பிற பாடல்கள்

768 views
Skip to first unread message

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 13, 2023, 9:08:13 PM11/13/23
to சந்தவசந்தம்
அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்

1.தெய்வப் பாப்பா பாடல் 

முருகா இங்கே வா வா 
    முருகா இங்கே வா வா 
ழகிய முருகவேளே
   றுமுகனும் நீயே
ன்னல் தீர்ப்பாயே
   ஸ்வரனின் சேயே
ன்னைப் பணிந்தோமே
    க்கம் தருவாயே
ன்றும் மயில்மீதே
    றி வருவாயே
யா குமரவேலே 
     யா குமரவேலே
ழுக்கம் எந்தன் உயிரே
     ம் ப்ரணவ மொழியே
 வை மொழி அமுதே
      ‘ ஃ ‘ இன் வடிவ வேலே
முருகா முருகா சரணம்
   முருகா முருகா வரணும்
நாளும் இசையில் பாடும்
 தெய்வப் பாப்பா நானே.

( இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய 
அம்மா இங்கே வா வா என்ற பாடலின் மெட்டில் அமைந்த தெய்வப் பாப்பா பாட்டு
திருக்கண்ணபுரம் திரு ப சங்கர் மற்றும் ச.பிரீத்திகாஸ்ரீ குழந்தையின் குரலில் பாடலைக்
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 25, 2023, 6:02:36 AM11/25/23
to சந்தவசந்தம்
அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபம் வாழ்த்துகள்

சோணாச்சலத்து ஒளிர் சோதி (வெண்பா)

அப்புவியைப் பன்றியாகி ஆராயும் மாலவனும் 
அப்பதனில் பால்பிரிக்கும் அன்னமாகி - அப்பிரமன்
காணாத தீயோந்தும் கையன்வாழ்
சோணாச் சலத்தொளிர் சோதி.

விளக்கம்

வராக வடிவத்தில் பூமியைக் குடைந்து சென்ற திருமாலும், 
நீரில் இருந்து பாலை பிரித்து உண்ணும் அன்னமாகி அந்தப் பிரமனும் , 
என இருவரும் காணா முடியாத அனலாகி நின்ற, தீ ஏந்தும் கையுடைய
 சிவபெருமான் வாழும் திருவண்ணாமலையில் ஒளிரக்கூடிய
திருக்கார்த்திகை தீபம்.

தீப மங்கள ஜோதீ நமோநம - அருணகிரிநாதர்

Anand Ramanujam

unread,
Nov 25, 2023, 8:57:12 AM11/25/23
to santhavasantham
நன்றி! இனிய திருக்கார்த்திகை தீபம் வாழ்த்துகள்!

சிறப்பான பொருள்பொதிந்த வெண்பா.

சில குறிப்புகள்:

- முதலிரண்டு அடிகளில் பன்றியாகி அன்னமாகி என்னும் சொற்கள் ‘பன்றியாய்’ ‘அன்னமாய்’ என்று வந்தால் செய்யுள் நடை மேலும் சிறக்கும்.
- மூன்றாம் அடியில் மூன்றே சீர்கள் உள்ளன.
- வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளில் ஒன்றாக உள்ளதா என்று சரிபார்க்கவும்.
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 25, 2023, 9:36:37 AM11/25/23
to சந்தவசந்தம்
ஐயா வணக்கம் 🙏 தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 
  சில மாற்றங்களுடன்.

சோணாச்சலத்து ஒளிர் சோதி (வெண்பா)

அப்புவியைப் பன்றியாய் ஆராயும் மாலவனும் 
அப்பதனில் பால்பிரிக்கும் அன்னமாய் -அப்பிரமன்
காணாத தீயோந்தும் கையுடை ஐயன்வாழ்
சோணாச் சலத்தொளிர் சோதி.
 
 மேலும் ஒரு ஐயம் ஐயா சோதி என்பது காசு என்ற வாய்பாட்டின் அடிப்படையில் தானே வந்துள்ளது

Anand Ramanujam

unread,
Nov 25, 2023, 10:09:36 AM11/25/23
to santhav...@googlegroups.com
“சோதி” என்பது தேமா வாய்பாட்டைக் கொண்டிருந்தாலும், “காசு” என்னும் சொல்லைப்போல  உகரத்தில் முடியவில்லை. அதனால் இது ”காசு” என்கின்ற வாய்பாட்டைப் பின்பற்றவில்லை. 

ஈற்றுச் சீரை மலர் என்னும் வாய்பாட்டின்படி அமைத்துப் பார்த்தால் சரியாக வரும் என்று நினைக்கிறேன்:
 
“சோணாச் சலத்துச் சுடர்”


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/566a3534-3b79-410b-a6c3-54588e6ac322n%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 25, 2023, 10:19:57 AM11/25/23
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா 🙏

சோணாச்சலத்துச் சுடர் (வெண்பா)

அப்புவியைப் பன்றியாய் ஆராயும் மாலவனும் 
அப்பதனில் பால்பிரிக்கும் அன்னமாய் -அப்பிரமன்
காணாத தீயோந்தும் கையுடை ஐயன்வாழ்
சோணாச் சலத்துச் சுடர்”

Anand Ramanujam

unread,
Nov 25, 2023, 10:24:34 AM11/25/23
to santhav...@googlegroups.com
🙏

தீயோந்தும் = தீயேந்தும் ?


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 25, 2023, 10:32:24 AM11/25/23
to சந்தவசந்தம்
 மீண்டும் மிக்க நன்றி ஐயா 🙏

Subbaier Ramasami

unread,
Nov 25, 2023, 8:36:56 PM11/25/23
to santhav...@googlegroups.com
ஐயனே  சோணாச் சலத்துச் சுடர்  என்றிருக்கலாமோ?

On Sat, Nov 25, 2023 at 9:02 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
 மீண்டும் மிக்க நன்றி ஐயா 🙏
சோணாச்சலத்துச் சுடர் (வெண்பா)

Subbaier Ramasami

unread,
Nov 25, 2023, 8:40:33 PM11/25/23
to santhav...@googlegroups.com
அன்னமாகி - இது விளாங்காய்ச் சீர்    வெண்பாவில் தவிர்க்கப்படவேண்டும்-
 குறில் நெடில் நடுவில் வரும் காய்ச்சீர் விளாங்காய்ச் சீர் எனப்படும்
சோதி  என ஈற்றுச் சீர் வராது

On Sat, Nov 25, 2023 at 4:32 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
s://groups.google.com/d/msgid/santhavasantham/ae79159d-efd3-4a64-9cc8-53f96fa17ddcn%40googlegroups.com.
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 25, 2023, 9:22:40 PM11/25/23
to சந்தவசந்தம்
🪔ஐயனே வணக்கம் 🙏 🪔
🪔ஐயனே சோணாச் சலத்துச் சுடர் 🪔 வெகு சிறப்பாக உள்ளது. 
🪔ஐயனே விளாங்காய்ச் சீரைப் பற்றி விளக்கியதற்கு நன்றி. 
🪔ஐயனே இனி விளாங்காய்ச் சீரை விலக்கி எழுதுகிறேன்.
🪔ஐயனே மிக்க நன்றி 🙏🪔

 🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
🪔 சோணாச்சலத்துச் சுடர் (வெண்பா) 🪔
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

அப்புவியைப் பன்றியாய் ஆராயும் மாலவனும் 
அப்பதனில் பால்பிரிக்கும் அன்னமாய் -அப்பிரமன்
காணாத தீயேந்தும் கையுடை ஐயனே
சோணாச் சலத்துச் சுடர்”🪔

🪔விளக்கம்🪔

வராக வடிவத்தில் பூமியைக் குடைந்து சென்ற திருமாலும், 
நீரில் இருந்து பாலைப் பிரித்து உண்ணும் அன்னமாகி பிரமனும் , 
என இருவரும் காணா முடியாது அனலாகி🪔
நின்ற, தீ ஏந்தும் கையுடைய ஐயனே !
 திருவண்ணாமலை மீது தீபமாக🪔
அனைவருக்கும் அருள்புரியும் சிவனே சரணம் 🙏


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 26, 2023, 7:52:47 AM11/26/23
to சந்தவசந்தம்
சோணாச்சலத்துச்சுடர் வெண்பா
பாடியவர் திருக்கண்ணபுரம் ப சங்கர் 
https://youtu.be/kUZiAmsOZy0?si=q21lwwQMNKrGIGNG

N. Ganesan

unread,
Nov 26, 2023, 9:21:22 AM11/26/23
to santhav...@googlegroups.com
On Sat, Nov 25, 2023 at 8:22 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
🪔ஐயனே வணக்கம் 🙏 🪔
🪔ஐயனே சோணாச் சலத்துச் சுடர் 🪔 வெகு சிறப்பாக உள்ளது. 
🪔ஐயனே விளாங்காய்ச் சீரைப் பற்றி விளக்கியதற்கு நன்றி. 
🪔ஐயனே இனி விளாங்காய்ச் சீரை விலக்கி எழுதுகிறேன்.
🪔ஐயனே மிக்க நன்றி 🙏🪔


பாம்பன் சுவாமிகள் ஆய்ந்து தந்த வெண்பா விதி
--------------------------------------

வெண்பா இலக்கணம் தமிழ்க் கவிதைக்கு இயற்கையாகவே அமைந்துள்ள கட்டுக்கோப்பான யாப்புவகை. அகவல் யாப்பு பேச்சின் வளர்ச்சி. அதற்கும் அடுத்தது வெண்கவி/வெண்பா. யாப்பிலக்கணத்தில் உத்தமம் ஆனது வெண்பா. பாடம் பண்ணுவதற்கு வெண்பா எளிதாக இருப்பது. இதனை ஔவையார், ‘வெண்பா இருகாலில் கல்லானை’ என்ற வெண்பாவில் சொல்லியுள்ளார். உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் வகையில் வெண்பா இயற்றுவோர் எக்காலத்திலும் இருக்கின்றனர். அவர்களைப் பாராட்டி, “எல்லாப் புலவருக்கும் வெண்பா புலி” என்றும் கூறினார். இப்போது Corpora Linguistics என்னும் ஆய்வுத்துறை கணினி நுட்பத்தால் பலம்பெற்று வருகிறது. வெண்பா ஓசை சிதையாமல் இருக்க ஒரு விதி 2000 ஆண்டுகளாகப் புழங்கிவருகிறது. பாம்பன் சுவாமிகள் இதனை முதலில் ஆராய்ந்து கூறியதால், “பாம்பன் சுவாமிகள் விதி” என அழைக்கலாம். அது வெண்பா எழுதத் தொடங்குவோருக்கு உதவுகிறது. சங்க நூல்களின் சுருக்கங்கள், சிலப்பதிகார வெண்பாக்கள், காரைக்காலம்மை பாடிய திருமுறைகளில் உள்ள மூத்த வெண்பாக்கள், புறப்பொருள் வெண்பாமாலை, திருமுருகு வெண்பா, ... என ஏராளம்.

19-ம் நூற்றாண்டில் தமிழில் உள்ள எல்லா வெண்பாக்களையும் ஆராய்ந்து ஓசைபற்றி ஒரு நுட்பமான விதியை பாம்பன் சுவாமிகள் விளக்கினார். வெண்பா இயற்றுவோருக்குப் பயன்தர வல்லது. விதப்புவிதி vitappu-viti , n. < விதப்பு¹ +. (Gram.) Special rule; சிறப்புவிதி. (நன். 165, சங்கரநமச்.)  வெண்பாவுக்கான விதப்புவிதி (பாம்பன் சாமிகள் முதலில் கண்டது). 
https://madhuramoli.com/விளாங்காய்ச்சீர்-விளங்/


பரிபூஜந பஞ்சாமிர்த வண்ணம் (1891)
-----------------------------------------------------------------------

தமிழில் வண்ணப் பாடல்களைப் பெரிதும் பாடியவர் அருணகிரிநாதர். அதன் பின்னர் பலர் வண்ணப்பாடல்களை எழுதலாயினர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அப்பாவகைக்கு இலக்கணமாக, வண்ணத்தியல்பு பாடினார். சிரவையாதீனத்துப் பெரும்புலவர் ப. வெ. நாகராசன் உரையெழுதி வெளியிட்டார். தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் இருவரும் முருகனைப் பல்லாயிரம் பாடல்களால் 19-ம் நூற்றாண்டில் புகழ்ந்து பாடிய கவிஞர்கள்.

பஞ்சாமிர்த வண்ணம் (1891), பாம்பன் சுவாமிகள் பாடல்:
http://mscherweroyar.blogspot.com/2008/06/blog-post_1007.html
https://kaumaram.com/pamban/panchamirthavannam_u.html   (உரை)

பஞ்சாமிர்த வண்ணம் செவிகுளிரக் கேட்க:
https://youtu.be/07kBAboYZd4 மயிலை சற்குருநாத ஓதுவார்
https://youtu.be/JAzUttA-eQc டி. எல். மகராஜன் பாடுகிறார்
https://youtu.be/TX-KZHYayF0 திருப்பூர் சோதரிகள்

நான்மறைகள், திராவிட மொழிகள், ... ஆராய்வதில் மொழியியல் அறிஞர் கைக்கொள்ளும் முறை ஒன்று உண்டு. தொகைம மொழியியல் (Corpora Linguistics) என்னும் துறை. 17-ம் நூற்றாண்டில் தமிழில் துணைவினைகள் (Auxiliary Verbs) இயங்குதலைத் தமிழ் இலக்கணிகள் கண்டு எழுதலாயினர். 19-ம் நூற்றாண்டில் தமிழில் உள்ள எல்லா வெண்பாக்களையும் ஆராய்ந்து ஓசைபற்றி ஒரு நுட்பமான விதியை பாம்பன் சுவாமிகள் விளக்கினார். வெண்பா இயற்றுவோருக்குப் பயன்தர வல்லது. 


வெண்பா விதப்புவிதியை ஆண்டீர்களாயின், உங்கள் வெண்பாக்கள் நளவெண்பா போலப் புகழ்பெறும்.

