அஞ்சல் என்ற கரதலமும் கணபணக்கங் கணமும்
அரைக்கிசைந்த புலியுடையும் அம்புலிச்செஞ் சடையும்
கஞ்சமலர்ச் சேவடியும் கனைகழலும் சிலம்பும்
கருணைபொழி திருமுகமும் கண்களொரு மூன்றும்
நஞ்சையுண்ட மணிமிடறும் முந்நூலும் மார்பும்
நல்ந்திகழ் வெண் நீற்றொளியும் மறிமானும் மழுவும்
பஞ்சடிச்சிறிடை உமையாள் ஒப்பனைபா கமுமாய்ப்
பால்வண்ணன் உளத்திருக்கப் பயமுண்டோ எமக்கே!
- வர துங்க பாண்டியன் கரிவலம் வந்த நல்லூர் பள்வண்ண நாதர்மீது பாடியது. அம்மையின் பெயர்- ஒப்பனை
திருக்கருவைப்பதிற்றுபந்தாதியின் ஒன்பதாம் பாடலில் அதிவீரராம பாண்டியன் பாடியது.
உரகா பரணத் திருமார்பும்
உமைஒப் பனையாள் இடப்புறமும்
சிரமா லிகையும் புரிசடையும்
செய்ய வாயும்,, கறைமிடறும்
வரதா பயமும் மழுமானும்
வயங்கு கரமும், மலரடியும்
கருவா புரியான் வெளிப்படுத்திக்
காட்சி கொடுத்து நின்றானே!
முதல் பத்து- மா மா காய்- அறுசீர்விருத்தங்கள்
இரண்டாம் பத்து- விளம், மா,விளம் மா விளம் விளம் மா- எழுசீர்
மூன்றாம் பத்து- மா விளம் விளம் விளம் விளம் காய்- அறுசீர்
நான்காம் பத்து- மா மா விள விளம்- கலிவிருத்தம்
ஐந்தாம் பத்து- தரவு கொச்சகக் கலிப்பா- காய் காய் காய் காய்
ஆறாம் பத்து-காய் மா காய் மா காய் மா புளிமா- எழுசீர்
ஏழாம் பத்து- விளம் மா மா- அறுசீர்
எட்டாம் பத்து- மா மா மா மா- கலிவிருத்தம்
ஒன்பதாம் பத்து- மா மா விளம் விளம் மா- கலிநிலைத்துறை
பத்தாம் பத்து- மா விளம் மா விளம் மா விளம் மா விளம் - எண்சீர்