திருவெவ்வுட் பஞ்சகம்
(தரவு கொச்சகக் கலிப்பா)
திருவிளங்கும் மலர்மடந்தை சிறந்துறையும் வலமார்பும்
கரம்விளங்கும் புரிசங்கும் கதிர்புரையும் சக்கரமும்
அருள்விளங்கும் கழலிரண்டும் அணிவிளங்க ஒருமலைபோல்
உருவிளங்கும் அரவணைமேல் ஒளிரெவ்வுள் கிடந்தானே.
தொழுதெழுநல் லடியவர்தம் துயர்தணிய வருமதியாய்ப்
பழவினைகள் முழுதொழியப் பதமருளும் ஒருகதியாய்ச்
சுழலுலகில் இருள்மறையச் சுடர்மழையைப் பொழிமுகிலாய்
அழலுமிழ்வாய் அரவணைமேல் அருளெவ்வுள் கிடந்தானே.
கலியனுரை கவிதையிலே களித்திடுநற் செவியுடையான்
ஒலிமழிசைப் பரன்மொழியின் உறுசுவையில் உருகிடுவான்
நிலமுழுதும் அளவிடவான் நெடிதுயரும் அடியுடையான்
வலிமிகுவாள் அரவணைமேல் மணியெவ்வுள் கிடந்தானே.
கமலவனம் எனத்திகழும் கவின்மிகுகண் விழியுடையான்
கமழ்துளவம் திகழ்முடியான் கருவிளைபோல் நிறமுடையான்
குமுதமெனும் இதழ்களிலே குமிண்சிரிப்பு மலர்ந்திடுவான்
தமர்பரவும் அரவணைமேல் தலையெவ்வுள் கிடந்தானே.
குறைவறியாப் பெருநிதியாய்க் குணமருளும் அருமருந்தாய்ப்
பிறவியெலாம் வருமுறவாய்ப் பிரிவறியா உயிர்த்துணையாய்
உறுபெருவான் தமிழமுதாய் உணர்வினிலே நிறைமகிழ்வாய்ப்
பொறிவிழிசேர் அரவணைமேல் புகழெவ்வுள் கிடந்தானே.
(கலியன் = திருமங்கையாழ்வார்;
அளவிட = அளக்க;
வாள் = ஒளி பொருந்திய;
மணி எவ்வுள் = அழகிய எவ்வுள் பதி;
கருவிளை = சங்குப்பூ)
On Feb 12, 2026, at 06:36, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F3240527-214F-48D8-A509-D1676C5E939D%40gmail.com.
( 6.86.8ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோடயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப் )
திருவெவ்வுட் பஞ்சகம்
(தரவு கொச்சகக் கலிப்பா)
திருவிளங்கும் மலர்மடந்தை சிறந்துறையும் வலமார்பும்
கரம்விளங்கும் புரிசங்கும் கதிர்புரையும் சக்கரமும்
அருள்விளங்கும் கழலிரண்டும் அணிவிளங்க ஒருமலைபோல்
உருவிளங்கும் அரவணைமேல் ஒளிரெவ்வுள் கிடந்தானே.
...