தமிழ்மணத்தில் என் நட்சத்திரப் பதிவுகளின் முழுத் தொகுப்பு - அனைவருக்கும் நன்றி

233 views
Skip to first unread message

அன்புடன் புகாரி

unread,
Dec 14, 2009, 12:03:07 AM12/14/09
to mac...@yahoogroups.com, santhav...@googlegroups.com, tamil...@googlegroups.com, Rajmogan Selliah, tamil_ulagam, அன்புடன், தமிழமுதம்
இந்த வார நட்சத்திரம் - ஒரு அறிமுகம்
Tamil Manam Star
அன்புடன் புகாரி
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன். தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். தமிழ்நாட்டில் பிறந்து சவுதி அரேபியாவில் வாழ்ந்து கனடாவில் கணினி ஆலோசகராக தற்போது ஒப்பந்தப் பணிகள் செய்து வாழ்கிறேன். கனடாவில் நான்கு கவிதை நூல்கள் வெளியீடு - வைரமுத்து, மாலன், அ. முத்துலிங்கம், இலந்தை, கந்தவனம் அணிந்துரைகள் - குமுதம், பாரதிதாசன் வையவிரி அவை, புத்தகப்புழு, கவிதை உறவு பரிசுகள் - தமிழ்மாநில அடையாளக் கவிதையாக இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் தேர்வு - அமெரிக்க, ஐரோப்பிய கவிஞர்களுக்கான கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கம் - அமெரிக்கக் கண்டத்தில் தமிழ்நூல் வெளியிட்ட முதல் தமிழ்நாட்டுக்காரன் - தமிழ் உலகம் அரசவைக் கவிஞன் - திருக்குறளை புதுக்கவிதைகளாக்குபவன் - உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டாளன் - உலகின் முதன் யுனித்தமிழ்க் குழும உரிமையாளன். அன்புடன் புகாரி

இந்த வார நட்சத்திர இடுகைகள்


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில் ...மேலும் வாசிக்க


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்



12. "தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது" இந்த கருத்திற்கு வலுவான ஆதரவு தரக்கூடிய வாதம் உங்கள் தரப்பிலிருந்து எதுவாக இருக்கும் ?

அன்புடன் இதயம் என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய என் முன்னுரை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் என்று நம்புகின்றேன்.

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல் - இணையம். தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்.

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ். வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும். தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம். ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள். சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த
நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம். இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல் ஆனது.

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று. உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா? இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கி விட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து. புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள். உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள். வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி
உதைத்து விளையாடுகிறது இன்று. நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடி நடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும். தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்படும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன. இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று. தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம். உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல். தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பிறவா வரம் வேண்டும் என்று யாசித்துக் கொண்டிருந்தேன் தெய்வ பக்தர்களைப் போல உனைக் காணும் முன்பெலாம் நானும் ...மேலும் வாசிக்க

பிறவா
வரம் வேண்டும் என்று
யாசித்துக் கொண்டிருந்தேன்
தெய்வ பக்தர்களைப் போல
உனைக் காணும் முன்பெலாம்
நானும்

ஆனால் இன்றெலாம்
இனியும் நான் பிறக்க வேண்டும்
பிறக்கும் முன்பே
நீ எங்கே பிறக்கப் போகின்றாய்
என்று அறிந்து
அங்கு மட்டுமே பிறக்க வேண்டும்
என்று உயிர் தவிக்கிறேன்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இதோ உங்களுக்காக இன்னொரு குட்டிக்கதை. கனடாவுக்குப் பெயர் வந்த காரணம்பற்றியதுதான். ஐரோப்பியர்கள், உலகின் ஒரு இடம் விடாமல், பொருள்தேடி அலைந்தார்கள் ...மேலும் வாசிக்க

இதோ உங்களுக்காக இன்னொரு குட்டிக்கதை. கனடாவுக்குப் பெயர் வந்த காரணம்பற்றியதுதான்.

ஐரோப்பியர்கள், உலகின் ஒரு இடம் விடாமல், பொருள்தேடி அலைந்தார்கள் என்பது நாமெல்லோரும் அறிந்த விசயம்தான். நம்மைப்போல் இருப்பதைக் கொண்டு சிறப்புடன்

வாழ்வோம் என்ற சில்லறைத் தத்துவங்களெல்லாம் அவர்களுக்கு ஆந்தராக்ஸ் கொடுத்து அல்லாடவிட்டாலும் ஒத்துவராத விசயம்.

காடோ செடியோ என்று நாடுவிட்டு நாடு அலைவார்கள் பொருள்தேடி நம்மைப் போல் நாலரையணா சம்பளம் வாங்க அல்ல, நாட்டையே ஒரு போடு போட.

கேட்டால் நாங்கள் எல்லாம் ஆராச்சியாளர்கள் என்று பின்னல் போட்ட கெட்டி நூலை ஒரு பிசிறும் இல்லாமல் நம்முன் விடுவார்கள் மிக இயற்கையாக. ஆனாலும் இந்த உலகத்தை ஒன்றாக இணைத்தவர்கள் அவர்கள்தானே? பின் பிரித்தாளப் பிரித்தவர்களும் அவர்கள்தான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

'வெள்ளையர் திருட்டு நன்மையில் முடியும்' என்று ஒரு சந்தர்ப்ப மொழி, பழமொழி போல வந்து என் நெற்றிப் பொட்டை முட்டுகிறது. ஓரமாய் ஒதுக்கிவைத்துவிட்டுத் தொடர்கிறேன்.

வெள்ளையர்கள் இந்தியா வந்திருக்காவிட்டால், நான் ஒரத்தநாட்டின் எட்டாம் சரபோஜி மகராஜாவாகி படிக்குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் என்(!) ராணியைச் சுற்றிச் சுற்றி புழுதி பறக்க குதிரை சவாரி செய்து கொண்டிருக்கலாமோ என்னவோ இந்நேரம் :)

அப்படி வெள்ளைக்காரர்கள் பொன்னும் மணியும் தேடி கனடா பக்கம் அலையும்போது ஒரு மண்ணும் கிடைக்கவில்லை அவர்களுக்கு. வெறுப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி ஒரு உலக வெறுப்பு மாநாடே போட்டது அவர்களின் உள்ளுக்குள். இன்னாடா ஊரு இது? டப்பா ஊரு? குளிர் உட்காரும் இடத்தையும் ஊசி குத்தி ஊசி குத்தி உண்டு இல்லை என்று ஆட்டி எடுக்குது. உருப்படியா ஒரு புளியங்கொட்டையும் இல்லையே இங்கே என்று aca Canada என்று வசைபாடினார்கள். அகா கனடா என்றால் அவர்கள் மொழியில் 'ஒரு மண்ணும் கிடையாது' என்று அர்த்தமாம். பிறகு அதுவே பெயராக ஆகிவிட்டதாம். நம்புவோமே? நம்பினால் நமக்கென்ன நட்டம்?

இப்படி கதைகள் உண்டு என்றாலும் இதுதான் உண்மைக்கதை என்று சொல்ல பெரிதாய் சான்றுகள் கிடையாது. ஆனாலும் kanata என்ற முதல் கதையைத்தான் கனடா நம்பி ஏற்றுக்கொண்டுள்ளது. சரித்திரமாகவும் எழுதிவிட்டது.

அகா கனடா என்ற பட்டத்தை குளிருக்குப் பயந்து குளிக்காத சில அவசரக்கார வெள்ளைக்காரர்கள் அன்று சூட்டிச் சென்றார்கள் என்றாலும், இன்று கனடாவின் இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டதும், கனடா உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளுள் ஒன்று என்று தெரிந்துபோய் விட்டது.

குன்றாத பொருளாதார வளம் ஒருபுறம் இருக்க, உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் கனடா தொடர்ந்து முதலிடம் வகித்துக்கொண்டே இருக்கிறது. இது உலக ஐக்கிய நாட்டுச் சபையின் Human Development Index (மனித மேம்பாட்டு அட்டவணை) காரர்களால் கல்வி, செல்வம், வீரம் (உடல் நலமும் ஆயுளும்தான்!) ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், சுத்தமான சுகாதாரக் காற்று, குறைவான குற்றங்கள், உயர்ந்த உடல்நலம், அற்புதமான கல்வி. இதுதான் கனடா என்ற சொர்க்க பூமியின் கூறுகள்.

கனடியர்கள் அவ்வளவு எளிதில் மேலோகப் பயணச் சீட்டு வாங்கி விடுவதில்லை. கோடுபோட்ட கசங்கள் காகிதங்களைப் போல, உடலெங்கும் சுருக்கங்களோடு ஏராளமானவர்களை இங்கே காணலாம். ஆமாம், உலகத்திலேயே கனடியர்கள்தான் மிக அதிக காலம் உயிரோடு வாழ்கிறார்கள். ஜப்பானும் ஐஸ்லாண்டும்தான் கனடாவுக்கு இந்த விசயத்தில் மல்லுக்கு நிற்கின்றன. கிழங்களுக்கு இங்கே கௌரவம் அதிகம். Senior Citizens (உயர் குடிமக்கள்? - உயர் அதிகாரி போல) என்று அழைத்து நிறைய சலுகைகளை வழங்குவார்கள்.

இன்னொரு விசயம். உலகத்திலேயே படித்தவர்களின் விகிதம் எங்கே கொடிகட்டிப் பறக்கிறது தெரியுமா? அதுவும் கனடாதான். அமெரிக்காவெல்லாம் மெல்லமாக அப்புறம்தான் வரும்.

கனடாவின் கல்வியைப் பற்றி நான் நிறைய சொல்லவேண்டி இருக்கிறது. அந்தக் கல்விச் சாலைக்குள் இலங்கைத் தமிழர்கள் இன்றுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்றும் வேறு பல அருமையான தகவல்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு சொல்ல முட்டும் வார்த்தைகளோடு காத்திருக்கிறேன். இது முடியட்டும். கொஞ்சம் பொறுங்கள்.

நான் இங்கே அமெரிக்கா, அமெரிக்கா என்று குறிப்பிடும்போதெல்லாம் விசயம் தெரிந்தவர்கள் USA (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) என்று மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். நான் உலகெங்கும் வழங்கி வரும் வழக்கப்படி, இனியும் அமெரிக்கா என்றே குறிப்பிடுவேன்.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல, அது ஒரு கண்டம் என்பதை நாம் சின்ன வயதிலேயே படித்திருக்கிறோம். அதுவும் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று இரண்டு கண்டங்கள். ஆனாலும் வட அமெரிக்கா அல்லது அமெரிக்கா என்றால் உலகெங்கும் USA என்றுதான் அர்த்தமாகிவிட்டது. வட அமெரிக்கா கண்டத்தில் தெற்கே மெக்ஸிகோ, வடக்கே கனடா. நடுவில்தான் ஐக்கிய அமெரிக்கக் கூட்டு நாடுகள் (USA).

அதாவது வட அமெரிக்காவுக்குள்ளேயே ஒரு வட அமெரிக்காதான் கனடா. வட அமெரிக்காவின் தென் அமெரிக்காவான(!) மெக்சிகோவுக்கும் வட அமெரிக்காவின் வட அமெரிக்காவான(!) கனடாவுக்கும் இடையில்தான் USA இருக்கிறது.

என்றாலும், மத்திய அமெரிக்கா என்று ஐக்கிய அமெரிக்கக் கூட்டு நாடுகளை(USA) நாம் குறிப்பிட்டால், புதிதாக வடிவமைத்து இன்னும் பரிட்சித்துப் பார்க்காத ஒரு நாசமாய்ப் போன ஏவுகணையுடன் வந்துவிடக்கூடும் அவர்கள்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில் ...மேலும் வாசிக்க

லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.

1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறு வெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.

2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்ச பூதக்கவிதைகளும் உள்ளன.

3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச்
செல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.

4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என்
லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முத்தங்கள் முத்தங்கள் செந்தாழமே - உன் மோகத்தில் பூக்குதென் சந்தோசமே எக்காலும் விட்டென்னைப் போகாதடி ...மேலும் வாசிக்க

முத்தங்கள் முத்தங்கள்
செந்தாழமே - உன்
மோகத்தில் பூக்குதென்
சந்தோசமே
எக்காலும் விட்டென்னைப்
போகாதடி - உன்
எச்சில்கள் இல்லாமல்
நானேதடி
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


உண்டால்தான் மயக்கம் தரும் மது கண்டாலே மயக்கம்தரும் காதலைப்போல் அல்ல அது ...மேலும் வாசிக்க


உண்டால்தான்
மயக்கம் தரும்
மது
கண்டாலே
மயக்கம்தரும்
காதலைப்போல்
அல்ல அது



உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1090

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஏழைக்குப் பொருள் அள்ளிக் கொடுப்பதும் எதிரிக்கும் கருணை அன்பு தருவதும் தவறாமல் நீதி நிலைநாட்டுவதும் நலிவுற்றோரின் நலம் பேணிக் காத்தலும் ...மேலும் வாசிக்க

ஏழைக்குப்
பொருள் அள்ளிக் கொடுப்பதும்
எதிரிக்கும்
கருணை அன்பு தருவதும்
தவறாமல்
நீதி நிலைநாட்டுவதும்
நலிவுற்றோரின்
நலம் பேணிக் காத்தலும்
ஆகிய நான்கும்
உடைய அரசன்தான்
அரசர்க்கெல்லாம்
ஒளிவிளக்கைப் போன்றவன்


கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 390

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மரணம் என்றதுமே ஒரு சாந்தம் வருகிறது அமைதி நிலவுகிறது தாய் மடியின் நிம்மதி வருகிறது அள்ளியணைக்கும் கரங்கள் ...மேலும் வாசிக்க

மரணம் என்றதுமே
ஒரு சாந்தம் வருகிறது
அமைதி நிலவுகிறது
தாய் மடியின் நிம்மதி வருகிறது
அள்ளியணைக்கும் கரங்கள் நீள்கின்றன

மரணத்தை விரோதியாகவே
பார்க்கும் கண்களுக்கு
மரணத்தைத் தாயாய் ஏற்க
மனம் வராமல் இருக்கலாம்
ஆனால்
துயரங்களின் முற்றுப்புள்ளியாய்
இருக்கும் மரணத்தை
வேறு எதைச் சொல்லி
அழைப்பது?
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இசை கூட்டி தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம். யாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் ...மேலும் வாசிக்க

இசை கூட்டி தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம். யாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அதன் சுவைகளைப் பெரும்பாலும் களவாடிக்கொள்வேன்.

கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
.......கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்
தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
.......தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்

மூடிய மாங்கனி வீடாகும் - உள்ளே
.......முத்தாக வாழ்வது வண்டாகும்
கூடுகள் இன்பத்தின் ஆதாரம் - அந்தக்
.......கூட்டுக்குள் அன்புதான் தேனூட்டும்

கட்டிய காலுடன் நாட்டியம் - கண்கள்
.......கட்டித்தான் காட்சிகள் அரங்கேற்றம்
ஒட்டிய தேவைகள் போராட்டம் - உயிரின்
.......ஓலந்தான் ஞானமாய் வேரோட்டும்

வெட்டிய கீறலாய் ஏமாற்றம் - தொடரும்
.......வெற்றெதிர் பார்ப்போ ரணமாக்கும்
தொட்டது தோற்பது சிறையாகும் - தொட்டுத்
.......திறவாமல் வெற்றியும் திசைமாறும்

இருட்டினில் கண்களும் கூராகும் - துயரம்
.......இடைமுட்ட வாழ்வோ சீராகும்
கருத்தினில் இழையா கனவுலகம் - வெற்று
.......காற்றோடு கரைந்து மணலாகும்

பருந்திடம் மாட்டிய குஞ்சாக - நாளும்
.......போராடித் தவிக்கும் நன்னெஞ்சம்
விருந்தென மடிவது படுமோசம் - வாழ்க்கை
.......வெற்றிக்கு மந்திரம் மனவீரம்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அன்பொளிரும் இறைவனின் அடிதேடித் தொழாதார் இன்னல்கள் எழுந்தாடும் இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடல் நீந்தியே பேரின்ப கரைசேரும் வல்லமை கொள்ளாது மூழ்கியே ...மேலும் வாசிக்க

அன்பொளிரும் இறைவனின்
அடிதேடித் தொழாதார்
இன்னல்கள் எழுந்தாடும்
இவ்வுலக வாழ்வெனும்
பெருங்கடல் நீந்தியே
பேரின்ப கரைசேரும்
வல்லமை கொள்ளாது
மூழ்கியே அழிவர்


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 10

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


முத்தம் கேட்கிறது முத்தம் புன்னகைக்கிறது புன்னகை உயிர் ஊட்டுகிறது உயிர் பிரபஞ்சத்தின் ஒளி ...மேலும் வாசிக்க

முத்தம் கேட்கிறது
முத்தம்

புன்னகைக்கிறது
புன்னகை

உயிர் ஊட்டுகிறது
உயிர்

பிரபஞ்சத்தின் ஒளி
பிஞ்சு முகத்தில்
பிரகாசம்

கவலைகளுக்கு
ஆயுளில்லையென்ற
அடித்துவிரட்டும்
சிரிப்பு
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


1535ல் பிரெஞ்சுக்காரரான ஜாக் கார்டியர் (Jacques Cartier) என்பவர் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கு வடக்குப் பகுதிக்கு வந்துசேர்ந்தார். அந்தப் பகுதியில் சுற்றித் ...மேலும் வாசிக்க

1535ல் பிரெஞ்சுக்காரரான ஜாக் கார்டியர் (Jacques Cartier) என்பவர் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கு வடக்குப் பகுதிக்கு வந்துசேர்ந்தார். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு பழங்குடிப் பொடியர்களிடம் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டும்படி கேட்டார் கார்டியர்.

எப்படிக்கேட்பது? மொழிப்பிரச்சினை இருக்கிறதே? இவர் பிரெஞ்சு பேசினால் பொடியர்களுக்கு மூக்கில் பொடி வைத்தது போல் இருக்காதா? எனவே சர்வதேச மொழியில் பேசினார் - ம்கூம் - ஆடினார். ஊமை பாசை என்பது ஓர் அற்புத அபிநய நடனம்தானே?

பழங்குடியினரின் மொழியில் kanata என்றால் கிராமமாம். தொலைவில் இருந்த தங்கள் கிராமத்தை அவர்கள் சுட்டிக்காட்டி அதுதான் தங்களின் kanata என்று பீதியுடன் கூறிப் பின்வாங்கியதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரெஞ்சுக்காரர் அந்தப் பிரதேசம் முழுவதற்கும் Kanata என்று பெயரிட்டு விட்டார். காசா பணமா?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்ற வள்ளுவன் குறள் அவருக்குத் தெரியாததால், தீர்மானமான ஒரு முடிவுக்கு அவரே வந்து kanata என்று திட்டவட்டமாக எழுதிவிட்டார் சரித்திரத்தில். நான் சரித்திரம் படிக்கும் போதெல்லாம் ஒரு சந்தேகத்துக்குள் அடைபடுவேன். யாரோ ஒருவரின் கூற்றை எப்படி மக்கள் சரித்திரம் இதுதான் என்று ஒப்புக் கொள்கிறார்கள் என்று. வேறு எவரும் எதையும் கூறாதபோது காக்கைக் குரலே பொற்குரல், அப்படித்தானே?

1547ல் தேசபடங்கள் வரையும் ஐரோப்பியர்கள் kanata என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டை Canada என குறிப்பிட ஆரம்பித்தார்கள். நல்லவேளை Canda என்றுதான் மாற்றினார்கள், கர்நாடகா என்று அல்ல. அப்படி மாற்றியிருந்தால், இந்நேரம் அமெரிக்காவுடன் ஒட்டியிருக்கும் ஏரிகளிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரையும் அமெரிக்கர்களைக் குடிக்க விடமாட்டோம் என்று ஒரு தடுப்புச் சுவர் இங்கேயும் கட்டியிருப்பார்கள். அது சீனப் பெருஞ்சுவரைவிட பலமடங்கு பெரியதாகி உலகத்தின் மிகப்பெரிய அதிசயமாகி இருக்கும்.

எப்படியோ, 1550ல் வரைபடங்களில் ஐரோப்பியர்கள் Canada என்றே மிகத் தெளிவாக எழுதிவிட்டார்கள். ஆனாலும் 1791 துவங்கித்தான் Canada என்ற பெயர் அலுவல் பெயராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இன்னொரு குட்டிக்கதை வேண்டுமா? இத்தோடு கதை கேட்பதை நிறுத்திக்கொள்கிறோம் என்று சத்தியம் செய்தால்தான் இன்னொரு கதை. இந்தக் கதை சொல்வதெல்லாம் எனக்குச் சரிப்பட்டுவராது. ஏதோ கட்டுரை என்றால், இங்கும் அங்கும் அறிந்த உண்மைகளை ஒட்டி ஒட்டி சொந்தக் கருத்துக்களையும் கொஞ்சம் ஊறுகாயாய்ச் சேர்த்துக்கொண்டு ஒப்பேற்றிவிடுவேன்.

இதுதான் கடைசி குட்டிக்கதை. என்ன, ஒப்புக் கொள்கிறீர்களா?
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அன்பே நீ பேசினாய் என் அடிவயிற்றில் இறங்கி உன் குரல் குதூகலிக்கிறது அன்பே நீ சிரித்தாய் என் ஆயுளின் ...மேலும் வாசிக்க

அன்பே நீ பேசினாய்
என் அடிவயிற்றில் இறங்கி
உன் குரல் குதூகலிக்கிறது

அன்பே நீ சிரித்தாய்
என் ஆயுளின்
அத்தனை அறைகளிலும்
சங்கீதம் கேட்கிறது

அன்பே நீ தொட்டாய்
உயிரின் அத்தனை சந்துகளிலும்
வண்ணத்துப் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

அன்பே நீ முத்தமிட்டாய்
மடிவதும் பிறப்பதுமாய்
எனக்குள் பில்லியன் பிறப்புகள்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிங்கைக் கவிஞர் இக்பால் அவர்களோடு நான் இசைக்கவிதைகள் பற்றி மேற்கொண்ட ஓர் உரையாடலின் தொகுப்பு ...மேலும் வாசிக்க

சிங்கைக் கவிஞர் இக்பால் அவர்களோடு நான் இசைக்கவிதைகள் பற்றி மேற்கொண்ட ஓர் உரையாடலின் தொகுப்பு

கவிஞர் இக்பால்:
உங்கள் கவிதை மரபுக்கவிதைபோல் இருக்கும் மரபைப் பின்பற்றாத கவிதை. மரபின் ஓசை ஒழுங்கு சரியாக இருக்கும்படி மாற்றங்கள் செய்தால் இன்னும் மின்னும்.

நான்:
நான் மரபு இலக்கணம் பார்த்து எழுதுவதில்லைதான். அவற்றை எந்தக்காலமோ மறந்தும்போய்விட்டேன். மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆவலும் இல்லை. ஆனால் இசையில் மயக்கம் உண்டு நிறைய. எனவே திரையிசைப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் போல நான் என்பாட்டுக்கு ஓர் இசையை மனதில் வைத்துக்கொண்டு எழுதுகிறேன். இவற்றை இசைக்கவிதைகள் என்று சொல்கிறேன். மரபுக் கவிதைகள் என்று சொல்வதில்லை. எழுதினால் மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதைதான் எழுதவேண்டுமா? இடையில் இசைக்கவிதை என்று மெல்லிசையில் பாட இயலும் வண்ணம் எழுதக் கூடாதா?

கவிஞர் இக்பால்:
தாராளமாக இசைக்கவிதைகள் எழுதலாம். அது கவிதையின் இன்னொரு முகம். ஒரு காலத்தில் "மரபுக் கவிதை , புதுக் கவிதை பற்றிய சர்ச்சைகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடந்த போது "திரைப்படப் பாடல்கள் அனைத்துமே புதுக்கவிதைகள்தாம்., அவற்றையெல்லாம் வரவேற்றுவிட்டு இப்போது ஏன் புதுக்கவிதையை எதிர்க்கிறீர்கள் ?" என்று மரபுக்கவிதை நண்பர்களிடம் நான் பேசியிருக்கிறேன்.

இதோடு இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும்- மரபுக் கவிதைகளில் இசை பூரணமாக, கம்பீரமாக , வழுக்காமல் முழு அழகோடு ஜம்மென்று வீற்றிருக்கும். மரபு இலக்கணம் -யாப்பு என்பதெல்லாம் இசையை ஒழுங்குபடுத்துவதற்காக வந்ததுதான். மரபுக் கவிதையை இசைக்கவிதை என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஒரு சின்ன அனுபவம்:

சிங்கப்பூர் வானொலியில் மாணவர்களுக்காகப் " பாடிப் பழகுவோம் " என்னும் நிகழ்ச்சிக்கு ஏறத்தாழ 200 இசைப் பாடல்கள் எழுதினேன். அனைத்தும் சந்த ஒழுங்கு கொண்ட பல்வகைச் சிந்துப் பாடல்கள்., புதுப்புது யாப்பில் எழுதப்பட்டவை. இவற்றுக்கு இசையமைத்தவர் நல்ல இசையறிஞர். அவர் ஒருமுறைகூட 'இங்கே இடிக்கிறது, அங்கே சொல் கூடுகிறது; மாற்றித் தாருங்கள்' என்று என்னிடம் வந்ததில்லை. ஆனால் அதே நிகழ்ச்சிக்கு யாப்பு பின்பற்றப்படாமல் எழுதிய வேறு சிலரின் பாடல்களில் அடிக்கடி 'கூட்டல், குறைத்தல்,' வேலைகளுக்கு உட்பட்டன.

மரபு இசையை வற்புறுத்துவதுதான் கவிஞரே.

நான்:
மரபுக்கவிதையில் இசை கம்பீரமாய் பூரணமாய் அமர்ந்திருக்கும் என்பது உண்மை. அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. மரபுக்கவிதைகள்
இசைக்கவிதைகள்தாம்.

மெல்லிசைக்குள் இருக்கும் கவிதைகளையும் இசைக்கவிதைகள் என்றுதான் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவற்றுக்கு மரபின் யாப்பிலக்கணம் அச்சுமாறாமல் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதையும் உணர்கிறேன்.

ஒருமுறை எம் எஸ் விஸ்வநாதனிடம் பாரதியாரின் பாடலைக்கொடுத்து இசையமைக்கச் சொன்னார்களாம். "யாருய்யா இதை எழுதினது? கூப்பிடுய்யா அந்த ஆளை கொஞ்சம் மாத்தணும்" என்றாராம்.

சமீபத்தில், கவிஞர் வைரமுத்துவின் புதுக்கவிதைகளை ஒரு திரைப்பட இசையமைப்பாளர் அருமையாய் இசையமைத்து மேடையேற்றினார். கலைஞர்தான் அதற்குத் தலைமை. நல்ல இசையமைப்பாளரும் திறமையான பாடகர்களும் எப்படியும் எதையும் பாடிவிடுவார்கள் என்பதற்கு அது சான்றாய் அமைந்தது

எம். எஸ். விஸ்வநாதன் தன் வீட்டின் முகவரியைக் கேட்டால், அப்படியே பாட்டாய்ப் படிப்பார். நானே கேட்டிருக்கிறேன்.

மரபின் இசை ஒரே தாளலயம் கொண்டது. இதை நீங்களே ஒரு முறை சொல்லியிருப்பதாக ஞாபகம். தண்டவாளத்தில் ரயில் ஓடுவதைப் போல கடைசிவரை ஓடி நிற்கும்.

மெல்லிசையின் சுகமே அதன் மாறுபாடுகள்தான் என்று நினைக்கிறேன். எனக்கு இசையறிவு கிடையாது. தெரிந்தவரையே எழுதி இருக்கிறேன்.

கவிஞர் இக்பால்:
நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகளில் எனக்கு முழு உடன்பாடே. நீங்கள் சொன்னதுபோல நல்ல இசையமைப்பாளர்களும் திறமையான பாடகர்களும் எதையும் எப்படியும் பாடிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. விஸ்வநாதன் தன்னுடைய வீட்டு முகவரியைக் கேட்டால் அப்படியே இசையாய்ப் பாடி
விடுவார் என்பதையும் நான் பூரணமாக ஏற்றுக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல. சாண்டில்யனின் " கடல்புறா" கல்கியின் "சிவகாமியின் சபதம்" போன்றவற்றையும் கூட இசைக்குள் திறமையான இசையறிஞர்களால் கொண்டுவர முடியும் என்பதிலும் எனக்குத் துளியளவும் சந்தேகம் கிடையாது. ஏன், தினத் தாள்களைக் கையில் கொடுத்து செய்திகளை இசையமைத்துத் தாருங்கள் என்றால் அதனைச் செவ்வனே செய்து முடிக்கும் இசைவாணர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்களின் கற்பனை கலந்து இசைவடிவமேற்று வெளிவரும் போது பாடல்கள் பலரும் பாடிக் களிக்கும் நிலையை எய்தும்.அப்படி இசைவடிவம் பெறாத, இசையமைப்புக்குப் போகும் நிலையில் இல்லாத பாடல்ளுக்கு மரபு "இசை" கொடுக்கும் என்பது என் கருத்து. என்ன இசை, என்ன மெட்டு என்று தெரிவதற்கு முன்னால் கையில் வந்த பல பாடல்களை ரசிக்க முடியாமல் சங்கடப்பட்டிருக்கிறேன்.

இசையையும் குரல் இனிமையையும் அப்புறப் படுத்தினால், பல பாடல்கள் என்ன நிலையெய்தும் என்பதைக் கற்பனை செய்வது கடினமல்ல.

இசை, குரல்வளம் இல்லாமல் தனியே நிற்க வேண்டிய நிலையிலுள்ள பாடல்கள் மரபை ஏற்றால் அழகு பெறுமே என்பதே என் ஆதங்கம்.

நான்:
உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன். மரபு நிச்சயமாய் அழகுதான். நான் மரபை மதிக்கிறேன். விரும்புகிறேன். இசைக்கவிதைகளால் (மரபு +
திரையிசைப்பாட்டு) ஈர்க்கப்பட்டுத்தான் நான் கவிதையே எழுதினேன். பிறகுதான் புதுக்கவிதை எழுதினேன். அதனுள்ளும் பரவலாய் இருக்கும் மெல்லிய இசையை நான் ரசிக்கிறேன். என் திசையில் தெளிவாக நான் செல்கிறேன்.

நல்லதொரு கலந்துரையாடல் கொண்டோம். நன்றி கவிஞரே.

கவிஞர் இக்பால்:
மிக்க மகிழ்ச்சி கவிஞரே. மரபு பற்றியும் இசைப்பாடல்கள் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கினீர்கள், நன்றி
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில் ...மேலும் வாசிக்க


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


நான் இணையத்திலும் குழுமங்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன்(2005 ல் எழுதியது). 2005 மார்ச் மாதம் வரை நான் உறுப்பினராகவும், மட்டுனராகவும், உரிமையாளராகவும் இருந்த இணையக் குழுமங்கள் எல்லாம் யாகூ குழுமங்களாகும். அங்கே திஸ்கியில்தான்
எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைத்தளமும் திஸ்கியில் தான் இருந்தது. 2004ல் என் வலைத்தளத்தைப் புதியதாய் வடிவமைத்தபோது, அதை முழுவதும் யுனிக்கோடு தமிழாக மாற்றினேன். யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன்.

http://buhari.googlepages.com

அதே சமயம், ஜிமெயில் கணக்கு திறக்கும் அழைப்பு ஒன்று கவிஞர் மதுரபாரதியிடமிருந்து எனக்கு வந்தது. அதற்கு முன்பே ஜிமெயில் பற்றி அறிந்திருந்தாலும், கவிஞர் மதுரபாரதியின் அழைப்பு அதனுள் முழுமையாய்ச் செல்ல எனக்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. ஜிமெயிலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே யுனித்தமிழ் மடலாடல்கள் நிகழ்த்த முடியும். உடனே, நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ஜிமெயில் அஞ்சல்
சேவை வழியாக மடலாடத் தொடங்கினேன். அது என்னை அப்படியே ஈர்த்து இழுத்து அணைத்துக்கொண்டது.

buh...@gmail.com

யுனித்தமிழில் வலைத்தளம், யுனித்தமிழில் அஞ்சல் இரண்டினையும் தொடர்ந்து யுனித்தமிழில் வலைப்பூ ஒன்றும் தொடங்கினேன். அதோடு நில்லாமல், அன்புடன் என்று கூகுள் குழுமம் ஒன்றையும் சோதனைக்காகத் தொடங்கினேன். தொடங்கியதும் பல சோதனைகள் செய்தேன். சோதனைகளில் வெற்றியும் பெற்றேன்.

http://groups.google.com/group/anbudan

"யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்" என்று தலைப்பிட்டு தமிழுலகம் அறியும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி யாகூ குழுமங்கள் அனைத்திலும் இட்டேன். திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவற்றிலும், TNF - தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா, FeTNA - அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, NTYO - வட அமெரிக்க இளைஞர் தமிழ் அமைப்பு, MTS - டல்லாஸ் மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழர் திருவிழா ஆண்டுமலரிலும் வெளியாகி இருக்கிறது.

"எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது" என்ற தலைப்பில் யுனித்தமிழ் எழுதுவதற்கு எளிய
முறையில் விளக்கங்கள் அளித்தேன். பலருக்கும் யுனித்தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தேன்

இன்று அன்புடன் வளர்ந்து மாபெரும் யுனித்தமிழ்க் குழும மரமாய் வேர்களும் விழுதுகளும் கிளைகளும் இலைகளும் பரப்பி செழுமையோடு நிற்கிறது.

தினந்தோறும் பலரும் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறார்கள். யுனித்தமிழ் தட்டச்சவும் மடலாடவும் அறிந்தவண்ணமாய் இருக்கிறார்கள். செயல்பாட்டிலுள்ள உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கனடாவின் சரித்திரத்தைப் பாடமாக எடுத்தால் எல்லோரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துவிடலாம். அவ்வளவு எளிமையானது. கனடா என்பது நேற்றுதான் பூத்த முள்ளில்லா ...மேலும் வாசிக்க

கனடாவின் சரித்திரத்தைப் பாடமாக எடுத்தால் எல்லோரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துவிடலாம். அவ்வளவு எளிமையானது. கனடா என்பது நேற்றுதான் பூத்த முள்ளில்லா வெள்ளை ரோஜாதான். ஆனாலும், பழமை போற்றும் பண்பாடுகளில் சிறந்து விளங்கும் அற்புத நாடு.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பூர்வீகக் குடியினரான (அபாரிஜினல்) செவ்விந்திய மக்கள் வாழ்கிறார்கள். புதிய குடிவரவாளர்களால், இன்று அவர்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவிகிதம்தான்.

ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இங்கே வந்தார்கள். ஒரு அறுபது வருடங்களாக ஐரோப்பா, ஆசியா, தென்னமரிக்கா, கரிபியன் தீவுகளிலிருந்து மக்கள் இங்கே வர ஆரம்பித்தார்கள்.

இந்தியர்கள் அறுபதுகளிலேயே கனடா வரத் தொடங்கிவிட்டார்கள். ஆரம்பத்தில் பெரும்பாலும் சீக்கியர்களும் குஜராத்தியர்களுமே வந்தார்கள். இந்திய சாதனையாக ஒரு சீக்கியர் கனடாவின் ஒரு மாகாணத்திற்கு முதலமைச்சர் ஆகியிருக்கிறார். கனடாவில் முதலமைச்சரை Premier என்றழைப்பார்கள். பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் எண்பதிற்குப் பிறகே கனடா வந்தார்கள். இவர்களைப் பற்றித்தான் நாம் முழுமையாய் இந்தக் கட்டுரை முழுவதும் பேசப் போகிறோம்.

'கனடான்னா இன்னாடா அர்த்தம் ?' இப்போதய வாண்டுகள் எல்லாம் சும்மா இருப்பதில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு கேள்விச் சுத்தியல் வைத்திருக்கிறார்கள். கனடா என்ற பெயர் எப்படி வந்தது? இதற்குச் சில குட்டிக்கதைகள் வைத்திருக்கிறார்கள் இங்கே.

'அடியக்கா மங்கலம்' என்று தஞ்சாவூரில் ஒரு கிராமத்திற்கு எப்படிப் பெயர் வந்தது என்று ஒரு சுவாரசியமான கதைவிடுவார்கள் ஊரில்.

புல்லுக் கட்டை வேப்பெண்ணை வழியும் தலையில் சுமந்துகொண்டு ஒத்தையடிப் பாதையில் நடந்துகொண்டிருக்கிறாள் ஒரு கிராமத்துச் சிட்டு. அவள் அக்கா மங்கலம் என்பவள் அவளுக்கு முன் ஒரு கால் கிலோமீட்டர் தூரத்தில் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள். அங்கே முதன் முதலில் வந்த ஒரு வெள்ளைக்காரன் தங்கையிடம் கேட்கிறான் ஆங்கிலத்தில், 'பெண்ணே பெண்ணே நில்லு! இந்த ஊரின் பெயரைச் சொல்லு!' அவ்வளவுதான், உடம்பெல்லாம் தேகம்பம் வந்துவிட்டது இவளுக்கு. பூகம்பம் தேகத்துக்குள் வந்தால், தேகம்பம்தானே :) நடுங்கும் குரலில் அக்காவை அழைத்தாள் அவசரமாக, 'அடியக்கா மங்களம்...' அன்றிலிருந்து அது அடியக்கா மங்களம் ஆனது என்பார்கள் வரலாற்று அறிஞர்கள்(!)

இன்னொரு கதை இன்னும் சுவாரசியமானது

சவூதியில் கடினப்பணிக்காக ராஜஸ்தானியர் பலர் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கினார்கள். எல்லோருக்கும் பெயர் மகராஜ் என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட நிர்வாகி விசாரித்தார்.

வந்த முதல்நாள் அறிமுகப்படலத்தில், 'What is your name?' என்று கேட்ட வெள்ளைக்கார கண்காணிப்பாளரிடம், ஆங்கிலம் தெரியாததால், வழக்கம்போல 'மகராஜ்?' என்றிருக்கிறார்கள் அனைவரும். அதாவது, 'என்ன கேட்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை! அதைத் திரும்பக் கேளுங்கள்!' என்பதற்கு மரியாதையாக இப்படி கிராமத்துத் தலைவரிடம் கேட்பதே அவர்களுக்கு வழக்கம். சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் மகராஜ் என்று பெயர் எழுதிவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டு விட்டார் கடமை வீர கண்காணிப்பாளர்.

இதுபோன்ற குட்டிக்கதைகள் கனடாவுக்கும் உண்டு.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


வா....டீ..... என் பவளமே என்று காதல் பொழிய இப்போது என்னை அழைக்கப் போகிறாயா இல்லையா என்றாள் பொறுக்கமாட்டாத ...மேலும் வாசிக்க

வா....டீ..... என் பவளமே என்று
காதல் பொழிய இப்போது என்னை
அழைக்கப் போகிறாயா
இல்லையா என்றாள்
பொறுக்கமாட்டாத தவிப்போடு

சூரியனைத் தொடும்
விரல்கள் உண்டா செல்லம் எனக்கு
என்றேன் அபரிமித அன்போடு

தொட்டுப்பாரடா
என் காதல் நாயகா
நீ தொட்டால் நிலவாகும்
அதன் ஒட்டுமொத்தமும் என்றாள்
கண்களில் தகதகப்பு வீச

பிறகென்ன
நான் தொட்ட்ட்ட்ட்ட்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


யாழிசை மாயமே நானொரு ரகசியம் சொல்லட்டுமா என்றேன் என் ரகசியம் என்னை நச்சரிக்க சொல் சொல் என்றாள் கண்களில் ...மேலும் வாசிக்க

யாழிசை மாயமே
நானொரு ரகசியம்
சொல்லட்டுமா என்றேன்
என் ரகசியம் என்னை நச்சரிக்க

சொல் சொல் என்றாள்
கண்களில் தீபம் அசைய

வேண்டாம் இப்போது
பிறகு சொல்கிறேன் என்றேன்
தயக்கம் என்னைத் தயங்காமல் உறிஞ்சி
குடித்ததுபோக மிஞ்சிய நெஞ்சால்

பிறகு எப்போது?

விட்டேனா பார் என்று
பார்வையாலேயே
ராஜ தூண்டில் சுழற்றினாள்

நீ சொல்லப் போவது என்னவென்று
எனக்குத் தெரியும் தெரியும்
அதைச் சொல்லித்தொலையேன்
சீக்கிரம் சீக்கிரம் என்ற தவிப்பான தவிப்பு
தவித்துக்கொண்டிருந்தது
அவள் மாபெரும் விழிகளில்

பயம் தந்த தைரியத்தில்
பவ்வியமாய் விலகினேன்
பிறகு எப்போது என்று
பிறகு சொல்கிறேன் என்று
பிதற்றிக்கொண்டே
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


புகாரி, நீங்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் படித்தவரா? குற்றால அருவியைவிட இந்தச் செய்தி எனக்கு இனிக்கிறது. வ.உ,சி கல்லூரி நான் படித்த ...மேலும் வாசிக்க

புகாரி, நீங்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் படித்தவரா? குற்றால அருவியைவிட இந்தச் செய்தி எனக்கு இனிக்கிறது. வ.உ,சி கல்லூரி நான் படித்த இடம் மட்டுமல்ல. நான் முதலில் அங்குதான் ஆங்கிலத்துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன்.(1962-1965). அந்தக்கல்லூரி என்னோடு உயிர்த் தொடர்பு கொண்டது எப்பொழுது நான் தூத்துக்குடி சென்றாலும் மாலைப் பொழுதில் அந்தக்கல்லூரி வளாகத்திற்குச் சென்று அதன் உயிர்க்கற்களோடு பேசிவிட்டு வருவேன், அங்கே மல்லாந்து படுத்திருந்து பழைய நினைவுகளை அசைபோடுவேன். அங்கேதான் பேரசிரியர் அ.சீ.ரா 1951லிருந்து முதல்வராக இருந்தார். இன்னும் நெருங்கிவிட்டீர்கள் என்றார் சந்தவசந்த இணைய குழுமத்தின் உரிமையாளர் இலந்தை இராமசாமி. அவருக்கு நான் இட்ட மறுமொழி இதோ:

இலந்தையாரே, நான் எப்போதும் உங்களோடு நெருங்கித்தான் இருக்கிறேன். எனக்கும் என் கல்லூரிக்குச் சென்று அப்படியே சுற்றிச்சுற்றி வந்து நிம்மதியாய் அமரவேண்டும்போல் இருக்கிறது.

BBA (Bachelor of Business Administration) இளங்கலை வணிகவியல் படிப்பதற்காக நான் தஞ்சைமாவட்டத்திலிருந்து தூத்துக்குடி சென்றேன். அப்போது அது சென்னைப்பல்கலைக்கழகத்தில் இல்லை.

பேருந்துகளில் சில முறை சென்றிருக்கிறேன். ஆனால் ரயில் பயணங்கள் எனக்குப் பிடிக்கும். மணியாச்சியில் மணியாச்சு மணியாச்சு என்று படுத்திருந்த நாட்கள் இனிமையானவை. பேருந்தில் வரும்போது மதுரை, அருப்புக்கோட்டை என்று வித்தியாசமான பயணம்.

வழியில் வரும் 'எப்போதும் வென்றான்' என்ற ஊரின் பெயர் என்னைக் கற்பனையில் ஆழ்த்தும். அது போல இன்னும் பல ஊர்கள். எங்களூர்ப் பகுதிக்கும் அந்தப்ப குதிகளுக்கும் நிறைய வித்தியாசம். வேடிக்கை பார்த்துக்கொண்டெ செல்வேன்.

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் சென்றிருக்கிறேன். குற்றாலம் சென்றிருக்கிறேன். நாகர் கோவில் சென்றிருக்கிறேன். பாளையம்கோட்டை சென்றிருக்கிறேன். திருவனந்தபுரம் சென்றிருக்கிறேன். திருநெல்வேலி சென்றிருக்கிறேன். பாபநாசம் சென்றிருக்கிறேன். இப்படியாய் இனிப்பான நாட்கள் நிறைய. இனிப்புக்கு முதன்மைக்காரணம் கல்லூரி நாட்களும் அதில் உருவாகும் நண்பர்களும் என்பதே சரி.

தூத்துக்குடி உணவகங்களில் செட் சென்று சொல்லும் பரோட்டா உணவு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அங்குள்ள திரையரங்குகளில் நிறைய பழைய படங்கள் பார்த்திருக்கிறேன். நான் 76 - 79 ல் அங்கிருந்தேன். என் தலைமைப் பேராசிரியரின் பெயர் நெஸ்டர். இளைஞர். தூத்துக்குடிகாரர்தான்.

Father of Economics என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் ஒரு பேராசிரியர் இருந்தார். அவரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் பெயர் சட்டென்று நினைவுக்கு வரமறுக்கிறது. தூத்துக்குடிக்கு உங்களோடு சென்றால் இன்னும் இனிப்பாய் இருக்கும்போல் தெரிகிறது. ஆனால் கட்டாயம் செல்லவேண்டும். குமரியனந்தனை நான் தூத்துக்குடியில்தான் நேரில் சந்தித்தேன்.

அபூர்வமாக மழைபெய்யும் தூத்துக்குடியில். முட்காடுகளுக்குள் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வது வழக்கம். அந்தப் பக்கத்துப் பழக்க வழக்கங்களையெல்லாம் ஆசையாய்க் கேட்டுக்கொண்டு நடப்பேன். "ஏ மக்கா எங்கல போவுதே குண்டக்கமண்டக்க பேசாதவே" என்று அவர்கள் என்னைப் பழக்கப்படுத்திவிட்டார்கள். அவர்களைப் போலவே நான் பேசிவந்தேன். ஊருக்கு வந்ததும் என்ன ஒரு மாதிரி பேசுகிறாய் என்றார்கள் வீட்டில்.

நான் யாருடனும் சட்டென்று பழகுவேன். எங்கும் ஒட்டிக்கொள்வேன். செம்புலப்பெயல்நீராய் கொஞ்சமேனும் கலப்பேன். ஆகையால் எனக்கு நண்பர்கள் அதிகம்தான். ஆனால் யாரையுமே அதன்பின் என்னால் சந்திக்க முடியவில்லை. விரட்டிப்பிடித்து ஓரிருவரை மட்டும் சந்தித்தேன். ஒருவன் நான் அசிஸ்டெண்ட் கமிசனராகிவிட்டேன் புகாரி என்று மகிழ்வோடு கடிதம் போட்டான்.

ஆக, ஒரு தூத்துக்குடி வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன். திருச்சி சென்னையைப்போல் மாணவர்களுக்கு அங்கே சுதந்திரம் கிடையாது. ஒரு மாதிரி அடக்குமுறை தெரியும். தூத்துக்குடியில் நான் முத்துக்குளித்து எடுத்த முத்துக்கள் BBA வும் பல நல்ல அனுபவங்களும்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்க்கை ஓர் கண்ணாமூச்சியாட்டம் கண்கள் கட்டப்படும் போதெல்லாம் மனசு திறந்துகொள்கிறது மனசு கட்டப்படும் போதெல்லாம் கண்கள் ...மேலும் வாசிக்க

வாழ்க்கை
ஓர் கண்ணாமூச்சியாட்டம்

கண்கள்
கட்டப்படும் போதெல்லாம்
மனசு திறந்துகொள்கிறது

மனசு கட்டப்படும் போதெல்லாம்
கண்கள் திறந்துகொள்கிறன

யாரைத் துறத்தினாலும்
அவர்களின் உள்மனம் மட்டும்
அகப்படுவதே இல்லை
அவர்களுக்கும்

கண்களைக் கனவுகள் மொய்க்க
உதடுகளில் கதைகள் மௌனித்திருக்க
நெஞ்சில் கனல் படுத்துக்கிடக்க
தனிமையை எடுத்துப் பூக்களாய் மாற்றி
கவிதைகளாய்ப் பொழிந்த வண்ணம்
உயிரெனும் சிறை வண்டு
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பெண் மானின் கவர்ச்சிப் பார்வையையும் இதயத்தில் அகலாத வெட்கத்தையும் இயற்கையாகவே ஆபரணங்களாய்க் கொண்ட இந்த அழகிக்கு செயற்கை ...மேலும் வாசிக்க


பெண் மானின்
கவர்ச்சிப்
பார்வையையும்
இதயத்தில்
அகலாத
வெட்கத்தையும்
இயற்கையாகவே
ஆபரணங்களாய்க் கொண்ட
இந்த அழகிக்கு
செயற்கை அணிகலன்கள்
ஏன்


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதில தந்து



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1089

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கேட்கப் பொறுக்கமுடியாத விமரிசனங்களையும் கேட்டுப் பொறுக்கின்ற மன்னவனின் ஆட்சியின் கீழ் இந்த ...மேலும் வாசிக்க



கேட்கப்
பொறுக்கமுடியாத
விமரிசனங்களையும்
கேட்டுப்
பொறுக்கின்ற
மன்னவனின்
ஆட்சியின் கீழ்
இந்த
உலகமே தங்கும்





செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கிழ்த் தங்கும் உலகு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 389

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


மேன்மைகள் அனைத்தையும் முழுவதும் பெற்றவனின் அடிதொட்டுத் தொழாதவன் காணும் கண்ணிருந்தும் குருடன்போல் கேட்கும் காதிருந்தும் செவிடன்போல் ...மேலும் வாசிக்க

மேன்மைகள் அனைத்தையும்
முழுவதும் பெற்றவனின்
அடிதொட்டுத் தொழாதவன்
காணும் கண்ணிருந்தும்
குருடன்போல்
கேட்கும் காதிருந்தும்
செவிடன்போல்
சிந்திக்கத் தலையிருந்தும்
மூடனாவான்


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 9

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இஸ்லாமில் உடல் தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடல் உறுதியும் ...மேலும் வாசிக்க

இஸ்லாமில் உடல் தூய்மை மனத் தூய்மை இரண்டும் மிக முக்கியமானது.

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுவதால் உடல் உறுதியும் அதனால் தூய்மையும் மன உறுதியும் அதனால் தூய்மையும் ஆகிறது.

அதிகாலை கண்விழிக்கும் முன்பே தொழுகை தொடங்கிவிடுகிறது. சூரியன் எழுகின்ற சமயத்துத் தொழுகை இது. அந்தத் தொழுகைக்குச் செல்லும்மும் குளித்துவிட வேண்டும். அதிகாலை எழுவதாலும் அப்போதே குளித்து முடித்துவிடுவதாலும் சூரிய உதய நேர ஓசோனை முழுவதும் உள்ளிழுத்துக்கொள்ள முடிகிறது. அதிகாலை எழும் நல்ல பழக்கம் வருகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரு கட்டுப்பாடு வருகிறது.

இஸ்லாமிய தொழுகை என்பது யோகாவில் பல நிலைகளைப் போன்றது. நெற்றி தரையில் படியும் படியும் கால்கள் பின்னால் மடித்துவைக்கப்பட்ட நிலையிலும் பலமுறை எழுந்து குனிந்து அமர்ந்து விழுந்து என்று இருப்பதால் உடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. உடல் வளையும் தன்மை கொண்டதாய் ஆகிறது. இதனால் ஆயுளும் கூடுகிறது.

மனம் தொழுகையின்போது தியானத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருப்பதற்காக பழக்கப்படும். அப்படி ஒன்றையே மனதில் நிலை நிறுத்தும் தியானத்தால், கவலைகள் அழிகின்றன. மன உறுதி பெறுகுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனம் முழுமையான நம்பிக்கையைப் பெறுவதால், வாழ்வின் சுமைகள் பெரிதாகத் தெரிவதில்லை. அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற அன்பு கருணை ஈவு இரக்கம் என்ற உயர்ந்த மனம் வளர்கிறது.

அதிகாலை நாம் கேட்கும் பாடலோ படிக்கும் பாடமோ நம் மனதைவிட்டு எளிதில் நீங்குவதில்லை. ஆகவே அதிகாலையிலேயே தொழுதுவிட்டால், தீய எண்ணங்கள் மனதில் தோன்றாது. இந்த நிலை மெல்ல மெல்ல பலவீனம் அடைவதற்குள் அடுத்த தொழுகை வந்துவிடும்.

அது உச்சி வேளையில் இருக்கும். அதுவும் அதைத் தொடர்ந்த மற்ற தொழுகைகளும் தரும் தாக்கம் குறுகிய காலமே நீடிக்கும் என்பதாலும், மனச் சிதறல்கள் அதிகம் உள்ள பொழுதுகள் இவை என்பதாலும் அடுத்தடுத்த தொழுகைகள் விரைவில் வந்துவிடும்.

குத்துமதிப்பாக அதிகாலை நாலரை மணிக்கு முதல் தொழுகையும், மதியம் பதினொன்னரை மணிக்கு இரண்டாம் தொழுகையும், பின்மதியம் இரண்டரை மணிக்கு மூன்றாம் தொழுகையும், முன் மாலை ஐந்து மணிக்கு நான்காம் தொழுகையும் பின்மாலை ஆறரை மணிக்கு நாளின் இறுதித் தொழுகையான ஐந்தாம் தொழுகையும் இருக்கும்.

சரியான தொழுகை நேரம் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு மாறும். அதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் பாங்கு என்ற அழைப்பின் மூலமாகவும் தொழுகை நேரத்தை அவ்வப்போது அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு முறை தொழுகைக்குச் செல்லும்போதும் உடலைத் தூய்மைப் படுத்த வேண்டும். மனதைத் தொழுகைக்காகத் தயார் செய்யவேண்டும். அதன்வழியே மனத்தூய்மைக்கு ஏற்றதாய் மனம் மாற்றிக்கொள்ளப்படும்.

இந்தத் தொழுகையை தனித்தனியே தொழலாம் என்றாலும் பள்ளிவாசல் போய் நாலுபேரோடு தொழுவதையே இஸ்லாம் விரும்புகிறது. இதன்மூலம் உறவு வளர்ப்பையும் சகோதரத்துவத்தையும் மனிதர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறது.

மற்ற தினங்களில் அப்படி சேர்ந்து தொழுகிறார்களோ இல்லையோ ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையும் கட்டாயம் உச்சி நேர இரண்டாம் தொழுகையின்போது பள்ளிவாசலில் அல்லது ஒரு பொது இடத்தில் ஒன்றாய்க் கூடி ஜும்மா என்ற சிறப்புத் தொழுகையோடு தொழவேண்டும்.

இந்தத் தொழுகைக்கு குறைந்தது நாற்பதுபேர்களாகவது சேர்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் இஸ்லாம் வைத்திருக்கிறது. அந்த சிறப்புத் தொழுகையின்போது இமாம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை குத்பா என்ற பெயரில் வழங்குவார். நல்வழி செல்ல மனிதர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அனைத்தும் ஓர் உரையாக நிகழ்த்தப்படும்.

இதன் மூலமாக ஊரில் உள்ள அனைவரும் சந்திக்கவும் ஒன்றுகூடவும் உறவு வளர்க்கவும் சகோதரத்துவம் கொள்ளவும் உடல் காக்கவும் மன உறுதி பெறவும் வழி அமைகிறது.

ஹஜ் என்பதும் இதே போல உலக மக்கள் அனைவரும் ஒன்றாய் ஓரிடத்தில் வந்து தொழுவதே ஆகும். அதைத் தவிர மற்றதெல்லாம் சம்பிரதாயங்களும் சடங்குகளும் மட்டுமே.

ஹஜ் செல்லும்போது சில நிபந்தனைகள் உண்டு. உடல் தூய்மை மனத் தூய்மை காக்கும் செயலின் உச்சமாக இது மதிக்கப்படுகிறது. ஆகவே ஹஜ் செய்ய முடிவு செய்தவர் நல்லதையே நினைத்து நல்லவராகவே வாழவேண்டும். ஹஜ் செல்லும்முன் ஒழுக்கத்தை ஒழுங்காகக் கடைபிடிப்பவராய்த் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

ஹஜ் சென்று திரும்பியதும் அந்த நினைவிலேயே, தவறுகளுக்கு அஞ்சி நடந்து, உடல், உள்ளம், ஊர், உலகம் அத்தனையும் தூய்மையாய் மலர வாழவேண்டும்.

இதன்மூலம் பரிசுத்தமான அமைதியான நிறைவான குற்றங்கள் அற்ற ஓர் உலக சமுதாயம் உருவாக இஸ்லாம் வழிவகுக்கிறது. அதற்கான கட்டுப்பாடுதான் ஒவ்வொரு நாள் தொழுகையிலும் மெல்ல மெல்ல வளர்க்கப்படுகிறது.

ஆகவேதான் ஐந்து கடமைகளில் முதல் கடமை தொழுகை இறுதிக் கடமை ஹஜ்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில் ஆழமான ...மேலும் வாசிக்க

லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்

ஆழமான பொருள் கொண்டவை. அழுத்தமான உணர்வு கொண்டவை. இறுக்கமான நடை கொண்டவை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம் புதியாய் இருப்பவை. என்றென்றும் என் உயிரைவிட்டு விலகாத நிரந்தர உயிர் கொண்டவை.

அவை எவையென்று சொல்வது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கங்கே அவற்றின் கண்ணசைப்புகளைக் கண்டிருக்கிறேன். எங்கெங்கோ அவற்றின் முகவரித் துண்டுகளை முகர்ந்திருக்கிறேன். இன்னும் எழுதப்படவில்லையோ என்றுகூட சிற்சில பொழுதுகளில் தேடல் தவத்தால் விழி வதை கொண்டிருக்கிறேன்.

மற்றபடி, என்னைச் சில கவிதைகள் இழுத்தணைத்து முத்தமிட்டிருக்கின்றன. சில உரசிக்கொண்டு போயிருக்கின்றன. சில ரகசியமாய்ப் புணர்ந்திருக்கின்றன. சில கைகோத்து நடந்திருக்கின்றன. சில கண்ணீரோடு கண்ணீரை விசாரித்திருக்கின்றன. என் ரசிப்பு வட்டம் மிகவும் அகலமானது. அதனுள் நேற்றே முளைத்த பசும்புல் பச்சை தலைகாட்டிச் சிரிக்கும். என்றோ எழுதிய ஓலை வரிகளின் வாசனை மொட்டுகள் அவிழும்.

