வாழ்த்தி வாழ்வோம் - மீ.விசுவநாதன்

3 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 9, 2026, 10:00:04 PMMar 9
to Santhavasantham, M. Viswanathan
வாழ்த்தி வாழ்வோம்"
    (மீ. விசுவநாதன்)

மாடு பிடிக்கும் ஆர்வம்
மனத்து வீரங் காட்டும்
ஏடு படிக்கும் எண்ணம்
மேன்மை அறிவைக் கூட்டும்
நாடு பிடிக்கும் ஆசை
நச்சு வேரின் வாசம்
வீடு பிடிக்கும் ஞானம்
தெளிந்த விரிந்த வானம்

வேரு குடிக்கும் தண்ணீர்
விருட்சக் காட்டின் மூலம்
கூறு மொழியின் பண்பு
கொண்ட சான்றோர் நட்பு
சேரும் தீமை நன்மை
செய்கை தந்த செல்வம்
வாரும் சேர்ந்து உய்வோம் 
வாழ்த்தி வாழ்ந்தி ருப்போம்.
             (10.03.2026)

Rajagopalan Soundararajan

unread,
Mar 10, 2026, 6:45:58 AMMar 10
to சந்தவசந்தம்
அழகான வரிகள்.
"நாடு பிடிக்கும் ஆசை
நச்சு வேரின் வாசம்"--நனி நன்று.
ஸௌந்தர் 

M. Viswanathan

unread,
Mar 10, 2026, 7:19:12 AMMar 10
to Santhavasantham
நன்றி.
மீ.வி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/ddce9def-1b5e-4f10-8dd5-c9cabaebd622n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages