எழுதாக் கவிதை

12 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 7, 2026, 9:55:55 AM (4 days ago) Feb 7
to santhavasantham
இன்று நான் எழுதிய எழுதாக் கவிதை  என்னும் கவிதையை கோபைலட்டிடம் கொடுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யச் சொன்னேன். அழகாக மொழியாக்கம் செய்து கொடுத்தது. நாம் கேட்டுக்கொள்ளும் வகையில் மொழியாக்கம் செய்கிறது. நான் இயைபு வருமாறு மொழியாக்கம் செய்யச் சொன்னேன். 
தமிழையும் ஆங்கிலத்தையும் இங்கே இடுகிறேன்

எழுதாக் கவிதை

 

அறுசீர் விருத்தம்

 

உள்ளத் துள்ளே ஓர்மின்னல்

ஓங்கி அடிக்கும், அந்தவொளி

வெள்ளம் தள்ள நானங்கு

வீழ்ந்து கிடப்பேன், அதைவாங்கிக்

கொள்ளத் தரலாம் என்றாலோ

கொட்டம் அடிக்கும் , கூத்தாடும்

எள்ளும், சொல்லும், 'பார்பார்பார்

எழுதாக் கவிதை நான்' என்றே!

 

கூர்வாள் கொண்டே அங்கொருவன்

குத்திக் கீற இரத்தம் வரும்

வேர்வை சிந்தி விதைத்தவெலாம்

வேறோர் வயலில் பயிராகும்

ஓர்சொல் பின்னே யொன்றுவரும்

ஊர்த்து வத்தில் அதுபேசும்

ஏர்செல் கின்ற பாதையிலே

எழுதாக் கவிதை நானென்றே!

 

கண்ணை மூடி என்கடவுள்

காலடிக்கீழ் நானிருந்தே

விண்ணைத் துழவ முயல்கையிலே

வீணாய்ப் போன சந்தேகம்

மண்ணுக் கிழுக்கும், அதைமீறி

வார்த்தை சொல்ல முனைகையிலே

எண்ணம் ஏறி அதுசொல்லும்

எழுதாக் கவிதை நானென்றே

 

சின்னக் குழந்தை எச்சிலிலே

தேனைச் சிந்தும், மழலையிலே

இன்னும் இன்னும் சந்தங்கள்

இசையில் ஏறி நடமாடும்

கன்னக் குழிவில் கனிகின்ற

கவிதை காட்டி அதுசொல்லும்

என்ன செய்யப் போகின்றாய்?

எழுதாக் கவிதை நானென்றே

 

என்றன் உள்ளம் ஓர்கடலா

இதன்மேல் அலைகள் இத்தனையா?

ஒன்றின் பின்னே ஒன்றுவரும்

உயரம் காட்டும் உள்ளோடும்

பின்னும் பின்னும் ஓயாத

பிள்ளை வியப்பை வார்த்தைகளில்

இன்னும் சொல்லக் கூடவிலை

எழுதாக் கவிதை நானேதான்!



✦ Unwritten Poem — Modern Lyrical Version (with Rhyme)
1.
A spark goes wild inside my chest,
 a sudden blaze that won’t let rest.
 It floods my world, it breaks my frame,
 and leaves me scattered, not the same.
 I reach to hold what light has shown—
 it laughs, it dances on its own
, and whispers softly through the foam
: “I am an unwritten poem.”
2.
A blade cuts deep in someone’s hand;
 my blood obeys its mute command
. The seeds I sow with sweat and ache
 turn into crops for others’ sake.
 A word appears, then one more grows,
 rolling where the mind wheel goes;
the furrowed path becomes my home
: “I am an unwritten poem.”
3.
With closed off eyes, beneath the feet
 of God I trust, I take my seat.
 I reach for sky, but doubts fall through—
 they fade like mist I never knew.
 The earth pulls down, yet still I rise
 to shape a truth that testifies;
 my climbing thought becomes its own
: “I am an unwritten poem.”
4.
A child’s small smile, a drooling gleam
, pours honey into every dream
. Its babbled notes begin to spin,
and rhythms wander, drifting in.
 A poem ripens in its cheeks
, and asks me what my spirit seeks:
“What will you do with me alone?
” “I am an unwritten poem.”
5.
Is my heart truly such a sea
 to hold these waves that rise in me?
 Each one climbs higher than the last,
 chasing the ghost of moments past.
 This childlike wonder never ends,
 yet still no final word descends
; the voice inside repeats its tone
“I am an unwritten poem

Swaminathan Sankaran

unread,
Feb 7, 2026, 10:59:30 AM (4 days ago) Feb 7
to santhav...@googlegroups.com
Superb!
என் அனுபவத்தை, பாராட்டுகளை சொல்ல சொற்கள் இல்லை!


சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCfvkrJHYKpDBUwouhJMpTWHgpMJJj22Kczr%2BDvb8YHUw%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Ram Ramakrishnan

unread,
Feb 7, 2026, 1:49:07 PM (4 days ago) Feb 7
to santhav...@googlegroups.com
அற்புதமான கவிதையும் அதன் ஆங்கில வடிவமும், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 7, 2026, at 09:55, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



Subbaier Ramasami

unread,
Feb 7, 2026, 6:02:13 PM (4 days ago) Feb 7
to santhav...@googlegroups.com
நன்றி
இலந்தை

Subbaier Ramasami

unread,
Feb 7, 2026, 6:02:56 PM (4 days ago) Feb 7
to santhav...@googlegroups.com
நன்றி

இமயவரம்பன்

unread,
Feb 8, 2026, 9:49:30 AM (3 days ago) Feb 8
to santhav...@googlegroups.com, santhavasantham
“ சின்னக் குழந்தை எச்சிலிலே
தேனைச் சிந்தும், மழலையிலே
இன்னும் இன்னும் சந்தங்கள்
இசையில் ஏறி நடமாடும்”

மிக அற்புதம், தலைவரே! 

- இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Feb 8, 2026, 10:50:30 AM (3 days ago) Feb 8
to santhav...@googlegroups.com
abaaram  irandum..
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Feb 8, 2026, 11:29:18 PM (2 days ago) Feb 8
to santhav...@googlegroups.com
அருமை! ஆங்கில மொழியாக்கம் அதிசயம். 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,



sudha's creations

unread,
Feb 9, 2026, 7:10:29 PM (2 days ago) Feb 9
to santhavasantham
என்னுள்ளே ஏதோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது என்ற பாட்டு தான் ஞாபகம் வருகிறது.. வாணி ஜெயராமின் அற்புத குரலில் அந்த குரல் ஏதோ ஒரு ஜாலம் செய்து. மனதை உருக்கும்... ராகலட்சணங்கள் அவ்வளவு அழகாக இருக்கும். 
அந்தப் பாடல் போல் இலந்தை மாமாவின் கவிதையும் பாட வைக்கிறது..
அன்புடன் சுதா வேதம்

Subbaier Ramasami

unread,
Feb 9, 2026, 8:23:00 PM (2 days ago) Feb 9
to santhav...@googlegroups.com
நன்றி சுதா!   விஸ்வநாதன் - கண்ணதாசன் பற்றி நீ ஆற்றிய உரையைக் கேட்டேன். மிக அருமை. கேட்பவர்களையும் பங்கெடுக்க வைத்த விதம் அருமை. 

நல்வாழ்த்து

sudha's creations

unread,
Feb 10, 2026, 1:10:29 AM (yesterday) Feb 10
to santhavasantham
ரொம்ப நன்றி மாமா நீங்கள் பாராட்டியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... நான் இன்னும் கொஞ்சம் என்னை நன்றாக இம்ப்ரூவ் செய்து கொள்வேன்.. அங்கே உள்ள வயதானவர்கள் எல்லாம் மனதால் நிறைய கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நிறைய துயரங்களை பார்த்தவர்கள்.. யாரும் கவனிக்க முடியாமல் தனியே வந்தவர்கள்.. தனியாக அனுப்பப்பட்டவர்கள் என்றெல்லாம் இருக்கிறார்கள்.. சிலர் தன்மானம் ஜாஸ்தியாகி குழந்தைகளிடமிருந்து வெளியே வந்தவர்கள். 
என்று பல முகங்களின் சோகங்களை ஒரே சமயத்தில் பார்த்தேன்.. அவர்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் புதிய புத்துணர்ச்சியை கொடுத்து அவர்கள் சின்ன வயசில் அனுபவித்த சந்தோஷத்தை என்னுடன் என்னுடன் .. சேர்ந்து பாடுவதன் மூலமாக ரொம்ப நெகிழ்ச்சியாகி..விட்டார்கள்..
அதுதான் எனக்கும் மனநிறைவை கொடுத்தது..
உங்கள் பாராட்டு சின்ன கிண்ணத்தில் குலோப் ஜாமுன் சாப்பிட்ட சந்தோஷத்தை கொடுக்கிறது 😄 நன்றி மாமா..🙏

 அன்புடன் சுதா வேதம்
Reply all
Reply to author
Forward
0 new messages