நம்பி தங்கக் கம்பி

5 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 30, 2026, 3:02:55 PM (2 days ago) Apr 30
to santhavasantham

நம்பி தங்கக் கம்பி

 

சின்னச் சின்னத் தம்பி - அந்தத்

       தம்பி பேரு நம்பி

சொன்னபடி செய்யும் - அவன்

       சொக்கத் தங்கக் கம்பி

 

மிட்டாய் கேட்க மாட்டான் - எதையும்

       வெளியில் தின்ன மாட்டான்

முட்டாள் பசங்க போலே எதற்கும்

       முணுமுணுக்க மாட்டான்

 

 

குப்பை போட மாட்டான் - வீணாய்க்

       கூச்சல் போட மாட்டான்

தப்பு செய்ய மாட்டான் - வம்புச்

       சண்டை போட மாட்டான்

 

எதனைக் கேட்ட போதும் - அதை

       எண்ணி எண்ணிப் பார்ப்பான்

கதைகள் பாட்டி சொன்னால் - மிகக்

       கவனமாகக் கேட்பான்

 

பாட்டி சொன்ன கதைகள் - நெஞ்சில்

       பதித்துவிட்ட விதைகள்

போட்ட விதை முளைக்கும் - பின்னர்

       போற்றும் புகழ் விளைக்கும்

 

அன்று பாட்டி சொன்ன  - கதை    

       அவனுளத்தில் மின்ன

என்றும் நினைத்துப் பார்ப்பான் -அதை

       எண்ணந் தன்னில் சேர்ப்பான்

 

 திருக்கு றள்பா சொன்ன- மிகச்

       சிறப்புக் கொண்ட கதையாம்

பெருமை யோடு வாழும் - வழி

       பேசு கின்ற கதையாம்

 

வேட்டை ஆட வேண்டி - இரு

       வீரர் காடு சென்றார்

ஓட்ட முயல்தன்னை- ஒருவர்

       உடனடியாய்க் கொன்றார்

 

தும்பிக்கையைத் தூக்கி - யானை

       துரத்தப் பயம்போக்கி

நம்பிக்கையாய்  வேலைஒருவர்

       நன்கு வீசி நின்றார்

 

யானை தப்பிப் போச்சு- எனினும்

       அவரே பெரிய வீரர்

ஆன படியால் பெரிதாய் - என்றும்

       ஆசை கொள்ள வேண்டும்

  என்று பாட்டி சொல்ல - அது

       இவனுளத்தை வெல்ல

சின்னச் சின்ன ஆசை - இவன்

       தேக்கி வைப்ப தில்லை.

KKSR

unread,
Apr 30, 2026, 10:14:41 PM (2 days ago) Apr 30
to santhav...@googlegroups.com
ஆஹா! அருமை மாமா!

சிறுவர் நெஞ்சில் நிற்கும் - இந்தச்
   சின்னத் தம்பி பாடல்
சிறந்த பண்பை ஊட்டி - அவர்
  செழிக்கச் செய்யும் பாடல்!

அன்புடன்
சுரேஜமீ
01.05.2026 காலை 06:14

Sent from Mobile


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAwwoYwVP4qZpJoyVuTLtNyiTopCNc4A1gG5JX1%3Dztsyg%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Apr 30, 2026, 10:36:19 PM (2 days ago) Apr 30
to santhav...@googlegroups.com
தங்கத் தம்பியின் குட்டிக் கதை அருமை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 1, 2026, at 00:32, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--

இமயவரம்பன்

unread,
May 1, 2026, 5:23:32 AM (yesterday) May 1
to santhav...@googlegroups.com, santhavasantham
“ கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது”

என்னும் குறட்பாவின் பொருளை உணர்த்தும் குட்டிக் கதைக் கவிதை மிக அருமை, தலைவரே! 
Reply all
Reply to author
Forward
0 new messages