அரியும் அயனும் - மீ. விசுவநாதன்

3 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Feb 16, 2026, 3:28:48 AM (3 days ago) Feb 16
to Santhavasantham, M. Viswanathan
"அரியும் அரனும்"
              (மீ. விசுவநாதன்)

"நாக பஞ்சணை  நாரணன் கொண்டான்
நாக மாலையை நம்சிவன் பூண்டான்
தேகம் பாதியை தேவியே என்றான்
ஏக லட்மியை நெஞ்சிலே வைத்தான்.

ஆதி மூலனில் பேதமே இல்லை
சாதி பேதமே சாற்றுவ தில்லை
நீதி தேவனில் பொய்நிழல் இல்லை
ஓதி வாழுவோம் ஒர்குறை இல்லை."

(16.02.2026) 13.50 pm

(பா வகை: நிலைமண்டல ஆசிரியப்பா)

N. Ganesan

unread,
Feb 16, 2026, 8:54:35 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்- சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து - பேயாழ்வார்.

https://www.youtube.com/watch?v=vTeYG1V--GQ
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-ukw9woBtfN6x_zoGxbYW-PsZTDooTQ%3Di_xVkenuSJy5w%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages