இயல்பாய் இரு - மீ. விசுவநாதன்

3 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 18, 2026, 8:55:01 PM (4 days ago) Mar 18
to Santhavasantham, M. Viswanathan
"இயல்பாய் இரு"
(மீ. விசுவநாதன் )

         (பல்லவி)

வீணே தேடி வாடுகிறாய் - மனமே 
விரும்பி அலைந்து வீழுகிறாய் 

         (சரணம் )

காலை மெல்ல விடிகிறது -  குளிர்ப்  
பனியும் கதிரில் கரைகிறது 
சோலைப் பூக்கள் மலர்கிறது - இவை 
யாவும் இயல்பாய்  நடக்கிறது   (வீணே தேடி)

கன்றும் பசுவும் காளைகளும் - சிறு 
கவலை இலாமல் இருக்கிறது  
இன்றும் நேற்று போலென்று - அதன்  
இயல்பை உணர்ந்து கடக்கிறது   (வீணே தேடி)

இல்லா ஒன்றைப் புறவெளியில் - உன் 
இருப்பை மறந்து நாடுகிறாய் 
எல்லாம் இயல்பாய் இயங்குவதை - நீ 
ஏனோ மறந்து ஏங்குகிறாய்.    (வீணே தேடி)
       (16.03.2026 21.31 pm)

இமயவரம்பன்

unread,
Mar 18, 2026, 8:57:46 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
மிகச் சிறப்பான பாடல்.

M. Viswanathan

unread,
Mar 18, 2026, 10:12:47 PM (4 days ago) Mar 18
to இமயவரம்பன், Santhavasantham
மிக்க நன்றி கவிஞரே..

அன்பன்,
மீ. விசுவநாதன்
19.03.2026

Ram Ramakrishnan

unread,
Mar 18, 2026, 10:55:45 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com
ஆகா! எளிமையும் இனிமையும் ஒருசேர அமைந்த அழகான சிந்துப் பாடல் , திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 19, 2026, at 07:42, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-ut%3D_3GZhNLL-Jx5M7sHGZQVVWFcBt7wjQex1wGjh3jpA%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Mar 19, 2026, 1:27:01 AM (3 days ago) Mar 19
to Santhavasantham
அன்புக் கவிஞர் ராம் கிராம் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்
மீ. விசுவநாதன்
19.03.2026
Reply all
Reply to author
Forward
0 new messages