சந்தக்கவிமாமணி திரு தமிழழகன் படைப்புகள்

4,772 views
Skip to first unread message

Chandar Subramanian

unread,
Jun 17, 2012, 9:18:50 PM6/17/12
to santhav...@googlegroups.com
வணக்கம்.
 
குழுமத்தில் பலருக்கும் மிகவும் அறிமுகமான சந்தக்கவிமாமணி திரு தமிழழகன் அவர்களின் கவிதைகளை தொடராக இங்கு இடலாம் என நினைக்கிறேன். திரு தமிழழகன் அவர்கள் தம் கவிதைகளை இணையத்தில் இடும்படியாக என்னைக் கேட்டுக்கொண்டார். அதன்படி, அவர்தம் கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து இடுகிறேன்.

கவிதைகளை இடுமுன், அவரைப் பற்றிய குறிப்பையும் இவண் இடுகிறேன்.

--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Chandar Subramanian

unread,
Jun 17, 2012, 9:21:11 PM6/17/12
to santhav...@googlegroups.com

சந்தக்கவிமாமணி தமிழழகன்

 
இயற்பெயர்: வே. சண்முகம்
மற்றோர் புனைபெயர்: திருமந்திரம் சண்முக சுந்தரக் கவிராயர்
(திருமந்திரம் என்பது பிறந்த ஊராகிய தூத்துக்குடியின் பழைய பெயர்)
 
பெற்றோர்: தந்தை வேலு செட்டியார்; தாயார் வள்ளி அம்மை
பிறந்த நாள்: 21 - 4 - 1929 (சுக்கில ஆண்டு சித்திரத்திங்கள் 8 ஆம் நாள்)
 
கல்வி: பழைய பத்தாம் வகுப்புத் தேர்வு. தமிழில் புலவர் பட்டம் பெறுவதற்காக இலக்கண இலக்கியங்கள் எல்லாம் முறையாகப் பயின்றமை
 
பணி: திரைப்படங்கள் மூன்றுக்குத் துணை இயக்குநர். ஆறுக்குத் திரப்பாடல்கள் எழுதியவர். திருச்சி சென்னை வானொலி நிலையங்களில் நிலையக் கலைஞராக எழுத்துப்பணியில் நிகழ்ச்சி ஆசிரியர்.
 
புலமைத் துறைகள்: சோதிடம், வானநூல், ஆருடம், எண்கணிதம், தமிழிசை, மேடை நாடகம். தமிழ்க் கவிதைகளில் எல்லாக் கிளைகளிலும்; ஆசு, சித்திரம், மதுரம் வித்தவாம் எனும் நாங்கு வகைகள், இலக்கண இலக்கிய நுட்பங்கள் திரிபு, இயைபு, மடக்கு, சிலேடை ஆகியவை.
 
எழுத்துப்பணி: உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே பதினாறு வயதில் வெண்பா, கட்டளக் கலித்துறை, சிந்துகள் எழுதியவை.
இவருடைய முதற்கவிதைகள், குழந்தை இன்பம், என் குழந்தை எனும் இரண்டும் 1946 ஆம் ஆண்டு நவம்பரில் கலைமகள் தீபாவளி மலரிலும் பாரதிதாசனின் க்யில் ஏட்டிலும் வெளிவந்தமை. அந்நாள் முதல் தமிழ்நாட்டின் எல்லா ஏடுகளிலும் தொடர்ச்சியாக வெளிவந்தமை.
 
நூல்கள் (வெளி வந்தவை):
தமிழழகன் கவிதைகள் (முனைவர் மு வ முன்னுரை)
ஒளியத்தேடி (கவிதைகள்) முனைவர் சி பாலசுப்ரமணியன் முன்னுரை
மழலை அமுதம் (சிறுவர் கவிதைகள்) (குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா முன்னுரை)
பூமத்தாப்பு (குழந்தைப் பாடல்கள்)
காமாட்சி அந்தாதி
காமாட்சி திருமுறை வெண்பாத்திரட்டு
துளித்துளி (சின்னஞ்சிறு கவிதைகள்)
காவிய ஓவியம் (கம்பராமயணக் கவிதை நாடகம்) (வானொலியில் ஒலிபரப்பானது)
 
நூல்கள் வெளிவர வேண்டியவை:
அன்னை அபிராமி (அபிராமி அந்தாதிப் பாடல்களின் விளக்கத் தொடர் கட்டுரைகள், ஆனத்த விகடனில் தொடரா வெளிவந்தது)
வைகறை கானம் (கவிதைகள்)
அரங்கேற்றம் (கவிதைகள்)
பட்டுச்சிட்டு ( சிறுவர் பாடல்கள்)
இசைப்பாடல்கள்: 300 க்கும் மேல் வானொலியிலும் மேடைகளிலும் இசைத்தட்டுகளிலும் வெளிவந்தவை.
குட்டிக் கதைகள் (முன்னூறுக்கும் மேற்பட்டவை)
இசை நாடகங்கள், கவிதை நாடகங்கள் (வானொலியில் ஒலிபரப்பான 'முருகா சரணம்', 'சாகுந்தல சகிதம்' (நாட்டிய நாடகங்கள்).
சொல்லும் பொருளும்: சொல் விளக்கம், சொற்றொடர் விளக்கம், உவமைத்தொடர் விளக்கம், மரபுத்தொடர் விளக்கம், பழமொழி விளக்கம், இலக்கண விளக்கம்.
அறிவுரை வெண்பாக்கள்: ஐயாயிரத்துக்கும் மேல்
கந்தர் கட்டளை: ஆயிரம் கட்டளைக் கலித்துறைகள்
கட்சிக் கலம்பகம்: ஆயிரம் வெண்பாக்கள்
பிரபந்தங்கள்:
திருப்போரூர் மும்மணி மாலை
மகாலட்சுமி மாலை
மகாலட்சுமி அந்ததி
காமாட்சி அலங்காரம் (அணி இலக்கண விளக்க நூல், சித்திரக் கவிதைகள் உட்பட)
வரிப்பாடல்கள்: ஈரடிக் கவிதைகள், நான்கு அடிக் கவிதைகள், பன்னீரடிக் கவிதைகள், பதினாரடிக் கவிதைகள்
இலக்கியக் கட்டுரைகள்: ஏடுகளிலும் வானொலியிலும் வெளிவந்தமை
 
சில பின் குறிப்புகள்:
ஒளியைத் தேடி (கவிதை நூல்), சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி-லிட் வகுப்புக்கும் இளங்கலை வகுப்புக்கும் பாடநூலாக வைக்கப் பெற்றுள்ளன. சாகித்ய அகாடமி ஆண்டிதோறும் வெளியிடும் பாரதிய கவிதா தொகுப்பில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. யுனெஸ்கோ ஐ நா சுகாதார நிறுவனம் (பாரீஸ்) வெளியிடும் சிறந்த கவிதைகள் தொகுப்பிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றூள்ளன.
 
விருதுகள்/பரிசுகள்:
இந்திய அரசின் ஒலிபரப்புத்துறை நடத்திய இந்திய அளவிலான கவிதைப் போட்டியில் தமிழில் முதல் பரிசு பெற்றமை.
மாநில அரசின் பாரதிச் தாசன் விருது பெற்றமை
பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை, சந்தக் கவிமணி, கவிமாமணி, தமிழ்ச்சுடர், தமிக் காவலர், கவிஞானி ஆகிய விருதுகள், பல இலக்கிய நிறுவனங்களால் பெற்றமை.
 
இதுவரை எழுதியுள்ளவை:
கவிதைகள் ஒரு இலட்சத்திற்கு மேலும்
தனிப்பாடல்கள், வெண்பாக்கள், கட்டளைக் கலித்துறைகள் முப்பதாயிரத்திற்கு மேலும் இருக்கும்.
 
பொறுப்புப் பணிகள்:
திருவொற்றியூர் பாரதி பாசறையின் நிறுவனருள் ஒருவர், நிரந்தரத் தலைவர்
சென்னைப் பாரதி கலைக்கழகத்தில் தொடர்ந்து துணைத்தலைவர்
பாரதிதாசனால் நிறுவப்பெற்ற தமிழ்க்கவிஞர் பெருமன்றத்தின் முன்னாள் துணைச் செயலர், இந்நாள் கௌரவத்தலைவர்
 
குடும்பம்:
மங்கல மனைமாட்சி: திருமதி நாகரத்தினம், பள்ளீத் தலைமை ஆசிரியர் (ஓய்வு)
நன்கல மக்கள் சாட்சி: ஆண்பிள்ளைகள் ஐவர்
திருமண நாள்: 28 - 03 - 1957 ஞாயிறு தைப்பூச நிறைமதி நாளில், தமிழறிஞர் முனைவர் மு வரதராசனின் தலைமையில்.

Chandar Subramanian

unread,
Jun 17, 2012, 9:23:13 PM6/17/12
to santhav...@googlegroups.com
துளித் துளி

(திருக் குக்குறள்களும் திருக்குக் குறள்களும்)
 
 
 
நூற்பா:
அகவல் அடியில்
தகவல் முடியும்
 
 
 
அரைவஞ் சித்துறை - தனி
உரைஎன் முத்திரை
 
 
சந்தக்கவிமாமணி திரு தமிழழகன்
 
 
முகவரி:
B5 - ராஜ் பாரீஸ்
மானசரோவர் அடுக்ககம்
மேடவாக்கம் முதன்மைச் சாலை
உள்ளகரம், சென்னை 91
அலைபேசி: 92836 97295

Chandar Subramanian

unread,
Jun 17, 2012, 9:25:03 PM6/17/12
to santhav...@googlegroups.com
இறைமை
 
கடவுளே காப்பு - மனம்
பட வுளே கூப்பு.
 
இறைவனை ஏத்து - மனம்
நிறைவென வாழ்த்து.
 
பரம்பொருள் போற்று - அது
பெரும்பொருள் சாற்று.
 
தலைக்குமேல் ஒருவன் - நம்
நிலைக்குமேல் இறைவன்.
 
கடவுளே என்றேன் - கண்ட
விடையுளே நின்றேன்.
 
அன்பருள் முடிவும் - அந்தச்
செம்பொருள் வடிவம்.
 
ஆதிக்கே அஞ்சலி - அச்
சோதிக்கே நெஞ்சொலி.
 
இயற்கையே இறைவன்
செயற்கையே பெறுவன்.
 
வியக்க ஒருவன் - நலம்
பயக்கும் துறைவன்.
 
எல்லாநற் புகழும் - அவன்
அல்லாதென் நிகழும்?

Kavingar Jawaharlal

unread,
Jun 17, 2012, 11:35:24 PM6/17/12
to santhav...@googlegroups.com
என் அருமை நண்பர் சந்தக் கவிமாமணியை நம் குழுமத்தில் அறிமுகப் படுத்தி அவர் கவிதைகளை இடுவதை அறிந்து மிகமிக மகிழ்கிறேன்.

2012/6/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


Ka Thamizhamallan

unread,
Jun 18, 2012, 3:34:06 AM6/18/12
to santhav...@googlegroups.com
தமிழழகன் படைப்பு எண்ணிக்கை மலைப்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
முனைவர் க.தமிழமல்லன்

18 ஜூன், 2012 9:05 am அன்று, Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> எழுதியது:


2012/6/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:

Pas Pasupathy

unread,
Jun 18, 2012, 6:35:47 AM6/18/12
to santhav...@googlegroups.com
நல்ல பணி, சந்தர். 

பாராட்டுகள்! 

அவருடைய ‘கம்ப ராமாயணக் கவிதை நாடகம்’ படிக்க எனக்கு ஆவல். 
சென்னையில் ஒரு விடுமுறையில் வானொலியில் சிறிது கேட்டேன்.
சில காட்டுகளாவது கொடுக்கவும்.

2012/6/17 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Subbaier Ramasami

unread,
Jun 18, 2012, 8:20:35 AM6/18/12
to santhav...@googlegroups.com
சந்தக் கவிமணியின் கவிதைகளை இங்கே இடுவதை வரவேற்கிறேன். நல்ல தொண்டு!

அவரது காமட்சி அலங்காரத்தைக் கொடுப்பாராகில் இங்கே இட்டுப் பின் மின்புத்தகம் ஆக்கிவிடலாம்.அந்த நூலைக் கவிஞர் கந்தவனம் அவர்கள் புத்தகமாக வெளியிடுவதாகச் சொன்னார். அந்த முயற்சி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் நாக. கணேசன் அவர்கள அந்நூலைப் புத்தகமாக வெளியிடலாம். தமிழழகனுக்குப் பத்தாயிரம் ரூபாய்வரை கொடுக்கிறேன் என்றார். இதைத் தமிழழகனிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். 
கவிஞர்களுக்கு வயதேறிக் கொண்டு வரும் போது அவர்கள் வாழுங்காலத்திலேயே   அவர்களுடைய புத்தகங்களை வெளியிட்டு விடவேண்டும்.
கவிமாமணி நா.சீ வரதராஜன் அவருடைய  கவிதைத் தொகுப்பை வெளியிடவேண்டும் என்று விரும்பினார். இயலவில்லை. அவர் அமரராவதற்கு முன் அவரது குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்த  ஒரே ஆசை  ”எனக்குப்பின் எப்படியாவது என் கவிதைகளை வெளியிட்டு விடுங்கள்”  என்பதுதான்.  அது அவரது மறைவுக்குப் பின் “ ”கவிதைக் கனல்” என்னும் தலைப்பில் அவரது குடும்பத்தினரின் பெருமுயற்சியால் வெளியானது.

இலந்தை

2012/6/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

வித்யாசாகர்

unread,
Jun 18, 2012, 10:09:18 AM6/18/12
to santhav...@googlegroups.com
ரு படைப்பாளியின் வியர்வைத் துளி ஒரு சமுகத்தையே மாற்றிப் போடும் அல்லது  தூக்கி நிறுத்தும் கனம் கொண்டதென்பதற்கு சாட்சியாக எண்ணற்ற படைப்புக்கள் இருந்தும், உலகம் 'முழுமையாய்' அவைகளைத் தக்கவைத்துக் கொண்டிடாத துரதிஷ்ட நிலைக்கு மேலும் வருத்தம் கூட்டும் விதாமாக ஐயா அவர்களின் கணக்கிலடங்கா படைப்புகளையும் காண நேர்கிறது. எனினும் அவைகளை இவ்விடம் பகிர்ந்துக் கொள்வது நன்றிக்குரிய பணியாகும் சந்துரு ஐயா.

எனக்கு நிறைய எண்ணமுண்டு, சொல்லவேண்டாம் பார்ப்போம்; எதிர்காலத்தில் இறையருள் இருப்பின் சந்தவசந்தத்தின் நிறைய படைப்புக்களை நம் முகில் பதிப்பகத்தின் மூலம் தரமான படைப்பாக்கி நம் எதிர்கால சந்ததிக்கு சேமித்து வைக்க நிச்சயம் நானும் முயற்சிசெய்வேன்..

நன்றிகளுடன்..

வித்யாசாகர்



2012/6/18 Subbaier Ramasami <elan...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 18, 2012, 10:44:48 AM6/18/12
to santhav...@googlegroups.com
சந்தருக்கு நன்றி.

ஒவ்வொரு முறை நான் பாரதி கலைக்கழக ஆண்டுவிழாக் கூட்டத்திற்குச் செல்லும் போதும் சந்தக்கவிமணியாருடன் பேசுவது ஒரு இன்ப அனுபவம். 2011-ல் சந்தித்தபோது, பாரதியைப் பற்றிய ஒரு அட்டநாக பந்தச் செய்யுளின் படியை எனக்குத் தந்தார்.

அவரது காமாட்சி அலங்காரம் ஒரு அரிய தொகுப்பு. நானும் அதை எப்படியாவது அச்சில் ஏற்றும்படி பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பண உதவி செய்யப் பலர் இருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும் எனினும் ஏதோவொரு காரணத்தால் அதைத் தள்ளிப் போட்டு வருகிறார். சந்தர் மீண்டும் நினைவுறுத்தலாம்.

... அனந்த்


2012/6/18 Subbaier Ramasami <elan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jun 18, 2012, 10:45:29 AM6/18/12
to santhav...@googlegroups.com
நல்ல முயற்சி சந்தர். வாழ்க உன் பணி..
 தொடர்க! வாழ்த்து.
யோகியார்

2012/6/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 18, 2012, 2:55:32 PM6/18/12
to santhav...@googlegroups.com
அட்டநாக பந்தச் செய்யுளின் ஒளிப்பதிவை இணைத்துள்ளேன்.

அனந்த் 18-6-2012

2012/6/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
அட்டநாகபந்தம்- தமிழழகன்.jpg

Siva Siva

unread,
Jun 18, 2012, 6:51:37 PM6/18/12
to santhav...@googlegroups.com
/கவிஞர்களுக்கு வயதேறிக் கொண்டு வரும் போது அவர்கள் வாழுங்காலத்திலேயே   அவர்களுடைய புத்தகங்களை வெளியிட்டு விடவேண்டும். /

Valid point!
ஆனால், எவர்க்கும் ஆசைகள் பல இருக்கினும் நிறைவேறுவன சிலவே என்பதும் கண்கூடு!

2012/6/18 Subbaier Ramasami <elan...@gmail.com>

Siva Siva

unread,
Jun 18, 2012, 6:52:40 PM6/18/12
to santhav...@googlegroups.com
நல்ல பணி!

2012/6/17 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jun 18, 2012, 8:44:39 PM6/18/12
to santhav...@googlegroups.com
ஏறக்குறைய ஓராண்டுக்கு முன், தமிழழகனின் உரைகளை பதித்து இணையத்தில் இடவேண்டி அவரிடம் பேசிக்கொடுக்கும் படி கேட்டிருந்தேன். எஸ்டெம்பொ முறையில், அவரும் பேசித் தருவதாக கூறியிருந்தார். ஆனாலும் அது நிறைவேறாமல் பல மாதங்களுக்குப் பின், அவரின் படைப்புகளை இடும் இந்த பணியே தொடங்கியுள்ளது.
 
இந்த இழையில் பல்லோர் இடும் அத்தனை வினாக்களுக்கும், சற்று கால தாமதமானாலும், தமிழழகனின் கருத்துகளை அவரிடமிருந்து கேட்டு அளிக்கிறேன்.

Pas Pasupathy

unread,
Jun 18, 2012, 8:52:14 PM6/18/12
to santhav...@googlegroups.com
:-))
முதல் கேள்வி:

70-களில் ‘கல்கி’யில் விஷமக் கவிதைகள் என்று ஒரு தொடர் வந்தது.
அதில் ஒன்று:

தேர்தல்!

திட்டம் தெரிந்தோர் 
   தேர்தலில் நின்றார்!
திட்டத் தெரிந்தோர் 
   தேர்தலில் வென்றார்! 

இவற்றை எழுதினது ‘தமிழழகன்’ தானே? அப்படியானால், மொத்தம் 
எவ்வளவு ‘விஷமங்கள்’ வெளிவந்தன? அவை எந்த நூலிலாவது 
வெளியாகி உள்ளனவா? 

2012/6/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jun 18, 2012, 9:01:03 PM6/18/12
to santhav...@googlegroups.com
கல்வி
 
முயன்றால் முடியும்
பயின்றால் படியும்.
 
சுடச்சுடச் செம்பொன் - கல்வி
படப்படக் கம்பன்.
 
படித்தால் மட்டுமே - செயல்
படைத்தால் கிட்டுமே.
 
வாசிக்க வருவது
யோசிக்கப் பெறுவது.
 
பெறவும் துணைதான்
இறைவர்க் கிணைதான்.
 
ஆய்ந்தால் அறிவு
வாய்ந்தால் விரிவு.
 
அறிவார்க் கருள்தான்
அறியார்க் கிருள்தான்.
 
வீம்பினால் வித்தை
சோம்பினால் சொத்தை.
 
சிந்திக்கத் தூண்டும்
முந்திக்க வேண்டும்.
 
துறைதொறும் தோற்றம் - கல்வி
பெறப்பெற ஏற்றம்.
 
அகம்தான் அறியும் - கல்வி
முகம்தான் நெறியும்.
 
தகவல் அல்ல - அறிவு
புகஉள் செல்ல.
 
வாழ்க்கை விதிசெயும் - கல்வி
கேள்வி மதிசெயும்.
 
படிப்பினில் பயன்வரும் - கூடப்
படிப்பினை நயம் தரும்.
 
எண்ணும் எழுத்தும் - கை
வண்ணம் வழுத்தும்.
 
நற்றவ போகம் - கல்வி
கற்றவர் யோகம்.
 
விற்றால் விற்பனர் - கல்வி
பெற்றால் பொற்பினர்.
 
அறிவால் உள்ளவர் - கல்விச்
செறிவால் வள்ளுவர்.
 
கற்றால் கலைதான் - அதை
விற்றால் விலைதான்.
 
படிப்பவை பலபல - மனம்
படிபவை சிலசில.
 
வாழ்வில் வளமை - கல்வி
கேள்விக் கெழுமை.
 
அறிவால் எதிலும் - மனம்
விரிவாய்ப் பதிலும்.
 
கேட்கும் கேள்வி - அறி(வு)
ஏற்கும் வேள்வி.
 
கோல் எடுத்தால் குரங்காம்
நூல் அடுத்தால் அரங்காம்.
 
பட்டறிவுப் பாடும் - நூல்
நட்டறிவில் ஊரும்.
 
ஆழங்கால் ஆண்டும் - கல்வி
வாழுங்கால் வேண்டும்.
 
படத்தான் பாடும் - நூல்
தொடத்தான் கூடும்.
 
கற்றோர்க்குக் கண்
மற்றோர்க்குப் புண்.
 
கற்றது கசடு - எனில்
வெற்றது அசடு.
 
பல்விதம் கல்வி
வெல்விதம் புகல்வி.

Subbaier Ramasami

unread,
Jun 19, 2012, 3:39:38 PM6/19/12
to santhav...@googlegroups.com
அவரேதான். துளிப்பாக்கள் என்னும் நூலில் தொகுத்துள்ளார்

இலந்தை

2012/6/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
:-))

Chandar Subramanian

unread,
Jun 19, 2012, 8:33:02 PM6/19/12
to santhav...@googlegroups.com
அநுபவம்
 
சிந்தித்தும் சேரும்
நிந்தித்தும் சாரும்.
 
புண்படும் நெஞ்சம்
பண்படக் கொஞ்சும்.
 
மனத்தின் அரிப்பு
மவுனச் சிரிப்பு.
 
வருந்தும் மனம்தான் - பின்
திருந்தும் தினம்தான்.
 
செயல்களின் மூடம் - பல
புயல்களின் ஓடம்.
 
சந்திக்கும் தோறும்
நிந்திக்கத் தேறும்.
 
பெற்றால் பீடம்
கற்றால் பாடம்.
 
தலையிலே முட்டும் தாள் - பல
நிலையிலே குட்டும் தாள்.
 
அநுபவ ஆசான் - வெறும்
கனவவை பேசான்.
 
அடைமழை முன்தான் - காலத்
திடைபிழை பின்தான்.
 
காலம்கொள் கட்டியம் - அதன்
மேல்உங்கள் வட்டியும்.
 
பயன்தான் பாடம் - பெறப்
பயந்தால் மூடம்.

Chandar Subramanian

unread,
Jun 22, 2012, 9:00:08 PM6/22/12
to santhav...@googlegroups.com
வாழ்க்கை
 
வாழும் வேள்வி
நாளும் கேள்வி
 
சிரமமே சேர்க்கும் - அவ
சரமுமே யார்க்கும்.
 
வழுக்குமே வாழ்க்கை - பின்
இழுக்குமே யாக்கை
 
வாழ்க்கை வெறும்கல்
வேட்கை பெரும்கல்.
 
சதிகளின் கூட்டு
எதிர்கொளும் பூட்டு
 
உழைத்தால் பிழைப்பு
பிழைத்தால் களைப்பு
 
சந்தர்ப்பச் சேர்க்கை
வந்தொப்ப வாழ்க்கை
 
கதிகளின் தாளம்
விதிகொளும் மேளம்
 
கூலி ஒருபுறம்
கேலி மறுபுறம்
 
நிலவரம் போலும்
நலமுற ஏறும்
 
தடுமாறாப் பாதை
தடம் மாறாக் கீதை
 
வாயால் வருவது
வாய்ப்பால் பெறுவது
 
பகடைக்காய் ஆட்டம்
பகட்டுக்கரம் ஓட்டம்
 
பல்லாங்குழிக் கூட்டம்
வல்லார்வழி நாட்டம்
 
முகத்துதி மூட்டம்
மிகத்துதி நோட்டம்.
 
பம்மா இயக்கம்
தம்பொருள் மயக்கம்
 
அகட விகடம்
விகடச் சகடம்
 
ஏறி இறங்கும்
மீறிக் கிறங்கும்
 
பரம்பரைப் பசப்பு
கரம்பொறும் கசப்பு
 
வழிவழிச் சங்கிலி - விளைப்
பழிபழி நம்கிலி
 
கணம்கணம் பிரச்சினை
பணம்பணம் அருச்சனை
 
ஓட்டப் பந்தயம்
வாட்டம் முந்தியும்
 
ஆள் மாறாட்டம் - பின்
னாள் போராட்டம்
 
உறவுச் சந்தை
துறவு மந்தை
 
ஒளியின் நிழலும்
வழியிற் சுழலும்
 
பன்முகப் பாடம்
தன்முக வேடம்
 
நலங்கிட நடிப்பு - அன்பு
விலங்கிடத் துடிப்பு
 
பந்த பாசம்
தந்த மோசம்
 
சுயநலச் சுருட்டல்
அயல்நலம் விரட்டல்
 
முகமூடிப் போர்வை
அகம்வாழப் பார்வை
 
வாழையடி வாழை
கூழையடி கூழை
 
விருப்பங்களே வேட்கை
திருப்பங்களே வாழ்க்கை
 
உணவுக்கு வேட்டை
உணர்வுக்குச் சாட்டை
 
விடைகள் பின்வரும்
தடைகள் முன்வரும்
 
விழுவதும் எழுவதும்
தொழுவதும் வளர்வதும்
 
ஏக்கம் எதில்தான்?
பார்க்கப் பதில்தான்

Pas Pasupathy

unread,
Jun 22, 2012, 9:30:55 PM6/22/12
to santhav...@googlegroups.com
’அமுதசுரபி’ 2012 ஜூன் மாத வெண்பாப் போட்டி ( ‘அ’வில் தொடங்கி 
‘ன்’ இல் முடிக்க வேண்டும் என்ற விதி) 

முதல் பரிசு பெறும் வெண்பா: 

அகரம் எனத்தொடங்கி ஆழ்ந்தபொருள் இன்ப
ளகரமென ஈறாய் நடக்கப் -- பகரும்
திறம்,வள் ளுவர்க்கன்றித் தேடினும்யார்க் குண்டாம்?
அறவள்ளல் சொல்லோன் அவன்! 
 
எழுதியவ்ர் : தமிழழகன், திருவொற்றியூர்

Kaviyogi Vedham

unread,
Jun 23, 2012, 1:27:46 AM6/23/12
to santhav...@googlegroups.com
ஆம் யானும் பார்த்தேன். சந்தோஷமாயிருந்தது..
‘யோகியார்

2012/6/23 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasanth...@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
yogiyaar(VEDHAM)-
 Camp--BANGALORE_43

Kaviyogi Vedham

unread,
Jun 23, 2012, 1:33:03 AM6/23/12
to santhav...@googlegroups.com
சில சொற்கள் நன்று.. ஆயின் பல செயற்கை.. இதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.. ஆகவே.. இன்னும் அவ ர் பொருந்தாதவற்றைச் செதுக்கிப்பின் இடல் நலம்,
 யோகியார்

2012/6/23 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
வாழ்க்கை
 
வாழும் வேள்வி
நாளும் கேள்வி
 
சிரமமே சேர்க்கும் - அவ
சரமுமே யார்க்கும்.
 
வழுக்குமே வாழ்க்கை - பின்
இழுக்குமே யாக்கை
 
வாழ்க்கை வெறும்கல்
வேட்கை பெரும்கல்.
 
சதிகளின் கூட்டு
எதிர்கொளும் பூட்டு
 
உழைத்தால் பிழைப்பு
பிழைத்தால் களைப்பு
 
சந்தர்ப்பச் சேர்க்கை
வந்தொப்ப வாழ்க்கை
 
கதிகளின் தாளம்
விதிகொளும் மேளம்
 
கூலி ஒருபுறம்
கேலி மறுபுறம்
 
நிலவரம் போலும்
நலமுற ஏறும்
 சில கவிகள் நன்றாக இருக்கின்றன.. ஆயின் பல செயற்கை.. என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

Chandar Subramanian

unread,
Jun 23, 2012, 9:05:04 PM6/23/12
to santhav...@googlegroups.com
திருமணம்
 
சொர்க்கத்தில் உறுதி - நகை
ரொக்கத்தில் இறுதி
 
உடன்படுக் கைதான் - அதற்(கு)
உடன்படிக் கைதான்
 
வரன்கள் அடக்கம்
சவரன்கொள் தொடக்கம்
 
பாக்கிய வதிகள் - கடன்
பாக்கி யவதிகள்
 
வாரிசு யாகம் - அதைக்
கோரி,சை யோகம்
 
பிள்ளைப் பேறு - வயிறு
கொள்ளச் சோறு
 
சையோகச் சடங்கும் - கருப்
பையாகத் தொடங்கும்
 
குழந்தைத் தொழிலகம் - வர
எழுந்த எழிலகம்
 
கருவறைப் பாசனம் - சிசு
வரவைச்சொல் சாசனம்
 
கருப்பைக்கே வரவு - கூட
இரப்பைக்கே நிறைவு
 
புகலும் மணம்தான் - அதன்
நகலும்அம் மணம்தான்
 
விளக்கும் அணையுமே - உடன்
விளங்கும் அணையுமே
 
சரசமோ டுறவு - பல
விரசமோ டிரவு
 
உணர்ச்சிக்கே வேகம் - உடல்
புணர்ச்சிக்கே மோகம்
 
அணைப்புக்கே சட்டம் - அதன்
பிணைப்புக்கே திட்டம்
 
விவாகம் மையலால் - மனை
நிர்வாகம் தையலால்
 
பருவத்துப் பந்தல் - உடன்
உறவொத்துக் கந்தல்
 
கொடுக்கல் வாங்கல் - ஆண்பெண்
படுக்கைத் தாங்கல்
 
நடப்பதோ குடும்பம் - கூடக்
கொடுப்பதோ இன்பம்
 
கவர்ச்சியால் காதல் - அதன்
நுகர்ச்சியால் நோதல்
 
குடும்பத் தையல்தான் - இற்று
விடும்பல் மையல்தான்
 
அவதாரமாய் இருக்கும் - பின்
அவ தாரமாய் நெருக்கும்
 
விரிதலும் உறவுதான் - தொடர்
விரிசலும் பிறகுதான்
 
காமமேல் வேள்வி - பின்
சேமமேல் கேள்வி
 
கவர்ச்சிதான் முன்னால் - மனத்
தளர்ச்சிதான் பின்னால்
 
தொடர்கதைத் தூண்டில் - பின்
இடர்வதைக் கூண்டில்
 
அடையுமுன் வேகம் - பின்
விடையுமே சோகம்
 
தாம்பத்யம் ஏற்கும் - பின்
தாம்பத்யம் நோக்கும்
 
அடங்கினால் சம்பந்தம் - மனம்
முடங்கினால் நிர்ப்பந்தம்
 
கோட்டைக்கு வேட்கை - அதே
கோட்டைபின் ஓட்டை
 
பந்த நாட்டம் - உடன்
விந்தை ஆட்டம்
 
இல்அறம் சிலர்சிலர் - அது
இல்லாஅறம் பலர் பலர்

Chandar Subramanian

unread,
Jun 24, 2012, 8:59:07 PM6/24/12
to santhav...@googlegroups.com
இல்லறம்
 
மனைஅறம் மாண்புகொள் - பெண்
துணைபெறத் தான்புகழ்
 
பெண்மையைப் பெருமைசெய் - அதன்
திண்மையைத் திறமும்செய்
 
குடும்பம் குடும்பம்தான் - அதில்
படும்படும் இன்பம்தான்
 
கட்டிலுக் கிருவர் - காதல்
மட்டிலும் ஒருவர்
 
ஒருவர்க் கொருவர் - அக
உறவில் நிறைவர்
 
காற்கட்டும் உண்டுதான் - அதன்
மேற்கட்டும் கொண்டுதான்
 
அறமே அன்புதான் - காதல்
திறமே தெம்புதான்
 
புணரியல் காவியம் - உடல்
திணறிய ஓவியம்
 
பந்த பாசம் - இடை
வந்த வாசம்
 
பாச பந்தம் - முகம்
மூசும் சந்தம்
 
மையல் கொஞ்சும்தான்
சமையல் கொஞ்சம்தான்
 
ஊடலின் கூடம்
கூடலின் மாடம்
 
ரசங்கள் எதற்கும்
சரசங்கள் மிதக்கும்
 
ரகசியம் காதல் - உயிர்க்(கு)
அவசியம் நேர்தல்
 
ஆண்பெண் வசியம்
காண்ப(து) அவசியம்
 
பொழுதும் புசியும் - வாழ்வு
முழுதும் ரசியும்
 
பகலில் மணந்தார் - இடை
புகலில் இணைந்தார்
 
மாமியார் படித்தனம்
சாமியார் குடித்தனம்
 
மருமகள் குடித்தனம்
வருமிகழ் படித்தனம்
 
அரங்கத் திருமணம் - அந்
தரங்கத் தொருமணம்

Chandar Subramanian

unread,
Jun 25, 2012, 9:09:46 PM6/25/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - வரலாறு
 
வாழ்வு நிகழ்ச்சிகள்
தாழ்வுப் புகழ்ச்சிகள்
 
குருதிக் கறைப்படம்
இறுதிவரை கபடம்
 
அரசியல் கொலைக்களம்
கறைசெயும் வலைத்தளம்
 
முன்னால் முரண்தான்
பின்னால் அரண்தான்
 
கனவு களுக்கு
நினைவுச் சுளுக்கு
 
ஆண்டுகள் மேல்தான்
நீண்ட சவால்தான்
 
தொடரும் காலம்தான்
இடரும் கோலம்தான்
 
யுத்த வெறித்திறம்
ரத்த சரித்திரம்
 
ஏடுகள் புரளும்
நாடுகள் மருளும்
 
காலப் பச்சோந்தி
ஏலும் அச்சேந்தி
 
நிகழும் ஒருவாறு - பின்
புகலும் வரலாறு

Chandar Subramanian

unread,
Jun 27, 2012, 8:33:33 PM6/27/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - மழை
 
தூறினால் மழைதான்
மீறினால் பிழைதான்
 
இடைமழை நல்லதாம்
அடைமழை தொல்லைதாம்
 
முகிலொடு முகில்தான் - பின்
திகிலொடு திகில்தான்
 
சூறைக்குச் சொந்தம் - இடிப்
பாறைக்குச் சந்தம்
 
உயிர்களும் உண்ணும்
பயிர்களும் பண்ணும்
 
வானம் வழியும் - எனில்
ஈனம் ஒழியும்
 
நிலத்தை நிறைக்கும் - மக்கள்
நலத்தைப் பெருக்கும்
 
மண்ணின் வாசனை - மழை
பண்ணும் பூசனை
 
பஞ்சம் பசியும் - மழைக்(கு)
அஞ்சி மசியும்
 
மாரி இலையேல் - நலம்
பாரில் இலையே
 
பெய்யவும் இடரும் - பயன்
செய்யவும் தொடரும்
 
ஆற்றுக்கு நண்பன் - உழைச்
சேற்றுக்கு வம்பன்
 
கடலுக்கும் மகன்தான் - வயல்
திடலுக்கு மகான்தான்
 
உயிர்க்கும் வேண்டும் மழை
பயிர்க்கும் தூண்டும்
 
நிலத்துள் நீரின்றேல் - உயிர்க்
குலத்துள் யாரின்றே?

Chandar Subramanian

unread,
Jun 28, 2012, 8:36:28 PM6/28/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - கவிதை
 
உள்மொழி ஊற்று
பண்மொழி மாற்று
 
யதார்த்தங்க ளோடும்
பதார்த்தங்கள் கூடும்
 
செஞ்சொல் சிலிர்ப்புகள் - உள்
நெஞ்சின் ஒலிப்புகள்
 
கருத்தெனும் கவிநயம் - சொல்
பொறுத்துநம் செவிநயம்
 
சுருக்கஎச் சொல்லும் - நமைச்
சுருக்கென வெல்லும்
 
எழுத்துகள் முன்படும்
எண்ணங்கள் பின்படும்
 
கற்பனை கவிதைக்கு - அதன்
விற்பனம் உவகைக்கு
 
சருகெனும் சொற்கள் - கவி
மெருகினில் கற்கள்
 
இலக்கியம் என்பது - கவி
துலக்கிய தெம்பது
 
சந்தவசந்தம் - செவி
முந்த விசைந்தும்

Siva Siva

unread,
Jun 28, 2012, 8:54:53 PM6/28/12
to santhav...@googlegroups.com
1) யாப்பிலக்கணப்படி இவை எவ்வகைப் பாடல்கள்?

2) பாடலாசிரியர் என்ன நோக்கத்தோடு இப்பாடல்களை இயற்றினார் என்று அறிந்தால் கருத்துகள் சொல்ல உதவும்.

3) சில இடங்களில் சொல்ல வரும் கருத்து எனக்குப் பிடிபடவில்லை.

2012/6/28 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

துளித் துளி - கவிதை
 
உள்மொழி ஊற்று
பண்மொழி மாற்று
 
யதார்த்தங்க ளோடும்
பதார்த்தங்கள் கூடும்
 
செஞ்சொல் சிலிர்ப்புகள் - உள்
நெஞ்சின் ஒலிப்புகள்
 
கருத்தெனும் கவிநயம் - சொல்
பொறுத்துநம் செவிநயம்
 
சுருக்கஎச் சொல்லும் - நமைச்
சுருக்கென வெல்லும்
 
எழுத்துகள் முன்படும்
எண்ணங்கள் பின்படும்
 
கற்பனை கவிதைக்கு - அதன்
விற்பனம் உவகைக்கு

--> = ?

Chandar Subramanian

unread,
Jun 28, 2012, 9:02:21 PM6/28/12
to santhav...@googlegroups.com


2012/6/29 Siva Siva <naya...@gmail.com>

1) யாப்பிலக்கணப்படி இவை எவ்வகைப் பாடல்கள்?

நூற்பா:
அகவல் அடியில்
தகவல் முடியும்
 
அரைவஞ் சித்துறை - தனி
உரைஎன் முத்திரை
 
மற்ற வினாக்களை ஆசிரியரை நான் சந்திக்கும் போது கொடுத்து விடை பெற்று இங்கு இடுவேன்.

Chandar Subramanian

unread,
Jun 29, 2012, 8:55:57 PM6/29/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - கவியரங்கம்
(இன்றையக் கவியரங்கங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்)
 
அவிநயம் ஆச்சு
கவிநயம் போச்சு
 
பட்டியல் நீண்டது
பாட்டியல் மாண்டது
 
சொற்களின் பந்தல் - வெறும்
புற்களின் கந்தல்
 
யாப்புக்கே ஆப்பு - அரை
யாப்புக்கே வாய்ப்பு
 
இலக்கண வரட்டி - அதை
விலக்கணும் விரட்டி
 
சீரங்கம் திருச்சிதான்
பாரெங்கும் முறிச்சுத்தான்
 
அப்பளந் தட்டுதல் - வெறும்
சப்பைக்கை கொட்டுதல்
 
அரட்டை அரங்கம் - பொய்
புரட்டுச் சுரங்கம்
 
வார்த்தை ஜாலங்கள் - இடம்
பார்த்தலங் கோலங்கள்
 
வெறும்ஆர்ப் பாட்டம் - சொல்
பெரும்போர்க் கூட்டம்

Siva Siva

unread,
Jun 29, 2012, 9:01:38 PM6/29/12
to santhav...@googlegroups.com


2012/6/29 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

துளித் துளி - கவியரங்கம்
(இன்றையக் கவியரங்கங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்)
 
அவிநயம் ஆச்சு
கவிநயம் போச்சு
 
பட்டியல் நீண்டது
பாட்டியல் மாண்டது
 
சொற்களின் பந்தல் - வெறும்
புற்களின் கந்தல்
 
யாப்புக்கே ஆப்பு - அரை
யாப்புக்கே வாய்ப்பு
 
இலக்கண வரட்டி - அதை
விலக்கணும் விரட்டி

வரட்டி? வறட்டி? இரண்டுமே சரியா?
 
 
சீரங்கம் திருச்சிதான்
பாரெங்கும் முறிச்சுத்தான்

= ?
 

Chandar Subramanian

unread,
Jun 30, 2012, 8:33:51 PM6/30/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - வேண்டுதல் வேண்டாமை
 
சாதிப்போர் வேண்டும் - வெறும்
சாதிப்போர் வேண்டாம்
 
மதிப்போர் வேண்டும் - எதிர்
மதப்போர் வேண்டாம்
 
விற்பனர் வேண்டும் - கலை
விற்பவர் வேண்டாம்
 
கழகம் வேண்டும் - பகைக்
கலகம் வேண்டாம்
 
கலைவரம் வேண்டும் - கொலைக்
கலவரம் வேண்டாம்
 
யுக்தம் வேண்டும் - வெறி
யுத்தம் வேண்டாம்
 
வழிப்படல் வேண்டும் - வெறும்
வழிபடல் வேண்டாம்
 
தடைமாற வேண்டும் - நடை
தடுமாற வேண்டாம்
 
உருப்பட வேண்டும் - வாய்
உருப்போடல் வேண்டாம்
 
கொள்கை வேண்டும் - லஞ்சம்
கொள் கை வேண்டாம்

Siva Siva

unread,
Jun 30, 2012, 9:12:18 PM6/30/12
to santhav...@googlegroups.com
Nice word play.

2012/6/30 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
துளித் துளி - வேண்டுதல் வேண்டாமை
 
சாதிப்போர் வேண்டும் - வெறும்
சாதிப்போர் வேண்டாம்
 
....

Pas Pasupathy

unread,
Jul 1, 2012, 7:26:23 AM7/1/12
to santhav...@googlegroups.com
:-))
 
தமிழழகனின் நூல்கள் என்னிடம் இருந்திருந்தால் .... "கவிதை இயற்றிக் கலக்கு" நூலில்
காட்டுகள் நிச்சயம் இன்னும் களை கட்டியிருக்கும்! 

2012/6/30 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jul 1, 2012, 8:40:27 PM7/1/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - கனிச்சீர் ஈரடிகள்
 
அன்பே அறம்
தெம்பே திறம்
 
பண்பே பலம்
முன்பே நலம்
 
நெஞ்சே நிறை
கொஞ்சேல் குறை
 
தொண்டே திகழ்
உண்டே புகழ்
 
எண்ணம் செயல்
பண்ணும் புயல்
 
துணிவே துணை
பணிவே இணை
 
உழைப்பால் உயர்
பிழைப்பால் பெயர்
 
தொழிலே தொழு
எழிலே எழு
 
கலையே களம்
நிலையே வளம்
 
நன்றே நினை
இன்றே முனை
 
பசித்தே புசி
ருசித்தே ரசி

Chandar Subramanian

unread,
Jul 2, 2012, 8:45:38 PM7/2/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - உயிர் எழுத்துச் செய்யுள்
 
அன்பே உலகம்
பண்பே திலகம்
 
ஆற்றுதல் நலமேல்
போற்றுதல் தலைமேல்
 
இன்ப வேட்டை - எலாம்
துன்பக் கோட்டை
 
ஈதல் நல்லது
மோதல் பொல்லது
 
உள்ள உரம்தான்
கொள்ளைத் திறம்தான்
 
ஊதா ரித்தனம்
தீதாம் மெத்தனம்
 
எண்ணிச் செய்வோர்
விண்ணின் உய்வோர்
 
எற்ற இறக்கம்
தேற்றம் பிறக்கும்
 
ஐயமே அறிவு
வையமேல் விரிவு
 
ஒன்று படுவார்
வென்றுவிடுவார்
 
ஓடாய் உழைக்கின்
காடாய்த் தழைக்கும்
 
ஔவியம் பேசேல்
செவ்விய(து) ஏசேல்

Chandar Subramanian

unread,
Jul 3, 2012, 9:04:20 PM7/3/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - ஜனநாயகம்
 
சூழல்கள் தோறும் - கொள்ளை
ஊழல்கள் தேறும்
 
ஜனநாயகம் வாதிக்கும் - எனில்
பணநாயகம் சாதிக்கும்
 
தலைகளை எண்ணுதல் - பின்
தலைமைகள் பண்ணுதல்
 
தேர்தலின் தோறும் - உள்
ஊர் தலை மாறும்
 
பொதுநலம் போர்வை - தனக்(கு)
எதுநலம் பார்வை
 
கொள்கைகள் மாறும் - பணம்
கொள் கைகள் சேரும்
 
கோட்டை பிடிப்பார் - பின்
தேட்டை அடிப்பார்
 
சுருட்ட நிதம்நிதம் - பணம்
திரட்ட விதம்விதம்
 
சகலமும் சுதந்திரம் - பணம்
நகரவும் தந்திரம்
 
சட்ட சபைதான் - தினம்
திட்ட அவைதான்
 
ஓட்டுகள் வேட்டை - பண
நோட்டுகள் கோட்டை
 
வாக்குகள் அப்புறம் - செல்
வாக்குகள் நட்புறும்
 
தேவைக்கு வையும் - பணச்
சேவைக்கு மையம்
 
நீட்டும் நிதிகள் - கை
காட்டும் விதிகள்
 
வாக்குகள் உறுதி - காலப்
போக்கு கொள் மறதி
 
எல்லாம் இலவசம் - எனும்
சொல்லால் வலைநிசம்
 
நாற்காலில் நாட்டம் - எல்லாம்
ஊர்க்காலிக் கூட்டம்
 
காந்திய நாளில் - பணக்
காந்தியம் தாளில்

Chandar Subramanian

unread,
Jul 4, 2012, 8:22:54 PM7/4/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - உறவுகள்
 
பணம்தான் மந்தம் - அதன்
குணம்தான் குந்தம்
 
தாய்சேய் வேறுதான் - அதன்
நோய்வாய் மாறுதான்
 
உறவுமே உண்டு - பணம்
வரவுமேல் கண்டு
 
விரிதலும் ஒருபால் - உடன்
விரிசலும் மறுபால்
 
சுற்றத் தழகு - பணம்
பற்றப் பழகு
 
ஒப்புக் குறவு - வெறும்
மெப்பில் தரவு
 
உறவுக் களவுகோல் - பணம்
மருவக் களவுகோல்
 
அற்ப பேதங்கள் - சந்
தர்ப்ப வாதங்கள்
 
பந்த பாசங்கள் - பண
முந்தும் வேஷங்கள்
 
நடப்பு நாடகம் - மனக்
கடுப்பின் ஊடகம்
 
உதட்டுக் கனிரசம் - உள்
குதட்டும் துளிவிஷம்
 
குடுப்பக் கணக்குகள் - உட்
படும்பொய்ப் பிணக்குகள்
 
பிறையாய் வளரும் - மனக்
கறையால் தளரும்
 
தொந்துமேல் தொடரும் - பகை
வந்துமே இடறும்
 
ஒருமுனை நழுவும்
மறுமுனை தழுவும்
 
கிளைகிளை தாவும் - பாவை
வளைவளை மேவும்
 
தார தம்மியம் - மன
ஓரம் விம்மியும்

Chandar Subramanian

unread,
Jul 5, 2012, 9:07:06 PM7/5/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - தனியன்கள்
 
நழுவல்
 
குழந்தையைத் தெய்வம்
.. தழுவிக் கிடந்தது
குழந்தை வளரவும்
.. நழுவி நடந்தது
 
ஊற்று
 
மணலைத் தோண்டினேன்
.. தண்ணீர் வந்தது
மனத்தைத் தோண்டினேன்
.. கண்ணீர் வந்தது
 
அக்'கறை'
 
பிறைநிலா பார்த்தேன்
.. குறையென இல்லை
நிறைநிலா பார்த்தேன்
.. கறையெனும் தொல்லை
 
கழுகுக்கண்
 
பறப்பது என்னவோ
.. பரவெளிமேல்தான் - பார்வை
இருப்பது என்னவோ
.. தெருஎலி மேல்தான்
 
நோட்டம்
 
கட்சிகள் எல்லாம்
.. காசுக்குப் போர்வை
லட்சியம் எல்லாம்
.. லாபத்தின் பார்வை
 
கூடினால்
 
ஊடல்மேல் தினமும்
.. உப்புக் கீடுதான் - கொஞ்சம்
கூடுமேல் பணமும்
.. குப்பைக் காடுதான்
 
சமுதாயம்
 
ஊரைக் கூட்டினேன்
.. தேரோட வில்லை
தேரைப் பூட்டினேன்
.. ஊர்கூட வில்லை
 
சீருடை
 
சட்டைகள் உரித்தே
.. சர்ப்பங்கள் திளைக்கும் - கட்சிச் (பல)
சட்டைகள் தரித்தே
.. அற்பங்கள் பிழைக்கும்
 
முதுமை
 
காயே பழுத்தால்
.. கனியாம் என்பர்
கனியே பழுத்தால்
.. இனி,யார் தின்பர்?
 
சுற்றம்
 
பழத் தோட்டத்தைப்
.. பறவைகள் சுற்றும்
பணத் தோட்டத்தை
.. உறவுகள் சுற்றும்
 
இலக்கணம்
 
உள்ளம் விரித்தால்
.. உச்சிப் புலவர்
கள்ளம் சிரித்தால்
.. கட்சித் தலைவர்
 
ஞானோதயம்
 
புத்தர் மலர்ந்தார்
.. போதி மரத்தில் - பல
எத்தர் மலர்ந்தார்
.. சாதி நிறத்தில்
 
சுயநலம்
 
தேவை என்றால்
.. தேடும் உலகம்
சேவை என்றால்
.. ஓடும், விலகும்
 
சிரஞ்சீவி
 
சொற்களைச் சுருக்குவோர்
.. சுகம்பெற வாழ்வார்
சுகங்களைச் சுருக்குவோர்
.. யுகம்பெற ஆள்வார்
 
மீறுங்கால்
 
ஆவல் மிகமிகத்
.. தாவல் நேரும்
தாவல் மிகமிகக்
.. காவல் மீறும்

Chandar Subramanian

unread,
Jul 6, 2012, 9:48:47 PM7/6/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - விஷமக் கவிதைகள்
 
கல்கியில் தொடராக வெளிவந்த கவிதைகள்.
 
29/09/1974 :: 1. பலன்
 
தொண்டுக் குழைத்தோர்
.. தொலைவில் இருந்தார் - அதைக்
கொண்டு பிழைத்தோர்
.. கொலுவில் சிறந்தார்
 
06/10/1974 :: 2. தேர்தல்
 
திட்டம் தெரிந்தோர்
.. தேர்தலில் நின்றார்

திட்டத் தெரிந்தோர்
.. தேர்தலில் வென்றார்
 
17/10/1974 :: 4. அன்றும் இன்றும்
 
சங்க காலம்
.. அந்நாள் கண்டார் - பிர
சங்க காலம்
.. இந்நாள் கண்டார்
 
10/11/1974 :: 6. ஜனநாயகம்
 
வாக்குகள் கேட்போர்
.. வாழ்வில் வளர்ந்தார்
வாக்குகள் போட்டோர்
.. யாவும் இழந்தார்
 
01/12/1974 :: 7. வாழத் தெரிந்தவர்
 
உழைக்கத் தெரிந்தோர்
.. உரிமைகளை விட்டார்
பிழைக்கத் தெரிந்தோர்
.. பெருமையே நட்டார்
 
08/12/1974 :: 8. தகுதி
 
அடி, படைத் தலைமை
.. யாருக்குத் தகுதி? - அவரே
அடிப்படைத் தலைவர்
.. பேருக்குத் தகுதி!
 
திரு பசுபதி அவர்கள் குறிப்பிட்ட தொடர் இது. கவிஞர் சேகரித்து வைத்திருந்த அனைத்துக் கவிதைகளையும் வழங்கியுள்ளேன். இந்தத் தொடரில் விட்டுபோன கவிதைகள் வேறெவரிடம் இருப்பின் தயவு செய்து இங்கே இடவும்.
 
 
அடுத்து வருவது துளித் துளி என்னும் இந்தத் தொகுப்பு குறித்து கவிஞர் எழுதிய முன்னுரைக் கவிதை:

துளித் துளி - ஒரு முன்னுரை
 
பனிப்பனிக் கவிதைகள் - மணிப்
.. பரல் எனும் கவிதைகள்
தனித்தனிக் கவிதைகள் - சிறு
.. தடம் எனும் கவிதைகள்
 
 
துளித்துளிக் கவிதைகள் - ஒளித்
.. தூற்றல் இக்கவிதைகள்
தளிர்த்தளிர்க் கவிதைகள் - பொறி
.. தட்டிடும் கவிதைகள்
 
 
மின்மினிக் கவிதைகள் - விண்
.. மிறுத்திடும் கவிதைகள்
பொன்மினிக் கவிதைகள் - ஒளிப்
.. பொட்டெனும் கவிதைகள்
 
 
சிறுசிறு கவிதைகள் - பளிச்
.. சிடும்புதுக் கவிதைகள்
குறுகுறுக் கவிதைகள் - நெஞ்சைக்
.. குலுக்கிடும் கவிதைகள்

Chandar Subramanian

unread,
Jul 7, 2012, 9:34:44 PM7/7/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
படைப்பு:
 
சக்தி சரணமெனச்
.. சாற்றிப் படைப்பதற்கே
பக்தியொடும் தமிழைப்
.. பாடினேன், அம்பிகைக்கே.
 
காப்பு
 
வந்தாதி யாய்நின்ற வண்ணக்கா மாட்சியின்மேல்
அந்தாதி பாடுவதற் கஞ்சலித்தேன் - சிந்தாத
நம்பிக்கை யோடு நடக்குமிந் நூலுக்குத்
தும்பிக்கை யானே துணை
 
அந்தாதி
 
நாமாட்சி செய்ய நலம்வரும் வாணர்க்கு
.. நல்லிசையோ(டு)
ஆமாட்சி செய்ய அணிவரும் சொல்யாப்(பு)
.. அரவணைத்துப்
பூமாட்சி செய்யப் புகழ்வரும் வண்ணையம்
.. பொற்கொடியாம்
காமாட்சி செய்ய கருணை வரும்வழி
.. கண்டதுமே. (1)
 
கண்ட பிணிபோம் கவலை களும்போம்
.. கவனமின்றிக்
கொண்ட பிறவிக் கொடுமைகளும் போம்வெறும்
.. கொள்கைகளாய்
விண்ட பெருமையும் வீராப்பும் போம்புகழ்
.. வெற்றியுமே
செண்டு புடைதரச் சேரும்கா மாட்சியைச்
.. சிந்திக்கவே. (2)
 
சிந்திப்போம் நாளெல்லாம் சிந்திப்ப தோடும்
.. செழுந்தமிழால்
வந்திப்போம் வாழ்வெலாம் வந்திப்ப தோடும்
.. வழித்துணையாய்
முந்திப்போம் புண்ணிய மூர்த்தியு மாமவள்
.. மொய்ம்புணர்ந்தே
சந்திப்போம் வண்ணையஞ் சக்திகா மாட்சி
.. சரணங்களே. (3)
 
 
சரணு மவள்கொண்ட சஞ்சலத் தையெல்லாம்
.. சாடவரும்
முரணு மவள் அன்பின் மூப்பறிந் துண்மை
.. முதுபடைக்கும்
அரணு மவள்பதம் அண்டுவோர்க் கெல்லாம்
.. அபயமருள்
பரணு மவள்பதி வண்ணைக்கா மாட்சி
.. பவமணியே (4)
 
பவமணி தெய்வப் பதமணி வானோர்
.. பரிந்துணரும்
தவமணி இன்பத் தமிழ்மணி ஈசர்க்குத்
.. தாமுகந்த
சிவமணி எம்மவர் செம்மணி என்றுனைச்
.. சிந்திக்கவே
நவமணி யும்பொனும் நல்குவை வண்ணை
.. நகர்வல்லியே (5)
 
வல்லியே வல்ல வராகியே வாழ்வுக்கு
.. வாய்த்தஎலாம்
புல்லியே நின்னருட் போகம் அவையெனப்
.. புந்தி கொண்டும்
சொல்லியே அந்தச் சுவையில் திளைப்போம்
.. சுகிர்தமிகு
மெல்லியே வண்ணையில் மேவுமெங் காமாட்சி
.. மெய்யம்மையே (6)
 
அம்மையே எந்தையே ஆரமு தேஎன்(று)
.. அயர்விலெலாம்
செம்மையே நின்னைச் செபிப்பதால் நேரும்
.. சிறப்பலவோ
இம்மையே தீமை யெலாம்உருக் கொண்டும்
.. எதிர்த்தின்பங்கள்
தம்மையே காண்பதாம் தண்பொழில் வண்ணைத்
.. தயாநிதியே (7)
 
நிதியே நிதியின் நிறைபயனே எம்
.. நினைவிலுறு
மதியே மதியின் மயமாம் தெளிவே
.. மதியையும்வெல்
விதியே விதியின் விளைவே எமக்கதில்
.. வெற்றியையும்
கதியே தருவண்ணைக் காமாட்சி யாமுமைக்
.. கற்பகமே (8)
 
கற்பகத் தாளைஎம் காமாட்சி யாளைக்
.. கமலமுகப்
பொற்பகத் தாளைப் பொலிவுடை யாளைமுன்
.. புண்ணியமாம்
சொற்பகுத் தாளைச் சுவையுடை யாளைச்
.. சுயம்புருவாம்
தற்பகத் தாளைத் தொழுதவள் தாளைத்
.. தழுவுமினே (9)
 
தழுவு வதுமன்னை தாமரைத் தாளினைத்
.. தாழிசையில்
தொழுவது மன்னை துணையெனச் சொல்லும்
.. துறையதுவாய்
விழுவது மன்னையை வேண்டி அவள்முன்
.. விருத்தமெனும்
வழுவது மன்னைகா மாட்சியே நீக்கெனும்
.. வாக்கினிதே (10)

Chandar Subramanian

unread,
Jul 8, 2012, 8:21:04 PM7/8/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 11 - 20)
 
வாக்குக் கினியாள் மனத்துக் கினியாள்
.. வளருமனப்
போக்குக் கினியாள் புலனுக் கினியாள்
.. புலனமையும்
நோக்குக் கினியாள் நுகரற் கினியாள்
.. நுகருமருள்
தேக்குக் கினியாள் திருவண்ணைக் காமாட்சி
.. தேவியுமே (11)
 
தேவி அவளென்போம் தெய்விகம் பூக்கத்
.. திகழ்மணிப்பூ
வாவி அவளென்போம் வாழ்வாங்கு வாழ்ந்து
.. வளம்தருவோர்க்(கு)
ஆவி அவளென்போம் அப்பாலும் தத்துவம்
.. அத்தனைக்கும்
சாவி அவளென்போம் சந்ததம் காமாட்சி
.. சாரணியே (12)
 
சாரணி அண்ட சராசரம் யாவையும்
.. சார்ந்தியக்கும்
காரணி கண்டம் கறுத்தஎங் கண்ணுதற்
.. காதலுக்கே
பூரணி கொண்மெய்ச் சொர்க்கமும் நின்னாற்
.. புலர்ந்தெழுமே
வாரணி கொங்கைக்கா மாட்சியாம் வண்ணைசூழ்
.. வான்மழையே (13)
 
மழையே மழையின் மணமே மணம்பெறு
.. மண்பயனே
பிழையே எளியோம் பெரிது புரிந்திப்
.. பிறவியெலாம்
விழையேம் இணையடி வீணெனப் போந்தோம்
.. விழுந்தழிவை
அழையேம் இனியும் அடைக்கலம் வண்ணை
.. அதிசயமே (14)
 
அதியச மென்றே அனவ ரதமுமெய்
.. அன்பர்குழாம்
துதிசெய வென்றே தகளறு வண்ணையந்
.. தொல்பதியில்
விதிசெய வென்றே விழைந்திருப் பாளெங்கள்
.. வித்தகிதான்
மதிசெய வென்றேகா மாட்சி எனயாம்
.. வழங்கிடவே (15)
 
வழங்குவாள் வாரி வளங்கள்யாம் வாழ்கென
.. வாழ்த்தொலித்து
முழங்குவாள் நான்மறை முற்றுமவ் வண்டங்கள்
.. மோதுறவே
கழங்குவான் மீன்களும் கோள்களு மேயவள்
.. கைத்தலமேற்
புழங்குவாள் காமாட்சி பொன்விளை யாட்டிவை
.. பொய்யில்லையே (16)
 
இல்லை யெனினும் இருப்ப தெனினும்
.. இயம்புமெந்தச்
சொல்லையு மேபொருள் சூழப் பயில்வாள்
.. சுகவெளியின்
எல்லை யுலும்கூத் தியற்றுவாள் அவ்வெண்ணம்
.. என்னவென்றே
வல்ல வெவர்தாம் வகுப்பரெம் காமாட்சி
.. வைப்பிதுவே (17)
 
வைப்பது வாய்ப்புகல் வானோரும் பாய
.. வரிந்தமுதென்(று)
உய்ப்பது வாய்ப்பர யோகி யரும்பரிந்(து)
.. உள்ளொலியில்
மொய்ப்பது வாய்ப்பவ மோகன வாழ்வில்
.. முனைபவரும்
துய்ப்பது வாய்ப்பொலி யும்திருக் காமாட்சி
.. தோத்திரமே (18)
 
தோத்திர மென்ற துறைதொறும் சென்று
.. தொகுத்தமையும்
சாத்திர மென்ற சகலமும் கற்றதன்
.. சாரத்தையும்
பாத்திர மென்ற படைப்பினுட் கூட்டியாம்
.. பார்க்குமெலாம்
ஷேத்திர மென்ற சிறப்புகொள் வண்ணையஞ்
.. செல்வியன்றே (19)
 
செல்வி யவள்புகழ் செல்லு மிடமெலாம்
.. சேர்த்துதவும்
கல்வி யவள்புதுக் காவிய மாம்பல
.. கற்பனைக்கும்
நல்வியப் பாமகள் நாளும்கா மாட்சி
.. நயந்தெமக்குச்
செல்வியப் பாமெய்ச் சிவகதி பண்ணிச்
.. சிறப்பவளே (20)

Lalitha & Suryanarayanan

unread,
Jul 8, 2012, 9:20:28 PM7/8/12
to santhav...@googlegroups.com
படிக்கப் படிக்க ஆனந்தம் அளிக்கும் அற்புதப் படைப்பு! வாழ்க புலவர் பெருமான்!

சிவசூரி.

2012/7/8 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Siva Siva

unread,
Jul 9, 2012, 8:39:44 AM7/9/12
to santhav...@googlegroups.com


2012/7/7 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
படைப்பு:
 
சக்தி சரணமெனச்
.. சாற்றிப் படைப்பதற்கே
பக்தியொடும் தமிழைப்
.. பாடினேன், அம்பிகைக்கே.
 
காப்பு
 
வந்தாதி யாய்நின்ற வண்ணக்கா மாட்சியின்மேல்
அந்தாதி பாடுவதற் கஞ்சலித்தேன் - சிந்தாத
நம்பிக்கை யோடு நடக்குமிந் நூலுக்குத்
தும்பிக்கை யானே துணை
 
அந்தாதி
 
நாமாட்சி செய்ய நலம்வரும் வாணர்க்கு
.. நல்லிசையோ(டு)
ஆமாட்சி செய்ய அணிவரும் சொல்யாப்(பு)
.. அரவணைத்துப்
பூமாட்சி செய்யப் புகழ்வரும் வண்ணையம்
.. பொற்கொடியாம்
காமாட்சி செய்ய கருணை வரும்வழி
.. கண்டதுமே. (1)

காமாட்சியைக் கைதொழுவார்க் காமாட்சியே!

 
கண்ட பிணிபோம் கவலை களும்போம்
.. கவனமின்றிக்
கொண்ட பிறவிக் கொடுமைகளும் போம்வெறும்
.. கொள்கைகளாய்
விண்ட பெருமையும் வீராப்பும் போம்புகழ்
.. வெற்றியுமே
செண்டு புடைதரச் சேரும்கா மாட்சியைச்
.. சிந்திக்கவே. (2)
 
சிந்திப்போம் நாளெல்லாம் சிந்திப்ப தோடும்
.. செழுந்தமிழால்
வந்திப்போம் வாழ்வெலாம் வந்திப்ப தோடும்
.. வழித்துணையாய்
முந்திப்போம் புண்ணிய மூர்த்தியு மாமவள்
.. மொய்ம்புணர்ந்தே
சந்திப்போம் வண்ணையஞ் சக்திகா மாட்சி
.. சரணங்களே. (3)
 

--> மொய்ம்பு - இக்காலத்தில் அரிய பிரயோகமோ?
 

--> ஈசன் துதிகளில் 'அம்மையே அப்பா' என்று பல பாடல்களில் கானலாம். அதே போல், அம்மையைத் துதிக்கும் பாடல்களில் அவளை 'அப்பா' என்று சொல்வதும் உண்டா?
 
 
நிதியே நிதியின் நிறைபயனே எம்
.. நினைவிலுறு
மதியே மதியின் மயமாம் தெளிவே
.. மதியையும்வெல்
விதியே விதியின் விளைவே எமக்கதில்
.. வெற்றியையும்
கதியே தருவண்ணைக் காமாட்சி யாமுமைக்
.. கற்பகமே (8)
 
கற்பகத் தாளைஎம் காமாட்சி யாளைக்
.. கமலமுகப்
பொற்பகத் தாளைப் பொலிவுடை யாளைமுன்
.. புண்ணியமாம்
சொற்பகுத் தாளைச் சுவையுடை யாளைச்
.. சுயம்புருவாம்
தற்பகத் தாளைத் தொழுதவள் தாளைத்
.. தழுவுமினே (9)

--> 'தாளை'  என்ற தொடர் பன்முறை வந்து 'தாளைத் தழுவுமினே' என்றது இனிமை.

Siva Siva

unread,
Jul 9, 2012, 4:40:33 PM7/9/12
to santhav...@googlegroups.com


2012/7/8 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 11 - 20)
 
வாக்குக் கினியாள் மனத்துக் கினியாள்
.. வளருமனப்
போக்குக் கினியாள் புலனுக் கினியாள்
.. புலனமையும்
நோக்குக் கினியாள் நுகரற் கினியாள்
.. நுகருமருள்
தேக்குக் கினியாள் திருவண்ணைக் காமாட்சி
.. தேவியுமே (11)
 
தேவி அவளென்போம் தெய்விகம் பூக்கத்
.. திகழ்மணிப்பூ
வாவி அவளென்போம் வாழ்வாங்கு வாழ்ந்து
.. வளம்தருவோர்க்(கு)
ஆவி அவளென்போம் அப்பாலும் தத்துவம்
.. அத்தனைக்கும்
சாவி அவளென்போம் சந்ததம் காமாட்சி
.. சாரணியே (12)

--> சாரணி = ?
திருமுறையில் வரும் சாரணன் என்பதன் பெண்பாலா?

(http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70480&padhi=048&startLimit=9&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
சுந்தரர் தேவாரம் - 7.48.9
சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
    தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
    பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே.

சாரணன் - 'அடைக்கலம்' எனப் பொருள் தரும் 'சரண்' என்பதனடியாக வந்த தத்திதப் பெயர்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60080&padhi=008&startLimit=3&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC
அப்பர் தேவாரம் - 6.8.3
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
    ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
    புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
    தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன்காண் காளத்தி காணப் பட்ட
    கணநாதன்காண் அவனென் கண்ணு ளானே.

சாரணன் - எங்கும் இயங்குபவன். எல்லாவற்றையும் அறிபவன் ; எங்கும் தோற்றுபவன். )

Ms. Tamil

unread,
Jul 9, 2012, 7:10:23 PM7/9/12
to santhav...@googlegroups.com
மடக்கணி பற்றி சந்தவசந்தம் மூலமே அறிந்து கொண்டேன்:
https://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/4f5d99bac54d5ece

பாடல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு சந்தக்கவிமாமணி அவர்களுக்கும், சந்தர்
அவர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன்,
அர்விந்த்
http://mstamil.com

2012/7/1 Siva Siva <naya...@gmail.com>:

Chandar Subramanian

unread,
Jul 9, 2012, 8:17:18 PM7/9/12
to santhav...@googlegroups.com
கருத்துகளுக்கு நன்றி. கவிஞரிடம் தெரிவித்து வரும் விடைகளை பிறகு இடுகிறேன்.
 


 
2012/7/10 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jul 9, 2012, 8:19:16 PM7/9/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 21 - 30)
 
சிறப்பவள் நீநெஞ்சில் செந்தமிழ் மூன்றும்
.. சிறுபொழுதில்
நிறைப்பவள் நீஎந்த நீசரும் செய்த
.. நெடும்பிழையை
மறப்பவள் நீஅவர் மற்றுமங் குய்ய
.. மழைக்கருணை
இறைப்பவள் நீவண்ணை ஈச்சுரி நீஎமை
.. ஈன்றவளே (21)
 
ஈன்றவ ளாகி இறையவ ளாகி
.. எமக்குதவத்
தோன்றுவ ளாகிஅத் தோன்றாளு மாகித்
.. துணிவதற்கும்
சான்றவ ளாகிச் சமரசம் ஆகிச்
.. சயநெறியே
ஆன்றவ ளாயெமை ஆள்வதும் காமாட்சி
.. ஆதரமே (22)
 
ஆதா ரமும்நீ அபயமும் நீஎன்(று)
.. அழுதழுதுன்
பாதார விந்தம்யாம் பற்றிப் புலம்பிப்
.. பதறல்நிதம்
காதாரக் கேட்பினும் காக்க வராமல்நீ
.. கன்னெஞ்சமே
சாதா ரணம்கொளின் சார்வதென் காமாட்சி
.. சாம்பவியே (23)
 
சாம்பவி சங்கரி சாரும் பிரணவி
.. சத்தியம்போல்
தாம்பவித் தேமுன் தழையும்கா மாட்சி
.. தருமிணிவாய்
தேம்புவித் தெம்குறை தீர உனக்கே
.. தெரியவைத்தோம்
யாம்புவிக் காட்பட யாதினி மேற்றடை
.. யாமளையே (24)
 
யாமளை அன்பொன்றே யாதுமாய் வாழமெய்
.. யாண்டுமுற்றோம்
போமளை போட்டி பொறாமை புகைச்சலும்
.. பொய்ம்மையுமே
தாமுளை சாகும் தருமம் வளரும்
.. தயாபரியாம்
கோமளை வண்ணைக்கா மாட்சி எனும்தாய்
.. குளிர்க்கண்ணிலே (25)
 
கண்ணிலே அன்னவள் காட்சியே வைகும்
.. கருதுநெஞ்சம்
எண்ணிலே அன்னவள் எங்ஙன் வசப்படல்
.. என்பதுறும்
பண்ணிலே அன்னவள் பாடலே வந்து
.. பரிணமிக்கும்
மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர்
.. மாண்புமென்னே (26)
 
என்னே உனையாம் இகபர மென்னும்
.. இரண்டிலும்தான்
முன்னே வணங்கும் முதுபெரு ளென்ற
.. முறைமைகண்டு
பொன்னே எனவும் பொருத்தக் கருதிப்
.. பொலிவதுற்றோம்
அன்னேகா மாட்சி யருளுக யாமுன்
.. அடைக்கலமே (27)
 
அடைக்கல மாம்எம் அறிவைத் தெளிவாய்
.. அனைத்துவரும்
நடைக்கல மாம்எது நன்றுதீ தென்று
.. நடுவுறுத்தும்
விடைக்கல மாம்எவ் விளைவையும் வென்று
.. விரைந்தெழவே
படக்கல மாம்வண்ணைக் காமாட்சி பக்தி
.. படைமின்களே (28)
 
படைகொண் டெழுவோம் பதிகொண் டெழுவோம்
.. பவனிவெற்றிக்
குடைகொண் டெழுவோம் குடிகொண் டெழுவோம்
.. குவலயமே
தடைகொண் டெழினும் தயார்தயார் என்றே
.. தகர்த்தெறியக்
கடைகொண் டெழுகுவம் காமாட்சி தணையங்
.. கால்பணிந்தே (29)
 
கால்பணி வோமவள் கைபணி வோமவள்
.. காட்சிதர
மேல்பணி வோமவள் மெய்பணி வோமதன்
.. மேலுமருள்
பால்பணி வோமவள் பாடல் பணிவோம்
.. பரிந்துரைத்த
நூல்பணி வோமெலாம் நுண்ணிடைக் காமாட்சி
.. நோன்பறிந்தே (30)

Siva Siva

unread,
Jul 9, 2012, 10:46:49 PM7/9/12
to santhav...@googlegroups.com


2012/7/9 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

 --> /காக்க வராமல்நீ / - காக்கவா ராமல்நீ?

 
சாம்பவி சங்கரி சாரும் பிரணவி
.. சத்தியம்போல்
தாம்பவித் தேமுன் தழையும்கா மாட்சி
.. தருமிணிவாய்
தேம்புவித் தெம்குறை தீர உனக்கே
.. தெரியவைத்தோம்
யாம்புவிக் காட்பட யாதினி மேற்றடை
.. யாமளையே (24)
 
யாமளை அன்பொன்றே யாதுமாய் வாழமெய்
.. யாண்டுமுற்றோம்
போமளை போட்டி பொறாமை புகைச்சலும்
.. பொய்ம்மையுமே
தாமுளை சாகும் தருமம் வளரும்
.. தயாபரியாம்
கோமளை வண்ணைக்கா மாட்சி எனும்தாய்
.. குளிர்க்கண்ணிலே (25)
 
கண்ணிலே அன்னவள் காட்சியே வைகும்
.. கருதுநெஞ்சம்
எண்ணிலே அன்னவள் எங்ஙன் வசப்படல்
.. என்பதுறும்
பண்ணிலே அன்னவள் பாடலே வந்து
.. பரிணமிக்கும்
மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர்
.. மாண்புமென்னே (26)

--> /மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர் மாண்புமென்னே/ = ?

 
என்னே உனையாம் இகபர மென்னும்
.. இரண்டிலும்தான்
முன்னே வணங்கும் முதுபெரு ளென்ற
.. முறைமைகண்டு
பொன்னே எனவும் பொருத்தக் கருதிப்
.. பொலிவதுற்றோம்
அன்னேகா மாட்சி யருளுக யாமுன்
.. அடைக்கலமே (27)
 
அடைக்கல மாம்எம் அறிவைத் தெளிவாய்
.. அனைத்துவரும்
நடைக்கல மாம்எது நன்றுதீ தென்று
.. நடுவுறுத்தும்
விடைக்கல மாம்எவ் விளைவையும் வென்று
.. விரைந்தெழவே
படக்கல மாம்வண்ணைக் காமாட்சி பக்தி
.. படைமின்களே (28)

--> படக்கலமாம்? படைக்கலமாம்?
 
 
படைகொண் டெழுவோம் பதிகொண் டெழுவோம்
.. பவனிவெற்றிக்
குடைகொண் டெழுவோம் குடிகொண் டெழுவோம்
.. குவலயமே
தடைகொண் டெழினும் தயார்தயார் என்றே
.. தகர்த்தெறியக்
கடைகொண் டெழுகுவம் காமாட்சி தணையங்
.. கால்பணிந்தே (29)

--> தணையங்? தனையங்?
 

Chandar Subramanian

unread,
Jul 11, 2012, 9:59:38 PM7/11/12
to santhav...@googlegroups.com
--> /காக்க வராமல்நீ / - காக்கவா ராமல்நீ?
--> /மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர் மாண்புமென்னே/ = ?
இவையிரண்டையும் புத்தகத்தில் உள்ளபடிதான் கொடுத்திருக்கிறேன்.
 
--> படக்கலமாம்? படைக்கலமாம்?
--> தணையங்? தனையங்?
தட்டச்சுப் பிழைகள்:
"படைக்கலமாம்", "தண்டையங்" எனக் கொள்க.


2012/7/10 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jul 11, 2012, 10:00:20 PM7/11/12
to santhav...@googlegroups.com
அண்மையில் நடைபெற்ற வவேசு அவர்களின் நூல் வெளியீட்டு விழா குறித்தான தமிழழகனின் வெண்பா:
 
 
வித்தில் திளைத்து விரிவாக வான் திசைகள்
பத்தில் பறந்ததமிழ் பாத்திறத்தால் - சித்திரிப்போம்
நம்குலோத் துங்கரும் நண்பர் வவேசுவும்
பங்குளோர் வித்து,வான் பாங்கு

Chandar Subramanian

unread,
Jul 11, 2012, 10:03:10 PM7/11/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 31 - 40)
 
அறிந்த தனைத்தும் அவளென் றறிந்தோம்
.. அதன்வழியே
புரிந்த தனைத்தும் அவளென்று போந்தோம்
.. புலனொடுக்கித்
தெரிந்த தனைத்தும் அவளென்று தேர்ந்தோம்
.. தெளிவிலிவை
விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல் நெஞ்சம்
.. வியக்குமன்றே (31)
 
வியக்கும் படியவள் விந்தைவிஞ் ஞான
.. விளக்கமுமாய்
இயக்கும் படியினி தேயிருப் பாள்நலம்
.. எண்ணிலவாய்ப்
பயக்கும் படியெந்தப் பஞ்சை யையும் ஒரு
.. பார்வையிலே
கயக்கும் படியறுத் தாளுவள் காமாட்சி
.. காவியமே (32)
 
காவிய மேஎனக் கல்லொடு மண்ணும்
.. கனிவித்துயிர்
ஓவிய மேஎன உன்னொளி கூட்டி
.. உரைப்பதற்கே
மேவியம் மேநினை மேன்மேலும் வேண்டினம்
.. மேலெழுந்து
தாவியு மேமடல் தாழைசூழ் வண்ணைத்
.. தரங்கிணியே (33)
 
தரங்கிணி காமாட்சி தாள்மற வா(து)உன்
.. தயைபெறவே
நெருங்கணி யாகமுன் நின்றெம் குறையெலாம்
.. நேர்ந்துரைத்தோம்
குரங்கணி யாய்க்கனி கோடெறிந் தாடக்
.. குளிர்வனம்சூழ்
மருங்கணி யாம்வண்ணை மாமதிற் கோயில்
.. மகிழவந்தே (34)
 
வந்தேம் தெளிந்தேம் வருதுயர்க் கெல்லாம்
.. வகையிழந்தே
நொந்தேம் எனவும் நுடங்கு நிலையை
.. நொடியில்விட்டேம்
செந்தேன் பிலிற்றுமுன் சிங்காரத் தோட்டம்
.. சிறக்கஎதிர்
கொந்தேய் குழலிகா மாட்சி குளிரருள்
.. கூர்ந்ததுமே (35)
 
கூர்ந்தது மன்றிக் குறைவினை தீர்ந்தோம்
.. குறைவினையே
தீர்ந்தது மன்றித் தெளிவொன்று சார்ந்தோம்
.. தெளிவொன்றையே
சார்ந்தது மன்றிச் சமத்துவம் போந்தோம்
.. சமத்துவமே
போந்தது மன்றிப் பொலிந்தனம் காமாட்சி
.. புண்ணியமே (36)
 
புண்ணியம் நீயந்தப் புண்ணியம் யாவுக்கும்
.. பூத்தமுதற்
கண்ணியம் நீயந்தக் கண்ணியம் யாவுக்கும்
.. காட்சிமுந்த
எண்ணிய நீயந்த எண்ணங்கள் யாவும்
.. இயக்கவன்றோ
நண்ணிய நீவண்ணை நாடினை காமாட்சி
.. நாரணியே (37)
 
நாரா யணிநீ நவின்மறை நான்கும்
.. நயந்தொழுகும்
பாரா யணிநீ பரமனார் அன்றே
.. பகுத்துரைத்த
சீரா யணிஎழு நாலா கமும்நீ
.. சிரமிசையாம்
பேரா தணிந்தனம் பேறுறக் காமாட்சி
.. பெட்டகமே (38)
 
பெட்டகம் போலப் பிறங்குமுன் பாலே
.. பெரும்பற்றையாம்
இட்டகம் போற்றி இனிது புரந்தனம்
.. என்றென்றுமே
திட்டகம் போலத் திரைகடல் வாழ்வில்
.. தெரிந்தெம் கண்ணிற்
பட்டகம் பீரமும் நீயன்றோ காமாட்சி
.. பாங்கினியே (39)
 
பாங்கினி றைவான் பயன்தரு மாறு
.. பழுத்திருக்கும்
தீங்கனி நீஎன்றே தேடினம் கண்டோம்
.. திரண்டசுகம்
தாங்கனித் தின்பத் தனிப்பெரு வாழ்வும்
.. தழைப்பதுண்டே
ஆங்கினி காமாட்சி யாவுக்கும் நின்னருள்
.. ஆதிக்கமே (40)

Siva Siva

unread,
Jul 11, 2012, 10:11:26 PM7/11/12
to santhav...@googlegroups.com


2012/7/11 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 31 - 40)
 
அறிந்த தனைத்தும் அவளென் றறிந்தோம்
.. அதன்வழியே
புரிந்த தனைத்தும் அவளென்று போந்தோம்
.. புலனொடுக்கித்
தெரிந்த தனைத்தும் அவளென்று தேர்ந்தோம்
.. தெளிவிலிவை
விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல் நெஞ்சம்
.. வியக்குமன்றே (31)

 --> விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல்? விரிந்த தனைத்தும்கா மாட்சியேல்?
 
வியக்கும் படியவள் விந்தைவிஞ் ஞான
.. விளக்கமுமாய்
இயக்கும் படியினி தேயிருப் பாள்நலம்
.. எண்ணிலவாய்ப்
பயக்கும் படியெந்தப் பஞ்சை யையும் ஒரு
.. பார்வையிலே
கயக்கும் படியறுத் தாளுவள் காமாட்சி
.. காவியமே (32)
 
காவிய மேஎனக் கல்லொடு மண்ணும்
.. கனிவித்துயிர்
ஓவிய மேஎன உன்னொளி கூட்டி
.. உரைப்பதற்கே
மேவியம் மேநினை மேன்மேலும் வேண்டினம்
.. மேலெழுந்து
தாவியு மேமடல் தாழைசூழ் வண்ணைத்
.. தரங்கிணியே (33)
 
தரங்கிணி காமாட்சி தாள்மற வா(து)உன்
.. தயைபெறவே
நெருங்கணி யாகமுன் நின்றெம் குறையெலாம்
.. நேர்ந்துரைத்தோம்
குரங்கணி யாய்க்கனி கோடெறிந் தாடக்
.. குளிர்வனம்சூழ்
மருங்கணி யாம்வண்ணை மாமதிற் கோயில்
.. மகிழவந்தே (34)

--> /குரங்கணி யாய்க்கனி கோடெறிந் தாடக் குளிர்வனம்சூழ்/
அழகிய வர்ணனை.

--> நாலாகமும்நீ = ?

Chandar Subramanian

unread,
Jul 11, 2012, 10:17:21 PM7/11/12
to santhav...@googlegroups.com

--> விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல்? விரிந்த தனைத்தும்கா மாட்சியேல்?

ஆம். மாட்சியேல் என இருக்க வேண்டும்

--> நாலாகமும்நீ = ?

அப்படித்தான் நூலில் உள்ளது. கவிஞரிடம் கேட்டுச் சொல்கிறேன்.

2012/7/12 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Chandar Subramanian

unread,
Jul 15, 2012, 8:56:23 PM7/15/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 41 - 50)
 
ஆதிக்கும் ஆதியாய் அநாதியா மென்ற
.. அரும்பொருளாய்
நீதிக்கும் நீதியாய் நின்று நிமலையாம்
.. நிச்சயமாய்ச்
சோதிக்கும் சோதியாய்ச் சோதிச் சுடராய்த்
.. துரியவெளி
சாதிக்கும் வண்ணயஞ் சக்திகா மாட்சியைச்
.. சாற்றுமினே (41)
 
சாற்றுமின் அன்னையைச் சந்தமும் சிந்தும்
.. சகலமுமாய்ப்
போற்றுமின் ஆடையும் பொன்னு மணியும்
.. புனைகுவித்தே
ஆற்றுமின் அன்னைகா மாட்சி அவளென
.. ஆய்ந்தறிந்தே
நேற்றுமுனின்று நிகழ்வருங் காலமும்
.. நேர்வெல்லுமே (42)
 
வெல்வோம் அவளடிக் கீழ்நின்று பொல்லா
.. வினைகளையச்
செல்வோம் அவள்திருச் சந்நிதிக் கேசென்று
.. சித்திரமாய்ச்
சொல்வோம் அவள்பெயர் சுந்தரி காமாட்சி
.. சூழவந்(து), அ,
கல்வோம் எனலின்றிக் கைகூப்பி நிற்போம்
.. கருத்தொன்றியே (43)
 
ஒன்றே உலகவ் வுலகமும் சோதர
.. ஒற்றுமையாய்
நின்றே நிலவுமெந் நெஞ்சமும் தீமை
.. நினைப்பறியா(து)
அன்றே கருணையிற் காமாட்சி நம்மை
.. அரவணைக்கச்
சென்றேமுன் னேறும் சிறிதுமில் லைபகை
.. செப்புவதே (44)
 
செப்பு வதுமவள் சீர்த்திய யாமிந்தச்
.. சென்மத்திலே
ஒப்பு வதுமவ் வொருத்தியே தெய்வமென்(று)
.. உள்ளுணர்ந்தே
தப்பு வதுமில்லை தாயவள் காமாட்சி
.. தாட்பணிக்கே
எப்பு வனச்சுகம் ஏயினும் வேண்டோம்
.. இவைதிண்ணமே (45)
 
திண்ணமே கொண்டவர் திண்ணிய ராகத்
.. திகழ்ந்ததற்பின்
எண்ணமே வேறெதும் என்செயும் மாயஅவ்
.. வெண்ணமும்தன்
வண்ணமே மக்களின் வாழ்வை நடத்துமோ
.. வாய்த்தஇரு
கண்ணுமே கல்விநற் செல்வமாம் காமாட்சி
.. கன்னிகையே (46)
 
கன்னியே உன்னைக் கடவுளர்க் கெல்லாம்
.. கடவுளெனப்
பன்னியே அந்தாதிப் பண்ணூறும் பாடிப்
.. பரவிநிதம்
சென்னியே உன்றன் திருவடி ஏற்றிச்
.. சிரசெழுத்தை
முன்னியே மாற்றவும் மூண்டனம் காமாட்சி
.. முன்வெற்றியே (47)
 
வெற்றிமேல் வெற்றிதான் வெற்றுரை யல்லஇவ்
.. வீறுரைகள்
பற்றிமேல் பற்றியப் பாதாம் புயத்தைப்
.. பணிந்தவொன்றால்
சுற்றுமேல் சுற்றிச் சுழலும் வினையெலாம்
.. சூழ்ந்தொழித்தோம்
கற்றுமேல் கற்றுக் கடைத்தேறக் காமாட்சி
.. காத்தவளே (48)
 
காத்தவ ளேவான் கயிலையார் பங்கிற்
.. கனியமுதாய்ப்
பூத்தவ ளேயன்று பொன்னகர்க் காஞ்சியிற்
.. போந்தமர்ந்து
மூத்தவ ளேயண்டம் மூன்றையும் உந்தியுள்
.. மூண்டடக்க
வாய்த்த ளேஎமை வாழ்த்துகா மாட்சி
.. வனமயிலே (49)
 
மயிலே அனையவான் மாதே குகனை
.. மகிழ்ந்துபெற்ற
குயிலே அனையர் குலமே இனிதொரு
.. கொள்கைநலம்
பயிலே எனஎமைப் பாலிக்கும் காமாட்சி
.. பார்க்கமுன்நீ
வெயிலே யணையா வியன்பொழில் வண்ணை
.. விழைபவளே (50)

Siva Siva

unread,
Jul 15, 2012, 9:31:20 PM7/15/12
to santhav...@googlegroups.com


2012/7/15 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

 / சீர்த்திய யாமிந்தச்/
சீர்த்தியை?

/வாய்த்த ளேஎமை/
வாய்த்தவளே?

Dr Subramanian

unread,
Jul 15, 2012, 9:45:39 PM7/15/12
to santhav...@googlegroups.com
அன்பு சந்தர்
நூல் வெளீயீடு நிகழ்ச்சியில் தமிழழகன் இவ்வெண்பாவை என்னிடம் சொன்ன போதே மகிழ்ந்தேன்.இப்போது இரட்டிப்பு மகிழ்ச்சி.நன்றிகள்.
அன்புடன்
வவேசு

2012/7/15 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President Indian Biomass Association
Land: 044-26208896
Res: 044-24748674
Mobile: 9381044470

Chandar Subramanian

unread,
Jul 16, 2012, 8:36:43 PM7/16/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
 
(பாடல்கள் 51 - 60)
 
விழைபவள் முன்னை விரும்பி விரும்பி
.. விழைபவர்க்கும்
குழைபவள் அன்னவர் கோரிக்கை ஏற்றுக்
.. கொடுப்பதற்கும்
தழைபவள் ஏன்றஎந் தாயினும் சாலத்
.. தயவினுக்கும்
இழைபவள் அல்லவோ என்றும் காமாட்சி
.. இறையவளே (51)
 
இறையவள் நீசொலும் என்னரு பேதம்
.. எனைத்திலுமே
மறையவள் நீஅதன் மாற்றமும் நீசொல்
.. மகிமைகுன்றா
நிறையவள் நீஎந்த நிச்ச யமும்நீ
.. நெடுந்தருக்கப்
பொறையவள் நீவண்ணை பூத்துக்கா மாட்சி
.. பொருந்துவையே (52)
 
பொருந்துவ தன்றிப் புலைமயக் காய்வெறும்
.. பொய்ம்மையிலே
வருந்துவ தன்றி வடவண்ணைத் தெய்வமெம்
.. வாழ்வுக்கரண்
திருந்துவ தாகத் திறமொடு கூட்டும்
.. தினம்தினம்யாம்
பெருந்தவம் காமாட்சி யன்னையைப் போற்றும்
.. பெருமையிதே (53)
 
பெருமையும் உண்டு பிறவுமே உண்டு
.. பெறுவனவான்
அருமையும் உண்டருள் ஆட்சியும் உண்டிவ்
.. வகிலமெலாம்
செருமையும் உண்டெனிற் செந்நெறி காமாட்சி
.. சீர்செயவே
ஒருமையும் உண்டுள் ளொளியதும் உண்டீ(து)
.. உறுதியன்றே (54)
 
உறுதிப் பொருளாய் உற்பொரு ளாயெலாம்
.. ஊன்றியுணர்ந்(து)
இறுதிப் பொருளாய் இறைபொரு ளாய்நீ
.. இருந்தமைகண்(டு)
அறுதிப் பொருளாய் அறாத பொருளாய்
.. அறிந்தமட்டும்
கருதிப் பொருள் நினைக் கண்டோமெங் காமாட்சி
.. கைகுவித்தே (55)
 
கைகுவிப் பாரெனில் காணவர் நெஞ்சக்
.. கமலத்திலே
பொய்குவிப் பாரவர் பூசனை யாறு
.. பொழுதிலுமே
செய்குவிப் பாரவர் சிந்தை யெலாம்சிவ
.. கீர்த்தி என்றே
மெய்குவிப் பார்வண்ணைக் காமாட்சி பக்தி
.. மிகைபெறவே (56)
 
மிகைபெற உண்டுமேன் மேலும் பயன்கள்
.. மிளிர்வனவாய்த்
தகைபெற உண்டு தனமொடு கல்வி
.. தழைத்தநடை
வகைபெற உண்டு வளம்பெறு வாழ்வும்
.. வளர்வதுண்டே
தொகைபெறச் சிங்காரத் தோட்டம்சூழ் காமாட்சி
.. தொன்மகளே (57)
 
தொன்மக ளேநலம் தோன்றப் பலவாய்த்
.. துறைகிளரும்
நன்மக ளேதமிழ் நாவிற் பழுத்து
.. நயந்திருக்கும்
சொன்மகளேஎச் சுகமும் பெறவே
.. சுரந்தருள்நீ
பொன்மக ளேபுடை போற்றுங்கா மாட்சியாம்
.. பொற்கொடியே (58)
 
பொற்கொடி காமாட்சி பூத்தநின் பீடத்தோர்
.. பூம்படியாய்க்
கற்கொடி யேனைக் கருணைகொண் டாக்கின்
.. கருதுபல்லூழ்
முற்கொடி தேஎன மூண்டன வாய்ச்சற்றும்
.. முன்நிற்பவோ
விற்கொடி யேறி விழியர சாள்பிறை
.. வேணியளே (59)
 
வேணிநீள் நல்ல வரைமலர்ச் செல்விபல்
.. வித்தைக்குமே
வாணிநீ நல்லமெய் வாழ்வுக்கும் அப்பால்
.. வருகதிக்கும்
தோணிநீ நல்ல துறையாம் சிவநெறி
.. துய்ப்பதற்கும்
ஏணிநீ நல்லாய்எம் காமாட்சி எங்கும்
.. இருப்பவளே (60)

Siva Siva

unread,
Jul 16, 2012, 9:54:48 PM7/16/12
to santhav...@googlegroups.com
இவ்வந்தாதியில் பல இடங்களில் அடியிடையே வரும் காய்ச்சீர்களின் ஈற்றில் நெடிலோசை வருவதைக் காண்கிறேன்.
இதைப்பற்றி முன்னர்ச் சந்தவசந்தத்தில் பேசியிருக்கிறோம் என எண்ணுகிறேன்.

2012/7/16 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

  உற்பொருள் = ?

 
கைகுவிப் பாரெனில் காணவர் நெஞ்சக்
.. கமலத்திலே
பொய்குவிப் பாரவர் பூசனை யாறு
.. பொழுதிலுமே
செய்குவிப் பாரவர் சிந்தை யெலாம்சிவ
.. கீர்த்தி என்றே
மெய்குவிப் பார்வண்ணைக் காமாட்சி பக்தி
.. மிகைபெறவே (56)

இப்பாடலின் பொருளை விளக்கினால் உதவும். (பொய்குவிப்பார் = ?)

Chandar Subramanian

unread,
Jul 18, 2012, 8:44:57 PM7/18/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 61 - 70)
 
இருப்பவ ளாய்மனம் எண்ணும் அனைத்தும்
.. இயன்றபிழை
பொறுப்பவ ளாயந்தப் பொய்ம்மை களைமுன்
.. பொறுத்திருக்கும்
அறுப்பவ ளாயெமை யாதரித் தாண்டாங்(கு)
.. அறநெறியில்
திருப்புவ ளாகிய தேவிகா மாட்சி
.. திறம்பெரிதே (61)
 
பெரிதே எனவுனைப் பேணிக்கொண் டாடிப்
.. பெறுவதற்கும்
அரிதே உலகம் உடங்கலும் ஆன்ற
.. அருண்மொழிகள்
வறிதே உனையாம் வணங்கவும் ஆசைகா
.. மாட்சியதாற்
சிறிதே புகன்றதிச் சேயரும் வேறென்ன
.. செய்வதுண்டே (62)
 
உண்டே பிறவிக் குறுதுணை காமாட்சி
.. ஒண்கமலச்
செண்டே எனுமடி சிந்தித்து நாளும்
.. செறிந்தவற்றில்
வண்டே எனவும் வலம்வரு வோம்அவ்
.. வரமொன்றையே
கொண்டே மெனிற்பின் குறியென்ன வேண்டும்
.. குவலயத்தே (63)
 
குவலய மேநின் கொலுவெனக் கண்டும்
.. குதிகுதித்துச்
சுவைலய மாயந்தச் சுந்தர இன்பத்தில்
.. சொக்கிநின்றோம்
நவலய மாகி நளினிபீ டத்தின்
.. நயஉச்சியில்
தவலய மாகுவை தாயாம்கா மாட்சி
.. தயைபண்ணியே (64)
 
பண்ணைக் குழைத்துப் பதமும் குழைத்துப்
.. பரவசமாய்
விண்ணைக் குழைத்து வியப்பும் குழைத்தநின்
.. வீறுரைப்பேன்
கண்ணைக் குழைத்(து) அதில் கங்குல் குழைத்தும்கா
.. மாட்சி என்றே
மண்ணைக் குழைத்து மகாலிங்க மாக்கி
.. மகிழ்ந்தவளே (65)
 
மகிழ்ந்தவ ளேநின் மலரடி அன்பர்
.. மனமுருக
நெகிழ்ந்தவ ளேயந் நினைவும் கனவுமெய்

.. நிச்சயமாய்
முகிழ்ந்தவ ளேயண்ட முட்டை யிலுமொரு
.. மோகனமாய்
வகிர்ந்தவ ளேஎம்கா மாட்சி வரம்தர
.. வழக்கென்னவே (66)
 
என்வழக் காயினும் ஏற்றது கொள்கஓர்
.. இச்சையினால்
பொன்வழக் கென்றோ பொருள்வழக் கென்றோ
.. புகுந்துன்னிடம்
முன்வழக் காட முனைத்திட வில்லைஇம்
.. மூவுலகும்
தன்வழக் காயருள் தாங்குகா மாட்சிஎம்
.. தாரகமே (67)
 
தாரகம் நீஎத் தருக்கமும் நீகொளும்
.. தந்திரநூல்
சாரகம் நீமறைச் சாத்திரக் கோவைநீ
.. சண்பகப்பூ
ஆரக மார்பொடும் ஆயிரம் சோதி
.. அவிர்பரிசாய்ப்
பாரகம் பீரம் பரப்புவை வண்ணை
.. பணைப்பவளே (68)
 
பணைப்பவ ளாகிப் பலகாலும் தேடிப்
.. பணியுமெனை
அணைப்பவ ளாகி அரனெனும் ஊற்றோ(டு)
.. அமுதமயம்
பிணைப்பவ ளாகிப் பெருந்தவ மாகிஎன்
.. பித்துநெஞ்சம்
மணைப்பவ ளாகும்கா மாட்சிஎன் னென்பேனுன்
.. மாட்சிமையே (69)
 
மாட்சிமெய் யுண்டே மறவா துனைத்தொழும்
.. மக்கட்கெலாம்
ஆட்சிமெய் யுண்டே அமருல கென்றும்
.. அமர்ந்துலவும்
காட்சிமெய் யுண்டே கருதோர் இமைப்பும்
.. கரம்குவிக்கச்
சாட்சிமெய் யுண்டேமா சக்திகா மாட்சியுன்
.. சார்பினர்க்கே (70)

Siva Siva

unread,
Jul 18, 2012, 8:54:36 PM7/18/12
to santhav...@googlegroups.com


2012/7/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 61 - 70)
 
இருப்பவ ளாய்மனம் எண்ணும் அனைத்தும்
.. இயன்றபிழை
பொறுப்பவ ளாயந்தப் பொய்ம்மை களைமுன்
.. பொறுத்திருக்கும்
அறுப்பவ ளாயெமை யாதரித் தாண்டாங்(கு)
.. அறநெறியில்
திருப்புவ ளாகிய தேவிகா மாட்சி
.. திறம்பெரிதே (61)
 
பெரிதே எனவுனைப் பேணிக்கொண் டாடிப்
.. பெறுவதற்கும்
அரிதே உலகம் உடங்கலும் ஆன்ற
.. அருண்மொழிகள்
வறிதே உனையாம் வணங்கவும் ஆசைகா
.. மாட்சியதாற்
சிறிதே புகன்றதிச் சேயரும் வேறென்ன
.. செய்வதுண்டே (62)
 
-->
அடுத்தடுத்து இரு பாடல்களில் வல்லின றகரமும் இடையின ரகரமும் எதுகையில் கலந்து வருவது சற்று வியப்பை அளிக்கிறது.

 

Chandar Subramanian

unread,
Jul 19, 2012, 9:11:05 PM7/19/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 71 - 80)
 
சார்பவர்க் கெல்லாம் சரணா லயமும்
.. சலனமறுத்(து)
ஓர்பவர்க் கெல்லாம் உறுதிப் பொருளாய்
.. உணர்ந்துணர்ந்து
நேர்பவர்க் கெல்லாம் நிலைகொள் துணையும்
.. நிகழ்பவளாய்த்
தேர்பவள் ஆவதும் வண்ணைக்கா மாட்சி
.. திருமகளே (71)
 
திருமகள் வானுறு தேவரும் கூடித்
.. திரண்டுதொழ
ஒருமகன் ஆகம உட்பொருள் யாவுமே
.. உய்த்துணர
வருமகள் செல்வியும் வாக்கெனும் கல்வியும்
.. வாய்த்தவிழிப்
பெருமகள் ஆகிப் பிறங்குவள் காமாட்சி
.. பெண்கிளியே (72)
 
கிளியே கிளிதரும் கின்னரி யாகிக்
.. கிளர்சுகமே
எளியே மெனயாம் இருந்துமுன் மாண்பினை
.. என்னென்றெலாம்
ஒளியே பெறுநெஞ் சுரைவாய்ப் படுத்தி
.. உணர்ந்தனம் நின்
அளியேகா மாட்சி யணைவதி லேஎமக்
.. கார்தடையே (73)
 
தடையெது நேரினும் தாயுனை எண்ணியே
.. தாங்கிவிடப்
படையது வாகிப் பணைக்க எம் தோளிற்
.. பனைவலியாய்
உடையதும் நீயன்றோ ஓங்காரி காமாட்சி
.. உட்கமலப்
புடையது கூடிப் புவனமூன் றாளும்
.. புரந்தரியே (74)
 
புரந்தரி மாதவப் புண்ணியம் நெஞ்சிற்
.. பொலிந்தருளும்
நிரந்தரி அன்பர் நெடுங்குறை யெல்லாம்
.. நிவர்த்திக்கவே
உரந்தரி பாசமும் ஒண்கணை ஐந்தும்
.. உயிர்ப்பொருட்டாய்க்
கரந்தரி சக்தியக் காமாட்சி என்பதும்
.. கண்கொள்ளுமே (75)
 
கொள்ளவும் கொண்டு குறைவிலாக் கல்வி
.. குலதனமாய்
விள்ளவும் கொண்டு வியப்புக்கும் அப்பால்
.. வியப்பரிதாய்
அள்ளவும் கொண்டுளே ஆனந்த மாகி
.. அறிவமுதம்
தெள்ளவும் கொண்டு தெளிவிக்கும் காமாட்சி
.. தீந்தமிழே (76)
 
தமிழே தமிழில் தழைக்கும்கா மாட்சி
.. தமிழதையே
குமிழேறி இன்பம் கொழிக்கக் குமர
.. குருபரர்பால்
சிமிழே எனும்வாய்ச் சிறுமியாய்ப் போந்துச்
.. செவிமடுத்தும்
உமிழே றோளிப்பரி சாரமன்னார்க்கன்(று)
.. உதவினையே (77)
 
வினையே செறிந்த விரைவுகொண் டெம்மை
.. விரட்டியொரு
முனையே ஒதுக்க முனையும் தருணம்
.. முகமனின்றி
அனையே எனவுன் அடைக்கலம் சார்வோம்
.. அதனையல்லால்
நினையேம்கா மாட்சி நிலையிலா எண்ணமெந்
.. நெஞ்சுக்குமே (78)
 
நெஞ்சுக்கும் நெஞ்சென நிர்மலா காசம்
.. நெடிதுகண்டே
அஞ்சுக்கும் அஞ்சென ஆங்கதில் தோன்றி
.. அடிமுடியாய்
மஞ்சுக்கும் மஞ்சென மாவடிச் சேவைக்கா

.. மாட்சிஎன்றே
பஞ்சுக்கும் பஞ்செனப் பாதம் நடந்தாய்
.. பகவதியே (79)
 
பகவ தியும்நீ பணிகுவார்க் கெல்லாம்
.. பரிந்தருளும்
சுகவ தியும்நீ சுகானு பவத்தில்
.. சுகித்திருக்கத்
தகவ தியும்நீ தயாள குணத்திற்கோர்
.. தாய்மையுமாய்
யுகவ தியும்நீ ஒளிகோடிக் காமாட்சி
.. உத்தமியே (80)

Siva Siva

unread,
Jul 19, 2012, 9:18:20 PM7/19/12
to santhav...@googlegroups.com


2012/7/19 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
(பாடல்கள் 71 - 80)
 
சார்பவர்க் கெல்லாம் சரணா லயமும்
.. சலனமறுத்(து)
ஓர்பவர்க் கெல்லாம் உறுதிப் பொருளாய்
.. உணர்ந்துணர்ந்து
நேர்பவர்க் கெல்லாம் நிலைகொள் துணையும்
.. நிகழ்பவளாய்த்
தேர்பவள் ஆவதும் வண்ணைக்கா மாட்சி
.. திருமகளே (71)
 
திருமகள் வானுறு தேவரும் கூடித்
.. திரண்டுதொழ
ஒருமகன் ஆகம உட்பொருள் யாவுமே
.. உய்த்துணர
வருமகள் செல்வியும் வாக்கெனும் கல்வியும்
.. வாய்த்தவிழிப்
பெருமகள் ஆகிப் பிறங்குவள் காமாட்சி
.. பெண்கிளியே (72)

--> /ஒருமகன்/ - ஒருமகள்?

 
கிளியே கிளிதரும் கின்னரி யாகிக்
.. கிளர்சுகமே
எளியே மெனயாம் இருந்துமுன் மாண்பினை
.. என்னென்றெலாம்
ஒளியே பெறுநெஞ் சுரைவாய்ப் படுத்தி
.. உணர்ந்தனம் நின்
அளியேகா மாட்சி யணைவதி லேஎமக்
.. கார்தடையே (73)
 
--> கிளிதரும் கின்னரி = ?

Chandar Subramanian

unread,
Jul 20, 2012, 9:06:35 PM7/20/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 81 - 90)
 
உத்தமி காமாட்சி உய்யுமா றுன்புகழ்
.. ஒன்றினையே
நித்தமிவ் வேழை நெடுந்தமிழ் மாலையாய்
.. நேரிரந்தேன்
சித்த மிளகிச் சிலம்படி தூக்கிஎன்
.. சென்னியிலே
வைத்து மிகுநலம் வாழ்விக்க வேண்டும்
.. வரமிவையே (81)
 
வரமிவை என்றுமெய் வாயாரப் போற்றி
.. வழிபடநின்
திறமிவை என்று தினம்தினம் முந்துவன்
.. தேடியுமுட்
புறமிவை என்றனு பூதியாற் காமாட்சி
.. பூரணிவான்
அறமிவை என்றுன் அருளுக் கிரந்தேன்
.. அடிமையுற்றே (82)
 
அடிமையுற் றோமெனில் நின்னன்பர்க் கல்லால்
.. அயலிலில்லை
மிடிமையுற் றோமெனில் மேவும் குறைகளை
.. மேலறுத்துக்
குடிமையுற் றோமெனில் கொண்டது நின்னருட்
.. கோயிலன்றோ
படிமையுற் றோமெனும் பாங்குகா மாட்சி
.. பசுங்கொடியே (83)
 
கொடியே கொடிமலர்க் கொன்றையைச் சூடிக்
.. குனித்தபிரான்
பிடியே எனுமாம் பிராட்டிகா மாட்சிநின்
.. பெற்றியெலாம்
அடியே னிவையென் றறியும் தரமோ
.. அகல்வெளியின்
முடியே தொடவும் முனைவது போலொரு
.. மூடமையே (84)
 
மூடமை என்னினும் முந்தப் பலவாய்
.. முறைதொகுத்துச்
காடமை நீற்றுக் கறைக்கண்ட னாரைக்
.. கருதித்தவ
பீடம மர்ந்தநின் பெண்மையைப் போற்றும்
.. பெருமையில்வான்
வீடமை வாமன்றோ காமாட்சி வெற்றி
.. விளையுமதே (85)
 
விளையும தாய்எம் வினைக்கொரு மூலமும்
.. விண்டறிந்து
களையும தாய்ச்சிவ காட்சியு மெந்தம்
.. கடைவிழிக்கே
திளையும தாய்நவ தேவிகா மாட்சியுன்
.. சீரடியில்
வளையும தாகஎம் சென்னியை வைத்தோம்
.. வணக்கமென்றே (86)
 
வணக்கமென் றோர்க்கெலாம் வானர சாளும்
.. வளமுமவள்
இணக்கமென் றோர்க்கெலாம் இங்கித வாழ்க்கையும்
.. ஈந்தவள்தான்
மணக்குமென் றோர்க்கெலாம் மங்கலப் பேறும்
.. மதித்தருள்வாள்
சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்வண்ணைச்
.. சுந்தரியே (87)
 
சுந்தரி சித்தச் சுவர்கடந் தாங்குச்
.. சுகவெளிகொள்
அந்தரி பூதங்கள் ஐந்தையும் ஆட்டி
.. அதன்விளையாட்
டுந்தரி யோக யுகாந்தரி கோடி
.. உதயநெற்றிச்
சிந்துரி காமாட்சி செம்பொருள் உன்றன்
.. சிறப்பிவையே (88)
 
இவையே சிறப்பென் றிறுதி உரைக்க
.. இயலுவதும்
நவையே மதன்கணை நாண்மலர் ஐந்தும்
.. நமனைவெல்லக்
கவையேறு பாசமும் கைக்கொண்ட தெய்வமாக்
.. கன்னிகையும்
சிவையேகா மாட்சியுன் சீர்த்தியுண் டின்னுமெம்
.. சிந்தனைக்கே (89)
 
சிந்தனைக் கும்படாச் செம்பொரு ளாகிச்
.. சிதம்பரமாய்
வந்தனைக் கும்படா வாறாப்பால் நின்று
.. வரும்விதியின்
நிந்தனைக் கும்படா தெம்மையு மேசிவ
.. நிர்மலமேல்
பந்தெனக் கூத்து பயில்வைகா மாட்சி
.. பராபரியே (90)

Siva Siva

unread,
Jul 20, 2012, 9:21:11 PM7/20/12
to santhav...@googlegroups.com


2012/7/20 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
-->
குனித்தபிரான் பிடியே -- இது ஏகதேசவுருவகந்தானே?


 
மூடமை என்னினும் முந்தப் பலவாய்
.. முறைதொகுத்துச்
காடமை நீற்றுக் கறைக்கண்ட னாரைக்
.. கருதித்தவ
பீடம மர்ந்தநின் பெண்மையைப் போற்றும்
.. பெருமையில்வான்
வீடமை வாமன்றோ காமாட்சி வெற்றி
.. விளையுமதே (85)
 
--> தவபீடம்? தவப்பீடம்?

விளையும தாய்எம் வினைக்கொரு மூலமும்
.. விண்டறிந்து
களையும தாய்ச்சிவ காட்சியு மெந்தம்
.. கடைவிழிக்கே
திளையும தாய்நவ தேவிகா மாட்சியுன்
.. சீரடியில்
வளையும தாகஎம் சென்னியை வைத்தோம்
.. வணக்கமென்றே (86)
 
வணக்கமென் றோர்க்கெலாம் வானர சாளும்
.. வளமுமவள்
இணக்கமென் றோர்க்கெலாம் இங்கித வாழ்க்கையும்
.. ஈந்தவள்தான்
மணக்குமென் றோர்க்கெலாம் மங்கலப் பேறும்
.. மதித்தருள்வாள்
சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்வண்ணைச்
.. சுந்தரியே (87)
 
--> /சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்/
சுணக்கமின் பேற*ப்*பற் சுழல்....என்று ஒற்று மிக்கு வரவேண்டுமோ?
சுழல் மெத்தைசூழ் = ?
 

Chandar Subramanian

unread,
Jul 20, 2012, 9:32:33 PM7/20/12
to santhav...@googlegroups.com
நூலில் உள்ளவாறே அளித்துள்ளேன். உங்களின் ஐயங்களை அவரிடம் தெரியச்செய்து அவர்கூறும் கருத்தைப் பின்னர் இடுகிறேன்.
 


 
2012/7/21 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Chandar Subramanian

unread,
Jul 23, 2012, 8:48:07 PM7/23/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 91 - 100)
 
பரியெனக் காற்றையும் பற்றி அதன்மேல்
.. பறந்துயர்வான்
சரியெனக் கோள்களும் அண்டமும் கைக்குள்
.. சமைத்திருப்போம்
புரியெனும் காஞ்சிப் புனிதரே காம்பரப்
.. புண்ணியர்க்கே
உரியநம் தேவிகா மாட்சியும் வண்ணையிங்(கு)
.. உற்றிடவே (91)
 
உற்றிடு வாளந்த ஓங்காரி காமாட்சி
.. ஒண்பொருளைக்
கற்றிடு வார்க்குக் கலைகளுண் டாம்மெய்க்
.. கவிதையுண்டாம்
பெற்றிடு வார்சிவப் பேரின்ப போகப்
.. பெருமையதும்
முற்றிடு மாறிவை மூதுரை யாகும்
.. முழுமையுமே (92)
 
முழுமையும் நீயென மொய்த்துநின் சந்நிதி
.. முற்றத்திலே
எழுமையும் கூடி இயலிசை பாடி
.. இணையிலராய்த்
தொழுமையும் செய்குவம் துள்ளியும் ஆடுவம்
.. தோத்திரம்வாய்ச்
செழுமையும் பாடிச்சீர்க் காமாட்சி வெல்கனெச்
.. செப்புவமே (93)
 
செப்பியும் பொல்லாச் சிறுவினைக் கெல்லாம்
.. சிதறுமனம்
தப்பியும் வெல்லுமித் தாரணி நாடகத்
.. தன்மையினை
ஒப்பியும் ஈங்குயிர்ப் புற்றனம் காமாட்சி
.. உன்னருளாய்க்
குப்பியும் பூதங்கள் கொண்டது போல்நின்னுடன்
கூடினமே (94)
 
கூடின வாறு குறைவிலா வாழ்வும்
.. கொடுத்தெமக்கு
நாடின வாறு நலம் செயச் செங்கை
.. நளினத்திலே
சாடின வாறந் தகனமே ஓடத்
.. தருமபயம்
தேடின வாறும் திகழும்கா மாட்சி
.. திருவருளே (95)
 
அருளே பொருளாய் அறிவே விரிவாய்
.. அமர்ந்துலகுத்
திரளே சிவமாய்த் தெளிவே நவமாய்த்
.. திளைத்திருக்க
மருளே கடந்துகா மாட்சியாம் அன்னை
.. மனோன்மணியாய்
இருளே கடிய எழுந்தனை ஞான
.. இரவியன்றே (96)
 
இரவியும் திங்களும் எண்ணுசேய் மாலும்
.. இரண்டரவும்
முருவிய பொன்னொடு மங்கல வெள்ளியும்
.. மந்தனுமாய்
நிரவிய கோளெலாம் நேர்பெறக் காமாட்சி
.. நின்னன்பர்பால்
கருவியு மாயவர் காலடி வைகுமோர்
.. கண் இமையே (97)
 
இமையே இமயா இமையோரும் மண்ணோரும்
.. ஏத்தவரும்
உமையே சிவானந்த உத்தமி காமாட்சி
.. ஊழ்வலியின்
சுமையே உயிர்க்கெலாம் சூழ்தல் தவிர்க்கச்
.. சுகவண்ணையில்
நமையே புரந்தும் நடந்தனள் என்றோதும்
.. நான்மறையே (98)
 
நான்மறை வாழ்க எந் நல்லோரும் வாழ்க
.. நவிலுமன்புக்
கோன்முறை வாழ்க குடிமையும் வாழ்க
.. குதூகலமும்
தான்மறை யாமல் தழைத்தெங்கும் வாழ்க
.. தருமமும்தன்
கான்முறை யூன்றிடக் காமாட்சி தாய் இடும்
.. கட்டளையே (99)
 
கட்டளை எனற கலித்துறை நூறு
.. கவிதைகளால்
இட்டளை கின்ற இவ் வின்றமிழ் மாலை
.. இனிதெவரும்
முட்டளை என்றதம் மூழைக்கா மாட்சி
.. முறித்திடவாய்
மட்டளை வர்சிவ மாகியும் வாழ்வர்நா
.. மாட்சிசெய்தே (100)

Siva Siva

unread,
Jul 23, 2012, 9:00:45 PM7/23/12
to santhav...@googlegroups.com
Thanks for your efforts in typing and posting it here.

2012/7/23 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

சாடின வாறந் தகனமே ஓடத் = ?
 
 
அருளே பொருளாய் அறிவே விரிவாய்
.. அமர்ந்துலகுத்
திரளே சிவமாய்த் தெளிவே நவமாய்த்
.. திளைத்திருக்க
மருளே கடந்துகா மாட்சியாம் அன்னை
.. மனோன்மணியாய்
இருளே கடிய எழுந்தனை ஞான
.. இரவியன்றே (96)
 
இரவியும் திங்களும் எண்ணுசேய் மாலும்
.. இரண்டரவும்
முருவிய பொன்னொடு மங்கல வெள்ளியும்
.. மந்தனுமாய்
நிரவிய கோளெலாம் நேர்பெறக் காமாட்சி
.. நின்னன்பர்பால்
கருவியு மாயவர் காலடி வைகுமோர்
.. கண் இமையே (97)
 
இமையே இமயா இமையோரும் மண்ணோரும்
.. ஏத்தவரும்
உமையே சிவானந்த உத்தமி காமாட்சி
.. ஊழ்வலியின்
சுமையே உயிர்க்கெலாம் சூழ்தல் தவிர்க்கச்
.. சுகவண்ணையில்
நமையே புரந்தும் நடந்தனள் என்றோதும்
.. நான்மறையே (98)

 இமையே இமயா? இமையே இமையா?

Subbaier Ramasami

unread,
Jul 23, 2012, 9:20:15 PM7/23/12
to santhav...@googlegroups.com
தலையாகு எதுகைகள் விளையாடும் பாடல்கள்

இலந்தை

2012/7/16 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Lalitha & Suryanarayanan

unread,
Jul 23, 2012, 10:05:05 PM7/23/12
to santhav...@googlegroups.com
படிப்போர்க்குப் பக்தியையும் ஆனந்தத்தையும் ஊட்ட வல்ல அற்புதமான படைப்பு.  தினமும் படித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். இந்த அந்தாதிப் பாடல்களை இடத் தொடங்கியதும் நான் அந்த மாபெரும் கவிஞரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் வணக்கத்தையும் பாராட்டுதல்களையும் ஆனந்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். நமக்காக இந்தப் பாடல்களை இங்கே இட்ட சந்தர் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.

சிவ சூரியநாராயணன்.

2012/7/24 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kavingar Jawaharlal

unread,
Jul 24, 2012, 1:23:43 AM7/24/12
to santhav...@googlegroups.com
நண்பரின் பாடல்களைப் படித்து மகிழ்கிறேன் .

2012/7/24 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 24, 2012, 5:40:02 PM7/24/12
to santhav...@googlegroups.com
அருமையான நூற்றந்தாதியில் கவிஞரின் இறையுணர்வும் கவித்துவம் கைகோத்து உலவுகின்றன. இங்கு இட்டதற்குச் சந்தருக்கு நன்றி.

அனந்த்

2012/7/23 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

-- 

Chandar Subramanian

unread,
Jul 24, 2012, 8:32:19 PM7/24/12
to santhav...@googlegroups.com
வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
நூற்பயன்
 
எண்ணுவன கூடும் இணையில்லா வாழ்வுதரும்
நண்ணுவன வெல்லாம் நலமாகும் - திண்ணம்
அருமையுறு காமாட்சி அந்தாதி நூறும்
பெருமையுற ஓதப் பெறின்
 
மடக்கு
 
அந்தாதிப் பாடில்லா அம்மைக்குக் கட்டளையால்
அந்தாதி பாடுவார்க் கன்னவள்தாம் - அந்தாதி
என்னுமாய் உற்றதுணை ஏற்றருள்வாள் மஞ்சளும்பூப்
பொன்னுமாய்ச் செல்வம் பொலிந்து
 
(அந்தாதி = அந்தம் + ஆதி, அந்த + ஆதி, அம் + தாதி)
 
கி. வா. ஜ அவர்களின் பாராட்டுப்பா
 
புவிமணி நெற்றரின் யாரே அதைமெச்சிப்
.. போற்றல்செயார்
சவிமணி யாங்கதிர் வானூறின் யாவரே
.. தாழகிலார்
செவிமணிச் சொற்கொள் தமிழ ழகன்றமிழ்
.. தந்துசந்தக்
கவிமணி என்றும் பெயர்பெற்று நின்றான்
.. கவினுறவே

Siva Siva

unread,
Jul 24, 2012, 9:08:29 PM7/24/12
to santhav...@googlegroups.com
இனிய அந்தாதி. இதை அவர் எப்போது இயற்றினார்? இதைப் பற்றிய வேறு ஏதேனும் குறிப்புகள் உள்ளனவோ?

கட்டளைக்கலித்துறையாக அந்தாதி அமைய, நூற்பயன் பாடல் வெண்பாவாக இருப்பதன் காரணம் என்னவோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/7/24 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 25, 2012, 3:41:05 AM7/25/12
to santhav...@googlegroups.com
அடிச்சார் அய்யா டப்பல்!,
நம்ம சிவா இஸ் க்ரேட்.. யாருக்கும் தோன்றாத ஐயம் இவரிடமே மையம்...அது உண்மையும் கூட.. தமிழ் அழகனாரைத்தான் கேட்கணும்.
யோகியார்

2012/7/25 Siva Siva <naya...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jul 25, 2012, 8:34:50 PM7/25/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - தொன்று தொட்டு
 
பிராயம் தோறும் - அபிப்
பிராயம் மாறும்
 
பருவம் தோறும் - கொண்ட
உருவம் தேறும்
 
வாரம் தோறும் - ஆர
வாரம் சேரும்
 
காலம் தோறும் - அதன்
கோலம் மீறும்
 
நாடு தோறும் - பண்
பாடே வேறும்
 
வீரு தோறும் - அன்பு
கூடச் சீறும்
 
தோற்றம் தோறும் - எதிர்
மாற்றம் ஏறும்
 
வாழ்வு தோறும் - ஆம்
யாவும் நேரும்
 
உள்ளம் தோறும் - நேர்
கள்ளம் கூறும்

Chandar Subramanian

unread,
Jul 26, 2012, 8:30:40 PM7/26/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - விருப்பங்கள்
 
விருப்பங்கள் கோபுரம்
திருப்பங்கள் நேர்புறம்
 
வாய்ப்புகள் சிலர்க்கு
ஏய்ப்புகள் பலர்க்கு
 
வாயடிக்கே வாய்க்கும்
காயடிக்கே காய்க்கும்
 
வசந்தமாய் வரும்படி
கசந்துமாய்ப் பெறும்படி
 
சந்தர்ப்பம் சாதிக்கும்
வந்தற்பம் வாதிக்கும்
 
வருவன வரட்டும்
பெறுவன பெறட்டும்
 
இறைவன் ஒருவன்
எதுவும் தருவன்
 
நிறைவெனப் பெறுவோம்
நிலையாமை மறவோம்
 
காலப் போக்கும் - அதன்
மூலம் ஏற்கும்

Chandar Subramanian

unread,
Jul 27, 2012, 8:45:33 PM7/27/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - செயல்திறம்
 
வயலுக்கு வரப்பு தேவை
செயலுக்கு சிறப்பு தேவை
 
ஆற்றுதல் நலமேல்
போற்றுதல் தலைமேல்
 
செதுக்கினால் சிற்பம் - உளி
ஒதுக்கினால் அற்பம்
 
உயர்ச்சி எவ்வொன்றும் - செயல்
அயர்ச்சியே வென்றும்
 
சுரங்கம் இருப்பான் - நாளை
அரங்கம் சிறப்பான்
 
முயற்சியே முந்தும் - செயல்
உயர்ச்சியே உந்தும்
 
செய்தால் ஜெயம்தான்
செய்யான் பயந்தான்
 
புயல்வேகம் போருக்கு
செயல்வேகம் சீருக்கு
 
முயற்சியில் முனையான்
அயர்ச்சியில் விளையான்

Chandar Subramanian

unread,
Jul 28, 2012, 8:56:31 PM7/28/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - கவிதை(2)
 
கருத்தால் கவியும் - சொல்
திறத்தால் குவியும்
 
எண்ணம் எழும்பும் - சீர்
வண்ணம் விளம்பும்
 
செஞ்சொல் சிற்பம் - அவை
நெஞ்சம் ஒப்பும்
 
சொற்களும் முன்னால் - பலாச்
சுளைகளும் பின்னால்
 
உள்ளூறும் முன்னால் - சொற்
கள்ளூறும் பின்னால்
 
சிந்தைச் சித்திரம் - சொல்
விந்தை விசித்திரம்
 
பல்லக் காட்டும் - பொருள்
சொல்லக் கூட்டும்
 
உரைகள் இருந்தால் - பொய்த்
திரைகள் புகும்தாள்
 
சந்தச் சதிர்கள் - அவை
சந்தப் புதிர்கள்

Chandar Subramanian

unread,
Jul 29, 2012, 8:38:35 PM7/29/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - அடக்கம்
 
அலைகடலே முழங்கும் - முத்தை
ஆழ்கடலே வழங்கும்
 
புலன்கள் அடங்கும் - எனில்
நலன்கள் தொடங்கும்
 
பணிவே துணியும் - அத்
துணிவே பணியும்
 
தாழத் தெரிந்தவன் - நன்கு
வாழப் புரிந்தவன்
 
அடக்கம் ஆயிரம் - அதன்
தொடக்கமாய் இரும்
 
பேச்சில் மவுனம் - செயல்
மூச்சில் கவனம்
 
நாநயம் சுருக்கும் - அது
ஊனையும் உருக்கும்
 
தானே தாழ்ந்தவர் - புகழ்
வான்நேர் வாழ்ந்தவர்
 
பணிவாய்ப் படர்ந்தவர் - செயல்
துணிவாய்த் தடர்ந்தவர்
 
அணிஎன அணிவது
பணிஎனப் பணிவது

Chandar Subramanian

unread,
Jul 31, 2012, 8:40:13 PM7/31/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - வாய்ப்புகள்
 
சந்தர்ப்பச் சாக்கு
வந்தொப்பப் போக்கு
 
தூண்டும் திரியில் - சுடர்
மீண்டும் பொரியில்
 
கண்கொத்திப் பாம்பு
பின் கொத்த வீம்பு
 
தூண்டிலில் மீனாய்
தாண்டிடும் வீணாய்
 
கொத்தினால் கொக்கு
எத்தினால் மக்கு
 
தழுவினால் அதிர்ஷ்டம்
நழுவினால் அது இஷ்டம்
 
பட்டாம் பூச்சி
விட்டால் போச்சு
 
விருப்பங்கள் கோபுரம்
திருப்பங்கள் நேர்புறம்
 
வாழ்க்கை வரைக்கும்
வேட்கை முறைக்கும்
 
கனாக்களில் களிக்கும்
வினாக்களில் பழிக்கும்
 
அன்றாட ஆர்வம் - பின்
சென்றோடும் சோர்வும்
 
வரவரப் பார்த்திரு - கை
பெறப்பெறக் காத்திரு

Chandar Subramanian

unread,
Aug 1, 2012, 8:38:55 PM8/1/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - முகத்துதி
 
வாய்ப்புகள் யார்க்கு? - வெகு
வாய்ப்புகழ் வோர்க்கு!
 
தாக்கினால் தாழ்வு - துதி
வாக்கினால் வாழ்வு
 
துதிக்கத் தொடங்கு - பலர்
மதிக்கும் மடங்கு
 
தாங்கத் தாங்க - புகழ்
ஓங்கும் ஓங்கும்
 
முகத்துதி முன்னால்
அகத்துதி பின்னால்
 
துதிசெயத் துதிசெயப் - பல
அதிசயம் அதுசெயும்
 
யாவுக்கும் இன்னுரை - அது
வாழ்வுக்கும் முன்னுரை
 
அள்ளிவிடும் துதி - செயல்
கொள்ளப்படும் மதி
 
அருச்சனைத் திரையில் - பல
பிரச்சனை மறையும்
 
முகத்துக்குச் சொற்கள் - புற
முதுகுக்குக் கற்கள்
 
வாயடிக்கே வாய்க்கும்
காயடிக்கே காய்க்கும்
 
ஆதிக்கம் மேவினும் - துதி
சாதிக்கும் யாவினும்
 
இதழில் கனிரசம்
இதயம் துளிவிஷம்
 
உதட்டில் சொல்வரும்
உள்ளே கல்மிஷம்
 
முகத்துக்கு முன் துதி - நெஞ்சே
அகத்துக்குப் பின் துதி

Chandar Subramanian

unread,
Aug 2, 2012, 8:55:59 PM8/2/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - பொன்மொழிகள்
 
பொன்மொழி எதற்கு?
பின்மொழி வதற்கு!
 
மேற்கொள அல்ல
மேற்கோள் சொல்ல
 
எடுத்தே புகலவும்
அடுத்தே அகலவும்
 
உரையில் தொடுவது - நடை
முறையில் விடுவது
 
வாயில் வழங்கலாம் - வழி
தோய விழுங்கலாம்
 
வழிபடக் கூறு
வெளிப்பட வேறு
 
நடத்தைக் கல்ல
நழுவ மெல்ல
 
சந்தர்ப்பத் தழுவல்
சமயத்தில் நழுவல்
 
எனைத்தானும் கேட்க
அனைத்தானும் ஏய்க்க
 
கேள்விமேல் கேள்வி
வாழ்வின் மேல் தோல்வி
 
மதிமேல் பூனை
பதில்மேல் பானை
 
கேட்டார்க் கெதிர்தான்! - சொல்ல
மாட்டார் பதில்தான்
 
அர்த்தங்கள் எண்ண
குதர்த்தங்கள் பண்ண
 
தர்க்கங்கள் தழைக்க
குதர்க்கங்கள் பிழைக்க
 
வேதங்கள் ஓத - வெறும்
வாதங்கள் மோத
 
வழிபடப் பேர்தான்
வழிப்பட யார்தான்?

Chandar Subramanian

unread,
Aug 3, 2012, 8:45:38 PM8/3/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - உறவு
 
விரிதலும் ஒருபால் - உடன்
விரிசலும் மறுபால்
 
காசுக்குக் காகம் - பணம்
பேசக்கொள் மோகம்
 
ஒருகணம் அன்பர்
மறுகணம் வம்பர்
 
ஒட்டும் உலகம் - பகை
வெட்ட விலகும்
 
காசுக்குக் கரையும் - பண
ஓசிக்கு விரையும்
 
ஒட்டுவதை ஒட்டும்
வெட்டுவதை வெட்டும்
 
நடிப்புக்கு நாட்களம் - மன
வெடிப்புக்கு வேர்க்களம்
 
பந்தத்தால் பாசம் - வரும்
சொந்தத்தால் மோசம்
 
பணத்தால் பழிக்கும் - எதிர்
குணத்தால் கொழிக்கும்
 
சந்தர்ப்பம் சறுக்கும் - அதை
வந்தற்பம் முறுக்கும்
 
தொல்லைமேல் தொடரும் - ஓர்
எல்லைமேல் இடரும்
 
பாசமேற்பட்டும் - ஆ
வேசமே ஆட்டும்
 
காரியம் படுவது - கால்
வாரியும் விடுவது
 
சோற்றுக்குச் சொந்தம் - கைம்
மாற்றுக்கு முந்தும்
 
விருந்தென வந்தும் - கள்ளப்
பருந்தெனக் குந்தும்
 
பரிவினைப் பகட்டும் - உட்
பிரிவினை புகட்டும்

Chandar Subramanian

unread,
Aug 4, 2012, 9:06:33 PM8/4/12
to santhav...@googlegroups.com
துளித் துளி - மனிதன்
 
அரை குறைப் பிண்டம்
அவசரப் பண்டம்
 
ஒன்றரை மிருகம்
தின்(று)அறை பெருகும்
 
சிந்தனைச் செம்மல்
நிந்தனை விம்மல்
 
வெறிகளால் விலங்கு
நரிகளாய் நலங்கு
 
உல்லாச உள்ளாம்
சல்லாபக் கள்ளம்
 
உத்தம வேடம்
மொத்தமும் மூடம்
 
ஆளாருக் கடிமை
பாழாகும் படிமெய்
 
அரசியற் கலைவன் - பணம்
வரைசெயல் தலைவன்
 
முகத்துதி முனைவன்
புகழ்த்துதி புனைவன்
 
சந்தர்ப்பச் சாதி
வந்தற்ப வாதி
 
சுவருக்குள் புனிதன்
தவறுக்குள் மனிதன்
 
சுயநலச் சித்தன்
அயல்நல எத்தன்
 
கனாக்களில் நோய்பவன்
வினாக்களில் தோய்பவன்
 
தப்புகள் புரிபவன்
தப்பிக்கச் சரிபவன்
 
தப்புகள் சேர்ப்பவன் - பின்
தப்பிக்கப் பார்ப்பவன்
 
பிழைகள் புரிந்தவன் - பின்
பிழைக்கத் தெரிந்தவன்
 
அகப்பட வாய் அற்றவன்
சுகப்படவாய் உற்றவன்
 
பிழைப்பின்மேல் நாட்டம்
பிழைகள் மேல் ஓட்டம்
 
கொள்கையில் குழப்பம்
உள்கையில் இளப்பம்
 
சங்கற்பத் தலைவன்
சந்தர்ப்பப் புலவன்
 
வாய்ப்புக் கடிமை
ஏய்ப்புக் குடி, மெய்
 
நடப்பால் மனிதன்
நடிப்பால் புனிதன்
 
நாள்தொறும் நாடகம்
ஆள் தொறும் பூடகம்

Ms. Tamil

unread,
Aug 4, 2012, 10:25:13 PM8/4/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தை ஐயா,

இங்கும் பிற இழைகளிலும் ஒரு பாடலைச் சிறப்புறச் செய்யும் இலக்கண
நுட்பங்களைச் சுட்டிக் காட்டுவதற்கு மிக்க நன்றி.

