அறிந்து வாழப் பழகு - மீ. விசுவநாதன்

0 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 2, 2026, 12:39:42 PM (3 days ago) Mar 2
to Santhavasantham, M. Viswanathan
"அறிந்து வாழப் பழகு"
            (மீ. விசுவநாதன்)

தேவைக் கதிகம் சேர்க்காதே - பின்
தெருவில் கொண்டு கொண்டாதே
தேவை உள்ள வயிற்றை - நீ
தெரிந்து கொடுக்கத் தவறாதே

கடின உழைப்பின் வியர்வைதான் - நம்
கவலை மறையக் கூலிதரும்
நொடியில் இதைநாம் மறக்கின்றோம் - மனம்
நொந்து பிறகு தவிக்கின்றோம்

பிறரின் வளர்ச்சி இன்பமெனும் -  நல்
விதையை மனத்தில் பதித்துவிடு
பிறகு பாருன் உள்ளுக்குள் - அருள்
விருட்ச மாக வளர்ந்திருக்கும்

குருவி வாய்க்குத் தகுந்தபடி - நெல்
கொத்திக் கொண்டு பறக்கிறது
உருவில் சிறிய பறவையது - ஒரு
உயர்ந்த கருத்தை விததைக்கிறது.
         (02.02.2026 22.49 pm)

Ram Ramakrishnan

unread,
Mar 2, 2026, 3:52:57 PM (3 days ago) Mar 2
to santhav...@googlegroups.com
அருமை.

கொண்டு கொட்டாதே என்று இருக்க வேண்டுமோ?



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 2, 2026, at 12:39, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tF4NTWSngXbd6%3DHtgG-cqwtSEvQaGDUC8oEbGX2Ax8%2Bw%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Mar 2, 2026, 6:16:00 PM (3 days ago) Mar 2
to Santhavasantham
ஆமாம்.. தட்டச்சுப் பிழை. திருத்தி விட்டேன். நன்றி.
அன்பன்
மீ. விசுவநாதன்
03.03.2026 04.45 am

Reply all
Reply to author
Forward
0 new messages