நா. கணேசன்

 🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
🪔 சோணாச்சலத்துச் சுடர் (வெண்பா) 🪔
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

அப்புவியைப் பன்றியாய் ஆராயும் மாலவனும் 
அப்பதனில் பால்பிரிக்கும் அன்னமாய் -அப்பிரமன்
காணாத தீயேந்தும் கையுடை ஐயனே
சோணாச் சலத்துச் சுடர்”🪔

🪔விளக்கம்🪔

வராக வடிவத்தில் பூமியைக் குடைந்து சென்ற திருமாலும், 
நீரில் இருந்து பாலைப் பிரித்து உண்ணும் அன்னமாகி பிரமனும் , 
என இருவரும் காணா முடியாது அனலாகி🪔
நின்ற, தீ ஏந்தும் கையுடைய ஐயனே !
 திருவண்ணாமலை மீது தீபமாக🪔
அனைவருக்கும் அருள்புரியும் சிவனே சரணம் 🙏


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 27, 2023, 1:01:34 AM11/27/23
to சந்தவசந்தம்
மதிப்பிற்குரிய நா கணேசன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏

பாம்பன் சுவாமிகள் ஆய்ந்து தந்த வெண்பா விதி
மற்றும் பல வகையான வெண்பா பற்றிய தரவுகளைத்
தொகுத்து அளித்ததற்கு மிக்க நன்றி 🙏

மேலும் பாம்பன் சுவாமிகளின் பஞ்சாமிர்த வண்ணம்
அடியேனுக்கு மிகவும் பிடித்தது. அடிக்கடி கேட்பது.

மேலும் ஒரு ஐயம்
எவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத் தக்கதன்று. 
அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப்பாவுக்குரிய ஓசையைக் கெடுத்துவிடும்.
என்பது போல

விளம் விளம் விளம் மா என்று இயற்றப்பட்டும்
விருத்தங்களில் ஒரு  சில இடத்தில் விளாம் 

விளம் விளாம் விளம் மா 
   விளாம்  விளம் விளம் மா

என்று எழுதலாமா? விளக்கம் அளிக்கவும் ஐயா 🙏

  



N. Ganesan

unread,
Nov 27, 2023, 5:59:36 AM11/27/23
to santhav...@googlegroups.com
மேற்சொன்ன விதப்புவிதி காய்ச்சீர்களுக்கு மட்டும்தான். சந்தவசந்தத்தில் பல்லாண்டு எழுதிய
பேரா. சு. பசுபதி மிகத் தேடி இங்கே சொன்னார்: பாம்பன் சாமி தான் முதன்முதலாய் 
“விளாங்காய்” வரக்கூடாது என அறிவித்தவர்.

விளாச்சீர்களுக்கு இல்லை.
கருவிளாம், கூவிளாம் என விளாச் சீர்களை இலட்சக்கணக்கான செய்யுள்களில் காணலாம்.



>
> என்று எழுதலாமா? விளக்கம் அளிக்கவும் ஐயா 🙏
>
>  
>
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 27, 2023, 8:56:07 AM11/27/23
to சந்தவசந்தம்
விளக்கம் உங்கள் வெண்பாவிலே.

இமயவரம்பன் திருத்தம்:
அன்னமாய், பன்றியாய் - விளாச்சீர் உள்ளது.

Anand Ramanujam

unread,
Nov 27, 2023, 12:25:27 PM11/27/23
to santhav...@googlegroups.com
வெண்பா இலக்கணத்தைப் பற்றிய  அருமையான பதிவுக்கு மிக்க நன்றி, திரு. கணேசன்! 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 30, 2023, 2:29:04 AM11/30/23
to சந்தவசந்தம்
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
👁️கணபதியின்கடை கண். (வெண்பா)👁️
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

கல்விதரும் அன்புதரும் காக்கும் குறைவில்லாச்
செல்வமும் தந்திடும் சீர்தரும் – நல்ல
குணம்தரும் பாரதத்தைக் குன்றில் வரைந்த
கணபதி யின்கடை கண்.

விளக்கம்

மஹாபாரதத்தை மேரு மலையில் எழுதிய 
விநாயகரின் கடைக்கண் பார்வையானது கல்வி ,அன்பு , 
குறைவில்லாச் செல்வம், புகழ், நல்ல குணம், , என இவை அனைத்தும் தரும்,

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 1, 2023, 8:41:09 AM12/1/23
to சந்தவசந்தம்
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
👁️காமாட்சியின்கடை கண்(வெண்பா) 👁️
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

அருள்தரும் கல்விதரும் அன்புதரும் நெஞ்சின்
இருளற்றும் எங்கள் எழிலார்  - திருக்கச்சி
மாமா மரத்தடியில் மாசில்லாப் பூசையிட்ட
காமாட்சி யின்கடை கண்.

விளக்கம் 
அடியேன் வசிக்கும் ஊரான அழகு மிக்க திருக்கச்சி
காஞ்சிபுரத்தில் சிறந்த மாமரத்தடியில் சிவலிங்கம் 
அமைத்து தூய பூசை செய்த காமாட்சி அம்மனின் 
கடைக்கண் பார்வை ஆனது நம் உள்ளத்தில் உள்ள 
இருளை அகற்றி , அருள், கல்வி, அன்பு, என இவை அனைத்தும் தரும்,  

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 2, 2023, 1:15:54 AM12/2/23
to சந்தவசந்தம்
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
👁️ கண்ணபுரநாயகியின் கண் (வெண்பா) 👁️
👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

பொன்தரும் மன்னும் புகழ்தரும் கல்விதரும்
அன்புதரும் பண்புதரும் ஆனந்தம்  - மன்னுதிருக்
கண்ணபுரம் மேவிய கண்ணன் உடன்வாழும்
கண்ணபுர நாயகியின் கண்.

விளக்கம் 
ஆனந்தம் என்றும் நிலைத்திருக்கும் ஊரான திருக்கண்ணபுரத்தில் 
உள்ள நீலமேகப்பெருமாள் (சௌரிராஜப் பெருமாள்) உடன் வாழும்
 திருக்கண்ணபுர நாயகியின் கடைக்கண் பார்வை ஆனது தங்கம் 
,நிலைத்த புகழ், கல்வி, அன்பு நற்பண்புகள், , என இவை அனைத்தும் தரும்,

பிற்குறிப்பு 
👁️👁️/காமாட்சி யின்கடைக்கண்./ 👁️👁️
👁️👁️/கணபதியின்கடைக்கண்/👁️👁️
முன்பு எழுதிய வெண்பாவில் க் 
கடைக்கண் என்பதை வல்லினம் மிகாமல்
எழுதி விட்டேன் மன்னிக்கவும் 
  

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 3, 2023, 8:21:56 PM12/3/23
to சந்தவசந்தம்
🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆
👁️ கதிரவனைக் காலையில் காண் (வெண்பா) 👁️
🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆🌞🔆

எண்ணற்ற நன்மைபெற இன்பம்பெற உங்களின்
எண்ணத்தை சீர்செய்ய எப்போதும் – வண்ண
குதிரைத்தேர் ஏறி குணக்கில் உதிக்கும்  
கதிரவனைக் காலையில் காண்.

விளக்கம் 

அழகான குதிரை பூட்டிய தேரில் கிழக்கு திசையில் 
உதிக்கும் சூரியனைத் தினமும் காண்பதால் , எண்ணற்ற 
நன்மை பெறலாம், இன்பம் பெறலாம்,
தமது எண்ணங்களைச் சீர்செய்யும். 
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 7, 2023, 9:14:56 AM12/7/23
to சந்தவசந்தம்
சென்னை மீண்டும் பழைய நிலைக்குத்
திரும்ப ஈசனிடன் வேண்டுதல்

கலிவிருத்தம் (மா மாங்காய் மா மாங்காய்)

தண்ணீர் வடியாமல் தவித்தே பலநாளாய்க்
கண்ணீ ருடன்நாளும் கலங்கும் அடியாரைக்
கண்பார்த் தருள்வாயே கனலே வடிவான
அண்ணா மலையாரே அடியார்க் கருள்வாயே

விளக்கம்

சென்னையில் தண்ணீர் வடியாமல் தவித்தே பலநாளாகக் கண்ணீருடன் நாளும் கலக்கம் அடையும் அடியார்களின் துயர்தீர கண்பார்த்து அருள்வாயே நெருப்பு வடிவான அண்ணா மலையாரே அடியார்க்கு அருள்வாயே.


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 10, 2023, 10:38:42 AM12/10/23
to சந்தவசந்தம்

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

👁️கச்சபே சன்கடைக் கண் (வெண்பா)👁️

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️


காக்கும் புகழ்தரும் கல்விதரும் தீவினையைப்
தீர்க்கும் அழியாத் திருவருள் - சேர்க்கும்சீர்
கச்சி நகரத்தைக் காவல்செய் முக்கண்ணன்
கச்சபே சன்கடைக் கண்.

Kaviyogi Vedham

unread,
Dec 10, 2023, 12:00:28 PM12/10/23
to santhav...@googlegroups.com
மிக அழகு அற்புதம் வெண்பா ---வாழ்க,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Dec 10, 2023, 12:11:46 PM12/10/23
to santhav...@googlegroups.com
வெண்பா அருமை!

தீவினையைப் - ஒற்று 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 10, 2023, 10:30:31 PM12/10/23
to சந்தவசந்தம்
யோகியார் அவர்களுக்கும் ஆனந்த அவர்களுக்கும் நன்றி 

மாற்றிவிட்டேன் 

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

👁️கச்சபே சன்கடைக் கண் (வெண்பா)👁️

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️


காக்கும் புகழ்தரும் கல்விதரும் தீவினையைத்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 10, 2023, 10:56:38 PM12/10/23
to சந்தவசந்தம்
கவிவேழத்தின் திருக்கை.

வல்லரக்கன் அன்றெடுக்க மாட்டா மலையதனைச்  
சொல்லாலே வாழ்த்தித் தொழுதுமே  - நல்ல
கவிதை இயற்றிக் கயிலாசம் பெற்ற
கவிவேழத் தின்திருக் கை.

பிற்குறிப்பு 

இந்த வெண்பாவின் விளக்கம் அறிய மதிசூடி துதிபாடி நூல் அறிமுக
விழாவில் ( இலந்தை ஐயா) கவிவேழத்தின் கர்ஜனைக் கேட்க வேண்டும்.



Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 14, 2023, 2:01:02 AM12/14/23
to சந்தவசந்தம்
                                  

மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா 2023

  அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் 
திருவருள் நிறைந்த மைலாப்பூர் வெகு சிறப்பாக 
நடைபெற்ற மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா 
பற்றிய சுருக்கமான உரை:

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

      என்ற பெரியபுராணப் பாடலைப் பாடிய பின் 
மதிசூடி துதிபாடி தொகுதி 2-ல் அமைந்த முதல்
 பாடலைத் தெய்வீகக் குரலில்  திரு அசோக் சுப்பிரமணியம் 
அவர்கள்  சிறப்பாகப் பாடி விழாவைத் துவக்கிவைத்தார். 

   
காக்கும் நற்றாள் அடியார்க் கிடர்செய் காலன் அவன்மாளத்
தூக்கும் பொற்றாள் தூநீ றணிந்தார் தொல்லை வினையெல்லாம்
தீர்க்கும் திருத்தாள் ஆடல் செய்யும் செம்மை திகழுந்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே


  இவ்விழாவை வழிநடத்தும் சாரதியான திரு சங்கரதாஸ் நாகோஜி
 அவர்கள்  திரு பிரபாகர மூர்த்தி ஐயா அழைக்க,
 
  "வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத் தான்" ஆன 
இறைவனைப் பாடிய பரவும் நூலான மதிசூடி துதிபாடியை
அருளிய சிவசிவா அவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையைத் தொடங்கினார்

 புதுமையாகத் தோடகம் , புஜங்கம் , தலமாலை, அம்மானை, கந்தபத்தியம், வருக்க 
எழுத்துகள் என முதல் தொகுதி அமைந்த பதிகங்களை நினைவுகூர்ந்து ,

கச்சிப் பழம்பதியும் கயிலாய வெற்பின்
உச்சிச் சிகரமும் உறையும் பரம்பரன்
நச்சிப் பரவவரு நம்பன் பொடிபூசி 
பிச்சன் மகிழ்விடம் பிச்சிவாக்கமே

     என்று பிரபாக மூர்த்தி அவர்கள் எழுதிய 
     ஒரு பாடலைப் பெரியவா அவர்கள்
பாராட்டி பிச்சிவாக்கம் என்ற ஊருக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிகழ்வைக் 
குறிப்பிட்டு , திரு சிவசிவா ஐயா அவர்கள் எழுதிய பல்லாயிரக் கணக்கான பாடலினால்  
பல அற்புதங்கள் நிகழும் என்றார்.

   உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே என்ற திருப்புகழைச் சுட்டிக்காட்டி

ஜெர்மனியில் 'ஹாம்' நகரின் ஒரு பகுதியான 'ஊன்றாப்பு' என்ற இடத்தில் இருக்கும்
 காமாக்ஷி கோயில் பற்றி   சிவசிவா எழுதிய

ஈன்றாய் காவாய் என்றென் றிறைஞ்சிநிதம்
சான்றோர் தலையால் வணங்கும் தத்துவனைத்
தோன்றா தவனைத் துயர்தீர் தூயவனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே.

     இதைப்போலவே உலகெங்கும் உள்ள சிவாலயங்களுக்கெல்லாம்
 சிவசிவா அவர்கள் பதிகம் எழுத வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்தார். 
மேலும் மதிசூடி துதிபாடி நூல் மிகவும் அருமையாக அமைந்த செம்பதிப்பு என்று 
தனது தொடக்க உரையை நிறைவுசெய்தார்.

அதைத்தொடர்ந்து மகாத்மா காந்தியின் கரம்பட்ட திருச்சி புலவர் இராமமூர்த்தியை 
அழைத்தார் நாகோஜி அவர்கள்,
  
 ஐயா இராமமூர்த்தி அவர்கள் தனது குருவான
இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து உருக்கமாக உரையைத் தொடங்கினார்.

     சங்க காலத்தில் ஐங்குறுநூறில் 500 பாடலும் பதிகம் அமைப்பில் பத்து பத்து பாடலாக 
அமைந்தவை என்றும், முதுமொழிக்காஞ்சியில் ஒரு வரி பாடல் பத்து பத்து பாடலாக அமைந்தவை 
என்றும், திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்து பாடல்கள் என்றும் காரைக்கால் அம்மையாரின் மூத்த 
திருப்பதிகம் தொடங்கி மூவர் தேவாரம் என அனைத்தும் பத்து பாடல்களால் ஆனது. வைணவத்திலும்
 பாசுரங்களைப் பத்து பாடல்களால் ஆனது. அதே மரபு வழியாக மதிசூடி துதிபாடி நூலும் பத்து பத்து 
பாடலாக அமைந்தவை எனக் கூறினார்.

கழுமலம் - (வண்ணவிருத்தம்)

மரிக்கிற தினத்திலும் மிகப்பல விருப்புகள்
      மனத்தினை மலக்கிட ... அழிவேனோ
அரிக்கிற வினைத்தொகுதியைக்கரு வறுத்தெனை
      அடித்தலம் அணைத்தருள் ... புரிவாயே
விரிக்கிற மறைப்பொருள் எனத்திகழ் குணத்தின
      விடத்தினை மிடற்றினில் ... இடுவோனே
சிரித்தெயில் களைச்சுடு திறத்தின நிலத்துயர்
      திருக்கழு மலத்துறை ... பெருமானே.

   என்ற மதிசூடி துதிபாடி தொகுதி-2ம் நூலில் இடம் பெற்றுள்ள திருக்கழுமலம் பாடலைப்
 பாடி விளக்கம் கூறினார்.‌ அதன்பின்


   முருகனே மூச்சு முருகனே பேச்சு என்று இருக்கும் வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் 
அவர்களை அழைத்தார் நாகோஜி அவர்கள் 

  வெற்றி வேல் முருகனுக்கு அர ஹரோ ஹரா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே
என்று தொடங்கிய கிருஷ்ணன் ஐயா அவர்கள்

கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லா னமையாள்வா னல்ல நகரானே.

என்ற திருஞானசம்பந்தர் திருநல்லம்  பதிகம்
குறிப்பிட்டு 
  எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
          என்ற தேவாரம் பாடலுக்கு ஏற்ப சிவசிவா அவர்கள்  அமெரிக்காவில்
 ஆங்கிலத்தில் தேவாரம் வகுப்பு நடத்துகிறார்.

 மதிசூடி துதிபாடி தொகுதி -1 அமைந்த 82 பாடல்களை எனது மகள்
  ( வலையப்பேட்டை ரா கிருஷ்ணன்) ஸ்ரீமதி. பவ்யா ஹரி  அவர்கள்
தெய்வீகக் குரலில் 101 இராகத்தில் இசையில்  பாடும் போது இரசித்த
 சுகானுபவத்தை வார்த்தையில் விளம்ப இயலாது என்றார்.

மதிசூடி துதிபாடி தொகுதி -1 பதிகத்தை ஸ்ரீமதி. பவ்யா ஹரி அவர்களின் தெய்வீகக் குரலில் கேட்க



பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
     பட்சிந டத்திய ...... குகபூர்வ
      பச்சிம தட்சிண வுத்தர திக்குள
     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
     செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
     சித்தவ நுக்ரக ...... மறவேனே
      
   என்ற திருப்புகழில் அருணகிரிநாதர்
கூறியது போலவே சிவசிவா அவர்கள் எழுதும் போதே புத்தகமாகவும், 
இணையதளம் வாழியாகவும் அடியார் பெருமக்களைச் சென்றடைவதென்பது மிகப்பெரிய சாதனை என்றார்.

மேலும் முதல் தொகுதியில் அமைந்த திருவிராகம்,திருமுக்கால், குறள் தாழிசை, புஜங்கம் , 
தோடகம் , அம்மானை ,யாழ்முரி, அங்மலை , மாலைமாற்று இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறி என்னும் 7 தொகுதிகள்
வர இருப்பதைக் கேட்டு வியப்படைந்தேன் என்றார்.

ஒருமுறை சிவசிவாவை ஞானமலைக்கு அழைத்துச் சென்ற போது, ஞானமலைக்கு
ஏதேனும் பதிகம் பாடுங்கள் என்று கேட்க, அவர் என்ன பாடலாம் என்று வினவ, உடனே 
திருவெழுகூற்றிருக்கை பாடுமாறு கேட்க ஒரு வாரத்தில் எழுதி அனுப்பினார். எங்கள் 
ஞானமலைக்கு எழுகூற்றிருக்கை  கிடைத்தது பெரும் ஆனந்தத்தை அள்ளித்தது.

கன்னடம் தெலுங்கு மொழியில் உள்ள 
கந்த பத்யம் என்ற பா வகையில் பதிகம்
அமைத்து என்பது அரிய முயற்சி என்றார். 
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி இராகு கேது என நவ கிரகங்களில் 
பெயரில் அமைந்த பாடலான
"கோளரவ மாலைக் குழகன் " கயிலாயப் பதிகம நிறைவாகச் சிறப்பாக உள்ளது என்றார்.

"சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக்கால் "
என்று அருணகிரிநாதர் திருப்புகழில் கூறியது போல சிவசிவா வின் மதிசூடி துதிபாடி பாடல்கள்
 சிவமாய்த் தேன் அமுது ஊறும்
தேவாரப்பாடல் என்று நிறைவுசெய்தார்.

 அவரைத் தொடர்ந்து சந்தவசந்தம் குழுமத்தின்  தலைவர் கவிவேழம் இலந்தை இராமசாமி
 ஐயாவை அழைத்தார்  நாகோஜி அவர்கள் .

   2001 நவம்பர் 7-ல் தொடங்கிய சந்தவசந்தம் என்ற இலக்கியக் குழுமத்தில் சிவசிவா அவர்கள் 2005ல்
  இணைந்து , பல சவாலான யாப்பில் அமைந்த பாடல்களை இயற்றியவர் ‌‌‌‌, குறிப்பாகப் பின்னல் என்ற 
ஆங்கில யாப்பைப் பின்பற்றிக் காரைக்கால் அம்மையாரின் வரலாறு முழுவதும் எழுதியவர் , அவர் 
எழுதும் பாடல்களைப் பலமுறை அவரே நான்கு எவ்விதமான பிழையும் இல்லாத வகையில் சந்தவசந்தத்தில் பதிவு செய்வார்.

மேலும் சந்தவசந்தத்தில் எவர் எழுதினாலும் அதில் பிழை இருந்தால் , அதைச் சுட்டிக்காட்டிவர் எனவே அவரைக் (விடையேறும் பெருமாளைப் பாடும்) கேள்வியின் நாயகன் என்றே அழைப்போம்.

 மேலும் இந்தக் காலத்தில் பதிகம் பாடினால்
அற்புதம் நடக்குமா ? என வினவை எழுப்பி, அதற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான
 சம்பவங்களைக் சுட்டிக்காட்டினார். பின்னர் சிவசிவாவைப் பற்றி எழுதிய பதிகத்தைக் கம்பீரமான குரலில்
 படித்துக்காட்டி நிறைவுசெய்தார். அது இரசிக்கும்படி இருந்தது.

ஆட்ட நாயகன் சிவசிவாவை ஏற்புரை வழங்க அழைத்தார் நாகோஜி அவர்கள் 

  சிவசிவா அவர்கள் தனது உரையைத் தொடங்கினார்.

    எழுத வைப்பது இறைவனின் திருவுள்ளம், ஆதனால் எழுதுகிறேன். புத்தகம் வர வேண்டும் என்பதும் 
இறைவனின் திருவுள்ளம், நாகோஜி போன்ற அன்பர்களினால் புத்தகம் வெளிவருகிறது. இறைவன் 
திருவருளால் வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் ஐயா அவர்களின் மகள் ஸ்ரீ மதி பவ்யாஹரி அவர்களின்
 தெய்வீகக் குரலில் இசைவடிவில் வெளிவந்து கோண்டே இருக்கும்.
பலரும் கேட்டுப் பயன்பெறலாம்.
 
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
  
 என்ற அப்பர் சுவாமிகளின் தேவாரத்தைப் பாடி
நிறைவுசெய்தார்.

 அதைத்தொடர்ந்து

மதிசூடி துதிபாடி தொகுதி 1 பாடல்கள் சிலவற்றைத்

திருமதி பவ்யா ஹரி தெய்வீகக் குரலில் பாட
குமாரி ஹரிதா நாராயணன் வயலின் வாசிக்க
குரு ராகவேந்திர  மிருதங்கம் வாசிக்க
தெய்வீக நிகழ்வு இனிதே நிறைவுற்றது 

        🙏திருச்சிற்றம்பலம் 🙏



Swaminathan Sankaran

unread,
Dec 14, 2023, 10:06:50 AM12/14/23
to santhav...@googlegroups.com
விரிவான, அருமையான பதிவு.
நன்றி.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

K.R. Kumar

unread,
Dec 14, 2023, 9:16:54 PM12/14/23
to santhav...@googlegroups.com
அன்புள்ள தங்கவேல் ஐயா,

மதிசூடி துதிபாடி-2 புத்தகத்தின் அறிமுக விழாவின் தொகுப்பு மிகச் சிறப்பு.

வாழ்க! வளத்துடன் !!

குமார்(சிங்கை)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 14, 2023, 9:41:59 PM12/14/23
to santhav...@googlegroups.com
மிக அழகான நூல் வெளியீட்டு நிகழ்ச்சித் தொகுப்பு.

அனந்த்
>> அவர் எழுதும் பாடல்களைப் பலமுறை அவரே நான்கு எவ்விதமான பிழையும் இல்லாத வகையில் சந்தவசந்தத்தில் பதிவு செய்வார்.
நான்கு முறை படித்துப் பார்த்த பின்னர்?

On Thu, Dec 14, 2023 at 1:53 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
                                  

மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா 2023

  அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் 
திருவருள் நிறைந்த மைலாப்பூர் வெகு சிறப்பாக நடைபெற்ற மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா பற்றிய சுருக்கமான உரை:

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

      என்ற பெரியபுராணப் பாடலைப் பாடிய பின் 
மதிசூடி துதிபாடி தொகுதி 2-ல் அமைந்த முதல் பாடலைத் தெய்வீகக் குரலில்  திரு அசோக் சுப்பிரமணியம் அவர்கள்  சிறப்பாகப் பாடி விழாவைத் துவக்கிவைத்தார். 

   
காக்கும் நற்றாள் அடியார்க் கிடர்செய் காலன் அவன்மாளத்
தூக்கும் பொற்றாள் தூநீ றணிந்தார் தொல்லை வினையெல்லாம்
தீர்க்கும் திருத்தாள் ஆடல் செய்யும் செம்மை திகழுந்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே


  இவ்விழாவை வழிநடத்தும் சாரதியான திரு சங்கரதாஸ் நாகோஜி அவர்கள்  திரு பிரபாகர மூர்த்தி ஐயா அழைக்க,
   2001 நவம்பர் 7-ல் தொடங்கிய சந்தவசந்தம் என்ற இலக்கியக் குழுமத்தில் சிவசிவா அவர்கள் 2005ல்  இணைந்து , பல சவாலான யாப்பில் அமைந்த பாடல்களை இயற்றியவர் ‌‌‌‌, குறிப்பாகப் பின்னல் என்ற ஆங்கில யாப்பைப் பின்பற்றிக் காரைக்கால் அம்மையாரின் வரலாறு முழுவதும் எழுதியவர் , அவர் எழுதும் பாடல்களைப் பலமுறை அவரே நான்கு எவ்விதமான பிழையும் இல்லாத வகையில் சந்தவசந்தத்தில் பதிவு செய்வார்.

மேலும் சந்தவசந்தத்தில் எவர் எழுதினாலும் அதில் பிழை இருந்தால் , அதைச் சுட்டிக்காட்டிவர் எனவே அவரைக் (விடையேறும் பெருமாளைப் பாடும்) கேள்வியின் நாயகன் என்றே அழைப்போம்.

 மேலும் இந்தக் காலத்தில் பதிகம் பாடினால்
அற்புதம் நடக்குமா ? என வினவை எழுப்பி, அதற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைக் சுட்டிக்காட்டினார். பின்னர் சிவசிவாவைப் பற்றி எழுதிய பதிகத்தைக் கம்பீரமான குரலில் படித்துக்காட்டி நிறைவுசெய்தார். அது இரசிக்கும்படி இருந்தது.

ஆட்ட நாயகன் சிவசிவாவை ஏற்புரை வழங்க அழைத்தார் நாகோஜி அவர்கள் 

  சிவசிவா அவர்கள் தனது உரையைத் தொடங்கினார்.

    எழுத வைப்பது இறைவனின் திருவுள்ளம், ஆதனால் எழுதுகிறேன். புத்தகம் வர வேண்டும் என்பதும் இறைவனின் திருவுள்ளம், நாகோஜி போன்ற அன்பர்களினால் புத்தகம் வெளிவருகிறது. இறைவன் திருவருளால் வலையப்பேட்டை ரா கிருஷ்ணன் ஐயா அவர்களின் மகள் ஸ்ரீ மதி பவ்யாஹரி அவர்களின் தெய்வீகக் குரலில் இசைவடிவில் வெளிவந்து கோண்டே இருக்கும்.
பலரும் கேட்டுப் பயன்பெறலாம்.
 
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
  
 என்ற அப்பர் சுவாமிகளின் தேவாரத்தைப் பாடி
நிறைவுசெய்தார்.

 அதைத்தொடர்ந்து

மதிசூடி துதிபாடி தொகுதி 1 பாடல்கள் சிலவற்றைத்

திருமதி பவ்யா ஹரி தெய்வீகக் குரலில் பாட
ஹரிதா நாராயணன் வயலின் வாசிக்க
குரு ராகவேந்திர  மிருதங்கம் வாசிக்க
தெய்வீக நிகழ்வு இனிதே நிறைவுற்றது 

        🙏திருச்சிற்றம்பலம் 🙏



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 15, 2023, 12:56:25 AM12/15/23
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏
அடியேன் இதைச் செல் போன் மூலம் எழுதினேன்.
எனவே பல பிழைகள் இருக்கலாம். மன்னிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு நூல் அறிமுக விழா
நிகழ்வைக் காணவும் 

/அவர் எழுதும் பாடல்களைப் பலமுறை ஆராய்ந்து பிழை இல்லாத வகையில் சந்தவசந்தத்தில் பதிவு செய்வார்./

Siva Siva

unread,
Dec 15, 2023, 4:45:19 AM12/15/23
to santhav...@googlegroups.com
Nice report.

I will cross-post your report in the 10-Dec-2023 event announcement thread - for easy future reference.

V. Subramanian

On Thu, Dec 14, 2023 at 2:01 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
                                  

மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா 2023

  அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் 
திருவருள் நிறைந்த மைலாப்பூர் வெகு சிறப்பாக 
நடைபெற்ற மதிசூடி துதிபாடி நூல் அறிமுக விழா 
பற்றிய சுருக்கமான உரை:
......

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 21, 2023, 2:00:11 AM12/21/23
to சந்தவசந்தம்
 வினா வெண்பா 

திருவானை உருவானைத் தித்திக்கும் தந்தை
தரும்கனி பெற்றானைத் தங்கப் – பெருமான்
முறையாகப்  பாடிட முன்வந் தருளும்
இறைவன் பெயரை இயம்பு ?

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 23, 2023, 8:38:20 AM12/23/23
to சந்தவசந்தம்

தசாவதார வெண்பா


கல்கியே கார்நிறக் கண்ணா பலராமா

வில்லுடை வள்ளலே வீரமிகு – நல்ல

மழுவாளி சிம்மனே வாமனா ஏனம்

செழுங்கடல் ஆமையே சேல்

Anand Ramanujam

unread,
Dec 23, 2023, 9:58:05 AM12/23/23
to santhav...@googlegroups.com
அருமை! 

வரிசை மாறியுள்ளதுபோல் தெரிகிறதே?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 23, 2023, 10:10:26 AM12/23/23
to சந்தவசந்தம்
ஆம் ஐயா 
மிக்க நன்றி 🙏

கல்கி,  கிருஷ்ணமூர்த்தி, பலராமர், இராமர், பரசுராமர் , நரசிம்மர், வாமனர், வராகர், கூர்மம் , மச்சம்

தசாவதார வெண்பா


கல்கியே கார்நிறக் கண்ணா பலராமா

வில்லுடை வள்ளலே வீரமிகு – நல்ல

மழுவாளி சிம்மனே வாமனா ஏனம்

செழுங்கடல் ஆமையே சேல்


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 27, 2023, 11:23:49 AM12/27/23
to சந்தவசந்தம்
மாலையிடும் வேலவரே (மும்மண்டில வெண்பா)

மேலவரே பாலகுகா ஆலமுண்ட நீலகண்டன்
பாலகனே வேலணையில் நீலமயில் - மேலமரும் 
வாலிபனே நீலநிறப் பாலகிமேல் மாலுடனே 
மாலையிடும் வேலவ ரே

பாலகுகா ஆலமுண்ட நீலகண்டன் பாலகனே 
வேலணையில் நீலமயில் மேலமரும் - வாலிபனே
 நீலநிறப் பாலகிமேல் மாலுடனே மாலையிடும்
 வேலவரே மேலவ ரே

ஆலமுண்ட நீலகண்டன் பாலகனே வேலணையில் 
நீலமயில் மேலமரும் வாலிபனே - நீலநிறப்
பாலகிமேல் மாலுடனே மாலையிடும் வேலவரே 
மேலவரே பாலகு கா

Siva Siva

unread,
Dec 27, 2023, 3:30:32 PM12/27/23
to santhav...@googlegroups.com
On Wed, Dec 27, 2023 at 11:23 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
மாலையிடும் வேலவரே (மும்மண்டில வெண்பா)

மேலவரே பாலகுகா ஆலமுண்ட நீலகண்டன்
பாலகனே வேலணையில் நீலமயில் - மேலமரும் 
வாலிபனே நீலநிறப் பாலகிமேல் மாலுடனே 
மாலையிடும் வேலவ ரே

--> Why are singular and plural mixed? 


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Dec 29, 2023, 1:52:12 AM12/29/23
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏 சில மாற்றங்களுடன் 

மாலையிடும் வேலவனே (மும்மண்டில வெண்பா) (வேலணை)

மேலவனே பாலகுகா ஆலமுண்ட நீலகண்டன்
 பாலகனே வேலணையில் நீலமயில் - மேலமரும் 
வாலிபனே நீலநிறப் பாலகிமேல் மாலுடனே 
மாலையிடும் வேலவ னே

பாலகுகா ஆலமுண்ட நீலகண்டன் பாலகனே
 வேலணையில் நீலமயில் மேலமரும் - வாலிபனே 
நீலநிறப் பாலகிமேல் மாலுடனே மாலையிடும் 
வேலவனே மேலவ னே

ஆலமுண்ட நீலகண்டன் பாலகனே வேலணையில் 
நீலமயில் மேலமரும் வாலிபனே - நீலநிறப் 
பாலகிமேல் மாலுடனே மாலையிடும் வேலவனே 
மேலவரே பாலகு கா

வேலணை முருகன் கோவில் 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 5, 2024, 10:49:39 AM1/5/24
to சந்தவசந்தம்
திருமுருக வாரியார் சுவாமிகளின் இலக்கியத்தில் நகைச்சுவை சொற்பொழிவு

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 13, 2024, 10:56:50 AM1/13/24
to சந்தவசந்தம்
இக்குழுவில் உள்ள அனைவருக்கும்  
  💐இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 💐
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
            பொங்கல்  விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
      (மா மா விளம் மா அரையடிக்கு)

வண்ணக் கோலம் வீதியி லிட்டு
   வாச லெங்குந் தோரணம் கட்டிக்
கண்ணின் முன்னே காட்சிய ளிக்கும்
   கதிர வனுக்குப் பொங்கலைப் படைத்தே
உண்ணு முணவை யுற்பத்தி செய்யும்
  உழவர் காளை பசுக்களைப் போற்ற
எண்ணி யதேல்லா மெண்ணிய படியே
   இறைவ னருளால் நடக்கு மின்றே

Subbaier Ramasami

unread,
Jan 13, 2024, 8:07:48 PM1/13/24
to santhav...@googlegroups.com
நல்ல வாழ்த்து
 கதிர வனுக்குப் பொங்கலைப் படைத்தே பொங்கல்ப டைத்தே  என்றிருந்தால் போதும். ஈற்றுச்சீர்கள் எல்லாம் தேமாவாக இருத்தல் நலம்   
எண்ணி யதேல்லா மெண்ணிய படியே- எண்ணிய வெல்லாம் எண்ணிய வாறே
 இறைவ னருளால் நடக்கு மின்றே- இறைவ னருளால் நநடைபெறும் இன்றே


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 13, 2024, 8:29:36 PM1/13/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா 🙏 இலந்தை ஐயாவின்
 அறிவுரைப்படி சில மாற்றங்களுடன் 

              பொங்கல் விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
      (மா மா விளம் மா அரையடிக்கு)

வண்ணக் கோலம் வீதியி லிட்டு
   வாச லெங்குந் தோரணம் கட்டிக்
கண்ணின் முன்னே காட்சிய ளிக்கும்
   கதிர வனுக்குப் பொங்கல்ப டைத்தே
உண்ணு முணவை யுற்பத்தி செய்யும்
  உழவர் காளை பசுக்களைப் போற்ற
எண்ணி யவெல்லா மெண்ணிய வாறே
   இறைவ னருளால் நடைபெறு மின்றே

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 14, 2024, 9:38:16 AM1/14/24
to சந்தவசந்தம்
அனைவருக்கும் வணக்கம் 🙏
அடியேன் எழுதிய பொங்கல் விருத்தத்தை அனைவரும் கேட்டு மகிழுங்கள் 
1) பாடியவர் சித்தூர்கணேஷ் https://youtu.be/C1ArWScgjQY?si=Su0-UsSK-0vB8k-C
2) பாடியவர் திருக்கண்ணபுரம் ப சங்கர் ( இசையுடன்) https://youtu.be/PUy5EISBFWc?si=5gklfXo_hsbkD0nj

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 18, 2024, 12:12:37 PM1/18/24
to சந்தவசந்தம்
இலந்தை ஐயாவின் அன்றைய பொங்கல்
பாடலைப் படித்தாலும்,  இரட்டைச் சமநிலைச்
சந்து பற்றி அவர் விளக்கமாகக் கூறியதாலும்
அடியேன் எழுதிய முருகன் பாடல்.

 இரட்டைச் சமநிலைச் சிந்து

காவடி தானெடுத்துக் – கந்தன்
   காலைப் பிடித்திடுவோம்‌.
சேவல் கொடியுடைய – எங்கள்
  செல்வனை வாழ்த்திடுவோம்.

தைப்பூச நன்னாளில் – பழனிச்
   சந்நிதி சென்றிடுவோம்.
தெய்வப் புகழ்பாடி – சண்முகத்
  தெய்வத்தைக் கும்பிடுவோம்.

இதில் ஏதேனும் பிழை இருப்பின் தெரிவிக்கவும்.
முருகா சரணம் 🙏






Kaviyogi Vedham

unread,
Jan 18, 2024, 1:00:03 PM1/18/24
to santhav...@googlegroups.com
பலே பலே வாழ்க
யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 19, 2024, 5:22:02 AM1/19/24
to சந்தவசந்தம்
நன்றி ஐயா 🙏
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jan 25, 2024, 11:54:19 AM1/25/24
to சந்தவசந்தம்
குடியரசு தின விழா வாழ்த்துப் பாடல் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
      ( மா மா மா அரையடிக்கு )

மக்கள் மதிப்பு வளர
  மக்கள் ஆட்சி மலரத்
தக்க முறையில் தேர்தல் 
  தகுந்த படியே நடத்திச்
சிக்கல் இன்றி வாழச்
 செய்யும் ஆட்சி இதுவே
மிக்க மகிழ்ச்சி யோடே
 மிளிரும் ஆட்சி இதுவே
 
கொசுரு 
(வாழ்க மக்கள் ஆட்சி
 வாழ்க மக்கள் எல்லாம்)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 16, 2024, 3:24:54 AM2/16/24
to சந்தவசந்தம்
 அருள்மிகு கருமாரி அம்மன் கோயில்
        கீராண்டகுளம். இலங்கை 

கலிவிருத்தம் ( தேமாங்காய் காய் காய் காய்)


கீராண்ட குளத்தருகே கீர்த்தியுடன் வாழ்பவளே
பாரீன்று காப்பவளே பவானிகரு மாரியளே
நீராட்டிப் பூசையிட்டு நின்புகழைப் பாடிடுவோம்  
தீராத நோய்தீர்த்துன் தெரிசனத்தைத் தருவாயே

பிற்குறிப்பு: வருடாந்திரத் திருக்குளிர்ச்சி திருவிழாவை முன்னிட்டு
 ஒரு பாடல் வேண்டும் என அடியேனைக் கேட்டார். அம்மன் அருளால்
அடியேன் எழுதிய பாடல் ஏதேனும் பிழைகள் இருந்தால் கூறுங்கள்.


Siva Siva

unread,
Feb 16, 2024, 9:45:12 AM2/16/24
to santhav...@googlegroups.com
சில கருத்துகளைக் கீழ்க் காண்க.

V. Subramanian

--> / கீராண்ட குளத்தருகே கீர்த்தியுடன் வாழ்பவளே /  
இது ஊரின் பெயரா குளத்தின் பெயரா?
ஊர் எனில், "கீராண்ட குளத்தினிலே"?

/பாரீன்று காப்பவளே பவானிகரு மாரியளே/
பாராக்கிக் / பாராண்டு  என்பது போல் இருந்தால் மோனை ஒலி இன்னும் சிறக்கும்போல்.

...கரு மாரியளே = ?
...கரு மாரியம்மா?

/ நீராட்டிப் பூசையிட்டு நின்புகழைப் பாடிடுவோம்   /
பூசையிடுதல் - இப்படிச் சொல்வது உண்டா என்று அறியேன்.
பூசைசெய்து?
பூவிட்டு?



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 17, 2024, 12:02:17 PM2/17/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏

தங்களின் கருத்தை அங்குள்ளவருக்கு அனுப்பினேன்.
கீராண்டகுளம் என்பது குளத்தின் பெயர்.
ஊரின் பெயர் குளக்கட்டு. பள்ளிக்குடியிப்பு‌. இலங்கை.
மேலும் அங்குள்ள பக்தர்கள் கருமாரி அம்மனைக்
கீராண்ட குளத்தவளே என்று அழைக்கிறார்களாம் குருவே 🙏
மேலும் அவர் கீராண்டகுளம் என்று வருமாறு பாடல் வேண்டும் எனக் கேட்டார்.

சில மாற்றங்களுடன்

அருள்மிகு குளக்கட்டு கருமாரி அம்மன் விருத்தம் 


கீராண்ட குளத்தவளே கேட்டவரம் தருபவளே
பாராளும் பகவதியே பவானிகரு மாரிம்மா
நீராட்டிப் பூசைசெய்து நின்புகழைப் பாடிடுவோம்  


தீராத நோய்தீர்த்துன் தெரிசனத்தைத்  தருவாயே

Siva Siva

unread,
Feb 17, 2024, 12:13:32 PM2/17/24
to santhav...@googlegroups.com
On Sat, Feb 17, 2024 at 12:02 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
குருவே வணக்கம் 🙏

தங்களின் கருத்தை அங்குள்ளவருக்கு அனுப்பினேன்.
கீராண்டகுளம் என்பது குளத்தின் பெயர்.
ஊரின் பெயர் குளக்கட்டு. பள்ளிக்குடியிப்பு‌. இலங்கை.
மேலும் அங்குள்ள பக்தர்கள் கருமாரி அம்மனைக்
கீராண்ட குளத்தவளே என்று அழைக்கிறார்களாம் குருவே 🙏
மேலும் அவர் கீராண்டகுளம் என்று வருமாறு பாடல் வேண்டும் எனக் கேட்டார்.

சில மாற்றங்களுடன்

அருள்மிகு குளக்கட்டு கருமாரி அம்மன் விருத்தம் 


கீராண்ட குளத்தவளே கேட்டவரம் தருபவளே
பாராளும் பகவதியே பவானிகரு மாரிம்மா
நீராட்டிப் பூசைசெய்து நின்புகழைப் பாடிடுவோம்  
தீராத நோய்தீர்த்துன் தெரிசனத்தைத்  தருவாயே



--> / மாரிம்மா / 
Sounds odd without the in it.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 18, 2024, 3:22:14 AM2/18/24
to சந்தவசந்தம்
நன்றி குருவே 🙏 எழுதும் போது தவறுதலாக விட்டுவிட்டேன்.


அருள்மிகு குளக்கட்டு கருமாரி அம்மன் விருத்தம் 

கீராண்ட குளத்தவளே கேட்டவரம் தருபவளே
பாராளும் பகவதியே பவானிகரு மாரியம்மா

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 24, 2024, 6:20:37 AM2/24/24
to சந்தவசந்தம்
அருள்மிகு புஷ்பவல்லி தாயார் சமேத 
அஷ்டபுஜப் பெருமாள் காஞ்சிபுரம்
கும்பாபிஷேக நாள்: 26-02-2024
( திருவட்டபுயக்கரம் கலிவிருத்தம் )
       ( காய் காய் காய் மா)

கச்சியுறை  அட்டபுயக் கரத்தானே போற்றி
கச்சபமாய்ப்  பாற்கடலைக்  கடைந்தவனே போற்றி
பச்சைநிறம் கொண்டவனே பரந்தாமா போற்றி
அச்சுதனே ஆழியுடை ஆண்டவனே  போற்றி

Ram Ramakrishnan

unread,
Feb 24, 2024, 9:20:01 AM2/24/24
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. தங்வேல்.

உங்கள் பாடலுக்கு என் காணிக்கை இதோ:

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா (ஏந்திசைத் துள்ளல் ஓசை)


பரந்தாம னுனைப்போற்றில் படுதுயரம் தொலைந்திடுதே

சிரந்தாழ்ந்து னைவணங்கச் செருக்கற்ற நிலைமிகுதே

உரமாகு மருளொன்றே உளநாளும் நிலைநிற்க

வரம்வேண்டிக் கரங்கூப்பி வணங்கிடுவேன் பெருமாளே


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 24, 2024, 10:37:58 PM2/24/24
to சந்தவசந்தம்
வரம்வேண்டிக் கரங்கூப்பி வணங்கிடுவேன் பெருமாளே
அருமை ஐயா 🙏

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 29, 2024, 10:15:40 AM2/29/24
to சந்தவசந்தம்
தேர்வை எழுதச் செல்லுவோம்
        அறுசீர் விருத்தம்
 ( மா மா விளம் அரையடிக்கு)


தேர்வை எழுதச் செல்லுவோம்
   தேர்வில் மதிப்பெண் அள்ளுவோம்
பார்பு கழும்செந் தமிழினைப்
    பாசச் தோடே எழுதுவோம்
சீர்மி குந்த கணிதத்தைச்
   சிறந்த முறையில் எழுதுவோம்
ஆர்வம் ஊட்டும் அறிவியல்
    அற்பு தத்தை எழுதுவோம். 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 4, 2024, 1:45:45 AM3/4/24
to சந்தவசந்தம்
திருமலைத் திருப்பதி விருத்தம்

கலிவிருத்தம் ( கருவிளங்காய் விளம் விளம் மா)

திருமலையில் மேவிய தெய்வமே போற்றி
திருமகளைத் திருமணம் செய்தவனே போற்றி
கருடனிலு லாவியக் கடவுளே போற்றி 
கருணையுடன் மக்களை காப்பவனே போற்றி

பிற்குறிப்பு:
 
(வேல்+ கடம்பன்) வேங்கடேசப் பெருமாளைத் தரிசனம் செய்யக் குடோனில் காத்திருக்கும் போது எழுதிய பாடல்.

( 02-03- 2023சனிக்கிழமை மதியம் 3 மணிக்குச் சர்வ தரிசனம் சென்றேன். ஞாயிறு காலை 5 மணிக்குத் தரிசனம் செய்தேன் 14 மணிநேரம் ஆனாது. என்றாலும் சிறப்பான தரிசனம் ஓம் நமோ நாராயணா 🙏)


Siva Siva

unread,
Mar 4, 2024, 9:00:48 AM3/4/24
to santhav...@googlegroups.com
Long wait! காத்திருத்தலே ஒரு தவம் போல்!

Double check 
a) meter conformance, and 
b) sandhi

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 4, 2024, 11:02:15 AM3/4/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏

திருமலையில் மேவிய தெய்வமே போற்றி
திருமகளைத் திருமணம் செய்தவனே போற்றி
கருடனிலு லாவியக் கடவுளே போற்றி 
கருணையுடன் மக்களைக் காப்பவனே போற்றி

விளம் ஒக்கும் காய் விதிப்படி விளச்சீருக்குப் பதில்
செய்தவனே, காப்பவனே என்று பயன்படுத்தியுள்ளேன்
குருவே சரிதானே?

Siva Siva

unread,
Mar 4, 2024, 12:52:37 PM3/4/24
to santhav...@googlegroups.com
விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய் ஒரோவழி வரும். விளங்காய் வருமா என்று அறியேன்.

/கருடனிலு லாவியக் கடவுளே/


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 5, 2024, 8:43:56 AM3/5/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏 தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏
சில மாற்றங்களுடன் 
கலிவிருத்தம் ( கருவிளங்காய் விளம் விளம் மா)
(1)
திருமலையில் மேவிய தெய்வமே போற்றி
திருமகளைத் திருமணம் செய்தோனே போற்றி
கருடனிலே ஏறிய கடவுளே போற்றி 
கருணையுடன் மக்களைக் காப்போனே போற்றி
(2)
திருமலையில் மேவிய தெய்வமே போற்றி
திருமகளைத் திருமணம் செய்தவா போற்றி
கருடனிலே ஏறிய கடவுளே போற்றி 
கருணையுடன் மக்களைக் காப்பவா போற்றி

இரண்டில் எது பொருத்தமாக இருக்கும் குருவே?

On Monday, March 4, 2024 at 11:22:37 PM UTC+5:30 Siva Siva wrote:
விளச்சீர் வரும் இடத்தில் மாங்காய் ஒரோவழி வரும். விளங்காய் வருமா என்று அறியேன்.

/கருடனிலு லாவியக் கடவுளே/


On Mon, Mar 4, 2024 at 11:02 AM தங்கவேல்

Siva Siva

unread,
Mar 5, 2024, 9:35:38 AM3/5/24
to santhav...@googlegroups.com
There is a form 
செய்தனை
காத்தனை

8.4
போற்றித் திருவகவல்

தாயே யாகி வளர்த்தனை போற்றி
.... ....
ஏனக் குருளைக் கருளினை போற்றி

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 5, 2024, 10:05:40 AM3/5/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏 மீண்டும் நன்றி
தற்போது தான் பாடல் சிறப்பாக உள்ளது 
திருமலைத் திருப்பதி விருத்தம்
கலிவிருத்தம் ( கருவிளங்காய் விளம் விளம் மா)

திருமலையில் மேவிய தெய்வமே போற்றி
திருமகளைத் திருமணம் செய்தனை போற்றி
கருடனிலே ஏறிய கடவுளே போற்றி 
கருணையுடன் மக்களைக் காத்தனை போற்றி

சிறிய ஐயம் ஐயா
போற்றித் திருவகவல்

தாயே யாகி வளர்த்தனை போற்றி
.... ....
ஏனக் குருளைக் கருளினை போற்றி இங்கு ஏன் வல்லினம் மிக வில்லை குருவே 

Siva Siva

unread,
Mar 5, 2024, 10:40:40 AM3/5/24
to santhav...@googlegroups.com
அங்கே "ஐ" இரண்டாம்வேற்றுமை உருபு அன்று.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 23, 2024, 8:41:19 AM3/23/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சுப்ரமணிய சுப்ரபாதம் 
கலிவிருத்தம்

வந்துதித்தாய் திருமுருகா மதிச்சடையன் திருமகனாய்
வந்துதித்தான் சூரியனே வானெங்கும் ஒளிபரவச்
செந்தமிழில் திருப்புகழைச் செப்புமிசை கேட்டிலையோ
செந்திநகர் மேவிவளர் சேவகனே எழுந்தருள்வாய் (1)

எழுந்தருள்வாய் செச்சையணி எழில்மார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் வேலுடைய எம்பெருமான் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் குருபரனே எழுந்தருள்வாய் பரம்பொருளே 
எழுந்தருள்வாய் சரவணனே எழுந்தருள்வாய் சண்முகனே (2)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 24, 2024, 8:12:53 AM3/24/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சுப்ரமணிய சுப்ரபாதம் 
கலிவிருத்தம்

திருமகளை மணம்புரிந்த திருமாலே மெச்சுகிற
மருமகனே மகிமைமிகு மருதமலை மன்னவனே 
கருணைமிகுக் கடவுளெனக் கற்றறிந்தோர் போற்றுகிறத்
திருத்தணியில் திகழ்பவனே திருமுருகா எழுந்தருள்வாய் (3)

தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்து
பூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில்
நாவார வாழ்த்தினரே நற்பழனி ஆண்டவனே
தேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய் (4)

கொக்கரித்துப் போர்புரிந்த கொடுஞ்சூரன் கடல்புகுந்து
கொக்கெனவே நின்றிடவே கூர்வேலை விடுத்துவென்று
கொக்கரிக்கும் சேவலினைக் கொடியனவே பெற்றவனே
சிக்கலுறை சிங்காரா சிவசுதனே எழுந்தருள்வாய் (5)
( கொக்கு - மாமரம்)

வள்ளிபடர் வளமான வள்ளிமலை மேவிவளர் 
வள்ளியுடன் வாழ்பவனே மால்மருகா முருகோனே
தெள்ளுதமிழ் சிவனாரின் திருச்செவியில் உரைத்தோனே
புள்ளிமயில் தனிலேறும் பெருமாளே எழுந்தருள்வாய் (6)

Siva Siva

unread,
Mar 24, 2024, 8:39:25 AM3/24/24
to santhav...@googlegroups.com
I think the first 4-5 songs of a set need to include early morning descriptions - nature or devotee actions associated with mornings.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 24, 2024, 9:56:32 AM3/24/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏
தங்களின் கருத்து நன்றி 🙏
மொத்தம் 10 பாடல் எழுத எண்ணுகிறேன். 6 பாடல் எழுதிவிட்டேன்.
தாங்கள் கூறிய கருத்தின்படி, 4 பாடல் எழுதி முதலில் சேர்த்துக்கொள்கிறேன்.
முருகா சரணம் 🙏

Anand Ramanujam

unread,
Mar 24, 2024, 10:13:55 AM3/24/24
to santhav...@googlegroups.com
கொக்கரித்துப் போர்புரிந்த கொடுஞ்சூரன் கடல்புகுந்து
கொக்கெனவே நின்றிடவே கூர்வேலை விடுத்துவென்று”

மிக அருமை!!

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 24, 2024, 11:29:29 PM3/24/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி ஐயா 🙏 முருகா சரணம் 🙏

On Sunday, March 24, 2024 at 7:43:55 PM UTC+5:30 Anand Ramanujam wrote:
கொக்கரித்துப் போர்புரிந்த கொடுஞ்சூரன் கடல்புகுந்து
கொக்கெனவே நின்றிடவே கூர்வேலை விடுத்துவென்று”

மிக அருமை!!

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 24, 2024, 11:33:19 PM3/24/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம் 
        கலிவிருத்தம்

வந்துதித்தாய் திருமுருகா மதிச்சடையன் திருமகனாய்
வந்துதித்தான் சூரியனே வானெங்கும் ஒளிபரவச்
செந்தமிழில் திருப்புகழைச் செப்புமிசை கேட்டிலையோ
செந்திநகர் மேவிவளர் சேவகனே எழுந்தருள்வாய் (1)

செஞ்சேவல் கொக்கரிக்கக் செஞ்சுடரோன் தானுதிக்கக்
கொஞ்சுமொழி மங்கையர்கள் கூடியிசை பாடினரே 
குஞ்சரியைப் பொழில்திகழும் குன்றினிலே மணந்தவனே 
தஞ்சமென உனையடைந்தோம் தமிழ்ச்செல்வா எழுந்தருள்வாய் (2)

தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்து
பூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில்
நாவார வாழ்த்தினரே நற்பழனி ஆண்டவனே
தேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய் (3)

சரவணத்தில் பலவண்ணத் தாமரைகள் பூத்தனவே
சரவணத்தில் உதித்தவனே சண்முகனே முருகேசா
அரனவர்க்குக் குருமலையில் அருமறையை மொழிந்தவனே
சிரகிரியில் வாழ்பவனே சிக்கிரம்நீ எழுந்தருள்வாய் (4)

அதிகாலைத் துயிலெழுந்த அடியார்கள் கோவிலிலே
பதிகங்கள் பாடினரே பழச்சோலை மலைக்குமரா
மதிசூடும் சிவனாரின் மகனெனவே உதித்தவனே
விதிமாற்ற வல்லவனே வேலவனே எழுந்தருள்வாய் (5)

திருமகளை மணம்புரிந்த திருமாலே மெச்சுகிற
மருமகனே மகிமைமிகு மருதமலை மன்னவனே 
கருணைமிகுக் கடவுளெனக் கற்றறிந்தோர் போற்றுகிறத்
திருத்தணியில் திகழ்பவனே திருமுருகா எழுந்தருள்வாய் (6)

கொக்கரித்துப் போர்புரிந்த கொடுஞ்சூரன் கடல்புகுந்து
கொக்கெனவே நின்றிடவே கூர்வேலை விடுத்துவென்று
கொக்கரிக்கும் சேவலினைக் கொடியனவே பெற்றவனே
சிக்கலுறை சிங்காரா சிவசுதனே எழுந்தருள்வாய் (7)

வள்ளிபடர் வளமான வள்ளிமலை மேவிவளர் 
வள்ளியுடன் வாழ்பவனே மால்மருகா முருகோனே
கள்ளமிலா அடியாரைக் காத்தருளும் காங்கேயா 
புள்ளிமயில் தனிலேறும் பெருமாளே எழுந்தருள்வாய் (8)

எழுந்தருள்வாய் செச்சையணி எழில்மார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் வேலுடைய எம்பெருமான் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் குருபரனே எழுந்தருள்வாய் பரம்பொருளே 
எழுந்தருள்வாய் சரவணனே எழுந்தருள்வாய் சண்முகனே (9)

விருப்பத்தோ டதிகாலை விழித்தெழுந்து சுப்ரமண்ய
திருப்பள்ளி யெழுச்சியினைத் தினந்தோறும் கேட்போர்கள் 
ஒருப்பட்ட மனத்துடனே ஓதிடுவோர் வளம்பெறவே 
முருகோனே எழுந்தருள்வாய் முத்தையா எழுந்தருள்வாய் (10)


Siva Siva

unread,
Mar 25, 2024, 9:53:17 AM3/25/24
to santhav...@googlegroups.com
ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு தலம். Nice.
But some songs have more than one sthalam. Any reason?
Some songs have the same sthalam name twice. Any reason?

