Re: சில சந்தேகங்கள் - 1 - கொஞ்சம் அவசரம்

74 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Apr 28, 2012, 5:23:23 AM4/28/12
to santhav...@googlegroups.com
வணக்கம்,


இந்த மொழி அறிவோம் பகுதியை முன்னிட்டு மேலும் சில சந்தேகங்கள் தோன்றின. அவற்றுக்கான விடைகள் உடனே தேவைப்படுகின்றன.  ஆதலால் அதை உடனே தீர்த்து வைக்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.  கொழும்பு, திம்பு, பெங்களூரு ஆகிய நகரங்களைப் பற்றி எழுதும் போது எது சரி ?

கொழும்புவில், கொழும்பில் 
திம்புவில், திம்பில்
பெங்களூருவில், பெங்களூரில்

அன்புடன்,
நிரஞ்சன்


2012/4/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

மிக்க நன்றி ஐயா. 

அடுத்த சந்தேகங்கள் பின்வருமாறு :

1. 

 தூசி , தூசு எது சரி ?  ஏன் ?

2.
உடுத்தி, உடுத்து எது சரி ? ஏன் ?

3.
கோர்த்தான், கோத்தான் எது சரி ? ஏன் ?

4.

சின்னபின்னம், சின்னாபின்னம் எது சரி ? ஏன் ?

அன்புடன்,
நிரஞ்சன் 


2012/4/26 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/4/26 Niranjan Bharathi <niranjan...@gmail.com>
  1. அரண்மனை வீரர்களில் யார் சிறந்தவர் ? அரண்மனை வீரர்களுள் யார் சிறந்தவர் ?.--> இந்த இரண்டில் எது சரி ? ஏன் ?

இரண்டு வடிவங்களும் வழக்காற்றில் உள்ளன.  ஆயினும், I would prefer வீரர்களுள்.  ஆங்கிலத்தில் சொல்லிப் பாருங்கள்: Who among the soldiers of our side is good/better/best.  Among என்ற பொருள் வரவேண்டுமானால் உள் என்ற விகுதியைப் பயன்படுத்தினால் தெளிவாக இருக்கும்.  ஆனால், நாடுகளில், மொழிகளில், நபர்களில் என்ற comparator ஆகவும் இல் பயன்படலாம்.  ‘யாம் அறிந்த மொழிகளிலே’ ஓர் எடுத்துக் காட்டு. மொழி+கள்+இல்+ஏ.  யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோவைப் போல்... புலவரிலே.  புலவர்+இல்+ஏ.  இதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.  And it has been authenticated by giants.

  1. ஒரு படத்தின் பாடல்களை வெளியிடும் போது " இன்று இசை வெளியீடு" என்று எழுதுகிறார்கள். இது சரியா ? இன்று பாடல்கள் வெளியீடு என்று தானே  இருக்க வேண்டும் ?
பாடல் என்றாலே இசையுடன் கூடியதுதான்.  மரபு சார்ந்த  பாடல்களுக்கு இது பொருந்தும்.  மரபு சாராத வடிவங்களிலும் மென்மையான இசை ஒலித்தபடிதான் இருக்கிறது.  பாடல் வெளியீடு என்பதே பொருள் ரீதியாகப் பொருத்தமானது.  ஆனால், இசையமைப்பாளர்கள், இசைக்கே முதலிடம் கோருவதால், இசை வெளியீடு என்கிறார்கள்.  பாடல் வெளியீடு என்னும்போது, இயற்றப்பட்ட வரிவடித்திலான பாடல், இசையமைக்கப்பட்ட பாடல் இரண்டுமே உள்ளடங்கி இருக்கின்றன.  இசை வெளியீடு என்பது, இயற்றப்பட்ட வரி அல்லது வார்த்தை வடிவத்தை ஒதுக்கி விடுகிறது.  If one has to do justice and be fair to both பாடல் வெளியீடு என்பதே பொருத்தம்.  (சரி என்று சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.  இது சினிமாவின் உள்ளரசியல் சம்பந்தப்பட்ட விஷயம்.  மொழியின் வடிவத்தில் இன்னது பொருத்தம் என்பதைச் சொல்லிவிட்டேன்.  மற்றதை விட்டுவிடலாம்.  அதை ஆராய வேண்டாம்.)
  1. எதிர்க்கட்சி தலைவர் இணைய தளம் ஒன்றிற்கு/ஒன்றுக்கு பேட்டி அளித்தார் --> இதில் எது சரி ? ஏன் ?

இது எல்லாப் பெயர் சொல்லிலும் இடம்பெறும் இரண்டு வேறுபட்ட வடிவங்கள். வெளிநாட்டுக்கு, வெளிநாட்டிற்கு,|| சொல்லுக்கு, சொல்லிற்கு || கணக்குக்கு, கணக்கிற்கு.... இப்படி இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.

பகுபதம் பார்த்தால் ஒன்றிற்கு=ஒன்று+இன்+கு. ஒன்றுக்கு= ஒன்று+கு.  நாட்டிற்கு=நாடு+இன்+கு, நாட்டுக்கு=நாடு+கு.

இன் என்ற இடைநிலையைச் சேர்க்காமலேயே பொருள் விளங்குகிறது என்றால், சிம்ப்பிள் வடிவம் ஒன்றுக்கு, நாட்டுக்கு, இனத்துக்கு, சொல்லுக்கு, கணக்குக்கு.... இப்படி.  ஒன்றுக்கு என்பது சிம்பிள் வடிவம்.  நேரடியானது. ஒன்றிற்கு, வழக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவம்.  (என்னுடைய என்சைக்ளோபீடியா பிரிடானிகா மொழிபெயர்பு இணையாசிரியப் பொறுப்பில் சேர்ந்ததும் நான் செய்த முதல் காரியம், இந்த வேறுபாட்டைச் சுட்டிக் காட்டி, விற்கு, டிற்கு, கிற்கு போன்ற எல்லா வடிவங்களையும் find and replace with வுக்கு, டுக்கு, குக்கு... எட்செட்ரா.  தேவையற்ற இடைநிலை என்பதால் விட்டுவிட்டோம்.  This was a combined editorial decision--Sudha Seshayyan, Madhurabharathi and me.)

இரண்டு வடிவங்களும் புழக்கத்தில் இருந்தாலும் எளிமை கருதி இந்த மாற்றத்தைச் செய்தோம். -விற்கு -திற்கு, -சிற்கு, றிற்கு எல்லாம் தவறு என்பதாலன்று.


--
அன்புடன்,
ஹரிகி.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta


Message has been deleted

naa.g...@gmail.com

unread,
Apr 28, 2012, 5:35:55 AM4/28/12
to Santhavasantham
On Apr 28, 2:23 am, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:

> வணக்கம்,

> இந்த மொழி அறிவோம் பகுதியை முன்னிட்டு மேலும் சில சந்தேகங்கள் தோன்றின.
> அவற்றுக்கான விடைகள் உடனே தேவைப்படுகின்றன.  ஆதலால் அதை உடனே தீர்த்து
> வைக்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.  கொழும்பு, திம்பு, பெங்களூரு
> ஆகிய நகரங்களைப் பற்றி எழுதும் போது எது சரி ?

> கொழும்புவில், கொழும்பில்
> திம்புவில், திம்பில்
> பெங்களூருவில், பெங்களூரில்

> அன்புடன்,
> நிரஞ்சன்

வகர உடம்படுமெய் ஒரோவழிதான் வரும். (உ-ம்: யாப்புக்காக)

பெரும்பான்மையான இடங்களில்
கொழும்பில், திம்பில், பெங்களூரில் என்பதே சரி.

இப்பொழுது, ஆங்கிலம் போல், முழுப்பெயர் தெரியணும்
என்றோ, சந்திப் புணர்ச்சி தெரியாததாலோ
கொழும்புவில் என்றெல்லாம் பத்திரிகைகளில் காண்கிறோம்.

அன்புடன்
நா. கணேசன்

> 2012/4/26 Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>

> > மிக்க நன்றி ஐயா.

> > அடுத்த சந்தேகங்கள் பின்வருமாறு :

> > 1.

> >  தூசி , தூசு எது சரி ?  ஏன் ?

> > 2.
> > உடுத்தி, உடுத்து எது சரி ? ஏன் ?

> > 3.
> > கோர்த்தான், கோத்தான் எது சரி ? ஏன் ?

> > 4.

> > சின்னபின்னம், சின்னாபின்னம் எது சரி ? ஏன் ?

> > அன்புடன்,
> > நிரஞ்சன்

> > 2012/4/26 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

> >> 2012/4/26 Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>

> >>>    1. அரண்மனை வீரர்களில் யார் சிறந்தவர் ? அரண்மனை வீரர்களுள் யார்


> >>>    சிறந்தவர் ?.--> இந்த இரண்டில் எது சரி ? ஏன் ?

> >> இரண்டு வடிவங்களும் வழக்காற்றில் உள்ளன.  ஆயினும், I would prefer

> >> வீரர்களுள்.  ஆங்கிலத்தில் சொல்லிப் பாருங்கள்: Who *among* the soldiers


> >> of our side is good/better/best.  Among என்ற பொருள் வரவேண்டுமானால் உள் என்ற
> >> விகுதியைப் பயன்படுத்தினால் தெளிவாக இருக்கும்.  ஆனால், நாடுகளில், மொழிகளில்,
> >> நபர்களில் என்ற comparator ஆகவும் இல் பயன்படலாம்.  ‘யாம் அறிந்த மொழிகளிலே’
> >> ஓர் எடுத்துக் காட்டு. மொழி+கள்+இல்+ஏ.  யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
> >> வள்ளுவன்போல் இளங்கோவைப் போல்... புலவரிலே.  புலவர்+இல்+ஏ.  இதுவும்
> >> ஏற்றுக்கொள்ளக் கூடியதே.  And it has been authenticated by giants.

> >>>    1. ஒரு படத்தின் பாடல்களை வெளியிடும் போது " இன்று இசை வெளியீடு" என்று


> >>>    எழுதுகிறார்கள். இது சரியா ? இன்று பாடல்கள் வெளியீடு என்று தானே  இருக்க
> >>>    வேண்டும் ?

> >>> பாடல் என்றாலே இசையுடன் கூடியதுதான்.  மரபு சார்ந்த  பாடல்களுக்கு இது
> >> பொருந்தும்.  மரபு சாராத வடிவங்களிலும் மென்மையான இசை ஒலித்தபடிதான்
> >> இருக்கிறது.  பாடல் வெளியீடு என்பதே பொருள் ரீதியாகப் பொருத்தமானது.  ஆனால்,
> >> இசையமைப்பாளர்கள், இசைக்கே முதலிடம் கோருவதால், இசை வெளியீடு என்கிறார்கள்.
> >>  பாடல் வெளியீடு என்னும்போது, இயற்றப்பட்ட வரிவடித்திலான பாடல்,
> >> இசையமைக்கப்பட்ட பாடல் இரண்டுமே உள்ளடங்கி இருக்கின்றன.  இசை வெளியீடு என்பது,
> >> இயற்றப்பட்ட வரி அல்லது வார்த்தை வடிவத்தை ஒதுக்கி விடுகிறது.  If one has to
> >> do justice and be fair to both பாடல் வெளியீடு என்பதே பொருத்தம்.  (சரி என்று
> >> சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.  இது சினிமாவின் உள்ளரசியல் சம்பந்தப்பட்ட
> >> விஷயம்.  மொழியின் வடிவத்தில் இன்னது பொருத்தம் என்பதைச் சொல்லிவிட்டேன்.
> >>  மற்றதை விட்டுவிடலாம்.  அதை ஆராய வேண்டாம்.)

> >>>    1. எதிர்க்கட்சி தலைவர் இணைய தளம் ஒன்றிற்கு/ஒன்றுக்கு பேட்டி


> >>>    அளித்தார் --> இதில் எது சரி ? ஏன் ?

> >> இது எல்லாப் பெயர் சொல்லிலும் இடம்பெறும் இரண்டு வேறுபட்ட வடிவங்கள்.
> >> வெளிநாட்டுக்கு, வெளிநாட்டிற்கு,|| சொல்லுக்கு, சொல்லிற்கு || கணக்குக்கு,
> >> கணக்கிற்கு.... இப்படி இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன.

