நவராத்திரி நாள் 1

2 views
Skip to first unread message

KKSR

unread,
Sep 22, 2025, 11:46:40 AM (yesterday) Sep 22
to santhav...@googlegroups.com


ஓம் ஶ்ரீ மாத்ரே நம:

எண்ணியெண்ணி சக்தியுன் எண்ணத்தில் நான்திளைக்க
எண்ணத்தை ஆள்வதற்(கு) என்னுடனே - எண்ணெழுத்தாய்
வந்துதிக்க தும்பிக்கை யானைத் துணையனுப்பு
சிந்துகவி பாடச் சிறந்து!

நவராத்திரி 1

உள்ளமொரு கோவில் - அதில்
உன்னை ஏற்றிவைத்தேன்
வெள்ளமென அன்பை - அங்கு
விரவி நிற்பவளே!

துள்ளும் எண்ணமெலாம் - சக்தி
தூண்டும் வண்ணமன்றோ
விள்ள விள்ள விள்ள - அதை
வேண்டும் சக்தியன்றோ!

முள்ளை எடுத்துவிட்டே - ஆங்கு
மோன விதைவிதைத்தே
கள்ளம் கபடமில்லா - அவள்
கருணை மழைபொழிவாள்!

அள்ளக் குறையாத - அன்பை
அமுதமெனப் பொழிவாள்
எள்ளல் செய்வோர்முன் - அவள்
ஏற்றம் தந்திடுவாள்

தள்ள வருவோர்க்கும் - அவர்
தவற்றை உணர்த்திடுவாள்
பள்ள மேடெல்லாம் - அன்னை
பருவ விளையாடல்

பிள்ளை எனைக்கண்டால் - அவள்
பித்துக் கொண்டிடுவாள்
அள்ளி அணைத்தெனையே - அவள்
ஆனந்தம் அடைவாளே!

வள்ளல் எனவாழ்த்தி - அகம்
வாரிதிபோல் பொங்கி
துள்ளும் அழகினிலே - அட(த்)
தூக்கம் தொலைப்பாளே!

குள்ளக் குறள்போல - அவள்
குரலொலித்திடுமே
உள்ளக் களிப்பாகி - அது
உலகை அளந்திடுமே

பள்ளி கொண்டவளை - எனைப்
பாலித்திருப்பவளை
விள்ள வகைசெய்தே - இன்று
விழியில் கலந்தாளே!

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! - அம்மே
ஓம் சக்தி துர்க்கையளே!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! - அம்மே
ஓம் சக்தி! உனைச் சரணே!

~ சுரேஜமீ
22.09.2025 காலை 09:08


Sent from Mobile
Reply all
Reply to author
Forward
0 new messages