நான் எழுதியுள்ள பாரதி பர்றிய பாடல்களையெல்லாம் தொகுத்துப்
'பாட்டுக்கொரு புலவன்' என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட எண்ணம்.
அக்கவிதைகளை ஒவ்வொன்றாக இங்கே இடுகிறேன். அன்பர்கள் படித்துக் கருத்துச்
சொல்ல வேண்டுகிறேன். உங்கள் திறனாய்வு நூலைச் செப்பமாகக் கொணர உதவும்
முதல் பாடல்
வானத்து நீலம் வழித்தெடுத்து - அதை
வாரிதித் த்ண்புனல் தோய்த்தெடுத்துத்
தேனைக் கடைந்து திதிப்பெடுத்து -வீசும்
தென்றல் இதழின் சுவைவடித்து
யானையின் பார்வை அளவெடுத்து - உளம்
ஆர்க்கும் உணர்வுத் தினவெடுத்துக்
கானம் குழைத்துக் கனல் தொடுத்துத் - தமிழ்
கவிதை தொடுத்தனன் பாரதியே!
இலந்தை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஆர்க்கும் என்றால் உள்ளத்திலே ஆர்ப்பரிக்கும் உணர்வுகளின் தினவை எடுத்து என்று பொருள். சுதந்திரப்போராட்டத்திலே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உள்ளே கொந்தளித்துக்கொண்டிருந்த உணர்வு.
பாரதி
நீரில் மிதந்த நெருப்பு- நம்
நெஞ்சில் நிதமும் இருப்பு
சாரத் தமிழின் சிரிப்பு-கவி
சாட்டை அடியின் உரிப்பு
புதிய யுகத்தின் பிறப்பு -வெற்றுப்
பூச்சை எரித்த சிறப்பு
விதியின் கதவுத் திறப்பு – அந்த
வேந்தர்க் கில்லை இறப்பு
On Feb 4, 8:23 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> பாரதியுடன் பல்லாண்டு பழகி மகிழ்ந்துள்ள நீங்கள் அவனைப் பற்றிய உங்கள்
> பாடல்களை நூல் வடிவில் கொண்டுவர நினைத்துள்ளது மகிழ்ச்சிதரும் செய்தி.
>
> வெண்டளை பிறழாச் சிந்துப்பாவாக அமைந்துள்ள தொடக்கப் பாடல் அருமை. ‘தென்றல்
> இதழின் சுவைவடித்து’ என்பதில் இதழ் எதைக் குறிக்கிறது? (எனக்கு, ‘தென்றல்
> மின்னிதழ் நினைவுக்கு வந்தது!:-))
>
> அனந்த்
>
> குறிப்பு: பாரதியின் வரலாற்றை புதிய எழுத்து நடையில், புதிய கருத்துக்களோடு
> ‘மகாகவி பாரதி’ என்ற புத்தக வடிவில் (கிழக்குப் பதிப்பகம்) இலந்தையார்
> அண்மையில் வெளியிட்டுள்ளார், இங்குள்ளோர் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய
> நூல்.
>
தகவலுக்கு நன்றி, திரு. அனந்த். புத்தகம் காந்தளகம் வாயிலாகப்
பெற்றுப் படிப்பேன்.
நா. கணேசன்
> 2012/2/4 Subbaier Ramasami <eland...@gmail.com>
On Feb 4, 7:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> ஓர் ஐயம்.
>
> "உளம் ஆர்க்கும் உணர்வுத் தினவெடுத்து"
>
> இங்கே 'ஆர்க்கும்' என்பதன் பொருள் என்ன?
>
உளம் நிறையும் என்ற பொருள்கொள்ளலாம்.
ஆர்த்தல் - நிறைத்தல்.
மயில்கள் நிறைந்த/ஆர்ந்த ஊர் - மயிலார்ப்பு/மயிலாப்பு.
இன்றைய மயிலாப்பூரின் பழம்பேர்.
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=224
” மயிலாப்பூர், மயிலாப்பு என்று வழங்கப்பெற்றிருப்பது, அப்பர் சுவாமிகளது
திருஒற்றியூர்த் திருத்தாண்டகம் ஆறாம் திருப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
அப்பகுதி,
``வடிவுடைய மங்கையுந் தாமுமெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப்புள்ளே``
என்பதாகும். இதையே
``மங்குல் மதிதவழும் மாடவீதி
மயிலாப்பி லுள்ளார் மருகலுள்ளார்``
எனக் கோயில்புக்க திருத்தாண்டகத்திலும் காணலாம்.”
அன்புடன்
நா. கணேசன்
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2012/2/4 Subbaier Ramasami <eland...@gmail.com>
சுதந்திரம் தன்னைப் போற்றித்
தொழுதிட மறவேன் என்றே
விதந்தரு பாட லாலே
விளம்பிய கவிதை வேந்தன்
கதிகுலைந் திருக்கும் இந்நாள்
கயமையைத் தூள்தூ ளாக்க
இதந்தரும் சொல்லெடுத்தே
இவ்விடம் பிறக்க வேண்டும்
யாருளர் அவன்போல் நம்மை
அறிவிலே தெளிய வைப்பார்?
யாருளர் அவன்போல் சொல்லால்
அக்கினி மூட்டி வைப்பார்
யாருளர் அவன்போல் நெஞ்சின்
அடிமையைப் போக்க வல்லார்
பேருள மன்னன் மீண்டும்
பிறந்தெமைக் காக்க வேண்டும்.
பெற்றதோர் சுதந்தி ரத்தின்
பெருமையை அறிந்தி டாமல்
குற்றமே புரிவார் தம்மைக்
கும்பிட்டு வாழுகின்றோம்
கற்றவன் பாபம் செய்யும்
கலையிலே தேர்ந்து விட்டான்.
பற்றிய நோயைத் தீர்க்கப்
பாரதி பிறக்க வேண்டும்.
கடலிலே புயல் எழுந்தே
கரையினைக் கடத்தல் போல
உடனொரு வார்த்தைச் சூறை
உற்பத்தி யாக வேண்டும்
இடரினை விளைப்பார் இங்கே
எத்துணைப் பெரிய ரேனும்
நொடித்திட வேண்டும் தாயின்
நோவினைத் தீர்க்க வேண்டும்
அப்படி ஒருவன் இங்கே
அவசியம் பிறக்க வேண்டும்
செப்பிடும் சொற்கள் வெம்மைத்
தீயெனப் பொசுக்க வேண்டும்
எப்புறம் இருந்தும் தீமை
எதிர்ப்படின் நசுக்க வேண்டும்
இப்படிச் செய்ய அந்த
ஏந்தலே பிறக்க வேண்டும்.
இலந்தை
நோவினைத் தீர்க்க வேண்டும்)-
கூசும் குனிவும் குழந்தை மனமும்
கொண்டோர் தமிழுக்கு
கேடும் செய்தே குறுகும் மனதின்
குற்றம் காண்கின்றேன்
பாசத் தமிழின் பாரதி உணர்வின்
பொறியைக் காண்கின்றேன்
பாவைக்காணேன் பனியும் மலரும்
சுடவே திடுக்குற்றேன்
கிரிகாசன்
அன்புடன்,
தங்கமணி.
மகாத்மாவும் மகாகவியும்
ஏட்டிலே நெருப்பு வைத்த
எரிமலை, கவிகறுப்புக்
கோட்டினைக் கண்டு வெள்ளை
கொதித்தது, மகாத்மா காந்தி
வேட்டியைக் கண்டு நெஞ்சம்
வெடித்தது, வெள்ளையர்க்குச்
சாட்டையாய் மாறி விட்ட
சரித்திரம் கோட்டு, வேட்டி!
அன்றொருநாள், காந்தி அமர்ந்திருந்த உள்நோக்கி,
புயலொன்று வேகமுடன் -அங்கே
புகுந்து வந்ததைப்போல்
தயக்கமே இல்லாமல்-பாரதி
தானாகவே நுழைந்தார்
பஞ்சுப் படுக்கையிலே- காந்திஜி
பாங்குடன் வீற்றிருக்கச்
செஞ்சொல் கவிராயர் -அருகே
சிங்கமென அமர்ந்தார்
சூறா வளியதுவோ- இல்லை
சூட்டுப் பெருநெருப்போ
நூறாயிரமாண்டில்- தோன்றும்
நோன்புத் திருவுருவோ?
கட்டுக் கடங்காத- பெரும்
காற்றோ கடலலையோ
` குட்டைக் கருத்தில்லா- நிமிர்
கோபுரமோ குன்றோ?
காந்திஜி தானறிந்தார்- பாரதி
காவியம் என்றுணர்ந்தார்
பாந்தக் கரம்பற்றி-ஒளிர்
பார்வையி லேபிடித்தார்
"வேண்டுவ தென்னவென-காந்திஜி
வினவச் சொல்லுகிறார்
ஈண்டு கடற்கரையில் -இன்றுநான்
எடுக்கும் கூட்டத்தில்
தலைமை ஏற்பதற்கு- ஐயா
சம்மதம் கேட்டுவந்தேன்
அலைகள் கூட உங்கள்- பேச்சை
ஆவலுடன் கேட்கும்
'உங்களின் கூட்டத்தை- ஒருநாள்
ஒத்தியே போடுங்கள்
அங்கு வருகின்றேன்' - என்றே
அண்ணலும் தான் மொழிந்தார்
முடிவெடுத்த ஒன்றை - இன்றே
முடிப்பது தானழகு
கடமை ஆகுமென்றே -கவிஞர்
காந்திக்குச் சொல்லுகிறார்
நீங்கள் எடுத்திருக்கும் - இயக்கம்
நிச்சயம் வெற்றிபெறும்
பாங்குடன் ஆசிதந்தேன் - என்றே
பாரதி தான்நடந்தார்
இங்கே ஒருநொடியில்- என்னை
ஈர்த்த பெருவேகச்
சிங்கம் இவரெனவே-காந்திஜி
செப்புகிறார் மேலும்
ஜீவ களைததும்பும் - இந்தத்
தேசக் கவிஞரையே
ஆவலுடன் காப்பீர்- என்றே
அண்ணல் பரிந்துரைத்தார்
அண்ணல் கவியறிந்தார் - கவியும்
அண்ணல் தனையறிந்தார்
கண்ணில் ஒருகண்ணை - அந்தக்
காலம் அறிந்ததுவால்!
இலந்தை
2-10-2003
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பாரதியில் பஞ்சபூதம்
பூதங்கள் ஐந்தும் பொருந்தவே யாருடைய
நாதங்கொள் பாட்டில் நயம்கொள்ளும்?- சேதியிதை
நேருறவே காணும் நினைப்புண்டேல் ஐயாநீ
பாரதியின் பாடலினைப் பார்!
வானம்
எட்டாத் தொலைவில் இருக்கின்ற வானத்தைக்
கட்டிப் பிடித்தே கணக்காகத் - தொட்டுவிடப்
பாரென்றே காட்டிப் பதித்துவிட்ட காட்சிக்குப்
பாரதியின் பாடலினைப் பார்!
காற்று
தென்னையின் கீற்றிடைச் சிக்குகிற காற்றேறி
என்னவோ மாயம் இழைந்துவர - இன்னுமின்னும்
வீரியக் கற்பனையாய் வீசுகின்ற காற்றுக்குப்
பாரதியின் பாடலினைப் பார்!
தீ!
வடவை குறுகி வடிய, கனலும்
அடவிக்குள் சென்றே அடங்க - ஒடுங்கியதைக்
கூரிய அக்கினிக் குஞ்சாய் உலவவிட்ட
பாரதியின் பாடலினைப் பார்!
நீர்
வெட்டி இடித்திங்கே மின்னலொடு மேநின்று
கொட்டும் மழைக்குக் கொடிபிடித்து - முட்டிமுட்டி
ஈரத் தமிழாய் இறங்குகிற நீர்காணப்
பாரதியின் பாடலினைப் பார்!
மண்.
பற்றுவிட்ட ஞானியரும் பற்றுவிடா மண்ணதனில்
பற்றுவைத்துப் போற்றும் பரவசத்தை - எற்றைக்கும்
யாரிவன்போல் சொன்னார்? அடிமை மனமொழியப்
பாரதியின் பாடலினைப் பார்!
அவர்தான் பரதியார்
தின்னவரும் புலியின் - கண்களில்
தெய்வத்தைக் கண்டவர் யார்
மின்னல் நரம்பெடுத்துக் - கவிதையில்
வீணை இசைத்தவர் யார்?
பித்துப் பிடித்தவொரு - பையனை
பித்தம் தெளியவைத்து
சித்தனாய் வாழ்ந்தவர் யார்- புதுப்புது
சிந்தனை சூழ்ந்தவர் யார்?
பார்த்தவர் கைகுவிக்கும் - பெருமிதம்
பார்வையில் கொண்டவர்யார்?
வார்த்தைக் களிபிசைந்து - சிலைகளை
வார்த்துக் கொடுத்தவர்யார்?
கண்ணைத் திறந்தவர்யார்? - புதுமைக்
காட்சி விரித்தவர்யார்?
மண்ணிலே நின்றபடி- அந்த
வானை அழைத்தவர் யார்?
மந்திரத் தோரணங்கள் - தமிழர்
வாசலில் தொங்கவிட்டு
வந்தனை செய்யும் வகை - மொழிநடை
மாற்றம் கொடுத்தவர் யார்?
நெல்லைத் தமிழெடுத்து- தமிழில்
நேரும் அமிழ்தெடுத்து
சல்லடை யாற்சலித்து - எளிமைச்
சாதனை செய்தவர் யார்?
தேசம் துதித்தவர் யார்?- சுதந்திர
தீரம் விதித்தவர் யார்?
தாசன் எனவணங்கி - சக்தியின்
தாளைப் பதித்தவர் யார்?
எண்ணக் கவித்தேரைச் - செலுத்தி
ஏகிய சாரதி யார்?
வண்ணத் தமிழ்ச்சித்தன் - அவர்தான்
மாகவி பாரதியார்!
பாரதி இன்றிருந்தால்..
இன்றைக்குப் பாரதி இங்கிருந்தால்... வய(து)
ஏறா இளமையைக் கொண்டிருந்தால்..
மன்னன் கனவுகள் பற்பலவும்- மாதர்
வாழ்க்கை முறைகளில் சிற்சிலவும்
உன்னத மாய்நன வானதைக் கண்டுளம்
உற்சாக மாகி மகிழ்ந்திருப்பான். (இன்றைக்கு..)
இன்றைக் கிளைஞர் கணினிநுட் பத்திலே
ஏற்றங்கள் பெற்றுத் திகழ்வதையும்
மின்னும் உலக அரங்கினில் இந்திய
வெற்றிகள் கொஞ்சம் நிகழ்வதையும்
நாடுகள் பற்பல சென்றுநம் செல்வங்கள்
நல்ல பெயர்பெறும் காட்சியையும்
தேடும் அறிவியல் மாட்சியையும் கண்டு
சிந்தை மிகவும் மகிழ்ந்திருப்பான். (இன்றைக்கு)
ஆயுதம் செய்வதும் காகிதம் செய்வதும்
ஆலைகளும் கல்விச் சாலைகளும்
ஆயிர மாயிரம் தோன்றி நிகழ்வதும்
ஆனந்தம் நல்க மகிழ்ந்திருப்பான் (இன்றைக்கு..)
இந்த மகிழ்ச்சிகள் ஓர்கணம்தான் பின்
எரிமலை ஒன்று வெடித்திருக்கும்
இந்திய நாட்டின் அரசியல் வீழ்ச்சியை
எண்ணியே மீசை துடித்திருக்கும்
சிந்து நதியில் படகினில் சென்று
திரிய இயன்றிடா தென்பதையும்
சொந்த ஜனங்களே இந்திய நாட்டதன்
சொத்தைச் சுரண்டியே தின்பதையும்
வீதி தோறும் பள்ளி நாட்டியே கல்வியை
விற்றுப் பிழைக்கிற தன்மையையும்
சாதி ஒழிப்பதாய்ச் சொல்லியே தேர்தலில்
சாதியை நாட்டிடும் புன்மையையும்
செந்தமிழ்த் தூய்மையைத் தள்ளிவிட்டே எங்கும்
தீய தமிங்கிலம் ஆள்வதையும்
எந்த நிலைக்கும் இறங்கும் திரையிசை
ஏறித் தமிழ்மொழி வீழ்வதையும்
பெண்குழந் தைகளை மண்ணில் பிறந்தபின்
பீழையாய்க் கொன்றிடும் தீங்கினையும்
எண்ணரும் நாட்டுச் சுதந்திர மேன்மையை
எண்ணிடா மக்களின் பாங்கினையும்
கண்டு கொதித்துப் புயலென மாறியே
கங்கு சுமக்கும் அவன்கவிதை
மிண்டு புடைத்திடும் தீமையைச் சாடியே
வேள்வி நடத்தும் அவன்கவிதை (இன்றைக்கு..)
எச்சில் பொறுக்கிகள் ஆட்சியில் ஏறினால்
ஏழெட்டுக்கோடிக் கதிபதிகள்
எச்செயல் செய்தேனும் கையூட்டுப் பெற்றிட
இங்கிவர் செய்வார் புதுவிதிகள்
நாட்டு நலனிலே அக்கறை உள்ளவர்
நாலுபேராவது தேறவில்லை
வேட்டுச்சத் தம்நாட்டில் எவ்விடத்தும் கேட்கும்
வேதனை கொஞ்சமும் ஆறவில்லை
கல்விக்குச் சற்றும் மதிப்பில்லை, சாதிகள்
காட்டிக்கண்டபடி துள்ளுகிறார்
வெல்ல வழியின்றி உள்ளநம் கற்றோரை
வேற்றுநாட் டாரள்ளிக் கொள்ளுகிறார்
இந்த நிலைகளைக் கண்டுநம் பாரதி
ஈதா சுதந்திரம் என்றுவெம்பி
செந்தழல் ஏந்திய வார்த்தைகளால் கொடும்
தீமைகள் சாடிக் கவிபொழிவான் (இன்றைக்கு..)
என்று மனத்தில் எண்ணம் பிறந்ததோ
அன்றே ஒலியும் ஆதிக்கம் கொண்டது.
ஒலிகள் வரிகளாய் உருப்பெற மண்ணில்
கலைகள் வளர்ந்தன, கவிதை பிறந்தது
சொல்லில் புதிய சுவைகள் நிறைந்தன
கல்லில் தெய்வக் கவிதை ஒளிர்ந்தது
அந்த முறையில் அறிவு வளர்ந்தது
வாழ்க்கை முறைகள் வகுக்கப் பெற்றன
மன்னன் ஆண்டான் , வழிகள் பற்பல
இன்ன படியென் றெழுதி இலக்கணம்
செய்தனர், செல்லும் செயல் முறை மாற்றினர்
எய்தும் நெறிகள் இயம்பி வைத்தனர்
வள்ளுவர் தோன்றினார், வாழ்நெறி ஊன்றினார்
தெள்ளு தமிழ்க்கவி செப்பிடும் ஔவை
வீரனைப் பாடினாள், வேந்தனைப் பாடினாள்
ஆரமு தாகிய அண்ணலைப் பாடினாள்
காலம் உருண்டது, காவியம் பற்பல
சீலமாய் சிற்சிலர் செய்து முடித்தனர்
பக்தி வளர்ந்தது, பாடல் நிறைந்தது
சக்தி மிகுந்தது, தமிழும் செறிந்தது
சேக்கிழார் வந்தார், சிவனடியார்களின்
ஆக்கப் பணிகள் அருந்தமிழ் சேர்த்தார்
கவிக்குல மன்னவன் கம்பனும் நல்ல
தவப்பயனாகத் தமிழிதிகாசக்
கவிதைப் பிழிவின் கனிவாய் இராமன்
உவப்புறு காதை உயர்தமிழ் சேர்த்தான்.
இடைக்காலம் தன்னில் எத்தனை பாடல்கள்
உடைப்புறு போட்டியில் ஊர்வலம் வந்தன.
அன்னியன் வந்தான், அவன்மொழி வந்தது.
இன்னல் பலவும் எதிர்கொண்டு வந்தன
பாங்குள நம்மொழிப் பக்குவம் நீக்கியே
ஆங்கிலம் கற்றனர் ஆர்த்தனர் பலபேர்
மனத்தில் நினைத்ததை வார்த்தையில் சொல்ல
தனதுள் பயந்து சரிந்தனர் பலபேர்
பழமையின் உள்ளே பதுங்கிப் பதுங்கி
செழுமை மறந்து திரிந்தனர் பலபேர்
எளிமை துறந்தே எதையும் விளைக்கும்
வளமை யதனில் மயங்கினர் பலபேர்
சிருங்காரம் ஒன்றையே தேக்கிடும் பாடல்
தரும்போதை தன்னில் தழைத்தனர் பலபேர்
துணிவைத் துறந்து துரையைப் பணிந்து
தனிந்தவர் பலபேர், தகவின்றி மக்களும்
இந்த நிலையில் இருந்திடும் நாளில்
நந்தமிழ் நாட்டின் நற்றவப் பேறாய்
இளசை நகரில் எழுந்தான் ஒருவன்
களமாய்க் கவிதையாம் கத்தியைத் தீட்டி
எழுந்திடும் அச்சம் விழுந்திடச் செய்த
செழுந்தமிழ் மன்னவன் சீர்கொளும் பாரதி.
வாழையடி வாழையாய் வந்த பெருமித
நீழலில் சக்தி நெருப்பாய் உயிர்த்தவன்
தேசத்தைப் பாடினான், தேசத்து மக்களின்
நீசத்தைப் பாடினான், நெஞ்சம் கொதித்தான்
அடிமைத் தளையில் அமைதியாய்த் தூங்கும்
மிடிமைத் தனத்தை வெறுத்துப் பாடினான்
பள்ளம் எடுத்த பசியைத் தணித்திட
வெள்ளையன் காலில் விழுந்து கிடப்பதா?
சிச்சீ என அவன் சீறினான், தன்மொழி
வீச்சினில் மக்கள் விழித்திட வைத்தான்
இதந்தரும் மனைவிட் டின்னல் படினும்
சுதந்திரம் தன்னைத் துறந்திட மாட்டோம்
விடுதலை வேள்வியில் வேகத் துணிந்தோம்
தடைகள் வரினும் தயங்கோம் என்றே
சுதந்திரம் என்னும் சுகம்பெறும் முன்பே
சுதந்திரம் பெற்ற துணிவொடு பாடினான்.
இன்றுநாம் பேசும் இருபது திட்டம்
அன்றவன் முத்திரை ஆக்கிய சித்திரம்
ஏதும் வலிமை இலராய் இருந்தநம்
மாதர்தம் வாழ்வு மலர்ந்திடப் பாடினான்
வீட்டின் அகத்தே வியனெழில் பெண்டிரைப்
பூட்டி அடைத்தவர் புன்மையச் சாடினான்
நாயினும் கீழாய் நலிந்து கிடந்த
தாயர் குலமும் தழைத்திடப் பாடினான்
சீருடன் பட்டங்கள் சேர்ந்திடக் கொள்ளுவார்
பாரினை நிச்சயம் பாவையர் ஆளுவார்
என்றவன் அன்றே எழுத்தில் பொறித்தான்
அன்றவன் சொன்னதை யாமின்று காண்கிறோம்
நாரியர் என்றுமே நன்றி உடையவர்
பாரதி யைமனப் பாங்குடன் போற்றுவர்
பின்னால் வருகிற பெற்றிகள் யாவையும்
முன்னால் கவியில் மொழிந்த அவன் தான்
தன்னை எரித்துத் தமிழின் மரைச்சொல்லில்
மின்னைக் கரைத்து விதியாக்கி வைத்தகவி,
கல்லை எடுத்து, கவிதை உளிகொண்டு
மெல்லச் செதுக்கி வியப்புச் சிலையாக்கிக்
கண்ணைத் திரந்து கைதொழவே வைத்த மகான்
மண்கூட்டும் மல்லிகை வாசம் அறியாமல்
சாக்கடை ஓரம் சரிந்து கிடந்தவரைப்
பாகடைந்த சொல்லாலே பாசத் துயிலெழுப்பித்
தீக்கடைந்து, பாதை தெளிவாக்கி, தேசத்துப்
பூக்கடை வாசல் புனிதத்தில் கூட்டியவன்
கள்ளும் கனலும், ககன வெளிவிரிவும்
வெள்ளப் பெரும்புனலும் வீசும் திறல் வளியும்
சொல்லில் சுவாசித்துச் சூறைகொளத் தேக்கியவன்
செல்லும் கணத்தைச் சிறைசெய்தே ஆன்மாவின்
நாடி பிடித்துச் சொல் நாடகங்கள் ஆக்கியவன்
பாடல் சிறகில் பவனி செலுத்தியவன்
கண்ணன் உறவுகளில், காதல் குயில் பாட்டில்
பண்ணில் துடிக்கின்ற பாஞ்சாலி நாடகத்தில்
நாட்டு விடுதலைக்கு நல்கிய பாநெருப்பில்
வீட்டுக்குப் பாடிய வேதாந்த வேள்வியதில்
கட்டுரையில், நற்கதையில், காட்சி விரிவுகளில்
ஒட்டுகிற நெஞ்சின் உறுதிகளைத் தேக்கியவன்.
அவன் உருவில்,
கங்காகத் தோன்றி, கவியாக ஊன்றிக்
கடலாழம் காணும் விழிகள்
தொங்காத மீசை, சுடரான நெற்றி
தொடர்ந்தாடும் பாடல் இதழ்கள்
சிங்காரப் பாகை, தெளிவான மூக்கு
திகழ்ந்தோங்கு ஜோதி வதனம்
மங்காத கோட்டு, வளமான கச்சை
மகிழ்ந்தோடும் வேழ நடையே!
ஆனாத ஞானம், அகலாத கேள்வி
அறிவோடு வந்த பெருமை
தேனாகப் பாயும் திகட்டாமல் தோயும்
திகழ் பாடல் சேரும் அருமை
கோனாகச் செங்கோல் குலையாத ஆட்சி
குடியாகும் பாடல் வகைகள்
மீனாடும் பாண்டி வியன் நாடு மேவும்
விரிவான சக்தி இறைமை!
அழகாகும் யாவும் அவன்பாடல் மேவும்
அருளான ஞான விநோதம்
பழகாத நெஞ்சும் பணிவாகும் தஞ்சம்
பரிசாகும் கீத விலாசம்
எழுவேத போதம், இசைராக நாதம்
இழைதேடும் பக்தி விவேகம்
விழுதாக ஊன்றும் விவரங்கள் தோன்றும்
வியப்பாகும் பாடல் விநோதம்!
(31-1-1977ல் சென்னை ஸ்டெல்லாமேரிஸ் மகலிர் கல்லூரி முத்தமிழ் விழாவில் பாடியது)
நான் கண்ட பாரதி
பொங்கு மாகடல் அலையிலே ஒளி போந்திழைந்திடும் கலையிலே
பூத்த வெந்நுரைப் பூவிலே இசை போடும் நீர்க்கரைப் பாவிலே
தெங்கின் கோடுயர் காயிலே மதுத் தேக்கிடும் வெளி வாயிலே
சேரும் வண்டினக் களியிலே உயர் தென்றல் மேவிடும் வெளியிலே
திங்கள் ஆடிடும் விண்ணிலே மயல் சேரக் கூடிடும் மண்ணிலே
செடியிலே மலர்க் கொடியிலே நலம் சேரும் பச்சையின் மடியிலே
அங்குமிங்குமாய்த் தேடியே கவி ஆர்த்திடும் உளம் கூடியே
ஆடினான் உயர் பாரதி கவி பாடினான் உலகேத்தவே! 1
காலைச் சூரியன் காட்சியில் அது காட்டிடும் ஒளி மாட்சியில்
காற்று வீசிடும் திசையினில் சிறு காகிதம் செலும் விசையினில்
மேலை வேலைவாய்த் திண்ணையில் கவின் மேவும் பொன்நிறப் பண்ணையில்
வீசு தண்சுடர்ப் பொய்கையில் முகில் வண்ணம் கோத்திடும் செய்கையில்
சாலை நீண்டதோர் நெளிவினில் வளம் சார்ந்திடும் வயல் வெளியினில்
தங்கம் சிந்திடும் மஞ்சளில் தரை தாழ்த்திடும் விழிக் கெஞ்சலில்
ஆலம் உண்டவன் கண்டம் போலவே ஆன்ற விண் கரு மையினில்
ஆடினான் உயர் பாரதி கவி பாடினான் உலகேத்தவே!
நெஞ்சிலே உரம் இன்றியே உயர் நேர்மைப் பண்புகள் குன்றியே
நேசம் நெஞிலே தாழவே இவண் நேற்றுவந்தவன் வாழவே
அஞ்சி யஞ்சியே வாடுவார் பகை ஆதரிக்கவே கூடுவார்
அன்னியன் புகழ் மெச்சுவார் சிசீ அடிமை வாழ்வினை நச்சுவார்
கஞ்சி ஊற்றியே தந்திடும் எனில் கால்பிடிக்கவும் முந்துவார்
காந்தி சொல்லினை எள்ளுவார் வெறும் பட்டம் போட்டுளம் துள்ளுவார்
வஞ்சனை பல செய்குவார் பகை மாந்துவார் செயல் லண்டுளம்
வாடினான் கவி பாரதி கவி பாடினான் உலகேத்தவே!
2012/2/16 Subbaier Ramasami <elan...@gmail.com>நான் கண்ட பாரதி
பொங்கு மாகடல் அலையிலே ஒளி போந்திழைந்திடும் கலையிலே
பூத்த வெந்நுரைப் பூவிலே இசை போடும் நீர்க்கரைப் பாவிலே
தெங்கின் கோடுயர் காயிலே மதுத் தேக்கிடும் வெளி வாயிலே
சேரும் வண்டினக் களியிலே உயர் தென்றல் மேவிடும் வெளியிலே
திங்கள் ஆடிடும் விண்ணிலே மயல் சேரக் கூடிடும் மண்ணிலே
செடியிலே மலர்க் கொடியிலே நலம் சேரும் பச்சையின் மடியிலே
அங்குமிங்குமாய்த் தேடியே கவி ஆர்த்திடும் உளம் கூடியே
ஆடினான் உயர் பாரதி கவி பாடினான் உலகேத்தவே! 1
அரையடி இறுதியில் இயைபுத்தொடை ஒலி நயத்தைக் கூட்டுகிறது.
காலைச் சூரியன் காட்சியில் அது காட்டிடும் ஒளி மாட்சியில்
காற்று வீசிடும் திசையினில் சிறு காகிதம் செலும் விசையினில்
மேலை வேலைவாய்த் திண்ணையில் கவின் மேவும் பொன்நிறப் பண்ணையில்
வீசு தண்சுடர்ப் பொய்கையில் முகில் வண்ணம் கோத்திடும் செய்கையில்
சாலை நீண்டதோர் நெளிவினில் வளம் சார்ந்திடும் வயல் வெளியினில்
தங்கம் சிந்திடும் மஞ்சளில் தரை தாழ்த்திடும் விழிக் கெஞ்சலில்
ஆலம் உண்டவன் கண்டம் போலவே ஆன்ற விண் கரு மையினில்
ஆடினான் உயர் பாரதி கவி பாடினான் உலகேத்தவே!
/வீசு தண்சுடர்ப் பொய்கையில் முகில் வண்ணம் கோத்திடும் செய்கையில்/
வண்ணம் என்ற இடத்திலும் மோனை அமையலாமோ?
வீசு தண்சுடர்ப் பொய்கையில் முகில் பூசிடும் எழில் பொய்கையில் என்று மாற்றலாம்(மோனைக்கு எதுகை மாற்றாக அமையும்)
இங்கே 'கம்ப மானுடன்' என்றதன் பொருள் என்ன? மானுடம் வென்றதம்மா கேள்விப்பட்டிருப்பீர்களே! அதை விளைத்தவன் அல்லவா அவன்!
நெஞ்சிலே உரம் இன்றியே உயர் நேர்மைப் பண்புகள் குன்றியே
நேசம் நெஞ்சிலே தாழவே இவண் நேற்றுவந்தவன் வாழவே
அஞ்சி யஞ்சியே வாடுவார் பகை ஆதரிக்கவே கூடுவார்
அன்னியன் புகழ் மெச்சுவார் சிச்சீ அடிமை வாழ்வினை நச்சுவார்
கஞ்சி ஊற்றியே தந்திடும் எனில் கால்பிடிக்கவும் முந்துவார்
காந்தி சொல்லினை எள்ளுவார் வெறும் பட்டம் போட்டுளம் துள்ளுவார்
வஞ்சனை பல செய்குவார் பகை மாந்துவார் செயல் கண்டுளம்
வாடினான் கவி பாரதி கவி பாடினான் உலகேத்தவே!
/ நேசம் நெஞிலே/ - நேசம் நெஞ்சிலே?
/சிசீ / - சீசி? சீசீ?
/செயல் லண்டுளம்/ - செயல் கண்டுளம்? நன்றி
செந்தமிழ்ச் சுவை தேறினான் அதில் தேங்கிடும் அமுதூறினான்
தேச மெங்கணும் தெருவெலாம் தமிழ்த் தென்றல் வீசிடப் பாடினான்
முந்திடும் மொழி யாவினும் சுவை மூண்டிடும் மொழி நம்மொழி
முத்தமிழ்த் திறம் போற்றுவோம் அதன் மொய்ம்பினைப் பறை சாற்றுவோம்
எந்த மூலை இருப்பினும் மனம் ஏத்து கின்ற கருத்தினை
இங்கு நம்மொழி சேர்ப்பதே பெரும் சேவையாமெனப் பேசினான்
பந்த பாசங்கள் யாவையும் தமிழ்ப் பாட்டிலே நிலை நாட்டியே
பாடினான் புகழ் வாழ்கவே அவன் பைந்தமிழ்க் கவி வெல்கவே
கம்ப மானுடன் கவியினில்/
இங்கே 'கம்ப மானுடன்' என்றதன் பொருள் என்ன?
À¡Ã¾¢ Á¨Æ
¬ð¼õ §À¡Îõ «¨Ä¸¼Ä¢ý ¿£¨Ãô ÀÕ¸¢-«ó¾
¬¾ÅÉ¢ý ¿ü¸Õ¨½ò ¾£Â¢ø ¯Õ¸¢
§Á¡ðΦÅÇ¢ šɢø Ó¸¢ Ä¡¸ò ¾¢Ã¢óÐ-¸¡üÈ¢ø
¦Á¡òÐñÎ §Á¡¾¢ ÊÁ¢ýÉø ŢâóÐ
¿£ð¼ ¿£¢ð¼ Á¡É i¨ÆÂ¡¸ô À¢Ã¢óÐ -ió¾
¿£¿¢Äò¾¢ø ´íÌ Á¨ÆÂ¡¸î ¦º¡Ã¢óÐ
Üð¼ Á¡¸ ³óÐ â¾ì ÜòÐ ¿¼ìÌõ-¡×õ
¦¸¡ì¸Ã¢ìÌõ, Áì¸ÙìÌ Å¡ú× ¦¸¡ÎìÌõ
*
¦ÅðÊ ÊìÌõ šɢø Á¢ýÉø ÐÊìÌõ
§Å¸ §Å¸ §Å¸Á¡¸î ݨÈÂÊìÌõ
¦¸¡ðÊî º¢Ã¢ìÌõ ¸¡¨Ãì Ü𨼠¯Ã¢ìÌõ
Ìô¨À§ÁðÎì ÌʨºÂ¢§Ä ܨà À¢Ã¢ìÌõ
Ì𨼠¿¢¨ÈìÌõ «Éø ¦¸¡ð¼õ ̨ÈìÌõ
¦¸¡ïͦÁÆ¢ø Ţ墨¢¨É šâ ¢¨ÃìÌõ
¦¾¡ðÎì ¦¸¡ÎìÌõ, ¨Äî §º¡ÚÀ¨¼ìÌõ
Ýúó¾¢ÕìÌõ ¾£Â¾¡É Á¡Í Ш¼ìÌõ
*
«ó¾ Åñ½õ ió¾Áñ½¢ø ¦¿¡ó¾Áì¸û Å¡úצÀÈ
¬÷ôÀâò¦¾Øó¾ Á¨Æ À¡Ã¾¢- «Åý
¬Ç Åó¾ Â¢ó¾ ¿¡Î šâ¾¢
º¢ó¨¾¦ÂØ ¾£¦ÂÎòÐ §¾ºì¸¼ø ¿£÷ÌÊòÐò
¦¾öÅšɢý ¦¸¡ñ¼Ä¡¸ Á¡È¢É¡ý-¸¡üÚò
§¾Åý ÅÕõ ÁðÎõ «íÌ °È¢É¡ý
¦Åó¾ãîÍì ¸¡üÅÚà ţڦ¸¡ñÎ ¾¡ýÐÊòÐ
§Á¸ÁÅý «íÌÁ¢íÌõ ¾ðÊÉ¡ý-«Åý
Á¢ýɦÄÛõ Å¡¦ÇÎòÐ ¦ÅðÊÉ¡ý
¦ºó¾Á¢Æ¡õ ¦¾ýÈøÅÃî º£üÈÁíÌ Á¡È¢ÂÐ
§¾ÉÓ¾ Á¡¸ Á¨Æ ¦¸¡ðÊÉ¡ý-«Åý
§¾º Áì¸û ¦¿ïº¦ÁøÄ¡õ ´ðÊÉ¡ý
ºó¨¾§À¡¼ Åó¾Å¨É Åó¾ÅÆ¢ §À¡¸ §ÅñÊî
º¡ð¨¼ÂÊ ¾ó¾ §À¡Ð §ÀöÁ¨Æ-«Åý
¾ñ¾Á¢Æ¢ø À¡Îõ §À¡Ð ¾¡öÁ¨Æ
º¢óи¨Çî º¢ó¾¢ÂÅý ºó¾Á¢¨º À¡Î¨¸Â¢ø
¦ºó¾Á¢úô À¢÷ÅÇ÷ìÌõ ¸¡÷Á¨Æ-°Æ¢ò
§¾Å¢¿¼õ À¡Î¨¸Â¢ø §À¡÷Á¨Æ
¸ó¾ýÅûÇ¢ ¸¡¾Ä¢¨º ¸ñ½ý À¡ðÎ À¡Î¨¸Â¢ø
¸ñÁÂíÌõ ÌüÈ¡Äô âÁ¨Æ-«Åý
¸¡ø¨Åò¾ ¢¼¦ÁøÄ¡õ À¡Á¨Æ
Á󨾦ÂÉ ¿¢ýÈ¢Õó¾ Áì¸û¿¢¨Ä ¸ñÎÁÉõ
šΨ¸Â¢ø À¡ÊÂÐ ¾£Á¨Æ-«Åý
ÅÃÄ¡Ú ¬Äí¸ðÊ Á¡Á¨Æ
*
¬Äí¸ðÊ Á¡Á¨ÆÂ¡ö °üȢɡý-«Åý
«ÐŨâ Ä¢Õ󾿢¨Ä Á¡üȢɡý
À¡Äí¸ðÊ ´üÚ¨Á¨Âì ¸¡ðÊÉ¡ý-«ó¾ô
À¡Äò¾¢ý¸£ú ¸¡Ä¿¾¢ µðÊÉ¡ý.
ÝÄí¸ðÊ ¿¢ýÈŨÇô À¡ÊÉ¡ý-¿õ
àì¸õ §À¡¸ô À¡¦ÅÎòÐî º¡ÊÉ¡ý
¿¡Öí¸ðÊ Åó¾À¢ýÛõ àí¸¢§É¡õ-¸¡Äõ
¿øÄ¾¢ø¨Ä ±ýÚÁðÎõ ²í¸¢§É¡õ
*
Á£¨º ¸¡Ãý À¡ðÎÁ¨Æ
Á£ñÎõ Á£ñÎõ ¦Àö¾ÐÅ¡ø
¬º¢ âÂôÀ¡ ¦ÅñÀ¡Å¡ö
«Õ¨Áî º¢ó¾¡ö ¸ð¼¨Ç¡ö
§ÀÍõ Å¢Õò¾õ ¸£÷ò¾¨É¡ö
À¢ÈôÀ¢ø Ò¾¢Â Å¡÷ò¨¾¸Ç¡ö
Å£º¢ ÂÊò¾ ¦ÀÕÁ¨ÆÂ¢ý
¦ÅûÇõ ¿¾¢¢Â¡ö Å¢¨Ã¸¢ÈÐ
«ó¾ ¿¾¢Â¢ø ÌǢ츢ý§È¡õ
¬Ê ¬Êì ¸Ç¢ì¸¢ý§È¡õ
±ó¾ «ÃÍõ «¨½¸ðÊ
i¾¨Éò ¾Îì¸ ÓÊ¡Ð
Àó¾ À¡ºõ ¦¸¡ñ¼¾¢Ð
À¡Ã ¾ò¨¾ ¢¨½ôÀ¾¢Ð
ÓóÐõ «ó† ¿¾¢Â¢É¢§Ä
ãú¸¢ì ÌÇ¢ì¸ Å¡Õí¸û!
ÀøÄ¡ñÎ ÀøÄ¡ñÎ ÀøÄ¡ñΠšƢ À¡Ã¾¢Â¡÷ ¾¢Õ¿¡Áõ ÀøÄ¡ñΠšƢ
¦º¡øÄ¡ñÎ ¦º¡øÁ¡¨Ä ÝðÊÂÅý šƢ ¦º¡øÖìÌû ¯Â¢÷îºì¾¢ àÅ¢ÂÅýšƢ
Å¢øÄ¡ñ¼ Å¢ƒÂ÷ìÌî º¡Ã¾¢¨Âô §À¡üÈ¢ Å¢¾Å¢¾Á¡öì ¸Å¢¦º¡ýÉ §Åó¾ÉÅý šƢ
¸øÄ¡ñ¼ ¦¿ïº¢¨ÉÔõ ¸É¢Å¢ìÌõ Åñ½õ ¸Å¢Â¡ñ¼ À¡Ã¾¢Â¡÷ ¾¢Õ¿¡Áõ šƢ!
