தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - மீ. விசுவநாதன்

4 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Apr 13, 2026, 3:26:09 PM (2 days ago) Apr 13
to Santhavasantham, M. Viswanathan
"ஒவ்வொரு நாளும் பேரின்பம்"
            (மீ. விசுவநாதன்)

சித்திரை மாதம் பிறப்பதுவும் - பின்
சென்றது மறுபடி தோன்றுவதும்
நித்திய புருஷன் இயக்கத்தில் - வரும்
சித்திர வாழ்க்கையின் நிழற்படமே

காலையில் பூக்கள் மலர்வதுவும் - பின்
கதிரவன் மறைகையில் வாடுவதும் 
வேலையில் தர்ம ராஜனவன் - நிதம்
விதிவழி நடத்துற கர்மபலன் 

எத்திசை வாழும் உறவுகளும் - தினம்
இன்பமாய் நிறைவுடன் இருந்திடுக
புத்தொளி வீசி நலமுடனே - நற்
பொழுதென நாளுமே விருந்திடுக 

கவிதையும் கதைகள் கட்டுரையும் - நெடுங்
கனவெனும் சமுத்திர வெண்நுரைகள்
இவைகளில் போதை கொள்ளாமல்  - மனம்
இயல்புடன் இருந்திடப் பழக்கிடுவோம்.

அச்சமே நீங்க அன்புசெய்வோம் - அது
ஆனையின் பலமெனத்  தெம்புகொள்வோம் 
எச்சமாய் உள்ள வினைப்பயனில் - நம்
ஈகையின் கணக்கினைக் கூட்டிடுவோம் 
                 (14.04.2026.  12.05 am)

இமயவரம்பன்

unread,
Apr 13, 2026, 9:21:44 PM (2 days ago) Apr 13
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
அருமை திரு மீவி.

M. Viswanathan

unread,
Apr 13, 2026, 10:07:34 PM (2 days ago) Apr 13
to இமயவரம்பன், Santhavasantham
அன்புக் கவிஞர் இமயவரம்பன் அவர்களது கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

நல்வாழ்த்துகளுடன்,
மீ. விசுவநாதன்
14.04.2026 07.37 am

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 13, 2026, 10:34:30 PM (2 days ago) Apr 13
to santhav...@googlegroups.com
புத்தாண்டுத் தீர்மானம் மிக அருமை விசு! 
>> விதிவழி நடத்துற - நடந்திடும்.
அனந்த்

Ram Ramakrishnan

unread,
Apr 13, 2026, 11:16:13 PM (2 days ago) Apr 13
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 14, 2026, at 08:04, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2-Cs0tVi4w%3DRMTeQUedwCiOPE6bb5ktPTDE_%3DB%3D_KoFQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages