செந்தமிழ்

2 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 14, 2026, 9:09:12 AM (yesterday) Apr 14
to santhavasantham

செந்தமிழ்

 14 சீர்ச் சந்த விருத்தம்

 

பொதிகை மலையின் முனிவன் குடிலின் புதிய மகவே புனிதமே

பொருதை மடியில் புதுமை வளியில் புரளும் இனிய அமுதமே

கதிகொள் அறிவு நிறையும் வளமை கருதும் அருமை நிதியமே

கனலில் புனலில் வளியில் வெளியில் புவியில் தவழும் கவிதையே

உதயம் முதலே உயரும் நிலையில் இளமை திகழும் உறுதியே

உயிரை ஒலியில் ஒளிபரப் புரியும் உயரும் திறலின் சிகரமே

இதயக் கருவி பொழியும் இசையைப் பதிவு புரியும் நிலையமே

இயலும் இசையும் நடமும் பெருகும் தமிழே இனிமை தருகவே


இலந்தை



இமயவரம்பன்

unread,
Apr 14, 2026, 9:28:25 AM (yesterday) Apr 14
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக அருமை தலைவரே!

Arasi Palaniappan

unread,
Apr 14, 2026, 11:19:44 AM (yesterday) Apr 14
to சந்தவசந்தம்
அருமை தலைவரே!

'உலகு குளிர 'எனத் தொடங்கும்  குமர குருபரர் எழுதிய முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழில் வரும் வருகைப் பருவப் பாடலை ஒத்திருக்கிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAq7Lvh9X7ZXD_-uXNZTe3SzqjQ%3D2DDEvjtxjtUUvw7Kw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages