கதிர்போல் உதித்த புத்தாண்டு
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
பொன்நெற் கழனி பொலிந்தாடப்
… பொங்கு புனலும் மிகுந்தோட
அன்னம் குறையா வளஞ்சேர
… அன்பின் உயர்வால் நலஞ்சூழ
இன்னல் புரியா மனங்கூட
… எங்கும் பகைமைக் குணந்தேயக்
கன்னல் இனிமைத் தமிழ்பாடக்
… கதிர்போல் புத்தாண்(டு) உதித்ததம்மா!
- இமயவரம்பன்