> >> பகுபதம் பார்த்தால் ஒன்றிற்கு=ஒன்று+இன்+கு. ஒன்றுக்கு= ஒன்று+கு.
> >>  நாட்டிற்கு=நாடு+இன்+கு, நாட்டுக்கு=நாடு+கு.

> >> இன் என்ற இடைநிலையைச் சேர்க்காமலேயே பொருள் விளங்குகிறது என்றால்,
> >> சிம்ப்பிள் வடிவம் ஒன்றுக்கு, நாட்டுக்கு, இனத்துக்கு, சொல்லுக்கு,
> >> கணக்குக்கு.... இப்படி.  ஒன்றுக்கு என்பது சிம்பிள் வடிவம்.  நேரடியானது.
> >> ஒன்றிற்கு, வழக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவம்.  (என்னுடைய
> >> என்சைக்ளோபீடியா பிரிடானிகா மொழிபெயர்பு இணையாசிரியப் பொறுப்பில் சேர்ந்ததும்
> >> நான் செய்த முதல் காரியம், இந்த வேறுபாட்டைச் சுட்டிக் காட்டி, விற்கு,
> >> டிற்கு, கிற்கு போன்ற எல்லா வடிவங்களையும் find and replace with வுக்கு,
> >> டுக்கு, குக்கு... எட்செட்ரா.  தேவையற்ற இடைநிலை என்பதால் விட்டுவிட்டோம்.
> >>  This was a combined editorial decision--Sudha Seshayyan, Madhurabharathi
> >> and me.)

> >> இரண்டு வடிவங்களும் புழக்கத்தில் இருந்தாலும் எளிமை கருதி இந்த மாற்றத்தைச்
> >> செய்தோம். -விற்கு -திற்கு, -சிற்கு, றிற்கு எல்லாம் தவறு என்பதாலன்று.

> >> --
> >> அன்புடன்,
> >> ஹரிகி.

> >> --
> >> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின்...

read more »

Hari Krishnan

unread,
Apr 28, 2012, 6:51:13 AM4/28/12
to santhav...@googlegroups.com


2012/4/28 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

கொழும்புவில், கொழும்பில் 
திம்புவில், திம்பில்
பெங்களூருவில், பெங்களூரில்

கரும்பு=கரும்பில், கரும்பிலிருந்து, கரும்பினால், 
இரும்பு=இரும்பில் இரும்பிலிருந்து, இரும்பைக் கொண்டு
அரும்பு=அரும்பில், அரும்பிலிருந்து, அரும்பை எடுத்து

இதே விதி மேற்சொன்ன ஊர்ப்பெயர்களுக்கும் பொருந்தும்

கொழும்பிலிருந்து, கொழும்பில் நடைபெற்ற, கொழும்பைச் சேர்ந்த, கொழும்புக்குப் புறப்பட்டு, கொழும்பின், 
திம்பில், திம்பிலிருந்து, திம்புக்கு..... (திம்பு என்றோர் ஊர் இருக்கிறதா? எங்கு?)
பெங்களூரு= சிக்கல் ஊரு என்பதில்தானே? முற்றியலுகரத்தில் முடிந்திருப்பதால் குழப்புகிறதா?

பெங்களூர் என்று சொன்னவரையில், பெங்களூரில் என்று சேர்த்தெழுதுவதில் பிரச்சினை இல்லை.  ஆனால் இப்போது பெங்களூரு ஆகிவிட்டது.

இதைப் போல ருகரத்தில் முடியும் தமிழ்ச் சொற்களோடு வேற்றும உருபுகளை எப்படிச் சேர்ப்போம்?  இடையின ருகரத்தை மட்டும் பரிசீலிக்க எடுத்துக் கொள்வோம்.

கரு, திரு, உரு, அரு, குரு, சத்துரு, துரு.....

கரு=கருவை, கருவில், கருவால், கருவின், கருவிலிருந்து....
திரு=திருவை, திருவில், திருவால், திருவிலிருந்து
உரு=உருவில், உருவால் உருவை உருவிலிருந்து,
அரு, குரு, சத்துரு, துரு எல்லாச் சொற்களும் இப்படியே அமைவதைக் காண்க.

ஆகவே, பெங்களூர் என்னும்போது, பெங்களூரிலிருந்து என்றும்; பெங்களூரு என்னும்போது பெங்களூருவிலிருந்து என்றும் எழுதுவதும் சொல்வதுமே சரி.

Siva Siva

unread,
Apr 28, 2012, 8:12:01 AM4/28/12
to santhav...@googlegroups.com
பெங்களூர் - இன்று கன்னட முறையை ஒட்டி 'பெங்களூரு' என்று ஆங்கிலம், தமிழில் எழுதினாலும், வேற்றுமை உருபு ஏற்கும்போது, பெங்களூரில், பெங்களூரை,,,என்றே எழுதல் தகும் என்று கருதுகிறேன்.

Bonus info:
கன்னடத்தில் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் வேற்றுமை உருபுகளோடு சேரும்போது - (உதாரணமாக 'அன்னு') -  'பெங்களூரன்னு' என்பனபோன்றே எழுதுவர். ('பெங்களூருவன்னு' என்னார்!)

(http://kannada.oneindia.in/news/2012/04/09/districts-ccb-police-arrest-13-dacoits-bangalore-aid0038.html

ಭರ್ಜರಿ ಬೇಟೆ : ಬೆಂಗಳೂರಲ್ಲಿ 13 ದರೋಡೆಕೋರರ ಬಂಧನ

)

மகளு - மகளன்னு, மகள, மகளிகெ,,,,,,

For more kannada learning - http://ccat.sas.upenn.edu/plc/kannada/

:)


2012/4/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 28, 2012, 8:46:02 AM4/28/12
to santhav...@googlegroups.com


2012/4/28 Siva Siva <naya...@gmail.com>

Bonus info:
கன்னடத்தில் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் வேற்றுமை உருபுகளோடு சேரும்போது - (உதாரணமாக 'அன்னு') -  'பெங்களூரன்னு' என்பனபோன்றே எழுதுவர். ('பெங்களூருவன்னு' என்னார்!)

தமிழில் வேற்றும உருபு எப்படிச் சேரும் என்பது பற்றிப் பேச்சு.  கன்னடதல்லி மாத்தாடு பேடா.  கன்னட க்ராமர் பேறே மாத்து.  அர்த்தாயித்தா?

ஆமாம், கன்னட வேற்றும உருபுகளும் தமிழ் வேற்றும உருபுகளும் ஒன்றா?  குற்றியலுகரம் கன்னடத்தில் இல்லை என்பது தெரியுமா?

இங்கே பேச்சு முற்றியலுகரப் புணர்ச்சி பற்றி.

கரு, குரு, துரு முதலானவை வேற்றும உருபுகளோடு எப்படிப் புணருமு?  ஏனு?  நன்ன ப்ரச்னே கொத்தாயித்தா?  அர்த்தாயித்தா?  கன்னடதல்லி மாத்தாடுவாகா யாவாகலு மாத்தாடு பேக்கு அனி கேளல்லா. தமிளல்லி யாவாகலு மாத்தாடுதீரு?

Hari Krishnan

unread,
Apr 28, 2012, 8:58:57 AM4/28/12
to santhav...@googlegroups.com


2012/4/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

யாவாகலு மாத்தாடு பேக்கு அனி கேளல்லா. தமிளல்லி யாவாகலு மாத்தாடுதீரு?

எரடு மாத்து பிட்டோகித்து.  யாவாகலு, ஹேகே, ஹெங்கே மாத்தாடுதீரா அனி ஓதிக்கொள்றீ.

Siva Siva

unread,
Apr 28, 2012, 9:01:58 AM4/28/12
to santhav...@googlegroups.com
கதவு / உறவு / பெங்களூரு

இச்சொற்களிடையே இறுதியில் வரும் உகர ஒலியில் வேறுபாடு உண்டா?


2012/4/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 28, 2012, 9:21:12 AM4/28/12
to santhav...@googlegroups.com


2012/4/28 Siva Siva <naya...@gmail.com>

கதவு / உறவு / பெங்களூரு

கன்னடதல்லி கதவு அல்லா.  அது பாகலு.  (உறவுக்கு என்ன வார்த்தை என்று யோசித்துச் சொல்கிறேன்.)

மொசரு, நீரு, ராகாலு, பாகலு எல்லாமே உகரம் நீட்டி உச்சரிக்கப்படுபவை.  தமிழில் அதுபோல் உச்சரித்தால் மொசரூ நீரூ ராகாலூ என்பதற்குக்கிட்டத்தட்ட ஒலிக்கப்படும்.

பெங்களூரு என்பதில் உள்ள உ, முழுமையாகக் கேட்கும்.  தமிழைப்போல பாதியில் நிற்காது. (அன்பே சிவம் படத்தில் மாதவன் ரயில் விபத்தில் தன் உடமைகளைப் பறிகொடுத்துவிட்டு, ஆந்திரா டிடியிடம் கம்ப்ளெயின்ட் கொடுக்கும்போது, தெலுங்கில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, மை லேப்டாப்பூ, பேகூ ஆல் கான் என்று பேசுவார் நினைவிருக்கிறதா?)  

பேக்கு என்பதில் உள்ள குகரம் தமிழில் குற்றியலுகரமாக ஒலிக்கும்.  கன்னடத்தில் பேக்கூ என்று முற்றியலுகரமாக ஒலிக்கும்.  (நிமகே கன்னட சென்னாகி கொத்தன்னி நனகே கொத்தூஉ.  தாவு கன்னடதல்லி மாத்தாடுவாக நேனு பக்கதல்லி நில்சியிதேனுஉ.)  கன்னடத்தில் குற்றியலுகரமாக ஒலிக்கும் ஒரே ஒரு சொல்லைச் சொல்ல முடியுமா?

Siva Siva

unread,
Apr 28, 2012, 9:28:48 AM4/28/12
to santhav...@googlegroups.com
கதவு / உறவு / பெங்களூரு

தமிழ்ச்சொற்களாக இம்மூன்று சொற்களிலும் ஈற்று உகர ஒலியை எப்படி உச்சரிக்கிறோம்/உச்சரிக்கவேண்டும் என்பதே என் வினா.

2012/4/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Apr 28, 2012, 10:21:47 AM4/28/12
to santhav...@googlegroups.com


2012/4/28 Siva Siva <naya...@gmail.com>

தமிழ்ச்சொற்களாக இம்மூன்று சொற்களிலும் ஈற்று உகர ஒலியை எப்படி உச்சரிக்கிறோம்/உச்சரிக்கவேண்டும் என்பதே என் வினா.

மூன்றும் முற்றியலுகரம்.

உணவு என்ற சொல்லில், முதலெழுத்தான உ, மூன்றாவது எழுத்தான வு இரண்டும் ஒன்றேபோல் உச்சரிக்கப்படுகின்றனவா?  The third letter has a tinge of W in it whereas other mutriyalugara vu-s sound like v.  

naa.g...@gmail.com

unread,
Apr 28, 2012, 10:32:18 AM4/28/12
to சந்தவசந்தம்

On Apr 28, 5:12 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> பெங்களூர் - இன்று கன்னட முறையை ஒட்டி 'பெங்களூரு' என்று ஆங்கிலம், தமிழில்
> எழுதினாலும், வேற்றுமை உருபு ஏற்கும்போது, பெங்களூரில், பெங்களூரை,,,என்றே
> எழுதல் தகும் என்று கருதுகிறேன்.
>

நானும் அவ்வாறே கருதுகிறேன். கன்னடத்திலே கூட ஈற்றுகரம் அழிந்துவிடுதலைக்
காட்டியது பயனுடையது.

நா. கணேசன்

> Bonus info:
> கன்னடத்தில் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் வேற்றுமை உருபுகளோடு சேரும்போது -
> (உதாரணமாக 'அன்னு') -  'பெங்களூரன்னு' என்பனபோன்றே எழுதுவர்.
> ('பெங்களூருவன்னு' என்னார்!)
>

> (http://kannada.oneindia.in/news/2012/04/09/districts-ccb-police-arres...


> ಭರ್ಜರಿ ಬೇಟೆ : ಬೆಂಗಳೂರಲ್ಲಿ 13 ದರೋಡೆಕೋರರ ಬಂಧನ)
>
> மகளு - மகளன்னு, மகள, மகளிகெ,,,,,,
>

> For more kannada learning -http://ccat.sas.upenn.edu/plc/kannada/
>
> :)
>
> 2012/4/28 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/4/28 Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>

Niranjan Bharathi

unread,
Apr 30, 2012, 9:02:36 AM4/30/12
to santhav...@googlegroups.com

மிக்க நன்றி ஐயா.
அதே போல் மேலும் சில சந்தேகங்கள் தோன்றின.

1.தொலைகாட்சி, தொலைக்காட்சி

--> தொலை காட்சி என்றால் தொலைந்து போகிற காட்சி என்ற பொருள் வந்து விடும். அதனால் ஒற்று மிகுந்து வந்தால் தான் அது பெயர்ச்சொல்லாக வரும்.

2. தொலைபேசி, தொலைப்பேசி எது சரி ?

அதே போல் தொலை பேசி என்று எழுதினால் பேசித் தொலைந்து போ என்ற பொருள் வந்து விடும். அதனால் ஒற்று மிகுந்து வந்தால் தான் அது பெயர்ச்சொல்லாக வரும்.

மேற்சொன்ன இரண்டு விளக்கங்களும் சரி தானே.

ஆனால் அதே வகையில் தொலைத்தூரம் என்று நாம் எழுதுவதில்லையே. இது ஏன் ?

அன்புடன்,
நிரஞ்சன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

naa.g...@gmail.com

unread,
Apr 30, 2012, 10:10:32 AM4/30/12
to சந்தவசந்தம்

On Apr 30, 6:02 am, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:


> மிக்க நன்றி ஐயா.
> அதே போல் மேலும் சில சந்தேகங்கள் தோன்றின.
>
> 1.தொலைகாட்சி, தொலைக்காட்சி
>
> --> தொலை காட்சி என்றால் தொலைந்து போகிற காட்சி என்ற பொருள் வந்து விடும்.
> அதனால் ஒற்று மிகுந்து வந்தால் தான் அது பெயர்ச்சொல்லாக வரும்.
>
> 2. தொலைபேசி, தொலைப்பேசி எது சரி ?
>
> அதே போல் தொலை பேசி என்று எழுதினால் பேசித் தொலைந்து போ என்ற பொருள் வந்து
> விடும். அதனால் ஒற்று மிகுந்து வந்தால் தான் அது பெயர்ச்சொல்லாக வரும்.
>
> மேற்சொன்ன இரண்டு விளக்கங்களும் சரி தானே.
>
> ஆனால் அதே வகையில் தொலைத்தூரம் என்று நாம் எழுதுவதில்லையே. இது ஏன் ?
>

தொலைபேசி, தொலைக்காட்சி - வழக்கத்துக்கு வந்துவிட்டன.

தொலைதூரம் - தூரம் வடசொல் ஆனதால் ற்று மிகாது.
போஸ்ட்கம்பம் என்பதுபோன்ற சொல்லாக்கம். இப்படித் தொடராக்கல்
திராவிட மொழிகளில் மிகப்பழைய மரபு. விரிவு தேவையெனில்,
படிக்கவும்:

பெரி. சந்திரா பற்றி வீட்டுக்கு வந்தபோது அனந்த் கேட்டார்.
அவரது முக்கியமான கட்டுரை இது.
Pleonastic compounding by Peri. Chandra
http://www.laurasianacademy.com/pleonastic.pdf

நா. கணேசன்

> அன்புடன்,
> நிரஞ்சன்
>

> 2012/4/28 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>

pushpa christy

unread,
Apr 30, 2012, 9:32:25 PM4/30/12
to santhav...@googlegroups.com
ஹரியண்ணா ,
பூட்டானின் தலை நகரம் திம்பு
புஷ்பா கிறிஸ்ரி
Reply all
Reply to author
Forward
0 new messages