”கல்லாடையும் துவராடையும் ஒரே பொருளைத் தரும் இரு சொற்களாகும்.
கல்/துவர் எனும் இரு சொற்களும் சிவந்த நிறத்தைக் காட்டும்.”
வல்லமை கட்டுரை தொடக்கம்.
கல் என்றால் சிவப்பா? இப்படி ஒரு பொருள் எந்த இலக்கியத்திலும்
காணோம். நீலக்கல், பச்சைக்கல், மஞ்சள்கல், சிவப்புக்கல், செங்கல்,
காவிக்கல், வெண்கல், கருங்கல், ... என்று பல வண்ணங்களிலும்
கற்கள் கிடைக்கின்றன. கல் = சிவப்பு என்று மாத்திரம் சொல்ல
இயல்வதில்லை. கல் கருப்பாகவும், வெள்ளையாகவும்,
நீலமாகவும், பச்சையாகவும், சிவப்பாகவும், ... இருக்கிறது.
கல்லாடை சைவ, வைணவ துறவியர்க்கும், துவராடை பௌத்த
பிக்குகளும் அணிவது தமிழ் இலக்கியத்தில் நெடுகவருகிறது.
காவிக்கல் தோய்த்து வண்ணமூட்டுவது கல்லாடை. எனவே,
இதனைக் காவி வஸ்திரம் என்பதும் உண்டு. சென்னை அகராதி:
கல்லாடை n. கல் +. Cloth dyed in red ochre, worn by those who have
renounced the world; காவி வஸ்திரம். கோத்தகல்லாடையும் (தேவா. 509, 2).
Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும்
(இலக். வி. 707, உரை). காவி வஸ்திரம் முல்லைப்பாட்டிலேயும்
உண்டு: ”கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப”
மேலும், மருத மர இலை, பூ வேவித்துச் சாயமூட்டுவது துவராடை
எனத் தேவாரம், நீலகேசி (சமண இலக்கியம்), ... காட்டுகின்றன.
இதை அணிவோர் பௌத்த மத பிக்ஷுக்கள்.
கல் என்றால் சிவப்பில்லை என்றறிய முக்கியமாக ஒரு சான்று காட்டலாம் - ஆல
மரத்தின்
இனங்கள் வழியாக.
ஆல மரத்தின் காய்கள் சிவப்பாக இருப்பவை:
சிவப்பான காய்கள் கொண்ட ஆலின் பெயர் வெறும் ஆல் தான். அம்மரத்துக்கு
கல் என்ற முன்ஒட்டு இல்லை.
http://www.flowersofindia.net/catalog/slides/Banyan%20Tree.html
http://irapl.altervista.org/nit/viewpics.php?title=Ficus+benghalensis
http://ibc.lynxeds.com/photo/coppersmith-barbet-megalaima-haemacephala/bird-feeding-ficus-benghalensis
தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பது மலையில் - இமயம், பொதிகை மலைகள்.
சங்க இலக்கியத்தில் கல் என்றால் மலை என்ற பொருள் பல பாடல்களில்
வரும். சில ஆயிரம் அடிகள் கடல்மட்டத்திலிருந்து வளர்வன கல்லால் மரங்கள்.
இங்கே, கல் = மலை, குன்று எனப் பொருள். கல்லிச்சி, கல்லரசு மரங்களும்
உள்ளன.
கல்லால மரம் எனத் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில்
வழங்குகிறது. கல்லால மரம் மராட்டியில் கல்லு-கோளி என்கின்றனர்.
கோள்- என்றால் பற்றுதல் எனப் பொருள். மனிதன் வாழ்க்கையில் சோதிடப்
படி பற்றுவது “கோள்” இந்த தமிழ் நம்பிக்கையை, சிந்துசமவெளியில்
இருந்துள்ளது. பின்னர் வடமொழியில் மொழிபெயர்த்து கிரஹம் என
வழங்குகின்றனர்.
கல், கரடுகளில் வளரும் கல்லால் = ஹில் பன்யன் (ficus mollis, பழைய பெயர்
ficus tomentosa). கல் பாங்கான இடங்களில் கற்களையும், பாறைகளையும்
பற்றி வளரும் கல்லால் மரம். ficus mollis (ficus tomentsa), கல்லால
மரத்தின்
காய்கள் பச்சை நிறம் கொண்டவை, சிவப்பாக இல்லை என்பது
முக்கியமானது.
http://www.flowersofindia.net/catalog/slides/Soft%20Fig.html
http://commons.wikimedia.org/wiki/File:Ficus_mollis_in_Keesaraguda,_AP_W_IMG_9134.jpg
http://herbalmedicinalplants.org/Herbs.php?disp=Ficus_mollis&herblist=F
நா. கணேசன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Sep 4, 10:38 pm, vis gop <vis...@gmail.com> wrote:
> கல்லாடை மரபினால் செவ்வாடையைக் குறிப்பது தெளிவானால் கல்லாடை செவ்வாடைதானே?
> கல் என்பது சிவப்பைக்குறிக்காமலேயே இது உண்மையாகக்கூடும்.
> (உம்) மஞ்சள் சோறு (மஞ்சள் சாதம்). மஞ்சள் என்பது எலுமிச்சைப் பழத்தைக்
> குறிக்காமலேயே மஞ்சள் சோறு எலுமிச்சைச் சோற்றைக் குறிப்பதில்லையா?
> எலுமிச்சைச் சோற்றில் சிறிது மஞ்சள் கலக்கப்படுவதும் அது பெரும்பாலும்
> மஞ்சளாகவே இருப்பதும் வழக்கத்தில் இருப்பதால் இதில் குழப்பமில்லை. அதுபோல,
> 'ஆடை' பற்றிய சூழலில் (context) கல் என்பது காவியையே (ஆகவே சிவப்பைக்)
> குறிப்பது மரபாவதால் இதில் குழம்ப வேண்டியதில்லை.
> நல்வாழ்த்துக்களுடன்,
> கோபால்.
>
ஆம். கல்லாடை காவிக் கல்லில் தோய்ப்பதால் குழப்பமில்லை.
ஆனால், அதை வைத்து கல் = சிவப்பு என்றால் குழப்பம் ஏற்படும்.
நீலக்கல், பச்சைக்கல், கருங்கல், வெண்கல், ... இருக்கின்றன.
கல் = சிவப்பு - அவற்றுக்குப் பொருந்தாது.
நா. கணேசன்
12/9/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >>http://ibc.lynxeds.com/photo/coppersmith-barbet-megalaima-haemacephal...
>
> >> தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பது மலையில் - இமயம், பொதிகை மலைகள்.
> >> சங்க இலக்கியத்தில் கல் என்றால் மலை என்ற பொருள் பல பாடல்களில்
> >> வரும். சில ஆயிரம் அடிகள் கடல்மட்டத்திலிருந்து வளர்வன கல்லால் மரங்கள்.
> >> இங்கே, கல் = மலை, குன்று எனப் பொருள். கல்லிச்சி, கல்லரசு மரங்களும்
> >> உள்ளன.
>
> >> கல்லால மரம் எனத் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில்
> >> வழங்குகிறது. கல்லால மரம் மராட்டியில் கல்லு-கோளி என்கின்றனர்.
> >> கோள்- என்றால் பற்றுதல் எனப் பொருள். மனிதன் வாழ்க்கையில் சோதிடப்
> >> படி பற்றுவது “கோள்” இந்த தமிழ் நம்பிக்கையை, சிந்துசமவெளியில்
> >> இருந்துள்ளது. பின்னர் வடமொழியில் மொழிபெயர்த்து கிரஹம் என
> >> வழங்குகின்றனர்.
>
> >> கல், கரடுகளில் வளரும் கல்லால் = ஹில் பன்யன் (ficus mollis, பழைய பெயர்
> >> ficus tomentosa). கல் பாங்கான இடங்களில் கற்களையும், பாறைகளையும்
> >> பற்றி வளரும் கல்லால் மரம். ficus mollis (ficus tomentsa), கல்லால
> >> மரத்தின்
> >> காய்கள் பச்சை நிறம் கொண்டவை, சிவப்பாக இல்லை என்பது
> >> முக்கியமானது.