எழுதிய எழுத்துக்களில் சில என்னை எட்டிப் பார்த்துப் புன்னகைக்கும். எழுதப்படாத மௌனத்தில் சிலிர்ப்பள்ளி வீசும்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம் மண்ணுக்குப் பயந்தா மனிதர்களுக்குப் பயந்தா துக்கங்களால் ஆனதுதானா உலகம் ஏன் நாம் நம் வாழ்வை ...மேலும் வாசிக்க

பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம்
மண்ணுக்குப் பயந்தா
மனிதர்களுக்குப் பயந்தா

துக்கங்களால் ஆனதுதானா உலகம்
ஏன் நாம் நம் வாழ்வை
துக்கமாக ஆக்கிக்கொள்கிறோம்

எங்கிருந்து முளைக்கின்றன
துக்கம் தரும் ஆசைகள்
எங்கே இருக்கின்றது
அந்த ஆசைகளின் ஊற்றுகள்

உடம்புக்குள்
சிறைபட்ட உயிருக்கு
நிம்மதியே இல்லையா

உடம்புதான்
அனைத்திற்குமான கேடா

மரணம்தான்
அதற்கான மருந்தா
அல்லது மாற்றுவழி ஏதுமுண்டா
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கனடாவில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைக்குள் நாம் விரைந்து செல்ல வேண்டும்தான். ஆனாலும், கனடாவுக்குள் இலங்கைத் தமிழர்களை இறக்குமதி செய்யும் முன் ...மேலும் வாசிக்க

கனடாவில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைக்குள் நாம் விரைந்து செல்ல வேண்டும்தான். ஆனாலும், கனடாவுக்குள் இலங்கைத் தமிழர்களை இறக்குமதி செய்யும் முன் நாம் ஒரு முறை அதனுள் இறங்கிப் பார்த்துப் பரிச்சயப் பட்டுக்கொள்ளவேண்டாமா? அப்போதுதானே, இலங்கையர் எங்கே இறங்கினார்கள் எங்கே வாழ்கிறார்கள் எப்படி வாழ்கிறார்கள் இனி என்ன அவர்களுக்குச் செய்ய முடியும் என்பதெல்லாம் நமக்குத் தெரியவரும்.

கனடாவை ஏரிகளின் பொன்நாடு என்று கூறினாலும் அது குறைத்துக் கூறுவதாகவே ஆகும். ஏன் தெரியுமா? சுமார் 3 லட்சம் ஏரிகள் (!!!) இங்கே இருக்கின்றன. (ஒரு லட்சத்திற்கு ஒரு ஆச்சரியம் என்ற விகிதத்தில் ஆச்சரியக் குறிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன)

அதாவது சுமார் 10 கனடியர்களுக்கு ஓர் ஏரி. உண்மையைச் சொல்வதென்றால் கனடாவில் ஏரிகள் எத்தனை என்பது எவருக்கும் தெரியாத ஒரு கணக்கு. உலகிலேயே ஏரிகள் மிக அதிகம் உள்ள நாடு கனடாதான்.

அத்தனையும் படு சுத்தமான குடிநீர் ஏரிகள். ஒரு பொட்டும் உப்புக்கரிக்காத கடல் பார்த்திருக்கிறீர்களா? தங்களின் முதல் காதலை ஊர்ஜிதப் படுத்திக்கொண்ட கையோடு கடலுக்குள் இறங்கி கண்கள் பளிச்சிட நாக்கு, மூக்கு, காது, தோல் எல்லாம் ஒரே ஒரு காரியத்தை மட்டும் நடு இரவுப் பேய் மாதிரி அக்கறையோடு செய்துகொண்டிருக்க உல்லாசக் குளியல் போடும் நல்லவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

அப்படி துளியும் உப்புக்கரிக்காத கடல் போலத்தான் கனடாவின் பெரிய ஏரிகள் இருக்கும். கனடாவில் என் முதல் வியப்பே இம்மாதிரி ஏரிகளைப் பார்த்துத்தான்.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஐந்து மிகப் பெரிய ஏரிகள் உண்டு. Lake Superior - லேக் சுப்பீரியர் என்ற ஏரிதான் உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் ஏரி. இதன் அளவை நமக்குப் புரியும் வண்ணம் சுலபமாகச் சொல்லவேண்டுமானால், தமிழ் நாட்டில் முக்கால்வாசி இருக்கும் என்று சொல்லலாம். 'அம்மாம் பெருசு!'

இலங்கையை இதற்குள் உட்கார வைத்து தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம். அப்புறம்... கொஞ்சம் நீச்சலடிக்கவும் வைக்கலாம் :)

அராபியக் கடலில் உப்பு மிகவும் அதிகம். கண்கள் எரிய எரிய அதனுள் நீச்சலடித்திருக்கிறேன் பலமுறை. அப்போதெல்லாம் என் கண்கள் கெஞ்சும், இந்தப் பாழாய்ப் போன உப்பு கொஞ்சம் குறைவாக இருக்கக் கூடாதா என்று. நாக்குக்கு கொஞ்சமேனும் உப்பில்லாமல் சரிப்பட்டுவராது. கண்ணுக்கோ அது சுத்தமாக ஒத்துவராது. இருக்கும் உப்பையும் கண்ணீராய்க் கொட்டிவிடும் கறுப்பு தேவதைகள்தானே கண்கள்.

இந்த ஏரிகளில் எனக்கு நீச்சல் அடிப்பது என்பது தென்றல் காற்றில் மல்லிகைப்பூக்கள் பறப்பதைப் போல பரவசமாக இருக்கிறது. ஆனால், இந்த வட அமெரிக்கர்களைப் பாருங்கள். படு மோசம். முக்கியமான விசயங்களுக்கு தண்ணீரைப் பயன் படுத்தாமல் திசுத் தாள்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். நினைக்க நினைக்க இது எனக்கு வெறுப்புதான்.

சென்னையில் தண்ணீர் இல்லாதவனும் அதிகாலையில் புத்திசாலித்தனமாய் கொலை கொள்ளை கற்பழிப்புகளை ஏந்தி தப்புத் தப்பாய்ச் சுப்ரபாதம் பாடும் அதிகாலைச் செய்தித்தாள்களை இந்த மாதிரி விசயங்களுக்குப் பயன்படுத்த அறுவறுப்பு கொள்கிறான். ஆனால் இங்கே வெள்ளைக்காரர்களின் சுத்தம் என்பது இந்த விசயத்தில் சொதப்பல்தான்.

கனடா வந்ததும் ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து நான் ஆச்சர்யப் பட்டேன் ஆனந்தப் பட்டேன். ஆனாலும் ஒரு சோடி விசயங்கள் மட்டும் என்னை எப்போதும் படுத்தி வைக்கின்றன. ஒன்று, கை கழுவ மட்டுமே தண்ணீர் இருக்கும் கழிப்பறை. அடுத்தது பரவலாகப் பரிமாறப்படும் பன்றியிறைச்சி. பன்றிக்கறி ரசிகர்கள் என்னை மன்னித்துத்
தொலைக்கவும்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


எத்தனையோ நான் கொஞ்சிக் கூத்தாடியும் இவர்கள் எனக்கு வில்லன் வேடம்தான் கொடுத்தார்கள் கதறி அழுதும் ஒரு மாற்றமும் இல்லை ...மேலும் வாசிக்க

எத்தனையோ நான்
கொஞ்சிக் கூத்தாடியும்
இவர்கள் எனக்கு
வில்லன் வேடம்தான்
கொடுத்தார்கள்

கதறி அழுதும்
ஒரு மாற்றமும் இல்லை

நான்
எதுவுமே கேட்கவில்லை
அவர்களோ எனக்கு
கதாநாயகன் வேசத்தைக்
கொடுத்தார்கள்

எப்போது நீங்களும் என்னை
வில்லனாய் ஆக்குவீர்கள் என்று
பழைய பயத்தில்
ஐயக் கேள்வி கேட்டுக்கொண்டே
நிற்கிறேன்

எப்படியானாலும்
எங்கும்
நடிக்கத்தான் வேண்டும்
என்பது மட்டும்
வாழ்க்கை நாடகத்தின்
அசைக்கமுடியாத கலைதான்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சந்தவசந்தம் குழுமத்தில் என் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் தலைமைக் கவிதையாகவும் அழைப்புக் கவிதைகளாகவும் நன்றிக் கவிதைகளாகவும் நான் ...மேலும் வாசிக்க

சந்தவசந்தம் குழுமத்தில் என் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் தலைமைக் கவிதையாகவும் அழைப்புக் கவிதைகளாகவும் நன்றிக் கவிதைகளாகவும் நான் எழுதியவை

துவக்கவுரை

கோள்கள் பால்வீதியில்
கதிர்கள் பகல்வீதியில்
இலைகள் மரக்கிளையில்
விழிகளோ யௌவனத்தில்
ஓயாமல் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

பயிர்கள் ஏரெழுத்தில்
மழைநீர் விளைநிலத்தில்
உயிர்கள் உறவுகளில்
உயர்வோ பண்பாட்டில்
தவறாமல் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

நெருப்பு சத்தியத்தில்
ஞானம் அனுபவத்தில்
விதிகள் இயலாமையில்
வெற்றியோ நம்பிக்கையில்
கணந்தோறும் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

காதல் மனத்துடிப்பில்
கவிதை உயிர்த்துடிப்பில்
மடல்கள் குழுமங்களில்
வசந்தமோ சந்தங்களில்
உயர்வாகக் கொண்டாடும்
கவியரங்கம் கவியரங்கம்

கவியரங்கில்லா இடமேது
கவியரங்கில்லாப் பொ஡ழுதேது
இருந்தபோதும் இதயங்களே
எத்திசையும் கூடிப்பாடும்
இணையில்லாக் கவியரங்கம்
இணையக் கவியரங்கன்றோ !



நன்றி சந்தவசந்தமே

பஞ்சபூதங்களும்
பவித்திரமாய்க் கவிபாட
ஓர் வானவில்
தலைமை ஏற்கும்
இது என்ன வைபவம் !

யானை கட்டிப்
போரடிக்கும் பேருழவில்
ஓர் எறும்பு வந்து
கயிறிழுக்கும்
இது என்ன அதிசயம் ?

நயாகராக்கள்
கூடிக் கொட்ட
ஓர் குற்றாலம்
தலைமை ஏற்கும்
இது என்ன குதூகலம் ?

நன்றி நிறைந்த நயனங்களோடு
நான் அரங்கேறி
இக்கவித் தமிழிருக்கையில்
இன்றோர் பிறப்பெடுக்கிறேன்

மேகத் துளியொன்றில்
முழுமொத்த ஆகாயத்தையும்
கவிக்கண்ணால் காண வந்தத்
தமிழ்ச்சுடர்களே

சந்தவசந்தப் படிப்பறையில்தான்
நான் கவியரங்கம் கற்றேன் - அதன்
தலைவனையே அழைத்தின்று
கவிபாடு கவிஞனே என்று கூற
இன்றெனக்குத் தலைமையா?

ஆழிசூழ் அகிலமெல்லாம்
அருங்கணிக்குள் கூடுகட்டி
அருகருகே அமர்ந்திருக்கும்
அழகவைக்கு என் வணக்கம்

தலைமை ஆசனத்திலென்னை
ஏற்றிவைத்த இலந்தையார்க்கும்
நெய்யூற்றித் தூண்டி நிற்கும்
நற்கவிப் பெருமக்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்



கவியரங்கம்: இணையத்துக்கு இல்லை இணை

முதல் அழைப்பு

நினைவிலேறி
நிறைந்து கொள்ளும்
ஆகாய முழுச் சிரிப்பு

வருத்தமேனடா
விருத்தமெழுதவென்றே
வினவும்
ஆசிரியத்தாயுள்ளம்

விழிதிறந்தால் விமரிசனம்
வாய்திறந்தால் கவியரங்கம்

ஏறிய மேடைகளுக்கோ
எழுதிய பாடல்களுக்கோ
கணக்கு வைத்துக் கொள்ளாத
சந்தவசந்தச் சாரதி

கற்க கசடற என்று
கவியேற்றக் கற்றுத்தரும்
கவிமாமணி இலந்தையாரே
வருக வருக

பொன்னும்
புதுவைரமும் இழைக்கும்
உங்களின்
முற்றியச் சொல்வளத்தால்
கவியரங்கின்
முதற் கவிதையைத்
தருக தருக



முதலழைப்பை அன்புடன் ஏற்றுக் கவிபாடிய இலந்தையாருக்கு

சந்தவசந்தத் தேரின் சொந்தக்காரர்
இலந்தை கவிமாமணியின் பாராட்டுகளுக்கு
எண்ணிடங்கா என் இதய நன்றிகள்

இது என் தலைப் பிரசவம்தான்
இருப்பினும் என்
பொட்டிலெடுத்த வலியெல்லாம்
இனிப்பாய்க் கொட்டுகிறது
இப்போது

கவியரங்கின் முதலழைப்பிற்கே ஒரு
திமிங்கிலம் வந்துத் துள்ளியாடிப் போவது
யான் பெற்ற பேறல்லவா?

இந்தக்
கவியரங்கக் கடல் மொத்தமும்
குதூகலிக்கிறது அலைகளெழுப்பி

அடடா....
இலந்தையாரின்
கவிமேகங்கள்
மெல்ல மெல்ல விரிந்து
முழுமொத்த வானையும்
மூடிக்கொண்டன
வாழ்க வாழ்க



இரண்டாம் அழைப்பு

இவர்
பரிட்சித்துப் பார்க்காத
பாவகை ஒன்றில்லை

அதில் தனிக்கொடி
நாட்டாத தருணங்கள்
என்றில்லை

நேற்றே முளைத்தப் புதுக்கவிஞனையும்
தேற்றும் விமரிசனத்தால்
ஊற்றெடுத்துக் கவிபாடப்
போற்றி வளர்க்கும் பேராசிரியர்

இனிய அனந்தர்

ஆம்...
மெய்யாகவே இவர்
பழகு தளத்தில்
இனிப்பள்ளி வழங்கும்
அன்பினிய அனந்தர்

அயல்மண்ணில்
ஆண்டுகள் பல
உருண்டோடியபோதும்
சற்றும் தடம்புரண்டுவிடாத
சுத்தத் தமிழர்

ஐயா அனந்தரே வாங்க
அற்புதக் கவியமுதை
அள்ளி அள்ளித் தாங்க


இரண்டாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய அனந்தருக்கு

வெண்பாப் புலியின் சீற்றம் - கொதிமனம்
உண்ணும் தமிழின் ஏற்றம்
பொன்னாய் விளையும் சொல்லை - உருக்கி
மின்னல் செய்தீர் வியந்தேன்

என்
சின்னப் பெயரை வைத்து
வண்ணக் கோலம் காட்டி
ஆடிய ஆட்டத்தில் நான்
ஆட்டங்கண்டு போனேன்

அருமையான வெண்பாக்கம்
அழகான சிந்துகள்

வளைத்தெடுத்த கரத்தையா
வளைந்துகொடுத்த தமிழையா
எதைப் போற்ற ?

காணுமிடமெல்லாம் உங்களுக்குக்
காவடிச் சிந்தா?

என் அழைப்பையும் விட்டுவைக்காமல்
அதனுள் காவடிச் சிந்துகாணும்
அன்பு அனந்தரே

கொட்டிய கவியமுதில் - மனதைக்
கூத்தாட வைத்தீர்கள் அனந்தரே
நன்றி நன்றி


மூன்றாம் அழைப்பு

இலக்கு வைத்து
இலக்கண மூச்சு விடும்
இலக்கியவாதியே

மரபோடு மரபாய்
உருமாறிப் போன
மரபு ராசரே

ஆழமான எண்ணங்களை
அழகெளிமைச் சொற்களால்
அழுத்தமாகச் சொல்லும்
சிந்தனைக் கவியே

மூசி (mouse) புகா
வலைத்தளங்களுக்குள்ளும்
முந்திப் புகுந்து அலசிப் பார்த்து
அகப்பட்ட அயிரைகளை
சந்தவசந்தக் கரை சேர்க்கும்
சமர்த்தரே

அயல்மண் பேராசிரியராய்க் கழியும்
ஆண்டுகள் நாற்பதைத் தொட்டும்
பெற்றமண் ஊட்டிய தமிழை
நெற்றியில் வட்டமாய் ஏற்றி
வெற்றியின் முகவரிகளோடு - இணையம்
சுற்றிவரும் சூரியத் தமிழரே

அன்புக் கவிமணித்தேரே
அருமைப் பசுபதியாரே
அன்புடன் வாருங்கள் - வந்து
அவையினைக் கவருங்கள்


மூன்றாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய பசுபதியாருக்கு

கால்கள் நிலத்தில்
விழிகள் ஆகாயத்தில்
வானமும் பூமியுமில்லாதொரு
வாழ்க்கையா ?

மரபு இரத்தத்தில்
நவீனம் சிந்தனையில்
பழமையும் புதுமையுமில்லாதொரு
கலையா ?

வாழ்த்துக்களுக்கு
நன்றி பசுபதியாரே

நானென்ன கள்ளா பாலா என்று
இணையத்தைக்
கதறியழ வைத்துவிட்டீர்

பால்தான்
பால் தேடினால் கள்ளாகுமோ
கள்தான்
கள் தேடினால் பாலாகுமோ

உஷார் உஷார் என்று
உசுப்பிவிடும்
எச்சரிக்கைக் கவிதையினை - தட்டி
அச்சேற்றித் தந்தமைக்கு
நன்றிகளும் வாழ்த்துக்களும்
பசுபதியாரே


நான்காம் அழைப்பு

நீரூத்துப் பொங்கிவர
நெஞ்சூத்துக் குதிபோடும்
நெஞ்சூத்துக் குதிபோட
சொல்லூத்துக் கரையாடும்
சொல்லூத்துக் கரையாட
ஆசாத்துக் கவியாகும்

கானா மயிலாட
காணாத ஆளேது
தானாத் தெருக்கூடி
தேனாகச் சொல்லாடி
நானா நீயான்னு
கானாவில் துள்ளுவதை
ஆனானப் பட்டோ னும்
வேணான்னு சொல்வானோ?

கானா மகராசனே - கல்நெய்யூறும்
பாலை வனவாசனே - ஆசாத் என்னும்
அருமைக் கவிதாசனே - எழுந்து நீ

வாராய் வாராய் விழைகிறேன் - கவிச்சோலை
தாராய் தாராய் அழைக்கிறேன்


நான்காம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய ஆசாத்துக்கு

வட்ட வலைநிறைத்தெழில்
மொட்டு விட்டப் பூந்தமிழை
எட்டு எட்டாய் எடுத்தாண்டுத்
தொட்ட பெட்டா உச்சிமுகில்
தொட்டு நின்றத் தோழனே - உன்
கொட்டும் கவிவளம் வாழ்கவாழ்க

அன்பினிய எண்சீர் இளவரசே ஆசாத்
அழகள்ளித் தூவுகிறதுங்கள் வியப்பு
ஆனந்தம் கொள்கிறதிவ்விணையமே
வாழ்த்துக்கள். நன்றி


ஐந்தாம் அழைப்பு

மென்மைமனத் தூரிகையால்
உண்மையினைத் தீட்டுபவர்
வண்ணவண்ணக் காவியங்கள்
மின்னல்போலப் பாடுபவர்

சந்தங்களின் பந்தங்களில்
சிந்தைதனைச் சிதைப்பவர்
புதுமைகளின் செழுமைகளில்
பொங்கித்தினம் திளைப்பவர்

பாடுபொருள் தேடாமல்
தேடிவரும் யாவுக்கும்
காடுகொள்ளாக் கவியெழுதி
வாடுந்தமிழ் வளர்ப்பவர்

காவிரியில் நீர்நிறைந்தால்
களத்துமடிப் பொன்நிறையும்
தூயமனப் பெண்சிரித்தால்
துயரவலை அறுந்துபோகும்
சேவியரும் கவியுரைத்தால்
செவிமடலும் பூப்பூக்கும்
தாவிவரும் கடலலையும்
தங்கிநின்று தலைசாய்கும்

ஆறைந்து வயதுக்குள் சாதனையாய்
ஆயிரம் பக்கக் கவிநூல் படைத்த
வெற்றிமகன் சேவியரே வாராய்
முற்றியநல் கவிமணிகள் தாராய்


ஐந்தாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய சேவியருக்கு

காதலானாலும் கவிதையானாலும்
உருவங்களை மட்டும் நேசித்து
உயிரைத் தவறவிட்டுவிட்டால்
இழப்பு நிவர்த்திசெய்யக்கூடியதா

இரண்டையும் நேசிக்கிறேன் நான்
உயிருக்காக உருவம் வளைக்க
ஒருபோதும் தயங்குவதில்லை
உருவத்திற்காக உயிர்சிதைக்க
ஒருபோதும் இணங்குவதில்லை

தலையில் வளரும் முடியை
இயன்றவரை வெட்டிவைக்கிறேன்
நெஞ்சில் வளரும் முடியை
பெருமையாக விட்டுவைக்கிறேன்

பழைய சுவடுகளின் மீதே
கவனமாய்க் கால்வைத்து நடந்தால்
புதிய சுவடுகள் பதிப்பதெப்போ

பழைய சுவடுகளைப்
பாடமாக்கிக்கொள்வோம்
புதிய சுவடுகளைப்
பயணமாக்கிக்கொள்வோம்

முக்கியத் தளம் தொட்டுப்
பக்குவமாய்க் கவிதொடுத்தீர்

கணினிச் சாளரங்கள்
காதலின் விழிகளாகி
படபடவென அடித்துக்கொள்ள
தடதடவென நடக்கிறது
தட்டச்சும் உற்சவங்களென
அற்புதமாய்ச் சொல்லிவிட்டீர்

வாழ்த்துக்களையும் நன்றிகளையும்
வாரி வழங்குகிறேன் சேவியரே


ஆறாம் அழைப்பு

விதை கொடுத்துப் பாருங்கள்
மரம் கொடுக்கும் மண்
விழி கொடுத்துப் பாருங்கள்
ஞானம் தரும் ஆகாயம்
அழுக்கு கொடுத்துப் பாருங்கள்
தூய்மை தரும் நீர்
கரியமிலம் கொடுத்துப் பாருங்கள்
உயிர் கொடுக்கும் காற்று
உடல் கொடுத்துப் பாருங்கள்
ஆன்மா தரும் நெருப்பு

எதை வேண்டுமானாலும்
கொடுத்துப் பாருங்கள் - சுடச்சுடத்
தமிழ்ச்சொல் மாத்திரமே
தருவார் இராமகி

இயந்திர மொழியின்
இரும்புச் சொல்லுக்கும்
கரும்புத் தமிழேந்தும்
அருந்தமிழ்க் காவலர்

பத்துப் புதுச்சொல்லேனும் ஏற்றிப்
பக்கத்திலோர் அகராதியும் தந்து
பாட்டுப் புனைந்து
பாடம் நடத்துவதில் வல்லவர்

சொல்லித்தரத் துடிக்கும் தவிப்பில்
இவரிடம் இருப்பது
ஜல்லிக்கட்டுக் காளையின் வேகம்

விளக்கம் சொல்ல
வந்துவிட்டால் - இவர்
வேர் முடிந்த ஆழம் தாண்டி
நூறடிக்கும் செல்வார்

தூயதமிழ்த் தீபமேற்றித்
தொழுதுநிற்கும்
உண்மைத் தமிழர்

அன்பிற்கினிய கவிஞர் இராமகியாரெ
வாருங்கள் வாருங்கள்
வந்து வழக்கம்போல்
வேலிக்கு அப்பால் ஓடிப்போனவற்றையும்
வளைத்துப் போட்டுப் பாடுங்கள்


ஏழாம் அழைப்பு

அடடா
இதயத்தின் உள்ளே வந்து
இணக்கமாய்
உட்கார்ந்து கொள்கிறார் இவர்

இவரை உறவல்ல என்று
என்னால் எப்படி
நினைக்க முடியும்?

இத்தனைக் காலமும்
தன் இளமையைத்
துளியும் துவண்டுபோகாமல்
எப்படிப் பாதுகாப்பாய்
வைத்திருக்கிறார் மனிதர்?

ஓ... அவர்தான் கவிஞரோ?

தோகை விருக்கும்
மயிலின் உணர்வுகளை
அதன் இறகுகள் சொல்லும்

மழை பொழியும்
மேகத்தின் உணர்வுகளை
அதன் துளிகள் சொல்லும்

மனம் நெகிழும்
யோகியாரின் உணர்வுகளை
அவரின் மடல்களே சொல்லும்

இத்தனைக் காலம்
சிலிர்ப்போடிருக்க
உங்களுக்கு எந்த தேவதையய்யா
வரம் தந்தது?

என் போன்ற சின்னஞ்சிறு
சிறுவர்களோடு சிறுவர்களாய்
ஆடிப்பாடி மகிழ்கிறீர்களே
உங்களுக்கு
ஆயிரம் வணக்கங்கள் ஐயா

அப்பாடா
கிடைத்த சந்தர்ப்பத்தில்
என்னையும் சிறுவன் என்று
நிலைநாட்டிக்கொண்டேன்
வாய்ப்பளித்த யோகியாரே
நன்றி நன்றி

வாருங்கள் கவிமாமணி யோகியாரே
வந்து உங்களின்
உணர்வுப் பதிவுகளை
நெருப்பாய் இறக்குங்கள்
இந்தப் பொடியனின் தலைமைக்கு
ஓர் அர்த்தம் பிறக்கட்டும்

*

ஏழாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய யோகியாருக்கு

மாதவள் துடிக்கிறாள் கணிவலையே
மன்னவன் முகவரி சொல்லிவிடு
வேதனை கொன்றிடும் வழியுரைத்தே
வேதத்தின் வாதத்தைச் செயலாக்கு

ஆதவக் கதிர்களை வீசுகின்றார்
அருவிச் சொற்களைக் கொட்டுகின்றார்
சாதனை வேந்தராம் யோகியார்க்கு
சட்டென்று பதிலைத் தந்துவிடு

நன்றிகள் யோகியாரே
உங்கள் கவிவளம் வாழ்க வாழ்க


எட்டாம் கவியரங்கத்தின் எட்டாம் அழைப்பு

பாரதிக்குத் தெரியாது - இந்த
ஹரியாரைப்பற்றி

தெரிந்திருந்தால்
கண்ணம்மா கண்ணம்மா
என்ற தன் அடிக்குரலை
அப்படியே
ஒடித்துப் போட்டுவிட்டு
ஹரிகிருஷ்ணா ஹரிகிருஷ்ணா
என்றே
ஆர்ப்பரித்துப் பாடியிருப்பார்

அப்படியொரு தாசன் இவர்
பாரதிக்கு!

கவிதைக்கான சொற்களை
இவர் அகராதிகளில் தேடுவதில்லை
கரும்புத்தோட்டம் சென்று
கடித்துப்பார்த்துக்...
கடித்துப்பார்த்துக்...
கண்டெடுக்கிறார்

கட்டுக் கட்டாய்க் கட்டுரைகள்
கங்கை கொள்ளாக் கவிதைகள்
விட்டு வைக்காக் குழுமங்களில்
விரல் நகத்திலும் விவரங்கள்

அறிஞர் அண்ணாவுக்குப்பின்
இவர்தான் அதிகமாக
அண்ணா என்று அழைக்கப்பட்டவராய்
இருப்பாரோ என்று நான்
ஐயப்படுவதுண்டு

பாரதி புரஸ்கார் ஹரியாரே - உங்கள்
பாயாசப் பாட்டோடு வாருமய்யா



ஒன்பதாம் அழைப்பு

இனிப்புத்தேடி இனிப்புத்தேடி
எறும்புளின் கூட்டங்கள்
உப்புநாடி உப்புநாடி
மனிதர்களின் நாக்குகள்

புளிப்புகேட்டு புளிப்புகேட்டு
கர்பிணியர் எச்சில்கள்
கசப்புபோதும் கசப்புபோதும்
என்பவரோ துறவிகள்

சிரிப்புதந்து சிரிப்புவாங்கிச்
சிகரமேறும் ராஜரே
சிரித்துவைத்துச் சிரிக்கவைக்கும்
சிரஞ்சீவி ரங்கரே

மரித்துப்போகும் தருணம்கூட
சிரித்துவைக்கச் சொல்கிரீர்
சிரித்துச்சிரித்து சிரித்துவாழ
மரிப்பதில்லை என்கிறீர்

கற்றகலை கொஞ்சமில்லை
கடலைக்குடித்து நிற்கிறீர்
மற்றெவர்க்கும் இல்லாமல்
மொத்தமாக வெல்கிறீர்

வற்றிமணல் ஓடும்நதி
வெள்ளவளம் பொங்கிட
வழக்கமான சிற(ரி)ப்பெடுத்து
வண்ணக்கவி தாருங்கள்

அன்பின் ராஜரங்கரே
அருமை நெஞ்ச வேந்தரே
இணையம் உங்கள் கைகளில்
இன்பம் அள்ளிப் பாடுங்கள்



ஒன்பதாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய இராசரங்கனாருக்கு

வந்து விழுந்த நந்தவனத் தந்தனச் சிந்துவால்
தொந்தியுதிரக் குதித்தாடத் துவங்கியதுதான்
இன்னுமே குந்தவில்லை கவி ராசரங்கரே
உங்கள் நையாண்டி வாழ்க வாழ்க

உயர்த்திப் பிடித்தீர்கள் இணையத்தை
நன்றி இராசரங்கரே



பத்தாம் அழைப்பு

ஒன்று வாங்கினால்
இரண்டு இனாம் என்கிறது
வணிக முன்னேற்றம்

முகத்தில்
பிரகாச நிலவுகள்
முகாமிட்டுக் கூத்தாட
ஓடிச்சென்று
மூன்று வாங்கி
ஒன்பதோடு வீட்டுக்கு வரும்
ஒய்யாரப் பொழுதுகளைப் போல

ஒரு கவிஞரை அழைத்தால்
இரு இளைய கவி மொட்டுக்களையும்
இறுக அணைத்துக்கொண்டு
கொத்தாக வந்து
கொட்டோ கொட்டென்று
கவிதைகள் கொட்டும்
மூவருவிக் கவிக்குடும்பமே

வருக வருக

புஷ்பமும்
புஷ்பத்தின் புஷ்பங்களும்
புஷ்டிக் கவிதைகளை
அள்ளித் தருக தருக

கனிகள் மூன்று
முடிச்சுகள் மூன்று
தமிழும் மூன்றுதான்

இவைபோல்
புஷ்பா, செசில், பஸ்ரன்
ஆகிய முக்கவிமலர்களையும்
இணையத்துக்கு இல்லை இணை
என்றே முழங்கிட அழைக்கிறேன்


பத்தாம் அழைப்பை அன்புடன் ஏற்று கவிபாடிய புஷ்பா, செசில், பஸ்ரன் ஆகிய மூவருக்கும்

அழகழகு வரிகளிலே
ஆச்சரியக் குறிகளேந்தி
அரும்புகளை அணைத்துக்கொண்டு
அன்னை மனம் அள்ளித்தந்த
அல்லிமலர்க் கவிதைகட்கு
அவையோரின் சார்பிலென்
அகமேந்தும் நன்றிகள்

இந்த
மலர்மடி மொட்டுக்கள்
தமிழ்
மன்றங்கள் பலதொட்டு
நிதம்
வளர்கின்ற நிலைகொள்ள
சந்த
வசந்தத்தின் வாழ்த்துக்கள்



பதினோராம் அழைப்பு

மரபெடுத்துச்
சொல்
மதுவடித்துப்
புதுக்
கவிதொடுக்கச்
சபை
வாருமையா
அருண்
சிவனையா
அதன்
சுவைநினைத்து
மனம்
துடிதுடித்து
இங்
கிவனையா
தமிழ்
மவனையா



எட்டாம் கவியரங்கின் நிறைவு

எட்டுக் கவிமணிகள்
கொட்டியே முழங்கினர்
எட்டுத் திக்கும்
கேட்டதடா - வெற்றி

எட்டாம் கவியரங்கின்
எட்டா உயரிலெனை
ஏற்றி வைத்தார்
இலந்தையடா - நன்றி

குட்டிப் பார்த்தார் சிலர்
கொஞ்சி நின்றார் பலர்
குறைந்தழியாச்
செல்வமடா - கணினி

விட்டில் பூச்சல்ல
வெற்று விளக்குமல்ல
விலகிடாதச்
சூரியனடா - இணையம்

கிட்டும் சுகவாய்ப்போ
கிட்டாமல் எட்டிப்போகக்
கட்டுண்டார்
கடும்பணியால் - மூவர்

எட்டில் விட்டாலுமே
இலந்தையார்ப் பூவனத்தில்
இன்னுமின்னும்
வாய்க்குமடா - வருவார்

தொட்டில் பிள்ளையிவன்
துள்ளித் தலைமையேற்றுத்
தத்திவந்தநல்
அரங்கமடா - சிலிர்த்தேன்

மொட்டின் தலைமையிலும்
மலரின் மதுவாரிக்
கவிச்சொட்டாய்க்
கொட்டினரடா - நன்றி!
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஒரு குண்டு மல்லியை அதன் மென்னிதழ் நோகாமல் கிள்ளி என் சட்டைப்பைக்குள் கடத்திக்கொண்டு கிறக்கத்தோடு நடந்த நாட்கள் ஏராளம் ஏராளம் பெண்ணே ...மேலும் வாசிக்க

ஒரு குண்டு மல்லியை
அதன் மென்னிதழ் நோகாமல் கிள்ளி
என் சட்டைப்பைக்குள்
கடத்திக்கொண்டு கிறக்கத்தோடு
நடந்த நாட்கள் ஏராளம் ஏராளம்
பெண்ணே என்றேன்

விரல்கள் பூ மல்லியில்
விழிகளோ வானமல்லியில்

நிலாக் குட்டியை
வாடீ என்று வாரியணைத்து
வருடிக்கொண்டே
என் வாலிப வாழ்க்கை
கனவுகளுடன் மிதக்கும் என்றேன்

மகா பொறாமையாய்
இருக்கிறதடா பாவி
என்று கொதித்தாள் என் தோகை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


என் மாமலரே நீ மொட்டாக நின்றபோதே மலர்ந்துவிட்ட மல்லிகையின் வாசம் என்னைத் தீண்டியது நீ அறிவாயா என்றேன் கண்சிமிட்டியபடி ஆம் ...மேலும் வாசிக்க

என் மாமலரே
நீ மொட்டாக நின்றபோதே
மலர்ந்துவிட்ட மல்லிகையின் வாசம்
என்னைத் தீண்டியது
நீ அறிவாயா என்றேன் கண்சிமிட்டியபடி

ஆம்
இந்த மல்லிகைக்கு
மவுனகீதம் பாடத்தெரியும்
என்றாய் பெருமிதத்தோடு

கேட்டது கேட்டது
கேட்கக் கேட்க ஆவலைத் தூண்டி
அநியாயம் செய்தது என்றேன் பூரிப்போடு

உனக்கு மல்லிகை பிடிக்குமா
மல்லியே என்றேன் கிறக்கத்தோடு

பிடிக்குமாடீ
என்று கேட்டால்தான்
பதில் வரும் இனி என்று சிணுங்குகிறாய்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தியா பல வேறுபட்ட இனங்களைக் கொண்ட உலகின் ஒரே மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆஸ்திரேலிய, மங்கோலிய, ஐரோப்பிய, காகாசிய, நீக்ரோ இன ...மேலும் வாசிக்க

இந்தியா பல வேறுபட்ட இனங்களைக் கொண்ட உலகின் ஒரே மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆஸ்திரேலிய, மங்கோலிய, ஐரோப்பிய, காகாசிய, நீக்ரோ இன மக்களின் கலவையை இங்கே காணலாம்.

அஸ்ஸாமி, பெங்காளி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மிரி, மைத்திலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேப்பாலி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இந்தியாவில் உள்ளன.

இவை அனைத்தும் தனக்கென வளமான இலக்கியச் செழுமைகளைக் கொண்டதன் காரணமாக இந்தியா சுவாரசியம் மிகுந்த நாடாக இருக்கிறது. இவை தவிர மலைவாசிகள் மற்றும் ஆதிவாசிகள் பேசும் பல நூறு மொழிகளும் பேச்சுவழக்குகளும் உள்ளன.

இந்திய மொழிகளுள் பெரும்பாலானவை இந்தோ ஆரிய மொழிகளாகும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை திராவிட மொழிகளாகும். இவற்றோடு ஆங்கிலமும் இந்திய மொழிகளுள் ஒன்று என்று கூறுமளவிற்கு அரசாலும், மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழ் மொழியை மட்டுமே இந்திய அரசு செம்மொழி என்று அறிவித்துள்ளது. வடமொழி என்று தமிழர்களால் அழைக்கப்படும் சமஸ்கிருதம் அரசாணை ஏதும் இல்லாமல் செம்மொழியாக ஆங்கிலேயர் காலம்தொட்டு இருந்து வருகிறது.

இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிருத்துவம், சீக்கியம், புத்தம், ஜைனம், ஜொராஸ்டிரம் என்று பல மதத்தினர் வாழ்கிறார்கள். மதநல்லிணக்கமும், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற அரசியல் அமைப்பும் இந்தியாவை உலகின் சிறந்த ஜனநாயக நாடாக உயர்த்தி இருக்கிறது.

2007ன் கணிப்புப்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.13 பில்லியன் ஆகும்.

இந்தியாவுக்கு சுற்றுலா மூலம் அன்னியச் செலாவணி வரவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டின் முதல் ஆறு மாதம் மட்டும் இந்தியாவுக்கு 1.2 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் 1.75 பில்லியன் டாலர் வருமானமும் கிடைத்துள்ளது.

இந்தியச் சுற்றுலா என்றாலே எவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தாஜ்மகால்தான். உலக அதிசயமான தாஜ்மகால் 1631 வருடம் தொடங்கி 22 ஆண்டுகள் இருபதாயிரம் பணியாளர்களைக் கொண்டு ஆக்ராவின் யமுனா நதிக்கரையில் ஷாஜகான் என்ற முகலாய்ப் பேரரசரால் இறந்துபோன மும்தாஜ் என்ற தன் காதல் மனைவிக்காகக் கட்டப்பட்டது. உலகின் உன்னத காதல் சின்னமாகக் கருதப்படும் தாஜ்மகால் உலக அதிசயம் என்று மீண்டும் 2007ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 புதிய உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள அறக்கட்டளை ஒன்று உலகம் முழுவதும் நடத்திய வாக்கெடுப்பின் இறுதியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடந்தது. தேர்வான புதிய உலக அதிசயங்களுள் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது இந்தியாவின் தாஜ்மகால்தான்.

டெல்லியின் முதல் முஸ்லிம் பேரரசரான குதுப்புத்தின் அய்பக் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சித் துவக்க அடையாளமாக 1200ம் ஆண்டு கட்டத்துவங்கிய 238 அடி உயரம் 47 அடி அகளம் கொண்ட குதுப் மினார், ஷாஜகான் பேரரசரால் 1618ம் ஆண்டு கட்டப்பட்ட செங்கோட்டை, முதல் உலக யுத்தத்தில் பலியான இந்திய ராணுவத்தினருக்கு அஞ்சலியாக கட்டப்பட்ட இந்திய நுழைவாயில், இந்திய குடியரசுத் தலைவரின் அரசாங்க இருப்பிடமான ராஸ்டிரபதிபவன் போன்று பல சுற்றுலா ஈர்ப்புகள் டெல்லியில் உள்ளன.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஒரு கலாச்சார செழுமை மிகுந்த இடமாகும். யானைகள், ஒட்டகங்கள், பறவைகள் சரணாலயங்கள், திருவிழாக்கள், கோட்டைகள், சொகுசு ரயில்கள், கிராமிய நடனங்கள், கிராமிய இசை, கலைப்பொருட்கள் என்று இங்கே காணக்கூடியவை ஏராளம்.

இயற்கை அழகு கொஞ்சம் கேரளா, கோட்டை, அணை, கோவில், கடற்கரை, வனவிலங்கு என்று பலவும் கொண்ட ஆந்திரா, மைசூர் அரன்மனை பிருந்தாவனம் போன்ற சிறப்புகளைக்கொண்ட கர்னாநாடகம், கடற்கரைக்குப் புகழ்வாய்ந்த கோவா, சீக்கியப் பொற்கோவில் உள்ள பஞ்சாப், கஜுராஹோ சிற்பங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசம் என்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சுற்றுலா சென்று அனுபவைக்க உகந்த இடங்களாய் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சுற்றுலாவுக்கென்று பல இடங்கள் உள்ளன. இந்தியாவில் முதலில் உருவான பெரு நகரம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைதான். 1996 வரை மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையை எடுத்துக்கொண்டால், முதலில் ஞாபகம் வருவது அதன் அழகிய நீண்ட மெரினா கடற்கரை. மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை இதுதான்.

ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்த 1330 குறள்களைத் தந்த திருவள்ளுவருக்கு 1976ம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், பழந்தமிழ் கட்டிடக் கலை மாறாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள், மாதாகோவில்கள், வனவிலங்குசாலை, நூலகங்கள் என்று பல சுற்றுலா இடங்கள் சென்னையில் உள்ளன.

சென்னையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் வடக்கில் மாமல்லபுரம் என்னும் 7ஆம் நூற்றாண்டின் பல்லவ நாட்டு முக்கிய துறைமுகமான மகாபலிபுரம் உள்ளது. இதன் அழகிய கடற்கரையும், வரலாற்றுச் சிறப்புமிக்க பேரழகு பல்லவ சிற்பங்களும், உலகப்பகழ் பெற்ற கடற்கரைக் கோவில்களும் சுற்றுலாப் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்று மதுரை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலாவினரைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் உண்டு. 1560ல் கட்டப்பட்ட ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபம் தட்டும்போது ஒவ்வொரு வகையான ஒலியை எழுப்பக்கூடிய மாதிரித் தூண்கள் சிலவற்றைக் கொண்டது.

சோழர்களின் தலைநகரமாய் விளங்கிய தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ் வாய்ந்த பிரகதீஸ்வரர் கோயிலும் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தியும் இங்குதான் இருக்கின்றன.

தஞ்சை சரசுவதிமகால் நூலகம் உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்று. கி.பி. 1400 சோழர்கள் காலத்தில் தோன்றி, நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது.

நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மனோரா என்ற ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். இது தஞ்சை மாவட்டக் கடலோரத்தில் உள்ள பேராவூரணி அருகில் உள்ளது.

சித்தன்னவாசல், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குகை ஓவியத்திற்குப் புகழ் மிக்க ஊர். இவ்வூரில் உள்ள கி.பி. 7ஆம் 8ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது.

திருச்சி என்னும் திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள ஐந்து முக்கியமான நகரங்களில் ஒன்று. இதன் மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது காவிரியின் தென்கரையில் கம்பீரமாக அமைந்துள்ள மலைக்கோட்டையாகும். இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது.

மலைவாசத்தலங்களின் அரசி என்று அழைக்கப்படும் உதகை என்னும் உதகமண்டலம், தாவரவியல் பூங்கா, ஏரி, தொட்டபெட்டா மலைச் சிகரம், முதுமலை வன விலங்கு புகலிடம், சிம்ஸ்பூங்கா, கல்லட்டி நீர் வீழ்ச்சி, ஊட்டி, கோத்தகிரி, குன்னுர் என்று பல கோடை வாழிடங்களையும் கவர்ச்சிகளையும் கொண்ட சுற்றுலாச் சொர்க்கமாகும். உதகையில் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் சுமார் 50 வகையான அரிய மலர்களைக் கொண்ட கண்காட்சி நடைபெறும்.

வென்லாக் சமவெளி என்பது உதகை-மைசூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. சுமார் 40 சதுரமைல் பரப்புள்ளது. இதைப் போன்றதொரு இயற்கை அழகு நிறைந்த இடத்தை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது.

அடர்ந்த வானாந்திரங்களும், பச்சை மலைத்தொடரும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமியான குற்றாலம் தென்னாட்டின் மூலிகைக் குளியலறை என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு மலைத்தொடர்களில் பெய்யும் மழைநீர் நதியாக உருவெடுத்து, வனாந்திரங்கள், மலையிடுக்குகள், மரத்தடிகள், மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் சரிந்து 9 அருவிகளாக குளிர்விக்கின்றன. ஜூன் மாதம் தொடங்கும் சாரல் ஆகஸ்டு இறுதி வரை தொடரும். 2000 வகையான மலர்களையும், செடிகளையும் இந்த மலைகளில் காணலாம்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. பல வன விலங்குகளையும் அடர்ந்த காடுகள், பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏரிகள் போன்றவன்றை உள்ளடக்கிய இந்த மலைச்சிகரம் தானியங்கள், பழத்தோட்டங்கள், ஊசியிலை மரங்கள் மற்றும் அரியவகை மூலிகைகளைக் கொண்டது.

இராமேஸ்வரம் வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய வழிபாட்டு இடம் என்பதால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கன்னியாகுமரி இந்தியாவின் தென்முனையில் உள்ளது. இந்திய நிலப்பரப்பை வர்ணிக்கும்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று சொல்வது வழக்கம். வங்காளவிரிகுடா, இந்தியப்பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் முக்கடல் முனையும் இதுதான். சூரிய உதயத்தையும் மறைவையும் இம்முனையில் காணலாம். இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர், காந்தி மற்றும் காமராஜர் நினைவாலயங்கள் உள்ளன. கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியடிகளுடைய அஸ்தி கரைக்கப்பட்டது.

சித்திரை முழுநிலவில் நிலவும் சூரியனும் நேர்கொள்ளும் அழகைக் காணக் கண்கோடி போதாது. சூரியன் மறைவதையும் சந்திரன் எழுவதையும் ஒரே சமயத்தில் இங்கே காணமுடியும்.

திருக்குறளை இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல்பரப்பில் அமைந்துள்ள பாறை ஒன்றில் திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையை தமிழக அரசு அமைத்துள்ளது. சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரமோ 95 அடி பிரமாண்டம்! மொத்தத்தில் 133 அடி உயர சிலை வடிவம் கண்கவர் வண்ணம். பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது. அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்டம் என்ற அழகிய கடற்கரை கிராமத்தின் அழகியலை பல தமிழ்த் திரைப்படங்கள் படம் பிடித்திருக்கின்றன. பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் செம்மண் அகளிகளுமாக முட்டத்தின் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை. பழமையான சகல புனிதர் கத்தோலிக்க ஆலயமும் கலங்கரை விளக்கமும் உள்ள முட்டம் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவதில் ஐயமே இல்லை.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காதலை புரிந்துகொண்டது காலத்துக்கு காலம் மாறிவந்திருக்கிறது. காதல் நம்மிடம்தான் இருக்கிறது அது யாரிடமோ இல்லை. யார் யாரோ எவ்வெப்போதோ ...மேலும் வாசிக்க

காதலை புரிந்துகொண்டது காலத்துக்கு காலம் மாறிவந்திருக்கிறது.

காதல் நம்மிடம்தான் இருக்கிறது அது யாரிடமோ இல்லை. யார் யாரோ எவ்வெப்போதோ நம் காதலை அவர்கள் காதலோடு இணைத்து வீடுகட்டி விளையாட விடுகிறார்கள்.

மாரில் சாய்த்து ஊட்டி விடுபவர்களே நம் காதலை ஒடித்தும் போடுகிறார்கள். சேர்ந்து சிரிக்கிறார்கள் சேர்ந்து அழுகிறார்கள் பின் சோர்ந்துபோய் ஓடிவிடுகிறார்கள்.

எதிர்பாராத தருணங்களில் மிகுந்த ஆச்சரியமானதாய் தொடங்கி அப்படியே பறந்தும் விடுகிறது சில காதல்.

சமுதாய சாத்தியமில்லா காதல்கள்தான் உலகெங்கிலும் அழுத்தமானதாய் வியாபித்திருக்கிறது. ஏனெனில் அவைதான் சரியாக உணரப்படுகின்றன. நிறைய அழுகைகளை எடுத்துக்கொள்கின்றன. அழுகை காதலை துண்டிப்பதற்கு பதிலாய் ஆழமாய் வளர்த்துவிட்டுவிடுகிறது.

காதலை கல்யாணத்தோடு சம்பந்தப்படுத்துவது ஒரு வயது. கல்யாணத்திற்குப்பின் காதல் வருவது இன்னொரு வயது. ஒடிந்துகிடந்தபோது முகத்தில் நீர் தெளிக்கும் மேகமாய் காதல் வருவது பிரிதொரு வயது.

இப்படியாய் வருகிறது வருகிறது என்று சொல்வதைவிட காதல் நம்மிடமே இருக்கிறது அது சேர்வாரோடு சேர்ந்தால் மட்டும் சிவக்கிறது என்று சொல்வதே சரி. சேர்வாரெல்லாம் சேர்ந்தே இருப்பார் என்றால் அது ஒருவரோடு முடிந்துபோகலாம்.

ஓடிப்போயோ அல்லது உடனிருந்தோ காதலை காயப்போடும் நிலை வரும்போது தனிமையை விரும்பாத காதல் சந்தர்ப்பங்களால் மீண்டும் சிலிர்த்துக்கொள்கிறது.

ஒருமுறையே காதல் வரும் என்பது சுத்தப்பொய். ஒரு சமயம் ஒருவர் மீது காதல் என்பதை நம்பலாம் என்றாலும் ஆளுக்கு ஆள் அது வேறுதான்.

காதலை தொட்டு பார்க்காத பழைய நாட்களில் ஒவ்வொரு பார்வையிலும் கரைந்து நிற்கிறோம். நல்ல காதலின் மடியில் கிடக்கும்போது எந்தப் பார்வையும் தீண்டமுடியாத தூரத்தில் தீபமாய் எரிகிறோம்.

துரோகம் தாக்கிய வடுக்களின் மீது வந்து ஒட்டும் கண்ணீரோடு கண்ணீர் சேர்த்து ஒரு அழுகை காதலை பெறுகிறோம்.

இப்படியாய் காதல் என்பது ஒன்றோடு மட்டுமே நின்றுவிடும் மூச்சாய் இல்லை பலருக்கும்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அடடா போர்க்களத்தில் பகைவர்களைப் பயந்தோடச் செய்யும் என் வீரம் இவளின் பேரொளி வீசும் நெற்றியினைக் கண்டதும் ...மேலும் வாசிக்க

அடடா
போர்க்களத்தில்
பகைவர்களைப்
பயந்தோடச் செய்யும்
என் வீரம்
இவளின்
பேரொளி வீசும்
நெற்றியினைக்
கண்டதும்
ஒன்றுமற்றதாகிப்
போனதே



ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1087

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நீதி நிலைநாட்டி மக்களைக் காக்கின்ற மன்னவன் கடவுள் என்றே கருதப்படுவான் ...மேலும் வாசிக்க



நீதி நிலைநாட்டி
மக்களைக் காக்கின்ற
மன்னவன்
கடவுள் என்றே
கருதப்படுவான்





முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 388

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அனைத்து நெறிகளின் ஆழ்கடலாம் அளவற்ற அருளாளனில் அடிதொட்டுத் தொழாதார் இன்பம் பொருள் என்ற ஏனைய கடல்களில் நீந்தும் வல்லமையை நிச்சயம் ...மேலும் வாசிக்க

அனைத்து நெறிகளின்
ஆழ்கடலாம்
அளவற்ற அருளாளனில்
அடிதொட்டுத் தொழாதார்
இன்பம் பொருள் என்ற
ஏனைய கடல்களில்
நீந்தும் வல்லமையை
நிச்சயம் பெறமாட்டார்



அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 8

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கனடாவின் அட்லாண்டிக் கடற்கரைக்கும் பசுபிக் கடற்கரைக்கும் இடைத்தூரம் 5000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம். சீட்டியடித்துக்கொண்டே ஒரு சாதனை நடை ...மேலும் வாசிக்க

கனடாவின் அட்லாண்டிக் கடற்கரைக்கும் பசுபிக் கடற்கரைக்கும் இடைத்தூரம் 5000 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம்.

சீட்டியடித்துக்கொண்டே ஒரு சாதனை நடை நடப்பதாக இருந்தால் ஒரு காப்புறுதி (insurance) எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் தெற்கிலிருந்து வடக்கே நடக்கப் போகிறீர்கள் என்றால் காப்புறுதி பெறுவது கடினமாகலாம். அவ்வளவு குளிர் அங்கே.

தெற்கே அமெரிக்கா அன்புடன் உங்களை வரவேற்கும். வடக்கே துருவக்கடல் (ஆர்க்டிக்) உங்களை ஒரு வழியாக்கிவிடும். கறுப்புக் குளிருக்கு வெள்ளை முகம்! வித்தியாசமாக இல்லை?

கனடாவின் வடக்கு எல்லையிலும் மக்கள் வாழ்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே. இங்கே பல்லாயிரம் வருடங்களாய் வாழ்ந்து வந்த செவ்விந்தியர்களை அபாரிஜினல் (Aboriginal) மக்கள் என்றே அழைக்கவேண்டும் என்பது இங்கே சட்டம். எஸ்கிமோக்கள், செவ்விந்தியர்கள் என்றெல்லாம் கூறினால் அரசு கோபித்துக்கொள்ளும். ஏனெனில் அது அவர்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுவிட்டது.

மொத்த கனடாவின் மூன்றில் ஒரு பகுதி, இந்த முப்பெரும் பனி நிலப்பரப்புகளைக் கொண்ட வடபகுதி. இங்கே என்ன இருக்கிறது வெறும் பனிதானே என்று யாராவது நினைத்துக்கொண்டால், அவர் நெற்றியில் 'அச்சச்சோ ஆசாமி' என்று ஒரு முத்திரையைக் குத்திவிடலாம். தங்கச் சுரங்கம், வைரச் சுரங்கம், ஈயச்(lead) சுரங்கம், துத்தநாகச்(zinc) சுரங்கம் எண்ணை வளங்கள் (oil and gas) எல்லாம் இங்கே ஏராளம் ஏராளம்.

'நடு இரவுச் சூரியனின் நிலம்' Land of Midnight Sun என்று செல்லமாக இதனை அழைப்பார்கள். ஏன்? வெயில் காலத்தில் சில நாட்கள் சூரியன் 24 மணிநேரமும் மேலதிக நேரம் (overtime) போட்டு வேலை பார்க்கும்.

ஆனால் குளிர்காலம்தான் இங்கே மிக அதிகம். -63 பாகை செல்சியஸ் (-81 பாகை பாரன்ஹீட்) குளிரைத் தாங்குவீர்களா? குளிர் பதனப் பெட்டிக்குள் சென்று இறுக மூடிக்கொண்டால் கொஞ்சம் சூடாக உணர்வீர்கள்தானே? 0 பாகை செல்சியசில் நீர் உறைந்துவிடும். நீங்கள் எப்போது உறைவீர்கள்? வாசிக்கும்போதே உறைவீர்கள் :)

கோடையில் மேலதிக நேரம் வேலைபார்த்த சூரியன் குளிர்காலத்தில் விடுப்பெடுத்துக்கொண்டு ஓடிவிடும் ஒரு மூன்று மாதங்களுக்கு. பிறகென்ன, அங்கும் இருட்டு இங்கும் இருட்டு. நினைச்சுப் பாத்தா எல்லாம் இருட்டு என்று பாட்டுப் பாடவேண்டியதுதான்.

அங்கே போய் தங்கி உங்கள் உத்தியோகத்தை நிரந்தரப் பணி (Hire and no Fire) என்று மாற்றிக்கொள்ளப் போகிறீர்கள் என்றால், ஏராளமான சலுகைகளை கனடா உங்களுக்கு வாரி வழங்கும். அங்கே செல்ல இதுவரைக்கும் நான் தயார் இல்லை, நீங்கள் தயாரா? எனக்கு டொராண்டோ குளிரே கட்டுபடியாகவில்லை. அவ்வப்போது கடித்துத் துப்பிவிட்டுப் போய்விடுகிறது. இப்போதும் கதவைச் சாத்திக்கொண்டு வீட்டைச் சூடேற்றி நிலைப்படுத்திக்கொண்டுதான் இதை எழுதுகிறேன்.

தனி விமானத்தில் மட்டுமே சென்று உல்லாசப் பயணம் மேற்கொள்ள வேண்டிய இடங்கள் இந்த கடும் பிரதேசத்தில் சில உண்டு. நாம் ஏன் இப்போது அங்கே நடுங்கிக்கொண்டே போகவேண்டும்? நம் தமிழ் ஈழத்துக்குள் விரைய வேண்டாமா?
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில் ...மேலும் வாசிக்க

லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


அது என் பாட்டி வைத்த பெயர். கனடா வானொலி நேர்காணல்களிலும், தொலைபேசி வழியாகவும், நேரிலும் பலர் ஆர்வமாக இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழாவில்தான் நான் அந்தக் கதையைச் சொன்னேன். அங்கே எதைச் சொன்னேனோ அதையே இங்கேயும் சொல்கிறேன்.

பலரும் தான் ஒரு கவிஞனானதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். "நான் கவிஞனென்றால் அதெல்லாம் அந்த அழகியின் முகம் பார்த்து" என்றும் "அவள் கவிஞனாக்கினால் என்னை" என்றும் பல திரையிசைப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள். நான் கவிஞனானதும் ஒரு பெண்ணால்தான். அது வேறு யாருமல்ல என் பாட்டிதான்.

நன்றாக ரசித்து கதை சொல்லத் தெரிந்த பாட்டி கிடைக்கப்பெற்றவர்களெல்லாம் நிச்சயம் கவிஞனாகிவிடுவார்கள் :)

என் பாட்டி லயித்துச் சொன்ன பச்சைமிளகாய் இளவரசி கதையின் தலைப்புதான் முழுமையாய் என் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர வேறெதுவும் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

முன்பொரு காலத்தில், பச்சைமிளகாய்புரி பச்சைமிளகாய்புரி என்று ஒரு நாடு இருந்ததாம். அதை அழகான ஓர் அரசன் ஆண்டுவந்தானாம். அவன் ஓர் அழகான பெண்ணப் பார்த்து காதலில் விழுந்தானாம், அவளையே மணமும் முடித்தானாம். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லையாம். இப்படியோர் அன்பான கணவனுக்குத் தனனால் ஒரு பிள்ளையைப் பெற்றுத்தர இயலவில்லையே என்ற
கவலையிலேயே மனம் உடைந்து அவள் இறந்துவிட்டாளாம். கதறி அழுத அரசன் அவளை ஓர் அழகிய தோட்டத்தில் புதைத்துவிட்டு தினமும் அவள் சமாதியின் முன்னமர்ந்து கண்ணீர் விடுவானாம். சில தினங்களில் அவள் சமாதியின் மீது ஓர் அழகான பச்சைமிளகாய்ச் செடி முளைத்ததாம். அதில் மிக வசீகரமாகவும் பெரிதாகவும் ஒரே ஒரு பச்சைமிளகாயும் முளைத்ததாம். அது வளர்ந்து வளர்ந்து பத்துமாதங்கள் கழிந்ததும், பட்டென்று வெடிக்க
ஓர் இளவரசி அதிலிருந்து வெளிவந்தாளாம்.

அவளோ அழகென்றால் அழகு அப்படி ஓர் அழகாம். சூரியனைவிட வெளிச்சமாக நிலவை விட குளிர்ச்சியாக மலரைவிட மென்மையாக என்று பாட்டி சொல்லச் சொல்ல அந்தப் பேரழகியின் அழகு என் அடிமனதில் அப்படியே சென்று தங்கிவிட்டது.

அந்தப் பச்சைமிளகாய் இளவரசியை என்றோ என் வாழ்வில் ஒருநாள் சந்திப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மெல்ல மெல்ல அவளை மறந்தும்போய் விட்டேன். நாட்கள் உருண்டோடின. எனக்குத் திருமணமும் ஆனது. ஆனால் என் பச்சைமிளகாய் இளவரசியைப் பார்க்கவே இல்லை. ஆனால், என் திருமணமான பத்தாவது மாதம் எனக்கே பிறந்தாள் அந்தப் பச்சைமிளகாய் இளவரசி.

என் மகளுக்காக நான் சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று இந்தத் தொகுப்பிலும் உள்ளது. அந்தக் கவிதையின் பெயர்தான் பச்சைமிளாய் இளவரசி.

நகைச்சுவை உணர்வுகளோடுதான் நான் இந்தத் தலைப்பை என் நான்காவது கவிதை நூலுக்கு வைத்தேன். பலராலும் அது பாராட்டப்படுவது மகிழ்வினைத் தருகிறது.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


என் உயிரின் அத்தனை துளிகளிலும் கண்ணீராய் வாழும் என் உயிரே என்னை நிராகரிப்பது உன் உரிமை நான் மௌனமாய் வெதும்பி ...மேலும் வாசிக்க

என் உயிரின் அத்தனை துளிகளிலும்
கண்ணீராய் வாழும் என் உயிரே

என்னை நிராகரிப்பது உன் உரிமை
நான் மௌனமாய் வெதும்பி நிற்பேன்
வேறொன்றும் செய்வதற்கில்லை

எப்படி வேண்டுமானாலும்
என்னை நீ நிராகரித்துக்கொள்
ஆனால் என் கண்கள் தொடும்
தொலைவிலேயே இரு

உன் மீதான என் பிரியம் என்பது
பைத்தியத்திலும் கேடுகெட்ட
பைத்தியமானது என்பதை அறிவாயா

எனக்குள் அதை ஊட்டிவிட்டவள் நீதானே
நெஞ்சில் எனக்கான அத்தனை
காதலையும் வைத்துக்கொண்டு
நிராகரிப்பதாய் உதடுகளால் நடிக்கிறாய்

ஒன்று மட்டும் புரிந்துகொள்
நீ விரும்பாத எதையும்
நான் விரும்பவும் மாட்டேன்
நீ வாழவே நான் வாழ்வேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புத்தி வைத்திருந்தாய் பார்த்தேன் ஆனாலதை கத்தியாக்குவாய் என்று எண்ணியிருக்கவில்லையே மனசு வைத்திருந்தாய் பார்த்தேன் ஆனாலதை ஒரு ...மேலும் வாசிக்க

புத்தி வைத்திருந்தாய் பார்த்தேன்
ஆனாலதை கத்தியாக்குவாய்
என்று எண்ணியிருக்கவில்லையே

மனசு வைத்திருந்தாய் பார்த்தேன்
ஆனாலதை ஒரு தினுசாய் மாற்றுவாய்
என்று எண்ணியிருக்கவில்லையே

விழிகள் வைத்திருந்தாய் பார்த்தேன்
ஆனாலதை புதைகுழிகளாய் மாற்றுவாய்
என்று எண்ணியிருக்கவில்லையே

முத்தம் வைத்திருந்தாய் பார்த்தேன்
ஆனால் இரத்தம் குடிப்பாய்
என்று எண்ணியிருக்கவில்லையே

பேரழகாய் இருப்பாய் பார்த்தேன்
ஆனால் காதல் வேரழித்துப் போவாய்
என்று எண்ணியிருக்கவில்லையே

கருமைக் கண்மை இடுவாய் பார்த்தேன்
ஆனால் உண்மை விடுவாய்
என்று எண்ணியிருக்கவில்லையே

கட்டியணைப்பாய் தெரியும்
ஆனால் வெட்டி முடிப்பாய்
என்று எண்ணியிருக்கவில்லையே

உயிர் உயிர் என்பாய் மலர்வேன்
ஆனால் காதல் உயிரையே மென்று தின்பாய்
என்று எண்ணியிருக்கவில்லையே
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


என்னை அனாதை விடுதிக்கு அழைத்துச் சென்றாய் உன் விரல்களை என் விரல்களால் பற்றிக்கொண்டு கம்பீரமாய் நடந்து வந்தேன் ...மேலும் வாசிக்க

என்னை
அனாதை விடுதிக்கு
அழைத்துச் சென்றாய்
உன் விரல்களை
என் விரல்களால் பற்றிக்கொண்டு
கம்பீரமாய் நடந்து வந்தேன்
அன்றுமுதல்
நான் அனாதை இல்லை
என்றானேன்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நான் உயிருக்குயிராய்க் காதலிக்கும் உன்னிடம் கேட்டேன் ஒரு நாள்கூட நீ என்னைக் காதலித்ததில்லையா என்று நீ சொன்னாய் யோவ், ...மேலும் வாசிக்க

நான் உயிருக்குயிராய்க்
காதலிக்கும் உன்னிடம் கேட்டேன்
ஒரு நாள்கூட நீ என்னைக்
காதலித்ததில்லையா
என்று

நீ சொன்னாய்
யோவ், ஒரு நாள்கூட
நான் உன்னைக்
காதலிக்காமல் இருந்ததில்லையா
என்று

காத்திருந்த கண்ணீர்
சட்டென்று இமைக்கரை ஏறி
எரிமலைக் குழம்பாய்ப் புரள்கிறது

சரி போடீ
உன்னிடம் பேசி
ஒரு பிரயோசனனும் இல்லை
என்று அழுகிறேன் நான்

என்னை மன்னிச்சிடுய்யா
என்று கூறி
என் உயிர்த் தோட்டம்
கடந்து
பறந்து
போயே போய்விடுகிறாய்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல ...மேலும் வாசிக்க

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்

நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள்

சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர்.

ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்னசந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.

அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு.

தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்

சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட

போர்வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.

அரணமனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.

ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள்.

கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.

பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு.

மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.

ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு

ஒரத்தநாட்டைச்சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.

எனவே என் ஊர் என்று தஞ்சையை அழைத்து என் நான்காம் தொகுப்பில் நான் எழுதிய கவிதை இது:

என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?


வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
எழில்காட்டும் தஞ்சாவூர்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குப்பையில் கிடந்தாலும் மாணிக்கம் மாணிக்கம்தான் சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை செந்தாமரைதான் பூஜையறையும் கழிப்பறையும் ஒரே வீட்டில்தான் இதயமும் ...மேலும் வாசிக்க

குப்பையில் கிடந்தாலும்
மாணிக்கம் மாணிக்கம்தான்
சேற்றில் முளைத்தாலும்
செந்தாமரை செந்தாமரைதான்

பூஜையறையும் கழிப்பறையும்
ஒரே வீட்டில்தான்
இதயமும் மலக்குடலும்
ஒரே யாக்கையில்தான்

அமுதும் நஞ்சும்
பாற்கடலில்தான்
புழுவும் வண்ணச் சிறகுகளும்
பட்டாம் பூச்சிதான்

கண்களில் தெளிவிருந்தால்
காண்பவற்றுள் இனிமை தெரியும்

நல்லவை தேடினால்
அல்லவை அழகாய் ஒதுங்கிக்கொள்ளும்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தாளாத துயர் வரும்போது தன்னையறியாமல் மனிதன் மரணத்தைக் காதலிக்கவே செய்கிறான் வாழ்நாளில் ஒரே ...மேலும் வாசிக்க

தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று கடவுள்
அடுத்தது மரணம்

கடவுளும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நம்மூர் வாழ்க்கை மாட்டுவண்டியைப் போன்றது. இரண்டு மாட்டை வாங்கிப் பூட்டிவிட்டால் வண்டி தானே ஓடிக்கொண்டிருக்கும். கனடிய வாழ்வென்பதோ மிதிவண்டியைப் போன்றது. ஒவ்வொரு ...மேலும் வாசிக்க

நம்மூர் வாழ்க்கை மாட்டுவண்டியைப் போன்றது. இரண்டு மாட்டை வாங்கிப் பூட்டிவிட்டால் வண்டி தானே ஓடிக்கொண்டிருக்கும். கனடிய வாழ்வென்பதோ மிதிவண்டியைப் போன்றது. ஒவ்வொரு முறையும் உயிரழுந்த உயிரழுந்த மிதிப்பதை நிறுத்தினால் அந்த நிமிடமே நாம் மரண மிதிபடுவோம்.

உண்மைதான், பலருக்கும் இங்கே உறங்கவும் பொழுதின்றி இருபணி முப்பணியென்று செக்குப்பிராணி வாழ்க்கைதான். கிரடிட் கார்ட் என்பதை எவரும் பிழையாக மொழி பெயர்க்காதீர்கள் கடனட்டை என்பது தவறு கடவுள் அட்டை என்பதே சரி. அது இல்லாமல் கோவில் உண்டியலில் விழுந்த செல்லாக்காசுதான் கனடிய வாழ்வு.

படிக்கத்தான் அனுப்பினோம் மகனை பள்ளியில் சேர்ந்த ஒராண்டுக்குள் மகனே இல்லை என்றாகிவிட்டது மருந்துக்கு விருந்தாகி மறைந்தே போனான். பெண் பிள்ளைகள் மட்டுமென்ன ஆளுக்கு நாலு காதல் வீசி எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்கள். உண்மைதான், பிள்ளைகளை நம் பண்பாட்டுக்குள் கட்டிவைப்பதென்பது நயாகராவை முந்தானையில் ஏந்துவதைப் போன்றதுதான். தமிழனின் அடுத்த சந்ததியை அழித்தெடுக்க மிகுந்த கவர்ச்சிகாட்டி நிற்கிறது மேற்குலகக் கலாச்சாரம்.

குளிரும் இங்கே கொடுமைதான். உடம்பைக் கனக்கவைத்து உயிரை உறையவே வைத்துவிடுகிறது.

ஆகவே இந்தப் புலம்பெயர் வாழ்வென்பது தேவைதானா என்ற கேள்வி எழுவது உண்மைதான். குளிர் குதறிக் கிழிக்க, வேலை விழிக்குள் விரலாட்ட, வருமானம் முகத்தில் கரிபூச, பிள்ளைகள் உயிரில் ஆணியடிக்க இந்தப் புலம்பெயர் குடும்ப வாழ்வு தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

ஆனால், ஒரே ஒரு கேள்வி உங்களிடம் உண்மையா இல்லையா சொல்லுங்கள். தமிழ் ஈழம் இலங்கையில் மலரப்போவது நாளை இன்றே மலர்ந்திருப்பது கனடாவில் உண்மையா இல்லையா சொல்லுங்கள்.

உழைப்பிருந்தால்தானே எங்கும் பிழைப்பிருக்கும் நல்ல உழைப்பிருந்தால் கடவுள் அட்டை உன் கட்டைவிரலாகாதா?

உன் வீட்டில் தமிழிருந்தால் தமிழ்ப்பிள்ளை எப்படித் தடம்மாறும்? தமிழ் வெறும் மொழியல்ல தமிழா கற்புமிக்க பண்பாட்டின் பாடசாலை கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்.

தமிழர்தம் உடலின் உள்ளே திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும். தமிழர்தம் விழியின் உள்ளே திரையேறும் கனவும் தமிழாக வேண்டும். தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும். தமிழர்தம் உயிரின் உள்ளே துடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்.

நம் புலம்பெயர் வாழ்வில் நான் மிகப்பெரும் தவறென்னு எண்ணுவது ஒன்றே ஒன்றைத்தான். ஊரில் என் விடலைப்பருவத்தில் கவிதை கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம் என்பன வருகிறதென்றால் தமிழ் கேட்டு நெகிழ உருக உள்ளமும் உயிரும் உயர கேளிக்கைகளை எல்லாம் துறந்து ஓடிச்சென்று செவி விரித்துக் காத்துக்கிடப்பேன். எங்கே அந்த இளைஞர்கள் இங்கே? இளைஞர்களைத் தமிழின்பால் ஈர்க்காமல் புலம்பெயர் வாழ்வு புழுதிவாழ்வாகித்தான் போகும். நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக இந்த மேடைகள் அமையவேண்டும். இதுவே இன்றைய என் உறுதியான வேண்டுகோள்.

அடுத்தது குளிர். நெஞ்சில் நெருப்பிருந்தால் கொடும் பனியும் கொடிய குளிரும் உன்னைக் கும்பிட்டு விலகாதா? எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழனை குளிர் வவ்வால் கொன்றா போடும்? என் முதற்பணி நேர்காணலில் நிறுவன அதிபர் இத்தாலியர் கேட்டார் பனியிங்கே கொல்லுமே வாழ முடியுமா உன்னால்? நொடியும் தாமதிக்காது குரலுயர்த்திக் கேட்டேன் உன்னால் இயலுமென்றால் என்னால் இயலாதா? மறுபேச்சின்றி அப்பொழுதே பணியொப்பந்தம் கையெழுத்தானது.

ஈழத்தமிழா, பிறந்த மண்ணை உயிர்முத்தமிட்டு ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய தாய் நாட்டைவிட்டு விதி விரட்டிய திசைகளெங்கும் சிதறி ஓடும் அவலத்துக்கு ஆளானாய் நீ. ஆனால் வந்த இடம் எப்படி? சொர்க்க பூமியல்லவா?

லஞ்சம் ஊழல் சாதிவெறி மதவெறி அழுகல்-அரசியல் கற்பழிப்பு கிட்னி திருட்டு என்று தாய்மண்ணின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை.

ஏற்றத்தை நோக்கியதொரு மாற்றம் புலம்பெயர்பு புலம்பெயர்வின்றி சிறு புல்லுக்கும் வளர்ச்சியில்லை. புலம்பெயர்வென்பது இன்று நேற்று நிகழும் செயலல்ல. அன்று புலம்பெயர்ந்ததைப் பாடி எத்தனை எத்தனை பாலைத்திணைப் பாடல்கள்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடினான் ஆனால் கனடாவுக்கும் ஊருக்குமே இன்று பாலம் வந்துவிட்டது புலம்பெயர்வுகளைப் பூசைக்குரியதாய் ஆக்கிவிட்ட ஆகாயப் பாலம்.

திரையில் வந்த புலம்பெயர்வுப் பாடல் ஒன்று என் கண்களை உருக்கித் திரவமாக்கியது.

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

அந்த அழுகையையும் கண்ணீரையும் கருணையோடு துடைத்து பஞ்சு மஞ்சம் தந்த சுவனம் இந்த நாடு.

இரவும் உறங்கிப்போகும் இரவுகளில் உறங்காத இருபத்துநாலு மணிநேர தமிழ் வானொலிகள். தமிழ்த் தொலைக்காட்சிகள் தமிழ்ச் செய்தித் தாள்கள். தமிழிலேயே பேசலாம் என்ற வழக்காடு மன்றங்கள். 'வருக வருக' என்று முகப்பில் தமிழில் வரவேற்கும் கனடா தேசக் கோபுர நுழைவாயில் என்று இப்படியாய் எத்தனை எத்தனை அடுக்கலாம்.

நம்மூரில்கூட அவசரப்பிரிவுக்கு ஐசியூ என்றுதானே எழுதியிருக்கிறார்கள் ஆனால் கனடாவில் அழகு தமிழிலல்லவா எழுதியிருக்கிறார்கள்.

வாரம் தவறாமல் எங்கோ ஓர் இடத்தில் கலீர் கலீர் எனக் கேட்கும் சலங்கையொலி. கொட்டும் பனியிலும் முத்தமிழ் விழாக்கள், பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள், புத்தக வெளியீடுகள் பழைய மாணவர் சங்கங்களின் கூட்டங்கள்.

கவிப்பேரரசு முதல் ஆச்சி மனோரமா வரை அனைவரும் வந்து தமிழ்மண் வாசணையை இதயத்தில் கொட்டிவிட்டுச் செல்கிறார்களே?

சொல்லுங்கள், ஈழத்தமிழர்களுக்கு கனடா இரண்டாவது தாயகமா? முதலாம் தாயகமல்லவா முதன்மைத் தாயகமல்லவா? அகதிகளாக வாழாமல் குடிமக்களாய் வாழும் வாழ்வு எத்தனை ஏற்றம்?

ஆனால் இங்கே சிலர் என்ன செய்கிறார்கள்? புலம்பெயர்ந்தது வாழ்வு தேடியல்லவா ஆனால் வீழ்ந்துபோகவே எண்ணம் கொண்டு தங்கள் குழிகளைத் தாங்களே வெட்டிக்கொள்ளும் கேடுகெட்ட மண்வெட்டிகளாய் ஆகிப்போனார்களே இங்கே சிலர்.

புலம்பெயர்ந்த தமிழா உனக்கு ஏனடா ஏக்கே 47. அதோபார் உன் அம்மா அப்பா உன்னால் தனித்து விடப்பட்டு மன அழுத்தத்தால் மடிந்துபோகிறார்கள். அழிந்துபோக மட்டுமே ஆசைப்படும் தமிழனே கேள். இது கருணை மிக்க நாடு நல்ல மக்களைக் கொண்ட சொர்க்க பூமி. இங்கே உன் பாவங்களைக் கழுவிக்கொள். மனிதனாய் இனியாவது வாழப் பழகு. தமிழையும் தமிழினத்தையும் தரணி மேடையில் வெட்கித் தலைகுனியச் செய்யாதே. இந்தக் கருணைக் கனடாவில் தரமான உயரினம் நம் தமிழினம் என்று காட்டு.

புதைத்ததும் புதைந்ததும் போதும் போதுமடா தமிழா. பண்பும் புகழும் பாரம்பரியத் தமிழ் அறமும் மீட்டெடுப்பொம் வா.

தமிழ் அடையாளம் தொலைத்துவிட்டு வாழும் தமிழனை தமிழ் மண்ணிலும் காண்கிறேன் புலம்பெயர்ந்த மண்ணிலும் காண்கிறேன். தமிழ் அடையாளம் தொலைக்காமல் ஆண்டாண்டு காலமாகப் புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் உண்மைத் தமிழர்களையே நான் என்றும் போற்றுகிறேன். எங்கே வாழ்கிறோம் என்பதைவிட நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே நம் அடையாளத்தைத் தக்க வைக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழனின் பண்பாடு.

ஒரு மனிதன் புலம்பெயரும் போது தன் விழுதுகளைத்தான் பரப்புகிறான். அவன் வேர்கள் தான் பிறந்த மண்ணில்தான் அழுத்தமாகக் கிடக்கின்றன. ஒருவனின் தாய் எப்படி மாற்றப்படமாட்டாளோ அப்படித்தான் பிறந்த இடமும்.

தாய், மண், பண்பு என்ற அடையாளங்களோடு போகுமிடத்தில் கிளை பரப்புவதும் இலை விரிப்பதும் கலாச்சாரக் கலப்பு கொள்வதும் சிறந்த பண்புகளை ஏற்றுக்கொள்வதும் இயல்பானது உயர்வானது.

புலம்பெயர்வு என்பது பிழையல்ல அது ஓர் உயர்வு. ஒரு பெண் பிறந்த இடத்திலிருந்து தன் புகுந்த வீட்டிற்குப் புலம்பெயர்கிறாள் அவள்தான் உன் தாய். ஓர் உயிர் கர்ப்பப்பையிலிருந்து பூமிக்குப் புலம்பெய்கிறது அதுதான் நீ.

மனிதன் முதலில் ஆப்பிரிக்காவில் பிறந்தான் பின் எங்கும் புலம்பெயர்ந்தான் என்கிறது சரித்திரமும் அறிவியலும். பறவைகள் புலம்பெயர்ந்த வண்ணம் இருக்கின்றன. அவை பொருளுக்காகவா புலம்பெயர்கின்றன? வாழ்விற்காகப் புலம்பெயர்கின்றன. வாழ்விற்காகப் புலம்பெயர்வதில் தவறே இல்லை.

மனித வாழ்வில் எது மிக மிக அவசியமானது? சாதி, மதம், இனம், மொழி, மண் என்ற எதுவும் இல்லை மனிதம்... மனிதம் மட்டும்தான் தமிழா.

இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா காந்தி புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். இந்தியப் பெண்ணாகவே மாறிவிட்ட சோனியா காந்தியும் புலம்பெயர்ந்தவர். தேம்பாவணி வீரமாமுனிவரை அறிவீர்கள் அவர் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்ததோடு தன் பெயரைத் தமிழ்ப்பெயராகவே மாற்றிக்கொண்டவர்.

அன்னை தெரிசா எந்த நாடு அவர் ஏன் புலம்பெயர்ந்தார் காசுக்காகவா புகழுக்காகவா பாதுகாப்பிற்காகவா? அவரின் ஆத்மா கருணைமிக்க அந்தப் புலம்பெயர்வில்தானே துடித்துக்கொண்டிருந்தது.

நீர் தன் புலம் பெயராமல் உலகுக்கு மழை இல்லை. பயிர் தன் புலம் பெயராமல் மக்களுக்குச் சோறு இல்லை. நதி தன் புலம்பெயராமல் கடல்சேர வழியில்லை. புலம்பெயராத மரங்கள்கூட தங்கள் விதைகளைப் புலம்பெறச் செய்துவிடுகின்றன.

அந்தக் காலத்தில் வந்த சுனாமிதான் பூம்புகார் மக்களைப் புலம்பெயரச் செய்தது. இலங்கைத் தீவு இந்தியாவிலிருந்து கடலால் புலம்பெயர்க்கப்பட்டிருக்கலாம். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புலம்பெயர்வு என்பது நிகழும் அது இயற்கையின் விதி. அகிலமெங்கிலும் நிகழும் அயராத புலம்பெயர்வுகளே மனிதனையும் மனிதநேயத்தையும் இயமத்தில் ஏற்றும் வல்லமை கொண்டவை என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்

(பிப்ரவரி 16, 2008ல் கனடா எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த அரங்கத்தில் பேசியது)
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


உயிர் முத்தங்கள் தமிழால் அமைந்த கணினி மேடைக்கும் அதில் தமிழெடுத்து ...மேலும் வாசிக்க

உயிர் முத்தங்கள்

தமிழால்
அமைந்த
கணினி
மேடைக்கும்
அதில்
தமிழெடுத்து
ஆடும்
இணைய
தேவதைக்கும்

*

தமிழ் நெஞ்சங்களே

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல்

இணையம்!

தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ்

வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும்

தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம்

ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள்

சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம்

இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல்

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று

வறுமை கிழித்துப்போட்ட குடும்பத்தின் கடைசி ஆடையையேனும் தைத்தெடுத்து விடலாம் என்ற பதட்ட உணர்வுகளோடு மண்ணைப் பிரிந்த தமிழர்கள், தமிழோடு சேர்ந்திருக்கிறார்கள்

தாய்நாட்டில் எவர்க்கும் தமிழ்ப்பற்றே இல்லை என்றுரைக்கும் கண்ணற்ற ஓட்டமல்ல இது. போற்றிப் புகழும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று எல்லோருமே இன்னமும் அங்கேதான் அமோகமாய் விளைகிறார்கள். இருப்பினும், நாளுக்கு நாள் அமீபாக்களாய்ப் பெருகும் ஒரு கூட்டம் திசைமாறிப் பயணப்பட்டு, தமிழை நெருப்பில் புதைத்துச் சிரிக்கிறதே.

இவர்களின் மத்தியில், உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா?

இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கிவிட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து.

புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள்.

உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள்.

வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி உதைத்து விளையாடுகிறது இன்று.

நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடிநடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும்.

தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்ப்டும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன.

இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று.

தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்க்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம்.

உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல்.

தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி
மெல்லச் சாவதோ
தீப்பொறி
தீர்ந்தே போவதோ?

விழிகளை
விரித்தே காண்பீர்
வெற்றியின்
நெற்றியில் தமிழே!

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!

அன்புடன் புகாரி

416-500-0972
anbuda...@gmail.com
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


தடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி படிச்ச புத்திசாலி பழக்கத்தில் கெட்டிக்காரி முடிச்ச மனப்பிணைப்பை முடிஞ்சதுன்னு சொல்லிப்புட்டா வடிஞ்ச கண்ணுக்குள்ள வாய்க்கால ...மேலும் வாசிக்க

தடிச்ச ஒதட்டுக்காரி
தாராள மனசுக்காரி
படிச்ச புத்திசாலி
பழக்கத்தில் கெட்டிக்காரி

முடிச்ச மனப்பிணைப்பை
முடிஞ்சதுன்னு சொல்லிப்புட்டா
வடிஞ்ச கண்ணுக்குள்ள
வாய்க்கால வெட்டிப்புட்டா

இடிஞ்சித் தூளானேன்
இடியாப்ப நூலானேன்
ஒடிஞ்ச மனசோட
ஒப்பாரி பாடுகிறேன்

விடிஞ்ச பொழுதோடும்
விடியாமத் தவிக்கிறேன்
மடிஞ்ச உசிரோட
மயாணம் நடக்கிறேன்

படிஞ்ச கூந்தலிலே
முடிஞ்சி வெச்சிருந்தாள்
நொடிஞ்சு போனவனை
நிமித்திப் பாத்திருந்தாள்

கடிஞ்சு ஒருசொல்லைக்
கனவுலயும் சொன்னதில்லை
ஒடஞ்சி ஒருநாளும்
ஓரநகம் கீறவில்லை

அடைஞ்ச சுகமெல்லாம்
ஆட்டிவச்சுப் பாக்குதடீ
ஒடஞ்ச கண்ணாடியா
ஒம்மொகத்தைக் காட்டுதடீ

செடிக்குப் பூவாட்டம்
சித்தாளு நடையாட்டம்
கடையும் மோருக்குள்ள
கூத்தாடும் நுரையாட்டம்

மடிக்குள் பூவாட்டம்
மத்திமீன் குழம்பாட்டம்
நடுவான நெஞ்சுக்குள்ள
நாளெல்லாம் வாழ்ந்தவளே

பிடிச்சது பிடிச்சதுதான்
பிடிக்காமப் போவாது
கடிச்சது கடிச்சதுதான்
காதல்கனி மாறாது

துடிக்குது மனமயிலு
தூங்காத பூங்குயிலு
வடிக்குது விழியருவி
வத்தாத செங்குருதி

ஒடஞ்சது ஒம்மனசு
ஒடஞ்சது ஒங்கனவு
ஒடஞ்சது ஒன்னுசுரு
உன்னைநீ காப்பாத்துடீ
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


வரலாற்றின் வைர மணித் துளியில் வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இதுவரை ...மேலும் வாசிக்க

வரலாற்றின்
வைர மணித் துளியில்
வாழ்கின்ற பேறு
வாய்த்திருக்கிறது நமக்கு

இந்திய மொழிகளில்
எந்த மொழிக்கும் இந்தப் பெருமை
இதுவரை சொந்தமில்லை

அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோம் நாம்

சென்ற
தலைமுறைக்கு
இந்தச் சிறப்பு இல்லை
அடுத்த தலைமுறைக்கு
இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை

திசைகளின் ஆசிரியர் மாலன்
உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டுவிழா தலைவர்

உலகில் முதன் முறையாக தமிழ் உலகம் என்ற இணைய குழுமம் பிப்ரவரி 8, 2004ல் துவங்கி ஒரு வார காலம் இணையவெளிப் பந்தலில் நடத்திய கவிஞர் புகாரியின் அன்புடன் இதயம் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு

1. அழைப்பிதழும் வரவேற்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/1.html

2. தலைமையும் உபசரிப்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/2.html

3. வாழ்த்துரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/3.html

4. வெளியீடு ஆய்வுரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/4.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/5.html

5. விமரிசனங்கள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/6.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/7.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/8.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/9.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/11.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/12.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/13.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/14.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html

6. ஏற்புரையும் நன்றியுரையும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/15.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/16.html


உந்திவிட்டாய் உலகத்தைச்
சாதனையில்
முந்திவிட்டாய் தமிழுலகே
பந்தியிட்டாய் இணையத்தில்
பேரொன்றைத்
தந்துவிட்டாய் தமிழுக்கே
வாழ்க வாழ்க

இந்தத்திருக் குழுமம்தான்
நான்முதலில்
வந்தேறிய தாய்க்குழுமம்
முந்தாநாள் வந்ததுபோல்
ஈரத்திலென்
பந்தவலைத் தொப்புள்கொடி
நன்றி நன்றி

அன்புடன் புகாரி
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சற்றும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும் இவளின் முலை மேல் கிடக்கும் துப்பட்டா வெறி கொண்ட ஆண் யானையின் ...மேலும் வாசிக்க

சற்றும் சாயாமல்
நிமிர்ந்து நிற்கும்
இவளின்
முலை மேல்
கிடக்கும் துப்பட்டா
வெறி கொண்ட
ஆண் யானையின்
முகம் மீது இட்ட
பட்டாடை போலக்
காட்சி தருகிறது



கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1087

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


அன்போடு பேசி அளவற்றுக் கொடுத்து எளியோரைக் காக்கும் வள்ளல்களுக்கு இந்த உலகம் புகழனைத்தும் தந்து அவர்களின் விருப்பம் ...மேலும் வாசிக்க

அன்போடு பேசி
அளவற்றுக் கொடுத்து
எளியோரைக் காக்கும்
வள்ளல்களுக்கு
இந்த உலகம்
புகழனைத்தும் தந்து
அவர்களின்
விருப்பம் போலவும்
அமையும்




இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 387

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சரஸ்வதி ஈஸ்வரி மீனா சிவகாமி கலைமணி தேன்மொழி. ஆங்கில மோகத்துக்கும், சமஸ்கிருத பிரியத்திலும், தமிழ்ப்பெயரைத் துறக்கும் சூழலில், ...மேலும் வாசிக்க

சரஸ்வதி
ஈஸ்வரி
மீனா
சிவகாமி
கலைமணி
தேன்மொழி.

ஆங்கில மோகத்துக்கும், சமஸ்கிருத பிரியத்திலும், தமிழ்ப்பெயரைத் துறக்கும் சூழலில், சில சீனர்கள் தமிழ் மீதான காதலால் வைத்துக் கொண்ட பெயர்கள் இவை என்று தமிழமுதம் குழுமத்தில் ஒரு மடல் வந்து விழுந்தது.

இதுதான் தமிழ்மீதான காதலா? இந்தப் பெயர்களில் கடைசிப் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் தமிழ்ப்பெயர் இல்லையே. இப்படித்தான், தமிழ் எது என்றே அறியாமல் பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று மறுமொழி இட்டேன்.

ராஜேந்திரன்
சுஜாதா
சம்பத்
விக்னேஷ்
சாந்தி
கிருஷ்ணன்
சுந்தரேசன்
வாணி
துர்கா
சியாமா
நீலா
விஜயா
கேசவன்

போன்ற பெயர்கள் எல்லாம் தமிழ்ப்பெயர்கள் என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். இவையெல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள்.

தனித்தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று சொல்லுங்கள் புகாரி என்றார் உடனே நண்பர் ஒருவர். சமஸ்கிரதமும் தமிழ்தான் என்பது அவர் நினைப்பாக இருக்கலாம் :)

புகாரி
சாதிக்
அகமது
முகமது
ஜமீல்
ரிஷான்

எல்லாம் தமிழ்ப்பெயர்களா? அவை அரபுப் பெயர்கள் அல்லவா? தமிழனுக்கு வைத்துவிட்டால் அது தமிழ்ப்பெயர் ஆகிவிடுமா?

பூங்குழலி
முத்தழகு
கனிமொழி
தமிழரசி
புகழேந்தி
தேன்மொழி

போன்ற பெயர்களல்லவா தமிழ்ப்பெயர்கள்?

இந்துக்கள் சமஸ்கிருதப் பெயர்களையும், முஸ்லிம்கள் அரபுப் பெயர்களையும், கிருத்தவர்கள் லாடின், ஆங்கில பெயர்களையும்
வைத்துக்கொள்கிறார்கள்.

மதம்தான் மனிதனை ஆள்கிறது.
மொழியை யார் மதித்தார்கள்!

அகமது, கமல ஹாசன் என்று தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப தமிழ்ப்படுத்தி எழுதிவிட்டால், எல்லாம் தமிழ்ப்பெயர்களாகிவிடும் என்பது நண்பர் தொடர்ந்த கருத்து. தமிழர்களுக்குச் சூட்டப்படும் பெயர்கள் அத்தனையும் தமிழ்ப்பெயர்களே என்று அடித்துச் சொன்னார் அவர்.

அப்படியென்றால்

ஜேம்ஸ் பாண்டு
ஜோன்ஸ்
பெர்னாண்டஸ்
ஜான்

எல்லாம் தமிழ்ப்பெயர்களாக வேண்டும். அது மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை பெயர்களும் தமிழ்ப் பெயர்களே என்றும் ஆகவேண்டும். ஏனெனில் தமிழரில் கிட்டத்தட்ட அனைத்து மதத்தினரும் உண்டு. சீனர்களையும், ஜப்பானியர்களையும், கொரியர்களையும் மணக்கும் ஆட்களும் உண்டு அவர்களுக்கு அந்தந்த நாட்டுப் பெயர்களைக் கலந்து பெயரிடுவதும் உண்டு.

அதுமட்டுமா, ஒரு சீனப்பெண் தன் மகளுக்கு மலர்விழி என்று பெயரிட்டால் அது சீனப்பெயர் ஆகவேண்டும். அதை நாம் தமிழ்ப்பெயர் என்று கூறமுடியாது. இது சரியா? வேடிக்கையாய் இல்லையா?

சமஸ்கிரதப் பெயர்களைத் தமிழ்ப்பெயர் என்று நிறுவுவதற்காக பலரும் ஏதேதோ காரணங்களை அடுக்கினார்கள். ஆனால் அவை அத்தனையும் ஆட்டமே கண்டன.

அன் என்று முடிந்தால் அது தமிழ்ப்பெயரின் அடையாளம் என்றார் ஒருவர். என்றால் ஜான்சன் என்ற ஆங்கிலப்பெயர் தமிழ்ப்பெயரா? அத்னன் என்ற அரபுப் பெயர் தமிழ்ப்பெயரா? ஆலன் என்ற சீனப்பெயர் தமிழ்ப்பெயரா?

மதமெல்லாம் பெயர் வைக்கக் காரணமில்லை கூப்பிடும் அழகுக்காகத்தான் பெயர் வைக்கிறார்கள் என்று சட்டென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் நண்பர்.

எத்தனை இந்து வீட்டில் கூப்பிடும் அழகுக்காக சுஹைல் என்று பெயர் வைப்பார்கள்? எத்தனை முஸ்லிம் வீட்டில் கூப்பிடும் அழகுக்காக மகரிஷி என்று பெயர் வைப்பார்கள்?

மதம்தான் உலகெங்கிலும் பெயர் வைப்பதில் முதன்மையாய் நிற்கிறது. மிகக் குறைவான சதவிகிதத்தினர் மட்டுமே மதம் கடந்து ஏதோ பெயர் சூட்டுகிறார்கள். ஆனால் மதம் கடந்து பெயர் சூட்டும் வழக்கம் அதிகரித்தால் அது சிறப்புதான். அப்படியானவர்கள் விரைந்து பெருகிவருகிறார்கள் என்பதும் ஓரளவு உண்மைதான்.

ஆனாலும், எது தமிழ்ப்பெயர் என்றே அறியாத தமிழனின் நிலை சற்று கவலைக்கிடமானதாய்த்தான் இருக்கிறது. அப்படி அவர்களைப் பழக்கிவைத்திருக்கிறார்கள் சமஸ்கிரதப் பெயர்களைத் தமிழர்களுக்குச் சூட்டி. அரபுப் பெயர்களைக் கண்டால் இவர்கள் அவை தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள். இது வேடிக்கை இல்லையா?

கலைஞர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டார். ஸ்டாலின் தமிழனின் பெயர் ஆன காரத்தால் அது தமிழ்ப் பெயர் என்று ஆகாது அல்லவா?

கமலுக்கு ஹாசன் என்று சேர்த்து அவர் தந்தை பெயரிடார். ஹாசன் தமிழனின் பெயர்தான் ஆனால் தமிழ்ப்பெயரா?
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இமைத் துப்பட்டாவோடு பிறந்த பேரழிகள் கண்கள் நாகரிகமும் நாணமும் கொண்ட பண்பு மணிகள் கண்கள் இதழ்கள் ...மேலும் வாசிக்க

இமைத்
துப்பட்டாவோடு
பிறந்த பேரழிகள் கண்கள்
நாகரிகமும் நாணமும்
கொண்ட பண்பு மணிகள்
கண்கள்

இதழ்கள்
கூடினாலும் சரி
இடைகள் கூடினாலும் சரி
நாணம் மிகக்கொண்டு
துப்பட்டாவை இழுத்து மூடிப்
பதுங்கிக் கொண்டுவிடுவார்கள்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


உன் கண்களில் மையாகவாவது என்னை இட்டுக்கொள் என் உனக்காக கன்னங்கரேல் என்றாக எனக்குச் ...மேலும் வாசிக்க

உன்
கண்களில்
மையாகவாவது
என்னை
இட்டுக்கொள்
என்
உனக்காக
கன்னங்கரேல்
என்றாக
எனக்குச் சம்மதமே
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் பல சுவாரசியங்களைப் புகுத்தியவர். தேன் தேன் என்று முடிவதாகவும், பால் பால் என்று முடிவதாகவும், நிலா நிலா என்று ...மேலும் வாசிக்க

கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் பல சுவாரசியங்களைப் புகுத்தியவர். தேன் தேன் என்று முடிவதாகவும், பால் பால் என்று முடிவதாகவும், நிலா நிலா என்று முடிவதாகவும் காய் காய் என்று முடிவதாகவும் இன்னும் சில சொற்களில் முடிவதாகவும் தேன் சொட்டும் பாடல்களை எழுதிக் குவித்தவர்.

அவர் காலத்தில் திரை இசை, குத்துப் பாட்டுக்களில் ரத்தம் கொட்டி நிற்காமல் கண்ணதாசனின் இலக்கிய தாகத்திற்கு ஏற்ப மென்மையாய் இருந்தது. அதுவே கண்ணதாசனுக்கு வசதியாய் இருந்தது.

இப்போது தேன் தேன் என்று தேன் குழைத்து எழுதிய கண்ணதாசனின் தேன் பாடல் ஒன்றை நாம் சுவைப்போமா? திரையிசைப்பாடல்களுக்குள் இலக்கியத்தை அள்ளிப் பொழிந்த அந்த இன்பத்தை காலங்கள் மாறினாலும் மாறாத சிலிர்ப்போடு அனுபவிப்போமா?

இந்தப் பாடலை கவிஞர் 1965ல் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கே.வி.மகாதேவன் இசையில் சுசீலாவும் ஸ்ரீனிவாசும் பாடிய அற்புதப் பாடல். படம் வீர அபிமன்யு.

ஓர் அழகான காதல் காட்சி. தலைவனும் தலைவியும் முழுநிலவின் மடியில் விழுந்த வெண்ணைக் கட்டிகளாய் உருகிக் கரைந்து காதல் பொழிகிறார்கள் கண்மயங்கி கவிதை மொழிகிறார்கள். இதுதான் பாடலின் சூழல். இதற்கு கண்ணதாசன் எழுதிய முதல் மூன்று வரிகளைப் பாருங்கள்.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்


எத்தனைத் தேன்? முன்றே வரிகளில் ஏழு தேன் அதிலும் மலைத்தேன் என்று ஒரு சிலேடைத் தேன்.

அவன் அழகே உருவான அவளைக் காதலாய்ப் பார்த்தானாம். அவளும் அவனிடம் மயங்கி அப்படியே காதல் பொங்கப் பார்த்தாளாம். அந்தப் பார்வைகள் தந்த உடனடி ஒப்புதலின் காரணமாக அடுத்த நிலைக்குச் சென்றானாம் அவன். அதாவது அவளைக் கண்டு இதழ் அவிழச் சிரித்தானாம். அதுவும் அவளிடம் ஒப்புதல் ஆனதும் அதோடு நிற்காமல் வா வா என் அருகே என்று அவளை அழைத்தானாம்.

காதலென்றால் காலங்கள் தோறும் ஆண்கள் முன்னேறிக்கொண்டேதானே இருப்பார்கள். அவனது அழைப்பை ஏற்று அவளும் அவனிடம் வந்துவிடுகிறாளாம். அடடா இப்படியல்லவா இருக்க வேண்டும் பெண் என்று கற்பனை ஓடுகிறதா? கொஞ்சம் அந்தக் குதிரையைக் கட்டிவையுங்கள். அவள் அவனுக்கு உரிமையானவள். அதன் காரணமாகவே அவள் காயாய் நிற்காமல் கனியாகவே குழைகிறாள்.

அழைத்ததும் வந்தவளைச் சுவைக்கிறானாம் அவன். அடடா இவள் உண்மையிலேயே தேன் என்று முடிவு செய்துவிடுகிறானாம். அவளிடமிருந்து பெற்ற காதல் சாதாரணத் தேன் அல்ல சுவை மிகுந்த மலைத்தேன் என்று கண்டு மலைத்து நிற்கிறானாம். எத்தனை அழகு பாருங்கள் இந்தத் தேன் தேன் வரிகள். மலைத்தேன் என்ற சொல்லுக்கு இரு பொருள். ஒன்று மலைப் பிரதேசத்திலிருந்து எடுத்த தேன் மற்றொன்று அதிசயத்தில் அப்படியே மலைத்துப் போய் நிற்பது.

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்


இனி அவள் சொல்கிறாள். அவனை ஆமோதிப்பதுபோலவே சொல்கிறாள். இந்த ஒத்த மனமும் ஒத்த இசையும் ஆணுக்கும் பெண்ணும் தரும் சுகம் கொஞ்சமா? அவளும் அவனைப் பார்த்தாளாம், பின் சிரித்தாளாம், அவன் அழைக்கும் முன்னரே அவன் பக்கத்தில் செல்லத் துடித்தாளாம். இது எப்படி இருக்கிறது? அவனைப்போலவே அவள் அவனைத் தேன் போல் தித்திப்புடையவன் என்றே நினைத்தாளாம். ஆனால் அவன் காதல் மட்டுமல்ல அவனே ஒரு சுவையான மலைத்தேன் என்று அவள் அப்படியே மலைத்துப் போய்விட்டாளாம்.

கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என
ஒரு படித்தேன் பார்வையில் குடித்தேன்


மெல்லிய இடையைக் கொண்ட இவள் ஒரு கொடியைப் போன்றவள் அதாவது இவள் ஒரு கொடித்தேன். இனியெல்லாம் இவள் எங்கள் வீட்டுக்குச் சொந்தமானவள். எங்கள் குடியைச் சேர்ந்தவளாகிறாள். இந்தக் கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் ஆகிறாள் என்று எத்தனை அழகாகச் சொல்கிறார் பாருங்கள் கண்ணதாசன். அடடா என்று வியக்க வைக்கிறதல்லவா? இப்போது அவள் அவனை ஆழமாய்ப் பார்க்கிறாள் அதில் அகிலத்தின் காதலெல்லாம் ஒன்று சேர்ந்து நிற்கிறது. அதை எப்படிச் சொல்கிறார் கண்ணதாசன் பாருங்கள். ஒரு படி நிறையத் தேன் குடித்ததுபோல அவள் பார்வையைக் குடித்தேன் என்கிறார். பெண்ணிடம் பல்லாயிரம் அழகுகள் உண்டு. ஆயினும் அவள் பார்வை என்ற அழகுக்குமுன் எல்லாமும் ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அந்தப் பார்வைதான் காதலின் மொழி. பருவக் கண்களை அதன்பின் உறங்கவே விடாத அற்புதம்.

துளித்தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்


அவள் அழகை எல்லாம் ஒரு துளியும் சிந்தாமல் அனுபவித்தானாம். அப்படியே அள்ளி எடுத்து அணைத்தானாம் பருவ அழகையெல்லாம் முழுவதும் ரசித்தானாம். வார்த்தைகள் எத்தனை மதுரமாய் வந்து விழுந்திருக்கின்றன பாருங்கள். .

மலர்த்தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்


அழகிய மலரில் தேன் நிறைவதைப்போல இளமை அழகு நிறைய பருவம் எய்தினாளாம் அவள். அதுமட்டுமல்ல அவனுக்காகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தாளாம், உரிய வயது வந்ததும் அவனையே மணந்தாளாம். இதைவிட அற்புத வாழ்வு வேரென்ன இருக்க முடியும்? நட்பும் நட்பைத் தொடர்ந்த காதலும் அந்தக் காதலைத் தொடர்ந்த கல்யாணமும் அமைந்துவிட்டால், வேறென்னதான் வேண்டும் வாழ்வில்?

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்


சரி கல்யாணமும் ஆகிவிட்டது. அடுத்து? தேன் நிலவுதானே? தேன் நிலவில் சுகம் என்பது இருவருக்கும் சமம் அல்லவா? அங்கே சுகம் எடுக்கவும் செய்ய வேண்டும். சுகத்தை அள்ளிக் கொடுக்கவும் செய்யவேண்டும். அவர்கள் அப்படியேதான் செய்தார்கள். அதுமட்டுமா அனுபவிக்கும்போது ஒரு முழுமை வேண்டுமல்லவா? தமிழே நாணும் வண்ணம் எத்தனை அழகாக அதை கண்ணதாசன் எழுதுகிறார் பாருங்கள். இனி அவளிடம் எஞ்சியதாய் ஒரு துளி தேனும் இல்லை என்று ஆகும் அளவுக்கு அந்தக் காதல் லீலைக் கதையை அழகாக சுவையாக சுகமாக முடித்தானாம் :)

கலக்கிட்டியே கண்ணதாசா!
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இனி ஒருபோதும் கடற்கரைக்கு வராதே எத்தனை பெரிய கடல் அது நீ எழுந்துபோனபின்னும் பேரலைகளாய்த் தாவித் தாவித் ...மேலும் வாசிக்க

இனி ஒருபோதும்
கடற்கரைக்கு வராதே
எத்தனை பெரிய
கடல் அது
நீ
எழுந்துபோனபின்னும்
பேரலைகளாய்த்
தாவித் தாவித்
தவிக்கிறது பார்
பாவம்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இவளின் வளைந்த புருவங்கள் மட்டும் வளையாமல் நேராய் இருந்திருந்தால் என்னை நடுங்க வைக்கும் துயரத்தை ...மேலும் வாசிக்க

இவளின்
வளைந்த
புருவங்கள் மட்டும்
வளையாமல்
நேராய்
இருந்திருந்தால்
என்னை
நடுங்க வைக்கும்
துயரத்தை
இவள் விழிகள்
செய்யாதிருக்குமே



கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1086

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இனிய நண்பர் முனைவர் நா. கணேசன் அவர்களின் தமிழ்க்கொங்கு வலைப்பூவில் பதிவாகி இருக்கும் என் கட்டுரை ஒன்றை ...மேலும் வாசிக்க

இனிய நண்பர் முனைவர் நா. கணேசன் அவர்களின் தமிழ்க்கொங்கு வலைப்பூவில் பதிவாகி இருக்கும் என் கட்டுரை ஒன்றை என் வலைப்பூவுக்கும் கொண்டு வருகிறேன். அவருடைய முன்னுரையோடு கட்டுரை தொடங்குகிறது. இக்கட்டுரை ஃபெட்னா இதழில் வெளியானது. முனைவருக்கு நன்றிகள் பல.


யுனித்தமிழே! இனிக்கும் மின்தமிழே! வணக்கம் (அன்புடன் புகாரி, 2005!)


கவிஞர் புகாரி, கனடா,
தமிழ்நாடு அறக்கட்டளை - ஃபெட்னா திருவிழா, டல்லஸ், டெக்சாஸ், 2005

[இன்று எல்லாப் பத்திரிகைகளும், இணையப் பல்கலையும்
(http://tamilvu.org), வலைப்பதிவுகளும், திரட்டிகளும், மடலாடு குழுமங்களும் ஒருங்குறி ஆகிவிட்டன. 2005 தொடக்கத்தில் நிலைமை அவ்வாறில்லை. அப்பொழுது, ஜிமெயில் கூடப் புத்தம் புதிது! தமிழ்மணம் விண்மீனாகச் சுடரும் ‘அன்புடன்’ புகாரி மடற்குழுக்களை மடைமாற்றி கூகுள்குழுக்கள் ஆக்கியதில் முன்னோடி. முதல் கூகுள்குழு அன்புடன் - இன்று ஒரு லட்சம் மடல்களைத் தாண்டி நடைபோடுவது கணிமை வரலாற்றில் ஒரு மைல்கல் - நா. கணேசன்]


யுனிகோடில் தமிழ் - ஓர் அறிமுகம்

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம். இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச் சொல்லி ‘அன்புடன்’ அழைக்கிறது. எந்த மாற்றமும் செய்யாமலேயே யுனிகோடுக்கு நாம் மாறலாம். வெறுமனே மாறும் அந்த மாற்றத்தையும் செய்யாதிருப்பது எப்படி சரி? தமிழ்த்தாய் புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறாள். அவள் புலம்பெயரா விட்டால், அதன் மொத்த இழுக்கும் தமிழர்களாகிய நம்மையே வந்து சேரும்.


புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
............புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
............தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
............ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
............சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
............தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
............தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
............கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
............அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
............நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
............மின்நடனம் கண்டாள்

அயல்மொழியைக் கலந்தோரை
............வெட்கியோட வைத்தாள்
அழகுத்தமிழ் அமுதத்தமிழ்
............ஆட்சிமீண்டும் பெற்றாள்

வலைப்பதிவு (blogs), வலைத் தளங்களெல்லாம் யுனிகோடுச் சிறகுகளைத் தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன. ஏன்?

எத்தனை எத்தனை எழுத்துக் குறியீடுகள் இப்போது? அஞ்சல், திஸ்கி, டாப்பு, டாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி. ஆளாளுக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்வது மலிந்துவிட்டது. எல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனித்தமிழ்தான் ஒரே வழி. இதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மாறுவதில் கால தாமதப் படுத்துவோம் என்று சிலர் கூறுவதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு.

.....................யுனித்தமிழ் நாம் கண்ட அருஞ்சாதனை - அதைக்
..................................குழுமங்களில் செய்வோம் பெருஞ்சோதனை

மாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரைவில் யுனித்தமிழ்க் குழுமங்கள் தீபங்கள் ஏற்றித் தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உண்டு. திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல், திஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள், படிகள், படிகள். யுனிகோடு என்ற நாற்காலியை எட்டி விட்டால், பிறகெல்லாம் தமிழுக்குச் செங்கோல்தான்.


சிலிக்கான் பள்ளத்தாக்கும்
...........சிலிர்க்கும் சிகரம் தொட்டு
மொழித்தேன் கூடு கட்டி
...........தழைக்கும் தமிழே வாழ்க

பழித்தோன் பணிந்தே போனான்
...........பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன் கிழிந்தே போனான்
...........இறப்பிலாத் தமிழே வாழ்க

வலைக்குள் மொழிகளோ நூறு
...........வனப்பாய்த் தமிழினைப் பாரு
நிலைப்பதில் அதுவும் ஒன்று
...........நெஞ்சமும் பூக்குது கண்டு

அழைப்பும் தொடுப்போ மின்று
...........அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
...........தரமென ஒன்றே கொள்வோம்

உலகத் தமிழ்தான் உயருது
...........ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள் கொழிக்கும் வனமாய்
...........வளருது இணையத் தமிழும்

கலையும் தமிழரின் பண்பும்
...........கடல்கள் தாண்டியே மலருது
சுழலும் கோள்களும் நின்றே
...........செந்தமிழ் கேட்டே ஆடுது

ஏழரைக் கோடித் தமிழரை
...........ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
...........நூல்களில் அச்சாய் வாழ்பவள்

தோளுரம் கொண்ட மைந்தரால்
...........தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே சிரிக்கிறாள்
...........சொக்கிடும் இணையச் செழுமையில்

பழமைக் கலைகளும் கொண்டவள்
...........புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
...........இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி மெல்லச் சாவதோ
...........தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
...........வெற்றியின் நெற்றியில் தமிழே


இனி நாம் மாறவேண்டிய மூன்று விசயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

அ. ஜிமெயில்

ஜிமெயில் யாருக்கு எதைத் தருகிறதோ இல்லையோ, தமிழனுக்குத் தங்கு தடையில்லாமல் யுனித்தமிழைத் தருகிறது. சரி இனி அதன் பலன்பட்டியலைப் பார்ப்போம். 1. யுனித்தமிழ் - Unicode Tamil: எந்த மாற்றமும் செய்யாமல், தரம்-encoding-ல் Unicode UTF(8)-டினை தேர்வு செய்தவுடன், மடைதிறந்த வெள்ளமாய் யுனித்தமிழினைத் தட்டச்ச முடியும். மேலும், 2. துரித அஞ்சல் தேடல் - Find any message instantly. 3. சில கிகாபைட்டுகளில் சேமிப்பு - 2+ GB storage. 4. உரையாடல்கள் - conversations. 5. மடல் வந்ததும் அறிவிப்பு - gmail Notifier. 6. வேண்டாத மடல் கழிப்பு - Spam control. 7. கோப்புகளும் வடிகட்டிகளும் - labels and Filters.

8. தமிழ்த்திரை - Tamil Interface 9. விசைப்பலகைக் குறுக்குவழிப் பொத்தான்கள் - keyboard shortcuts. 10. 'பாப்' எடுத்தல் மற்றும் திசைமாற்றல் - POP access and Forwarding.

பிறகென்ன தோழர்களே தோழியரே, இவற்றைவிட வேறு என்ன வேண்டும் ஜிமெயில் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு? அழைப்பு இல்லாமல் யாரும் ஜிமெயில் பெற்றுவிடமுடியாது என்பதால், அழைப்பு வேண்டுவோர் buh...@gmail.com அல்லது naa.g...@gmail.com முகவரிக்கு எழுதினால், அழைப்புக்கு உடனே ஏற்பாடு செய்வோம்.

எகலப்பை 2.0: http://anbudanbuhari.com/xunicodetamil.html

ஜிமெயில் உதவி: http://gmail.google.com/gmail/help/tour/start.html
http://gmail.google.com/gmail/help/start.html
http://gmail.google.com/support/
http://gmail.google.com

ஆ. கூகுள் குழுமம்

அட, இதற்கு ஏன் 'ஆ' என்று கொடுத்தேன். தமிழர்களையெல்லாம் அப்படி ஆச்சரியப்படுத்தும் இந்தச் சேவை. தமிழுக்காகவே கூகுள் இதனைத் தொடங்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கெல்லாம் நிச்சயம் வரும். அப்படி என்ன இருக்கிறது இதில். ஏன் நாம் நம் பழைய குழும சேவையை விட்டுவிட்டு இங்கே செல்லவேண்டும்?

நமக்கு வேண்டுவது அமுதம் - அதற்கான அட்சய பாத்திரமே கூகுள் குழுமம்.
மாலனின் திசைகள் - http://thisaigal.com/ எனது அன்புடன் புகாரி - http://anbudanbuhari.com/ மகேனின் எழில் நிலா - http://ezilnila.com/ என்று ஏராளமான வலைத்தளங்கள் தொடங்குவதெல்லாம் யுனித்தமிழில்தானே? வலைப்பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனித்தமிழ்தான். எகலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக வந்தது. அது பின் எகலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் யுனித்தமிழும் திஸ்கி தமிழும் ஒரு பொத்தானைக் குத்தி தரம் மாற்றித் தட்டெழுதிச் சாதனை புரியலாம், சமாய்த்து மகிழலாம்.

யுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோசின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவை இல்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.

தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது மாங்குமாங்கென்று நாம் இணையக் குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால் பழையமடல் எதுவும் துழாவினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச் சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகளாவி படைப்புகளின் விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தைப்போலத் தேடியதும் தட்டுப்பட்டு விடும். இது தமிழும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களும் வளர மிக மிக அவசியம். உதாரணமாக, "புகாரி" என்றோ "அன்புடன் புகாரி" என்றோ "வெளிச்ச அழைப்புகள்" என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி, தேடு பொத்தானைச் சொடுக்கிப் பாருங்கள், நிறைய வாசிக்கக் கிடைக்கும்.

கூகுளு கூகுளு கூகுளு - அட குளுகுளு குளுகுளு கூகுளுதிஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது - மூச்சுத் திணறியும் முனகியும் ஒடுங்குது.

இ. தமிழில் தட்டெழுத ...

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
http://www.higopi.com/ucedit/Tamil.html

இங்கே சென்றால் விண்டோஸ் 98 பயன்படுத்துபவர்களும் மிக எளிதாக யுனிகோடு தமிழ் தட்டச்சு செய்யலாம்.

அன்புடன் - ஒரு கூகுள் தமிழ்க்குழுமம்


இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

இந்த வாசகங்களோடு மார்ச் 2005ல் நான் தொடங்கிய யுனித்தமிழ்க் குழுமம். சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள். மடல்கள் தேன் நயாகராவாய்க் கொட்டுகின்றன. ஏராளமான சோதனைகள் செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது உலகின் முதல் யுனித்தமிழ் குழுமமான எனது "அன்புடன்" குழுமம்.
http://groups.google.com/group/anbudan

என் 'அன்புடன்' உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல் அங்கே உங்கள் சோதனை மடல்களை இட்டுக்கொள்ளலாம். அது உங்கள் குழுமம். அன்புடன் குழுமம்.

