--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNP-cuZKfXNc8A%2BJLxuAKj1ebwkkWVcVGeZF03L%3DL3V0jQ%40mail.gmail.com.
தசாங்கம் புனையத் தனித்திறன் வேண்டும்
உசாவின் புவியினில் ஓரிருவர் உண்டாம்
அரசி பழனியப்பன் யாத்த தசாங்கம்
பரவும் கவியுலகில் பார்.
-கருவூர் இனியன்.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYe-Mi0AkYPvFjYapDQjuFv7c7mosHKqnK6ktMTCOPxkw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GtYTnkpJScJbN5n-9BB3VmFVhT_399%3D%2B5GjD%3DbfAbbsbA%40mail.gmail.com.
“ நாட்டார்
மதிமயங்க வைத்த மதுபொங்கிப் பாயும்
அதிசிறந்த பாவோட்டம் ஆறு”
இந்த வரிகள் செப்பலோசை சிறந்து சீரார் நடைபோடும் தங்கள் வெண்பாக்களுக்கும் பொருந்தும், அரசியாரே!
மிக மிக அருமையான தசாங்கம்! வாழ்த்துகள்!
(மதுபொங்கி - முற்றியலுகரப் புணர்ச்சி ஆதலின், மதுப்பொங்கி என்று வரவேண்டுமோ? “மதுச்சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே” என்று ஆழ்வார் பாசுரத்தில் பார்த்திருக்கிறேன்)
> On Jun 23, 2026, at 9:50 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> நாட்டார்
> மதிமயங்க வைத்த மதுபொங்கிப் பாயும்
> அதிசிறந்த பாவோட்டம் ஆறு
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/FC870754-92F8-425E-BC96-C14D32327068%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/52e9f042-e5b3-4213-a356-02dd90aa0defn%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6b9ef2cb-1094-4b2e-9d4c-6396f8c558b6n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f3e3df33-40e6-48c4-963a-f9adc658a5b8n%40googlegroups.com.
அரசி.பழனியப்பன் படைத்த திருத்தசாங்கத்தைத் தொடர்ந்து ஓர் ஆர்வ மிகுதியால் அடியேன் நவரத்தின மாலையொன்றை ஆக்கியுள்ளேன். பாவல்லார் குறை நிறைகளைச் சுட்ட வேண்டுகிறேன்.
கண்ணதாசன் நவரத்தின மாலை
காப்பு
மண்ணிலே மக்கள் மனத்திலே நிற்பவன்
கண்ணனின் தாசன் கவின்மார்பில் நன்றே
நவரத்ன மாலை நனிசூட்டக் காப்பாய்
இவண்வந் தினியன் இட.
1.வெண்பா
புவியில் அவன்போல் புகழ்பெற்றார் யாரே
கவிதைத் திறன்கொண்டு கன்னல் தமிழ்மொழியைப்
பாசம் மிகக்கொண்டு பார்த்தவன்; நம்கண்ண
தாசன் கவியே கவி.
2. கட்டளைக் கலித்துறை
ஞாலம் அளந்தான் நவகவி செய்தான் நறுந்தமிழால்
பாலம் அமைத்தான் பழமை புதுமைக்குப் பாங்குறவே
நீலத் திரைகடல் நித்தம் ஒலிசெய் நகரினிலே
காலத்தை வென்ற கவிசெய வந்தான் கரியெனவே!
3. எண்சீர் விருத்தம்
சின்னப் பயலாகச் சென்னைக்குச் சென்றான்
சிறந்த கவியாகச் செகம்போற்ற நின்றான்
மின்னும் மணியாக மேலோர்கள் போற்ற
மிளிரும் விதமாக மின்னிடுவேன் என்றான்
மன்னும் தமிழ்வாழ மகத்தான முறையில்
மண்டும் திறத்தாலே மாக்கவிதை செய்தான்
இன்னும் பலகாலம் இணையில்லா வண்ணம்
இருப்பான் நிலையாக இனிதாக நன்றே!
4. ஆசிரியப்பா
வெண்சங் கூதுக வெண்சங் கூதுக
கண்ண தாசன் காலம் காலமாய்
மண்ணில் புகழுடன் மலர்க என்றுநீ
வெண்சங் கூதுக வெண்சங் கூதுக
முத்தென மின்னி முத்தையா பின்னர்
வித்தென ஆனதை விளக்குவன் யானே
சங்கப் பாவைச் சாற்றும் வண்ணம்
தங்கத் தமிழில் திரைப்பா தந்தான்
காற்றைக் கயிறாய்க் கட்ட வல்லான்
காதலைப் பாடிக் காற்றில் கோத்தான்
வெல்லத் தினிப்புடன் வெல்லும் சொல்லால்
நல்ல தமிழில் நற்பா செய்தான்
உழைப்போர் தம்மை உரத்த குரலால்
அழைத்து மகிழ்ந்தான் அவனென் பேனே!
5.தரவு கொச்சகக் கலிப்பா
கண்ணனின் தாசனவன் கவிதைக்கு நிறமானான்
மண்ணிலே யாவருக்கும் மறக்காத பெயரனே
எண்ணுங்கால் இவனொருவன் எழுந்தாளும் வேந்தனே
பண்ணிய பனுவலையே பரிந்தாள்வார் புவியிலே!
6. வஞ்சி விருத்தம்
மண்ணில் வந்தான் மீண்டும்
கண்ணன் என்றே கண்டோம்
வண்ணம் பலவாய் விளங்க
திண்ணம் கொண்ட தீரன்!
7. குறள் வெண்செந்துறை
கண்ண தாசன் என்றாலே
கவிதை பிறக்கும் தன்னாலே
எண்ணி லடங்காக் கரும்பாக
இனிப்பான் பேரைச் சொன்னாலே!
கவிதை என்னும் கனியமுதே
கவலை நீக்கும் என்றானே
குவித்த முத்தாம் எனும்படியாய்
கூவிக் கூவித் தந்தானே!
8.அறுசீர் விருத்தம்
வானில் ஊரும் மதியாக
வளத்தைக் கூட்டும் நதியாக
தேனில் குழைத்துத் தமிழாலே
தென்றல் காற்றின் சுகம்போல
வேனில் கால மழைபோல
விரும்பித் தந்தான் பாவாக
ஊனில் உயிரில் கலந்திடவே
உணர்வை ஊட்டும் உலகினிலே!
9. கலிவிருத்தம்
விருந்தாய் அமைந்தான் விண்ணவர் தமக்கே
மருந்தாய் அமைந்தான் மண்ணவர் மகிழ
திருந்தா மனிதர் திருந்திட கவிதை
பொருந்தும் வகையில் பொழிந்தவன் அவனே!
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu26J2OjTmXAVaQ97jQfVA6PC%2BHRiQA-0uYNdMVp-o7tQ%40mail.gmail.com.
வாராகி நவரத்ன மாலை
ஒளிர்
வயிரம் நல்முத்து மாணிக்கம், மரகத மோடுயர்ந்த நீலம்
பளபளக்கும் வைடூர்யம் கோமேத கம்புட்ப ராகமொடு பவளம் எல்லாம்
தெளிவுமிகு வாராகி நவரத்ன மாலையெனத்
தீட்டு தற்கே
களிமிகுந்த கற்பகப்பூங் கணபதியே நீவந்து காப்பா வாயே!
வைரம்
தேறும்
திடம் சேரும்கதிர் வைரத்தொளிர் தேகம்
மீறும்திறல் மேலேயெழும் கால்கள்விரை வேகம்
சீறும்சினம் கொண்டேயெமைச் சீறாதருள் வாயே
கூறும்புகழ்ச் சேனாபதி வாராகியெம் தாயே!
1
முத்து
முத்தேறிய
சோதிக்கிட மாகும்வளை பற்கள்
சத்தேறிய நேர்த்திக்கிட மாகுமொளிக் கற்கள்
மத்தேறிய வாழ்க்கையிதில் மேன்மையருள் வாயே
கெத்தேறிய சேனாபதி வாராகியெம் தாயே! 2
பவளம்
அம்மாயெழில்
தேகந்தனில் ஆரம்திகழ் பவளம்
இம்மாநிலம் மீதுண்கிறேன் நீநல்கிடு கவளம்
எம்மாலினி ஏதுள்ளது? யாவும்தரு வாயே
செம்மாந்திடும் சேனாபதி வாராகியெம் தாயே! 3
நீலம்
உன்மாமகு
டம்தான்தொடும் வானில்விரி நீலம்
என்னேநினைந் துள்ளாய்எனைத் தாங்கியளி சீலம்
முன்னேநினைக் கின்றேன்தெளி ஞானம்தரு வாயே
பென்னம்பெரு சேனாபதி வாராகியெம் தாயே! 4
மரகதம்
அருளே
மர கதமேயொளிர் திருமேனியில் உடையாய்
பொருபோரிடைப் புடைமோதிடும் பெருந்தேவியர் படையாய்
வருநாளெலாம் வளநாளென நிறையத்தரு வாயே
ஒருமாதனிச் சேனாபதி வாராகியெம் தாயே! 5
மாணிக்கம்
மாணிக்கமே போல்செம்மையைக் காட்டும்சினக் கண்கள்
காணிக்கையாய் யான்நல்குவேன் என்பாவுள பண்கள்
நாணிச்செலும் என்வாழ்க்கையில் ஞானம்தரு வாயே
ஆணித்தரச் சேனாபதி வாராகியெம் தாயே! 6
கோமேதகம்
தேன்போலொளிர்
கோமேதகம் வேய்ந்தேயொளிர் ஆரம்
தான்சூடிய வாராகியுன் ஆதாரமே சாரம்
ஏன்வந்தனை என்னாமலே நீயேயருள் வாயே
வான்போற்றிடும் சேனாபதி வாராகியெம் தாயே! 7
புட்பராகம்(பூராகம்)
பாராகமும் தேர்ந்தேனிலை பாண்டித்யமும்
இல்லை
தாராளமாய் நீதந்திடில் வேறேயிலை தொல்லை
பூராகமே பூண்டேயருள் ஓங்கத்தரு வாயே
போராடிடும் சேனாபதி வாராகி யெம்தாயே! 8
வைடூரியம்
வன்மைப்புலிக்
கண்போலொளிர் வைடூரியம் பூண்டோய்
புன்மைக்கெதிர் போராடவே கையாயுதம் ஆண்டோய்
அன்புக்கெதிர் அன்பைத்தரும் அம்மாவருள் வாயே
தன்னேரிலாச் சேனாபதி வாராகியெம் தாயே!
9
நூற்பயன்
வாராகியின்
புகழ்பாடிடும் நவரத்தின மாலை
யாராகிலும் கவனத்துடன் மனம்கொண்டிடும் காலை
சேராதநல் வளம்யாவையும் சேர்ந்தேவரும் உண்மை
தீராப்பிணி தீர்ந்தேவிடும் தேகம்பெறும் திண்மை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu26J2OjTmXAVaQ97jQfVA6PC%2BHRiQA-0uYNdMVp-o7tQ%40mail.gmail.com.
(நவமணி மாலை என்பது 96 பிரபந்தங்களில் ஒன்று. நவரத்ன
மாலையிலிருந்து மாறுபட்டது. பா, பாவினங்களில் 9வகைகளைத் தேர்ந்தெடுத்து, காப்பைத்தவிர 9 பாடல்கள் எழுதவேண்டும்.
பாவே இனமே
என்றிவை இரண்டு
மேவிய வகையது நவமணி மாலை என்பது விதி.
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா வஞ்சிப்பா அவற்றின் இனங்களில் ஒவ்வொன்று, ஆக மொத்தம் எட்டு. இவற்றோடு மருட்பாவையும் சேர்த்து ஒன்பது
வகைகள். அந்தாதியாக அமைவது சிறப்பு.
எடுத்துக்காட்டு
வாராகி நவமணி மாலை
காப்பு
அம்மைமகா வாராகி ஆசிகளை வேண்டுகிற
செம்மை நவமணி மாலையிது – தும்பிக்கைக்
காரனே, அன்புக் கணபதியே, செய்யுமிக்
காரியத்தில் நீயேதான் காப்பு.
நூல்
வெண்பா
ஓங்குபுகழ் நாயகியாள், உத்தமி, வாராகி
ஆங்காரி, அன்பின் அருள்வாரி- தேங்கும்
அகந்தைக் கிழங்கை அடியோடு பேர்த்தே
இகம்செம்மை செய்வாள் இனிது. 1
வெண்பா இனமாகிய வெளிவிருத்தம்
இனியவள், அருள்பவள், எழிலவள் பலமவள் - வாராகி
கனியவள், நிலமவள் புனலவள் காற்றவள் - வாராகி
கனலவள், வானவள் அணுவவள் கதியவள் - வாராகி
மனம்உனும் முனம்வரும் தயையவள் தாயவள்-வாராகி
2
ஆசிரியப்பா
வாராகி
என்று வாய்சொன்னால் கூடத்
தாராள மாகத் தருகிற தேவி
கூரான தந்தம் கொடுமையை மாய்க்கும்
வேரோடு தோண்டித்தீ வினையை அழிக்கும்
ஏனோவென் றில்லாமல் இதமாய்ப் பணிந்தால்
தானாக வந்து தயைபுரி கின்றவள்
பாதம் பணிந்து பரவுக
வாதில் வெல்லலாம் வாழ்க்கையும் வெற்றியே! 3
ஆசிரிய விருத்தம்
வெற்றியெனச்
சொல்வதெது? பிறரைவென்று நாமுயரும் வித்தை தானா?
கற்றதனைக் கைக்கொண்டு காரியத்தைக் கச்சிதமாய்க் கணித்தல் தானா?
பெற்றிருக்கும் நலமெல்லாம் வெற்றியினால் பிறந்தனவா? பின்னர் என்ன?
பற்றியவள் பாதத்தைப் பலமெல்லாம் அவள்கொடுக்கப் பார்த்தல் தானே! 4
கலிப்பா
தானாக
எனக்கென்ன தகுதியுண்டு, தாயேநீ
தானாகத் தருவதுவே தனிப்பெரிய உன்னதமாம்
வானாக, மண்ணாக, வளியாகப் புனலாக
ஆனாத காற்றாக யாவையுமாய், யாவினுள்ளும்
ஊனாக உயிராக உள்ளவளே காத்தருள்க
நானாகச் செய்வதெல்லாம், நல்லடியைப் பற்றுவதே
பற்றாக முற்றாகப் பற்றுவது யாதெனிலோ
வற்றாத பேரருளாய் மாண்பருளும் வாராகி
பொற்றா மரைப்பாதம் போய்ப்பற்றிக் கொள்வதுதான்
கற்காத போதினிலும் கல்விதரும் யாதெனிலோ
முற்காலம் தற்காலம் பிற்காலம் யாவுமெனப்
பற்றாகப் பற்றுதற்குப் பரிந்துவரும் திருவடியே!
வெற்றாகப் போகாமல் வீறுதரும் யாதெனிலோ
சற்றேனும் கூடாத சந்தேகம் இல்லாமல்
முற்றாகப் பற்றுகிற மூர்க்கமுள பக்தியதே!
