சேப்பாக்கமும் சே மரமும்

84 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 22, 2014, 10:49:42 PM8/22/14
to Santhavasantham
தருமம் மிகு சென்னை மாநகரம் தன் 375-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
அதன் ஒரு பகுதியின் பெயர் பற்றிய சிந்தனை.

பாக்கம் (> வாக்கம்) என்னும் ஊர் நெய்தல் நிலத்தில் நீர்வளமும், வயல்களும், உழுத 
நிலமும் சேர்ந்த குடியிருப்பு. வில்லி வாக்கம் (வில்லிபாக்கம்), வளசரவாக்கம். 
ஆந்திராவில் கொள்ளிப்பாக்கம் (கொள்ளிப்பாக்கை) வரலாற்று முக்கியத்துவம் 
பெற்றது. அச்சிறுபாக்கம், உத்தரமேரூர் ஒன்றியத்தின் நெய்யாடுபாக்கம் 
[வேறு(aside) - இலவச உணவு திட்டத்தை அமல்படுத்த ஈவேரா பரிந்துரையில் 
காமராஜர் நியமித்த நெ.து. சுந்தரவடிவேலு ஊர். பெ. தூரன், சிஎஸ், .. கல்லூரித் 
தோழர்கள். நெய்யாடுபாக்கத்தார் தூரன் மீது எழுதிய அரிய கட்டுரையை தூரன் 
நூற்றாண்டுவிழா ஃபெட்னா கொண்டாடியபோது அளித்தேன். விழாமலரில் அச்சானது. 
நெதுசுவும், குத்தூசி குருசாமியும் சகலன்கள்].

புள்ளம்பாக்கம் - பெருமாள் கோவில்:
ஆலப்பாக்கம் - மதுரவாயல் அருகே:
அரசம்பாக்கம், பனம்பாக்கம், ... எல்லாம் இருக்கிறது.

சேப்பாக்கம் - ஊர்ப்பெயர்க் காரணம் - ஓர் சிந்தனை:
புரசு மரத்தின் பேரால் புரசபாக்கம் (புரசவாக்கம்), பனைமரத்தால் நுங்கம்பாக்கம்,
பனைப் பேரால் பனம்பாக்கம், அரச மரத்தால் அரசம்பாக்கம், அதுபோல் 
சே மரத்தின் பெயரால் சேப்பாக்கம்.

சே மரம் என்றால் என்ன? சே என்றால் சிவந்து கறைபடிதல்.
வண்ணாரப்பேட்டைக்கு தேவையான மை தயாரிப்பது சே மரத்தின் கொட்டையில்
இருந்தாகும்.

சேங்கொட்டை cēṅ-koṭṭai , n. < id. +. 1. Marking-nut; சேமரத்தின் 
கொட்டை. (பதார்த்த. 1066.) 2. Marking-nut tree, m. tr., Semecarpus 
anacardium; மரவகை. (மலை.)

சேங்கொட்டைக்குறி cēṅ-koṭṭai-k-kuṟi
, n. < சேங்கொட்டை +. Marks on clothes made with the juice of 
the marking-nut; சேங்கொட்டைப் பாலால் இடும் ஆடைக்குறி.

சேப்பாக்கம் = சே மரங்கள் நிறைந்த பாக்கம்.

நா. கணேசன்

இஃது மதராசபட்டினம் நூலாசிரியர் நரசையாவின் மிந்தமிழ் மடலுக்கு அனுப்பிய மறுமொழி.


------

சென்னையும் சினிமாவும்: குதிரைகள் தயவால் உருவான கோடம்பாக்கம்!

சென்னை இடப்பெயர்கள்:



M. Viswanathan

unread,
Aug 22, 2014, 11:04:13 PM8/22/14
to santhav...@googlegroups.com, Krishnan H, hgs...@gmail.com, Krishna M.Viswanath, srivid...@gmail.com, Seethalakshmi Viswanath, Krishnamoorthy Mohan, Arkay Ramakrishnan, Raghu A, Venkatesan J, j...@jayamcpl.com, Lakshmi, lakshmi.x...@mdlz.com
திரு. கணேசன் அவர்களது குறிப்பு ஒரு இடத்தின் பெயருக்கான காரணத்தை அறிந்து கொள்ளப் பயன் தரும் பகிர்வு. நன்றி.
மீ.விசுவநாதன் 


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kavingar Jawaharlal

unread,
Aug 22, 2014, 11:24:30 PM8/22/14
to santhavasantham
நல்ல பதிவு .
--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

N. Ganesan

unread,
Aug 24, 2014, 2:43:24 AM8/24/14
to santhav...@googlegroups.com, housto...@googlegroups.com


On Friday, August 22, 2014 8:24:30 PM UTC-7, kavingar jawaharlal wrote:
நல்ல பதிவு .
2014-08-23 8:34 GMT+05:30 M. Viswanathan <meev...@gmail.com>:
திரு. கணேசன் அவர்களது குறிப்பு ஒரு இடத்தின் பெயருக்கான காரணத்தை அறிந்து கொள்ளப் பயன் தரும் பகிர்வு. நன்றி.
மீ.விசுவநாதன் 
தருமம் மிகு சென்னை மாநகரம் தன் 375-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
அதன் ஒரு பகுதியின் பெயர் பற்றிய சிந்தனை.

கோடம் என்றால் செங்கருங்காலி மரம். கோடம்பாக்கம் என்ற பெயரைப் பற்றி ஆராய்வோம்.
பேரா. சி. இலக்குவனார் மகன் திருவள்ளுவனுக்கு எழுதிய மடல்.

On Saturday, August 23, 2014 3:05:45 PM UTC-7, இலக்குவனார் திருவள்ளுவன் wrote:

சேர நாட்டில் குன்று உள்ள ஊர்கள் கோடு எனக் குறிக்கப்  பெ றுகின்றன.   பிற தமி ழ் நாட்டிலும்  இது பொ ருந்தும். ஆனால், இ வை கோடு என முடிவதாக இருக்கும்.
  கோடம் என்பது மா மரத்தை யும் நெ ல்லி மரத்தை யும் குறிக்கும்.

கேரளா ஊர்களில்கோடு என்றால் வளைதல் என்ற பொருள். நீரோடை, கழிகள் வளைந்து செல்லும் இடம் கழிகோடு. இன்றைய கள்ளிக்கோட்டை. கழிகோடு (கழிகோறு) என்று எழுதியுள்ள கல்வெட்டை சென்ற ஆண்டு பேரா. ராகவவாரியர் கண்டுபிடித்துள்ளார்.

வளைந்து இருக்கும் மரம் (crooked) என்பதால் கோடம் (>ஓடம்) என்று செங்கருங்காலி மரத்துக்குப் பெயர் என
தமிழகராதிகள் சொல்கின்றன. விரிவாகக் கீழே பார்ப்போம்.

கோடம் என்றாம் மா என்றோ, நெல்லி என்றோ காணோம்.
 

மாமரங்கள்  அட ர்ந்திருந்த  ஊர் மாம் பாக்கம் என அழை க்கப்பட்டுள்ளமை யால், நெ ல்லி மரங்கள் நி றை ந்து இருந்து இப் பெ யர் வந்திருக்கலாம்.

தமிழ் அகராதிகளில் கோடம் என்றால் ஒரே ஒரு தாவரத்தைத் தான்
குறிக்கிறது. பெப்ரிசியஸ், சென்னைப் பல்கலைப் பேரகராதி.
கோடம் = செங்கருங்காலி. இதன் தாவரவியற்பெயர்
Acacia chundra (அல்லது A. sundra). ஆங்கிலத்தில் Red Cutch tree (Glabrous foliaged cutch)
கோடம்¹ kōṭam

n. cf. சிறுமாரோடம். Red catechu. See செங்கருங்காலி. (மலை.)

செங்கருங்காலி (A. chundra) மரத்திற்கு வேறுபெயர்கள் உண்டு: (1) ஓடம் (2) மாரோடம் (3) கறை

ஓடம், மாரோடம் (A. chundra):

குடைவேல மரத்தை உடை (< குடை) மரம் என்கிறோம், 
கோணாய் (=கோள் + நாய்) > ஓநாய் ஆகிறது.
அதுபோல், கோடம் (A. chundra) > ஓடம் என்றாகிறது. 
சீ-மார்/விளக்கு-மார் இவற்றில் உள்ள “மார்” என்பதுடன் சேர்ந்து
மாரோடம் என்று ஓடம் (செங்கருங்காலி) சங்க இலக்கியத்தில் பயில்கிறது.
சிறு-மாரோடம் (குறிஞ்சிப்பாட்டு) = செங்கருங்காலி (நச். உரை).
புதர் போன்ற தாவரம், மேலும் நெய்தல் நிலத்தில் அதிகம் இருப்பதால்,
தில்லைப் புதையுடன் சேர்த்து கொங்குவேள் பெருங்கதையில் சொல்கிறார்:
ஆய்பூந் தில்லையும் அணிமாரோடமும் (பெருங். உஞ்சைக். 50, 31).



கறை (A. chundra):

கறை என்ற சொல்லே கடி-ர > கதிர  (cf. தமிழின் கடம்பு, ஸம்ஸ்கிருதத்தில் கதம்ப எனத் திரியும்) 
என்று வடமொழியில் பெயராகிறது. கறை - கர (khaira), கதிர
என்று இந்தியில் பெயர். இதனைத் தாம்பூலம் தரிக்கும்ப்போது பயன்படுத்தியதை எல்லா இலக்கியங்களும்
சொல்கின்றன. நற்றிணையில் நறு-மோரோடம்(மாரோடம்) என்பது தாம்பூலத்துக்கு நறுமணம் அளிப்பதால்.

விஜயநகர சாம்ராஜ்ய ராஜகுரு மாதவ ஆச்சார்யர் சர்வதரிசனசங்கிரகத்தில் லோகாயதர்களின் நான்கு பூதங்களின்
வாதத்தை விளக்கும்போது ஆதிசங்கரரை மேற்கோள் காட்ட கோடம் (அ) கறை (செங்கருங்காலி) மர 
விளைபொருள் பயன்படுகிறது.  Let me give E. B. Cowell translation:

”In this school the four elements, earth, &c., are the [3]original principles; 
from these alone, when transformed into the body, intelligence is produced, 
just as the inebriating power is developed from the mixing of certain 
ingredients;[7] and when these are destroyed, intelligence at once perishes 
also. They quote the Śruti for this [Bṛihad Áraṇy. Up. ii. 4, 12], "Springing 
forth from these elements, itself solid knowledge, it is destroyed when they 
are destroyed,—after death no intelligence remains."[8] Therefore the soul is 
only the body distinguished by the attribute of intelligence, since there is 
no evidence for any soul distinct from the body, as such cannot be proved, 
since this school holds that perception is the only source of knowledge and 
does not allow inference, &c. ”

”[7] Kiṇwa is explained as "drug or seed used to produce fermentation in the 
manufacture of spirits from sugar, bassia, &c." Colebrooke quotes from 
Śaṅkara: "The faculty of thought results from a modification of the aggregate 
elements in like manner as sugar with a ferment and other ingredients becomes 
an inebriating liquor; and as betel, areca, lime, and extract of catechu 
chewed together have an exhilarating property not found in those substances 
severally."

[8] Of course Śaṅkara, in his commentary, gives a very different 
interpretation, applying it to the cessation of individual existence when the 
knowledge of the Supreme is once attained. Cf. Śabara's Comm. Jaimini Sút., i. i. 5.”

இது போன்ற லோகாயதவாதத்தை மணிமேகலையிலும், செயங்கொண்டாரின் காராணை விழுப்பரையன் 
வளமடலிலும் காணலாகும்.

கோடம் என்னும் செங்கருங்காலிமரம் இந்தியா முழுதும் இருக்கிறது:

செங்கருங்காலிக்குக் கோடம் என்ற பெயர்:
E. Balfour:
Acacia Sundra, D.C.
Acacia chundra. Wild | Mimosa. Roxb

"This tree grows in the peninsula and the Sunderbuns, but varies in size, in different localities. Dr. Gibson mentions that it is common in the jungles of Bombay, but is there always scrubby, small and crooked; and, though rather plentiful in the forests under the ghAts, he had not seen it of a size capable of affording planks. [...] The wood is of a dark chocolate colour, very hard, heavy and very strong, a one-inch bar sustaining a weight of 500 lbs. It is also used for rice pestles. A resin similar to that which exudes from the A. catechu, is procured from this tree. The two trees are nearly alike, the uncertainty of the prickles absent or present, being a distinguishing charactersitic of this one - Roxb. ii, 562."

----

Acacia Sundra, D.C. - A large tree resembling Acacia catechu, but with dark brown branches and no pubescense. - A.M.S. in Capital - Indian Agriculturist, August 1, 1908.

In sum, explaining Kodambakkam as coming from Ghota Bagh seems to be an urban myth (folk-etymology).
Because of the crooked and bent nature of its trunk and branches Acacia Chundra trees are called Kodam (கோடம்)
in ancient Tamil. And, hence the name, Kodambakkam just like Panambakkam (after Palmyrah), Thennambakkam (after Coconut trees),
Maambakkam (after Mango tree). 

நா. கணேசன்

குறிப்பு:
கருங்காலி (Acacia catechu = Downy-foliaged cutch) செங்கருங்காலி மரத்தில் இருந்து 
வேறானது. ஆங்கிலத்தில் கருங்காலி (A. catechu) Black Cutch tree.

கருங்காலிமரத்தில் முள் இருக்கும். கோடம் (= செங்கருங்காலி மரத்தில் முள் இல்லை.
BOTANIC DESCRIPTION
Acacia catechu is a small or medium-sized, thorny tree upto 15 m tall; 
bark dark grey or greyish-brown, peeling off in long strips, or sometimes in
narow rectangular plates, brown or red insde; branches slender, 
puberlous when young but glabrascent, with 2 curved, 8-mm prickles at the base of each petiole.

 
On Saturday, August 23, 2014 7:02:08 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Saturday, August 23, 2014 4:12:39 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
கோடம்பாக்கைத்தை godambaakkam என யாரும் உச்சரிப்பதில்லை. அம் விகுதி சேர்க்கவும் தேவை இல்லை.
 bagh= paak எனவும் மருவ வாய்ப்பு இல்லை.

சென்னை தெலுங்குநாட்டவர் அதிகம் வாழும் ஊர். அதில் G- என்னும் சொல்முதல் எழுத்து K- என்றாகிறது
- ஈழமும், தென்பாண்டிநாடும் போல் - என்பது இந்த கோடம்பாக்கம் எட்டிமாலஜியில் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது வாஸ்தவமே. 
-அம் விகுதியும் நீங்கள் சொல்வதுபோல் ஐயமளிக்கிறது.

கோடு என்று தெற்கே பல ஊர்கள் சேரநாட்டில் இருக்கின்றன. அதாங்கோடு (தொல்காப்பியரின் ஆசான் ஊர், விளாங்கோடு > விதாங்கோடு).
நீர் வளைந்து செல்லும் பகுதி = கோடு. கோடலம் - பிறைபோல் வளைந்த மாலை வகை, ஒரு பூ.
கோடு அம் சாரியை பெற்று கோடம்பாக்கம் என்றாகியுள்ளதா? - என்றும் பார்க்கலாம்.

நா. கணேசன்

 
Reply all
Reply to author
Forward
0 new messages