ஆஷாட நவராத்திரி பாடல் 1

48 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jul 13, 2026, 8:54:35 PMJul 13
to santhavasantham

                                                                                            

 

                                                                                 ஆஷாட நவராத்திரி -2026
                                                                                        13-4-2026

பாடல் 1

அன்னையே என்னவே உன்னையே வேண்டியே
     அம்மா வரவேற்கிறேன்
     ஆதார பீடமாய்ச் சேதாரமின்றியே
     ஆசனம் நான் தருகிறேன்
என்னயிது என்னயிது என்னயிது என்னவே
     என்னையே நான் பார்க்கிறேன்
     ஏதுமே எனதில்லை யாவுமே உனதென்றே
     என்கரம் நான்சேர்க்கிறேன்
உன்னதம் உன்றனின் சன்னதி என்னுளம்
     உன்னையே நான் பார்க்கிறேன்
     உட்கார்ந்திருக்கின்ற பெட்பினைக் காண்கிறேன்
      உற்சாகம் கொள்ளுகின்றேன்
என்னரும் வாராகி இன்னரும் வார்த்தாலி
      ஏனமா முகப்பூரணி
       ஏர்க்கலப் பையுடன் கூர் உலக்கை கரம்
      ஏற்றிடும் சேனாபதி
     இலந்தை 

Kaviyogi Vedham

unread,
Jul 13, 2026, 9:28:23 PMJul 13
to santhav...@googlegroups.com
abaaram, yo..


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCwyxLG_DbHQEx%2B76XaOY7VRVUWpwqPvpw2tc6cOidzZg%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jul 13, 2026, 10:02:54 PMJul 13
to santhav...@googlegroups.com
Nice.

1)
What is the vAypAdu?

2)
/ என்னயிது / 
Typo. என்னவிது.

V. Subramanian


On Mon, Jul 13, 2026 at 8:54 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Girija Varadharajan

unread,
Jul 13, 2026, 10:40:51 PMJul 13
to santhav...@googlegroups.com
தோடுடைய செவியன் பாடலில் , 
பீடுடைய பிரமாபுரம் என்ற வரியில் பொதுவாக அந்தத் தலத்தைச் சுட்டி,  அவ்வூர் பீடுடையது அங்கே மேவிய சிவன்,  இவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. 

 பீடுடைய என்ற அடைமொழியைப் பெம்மானுக்கும்  பொருத்தி,  

பிரமாபுரம் மேவிய, பீடுடைய,  பெம்மான் இவன் அன்றே

என்றும் பொருள் கொள்ளப் பாடல்  இடம் தருகிறது தானே. 

அது இன்னும் சிறக்குமோ? 

வரதராஜன் அ கி 

Girija Varadharajan

unread,
Jul 13, 2026, 10:55:52 PMJul 13
to santhav...@googlegroups.com
முந்தித் தானே முளைத்தானை,  மூரி வெள்ளே(று) ஊர்ந்தானை 

அந்திச் செவ்வான் படியானை,  அரக்கன் ஆற்றல் அழித்தானைச் 

சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிசேர்த்தி,  

எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே  -

                              (திருப்புகலூர் பதிகம்) 

இந்தப் பாடலில் ஈற்றுச் சீர் நாசமே என்பது ஈரசைச் சீராகத் தோன்றுகிறதே ( மூவசைச் சீராக இருக்க வேண்டுமோ? அல்லது இதை எப்படி எடுத்துக் கொள்வது?) 

பாடும் போது நாசம்மே என்று பாட வேண்டுமோ?  

வரதராஜன் அ கி 

Ram Ramakrishnan

unread,
Jul 14, 2026, 8:26:12 AMJul 14
to santhav...@googlegroups.com
மிக அருமை.

பதினோரு சீர் விருத்தம் எனக் கொள்கிறேன். தலைவர் வேறு விதமாக்க் கூறவியலும்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 13, 2026, at 22:02, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jul 14, 2026, 8:56:16 AMJul 14
to santhav...@googlegroups.com
இது பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரி"
ய விருத்தம். இரட்டையாசிரிய விருத்தம் என்றும் சொல்வதுண்டும். இதில் ஒவ்வோர் அரையடியிலும் இறுதிச் சீர் ஓரசைச் சீராக அமையும் . 
எ.கா "ஒருமையுடன் உனதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண் டும்"

இலந்தை

Subbaier Ramasami

unread,
Jul 14, 2026, 9:38:08 AMJul 14
to santhav...@googlegroups.com
அப்படியும் கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 14, 2026, 9:53:45 AMJul 14
to santhav...@googlegroups.com
Thanks.
வாய்பாடு என்ன?

/ அம்மா   / 
ஆசனம்  /

These appear to be of differing types.

V. Subramanian

Swaminathan Sankaran

unread,
Jul 14, 2026, 10:00:27 AMJul 14
to santhav...@googlegroups.com
இது சம்பந்தர் தன்னுடைய பிறந்த ஊருக்குப் புகழ் சேர்ப்பதாகக் கொண்டால் 'பீடுடைய பிரமாபுரம்'
என்று இருக்கலாம்.





--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Jul 14, 2026, 10:01:15 AMJul 14
to santhav...@googlegroups.com
Yes.
When multiple descriptors are stacked, sometimes it may be possible to apply a descriptor to more than one thing in that phrase.
If multiple valid interpretations are feasible, then whatever appeals the most to a person is fine.

1.1.2 - line-4 
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Here, the phrase பெற்றமூர்ந்த does not describe பிரமாபுரம் - and needs to be applied to Siva. 

1.1.5 - lines 3 & 4
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Here, the phrase பெருமைபெற்ற describes பிரமாபுரம்.

V. Subramanian

On Tue, Jul 14, 2026 at 9:38 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jul 14, 2026, 10:10:03 AMJul 14
to santhav...@googlegroups.com
https://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40150&padhi=015&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
4.15.11
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை யரக்க னாற்ற லழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி
எந்தை பெம்மா னென்னெம்மா னென்பார் பாவ நாசமே.

In a seer, sometimes viLam may come where usually kAy comes.
When singing, the seer duration will get extended for the thALam.

Another example:
Sambandar Thevaram - 1.80.1
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

This song's meter is - mA kAy mA kAy.
But, line-3 seer-4 & line-4 seer-4 - both are viLam & not kAy.

Hope this helps.

V. Subramanian



On Mon, Jul 13, 2026 at 10:55 PM Girija Varadharajan <girij...@hotmail.com> wrote:
முந்தித் தானே முளைத்தானை,  மூரி வெள்ளே(று) ஊர்ந்தானை 
அந்திச் செவ்வான் படியானை,  அரக்கன் ஆற்றல் அழித்தானைச் 
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிசேர்த்தி,  
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே  -


Subbaier Ramasami

unread,
Jul 14, 2026, 11:37:46 AMJul 14
to santhav...@googlegroups.com
அம்மா என்பதுடன் அடுத்த சீரின் முதல் எழுத்து வ சேர்ந்துவிடும் அம்மாவ  ரவேற்கிறேன் என ஆகும் ர என்பது விட்டிசைக்கும்

ஆசனம்       நான்தருகி றேன்  என்றமையும்.   சரிதான்.

On Tue, Jul 14, 2026 at 9:53 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks.

Girija Varadharajan

unread,
Jul 14, 2026, 6:41:34 PMJul 14
to santhav...@googlegroups.com

நன்றி  சிவ சிவா 


வரதராஜன்

From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Siva Siva <naya...@gmail.com>
Sent: Tuesday, July 14, 2026 10:09 PM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: அப்பர் தேவாரத்தில் ஓர் ஐயம்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Girija Varadharajan

unread,
Jul 14, 2026, 6:42:12 PMJul 14
to santhav...@googlegroups.com
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி 
வரதராஜன் 

Sent: Tuesday, July 14, 2026 10:01 PM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: சம்பந்தர் தேவாரம் ஒரு சிறு ஐயம்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 14, 2026, 10:08:15 PMJul 14
to santhav...@googlegroups.com
Thanks.

Subbaier Ramasami

unread,
Jul 14, 2026, 10:50:01 PMJul 14
to santhavasantham

 

ஆஷாட நவராத்திரி – பாடல் 2

பாவகை பற்பல பாவைவ டித்திடப்
  பைந்தமிழில் பார்க்கிறேன்
  பாவெடுத்துத் தர நீவருவாயென
  பாதையிற் கண்சேர்க்கிறேன்
தேவைய றிந்ததைத் தேர்ந்துகொ டுத்திடும்
   தெய்வமே வாராகியே
   சித்திக்கும் எத்தகு வித்தைக்கும் நாயகி
   சிந்தனையில் வருவாய்
நாவைய சைத்திடு காவியம் பாடுவேன்
   நம்முளேன் சச்சரவு?
   நான்விழும் போதிலே நீவந்து காப்பதும்
   நானறி யாதவொன்றோ? 
ஏதெது தக்கதென் றாதரித் தேதரும்
   ஏனமுகத் தரசி


   ஏர்க்கலப்பையுடன் கூர் உலக்கைகரம்

   ஏந்திடும் சேனாபதி!

 

இலந்தை
14-7-2026

On Mon, Jul 13, 2026 at 8:54 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jul 15, 2026, 1:49:29 PMJul 15
to santhav...@googlegroups.com
Nice.

நாலாம் அடியில் எதுகை மாறுகின்றதா?

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Jul 15, 2026, 2:30:24 PMJul 15
to santhav...@googlegroups.com
அடடா நான் கவனிக்கவே இல்லையே!  சுட்டியதற்கு நன்றி. நான் மாற்றிவிடுகிறேன்

ஏவலன் என்னையும் பாவலனாக்கிடும் என அந்த அடி மாறுகிறது

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jul 15, 2026, 10:16:45 PMJul 15
to santhav...@googlegroups.com
ஆஷாட நவராத்திரி- பாடல் 3

                                                                                           

               ஆஷாட நவராத்திரி-  பாடல் 3

                மண்டபம் அமைத்தல்
                 15-7-2026

 

அம்மையே வாராகி செம்மையாய் மண்டபம்
     ஆக்கியே நான் வைக்கிறேன்
     ஆசன மாகவே வாசமாய்ச் சந்தனத்(து)
      ஆன எழிற்பீடமே

அம்மவோ கால்களாய் செம்மர யானைகள்
       யாவும லங்காரமே
       அற்புத மாகவே சிற்பவிசித்திரம்
       ஆயிரம் ஆயிரம்மே

பொம்மைகள் பற்பல செம்பொனில் செய்தவை
        புத்தழகேறிடுமே
        புத்தம் புதியதாய் ரத்தின மாலையும்
        பொங்கிப் பொலிந்திடுமே

எம்மரும்  அம்மையே உம்மையே வேண்டினேன்
         ஏன முகத்தரசி
         இம்மணி மண்டபம்  அம்மநீ ஏறியே
         எங்களை வாழ்த்துகவே!

 

இலந்தை
15-7-2026
image.png

Subbaier Ramasami

unread,
Jul 16, 2026, 11:54:21 PMJul 16
to santhavasantham
image.png

ஆஷாட நவராத்திரி- 4

அபிஷேகம்

அற்புதக் கங்கைநீர் பொற்குடத் தில் திசை
  யானைகள் தூக்கிவரும்
 அள்ளிடும்வாசனை கொள்ளும் தை லங்களை
 அப்ஸரஸ் தாம்கொணர்வர்
பொற்புள சந்தனம் முற்றும ரைத்தது
  பூசிட அங்கிருக்கும்
  பூசுமஞ்சள் தூளும் வாசனை மிக்கதாய்
   பொற்கிண்ணத்திலிருக்கும்
கற்பனைக் கெட்டாத காட்டுமலைத்தேனை
  கானவர் தாம் கொணர்வர்
  காராம்ப சுப் பாலும் தாராளமாய்க்கிட்டும்
   கட்டித் தயிரிருக்கும்
எற்றிறத்தும் புகழ்  பெற்றபஞ் சாமிர்தம்
   ஏராளமாயிருக்கும்


   ஏர்க்கலப்பையுடன் கூர் உலக்கைகரம்

   ஏந்திடும் சேனாபதி!

இலந்தை

16-7-2026

Siva Siva

unread,
Jul 17, 2026, 8:59:58 AMJul 17
to santhav...@googlegroups.com
/  எம்மரும்  அம்மையே உம்மையே வேண்டினேன்   /

அரும் அம்மை == அரிய பிரயோகமோ?
அரும் என்று உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் வருவது உண்டா?

வி. சுப்பிரமணியன்

இமயவரம்பன்

unread,
Jul 17, 2026, 10:33:38 AMJul 17
to santhav...@googlegroups.com
அழகிய நடையில் அமைந்த அருமையான பாடல்கள், தலைவரே

Subbaier Ramasami

unread,
Jul 18, 2026, 8:17:45 PMJul 18
to santhavasantham

        ஆஷாட நவராத்திரி- 5

அலங்காரம்

 

அழகிய சிரசினில் எழில்மிகு கரண்டாகம்
     அணிசெய வைத்துள்ளோம்
     அடரொளி அணிமணி திடம்பெறு வடிவிலே
     அழகழ காயுளவே!
எழிலுள நுதலினில் அழகுறக் கஸ்தூரி
     ஏற்றமாய் ஒளிவிடுமே
      எத்தனையோ மணி புத்தழ காரங்கள்
      எழில்தரும் திருக்கழுத்தில்
இழையொளிப் பதக்கமே விழைகிற அழகிலே
      இசைந்திடும் திருமார்பில்
       இதமுடன் செவியணி புதுவிதக் குண்டலம்
       எடுத்திவண் வைத்துள்ளோம்
இழையிசைச் சிலம்புகள் விழ்கவர  கடகங்கள்
       இருப்பன அழகழகாய்
        ஏர்க்கலப்பையுடன் கூர்உலக்கைகரம் ஏந்திடும் சேனாபதி
image.png

Subbaier Ramasami

unread,
Jul 18, 2026, 8:18:59 PMJul 18
to santhavasantham

பச்சைநி றத்திலே கச்சைகள் வைத்துளோம்
    பட்டிலே பொற்சரிகை
     பாரிலே  இதுநிகர் யாரிட முமிலா
     பச்சைநி றப்புடவை
மெச்சும் வகையிலே விச்சையி தோவென
     மெல்லிய லார்வியக்க
      மேகலையில் எழி லாகவே குஞ்சங்கள்
      வேண்டியி ணைத்துள்ளோம்
உச்சமாய் மாலைகள் இச்சையாய்  கட்டிடும்
      உயர்கலைப் பெண்டிரெலாம்
       உன்னத மாகவே இன்னறும் மாலைகள்
      ஒளிமிகக் கட்டியுளார்
எச்சம யத்திலும் நிச்சய மாகவே
      எங்களைக் காப்பவளே
      ஏர்க்க லப் பையுடன் கூர் உலக்கைகரம்
      ஏந்திடும் சேனாபதி!


image.png



On Mon, Jul 13, 2026 at 8:54 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

M. Viswanathan

unread,
Jul 18, 2026, 8:46:45 PMJul 18
to Santhavasantham
அருமை..அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jul 18, 2026, 9:08:13 PMJul 18
to santhav...@googlegroups.com
மகரவீற்ருப் புணர்ச்சி விதியின் படி மகர மெய்யின் முன் உயிர் வரின் அது இரு விதமாகப் புணரும். அதில் ஒரு வகையில் உடம்படு மெய் தோன்றும் அரும்பெரும் + அம்மை என்பது அரும்பெருவம்மை என மாறும்

என மாறும்

Subbaier Ramasami

unread,
Jul 22, 2026, 10:12:28 PMJul 22
to santhav...@googlegroups.com

ஆஷாட நவராத்திரி-7

மண்ணுக்கடியிலே உண்ணுதற் கேற்றதாய்
                வாகாய்க் கிழங்குவகைகள்
                வார்ப்பா யடியுள்ள வேர்க்கடலையொடு
                வள்ளிக் கிழங்குமுண்டு
வண்ணம்  பழுப்புள்ள திண்கோரை தோண்டியே
                வைத்துளோம் நல்லபடியே
                மங்காச் சிவப்பிலே வெங்காயம் உண்டு, பின்
                வன்காரப் பூண்டுமுண்டு
எண்ணில் வகையிலே கிண்ணம் கிண் ணமாக
                இங்கே இனிப்புவகைகள்
                ஏராளப் பானகம் தாராளம் உண்டுகாண்
                எல்லாம் உனக்காகவே
எண்ணி மகிழ்ந்திட வண்ணப் பழரசம்
                இங்கே நிரப்பியுள்ளோம்

                ஏர்க்கலப்பையுடன் கூர் உலக்கைகரம்
                 ஏந்திடும் சேனாபதி

ஆஷாட நவராத்திரி  8

 

சூரியன் தன்னுடை வீரியச் சோதியால்
                சுற்றுவான் ஆரத்தியே
                சுயவொளி இல்லாத அயலொளியால் மதி
                 சொந்தமாய்த் தான் சுற்றுவான்
வாரிதி மீன்களாய்ச் சாரியாய் விண்மீன்கள்
                வந்துவந்தே சுற்றிடும்
                வண்ண ஒளிமேனிக் கிண்ணம் சுமந்திடும்
                 மாயமாம்  மின்மினி கள்    
சாரிசா ரியாகத் தாம்பறந்தே வரும்
                தண்ணொளி வீசிவ ருமே
                தனிப்பசு மஞ்சளில் நனைந்திருக்கும் ஒளி
                சாதனை யாய்த் தெரியும்
ஏரல் எழுத்தெனச் சேர்கற்பூ ரத்தினை
                ஏற்றியே நான் சுற்றுவேன்

                ஏர்க்கலப்பையுடன் கூர் உலக்கைகரம்
                 ஏந்திடும் சேனாபதி               
(ஏரல் எழுத்து- நத்தை  வாய்த் திரவத்தை மண்ணில் சிந்திச் செல்லும் போது அமையும் கோடு. அது சில சமயங்களில் ஏதாவது   எழுத்துப் போன்று தோன்றலாம். அதற்கு ஏரல் எழுத்து என்று பெயர்.  அது “அ” எழுத்துப்போலத்தெரிந்தால் தமிழறிந்த நத்தை எனச் சொல்ல முடியுமா?  நான் ஏத்தும் கற்பூரமும் அப்படித்தான். சூரிய ஒளியோடு ஒப்பிடமுடியுமா?”)
  

Siva Siva

unread,
Jul 22, 2026, 10:56:37 PMJul 22
to santhav...@googlegroups.com
/ வெங்காயம் உண்டு, பின் வன்காரப் பூண்டு /

Aren't these generally avoided in offerings?

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Jul 23, 2026, 7:06:06 AMJul 23
to santhav...@googlegroups.com
வாராஹிக்குப் பூமியின் அடியில் கிடைக்கின்ற பதார்த்தங்கள் ஏற்புடையன. வாராகி வழிபாட்டில் பூண்டும் வெங்காயமும் அனுமதிக்கப்படுகின்றன

Subbaier Ramasami

unread,
Jul 24, 2026, 12:07:35 PMJul 24
to santhavasantham

                                                                                          

 

               வேண்டினேன் வேண்டினேன் வேண்டத் தெரியாமல்
                                                வேண்டினேன் வேண்டினேனே
                                     வேண்டிடத் தேவையா? வேண்டிய தேதென
                                      வித்தகி அறிவையன்றோ?
                வேண்டப் படாமலே வேண்டிய யாவையும்
                                     விழைந்தருள்  வாராகியே
                                     வேதனை சேராது சோதனை தாராது
                                      வேண்டிய நீ தருகவே!
                வேண்டுவேன் நானொன்று வேண்டுவேன் பாரதம்
                                     வீறுகொளச் செய்கவே
                                     மேதினியில் பல சாதனைகள் செய்து
                                     மேன்மைகள் பொங்க வைப்பாய்
                  வேண்டாத தீயவர்  தூண்டுவார் கலவரம்
                                    வீழ்த்துக நீயவர்களை
                                     வீரியே  வாராகி வார்த்தாளி  அன்னையே
                                       வேண்டுகின்றேன் நின்னையே!


On Mon, Jul 13, 2026 at 8:54 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

                                                                                            

 

                                                                                 ஆஷாட நவராத்திரி -2026
                                                                                        13-4-2026

பாடல் 1

அன்னையே என்னவே உன்னையே வேண்டியே
     அம்மா வரவேற்கிறேன்
     ஆதார பீடமாய்ச் சேதாரமின்றியே
     ஆசனம் நான் தருகிறேன்
என்னயிது என்னயிது என்னயிது என்னவே
     என்னையே நான் பார்க்கிறேன்
     ஏதுமே எனதில்லை யாவுமே உனதென்றே
     என்கரம் நான்சேர்க்கிறேன்
உன்னதம் உன்றனின் சன்னதி என்னுளம்
     உன்னையே நான் பார்க்கிறேன்
     உட்கார்ந்திருக்கின்ற பெட்பினைக் காண்கிறேன்
      உற்சாகம் கொள்ளுகின்றேன்
என்னரும் வாராகி இன்னரும் வார்த்தாலி
      ஏனமா முகப்பூரணி

       ஏர்க்கலப் பையுடன் கூர் உலக்கை கரம்

      ஏற்றிடும் சேனாபதி
     இலந்தை 

இமயவரம்பன்

unread,
Aug 9, 2026, 1:11:13 PM (5 days ago) Aug 9
to santhav...@googlegroups.com
"வேண்டினேன் வேண்டினேன் வேண்டத் தெரியாமல்
                                                வேண்டினேன் வேண்டினேனே
                                     வேண்டிடத் தேவையா? வேண்டிய தேதென
                                      வித்தகி அறிவையன்றோ?”
மிக அருமை, தலைவரே!
Reply all
Reply to author
Forward
0 new messages