வருடம் பிறக்க இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன.ஆனாலும் இந்த வாழ்த்து
ஒன்றைச் செய்து தரவேண்டுமென்ற ஆர்வத்தில் முன்கூட்டியே தருகின்றேன் பத்து
நாட்கள் வரை பிடித்தன இதை பூர்த்திசெய்ய. இந்த வாழ்த்தை மனமுவந்து
அளிக்கிறேன். இது தமிழ் interactive game உடன் சேர்ந்தது வித்தியாசமானது.
தவறாமல் பார்க்கவும்
download (18mb)
http://www.mediafire.com/?dmlsaj4selbg1x6
மலராய் மலரின் இதழாய் மகிழ்வின் உறைவாய் மனம்தானும்
உலரா தன்பின் உறவாய் பலரும் உரிதாய் வரும் நாளும்
சிலரால் தானும் கடிதாய் புறமாய் பேசா துயர்வோடும்
நலமாய்வாழப் பெரிதாம் இன்பம் தருமே புத்தாண்டு
தொழிலால் மிகவும் பெரிதாய் வளரும் திறமும் பகைநீங்கி
தளரா நெஞ்சும் தணியா உவகை தரவே புத்தாண்டு
எழிலார் மனையின் இறைமை ஓங்க இனிமை வாழ்வாக
பொழில்சேர் கமலப் பூவின் இதழாய் பொலிந்தே முகம்காண
அழலாய் வெம்மை அணையா துயரம் அகமே குளிர்வாக
நிழலாய் கவிகள் நிறையும் இனிமை நித்தம் பெரிதாக
உழலும் துன்பம் உதிரக் காணும் உயர்வே மனமீதில்
ஒளியும் கதிரின் உறவாய் வாழ்வும் ஓங்கிப் பொலியட்டும்
வளமும் வாழ்வும் பெரிதாய் வளர வருமோர் புத்தாண்டு
இளமை கொண்டோர் உலகிலென்றும் இன்பச் சுவைகாண
அழகாய் தமிழி லாக்கி வாழ்த்தாம் அடியேன் தருகின்றேன்
விளையாட் டுடனே வேடிக் கைதான் விரைந்து காணுங்கள்
https://rapidshare.com/files/3730454745/puthu_varudamT2012.rar
On Dec 21, 8:46 am, kirikasan <kanara...@gmail.com> wrote:
> எப்போதும் புது வருடம் பிறக்கும்போது சென்ற வருடத்தில் என்ன
> செய்துமுடித்தோம் இந்தவருடத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம்
> எழுவதுண்டு.
> இந்த இழை புதுவருடத்துக்காக புதிதான கவிதைகளுக்காக
>
> வருடம் பிறக்க இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன.ஆனாலும் இந்த வாழ்த்து
> ஒன்றைச் செய்து தரவேண்டுமென்ற ஆர்வத்தில் முன்கூட்டியே தருகின்றேன் பத்து
> நாட்கள் வரை பிடித்தன இதை பூர்த்திசெய்ய. இந்த வாழ்த்தை மனமுவந்து
> அளிக்கிறேன். இது தமிழ் interactive game உடன் சேர்ந்தது வித்தியாசமானது.
> தவறாமல் பார்க்கவும்
>
> download (18mb)http://www.mediafire.com/?dmlsaj4selbg1x6
சிலையாகக் கல்லாகச் செங்கதி ரொளியாகச்
சிவந்ததோர் மாலைவிண்ணில்
அலையுவெண் முகிலாக அதனூடு மதியாக
அடங்காத திமிரெடுத்த
மலையாகக் குயிலாக மரமீது துணைகூடும்
மகிழ்வான குருவியாக
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக
எனைநீயு மாக்காதேன்?
நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,
நில்லாமற் தடம்புரண்டு
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்
ஆழியென் றாக்கலின்றி
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே
தூரமென் றின்பங்கொண்டு
கொலைபாத கர்கையின் கொடுவாளில் உயிர்போகும்
கோலமுமேன் படைத்தாய்
குலையான கனியாக கூடிடும்கொத்தான
குறுவாழ்வு மலர்களாக
தலைவீழ்ந்து குனிந்துமண் தழுவுநெற் கதிராக
தன்மானங் கூனல்கொண்டு
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனம்மோதி
இயல்பான தளதளத்து
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்
பிறவியுந் தந்ததேனோ
கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி தாவியோர்
கீழ்மையில் மனம்வாடிட
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்
வானத்தின் திசைகாட்டிட
நுளைகின்ற காற்றாலே நுண்கலைக் குழலூதும்
நேரிலே உடலூதியும்
விளைகின்ற உயிர் காற்றும் விதிகொள்ள வீழுமிவ்
வெற்றுடல் தந்தேய்தனை.
மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்
மாதேவி சக்திதாயே
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான
பிறவியாம் மனிதமென்றே
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்
துஞ்சிடுந் நெஞ்சம்தந்து
முளைகொள்ளு வாழ்வீது தந்தனை மறுபடி
மேதினி வாழ்வு வேண்டாம்
On Dec 21, 8:46 am, kirikasan <kanara...@gmail.com> wrote:
> எப்போதும் புது வருடம் பிறக்கும்போது சென்ற வருடத்தில் என்ன
> செய்துமுடித்தோம் இந்தவருடத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம்
> எழுவதுண்டு.
> இந்த இழை புதுவருடத்துக்காக புதிதான கவிதைகளுக்காக
>
> வருடம் பிறக்க இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன.ஆனாலும் இந்த வாழ்த்து
> ஒன்றைச் செய்து தரவேண்டுமென்ற ஆர்வத்தில் முன்கூட்டியே தருகின்றேன் பத்து
> நாட்கள் வரை பிடித்தன இதை பூர்த்திசெய்ய. இந்த வாழ்த்தை மனமுவந்து
> அளிக்கிறேன். இது தமிழ் interactive game உடன் சேர்ந்தது வித்தியாசமானது.
> தவறாமல் பார்க்கவும்
>
> download (18mb)http://www.mediafire.com/?dmlsaj4selbg1x6
பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே - இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் குருதியை சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறிவீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும் வழிஅறியோம்
வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்த நின்றோம்
தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திக்கென நாமறியோம்
போக நினைத்தவிப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ
புல்வெளி செந்நிறம்மனதையா - இந்த
பூமியும் இருண்டதையா
நல்மனம் கொண்டவர் ஏறிவரும் - மலை
நாட்களென் றாகுதய்யா
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ
கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
திசையினைக் காட்டுமையா !
மதி மயங்கும் மாலைவேளை
தோழி:
மாமரச் சோலையிலே, மடி மீது தலைய ணைந்து
மாமகள் நீயிருந்தாய், மனந்தானும் மகிழ்வு கொண்டாய்
தாமரைப் பூவிரிய, புனல் தாவிக் கயல் குதிக்க
தேமதுரச் சுவையிற் கனிதின்று களித்தனை காண்
சாமரை வீசிநிற்க இன்பஞ் சார்ந்த மலர் முகத்தில்
சோகமிழையக் கண்டேன் நின் சுந்தரமென் னுடலும்
பூமரம் போல் புயலில் பட்டுப் பொய் விழுமா மதுபோல்
போனது ஏன்மகளே இதழ் புன்னகை மாறியதேன்
பொன்முடி வேந்தன் வர அவர் புன்னகை செய்வதெல்லாம்
புத்தியும்பேதலித்தோ புது அர்த்தங்கள் நீயுரைத்தாய்
என்னடி நின்நினைவு அன்பு எத்தனைஆழமென
என்மனம் தானறியும் ஆயின் ஏனிந்த கோபமெலாம்
புன்னை மரத்தடியில் எழில்பூக்கள் உதிர்ந்து நிற்க
பன்னெடும்வேளை அவர் பெரும் பாசமுரைத்து நின்றாய்
பின்னர் அவரருகில் நீயும் பேசிட ஏகும்கணம்
புன்மை மனமெடுத்தே பல பொல்லா துரைத்த தென்ன?
தலைவி:
என்ன நினைத்தென துள்ளம் வருந்திடும்
ஏதும் புரியவில்லை - இரு
கன்னம் வழிந்திடும் கண்களின் நீர்வரும்
காரணம் தோன்றவில்லை
இன்னும் மனதினில் சின்னவள் நானெனச்
சொல்லத் தெரியவில்லை - ஏனோ
இன்னலை கண்டதென் றின்பமிழந்திடும்
என்நிலை மாறவில்லை
பென்னம் பெரிதொரு சோலை எழில்த் தரு
பேசரும் பொன்நிழலாம் - அதில்
சின்னக் குருவிகள் சேர்ந்துமகிழ்வது
சொல்லப் பெருங் கதையாம்
மின்னி இரவினில் விண்ணொளி மீன்களை
மேனியணிந்த பெண்ணாய் - அந்தப்
பொன்னொளி வான்மதி பூத்தமரத்திடை
புள்ளியிற் கோலமிட
நீலக்கரு விண்ணில் நீந்துவெண் மேகமும்
நேசமிழை தென்றலும் - பல
கோலமிடு மிசைகூடும் கருவிகள்
கொண்டவை போல்நிதமும்
காலம் பொழுதுயர் காற்றெழும் புள்ளினம்
கூடி இசை படிக்க - பெரும்
சீலமுடன் சுவை சேர்ந்திடவே அதன்
சூழல்தனை வியந்தேன்
சோலை மலர்மணம் சொல்லித் திரிந்திடும்
சுந்தரமென் வளியும் - நல்ல
பாலை பழித்திடும் பஞ்சு வண்ணமுகில்
பக்கமணை மதியும்
ஓலை படித்தும் அறியேனடி எந்தனுள்ளம்
உவகைகொள்ள - இன்பம்
நூலை விடமிக நுண்ணியதாய் மனம்
நேரக் களித்திருந்தேன்
ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்
காடு நடந்திடும் வேழம் மென முகில்
கன்னியென ஒருத்தி - அத
னூடு சிறுபிள்ளை ஓடிவரப் பெரும்
ஓங்கியெழும் அருவி
போடுஎன உயிர்போக்கும் அரக்கரும்
பூதங்கள் போற்பலவும் - விழி
மூடும்பொழுதிலும் ஊடுவர மனம்
முற்று மிழந்து விட்டேன்
கண்ட கனவு விழித் தெழுந்தேன் என்ன
காரணம் ஏதறியேன் - அதில்
கொண்டதென்ன உளங் கூறிய தென்னொரு
கோலம் புரிவதிலேன்
மண்டபமும் மலர் மாமரமும் நிழல்
தந்திட நானிருந்தேன் - அங்கு
கண்டது மோர்கன வென்ன உரைத்திடக்
காலையில் நான் மறந்தேன்
ஆயிரம் பூக்கள் சொரிந்தனவாம் அன்பு
ஆண்டவன் சந்நிதியில் - நானும்
போயிருந் தன்பினை வேண்டியே நல்லொரு
பூசைகள் செய்துநின்றேன்
தீயிலும் பூவிலும் தெய்வ அருள்வேண்டி
தொட்டு வணங்கி நின்றேன் - அந்த
தீயினைத் தொட்டதும் சுட்டது பூவினை
சூடித் திரும்பி வந்தேன்
நல்ல மனம்மலர் பூத்திருக்கும் தீயின்
நாக்கென சுட்டுவிடும் - சில
சொல்லுமிருக்கு மச் சொல்லில் பெருமுண்மை
சுட்டுவிடும் எரியும்
வல்ல மனதுடன்வாழ நினைத்திட
வந்து புயலடிக்கும் - இவை
இல்லை யெனப்பூவைச் சூடும் தனிவாழ்வு
எப்படி வாய்த்துவிடும்?
பாடென்று சொன்னதும் பாடு படுத்திடும்
பாவிமனம் இதுதான் - நடந்
தோடென்று சொல்லிட உட்கார்ந்து
கைபிடி ஓடென தந்ததுமேன்
ஆடென்று சொன்னதும் ஆடாத ஆட்டமும்
ஆடிமுடிப்பதுமேன் - மனம்
நாடென்று சொல்லிட நல்லதை விட்டல்ல
நாடித் திரிவது மேன்
வீடென்று காட்டிட விட்டுவிட்டுத் தூரம்
வீம்பினில் செல்வதுமேன் - இனி
வாடா மலரென வாழெனத் தீமைகள்
வந்து இழுப்பது மேன்
கூடாத துன்பங்கள் கோடுஇட்டு எனைக்
கூட்டி லிருத்துவதேன் - மலர்
சூட நினைத்திடச் சொல்லரும் துன்பங்கள்
சூழல் என்றானது மேன்
பாவி யுடல் கொண்டு வாழ்வு கெடுத்திடப்
பக்கமணைந்து நிற்கும் - அந்த
ஆவி உருக்கிடும் அ(எ)ன்புகொள் நோயதே
அர்த்தமென் றிங்குரைப்பேன்
நாவினில் செந்தமிழ் நானுரைப்ப தென்ன
நானே அறியமுன்னர் - அது
தாவி மனம் எண்ணா தத்தனையும்
சொல்லித் தானே கெடுக்குதடி
- கிரிகாசன்
> > > இளமை கொண்டோர் உலகிலென்றும் இன்பச் சுவைகாண...
>
> read more »
புரிய முடியவில்லை
நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தொரு
நீண்டமலை எரித்தேன்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண் முகிலைப் பிடித்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன்
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலவைஅடைந்தேன்
கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
ஆசையுட னணிந்தேன்
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
ஏற்றும் மின்ன லொளியில்
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
தொட்டு விசை குறைத்தேன்
மாலையில் வீசிடும் தென்றலில் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன்
காலையில் வெம்மைத ணியக் கதிர்மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன்
நாலை இரண் டிரண்டாகப் பிரித்திடா
நன்றாக ஒட்டிவைத்தேன்
தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
தள்ளி இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித் தெடுத்துக் குரல்
சொல்லை விழுங்கிநின்றேன்
என்னவோர் மாயம் தெரிந்தும் இவள் மனம்
ஏனோ தெரிய அல்லேன்
கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதனும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டு
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
நெஞ்சம் புரியவில்லை
(அனைத்தும் முழுக் கற்பனையே)
> On...
>
> read more »
புரிவதில்லை தெரிவதில்லை பூக்களின்வாசம் - நேரில்
விரியவில்லை அழகுமுல்லை வேறிடமாயும்
திரிவதில்லை தென்றல் விட்டு தெரிந்திட நாமும் - வாசம்
உரியமுல்லை இதுவென்றுள்ள நிலைதனைக் கூறும்
உரியதுள்ள எதுவென்றுள்ள உண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் என்று
எரியவைத்த தருணம் இன்னும் இருந்திடக் காணும்
பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் நாளும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியவல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்வண்ணம் தீட்டி வைத்த நாளதும் போகும்
சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் ஆயின்
எறிவதில்லை வரிகள் கொண்ட பொழுதினில் தானும்
கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் என்ற
வரிகள் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிறபோதும் - அதை
விரியும்கைகள் விளைவு எண்ணி விரிந்திடக்காணும்
விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல திரும்பிய நாளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம் கரும்பினில் சாறும்
பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்
உருவம்கொள்ளும் உடைகளில்லை என்கிறபோதும் - இன்றி
திரிவதில்லை வெறுமைகொள்ள ஏழைகள்தானும்
உரிவதில்லை இதுவுமில்லை என்பது நாணம் - இனி
இதுவுமில்லை என்றபோது ஏய்த்திடும்வாழ்வும்
கரியுமல்லை கனியுமில்லை காலமென்பது நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை காணும் வாழ்வது
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வில் நேர்வது பின்னர்
பெரிய உள்ளம் மறந்து போகும் வலிமை இனியது
On Dec 28, 12:55 am, Suganthi <vkn...@gmail.com> wrote:
> அழகான கற்பனை
>
> Taking Tamil to the Next Generation
>
> http//:www.tamilunltd.com
>
> Sent from my iPhone
>
> >> ஓங்கியெழும் அருவி...
>
> read more »
வாழ்வெனும் பயணத்தில்
துள்ளுங் கயல்எனத் துடித்தேநெஞ்சந் தோல்வியில் வீழ்ந்தாலும் -அதை
அள்ளி அணைத்திடக் கைகளிருந்திடின் ஆனந்த மாமன்றோ
வெள்ளி முளைத்திடும் வேளை கயிற்றொடு வாசலில்வந்தாலும் - அவன்
தள்ளி நிறுத்திடத் தர்மம் இணைந்திடில் தருமே சுகமன்றோ!
பல்லி ’இசுக்’கெனப் போகும் வழிக்கொரு பாதகஞ் சொன்னாலும் அது
இல்லையெனத் தெரு வீதிநடந்திட ஏற்றம் வருமன்றோ
சொல்லி வழித்தடை போடமனத்திடை சோர்வே எழுந்தாலும் - நீ
அல்லி குளத்திடை போலமலர்ந்திடு அதுவே வாழ்வன்றோ
சொல்லி எடுத்திடும் எண்கள் பிழைத்தொரு துன்பம் வந்தாலும் - அவன்
வல்ல எழுத்திறை வைத்தகணக்கோடு வாழ்வில் முன்னேறு
புல்லை நுனிக்கடி தின்று பசித்திடும் ஆவின் செயலன்றி - நீ
எல்லை வரை திடங் கொண்டு நடந்திடு இன்பம் உனதன்றோ
தள்ளி யிருந்தொரு ஆறு நடந்திடத் தாகம் கொண்டே நீ - அது
துள்ளி நெருங்கிடும் என்று பொறுத்திடல் இல்லா நடைபோடு
கள்ளி முளைத்திடும் காடுகடந்திடக் காலம் வந்தாலும் - வழி
முள்ளு மிதித்திடும் உறுதி எடுத்திடு மின்மினி ஒளி போதும்!
***************
> > >> பொன்முடி வேந்தன் வர அவர் புன்னகை...
>
> read more »
தமிழன்னையை வேண்டி இக் கவிதை
தமிழே தருவாயா?
தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற்பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்
சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்
குவை தங்கம்கொ டி ஆட்சி, குடிவாழும்
ஊரென்று எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்
ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்
> > > > பின்னை...
>
> read more »
தலைவியின் சோகங்கண்டு தோழி உரைத்தமை
சீரும்செறிவாய் சிந்தைகொள்
சேருமன்பு பொலிவானால்
போருமூடே உண்டாகும்
புண்ணாய் மனதும் நோவாகும்
தேரும் மனதில் நல்லன்பும்
தெளிவைத் தாரும் கணமாக
நீரும் வற்றும் விழிமீது
நெஞ்சின் கருணை ஒளிகூடும்
யாரு மற்றேன் நானென்று
யாதும் எண்ணல் வேண்டாமென்
சேரும் அன்புச் செல்வமடி
சிற்றூர்தேசத் திளவரசி
பாருன் அன்பைப் புரிவாருன்
பக்கங் காணும் துயர்தானும்
நீரும்வற்றும் வெய்யோன்முன்
நேர்நிற் கும்பனி யாய்வற்றும்
தலைவியின் ஆற்றாமை தோழியின் சொற்களால் தீரவில்லை,
தலைவன் தன்னைப்பிரிந்துவிட்டான். இனி தனைக்காண
வரமாட்டான் என்றெண்ணித் தொடர்கிறாள்
நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ
சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ
தெய்வத்தில் பட்டிடப்பூ எறிந்தால் வரம்
தெய்வஞ் சினந்து மறுப்பதுண்டோ
எய்அம்பி னோடுவில் லேந்திய வேடனும்
மெய்யன்பினால் வென்ற ஈசனல்லோ
தெய்யெனப் பாடிக் குதித்திடினு மவர்
தேருங்கலை தனும் பார்வையிலே
நெய்விட்ட தீபமென் றேஒளிர்ந்தால் அதை
நீர்விட்டு பார்ப்பது நேசமென்றோ?
அந்தவேளை தலைவன் திடீரென தோன்றுகிறான். தவிக்கும் மனதுடன்
காணப்பட்ட தலைவியின் பூமுகம் படும் வேதனையைப்புரிந்து கொண்டவனாக
கூறுகிறான்!
கண்களில்நீருடன் பொன்முகம் ஆனதென்
காண்பதென்ன மனம்வேதனையோ
வெண்பனி போய்விடும் இன்பமென்காலையில்
வந்ததுயாது இளம்புயலோ
தண்ணொளி வீசிடும்சூரியனின்கதிர்
தானும் மலர்முகம் சுட்டதுண்டோ
விண்நிறை மாயஇருள்கலைந்தால் பின்னர்
வேறெது காலை புதிதல்லவோ
சிறிதுநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டவன்
அவள்துயரம் நீங்க....
பூக்கும் மலர்களைக் காண்புது நெல்வயல்
புன்னகைக்கும் கதிர் புள்ளினம்காண்
தீக்குள் எரிந்திடும் வீறினைப்பார் எங்கள்
தேகம் படைத்தவர் கோவிலைக்காண்
மாக்கள் மனிதன்மரம் செடிகாண் இந்த
மாபெரும் மண்ணும் மதிவெயில் காண்
ஆக்கும் கடவுளின் நோக்கமும்பார் இனி
அன்புகொண்டே என்றும் வாழ்வினைக் காண்!
****************************
> > > இதுவுமில்லை...
>
> read more »
இதில் சிறுமாற்றம்
//தண்ணொளி வீசிடுங் காலையிளங் கதிர்
தானும் மலர்முகம் சுட்டதுண்டோ
விண்நிறை மாயஇருள்கலைந்தால் பின்னர்
வேறெது காலை புதிதல்லவோ//
என்று மாற்றுகிறேன்..
> > > வெள்ளி முளைத்திடும் வேளை கயிற்றொடு...
>
> read more »
வண்டிக்காரனின் பாட்டு
கேளடா தம்பிநீ கேளடா -நீயும்
கேட்டிடப் பாட்டொன்று பாடவா
ஆளடா பூமியில் வாழடா ஒரு
ஆன வழிவரு மாமோடா
************
கேளு தம்பிநீயும் கேளடா
கீழத்திசையிலே சூரியன் வந்தது
கோவில்தெருவிலே ஊர்வலம்போனது
ஆழக்கடலிடை கப்பலும்போகுது
ஆனந்தமாகவே பிற்பொழு தோடுது
கேளு தம்பிநீயும் கேளடா
வாழைமரத்திலே தேன்கனிவந்தது
வானம் பொழிந்திடப் பூமி நனைந்தது
காளை வயலினைச் சுற்றி உழுகுது
காற்றில் ஒருபட்டம் மேலே பறக்குது
கேளு தம்பிநீயும் கேளடா
ஏழை வயிற்றிலே என்றும் பசிக்குது
ஏய்ப்பவர் கூட்டமோ ஏறி மிதிக்குது
நாளை விடிந்திடும் வாழ்வெனக் கூறுது
நம்பி இருந்திடக் கண்களும் போகுது!
கேளு தம்பிநீயும் கேளடா
பாழும் பணம் ஒருபக்கமா யோடுது
பட்டினிதான்ஏழை சொத்தென ஆகுது
வாழும்விதி நல்ல உள்ளங்கள்கொல்லுது
வாட்டி வதைத்திடப் பொய்மையும் வெல்லுது
கேளு தம்பிநீயும் கேளடா
உண்மை உரைப்பவர் உள்ளே கிடக்கிறார்
ஓயாது பொய்யிட்டோர் உத்தமராகிறார்
திண்மையற்ற மனம் தேசம்நிறையுது
தேடியும் நீதியைக் காணத் தவறுது
--கேளு தம்பிநீயும் கேளடா
கள்ளர் கரங்களில் சாவிஇருக்குது
கண்ட கதவெல்லாம் அஞ்சித் திறக்குது
உள்ள நகைபணம் ஓடிமறையுது
உண்மை அறிந்தவர் ஊமையென்றாகுது
கேளு தம்பிநீயும் கேளடா
வெள்ளம் கூடவந்து வீட்டைப் பிரிக்குது
வேண்டா மென்று சொல்ல வேதனைகூடுது
பள்ளம் குழியெங்கும் சேறு நிரம்புது
பக்கம்நடந்திடப் பாடாய் விழுத்துது
கேளு தம்பிநீயும் கேளடா
மன்னரும் மக்களை மாக்கள் என்றுள்ளியோ
மாந்தர் குடியிடை வேட்டை நடத்துறார்
நன்னரும் பொற்குவை நாட்டில் எடுக்கிறார்
நாடுஅழிய நமக்கென்ன என்கிறார்
கேளு தம்பிநீயும் கேளடா
பன்னீரும் வெண்ணுடை பாலும் பழம் வெல்லப்
பாகும் கலந்திடு பஞ்சாமிர்தம்வேண்டாம்
பன்னெடு நாளென அன்னைமண் மடியில்
பாதிவிழிமூடி ஆறித்துயில்கொள்ள
ஆவிகள் போக்கிட ஆணை கொடுப்பவர்
அன்புவழி தன்னின் அர்த்தம்புரிவரோ
பாவிகள் தேவைக்கு ஆடுபலிகொள்ளும்
பாவம் நிறுத்திடப் பண்பு திரும்புமோ
கேளு தம்பிநீயும் கேளடா
கூவிஅழுதிடுங் கூக்குரல் போய்விடக்
கும்பிடும் தெய்வங்கள் கொண்ட இதயமும்
தாவிடுமந்தியை தள்ளிவெளிவிட்டு
தங்கமெனும் மனம் தாரணிகாணுமோ
நாமும் வளர்ந்திட நாடுவளர்த்திடும்
நல்லறிவு கொண்டோர் கையினில் கோல்கொடு
யாவும் தமதென எண்ணும் அரசனின்
வாளுமுறங்கட்டும் வாழ்வு பிழைக்கட்டும்
**********************
> > > வரமான...
>
> read more »
>
> read more »
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Jan 4, 9:58 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அருமை, கிரிகாசன்!
>
> 2012/1/4 kirikasan <kanara...@gmail.com>
> ...
>
> read more »
On Jan 5, 3:04 am, Ganapathy SankaraSubramanian
<ganapathysankarasubraman...@gmail.com> wrote:
> மிக அற்புதம் .மானுடவியலின் துன்பங்கள் மண்ணிலிருந்து மட்டுமே வருகிறது
> என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்டிக்காரன் பாட்டு மிகவும் நன்றாக உள்ளது.
> கோ.கணபதி
>
> >> > > > வாழ்வெட்டா தூரம்...
>
> read more »
திரையும் திரையெழு கடலும் கடலிடை
தினமும் எழுகதி ரொளியும்,
தரையும் தரைதொடு அலையும் அலைபுனல்
தரவிண் பொழிமழை முகிலும்
மிரையும் அதனுடை ஒலியும் இடியொடு
முழங்கு விரிசுழல் புயலும்
விரையும் பெருகிடப் புகும்நீர் இயற்கையின்
விளைவே எனில் உயிர்கொல்லும்
மரபும் மரபுடை மொழியும் மொழிசொலும்
மனிதர் அவருடை மனமும்
கரவும் கயமைகொள் உறவும் உயிரினைக்
கருதா இறைமைகொள் ளரசும்
பரவும் பெரிதெனும் உலகும் உலகிடை
பலதோர் குடிகளும் அவர்தம்
தரமும் தயவுடை இயல்பும் தாழ்ந்திடுந்
தருணம் வர உயிர்கொல்லும்
உதிரம் பெருகிடு நிலையும் நிலைதனை
உருவாக் கிடுமொரு சிலரும்
அதிரும் சடபட வெடியும் வெடியுற
அவலம் தொடரழு குரலும்
உதிரும் பலதர உடலும் அழிவுற
உலகம் விழிகொள்ளும் மௌனம்
எதிலும் அவர்தனி நலமும் நலம்பெற
விழையும் செயல் உயிர்கொல்லும்
மயிரும் இழந்திட உயிரும் விடுமான்
மனதை யுடைமா தமிழன்
பயிரும் பயிரிட விளையும் அதனுடை
பயனால் தனதெழில் மனையும்
உயிரும் பரிவுடை குணமும் பலமுறு
உடலு மதுகொளும் திடமும்
வயிரம் எனும்வெகு திறனும் மதியுற
வந்தே ஏதுயிர் கொல்லும்?
On Jan 5, 3:04 am, Ganapathy SankaraSubramanian
<ganapathysankarasubraman...@gmail.com> wrote:
> மிக அற்புதம் .மானுடவியலின் துன்பங்கள் மண்ணிலிருந்து மட்டுமே வருகிறது
> என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்டிக்காரன் பாட்டு மிகவும் நன்றாக உள்ளது.
> கோ.கணபதி
>
> >> > > > வாழ்வெட்டா தூரம்...
>
> read more »
//வயிரம் எனும்வெகு திறனும் மதியுற
வாழ்ந்தும் ஏதுயிர் கொல்லும்? //
அன்புடன் கிரிகாசன்
> > >> > > தானும் மலர்முகம்...
>
> read more »
கனியோடு சுவைசேர்ந்த இன்பம் - நற்
கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
படைத்தானே இறைவன் ஏனெம்மை
தனியாக மனம் ஒன்று த்தே - அதில்
தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே - இங்கு
இருள்கூட்டி அனுப்பினான் ஏது?
வரியாகப் பலகோடு வைத்து - அதில்
வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று - ஏன்
புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும் = அதில்
புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அ
பிறை சூடும் இறைதந்த சொந்தம்
மனிதா நீ ஏனிங்கு வந்தாய் - உன்
மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போனபோது - அது
தண்ணீரில் முகம்என்ற வாழ்வு
பலகோடி வருடங்கள் ஆகி - இப்
பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தானாடும் போது - எம்
தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை இப்போ ஓடு - அவன்
பறிகின்றவரை தானேவீடு!
புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
புழுவாக மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
சுகம்யாவும் வலியென்று ஆகும்
மலர்மேனி தொட்டிட்ட இன்பம் - நல்ல
மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
பனிமேடை கனல்கொண்ட தாகும்
> > > >> > On...
>
> read more »
தலைப்பு ; இன்பக் கனவுகள்
/தனியாக மனம் ஒன்று வைத்தே/
//பெரிதாக இல்லாத இன்பம் - அப்
பிறை சூடும் இறைதந்த சொந்தம்//
பிழைகளைப் பொறுத்தருள்க
-கிரிகாசன்
> > > > >> > திண்மையற்ற மனம்...
>
> read more »
காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று உரத்தொலிக்க
காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்
(அவன் பாடுவது:)
எத்தனை எத்தனை வண்ணங்கள் பூமியில்
அத்தனையும் அழகாம்
ரத்தினம் மாணிக்கம், பச்சை மரகதம்
வைத்தது போல் விதமாம்
பத்துவிரல்களும் ஒத்த உயரமா
எத்தனை மாறுதலாம்
இத்தனை வேற்றுமை கொண்டதினால்புவி
அற்புதமே அழகாம்
(-வேறு )
திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ
முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ
ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே
காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்
செந்தமிழ்ச் கல்லினில் அற்புதமண்டபம்
சிந்தையில் கட்டிவைத்தேன் அதில்
சுந்தர மென்னிழை சந்தங்கள் கொண்டெழில்
சித்திரம் கீறிவைத்தேன்
வந்திருந் தின்பமும் கொண்டிட மற்றவர்
வண்ண ஒளிகொடுத்தேன் - அதில்
சொந்தமனமெழும் கற்பனைத் தீபங்கள்
சுற்றி எரிய வைத்தேன்
நந்தவனத்திற்சு கந்தமலர் கொய்து
நற்கவிநூல் தொடுத்தேன் - நல்ல
சந்தணமும் நறும் பன்னீர் தெளித்தங்கு
சுந்தர வாசமிட்டேன்
செந்தூரவண்ணச் செறிவெடுக்க அதில்
சிந்தனை தூபமிட்டேன் - ஒரு
தந்திரமுமல்ல தங்க நிறம் தமிழ்
தந்துஅழகு செய்தேன்
மந்தமுற மனதின்பம் பெற அவர்
மன்னவன் போல்மகிழ = இல்லை
மந்திரமே எது கையொடு மோனையும்
இட்டு அழகு செய்தேன்
சொந்த எழில்வண்ணக் கந்தருவ எழில்
செந்தமிழ் மாந்தருக்கு -அவர்
வந்திடும் வேளை நீராடிக் களித்திடப்
வட்டக் குளமமைத்தேன்
இந்தஎழில் இல்லம்கொஞ்சம் இருண்டதும்
இன்னொளி போய்விடலாம் - எனப்
பந்தங்களும் ஒளி தந்திடவே எங்கும்
பற்றி எரியவிட்டேன்
அந்தியிலே குளிர்பொய்கையில் நீந்திட
ஆடைஅணிகளுடன் - அகில்
சந்தணமும் உடன் செந்தணலும் வைத்து
சற்று அமைதிகொண்டேன்
வெந்திடும்போல் பசி உண்டுஎன்றால் அவர்
வேண்டிட முன்தரவே - மரப்
பொந்தினிலே நல்ல தேனடை கொண்டதில்
தேன்வடித்தே எடுத்தேன்
பந்தியுடன் உண வுண்டு களித்திடப்
பாலொடு பண்டங்களும் இன்னும்
முந்திரியும் கூட முக்கனிகள் சேர
முன்னே எடுத்து வைத்தேன்
இத்தனையும் செய்து எத்தனை மனங்கள்
எண்ணிடக் காத்திருந்தேன் - நல்ல
புத்தம்புது மன எண்ணங்கள் கொண்டிரு
பொழுதைப் பார்த்து நின்றேன்
சத்தியமும் மன தைரியமும் கொண்டு
முற்றும் விழித்திருந்தேன் -ஆயின்
இத்தரை மீதினில் எண்ணச் சலிப்பின்றி
எப்போதும் பார்த்திருப்பேன்
செந்தமிழில் கரம் தந்து அன்புகொண்டு
சிந்தையி லொன்றுபட - நல்ல
பைந்தமிழே இனிதென்று படித்தொரு
பாமலர்ப் பூச்சொரிய
வந்தனங்கூறி வழிநடக்க வண்ணம்
வேறில்லை என்றுரைக்க என்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்
சொந்தமனமெழும் கற்பனைத் தீபங்கள்
சுற்றி எரிய வைத்தேன்
> /group/santhavasantham?hl=ta
--
அன்புடன்
கிரிகாசன்
.....
On Jan 10, 3:10 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/1/9 kirikasan <kanara...@gmail.com>
அன்புடன்
கிரிகாசன்
On Jan 10, 7:00 am, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com> wrote:
> a ttagaasamaana unarchchi mikka kavithai,
> yogiyaar
>
தமிழ்சொல்ல உளமெந்தன் மகிழ்வாகுதே!
தமிழ்காண விழியெங்கும் ஒளிகூடுதே !
தமிழ் கேட்டு மனம்நின்று கூத்தாடுதே !
தமிழுக்கு எது ஈடு இவையாகுமோ?
(வேறு)
செந்தமிழின் சுகம் தென்றலதோ சுவை
செங்கரும்பின் அடியோ?
பைந்தமிழும் பனிகொள் குளிரோ பசும்
புல் வெளியின் அழகோ?
அந்தரவான் எழும் சந்திரனோ அதன்
சுந்தரத் தேனொளியோ ?
அந்தமிலாப் பெருஅண்டமதில் தமிழ்
எந்தளவு பெரிதோ?
வெந்திடவும் அனல் தொட்டதிலே மின்னும்
பொன்னின் மிளிர்விதுவோ ?
வந்தமழை தந்த வானிடையே வில்லின்
வண்ண வடிவங்களோ?
நங்கையவள் நட மென்பதெலாம் தமிழ்
நல்கு முயிர்த்துடிப்போ?
பொங்கிடுமோ அலை போலிதுவோ தமிழ்
பேச உணர்வெழுமோ !
சங்கிதுவோ ஒலிதந்திடுமே அதன்
சாரும் வெண்மை இயல்போ?
பங்கயமோ பனி தங்கியதோ அதன்
பட்டிதழ் மென்னியல்போ?
தெங்கினிடை இளங்காய் நடுவே கொண்ட
தித்திக்கும் நீரிதுவோ?
வெங்கதிரோன் உச்சிவேளை சுட நின்ற
வேங்கை மரநிழலோ?
கங்கையவள் முடிகொண்டவனோ அன்பு
கொண்டு வளர்த்ததமிழ்
செங்கனலின் விழி கண்டும் பிழைசொன்ன
சங்கப் புலவன் தமிழ்
இங்கு மனமதில் என்று மினித்திடும்
இன்ப முடைத்த தமிழ்
மங்குவதோ? அது கொள்ளும் துயர்எனில்
எங்கள் கரம் கொடுப்போம்
எங்கு மிணை யில்லை செந்தமிழே என
சங்கே முழங்கிவிடு
பொங்கிவரும் பகைஎந்த விதமெனக்
கண்டதைக் காத்துவிடு
மங்கை குலமவர் மானமெனத் தமிழ்
கொண்ட துயர் துடைத்து
செங்குலமே இந்த தங்கத்தமிழ் தன்னை
எங்கும் வளர்த்துவிடு!
கள்ளும் உண்ணக் கண்கள் செம்மை காணும்வண்டாகி
உள்ளும் புறமும் உயிரின் பூக்கள் உதரம்தனைநோக்கி
வெள்ளம்போலே புரண்டு வீழ்ந்து விடியும் பொழுதினிலே
தெள்ளத்தெளியும் வண்டின் நிலையில் திரும்பிப் பார்க்கின்றேன்
வெள்ளைமேகம் விடியற்காலை வீசும்தென்றலிடை
தள்ளி தூரக் காணும் பொய்கை தண்ணீர் அலைமோத
அள்ளிக் கல்லைப் போட்டே அழகு ஆகா எனஉள்ளம்
துள்ளித் திரிந்த திசையின் பக்கம் திரும்பிப் பார்க்கின்றேன்
நள்ளிருட்டில் கனவுக்காட்டில் நடனமாட மனம்
தள்ளிச்சென்றே பூக்கள் என்றே தீயில் தள்ளியதோ
அள்ளிப் பருகும் மதுவும் அழகுப் பூவின்வடி வெல்லாம்
வெள்ளி பூவாய் கண்ணை மின்னும் விடியப் பொய்த்திடுமோ
அழகுப்பூக்கள் ஆடும்காற்றில் அதனை ரசிக்கின்றேன்
இதழைத்தொட்டு ம்..ம் வேண்டாம் இயல்பைக் கைவிட்டேன்
குழலில் சூடப் பூக்கள் கொய்யக் கொடுமை என்கின்றேன்
தழலில் காய்ச்சும் பாலில் தோன்றும் ஆடை ரசிக்கின்றேன்
அள்ளிப் பூசும் நெற்றிப் பட்டைஅழகாய் மேகங்கள்
புள்ளித் திலகம் போலும் காணப் புரவிக் கதிரோட்டி
வெள்ளைத் தேரில் வெய்யோன் வந்தால் விடியுமதுபோல
உள்ளத் திடையே ஒளியும் காண உதயம் வரவேண்டும்
> > > > --
வாழ்த்து
பொங்கட்டும் பொங்கல் அன்பு பொங்கிட வாழ்விலென்றும்
தங்கட்டும் இன்பம்மூடே தளைக்கட்டும் உயர்வுநாளும்
அங்கெட்டுதிசையும் தென்றல் அறம்புகழ் உமது கூற
எங்கெட்டும் வரையில் நன்மைஎடுத் தின்பம் காண வாழீர்
தையல் பொங்கினாள்:
காரிருள் போர்வை கொண்டு கட்டெழில் மேனிமூடிப்
பாரெனும் நடனநங்கை பனிவிழி தூக்கங் கொள்ள
ஊரினை விட்டுஓடி உயர்மலை ஆழியெங்கும்
தேரினை ஓட்டிவெய்யோன் திரும்பிடக் கண்டுபூமி
காரிகை கண்விழித்து கலைந்தகார் குழல் மறைத்த
பேரெழில்முகம் துலங்கப் பின்னிருள் கூந்தல் தள்ளிப்
போர்வையை நெகிழ்த்தி வானப் பிரபஞ்சம் மீதுவீழ்த்திக்
கார்முகில் திரைமறைவில் கண்மறைந் தொளிந்துகொண்டாள்
ஊடறுத் தோடும்மேகம் உயர்புகழ் மாந்தர் சீலம்
மூடர்கள் மங்கசெய்யும் முயற்சியை வெல்லல் போலும்
கூடிய முகில்களூடே கதிர்படர்ந் தொளிர்ந்துமின்ன,
தேடியே உருள் புவிக்குள் சிறிதொரு தூசு நானும்
நாட்டினில் நடப்புஎண்ணி நம் தெருவாசல்வந்தேன்
கூட்டினுள் கொஞ்சும் புறாவும் கோழியைத் துரத்தும் சேவல்
மாட்டினோர் காதில் பேசி மந்திரம் போடும்காகம்
பாட்டினில் கேட்கும் பிச்சை பக்கத்தில் கண்டுநானும்
ஆகவோர் இளமைகொஞ்சும் அமைதிகொள் காலைஎன்றே
மீதவோர் தூரம் எண்ணி மெல்லென நடந்துசெல்ல
காதொடு பேசும் பெண்டிர் கலகலத்தோடும் சிறுவர்
மாதொடு கணவன் சண்டை மரத்தடிச் சாமி கூட்டம்
ஆகிடு மிவைகள் கண்டு அகமகிழ்ந்தடி எடுத்தேன்
வேகிடும் காலைவெப்பம் வீறுடன் எழுந்த சூர்யன்
பாகெனப் பூமிகாய்ச்சப் பகலவன் கொண்ட திட்டம்
ஏகுவார் அரசகட்டில் ஏறியபின்னர் நெஞ்சம்
தீதெனமாறு முலகத் தேசங்கள் ஆள்வர் போல
மீதென உச்சிமீது மெல்லவே சுட்டுப்போக
போதிய மரங்கள் கொண்ட பசுமரச் சோலைகண்டு
ஈதென வாழவேண்டும் எத்துயர் வந்தபோதும்
சீரென உறுதிகொண்டு செறிந்தஇந் நிழலின் சோலை
தாருமவ் வின்பம் போன்று தரணியில் வாழ எண்ண
யாரென அறியேன் சட்டென் றவளெதிர் தோன்றிஎன்னை
பாரடா மனிதா ஈது பக்குவ மாமோ என்றாள்
(நாளை தொடரும்)
ஓடுங் குளிர்காற்றும் ஓங்கியநற் பெருமரமும்
ஓரத்தே நின்றசைய
கூடும் பசும்வயலை குலவிடவே தூரத்தில்
குனிந்துமே தொடுவானமும்
பாடும் குயில் பறவை பசுங்கிளிகள் பற்பலவும்
படபடத்து ஒடியலையும்
நாடும் நலம்வீடும் பேணும் உழவர்தமின்
நாணுகதிர் சேர்ந்தவயலில்
ஓடியறுத்த கதிர் ஓரம் அடுக்கிவெயில்
உடல்கருக்க வேர்வை தெளித்து
பாடிக் களித்துவரும் பலம்கொண்ட காற்றுக்குப்
பதர்நீக்கிப் பயனும்பெற்று
வாடியவர் குடிசெழிக்க வயலீந்த பெருங்கொடையால்
வாசலிலும் கோலமிட்டு
தேடியவோர் நிதிஎண்ணி தெய்வம் எனக்கதிரோன்
திசை நோக்கித் தொழுதுநிற்பர்
நாடு செழிக்கவெனில் வயல்`வரம்புயர`வென
நறுக்கான வார்த்தைகூறி
பாடும் பெரும்புலவர் பாட்டிஎம தவ்வையவள்
பதங்கூறுஞ்சொல் கேளீரேல்
தேடும் நிதியனைத்தும் தோற்றுவது கழனி,கறித்
தோட்டமெனப் பொருளேயாகும்
ஓடும் முகில் மறைந்து உள்ளமகிழ் ஆதவனே
உயிருக்கு உணவீந்ததை
தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழன்வாழ் வேற்றமுறும்
தழைத்தோங்கு மென்றேகூறி
மெய்யுரைத்த நாளெல்லாம் மேதினியில் போனதய்யா
மீளாத வெள்ளம் வந்து
செய்கழனி நெல்லழித்து சிதைத்தவரின் இல்லத்தே
சென்றங்கு இடம்பிடித்து
பெய்துமழை பெருவெள்ளம் புரண்டோடி பகைவர்கை
கூலியாய் நிற்குதப்பா
(ஒருபகுதி மட்டும் இங்கே)
மங்கை நானும் ’தை’மகளாள் மகிழ்வென்ற வாழ்வுதர
இங்குதேன் போலினிக்கும் இன்பவாழ்வு நல்க வந்தேன்
பொங்குவதோ இன்பமின்றிப் போய்விடியத் துன்பமெல்லாம்
தங்கிடவே அன்புஎனும் தாயாக வந்திருந்தேன்
பொங்குவத முதமல்ல பெரும்புயல் வெள்ளமென்றும்
பொங்குவ தினிமையல்ல போட்டிகள்பொ றாமையென்றும்
பொங்கும்அற மெங்குமில்லை பிறர்மனம் கொல்லும் நீசம்
பொங்குவ துண்மையல்ல பொய்கொடிய வார்த்தை கண்டேன்
மறம்பொங்கும் தமிழென்று மலைபோ லுரம்பொங்க
அறம்பொங்க அன்புபொங்க அயலர் நட் புறவுபொங்க
நிறம்பொங்கிப் பலவண்ண நினவுகளும் பொங்கியெழ
திறம்கொண்ட வாழ்வில்தேன் தித்திப்பாய் திளைத்திருந்தான்
வெறிபொங்க உயிர்கொல்லும் விருப்புள்ள விலங்கினத்து
குறிபொங்கிக் குடிகெடுக்கும் குணமதுவோ அத்தனையும்
தறிகெட்ட மனதினிலே தாழ்வெண்ணம் பொங்கிவர
நெறிகெட்டு வாழ்வின்று நிலைத்தநிலை தொலையாதோ
ஏழை முதுகுவளைந் திளைத்து வியர்வைகொட்டி
வாழை வளர்த்துக் கனி வந்திடுநாள் பார்த்திருக்க
வேளைதனில் வேறெவரோ வெட்டிக்குலை கொள்ளுமிந்த
வாழுமுறை மாறாதோ வந்துநன்மை கூடாதோ
கண் பார்க்கும் மூலையெங்கும் காயங்கொலை, கேடுஎன
மண்வார்த்த பொற்சிலையாம் மனிதர் மனம் மகிழ்ந்தே
பண்ணிசைக்கப் பாவமிட்டு பார்த்து நடமாடுகிறார்
விண்ணதிர வந்து வெறி வார்த்தைகள் முழங்குவதேன்
மந்திரமோ வார்த்தைசில மனதை மயக்குவதேன்
சந்தியிலே பாம்பாட்டி தலையாட்டும் நாகமென
எந்த இன வேறுமின்றி எல்லோரும் ஆடுவதேன்?
விந்தையொரு நூல்படித்தேன் வானுறையும் தேவர்களும்
ஆகாய வீதியிலே அங்கு மிங்கும் போய்வருவர்
பூகோளம் மீதிருந்து போகும்சில வேண்டுதல்கள்
ஆகட்டுமென்று சொல்லி அருள்கூர வாக்களிப்பர்
தீகொட்டும்வார்த்தைகளோ தேன்சொட்டும் வார்த்தைகளோ
தொல்லுலக வார்த்தைகளைத் தேவை என்று தந்திடுவர்
கொல்லு கொல்லு என்றுகத்தி கூடிவரச் செய்யாது
நல்லுலகு வாழ்வுபெற நல்லதையே சொல்லிடுவீர்
அல்லதினி இல்லையென்று ஆகுவன பேசிடுவீர்
இன்பமெங்கும்`பொங்கிவரும் எழிலான வாழ்வுவரும்
அன்புமனம் ஒங்கிடவும் அல்லலின்றி வாழ்ந்திடவும்
துன்பம் குறைந் தோடிடவும் துணிவு பிறந்திடவும்
இன்னலது இல்லையென்ற இன்பவாழ்வு பொங்கிடட்டும்
On Jan 15, 12:07 am, kirikasan <kanara...@gmail.com> wrote:
இன்று எதிரி! நாளை அடிமை !
மானென் றிடவேழம் மதமெடு
மாலைவெயில் மஞ்சள் அழகொடு
நானும் உயிர்தானும் துடிபட
நாளும் நடை தேரென் றுலவிட
வானும் மழை காணும் சிறுமயில்
வண்ணம் நெளிந் தாடுமியல்புற
தானும் கனவாகும் நினைவினைக்
காணும் மனம்தானும் மகிழ்வெழ
பாலும் பழநீரும் பொழி மழை
போலும் மதிதாரு மொளிகொள
நூலும் எனக் காணு மிடையொடு
நூறும் எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மின்னல்மழை கொண்டோர் நிலமென
ஆலும் அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்பெற
சேனைபடை கொள்ளும் அரசெனச்
சீறும் பெருவேங்கைத் திமிரென
தான்ஐம் பொறியாவும் ஒருமிய
தாரும் பெரிதாகும் சுவையெனப்
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில்
தானும் எமனாகி உயிர்கொளத்
தாவும் எருதேறும் செயலென
ஊனும் உருயாவும் உருகிட
உள்ளம் மெழுகென்றே இளகிடக்
கோனும் அவன் கொடிதோர் வாளினைக்
கொண்டே இருகண்கள் வீச்சிட
நானும் அழிவேனோ இவளுடை
நாளும் உயிர் கொல்லும் செயலெழ !
நாளும் வரும் நாளை துணையென
நாணமுற நல்லோர் பொழுதிடை
தோளும் வலி கொள்வோ னிவனிடம்
துள்ளும் இவள் துறவிப் தனமொடு
நாலும் அதில் நாணம் இவைதனும்
நாளிற் பகை கொண்டேவிலகிட
நூலும் மலர் மாலை தோள்பெற
நெஞ்சம் கனிந் தென்னைக் கெஞ்சுவள்
****
ஆழக் கடலலைகள் ஆவென்று துள்ளியெழுந்
தார்ப்பரித் தோலமிட
நீளக் கருவானில் நீந்துமதி முன்னோடி
நிழல்மேகம் கருமைகூட்ட
வேழ பிளிறலெழ விண்ணூதிச் சுழல்காற்று
வேகமிட அவள்நடந்து
வாழவென ஆசையுடன் வழிதேடி யலைகிறாள்
வாழ்க்கையத னோரம்நின்று
காளைதனை வலிந்திழுத்து கடும் சமரில் விதிகொண்டு
காணவிலை என்றாகிட
வேளை முடிந்ததென் றெவர்கூறி அழுதுமனம்
வெம்பி உடல் பதைபதைத்தும்
நாளை வருவனென நாள்பார்த்து நலிந்தவள்
நம்பியொரு வாழ்வுகாத்து
வாழையடிவாழையாய் வம்சம் பெருகுமென
வாழ்வெண்ணிட் தேடுகின்றாள்
வீழப் பெருகுமழை வீறுகொண் டிறைத்திட்ட
வெள்ளமோ எழுந்து ஓடி
ஆழநீர் நிலைநோக்கி அதுசெல்லும் பாதையில்
அடங்காது திக்குமாறி
வாழக்கிடைத்த மனை வாரியிழுத் ததுஉடைத்து
வயல்மேடு காணிதோட்டம்
பாழாய் சிதைத்துவிடப் பாவிமகள் தேடுகிறாள்
பசுஞ் சோலைக்கனவு கொண்டு
மேலை விரிவானம் சிவந்து சினந்துநிலை
மேவுகதிர் மறைந்துபோக
சோலை மரமுலுக்கிச் சுற்றுமொரு சூறைக்கு
சிதைந்துகிளை ஒடிந்துவீழ
பாலை மணல்காற்றாய் பலங்கொண்டு வீசுபுயல்
பற்றிமண் முகத்தில் வீச
காலை யிழுததுநிலை கவிழ்த்துவிட எழுந்துமே
கனவுகளைத் தேடிநின்றாள்
மூளப் பெருவலியும் முன்மூச்சு வாங்கயிவள்
முகத்தி னடையாளமின்றி
நாளம் பெருநாடி நடுங்கிப் பதைபதைக்க
நஞ்சுண்ட கன்றுபோலே
கூழை எனக்குறுகி குனிந்துநிலம் கண்டவளும்
குழந்தைபோல் நடைநடந்து
ஏழை மகளின்னும் இருக்கு மெதிர்கால்மென
ஏங்குகிறாள்இன்னும் தேடி
நாதம் ஒலிக்காதோ நல்லுலகில் இவளுமொரு
நடமாடும் மனிதம் என்று
வாதம் பிறக்காதோ வாழயிவட்கோர் உரிமை
வையத்தி லின்னுமுண்டு
பேத உணர்வின்றி பாதைபிறக்காதோ
பிறந்தவள் உயிரும்கொண்டு
மீதம் தனித்தஇவள் மெய்யுலகில் கொள்ளாளோ
மீண்டுமோர் வாழ்வுஎன்று
]
பாலை மணல்காற்றாய் பலங்கொண்டு - பாலை மணல்காற்றுப் பலங்கொண்டு
-கிரிகாசன்
நீல விழிகளும் நீர்விழி யாகிட
நேர்ந்தது ஏதடியோ - சிறு
கோல முகமின்று கொள்ளுஞ் சிரிப்பினைக்
கொள்ளை கொண்டாரெவரோ
மேலை வானவெளி மேகம் வந்தேயுனை
மெல்ல மறைத்ததுவோ - இது
கால மென்ன உந்தன் கண்கள் பொழிந்திடக்
கார்த்திகை மார்கழியோ
தாளமிடு முந்தன் தாமரைப் பாதங்கள்
தாமத மாவதென்ன - ஒளி
சூழமலர்விழி சொட்டும் மகிழ்வெனும
சோதிகுறைந் ததென்ன
நாளும் பொழுதுமுன் நாவில்நடமிடும்
நல்லமுத மழலை - இன்று
பேழையில் மூடிய பொன்னகைபோல் எழில்
பொத்திக் கிடப்பதென்ன
பூமரக் கூடலில் போகு முணர்வினில்
புன்னகைக்கும் இனிமை - எழிற்
தாமரைப் பூவிரி தண்ணலை நீரிடை
துள்ளும்கயற் செழுமை
மாமரச் சோலையில் தூங்குங் கனியுண்ணும்
மாங்கிளி பேச்சினிமை இவை
நீமறந் தேநெளிந் தாடுமுட லின்று
நிற்பது வும்புதுமை!
கூவுங் குயிலதும் கொத்துங் கிளியதும்
கோபுரபோ லெழிலும் - துள்ளித்
தாவும் புள்ளிமானுந் தண்மைதருஞ் சுனை
தங்கமென ஒளிர்வும்
ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்
டாக்கிய தேனொளியே - மரம்
தூவும்மலர்களைத் தென்றல் கரம்கொண்டு
துள்ளிநீ ஓடிடவே
தேடி உலகினிற் தீமை களைக்கண்டு
தேர்ந்திடு நல்லறிவு - அங்கு
ஓடி வருந்தென்றல் உன்னரு கிற்புய
லாகும் நிமிர்ந்து நில்லு
கூடிவ ரும்பல கூட்டமுட னன்பு
கொண்டிடு சேர்ந்து செல்லு - அதில்
மூடி மறைந்தொரு மூடன் தீமைசெய
முன்வரக் கூடுமெண்ணு
நூறு மலர்களில் யாவுமொரு வண்ணம்
நேர்ந்த தில்லை மனதில் - துயர்
ஆறு, உலகையுன் அன்புமொழி கொண்டு
ஆளமுடியும் நில்லு
தேறு எதுவுன்னை வாட்டுது எண்ணங்கள்
தேனெனமாற்றிவிடு - மணம்
நாறும் மலர்தொட்டு நாளும்வீசு தென்றல்
நானெனத் துள்ளிஎழு
பேறு யிதுபெரி தானது பூமியில்
பெண்ணென நீபிறந்து - பல
மாறுதல் செய்திடும் மாபெரும் சக்தியின்
மற்றொரு தோற்றமிது
வேறு திசைகளில் ஓடும் மனங்களில்
வேற்றுமை பண்புணர்ந்து - புத்தி
கூறு நல்லோர் உணர் வோடுவாழ்வி
லின்பம் தேடு உலகைவெல்லு!
***********
//கூவுங் குயிலதும் கொத்துங் கிளியதும்
கோபுரபோ லெழிலும் - துள்ளித்
தாவும் புள்ளிமானுந் தண்மைதருஞ் சுனை
தங்கமென ஒளிர்வும்
ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்
டாக்கிய தேனொளியே - மரம்
தூவும்மலர்களைத் தென்றல் கரம்கொண்டு
துள்ளிநீ ஓடிடவே //
திருத்தியது
//கூவுங் குயிலதும் கொத்துங் கிளியதும்
கோபுரத்தின் அழகும் - துள்ளித்
தாவும் புள்ளிமானுந் தண்மைதருஞ் சுனை
தங்கும் குளிர்மைதனும்
ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்
டாக்கிய தேனொளியே - மரம்
தூவும்மலர்களைத் தென்றல் கரம்கொண்டு
துள்ளிநீ ஓடிடவே//
-கிரிகாசன்
வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சுவைக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டு மலர்கண்டு சிலிர்க்கும
போனவனை காட்டினிலே போட்டுசிதை எரித்தவனோ
போதையிலே வாழ்ந்திருக்கப் பூமிசிரிக்கும்
தானேடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடுபுவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுதினம்
வீதியிலே வாழுபவன் வீழ்ந்துசிரிப்பான்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணியாள் எதைநினைந்தோ தன்னுள் நகைப்பாள்
தனை யுணர்ந்த ஞானியும்வாழ் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தேவி சிரிப்பாள்.
நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்
நித்திய சூரியனே - நினைப்
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்
பாரிலிருக் கையிலே
கால விதியிதோ மலைமதி கெட்டு
காணும்பிறை யொளியாய்-பலர்
கோலமழிந்துயிர் கொள்ளும்துயருடன்
கூடியிருப்பதென்ன?
மாலை மலர்ந்திடும் பூக்களு முண்டதை
மேவி இருள் பரவும் - அதி
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்
காணும் இரண்டுவிதம்
சாலையோரம் மரம்கீழும் வாழ்ந்துவரும்
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்
மேலுயரும் மாடி மெல்லிய பஞ்சணை
மீது துயில் சிலர்க்கும்
கானமிடும் நல்ல வானில் குருவிகள்
ஊர்வலம் செய்யழகும் அங்கு
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென
கோலமிடும் எழிலும்
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்
தீபங்கள் வைத்தவளோ - மன
மானது ரம்மிய மாகக் களித்திட
மஞ்சள் நிலவு வைத்தாள்
ஆனதிவைசெய்த தேவியும் ஏனங்கு
அத்தனை கோபங்கொண்டு - பல
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட
மின்னலை கொண்டுவைத்தாள்
வானம் அழுவது போல மழையுடன்
வாரிப் புயலடித்து - பெரி
தான முரண்படும் பேய்மழை ஊதலும்
ஏனோ நிகழவிட்டாள்
பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்
பூவுலகே யறியும் - அலை
மேவுகடல் மீது மீனழுதால் அலை
யோடு கலந்துவிடும்
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்
தாலும் துயர் இருக்கும்
பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து
பற்றிடத் தேவையில்லை - மலர்க்
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட
வீழும் விதிமுடியும்
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்
நெஞ்சில் குடியிருக்கும் -இதை
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்
உண்மை நிலைதிகழும்
சிரிப்பொலி
வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டு மலர்கண்டு சிலிர்க்கும
போனவனை காட்டினிலே போட்டெரித்து மீண்டவனும்
போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்
நீரோடும் நதி குதித்து நெளிந்து மெலச் சிரிசிரித்து
நளினமிடக் கரைஅலைகள் நர்த்தனமாடும்
பேரோடு பூமியிலே பேரரிய வீரமிட்டோன்
பெண்சுகத்தில் ஈனமிட பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே ஒருவன் மட்டும் தனித்திருக்க
உண்மைவழி நின்றிடினும் சிரித்திடும்காலம்
யாரோடிச் சென்றிடினும் வாழ்வோடி முந்த அதைப்
போரட எண்ண விதி சிரித்திடும் நாளும்
தானோடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடும்புவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுநலம்
வாழென்று கூறிப் பேய்கள் போடும் எக்காளம்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணிப்பெண் இருவர்கூடின் சிரித்திடக் கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவாழ்வின் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்
நிறுத்திடு கால்கள், நீயும் நெருஞ்சிமுள் நிறைந்தபாதை
நேரிலேஉள்ளதாயின்
உறுத்திடும் இன்னல் யாவும் உனக்கல்ல கொள்வதெல்லாம்
உயிருக்கே ஆகுமென்ப
கறுத்திடும் பாதையென்றால்; கண்களின் தவறுமல்ல
காரிருள் தந்தவர்யார்
பொறுத்திடு நெஞ்சே நீயும் புவியினை வகுத்ததேவி
புரிவதே குற்றமாகும்
சரித்திரம் என்ன சொல்லும் சாட்சியம் என்னசொல்லும்
சபலமேஎதுவுமின்றி
கருத்திலே சிந்தைகொண்டு கால்களே மெல்லப் பாதை
கருதி நீநடந்து செல்லு
உருத்தெரி யாதஉள்ளம் ஒருதரம் இங்குகாட்டும்
மறுகணம் அங்குஎன்னும்
வருத்திடும் பாதைகண்டு வழிநட இருளென்றாயின்
விழிகளே உதவிசெய்வாய்
கருத்தரி காலம் தொட்டு கால்களும் நெஞ்சும் கண்ணும்
காதலர் ஆயின்பேதம்
இருப்பது உண்மையன்றோ இகமதில் இதுவும் வாழ்வின்
இடைஞ்சலென் றாகுமிங்கே
தெருத்தெரு வீதியெங்கும் திகழ்ந்திடும் குழிகளெல்லாம்
தெரிவதும் இல்லைநீயும்
இருஒளி தீபம்கீழை ஏறிடும் வான்கறுப்பும்
ஏகிடப் பாதைதோன்றும்
கண்களே பொறுமின் காலம் கனிந்திடும் கதிரின்உதயம்
கடுதியில் நேர்வதல்ல
விண்களை கூடும்வேளை வீரிடும் புள்ளினங்கள்
வியனுறும் வண்ணம் வானில்
தண்ணொளி தோன்றப்பூக்கும் தாமரை தலைவன்காணத்
தலையணி கசந்து மாந்தர்
மண்ணிலே காலை ஊன்ற மளமள என்றுஓசை
மானிட வாழ்வுஓங்க
மென்னொலி கீதமூடே மலர்களும் பாதைவீழ
மன்னவன் போலநீயும்
மின்னலை ஒத்தவாறு மிளிர்வுடன் வேகமிட்டு
மேதினி எங்கும் செல்வாய்
தன்னிலை கொண்டுநீயும் தவித்திடல் நிறுத்துவாயித்
தளர்வது வேண்டேலிந்த
பொன்மொழி கேளாயென்றால் பேதையாய், நெஞ்சின்மாயை
புன்மொழி கேண்மின் ஏனோ?
> > > > ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்...
>
> read more »
அன்புடன்
கிரிகாசன்
> > > பூவுலகே யறியும் -...
>
> read more »
தண்ணொளி தோன்றப் - பூக்கும்தாமரை தலைவன்காணத்-
தலையணை கசந்து மாந்தர் மண்ணிலே காலை ஊன்ற //
என்பதே
விரியாத வானம் விசையற்ற பூமி விருப்போடு வாழ்பவன் யான்
எரியாத வெய்யோன் இறங்காத மேகம் இதனூடே வாழ்பவன் யான்
பெரிதான ஞானம் பிறக்காத பக்தி பெருமோட்சம் பெறஆசை காண்
கரியாகும் மேனி காத்திடத் தீயில் கடுந்தவம் செய்பவன் யான்
சிரிக்காத கண்கள் சினந்தோடும் சொற்கள் சிலைபோலும் இதயமும்தான்
சரிந்தோடும் நதியாய் வழிமாறியோடி விதியெண்ணி அழுபவன் நான்
விரிந்தோடும் பாம்பை வளர்த்திடஎண்ணி விளைபுற்றில் கரம்வைப்பேன்காண்
பிரிந்தோடும் பாதை இரண்டாகப் போனல் பிழைவழி தேர்பவன் நான்
முறிகின்ற முருங்கை மரம்மீது ஊஞ்சல் மகிழ்வோடு கட்டுவேன் காண்’
அரிகின்றபோது நுனிக்கிளை நின்று அடிக்கிளை வெட்டுவேன் காண்
தெரிகின்ற தென்றல் புயலாகும்போது தெருவிலே நடப்பவன் நான்
புரிகின்றதெல்லாம் பிழைஎன்கிறார்கள், பெரும்பிழை இவர்கூற்றுத்தான்
(வேடிக்கையாக எழுதீயது. யாவும்கற்பனை)
நான் என்னும் ஒருவன்
புரியாத பாடம் தெளியாதகுருவும்
தினம்தினம் படிப்பவன் நான்
தெரியாத திசையில் தேரினைஒட்டும்
திக்கற்ற பாகனும் யான்
கரியான இரவில் காகத்தை தேடி
கண்மூடிச்செல்பவன் நான்
பரிமீது ஏறி பரலோகம் தேடும்
பாவங்கள் புரிந்தவன் யான்
விரியாத வானம் விசையற்ற பூமி
விருப்போடு வாழ்பவன் யான்
எரியாத வெய்யோன் இறங்காதமேகம்
சிரித்திரு மகளே!
நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ
வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ
பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ
கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து - எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ
வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ
அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே
தீ அணைந்த பாதை
ஒளியிருந்த திசையை நோக்கி ஓடினேன்
உள்ள இருள் விடியும் நம்பித் தேடினேன்
பழியிருக்கும் போலப் பாதை தோன்றுதே
பகலினொளி பார்த்து மனம் ஏங்குதே
வழியிருக்கும் என்று எண்ணிஓடினேன்
வாசமிடும் மலர்களெ ன்று தேடினேன்
குழிருக்கும் போலப் பாதை தோன்றுதே
குடியிருக்க வீடு எங்குமில்லையே!
தளை யெடுக்க வென்று பயிர் நாட்டினேன்
தண்மை நீருமூற்றி மனம் தேறினேன்
விளையும் போலத் தோற்றம் காணவில்லையே
வினைகள் ஏது வெளிச்சம் காணவில்லையே
மழைவிடத்தூ வானம் மாறாக் காண்பதேன்?
மஞ்சள் சிவப் பென்று மாறுங் கோலமேன்?
தலையிற் பட்ட அம்பி னாலே மானது
தரைவிழுந்த துள்ள லுள்ளம் காணுதே!
துளையெடுக்கும் வேதனையும் ஏதையா?
துன்பமென்று எண்ணும் நிலை ஏனையா?
மலையடுக்கில் மண்குவியல் தேறுமா?
மாற்றம் கண்டு மயங்குவது மேனையா?
தலையெடுக்கும் வேளையினித் தகமையைத்
தனியேமனம் கொண்டு நலம் காணுவோம்
விலை கொடுத்து வாங்கத் துயர் மலிவெனில்
வீணிலதை விட்டு பாதை ஏகலாம்
மறதியென்று ஒன்றை யீந்த ஆண்டவன்
மனதில் வைத்த கோலமேது மாற்றுவோம்
பிறவி என்று பூமிவந்த பிழையய்யா
பிறந்த பின்னே பாசம் அனபு தவறய்யா
கறந்த பாலைக் குடிக்கப்பசி காணலாம்
காண்பவரில் நன்மை கறந் தேற்பதோ
இறந்து போகும்வரையுந் துன்பம் இயல்புதான்
எதுவென் றாலும் தூக்கி எறிந்தேகுவோம் !!
அதிஷ்டமில்லாதவன்
நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேரில்(லா) செடியை வெட்டி விதைநிலத்தில் ஊன்றிவைத்து
விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்
நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?
தேரில் தெய்வவலம் தெருவெங்கும் போன தெந்தன்
திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று உள்ளதெனும் ஐயமதில்
ஏதுமனம் என்னை எதிர்த் தேகலேன்?
சீறும்அலைகடலில் சிறு படகில்செல்ல மழை
சிந்த ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென மாறத்திசை
அறிதலின்றி நேர்படகு விட்டவன்.
போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி அலர்
பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
ஏக்கமுடன் நெற்கதிர்க்காய் காத்தவன்
வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்,
வாலறுந்த பட்ட மென்றுஆனவன்
கூரில் லாக்கத்தி யெனக் கூர்மையில்லாப் புத்தியதும்
கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்
பேரில்லாப் பிள்ளையெனப், பெண்ணறியாக் காதல்மனம்,
பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரிலுள்ள வாழ்வு நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
பார்வைவிழி மூடியிருள் செல்பவன்.
************
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Feb 8, 1:51 pm, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> An excellent flow and diction.
>
> Ramasami
>
> 2012/2/3 kirikasan <kanara...@gmail.com>
காதல் தேசம்
வானிற் குழைத்தநற் சந்தணத்தில் - இட்ட
வட்டவடிவிலோர் குங்குமமாய்
வேனில் இளவெயில் சுட்டெரித்த - பின்னர்
வீழ்ந்து சிவக்கின்ற மாலையிலே
தேனி லிழைந்தநற் பூதழுவி - வந்த
தென்றலே தேசம் நீ காணுவையோ?
ஆ..நில் அளவற்ற காதல்கொண்டேன் - அந்த
ஆசைஅதனிடம் கூறிவிடு
மேனி கறுத்து மயங்குகிறேன் - எந்தன்
மெய்யும் துடித்திடக் காணுகிறேன்
ஏனிந்தக் கோல மெடுத்துவிட்டே - னிந்த
ஏழை மனம்வாழ ஏது செய்வேன்
சா..நீயெனச் சொல்லிச் சற்றுமெண்ணா - தெந்தன்
தாயென் மொழிதனைக் சீரழித்தார்!
ஆ.இனி என்னதான் காதலென்று - என
தன்புடைத் தம்பியர் கேலிசெய்தார்
பூநெய்யின் மேலுற்ற வண்டெனவே - காதல்
பொங்கி மிகுந்தொரு போதையுற்றேன்
வானிற் பறந்திடும் பட்சியென - எமை
வந்து தழுவிடும் தென்றலைப்போல்
தேன்நில வோடும் மகிழ்வுதனை - எங்கள்
தெள்ளு தமிழினம் காணவெனப்
போயின்னல் தீரப் புது வழமை - கொளப்
பூமியின் மேலொரு காதலுற்றேன்
மானின் விடுதலை மக்கள் பெற - மயி
லாடும் களிப்பினை நித்தங் கொள
தேனிலினி சுவைத் தீந்தமிழே - உனைத்
தாயென கண்டுளம் கெஞ்சுகிறேன்
கூனிக் குறுகி மண்மீதிருந்து - துயர்
கொண்டு நடந்திடும் மானிடனை
ஏனின்னும் நீயும் வெறுப்ப துண்டோ - இவர்
இம்சை காணேனென் றொறுப்பதுவோ?
பூமலர்ந்து முடன் வாடிவிழும் - எழும்
புத்தொளி வானிடை பொய்த்துவிடும்
தீயெரிவில் சுட்டுத் தேகங் கொள்ள - அந்தத்
தென்றல் வந்து தீயைத் தூண்டிவிடும்
தேய்பிறையாய் உயிர் வாழ்வழிய -அவர்
தேகம் இழிவுற வாடுகிறார்
காய்மறைவா யிலை மூடிநிற்க - அதைக்
காணவில்லை யெனிற் போய்விடுமோ?
வாயடைத்து விழி மூடிமண்ணி - லிருள்
வந்து மறைத்தது என்பதுவோ?
தீயதனைச் சுடும் என்றுமனம் - அஞ்சித்
தேவையற் றதெனத் தள்ளுவதோ?
நாயென வாழ்வு நலிந்தடிமைப் - பட்டு
நம்மவர் வாழ்ந்திட ஏன்தமிழே
சேயென எம்மைச் சிறந்தவொரு - பஞ்சு
செய்யணை மீதுயில் கொள்ளவிட்டாய்?
-கிரிகாசன்
நானிருக்கும் மட்டுந்தானே ஆட்டம் - நானொதுங்க
நாணமின்றிப் பேயணைக்கும் தேகம்
ஊனுயிர்த்த நாள்வரைக்கும் ஒட்டம் - ஊன்படுக்க
ஓடிவந்து நாயிழுத்துப் போகும்
பேனிருக்கும் சூடுதேகம் காணும் - மட்டும்!இன்றிப்
போய்க் குளிர்ந்தாக விட்டுஓடும்
ஏனிருக்கும் போது உள்ளநாட்டம் - இன்னல்செய்ய
இன்னொருத்தர் மேனிதன்னைத் தேடும்
சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்
உள்ள மெண்ணும் மட்டும்தானே இன்பம் - உள்ளதின்றி
ஒட்டித் தேகம்வீழ எங்கும்சூன்யம்
அள்ளும் இன்பரேகை கொண்டதாகம் - அந்தமாகி
அத்தனைக்கும் சூழ்இருட்டென் றாகும்
வெள்ளிக்காசும் அள்ளிக்கொண்டு போகும் - தன்மையேது
வீணலைந்து வாழ்வழிந்த நாளும்
கொள்ளி கொண்டு ஊர் எரித்துப் போடும் - கண்டதென்ன
கோடிகொண்டும் இல்லையென்றுஆகும்
செய்யஏது மில்லை வந்துநாளும் வன்மைதானும்
சீரழிக்க ஏழைமீது பாயும்
பொய் யெழுந்தஆசை உள்ளம் கொள்ளும் - பேய்களாகிப்
பிய்த்தெறிந்து சாந்தியென்று தூங்கும்
கையெழுந்து காக்க வென்று முந்தும் - மெய்விழுந்து
கட்டைமீது நாம்படுக்கத் தீயும்
பையெழுந்து பற்றியுண்டு தீய்க்கும் - பாசம்கொள்ளப்
பக்கம் யாருமின்றி, வெந்துபோகும்
வல்லதேசம் செய்வதெல்லாம் நீதி - ஆகுமன்றி
வாழ்த்தும் பொய்க்குப் பொன்முடிச்சுப் பாதி
மெல்ல யாரும் பேசினாலும் போகும்- மேடையேற்றி
மென்கழுத்தைச் சுற்றிக் கோடுபோடும்
அல்லதல்ல ஆளும்போது யாரும் - அன்புகொண்டு
ஆனதோ ரினித்தவாழ்வும் சாகும்
வெல்லவென்று என்னசெய்த போதும் -சொல்!விதிக்கு
விட்டுஓடித் தப்பலாமோ கேட்கும்
சில்லுடைந்த தேரென்றாகித் தேகம் - பாதைவிட்டுச்
சீரழிந்து போக ஊரும் கூடும்
நல்லதெண்ணி நாலுவார்த்தை கூறும் -அல்லதென்னில்
நாஒறுத்து வாயுமிழ்ந்து ஏசும்
எல்லையின்றி வான்விரிந்த அண்டம் - எண்ணமான
தெட்டும் தூரம் விட்டழிந்து போகும்
வல்லஎண்ணம் கொண்டுவாளை வீசும் _ வாழ்வுதானும்
வானம் காணு மட்டும் தானே நீசம்!
இதழ்பூத்து மதுஊற்றித் திகழ்கின்றது- அது
எதையூற்றி இதயத்தைப் பிழிகின்றது
மகிழ்வேற்றி மனதோடு இழைகின்றது - அது
மலர்வாகி இசைராகம் பொழிகின்றது
அகிலேற்றிக் கரம்தீப ஒளிகூட்டுது - அந்த
அனலேற்று மொளிபொன்னில் எழில்காட்டுது
நுதலோடு விரிவானக் குழலென்பது - அதில்
நிதம் மாறும் நிலவொன்று ஒளிர்கின்றது
அலைகண்டு நடைதந்து வளமாக்குது - அதில்
அலைகின்ற நினைவெங்கோ தொலைகின்றது
மலையோடு மழைகூடி நதியாகுது - அது
மடிகொண்ட பிரவாகம் மனங் காணுது
தலைமேவி நீரோடில் பெருவெள்ளமே - இத்
தவிப்போடு நிதம்காணும் இளநெஞ்சமே
கலையின்ப இசையார்க்கும் எழில்வீணையோ - அதை
காணதவிழி கூறும் அதுதான் இதோ!
கனிதூங்கு மதைக் காத்துக் கிளிஏங்குமோ - அது
கதைபேசும் வகைபோலும் குரல்நாதமோ
பனிதூங்கும் புல்போர்த்த பசும் மேடையோ - அதில்
பகல் காணும் ஒளிக்கீற்றின் பிரகாசமோ
தனியாக எவர்கொண்டு உருவாக்கினார் அதைத்
தரநூறு வகை வண்ண மெருகேற்றினார்
இனிதேவர் உலகத்தில் இடம்மிஞ்சுமாம் - ஏன்
இவள்வீட்டின் முன்னாலிந் திரலோகமாம்
****
தென்றலே நில்லடி தேடிய லைந்தனை
தோல்வி கண்டுதுவ ளாதே
சென்றவர் வந்திடத் தெய்வந் துணையுண்டு
தேம்பி அழுவது வீணே
முன்றலில் மல்லிகை முல்லையும் தொட்டுநீ
மெல்ல ஓடித்திரிந் தாயே
துன்பமே எம்முடை சொந்தமென் றானதோ
தோழி யெனைப்பிரி யாதே
கண்களும் நீரிடக் கன்னங்கள் ஊறிடக்
காணு கின்றோ மெதனாலே
பெண்களும் கல்லென எண்ணியும்பேசிடப்
பூவெனப் பொய்யுரைப் பாரே
வெண்ணிலா காணவள் வெட்கம்விட்டேதினம்
விண்ணில் தேடித் திரிந்தாளே
கண்ணிலே வானொளி காணும்வரை சுற்றிக்
கட்டுடலும் மெலிந்தாளே
அந்தர வானிடை யெங்குமலைந்திடும்
ஆசைநிறை தென்றலாளே
சுந்தர மாவுல கெங்கணும் என்னவர்
சுற்றிவரு மிடை காணின்
இந்தவோர் செய்தியை எப்படியும் தோழி
இட்டுவி டென்னவர் காதில்
எந்தளவு துயர் கொண்டனள் என்றென
தின்னல்சொல் தொட்டுணராதே
சந்தண மேனியும் சஞ்சல மாகிடும்
சிந்தனை செய்மதி ரண்டும்
எந்தவிதி முரண் கொண்டு பகைத்தன
என்னைப் பிரிந்திடக் கூடும்
இந்த நிலைவரின் செய்வதென்ன பிழை
என்ன தல்லஅவ ராகும்
நிந்தைசெய் தெங்குநீர் வாழினும் தூற்றிடும்
நிச்சயம் ஊர்வரும் நாளும்
முந்தியுடல் வலிகொண்டு பகைத்திட
முன்னெழுந் தென்னுயிர் ஓடும்
எந்தனின் சந்தண மேனிவிதி யென
இச்சையுடன் தீயை நாடும்
சுந்தரியோ என்ன மந்திரமோ உமைச்
சுற்றிய மாயங்கள் தீரும்
வந்து பிணக்கினைத் தீர்த்துவிடு மன்றேல்
வாசலில் சங்கொலி கேட்கும்
வாழ்வும் துயரும்
இன்ன லினித்திடவேண்டு மெம்வாழ்வினில்
ஏற்ற மெடுத்திட நாளும்
மென்னுள்ள மீதினில் தோன்றும் வலிகளை
மெல்ல மறந்திட வேண்டும்
தன்மை திடம் நெஞ்சில் வேண்டும் துயர்களைத்
தாங்கும் உரம்கொள்ள வேண்டும்
புன்னகை கொண்டிடவேண்டும் புயல்தனும்
போகும்வழி நிறைந்தாலும்
செந்நெல் வயலிடை ஊற்றும் மழைவெள்ளம்
சுற்றி வரம்பினுள் நிற்கும்
அந்நிலை விட்டுயர் வாகில் ஆடுங்கதிர்
அத்தனையும் கெட்டுப்போகும்
தன்னள வைமீறித் தோன்றும் துயரினில்
தாங்கிடா துள்ளமும் சோரும்
பொன்னென் மனதுபுண் ணாகும் துன்பமது
போகும்வரை மௌனமாகும்
துன்ப நிலைதனை மாற்றும் வழி கண்டு
தொட்டதெல்லாம் நலமாக
புன்மைகள் மேல்விழப் பூவாய் எண்ணிமனம்
பொல்லாப்பு நீக்கிடவேணும்
நன்னறிவோ டுயர் மாற்றம் பெறும்வழி
நாடியடைந்திட வேண்டும்
இன்னலும் இன்பமும் வாழ்வில் நிதம்நிதம்
எத்தனை மாறுதல்கொள்ளும்
விண்ணில் கதிர்வர வைத்த விதியினை
விட்டு விலகுவதில்லை
தண்ணிலவோ தடு மாறும் தினம்வர
தாமதம் ஓர்நிலை யில்லை
மண்ணில் மனங்களும் கொண்ட விதியினில்
மாற்றங்கள் ஏன்திட மில்லை
விண்ணொளி சக்தியே வைத்து விளையாடு
விந்தை நாமுன்கையில் பொம்மை
*****
On Mar 2, 10:04 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> வெற்றி முழக்கிட வேஇனி வாயிலில் சங்கு முழங்கும்! -நீர்
> கற்றத் தமிழுமைக் காக்கவுயிர்க் காதலி கைவளை குலுங்கும்!
>
> பற்றிய அச்சம் விலகும், பகலவன் பேரொளி தோணும் - விழி
> சுற்றிச் சுழலும் புவிமகள் சுந்தரம் கண்ணெதிர் காணும்!
>
> *வற்றாக் கவிபொழி ஊற்றே, மனத்தில் உறுதியே வேண்டும் - கை
> பற்றித் துணையினி ஆவாள் பரமனின் தேவியே யாண்டும்!
> *
>
> சிவசூரி.
>
> 2012/3/2 kirikasan <kanara...@gmail.com>
ஒளிதா விழிதா உலகில் இளமை உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும் கருணை மனமும் தா
எளிதா உணரும் விதமும் அழகும் இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும் தொடுமோர் செயலைத் தா
வெளிதா வளிதா விளையும் எதுவும் உனதென் றுணர்வைத் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய் துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும் பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா சுவையாம் வாழ்வைத் தா
மொழிதா செழுமை தமிழால் கவிசெய் திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும் புதிதாய் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும் பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில் தேவி அருளைத் தா
நெளியா நடையும் நிமிர்வாய் உருவும் நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும் அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும் தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய் இலங்கும் வகையாய் செய்
தழலே ஒளியின் பெரிதே யிதுபோல் தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய் உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக் குழியுட் புதையும் பொய்
மழையாய் இடியாய் மலராய் மணமாய் மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய் நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய் குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே அணைத்தும் வெறுத்தாய் நீ
ஒளிவா னிடையே உயர்வாய் சகலம் உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம் ஒளியென் றுனதாய் வை!
**********
***************
பிழைகள் திருத்தம்: இரண்டாம் மூன்றாம் அடிகளில்
/எளிதா யுணரும்/
/தெளிவாய் மனமும்/ என்று வரவேண்டும்.
********
On Mar 4, 10:06 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> வழக்கம்போல் அருமையான பாடல்- உங்களின் முத்திரையைத் தாங்கி நிற்கிறது!
> வாழ்க வளமுடன்!
>
> சிவசூரி.
>
> 2012/3/4 kirikasan <kanara...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
*****************************
வேண்டும் சக்தி தேவி!
அழகான ஓடை அதிலோடும்நீரும்’
அரும்பான மலர் போலும் வாழ்வும்
எழவானில் வெயிலும் ஒளிர்கின்ற கதிரும்
இதை மிஞ்சும் விதமான அறிவும்
விழ வாடும்பூக்கள் விரிகிற முகைகள்
விதமாக துயர்போக மகிழ்வும்
பழமோடு தேனும் பருகும்நற் சுவையும்
படர்கின்ற மனம் வேண்டும் தாயே!
கொதிகின்ற நீரும் குளிர் கூடும்பனியும்
கொத்தும் வல்லூறாகக் குணமும்
மதிவானில் குறையும் மழைதூற துளியும்
மணல்வீழும் நிலை தாழவேண்டாம்
கதியோடு புயலும் கடல் கொண்ட சினமும்
கரை ஏறக் குடிகாணும் அழிவும்
விதியாக வேண்டாம் வினைதீர்க்கும் தேவி
வியக்கும் நற்பெரு வாழ்வுவேண்டும்
நகை சிந்தும் போது நான்கொள்ளும் இன்பம்
நல்லோர்க்கு இன்னல்கள் ஆகா
வகையன்பு கொள்ளும் வாழ்வொன்று வேண்டும்
வருந்தாத உள்ளங்கள் வேண்டும்
பகையொன்று வேண்டாம் பரிதாபம்வேண்டாம்
பழமென்று இனிதான உறவும்
புகைகொண்டுதீயும் பொழுதொன்று வேண்டாம்
புன்னகை புன்னகை வேண்டும்
குயிலோசை கூவும் குரலின்பந் தானும்
கனிவோடு காதோரம் செல்லும்
வெயில் வீழும் மலையில் வீச்சோடு அதிரும்
விளைவான எதிரோசை வேண்டாம்
பயிலும் நற்கலைகள் பாம்பாக வேண்டாம்
படும்தூறல் மழைகண்ட தோகை
ஒயிலாக ஆடும் ஒய்யாரம் போதும்
உளம்மீது மகிழ்வொன்றே வேண்டும்
*********************
On Mar 4, 12:19 pm, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> வாழ்க ஐயா
>
> உங்கள் கவிக்கனவுகள் துணையோடு நானும் காண் முயல்கிறேன் கனவு
>
> 2012/3/4 kirikasan <kanara...@gmail.com>
>
>
>
>
>
>
> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
இப்போது ஒரு கவிதைக்குரிய கரு கிடைத்து, கவிதை எழுத மனத் தூண்டுதல்
ஏற்படும்போது
முதல் ஒரு அடி சந்தத்த்துடன் சேர்ந்து திடீரென்று உருவாகிறது. இது
எதிர்பாராமல் தோன்றுகிறது.
இதன்பின்பு மிகுதி கவிதையை சந்தத்தை வைத்துத்தான் சொற்களை
தெரிவுசெய்கிறேன். சொற்களை தெரிவு செய்கிறேன் என்பதைவிட சொற்கள் மனதுள்
வந்துவிழுகின்றன என்பது பொருந்தும். முதல் அடி மனதுள் கிடைத்ததும் சக்தி
தெய்வத்தை வணங்கி நன்றி சொல்லி மிகுதி தொடர்வேன்
அன்புடன் கிரிகாசன்
On Mar 7, 6:20 am, Ganapathy SankaraSubramanian
<ganapathysankarasubraman...@gmail.com> wrote:
> அன்புள்ள கிரிகாசன்,
> வாழ்த்துக்கள் கிரிகாசன். சொல்லாட்சியும் சந்தமும் அற்புதம்.தங்கள்
> கவிதைகளில் ஒரு சந்தம் இருப்பதைக் கவனிக்கிறேன்.தங்கள் சந்தம் தேர்வு
> செய்த பின் வார்த்தைகளால் நிரப்புவீர்களா.தெரிந்து கொண்டால் நானும்
> தங்களைப் போலவே நல்ல சந்தங்களில் எழுத முயற்சிப்பேன்..
> நன்றி,
> கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்.
>
> 2012/3/4 kirikasan <kanara...@gmail.com>
On Mar 4, 12:19 pm, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> வாழ்க ஐயா
>
> உங்கள் கவிக்கனவுகள் துணையோடு நானும் காண் முயல்கிறேன் கனவு
>
>
>
>
>
>
>
> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பால் நிலவில் சோறூட்டும் அன்னை
பனிபோர்த்த மலரிதழின் மென்மை
சேல்விழிகொள் மாதரிசை நளினம்
சிரிக்கின்ற மழலை மகன் மகிழ்வும்
ஆலமரக் கீழ் வெயிலில் துயிலும்
ஆடும் மயில், மேகம்விடு துளியும்
போலிவைகள் தரும் இன்பம் புகழில்
பிறக்கின்ற போது பெருஞ் சுகமே!
அக மகிழ்கிறேன்!
அன்புடன் கிரிகாசன்
On Mar 7, 2:23 pm, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> 2012/3/6 kirikasan <kanara...@gmail.com>
> * இனியொரு விதி செய்வோம்*
> * - ”இனியாவது செய்வோம்” -*
> * .துரை.ந.உ *
> *குறள்........:* குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ :http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> *பதிவு *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
பொடிபடத் துயர்தனை உடைபட விடுபுறப்
படுபகை யினிமறந்தே
துடியிள மனமதில் தொகையென வரமகிழ்
வுடனிரு துணிவெழவே
கடிதென வுளமனக் கடுகயமை கள்தெளி
வுறவெடு உளமகிழ்வே
மடியிடை கிடதமி ழன்னைமலர் முகமதை
மலர்வுறச் செயநிதமே
படியினைப் பலகடந் தனமினி யெனஒளி
பகல்வரத் துயருறவோ
முடிதனை உடையமன் னவனெனப் பெருமையில்
மலர்ந்திட எது தடையோ
இடிமின்னல் பொழிமழை யுடனிருள் விலகிய
தினிச்சுக மெனமறந்தே
படிகவி தைகள்பல முறபல முறையவை
பருகிட மதுஎனவே
தடிதனைக் கரமதில் எடுகுரு வினைக்கொடுந்
தவறெனக் கருதுவமோ
படிதனைப் பலகடந் திடஅடி தனையுளம்
பதமுற வெனஅறிவோம்
கொடிதென நினவுறக் கருதுவ தெவருமில்
குளமிடை கமலமென
வடிவினை யெடுமலர் வரும் கிழக் கெனும்திசை’
விடிவுறக் கதிரொளியே!
இயற்கையின் மௌனம்
நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி
கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி
வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப் பிறர் காணா ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்
பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை
நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை
பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும் பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ
கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ
எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை வான் தெய்வம் கேட்காதோ?
*******
On Mar 8, 9:58 am, Ganapathy SankaraSubramanian
<ganapathysankarasubraman...@gmail.com> wrote:
> முடுகியல் ஓசையோடு மலர்ந்த அற்புத சொல்லாட்சி.மிகவும் அருமை.எனக்கு ஒரு
> சந்தம் கிடைத்தது.
> கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்.
>
> > இன்னும் மேல்...
>
> read more »
அன்பர் கிரிகாசன் அவர்களே,
உள்ளத்தை உருக்கி உணர்ச்சியைப் பெருக்கும் உங்கள் கவிதையைப் படித்ததும் உங்களுக்கு அன்பர் ராஜ தியாக ராஜன் அவர்கள் முன்பொரு சமயம் எழுதிய "கண்ணோரம் கண்ணீர்க் கடல்!" தான் என்னை வந்தடைந்தது.
"எந்தமிழ்த் தாயழவே ஈழத்தி லெம்சுற்றம்
வெந்தே எரிகின்ற வேதனையை; - நந்தமிழர்
மண்ணிற் புதைகின்ற மாகொலையைக் கண்டென்றன்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்.
யாரவர்கள்? நம்மினத்தார்! ஏதுமற்ற ஏதிலியாய்,
வேரறுந்த நீள்மரமாய், வீழ்கையிலே; - சீரழகுப்
பண்ணார் தமிழணங்கும் பற்றி யெரிகையிலே
ஏனின் னுந்தாமத மென்றேங்கி நிற்காமல்
கூனிக் குறுகித்தான் குந்தாமல் - ஆனையென
விண்ணதிர வீறுகொண்டே மீண்டெழுந்தா லீங்கேது
கண்ணோரம் கண்ணீர்க் கடல்?
சிவசூரி.
On Mar 2, 3:04 am, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> வெற்றி முழக்கிட வேஇனி வாயிலில் சங்கு முழங்கும்! -நீர்
> கற்றத் தமிழுமைக் காக்கவுயிர்க் காதலி கைவளை குலுங்கும்!
>
”கற்ற தமிழுமைக் காக்க”
சிவ. சூரி ஐயா, ”கற்றத் தமிழ்” சரியா?
நா. கணேசன்
> பற்றிய அச்சம் விலகும், பகலவன் பேரொளி தோணும் - விழி
> சுற்றிச் சுழலும் புவிமகள் சுந்தரம் கண்ணெதிர் காணும்!
>
> *வற்றாக் கவிபொழி ஊற்றே, மனத்தில் உறுதியே வேண்டும் - கை
> பற்றித் துணையினி ஆவாள் பரமனின் தேவியே யாண்டும்!
> *
>
> சிவசூரி.
>
> 2012/3/2 kirikasan <kanara...@gmail.com>
On Mar 16, 9:56 pm, "Lalitha & Suryanarayanan" <lallis...@gmail.com>
wrote:
> *சிவ. சூரி ஐயா, ”கற்றத் தமிழ்” சரியா?*
>
> கற்ற தமிழே சரி, அது நான் செய்த ஒற்றுப் பிழை!
>
> சிவசூரி.
>
Thanks.
> 2012/3/17 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>
மலர்கள்மேனி அனலின்மூச்சு மருகச்செய்யுதோ - இன்ப
மாலைநேர முலவும்வேளை மனதில் துன்பமோ?
உலரும் வேளை கருமைமேகம் உதிரும் தூறலோ - நன்கு
உறங்கும்வேளை இடியினோசை அதிர வானமோ?
புலரும் வேளை கதிரும்கூதல் போக வைக்குமோ -அன்றிப்
பரவும் சூடு வலியென்றாகப் பாடு துன்பமோ ?
பலரும் வந்து பாடிஆடிப் பழகும் போதிலே -நிற்கும்
பளிங்குமேடை உருளும்பாறை பனி யென்றாகுமோ?
வசந்தம் வீசு மாலைநேரம் வந்த புயலிதோ - அன்பு
விளையுங் காலை வேகமழையில் விளையுந் துன்பமோ?
அசதியாகத் துயிலும்கொள்ள ஆந்தைஅலறுமோ - கட்டில்
அசைந்து பேய்கள் உறையும் காட்டில் இருந்தபோலுமோ?
திசையும் திக்கும் தெரிந்திடாத திக்கில் பயணமோ - கால்கள்
தேர்ந்திடாத ஒற்றைப்பாதை துளைக்குங் கற்களோ?
அசைந்திடாத காற்றும் மூச்சின் ஆழம் காணுதோ - உள்ளே
இருந்துஆடும் உயிர்துடித்து என்ன வாகுதோ?
இனியராகம் மீட்டுங் கைகள் ஏந்தும்வீணையோ - கைகள்
இசையும் மீட்ட எழுந்த ராகம் எதுமுகாரியோ?
பனிதிரண்டு இலையிலோடி துளிவிழுந்ததோ - கண்கள்
பலமிழந்து அழுதுநாளும் வலியிழந்த்தோ?
புனிதகோவில் மணியுமாடிப் பரவுமோசையோ - ஓசை
படரவானில் இடியென்றாகிப் புவி அதிர்ந்ததோ
கனியின்மீது தேனைஊற்றிக் கடித்தினிக்குமோ - நாவில்
கசந்து வேம்பின் சுவையென்றாகிக் காணும் கோலமோ
தனிமையாக முழுநிலாவும் தண்மை ஓடைநீர்- இன்பம்
தருமுலாவில் அலறும்ஓசை இதயம் உறையுமோ
வனிதைகாணக் காதல்கொண்டு வந்தணைக் கையில் - காணல்
கனவு என்று மனைவிதொட்டுத் துயில் எழுப்பவோ
குனிந்து கோவிற் தெய்வம்வேண்டக் கருணைதாருமோ - அன்றி
கொண்டபாரம் வீழும்வண்ணம் குடைசரிக்குமோ
மனிதவாழ்வில் ஒன்று மாறி வேறென்றாகுமோ - மஞ்சம்
மலர்கள் தூவித் துயிலஎண்ண மலருள் முட்களோ?
********
அலைகள் ஆடும்கடலினிலே அது எழுதல் அழகன்றோ
அலைகள் இல்லா ஆழிஎனில் அதில்அழகுக் கிடமுண்டோ
உலையும் தளதள ஓசையிடும் அது உண்மைஎழிலன்றோ
உறங்கிக் கிடந்தால் எதுவாகும் அது உண்ணத் தகுமாமோ
கலையும் கண்ணாய் கொண்டவரில் பலகருத்தும் எழும்வீழும்
காணும் இவையும் சுவைகூட்டும் கலை கனிந்தே இனிதாகும்
மலையின் உயரம் இருந்தாலும் குறை மனதில் வளராமல்
மாறிக் கலையாய் தருவதிலே அம்மலர்கள் சிறந்தோங்கும்
மலர்கள் என்றும் சுடுவதில்லை கலைமனதும் அதுபோலும்
மாற்றம் வாழ்வின் நிரந்தரமே நம் மனதும் அதுகொள்ளும்
புலமை பொங்குமுணர்வதிலே வெகுபுதிதாம் நதிவெள்ளம்
புரளும், மனதின் எண்ணங்களைப் புடம்போட்டே எழிலாக்கும்
மலர்கள் பலவாம் பலநிறமே அதன் முரணே அழகாகும்
மணங்கள் கவிதை எனவாகும் அவை தமிழின் பொதுவாகும்
பலதும் கவிதை உணர்வுகளும் பல வண்ணம் கொண்டாலும்
பழகும் தமிழே ஒன்றாகும். மணம்பரவச் சுகம்காணும்
*******
சத்தியம் வென்றிட எத்துணைசெய்தனை
சரித்திரம் நீயண்ணா
. சங்கடம் போயினி சக்திவிளைந்திடும்
. சரிவரும் பாரண்ணா
மத்தியில் நிற்குமுள் சத்தியதேவதை
கைகொள் தரா சண்ணா
. மற்றவை மீதுள்ளம் வைத்திடு நம்பகம்
. மலர்வது வாழ்வண்ணா
இத்தரை மீதினில் ஒற்றுமை பெரியது
உரைத்தது நீயண்ணா
. இன்னலொழிந்திட இருளும் கலைந்திட
. இனியெழும் ஒளியண்ணா
அத்தனைக்கும் ஒளி ஆதவன் எழுவது
எப்பவும் கிழக்கண்ணா
. ஆயினுமின்றது விடிவது போலொளி
. மேற்கிடை ஏனண்ணா
நித்தியமோ இதுநிகழ்வ தெலாம் சரி
விட்டிடு வோமண்ணா
. நிர்கதி யாயினி நிற்பதுண்டோ நாம்
. நிச்சயமிலை யண்ணா
சொத்து என்றேநீ பக்கமிருக் கையில்
சிந்தையில் தெளிவண்ணா
. செத்துமடிந்திட போயிடினும் நீ
. பக்கமுண்டாம் அண்ணா
இக்கணம் கொண்டினி விட்ட அநாதைகள்
பிச்சைகள் இலையண்ணா
. எட்டி அடித்திட ஏனேன கேட்டிட
. எவருமில்லை எனவாம்
கத்தியவர் தமும் கொஞ்சம் பயந்திட
கொடுகுரல் எமதண்ணா
. கட்டியணைத்தொரு கற்பனை முத்தமும் ..
. காற்றினில் எடுஅண்ணா
*********************
ஆனா ழானா கூனா டானா இன்னன்னா
அலரும் பூவில் இதழைக் கண்டேன் அதிலென்ன
ஆனா வானா ளீனா லூனா இம்மான்னா
அதனைக் கண்டேன் அருகில் நின்றேன் அழகென்ன!
மானா தேனா மகிழம் பூவோ என்னென்ன
மனதில் தோன்றும் உணர்வை நானும் என்சொல்ல
பேனாக் கொண்டு எழுதப் போதாப் பொழுதென்ன
பிறந்தே ஒருநாள் போகும் அளவோ முழுதென்ன
கானா தானா நெடிலும் பக்கம் இல்லன்னா
கொண்டே உள்ளம் கனியத் தமிழாம் அதுவென்ன
தீனா ரூனா மானா கானா இள்ளன்னா
திகழும் அழகில் தெருவில் வந்தால் ஊரென்ன
தானாச் சுற்றும் உலகம் கூடப் பின்செல்ல
தனியே நானும் நிற்பே னோஎன் தலைபின்ன
பூநா டும்புள் ளினமே போலும் செல்லென்ன
பொழுதும் வாடும் எண்ணம் என்னை முன்தள்ள
ஏனோ உள்ளம் தேனாய் தித்திக் கும்மின்ன
திங்கள் செல்லும் திசையில் செல்லும் முகிலென்ன
நானா எந்தன் உள்ளம் ஆடும் பொன்வண்ண
நதியாய் ஓடித் தேடும் இன்னல் போய்முன்னை
வானாய் வானில் ஓடும் மேகப் பஞ்சன்ன
வடிவைக் கொண்டே வாழ்வில் இன்பம் கொள்ளென்ன
ஆநான் இன்றே பொறுமை விட்டேன் நடையன்ன
நளினச் சிலையின் மனதில் எதுதான் உளதென்ன
போனா என்சொல் வாளோ சொல்லும் பதிலென்ன
புதிராய் கண்டும் போனே னெந்தன் கால்பின்ன
காணா வகையில் நின்றாள் கையில் கடிதென்ன
காலின் அடியில் தேயும் அதனைக் கைகொள்ளத்
தானாப் பொழியும் மழையும் இடியும் மின்மின்ன
தருமே திகிலும் அதுபோல் கண்டேன் இதுவென்ன
மீனாம் கண்கள் எரியும் மலைவாய்த் தீயென்ன
மிஞ்சக் கண்டே ஆனேன் தீமுன் பனியென்ன
*****************
என்று பிழையைத் திருத்திக்கொள்கிறேன்
கிரிகாசன்
On Mar 21, 6:34 pm, kirikasan <kanara...@gmail.com> wrote:
> போனால் போகட்டும்
>
>
ஆனா ரூனா மைனா ஆஹா! கவியென்ன
பேனா தானா யெழுதும் விந்தை என்னென்ன!
…அனந்த்
இறுதிப் பகுதி நல்ல க்ளைமாக்ஸ்!
சிறுவர் /இளைஞன் பாடும் வகையில் ஒரே பொருளை இரண்டாக முன்பு எழுதினேன்
அந்த இரண்டு கவிதைகளையும் உதாரணத்துக்காக தருகிறேன்
அன்பு கொண்டு ஆரம்ப காலத்தில் எழுதியதை ஒழுங்கற்றதாக இருப்பினும்
ஏற்றுக்கொள்ளவும் இன்னும் சிறுவர் பாடலில் தேர்ச்சி வேண்டும்.
முயற்சிப்பேன்
தெரிந்தே விட்ட தவறு இது!
ஏனிந்த வஞ்சனை (சிறுவன்)
சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ
சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே
வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே
எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்
கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது
இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்
மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்
அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்
கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?
விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ
தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ
இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு என ஓடும்போது
இடைநின்று மறித்தாரும் இல்லை
மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே - அந்தத்
தொலைவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
தடை போட்டு கொண்டதோ சொல்லு
கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
உனையாரும் தடுத்தது மில்லை
ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு
வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்
குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்
விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்
ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
திரியாத ஊரொன்று வேண்டும்
தருவார்கள் என்று தமிழ்பேசுவோரின்
தொலைதேச திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்
உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்
ஏறமுடியாத படிகள்
வெற்றியின் படிகளில் கற்களும் குறையுது
வேண்டும் வேண்டும் தோழா
வற்றிய சுனைமீன் வாழ்ந்திடத் துடிக்குது
வானம் பொய்க்க லாமா
பற்றிலும் பரிவிலும் பக்குவம் நிறையுது
பாசம் விட்டுப் போமா
சுற்றிலும் இருள் மறைந் தோடுது ஓடுது
சோதி தோன்றும் தோழா
கற்றவை பாடங்கள் கலைப்பது கோவில்கள்
காணும் தென்னர் தோழா
உற்றவை தவறெனில் உணர்வது பயனது
உள்ளம் மாறு வாரா
அற்றது இனிதென ஆக்கிட வந்தவர்
ஆன தழிக்க லாமா
குற்றமும் செய்தவர் குரலது ஓங்கிடின்
கொண்ட பிழைகள் போமா
பெற்றது வாழ்வினைப் பிறரது கையினில்
பட்டு அழியா வாமோ
அற்புத வாழ்வினை ஆண்டவன் செய்தது
யாருக் குரிமை வீழ
முற்றும் அழியவென முழுது மெனதுவென
மோகம் கொள்ளு வாரோ
புற்றி லரவமென பச்சைவிஷம் பரவப்
பார்க்கத் தீண்டுவாரோ
மற்றவர் தகைமையும் சற்றும் குறைவதில்லை
மனிதன் என்ப தாலே
சுற்றும் வாழ்விலறம் கொண்டு பூமியிடை
செய்த பாவம் ஒழிய
சற்றும் பகையுடைமை யின்றி மனம்மகிழ
சார்ந்த வீடு உனது
பெற்றுவாழ்ந்திடென விட்டுநிலைதளரும்
பண்பு கொள்ளுவாரோ??
**********************
தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில்
தரும்மழை நின்றுவிட
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல்
திகழ்ந்திடும் நிலைமாற
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச்
சிவந்திடும் வான்வெளிக்க
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை
விடியலில் வெளிநடந்தேன்
கலகல வென ஒலி எழுமதி காலையில்
கதிரவன் வரும்திசையில்
பளபள எனும்ஒளி பரவிட இருளவன்
பயமெழத் தலை மறைந்தான்
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக்
கூடிய தூவானம்
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில்
சிணு சிணுத்திடக் காணும்
சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச்
சடுதியில் நீர் பெருகி
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக்
கிளர்வுடன் அதுவிரைய
மளமள எனவளர் மரங்களும் நீரிடை
மலர்களும் சருகுதிர்த்தே
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும்
வியனுறு கலை வியந்தேன்
வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை
வடிவுடன் தாமரைகள்
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித்
தளர்வுற இதழ் விரியும்
பளபள எனவெயில் பகலென வருமுதல்
பறவைகள் துயில் கலையும்
படபட என அவை பரப்பிய சிறகுடன்
பறந்திடும் வான் வெளியும்
கடகட வெனஉருள் காளைகள் வண்டியில்
கவினுறு சந்தமெழும்
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும்
அழகினை அவைபேணும்
மடமட எனமது வருந்திய வண்டினம்
மலர்களில் மயங்கிவிடும்
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை
கொண்டிட அழதுகொழும்
எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில்
எழும்விழும் பின்னுயரும்
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென
அடுத்ததை செய உணர்த்தும்
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர்
குலவிடும் இனிதென்றலும்
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக்
கொண்டிடச் செய்தகலும்
**************************************
கலையும் மனதில் அலையும் எண்ணம்
கவலை தந்தே காணின் - நற்
கலையும் மேன்மை நிலையும் தருமே
தொலையும் மகிழ்வை மீட்கும்
கலையும் துள்ளும் அதனின் இன்பம்
காணும் வாழ்வில் துயரம் - எம்
மலையும் போல எதிரில் வரினும்
கலையும் கவிதை போக்கும்
குலையும் நடுங்கக் கொடுமை வரினும்
குன்றா தன்பைப் பேணின் - எவ்
வுலையும் துன்பக் கேடும் நீங்கி
உணர்வில் தெளியும்; கடலின்
வலையும் மீனும் ஆகித் துன்பம்
வாழ்வைப் பற்றும் போதும் - நற்
கலையும் அலையும் மலையும் காணும்
கருணை சக்தி காக்கும்
அலையும் கடலில் ஆடும்மெங்கும்
அலையும் கரையில் துவளும் - வீழ்ந்
தலையும் மண்ணில் உருளும் அய்யோ
தாங்கா தென்றே அழியும்
விலையும் பெரிதாய் முத்தும் மணியும்
விளங்கும் கடலின் நிலையும் - ஓர்
அலையும் விதியே கணமும் துங்கா
துலையும் ஓடித் தொலையும்
சிலையும் செய்வான் சிற்பி காற்றில்
அலையும் பஞ்சா கொள்வான் -தன்
கலையும் எண்ணி உளியைக் கொள்வான்
விலையும் அற்றோர் கலையால்
தலையும் உடலும் ஆகும் கையின்
நிலையும் புண்ணென் றாகும் - கை
வலியும் கொள்ளும் ஆயின் முடிவில்
சிலையும் காணப் போகும்
மலையும் முகிலின் உயரம் வரையும்
தலையும் உயரக் காணும் - நன்
நிலையும் கொண்டே நிமிரும் ஆனால்
நெஞ்சில் பாறை ஆகும்
கலையும் பனியும் உருகும் நதியாய்
கண்டோர் தாகம் தீர்க்கும் -தன்
தலையும் நிமிரக் கண்டும் மலையும்
தருமோ பயனை எதுவும்
அலையும் மனதை அழகே செய்ய
அன்பால் கவிதை செய்வோம் - மின்
வலையும் சந்தவ சந்தம் உண்டு
வாரிக் கவிதை செய்வோம்
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொள்ளப் கவிதை செய்வோம் - எங்
கிலையும் மறையும் கனிகள் காண்போம்
எடுப்போம் உண்போம் சுவைப்போம்
***************************
தமிழின்பம் தருமே
கலையும் கனவின் கற்பனை யாவும்
கவலைதந்தே போகும்
அலையும் மனதில் ஆசை தோன்றத்
தொலையும் நிம்மதி தானும்
மலையும் எதிரே நிற்பது போலும்
மனதுள் துயரம் சூழும்
கலையும் தமிழும் இசையும்கூடின்
கணமே துன்பம் போகும்
இலையுந் தளிரும் பூவுங் காணும்
இளமை கொண்ட தமிழும்
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொண்டே இன்பம் நல்கும்
அலையுங் கடலும் அதுபோல் ஆழம்
அறியாத் தமிழின் பெருமை
தொலையும் வண்ணம் இல்லாதெங்கும்
தமிழைத் தமிழாய் சொல்வோம்
குலையும் நடுங்கக் கொடுமைசெய்வோர்
கொத்தும் பாம்புங் கூட
அலையும் காற்றில் இழையும் இசையின்
அழகில் மயங்கி யாடும்!
வலையும் மீனைக் கொள்ளும் அதுபோல்
வண்ணத் தமிழும் எம்மில்
நிலையும் மாற்றும் நெஞ்சை கவரும்
நினைவை அன்பால் வெல்லும்
தலையும் மேவி வெள்ளம்பாயும்
நிலையும் வந்தாலும், வான்
அலையும் கதிரும் இரவிற் தோன்றி
ஒளியைத் தந்தாலும், ஓர்
சிலையும் உயிரைப் பெற்றே வீதி
சென்றாலும் நம்தமிழோ
கலையும் அழகுக் கவிதைச் சுவையும்
காணும் என்றும் மாறா
இலையென் வாழ்வில் தமிழேயின்றி
இன்னோர் மொழி; எவ் வூறு
நிலை வந்தாலும் நெருங்கா தின்பம்
நிறைவாம் தமிழின்மீது
விலை யென்றில்லா வாழ்வில் துயரம்
விலகும் தமிழைப் பாடு
தொலை வென்றாலும் சுற்றும் மனதோ
தமிழ் சொல்லும் என் நாடு
********************
இலையுந் தளிரும் பூவுங் காணும்
/இளமை கொண்ட தமிழும்/
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொண்டே இன்பம் நல்கும் ’’’
இதில்
//இளமை கொண்டே தமிழும்//
எனத் திருத்தம் செய்து கொள்கிறேன்
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்
போவன முகிலும் இருளும் துயிலும்
புலரும் பொழுதினிலே
ஆவன ஒளியும் விழியும் மலரும்
அழகும் காலையிலே
தாவின அணிலும் கிளியும் கனிகள்
தாங்கிய மரங்களிலே
மேவின மகிழ்வும் இனிமை உணர்வும்
மீண்டும் வாழ்வினிலே
தேய்வது பிறையும் அறமும் நீதி
திரிவது மெய்மையென
காய்வது வெயிலில் நனைந்தோர் பொருளும்
கண்களில் நீரெனவும்
ஓய்வது இலதாய் உயிரும் உடலும்
ஒன்றாய் துடித்திருந்தோம்
பாய்வது பகையும் நதியும் குருதி
பலரின் உயிர்களென
ஏனது என்றே எண்ணிச் சோர்ந்து
இருந்தோர் வாழ்வினிலே
போனது பொய்யும் திமிரும் கருமை
புன்மை செயலெனவே
வானது மீதில் தெரிதே ஒளியும்
வருதே வசந்தமென
காணுது மீண்டும் துளிர்கள் வாழ்வுக்
கேங்கும் மரங்களிலே !