/ அதிகாலை /

அதி - Sanskrit prefix.
காலை - Tamil word.

I do not think it is acceptable to attach Sanskrit prefixes to Tamil words.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 25, 2024, 11:42:25 AM3/25/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏
சில மாற்றங்களுடன் சில பாடல்கள் 
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம் 
        கலிவிருத்தம்
Some songs have the same sthalam name twice. Any reason?

தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்து
பூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில்
நாவார வாழ்த்தினரே ஞானசம் பந்தரெனத்
தேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய்(3)

முன்பு இப்பாடலில் தென்பழனி, நற்பழனி என இரண்டு முறை
எழுதியதைத் தற்போது மாற்றியுள்ளேன்.
இதில் ஞானசம் பந்தரெனத் ( காய் சீர்க்குப் பதில் விளச்சீரும் வரலாம் தானே)
அதேபோல் முத்தையா எழுந்தருள்வாய்(10)

/அதிகாலைக்கு பதில் நதிமூழ்கி/

நதிமூழ்கி அடியார்கள் நற்காலைப் பொழுதினிலே
பதிகங்கள் பாடினரே பழச்சோலை மலைக்குமரா
மதிசூடும் சிவனாரின் மகனெனவே உதித்தவனே
விதிமாற்ற வல்லவனே வேலவனே எழுந்தருள்வாய் (5)

But some songs have more than one sthalam. Any reason?
அருணகிரிநாதர் சில திருப்புகழில் வைப்புத்தலமாக 
ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களைப் பாடியுள்ளாரே குருநாதா.

மேலும் அடியேனுக்கு ஓர் ஐயம்
10ம் பாடலில்

சுப்ரமண்ய - சமஸ்கிருதம்
திருப்பள்ளியெழுச்சி - தமிழ்

சுப்ரமண்ய திருப்பள்ளியெழுச்சி இருக்கலாமா குருவே?
வெவ்வேறு வார்த்தை எனவே இருக்கலாம் தானே.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி குருவே 🙏



On Monday, March 25, 2024 at 7:23:17 PM UTC+5:30 Siva Siva wrote:
ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு தலம். Nice.
But some songs have more than one sthalam. Any reason?
Some songs have the same sthalam name twice. Any reason?

/ அதிகாலை /

அதி - Sanskrit prefix.
காலை - Tamil word.

I do not think it is acceptable to attach Sanskrit prefixes to Tamil words.

V. Subramanian
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம் 
        கலிவிருத்தம்


தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்து
பூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில்
நாவார வாழ்த்தினரே நற்பழனி ஆண்டவனே
தேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய் (3)

அதிகாலைத் துயிலெழுந்த அடியார்கள் கோவிலிலே
பதிகங்கள் பாடினரே பழச்சோலை மலைக்குமரா
மதிசூடும் சிவனாரின் மகனெனவே உதித்தவனே
விதிமாற்ற வல்லவனே வேலவனே எழுந்தருள்வாய் (5)

திருமகளை மணம்புரிந்த திருமாலே மெச்சுகிற
மருமகனே மகிமைமிகு மருதமலை மன்னவனே 
கருணைமிகுக் கடவுளெனக் கற்றறிந்தோர் போற்றுகிறத்
திருத்தணியில் திகழ்பவனே திருமுருகா எழுந்தருள்வாய் (6)

Siva Siva

unread,
Mar 25, 2024, 11:52:25 AM3/25/24
to santhav...@googlegroups.com
/சுப்ரமண்ய - சமஸ்கிருதம்
திருப்பள்ளியெழுச்சி - தமிழ்

சுப்ரமண்ய திருப்பள்ளியெழுச்சி இருக்கலாமா /

Yes, two separate words can be joined. But one cannot apply Sanskrit prefixes to Tamil words.
====



On Mon, Mar 25, 2024 at 11:42 AM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
...

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 25, 2024, 4:58:36 PM3/25/24
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 🙏
10 ம் பாடலிலும் முன்பு எழுதிய அதிகாலை என்பதை காலையிலே என்று
மாற்றம் செய்துள்ளேன். முருகா சரணம் 🙏
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம்
 கலிவிருத்தம் 

விருப்போடு காலையிலே விழித்தெழுந்து சுப்ரமண்ய
திருப்பள்ளி யெழுச்சியினைத் தினந்தோறும் கேட்போர்கள் 
ஒருப்பட்ட மனத்துடனே ஓதிடுவோர் வளம்பெறவே 
முருகோனே எழுந்தருள்வாய் முத்தையா எழுந்தருள்வாய் (10)
On Monday, March 25, 2024 at 7:23:17 PM UTC+5:30 Siva Siva wrote:


/ அதிகாலை /

அதி - Sanskrit prefix.
காலை - Tamil word.

I do not think it is acceptable to attach Sanskrit prefixes to Tamil words.

V. Subramanian
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம் 
        கலிவிருத்தம்


தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 26, 2024, 11:24:06 AM3/26/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சுப்ரமண்ய சரணம்
        கலிவிருத்தம் 

திருவே உருவாய் திகழ்வே லவனே
திருமால் மருகா சிவசண் முகனே 
உருகிப் பணிய உயர்வைத் தருவாய்
அருணா புரிவாழ்  அழகா சரணம் (1)

பச்சை மயில்மேல் பறந்தே மகிழும்
செச்சை அணியும் செவ்வேள் முருகா 
அச்சம் அகற்றி அருளைத் தருவாய் 
கச்சிப் பதிவாழ் கந்தா சரணம் (2)

கந்தம் கமழும் கழலை உடையோய் 
மந்தா கினியின் மைந்தா குமரா
சிந்தைக் கெட்டாச் செல்வம் அருள்வாய் 
கந்தன் குடிவாழ் கடம்பா சரணம்  (3)

பத்தர்க் கருளும் பரமேஸ் வரனாம்
சித்தன் சிவனின் செல்வக் குமரா
முத்துக் குமரா முத்தி அருள்வாய் 
பத்து மலைவாழ் பரமா சரணம் (4)

கலக்கம் கொண்டக் கண்ணா யிரனின்
குலத்தைக் காத்த குலிசா யுதனே
நலத்தை நீயே நாளும் அருள்வாய் 
இலஞ்சிக் குமரா இறைவா சரணம் (5)

விண்ணோர் போற்றும் விசாக விஜயா 
கண்ணன் மருகா கதிர்வே லவனே
கண்ணீர் அகற்றிக் கருணைப் புரிவாய்
தண்ணீர் மலைவாழ் தலைவா சரணம் (6)

குறமா மகளைக் கொஞ்சும் குமரா
குறுமா முனியின் குருவே முருகா 
வறுமை அகற்றி வளமே தருவாய் 
சிறுவா புரிவாழ்  செல்வா சரணம் (7)

தென்னா டுடைய சிவனின் மகனே
என்னைக் காக்க இங்கே வருவாய்
முன்னை வினையை முழுதும் அழிக்கும்  
குன்றக் குடிவாழ் குமரா சரணம் (8)

தில்லைப் பதிவாழ் செல்வா சரணம் 
நெல்லைப் பதிவாழ் நிமலா சரணம் 
வல்லக் கோட்டை வரதா சரணம் 
நல்லூர் உறையும் நாதா சரணம் (9)

சரணம் சரணம் சத்திக் குமரா 
சரணம் சரணம் தமிழின் தலைவா
சரணம் சரணம் தண்டா யுதனே
சரணம் சரணம்  தணிகா சலனே (10)

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 27, 2024, 11:00:30 AM3/27/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சுப்ரமண்ய மங்கலம்
வஞ்சித்துறை: திருவிருக்குக்குறள் 

ஐங்கரனுக் கிளையவனே
தங்கமயில் வாகனனே 
கொங்கிலுறை  காங்கேயா 
செங்கையனே  மங்கலங்கள் (1)

சத்திமிகுச் சண்முகனே
உத்தமனே வேலவனே
முத்துமலை உறைபவனே
முத்தையனே மங்கலங்கள் (2)

அருணகிரிக் கருள்புரியும்
கருணைமிகுக் குமரேசா
திருமயிலம் வாழ்பவனே
திருமுருகா மங்கலங்கள் (3)

பச்சைநிறத் திருமார்பன்
மெச்சுகிற மருகோனே
பச்சைமலை உறைபவனே 
செச்சையனே மங்கலங்கள் (4)

துதிபாடும் அடியாரின்
விதிமாற்ற வல்லவனே
கதிர்மாகப் பதிவாழும்
கதிர்வேலா மங்களங்கள் (5)

மங்களம் மங்கலம்
எது சரியானது என்பது பற்றி விளக்கம்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 27, 2024, 7:39:20 PM3/27/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சுப்ரமண்ய மங்கலம்
வஞ்சித்துறை: திருவிருக்குக்குறள் 

தண்டரள மணிமார்பா
தண்டமிழின் மிகுநேயா
எண்கணுறை முருகோனே
சண்முகனே மங்கலங்கள் (6)

மயிலேறும் பெருமாளே 
அயிலேந்தும் குமரேசா
வயலூரில் உறைவோனே
செயபாலா மங்கலங்கள் (7)

அவனியினை நொடியினிலே
பவனிவரும் மயில்வீரா
சிவன்மலையில் உறைபவனே 
சிவகுமரா மங்கலங்கள் (8)

வாரணர்க் கிளையவனே
நாரணன் மருகோனே
தோரண மலைவாழும்
வீரனே மங்கலங்கள் (9)

மங்கலங்கள் மயில்வீரா
மங்கலங்கள் குமரேசா 
மங்கலங்கள் முருகோனே
மங்கலங்கள் பெருமாளே (10)

Siva Siva

unread,
Mar 28, 2024, 10:15:56 AM3/28/24
to santhav...@googlegroups.com
பல்லாண்டு பாடுவதுபோல்,
இப்பாடல்கள் - "உனக்கு மங்கலம் உண்டாகட்டும்" என்று வாழ்த்தும் பாடல்கள்போல்.

V. Subramanian

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 28, 2024, 1:14:48 PM3/28/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி குருவே 🙏

முருகனுக்கு மங்கலங்கள்
சந்தவசந்தச் சபைக்கு மங்கலங்கள்
அனைவருக்கும் மங்கலங்கள் 
மங்கலங்கள் மங்கலங்கள்

On Thursday, March 28, 2024 at 7:45:56 PM UTC+5:30 Siva Siva wrote:
பல்லாண்டு பாடுவதுபோல்,
இப்பாடல்கள் - "உனக்கு மங்கலம் உண்டாகட்டும்" என்று வாழ்த்தும் பாடல்கள்போல்.

V. Subramanian
On Wed, Mar 27, 2024 at 7:39 PM தங்கவேல் 
ஸ்ரீ சுப்ரமண்ய மங்கலம்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 30, 2024, 6:51:29 AM3/30/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம் 
     கலிவிருத்தம்

வந்துதித்தாய் திருமுருகா மதிச்சடையன் திருமகனாய்
வந்துதித்தான் சூரியனே வானெங்கும் ஒளிபரவச்
செந்தமிழில் திருப்புகழைச் செப்புமிசை கேட்டிலையோ ?
செந்திநகர் மேவிவளர் சேவகனே எழுந்தருள்வாய் (1)

அருஞ்சொற்பொருள்

மதிச்சடையன் - சிவபெருமான், 
சேவகன் - முருகன் 
செந்திநகர் - திருச்செந்தூர் 

விளக்கம் 

சந்திரனைச் சடையில் அணிந்த சிவபெருமானுக்கு மகனாகப் பிறந்த
முருகப் பெருமானே, சூரியன் வான் எங்கிலும் ஒளி வீசும்படி
உதித்துவிட்டான். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழைப் பத்தர்கள் 
பாடுவது கேட்கவில்லையா ? திருச்செந்தூரில் வீற்றிருந்து மக்களைக் 
காப்பவனே முருகா எழுந்தருள்வாயாக!

செஞ்சேவல் கொக்கரிக்கக் செஞ்சுடரோன் தானுதிக்கக்
கொஞ்சுமொழி மங்கையர்கள் கூடியிசை பாடினரே 
குஞ்சரியைப் பொழில்திகழும் குன்றினிலே மணந்தவனே 
தஞ்சமென உனையடைந்தோம் தமிழ்ச்செல்வா எழுந்தருள்வாய் (2)

அருஞ்சொற்பொருள்

குஞ்சரி - தெய்வானை , 
பொழில் திகழும் குன்று - சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றம்

விளக்கம்

செம்மை நிறம் கொண்ட சேவல் கொக்கரித்த பின்னர் சிவந்த நிறத்தில்
கதிரவன் உதிக்கும் நேரத்தில், கொஞ்சும் மொழி பேசும் மங்கையர்கள் 
கூடி , முருகா உன்னைப் போற்றி இசையுடன் பாடினார்களே! தெய்வானையைச்
சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்தவனே ! 
சரணாகதி என்று  உன்னைநாடி வந்துள்ளோம் தமிழின் தவப்புதல்வா முருகா 
எழுந்தருள்வாயாக!

தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்து
பூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில்
நாவார வாழ்த்தினரே ஞானசம் பந்தரெனத்
தேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய் (3)

விளக்கம்

முப்பது முக்கோடி தேவர்கள் அனைவரும் தென்பழனிமலைக்கு 
வந்து மலர்களால் அர்ச்சனை செய்து காலைப்பொழுதுக்கு
உரிய பூபாளம் இராகத்தில் உன்னை நாவார  வாழ்த்திப் பாடினார்களே!
திருஞானசம்பந்தராக வந்து தேவாரம் தந்த சிவனின் குமரா முருகா எழுந்தருள்வாயாக!

சரவணத்தில் பலவண்ணத் தாமரைகள் பூத்தனவே
சரவணத்தில் உதித்தவனே சண்முகனே முருகேசா
அரனவர்க்குக் குருமலையில் அருமறையை மொழிந்தவனே
சிரகிரியில் வாழ்பவனே சிக்கிரம்நீ எழுந்தருள்வாய் (4)

அருஞ்சொற்பொருள்

குருமலை - சுவாமிமலை,
சிரகிரி - சென்னிமலை

விளக்கம்

சரவணப் பொய்கையில் தோன்றியவனே ஆறுமுகப் பெருமாளே, 
முருகா, சிவபெருமானுக்குச் சுவாமி மலையில் பிரணவ மந்திரத்தின் 
உட்பொருளை உபதேசம் செய்தவனே! சென்னிமலையில் வாழும்
 முருகப் பெருமானே சீக்கிரம் நீ எழுந்தருள்வாயாக!

நதிமூழ்கி அடியார்கள் நற்காலைப் பொழுதினிலே
பதிகங்கள் பாடினரே பழச்சோலை மலைக்குமரா
மதிசூடும் சிவனாரின் மகனெனவே உதித்தவனே
விதிமாற்ற வல்லவனே வேலவனே எழுந்தருள்வாய் (5)

அருஞ்சொற்பொருள்

பழச்சோலை - பழமுதிர்சோலை
மதி- சந்திரன் 

விளக்கம்

நல்ல காலைப்பொழுதில் அடியார்கள் நதியில் நீராடிப் பதிகங்கள் 
பாடினார்களே! பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் குமரா! சந்திரனைச்
 சடையில் அணிந்த சிவபெருமான் மகனே, தலைவிதியை மாற்றும்
 வல்லமை படைத்த வேலவனே எழுந்தருள்வாயாக! 

திருமகளை மணம்புரிந்த திருமாலே மெச்சுகிற
மருமகனே மகிமைமிகு மருதமலை மன்னவனே 
கருணைமிகுக் கடவுளெனக் கற்றறிந்தோர் போற்றுகிறத்
திருத்தணியில் திகழ்பவனே திருமுருகா எழுந்தருள்வாய் (6)

விளக்கம்

இலக்குமி தேவியைத் திருமணம் புரிந்த திருமால் புகழ்ந்து போற்றும் மருமகனே!
மகிமைமிக்க மருதமலையை ஆளும் மன்னவனே! கருணையே வடிவான கடவுள்
முருகப் பெருமான் என்று நன்கு கற்றறிந்த சான்றோர்கள் போற்றும் திருத்தணியில்
விளங்கும் திருமுருகப் பெருமாளே எழுந்தருள்வாயாக!

கொக்கரித்துப் போர்புரிந்த கொடுஞ்சூரன் கடல்புகுந்து
கொக்கெனவே நின்றிடவே கூர்வேலை விடுத்துவென்று
கொக்கரிக்கும் சேவலினைக் கொடியனவே பெற்றவனே
சிக்கலுறை சிங்காரா சிவசுதனே எழுந்தருள்வாய் (7)

அருஞ்சொற்பொருள்

கொக்கரித்தல் - சூரனின் ஆவேசம், சேவல் கொக்கரிக்கும் ஓசை
கொக்கு - மாமரம் 

விளக்கம்

கூச்சலிட்டுப் போர் புரிந்த கொடும் சூரபத்மன் முருகனைக் கண்டு 
 பயந்து கடலில் புகுந்து எஃகு மாமரமாகத் தலைகீழாக நிற்க, கூரிய
வேலாயுதம் விட்டு மாமரத்தை மயில்வாகனம் ஆகவும், சேவல் கொடியாகவும்
 போரில் வெற்றி பெற்ற வீரனே! சிக்கலில் வீற்றிருக்கும் சிங்காரவேலனே 
சிவபெருமான் மகனே எழுந்தருள்வாயாக!

வள்ளிபடர் வளமான வள்ளிமலை மேவிவளர் 
வள்ளியுடன் வாழ்பவனே மால்மருகா முருகோனே
கள்ளமிலா அடியாரைக் காத்தருளும் காங்கேயா 
புள்ளிமயில் தனிலேறும் பெருமாளே எழுந்தருள்வாய் (8)

விளக்கம்

வள்ளிக்கொடி படர்ந்த வளமான வள்ளிமலை
வாழும் வள்ளியுடன் இனிது வாழ்பவனே!
திருமால் மருமகனே! கள்ளம் கபடம் இல்லாத
அடியார்களைக் காக்கும் கங்கையின் மைந்தனே
புள்ளிமயில் மீதேறும் முருகப் பெருமானே எழுந்தருள்வாயாக!


எழுந்தருள்வாய் வெட்சியணி எழில்மார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் வேலுடைய எம்பெருமான் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் குருபரனே எழுந்தருள்வாய் பரம்பொருளே 
எழுந்தருள்வாய் சரவணனே எழுந்தருள்வாய் சண்முகனே (9)

அருஞ்சொற்பொருள்
செச்சை - வெட்சி மலர் 

விளக்கம்

வெட்சி மலர் மாலையை அணிந்த அழகிய மார்பனே எழுந்தருள்வாயாக!
வேலாயுதம் ஏந்திய எம் ஆண்டவனே எழுந்தருள்வாயாக! குரு பரனே 
பரம்பொருளே எழுந்தருள்வாயாக சரவணனே சண்முகனே  எழுந்தருள்வாயாக

விருப்போடு காலையிலே விழித்தெழுந்து சுப்ரமண்ய
திருப்பள்ளி யெழுச்சியினைத் தினந்தோறும் கேட்போர்கள் 
ஒருப்பட்ட மனத்துடனே ஓதிடுவோர் வளம்பெறவே 
முருகோனே எழுந்தருள்வாய் முத்தையா எழுந்தருள்வாய் (10)

விளக்கம்

விருப்பத்துடன் தினமும் காலையில் விழித்தெழுந்து சுப்ரமண்ய 
திருப்பள்ளி எழுச்சியினைக் கேட்பவர்கள் ஒரு மனதுடன் ஓதுபவர்கள் 
எல்லா வளங்களும் பெற முருகப்பெருமானே முத்தையனே எழுந்தருள்வாயாக.


ஸ்ரீ சுப்ரமண்ய சரணம்
        கலிவிருத்தம் 

திருவே உருவாய் திகழ்வே லவனே
திருமால் மருகா சிவசண் முகனே 
உருகிப் பணிய உயர்வைத் தருவாய்
அருணா புரிவாழ் அழகா சரணம் (1)

விளக்கம் 

அழகே உருவாய் திகழும் வேலவனே திருமாலின் 
மருமகனே சிவசண்முகனே என்று உருகிப் பணிய
 உயர்வைத் தருவாயே திருவண்ணாமலையில் வாழும்
 அழகனே சரணம் 

பச்சை மயில்மேல் பறந்தே மகிழும்
செச்சை அணியும் செவ்வேள் முருகா 
அச்சம் அகற்றி அருளைத் தருவாய் 
கச்சிப் பதிவாழ் கந்தா சரணம் (2)

விளக்கம் 

பச்சை நிற மயில் மேல் பறந்து மகிழும் வெட்சி மலர் 
மாலையை  அணியும் செவ்வேளே முருகா அச்சம் அகற்றி 
உன் அருளைத் தருவாயே

கந்தம் கமழும் கழலை உடையோய் 
மந்தா கினியின் மைந்தா குமரா
சிந்தைக் கெட்டாச் செல்வம் அருள்வாய் 
கந்தன் குடிவாழ் கடம்பா சரணம் (3)

அருஞ்சொற்பொருள்

மந்தாகினி - கங்காதேவி 

விளக்கம்
மணம் வீசும் திருவடிகளை உடையவனே 
கங்கை மைந்தனே குமரனே! உன்னை
வணங்கும் அடியார்களுக்கு சிந்தனைக்கு
எட்டாத வகையில் எல்லா வகையான
செல்வங்களை அருள்வாயே
கந்தன்குடியில் வாழும் கடம்பனே சரணம் 

பத்தர்க் கருளும் பரமேஸ் வரனாம்
சித்தன் சிவனின் செல்வக் குமரா
முத்துக் குமரா முத்தி அருள்வாய் 
பத்து மலைவாழ் பரமா சரணம் (4)

விளக்கம்

பக்தர்களுக்கு அருள் புரியும் பரமேஸ்வரன்,
சித்தன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவனின் 
செல்வ மகனே முத்துக்குமரனே
முத்தி அருள்வாயே ! பத்துமலையில்
வாழும் பரமாத்மாவேசரணம் 

கலக்கம் கொண்டக் கண்ணா யிரனின்
குலத்தைக் காத்த குலிசா யுதனே
நலத்தை நீயே நாளும் அருள்வாய் 
இலஞ்சிக் குமரா இறைவா சரணம் (5)

அருஞ்சொற்பொருள்

கண்ணாயிரன் - இந்திரன் 
குலிசாயுதன் -  முருகன் 
குலிசம் என்பது முருகப் பெருமான் தன் பன்னிரு 
கைகளில் ஒன்றில் தாங்கியுள்ள ஓர் ஆயுதம். 
இவ்வாயுதத்தைக் கொண்டே பெருமான், சூரபத்மனின்
 தம்பியாகிய சிங்கமுகன் எனும் அசுரனை வதம் செய்தார்.
 குலிசம் எனும் ஆயுதத்தை வைத்திருப்பதால், முருகன் 
‘குலிசாயுதன்’ என்றழைக்கப்படுகிறார். குலிசம் (வஜ்ராயுதம்) 
இந்திரனுடைய ஆயுதமும்கூட.

விளக்கம்

கலக்கம் கொண்ட இந்திரனின் குலத்தைக்
காத்த குலிசாயுதனே ! நீயே எனக்கு நன்மையை
 நாளும் அருள்வாயே இலஞ்சிப்பதியில்
வாழும்  குமரனே இறைவனே சரணம் 

விண்ணோர் போற்றும் விசாக விஜயா 
கண்ணன் மருகா கதிர்வே லவனே
கண்ணீர் அகற்றிக் கருணை புரிவாய்
தண்ணீர் மலைவாழ் தலைவா சரணம் (6)


விளக்கம்

தேவர்கள் போற்றும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவனே 
கண்ணபிரான் மருமகனே கதிர்வேலனே எனது கண்ணீர்
 அகற்றிக் கருணையைப் புரிவாயே தண்ணீர்மலையில்
வாழும் தலைவனே சரணம் 

குறமா மகளைக் கொஞ்சும் குமரா
குறுமா முனியின் குருவே முருகா 
வறுமை அகற்றி வளமே தருவாய் 
சிறுவா புரிவாழ் செல்வா சரணம் (7)

அருஞ்சொற்பொருள்

குறமகள் - வள்ளி, குறுமாமுனி- அகத்தியர் 

விளக்கம்

குறமகள் வள்ளியைக் கொஞ்சும் குமரனே
குள்ள வடிவம் கொண்ட சிறந்த அகத்திய முனிவரின் 
குருநாதனே முருகா எனது வறுமையை அகற்றி வளம்
 மிக்க வாழ்க்கையைத் தருவாயே சிறுவாபுரியில்
வாழும் செல்வனே சரணம் 

தென்னா டுடைய சிவனின் மகனே
என்னைக் காக்க இங்கே வருவாய்
முன்னை வினையை முழுதும் அழிக்கும்  
குன்றக் குடிவாழ் குமரா சரணம் (8)

விளக்கம்

தென்னாடுடைய சிவபெருமானின் மகனே
அடியேனைக் காக்க இங்கே வருவாயே
முன்னை வினைகள் முழுவதும் அழிக்கும்
குன்றக்குடியில் வாழும் குமரனே சரணம் 

தில்லைப் பதிவாழ் செல்வா சரணம் 
நெல்லைப் பதிவாழ் நிமலா சரணம் 
வல்லக் கோட்டை வரதா சரணம் 
நல்லூர் உறையும் நாதா சரணம் (9)

விளக்கம்

மதுரையில் வாழும் செவ்வனே சரணம்
திருநெல்வேலியில் வாழும் நிமலனே சரணம்
வல்லக்கோட்டையில் வாழும் வரதனே சரணம்
நல்லூரில் வீற்றிருக்கும் நாதனே சரணம் 

சரணம் சரணம் சத்திக் குமரா 
சரணம் சரணம் தமிழின் தலைவா
சரணம் சரணம் தண்டா யுதனே
சரணம் சரணம் தணிகா சலனே (10)

ஸ்ரீ சுப்ரமண்ய மங்கலம்

வஞ்சித்துறை: திருவிருக்குக்குறள் 

ஐங்கரனுக் கிளையவனே
தங்கமயில் வாகனனே 
கொங்கிலுறை  காங்கேயா 
செங்கையனே  மங்கலங்கள் (1)

அருஞ்சொற்பொருள் 

கொங்கு - கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், 
நீலகிரி ஆகியவையும் திண்டுக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி 
மாவட்டங்களின் சில பகுதிகளையும் கொங்கு மண்டலம் .

விளக்கம்

விநாயகர் பெருமானுக்கு இளையவனே
தங்க மயிலை வாகனமாகக் கொண்டவனே
கொங்கு மண்டலத்தில் வாழ்பவனே
சிவந்த கையை உடைய முருகப்பெருமானே
 உனக்கு மங்கலம் உண்டாக்கட்டும்.

சத்திமிகுச் சரவணனே
உத்தமனே வேலவனே
முத்துமலை உறைபவனே
முத்தையனே மங்கலங்கள் (2)

விளக்கம்

சக்திமிக்க சரவணப் பெருமாளே உத்தமனே 
வேலவனே முத்துமலையில் வீற்றிருக்கும் 
முத்தையனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும்.

அருணகிரிக் கருள்புரியும்
கருணைமிகுக் குமரேசா
திருமயிலம் வாழ்பவனே
திருமுருகா மங்கலங்கள் (3)

விளக்கம்

அருணகிரிநாதருக்கு அருள் புரியும் கருணைமிக்க 
குமரேசனே திருமயிலத்தில் வாழும் திருமுருகப்
 பெருமானே உனக்கு மங்கலம் உண்டாகட்டும்

பச்சைநிறத் திருமார்பன்
மெச்சுகிற மருகோனே
பச்சைமலை உறைபவனே 
செச்சையனே மங்கலங்கள் (4)

விளக்கம்

பச்சை நிற திருமார்பை உடைய திருமால் புகழ்கின்ற 
மருமகனே பச்சை மலையில் உறைபவனே வெட்சி மாலை 
அணிந்தவனே உனக்கு மங்களம் உண்டாகட்டும்

துதிபாடும் அடியாரின்
விதிமாற்ற வல்லவனே
கதிர்காமப் பதிவாழும்
கதிர்வேலா மங்களங்கள் (5)

விளக்கம்

முருகா உன்னைப் போற்றி வழிபடும் அடியார்களின் 
விதியை மாற்ற வல்லவனே கதிர்காமப் பதியில் வாழும்
 கதிர்வேலனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும் 

தண்டரள மணிமார்பா
தண்டமிழின் மிகுநேயா
எண்கணுறை முருகோனே
சண்முகனே மங்கலங்கள் (6)

அருஞ்சொற்பொருள்

தண் - குளிர்ந்த  தரளம் - முத்து

விளக்கம்
 
குளிர்ந்த முத்து மாலையை அணிந்த மார்பனே
இனிய தமிழ் மீது நேசம் கொண்டவனே எண்கண் 
என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானே
 சண்முகனே உனக்கு மங்களம் உண்டாகட்டும்

மயிலேறும் பெருமாளே 
அயிலேந்தும் குமரேசா
வயலூரில் உறைவோனே
செயபாலா மங்கலங்கள் (7)

அருஞ்சொற்பொருள்

அயில் - வேலாயுதம்

விளக்கம்

மயிலேறும் பெருமாளே வேலாயுதம் ஏந்தும் குமரனே
 வயலூரில் வீற்றிருக்கும் ஜெயபாலனே உனக்கு 
மங்கலம் உண்டாகட்டும்

அவனியினை நொடியினிலே
பவனிவரும் மயில்வீரா
சிவன்மலையில் உறைபவனே 
சிவகுமரா மங்கலங்கள் (8)

விளக்கம்

உலகத்தை ஒரு நொடியில் சுற்றி வரும்
 மயில்வீரனே சிவன்மலையில் வாழும் 
சிவ குமரனே உனக்கு மங்கலம் உண்டாகட்டும்

வாரணர்க் கிளையவனே
நாரணன் மருகோனே
தோரண மலைவாழும்
வீரனே மங்கலங்கள் (9)

அருஞ்சொற்பொருள்

வாரணம் -  விநாயகர்

விளக்கம்

விநாயகப் பெருமானுக்கு இளையவனே திருமாலின் 
மருமகனே தோரணமலையில் வாழும் வீரனே
 உனக்கு மங்கலம் உண்டாகட்டும்

மங்கலங்கள் மயில்வீரா
மங்கலங்கள் குமரேசா 
மங்கலங்கள் முருகோனே
மங்கலங்கள் பெருமாளே  (10)

 - காஞ்சிபுரம் க தங்கவேல் 

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 30, 2024, 5:21:06 PM3/30/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ ஐயப்பன் சுப்ரபாதம்
 கலிவிருத்தம் 

இபமுகவர்க் கிளையவனே ஈசனருள் திருமகனே
சுபமளிக்கத் தரணியிலே சூரியனே தானுதித்தான் 
செபதவங்கள் அடியார்கள் செய்தனரே அழகான 
சபரிமலை மேவிவளர் சாஸ்தாவே எழுந்தருள்வாய் (1)

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 30, 2024, 10:43:12 PM3/30/24
to santhav...@googlegroups.com
அருட்பிரவாகமாகத் துதிக் கவிதைகள் இயற்றி வருவது அவன் அருளே.

அனந்த்

On Sat, Mar 30, 2024 at 5:21 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:



மங்கலங்கள் மயில்வீரா
மங்கலங்கள் குமரேசா 
மங்கலங்கள் முருகோனே
மங்கலங்கள் பெருமாளே  (10)

-

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 30, 2024, 11:46:30 PM3/30/24
to சந்தவசந்தம்
நன்றி ஐயா 🙏
அவனருளாலே அவன்தாள் வணங்கி 
முருகா சரணம் 🙏
On Sunday, March 31, 2024 at 8:13:12 AM UTC+5:30 VETTAI ANANTHANARAYANAN wrote:
அருட்பிரவாகமாகத் துதிக் கவிதைகள் இயற்றி வருவது அவன் அருளே.

அனந்த்

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 31, 2024, 1:05:13 AM3/31/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ ஐயப்பன் சுப்ரபாதம்
 கலிவிருத்தம் 

இருள்நீக்கக் காலையிலே இளம்பருதி உதித்தானே
திருக்கோவில் எங்கிலுமே தீபங்கள் ஏற்றினரே
திருமாலின் திருமகனே திருமுருகன் இளையோனே 
எருமேலி மேவிவளர் இறைவனே எழுந்தருள்வாய் (2)

விளக்கம் 

காலையிலே இளம் சூரியன் இருளை நீக்க உதித்து விட்டான் 
ஐயப்பா உனது திருக்கோவில் எங்கலுமே தீபங்களை அடியார்கள் 
ஏற்றினார்களே திருமாலின் திருமகனே முருகனுக்கு இளையவனே
 எருமேலியில் வீற்றிருக்கும் இறைவனே எழுந்தருள்வாயாக 

Ram Ramakrishnan

unread,
Mar 31, 2024, 5:10:35 AM3/31/24
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. தங்கவேல்.

இந்த இளவயதில் உங்களிடங் காணும் உத்சாகமும் பாட்டெழுதும் வேட்கையும் என் போன்றோர்க்குக் களிப்பு நல்கி, நாங்களும் முழு வேகத்துடன் எழுதத் தூண்டுகோலாவதில் ஐயமில்லை.

வாழ்க வளமுடன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 30, 2024, at 16:21, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

ஸ்ரீ சுப்ரமண்ய சுப்ரபாதம் 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/c42f2285-5b20-4c98-89a8-3274d8b7e73fn%40googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 31, 2024, 6:30:39 AM3/31/24
to சந்தவசந்தம்
 இராம் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு அடியேன் நன்றிகள் முருகா சரணம் 🙏

ஸ்ரீ ஐயப்பன் சுப்ரபாதம்
 கலிவிருத்தம் 


வந்துதித்தான் கதிரவனே மலையாளத் தேசத்தில்
தந்திரிகள் மந்திரங்கள் தயவுடனே கூ‌றினரே 
சந்தனத்தில் குளிப்பவனே சண்முகனுக் கிளையவனே
பந்தளத்தில் மேவிவளர் பரமாத்மா எழுந்தருள்வாய் (3)

மளையாளத் தேசத்தில் வல்லினம் மிகும் தானே?

விளக்கம்

மலையாளத்தேசத்தில் சூரியன் உதித்தான்  கோவிலில்
 தந்திரிகள் மந்திரங்களை அன்புடன் கூறினாரே , சந்தன
 அபிஷேகப் பிரியனே ஆறுமுகனுக்கு இளையவனே பந்தளத்தில் 
மேவிவளர் பரமாத்மாவே ஐயப்பா எழுந்தருள்வாயாக .

பிற்குறிப்பு

காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட அய்யன் ஐயப்பனை மன்னன்
 ராஜசேகரன் இங்கு தான் சீரோடும், சிறப்போடும் வளர்த்தார். மகன்
 நினைவாக மன்னர் இங்கு ஒரு ஐயப்பன் ஆலயத்தை எழுப்பியுள்ளார். 
சபரிமலையில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவில், திருவனந்தபுரம் 
சாலையில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் இந்த ஆலயம்
 அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது 
அணிவிக்கப்படும், திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான்
 வைக்கப்பட்டிருக்கின்றனவாம்.

Anand Ramanujam

unread,
Mar 31, 2024, 7:19:50 AM3/31/24
to santhav...@googlegroups.com
மிக அருமை. திரு. தங்கவேல்!

மளையாளத் தேசத்தில் வல்லினம் மிகும் தானே?”

ஆம், வல்லினம் மிகும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Message has been deleted

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 31, 2024, 8:54:24 AM3/31/24
to சந்தவசந்தம்
திரு. இமயவரம்பன்‌ அவர்களுக்கு நன்றி 

ஸ்ரீ ஐயப்பன் சுப்ரபாதம்
 கலிவிருத்தம் 

திருஅச்சங் கோவிலிலே தேவியர்கள் புறமிருக்க
வரும்பத்தர் மணம்புரிந்து வாழ்ந்திடவே வரமளிக்கும்
பெருமாளே தீராத பெருநோயைத் தீர்ப்பவனே
திருச்சேவல் கூவியதே சிவசுதனே எழுந்தருள்வாய் (4)

விளக்கம் மற்றும் கோவிலைப் பற்றி 

 இது பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயமாகும், இங்குள்ள ஐயப்ப விக்கிரகமும் அவரது திருக்கரங்களால் நிறுவியது. உலகில் உள்ள ஐயப்ப சிலைகளில் இந்த கோவிலில் உள்ள சிலை தான் மிகவும் பழமை வாய்ந்தது. ஏனென்றால் இது கடவுளின் கரங்களால் செய்யப்பட்டது அல்லவா! இங்கு வனராஜனாகக் கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் இத்தலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகின்றனர்.
இதனால் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறப்புமிக்கத் தலம் இதுவாகும். இவரது வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. பலதரப்பட்ட விஷ முறிவு சிகிச்சைகளுக்கு இந்தச் சந்தனமும் புனித நீரும் அதிமருந்தாகச் செயல்படுகிறது. செங்கோட்டையில் இருந்து 30 கிமீ தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆண்களுடன் அனைத்து வயது பெண்களும் இந்த கோவிலுக்கு வருகை தந்து ஐயப்ப பெருமானைத் தரிசிக்கலாம்.

திருச்சேவல் கூவியதே சிவசுதனே  எழுந்தருள்வாயாக .

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 31, 2024, 8:23:52 PM3/31/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ ஐயப்பன் சுப்ரபாதம்
 கலிவிருத்தம் 


வாரிசங்கள் மலர்ந்தனவே வாவியிலே நினைக்கின்ற 
காரியங்கள் நிறைவேற காலையிலே அழகான
நாரியர்கள் வாசலிலே நற்கோலம் இட்டனரே
ஆரியங்கா வுறைகின்ற ஐயப்பா எழுந்தருள்வாய் (5)

அருஞ்சொற்பொருள்

வாரிசம் - தாமரை, நாரி - பெண் 
வாவி - குளம் 

விளக்கம்

காலையில், குளத்திலே தாமரைகள் பூத்தன நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று அழகான பெண்கள் வாசலிலே நல்ல கோலங்கள் இட்டார்கள் ஆரியங்காவு என்னும் திருத்தளத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனே எழுந்தருள்வாயாக.

கோவிலைப் பற்றி

ஆரியங்காவு
தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் கேரளா மற்றும் தமிழகத்தின் எல்லையில் ஆரியங்காவு எனும் சிற்றூரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஐயப்பன் அரசராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர பெண்ணான புஷ்கலா தேவியை மணந்து ஐயப்பன் இந்தக் கோவிலில் திருமணக் கோலத்தில் காட்சித் தருகிறார். இங்கு இருக்கும் ஒற்றைக்கல் திருமண மேடையையும் நீங்கள் காணலாம். கேரள முறையில் கட்டப்பட்டு இருக்கும் கோவிலில் தமிழக முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தில் இங்கு ஐயப்பனுக்கும் புஷ்கலா தேவிக்கும் திருமண வைபவம் மிகவும் விமர்சியாக நடைபெறுகிறது. அந்த சமயத்தில் மதுரையில் இருந்து சௌராஷ்டிரா இனத்தவர்கள் பெண் வீட்டு சார்பில் சீர்வரிசை செய்கின்றனர். அதோடு மாப்பிள்ளை வீட்டு சார்பில் பெண் வீட்டாருக்கு இங்கு மூன்று நாட்கள் விருந்தும் அளிக்கப்படுகிறது.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 1, 2024, 11:05:26 AM4/1/24
to சந்தவசந்தம்
ஸ்ரீ ஐயப்பன் சுப்ரபாதம்
 கலிவிருத்தம் 

கற்புரத்தை ஏற்றிவைத்துக் காலையிலே வழிபட்டோம்
விற்படையைக் கையிலேந்தி வீரமுடன் காட்சிதந்தே
அற்புதமாய்க் கோச்சடையில் ஆட்சிசெய்யும் ஐயப்பா 
பொற்பதமே காணவந்தோம் பூபதியே எழுந்தருள்வாய் (6)

அருஞ்சொற்பொருள்

கற்புரம் - கற்பூரம், விற்படை - வில்லாயும் , பொற்பதம் - திருவடி 

விளக்கம்

காலையில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டோம் வில்லாயுதத்தைக்
 கையேந்தி அற்புதமாக மதுரை கோச்சடையில் அய்யனாராக 
ஆட்சி செய்யும் ஐயப்பனே உனது பொற்பாதத்தைக் காண 
வந்தோம் பூமியை ஆள்பவனே எழுந்தருள்வாயாக.

கோவிலைப் பற்றி https://temple.dinamalar.com/new.php?id=715

It is loading more messages.
0 new messages