விரித்த செஞ்சடை ஆட ...

33 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 3, 2024, 8:46:21 AM3/3/24
to Santhavasantham
விரித்த செஞ்சடை ஆட ...
-------------------

ராஜேஷ் (இலவசக் கொத்தனார், ஆஸ்டின்) கர்நாடக சங்கீதத்தில் பிரபலமான பாடல், “விரித்த செஞ்சடை ஆட” யார் இயற்றியது எனக் கேட்டார்.
>  கர்நாடக கச்சேரிகளில் இந்த விருத்தம் பாடிக் கேட்கிறேன். இது யார் எழுதிய பாடல் எனத் தெரியவில்லை.  
> கூகிளில் தேடினாலும் சரியாகத் தெரியவில்லை.  யாரேனும் உதவ முடியுமா?

ஆமாம். பிழையாகப் பல பெயர்கள் இணையத்தில் இப்பழைய பாடலுக்குத் தரப்பட்டுள்ளன.

https://youtu.be/JWgYjdYarKs முசிறி சுப்பிரமணியையர்
https://youtu.be/JQVdw3b_CCU
https://youtu.be/4KeKoLhFPyo உடையாளூர்

துறைமங்கலம் வீரசைவப் புலவர்களில் சிவப்பிரகாசர், கருணைப்பிரகாசர், வேலையர் மூவரும் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத்தை வளர்த்தனர். அவர்களது சகோதரியார் ஞானாம்பிகை அம்மையார் ஆவார்.
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2013/Apr/13/பேரிலக்கணம்-கற்ற-ஆசுகவி-662208.html

தமிழின் கற்பனைக் களஞ்சியம் என்று புகழப்பட்ட துறைமங்கலம் சிவப்பிரகாசரின் தம்பி பெயர் வேலையர். அவர் தம்பி கருணைப்பிரகாசர். ஐயர், அந்தணர்
என்று வீரசைவக் குருக்களைச் சொல்வது தொன்மரபு. நாம் அறிந்த வாரியார் சுவாமிகள் போல, வீரசைவர்கள். மயிலம், பேரூர், ... வீரசைவ மடங்கள். ஊரன் அடிகள் தனிநூலே இயற்றியுள்ளார். திருத்தணி விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையர், கந்தப்பையர் மக்கள் ஆவர்.

துறைமங்கலம் சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர் மூவரும் சகோதரர்கள். கருணைப்பிரகாசர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய முன்னோர். https://nganesan.blogspot.com/2020/06/thamizthaay-50-years-state-anthem.html

அண்ணனும் தம்பியும் மாய்ந்தபோது, ”கணுவுக்கு மேலேயும், கீழேயும் இருந்த இனிப்புப் பாகம் கரும்பில் போயாச்சு, கணுவாக இருந்த நான் மாத்திரம் இருக்கிறேன்” என்று கவலைப்பட்டு வேலையர் பாடிய வெண்பா உருக்கமானது. முன்பு கிவாஜ இவ்வெண்பாவை விளக்கி எழுதிய கட்டுரை கொடுத்தேன். தேடினால் கிட்டும்.

    அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை
   சொல்லும் இருவரிடைத் தோன்றியயான் - முல்லை
   அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய்
    கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்

இத் துறைமங்கலம் வீரசைவப் பரம்பரையில் தோன்றிய கருணையையர் செய்த சிதம்பரநாதர் பதிகத்தில் முதல் பாடல்: “விரித்த செஞ்சடை ஆட” ... 18-ம் நூற்றாண்டுப் பாடல்கள் எனலாம்.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0023716_சிதம்பரநாதர்பதிகம்.pdf
இப் பதிகப்பாடல்களை நன்முறையில் சீர்பிரித்து, மதுரை முன்னியத்தில் (https://www.projectmadurai.org ) இணைய அம்பலம் ஏற்றுவோம்.

துறைமங்கலம் கருணை அய்யர் பற்றிய செய்தி, ஈழத்துப் புலவர் அர்ணால்ட் சதாசிவம் (1820 - 1895) இயற்றிய “பாவலர் சரித்திர தீபகம்” நூலில் (பக்கம் 89) காணலாம்.
https://archive.org/details/pavalarcharithth00jrar/page/88/mode/2up
கருணையையர் செய்த சிதம்பரநாதர் பஞ்சரத்தினத்துறை இருக்கிறது என்கிறார்கள். கிடைத்தால் வலையுலாச் செய்வோம். கிடைக்கும்.

நா. கணேசன்

Swaminathan Sankaran

unread,
Mar 3, 2024, 10:42:07 AM3/3/24
to santhav...@googlegroups.com
அருமையான, அரிதான தகவல்.
நன்றி.

சங்கரன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcx0frtvHe_oedO7JfR5Umh7-i%2BrPJzf9KS%2B7Vuo6RX6w%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

N. Ganesan

unread,
Mar 4, 2024, 6:27:12 AM3/4/24
to santhav...@googlegroups.com
On Sun, Mar 3, 2024 at 9:42 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
அருமையான, அரிதான தகவல். நன்றி.
சங்கரன் 

துறைமங்கலம் கருணைப்பிரகாசர் திருவெங்கை மாநகரத்தில், பதினெட்டாம் வயதில், சிவலிங்கவைக்கிய மாயினார். பின்னர் சிவப்பிரகாசர் சிவாநுபவச்செல்வராய்ச் சிலகாலம் வாழ்ந்திருந்து, முப்பத்திரண்டாம் வயதில் கன்னி மதியில், பௌர்ணிமைத் திதியில், இஷ்டலிங்க பரசிவத்திற் கலந்தருளினார். கடைசியாய், நடுவலவர் வேலைய சுவாமிகள் பெருமத்தூர் மடத்தில், தம் எழுபத்திரண்டாம் வயதில் சிவலிங்க வைக்கியமாயினார். மூவர் காலம் 17-ம் நூற்றாண்டு. இவர்கள் வழிவந்த கருணையையர் பாடியது “விரித்த செஞ்சடையாட...” (சிதம்பரநாதர் பதிகம்).

- துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் வாழ்க்கை வரலாறும் அவரது நூல்களும், 1944
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0838_01.html

கிவாஜ, இலக்கியக் கரும்பு, பக். 23-24, முல்லை மணம், 1959, அமுத நிலையம்.
---------------------------------------------------
கரும்பிலே நமக்கு வேண்டாதது கணு. அதைப் பற்றி ஒரு புலவர் பாடுகிறார். அவர் வேலையர் என்னும் பெயருடையவர். சிவப்பிரகாச சுவாமிகள் என்ற பெருங் கவிஞருடைய தம்பி அவர். அவருக்குக் கருணைப்பிரகாசர் என்ற தம்பி ஒருவர் இருந்தார். மூவருமே புலவர்கள்; நூல்களை இயற்றியிருக்கிறார்கள்.

கடைசித் தம்பியாகிய கருணைப்பிரகாசர் முதலில் இறந்துபோனார். மூத்தவராகிய சிவப்பிரகாசர் பல ஆண்டுகளுக்குப் பின் மறைந்தார். கடைசியில் பூத உடம்பை நீத்தவர் வேலையர். தம் முன்னவரும் பின்னவரும் இறந்த பிறகு தனியாக இருந்த அவருக்குத் துயரம் பெருகியது. மரணம் முறைப்படி வருவதாக இருந்தால் ஒன்று மேலிருந்து கீழ் வரவேண்டும்; அப்போது என் தமையனர் இறந்த பின் நான் இறக்க, பின் என் தம்பி இறக்க வேண்டும். இல்லையானால் கீழிருந்து மேலே போகவேண்டும். முதலில் என் தம்பி இறந்தான். பின்பு நான் இறந்திருக்க வேண்டும். பிறகுதான் என் தமையனார் இறக்கவேண்டும். இந்த இரண்டு முறையிலும் சேராமல் தம்பி முன் இறக்கத் தமையனார் பின்பு இறக்க நான் மொட்டை மரமாக நிற்கிறேன் என்று அவர் அளவிலாத வருத்தம் அடைந்தார்.

'என் தம்பியும் பெரும்புலவன். அண்ணாவோ கவிதா சார்வபெளமர். அவர்கள் இருவரும் போன பிறகு நான் இருந்து என்ன பயன்? கருப்பங்கழியை வெட்டித் தின்பவர்கள் மேற்கழியையும் கீழ்க் கழியையும் வெட்டிக் கொண்டு கணுவைப் போட்டுவிடுவது போலத் தெய்வம், மதிப்புள்ள என் சகோதரர் இருவரையும் தன் திருவடியிலே சேர்த்துக்கொண்டு, என்னை மட்டும் ஒதுக்கிவிட்டது. நான் கரும்பில் உள்ள கணுவைப்போல இருக்கிறேன்!” என்று புலம்பினார். அந்த வருத்தம் பாடலாக மாறி வெளியாயிற்று.

யாரோ ஒரு பெண் அவரைப் பார்த்து, 'உங்கள் அண்ணனும் தம்பியும் எங்கே?' என்று கேட்க, விடை சொல்வது போல அமைந்திருக்கிறது பாட்டு.


    அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை
    சொல்லும் இருவரிடைத் தோன்றியயான் - முல்லை
    அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய்,
    கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்! - -

(அல்லிமலர் - அக இதழ்களையுடைய தாமரை மலரில் இருக்கிற; பண்ணவன் - பிரமன், முல்லை அரும்பைப் போல விளங்கும் அழகையுடைய பல் வரிசைகளையுடைய பெண்ணே.)

--------------

N. Ganesan

unread,
Mar 5, 2024, 7:38:13 AM3/5/24
to santhav...@googlegroups.com
I guess the collector of the Chidambaram stala verses did not have access to the original publication of CitamparanAtar Patikam.

In this book, viriita ceJcaTai and a viruttam following is wrongly attributed to
Maatava Civajnaana YokikaL:

Wrong attribution of "viritta ceJcaTai" is very common in Carnatic music sites (youtube etc.,)

Just FYI.
Reply all
Reply to author
Forward
0 new messages