அர்விந்த்

2012/7/24 Subbaier Ramasami <elan...@gmail.com>:

Chandar Subramanian

unread,
Aug 5, 2012, 8:54:14 PM8/5/12
to santhav...@googlegroups.com
ஒளியைத் தேடி
 
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
.. வழியை நாடி விரைகின்றேன்
.. வாழ்வில் கூடிக் கரைகின்றேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
பொழுதுத் துளியும் யாழாகப்
புலரி வெளியும் பாழாக
.. அழுதும் அதற்கே மாறாக
.. அருணோ தயத்தின் வேராக
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
இதய மூலை ஆய்ந்திட்டேன்
எண்ணச் சோலை பாய்ந்திட்டேன்
.. உதய காலை புகுந்திட்டேன்
.. ஓகோ பொய்தான் மிகுந்திட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
நம்பிக் கையே அகலாக்கி
நாளும் அதையே புகலாக்கி
.. அன்பு மனமும் திரிகொண்டே
.. அதற்கும் மேலோர் நெறிகண்டே
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
முடியா நீண்ட பயணம்தான்
முனைப்பே தூண்டும் அயனம்தான்
.. மடியாய் அதற்கே மயங்கவில்லை
.. மனம்தான் சிறகு; தயங்கவில்லை
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
புதிய யுகத்தின் விடிவொன்று
புகையும் அகத்தின் முடிவென்று
.. எதிலும் துணிச்சல் வரப்பெற்றேன்
.. இதோஇ தோநான் புறப்பட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்

Chandar Subramanian

unread,
Aug 6, 2012, 8:38:45 PM8/6/12
to santhav...@googlegroups.com
கவிஞன் நான்!
 
அற்பு தத்தின்
சொற் பதத்தில்
.. அந்த ரங்க
.. சந்தம் பொங்க
.. ஆடுவேன் - கவி
.. பாடுவேன்.
 
எண்ணம் என்னும்
வண்ணம் மின்ன
.. எக்க ளிப்பின்
.. முக்கு ளிப்பில்
.. ஏறுவேன் - விதி
.. மீறுவேன்
 
மண்ட லத்துச்
செண்டெ டுத்து
.. மையம் பற்றி
.. வையம் சுற்றி
.. மாட்டுவேன் - திறம்
.. காட்டுவேன்
 
காலம் என்ற
ஞால மன்றில்
.. காட்சி யாவும்
.. சாட்சி மேவக்
.. காணுவேன் - வெற்றி
.. பூணுவேன்
 
திங்க ளோடு
தங்க ஊடு
.. தேனி லாவின்
.. வானில் மேவித்
.. தேறுவேன் - இளைப்
.. பாறுவேன்
 
சுந்த ரத்தின்
அந்த ரத்தில்
.. சொக்கும் காதல்
.. மிக்கும் போதை
.. சூழுவேன் - என்றும்
.. வாழுவேன்
 
நாவி யெங்கும்
காவி யங்கள்
.. நவ நிலத்தின்
.. பவனி வைத்தும்
.. நல்குவேன் - பொய்ம்மை
.. வெல்குவேன்
 
பாட்டு வீணை
மீட்டும் ஆணைப்
.. பரவ சத்தின்
.. அருள்வ சத்தில்
.. பாய்குவேன் - சிவம்
.. தோய்குவேன்
 
வாணி அன்னை
பேணி என்னை
.. வைக்கும் அன்பில்
.. மொய்க்கும் இன்பம்
.. வைகுவேன்  - யுகம்
.. செய்குவேன்
 
தீஞ்சொல் தானும்
ஊஞ்சல் ஆன
.. தெய்வம் நேரில்
.. கைவந் தூறத்
.. தேவையே - என்றன்
.. சேவையே

Chandar Subramanian

unread,
Aug 7, 2012, 8:35:39 PM8/7/12
to santhav...@googlegroups.com
வேண்டுகோள்
 
புதிய எண்ணங்கள்
புதிய வண்ணங்கள்
புதுவெள் ளம்போல்
பெருகவிடு - அதில்
விதியின் சிந்தைகள்
விளைக்கும் நிந்தைகள்
விடுத்தின் பங்கள்
பருகவிடு
 
வாழும் நம்பிக்கை
வளர்க்கும் அன்புக்கை
வழிகோத் தென்னை
நடக்கவிடு - அதில்
தோளும் தோளுமாய்த்
தொடரச் சூழுமாய்த்
துயரம் கொன்று
துடைக்கவிடு
 
சிந்தை வேகங்கள்
செயல்வி வேகங்கள்
செறிய மேலும்
வளர்ச்சிகொடு - அதில்
முந்தை மூடங்கள்
முனைந்த வேடங்கள்
முழுதும் சாய
எழுச்சிகொடு
 
இதயம் கோருமாய்
இறைஞ்ச வேறுமாய்
இருப்ப தென்ன,
மனிதனொடு? - அவன்
கதையும் மானிடக்
கவிதை தானிடக்
கனிந்தெம் தாயே
புனிதம்கொடு

Chandar Subramanian

unread,
Aug 8, 2012, 9:17:53 PM8/8/12
to santhav...@googlegroups.com
பயணம்
 
நெஞ்சின் நிழலில்
.. நீள நடந்தேன்
செஞ்சொற் கழலில்
.. சிகரம் அடைந்தேன்
 
கேட்ட இடத்தில்
.. கிளர்ச்சி ஆனேன்
பாட்டுத் தடத்தில்
.. பயணம் போனேன்
 
வாழ்க்கைக் குகையுள்
.. வசந்தம் சொரிந்தேன்
வேட்கைப் பகையுள்
.. விதிமேல் சரிந்தேன்
 
இரவின் அகலில்
.. இளமை வரைந்தேன்
பரவும் பகலில்
.. பசிமேல் கரைந்தேன்
 
அழகின் மயக்கில்
.. அமுதம் குடித்தேன்
பழகி வியக்கும்
.. பழைமை முடித்தேன்
 
சிந்தை முகட்டில்
.. சிறிதே களைத்தேன்
சந்தைப் பகட்டில்
.. சரிதம் வளைத்தேன்
 
சொல்லின் அசுவம்
.. சொடுக்கிமுன் விட்டேன்
புல்லின் விசுவப்
.. புதிரையே தொட்டேன்

Chandar Subramanian

unread,
Aug 9, 2012, 8:33:26 PM8/9/12
to santhav...@googlegroups.com
தழுவல்
 
புல்லில் அரும்பி வந்தாள் - அழகி
பொட்டுத் துளியெனவே!
சொல்லில் தழுவுகிறேன்! - அவள்மேல்
சுடராய் இழைவதற்கே!
 
மெய்யில் விளையவந்தாள் - அழகி
மின்வேர்த் துளியெனவே!
உய்யத் தழுவுகிறேன்! - அவள்மேல்
உழைப்பாய் உயர்வதற்கே!
 
மொட்டில் சிரித்துவந்தாள் - அழகி
முத்துத் துளியெனவே!
கட்டித் தழுவுகிறேன்! - அவள்மேல்
காற்றாய் மிதப்பதற்கே!
 
விண்ணில் உருகிவந்தாள் - அழகி
விரிநுண் துளியெனவே!
மண்ணில் தழுவுகிறேன்! - அவள்மேல்
மடையாய்ச் சிரிப்பதற்கே!
 
நெஞ்சில் நெகிழ்ந்துவந்தாள் - அழகி
நினைவுத் துளியெனவே!
செஞ்சொல் தழுவுகிறேன்! - அவள்மேல்
சிந்தனை ஆவதற்கே!
 
எண்ணும் வியப்பனைத்து - அழகி
இமைத்தாள் துளியெனவே!
கண்ணுள் தழுவுகிறேன்! - அவளே
காவிய அகண்டமென்றே!

Chandar Subramanian

unread,
Aug 10, 2012, 9:21:12 PM8/10/12
to santhav...@googlegroups.com
கவிக்குருவி
 
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி - நான்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
கருவில் உருவாகிக்
கவித்திருவும் ஆகிப்
பெருவெளியின் மீதும்
பேரொளியைக் கோதும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
பரசிவமாம் வெள்ளம்
பாய்ந்துணர்வை அள்ளும்
வரசிவமாய் என்னை
வாழ்த்திடுவன் அன்னை
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
ஞானமென்ற நாழில்
நாதமென்ற பாழில்
ஊனமொன்று நீங்க
உயிர்ச்சிறகு தாங்கக்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
அந்தரத்துத் தென்னை
அயர்ந்து வரும் என்னை
வந்தமரச் சொல்லும்
வசைமனத்தைக் கொல்லும்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
நெல்லழகு மூக்கும்
நிறைபுவனம் தூக்கும்,
சொல்லமுதக் காற்றில்
சோதிமுளைக் கீற்றில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி
 
காலமென்றன் கருவி
கவிதை என்றன் அருவி
ஓலமென்ற மேட்டில்
ஒளிச்சருகுக் கூட்டில்
குருவிஒரு குருவி - சின்னக்
குருவிஒரு குருவி

Chandar Subramanian

unread,
Aug 11, 2012, 9:15:33 PM8/11/12
to santhav...@googlegroups.com
கவிதை
 
கூளமாய்க் கலைந்த உட்
.. குரல்மனப் பூக்களை
மேளமாய்ப் புனைந்தஎன்
.. மெய்விரல் நாடகம்
 
என்னையே உருக்கி
.. இதயம்கொள் உணர்ச்சியில்
பொன்னையே பெருக்கும்
.. புதுச்சுடர் மந்திரம்
 
வாகனக் கற்பனை
.. வசந்த விழாக்களில்
மோகனச் சொற்கொளும்
.. மூர்த்திதன் ஊர்வலம்
 
நாக்குத் திரியில்
.. நர்த்தனம் ஆடி
வாக்குச் சுடர்தான்
.. வரையும் சாகசம்
 
மூளியாய்க் கிடந்தஎன்
.. மொழும்கல் மனத்தினை
காளியாய்ப் படைத்தொளி
.. காட்டிய தரிசனம்

Chandar Subramanian

unread,
Aug 12, 2012, 8:50:26 PM8/12/12
to santhav...@googlegroups.com
எழிலும் தொழிலும்
 
மின்னல் மரகத மேடையிலே - கதிர்ச்
செந்நெல் கரகம்முன் ஆடையிலே
முத்துப் பனித்துளி மொட்டுகள்நான் - வைர
வித்து மணித்துளிச் சொட்டுகள்நான்
 
உள்ளம் வெடித்த நிலங்களிலே - கண்ணீர்
வெள்ளம் வடித்த புலங்களிலே
உழைப்பவர் வேர்வை யுறுதுளிநான் - அங்குக்
களைப்பவர் ஜீவச் சிறுதுளிநான்
 
மஞ்சள் வெயில்வரும் மாலையிலே - கூடிக்
கொஞ்சும் குயில்வரும் வேளையிலே
மனம்முறிந் தோர்தம் மழைக்கண்ணீர்நான் - கூலி
தினமறிந் தோர்தம் பிழைக்கண்ணீர்நான்
 
அந்தர வான அடவியிலே - காயும்
சுந்தர சீனப் புடவையிலே
அள்ளி இறைத்த அழல்மலர்நான் - கோலப்
புள்ளி நிறைத்த தழல்மலர்நான்
 
எழிலென்றும் என்னை எழுதிடுவார் - அதன்
தொழிலென்றும் என்னைத் தொழுதிடுவார்
எழிலெனில் உள்ளேன்மெய் எண்ணத்திலே - அதன்
தொழிலெனில் உள்ளேன்கை வண்ணத்திலே

Chandar Subramanian

unread,
Aug 13, 2012, 9:03:57 PM8/13/12
to santhav...@googlegroups.com
எழிற்காலை
 
இரவெலாம் வானம்
கருவுயிர்த் தீன்ற
இளம்சிசுக் காலை - தங்கப்
பழம்பசுங் காலை - அதன் ஒளி
முறுவலாம் தேனைப்
பெறஎலாம் விம்மின
மோகனச் சோலை - தெய்வம்
ஆகநல் வேலை
 
விரிகடல் எல்லாம்
சரிகைகள் பின்னி
விளையாடும் காலை - வர்ண
இழையோடும் காலை - அதன் தனி
மெருகோடும் கண்டேன்
சருகுகள் தாமுமே
மின்னிடும் லீலை - இளம்
பொன்னுடற் சேலை
 
கிளையெலாம் மேலும்
ஒளிமுலாம் கோலம்
கிறுக்கிடும் காலை - வியந்(து) அதன்
வழிநடந் தேக
நளினமாய்த் தென்றல்
வழிகாட்டும் சாலை - எல்லாம்
எழில்கூட்டும் காலை

Chandar Subramanian

unread,
Aug 14, 2012, 8:58:29 PM8/14/12
to santhav...@googlegroups.com
கதிர்மகள்
 
வண்ணக் குழம்போ?
வானப் பிழம்போ?
வருகுது பார், தம்பி - அது
சொர்ணக் குழம்பாய்ச்
சோதித் தழும்பாய்ச்
சுழலுது பார், எம்பி!
 
தங்கக் குடமோ?
தாமரைப் படமோ?
தழையுது பார், தம்பி - அது
பொங்கும் குடமாய்ப்
பூரிப் பிடமாய்ப்
பொலியுது பார், எம்பி!
 
வயிரமின் தட்டோ?
வார்கடல் திட்டோ?
வனப்(பு) அது பார், தம்பி -அது
இயற்கையின் தட்டாய்
எழில்மகள் பொட்டாய்
ஏறுது பார், எம்பி!
 
காலக் குளமோ?
ககனப் பழமோ?
கண்டவர் யார், தம்பி? - அது
மூலக் குளமாய்
முற்றும் வளமாய்
மூண்டது பார், எம்பி!
 
மண்ணுக் கரசோ?
மன்னர் முரசோ?
மருவுது பார், தம்பி! - அது
கண்ணுக் கரசாய்க்
கடவுட் பரிசாய்க்
காண்பதும் பார், எம்பி!
 
கங்குல் முடிவோ?
கவலை விடிவோ?
கதிர்முகம் பார், தம்பி - அது
மங்கலக் காலை
மணமகள் கோல
மகிழ்ச்சியு மாம், எம்பி!

Chandar Subramanian

unread,
Aug 15, 2012, 8:32:57 PM8/15/12
to santhav...@googlegroups.com
உதயம்
 
முன்னிருட் கங்குலில்
மின்னிய மீன்கணம்
முத்துப் பனியாச்சு - புல்மேல்
இறைத்த மணியாச்சு - வயசுக்
கன்னியும் செப்பொடு
தன் இல்லம் விட்(டு)ஆறு
காண நடந்தாச்சு - கன்னத்தில்
நாணம் படர்ந்தாச்சு
 
மேலை நெடுவானில்
கோல நிலாவட்டம்
மேனி வெளுப்பாச்சு - உயிரோ(டு)
ஊனில் களிப்பாச்சு - இளைய
காலை நளினிக்குக்
கட்டியம் கூறிப்பூங்
காவும் விழிப்பாச்சு - கண்முன்னம்
யாவும் செழிப்பாச்சு
 
ஓடை மதகுநீ
ரோ(டு)ஒளிச் செங்கதிர்
ஊடிச் சிலிர்த்தாச்சு - நுரைநுரை
ஆடிச் சலிச்சாச்சு - முகிலில்
மூட மிடும்பனிக்
கூடம் விலகிநம்
முற்றம் எழிலாச்சு - இயற்கையே
முற்றும் தொழிலாச்சு
 
மாடப் புறாவும்செங்
காடைப்புள்ளும் திசை
மாறிப் பறந்தாச்சு - சிவ்வென
ஏறி விரைந்தாச்சு - அதனைப்
பாடப்பா டப்புதுப்
பாங்கில்பண் ணோடும்
பரவசம் உண்டாச்சு - இறைவன்
அருள்வசம் கண்டாச்சு
 
பழனச் சதிர்கொள்
வளநெற் கதிர்களும்
பாரில் படிஞ்சாச்சு - துயரும்
ஊரில் விடிஞ்சாச்சு - வீட்டின்
இழைநறும் கோலம்
எலாம்பரங் கிப்பூ
இதயம் மலர்ந்தாச்சு - அடடே
உதயம் புலர்ந்தாச்சு

Chandar Subramanian

unread,
Aug 16, 2012, 8:19:05 PM8/16/12
to santhav...@googlegroups.com
விடியல் வியப்புகள்
 
வசந்தங்கள் பூத்து வரிசை இடப் - பனி
வயிரங்கள் கோத்துத் தரிசைநட
அசைந்தெங்கும் நீள அவிநயமாம் - தென்றல்
அமரபூ பாளக் கவிநயமாம்
 
காலை அரும்புகள் கட்டியமாம் - அவை
காணச் சுரும்புகள் முட்டியும் ஆம்
கோல ரகசியம் கூறிடுமாம் - அதில்
கோடி அவசியம் தேறிடுமாம்
 
பொரிப்பொரிக் கிண்ணத்துப் பூச்சிகளாம் - அவை
பொடிப்பொடி வண்ணத்துக் காட்சிகளாம்
விரிப்பொடும் பூம்பொழில் விட்டில்களாம் - அந்த
வியப்புக்குக் காம்பெழில் கட்டில்களாம்
 
ஓடை அருவிகொள் உல்லாசம்தான் - அங்கே
ஒதுங்கும் குருவிகள் நல்வாசம்தான்
கூடை மலரும் கொலு எனலாம் - நிசிக்
கொத்தாய்ப் புலரும் நிலவெனலாம்
 
பின்னும் என்னென்ன பிதற்றல்களாம் - கிளிப்
பிள்ளைபோல் சொன்ன குதற்றல்களாம்
சொன்ன ஒவ்வொன்றும் புதுநலம்தான் - தெய்வ
சொர்க்கமாய் நின்ற குதூகலம்தான்

Chandar Subramanian

unread,
Aug 17, 2012, 8:40:06 PM8/17/12
to santhav...@googlegroups.com
அந்தி வந்தது
 
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
சிந்திச் சிந்தி இறைத்த பூக்கள்
சிற்பக் கோலம் பூண்டன - அந்தச்
சிதரில் ஒளிப் புதரில் மனம்
சென்று சென்று மீண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
குந்திக் குந்தி எழுந்த சிட்டுக்
குருவி மீண்டும் அமர்ந்தன - அவை
கொத்திக் கொத்தி விழுந்த நெல்லின்
குவியல் யாண்டும் சுமந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
துள்ளித் துள்ளி வெள்ளிக் கிண்ணம்
தொலைவில் எங்கும் உருண்டன - நிலாத்
துளிக ளென்னும் ஒளி அமுதச்
சுவையை மொண்டு புரண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
எள்ளி எள்ளி இறைத்த பொற்கா(சு)
எடுப்பார் இன்றிக் கிடந்தன - அவை
எண்ணி எண்ணி முடியு முன்னே
இரவுப் படை தொடர்ந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கோடி கோடிச் சிமிட்டல் கொண்டு
குறும்பு விழி பூத்தன - அந்தக்
குறும்பு விழிப் பார்வை எல்லாம்
நிரம்ப மணி கோத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
ஓடி ஓடி மின்மினிகள்
உயர உயர மொய்த்தன - அந்த
உப்பரிகைக் காடனைத்தும்
ஒளிச்சரிகை தைத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
புலர்ந்து புலர்ந்(து) உலைக்களத்தின்
பொரித்து கள்கள் தெறித்தன - அந்தப்
போர்க்களத்தில் மலைகளெல்லாம்
பூவாணமாய்ச் சிரித்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கலந்து கலந்(து) இருளும் ஒளியும்
கண்ணா மூச்சே ஆடினே - அந்தக்
கால முறை ஆடலுக்கும்
கவிதை வீச்சே கூடின
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
It is loading more messages.
0 new messages