> >>http://www.flowersofindia.net/catalog/slides/Soft%20Fig.html
>
> >>http://commons.wikimedia.org/wiki/File:Ficus_mollis_in_Keesaraguda,_A...
கல்லாடை மரபினால் செவ்வாடையைக் குறிப்பது தெளிவானால் கல்லாடை செவ்வாடைதானே? கல் என்பது சிவப்பைக்குறிக்காமலேயே இது உண்மையாகக்கூடும்.
கல்லாடை மரபினால் செவ்வாடையைக் குறிப்பது தெளிவானால் கல்லாடை செவ்வாடைதானே? கல் என்பது சிவப்பைக்குறிக்காமலேயே இது உண்மையாகக்கூடும்.
--
கல்² kal - n. [T. Tu. kallu, K. M. kal.] 1. Stone; வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ் நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 2. Gravel, pebble, grit; சிறு கல். கற்கொண்டெறியுந் தவறு (நா லடி, 364). 3. Boulder, ledge, crag; பாறை. கல் லகழ் கிடங்கின் (மலைபடு. 91). 4. Rock, hill, mountain; மலை. கல்சேர்பு மாமழை தலைஇ (பதிற்றுப். 84, 23). 5. Precious stone; இரத்தினம். குருவிந்தக் கற்கள் (கம்பரா. சித்திர. 17). 6. Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை). 7. Pearl; முத்து. கற்குளிமாக்கள் (கல்லா. 42, 2). 8. Memorial stone in a village, as for a hero; வீரக்கல். பலர் . . . கன்னின்றவர் (குறள், 771). 9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise; சாச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்துநாளைக்கு நாட் டப்படுங் கல். 10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 11. Brick; செங்கல். Colloq. 12. Milestone; மைல் அளவுக்கு நாட்டுங் கல். Mod. 13. Mile; மைல்தூரம். Mod.
இதை விளக்கவே மஞ்சள் சோறு உதாரணமாகத் தரப்பட்டது.
கல் என்றால் சிவப்பு என்ற யூகம் செய்வது குழந்தைத்தனமானது.
முற்காலத்தில் அரச குலத்தினரே மன்னரானார்கள்இன்று எல்லாரும் இந்நாட்டு மன்னர்தாம்அதனால் ஆராய்ச்சி யாரும் செய்யலாம். குறிப்பாக மொழிக்கு ஆய்வுக்கூடம் தேவை இல்லையே!
கல் = சிவப்பு என்பது, அன்பு = பல் என்பது போலத்தான்.
இளமுனைவர் சரவணன் என்பவர் எழுதும் பதிவுகளைப் படிக்க வேண்டுகிறேன்.
சிலம்புக் கதையில் கண்ணகி திருகி எறிந்தது எது?
என்று ‘திருத்தம்’ சரவணன் எழுதுகிறார்:
http://thiruththam.blogspot.com/2010_02_01_archive.html
திருத்தம் வலைப்பதிவு படித்துப் பாருங்கள்.
---------------
சங்க இலக்கியத்தில் புலையன், இழிசினன், இழிபிறப்பாளன்
என்றெல்லாம் சொற்கள் உள்ளன. இதற்கு அருத்தத்தை
மாற்ற ஆங்கிலத்தில் சில கட்டுரைகள் வெளிவந்தன.
அப்போது நண்பர் ஜார்ஜ் ஹார்ட் சொன்னார்:
சங்க இலக்கியத்தைச் சொற்களை மாற்றினால் நியூயார்க்
டைம்ஸ் ஆகிவிடும் என்று :-)
நா. கணேசன்
> அவன் நுழைந்தான் என்பதற்கு ’அவன் விண்டான்’, ‘அவன் விள்ளினான்’
> தமிழில் உண்டா ? விள்ளுதல் - வெளிப்படுத்துதல் என்றே பொருள்
> தருகிறது - கண்டவர் விண்டிலர்.
>
விஷ்ணு என்றால் எங்கும் பரவுதல். விண்வெளி எங்கும் Pervader.
pervasive. விண்டுவை all pervasive sky or solar deity என்பார்கள்.
அதனால் தான் கருடன் வாகனம். காற்றின் மைந்தனும்.
திரிவிக்ரம அவதாரம் என்பது solar motif. அப்போது சூரியனைப்
பற்றித் தெரிந்த செய்தியைச் சொல்லியுள்ளனர். கிழக்கே
உதித்து வானில் உயர்ந்து மேற்கே மறையும் 3 படிகள்
விஷ்ணுவின் த்ரிவிக்ரம செயல்.
விள்- என்னும் வேர் விண்ணன், விட்டு (விட்டல்), விண்டு, ...
என்று விஷ்ணுவைப் பழந்தமிழில் குறிக்கிறது. தொல்த்ராவிடச்
சொற்கள் பலவும் -ள்-/-ண்-/-ட்- 2-ம் எழுத்தின் தொகுதியாய்க்
காணலாகும். இந்த விள்- என்னும் த்ராவிட வேர் வடமொழிக்கு
அளிப்பது விஷ்ணு என்னும் சொல். Unique Indian language phenomenon
of systemic retroflexion & its connection to Dravidian can be seen in
the -L-/-N-/-T- word formations in that language family which
ultimately
give rise to words like viSNu in Sanskrit. Many example sets given,
https://groups.google.com/group/tiruvalluvar/msg/bbc601087e5ea683
நுழை- விஶ்- வேரால் விஷ்ணு = நுழைபவன் என்பது
Solar deity ஆன விண்டு/விட்டு/விண்ணுவுக்குப் பொருந்தாது.
திராவிடச் சொல் (விண்டு/விட்டு/விண்ணு/விள்- > விஷ்ணு)
மூலம் தெரியாத வடநாட்டார் சொல்லும் வேர் அது.
நா. கணேசன்
விட்டு என்னும் பெயர்ச்சொல் விண்டு/விண்ணு/விஷ்ணுவுக்கு
ஒரு பெயர். ஸ்ரீவைஷ்ணவ மரபில் பெரியாழ்வார் எப்போது வாழ்ந்தார்?
மிகப் பழங்காலத்தில் இருந்து தமிழில் விட்டு (விட்டல் = விட்டு+அல்)
என்றால் விஷ்ணுதான். பெரியாழ்வாருக்கு இப்பெயரையே
அவரது பெற்றோர் இட்டு மகிழ்ந்தனர்.
http://www.kamakoti.org/tamil/divya9.htm
”பெற்றோர் இவருக்கு விட்டுசித்தன் என்ற பெயரை வைத்துத் தக்க வயதில் கல்வி
கற்பிக்கத் தொடங்கினர். பின்னர், இவருக்குத் திருமாலுக்குத் தொண்டு
செய்வதே சிறந்தது எனத் தோன்றியது. எனவே, மூதாதையர் ஈட்டி வைத்திருந்த
பொருட்குவியலினின்றும் ஒரு பெரும்பகுதியைக் கொண்டு நீர்ப்பாங்கான
நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, வேலி வளைத்து அதில் பலவகை மலர்ச்செடிகளையும்
பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளைக் கட்டி, அப்பதியில் உள்ள
வடபெருங்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலிற்குச் சார்த்தி
வருவாராயினார்.”
திவ்வியப்பிரபந்தத்தில் பல இடங்களில் விட்டு என்றால் விஷ்ணு என்ற
பொருளுண்டு.
விட்டுவே நீயிங்கே வாராய் (திவ். பெரியாழ். 2, 3, 5).
செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பி பிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன் விரித்தஇப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லைபாவமே
கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்தங்கோர் கரியலற
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் விண்ணவர் கோனடி நண்ணுவரே
வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்
விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே
பெரியாழ்வார் மகள் கோதையும் தந்தைபெயரைச்
சொல்கிறாள்:
512 கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த
மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே
இதேபோல் பற்பல இடங்களில் விட்டு = விண்டு (விஷ்ணு) என நாலாயிரத்தில்
காணலாம். ஆழ்வார்கள் இச் செந்தமிழ் மரபைப் பேணித் தமிழுக்களித்துள்ளனர்.
விள்- என்னும் மூலத்தில் கிளைக்கும் தமிழ்ச் சொற்கள் விட்டு/விண்டு/
விண்ணு.
தொள்- > தொட்டு-/தொண்டு-/தொண்ணு-
முள்- > முட்டு-/முண்டு-/முண்ணு-
பெள்- > பெட்டு-/பெண்டு-/பெண்ணு-
....
நா. கணேசன்
தமிழ்ச் சொற்களின் -ள்-/-ண்-/-ட்- உறவுகள்:
https://groups.google.com/forum/?fromgroups=#!msg/tiruvalluvar/O4M_q-iTESw/g6ZefggBxrsJ
--
On Sep 16, 8:35 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> ஆஹா..
>
> அப்ப கண்ணுக்கு மூலம் கள்ளா ? அதான் பெண்கள் கண்களைப் பார்த்ததும் ஆண்கள்
> தொபுக்கடீர்னு மயங்கிடறாங்களா...
>
:-)
இருக்கலாம். முழுக்க தொடர்பில்லை எனக் கூறவியலாது.
கண் என்றால் பார்வையால் இரண்டு பொருள்களை இணைத்தல்/தொடுத்தல்.
சங்கிலியின் வளையங்கள் சேர்வதைக் கண்ணி என்கிறோம்.
-கள் என்கிற பன்மைவிகுதியைப் பார்க்கவும்.
-ள்-/-ண்-/-ட்- த்யரியை அப்ளை செய்தால்,
கள்- சொல்லுக்குத் தொடர்பான கட்டு-/கண்டு/கண்ணு- கிடைக்கிறது.
கட்டு- (உ-ம்: கட்டை - உறுதியானபொருள்), கண்டு (உ-ம்: கல்கண்டு,
ஆங்கிலச் சொல் candy என்பது இந்தக் கண்டு-/கண்டம் தான்.),
கண்(ணு) மனிதன்/உயிரியை பொருளுடன் தொடுக்கும் உறுப்பு.
கள் {உ-ம்: மக்கள் (=மகள்/ன் + கள்), மலர்கள், .. } - பன்மைவிகுதி
ஒன்றன் இனமானவற்றைத் தொடுத்துப் பன்மையைக் குறிக்கும்
விகுதி. கள்- கட்டு-/கண்டு/கண்ணு- ...
மலரின் சாரத்தை எல்லாம் தொகுத்திருப்பதும் கள் (மது).
இளமையின் சாரமெல்லாம் தொகுத்த விலங்குப் பருவம்: களிறு, காளை,.
நா. கணேசன்
> Iyappan Krishnan
>
> http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.comhttp://kaladi.blogspot.com
> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **
>
> 2012/9/17 N. Ganesan <naa.gane...@gmail.com>
--
On Sep 16, 8:53 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> நன்றி ஐயா,
> எல்லாமே தமிழ் இயக்கம் உங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது.
>
ஐயா,
த்ராவிடமொழிகளின் இரண்டாம் எழுத்தாகிய -ள்/-ண்-/-ட்- விதி
அம் மொழிக் குடும்பச் சொற்களின் பிறப்பைக் காட்டிநிற்கிறது.
இந்தியாவின் மொழிகளில் நாவளை ஒலிகள் (ரெட்ரொஃப்லெக்ஷன்)
தோற்றத்தை ஆராயவும் பயன்படும்.
இந்த த்ராவிடச் சொற்பிறப்பு விதி “எல்லாமே தமிழ்” என்று
பறைவதில்லை.
நா. கணேசன்
> >http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.com...
> >https://groups.google.com/forum/?fromgroups=#!msg/tiruvalluvar/O4M_q-...
>
> > > > --
>
> > --