எனவாங்கு,
நெஞ்சம் கனிந்து நினைவும் ஒன்றி
தஞ்சம் எனவே சரணம் அடைக
அஞ்சல் இல்லை, அபயம்
கஞ்சம் இன்றிக் கையகப் படுமே!
5
கலிப்பாவின்
இனமாகிய கட்டளைக் கலித்துறை
அகப்படும் யாவும் அகம்படும், நெஞ்சில் அவளிருக்கச்
சுகப்படும் யாவும் சுகம்படும், வேண்டும் சுவைகளெல்லாம்
மிகைப்பட லின்றி மிகப்படும், நல்கும் விடயமெல்லாம்
வகைப்படும் நல்ல வளப்படும் அன்னை வரத்தினிலே!
6
வஞ்சிப்பா
வரமருளுவள்
வளமருளுவள்
தரமருளுவள் தகவருளுவள்
இனமருளுவள் இதமருளுவள்
மனத்தமைதியை மகிழ்ந்தருளுவள்
எனவே நீ
இடைவிடா தவள்பதம் எண்ணி
நடைபெறும் நாள்களை நகர்த்துக நலமே! 7
வஞ்சித்துறை
நலமே
பெறுக
பலமே உறுக
நிலமே விளைக
கலைகள் மலிக! 8
மருட்பா
(வெண்பாவில் தொடங்கி அகவலில் முடியும். இது வாயுறை வாழ்த்து. அதாவது , இத்தெய்வத்தைப் பணிந்து நீ வாழ்வாயாக என்று வாழ்த்துவது)
மலியும் வளமெல்லாம் வாராகி வந்து
நலமாய் மகிழ்வோடு நல்கிப் – பொலிக
பொலிகவென என்றும் புரந்திடுவாள், நெஞ்சில்
வலிமை அருள்வாள் வளங்கொடுப்பாள்
என்பதனால்
நெஞ்சம் மறவா நிலையில்
தஞ்சம் அடைக , சந்ததம் ஓங்கவே! 9
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYX_V%2BdUv0-jMoHKu5w5aiDHnUEA61jAWsRvZCiBsY9Zw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYX_V%2BdUv0-jMoHKu5w5aiDHnUEA61jAWsRvZCiBsY9Zw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GtYTnkpJScJbN5n-9BB3VmFVhT_399%3D%2B5GjD%3DbfAbbsbA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GtYTnkpJScJbN5n-9BB3VmFVhT_399%3D%2B5GjD%3DbfAbbsbA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiYURJ2-da3NiA5OaYKodbsjO4rQ9ZUVUwUk1HUfEnheA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/38dac5ac-406c-4493-b086-bdc381ab2871n%40googlegroups.com.
மது பொங்கி, மதுப் பொங்கி எது சரியானது
மது பொங்கி மற்றும் மதுப் பொங்கி ஆகிய இரண்டில் மது பொங்கி என்பதே இலக்கணப்படி சரியானது.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbG%3DGEzcoC4xw4x3Hryu5XtEEOB9ipv8bCTJFvG1c_YXw%40mail.gmail.com.
அரசி.பழனியப்பன் படைத்த திருத்தசாங்கத்தைத் தொடர்ந்து ஓர் ஆர்வ மிகுதியால் அடியேன் நவரத்தின மாலையொன்றை ஆக்கியுள்ளேன். பாவல்லார் குறை நிறைகளைச் சுட்ட வேண்டுகிறேன்.
கண்ணதாசன் நவரத்தின மாலை
காப்பு
மண்ணிலே மக்கள் மனத்திலே நிற்பவன்
கண்ணனின் தாசன் கவின்மார்பில் நன்றே
நவரத்ன மாலை நனிசூட்டக் காப்பாய்
இவண்வந் தினியன் இட.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAg%2Bv-xOnQLWidx3iVR2jCaiKCuNC9jy_1v2jTsJ8-0SQ%40mail.gmail.com.