தமிழினி மெல்லச் சாவதோ
........தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
........வெற்றியின் நெற்றியில் தமிழே
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை இங்கு கேட்டு விடலாம் என பார்க்கிறேன். மொழி என்பது ஓசைகளை உள்ளடக்கியது. சரிதானே. ஓசைகளே ...மேலும் வாசிக்க

நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை இங்கு கேட்டு விடலாம் என பார்க்கிறேன். மொழி என்பது ஓசைகளை உள்ளடக்கியது. சரிதானே. ஓசைகளே எழுத்துக்களாகின்றன. இப்படி இருக்கையில், சில ஓசைகளுக்கான எழுத்து வடிவங்கள் நமது மொழியில் ஏதோ ஒரு காரணத்திற்காய் இல்லாமல் ஆகிறது எனில், அதை நிரப்புவது தானே முறை? ஜா, ஷா போன்றவை அப்படிபட்ட எழுத்துக்கள் தானே. இவற்றை உபயோகிப்பதில் என்ன தவறு? ழ நமது மொழிக்கே உள்ள ஓர் எழுத்து என்பதில் பெருமை படும் அதே நேரத்தில நமது மொழியில் இல்லாத எழுத்துக்கள் குறித்து கவலையும் பட வேண்டும் இல்லையா... z போன்ற இன்னும் எழுத்து இல்லாத சில ஓசைகளுக்கு எழுத்தை உருவாக்குவது நல்லது. இது எனது கருத்து மட்டுமே. இதன் மறுபக்கம் எனக்கு தெரியாது. இது குறித்த உங்களது பார்வையை எதிர்பார்க்கிறேன். - சித்தார்த்.

*

அன்பிற்கினிய சித்தார்த்,

அருமையான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். எனக்கும் பலகாலமாய் இந்தக் கேள்வி உண்டு. இந்தக் கேள்வி அந்தக் காலத்திலேயே எழுந்ததால்தான் கிரந்த எழுத்துக்களான ஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ ஆகியவற்றைத் தமிழுக்குள் இழுத்துவந்தார்கள்.

ஆனால் என்னிடம் வேறு ஒரு கேள்வி உண்டு. நீங்களே கூறி இருக்கிறீர்கள். தமிழின் தனி எழுத்து ழ என்பதை. இந்த ழ வை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்?

ஆங்கிலத்துக்கு ஒரு புது எழுத்து தேவையில்லையா?

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபிக் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது.

கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது?

முஅஅல்லம் என்று பெயர் அரபியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபிந்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான்.

எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாகாரர்கள் பேசக் கேட்டிருக்கிறீர்களா? பல எழுத்துக்களை உங்களால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியில் ழ என்ற எழுத்து இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. இல்லை என்றுதான் நான் நினைத்திருக்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

பிரஞ்ச் மொழி வாசகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

சரி எழுத்துக்களை விடுங்கள். மனிதர்கள் எத்தனை வித்தியாசமாய் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு ஆங்கிலப் பெண் தமிழ்ப்பெண் சைனா பெண் ஆப்பிரிக்கப் பெண் ஆகிய நால்வரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அவரவர் அவரவர் நிலையில் அழகல்லவா? இவள் அழகு இவள் அழகில்லை என்று சொல்லமுடியுமா? ஆனால் அவர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள். அந்த வித்தியாசங்கள்தானே அவர்களைத் தனித்தனியாய் அடையாளம் காட்டுகின்றன.

வெள்ளைக்காரி: சற்று உயரமாக இருப்பாள். கால்கள் வலுவாக அழகாக இருக்கும். எனவே அவள் கால்களை வெளிக்காட்டியே உடை உடுத்துவாள். மார்புப்பகுதி பெரும்பாலும் பாலைவனமாய்க் கிடக்கும். முடி சொல்லவே வேண்டாம். கருப்பாய் இருக்காது, குறைவாய் இருக்கும்.

தமிழ்ப்பெண்: சுமாரான உயரமாய் இருப்பால். கால்கள் நோஞ்சானாய் இருக்கும். ஆனால் இடையும் இடை சுமக்கமுடியாத அழகுமாய் இருப்பாள். கண்கள் பெரியதாய் பேசும் கண்களாய் இருக்கும். நிறைய கூந்தலோடு இருப்பாள்

சைனா பெண்: குள்ளமாக இருப்பாள். பெரும்பாலும் சப்பை மூக்கு. சின்னச் சின்னப் பொருள்களாய்ப் பார்த்துப் பார்த்து தேடி கண்ணாடிப் பெட்டிக்குள் அலங்கரித்து வைத்திருப்பார்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி இருப்பாள்

ஆப்பிரிக்கப்பெண்: கருப்பு. வாட்டசாட்டமான உருவம் அதில் மிகையான பின்புறம். சீப்புக்குச் சிக்காத சுருள் கூந்தல். நல்ல உயரம்.

ஆனால் பாருங்கள் எல்லாப் பெண்களுமே அழகு. இப்படித்தானே ஒவ்வொரு மொழியும் அழகு எந்த மொழி அழகில்லாதது? சொல்லுங்களேன் பார்க்கலாம்.

தாய்முலைப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

சரி மீண்டும் உங்கள் கேள்வியின் மையப்பகுதிக்கு வருவோம்.

முகம் மாசம் சனி சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிப்பு தருகிறீர்கள்? க என்றா ஹ என்றா? மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிபு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு.

Cut Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா?

Sun Son எப்படி வித்தியாசப்படுத்துகிறீர்கள்?

hire, here, hear, heir, hair நுனுக்கமாக எப்படி உச்சரிக்கிறீர்கள்?

Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு? ஏன்?

இன்னும் எனக்கு ஓர் ஒரு லட்சம் கேள்வியும் சொச்சமும் இருக்கிறது சித்தார்த்.

எனவே மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் கிரந்தம் பயன்படுத்துவேன் நான். அதாவது புஹாரி என்பதை புகாரி என்று எழுதுவேன். இதனால் உச்சரிப்பில் பாதிப்பில்லை. ஆனால் ஹாசன் என்பதை காசன் என்று எழுதமாட்டேன். சிலர் ஆசன் என்று எழுத முயல்வர். நான் ஹாசன் என்று எழுதுவதையே விரும்புகிறேன்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பல்கலைத்தென்றல் ஆரெஸ்மணியின் இசையில் கனடாவின் டொராண்டோவிலிருந்து வடதிசையில் சுமார் ...மேலும் வாசிக்க


பல்கலைத்தென்றல் ஆரெஸ்மணியின் இசையில்


கனடாவின் டொராண்டோவிலிருந்து வடதிசையில் சுமார் 300 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது கானிஸ்பே என்ற அழகு ஏரி. இது அல்கான்கொயின் என்ற 7725 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள மாபெரும் தோட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது.

அதாவது அல்கான்கொயின் தோட்டத்தில் 5 லண்டன் மாகநகரங்களை அப்படியே வசதியாகப் படுக்க வைக்கலாம், அத்தனை பெரிய தோட்டம். நம்மூரில் இதைக் காடு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கனடாவிலோ இதைப் பெருந்தோட்டம் என்கிறார்கள். ஏனென்றால் இது முழுவதும் இவர்களின் 24 மணி நேர பராமறிப்பில் உள்ளது.

மிகப்பெரிய தோட்டம் இதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என் வாழ்நாளில் பார்த்த மிகப்பெரிய தோட்டம் இதுதான். இங்கே ஈராயிரத்திற்கும் மேற்பட்ட கரடிகள் இயற்கையாய் வாழ்கின்றன. எண்ணற்ற ரக்கூன்களும் மூஸ்களும் ஓநாய்களும் பல்லாயிரம் பறவைகளும் இதில் வாழ்கின்றன. இத்தோட்டத்தில் பல ஏரிகள் உள்ளன.

இவ்வேளையில் கனடா ஏரிகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பொன்றைச் சொல்லியாக வேண்டும். கனடாவில் சுமார் ஒரு மில்லியன் நன்னீர் ஏரிகள் உள்ளன. அதில் அரை மில்லியன் ஏரிகள் ஒண்டாரியோ மாகாணத்தில் மட்டும் உள்ளன. டொராண்டோ ஒண்டாரியோ மாகாணத்தில்தான் உள்ளது.

இந்த அல்கான்கொய்ன் தோட்டத்தில் சில இரவுகள் குடிசைபோட்டுத் தங்கி களிப்பதற்கு இணையான சுகம் வேறு ஒன்றுமில்லை என்று சொல்வேன். 2007 ஜூலை முதலாம் தேதி அங்கே சென்று வந்ததைப் பற்றிய அனுபவக் கவிதைதான் இது.



மேப்பிள்மரக் காட்டுக்குள்ளே
மெய்சிலிர்க்கும் கூட்டுக்குள்ளே
பூப்பூவாய்ப் போட்டுக்கிட்ட
பொன்னழகு டெண்டுக்குள்ளே

ஆப்பிள் விதைச் சொகுசாக
அடுக்கு மல்லிச் சிரிப்பாக
தோப்புக் குயில் பாட்டாக
தொடர்ந்ததொரு கொண்டாட்டம்

ராப்பகலா ஆசைப்பட்டு
ரசனையோடு திட்டமிட்டு
ஆப்புவச்ச மழையக்கூட
அலட்சியமா ஒதுக்கிவிட்டு

மாப்பிள்ளையின் விருந்தாக
மரத்தடியின் பார்-பீ-க்யூ
சாப்பாட்டை வெட்டிக்கிட்டு
சந்தோசக் கொண்டாட்டம்

ஏரியோரக் குளியல்போட்டு
ஏரிக்குள்ளே படகுவிட்டு
வாரிவாரிக் குடிச்சாலும்
வத்தாத அழகையெலாம்

வாரம்பல தங்கினாலும்
வாராத சுகத்தையெலாம்
வாரயிறுதி ஒருநாளில்
வாரிக்கிட்ட கொண்டாடம்

பச்சைப்பசும் மரங்களோடு
பாட்டுப்பாடி கைகோத்து
உச்சிவெயில் வேளையிலும்
ஓடிவரும் தென்றலோடு

கொட்டுகின்ற அருவிதனில்
கும்மாளக் குளியல்போட்டு
மட்டற்ற மகிழ்ச்சியிலே
மத்தாப்புக் கொண்டாட்டம்

கொண்டாட்டம் கொண்டாட்டமென
கோடிகவி எழுதினாலும்
கொண்டாடிய உள்ளங்களின்
குதூகலத்தைச் சொல்லிவைக்க

உண்டான சொல்லென்று
ஓர்சொல்லும் கிடையாது
கொண்டாடித் திண்டாடிக்
கொண்டோமொரு கொண்டாட்டம்

அதிகாலை மூணரைக்கே
அவசரமாய்ப் புறப்பட்டோம்
மதி குளிரும் இளங்காலை
மலர் விரித்து வரவேற்க

ஒரில்லியா டிம்ஹார்டன்
ஒன்றினிலே ஒதுங்கினோம்
ஒருகுவளை 'டீ'பருகி
உடன்வந்தோம் கானிஸ்பே

கானிஸ்பே முகாமுக்குள்
காலெடுத்து வைத்தவுடன்
தேன்மதுவில் விழுந்ததுபோல்
தேகமெல்லாம் தித்திப்பு

மானினமும் மீனினமும்
மேப்பிள்இலைத் தோரணமும்
தோணியோட்டும் ஏரியோடு
தெவிட்டாத சுகங்களிங்கே

அல்கான்கொய்ன் என்கின்ற
அழகுபெருந் தோட்டமதில்
இல்லாத சுகங்கள்பல
இறைந்தெங்கும தான்கிடக்க

மெல்லயாம் ஊர்ந்தபோது
மேய்ந்துநின்ற மூஸ்கூட
சொல்லியதாய்ச் சிலிர்த்தோமே
சுகமாக சலாமலைக்கும்

மீண்டுவர மனமில்லாமல்
மிகுந்தசுகம் தந்தபயணம்
மீண்டுவந்த போதுநெஞ்சில்
மெத்தையிட்டுக் கொண்டதடா

வேண்டும்பல இதுபோலென
வேண்டிநிற்கும் போதினிலே
வேண்டிவந்த யாவருக்கும்
நன்றிகூறி நிற்கிறேன்

என்மனமோ உயரத்தில்
என்னுயிரோ பரவசத்தில்
இன்னுமின்னும் இதுபோன்ற
இனிப்பான அனைவருக்கும்

என்னுடைய நன்றிகளை
இனிதாகச் சொல்லுகிறேன்
என்னுடனே முகாம் வந்த
எல்லோர்க்கும் நன்றிநன்றி
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


என் விரல்களை உன் விரல்களில் கோத்துப் பார்த்தேன் யாழிசை மொழி பொழியும் என் தேவதையே அந்த ...மேலும் வாசிக்க

என் விரல்களை உன் விரல்களில்
கோத்துப் பார்த்தேன்

யாழிசை மொழி பொழியும்
என் தேவதையே

அந்த அழகை நான்
சொல்லவும் வேண்டுமா

அசந்துதான் போனேன்
உயிர் துடித்து
உடல் நிறுத்திக் கிடக்கும்
சிலையாக

நான் மட்டுமா
என் செல்லமே நீயும்தான்

அப்படியே ஓர் புகைபடம்
எடுத்து பத்திரப் படுத்திக்கொள்வோமா
என்று நம் ஆசைகள்
நம்மை அவசரப்படுத்தின

ஆனால் என் இதயமோ
வேண்டாமடா வேண்டாம்
வெறும் புகைப்படம்
வேண்டவே வேண்டாம்
இந்த விரல்களை
உனக்கே உனக்கானதாய் ஆக்கு
என்று கெஞ்சிக் கூத்தாடியது

மனுப்போட்டு நிற்கிறேன்
என் மாயமே
மலரே பேய் மதுக்குடமே
என் மடி வருவாயா
நிரந்தர நிரந்தரமாக

அது ஒன்றே
என் ஆயுள் வரம்

அதனால் என் மரணம்
தள்ளிப் போகும்

சொர்க்கமோ
நம் கானங்களை மட்டுமே
ஒலிபரப்பும்
தன் அலைவரிசைகளில்
பொழுதும் எப்பொழுதும்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


உலகின் முதல் யுனித்தமிழ் குழுமமான “அன்புடன் குழுமம்” தொடங்கப்பட்ட அந்த பழைய நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். அன்று நான் இட்ட ...மேலும் வாசிக்க

உலகின் முதல் யுனித்தமிழ் குழுமமான “அன்புடன் குழுமம்” தொடங்கப்பட்ட அந்த பழைய நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். அன்று நான் இட்ட மடலில் ஒன்று என் சேமிப்பில் சிக்கியது இன்று. இதுவே பெரும்பாலானவற்றை அழகாகச் சொல்வதாய்ப் படுவதால். இதை இப்போது இங்கே அப்படியே இடுகிறேன்.


கூகுளு கூகுளு கூகுளு - அட
குளுகுளு குளுகுளு கூகுளு
திஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது - இப்போ
தெனறித் தெனறிச் சாகுது


அன்பு இணையத்தோரோ குழும இதயத்தோரோ,

புகாரியின் வணக்கங்கள் மீண்டும்!

"க்க்க்க்க்றீச்ச்ச்ச்ச்... க்க்க்க்க்றீச்ச்ச்ச்ச்" நகரும் சத்தம் என்பது இதுதானா? அடடா எத்தனை இனிய ஓசை.... தேமதுரத் தழிழோசையின் தூதுகளா இந்த ஓசைகள்?

ம்ம்ம்.... எழுதிக்குவிக்கும் அத்தனையும் இனி தேடக்கிடைக்குமா? அடடா... அடடா... பாக்கியம்... பாக்கியம்.... வாழ்க தமிழ் (ஏம்பா... தமிழ் தெரியாதவனல்லாம் வாழ்க் தமிழ் சொல்றீங்க என்று புகைச்சலா.... நான் தொண்டனைய்யா... தொண்டன்.... ஆளை விடுங்கள்)

இரண்டே பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன இரண்டுமே, ஆர்வலர்களின் வேட்டுக்குப் பலியாகிப்போய்விட்டன.

நண்பர் எழில்நிலா மகேனுக்கு நான் பிரத்தியேகமாக நன்றிசொல்லவேண்டும். நான் யுனிகோடை முதன் முதலில் பார்த்தது அவரின் வலைத்தளத்தில்தான். நான் கனடா வந்தநாள் முதலாகவே இவர் என் இனிய நண்பர். ஈழத்தமிழர்.

என்னிடம் மூன்று கணினிகள் இருந்தும், 98 இல்லை. மகேன் உதவமுன்வந்தார். தன் கணியொன்றில் 98ஐ இட்டு சோதனையில் வெற்றிகண்டார்.


* எழில் நிலா மகேனின் மடலிலிருந்து:

Windows 98 பாவித்து Gogle Group ல் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். Windows 98 ல் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6.0 ம் எக்ஸ்புளோரர் 6.0 ம் இருந்தால்... (Outlook Express Ver.5.0, Explorer Ver. 5.0 வைத்திருப்பவர்கள் மிகவும் இலகுவாக மேலான பதிப்புக்களுக்கு மாறிக்கொள்ளலாம். இலவச தரவிறக்கம் Microsoft ல் உண்டு)

1. Windows 98 ல் Google Group பக்கங்களை தமிழ் யுனிகோடில் பார்வையிடலாம்.

2. Windows 98 ல் Google Group ன் அஞ்சல் தளத்தில் அஞ்சல்களை யுனிகோட் தமிழில் பார்வையிடலாம். அஞ்சல்களை அனுப்பலாம்.

3. Windows 98 ல் Outlook Express 6.0 ற்கு வரும் தமிழ் யுனிகோட் அஞ்சல்களைப் படிக்க முடியும். அஞ்சல்களை அனுப்ப முடியும்.

ஆனால் யுனிகோடில் தமிழை உள்ளிடுவதற்குத்தான் இ-கலப்பை பாவிக்கும் முறையை இங்கு எங்குமே நடைமுறைப்படுத்த முடியாது. சுரதாவின் வலைப்பக்க 'புதுவை தமிழ் தட்டெழுதியைப்' பாவித்து தமிழை தட்டெழுதி பின்னர் வெட்டி ஒட்டும் முறையைத்தான் இங்கு எதிலும் பயன்படுத்த முடியும். http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

எனது பரிசோதனை அஞ்சல்களைப் பார்வையிட.. http://groups-beta.google.com/group/anbudan

*

அடுத்து நானறிந்த யுனிகோடு வல்லுனர் உமர்தான். பணிச்சுமையால் தள்ளாடியபோதும் இரண்டே தினங்களில் செவிமடுத்தார்.

* கணிஞர் உமர் மடலிலிருந்து

ஏன் ஒடிகின்றன வரிகள்?

1. எழுதுவதற்கான பகுதியை வரிக்கு இத்தனை எழுத்துக்கள்தாம் கொண்டிருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருப்பார்கள்(எடுத்துக்காட்டாக 60 எழுத்துக்கள்). மேலும் monospace எழுத்துக்களாக இருக்க வேண்டும் என்றும் குறிக்கப் பட்டிருக்கும்.

யுனிகோடு அஞ்சல்களை 1252 அல்லது ISO-8859-1 "கேரக்ட்டர் செட்" களில் பார்க்கும்ப்பொது அதன் அளவு பெரிதாக இருப்பதை அவதானித்திருக்கலாம். எடுத்துக் காட்டாக "அன்பின் இணையத்தோரே" என்ற சிறிய சொற்றொடர்,

"தூஈஸதூஈனதூஉ஍தூஈபதூஈநதூஈனதூஉ஍
தூஈக்ஷதூஈணதூஉஜ்தூஈஉதூஈததூஉ஍தூஈததூஉக்ஷதூஈததூஈஊதூஉக்ஷ"

என்பதாகத் தெரியும் இது அந்த குறிப்பிட்ட 60 எழுத்துக்களுக்கு உள்ளிருந்தால் ஒரே வரியில் வந்துவிடும். அதற்கு மேற்படிருந்தால் கடைசியில் வரும் சொல் அடுத்த வரிக்கு மடிக்கப் பட்டுவிடும். (இந்த இடத்தில்தான் யுனிகோடு அதிக இடம் பிடிக்கும் என்ற வாதம் வலுப் பெறுகிறது)

2. ஒவ்வொரு வரி முடிவிலும் தானாகவே ஒரு carriage return சேர்க்கப்படுவது இன்னொரு காரணம். நாம் எழுதும்போது இதை உணர இயலாது ஆனால் அஞ்சல் போய்ச் சேருமிடத்தில் இதன் தாக்கம் தெரியும்.

*

அடுத்து மிகுந்த ஆர்வம் காட்டிய நண்பர்கள் இண்டிராம், முனைவர் நா. கணேசன், முனைவர் நா. கண்ணன் மற்றும் கவிஞர் இராஜ தியாகராஜன். அனைவருக்கும் நன்றி.

* இண்டி ராம்
சுரஜாவின் இணையப்பக்கத்தை டெஸ்க்டாப்க்கு இறக்கி அதில் தமிழில் எழுதமுடியும் இண்டர்நெட் இணைப்பு எப்போதும் இருக்கவேண்டுமில்லை

* முனைவர் நா. கணேசன்

இதுபோலவே, கோபியின் வலைப்பக்கத்திலும் தமிழ் (யூனிகோட்) எழுத முடிகிறது. http://www.higopi.com/ucedit/Tamil.html இன்று 400+ வலைப்பதிகளில் ஏராளமான பேர் எழுதுகிறார்கள்

*

சரி இனி நான் மேற்கொண்ட சோதனைகளின் பலனாய்க் கிடைத்தவை.

நண்பர் சத்தி சக்திதாசன் திஸ்கியில் ஒரு மடல் அனுப்பினார் கூகுள் உயிரெழுத்துக்கு (சோதனை ஓட்டம் துவங்கி ஓடிக்கொண்டிருக்கிறது உயிரெழுத்தில்). அதுவும் தெளிவாக வந்து சேர்ந்தது. ஆக 98 வாசிகளுக்கு இதுவும் ஒரு வழி. அவர்கள் யுனிகோடு தாவும்வரை முடங்கிப்போக மாட்டார்கள்.

யுனிகோடில் பூந்து விளையாட ஒரு ஜிமெயில் கணக்கு திறப்பது சாலச்சிறந்தது. ஆனால் கட்டாயம் இல்லை. நான் ஜிமெயில் பாவித்து, அவுட்லுக்கையே கழற்றிவிட்டுவிட்டேன். சொல் தேடும் வழிதருகிறதே ஜிமெயில் அதனால்தான். சட்டுச் சட்டென்று என் சேமிப்பிலிருந்து தேடி எடுக்கிறேன் மடல்களை திஸ்கியில் மாங்குமாங்கென்று எழுதி தொலைத்துவிட்டு நிற்கும் நிலையில்லை அங்கே.

நண்பர் திரு கோ. சந்திரசேகரன், சென்னைநெட்வொர்க்.காம்-இலிருந்து 'கல்கியின் விஷ மந்திரம்' என்ற ஒரு சிறுகதையை எத்தனை அழகாய் இட்டிருக்கிறார் பாருங்கள்

http://groups-beta.google.com/group/uyirezuththu

புதிதாக ஒருவர் 'அன்புடன்' குழுமத்திற்கு வந்தார். நீங்கள் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு மடலிட்டேன். இப்போது யுனிகோடு எழுதி ஜமாய்க்கிறார். அவர் நேற்று ஒரு விசயம் என்னிடம் கேட்டார். என் சிரிப்பை என்னால் அடக்கவே முடியவில்லை 'புகாரி, திஸ்கியில் எப்படி எழுதுவது?'

நம்மவர்கள், ஒரு சின்னக் கவுத்துக்கட்டில் கிடைத்ததும் மல்லாந்துவிடுகிறார்கள். இன்னும் ஓரடி எடுத்துவையுங்கள், சொர்க்கம் என்றாலும் உறக்கத்தைக் கலைத்துக்கொள்வதில்லை.

http://groups-beta.google.com/group/anbudan சென்று பாருங்கள் மடல்கள் குவிந்துவிட்டன. ஏராளமான சோதனைகள் நானும் மகேனும் செய்திருக்கிறோம்.

மரபிலக்கியத்திற்காக 2004, ஜூன் கூகுளில் கணக்கு திறந்ததாகச் சொல்கிறார் மரத்தடி மதி. ஆனால் தன் முதல் சோதனை மடலை 2005 மார்ச் 16ம் தேதி இட்டிருக்கிறார். 9 மாதம் 10 நாட்களில் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. சந்தோசமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் மதி. முன்னோடி மதிக்கு என் மனம் திறந்த பாராட்டுகள்.

நான் 2005 மார்ச் மாதம் 6ம் தேதிதான் 'அன்புடன்' என்ற பெயரில் கூகுள் குழுமம் திறந்து சோதனையில் இறங்கினேன். இன்று அங்கே ஏகப்பட்ட உரையாடல்களையும் சோதனை மடல்களையும் காணலாம். அதோடு, உயிரெழுத்துக்கும் ஒன்று துவங்கி, சோதனை ஓட்டம் ஓடுகிறது. கானா இட்டு கலக்கிய ஆசாத்துக்கு நன்றி.

ஆனால் உயிரெழுத்து துவங்கி, உறுப்பினர்களை ஏற்றும்போதுதான் ஒரு விசயம் கண்டேன். அத்தனை உறுப்பினர்களுக்கும் மொத்தமாக அழைப்பு கொடுத்தேன். உடனே கூகுள் ஓடிவந்து, என்ன செய்கிறாய் என்றது. ஒவ்வொருவராக verify செய்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிடுகிறது. இதைத் தவிர்க்க, நானே பத்துப் பத்தாக உறுப்பினர்களை உள்ளிட்டு ஒரே மூச்சில் முடித்துவிடலாம். (இதனை மட்டுனர்களுக்காக எழுதுகிறேன்)

பிறகென்ன, கூகுளுக்குள் குளுகுளுவென்று நுழையத் தடையென்று எழுப்பப்பட்ட அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டுவிட்டன.

இணையத்தோரே குழுமத்தோரே பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்படுங்கள். நான் புறப்பட்டு நாளாச்சு, என்னோடு அங்கே வந்து சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாச்சு.

என் 'அன்புடன்' உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல் அங்கே சோதனை மடல்களை இட்டுக்கொள்ளுங்கள். அது உங்கள் குழுமம்.

நன்றி

அன்புடன் புகாரி


பிற்செர்க்கை: மரத்தடி க்ருபா

ஆனால் எந்த மையத்திலும் யூனிகோட் படிப்பதில் எந்த இடர்பாடும் இல்லை. அதாவது TSCII படிக்க வசதி இருக்கும் இடத்தில் யூனிகோட் படிக்க எந்த இடைஞ்சலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் TSCII தெரியாத சில இடத்திலும் ஒருங்குறி ஒழுங்காகவே தெரிகிறது.

இணைய உலா மையங்களில் இடர்பாடு என்பது எழுத்துரு என்ற அளவில் மட்டுமே இருக்கும் விதத்தில், எந்த எழுத்துருவை நிறுவுவதிலும் ஒரே மாதிரி ப்ரச்சனைதான். இதை நிறுவ முடிந்தால் அதையும் முடியும்.

மிக முக்கிய ப்ரச்சனை (திட்டி) மறுமொழி அளிப்பது/பதில் சொல்வது/படைபுகள் அனுப்புவதில்தான். டிஸ்கியில் தட்டச்சடிக்க முடிந்துவிட்டால் பிறகு அதை ஒருங்குறிக்கு மாற்றுவது அவ்வளவு கடினம் இல்லைதானே?
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஐம்புலன்களின் ஆசை ஊற்றுகளை அடக்கியாளும் உண்மை நெறியாளனின் உயர் வழிச் செல்வோர் ஆயுள் நீடித்தே ஆயிரங்காலம் அற்புதமாய் வாழ்வர் ...மேலும் வாசிக்க

ஐம்புலன்களின்
ஆசை ஊற்றுகளை
அடக்கியாளும்
உண்மை நெறியாளனின்
உயர் வழிச் செல்வோர்
ஆயுள் நீடித்தே
ஆயிரங்காலம்
அற்புதமாய் வாழ்வர்



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்


1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 6

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


வளர வளரத்தான் நிலவு பழக பழகத்தான் அழகு பார்த்த மாத்திரத்திலேயே நீ மட்டும் எப்படி பேரழகு ...மேலும் வாசிக்க

வளர
வளரத்தான் நிலவு
பழக
பழகத்தான் அழகு

பார்த்த
மாத்திரத்திலேயே
நீ மட்டும் எப்படி
பேரழகு

உன்னை
முதன் முதலில்
முகர்ந்தபோதுதான்
என் மூக்கு
மூச்சுவிடத் தொடங்கியது

நான்
மூழ்கக் காத்திருக்கும்
படகு

உன்னிடம்
கவிழ்ந்த பின்தான்
என் பயணமே தொடங்கியது
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இலங்கையில் சிங்கள அடக்குமுறைகள் அவ்வப்போது வரும் போகும். ஆனால் 1983ல் வந்ததோ கொடூரமாய் இருந்தது. பொழுதுகளெல்லாம் ஒரே இருட்டு. இருட்டுக்குள் வெளிச்சம் ...மேலும் வாசிக்க

இலங்கையில் சிங்கள அடக்குமுறைகள் அவ்வப்போது வரும் போகும். ஆனால் 1983ல் வந்ததோ கொடூரமாய் இருந்தது. பொழுதுகளெல்லாம் ஒரே இருட்டு. இருட்டுக்குள் வெளிச்சம் போட்டுக்கொண்டு அலைந்தவையோ ஒப்பாரிகள் மட்டும்தான்.

வாழ்வின் மீதான நம்பிக்கை அன்று மொத்தமாய் மூர்ச்சையாகி விட்டிருந்தது. அவற்றின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப, எவரோ இருக்கிறார்கள் என்பதை பதறிப்போன எந்த ஈழத் தமிழனும் ஏற்பதாய் இல்லை.

பிறந்த பூமியை முத்தமிட்ட ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய, தாய் நாட்டை விட்டு வெளிச்சம் வந்த திசைகளெங்கும் சிதறி ஓடும் கட்டாயத்துக்குள் அவன் தள்ளப்பட்டான்.

இலங்கையில் அன்று நடந்த அந்த ராணுவ அட்டூலியங்களால் திரள் திரளாய் இலங்கைத் தமிழர்கள் உயிரின் முகவரி தேடி தமிழ்நாடு, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விசர்லாண்ட், நார்வே, மற்றும் டென்மார்க் நாடுகளுக்குப் புறப்பட்டார்கள்.

இலங்கையிலிருந்து, சுமார் நான்கு லட்சம் தமிழர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று குடியேறியிருக்கிறார்கள். இந்த நான்கு லட்சம் தமிழர்களில் சுமார் இரண்டு லட்சம் பேர், அதாவது ஐம்பது சதம் தமிழர்கள் கனடாவில்தான் வாழ்கிறார்கள் என்றால் அது எத்தனை இனிப்பான விசயம்.

கனடாவின் டொராண்டோ , மாண்ட்ரியல், வேங்கூவர் போன்ற பெரு நகரங்களிலெல்லாம் தமிழ், தமிழன் என்றால் அறியாத ஆள் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.

கனடாவில் தமிழன் அகதியாய் முதன்முதலில் அடியெடுத்து வைத்த நகரம் எது? அதைக் காண்பதற்கு முன் கனடாவை மேலோட்டமாக ஒரு சுற்றுசுற்றிவரலாமே. அமெரிக்காவின் தலையில் ஓர் அழகிய கிரீடத்தைப் போல அமர்ந்திருப்பதே கனடா.

கனடா உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. முதல் நாடு எது என்று கேட்கிறீர்களா? ரஷ்யாதான். கனடா ஒரு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அம்மாடியோவ்! அதாவது, ஏழாவது மிகப் பெரிய நாடான இந்தியாவைப் போல கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது.

ஆனாலும் இங்கு வாழும் மக்கள் தொகை வெறும் 3 கோடியே முப்பதுலட்சம்தான். ப்பூ...! அதாவது, இந்தியாவின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது வெறும் 3 சதவிகிதம்தான். மூன்று மடங்கு பெரிய நாட்டில் மூன்றே சதவிகித மக்கள். இந்தியாவின் மக்கள்தொகை ஒரே ஒரு கோடிதான் என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.

அதாவது கனடாவில் வாழும் மனித விகிதாசாரப்படி இந்தியாவிலும் வாழவேண்டும் என்று நாம் ஒரு கனவு கண்டால், இப்போதிருப்பதைப் போல நமக்கு நூறு மடங்கு நிலப் பரப்பு வேண்டும். என்ன சிரிப்பா ஆச்சரியமா? இந்த விசயத்தில் நம் முன்னேற்றத்தின் முன் எவரும் நிற்க முடியுமா என்ன? பக்கத்தில் கையைக் காட்டி கௌரவப் பட்டுக்கொள்ள வேண்டாம் என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்.

இயற்கையாய் வாழத் தகுதியான நாட்டில் மட்டும்தான் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கும். இன்று செயற்கை வழிகளில், வசதிகள் செய்து கொண்டு வாழ முடியும் என்ற நிலையில், இனி கனடாவிலும் ஜனத்தொகை பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படித்தான் பாலைவனங்களான வளைகுடா நாடுகளிலும் இன்று மக்கள் தொகை அதிகரிக்கத் துவங்கி விட்டது. இங்கே பனிநிலம் அங்கே பாலைவனம் இரண்டிலும் மக்கள் தொகை அதிகரிக்கக் காரணம், விஞ்ஞான, பொருளாதார முன்னேற்றத்தால் வந்த வசதிகள்தான்.

கனடாவின் வடபகுதி கடுமையான குளிரினைக் கொண்டது என்பதால், மக்கள் தென் பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். அதாவது பெரும்பாலும் அமெரிக்காவை ஒட்டியே வாழ்கிறார்கள்.

கனடா 10 மாகாணங்களையும் (province), பனியால் சூழ்ந்த மூன்று பெரும் நிலப்பரப்புகளையும் (territory) கொண்டது. கனடாவின் கிழக்கே சென்றால் அட்லாண்டிக் கடலைப் பார்க்கலாம். மேற்கே சென்றால் பசுபிக் கடலைப் பார்க்கலாம். இந்தக் கடற்கரையில் நிற்கும் ஒருவனின் கடிகாரமும் அந்தக் கடற்கரையில் நிற்கும் ஒருவனின் கடிகாரமும் நான்கு மணிநேரம் வித்தியாசம் காட்டும்.

சந்தேகப்படவேண்டாம். இரண்டும் சரியாகத்தான் ஓடுகின்றன. கனடாவின் நேர வித்தியாசம் அப்படி. இந்தியாவைப்போல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரம் என்பது இங்கே இல்லை. அதோடு குளிர் காலத்துக்கு முன்னும் வெயில் காலத்துக்கு முன்னும் நேரத்தை ஒரு மணிநேரம் மாற்றியும் வைப்பார்கள்.

வெயில் காலத்தில் இரவு பத்து மணிக்கும், கழுத்தைப் பிடித்துத் தள்ளி 'போ போ' என்று விரட்டினாலும், வெளிச்சம் போகாமல் நின்றுகொண்டு அடம் பிடிக்கும். குளிர்காலத்தில் மாலை ஐந்து மணிக்கே விட்டேனா பார் என்று ஓடிவந்து ஒரு பேயைப் போலத் தழுவிக்கொள்ளும் இருட்டு. இதைச் சரிக்கட்டத்தான் ஒரு மணி நேரத்தை முன்னும் பின்னும் மாற்றிவைப்பார்கள்.

திடீர் என்று ஒரு நாள் காலை எழுந்து அலுவலகத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக ஓடவேண்டி வருவது துரதிர்ஷ்டம் என்றால், அலறும் அலாரத்தின் தலையில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டிவிட்டு, இன்னும் ஒரு மணி நேரம் நிம்மதியாய் தூங்குவது அதிர்ஷ்டமான விசயமில்லையா?

பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து நியூஃபவுண்ட்லேண்ட்தான் கனடாவில் அதிக நேர வித்தியாசம் கொண்டது. நாலரை மணி நேரம்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


உயிரைக் கொல்லும் எமனா காதல் பொழியும விழியா மிரண்டு நிற்கும் மானா இந்த இளையவளின் பார்வை ...மேலும் வாசிக்க

உயிரைக் கொல்லும்
எமனா
காதல் பொழியும
விழியா
மிரண்டு நிற்கும்
மானா
இந்த இளையவளின்
பார்வை
இந்த மூன்றையும்
ஒன்றாய்க்
கொண்டிருக்கின்றதே

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1085

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


பொன்னாள் ஒன்று வரும் அந்நாளில் வருவாள் இந்த யாழிசை உன் வனத்துக்குள்ளேயே வருவாள் என்றாள் உறுதியாக ...மேலும் வாசிக்க

பொன்னாள் ஒன்று வரும்
அந்நாளில்
வருவாள் இந்த யாழிசை
உன் வனத்துக்குள்ளேயே
வருவாள் என்றாள் உறுதியாக

இதயம் பொன்னூஞ்சல் ஆட
பொன்னாளா
அது எப்போது வரும் என்று
யோசித்தேன்

பொன்னாள் வந்தால்
அவள் வருவாளா
அல்லது அவள் வந்தால்
பொன்னாள் வருமா

ம்ம்ம் என் மல்லிகை வரட்டும்
வரும்போது அவளே அறிவாள்
பொன்னாளின் கைகளைப் பிடித்து
அழைத்துக்கொண்டு வரப்போவது
பசும் பொன்னாலான
அவள்தான் என்று
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


வருவாய் வரும் வழிகளை வெகு சிறப்பாய் அமைத்தலும் வந்த பொருள்களைச் சேமித்துக் காத்தலும் காத்த செல்வத்தை முன்னேற்ற வழிகளில் ...மேலும் வாசிக்க

வருவாய் வரும் வழிகளை
வெகு சிறப்பாய் அமைத்தலும்
வந்த பொருள்களைச்
சேமித்துக் காத்தலும்
காத்த செல்வத்தை
முன்னேற்ற வழிகளில்
திறம்படச் செலவிடுதலுமே
நல்ல ஆட்சியாகும்





இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 385

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னவள் ஒரு கடல் அவளிடம் தொட்டதெல்லாம் கடல் கடல் கடல் அவள் உள்ளம் ஒரு கடல் உருகும் ...மேலும் வாசிக்க

என்னவள் ஒரு கடல்

அவளிடம் தொட்டதெல்லாம்
கடல் கடல் கடல்

அவள் உள்ளம் ஒரு கடல்
உருகும் வார்த்தை ஒரு கடல்
அவள் எண்ணம் ஒரு கடல்

பொங்கும் உணர்வுகளோ
பேரலை ஆர்ப்பரிக்கும் பெருங்கடல்

இருந்தாலும்
என்னைக் கண்டதும்
அவளின் கீழுதடு தாண்டி
தந்தப் பற்கள் தாண்டி
நாவின் அடியில் ஊறுமே ஒரு கடல்
அந்தக் கடல் பற்றிப் பேசுவோமா

அது ஓர் சர்க்கரை வெள்ளம்
என் ஏழாயிரம் பிறப்புக்கும்
இப்பொழுதே வாரிவழங்கும்
தித்திப்பு மகா சமுத்திரம்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தனிமையிலும் மனதிலும் ஒரு வாழ்க்கையும் ஊருக்கும் உலகுக்கும் ஒரு வாழ்க்கையும் வாழ்வதுதான் உயர்ந்த பண்பாடு, சிறந்த கலாச்சாரம் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம். ...மேலும் வாசிக்க

தனிமையிலும் மனதிலும் ஒரு வாழ்க்கையும் ஊருக்கும் உலகுக்கும் ஒரு வாழ்க்கையும் வாழ்வதுதான் உயர்ந்த பண்பாடு, சிறந்த கலாச்சாரம் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம்.

ரகசியங்கள் அத்தனையும் பாதுகாக்கப்பட்டவன் சிறந்த பண்பாடு உடையவன். ரகசியங்கள் அம்பலமாக்கப்பட்டவன் பண்பாடு சிதைத்தவன்.

ரகசியம் கண்டுபிடிக்கப்படும்போது தெரியாமல் செய்துவிட்டேன் இனி நல்வழியில் செல்வேன் என்று சத்தியம் செய்துவிட்டு ரகசியம் காப்பதில் முன்பை விட அதிக அக்கறை கொண்டு தன் வழமையான தவறுகளில் மூழ்குபவன் பண்பாடு உடையவன்.

தெரிந்தது தெரிந்துபோய்விட்டது இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்று துணிந்து தன் இயல்புபோல் வாழ்பவன் பண்பாடு சிதைப்பவன். பெரும் தவறுகளைச் செய்துகொண்டு அவற்றை மறைத்து வாழ்பவன் பண்பாடு காப்பவன்.

இப்படியாய் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதெல்லாம் தனிமனித வக்கிரங்களை மூடும் அழகான போர்வைகள்.

இவை இவ்வாறு இருக்க ஊர், நாடு, உலகம், மொழி, இனம் என்று எல்லாம் கடந்து ஓர் பண்பாடு உண்டு. ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தை மனதில் கொண்டு செயல்படுவதும், ஒளிவு மறைவு இன்றியும் அடுத்தவர் சுதந்திரம் காத்தும் தன் சுதந்திரம் அனுபவித்தும் வாழ்வது உயர்ந்த பண்பாடு கலாச்சாரம் நாகரிகம்.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இழுந்து அணைத்து கழுத்த்த்த்துக்குள் புதைந்தால் இமைக் கதவுகளைச் சாத்திக்கொண்டு விழிச் சொர்க்கங்களுக்கு விடுமுறை கொடுத்துவிடுவாள் என் யாழிசை ...மேலும் வாசிக்க

இழுந்து அணைத்து
கழுத்த்த்த்துக்குள் புதைந்தால்

இமைக் கதவுகளைச் சாத்திக்கொண்டு
விழிச் சொர்க்கங்களுக்கு
விடுமுறை கொடுத்துவிடுவாள்
என் யாழிசை

இதழ்கள் கவ்வி
உயிர் உறிஞ்சினால்
இன்னுமின்னும் இறுக்கமாய்த்
தன் விழிச் சொர்க்கங்களைப் பூட்டிச்
சாவியைத் தூர எறிந்தேவிடுவாள்

இதற்குமேல் எழுதி
அவளைப் பாடாய்ப்படுத்த
நான் தயாராய் இல்லை.

காதல் தவிப்பே என்றாலும்
என் கண்மணி துடிப்பதை
என்னால் ஏற்க முடிவதில்லை
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


டொராண்டோ கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. சுறுசுறுப்பிலும் சரி நவீனமயங்களிலும் சரி இமைகள் கிழியக்கிழிய மொத்த விழியையும் முழுமையாய் மேலே உயர்த்திப் ...மேலும் வாசிக்க

டொராண்டோ கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. சுறுசுறுப்பிலும் சரி நவீனமயங்களிலும் சரி இமைகள் கிழியக்கிழிய மொத்த விழியையும் முழுமையாய் மேலே உயர்த்திப் பார்த்தும் திருப்தி கொள்ள முடியாத அற்புத நகரங்களில் ஒன்று.

ஒரு பத்து இருபது ஆண்டுகளாய், இங்கே திரும்பிய இடங்களிலெல்லாம் தமிழ் மணம் கமழ்கிறது. 24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலிகள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ்ச் செய்தித் தாள்கள், 'அவசர சிகிச்சைப் பிரிவு' என்று தமிழிலும் எழுதப்பட்ட உலகத் தரம் மிக்க மருத்துவமனைகள், இங்கே நீங்கள் தமிழிலேயே பேசலாம் என்று கூறும் கனடிய வழக்கு மன்றங்கள், 'வருக வருக' என்று தன் முகப்பில் தமிழிலும் எழுதிப்போடப்பட்ட உலக அதிசய கனடா தேசக் கோபுர நுழைவாயில். ஓ... இதை சீனச் சுவர்போல நீட்டிக்கொண்டே போகலாம்.

எப்படி வந்தது எங்கிருந்து வந்தது கனடாவில் இத்தனை தமிழ்?

அதுபற்றி கொஞ்சம் எழுதினால் என்ன என்று தோன்றியது எனக்கு. ஏனெனில் நான் கனடா வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்ளே சேர்ந்து கிடக்கும் தகவல்கள் கண், காது, முக்கு, நாக்கு, தோல் என்று எல்லாதிசைகளிலும் முட்டிக்கொண்டு நிற்கின்றன. எல்லாவற்றையும் நயாகராவைப் போல் கொட்டித் தீர்க்க(?) வேண்டும் எனக்கு.

இன்று தமிழ்நாடு, கேரளா என்று தனித்தனி மாநிலங்களாய் கோடுகள் கிழிக்கப்பட்டுக் கிடந்தாலும், முன்னெல்லாம், தமிழ்நாடும் கேரளாவும் தமிழர்கள் வாழும் ஒரே தமிழகமாகத்தான் இருந்தது. அதுவே பூர்வீகத் தமிழகம் என்றாலும் இலங்கைத் தீவில் தமிழன் பல நூற்றாண்டுகளாகவே வாழ்ந்துவருகின்றான்.

அவன் அங்கே எப்போது சென்றான், அல்லது அங்கேயேதான் தோன்றினானா என்பதெல்லாம், எனக்கு ஏழாத எட்டாத விசயங்கள். பலரும் பல கருத்துக்களை இதில் சொல்லக் கேட்டிருக்கிறேன். குறுக்கே வந்த கடல் செய்த சதியும், அதன் விளைவும் என்னவென்று ஆராய்வதற்கு என் கட்டுரையில் இடமில்லை.

முதன் முதலில் தமிழன் தோன்றிய இடம் எது? அது இப்போது நிலத்தில்தான் இருக்கிறதா? அல்லது நீருக்கடியில் சென்றுவிட்டதா? இந்த ஆராய்ச்சிகளை நானும் ஆவலோடு வாசிப்பேன். ஆனாலும் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவதென்பது நடக்கின்ற காரியமா? எனவே அதை விட்டுவிட்டு நான் அடுத்த கட்டத்திற்கு ஓட்டம் பிடிக்கலாம் என்று முடிவெடுப்பதில் தப்பில்லைதானே?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடும் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் இல்லைதான். ஆனால், எப்போதுமே பாலம் இருந்ததில்லையா என்ன?

சில ஆண்டுகளுக்கு முன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த கைப்பாலம் அமெரிக்காவின் நாசாவால் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படமாகக் காட்டப்பட்டது. அந்தச் செய்தியை பலரும் பலவிதமாக எடுத்துக் கையாண்டு, அது இணையத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டதை நாம் அறிவோம்.

நான் தான் அதைக் கட்டினேன் என்று இமயமலையிலிருந்து வயதை கணக்கில் வைத்துக்கொள்ளாத ஒரு பாபா வரவில்லையே தவிர மற்றதெல்லாம் நடந்தது.

வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்காலத்தில், சுட்டுப் போட்டாலும் வெளியே செல்லாமல் கிடந்த தமிழன் கட்டாயமாகக் கடத்தப் பட்டான் வெளிநாடுகளுக்கு.

தாத்தாக்களின் தாத்தாக் காலங்களிலெல்லாம் எங்கள் ஊரான ஒரத்தநாட்டிலிருந்து இருபத்திரண்டு கிலோ மீட்டர் தூரமே இருக்கும் தஞ்சாவூருக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்றால், ஒப்பாரி வைத்து ஊரே அழும்.

'போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்' என்று மனைவி தலையை அவிழ்த்து விட்டுக்கொண்டு அந்தக்கால இசையழுகையை கண்ணீரில் மிதக்கவிட்டுவிடுவாள். பட்டினி கிடந்தாலும் பத்தடிக்குள்ளேயே வாழ்வோம் என்று சபதம் எடுத்து மடியிலும் மார்பிலும் போட்டுக்கொண்டுதான் தாய்மார்கள் வாழ்வார்கள்.

கப்பல் ஏறிச்சென்று வணிகம் செய்தான் தமிழன் என்பதெல்லாம் சும்மா வெறுமனே சொன்ன கதைகள் இல்லைதான் என்றாலும், பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் பயக்க வயக்கம் (பழக்க வழக்கத்திற்கு எங்கள் ஊர் கிராம மொழி).

ஆனால், உலகமே என்னூட்டு (என்னுடையது) என்று சொல்லும் வெள்ளைக்காரன் சும்மா இருப்பானோ? அந்த நல்லவன்/பாவி இவர்களை அப்படியே விட்டுவைக்கவில்லை. 'கட்டு மூட்டையை. புறப்படு என்னோடு' என்றான் கோபமாக.

பெட்டிப் பாம்பாய் அடங்கி (வேறு வழி?) அவன் இட்ட கட்டளைக்கு அப்படியே தலையாட்டிக்கொண்டு (அன்றைய முழுநேர உத்தியோகம்) அவனோடு சென்று, சிங்கப்பூர் மலேசியா, இலங்கை, மொரீசியஸ், பிஜி தீவுகள், தென் ஆப்பிரிகா போன்ற இடங்களுக்கு பொதுப்பணி செய்வதற்காக அங்கே குடியேறினார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகுதான் திறமைமிக்கத் தமிழர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு தங்களின் சொந்தத் தகுதியை முன்வைத்து கப்பல் விமானம் என்று பெரிய பெரிய விசயங்களில் எல்லாம் தாமே முன்வந்து கால் வைத்தார்கள்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இவர்களே சான்று என்றால் அதில் அமீபா அளவும் தவறில்லை. இப்படி தமிழன் தென்னிந்திய மூலையிலிருந்து உலகமெங்கும் மெல்ல மெல்ல நத்தைபோல் நகர்ந்து கொண்டிருக்கும்போதுதான், திடீரென்று அது நடந்தது.
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கண்ணா உன் காலம் வேறு ஏசு உன் காலம் வேறு ஆனால் நீங்கள் கைகோத்து நிற்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் நாங்கள் ...மேலும் வாசிக்க

கண்ணா உன் காலம் வேறு
ஏசு உன் காலம் வேறு
ஆனால் நீங்கள்
கைகோத்து நிற்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறோம் நாங்கள்

கண்ணா உன் நிறம் கறுப்பு
ஏசு உன் நிறம் சிவப்பு
ஆனால் நீங்கள் எங்களை
நிறங்களற்ற எண்ணங்கள்
கொண்டவர்களாய் ஆக்குவீர்கள் என்று
ஆசைப்படுகிறோம் நாங்கள்

கண்ணா உன் நூல் கீதை
ஏசு உன் நூல் பைபிள்
ஆனால் நீங்கள்
கீதைக்கும் பைபிளுக்கும்
வித்தியாசம் ஏதுமில்லையென
உணரச்செய்வீர்கள் என்று
ஆசைப்படுகிறோம் நாங்கள்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சொர்க்கங்கள் எனக்கு இரண்டு ஒன்று உன் இடது விழி இரண்டாவது உன் வலது விழி கொஞ்சம் ...மேலும் வாசிக்க

சொர்க்கங்கள் எனக்கு இரண்டு
ஒன்று உன் இடது விழி
இரண்டாவது உன் வலது விழி

கொஞ்சம் விடுமுறை கொடுக்கலாமா
உன் சொர்க்கங்களுக்கு என்றேன்
உள்ளே பதுக்கிவைத்த உணர்வுகள்
உற்சாகத் தோகைவிரிக்க

அவ்வப்போது
இமைகளைப் படபடக்கச்செய்து
விடுமுறை கொடுக்கத்தானே செய்கிறாள்
போதாதா என்றாள் பாசாங்குக்காரி

போதாது போதாது
அவற்றுக்கு ஓர் அவசர விடுமுறை
கொடுக்கவேண்டும் இப்போதே என்றேன்
நெற்றிப் பொட்டில் கெட்டிமேளம் கொட்ட

கவலையில்லை
அது எனக்குப் பிடித்த விளையாட்டுத்தான்
என்றாள் கழுத்துக் கரைகளில்
சிலிர்ப்பு நதி சீறிப்பாய
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நீ என்னைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றாய் தெய்வத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்குச் சென்ற ஒரே பக்தன் ...மேலும் வாசிக்க

நீ
என்னைக்
கோவிலுக்கு
அழைத்துச் சென்றாய்
தெய்வத்தின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
கோவிலுக்குச் சென்ற
ஒரே பக்தன்
நானாகத்தான் இருக்க முடியும்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


எழுதும் வரைதான் என் கவிதை எழுதி முடித்ததும் அது உங்கள் கவிதை நேசியுங்கள் நிறைவான இடங்களில் சுவாசியுங்கள் ...மேலும் வாசிக்க

எழுதும் வரைதான் என் கவிதை
எழுதி முடித்ததும்
அது உங்கள் கவிதை

நேசியுங்கள்
நிறைவான இடங்களில்
சுவாசியுங்கள்

கூண்டேற்றுங்கள்
குறையல்லவெனத் தெளிந்தால்
நியாயமருளுங்கள்

உமிழுங்கள்
உண்மையறிய நேருங்கால்
உயர்த்துங்கள்

அது
உங்கள் கவிதை

உங்களைப் போலவேதான் நானும்
ரசிக்கிறேன் ரசிகனாய்
விமரிசிக்கிறேன் விமரிசகனாய்

எனவே
வழக்காடும் சபைகளில்
நானும் வாழ வருவேன்

நானெழுதிய என் கவிதைகளின்
முதல் ரசிகனும் முதல் விமரிசகனும்
நானல்லவா
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


எதிர் எதிராய் அமர்கிறோம் வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து வழிந்தவண்ணமாய் இருக்கிறது உன் பேரழகு அள்ளிக்கொள்ளும் ஆவலோடு என் விரல்கள் தயார்நிலை ...மேலும் வாசிக்க

எதிர் எதிராய் அமர்கிறோம்
வெளிர் ரோஜா ஆடைக்குள்ளிருந்து
வழிந்தவண்ணமாய் இருக்கிறது
உன் பேரழகு

அள்ளிக்கொள்ளும் ஆவலோடு
என் விரல்கள் தயார்நிலை
ராக்கெட்டுகள் ஆகின்றன

அள்ளி அள்ளிப் பருகி
தாகம் ஏற்றிக்கொள்ளும்
நிலையிலேயே கரைகின்றன
விழிகள்

எதுவுமே அறியாததுபோல
இருந்துவிட முடிவெடுத்து
வானவில்லாய் ஆக்கிக்கொள்கிறாய்
உன் ஆகாயத்தை

உணவு வருகிறது
உண்டுகொண்டுதான் இருக்கிறோம்
அத்துமீறும் பருவக்கசிவுகளை

ருசி உணரப்படவே இல்லை ஆனால்
நன்றாக இருக்கிறதல்லவா
என்று பாராட்டிக்கொள்கிறோம்
பரிமாறப்பட்ட உணவை

புறப்படும்போது
பிறகென்ன நண்பனே என்கிறாய் நீ
மீண்டும் சந்திப்போம் தோழி
என்று கை குலுக்குகிறோம்

குலுங்கிக் கொட்டி
நட்சத்திரங்களாய்க் கண்சிமிட்டுகின்றது
சொல்லப்படாத காதல்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இனிய இணையத்தோரே, தமிழ்மணம் என்னையும் அழைத்தது. நட்சத்திரப் பதிவாளன் என்றது. தமிழ் வானத்தில் நானும் ஓர் ஒளிப் புள்ளியாய் மினுக்கலாம் ...மேலும் வாசிக்க

இனிய இணையத்தோரே,

தமிழ்மணம் என்னையும் அழைத்தது. நட்சத்திரப் பதிவாளன் என்றது. தமிழ் வானத்தில் நானும் ஓர் ஒளிப் புள்ளியாய் மினுக்கலாம் என்று உடனே ஒப்புதல் தந்துவிட்டேன்.

உங்கள் பின்னூட்டங்கள்தான் என் முன்னால் நின்று என்னை எழுத்துக்குள் அழைத்துச்செல்லும் ஒளிமூட்டங்கள். ஆகவே அன்பு இணையத்தோரே நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் பின்னூட்டப் பிதாமகன் என்று அன்புடன் நிரூபியுங்கள்.

கொஞ்சம் தமிழ், கொஞ்சம் காதல், கொஞ்சம் புதுக்கவிக்குறள், கொஞ்சம் கனடா என்று சில கொஞ்சங்களைப் பஞ்சமின்றிப் பொழியலாம் என்று ஆசைப்படுகிறது இந்த நெஞ்சு.

முதலில் தமிழ்மணத்திற்கு நன்றி கூறும் முகமாக ஒரு சந்தக் கவிதை எழுதி இருக்கிறேன். எப்படி இருக்கிறதென்று தொட்டுத் தடவிப் பார்த்து நாக்கில் இட்டுச் சட்டென்று கூறுங்கள். நன்றி


மணமே தமிழ்மணமே

இணையத்தின் வெளியெங்கும் மணமே - தமிழ்
. .இதயங்கள் பூப்பூத்துக் கனியாகும் தினமே
அணையில்லாக் காட்டாற்று மனமே - தமிழ்
. .அமுதத்தால் நிறைகின்ற சுகமொன்றே சுகமே

இணையில்லாச் சேவைக்கோர் மணமே - தமிழ்
. .இடுகைகள் திரட்டிடும் வெற்றித் தமிழ்மணமே
முனைவர்கள் அறிஞர்கள் வாழ்த்த - தமிழ்
. .முதற்பெருந் திரட்டியே வாழ்க நீ வாழ்க

நட்சத்திரப் பதிவாளன் என்றாய் - எனை
. .நன்றித்தேன் நதியாக்கித் தமிழ்போல வென்றாய்
முத்தத்தமிழ் நாளும்நான் செய்வேன் - வலை
. .முற்றத்தில் கொட்டித்தினம் இச்சாகத் தருவேன்
* அன்புடன் புகாரி புதிய பதிவுகள்

naa.g...@gmail.com

unread,
Dec 14, 2009, 7:24:40 AM12/14/09
to சந்தவசந்தம்

நண். புகாரி,

ஒரே வாரத்தில் இவ்வளவு இடுகைகளும் ஒரு சாதனைதான்.

பிற வாசித்த பின்.

நா. கணேசன்

அன்புடன் புகாரி

unread,
Dec 14, 2009, 11:55:41 AM12/14/09
to mac...@yahoogroups.com, santhav...@googlegroups.com, tamil...@googlegroups.com, Rajmogan Selliah, tamil_ulagam, அன்புடன், தமிழமுதம்
நன்றி முனைவரே


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
Reply all
Reply to author
Forward
0 new messages