள் - பராசக்தி
வண்ணத்தின் ஒளியாம் வண்ணமறு வெளியாம் - பராசக்தி
எண்ணத்தில் கொண்டால் ஈடேறச் செய்வாள் - பராசக்தி! ... 1

புல்முதல் புலிவரை புரந்தருள் பராசக்தி - அன்னையவள்
கல்லிதய மாந்தர்க்குக் காலனாம் பராசக்தி - அன்னையவள்
கல்லாரைக் கற்றோரைக் கனிவிக்கும் பராசக்தி - அன்னையவள்
இல்லாமல் எதுவும் இயங்காத பராசக்தி - அன்னையவள்! ... 2

அன்பினில் வாழ்வோரை ஆட்கொண்டே அன்னையவள் - காத்தருள்வாள்
தன்னுள் ஆழ்வோரின் தவத்தினை அன்னையவள் - காத்தருள்வாள்
இன்பமும் துன்பமும் எளிதாக அன்னையவள் - காத்தருள்வாள்
பன்மையில் ஒருமை பரிவோரை அன்னையவள் - காத்தருள்வாள்! ... 3

12 அக். 2017

★★★★★

Ram Ramakrishnan

unread,
Aug 5, 2024, 8:23:35 AM8/5/24
to santhav...@googlegroups.com
அருமையேன பதிஙு. அழகான விளக்கங்களும்
மேற்கோள் பாட்டுக்களும்.
சேமித்தேன், தயார் நிலையில் புரட்டிப் பார்க்க.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 5, 2024, at 00:54, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

#ரமணி_கவிதையில்_யாப்பு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d1a52ed0-3721-47dd-91ae-9a9f7020a777n%40googlegroups.com.

குருநாதன் ரமணி

unread,
Aug 5, 2024, 9:31:47 AM8/5/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, ராம்கிராம் அவர்களே.
ரமணி

குருநாதன் ரமணி

unread,
Aug 6, 2024, 1:28:24 AM8/6/24
to சந்தவசந்தம்
#ரமணி_கவிதையில்_யாப்பு
13.00. ஆசிரியப்பா

(வெறும்பா விரவியது)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆசினை இரித்து ஆசிரி யர்சொல்
பேசும் அகவல் ஓசை வரும்பா
ஆசிரி யப்பா வெனும்பேர் கொளுமே.

கனிச்சீர் ஒழித்துக் காணும் எண்சீர்
இயற்சீர் நான்கும் காய்ச்சீர் நான்கும்
பயிலும் எனினும் பாங்குறும் வகையில்
காய்ச்சீர் நான்கும் காணல் அரிதாம்

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
ஏமாப் புறுமே அகவல் உரிச்சீர்

காய்ச்சீர் நான்கும் காண்பது வெண்பா
கனிச்சீர் நான்கும் காண்பது வஞ்சி.

மாமுன் நேரும் விளமுன் நிரையும்
நேர்நிரை யொன்றும் அகவற் றளைகள்
பேர்கொளும் அகவற் பாவில் வருமே.

மூன்று முதலாய் முடிவிறந் தடிகள்
ஆன்று வருமே அகவற் பாக்களில்
அகவும் மயில்போல் ஓசை அமைவதால்
அகவற் பாவென் றமையும் பெயரே.

அகவற் பாவின் முடிவு-ஏ காரமே
ஈ,ஆய் என்,ஐ என்னும் எழுத்தொலி
முடியும் பாக்களும் காண லாமே.

★★★
13.01. ஆசிரியப்பா வகைகள்

(நிலைமண்டில ஆசிரியப்பா)

நேரிசை இணைக்குறள் நிலைமண் டிலமும்
அடிமறி மண்டில மும்மென் றாசிரி
யப்பா நான்கு வகைகளில் வருமே.

ஈற்றய லடியில் சிந்தடி வருவது
ஏற்கும் பெயராம் நேரிசை அகவல்
அளவடி சிந்தடி குறளடி அளவடி
வளத்தில் வருவது இணைக்குறள் அகவல்
அளவடி மட்டும் பயில்நிலை மண்டிலம்
அளவடி நான்கில் எவ்வடி எங்கும்
வளம்பெற வருவது அடிமறி மண்டிலமே.

★★★
13.02. ஆசிரியப்பாவின் மூவகை ஓசைகள்
(நேரிசை ஆசிரியப்பா: ஒழுகிசை அகவல் ஓசை)

மூவகை எழுவதாம் அகவல் ஓசைகள்
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
மாமுன் நேர்எனில் நேரொன் றகவல்
விளம்முன் நிரையெனில் நிரையொன் றகவல்
இருவகை அகவற் றளைகளும்
விரவி வருவது ஒழுகிசை அகவலே.

புனைவுகள்
(நேரிசை ஆசிரியப்பா: ஏந்திசை அகவல் ஓசை)

கண்ணன் என்னும் மன்னன் பேரை
எண்ணும் உள்ளத் தின்பம்
பண்ணில் ஏற்றிப் பாடும் உள்ளே.

(நேரிசை ஆசிரியப்பா: தூங்கிசை அகவல் ஓசை)

மலைவிழும் அருவியில் வழிந்துறும் வளமென
அலைவிழும் கடற்கரை அமிழ்கழல்
கலைவிழும் சிலையவள் கருவிழி அலைவதே.

(நேரிசை ஆசிரியப்பா: ஒழுகிசை அகவல் ஓசை)
காலந் தோறும் காண்ப துண்மை
சீலங் கெட்டுச் செல்வம் ஈட்டி
மெலியார் தம்மை வருத்துவர்
வலியார் தமது வாழ்வு சிறக்கவே.

★★★★★

M. Viswanathan

unread,
Aug 6, 2024, 8:00:57 AM8/6/24
to santhav...@googlegroups.com

அருமை..


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
It is loading more messages.
0 new messages