புல்லாழ்ங்குழலா? புள்ளாங்குழலா?

4 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Nov 3, 2025, 8:18:47 AM (2 days ago) Nov 3
to Santhavasantham
வணக்கம்,

'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலில்,

புள்ளாங் குழல்கொண்டு வருவான்-அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,
கள்ளால் மயங்குவது போலே அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்

என்று பாரதி எழுதுகிறார்.

புல்லாங்குழல் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். 

ஆனால், புள்ளாங்குழல் என்று பாரதி எழுதியது ஏன்? எதுகை நயத்திற்காகவா? . 

எனில், 'ஞானரதம்' கதையில் 'புள்ளாங்குழல்'  என்று ஏன் அவர் எழுத வேண்டும்?

சான்றோர் பெருமக்கள் அடியேனுக்கு வெளிச்சம் பாய்ச்சி அறிவு கொளுத்துமாறு வேண்டுகிறேன்.

நன்றி,
நிரஞ்சன்





Reply all
Reply to author
Forward
0 new messages