¦¿ø¨ÄÁ¡ Åð¼ò¾¢ø ¢Ǩº¿¸÷ ¾ýÉ¢ø
ó¢¨È¡¢ Ãò¦¾ñßü ¦ÈñÀò¾¢ ÃñÊø¿øÄÌÇ¢÷ ʺõÀâ§Ä À¾¢¦É¡ýÈ¡õ §¾¾¢
¿øÄž¡ Ã了ö¾ ¿õ¸Å¢»ý šƢ¦¾¡ø¨Ä¦ÂÉ Åó¾¢ð¼ ¦Åû¨Ç嬃 µð¼î
¦º¡øÓúõ ¦¸¡ðÊ¿õ ÍôÃÁñÂý Å¡Æ¢ÒøÄ÷¸¨Ç, Åﺸ¨Ãî º¡ÊÂÅý šƢ
Ò¾¢Â ¬ò¾¢î Ýʾ¨Éô À¡ÊÂÅý šƢ
¸¡÷ò¾¢¨¸ã Äòо¢ò¾ ¸Å¢§ÂÚ Å¡Æ¢ ¸¡üÚ,¸û, ¾£, Å¡¨Éì ¸Å¢§º÷ò¾¡ý šƢ
¬÷ò¦¾ØóРŢξ¨Ä¨Âô À¡ÊÂÅý šƢ «îºÁ¢ø¨Ä ±ÉôÀÂò¨¾ «¾ðÊÂÅý šƢ
º£÷ò¾¢Á¢Ì §¾¡ò¾¢Ãí¸û ¦ºö¾¸Å¢ šƢ §¾ºò¨¾ò Тø¿£ì¸ô À¡ÊÂÅý šƢ
Å¡÷ò¨¾ìÌ Å¡÷ò¨¾Ô¢÷ ²üÈ¢ÂÅý šƢ Á¸¡¸Å¢ ÍôÃÁñ À¡Ã¾¢Â¡÷ šƢ
ÀøÖ¨¼ìÌõ ¦º¡øÁ¡üÈ¢, À¡Ã¾Á¡ ¾¡§Áø
ÀûÇ¢¦ÂØî º¢¾º¡í¸õ, ¿ÅÃòÉ Á¡¨ÄÅ¢ø¦ÄÎìÌõ ÌÈÅûÇ¢ §ÅÄýÒ¸úô À¡ðÎ
Å¢¿¡Â¸÷¿¡ý Á½¢Á¡¨Ä, §Å¾¡ó¾ô À¡ðΦº¡øÀÊìÌõ ÌÆó¨¾ìÌõ Íó¾ÃÁ¡öô À¡ðÎ
;ó¾¢Ãò¨¾ì ¸ñ¼ÐÅ¡öò ÐûǢ §¾ýÀ¡ðΦÁøÄ¢ÂÄ¡÷ Ţξ¨Ä¨Â §Åñθ¢È À¡ðÎ
Å¢ò¾¸Á¡öî ͺ⨾, À¡ÊÂÅý šƢ!
¸ñ½¨É§Â §ºÅ¸É¡ö, ¬ñ¼¡É¡ö, ÌÕÅ¡ö ¸¡¾ÄÉ¡ö, ¸¡¾Ä¢Â¡ö, ¾¡ö¾ó¨¾, «Ãº¡ö
¾¢ñ½ÓÚõ ¿üº£¼ý, ÌÆó¨¨¾Â¡ö, §¾Å¡ö ¾£Ã¡¾ Ţǡ¡ðÎô À¢û¨Ç¡öô §À¡üÈ¢
Àñ½¨Áó¾ ¸ñ½ýÀ¡ð ʨºò¾¸Å¢ šƢ À¡ïº¡Ä¢ ºÀ¾ò¨¾ô À¡ÊÂÅý šƢ
±ñ½ÓÂ÷ Ì¢øÀ¡ð¨¼ ±Ø¾¢ÂÅý šƢ ±ñ½Ã¢Â «ÚÀò¾¡Ú ®ó¾¸Å¢ šƢ!
¸¡Ä¨ÉÔõ Òø¦ÄɧЏŢ ¦º¡ýÉ¡ý šƢ
¸¡ó¾¢Â¢¨É Á†¡òÁ¡Å¡ö Å¡úò¾¢ÂÅý šƢÝÄÓÂ÷ ºì¾¢Â¢¨Éò §¾¡ò¾Ã¢ò¾¡ý šƢ
ͧ¾ºÁ¢ò ¾¢Ãý ¯¾Å¢ ¬º¢Ã¢Â÷ šƢº¡Ä§Å¿ü ¦¾¡ñΦºö¾ º¡ý§È¡¨Ãô §À¡üÈ¢
¾Á¢Æ¢ýÀì ¸Å¢¨¾ÀÄ º¡¾¢ò¾¡ý šƢáÖÂ÷×ì ¸£¨¾Â¢¨É ¦Á¡Æ¢¦ÀÂ÷ò¾¡ý šƢ
§¿¡ýÀ¢ÕóÐ ¾Á¢Æý¨É ¦ÀüÈÁ¸ý šƢ!
À¾ïºÄ¢ Ýò ¾¢Ãò¾¢ü§¸¡÷ ¯¨Ã¦ºö¾¡ý šƢ À¡÷ò¾¦ÉÉ ¾¨É±ñ½¢ô À¡÷ò¾¸Å¢ šƢ
;ó¾¢Ãò¾¢ý §Áø¾¡¸õ Ýúó¾¸Å¢ šƢ ÐÊôÒûÇ ºó¾¢Ã¢¨¸ ¸¨¾¦º¡ýÉ¡ý šƢ
º¢¨¾ó¾¢ð¼ ¦¸¡Î¦¿ïÍõ º¢Ã¢ì¸¢ýÈ Åñ½õ º¢ýÉîºí¸Ãý ¸¨¾¨Âî ¦ºôÀ¢ÂÅý šƢ
Å¢¾ó¾Õ¿ü ¸üÀ¨É¡õ ÒÃŢ¢¨É µðÊ Å¢ó¨¾¦ÂÉ »¡Éþõ µðÊÂÅý šƢ
ÁýÉÅ÷§À¡ø ¸Å¢î¦ºí§¸¡ø ²ó¾¢ÂÅý šƢ
źɸŢ ÅÇÁ¡¸ Å¡÷ò¾¸Å¢ šƢ«ýÉ¢¦À…ýð «õ¨Á¢ý§Áø ¬í¸¡Ãõ ¦¸¡ñ§¼
¬í¸¢Äò¾¢ø ¿Ã¢ì¸¨¾¨Â ¬ì¸¢ÂÅý šƢ¸ýɦÄÉò ¾Á¢ú¦Á¡Æ¢¨Âì ¸¡ðÊÂÅý šƢ
'¸ÉøÀ¡¼ø' ¬í¸¢Äò¾¢ø ¸ñ¼¸Å¢ šƢÁ¢ýɦÄÉ'Â¢ó ¾¢Â¡, 'ºì ¸ÃÅ÷òÉ¢' ±ý§È
Å¢ÇíÌÒ¸ú Àò¾¢Ã¢¨¸ ¬º¢Ã¢Â÷ šƢ!
Å¡Éò¨¾ ÁñÏìÌ ÅÃÅ¡ì¸ §ÅñÊ Å¡Éò¨¾ «¨Æì¸¢ýÈ ÅÇ÷Á£¨º šƢ
»¡ÉòÐì ¸Ç¡ïº¢ÂÁ¡õ º¢Ãº¾¨Éì ¸¡ìÌõ ¿üȨÄôÀ¡ ¨¸Å¡Æ¢, ¸Õí§¸¡ðΠšƢ
¸¡Éò¨¾ô ¦À¡Æ¢¸¢ýÈ ¾¢Õ ¿¡,Å¡ö šƢ ¸¼Æ¡Æõ ÐÆ×¸¢È ¸ñ½¢ÃñÎõ šƢ
®Éò¾¢ü ¦¸¾¢Ã¡¸ ±Ø¦¿ïºõ šƢ ±ó¿¡Ùõ ¿¢Á¢÷¸¢ýÈ ±õ¸Å¢»ý šƢ!
¸ó¾¨ÉÔõ ÅûÇ¢¨ÂÔõ ¸¡üêïºø ¾ýÉ¢ø
¸¡¾Ä¢ì¸ ¨Åò¾¢ð¼ ¸Å¢ÁýÉý šƢº¢ó¾¨É¨Âò ¦¾Ç¢Å¡ì¸ô À¡ÊÂÅý šƢ
¦¾Ç¢Å¡¸ò '¾Ã¡Í'«¾¨Éò §¾÷ó¾¸Å¢ šƢÅó¾¨É¨Âò ¦¾¡Æ¢ÖìÌõ ¯Æ×ìÌõ ¾óÐ
ÅÃÄ¡Ú À¨¼ò¾¢ð¼ Á¸¡¸Å¢»ý šƢÀ¢ó¾¢ÅÕõ ¸¡Ä¦ÁøÄ¡õ ¦ÀÂ÷¦º¡øÄ¢ô §À¡üÈô
À¢Èó¾¢ð¼ À¡Ã¾¢Â¡÷ šƢ§ŠšƢ!--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
> காலம் வென்றிடும் வள்ளுவன் குறள் காட்டும் வாழ்வதன் நெறியினில்
> தம்பி செய்ததோர் காவியம் தமிழ்க் காப்பியம் தரும் செய்யுளில்
> சங்கரன் மகன் தன்னையும் உடல் சாரும் கூழையும் பாடிடும்
> அம்மை ஔவையின் பாட்டினில் மறை ஆன்ற வியாசனின் ஏட்டினில்
> ஆங்கிலக் கவி ஷெல்லியின் கவி அழகினில் மனம் போக்கியே
> அம்பிகை எழில் தூண்டவே அவள் இன்னருள் தர வேண்டியே
> ஆடினான் உயர் பாரதி தமிழ் பாடினான் உலகேத்தவே!
> / கம்ப மானுடன் கவியினில்/
> இங்கே 'கம்ப மானுடன்' என்றதன் பொருள் என்ன?
சிவா சார், நீங்கள் கேட்டபோது எழுதணும் என நினைத்தேன். கவியோகியின்
இன்றைய மடல் பாரத்ததும் நினைவுக்கு வருகிறது.
கம்பன் தெய்வங்களை மானுட வாழ்க்கை வாழச் செய்தவன், அவர்களைக்
கொண்டு மானுட உணர்ச்சிகளை நுண்ணிதாக விளக்கியவன். சேக்ஸ்பியர்
மனிதர்கள் கதைகளைக் கொண்டு ஆங்கிலத்தைக் கட்டியமைத்ததை விட,
இதிகாச நாயக-நாயகியரை தெய்வம் என்று தொழுது, ஆனால் மானுடர்களாக
நம்மிடையே இந்தப் பூவுலகில் தமிழரோடு வாழச் செய்தவன். அவனே சொல்கிறான்.
ஆங்கிலத்தை மொழியாக்கிய பெருமை சேக்ஸ்பியருக்கு. அதுபோல்,
தமிழை மொழியாக்கி பாரதப் பண்பாட்டோடு பிணைக்கச் செய்த பெருமை
கம்பன் என்னும் மானுடனுக்கே உண்டு.
தேறினன்- 'அமரர்க்கு எல்லாம் தேவர்
ஆம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார்
மானிடர் ஆகி மன்னோ;
ஆறு கொள் சடிலத்தானும், அயனும்,
என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம்,
மானுடம் வென்றது' அன்றே! - கவிச்சக்கிரவர்த்தி கம்பர்
இப்படி தெய்வத்தை மானுட வடிவில் வடித்தெடுத்த மேதையை
பாரதியார் பாடியுள்ளார். பின்னர் பிஸ்ரீ, சா. கணேசன், தொமுபா,
கண்ணதாசன், அசஞா, எஸ். ராமகிருஷ்ணன் (மதுரை), ...
எல்லோரும் இந்த மானுடம் வென்ற பாட்டைப் பேசியுள்ளனர்.
அதனால், ”கம்ப மானுடன் கவியினில்” என்கிறார் இலந்தை என நினைக்கிறேன்.
நா. கணேசன்
On Feb 16, 11:16 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
SR > கம்ப மானுடன் கவியினில் புகழ் காளிதாசன் கற்பனையினில்
> / கம்ப மானுடன் கவியினில்/
> இங்கே 'கம்ப மானுடன்' என்றதன் பொருள் என்ன?
தேறினன்- 'அமரர்க்கு எல்லாம் தேவர்
ஆம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார்
மானிடர் ஆகி மன்னோ;
ஆறு கொள் சடிலத்தானும், அயனும்,
என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம்,
மானுடம் வென்றது' அன்றே! - கவிச்சக்கிரவர்த்தி கம்பர்
அதனால், ”கம்ப மானுடன் கவியினில்” என்கிறார் இலந்தை என நினைக்கிறேன்.
நா. கணேசன்
இலந்தை அய்யா..ஒரு சிறிய சிந்தனை/எண்ணம்.
"யானையின் பார்வை அளவெடுத்து" என்ற சொற்றொடர் எந்த அர்த்தத்தில் போடப்பட்டிருக்கிறது?வணக்கத்துடன்வித்யா
அதனுடைய பார்வை 20 மீட்டருக்கு மேல் அவ்வளவு சரியாகத் தெரியாது. ஆனால் அருகிலிருப்பதை விடாது. அவ்வளவு கூர்மையானது. அதனுடைய கண்ணும் காதும் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன.
ஐயும் குறைவாக்கி இறைவன்ந்ல்ல கேள்வி. நான் ஒரு பிரசங்கம் கேட்டேன். தலைப்பு” ELEPHANT MANAGEMENT" அதில் ஒரு யானையின் ஒவ்வொரு செயல்பாடும் எப்படி ஒரு பெரிய நிர்வாகியின் செயல்போடோடு ஒத்துப்போகிறது என்று விளக்கினார். தன்னை ஒட்டி நடப்பதைக் கோட்டைவிட்டு மிகத்தொலைவில் நடப்பதை சில நிர்வாகிகள் கவனத்தில் கொள்வதுண்டு. ஆனால் யானை தனது அருகில் இருக்கும் ஒரு குண்டூசியைக்கூடக் கண்டுபிடித்துவிடும். அதனுடைய பார்வை 20 மீட்டருக்கு மேல் அவ்வளவு சரியாகத் தெரியாது. ஆனால் அருகிலிருப்பதை விடாது. அவ்வளவு கூர்மையானது. அதனுடைய கண்ணும் காதும் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. காதும் கண்ணின் ஒரு அங்கம் போலவே இயங்குவதாக யானை வல்லுநர்கள் கூறுகிறார்கள். . பாரதி வாழ்ந்த காலத்தில் தன் அருகே இருப்பவன் ஏன் பாட்டினி கிடக்கிறான் என்பதைக்கூட அறியாமல் இருந்தார்கள். ஆனால் தொலை தூர இங்கிலாந்தில் நடப்பதை விலாவாரியாகதெரிந்து வைத்திருந்தார்கள். கஞ்சி குடிப்பதிற்கில்லார். அதன் காரணம் யாதென்னும் அறிவுமில்லார் என்றான் பாரதி. தனக்கு அருகில் உள்ளவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தான். அதனால் தான் யானையின் பார்வை என்று கூறினேன். ஆனால் அது பாரதியின் தீர்க்க தரிசனத்தைக் குறிக்கவில்லையே என்று கேட்கலாம். ஆனால் அதுதான் ‘intution "என்ற உள்ளுணர்வு. அதை அடுத்த அடியில் உளம் ஆர்க்கும் உணர்வு என்ற சொற்றொடரில் குறிப்பிடுகிறேன்.