********************
சச்சரவு
நிலவைப் பிடித்திடையே நீள்விழித்த வதனமென
நங்கையெழில் படைத்தை யென நினைத்தேன்
கலகம் பிறக்கவெனக் காட்டினிடை இருள்கொண்டோ
காரிகையின் மனம் பிடித்தாய் இறைவா?
மலரை எடுத்தழகு மல்லிகையின் வாசமிட்டு
மகளைப் படைத்தை யென்று மறந்தேன்
மகிழ்வை உடைக்கவென மாம்பிஞ்சு முறித்தொழுகு
மாம்பாலை உதடில் வைத்த மகிழ்வேன்?
அழகைப் படைத்தவனே அழகுக்கு அழகெடுத்து
அசைந்துவரும் சிலை படைத்தாயென்றே
பழகக் கிடைத்தவளைப் பாயிட்டுப் பார்த்து மனம்
பாதிக்கு மேலிழந்த னிறைவா
குழவிக்கூ டென்றறியா கொண்டசுவைத் தேனள்ளிக்
கொள்ளவெனப் பற்றினனே பிழையா
அழவைத்துப் பார்த்திடவோ அசைந்துவரும் நிழலீந்து
அதற்கெனவோர் பேச்சளித்தாய் இறைவா
தழலைச் சிவந்திருக்கத் தந்தாய்மா ணிக்கமெனத்
தாவிக்கை பற்றவைத்த தலைவா
சுளகைப் பிடித்தவர்க்கு சொல்லிவைத்து விட்டனையோ
சொல்லில் அடிக்குவிதம் முறையா
குழலைக் கைகொடுத்துக் கூடியெழும் இசைகொடுத்து
கொள்ளென்று பரிசளித்தை மகிழ்வாய்
அழுகை பிறக்குமது ஆனந்தகீதமெழ
அடுத்துவரு பிறவியென மறைத்தாய்
விழக்கை நீகொடுத்து வேண்டுமொரு வாழ்வீந்து
வெற்றியினைத் தருவையென்று எண்ண
நிழலைக் கொள் தருவைத்து நில்லென்று சொல்லிச்சிரம்
நேரெதைநீ நெளியவைத்து நின்றாய்?
மழலைப் பூங்கொத்தினையே மடியிட்டுப் பாசமழை
மகிழென்று மாதர் வரமீந்தாய்
குழலை முடிப்பவளின் குணம் சினந்து கொஞ்சலெனக்
குளிர்ச்சுனையில் கொதிநீரேன் இறைத்தாய்?
******************
அன்புள்ள கிரிகாசன்,
மிக அருமையான, உணர்ச்சிமிக்க பாடல். ஒற்றுப்பிழைகளைச் சரிசெய்து தந்திருக்கிறேன்.
இலந்தை
ஏனிந்த வஞ்சனை (சிறுவன்)
சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே -
உன்னைக்
கட்டிவைத்துக் கால்விலங்கு போட்டவர் உண்டோ?
நெற்றிமீது பொட்டுப்போன்ற வட்ட நிலாவே -
உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ?
சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே -
எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டிதனை வெளியில் சென்று கத்திக்கூவியே
-நாமும்
பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே!
வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டு மாமாவே
வாழ்க்கை என்ன வென்றுசற்றுச் சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லித் தாங்களே!
எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே -
உங்கள்
செட்டைதன்னை எங்குப்பெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் -
இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்!
கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது
இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கும் இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்துப் பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த்தத்
துன்பம்
மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை வெளியினிலே மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும்-
அன்றிக்
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்
அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துவந்திப் பாலன்தந்த சேதி சொல்லுவீர்!
கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?
விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள் இன்றியே
போனபோக்கில் உலகைச் செய்து சுழல விட்டயோ
தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் -
உன்
உடல்முழுக்கப் பரவிஇந்த மோசம் செய்ததோ
நன்றிகள்!
அன்புடன் கிரிகாசன்
*********************************
அன்புடன் கிரிகாசன்
On Mar 30, 10:37 pm, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> அன்புள்ள கிரிகாசன்
>
இயற்கை, வாழ்க்கை, கயமை, கவலை
இயற்கை
பூக்காடும் புள்ளினங்கள் போம்வானமும்
பொழுதோடிக் கதிர் வீழும் பொன்மாலையும்
தேக்கோடு பெருஞ்சோலை சில்வண்டினம்
சிறுமந்தி விளையாடும் மூங்கில்வனம்
தீக்காடோ என்றஞ்சச் செம் பூக்களும்
சிதறும்பின் சேர்ந்தோடும் மந்தைகளும்
நீக்காத திரைமூடும் முகிலோவியம்
நின்றாலும் நடைபோடும் இளஞ்சூரியன்
பூக்காது முகை தூங்கும் அயல்தாமரை
புனலாடக் குதிபோடும் நிரையாயலை
தேக்காது தேன்ஈயும் மலர்கொள்வனம்
திகழன்பு மாதர்கள் தெரு ஊர்வலம்
போக்காக நடைபோடப் பொழுதோடிடும்
பூங்காற்று வயலோரம் பாடுங்குயில்
நாக்கோடு சுவைகூட்டக் நறுந்தேனடை
நாள்தோறும் கண்முன்னே பேரின்பமே
வாழ்க்கை
மூக்காலே புகைதள்ளும் பெரும்வண்டிகள்
முன்னாலே நெடுஞ்சாலை மிதிவண்டியும்
சாக்காலே நிறைமூட்டை இழுமாடுகள்
சரிந்தும்கீ ழுருளாத பெருவண்டியும்
போக்காலே குறுக்கோடும் ஒருஜன்மமும்
போறேன்னு சொன்னாச்சா எனும் கூச்சலும்
நோய்க்காக விரைவண்டி கூப்பாடிட
நிறைகின்ற வாழ்வோடு மரத்தினடி
தீக்காயும் வெயிலுக்கு திருமண்டபம்
தின்றாறித் துயில்கொள்ள திருமஞ்சனம்
நோக்காயம் படுமேனி கொண்டோமிந்த
நிலமைக்கு விதியென்ற உழைப்பாளிகள்
ஆ..காணும் இடமெங்கும் நிறைந்தாரென்ன
அநியாயம் ஏமாற்றம் அதிகாரமும்
நாக்காலே பொய்சொல்லும் நடிப்போரினால்
ஞாலத்தில் உருவான நடையானதே!
கயமை
ஆக்காத சோறெண்ணி அடுப்போடுநல்
ஆனந்த சயனத்தில் ஒருபூனையும்
வேக்காடு இல்லாத வெறும்பானையும்
விரதத்தை தினங்காணும் சிறுபிள்ளைகள்
நீக்காத வறுமைக்கு நீருண்டுவாழ்
நலிந்தாலும் எலும்பொடு நடைகொண்டவர்
போக்காத ஏழ்மைக்கு பதில்சொல்பவர்
போகத்தின் மாயைக்குள் சிக்குண்டிட
தூக்காக பணமூட்டை தொலைதேசமும்
தெரியாமல் மறைக்கின்ற செல்வந்தர்கள்
வாக்காக பலநூறு மொழிகூறிப்பின்
வந்தேறும் அரசாட்சி வாழ்வென்றபின்
நோக்காக தன்பாடு நிறை கண்டிடும்
நீதிக்கு கண்கட்டு நெறியாளர்கள்
காக்காது கைவிட்ட மாந்தர்களே
கடிதென்ற வாழ்வுக்கு கதியாவரே
கவலை
நன்நூல்கள் தமிழ்கூறி நயம்பேசிடும்
நன்மாடம் பூஞ்சோலை நிகழ்மண்டபம்
புன்னகைச் சிறுவர்கள் பெண்கூடியே
பந்தாடும் மகிழ்வெங்கே; பரிதாபமாய்
எந்நேரம் கணனிக்கு இரையானதோர்
இடும் சத்தம் சுடுமோசை எதிராட்களும்
வன்மைக்கு துணையாகும் விளையாட்டுகள்
வளர்பிஞ்சு மனங்கொல்லும் கொடுநஞ்சுகள்
எண்கற்றல் எழுத்தோடு இறைபக்தியும்
இல்லாது புயல்போன்று எதுஎண்ணினும்
கண்ணுக்குமுன்காணும் கடுவேகமும்
கைகெட்டா தாயின்கொள் கடுங்கோபமும்
பெண்ணுக்கு ஆண் நேரென் நிகர்வாழ்வென்று
பிழைசெய்யும், சிலபோக்கும் மென்மைகெட
தண்மைக்கு சூடேங்கும் மனமானது
தருமோ நல்லெதிர்கால வாழ்வென்பது
சுத்த சக்தி வித்து முந்தன் சித்தமுள் விதைத்திடில்
சித்தி தானெதை நினைத் தெழுந்துநீ நடப்பினும்
இத்தரை தனில்எடுத் தேயீர்கரங் கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும் ஏதுபங்க மில்லையாம்
சத்தியத்தின் தேவதைக்கு சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி பக்கமா யிருந் திடும்
வைத்த அன்பு வார்த்தை தன்னும் பொய்த்ததாய் நிறுத்திடா
வித்தை காண் செயல்தி றன்கள் வெற்றி வாகை சூடுமே
அண்டசா சரங்கள்கட்டி ஆளு மந்த சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற மாசிலா வெண் ஜோதியை
கொண்டி லங்கு உன்மனத்தி லேயிருத்தி வேண்டுவாய்
கண்டு கொள்வீர் நின்னகத்தின் உள்ளிருக்கும் கண்ணினால்
சுற்றி யாடும் எண்திசைக்கு மேகுமிந்த பூமியை
பற்றி ஓர்வி சைக்குள் வைத்துப்பார்ப்ப திந்த சக்தியாம்
வெற்றி யாகும் உன்னிரத்தம் சுட்டு ஓட வைத்தவள்
நெற்றி மூடும் மென்னி யக்க மின்பொ றிக்குள் எண்ணிடு
நித்த மும்நல் சக்தி வேண்டி மின்கலத்தில் சக்தியை
வைத்து ஏற்றம் செய்வ தென்பதாக உந்தன் தேகமும்
புத்திரன் கதிர் கிழக்கெழுந்த நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்சக்தி யென்று கேட்டிடு
முன்னை யுந்தன் அன்னை பெற்ற அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கு மன்னை போன்ற வர்க்கொரு
தன்நி கர்த்த லேதுமற்ற சக்தி சக்தி தந்திடேல்
என்ன தான்ந டக்கும் வையம் ஏதுன் கண்கள் காணுமோ?
***************************
தினம் சக்திவேண்டி
சுத்த சக்தி வித்து முந்தன்
. சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
. செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
. ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
. ஏதுபங்க மில்லையாம்
சத்தியத்தின் தேவதைக்கு
. சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
. நிச்சயமென் றாகிடும்
வைத்து அன்பு வார்த்தை கூறு
. வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தையாம் செயல்திறன்கள்
. வெற்றி வாகை சூடுமே
அண்டசா சரங்கள்கட்டி
. ஆளு மந்த சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
. மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
. காணில் இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
. காலகால மாகவே
சுற்றி யோடும் எத்திசைக்கும்
. செல்லு மிந்த பூமியை
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
. பார்ப்ப திந்த சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
. வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
. உள்மனத்தில் எண்ணிடேல்
நித்தமும் நல்சக்தி யேற்றி
. நாளும் மின்கலத்தினை
வைத்தியங்கச் செய்வதாக
. வாழுமிந்த தேகமும்
புத்தொளிகி ழக்கெழுந்த
. போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
. சக்தி யென்று கேட்டிடு
முன்னை யுந்தன் அன்னை பெற்ற
. அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
. அன்னை போன்ற வர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
. தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
. ஏதுன் கண்கள் காணுமோ?
*****************
சிலமாற்றங்கள் என் வாழ்வில் உருவாகின. அண்மையில் இணையத்தில் ஒரு நூல்
கிடைத்தது
The secret என்னும் Rhonda Byrne என்பவரால் எழுதப்பட்ட நூலின்
தமிழாக்கம் இரகசியம்
அதில் காணும் கரு என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது அதில் சில வரிகள் இதோ
”அப்போதுதான் ஒரு மகத்தான இரகசியத்தின் கணநேர தரிசனம் எனக்குக் கிடைத்தது
அதுதான் வாழ்க்கைக்கான இரகசியம் என்மகள் ஹேய்லீ எனக்குகொடுத்த நூறுவருடம்
பழமையான ஒரு புத்தகத்திலிருந்து அத்தரிசனம் என்க்குக் கிடைத்தது” என்று
குறிப்ப்ட்டவர் மேலும்
”எண்ணங்கள் காந்த சக்தியுடையவை. நீங்கள் சிந்திக்கும்போது எண்ணங்கள்
குறிப்பிட்ட அலைவரிசையில் பிரபஞ்சத்துள் அனுப்பப்படுகின்றன. அவை அதே
அலைவரிசையிலுள்ள அனைத்து விஷயங்களையும் காந்தமெனக் கவர்ந்திழுக்கின்றன.
பிரபஞ்சத்துக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் மூலத்திற்கு திரும்பும். அந்த
மூலம் நீங்கள்தான்” என்று குறிப்பிடுகிறார்
இதனால் என் எண்ணம் வலிமை பெறுவதாக எண்ணுகிறேன். அதுவே இக்கவிதையின் ஆக்கம்
மன்னிக்கவும் மேலுள்ளதுதான் கொஞ்சம் எதுகை மோனை திருத்தினேன்
தினம் சக்திவேண்டி
அன்புள்ள கிரிகாசன்,
சக்திமிக்க பாடல். அருமையான எழுசீர் விருத்தம். பாடலில் சில இடங்களை உரிமை பற்றித் திருத்தியிருக்கிறேன். ஒற்றுப்பிழைகளைச் சரிசெய்திருக்கிறேன். திருத்தங்கள் உங்கள் கருத்துக்கு ஏற்புடையதாக இருக்குமானால் மட்டுமே ஏற்றால் போதும். எந்தன் என்ற சொல்லுக்கு மாற்றாக என்றன் என்னும் சொல்லைப் பயன்படுத்துக!
தினம் சக்திவேண்டி
சுத்த சக்தி வித்து முன்றன்
. சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
. செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
. ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
. ஏதுபங்க மில்லையாம்
சத்தியத்தின் தேவதைக்குச்
. சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
. நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
. வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
. வெற்றி வாகை சூடுமே
அண்ட சராசரங்கள்கட்டி
. ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
. மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
. கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
. காலகால மாகவே
சுற்றி யோடும் எத்திசைக்கும்
. செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
. பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
. வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
. உள்மனத்தில் எண்ணிடில்
நித்தமும் நல்சக்தி யேற்றி
. நாளும் மின்கலத்தினை
வைத்தியங்கச் செய்வதாக
. வாழுமிந்த தேகமும்
புத்தொளிகி ழக்கெழுந்த
. போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
. சக்தி யென்று கேட்டிடு
முன்னை யுன்றன் அன்னை பெற்ற
. அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
. அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தினம் சக்தி வேண்டி
சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்
சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே
அண்ட சராசரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே
சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்
நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு
முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?
*************